Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32973
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. ரம்பாவுக்கு ஒழுங்கா சேலை கூட கட்டத் தெரியவில்லை. ரம்பா தனது கணவர் பிள்ளைகளோடு கணவரின் ஊருக்கு வருவது.. விஜயமா..??! விசேசமா..?! ஊர் கோவில்கள்.. காசைக் காட்டினால்.. தான் கடவுளை கிட்டக் காட்டுவினம் போல. பழைய காலத்தில் கோவில் உபயகாரர்களை தலையில தூக்கி வைச்சு ஆடும்... முறைமை மீளுது போல. இது நல்லதல்ல.
  2. இது மிகவும் ஆபத்தான சட்டம். பெளத்த விரிவாக்கத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. அப்ப எனி நல்லூரானின் தங்கம்.. பணம் எல்லாம் பிக்குகளின் கையில் எண்டுங்கோ..?!
  3. கோழியே குஞ்சு வளர்ந்த பின் கொத்தி கலைச்சிடும். இதில.. மனுசர் நீங்க.. இதுகளை ஆராய்ஞ்சுகிட்டு... மூளையை தேவையில்லாததில செலவு செய்யுங்கோ. பிறகு குத்துது குடையுதுன்னுங்கோ. பிள்ளைகளை சமூகத்திற்கு தகுந்தவர்களாக உருவாக்கிய பின்.. அவர்கள் வழியில் செல்ல விடுவதே அவசியம். அவர்களா.. உணர்ந்தால்.. பெற்றோரை வந்து பார்க்கலாம்.. போகலாம். அதைவிட மேல எதிர்பார்க்கக் கூடாது. பார்ப்பது தவறு.
  4. அப்ப எதுக்கு வெள்ள நிவாரணப் பணிக்கு.. 5000 கோடி மத்திய அரசிடம் கேட்கப் போவதாகச் சொன்னார். குடும்பச் சேமிப்பில் இடவோ..??!
  5. ஏரி ஏரி என்று கத்தினீங்கள் தானே.. அதுதான் ஒட்டுமொத்த சென்னையையும் ஏரியாக்கிட்டம். அதற்கு செலவு 4000 கோடி. எனி ஏரி வேணுன்னு கேப்பா.. ?! இவாட இடுப்பில இருக்கிற கைக்கு ஒரு குடையை குடுத்தா பிடிக்காதோ..?! இந்த பதவி வெறியாட்டச் சேட்டைகளால்.. தான் தமிழ்நாடு இப்படி சீரழிஞ்சு போய் கிடக்குது. பதவியில இருக்கிறவனை தூக்கி பஞ்சு மெத்தையில் வைக்கிறது.. குடை பிடிக்கிறது. ஈழத்திலும் இந்த நோய் இப்ப வேகமாகப் பரவி வருகுது. குறிப்பாக தாடிக்கார குத்தியருக்கும்.. சுமந்திரன் கும்பலுக்கும் இந்த வியாதி தொற்றி.. முத்திட்டுது.
  6. இவை மட்டுமல்ல.. சொறீலங்காவில் இருக்கிற வீடு வாசலை எல்லாம் வித்திட்டு.. கேயர் டேக்கர் விசாவில எனி வந்தாலும் குடும்ப அங்கத்தவர்களைக் கூட்டி வர முடியாது. மாணவர்களாக வாறவையில்.. ஆராய்ச்சி பட்டங்கள்.. தவிர.. இதர முதுகலைமாணிக்கு குடும்ப அங்கத்தவர்களை கூட்டி வர முடியாது என்று அண்மையில் இயற்றப்பட்ட சட்டத்தை இளமாணிக்கும் விரிவாக்க பரிந்துரைக்க கோரப்பட்டுள்ளது. மேலும்.. குறை நிரப்பு தொழில்கள் பட்டியலை மீளப் பரிசீலிக்கக் கோரப்பட்டுள்ளது. தற்போதைய பட்டியலில்.. பிரிட்டனில் உள்ள கிட்டத்தட்ட எல்லா தொழிலிலும் ஆள் இல்லாத குறை என்பது போல் இருப்பதால்.. ஹிந்தியர்களும் நைஜீரியர்களும் வகைதொகையின்றி வந்து குவிகிறார்கள். மேலும் 70 புள்ளி அடிப்படையில்.. கல்வி தகமைக்குரிய புள்ளி இல்லாமலே.. 70 புள்ளியை சோடிப்புக்கள் மூலம் பெற வாய்ப்பிருக்குது. அதனையும் பரிசீலிக்க வேண்டும்.
  7. என்ன.. இதுக்குள்ள.. நம்மாக்களின் ஒரு கருத்தையும் காணம். வழமையா நாதமுனி தானே விலாவாரியா எழுதிறவர்... ஆளைக் காணம்.
  8. எதுஎப்படியோ.. புதிய குடிவரவுச் சட்டங்கள் அமுலானால்.. எல்லா வழியிலும் பல பிரச்சனைகளை நம்மவர்களும் பேஸ் பண்ணத்தான் போகினம். எனி ஊரில இருந்து பொம்பிளை.. மாப்பிள்ளை இறக்கிறதுக்கும்.. 38,700 பவுன் ஆண்டு வருமானம் காட்ட வேணும். இப்ப இருக்கிற 18,000 க்கே பாக்கி எக்கவுண்டன்ட் வைச்சு.. கள்ள எக்கவுண்ட் காட்டிறது.. எனி எங்க போய் முட்டிறதோ..? மொத்தத்தில்.. சுனாக்.. வைச்சு செய்யுறாப்போல.
  9. எந்த மதத்தை மத அனுட்டானங்களை பின்பற்ற வேண்டும் என்பதும்.. அதை தொடர்வதா விடுவதா என்பதும்.. அவரவர் சொந்த உரிமை. இதில் பாதிரியார் கை வைக்க அதுவும் சிறுமி மீது கை வைக்க.. ஜே சுவே அனுமதி அளிக்கமாட்டார். இதில.. உவரை பிடிச்சு உள்ள வைக்கிறதை விட்டிட்டு.. செய்தியாக்கி ரைம் வேஸ்ட் பண்ணுறாங்கள்.
  10. வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஒரே இரவில்.. வெளியேற்றப்பட்டார்கள் என்று கூவும் போது அதற்கு ஆமாப் போடும் சிங்களம்.. தான் செய்த இந்த பாதகச் செயலை... தவறென்று ஏற்றுக்கொண்டு.. பல தசாப்தங்களாக வாழ்ந்த மலையக தமிழ் மக்களை அவர்கள் விரும்பும் பட்சத்தில் மீண்டும் மீளக் குடியேற அனுமதிக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் இருந்தும்.. மணலாறு.. மன்னார் சிலாபத்துறை.. வவுனியாவில் இருந்தும் (குடியேற்றி பின் வெளியேறிய).. வெளியேறிய சிங்களவர்களை எல்லாம் மீளக்குடியமர்த்த அழைத்த மகிந்த கும்பல்.. இந்த மலையக மக்களைக் கண்டுகொள்ளாதது ஏனோ. ஏன் எங்கட வடக்குக் கிழக்கு டமிழ் கட்சிகள் கூட இப்படி ஒரு விசயம் இருப்பதாகக் காட்டிக்கொண்டதே இல்லை. ஆனால்.. பாலகுமார் அண்ணா தலைமையிலான ஈரோஸ் இந்த விடயத்தை முன்னரே வலியுறுத்தி வந்திருக்கிறது.
  11. துப்பாக்கிப் பிரயோகம் செய்திருப்பார்கள்.. ஆனால் குற்றவாளிகள் மீது பட்டிருக்காது. ஏனெனில்.. குற்றவாளி.. பொலிஸ் எல்லாமே கூட்டுக் களவாணி தான். சுட்டால் தானே சன்னக் கணக்குக் காட்டி பதவி உயர்வுக்கு ஏதாவது செய்யலாம். முயன்று தோற்றது என்று காட்டுவமில்ல. வடக்குக் கிழக்கில்.. சிங்கள அரச படைகளுக்கும் புலனாய்க்குழுக்களுக்கும் ஒட்டுக்குழுக்களுக்கும் தப்பி.. யாருக்கும் இயங்க முடியாது. ஏனெனில்.. அவைக்கு துப்புச் சொல்ல.. ஆள் எல்லா இடத்திலும் கூலி வாங்கிட்டு ரெடியா இருக்குது. அப்படி இருக்க.. இவை எப்படி நிகழுது.. எப்படி தப்பிக்க முடியும..??!
  12. என்னப்பா.. யுத்தம் முடிஞ்சு.. சமாதானம் பிறந்து.. இன நல்லிணக்கமும் ஆயிட்டு எண்டியள். இப்ப.. சமாதானத்துக்கான செய்தியை காவிறமும் என்றியள்...???! கண்டியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு.. றிப் போறம் என்று சொல்லுறதுக்கு.. ஏன் இவ்வளவு சோடினை. வரவர உதயனும்.. உதய என்று ஆகிடும் போல.
  13. வெளிநாட்டில இப்படி நடப்பதில்லையோ..??! நேற்றும் லண்டனில் துப்பாக்கிச் சூடு. ஒரு மாது பலி. இருவர் காயம். குற்றவாளிகளை இன்னும்.. லண்டன் பொலிஸ் பிடிக்கல்லை. அப்ப.. என்ன செய்யலாம்.. லண்டன் தமிழர்கள்..??! கூண்டோடு ஊருக்கு ஓடியா போவினம். போனால்.. தற்போதைய பிரிட்டன் அரசு.. குடிவரவாளர்கள் மீதுள்ள கடுப்புக்கு.. கை கூப்பி வரவேற்கும்.
  14. இவரால்.. சொறீலங்காவை விட்டே வெளிய போகேலாத நிலை. இவைட நினைப்பு.. சொறீலங்கா.. ஏதோ பெரிய உபகண்டம். தாங்கள் உலக வல்லரசு. இவர் அந்த உலக வல்லரசின் கொள்வை வகுப்பாளர் என்று. சொறீலங்காவை விட்டு வெளிய வந்தால்.. ஒரு சல்லிக் காசுக்கும் பெறுமதியில்லாத கூட்டம். சும்மா கூவி கூவி தானும் கெட்டு கூட இருப்பவர்களை கெடுத்து நாசம் பண்ணியது தான் மிச்சம். சொறீலங்கா இதுகளால் தான் பிச்சை எடுக்கும் நாடாகியுள்ளது.
  15. அடிப்படையில் ஒரு மாற்றமும் இல்லை. இது தான் முன்னர் நடைமுறையில் இருந்தது. பாலர் வகுப்பு 4 வயது. முதலாம் வகுப்பு 5 வயதில் தொடங்கி.. 12ம் வகுப்பை.. 17 இல் முடிக்க முயலினம். முன்னர் இதே பாலர் வகுப்பு - 5 வயது. முதலாம் வகுப்பு.. 6 வயது.. 12ம் வகுப்பு.. 18 வயதில் அடைவதாக இருந்தது.. அதுவே சிறந்ததும் கூட. பின்னர் ஒரு தேவையும் இல்லாமல்... ஆண்டு கொண்டு வந்தார்கள். பின்னர் மீண்டும் வகுப்புக்கு பதில் தரத்திற்கு போனார்கள்.. எனி... மீண்டும்.. பழைய முறைக்கு திரும்பப் போகிறார்கள். அதே போல்.. ஓ எல் 6 பாடமாக இருந்தது. பின்னர் நீண்ட காலம் 8 பாடமாக இருந்தது. பின்னர் 10. பின்னர் 9 எனி.. 7. ஆக மொத்தத்தில் அரசாங்கங்களுக்கு ஒரு நிரந்தரமான தெளிவான கல்விக்கொள்கை கிடையாது. ஆகவே கல்வியின் தரம் தேவை என்பதைப் பொறுத்து அதனை வடிவமைத்து வழங்கும் பொறுப்பை பல்கலைக்கழகங்கள் சார் சுயாதீன ஆலோசனை வழங்கும் அமைப்புகளிடம் கையளிப்பதும்.. அதன் படி அரசுகள் அமைச்சுக்களூடு.. சட்டமியற்றி நடைமுறைப்படுத்துவதுமாக அமைந்தால் அன்றி.. கல்வி அமைச்சருக்கு ஒரு கல்விக் கொள்கை என்றால்.. சொறீலங்கா.. கல்வியிலும் தொடர்ந்தும்.. பிந்தங்கி இருக்கும் நிலையே தோன்றும்.
  16. நிழல் துவாரகாவை கண்டவுடன் முக்கி முக்கி எழுதிய என்றும் இளைய தம்பிகள்.. அண்ணன்மார்.. ஏன் இந்த இன்றைய.. இளையதலைமுறைப் பிள்ளை.. தமிழ் சமூகத்தின் பொறுப்பற்ற.. கல்வி பற்றிய முதிர்ச்சியற்ற.. தனத்தால் நிகழ்ந்த இந்த அவலச் சாவை கண்டு ஒரு குமுறலும் குமுறவில்லை..??! இப்படியான மரணங்களுக்கு பெற்றோர் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் அதன் கல்விசார் அகோரத்தன அணுகுமுறையுமே காரணம். எல்லாருக்கும் எல்லாக் கல்வியும் சரிப்பட்டு வராது. அவரவருக்கு ஏற்ற கல்வியில் அவரவர் முன்னேற இடமளிக்கப்பட வேண்டும். மேலும்.. பொதுப் பரீட்சைகளில் ஈட்டப்படும் சித்திகளை திருவிழாப் போலக் கொண்டாடத் தேவையில்லை. பாடசாலைமட்ட ஊக்குவிப்புக்களும் வழிகாட்டுத்தலும் போதும். பரீட்சையில் சித்தி எய்தியோருக்கு இணையாக சித்தியடைய தவறியோர் கவனிப்புப் பெறுவதோடு.. அவர்கள் சித்தியடையாமைக்குரிய காரணிகள் இனங்கண்டு அகற்றப்படவும்.. அதை மேவி.. மீளத்தோற்றி சித்தியடைய அல்லது வேறு வகையில் தேவையான.. விருப்புக்குரிய கல்வியை தொழில் பயிற்சியை பெற வழிக்காட்ட வேண்டும். பரீட்சையில் சித்தி எய்திய..அடுத்தவர்களை எடுத்துக்காட்டி.. திட்டித்தீர்ப்பதற்கு.. உளப்பாதிப்பை ஏற்படுத்த வழி சமைப்பதாக.. ஊடகங்களினதும்.. பாடசாலைகளினதும்.. சமூகத்தினதும் நடத்தைகள் இருக்கக் கூடாது. பாடசாலைக் கல்வியை.. பல்கலைக்கழக கல்வியை தவறவிட்ட பலர் பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கி உள்ளனர். தமிழீழ தேசிய தலைவர் உள்ளடங்க.
  17. என்ன இந்த மேற்குலக படிப்பாளிகளுக்கு உலகில் அரச படைகள் செய்த பயங்கரவாதங்கள் எதுவும் கண்ணில் படுவதில்லை. ஹாமாஸ்.. ஐ எஸ் ஐ எஸ் விட மோசமான வகையில்.. பகிரங்க உத்தரவிட்டு.. கோத்தாபாயவின் பாதுகாப்புச் செயலர் தலைமையின் கீழ் சொறீலங்காப் படைகள் செய்த இதே வகை பயங்கரவாதங்கள்.. சனல் 4 இல் வந்தும் தெரியமால் போனது வியப்பாக இருக்கிறது. கட்டுக்கொள்ளக் கூடாது என்ற கட்டளையோ அல்லது இவர்களின் படிப்பும் பக்கச்சார்ப்பானதோ..??!
  18. தாயும் சேயும் நலமே இருக்க வாழ்த்துக்கள். பேராண்டி கண்ட சுவி தாத்தாவுக்கும் வாழ்த்துக்கள். நமக்குத் தெரியவே.. 21 வயதில் ஒருவர் தாத்தா ஆனவர். நேரடியாக அல்ல. அவர் தாய் வழி சொந்தங்கள் வாயிலாக. உலகத்தில என்ன எல்லாம் சாத்தியமோ அதெல்லாம் நடக்குது. சிலருக்கு ஏலியா நடக்குது. பலருக்கு லேட்டா நடக்குது.
  19. வாழ்வது வீழ்வது..அவர்கள் தெரிவு.. வாழ்த்துவது நம் கடமை. ஏனெனில்.. நமக்காக அவர்கள் வாழ்ந்தது வழிநடத்தியது போதும். எனி அவர்கள் காட்டிய வழிபற்றி நடப்பதும் விடுவதும் அவரவர் விருப்பு. இனம் வாழ.... நாம் செய்வது.. அவர்கள் இலட்சியத்தை சுமப்பதும் சாத்தியப்படுத்துவதுமே...! அதற்காய் உளமார உழைப்பது ஒவ்வொரு இனமானத் தமிழர் கடமை..!!
  20. கிவ தலைவர் மகளின் வேற புதுப்படங்கள் இணையத்தில் கிடைக்கவில்லை போலும். ஆளாளுக்கு ஒரு இரண்டு படத்தை வைச்சு.. ஒட்டுறாங்கள்.. பிசையிறாங்கள்.. கசக்கி வீசுறாங்கள். ஒன்றுமா பொருந்துதில்லை. என்ன நாங்க முன்னர் சொன்னது போல்.. யு ரியுப் வியாபாரிகளுக்கு நல்ல வசூல் தான்.
  21. மகிந்த கும்பலுக்கு இப்ப புலிகள் மீண்டெழுவதாக கதை எழுதினால் தான்.. தமது குற்றங்கள் மீதான மக்கள் கவனத்தை தேர்தலுக்கு முன் திசை திருப்பலாம். கடந்த காலங்களில் தேர்தல் காலங்களில் இது நடந்தே வந்துள்ளது. கடந்த தேர்தலில் கருணாவை ஆனையிறவில் தான் ஆயிரம் சிங்களப் படைகளைக் கொன்றதாக கூவ விட்டு திரித்துப் பார்த்தார்கள்.. கருணாவுக்கு வேலைக்கு ஆகவில்லை. கோத்தாவுக்கு ஆகிச்சுது. புலிகளின் மீள் எழுச்சியை சித்தரிக்க உண்மையில் சிங்களத்துக்கு துவாரகா அவசியமில்லை. உள்ளூர்.. வெளியூர்க் கூலிகளே போதும்.
  22. தலைவரின் இறப்புச் சான்றிதழும் இன்னும் உருவாக்கப்படவில்லையே..! ஹிந்தியா கேட்டும் கொடுக்கப்படவில்லை. தலைவர் தொடர்பான டி என் ஏ அறிக்கையும் இல்லை. அதை இட்டும் இவர் கோவப்படலாமே. தமிழ்வின் ஒரு காலத்தில் யாழின் கறுப்புப்பட்டியலில் இருந்ததை பலர் வசதியாக மறந்திட்டாங்க. என்ன இப்ப.. சில ஈனத்தமிழர்களுக்கு தலைவரையும் அவர் குடும்பத்தை எப்படியாவது நிந்திக்கனும். அவர்கள் தியாகங்களை கொச்சைப்படுத்தனும். அதற்கு எவர் எந்தக் கட்சி.. சார்ப்பு என்றில்லாமல்.. ஒன்றாக் கூடி நல்லா கழுவி ஊத்தினம். ஆளாளுக்கு நல்லா முதுகு சொறியினம். இது நடந்து முடியும் போது.. உணரப்படும் குற்ற உணர்வில்.. பல தலைகள்... கவிழ்ந்தது நிமிர முடியுமோ தெரியவில்லை.
  23. தலைவர் எங்காவது சொல்லி வைச்சாரா எனக்கு தனியா அஞ்சலி செய்யுங்கோ.. பனர் கட்டுங்கோ.. படையல் வையுங்கோன்னு..??! இதை எல்லாம் யாழ் அனுமதிச்சிருக்குது.. கடந்த காலங்களில். மேலும் முள்ளிவாய்க்கால்.. என்பது.. தலைவருக்கான அஞ்சலிக்குரிய இடம் மட்டுமல்ல.. பல்லாயிரக்கணக்கான மக்களும் போராளிகளும் கூட தியாகம் செய்த இடம். தலைவர் கூட நிச்சயமாக.. இந்த நாளை தனக்கான அஞ்சலி நாளாக கொள்ள இடமளித்திருக்கமாட்டார். மாவீரர் நாள் போல்.. பொதுவான ஒரு அஞ்சலி நிகழ்வு இனப்படுகொலை நினைவு நாளாகவே அது கடைப்பிடிக்கப்பட்டிருக்கும். எந்த ஒரு உண்மையான மக்கள் புரட்சியாளனும் இதை அதை செய்யச் சொல்லி செல்வதில்லை. தலைவரும் செய்யவில்லை. ஏனெனில்.. அவர்களின் வேணவா என்பது.. தமது மக்களுக்கான இலட்சியம் வெல்லப்படனும் என்பது தான். மேலும்.. இந்த நிழல்.. துவாரகாவை வைச்சு கழுவி உத்திறவை.. நிஜ துவாரகாவை தலைவர் போராளிகள் தவிர.. இயக்கம் பொதுவெளியில் அறிமுகம் செய்ததாகத் தெரியவில்லை. தலைவரின் பாரியார் மட்டுமே சில நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார். அப்படி இருக்க.. ஏன்.. இவை நிழல் துவாரகா மீது அநாவசிய கவனம் செலுத்தினம். வேற செயலுக்கு பற்றாக்குறையா.. இல்லை.. நிழலை வைச்சு... நிஜத்தை நிந்திக்கினமா..??! நிஜமே.. நிழலோ.. சொல்ல வந்த சேதியை.. இங்கு கருத்திட்ட எவரும் அலசவில்லை. வெளியில் உள்ளவையும் அலசவில்லை என்பது.. இவர்களின் அறிவுத்திறனை.. செயல் திறனை அப்பட்டமாக இனங்காட்டி விட்டது. இவர்களால்.. இனத்தின் விடிவுக்கான பயணம்.. காத தூரம் கூட நகராது.
  24. தூவாரகாவின் மீள்வருகை... கொள்கை அளவில் பல செய்திகளை காவி வந்துள்ளது. இது துவாரகாவை வைச்சு தமிழர்களின் ஒற்றுமையை.. உளப்பாங்கை கண்டறிய நடத்திய இந்த தேர்வில்.. 1. தமிழர்களில் ஒரு பகுதி.. சாதாரணமாகக் கடந்து போய் மாவீரர்களுக்கான..தன் கடமையை செய்துவிட்டது. 2.இன்னொரு பகுதி.. ஆளையாளுக்கு துவாரகாவின் நிழலுக்கு பொய் சாயம் பூசுவதில் குறி. மாவீரர் நாளையே மறந்துவிட்டது. இந்தக் கூட்டம் எப்பவுமே இப்படித்தான். இதனால்.. தானும் குழம்பி தன் சார்ந்த கூட்டத்தையும் குழப்புவதே குறி. 3. சிங்களத்திற்கு உள்ளூர ஓர் அச்சம். பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே மிஞ்சி இருக்கக் கூடாது என்ற நிலையில் நிழல் துவாரகா மீளவும் தமிழர்களிடம் பிரபாகரனிசத்துக்கு உயிர் கொடுத்திடுமோ என்ற பயம். 4. ஹிந்தியாவுக்கு மாவீரர் தினத்தின் கனத்தை குறைப்பதில் குறி. ஆனால்.. தமிழ் மக்களின் உள்ளுணர்வோடு கலந்திட்ட மாவீரர்கள் தொடர்பில் அதன் கணக்கு மீண்டும் பிழைத்துவிட்டது. 5. மேற்குலகிற்கு.. இதெல்லாம் ஒரு பெரிய கவனத்தில் கொள்ளத்தக்க தமக்கு ஆதாயமான மாட்டரே இல்லை. 6. தமிழகத்தில் இரண்டும் கெட்டான் கூட்டம் ஆதிக்கம். இன்னும் ஈழத்தமிழர்களின் தேவைகள் குறித்த தெளிவில்லை. 7. கோட்பாட்டு ரீதியில்.. நிழல் துவாரகாவின் வருகை என்பது பலருக்கு வயிற்றில் புளியை கரைத்தது உண்மை. அதில்... பிரபாகரன் போர்களத்தில் இருந்த போது காட்டிக்கொடுத்து பிழைத்த கூட்டம் கூட.. துவாரகாவை வைச்சு உண்டியல் குலுக்கிற பிரச்சாரத்திற்கு முண்டு கொடுத்திருக்குது. பிரபாகரன் இருந்த போது ஒரு சதத்தைக் கூட மண்மீட்புக்கு கொடுக்காத கூட்டம்.. இப்போ நீலிக்கண்ணீர் வடிக்குது. 8. துவாரகாவை முன்னிறுத்திய இந்த மாவீரர் தினம்.. நிச்சயம் வழமையை மாற்றிவிட்டுள்ளது.. என்றால் மிகையல்ல. 9. தத்துவப் பித்துக்கள்.. முடியை பிய்த்துக் கொண்டு அலசி ஆராய்கிறார்கள். இதுகள் கடந்த 14 ஆண்டுகளாக.. தமிழ் மக்களின் எதிர்காலத்திற்காக.. சிந்திக்க மண்டையை பாவிச்சதே இல்லை. 10. தமிழ் தேசிய தாயகக் கட்சிகள். மெளனமாக கடந்து போகப் பிரியப்பட்டுள்ளனர். காரணம்.. இதனை தமது எதிர்காலத்துக்கு முதலீடாக்கலாமா என்ற கோணத்தில்.. சிந்தித்துக் கொண்டிருக்கினம். 11. சர்வதேச சமூக ஊடகங்கள்.. சீன ஊடகங்கள்.. வியாபாரத்தில் குறி. மேற்குலக ஊடகங்கள்.. இரண்டும் கெட்டான் நிலை. 12. யதார்த்தமாக.. நிழல் துவாரகா.. நிஜ துவாரகாவை விட சாதித்து விட்டது... அதிகம்.
  25. அப்போ.. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் மட்டும் தலைவருக்கு படையல்.. பனர் கட்ட யாழ் அனுமதிப்பது மட்டும்.. அவமானப்படுத்தல் இல்லையோ..??! முள்ளிவாய்க்காலில் மாண்டவர்களில் மக்கள் போராளிகள் என்று பலர் உள்ள போது தலைவரை முன்னிலைப்படுத்துவதன் நோக்கம்..?! தமிழ் மக்களை தொடர்ந்து சோர்வில் வைச்சிருக்கும் எதிரிகளின் தேவைகளுக்காகவா..??!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.