Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. தலைவருக்கும், அவருடன் தோளோடு தோள் நின்று போராடி வீரச்சாவைடைந்த போராளிகளுக்கும் வீரவணக்கம். சொல்லெணா துன்பங்களை அனுபவித்து இறுதிப்போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள். இன்னொரு முள்ளிவாய்க்கால் வராமல் தடுப்பதே அம்மக்களுக்கு செய்யும் பரிகாரம் ஆகும்.
  2. கார்ணியின் மந்திரிசபைசிவதாசன்கனடிய மத்திய அரசைக் கைப்பற்றி லிபரல் கட்சியின் தலைவர் கார்ணி மந்திரிசபையை இவ்வாரம் அறிவித்திருக்கிறார். அதில் இரு தமிழர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. துர்ப்பாக்கியமாக அமைச்சர் கெரி ஆனந்தசங்கரியுடன் நான் எடுத்துக்கொண்ட படம் எதுவும் கைவசம் இல்லாமையால் அதை இக்கட்டுரையில் இணைத்துக்கொள்ள முடியவில்லை. தேர்தலுக்குப் பின் சற்றே ஒதுங்கியிருந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பொய்லியேவ் கார்ணியின் மந்திரிசபை அறிவிக்கப்பட்டதும் மீண்டும் முனக ஆரம்பித்திருப்பது பரிதாபமாகவிருக்கிறது. பாவம், பின்னாலிருந்து முதுகில் இடி விழுகிறது போல; ஏதாவது சொல்லியாகவேண்டும் என்பதற்காகச் சொல்கிறார் போலிருக்கிறது. “இந்த மந்திரிசபையில் பலர் ட்றூடோவின் அமைச்சர்கள்” என மனம் வெதும்பி அழுதிருக்கிறார் பொய்லியேவ். அடுத்த தடவை ஆட்சி அமைக்கவேண்டுமென்றால் கன்சர்வேட்டிவ் கட்சி இப்போதே வேறு தலைவரைப் பார்ப்பது நல்லது. தமிழ்ப் பூர்வீகத்தைக் கொண்ட இருவருக்கு கார்ணியின் மந்திரிசபையில் முக்கியமான பதவிகள் வழங்கப்பட்டிருப்பது தமிழருக்குப் பெருமை. ஆனாலும் இவ்விரு பதவிகளும் மிகவும் ஆபத்தானவையும் கூட. வந்ததும் வராததுமாக வெளிவிவகார அமைச்சர் அனித்தா ஆனந்த் பாலஸ்தீன விடயத்தை இழுத்து இஸ்ரேலைக் கண்டித்திருக்கிறார். பாலஸ்தீன விடயத்தில் ட்றூடோ அரசு இருதலைக் கொள்ளி எறும்பாக அலைந்து திரிந்தது என்றாலும் ட்றூடோ பதவி விலகுவதற்கு முன்னர் “நான் ஒரு சயோனிஸ்ட்” எனப் பிரகடனப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார். தேர்தலுக்கு முன்பிருந்தே கார்ணி “இரு நாட்டுக் கொள்கையை” ஆதரித்ததன் மூலம் பாலஸ்தீனப் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டைப் பிரகடனப்படுத்தியிருந்தார். அமைச்சர் ஆனந்தின் ‘இஸ்ரேல் எச்சரிக்கை’ இவ்விடயத்தில் கார்ணி அரசு எப்படியான நகர்வுகளை மேற்கொள்ளலாம் என்பதைக் காட்டியிருப்பது நல்லது. மறுபக்கத்தில் தெற்கின் மகாராஜா தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை அரேபியாவுக்கு மேற்கொண்டிருப்பது நெட்டன்யாஹுவுக்கு எரிச்சலை உண்டுபண்ணியிருக்கலாம். அரபுக்களிடமிருந்து ‘மிதக்கும் அரண்மனையைப்’ பரிசாகப் பெற்றுக்கொண்ட மகாராஜா விடப்போகும் அடுத்த வாண வேடிக்கை எப்படியாக இருக்கப்போகிறதோ தெரியாது. ஆனாலும் கார்ணி அரசு அமெரிக்காவைவிட ஐரோப்பிய ஒன்றியத்துடனான தனது நெருக்கத்தை சொல் மூலமும் செயல் மூலமும் காட்டி வருவதே அமைச்சர் ஆனந்தின் இந்த அறிக்கை எனவே நம்ப வேண்டியிருக்கிறது. அமைச்சர் ஆனந்தின் இக்கொள்கை நகர்வு அவருக்கு எதிராகத் திருப்பிவிடப்படுமானால் அவரது பதவிக்கு நீண்ட ஆயுள் இருக்க வாய்ப்பில்லை. இதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சராகவிருந்த மெலனி ஜோலி “இப்பதவி தனக்கு வேண்டாம்” எனக்கூறி வேறு பதவியைப் பெற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கிறார். ட்றம்பின் உலகில் இப்பதவி இலகுவான ஒன்றல்ல என்பதை ஜோலி உணர்ந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண அரசில் முதல்வராகப் பதவியேற்பதற்குப் பலர் பின்னடித்த நிலையில் ‘இதோ நானிருக்கிறேன் பார்’ என வந்து குதித்தவர் உஷால் டொசாஞ் எனப்படும் ஒரு சீக்கிய வம்சாவளியினர். அப்போது ஒரு வலதுசாரிப் பத்திரிகையொன்றில் ” வேறொருவரும் முன்வராத போது அப்பதவிக்கு எங்காவது இருந்து ஒரு இந்தியர் வருவார்” என நக்கலடித்திருந்தது. அமைச்சர் ஆனந்த் விடயத்திலும் இப்படியொரு நையாண்டி அறிக்கை வராது என நம்புவோமாக. அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி விடயத்திலும் நிலைமை இலகுவானதான ஒன்றல்ல. உள்நாட்டுப் பாதுகாப்பு சம்பந்தமான அமைச்சு இது. வெளிநாடு அரசுகளின் தலையீடுகள் பற்றி ட்றூடோ அரசுக்கு தொடர்ந்து தலையிடி கொடுத்து வந்தது கன்சர்வேட்டிவ் கட்சி. கனடிய பாராளுமன்றத்தில் இருக்கும் வெளிநாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தத்தம் பூர்வீக நாடுகளோடு மென்போக்கைக் கடைப்பிடிப்பது வழக்கம். பல கனடிய யூதர்கள் இவ்விடயத்தில் இஸ்ரேல் நட்பைப் பேணுவதும் அதற்காகக் கனடிய அரசை வற்புறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வழக்கம். சீன அரசுக்குச் சார்பானவர்கள் பலர் இரண்டு பிரதான கட்சிகளிலும் இருக்கிறார்கள். காளிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவானவர்களும், இந்திய அரசுக்கு ஆதரவானவர்களும், தமிழீழ விடுதலைக்கு ஆதரவனாவர்களும் என பலதரப்பட்டவர்கள் கனடிய பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அமைச்சர் ஆனந்தசங்கரியின் தமிழராதரவு நிலைப்பாடு வெளிப்படையானது. இந்நிலையில் அவருக்கு உள்நாட்டுப் பாதுகாப்புப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கோவிட் காலத்து பாரவண்டி ஓட்டுனர்களின் ஒட்டாவா நகர முற்றுகையைக் கையாண்ட விதம் ட்றூடோவின் வீழ்ச்சிக்கு முக்கியமானதொரு காரணம். அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி எதிர்கொள்ளப்போகும் பிரச்சினைகளில் பெரும்பாலானவை, ஒரு வகையில், ‘உருவாக்கப்பட்ட பிரச்சினைகளாகவே’ (manufactured crisis) இருக்க வாய்ப்புண்டு. அனுபவமும் முதிர்ச்சியும் அவர் பக்கமிருந்து , வரக்கூடிய பிரச்சினைகளைக் கையாளும் வல்லமையுமிருப்பின் அவரும் தப்பிப் பிழைக்க வாய்ப்புண்டு. கார்ணி அமைச்சின் இன்னுமொரு முள்ளாக வந்திருப்பது, பல வகைகளிலும் புத்தம் புதியவரான, அமைச்சர் எவன் சொலொமன். ‘செயற்கை விவேகம் மற்றும் டிஜிட்டல் ஏதோ…’ என ஒரு அமைச்சு புதிதாக உருவாக்கப்பட்டு இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த எவன் சொலொமன் முன்னர் சீ.பீ.சீ. தொலைக்காட்சியிலும் பின்னர் சீ.ரீ.வி. தொலைக்காட்சியிலும் பணியாற்றிய ஒரு ஊடகவியலாளர். சீ.பி.சீ. யில் முக்கிய பதவியில் இருக்கும் போது பெறுமதி வாய்ந்த ஓவியமொன்றை விற்றார் எனவும் இதன் பின்னால் ஏதோ ஒரு திருகுதாளம் இருந்ததெனவும் குற்றச்சாட்டப்பட்டு ஒரே நாளில் இவர் பதவி நீக்கப்பட்டார். அந்த ஓவியத்தை வாங்கியவர் வேறு யாருமல்ல தற்போதைய பிரதமர் கார்ணியே. இந்த நட்பின் ரீதியாவே அவர் பாதுகாப்பான ஒரு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு , பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு இப்போது புதியதொரு அமைச்சையும் நிறுவி அவருக்குத் தட்டில் வைத்து வழங்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள். இது கார்ணி மீது ஒட்டிக்கொண்டிருக்கும் பெரியதொரு அழுக்கு. இவர்களை விட ‘பிரம்டன் வாசிகள்’ பலரும் அமைச்சரவையில் உலவுகிறார்கள் எனக் கேள்வி. காளிஸ்தான் கோட்டையாக விளங்கும் பிரம்டன் மாநகரம் கார்ணியின் அரசுக்கு, குறிப்பாக அமைச்சர் ஆனந்தசங்கரிக்கு பல தலையிடிகளைக் கொண்டுவர வாய்ப்புண்டு. இதற்கிடையில் பாராளுமன்றத்தில் 168 ஆசனங்களுடன் பயணத்தை ஆரம்பித்த கார்ணி அரசு தனது ஆசனங்களை இப்போது 170 ஆக அதிகரித்திருக்கிறது. பெரும்பான்மைக்கு (172) இன்னும் இரண்டு ஆசனங்கள் தேவை. இன்னும் இரண்டு தொகுதிகளில் வாக்குகள் மீள எண்ணுப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்விரண்டையும் அபகரிக்காவிட்டால் எதிர்க்கட்சிகளிடமிருந்து இரண்டைப் பறிப்பதற்கான முயற்சிகள் / பேச்சுவார்த்தைகள் குச்சு ஒழுங்கைகளில் நடைபெற வாய்ப்புண்டு. அது தவறின் கார்ணியின் ஆட்சி நான்கு வருடங்களுக்கு இழுக்காது எனக் கன்சர்வேட்டிவ் கட்சி உறுதியாக நம்புகிறது. அதைச் சாத்தியமாக்கும் வேலைகளை கன்சர்வேட்டிவ் கட்சி ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டதாகவும் கேள்வி. எல்லாப் புகழும் பிரம்டனுக்கே! https://veedu.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88/?fbclid=IwY2xjawKUkkBleHRuA2FlbQIxMQBicmlkETF0bHZ4TE14WHdvT3FGZW1MAR4JfEVKAqaUE8SjHMum1kdP3jsl21E3NOpZr72-ZJsjZorvY_6tPPNTMZ7bLQ_aem_mpQOd_OyuisgE8Z5Itp9hA
  3. சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரியது தமிழ்த் தேசிய பேரவை! http://seithy.com/img/icons/photo.png http://seithy.com/siteadmin/upload/TNC-met-ambasidors-150525-seithy%20(3).jpg வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், குருந்தூர் மலை விவகாரம், தையிட்டி விகாரை விவகாரம் என்பன தொடர்பில் கொழும்பிலுள்ள சர்வதேச இராஜதந்திரிகளிடம் எடுத்துரைத்திருக்கும் தமிழ்த்தேசிய பேரவையின் பிரதிநிதிகள், இவ்விடயங்களில் சர்வதேச சமூகம் தலையீடு செய்து, உரிய அழுத்தங்களை வழங்கி, தீர்வைப் பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் உருவாகியிருக்கும் தமிழ்த்தேசிய பேரவையில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (14) இடம்பெற்றது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்குடன் மு.ப 9.00 மணிக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திலும், இலங்கைக்கான இந்தியத் துணை உயர்ஸ்தானிகர் பாண்டேவுடன் மு.ப 10.15 மணிக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயத்திலும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்ஞ்சேவுடன் மு.ப 11.30 மணிக்கு கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திலும், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷுடன் பி.ப 3.00 மணிக்கு கனேடிய உயர்ஸ்தானிகராலயத்திலும் நடைபெற்றது. இச்சந்திப்புக்களில் தமிழ்த்தேசிய பேரவையின் சார்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த்தேசியக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிறிகாந்தா, தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசனும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் கலந்து கொண்டிருந்தனர். இராஜதந்திரிகளுடனான இச்சந்திப்புக்களின்போது பிரதானமாக 3 விடயங்கள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது. முதலாவதாக வடமாகாணத்திலுள்ள உரிமைகோரப்படாத சுமார் 6000 ஏக்கர் காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதியிடப்பட்டு வெளியான வர்த்தமானி அறிவித்தல் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அதனை அரசாங்கம் உடனடியாக மீளப்பெறவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக வெறுமனே 3 மாதங்களுக்குள் காணிகள் தொடர்பான உரித்தை நிரூபிப்பதில் தமிழ்மக்கள் முகங்கொடுத்திருக்கும் நடைமுறைச்சிக்கல்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. அதேபோன்று காணி உரித்தை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் உரிமையாளர்களிடம் இல்லாத நிலையில், அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அக்காணிகளை சுவீகரிப்பதை நோக்காகக்கொண்டே அரசாங்கம் அவசர அவசரமாக இவ்வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருப்பதாகவும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் சுட்டிக்காட்டப்பட்டது. இரண்டாவதாக கடந்த ஆட்சியின்போது குருந்தூர் மலையில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த 79 ஏக்கர் காணிக்கு அப்பால், விகாரையை நிர்மாணிப்பதற்கு மேலும் 325 ஏக்கர் காணி தேவைப்படுவதாக அதனுடன் தொடர்புடைய பௌத்த பிக்கு கோரிக்கைவிடுத்திருந்தார். இருப்பினும் அக்காணிகள் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்படவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர், கடந்த வாரம் அக்காணியில் விவசாயத்தில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் இராஜதந்திரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டதுடன், இவ்விடயத்தில் ஜனாதிபதி மட்டத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரும் கூட, சம்பந்தப்பட்ட பௌத்த தேரர் உள்ளிட்ட தரப்பினர் அதற்கு முரணாக செயற்படுவது பற்றி சுட்டிக்காட்டப்பட்டது. மூன்றாவதாக தையிட்டியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் விகாரை குறித்து இராஜதந்திரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அத்தோடு ஏனைய பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் சட்டவிரோத கட்டடங்கள் எவ்வாறு அகற்றப்படுகின்றதோ, அதுபோன்று இவ்விகாரையும் அகற்றப்படவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது. மேலும் இவ்விடயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் தலையீடு அவசியம் எனவும், இவைகுறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்படவேண்டும் எனவும் இராஜதந்திரிகளிடம் வேண்டுகோள்விடுக்கப்பட்டது. http://seithy.com/siteadmin/upload/TNC-met-ambasidors-150525-seithy%20(1).jpg http://seithy.com/siteadmin/upload/TNC-met-ambasidors-150525-seithy%20(2).jpg
  4. என்பிபிக்கு எதிராக கூட்டாக ஆட்சியமைக்க எதிர்க்கட்சிகள் முடிவு! http://seithy.com/siteadmin/upload/joint-hands.jpg தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று ஒரு உடன்பாட்டை எட்டினர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பு பிளவர் வீதியில் உள்ள அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அங்கு எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆட்சி அமைக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பெயர் பட்டியலைத் தயாரிப்பதற்காக, சம்பந்தப்பட்ட கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் இன்று கூடவுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதித்துவப்படுத்தி நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி அனுர பிரியதர்ஷன யாப்பா, தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், புதிய ஜனநாயக முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி அசங்க நவரத்ன, சுகீஸ்வர பண்டார, வீர குமார திசாநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேமலால் சி தொலவத்த, நிமல் லன்சா, மொஹமட் முஸம்மில், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர். உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த ஒன்றிணைந்த கூட்டங்களைக் கூட்டுவதற்கான பணி முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திசைகாட்டிக்கு எதிரான அனைத்து குழுக்களுடனும் கலந்துரையாடல்கள் மூலம் அதிகாரத்தை நிறுவுவதோடு மட்டுமல்லாமல், இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=333300&category=TamilNews&language=tamil
  5. இப்போது தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிறைய இப்படியான சம்பவங்கள் இடம்பெறும்.
  6. இம்முறை அப்படி வாய்ப்புகள் உள்ளனவா தெரியவில்லை. எதுவும் நடக்கலாம்.
  7. பேசியன் வளைகுடாவை அறபு வளைகுடா என ட்ரம் மாற்றி ஈரானுக்கு கடுப்பு ஏற்றியுள்ளார். கூகிளும் இதனை மாற்றியுள்ளதாம். ஈரான் கூகிளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாம். அரபு நாடுகளின் தலையில் மிளகாய் அரைத்துள்ளார்கள் என்ற கருத்து பட அரபு தொலைக்காட்சிகளும் , பல்கலைகளக விரிவுரையாளர்களும் விமர்சித்துள்ளார்கள். சி என் என் ட்ரமிடம் இஸ்ரேலுக்கு போகாமல் ஏன் அரபு நாடுகளுக்கு போயுள்ளீர்கள் என கேட்டதற்கு இப்பேச்சுவார்த்தைகளால் இஸ்ரேலுக்கு தான் நன்மை என கூறியுள்ளார். கட்டாருடன் 100 பில்லியனுக்கு மேலாக வியாபார ஒப்பந்தங்களில் ட்ரம் கையெழுத்து இட்டுள்ளதாக தெரிகிறது.
  8. மேற்கு நாடுகளில் இப்படி இறப்பவர்களும் எம்மவர்களே.
  9. .கரியின் பொறுப்புக்கள் என்ன? முக்கிய பொறுப்புகள்:குற்றம் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு: கனடாவின் குற்ற விகிதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள். போலீஸ் துறை, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகளுடன் ஒருங்கிணைப்பு. எல்லைப் பாதுகாப்பு: கனடா-அமெரிக்கா எல்லை பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள். தீவிரவாதம் மற்றும் உளவு நடவடிக்கைகள்: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களைக் கண்காணித்தல். தொழிலாளர் சட்டங்கள்: பணியிட பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகள் பற்றிய கொள்கைகள். 2. சிறப்பு திட்டங்கள்:குடியுரிமை மற்றும் குடிவரவு: புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிவரவு சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துதல். பழிவாங்கும் குற்றங்கள் (Hate Crimes): இன, மத, பாலியல் அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்து நடவடிக்கை. போதைப்பொருள் கட்டுப்பாடு: போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள்.
  10. சிரியாவில் பொருளாதார தடையை நீக்குவது பற்றி பேசியுள்ளார்.
  11. 1. தொழில்துறை மற்றும் முதலீட்டு வளர்ச்சிதமிழ்நாடு "இந்தியாவின் மோட்டார் தலைநகரம்" என அழைக்கப்படுகிறது, ஏனெனில் சென்னை, ஓரகடம், ஹோசூர் போன்ற இடங்களில் பெரிய மோட்டார் வாகனத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. பல்ஜி, ஹுண்டாய், நிசான், டாடா மோட்டார்ஸ், ரெனோ-நிசான் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் உற்பத்தி அலகுகளை நிறுவியுள்ளன. ஐடி மற்றும் மென்பொருள் துறை (குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி) வளர்ந்து வருகிறது. 2. நல்ல அடிப்படை வசதிகள்தமிழ்நாட்டில் தரமான சாலைகள், துறைமுகங்கள் (சென்னை, தூத்துக்குடி, கடலூர்), மற்றும் விமான நிலையங்கள் உள்ளன. 24/7 மின்சார வழங்கல் மற்றும் நீர் வளம் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவுகிறது. 3. கல்வி மற்றும் திறமையான மக்கள்தமிழ்நாடு உயர்தர கல்வி நிறுவனங்களால் (IIT Madras, NIT Trichy, Anna University, TNAU) புகழ்பெற்றது. திறமையான மற்றும் தொழில்நுட்ப அறிவு கொண்ட மக்கள் தொழில்துறை தேவைகளை நிறைவு செய்கிறார்கள். 4. அரசாங்கத்தின் முன்னேற்றக் கொள்கைகள்தமிழ்நாடு அரசு தொழில்முனைவோருக்கு வரி சலுகைகள், முதலீட்டு ஊக்கத் தொகைகள் மற்றும் எளிதான வணிகச் சூழல் வழங்குகிறது. மெட்ரோ ரயில் (சென்னை), சாலை விரிவாக்கம், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் போன்றவை நகர வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன. 5. சுற்றுலா மற்றும் கலாச்சார முக்கியத்துவம்கோவில்கள் (மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்), மலைவாழிடங்கள் (ஊட்டி, கொடைக்கானல்), மற்றும் கடற்கரைகள் (மாமல்லபுரம், கன்னியாகுமரி) சுற்றுலாவை ஈர்க்கின்றன. தமிழ் திரைப்படத் தொழில் (கோலிவுட்) உலகளவில் பிரபலமாக உள்ளது. 6. விவசாயம் மற்றும் மீன்வளம்காவேரி டெல்டா பகுதி "தமிழ்நாட்டின் அரிசி கூடை" என்று அழைக்கப்படுகிறது. மீன்பிடி துறை (நாகப்பட்டினம், இராமநாதபுரம்) பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது. 7. ஆரோக்கியம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம்சென்னையில் உள்ள அப்போலோ, MIOT போன்ற மருத்துவமனைகள் மருத்துவ சுற்றுலாவை (Medical Tourism) வளர்க்கின்றன. டிஜிட்டல் இந்தியா மற்றும் ஸ்டார்ட்அப் இந்தியா திட்டங்களுக்கு தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
  12. ஒரு தரம் ஆனையிறவு உப்பளத்துக்கு விஜயம் செய்யுங்கள். மலையகத்துக்கு செல்லுங்கள். நாட்டுக்காக உழைப்பவர்கள் படும் துன்பத்தில் பங்கெடுங்கள்.
  13. இஸ்ரேலை எதிர்ப்பது போல் நடித்தது இப்போ விளங்கி இருக்கும். கட்டார், டோகா ட்ரம்புக்கு பெறுமதியான விமானம் ஒன்றை பரிசாக வழங்கியதாக சில செய்திகள் கூறுகின்றன. இதன் உண்மை தன்மை பற்றி தெரியவில்லை.
  14. நாட்டில் உப்பு இல்லாமல் இறக்குமதி செய்கிறார்கள். வேலை செய்பவர்களை மதிக்காமல் வேலையும் வழங்காமல் அராஜகம் செய்யும் அரசுக்கு உரிய தீர்வு வரும் வரை போராடுங்கள். உற்பத்தி இல்லாத போது உரிய நடவடிக்கை எடுக்க முன்வருவார்கள்.
  15. மிக விரைவாக அரசியலுக்கு வர இனவாதம் எனும் சுலபமான பாதையை நாமலும் தெரிவு செய்துள்ளார். தானொரு தேசப்பற்றான ஆளாம்.
  16. கனடிய தூதுவரை அழைத்து எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்! http://seithy.com/siteadmin/upload/Namal-Rajapaksa-130225-seithy.jpg கனடா ஒரு தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தைத் நிர்மாணித்துள்ளமை கவலைக்குரியது. இந்தப் போக்கு தொடர்ந்தால், உண்மையான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் கனடாவின் நம்பகத்தன்மையை அது குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும். இந்த செயல்முறையில் கனடா ஒரு தனிப்பட்ட நலன்களைக் கொண்டிருப்பதாக தெரிகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்து, கனடா துல்லியமான வரலாற்றுக் கதைகளை ஆதரிக்குமாறு முறையாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். ஒரு சட்டபூர்வமான போரின் பின்னணியில் ஒரு தவறான இனப்படுகொலைக் கதையை ஊக்குவிப்பது வரலாற்றைத் திரிபுபடுத்துவது மட்டுமல்லாமல், இலங்கையில் நல்லிணக்க செயல்முறைக்கு கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார். கடனாவில் பிரம்டன் நகரில் சிங்கௌசி பொதுப்பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளார். இலங்கை இராணுவம் , விடுதலைப் புலி பயங்கரவாதத்துக்கு எதிராக முன்னெடுத்த மோதலில் எந்த இனப்படுகொலையும் சர்வதேச சட்டத்துக்கமைய நிரூபிக்கப்படவில்லை அல்லது நிரூபிக்கப்பட முடியாத நிலையில், கனடா ஒரு தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தைத் நிர்மாணித்துள்ளமை கவலைக்குரியது. தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என்று அழைக்கப்படுவது, கனேடிய அரசாங்கத்தால் அரசியல் ரீதியாக இயக்கப்படும் ஒரு நடவடிக்கையாகத் தெரிகிறது இது நீண்ட காலமாக தமிழ் புலம்பெயர்ந்தோருக்குள் உள்ள சில பிரிவுகளால் முன்னெக்கப்படுகிறது. அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக, இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பிரிவினையைத் தூண்டிவிடுகின்றன. 1975 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேயர் ஆல்ஃபிரட் துரையப்பாவைக் கொன்றதன் மூலம் வன்முறை செயற்பாடுகளை தொடங்கிய விடுதலைப் புலிகள், ஏராளமான கொடூரமான செயல்களைச் செய்தனர். இந்தப் பயங்கரவாதக் குழு ஆயிரக்கணக்கான தமிழ் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்து, அவர்களை அவர்களது குடும்பங்களிலிருந்து பிரித்து, பெரும் துன்பத்தை ஏற்படுத்தியது. பல தசாப்த கால வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சட்டபூர்வமான இராணுவ நடவடிக்கையில் இலங்கை ஆயுதப் படைகள் விடுதலைப் புலிகளை ஒழித்தன. விடுதலைப் புலிகள் மற்றும் காலிஸ்தான் போராளிகள் போன்ற பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குழுக்களை ஆதரித்த கனடாவின் வரலாறு, உலகளாவிய பயங்கரவாதம் குறித்த அதன் நிலைப்பாடு குறித்து கேள்விகளை எழுப்புகிறது. இந்தப் போக்கு தொடர்ந்தால், உண்மையான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் கனடாவின் நம்பகத்தன்மையை அது குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும். இந்த செயல்முறையில் கனடா ஒரு தனிப்பட்ட நலன்களைக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்து, கனடா துல்லியமான வரலாற்றுக் கதைகளை ஆதரிக்குமாறு முறையாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். ஒரு சட்டபூர்வமான போரின் பின்னணியில் ஒரு தவறான இனப்படுகொலைக் கதையை ஊக்குவிப்பது வரலாற்றைத் திரிபுபடுத்துவது மட்டுமல்லாமல், இலங்கையில் நல்லிணக்க செயல்முறைக்கு கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினையில் அரசாங்கம் தீர்க்கமாகச் செயல்படத் தவறுமாயின் அது ஆயுதப்படைகள், நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களுக்கு ஒரு அவமானமாக அமையும். இலங்கையின் தேசிய நலன்களைப் பாதிக்கும் முக்கியமான விஷயங்களை திறம்படக் கையாள அரசாங்கத்தின் இயலாமையையும் இது எடுத்துக்காட்டுகிறது என்றார். http://seithy.com/breifNews.php?newsID=333251&category=TamilNews&language=tamil
  17. இவர்களை தமிழ் கட்சிகள் சேர்க்காது. யாரோடு கூட்டு சேர்கிறார்கள் என பார்க்கலாம்.
  18. சனல் 4 நீங்கள் இனப்படுகொலை செய்துள்ளீர்கள் என ஆதாரபூர்வமாக உலகுக்கு நிரூபித்து காட்டி உள்ளது. துணிவுள்ள முஸ்லிமாக இருந்தால் பலஸ்தீனத்தில் நடப்பது இனப்படுகொலை இல்லை என சொல்லுங்கள் பார்க்கலாம்.
  19. 6 வாயில்களையும் அடிச்சிருக்கிறான் இந்தியன் என்றால் பாருங்கோவன்.😁
  20. துருக்கியில் இருவரும் சந்தித்து பேச போகிறார்களாமே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.