Everything posted by nunavilan
-
செம்மணிப் புதைகுழி வேதனை....முகப்புத்தகத்தில் பிரதி பண்ணப்பட்டது
செம்மணிப் மனிதப் புதைகுழி உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். செம்மணிப் மனிதப் புதைகுழி உண்மைக...17K views · 259 reactions | செம்மணிப் மனிதப் புதைகுழி உண்...செம்மணிப் மனிதப் புதைகுழி உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.
-
நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை
2025-06-09 16:00] http://seithy.com/siteadmin/upload/Thushara-Upuldeniya-090625-seithy.jpg சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த நிதி குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து துஷார உபுல்தெனியவின் இடைநீக்கம் செய்யப்பட்டார். http://seithy.com/breifNews.php?newsID=334418&category=TamilNews&language=tamil
-
மீண்ட ருவாண்டாவும், மீளாத இலங்கையும்
நந்தி எதனையும் செய்ய விடாது. தமிழ் மக்கள் தான் ஏதோ பிழை விட்டதாக சிங்களம் இப்போதும் கதை விடுகிறது.
-
குடியேற்றவாசிகள் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து லொஸ் ஏஞ்சல்சில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் - வாகனங்கள் தீக்கிரை - ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த தேசிய காவல்படையினரை அழைத்தார் டிரம்ப்
ட்ரம்ப் ஆட் களை பிடித்து மெக்சிக்கோவுக்கு அனுப்ப தயங்க மாட்டார். கலவரத்தை ஏற்படுத்தியவர்களை அனுப்புவதாக கூறுவார்.
-
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில்
இவருக்கு எதிர்ப்பு கிளம்ப என்ன காரணம்?
-
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
இரும்பின் பயன்பாடு கிமு 3000 முதல் கிமு 1200 வரையிலான காலத்தில் தொடங்கியது. இது இரும்பு யுகம் (Iron Age) எனப்படும், ஆனால் இரும்பு முதலில் வெண்கல யுகத்திலேயே (Bronze Age) சிறிய அளவில் பயன்படுத்தப்பட்டது. மெசொப்பொத்தேமியா மற்றும் அனத்தோலியா (தற்கால துருக்கி) போன்ற பகுதிகளில் கிமு 3000க்கு முன்பே இரும்பு பயன்பாட்டில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இந்தியாவில், இரும்பு யுகம் கிமு 1800 முதல் கிமு 1200 வரை தொடங்கியது. தமிழகத்தில், இரும்பு பயன்பாடு சங்க காலத்திற்கு முன்னர் (கிமு 600 - கிமு 300) இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. எனவே, தோராயமாக 5000 வருடங்களுக்கு முன்பு இரும்பு பயன்பாட்டில் இருந்துள்ளது.
-
அர்ச்சுனா எம்.பி குறித்து அரசின் நடவடிக்கைகள் அதிருப்திக்குரியவை சரத் வீரசேகர தெரிவிப்பு
ஆகா யார் யாரெல்லாம் ஒற்றுமை பற்றி பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னரான தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வுகள் என்ன? - சுமந்திரனிடம் கேட்டறிந்தார் இந்திய உயர்ஸ்தானிகர்
சுமந்திரனுக்கு அது தான் கெட்ட கோவம் வந்து விட்டது போல.🙂
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னரான தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வுகள் என்ன? - சுமந்திரனிடம் கேட்டறிந்தார் இந்திய உயர்ஸ்தானிகர்
பம்மாத்து அடிக்கும் கஜேந்திரகுமாருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுகிறேன் https://www.facebook.com/share/v/12JEkgjap28/ யாழில் 17 சபைகளிலும் நாங்கள் ஆட்சியமைப்போம்.! “மக்கள் ஆணையைப் பெற்ற தமிழ் தேசிய கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று கூறிவிட்டு இப்போது மக்கள் ஆணையை புறக்கணித்து தமிழரசு கட்சியை வீழ்த்தும் முனைப்பில் நிமிஷத்துக்கு நிமிஷம் பொய் கூறி பம்மாத்து அடிக்கும் கஜேந்திரகுமாருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுகிறேன். உதிரிகளை கூட்டுச்சேர்த்து மக்கள் ஆணையை மிதிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டாம்” - சுமந்திரன் Fake பம்மாத்து கஜேக்கு இப்ப கால் நடுக்கம் வந்திருக்கும் 😂
-
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
Muthukrishnan Viswanaath பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் ! மு.க.ஸ்டாலினுக்கே விபூதி அடித்தவர் !! கண்டுகொள்ளாமல் விட்ட தமிழர்கள்... எல்லை மீறிய பாலகிருஷ்ணன் ! இனியும் பொறுத்துப் போதல் கூடாது ! -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் தென்னிந்திய மொழிக்குடும்பம், இந்தோ - ஐரோப்பிய (சமஸ்கிருத) மொழிக்குடும்பத்தில் இருந்து வேறுபட்டது என்று ராபர்ட் கால்டுவெல்லுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவியவர் ஐரோப்பியர் பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ். ஆனால். திராவிடர் எனும் பெயரில் ஒளிந்து கொண்டு தமிழ் நாட்டில் சுமார் 60 ஆண்டுகாலமாக ஆட்சி அதிகாரத்தை வஞ்சகமாகக் கைப்பற்றி வைத்திருக்கும், தெலுங்கைத் தாய் மொழியாகவும், தமிழைப் பேச்சு மொழியாகவும் கொண்டுள்ளவர்கள் ராபர்ட் கால்டுவெல்லை ஏன் தூக்கித் தலையில் வைத்து ஆடுகிறார்கள் என்றால்...அவர்தான் "திராவிட" எனும் சொல்லை முன் நிறுத்தியவர். அவர், திராவிட எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு தென்னிந்திய என்று பொருள் என்பதால் பயன்படுத்தினார். ஆனால், அதை ஒரு இனத்தின் பெயர் போல பொய்யாகக் கட்டமைத்ததில் முக்கியப்பங்கு ஈ.வெ.ராமசாமிக்கே உண்டு. மேலும், அந்த ராபர்ட் கால்டுவெல் தமிழ், பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்க வல்ல மொழி என்று கூறினாலும், தமிழும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் வேறு ஒரு முந்து மொழியில் இருந்து வந்திருக்கலாம் என்று உத்தேசமாகக் கூறி வைக்க அதைப்பிடித்துக்கொண்டு விட்டனர் ஈ.வெ.ராமசாமி வகையறாக்கள். இதையடுத்தே ஈ.வெ.ராமசாமி, "திராவிடர்" கழகம் என்று பெயர் சூட்டினார். ஒட்டுமொத்தத் தமிழர்களையும் "திராவிடர்கள்" என்று அடையாளப்படுத்தினார் ஈ.வெ.ராமசாமி. அவருடைய அமைப்பின் பொதுச் செயலாளாராக இருந்த கி.ஆ.பெ. விசுவநாதம் தமிழர் கழகம் என்றேபெயர் வைக்க வேண்டும் என்று கூறியும், வஞ்சகமாக திராவிடர் கழகம் என்றே பெயர் சூட்டினார் ஈ.வெ.ராமசாமி. இதற்கு அவர் கூறிய காரணம், தமிழர் என்றால் பார்ப்பனர்களும் உள்ளே வந்துவிடுவார்கள் என்பது. ஆனால், இறுதிவரை ராஜாஜி எனும் கன்னட பார்ப்பனரை "ஆச்சாரியார்" அதாவது, குருவே குருவே என்று அழைத்து நட்புறவில் இருந்தவர் ராமசாமி. அவரைக் கேட்காமல் துரும்பைக்கூட அசைக்காதவர் ராமசாமி. அவருக்கு தமிழ்ப் பார்ப்பனர்கள் மீதுதான் வெறுப்பு போல. (அயோத்திதாசர்தான் திராவிடர் எனும் பெயருக்கு முதலில் வித்திட்டவர் என்று திராவிடத் திருவாளர் கூட்டம் முழங்கும்......ஆனால் திராவிடர் எனும் பெயரில் அமைப்பு நடத்தியவர் ஜான் ரத்தினம். அவர் நடத்திய பத்திரிகைக்கு எழுத்துப் பங்காற்றியவர் அயோத்திதாசர். இந்த திராவிடர் எனும் சொல் ஆதி திராவிடர் எனும் பெயரில் பறையர் பெருங்குடி மக்களை மட்டுமே குறிக்கும் வகையில்தான் ஜான் ரத்தினம் பயன்படுத்தினாரே தவிர, ஒட்டுமொத்தத் தமிழர்களைக் குறிக்கும் பெயராகப் பயன்படுத்தவில்லை. மேலும், அந்தக் காலகட்டத்தில் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை இந்துக்கள் என்று வகைப்படுத்தும் செயல் செய்யப்பட்டது. அந்த நிலையில், அயோத்திதாசர், பறையர் பெருங்குடி மக்கள் தங்களை "சாதியற்ற தமிழர்கள்" என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதியவேண்டும் என்றுதான் வலியுறுத்தினார். கவனிக்கவும், சாதியற்ற திராவிடர்கள் என்று அல்ல. மேலும், தமிழன் எனும் பெயரில்தான் அச்சுப்பத்திரிகை நடத்தி வந்தார். எனவே...அயோத்திதாசரை வைத்து திராவிடம் பெயரை உறுதிப்படுத்த முனைவது குதர்க்கமானது, மூடத்தனமானது. ஏற்றுக்கொள்ள இயலாதது.) இந்த ராபர்ட் கால்டுவெல்லைப் பொறுத்தவரை தென்னிந்த மொழிகளின் இலக்கணங்களுக்கு இடையேயான ஒப்பீடு குறித்த ஆய்வுத் தகவலைத் தவிர அவர் எழுதியுள்ள 99 விழுக்காடு தகவல்கள் அபத்தமானவை, மூடத்தனமான, அறிவற்ற தகவல்கள். சில எடுத்துக்காட்டுகள் சொன்னால் புரியும்...."தமிழர்களுக்கு கலை அறிவியல் கட்டடக் கட்டுமானம் குறித்து ஒன்றும் தெரியாது. இவற்றைக் கற்றுக்கொடுத்தவர்கள் வட வேத பிராமணர்கள். தமிழர்களுக்கு இலங்கைக்கு தெற்கே கடல் குறித்த எந்த அறிவும் இல்லை" என்கிறார் ராபர்ட் கால்டுவெல் ஆனால் "தமிழ் தனித்து இயங்கும் வல்லமை படைத்த சிறப்புத் தனி மொழி" என்கிறார் அவர். அது எப்பட்றா....உலக மொழிகளில் குறிப்பாகத் தென்னிந்திய மொழிகளில், பிற மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல தொன்மையான மொழி தமிழ் என்று கூறும் ஒரு ஆய்வாளர் ராபர்ட் கால்டுவெல், அந்தத் தமிழ் பேசும் இன மக்களுக்கு கலை, அறிவியல், பண்பாடு, கட்டடக் கலை தெரிந்திருக்கவில்லை" என்று உளறுகிறார் ? எனும் கேள்வி எழுகிறது இல்லையா ? எவ்வளவு இளித்தவாயர்களாகத் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் ?! இதனால்தான், ஆட்சி அதிகாரத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு தமிழர் வரலாற்றை திரித்து எழுதிக்கொண்டுள்ளது இந்தத் திராவிடக் கூட்டம். இது, திராவிடக்கூட்டத்தின் தவறல்ல....கண்டுகொள்ளாமல்விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த ஒற்றுமையற்ற தமிழர்களின் மாபெரும் தவறு. இந்த ராபர்ட் கால்டுவெல்லுக்கு அன்றே உடன் இருந்து இதுபோன்ற அபத்தமான நூல் எழுத ஆலோசனை கொடுத்தவர்கள் அநேகமாக தெலுங்கு பிராமணர்களாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. தம்மை ஆச்சாரமான கன்னட பலிஜா நாயுடு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்று அறிமுகம் செய்து கொண்ட ஈ.வெ.ராமசாமிக்கு அடுத்து, வரலாற்றுதுறையில் ராமசாமி வேலை செய்தவர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன். இவர், ராபர்ட் கால்டுவெல்லின் அபத்தமான கருத்தை உண்மையாக்க முயன்றவர். அதாவது, திராவிடர் என்பவர்கள் குஜராத் தொடங்கி தென்னிந்தியாவுக்கு வந்தவர்கள் என்றும், இலங்கைக்குத் தெற்கில் தமிழர்கள் சென்றதில்லை என்றும் ராபர்ட் கால்டுவெல் கூறிய அறிவற்ற கருத்தை உண்மையாக்க முயன்றவரே ஐராவதம் மகாதேவன். மேலும், சிந்துவெளி நாகரீகத்தைத் திராவிடர் நாகரிகம் என்று முதன்முதலாகக் கட்டுக்கதை எழுதிப் பதியவைத்ததும் இதே ஐராவதம் மகாதேவன்தான். ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல சுமார் 40 ஆண்டுகள் இந்தக் கருத்தில் இருந்து யாரும் நகர்ந்து கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ளுமாறு ஒரு ஏற்பாட்டை செய்தவரும் இதே ஐராவதம் மகாதேவன்தான். இவரது இந்தக் கருத்து, தமிழ்நாட்டில் வாழும்.. வெளியே தமிழும், வீட்டுக்குள் தெலுங்கும் பேசும், பத்திரிகை - ஊடகம், வணிகம், ஆட்சி அதிகாரத்தில் ஈடுபட்டு வருவோருக்கு லட்டு போல இனிக்கத் தொடங்கியது. இதுதான் தங்கள் வரலாறு என்று இந்தத் திராவிடர்கள் உறுதியாக நம்பத் தொடங்கினார்கள்...தமிழர்களையும் நம்ப வைத்தார்கள். ஆக.... தென்னிந்தியப் பொருளில் உள்ள திராவிட எனும் சொல்லை, ஒரு இனத்தின் பெயராகப் பொய்யாக மாற்றி, அதை நம்பவைத்து அந்த இனத்தின் நாகரிகம்தான் சிந்துவெளி நாகரிகம் என்று ஐராவதம் மகாதேவன் போன்ற வரலாறு எழுதியோரும் பதிவு செய்ய.....தமிழர்களும் தங்களைத் திராவிடர்கள் என்றே மிக மிகத் தவறாக உறுதியாக நம்ப வைக்கப்பட்டனர். ஆனால், அடிப்படையில் ஒரு இனம் என்றால் அதற்கு ஒரு மொழிதான் இருக்கும். ஒரு மொழி கொண்ட, ஒரே இடத்தில் நீண்ட காலம் வாழ்ந்த, கலை, இலக்கியம், பண்பாடு கொண்ட மொழி பேசுவோர் உள்ள ஒரு சமூகத்தைத்தான் இனம் என்று அளவிடுவது உலக அளவில் வரையறை உள்ளது. ஆனால், இங்கே தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சுமார் 8 மொழிகள் பேசுவோரை ஒரே இனம் என்று உருட்டிய ஒரே கரகாட்டக் கோஷ்டி இந்த ஐராவதம் மகாதேவன் வகையறா தெலுங்கை வீட்டிலும், தமிழை வெளியேயும் பேசும் திராவிடக் கோஷ்டிதான். ராபர்ட் கால்டுவெல்லின் அபத்தமான கருத்துக்களைக் கைப்பற்றி ஈ.வெ.ராமசாமி, ஐராவதம் மகாதேவன் ஆகிய இரண்டு பேர் ஒருவழியாக பட்டி டிங்கரிங் பார்த்து தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் திராவிடர்கள் என்று நம்பவைத்து விட்டனர். ஆனால், இவர்களுக்கு இருந்த ஒரே சிக்கல், தடை...தமிழர்களின் சங்க இலக்கிய நூல்கள். காரணம், இவர்களின் இந்த திராவிட உருட்டு தவிடு பொடியாகும் இடம் சங்க இலக்கிய நூல்கள் எனும் தமிழர் வரலாற்று ஆவணங்கள். இதுகுறித்து மறைந்த கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ரா எனும் கி.ராஜநாராயணனை முன்பொருமுறை சந்திக்கச் சென்று சிலரிடம் வெளிப்படையாகவே சொன்னது..."சங்க இலக்கியங்களை மட்டும் அழித்துவிட்டால் மொத்தமா முடிஞ்சிடும். மண்ணும், வரலாறும் நமதாகிவிடும்" என்று கி.ரா கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டனர் சென்றவர்கள். காரணம், இவர்கள் தமிழர்கள். கி.ரா தெலுங்கு. இதனால்தான், 2021 மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குவந்தபிறகு சட்டமன்றத்திலேயே "சங்க இலக்கியங்கள் இனி திராவிடக் களஞ்சியங்கள்" என்று அழைக்கப்படும் என்று அறிவித்துக் கடும் எதிர்ப்பு வந்தவுடன் அது திரும்பப் பெறப்பட்டது. அதாவது, தமிழ் சங்க இலக்கியங்களை அழிக்க முடியாது...சரி அடுத்து என்ன செய்யலாம் ?! அந்த இலக்கியங்களுக்கும் திராவிட முகமூடி மாட்டிவிட்டுவிட வேண்டியதுதான். சோ...சிம்பிள். தமிழ் என்றாலே திராவிடம் என்று நம்ப வைத்தாயிற்று, தமிழர்களும் திராவிடர்களே என்று நம்ப வைத்தாயிற்று, தமிழர் இலக்கியங்களும் திராவிட இலக்கியங்கள் என்று நம்ப வைத்தாயிற்று, சிந்து வெளியும் திராவிட நாகரிகம் என்று நம்ப வைத்ததாயிற்று ....அடுத்து என்ன ?! அடுத்த பணிதான் ஐராவதம் மகாதேவனின் சீடர் தெலுங்கரான பாலகிருஷ்ண ஐ ஏ எஸ் செய்தது, செய்து கொண்டிருப்பது ! இந்தப்பணி, முந்தைய சதிகளையெல்லாம் தூக்கி அப்படியே விழுங்கிவிடும் பெருஞ்சதி, தமிழர் இனவழிப்பின் கிட்டத்தட்ட இறுதிக் கட்டம். சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று ஐராவதம் மகாதேவன் பொய்யாகக் கட்டுக்கதை கட்டி கட்டமைத்தார் இல்லையா...அந்த சிந்துவெளியில் இருந்து தெற்கே வைகை - கீழடி வரையிலான நாகரிகம் அனைத்தும் திராவிட சிந்து வெளி நாகரிகமே என்று கட்டுக்கதை கட்டும் வேலையைத்தான் பாலகிருஷ்ணன் கடந்த 15 ஆண்டுகளாகச் செய்து வருகிறார். அதிலும், ஏற்கனவே குறிப்பிட்டபடி முந்தைய சதிகளையெல்லாம் தூக்கி அப்படியே விழுங்கிவிடும் பெருஞ்சதியாக, தமிழர் இனவழிப்பின் இறுதிக் கட்டமாக, சங்க இலக்கிய சான்றுகள் அனைத்தும் குஜராத் முதல் (தற்போது) பாகிஸ்தான் வரையிலான சிந்துவெளி நாகரிகப் பகுதிகளுக்கே பொருந்துகின்றன, அவை, தமிழ்நாட்டிற்குப் பொருந்தவில்லை என்று நூல் எழுதியதுடன், பாண்டிய அரசன் குஜராத் மற்றும் மராட்டியத்தில்தான் இருந்தான், தெற்கில் இல்லை என்று மரண மகா உருட்டு உருட்டுகிறார் பாலகிருஷ்ணன். அதாவது, கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒன்றுமில்லை, குமரிக்கோடு, பஃறுளி ஆறு, குமரிக்கண்டம் என்பது தெற்கில் இல்லை வடக்கே குஜராத் மஹாராஷ்டிரா பகுதியில் இருந்தவை என்று திருப்பி உருட்டுகிறார். வஞ்சி எனும் தலைநகரம் பாகிஸ்தானில் உள்ளது என்றும், சங்க இலக்கியம் கூறும் துவரை எனும் பெயர் துவாரகையைக் குறிக்கிறது என்றும் தமது நூலில் எழுதி வைத்திருக்கிறார். ஆக....குஜராத் கடலில் கடல் கோள் ஏற்பட்டு அந்த மக்கள் சிந்து வெளியான பாகிஸ்தான், பலுச்சிஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் வாழ்ந்து அதற்குப் பிறகு தெற்கு நோக்கி வந்து கீழடிக்கு வந்தனர் என்கிறார். நகைச்சுவை நடிகர் சந்தானம் நடித்த படத்தில் "என்னையை இன்னும் பைத்தியகாரன்னே நினைச்சுட்டிருக்கதானே" எனும் வசனம் மனதில் எழுகிறது இல்லையா...எமக்கும் அதே உணர்வுதான். இது தமிழர்களைப் பைத்தியமாக்கும் வஞ்சகச் செயல். ஆக...இந்தத் தெலுங்கு திராவிட கூட்டத்தின் சுமார் 70 ஆண்டுகால செயல்திட்டம் வெளிப்படையாகவே தமிழ், தமிழர்களை அழித்தொழிப்பது அல்லது அவர்களின் மொழி, இலக்கியம், தொன்மம், பண்பாடு, நிலம், மண்,ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களை கொத்தடிமைகளாக வைத்துக்கொள்வது. இதற்கான வரலாறு எனும் பெயரில் பொய்யாக ஃபோர்ஜரி வேலை செய்து புரட்டு வரலாற்றை உருவாக்கும் பித்தளை மாத்தி வேலை செய்வதுதான் ஐராவதம் மகாதேவன், பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகியோரின் வேலைத்திட்டம். இத்தகைய மாபெரும் "தமிழின உணர்வாளரைத்தான்" தமிழ்நாடு அரசின் "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்" அதற்குத் தலைவர் பொறுப்பில் இருந்த அமைச்சரைத் தூக்கி விட்டு அந்தத் தலைவர் பொறுப்பில் அமரவைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதில் என்ன கொடுமை என்றால்...அந்த உலகத்தமிழாராய்ச்சி மையத்தின் மாணவர்கள் Phd பயிலுவோர். இவர்...M A தமிழ் அஞ்சல் வழியில் பயின்றவர். அவர்களுக்கு இவர் தலைவர். மேலும், இவர் கல்வெட்டு ஆய்வாளரோ, ஓலைச்சுவடி ஆய்வாளரோ...அல்லது அகழ்வாய்வு ஆய்வாளரோ அல்ல. ஆக...மொத்தம் பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ்-ஐப் பொறுத்தவரை வடக்கில் இருந்துதான் தெற்கு நோக்கி மனிதர்கள் வந்தார்கள், நாகரிகம் வந்தது என்று நம்ப வைக்கும் வேலையை உருண்டு புரண்டு செய்து வருகிறார். இவரது வாதத்தின்படியே பார்த்தாலும் கூட... வடக்கே இருந்து மனிதர்கள் மற்றும் நாகரிகம் தெற்கு நோக்கி வர 100 க்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். அதுவரை தென்னிந்தியா முழுதும் காடாக இருந்ததா. மனித நடமாட்டமே இல்லாதிருந்ததா ????? என்ன பைத்தியக்காரத்தனமான பார்வை ?! ஆனால்...இவ்வளவு மெனக்கெட்ட பாலகிருஷ்ணன் தற்போது வசமாக மாட்டியிருக்கிறார். அது..... சில வாரங்களுக்கு முன்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், முன்னதாகத் தமிழ்நாட்டின் சிவகளை எனும் இடத்தில் கிடைக்கப்பெற்ற இரும்பைக் கால அளவு சோதனை செய்தபோது அது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று நிரூபிக்கப் பட்டுள்ளதாக அறிவித்தார். அதாவது பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் தலையில் தூக்கிக் கொண்டாடுகிற பாகிஸ்தானின் சிந்துவெளியின் சான்றுகளின் கால அளவுக்கு முற்பட்டது இந்த சிவகளை இரும்பு நாகரிகம். வடக்கில் இருந்துதான் தெற்கு நோக்கி மனித நாகரிகம் வந்தது என்று பாலகிருஷ்ணன் சொல்வது உண்மை என்றால்....இந்த சிவகளையில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இரும்பைப் பயன்படுத்தியவர்கள் யார்....? வேற்று கிரக மனிதர்களா....இல்லை பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்-சின் முன்னோர்களா ?! சிந்துவெளி முதல் வைகை வரை என்று புரட்டு நூல் ஒன்றை எழுதிய பாலகிருஷ்ணன் இப்போது மாற்றி வகை முதல் சிந்துவெளி வரை என்று உண்மை நூல் எழுதுவாரா ?! வெளியே இருந்தபோதே வரலாற்றை இப்படி புரட்டி உருட்டி திரிக்கும் பாலகிருஷ்ணனை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் அமரவைத்திருக்கிறார்கள்....அங்கே என்னென்னெ புரட்டு வேலைகளைச் செய்து தமிழர் வரலாற்றை எப்படியெல்லாம் மேலும் திரிக்கப்போகிறாரோ யாருக்குத் தெரியும் ?! -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை ஊடகவியலாளர், நிறுவனர் : தமிழியல் நடுவம். 8/6/2025
-
கனடா: அமைச்சர் ஆனந்த சங்கரியின் திரிசங்கு நிலை
Columnsசிவதாசன் கனடா: அமைச்சர் ஆனந்த சங்கரியின் திரிசங்கு நிலை சிவதாசன்கனடாவின் உள்ளக பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் இன்று, ஜூன் 03, 2025, மாண்பு மிகு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி புதியதொரு சட்டமூலத்தை அறிவித்திருக்கிறார். ‘கனடியர்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்’ என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இச்சட்டத்திற்கு பலமான எல்லைகள் சட்டம் (Strong Borders Act) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. ‘நாடு கடந்த திட்டமிடப்பட்ட குற்றத்தை எதிர்கொள்ளல்’ (combat transnational organized crime), சட்டவிரோதமான ஃபென்ரனில் போதை வஸ்து கடத்தலைத் தடுத்தல் (stop the flow of illegal fentanyl) மற்றும் கருப்புப் பணச்சலவைச் செயற்பாடுகளைத் (crack down on money laundering) தடுத்தல் ஆகியவற்றின் பின்னாலுள்ள அதி நவீன வலையமைப்புக்களை எதிர்கொள்ள வல்லதாக கனடிய பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்தல் இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாக இருப்பினும் குடிவரவு விடயங்களிலும் அமைச்சரின் அதிகாரம் தலையை நீட்டுவதற்கான அனுமதியும் இருக்கிறது போலத் தெரிகிறது. அதிகாரப் பரவலாக்கம் போதை வஸ்து, ஆயுதங்கள் கடத்தல் வாகனத் திருட்டு ஆகியவற்றைக் காண்காணிக்கும் அதிகாரம் சுங்கச் சட்டத்தின் கீழ் வந்தாலும் சில எல்லைகளினூடு வரும் / போகும் பொருட்களைத் தேக்கி வைத்திருக்கும் / பொதிகளைத் தயாரிக்கும் கிட்டங்கிகள் (warehouses), கொள்கலன்கள் (containers), அல்லது பாரவண்டிகளைப் (trucks) பரிசோதிக்கும் அனுமதி தற்போது இல்லை என்பதால் அச்சட்டத்தை மாற்றுவது; கரையோரப் பாதுகாப்ப்பில் ஈடுபடும் காவற் படையினர் சந்தேகத்திற்கிடமாக நடமாடும் கலங்களை வழிமறித்து அல்லது அவற்றுக்கிடையேயான தொடர்பாடல்களைக் கிரகித்து பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் சமுத்திர சட்டத்தை (Oceans Act) மாற்றுவது; சர்வதேச சட்ட நிர்வாக அமைப்புகளுடன் பரிமாறல்களை அதிகரிக்கும் வகையில் RCMP காவல்துறையின் அதிகாரங்களை விரிவாக்குவது; புதிய ‘தகுதியின்மை’ (ineligibility) விதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் சடுதியாக அதிகரிக்கும் அகதிகள் கோரிக்கைகளிலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பது; அகதிக்கோரிக்கைகள் எவ்வழியில் பெறப்படுகின்றன, ஆராயப்படுகின்றன, தீர்மானிக்கப்படுகின்றன ஆகிய விடயங்களைக் கூர்மைப்படுத்தல்; குடிவரவுப் பத்திரங்களை ரத்து செய்யவோ, இடைநிறுத்தவோ அல்லது மாற்றுவற்கோ அல்லது அகதிகோரிக்கைகளுக்கான புதிய விண்ணப்பங்களை ரத்துசெய்யவோ, தற்காலிகமாக இடைநிறுத்தவோ அல்லது முற்றாக நிறுத்தவோ தேவையான அதிகாரங்களை திணைக்களங்களுக்கு வழங்குதல்; குடிவரவாளர் பற்றிய பிரத்தியேக தகவல்களை குடிவரவு,அகதிகள், பிரஜாவுரிமைத் திணைக்களம் ஏனைய மத்திய, மாகாண மற்றும் பிரதேச அதிகாரங்களுடன் பகிர்ந்துகொள்ளல்; ஆகிய விடயங்களில் மாற்றங்களைக் கொண்டுவர அமைச்சரால் முன்மொழியப்படும் புதிய சட்டமூலம் வழிவகுக்கிறது. நாடுகடந்த திட்டமிட்ட வகையில் செயற்படும் குற்ற அமைப்புக்கள் மற்றும் ஃபென்ரனில் போதை வஸ்து கடத்தல்ஃபென்ரனில் போதை வஸ்து தயாரிப்பிற்குத் தேவையான மூலப்பொருட்கள் இறக்குமதியாவதை அவதானித்து விரைவாகக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சுக்கு அதிகாரங்களை வழங்கல் தேவையேற்படின் ஒருவரது பிரத்தியேக தகவல்களைப் பெறும் வகையில் Criminal Code, MLACMAct, CSIS Act ஆகிய சட்டங்களை மாற்றி இத்திணைக்களங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குதல் எலெக்ட்றோனிக் ஊடகங்களை ஊடுருவி ஒருவரது பிரத்தியேக தொடர்பாடல்களைக் கண்காணிக்க்கும் வகையில் புலனாய்வு திணைக்களங்களுக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்குதல் கனடா போஸ்ட் மூலம் விநியோகிக்கப்படும் தபால்கல், பொதிகளைத் திறந்து பரிசோதிக்கவும், தேவையானால் குற்றங்களைப் பதியவும் காவற்துறையினருக்கு அனுமதி வழங்கும் வகையில் சட்ட மாற்றத்தைக் கொண்டு வருதல் கருப்பு பண வருகையைத் தடுத்தல்கருப்புப் பணத்தைச் சலவை செய்தல் மற்றும் பயங்கரவாதிகளுக்குப் பணம் வழங்கல் போன்ற விடயங்களைத் தடுக்க கடினமான தண்டனைகளை வழங்கும் வகையில் சட்டங்களை இயற்றுதல் /மாற்றுதல் பெரிதளவான பண மாற்றம், மூன்றாம் தரப்பு பண மாற்றம் ஆகியவற்றைக் கண்காணித்தல் வங்கிக் கணக்குகளில் காணப்படும் சந்தேகத்துக்கிடமான பண மாற்றங்கள் பற்றி சம்பந்தப்பட்ட அரச, தனியார் நிறுவனம்ங்களிடையே தகவற் பரிமாற்றத்துக்கு வழி செய்தல் மேலும் வரவிருக்கும் புதிய சட்டங்கள் , மாற்றங்கள்கனடாவைப் பாதுகாப்பதற்கெனக் கொண்டுவரப்படும் ‘பலமான எல்லைகள் சட்டம்’ துப்பாக்கிகளின் பிரயோகத்தைக் கட்டுப்படுத்தியும், தொடர் குற்றவாளிகள் இலகுவில் பிணை பெறுவதைத் தடுக்கவும், வாகனத் திருடர்கள், வீடுகளை உடைத்து திருடுபவர்கள், ஆள் மற்றும் போதை வஸ்து கடத்தல்காரர்கள் ஆகியவர்களிடமிருந்து பிரஜைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் அரசு உத்தேசம் கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்காக $1.3 பில்லியன் தொகையைச் செலவிடத் தயாராகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது அமைச்சர் ஆனந்தசங்கரியின் திரிசங்கு நிலை இச்சட்டமூலம் அறிவிக்கப்பட்டபோது உடனடியாக ஒரு ஊடகவியலாளர் மாண்புமிகு அமைச்சரை இக்கட்டில் மாட்டிவிடும் வகையில் கேள்வியொன்றைக் கேட்டார். “சில வருடங்களுக்கு முன் வான்கூவரில் கரை தட்டிய கப்பலில் வந்த அகதிகள் விடுதலைப் புலிகள் அல்லவா. அப்போது நீங்கள் கனடிய தமிழர் பேரவையின் சட்ட ஆலோசகராக இருந்தீர்களே. இப்பின்னணியில் இப்போது அறிமுகமாகும் சட்டமூலத்தை எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறீர்கள்” என்ற சாரத்தில் அக் கேள்வி இருந்தது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், விடுதலைப் புலி, கனடிய தமிழர் பேரவை போன்ற ஆபத்தான பதங்களைச் சாதுரியமாகத் தவிர்த்து அவரது அமைச்சர் தொப்பியை மாற்றிவிட்டு ஒருகணம் வழக்கறிஞராக மாறிப் பதிலளித்து ‘வாய்ப்பில்லை ராஜி’ எனக்கூறி அவரை அனுப்பிவிட்டார் (எனது பார்வையில்). இக்குறிப்பிட்ட ஊடகவியலாளரிடமிருந்து வந்த அம்பு நீண்ட நாட் தயாரிப்பாக இருந்திருக்குமென்று நினைக்கிறேன். ஆனால் இதைவிட மோசமான பல அம்புகள் இன்னும் பலவித ஊடகவியாளர்களின் அம்பறாத்துணியில் பதுங்கியிருக்க வாய்ப்புண்டு. குடிவரவு, வெளிவிவகாரம், தபால், சுகாதாரம், தகவற் தொடர்பு என ஏகப்பட்ட அமைச்சர்களின் அதிகாரங்களை அள்ளிக் கொண்டுவந்து அமைச்சர் ஆனந்தசங்கரியின் பாசறையில் போட்டுவிட்டு “ஏலுமெண்டால் செய்துபார்” என்று கார்ணி தப்பித்துக்கொண்டுவிட்டார். இவற்றில் பெரும்பாலானவை பெரியவர் ட்றம்பைத் திருப்திப்படுத்துவதற்காக என்பது பளிச்சென்று தெரிகிறது. காளிஸ்தான் பயங்கரவாதிகள் என யாராவது தொண்டை கிழியக் கத்துவது அமைச்சரது செவிப்பறைக்குள் நுழையும் போது அது ‘விடுதலைப் புலிகள்’ ஆகவே அவருக்குக் கேட்கும். கத்துபவர்களின் நோக்கமும் அதுவாகவே இருக்கும். இப்பின்னணியில் தமிழ்ச் சமூகத்துடனான அவரது ஊடாடல்களை அவர் மட்டுப்படுத்தத் தள்ளப்படுவார். பாதுகாப்பு காரணங்களுக்கென குடிவரவு விண்ணப்பங்கள் ரத்துச் செய்யப்படும்போது அதனால் பெருவளவு பாதிக்கப்படப் போபவர்கள் வெள்ளையரல்லாதவர்கள். இதனால் அமைச்சருக்கு எதிராக அவரது ‘தோலினமே’ கொடி பிடிக்க (பனர் பிடிக்க (?)) கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எல்லைகளைப் பாதுகாத்தல் என்ற பெயரில் தனியார் சுதந்திர எல்லைகளை மீறும் பல சட்ட மாற்றங்கள் அமைச்சருக்குப் பல வகையான எதிரிகளையும் தேடித்தர வாய்ப்புண்டு. அதைவிடவும் அச்சம் தரும் விடயம் இந்த ‘ஓர்கனைஸ்ட் கிரைம்’ கும்பல்கள். அமைச்சர் முன்பு போல ரொயோட்டா கொரோல்லாவில் பயணம் செய்யக்கூடாது. மாறாக இலான் மஸ்க்கிடமிருந்து ஒரு ‘சைபர் ட் ரக்’ ஒன்றை (இதுவரை வாங்காமலிருந்தால்) வாங்கி வைத்திருப்பது நல்லது. ஆனால் அமைச்சரது இந்த சட்ட மூலம் ஒரு விடயத்தில் சில நல்ல விடயங்களைச் செய்யும் எனவும் எதிர்பார்க்கலாம். சமூக ஊடகங்களில் உலவும் தலை மாறிகளும், தலையாட்டிகளும் கொஞ்சம் ஓரமாக நிற்கவேண்டி ஏற்படலாம். அமைச்சருக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ எதிரிகளைச் சமாளிக்க சில தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்தேயாகவேண்டும். இதனால் நண்பர்கள் எதிரிகளாகவும் எதிரிகள் நண்பர்களாகவும் மாறுவதற்கான சூழல் ஏற்படுமெனப் பட்சி சொல்கிறது. அமைச்சருக்கு எனது அட்வைஸ்? விளக்குக் கொழுத்துவதையும் பட்டயம் வழங்குவதையும் சற்றுத் தவிர்த்து அதிக காலத்தை ஒட்டாவாவில் கழிப்பது நல்லது. |கனடா: அமைச்சர் ஆனந்த சங்கரியின் திரிசங்கு நிலை |சிவதாசன் கனடாவின் உள்ளக பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் இன்று, ஜூன் 03, 2025, மாண்பு மிகு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி புதியதொரு சட்டமூலத்தை அறிவித்திருக்கிறார். 'கனடியர்களைப் பாதுகாப்பாக...
-
யோக முத்திரைகள்
யோக முத்திரைகள் YOGA MUDRASயோக முத்திரைகள் 1. ஞான முத்திரை : அறிவு முத்திரை ஞானம் என்றாலே அறிவுதானே, இந்த முத்திரை அறிவைப் பெருக்கும். அறிவு முத்திரை என்றும் இதனை அழைக்கலாம். முறை: கட்டை விரலின் நுனியானது சுட்டு விரலைத் தொடுமாறு மற்றைய விரல்கள் நீட்டப்பட்டும் அமையத் தியானம் செய்ய வேண்டும். நீங்கள் இருந்துகொண்டோ அல்லது நின்றுகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ செய்யலாம். இடம்: எந்தவொரு அமைதியான இடமும் இதற்கு உகந்தது. நேர அளவு: இந்த முத்திரைக்கு குறிப்பிடும்படியாக நேர அவகாசம் தேவையில்லை, எந்த நேரத்திலும் இதனைச் செய்யலாம். பலன்கள்: அறிவு முத்திரையல்லவா, அறிவைக் கூட்டும். கட்டை விரலின் நுனியானது அகஞ்சுரப்பிகளின் (முக்கியமாக கபச்சுரப்பி – pituitary ) மையமாக விளங்குகிறது. விரல்கள் அமுக்கப் படுவதால் இந்தச் சுரப்பிகள் நன்கு வேலை புரிகின்றன.ஆகவே இந்த முத்திரை,• ஞாபக சக்தியைக் கூட்டும், மூளையைக் கூர்மையாக்கும்.• கிரகிக்கும் செயற்பாட்டைக் கூட்டும், மேலும் தூக்கமின்மையை நீக்கும்.• ஒழுங்கான பயிற்சியின் மூலம் மன உள நோய்களான ஹிஸ்டீரியா, மன எரிச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும். மனம் சாந்தமடையும். 2. பிருத்வி முத்திரை : பூமி முத்திரை பிருத்வி என்றால் சமஸ்கிருதத்தில் பூமி மாதா என்பதாகும். முறை: மோதிர விரலின் நுனிப்பகுதி கட்டை விரலின் நுனியுடன் தொட ஏனைய விரல்கள் நீட்டப்பட்டிருத்தல். நேர அளவு: வரையறை இல்லை பலன்கள்: எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும். • உடல் பலவீனமற்றவருக்கு நிறையைக் கூட்டும். • தோலின் கட்டமைப்பை உகந்ததாக்கி தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவும். • உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் உடலினைப் பேணுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 3. வாயு முத்திரை : காற்றிற்கான முத்திரை முறை: சுட்டு விரலை கட்டை விரலின் அடிப்பகுதியிலும் கட்டை விரலால் சுட்டுவிரலின் மேல் இலகுவாகத் அழுத்தியும் மற்றைய விரல்கள் நீட்டியும் இருக்க வேண்டும். நேர அளவு: 45 நிமிடங்கள் இவ்வாறு இருத்தலின் மூலம் நோயின் தாக்கம் 12 – 24 மணி நேரங்களுக்குள் குறைந்து விடும். இரண்டு மாதங்களுக்குத் தொடர்ந்து செய்தல் சாலச் சிறந்தது. பலன்கள்: • மூட்டு வாதம், ஏனைய வாத நோய்கள் ( rheumatism, arthritis, gout) மற்றும் பார்க்கின்சன் வியாதி • கழுத்து முதுகென்பு அழற்சி (Cervical Spondilytis) முக நரம்பு செயலிழப்பு (facial paralysis) • வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு 4. சூரிய முத்திரை முறை: மோதிரவிரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலால் அழுத்துதல் நேர அளவு: ஒரு நாளைக்கு இரு தடவை 5 – 15 நிமிடங்கள் பலன் : • தைரோய்ட் சுரப்பியின் மையத்தை கூர்மையாக்கும் • உடலில் கொழுப்பைக் கரைத்து நிறையைச் சீர் படுத்த உதவும் • பதட்டத்தைப் போக்கும் • சமிபாட்டுக் கோளாறுகளைத் தீர்க்கும் 5. பிராண முத்திரை : உயிர் முத்திரை முறை: கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நுனிகள் தொடுமாறு வைத்துக் கொள்ள ஏனைய விரல்களை நீட்டி வைத்திருத்தல். நேர அளவு: எக்காலத்திலும் வரையறையின்றி செய்யலாம். பலன்: உயிர் முத்திரை அல்லவா. உயிரின் சக்தியைப் பெருக்கும். பலவீனமானோர் தேக வலுப பெறுவர். குருதிக்குழாய் அடைப்புகளைச் சரிபடுத்தும். இதனை ஒழுங்காக பயிற்சி செய்தால் நன்கு உற்சாகமுள்ளோராக மாறுவோம். • நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டும் • கண் பார்வை சிறப்புற உதவும், கண் சம்பந்தமான வியாதிகளைக் குறைக்கும் உயிர்ச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகளைச் சீர்படுத்தும், களைப்பைப் போக்கும்.. 6. பச்சன் முத்திரை : சமிபாட்டு சம்பந்தமானது. பாபா படம் மூலம் அனைவரும் அறிந்த முத்திரை (ஆனால் முத்திரை பிடிப்பதில் சிறு வேறுபாடு உண்டு) உணவு சமிபாடு அடைவதுடன் தொடர்புடையது. முறை: நடு விரல், மோதிர விரலின் நுனிகள் கட்டை விரலின் நுனியுடன் இணைத்து மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருத்தல். நேர அளவு: நாளாந்தம் 45 நிமிடங்கள் எனக் கூறப்படுகிறது. எவ்வளவு அதிக நேரம் செய்கிறோமோ அதற்கேற்ப பலன் கூடும். சாப்பிட்ட பின்னர் பயன்படுத்துவது உகந்தது. பலன்: எமது உடலின் கழிவுத் தொகுதியைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் • மலச்சிக்கல், மூலவியாதி போக்கும் • கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது 7. லிங்க முத்திரை : வெப்பம் மற்றும் சக்திக்கான முத்திரை முறை: இரு கரங்களின் விரல்களையும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொள்ளவும், பின்னர் இடது கட்டை விரலை உயர்த்தி, அதனை வலது கட்டை விரல் மற்றும் சுட்டு விரல்களுக்குள் சுற்றி வருமாறு அடக்கவும். நேர அளவு: எந்த நேரமும் உகந்தது, ஆனால் நீண்ட நேரம் செய்தல் தவிர்க்கப்படல் நல்லது. பலன்: இந்தச் செயன் முறை எமது உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது. பால், நெய் தண்ணீர் மற்றும் பழச் சாறு போன்றவைகளை இந்த முத்திரையைப் பயன்படுத்தும் போது எடுப்பதால் கூடுதலான பலன்கள் கிடைக்கும். • சளி உருவாதலைக் கட்டுப்படுத்தும், சுவாசப்பைக்கு சக்தியைக் கொடுக்கும். • சளிக்காய்ச்சல் சுவாசக்குழாய் நோய்களைக் குணப்படுத்தும். • உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். 8. அபான வாயு முத்திரை : இதய முத்திரை முறை: சுட்டு விரலின் நுனியானது கட்டை விரலின் அடிபகுதியைத் தொடவேண்டும், பின்னர் நடுவிரலின், மோதிர விரலின் நுனிகளும் கட்டை விரலின் நுனியோடு தொடவேண்டும் சுண்டு விரல் மட்டும் நீட்டப்பட்டு இருக்கும். நேர அளவு: எவ்வளவு நேரமும் செய்யலாம். இதய மற்றும் உயர் அழுத்த நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் இருதடவைகள் 15 நிமிடங்களுக்குச் செய்து வருதல் மிக்க சிறப்பைத் தரும். பலன்: இதயத்திற்கு அனுகூலத்தைத் தரும். ஒரு ஊசி மருந்தினைப் போல மார்படைப்பினைக் குறைக்க உதவும். மேலும் வாயுவை உடலில் நீக்க உதவும். • இதயத்தை வலுப்படுத்தி இதயதுடிப்பைச் சீராக்கும். • கழிவுத் தொகுதியை ஒழுங்குபடுத்தும் • சமிபாட்டை ஒழுங்காக்கும். 9. வருண முத்திரை : நீருக்கான முத்திரை முறை: சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் சேர்த்துக் கொள்ளவும், மிகுதி மூன்று விரல்கள் நீட்டப்பட்டிருத்தல் வேண்டும். பலன் : உடலின் நீர்ச் சமநிலையைப் பேணுகின்றதில் உதவுவதோடு நீர்ப் பற்றாக்குறையால் வரும் எல்லா நோய்களையும் வருவதைத் தவிர்க்க உதவும்.. • இரைப்பை-குடல் அழற்சியால் ஏற்படும் வலியைத் தடுக்கிறது • உடல் நீர் சமநிலை பேணுகிறது. • தோல் சம்பந்தமான நோய்களைக் குணமாக உதவுகிறது. யோக முத்திரைகள்: YOGA MUDRASYOGA MUDRASயோக முத்திரைகள் 1. ஞான முத்திரை : அறிவு முத்திரை ஞானம் என்றாலே அறிவுதானே , இந்த முத்திரை அறிவைப் பெருக்கும் . அறிவு முத்திரை ...
-
உங்களுக்கு தெரியுமா?
பெருமைக்குரிய பிணந்தின்னிகள்! http://aalumaisirpi.com/wp-content/uploads/2025/01/animal.jpg திரு.முகில் குள்ளநரி திருடக்கூடாது. குள்ளநரி திருடக்கூடாது. குள்ளநரி திருடவே கூடாது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த வசனம் டோராவின் குரலில் ஒலித்தே தீரும். எல்லோருக்கும் நன்மைகள் செய்யும் டோரா – புஜ்ஜி பாத்திரங்களுக்குத் தீமைகள் விளைவிப்பது குள்ளநரி. அந்தக் கார்ட்டூனில் மட்டுமல்ல. காலம் காலமாக நரியை நெகட்டிவ் உயிரினமாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம். பாட்டி வடை சுட்ட கதையிலும் நரியே வில்லன். நரிக்கு உபதேசம் செய்தாற்போல. நரி நக்கி கடல்நீர் வற்றுமா? நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும். நரி இடம் போனாலென்ன, வலம் போனாலென்ன. கடிக்காமல் போனால் சரி. பாழான ஊருக்கு நரி ராஜாவாம். சிங்கம் இல்லாத இடத்தில் நரி சிம்மாசனம் ஏறும். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. இப்படி நம் பழமொழிகளில்கூட பெரும்பாலும் நரிமீது ‘கருப்பு ஒளியே’ பாய்கிறது. நரி அவ்வளவு மோசமான விலங்கா? அதன் வாழ்க்கை எப்படிப்பட்டது? மனிதனுக்கும் நரிக்குமான உறவு எப்படிப்பட்டது? இந்தப் பூமியில் நரியின் பங்களிப்பு என்ன? நரியைவிட மோசமான உயிரினம் எது? எல்லாவற்றையும் பார்ப்போம். நரிகள் (Fox), பாலூட்டி வகையைச் சேர்ந்தவை. இவை அனைத்துண்ணிகள். ஆசியா, ஐரோப்பா, வட ஆப்ரிக்கா, வட அமெரிக்கா நாடுகளில் காணப்படுகின்றன. பொதுவாக ஒரு நாட்டு நாயின் அளவில் நரிகள் இருக்கின்றன. அதைவிடச் சிறிய அளவு கொண்ட நரி வகைகளும் உண்டு. மண்ணுக்கடியில் வளைகள் அமைத்து வாழும் இயல்புடையவை. உணவு சேமித்து வைக்கவும் உறங்கவும் வளைகளைப் பயன்படுத்துகின்றன. அதில் ஆபத்துக் காலத்தில் தப்பித்து வெளியேறுவதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட வாசல்களை அமைத்துக் கொள்கின்றன. தந்திரம்! நரிகள் கூட்டமாக வாழும் இயல்புடையவை. இரவு நேரங்களில் அவற்றால் தெளிவாகப் பார்க்க இயலும். ஆகவே, அப்போது வேட்டையாடுகின்றன. இதன் காதுகள், பூமிக்கடியில் எலி போன்ற உயிரினங்கள் எழுப்பும் சத்தங்களைக்கூட உணரும் திறன் கொண்டவை. அதேபோல, நரிகள் வெவ்வேறு வகையான குரல்களை அடையாளம் காணக்கூடியவை. மணிக்கு சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. சுறுசுறுப்பு! ஒரு பெண் நரியானது பொதுவாக இரண்டு முதல் ஏழு குட்டிகள் வரை ஈனும். குட்டிகளைத் தாயும் தந்தையும் சேர்ந்து பராமரிக்கின்றன. மூத்த சகோதர, சகோதரி நரிகளும் உணவு தேடி வந்து கொடுத்து உதவுகின்றன. பாசம்! பொதுவாக நரிகள் மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. மிருகக்காட்சிச் சாலையிலோ, மனிதனின் பராமரிப்பிலோ இருந்தால் சுமார் 10 ஆண்டுகள்கூட உயிர் வாழ்கின்றன. பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் நரிகள் செழித்து வாழ்ந்திருக்கின்றன. நரியிற்கு ஊண் நல் யாண்டும் தீ யாண்டும் இல் – முன்றுரையனார் என்ற புலவர் எழுதிய பழமொழி நானூறு பாடல், நரியை வில்லனாகவே காட்டுகிறது. நரிக்கு உணவு உண்பதில் நல்ல காலம், கெட்ட காலம் என்றெல்லாம் கிடையாது. அது எப்போதும் வஞ்சகக் குணத்துடனேயே இருக்கும். நரியைப் போலவே பண்புகளைக் கற்றுக் கொள்ளாத கயவர்கள், வறுமை உள்ள காலத்திலும் தீமைகள் செய்வார்கள். வளமாக இருக்கும்போதும் தீமைகள் செய்வார்கள். அவர்களுக்கு நல்ல வழியே தெரியாது. மனிதனின் கெட்ட புத்திக்காக, நரிக்குக் குட்டு வைத்திருக்கிறார் முன்றுரையனார். சங்க இலக்கியத்தில் ‘கணநரி’ வலம் வருகிறது. ஆங்கிலத்தில் Jackal. குறுநரி, குழிநரி, குள்ளநரி என்ற பெயர்களும் இதற்கு உண்டு. இவை கூட்டமாகக் காணப்படும். கும்பலாகச் சென்றே வேட்டையாடும். கோரஸாக ஊளையிடும். கணநரிகள் போர்க்களத்தில் இறைந்து கிடக்கும் பிணத்தின் கொழுப்பைத் தின்றதாகச் சங்கப் பாடல்கள் காட்சிப்படுத்துகின்றன. கணநரிகள் காடுகளிலும் பாலைவனங்களிலும் தோட்டங்களிலும் வீடுகளின் அருகிலும் வாழும். பகல்களில் இவற்றைப் பெரும்பாலும் பார்க்க இயலாது. இரவுகளில் ஊளையிடும் சத்தம் மூலமாக இவற்றின் இருப்பை அறியலாம். இரவெல்லாம் திரிபவை, விடியற்காலையில் பதுங்கி விடும். அப்படியும் ஒன்றிரண்டு மனிதர்கள் பார்வைக்கு அரிதாகத் தென்படும். அதைத்தான் ‘நரி முகத்தில் விழித்ததுபோல’ என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள். இதைக் காலப்போக்கில் அதிர்ஷ்டத்தோடு இணைத்துக் கொண்டார்கள். இன்னிக்கு நரி முகத்துல முழிச்சிருக்கேன்! ‘‘நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி’’’ என்கிறது நற்றிணை. போரினில் வீழ்ந்து கிடக்கின்ற மனிதர்களின் பிணங்கள். நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய எருவைக் கழுகு அவற்றைத் தின்ன வருகிறது. அவற்றுடன் போராடி விரட்டிவிட்டு, சதைகளைத் தானே தின்கின்றன நரிகள். பின்பு உண்ண நீர் கிடைக்காமலும், உறங்க நிழலிடம் கிடைக்காமலும் அலைந்து வருந்துகின்றன என்பதாக இந்தப் பாடல் பொருள் தருகிறது. பேயும் கணங்களும் நரியும் திரிகின்ற இந்தப் போர்க்களத்திலே, ஊன் தின்று சிவந்த செவியுடைய கழுகுகளும் காண்பது அச்சம் தருவதாக இருக்கிறது என்று காட்சிப்படுத்துக்கிறது புறநானூறு. பிணம் தின்னும் உயிரினங்கள் எப்போதும் கொடூரமான ஒன்றாகவே காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றுக்குச் சங்க இலக்கியங்களும் விதிவிலக்கல்ல. ஆனால், அந்த உயிரினங்களால்தாம் இந்த மண்ணின் சுற்றுச்சூழலானது பாதுகாக்கப்படுகிறது. நரியோடு எப்போதும் தொடர்புபடுத்திப் பேசப்படும் பிணந்திண்ணிக் கழுகுகள் குறித்தும் சில வார்த்தைகள் இங்கே, அவற்றின் தன்னிகரற்றச் சேவைக்காக. பாலை நிலத்தின் அடையாளப் பறவை, பிணந்தின்னிக்கழுகுகள். இவற்றுக்கு மஞ்சள் பாறு, மஞ்சள் முகப் பாறு, திருக்கழுக்குன்றக் கழுகு, எகிப்திய பிணந்தின்னிக்கழுகு, வெள்ளைக் கழுகு எனப் பல பெயர்கள் உண்டு. அசிங்கமான, அருவருப்பான, கொடூரமான பறவையாக இவை அடையாளப்படுத்தப்படுகின்றன. ஆனால், இவையே பாலை நிலத்தின் பிரதான தூய்மைப் பணியாளர்கள். இந்தப் பிணந்தின்னிக்கழுகுகளுக்கும் பார்சி மக்களுக்குமான உறவு, தனித்துவமானது. பார்சி இனத்தைச் சார்ந்தவர்கள் இயற்கையை நேசிக்கும் இயல்பைக் கொண்டவர்கள். இறந்த பிறகுகூட, அவர்களது உடலானது இயற்கையான முறையிலேயே அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். அதற்காகவே ‘டோக்மா’ என்ற கோபுரங்களைக் கட்டினார்கள். மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து சற்றே தள்ளி, உயரமான, வட்ட வடிவமான, கூரைகளே இல்லாத இந்த ‘இறுதிச் சடங்கு கோபுரங்கள்’ அமைக்கப்பட்டன. இறந்த ஒரு பார்சியின் உடல் இந்தக் கோபுரத்தில் வைக்கப்படுகிறது. அங்கே பிணந்தின்னிக் கழுகுகள், செம்பருந்துகள் வருகின்றன. அவை உடலின் சதைகளைத் தின்ன ஆரம்பிக்கின்றன. உடலானது அழுகும் முன்பே வேகமாகத் தின்று முடிக்கின்றன. இந்தக் கழுகுகளிலும் வகைகள் இருக்கின்றன. ஒரு வகைக் கழுகுகள் சதையை மட்டும் உண்கின்றன. இன்னொரு வகைக் கழுகுகளோ தோலை உண்கின்றன. இன்னொன்று எலும்பைச் சாப்பிடுகின்றன. வேறோரு வகைக் கழுகுகளோ மிச்சம் மீதியை உண்கின்றன. இப்படியாக ஓர் உடலின் ஒவ்வொரு பகுதியையுமே உண்டு, அகற்றி, அந்தச் சூழலைச் தூய்மைப்படுத்தும் உயிரினங்களாக இந்தக் கழுகுகள் தொடர்ந்து சேவை ஆற்றிக் கொண்டே இருக்கின்றன. இந்தக் கழுகுகள் வருடத்துக்கு ஒரு முட்டைதான் இடும். அந்தக் குஞ்சும் பிரச்னையின்றி வெளியே வந்து பிழைத்து வாழ்வது சவாலான காரியம்தான். அதனால்தான் இந்தக் கழுகு இனம் பெருகுவதைவிட, அழியும் வேகம் அதிகமாக இருக்கிறது. சூழல் மாற்றங்களும் அதற்கு முக்கியக் காரணம். மனிதனும் இந்தக் கழுகு இனத்தை மறைமுகமாக அழித்துக் கொண்டிருக்கிறான். மாடுகளுக்கு, Diclofenac என்ற வலிநிவாரண மருந்து சில மருத்துவக் காரணங்களுக்காகக் கொடுக்கப்படுகிறது. அந்த மாடு இறந்தபின் அதன் சடலத்தை மனிதன் ஆளற்ற பகுதிகளில் போடும்போது, கழுகுகள் அதை உண்ண வருகின்றன. அதை உண்ணும்போது Diclofenac மருந்தால், கழுகுகளின் சிறுநீரகங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. அதன்பின் அவை இறந்து போகின்றன. பிணந்தின்னிக்கழுகுகளின் வேகமாக அழிவதற்கு முக்கியமான காரணமாக இது கருதப்படுகிறது. https://aalumaisirpi.com/?p=6477
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- உங்களுக்கு தெரியுமா?
கரப்பான் பூச்சி இறவான்! திரு.முகில் ‘Katsaridaphobia’ என்ற கடினமான வார்த்தைக்குப் பொருள் தெரிந்து கொள்வதுகூட சிலருக்குப் பயமாகவோ, அருவருப்பாகவோ இருக்கலாம். ‘‘கரப்பான் பூச்சி மீதான அதீத பயம்’’ என்பதே அதற்கான அர்த்தம். அந்த போபியா உள்ளோர் தயவுசெய்து இந்தக் கட்டுரையை வாசிப்பதைத் தவிர்க்கவும். நன்றி. இந்த உலகமே எங்களை எதிர்த்தாலும், எங்களைக் கொல்றதுக்கும் ஒழிக்கிறதுக்கும் என்னென்னமோ வழிமுறைகளைக் கண்டுபிடிச்சு சண்டை செஞ்சாலும், நாங்களா எங்களை அழிச்சுக்குற வரை எவனாலும் எங்கேயும் எப்பவும் எங்க இனத்தை ஜெயிக்கவே முடியாது – நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு மாஸ் பன்ச் டயலாக் பேசத் தகுதி கொண்ட உலகின் ஒரே உயிரினம் கரப்பான் பூச்சி மட்டுமே. டைனோசருக்கும் மூத்தக்குடி. இந்த பூமியை ஆதிக்கம் செய்த எத்தனையோ உயிரினங்கள், ஒட்டுமொத்தமாகக் காணாமல் போயிருக்கின்றன. பூமியில் எந்த மாதிரியான பேரழிவு நேர்ந்தாலும் அழியவே அழியாதது, ஒன் அன்ட் ஒன்லி கரப்பான்பூச்சி வகையறாதான்! ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3490 கரப்பான் இனங்கள் இந்தப் பூவுலகில் வாழ்வதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இன்னும் கண்டறியப்படாத கரப்பான்பூச்சிகளும் உலகில் நிச்சயம் இருக்கும். இவை எந்தவிதமான தட்பவெப்பச் சூழ்நிலைகளிலும் வாழக்கூடியவை. பகல் நேரங்களில் மறைவாக இருக்கும். இரவில் வெளிவந்து இரை தேடும். எப்போதும் நைட் ட்யூட்டிதான். ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேர உறக்கம். சுகவாசி! காட்டில் வாழும் கரப்பான் பூச்சிகள், பழைய இலைக் குவியல்களிலும், மரத்தின் தண்டுகளிலும், உயரமான மரக்கிளைகளிலும் வாழ்கின்றன. மனிதனோடு சேர்ந்து வாழும் கரப்பான் பூச்சிகள், சுத்தம் செய்யப்படாத சமையலறை, குளியலறை, கழிவறை, அழுக்குகள் நிறைந்த இடங்களில் குடித்தனம் நடத்துகின்றன. அது இது எது கிடைத்தாலும் உண்ணும். அனைத்துண்ணி. ஆங்கிலத்தில் குறிப்பிடுவதென்றால் Omnivores. இவை தம் உடல் வெப்பநிலைக்கேற்ப உணவுகளைச் சாப்பிடுகின்றன. அப்படிச் சாப்பிடும் முன்பாக உணவைச் சிறு சிறு துண்டுகளாக்கிய பின்னரே சாப்பிட ஆரம்பிக்கின்றன. நொறுங்கத் தின்றால் நூறு வயது. அது மனிதனுக்கு. அமெரிக்க இன ஆண் கரப்பான் பூச்சியின் ஆயுட்காலம் சுமார் ஓர் ஆண்டு மட்டுமே. ஜெர்மன் இன ஆண் கரப்பான் பூச்சி சுமார் 100 நாள்கள் வாழும். ஓரியண்டல் இன ஆண் கரப்பானின் வாழ்நாள்கள் சுமார் 160. இந்த எல்லா இனங்களிலுமே பெண் கரப்பான் பூச்சிகள் ஆண்களைவிடக் கூடுதல் காலம் வாழ்கின்றன. பெருமைமிகு பெண்ணாதிக்கம்! சரி, குறைந்த காலமே வாழும் கரப்பான் பூச்சி, மில்லியன் கணக்கான ஆண்டுகளாக, தொடர்ந்து உலகில் நிலைத்திருக்கக் காரணம் என்ன? பிறந்த சில வாரங்களிலேயே கரப்பான் பூச்சிகள் இனப்பெருக்கத்துக்குத் தயாராகி விடுகின்றன. உதாரணத்துக்கு ஓர் இந்தியன் இன பெண் கரப்பான் பூச்சியானது, தன் வாழ்நாளில் 13 முறை முட்டைகள் நிரம்பிய ஓடுகளை (Oothecae) இடுகின்றன. ஒவ்வொர் ஓட்டிலும் 16 முட்டைகள் வரை இருக்கும். அவற்றில் தக்கன பிழைத்து அடுத்த தலைமுறை கரப்பான் பூச்சிகளாக வெளிவருகின்றன. இந்த விதத்தில் பார்த்தால் ஓர் இந்திய இன பெண் கரப்பான் பூச்சி தன் வாழ்நாளில் சுமார் 200 வாரிசுகளை உருவாக்குகிறது. ஓர் அமெரிக்க இன பெண் கரப்பான் பூச்சி தன் வாழ்நாளில் அதிகபட்சம் 300 வாரிசுகள் வரை உருவாக்குகிறது. ஆக, வருடந்தோறும் அடுத்தடுத்தடுத்தடுத்தடுத்தத் தலைமுறைகளை கரப்பான் பூச்சிகள் உருவாக்கி, பெருக்கிக் கொண்டே செல்கின்றன. அதுமட்டுமின்றி, நோய் எதிர்ப்புச் சக்தியையும் அபரிமிதமாகப் பெருக்கிக் கொள்கின்றன. அந்தச் சக்தியானது மரபணுக்கள் வழியே அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன. ஆக, ‘எங்க இனத்துக்கு அழிவே இல்லடா!’ என்ற ஆணவத்துடன் கரப்பான் பூச்சிகள் இப்புவியில் பெருகிக் கொண்டே செல்கின்றன. இப்படியே சென்றால், ஒரு கட்டத்தில் உலகமே கரப்பான் பூச்சிகளால் நிரம்பியிருக்கும் என்றொரு தியரியும் கற்பனை செய்யப்படுவதுண்டு. அது நிஜமாவதற்கும் வாய்ப்பு உண்டு. உலகில் ‘பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்’ எல்லாம் கரப்பான் பூச்சியையே பெரிதும் நம்பிப் பிழைத்திருக்கின்றன. எவ்வளவு வீரியமான வேதி மருந்தைப் பிரயோகித்தாலும் ‘Better Luck Next Time’ என்று கரப்பான் பூச்சிகள், மனிதனை பாவமாகப் பார்த்துவிட்டு, உடலை சிலுப்பிக் கொண்டு நகர்கின்றன. அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஜெர்மன் கரப்பான் பூச்சிகள், பல்வேறு தலைமுறைகளாகப் பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான, கடுமையான எதிர்ப்பு சக்தியைப் பெற்றிருப்பதையும், அடுத்தடுத்த தலைமுறை கரப்பான் பூச்சிகளுக்கு இந்த எதிர்ப்பு சக்தியானது பல மடங்கு பெருகி வருவதையும் கண்டறிந்திருக்கிறார்கள். ஆக, புராதன பூச்சிக்கொல்லிகளும், வீரியமிக்க வேதிப்பொருள்களையும் தெளித்தால், ‘பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’ என்று சாரலில் நனைவதுபோல அசால்ட்டாகக் கடந்துவிடுகின்றன கரப்பான் பூச்சிகள். ‘வருங்காலத்தில் வேதிப்பொருள்களைக் கொண்டு கரப்பான் பூச்சிகளைக் கொல்வது இயலாத காரியமாகிவிடும். அதைவிட பயங்கரமான ஒன்று தேவைப்படும்’ என்று ஆய்வாளர் மைக்கேல் ஸ்கார்ஃப் தெரிவித்திருக்கிறார். பயந்து கிடக்கிறது மனித குலம். காரணம், மனிதர்களுக்கு நோய் பரப்பும் சேவையைச் செய்வதிலும் கரப்பான் பூச்சி பிரதான இடம் வகிக்கிறது. ஆனால், எவ்வளவு அசுத்தமான இடத்தில் வாழ்ந்தாலும் கரப்பான்களுக்கு மட்டும் நோய்த்தொற்று ஏற்படுவதில்லை. இந்த இடத்தில் சூப்பர் ஸ்டார் கரப்பான் சொல்லும் பன்ச் : கிருமியெல்லாம் என்னை எதுவும் பண்ண முடியாது. ஏன்னா, நானே நடமாடும் கிருமிடா! (அவசியக் குறிப்பு : கரப்பான் பூச்சிகளில் சில இனங்கள் மட்டுமே நோய் பரப்பும் தன்மை கொண்டவை.) பாத்ரூமுக்குள் நுழையும்போதெல்லாம் கரப்பான் பூச்சி இருக்கிறதா, இல்லையா என்று பார்த்துப் பார்த்துப் பயந்தபடியே நுழைபவர்கள் இருக்கிறார்கள். கரப்பான் பூச்சியைக் கண்டால் ஹைடெசிபலில் கத்திக் கூச்சலிடுபவர்கள் இருக்கிறார்கள். கரப்பான் பூச்சி குறித்த பாடம் எடுக்க வேண்டியது இருந்ததால், தன் ஆசிரியர் பணியையே ஒருவர் விட்டிருக்கிறார். கரப்பான் பூச்சியைப் பார்க்கும்போதெல்லாம் ரத்த அழுத்தம் அதிகமாவது, கை, கால்கள் நடுங்குவது, பலத்த மூச்சு வாங்குவது, அதிகம் வியர்ப்பது, உறைந்து, செயலிழந்து நிற்பது, அதிகபட்சமாக நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுவது வரை பாதிக்கப்படுபவர்களும் இருக்கிறார். சிறு வயதிலேயே கரப்பான் பூச்சி மீதான ஆழமான பயம் மனத்தில் பதிந்துவிட்டால், அந்த மனிதர்களின் வாழ்க்கை முழுக்க இந்தச் சங்கடங்களை அனுபவிக்க நேரிடும். அதே மனிதர்கள் வாழும் உலகில்தான் ‘காக்ரோச் அறுபத்தைந்து’ கொறிப்பவர்களும் வாழ்கிறார்கள். எனில், அவர்களுக்கு கிருமி பயம் இல்லையா? https://aalumaisirpi.com/?p=6537- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Sari Gama Paaa- உங்களுக்கு தெரியுமா?
25 Most Populous Countries in The World (2025) 1. 🇮🇳 India - 1,463,865,525 (1.46B) 2. 🇨🇳 China - 1,416,096,094 (1.42B) 3. 🇺🇸 United States - 347,275,807 (347M) 4. 🇮🇩 Indonesia - 285,721,236 (286M) 5. 🇵🇰 Pakistan - 255,219,554 (255M) 6. 🇳🇬 Nigeria - 237,527,782 (238M) 7. 🇧🇷 Brazil - 212,812,405 (213M) 8. 🇧🇩 Bangladesh - 175,686,899 (176M) 9. 🇷🇺 Russia - 143,997,393 (144M) 10. 🇪🇹 Ethiopia - 135,472,051 (135M) 11. 🇲🇽 Mexico - 131,946,900 (132M) 12. 🇯🇵 Japan - 123,103,479 (123M) 13. 🇪🇬 Egypt - 118,365,995 (118M) 14. 🇵🇭 Philippines - 116,786,962 (117M) 15. 🇨🇩 DR Congo - 112,832,473 (113M) 16. 🇻🇳 Vietnam - 101,598,527 (102M) 17. 🇮🇷 Iran - 92,417,681 (92M) 18. 🇹🇷 Turkey - 87,685,426 (88M) 19. 🇩🇪 Germany - 84,075,075 (84M) 20. 🇹🇭 Thailand - 71,619,863 (72M) 21. 🇹🇿 Tanzania - 70,545,865 (71M) 22. 🇬🇧 United Kingdom - 69,551,332 (70M) 23. 🇫🇷 France - 66,650,804 (67M) 24. 🇿🇦 South Africa - 64,747,319 (65M) 25. 🇮🇹 Italy - 59,146,260 (59M) Source: World Population Review- அதிசயக்குதிரை
ஒரு இளைஞன் புத்தகம் எதாவது வாங்கலாம்னு கடைக்குப் போனான். அது ஒரு பழைய புத்தகக் கடை. ரொம்ப வயசான தாத்தா அந்த கடைல இருந்தாரு. பார்க்க ரொம்ப பயங்கரமா இருந்தாரு... தலை நிறையா வெள்ளை முடி. சூனியக்கார கிழவி மாதிரி இருந்தாரு.. இளைஞனுக்கு ஒரே பயம். இருந்தாலும் தைரியமா கடையில் உள்ள புத்தகங்களை பார்க்க ஆரம்பிச்சான். கடை முழுவதும் ஓரளவே வெளிச்சம். பாதிக்கு மேல் கடைக்குள் போகவே முடியல. அவ்வளோ இருட்டு. புத்தகங்கள் எல்லாம் ஒரே தூசி. இறுதியா ஒரு புத்தகத்தை எடுத்தான். “பேய்களின் எச்சரிக்கை” அதோட பேரு. இளைஞன் புத்தகத்தைத் தாத்தாட்ட கொடுத்து, இதை நான் வாங்கிக்கிறேன்னு சொன்னான். தாத்தா அவனை கோபமா பார்த்தார். “இந்த புத்தகம் பயங்கரமானது. இதோட விலை ரூ. #500 ஆனா இந்த புத்தகத்தை வாங்கி படிச்சவங்கள பேய்கள் சும்மா விடாது. இதைப் படிச்ச இரண்டு பேர் இருதயம் வெடிச்சு செத்துட்டாங்க. நீ இந்த புத்தகத்தைப் படி. ஆனா ஒரு நிபந்தனை. கடைசிப் பக்கத்தை மட்டும் படிக்காத”. இளைஞன் புத்தகத்துடன் வீடு திரும்பினான். நிசப்தமான இரவு. 11 மணி. இளைஞன் புத்தகம் முழுவதும் படித்து விட்டான். கடைசி பக்கம் மட்டும் படிக்கவில்லை. மேஜையில் அந்த புத்தகம் காற்றில் ஒவ்வொரு பக்கமாக புரண்டது. கடைசி பக்கம் படிக்கலாமா வேண்டாமா என்ற பயம் கலந்த ஆசை அவனுக்கு. விதி அவனையும் விடவில்லை. காற்று புத்தகத்தை புரட்டி கடைசி பக்கத்தை நெருங்கியது. இளைஞனுக்கு பயத்தால் வியர்த்தது. கடைசி பக்கத்தை படித்த இளைஞனின் இருதயம் வெடித்தது அதில் இருந்த ஒரு வரியால்....... . ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ????? ? ? ? ? ? ? விலை ரூ.#15- என் மனதினை கொள்ளை கொண்ட பாடல்
நல்வரவு செந்தமிழாளன்25.- பிரதமர் ஹரிணியின் கருத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்!
பிரதமர் ஹரிணியின் கருத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்! இலங்கையின் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய 1,000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் மாகாணங்களுக்கு வழங்கப்படாது என கூறியது தவறானது என முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய தவறான கருத்துகளை கூறிவருகிறார், இது மிகவும் முக்கியமான ஒரு விடயம் மாகாண சபைக்கு உரித்தான விடயம்.ஹரிணி அமரசூரிய கூறிய கருத்தை பகிரங்கமாக வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்தார். https://seithy.com/breifNews.php?newsID=334316&category=TamilNews&language=tamil- யாழ்ப்பாணத்தில் 10, வன்னியில் 4 சபைகளில் ஆட்சியமைக்க சைக்கிள்- சங்கு கூட்டணி திட்டம்!
யாழ்ப்பாணத்தில் 10, வன்னியில் 4 சபைகளில் ஆட்சியமைக்க சைக்கிள்- சங்கு கூட்டணி திட்டம்! வடக்கில் கூட்டணியாக யாழ்ப்பாணத்தில் 10 சபைகளிலும், வன்னியில் 4 சபைகளிலும் ஆட்சியமைக்க முடியும் என எதிர்பார்ப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய பேரவையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டிணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அவர்கள் இதனை மறுத்திருந்தனர். அதனையடுத்து இதுகுறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமை (5) கொழும்பிலுள்ள கஜேந்திரகுமாரின் இல்லத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் பங்கேற்புடன் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது கூட்டணியாக இணைந்து வட, கிழக்கு மாகாணங்களில் எத்தனை உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கமுடியும் என எதிர்பார்க்கிறீர்கள் என வினவியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதன்படி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலுள்ள 17 உள்ளுராட்சி மன்றங்களில் 10 சபைகளில் தம்மால் ஆட்சியமைக்கமுடியும் எனவும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் அநேகமாக 4 சபைகளில் ஆட்சியமைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதேபோன்று தமிழரசுக்கட்சி முன்னிலை வகிக்கும் சபைகளில் அவர்கள் ஆட்சியமைப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், ஆகவே இவ்விடயத்தில் தமிழரசுக்கட்சி சிந்தித்து செயற்படவேண்டும் எனவும் கஜேந்திரகுமார் வலியுறுத்தினார். https://seithy.com/breifNews.php?newsID=334322&category=TamilNews&language=tamil- கைதிகள் விடுதலையில் சர்ச்சை : ஜனாதிபதி செயலகம் அறிக்கை
கைதிகள் விடுதலையில் சர்ச்சை : ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்ற கைதி விடுவிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அவதானம் செலுத்தியுள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 34 (1) இன் படி, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகிறது. அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும். இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படும். அதன்படி, ஜனாதிபதியின் ஒப்புதலுடன், அந்தக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. இருப்பினும், மேற்கூறிய சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் 2025-05-06 அன்று ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட பொது மன்னிப்புக்கு தகுதியான கைதிகளின் பட்டியலில் 388 பெயர்கள் காணப்பட்டன. மேலும் அநுராதபுரம் சிறைச்சாலையில் நிதி மோசடி தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட குறித்த நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அதாவது, ஜனாதிபதி பொது மன்னிப்புக்காக அங்கீகரித்த 388 பெயர்களில் அந்த நபரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து விசேட விசாரணையை முன்னெடுக்கக் கோரி, ஜனாதிபதி செயலகத்தினால் நேற்று (06) "ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அங்கீகரிக்கப்படாத கைதியின் விடுதலை தொடர்பாக" என்ற தலைப்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு, எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/175-358756- யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
3 குழந்தைகளின் எலும்பு கூடுகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. பாதணிகள்,நகைகள் எவையும் அணிந்து காணப்படவில்லையாம்.- Imagine Dragons - Thunder
James Brown - It's A Man's Man's Man's World [Chorus] This is a man's world This is a man's world But it wouldn't be nothing Nothing without a woman or a girl [Verse 1] You see, man made the cars To take us over the road Man made the train To carry the heavy load Man made the electric light To take us out of the dark Man made the boat for the water Like Noah made the ark [Chorus] This is a man's, man's, man's world But it wouldn't be nothing Nothing without a woman or a girl [Verse 2] Man thinks about our little bitty baby girls And our baby boys Man make them happy 'Cause man make them toys And after man make everything Everything he can Do you know that man makes money To buy from other man [Chorus] This is a man's world This is a man's world But it wouldn't be nothing Nothing without a woman or a girl [Verse 1] You see, man made the cars To take us over the road Man made the train To carry the heavy load Man made the electric light To take us out of the dark Man made the boat for the water Like Noah made the ark [Chorus] This is a man's, man's, man's world But it wouldn't be nothing Nothing without a woman or a girl [Verse 2] Man thinks about our little bitty baby girls And our baby boys Man make them happy 'Cause man make them toys And after man make everything Everything he can Do you know that man makes money To buy from other man [Chorus] This is a man's world But it wouldn't be nothing, nothing Not one little thing without a woman or a girl [Outro] He's lost in the wilderness He's lost in bitterness He's lost, lawd have mercy now, in loneliness- காசாவில் உடனடி நிபந்தனையற்ற நிரந்தரயுத்த நிறுத்தத்தை கோரும் பாதுகாப்பு சபை தீர்மானம் - வீட்டோவை பயன்படுத்தியது அமெரிக்கா
ஐந்தென்ன ஐம்பது தடவையும் இஸ்ரேலை காப்பாற்ற வீற்றோவை பாவிக்கும். - உங்களுக்கு தெரியுமா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.