Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. காணொளியின் கீழ் தமிழாக்கம் எழுத்தில் வருகிறது பையா..
  2. இன்று கமசால் ஒரு அமெரிக்க பணயகைதி விடுவிக்கப்பட்டுள்ளார்.
  3. தேசிய பேரவையின் கலந்துரையாடல்! http://seithy.com/siteadmin/upload/tnc-120525-seithy.jpeg தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர்களுக்கும் தலைமைகளுக்கும் இடையிலான யாழ் மாவட்ட சந்திப்பு நேற்று (11) யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கிறிஸ்தவ வாலிபர் சங்க மண்டபத்தில் தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசிய பேரவையின் தேர்தல் கால சவால்கள், எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதன் பொழுது தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறீகாந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம் , பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், ஜனநாயக தமிழரசு கட்சியின் உப செயலாளர் நாவலன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வெற்றி பெற்ற உறுப்பினர்கள், அரசியல் இயக்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். http://seithy.com/breifNews.php?newsID=333170&category=TamilNews&language=tamil
  4. தமிழரசுக்கட்சிக்கும் இப்போராட்டத்துக்கும் சம்பந்தம் இல்லையோ?
  5. BREAKING 🚨🚨 Another Video, Ano...22 тыс. просмотров · 684 реакции | BREAKING 🚨🚨 Another...BREAKING 🚨🚨 Another Video, Another Blow to India! 🚨 A new video has surfaced clearly showing a fighter jet shot down by PAF 🇵🇰. Upon closer inspection,... பாகிஸ்தானின் 8 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி 100 பயங்கரவாதிகள் ( முக்கிய தளபதிகள் உட்பட) கொல்லப்பட்டுள்ளார்கள் என மேற்கு ஊடகங்கள் சொல்கின்றன. (இந்தியா கூறியதாக)
  6. தமிழரசுக் கட்சியை நீதிமன்றில் நிறுத்தியது நானா? தமிழரசுக் கட்சியை நீதிமன்றில் நி...தமிழரசுக் கட்சியை நீதிமன்றில் நிறுத்தியது நானா? | தமிழரசு...தமிழரசுக் கட்சியை நீதிமன்றில் நிறுத்தியது நானா? #TruthAboutSumanthiran #SampurRelease #JusticeForNorthEast #TamilStruggle #LegalTruths #WhoSpeaksForUs...
  7. காயப்பட்ட 35 பேரின் நிலையும் கவலைக்கிடமாக இருக்குமென பேருந்தின் நிலையை பார்த்த போது புரிகிறது.
  8. Nadarajah Kuruparan is with Ramalingam Chandrasegar. கொட்டாஞ்சேனை மாணவியும் பிந்திய நீதியும்… ஆணையிறவு உப்பில் சுறணை வந்தது போல் சொன்னதை செய்யுங்கள். சில தமிழ் பண்டிதர்கள் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்கள் என நினைத்திருந்தேன். ஆனால் ஹீரோயிசத்தை ஆராதிப்பதை தவிர, அரசியல் புரியவில்லை, குறிப்பாக தமிழும் புரியுதில்லை என்பதுதான் துர்ப்பாக்கியம். சரி அவர்கள் அப்படியே இருக்கட்டும். என்னுடன் உரையாடிய நண்பர் ஒருவர் சொன்னர் “இவங்களை ஒருவரும் அனுப்பத் தேவையில்லை தாங்களாகவே போய்விடுவாங்கள் போல இருக்கு என்று“ (அநுர குறித்து ஒரு மென்போக்கு அவரிடமும் உண்டு) நாடு அநுரவோடு இருக்க வேண்டும் வடக்கு கிழக்கு மலையகம் ஊரோடு இருக்க வேண்டும் என நினைப்பவன் நான் என்று தெரிந்தே அவர் என்னிடம் இதனை வலியுறுத்தினார். இன்னுமொரு நண்பர் சொன்னார் இப்பவும் நீங்கள் அந்த நிலைப்பாடோடுதான் இருக்கிறியல் போல கிடக்கு, கவனம் உங்களை அவங்கட ஆட்கள் என்று சீல்குத்திப்போடுவாங்கள் என்று. வெளிப்பார்வை எப்படி இருந்தாலும் அதுபற்றிய கவலை என்னிடம் இல்லை. உண்மை எது என்பதனை எனது கடந்தகாலம் கூறும். காரணம் தமிழ் சிங்களம் என வேறுபாடு இல்லாமல் அதிகாரத்தை அவ்வப்போது கையில் எடுத்த அனைத்து தரப்பினாலும், நான் உடலளவிலும் மனதளவிலும் கடுமையாகபாதிக்கப்பட்டு இருக்கிறேன். சரி விடயத்திற்கு வருவோம். கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் குறித்து அண்மைய நாட்களாக பாரிய போராட்டங்கள், சர்ச்சைகள், சமூகவலைத்தள விவாதங்கள் தொடர்கிறது. நாடாளுமன்றிலும் இது குறித்த விவாதங்கள் கடுமையாக இடம்பெற்றன. இதில் ஆளும் அரசாங்கம் என்ற அடிப்படையில், ஜனாதிபதியும், பிரதமரும், மகளீர்விவகார அமைச்சரும் ஆளும்தரப்பினரதும் பொறுப்புக் கூறல் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர் – மகளீர் அதிகார சபையில் தமது முறைப்பாட்டை முறைப்படி பதிவுசெய்யவில்லை. காவற்துறையில் முறையிடவில்லை, பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியரிடம் மனநல சிகிச்சை பெற்றிருக்கிறார் என கூறுவது ஆட்சியாளரின் பொறுப்பற்ற செயற்பாடாகும். தற்கொலை செய்துகொண்ட மாணவி ஏன் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார் (மனநல பாதிப்பு அல்ல மன அழுத்தத்திற்கு உட்பட்டிருந்தார்) ஏன் தற்கொலை செய்துகொண்டார்? தற்கொலைக்கு தூண்டியவர் யார்? என்ற விடயங்கள் வெளிவந்தவுடனேயே அது குறித்து கல்வி அமைச்சும், மகளீர் விவகார அமைச்சும், சிறுவர் பாதுகாப்புச் சபையும், சட்டத்துறை – நீதித் துறை என்பனவும் தாமாகவே களத்தில் இறங்கி செயற்பட்டு இருக்க வேண்டும். தற்கொலைக்கு காரணமான ஆசிரியரையும், தற்கொலைக்கு துண்டிய ஆசரியரையும், விசாரணை முடியும் வரை தற்காலிக பணி நீக்கம் செய்திருக்க வெண்டும். பதிலாக தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுதலிக்கும், அல்லது தம்மை பாதுகாக்க (defend பண்ண) முனைவதும், விமர்சனங்களை ஏற்க மறுப்பதும், இடது மைய அரசாங்கத்தின் பண்பாக இருக்க முடியாது. கடுமையான அழுத்தங்களின் பின் விமர்சனங்களின் பின் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரதமர் ஹரினி பெற்றோரை அழைத்து பேசியிருக்கிறார். நடவடிக்கைகளை துரிதப்படுத்த காவற்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஆசிரியர் ஒருவர் கட்டாய விடுவிப்பில் அனுப்பப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்டவர் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த நடவடிக்கைகள் முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கடந்த காலங்களில் ஆட்சி புரிந்த ஏனைய அரசாங்கங்களை விடவும், ஆட்சியாளர்களை விடவும் நேர்மையாக ஆட்சியை தொடர்வதென்றால் கிளீன் சிறிலங்காவை உருவாக்க வேண்டும் என்றால் தவறுகளை தவறு என ஏற்றுக்கொள்ளும் பண்பு உருவாக வேண்டும். விமர்சனம் சுயவிமர்சனம் என்பவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் NPP அரசாங்கம் பத்தோடு பதினொன்று அல்ல என்பதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ரணில் கூறிய L Board Board ("L plates" (red L on a white background) are mandatory for learner drivers to display on their vehicles.) அரசாங்கமாக தொடர்ந்தும் இருக்க முடியாது. அவ்வாறே பயிற்சி முடிவடைந்து ஓட்டுனர் உரிமம் பெற்றபின்னான 3 மாத கால ஓட்டுனர் அனுபவமும் கிடைத்து விட்டது. ஆதாவது P Board காலமும் நிறைவடைந்துள்ளது. ( Green P "P plates" (green P on a white background) are optional and are used by newly qualified drivers to indicate that they are relatively inexperienced.) இனிவரும் காலம் அனைத்து விடயங்களிலும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய காலம். குறிப்பாக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக காலம் தாழ்த்தாது நிறைவேற்ற வேண்டும். இந்தப்பதிவை இறுதி செய்யும் போது ஆணையிறவு உப்பு (Elephant pass Salt) என்ற பெயர் உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் சொன்னதை செய்தது போல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். 1) பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் 2) புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். 3) மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 4) தேசிய இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும். 5) வலிந்து காணாமல் ஆக்கப்ட்டோர் விடயம், அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணி விடுவிப்பு, காணிகளை கையகப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களுக்கு தீர்வுகாணப்பட வேண்டும். 6) இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி, அரசியல் பாகுபாடுகள் இன்றி அனைத்து குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வெண்டும். 7) சட்டத்தின் ஆட்சியை உருவாக்க வேண்டும். 8 சட்டத் துறை, நிர்வாகத் துறை, நீதித்துறைகள் சுயாதீனமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் 9) லஞ்சம் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். 10) நாடுபூராகவும் சம வளப்பங்கீட்டையும் அபிவிருத்தியையும் உறுதிப்படுத்த வேண்டும். இவற்றில் உடனடியாக கவனம் செலுத்தப்படல் வேண்டும். இல்லாவிடின் கோட்டாபயவை நீங்கள் வீட்டுக்கு அனுப்பினீர்கள். மாறாக உங்கள் பொறுப்பீனங்கள் தொடர்ந்தால் உங்களை நீங்களே வீட்டுக்கு அனுப்பிவிடுவீர்கள். 76 வருடங்களுக்கு பின் கிடைத்த அரிய சந்தர்ப்பம் இழக்கப்பட்டு நாடு மீண்டும் அதள பாதாளாத்தை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கும். கிளீன் சிறீலங்காவா? அதளபாதாளமா? நாடு அநுரவிடமா? கொள்ளையர்களிடமா? என்பதனை நீங்களே தீர்மானியுங்கள். “கோட்டாவை வீட்டுக்கு அனுப்பியது அறகலய!” உங்களை நீங்களே வீட்டுக்கு அனுப்பிவிடுவீர்களோ என பயமாய் இருக்கிறது!” #ஞாபகங்கள்
  9. Amirthanayagam Nixon *பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக்க முற்படும் இந்திய ஆங்கில ஊடகங்கள். *அமெரிக்கா ஏற்றுக் கொண்ட ரசிய - இந்திய உறவு? *சர்வதேசத்தை நோக்கிய அநுரவின் காய் நகர்த்தல் ----------- ------------ பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், நிலப்பரப்பு அடிப்படையில் மிகவும் பெரியது. அப் பகுதியைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பலுசிஸ்தான் போராளிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர் . ஆனால், அந்தப் போராளிகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சுமத்தி வரும் நிலையில், காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவியளிப்பதாக இந்தியா குற்றம் சுமத்தி வருகின்றது. பழங்குடி மக்களை அதிகம் கொண்ட பலுசிஸ் தேசிய இன விடுதலைப் போராளிகளை அமெரிக்கா, பிரித்தானியா உட்பட ஐரோப்பிய ஒன்றியமும் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள நிலையிலும், 2004 ஆம் ஆண்டு பலுஸ் இன மக்களின் தன்னாட்சி கோரி, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பலுசிஸ் தேசிய விடுதலை இராணுவம் போராடி வருகின்றது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள்----- காஷ்மீர் போராளி இயக்கங்கள் சிலவற்றை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெரிய அளவில் தடை விதிக்கவில்லை. ஆனால் , பலுசிஸ் இன தேசிய விடுதலை இராணுவத்தை நோக்கி பல தடைகள் விதிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்தியா மாத்திரம் பலுசிஸ் போராளிகளுக்கு ஒத்தழைத்து வருகின்றது. இப்பின்னணியிலேயே இந்தியா - பாகிஸ்தான் மோதல் 2000 ஆம் ஆண்டில் இருந்து மேலும் தீவிரமடைந்து வருகின்றது. காஷ்மீர் பஹல்காமில் கடந்த மாதம் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர் போராளிகள் சுற்றுலா பயணிகள் 26 பேரை கொலை செய்த பின்னர் ஏற்பட்ட முறுகல், கடந்த சில நாட்களாக இந்திய பாகிஸ்தான் இராணுவ மோதலாக மாறியுள்ளது. சென்ற 8 ஆம் திகதி வியாழக்கிழமை இந்தியா நடத்திய தாக்குதலில் லாகூர் நகரை பாதுகாக்க பாகிஸ்தான் இராணுவம் பல வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவம் ஏவிய சீன தயாரிப்பான எச்க்யூ - 9 பி ஏவுகணை தடுப்பு ஆயுதங்களை தாக்கி அழித்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. சீன தயாரிப்பு ஏவுகணைகளை இந்தியா தடுத்து அழித்தமை தொடர்பாக தற்போது உலக அரங்கில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இது பரபரப்பான தகவல் என்று இந்திய ஊடகங்கள் வர்ணிக்கின்றன.. ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்து ஏவப்பட்ட சீனத் தயாரிப்பு, எஸ் -400 என்ற தடுப்பு மையங்கள் முறியடித்தன.. இதையடுத்து இந்தியா மீது மீண்டும் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் இராணுவம் ஏவிய 7 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முற்பட்ட நிலையில், இந்திய விமானப்படை பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவின் இத் தாக்குதல் குறித்து வெள்ளிக்கிழமை இரவு கருத்து வெளியிட்ட அமெரிக்க பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின், இந்திய இராணுவத்தை பாராட்டியிருக்கிறார். நன்கு திட்டமிட்டு இந்தியா தாக்கியுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். எஸ் 400 என்ற ரசிய தடுப்பு ஏவுகணை?--- பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை அழிக்க இந்திய இராணுவம் பயன்படுத்திய எஸ் 400 என்ற தடுப்பு ஏவுகணை ரசியத் தயாரிப்பா என்று சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையிலேயே அமெரிக்கப் பென்டகனின் முன்னாள் அதிகாரி பாராட்டியுள்ளமை கவனிக்கத்தக்கது. இப் பின்னணியில்தான் சீனாவின் எச்க்யூ 9 பி என்பது என்ன என்பது பற்றியும் அதனை இந்திய இராணுவம் அழித்தது ஏன் என்ற கேள்விகள், விமர்சனங்கள் தற்போது முன்வைக்கப்படுகின்றன. சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் அதிக அளவு சக்தி வாய்ந்த ஆயுதங்களை கொள்வனவு செய்கிறது. எஎ போர் விமானங்கள், ஏவுகணை தடுப்பு ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும் சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் கொள்வனவு செய்வதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. சீனாவில் எச்க்யூ 9 வான்வெளி பாதுகாப்பு முறைமை.(HQ 9 Air Defence System) பயன்பாட்டில் உள்ளது. இதனை தமக்கு வழங்குமாறு பாகிஸ்தான் சீனாவிடம் 2015 இல் கோரியது. இதன் காரணத்தால் சீனா பாகிஸ்தானுக்கு என்று கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தனியாக ஒன்றை தயாரித்து வழங்கியுள்ளது. ”எச்க்யூ 9பி வான்வெளி பாதுகாப்பு முறைமை” என்ற பெயர் கொண்ட இந்த ஆயுத பரிமாற்றம் தொடர்பாக ஏற்கனவே இந்தியா அதிருப்தி வெளியிட்டிருந்தது. இந்த ஆயுதத்தில் உள்ள P என்ற எழுத்து பிரத்தியேகமாக பாகிஸ்தானை குறிக்கும். சீனாவில் பயன்படுத்தும் இந்த ஆயுதத்தில் அந்த P என்ற எழுத்து இல்லை. இந்நிலையில் தான் லாகூரை பாதுகாக்க, பாகிஸ்தான் சீனாவின் எச்க்யூ 9 பி வான் பாதுகாப்பு முறைமையை நிறுவி இருந்தது. இதனை பாகிஸ்தான் 2021ம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வருவதாக அதானி குழுமத்தின் ஆங்கில ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இது வானில் 125 கிலோமீட்டர் தொலை தூரத்தை கொண்டது. இது போர் விமானங்கள், குரூஸ் வகை ஏவுகணைகள் போன்றவற்றை 100 கிலோ மீட்டர் தூரத்திலேயே கண்டுபிடித்து அழிக்கும் வல்லமை கொண்டது. ஆனால் பாகிஸ்தான் ஏவிய இந்த சீன ஏவுகணையை, இந்திய இராணுவம் தாக்கி அழித்தமை தொடர்பாக இந்திய ஊடகங்கள் பாராட்டும் விமர்சனங்களை முன்வைக்கின்றன. அதேவேளை, எச்க்யூ 9-P ஏர் பாதுகாப்பு (Defense) மூலமான தாக்குதல் முறைமையை, பதில் தாக்குதல் நடத்தி அழிக்க இந்திய இராணுவம் பயன்படுத்திய ட்ரோன் இஸ்ரேல் தயாரிப்பு என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் ட்ரோன்---- இஸ்ரேல் நாட்டின் நவீன ட்ரோன் தான், பாகிஸ்தான் ஏவிய சீனத் தயாரிப்பு ஏவுகணைகளை குறி தப்பாமல் தாக்கி அழித்தது என்று இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதி செய்திருக்கிறார். இஸ்ரேல் தயாரிப்புகளை பயன்படுத்தியே வியாழக்கிழமை இரவும் தாக்குதல் முறியடிக்கப்பட்டது என்று விக்ரம் மிஸ்ரியை மேற்கோள் காண்பித்து இந்திய ஆங்கில ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருக்கின்றன. இந்தியா பயன்படுத்திய ட்ரோன், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் என்ற ஆயுத உற்பத்தி நிறுவனம் உருவாக்கியதாகும். ரேடார் மற்றும் வான்வெளி பாதுகாப்பு முறைகளை துல்லியமாக தாக்குவது தான் இதன் சிறப்பாகும். இந்த ட்ரோனால் 9 மணிநேரம் வரை இடைவிடாது பறக்கக் கூடியது என்று இந்திய இராணுவ ஆய்வாளர்கள் கூறுவதாக இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதேநேரம் பலுசிஸ் தேசிய இன விடுதலை போராளிகள் பாகிஸ்தான் இராணுவம் மீது தாக்குதல்களைத் தொடர்ந்துள்ளது என்றும், இதற்கு இந்தியா பின்னணி எனவும் பாகிஸ்தான் ருடே (pakistan today) என்ற ஆங்கில ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது. காஷ்மீர் போராளிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை எனவும், பாலுஸிஸ் போராளிகளை பாகிஸ்தானுக்கு எதிராக தூண்டி விடவே, இந்தியா, பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் அந்த ஊடகம் விமர்சிக்கிறது. புவிசார் அரசியல் - பொருளாதார நோக்கில் அமெரிக்க, இந்திய மற்றும் இஸ்ரேல் உறவும், சீன பாகிஸ்தான் உறவும் இந்த மோதல் மூலம் வெளிப்பட்டுள்ளது. அதேநேரம் இந்திய ரசிய உறவும் இராணுவத் தளபாடங்கள் பரிமாற்றமும் வெளிப்பட்டுள்ளன. ஆனால், டொனால்ட் டிரம்ப் மறைமுக ரசிய சார்ப்புத் தன்மையுடன் செயற்படுவதால், இந்தியாவுக்கு தற்போதைக்கு அது பாதுகாப்பானதாகவே இருக்கும். இந்த நிலைமை இலங்கைக்கும் சாதகமானதே. பலுசிஸ் தேசிய இன விடுதலை போராளிகளுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் பின்னணிகள் மற்றும் பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றி மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இலங்கை இராஜதந்திரிகள் ஆய்வு நடத்தி இருந்ததை தமிழ்த் தரப்பு கவனத்தில் எடுக்க வேண்டும். அநுரவின் அவதானிப்பும் இராஜதந்திரமும்---- தற்போதைய அநுர அரசாங்கமும் அமெரிக்க இந்திய உறவு மற்றும் சீன உறவுகளை பயன்படுத்தும் உத்திகள் கூட, சமகால புவிசார் அரசியல் - பொருளாதார நிலைமைகளை ஆழமாக அறிந்து காய் நகர்த்துவதாகவே உள்ளது . காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்தும், மோடிக்கு அனுதாபம் தெரிவித்து அநுர அனுப்பிய அனுதாபச் செய்தியின் உள்ளடக்கமும் முக்கியமானது. அதேநேரம் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து ஜெனீவா மனித உரிமைச் சபையில் சீனா முன்வைத்த பரிந்துரைகள் பற்றி அநுர அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக உள்நாட்டு மோதல்களில் சர்வதேசம் தலையிடாத முறையில் மனித உரிமை விவகாரங்கள் பற்றி சீன முன்வைத்துள்ள காரண - காரியங்களை அநுர அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்கிறது. இந்நிலையில் தமிழர் தரப்பு சர்வதேச நிலைமைகளையும் சர்வதேசத்தை நோக்கிய அநுரவின் காய் நகர்த்தல்கள் பற்றியும் ஆராயாமல் வெறுமனே தேர்தல்களில் மாத்திரம் கவனம் செலுத்துவது ஆபத்தான ஒன்று. -அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்
  10. பொதுவான கோட்பாட்டிற்கு இணங்கி ஆதரவளியுங்கள் - எம்.ஏ சுமந்திரன் ஒரு சபையில் குறித்த ஒரு கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் இருந்தால் அந்தக்கட்சிக்கு நிர்வாகத்தை அமைக்க கூடிய ஒரு உரிமை பொதுவாக இருக்கும். அந்த கோட்பாட்டிற்கு இணங்கி ஆதரவளிக்குமாறு தமிழ்க் கட்சிகளிடம் விநயமாக கோருவதாக தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் வவுனியாவில் நேற்று (10) இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி தேர்தலில் 58 சபைகளில் தேர்தலில் போட்டியிட்டோம. ஆகக் குறைந்தது 35 சபைகளில் நாம் தனிப்பெரும் கட்சியாக உறுப்பினர்களை பெற்றுள்ளோம். ஆறு சபைகளில் அறுதிப் பெரும்பாண்மையோடு வெற்றி பெற்றிருக்கிறோம். அந்த சபைகளில் தவிசாளர், உபதவிசாளரை தெரிவு செய்யும் பொறுப்பு கட்சிக்கு மட்டுமே இருக்கும். கட்சி சார்ந்து பொதுச் செயலாளர் அந்தப் பெயர்களை அனுப்பி வைப்பார். எமக்காக வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீண் போகாது. நாம் பொறுப்பெடுக்கும் சபைகளை திறமையுடனும் நேர்மையுடனும் நிர்வகிப்போம். ஒரு சபையில் குறித்த ஒரு கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் இருந்தால் அந்தக் கட்சிக்கு நிர்வாகத்தை அமைக்க கூடிய ஒரு உரிமை பொதுவாக இருக்கும். அந்த வகையில் இந்த 35 சபைகளுக்குமான தவிசாளர், உபதவிசாளர்களை நாங்கள் முன்னிறுத்துவோம். மற்றைய கட்சிகள் இந்த பொதுவான கோட்பாட்டிற்கு இணங்கி நாம் முன்னிறுத்துகின்ற வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று தன்மையாக கேட்டுக்கொள்கிறோம். சில சபைகளில் விதிவிலக்கு ஏதும் இருந்தால் அது தொடர்பில் ஆராய்வோம். பொதுவான வகையில் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம். யாழ் மாநகரசபைக்கும் இது பொருந்தும். விசேடமாக நாங்கள் கேட்டுக்கொள்வது தமிழ்கட்சிகளையே. அந்த கட்சிகள் இந்த உடன்பாட்டிற்கு வருவது நல்லது என்பது எமது விநயமான வேண்டுகோள். முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் கட்சிகளோடும் நாம் இணங்கியே செயற்படுவோம். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை இந்த தேர்தலில் நாம் விமர்சித்ததாக எனக்கு நினைவில்லை. அவர்களும் எங்களை விமர்சித்ததாக ஞாபகமில்லை. சில கட்சிகள் எங்கள் மீது பாரதூரமான விமர்சனங்களை முன்வைக்கும் போது அதற்கான பதில்களையே வழங்கியிருந்தோம். தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான கூட்டு தொடர்வது நல்லது என்பது எமது சிந்தனை. காலப்போக்கில் அதனை தீர்மானிப்போம். எனவே இந்த முயற்சி அப்படியான ஒரு போக்கிற்கும் வழிவகுக்கலாம். வவுனியாவில் எமது கட்சி பின்னடைந்துள்ளது என்று கூறுவது ஒரு மாயை. கடந்த தேர்தலில் எமது கட்சிக்கு கிடைத்த வாக்குகளை விட இந்த தேர்தலில் வவுனியாவில் கூடுதலான வாக்குகள் கிடைத்துள்ளது. அது பின்னடைவு அல்ல. திடீர் என்று வானைத்தொட முடியாது. நாங்கள் சீலிங்கை தொட்டுவிட்டோம் இனி மேலே போவோம் என்றார். -வவுனியா தீபன்- பொதுவான கோட்பாட்டிற்கு இணங்கி ஆத...பொதுவான கோட்பாட்டிற்கு இணங்கி ஆதரவளியுங்கள் - எம்.ஏ சுமந்...ஒரு சபையில் குறித்த ஒரு கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் இருந்தால் அந்தக்கட்சிக்கு நிர்வாகத்தை அமைக்க கூடிய ஒரு உரிமை பொதுவாக இருக்கும். அந்த கோட்பாட்டிற்கு இணங்கி ஆதரவளிக்குமாறு தமிழ்க் கட்சிகளிடம் விந...
  11. அரசாங்கத்துக்கு எதிரான சபைகளை நிறுவ எதிர்க்கட்சிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு! பணம் மற்றும் சிறப்புரிமைகளுடன் சுயேட்சை குழுக்கள் மீது அரசாங்கம் வலை வீசுவதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்துக்கு எதிராக உள்ளுராட்சிமன்றங்களை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகள் நிபந்தனைகளின்றி ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளன. ஏனைய கட்சிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பலமான சபைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் இலட்சத்தில் அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் வாக்குகள் மில்லியன்களில் குறைவடைந்துள்ளன. இதனை நியாயப்படுத்துவதற்கு அரசாங்கம் பாடுபட்டு வருகிறது. வாக்களிப்பு வீதம் குறைவடைந்துள்ளதை ஒரு காரணமாகக் கூறுகின்றனர். அவ்வாறெனில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுனவின் வாக்குகள் எவ்வாறு அதிகரித்தன? அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசாங்கம் ஒழுக்கத்திலிருந்தும் விலகி செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அது மாத்திரமின்றி தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் கூட கைவிடப்பட்டிருக்கின்றன. மக்கள் வழங்கியுள்ள செய்தி தொடர்பில் அரசாங்கம் இதனை விட ஆழமாக சிந்திக்க வேண்டும். கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி விவகாரத்தில் சந்தேகநபர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது சில சந்தேகநபர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, சிலர் குற்றப்புலனாய்வு பிரிவில் சென்று முறைப்பாடளிக்கின்றனர். சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் இது குறித்து தனக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை என்று கூறுகின்றார். உயிரிழந்த மாணவிக்காகவும், அவரது குடும்பத்துக்காகவும் முன்னிலையாக வேண்டிய அமைச்சர் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக மாத்திரம் முன்னிலையாகியுள்ளார். இதே நிலைமை தொடர்ந்தால் இந்த அரசாங்கத்தால் தொடர்ச்சியாகப் பயணிக்க முடியாது. அரசாங்கம் அதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாக அல்லது ஒரு வருடமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நிலைமையிலேயே உள்ளது. பணம் மற்றும் சிறப்புரிமைகளுடன் சுயேட்சை குழுக்கள் மீது அரசாங்கம் வலை வீசுவதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்துக்கு எதிராக உள்ளுராட்சிமன்றங்களை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகள் நிபந்தனைகளின்றி ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளன. ஏனைய கட்சிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பலமான சபைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தியால் நிறுவப்பட்டால் உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர் என்பது உறுதியாகும். கூறிய பொய்களால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. சபைகளை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன. விரைவில் அவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்று நம்புகின்றோம் என்றார். https://seithy.com/breifNews.php?newsID=333115&category=TamilNews&language=tamil
  12. மிழ் அரசு கட்சிக்கு ஆதரவு கொடுக்க பின்நிற்கமாட்டோம்! உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணையாகவும் அமையுமென பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்பாணத்தில் இன்று (10) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய பாதையிலிருந்து தமிழ் மக்கள் படிப்படியாக விலகி வருகின்றார்கள் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டு வந்தது. இவ்வாறான ஒரு காலச் சூழலில் பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்நிறுத்திய ஒரு தேர்தலில் மக்கள் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர். இதனூடாக வடக்கு கிழக்கில் தென் இலங்கை இனவாதிகளுக்கு இடம் கொடுக்கப்படாது என்பதை ஆட்சியாளர்களுக்கு தமிழ் மக்களால் உணர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை தமிழ் தேசிய பரப்பில் அனேக பிரதேசங்களில் தமிழ் தேசியம் வெற்றிபெற்றுள்ள போதும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையில் பின்தங்கிய போக்கே இருக்கின்றது. அதேபோன்று தமிழ் தேசிய பேரவைக்கும் இலங்கை தமிழ் காங்கிரசுக்கும் மக்கள் கொடுத்துள்ள அல்லது கிடைத்த வெற்றியாகவும் இதை நாம் பார்க்கின்றோம். தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவது காலச் சூழலுக்கு தேவையான ஒன்றாகும். இதனால் தமிழ் தரப்பு ஆட்சி அமைக்க நாம் தமிழ் அரசு கட்சிக்கும் கொள்கை நிலைப்பாட்டுடன் நின்று ஆதரவை கொடுக்க பின்நிற்கமாட்டோம். குறிப்பாக ஆட்சி அதிகாரக் கதிரைக்கான தேசியமாக ஒற்றுமையாக இல்லாது தூய்மையான ஆதரவுக்கான அழைப்பாக இருந்தால் அந்த அழைப்புக்கு தமிழ் தேசிய பேரவை ஆதரவு கொடுக்கும். மேலும் ஒற்றுமையை வலுப்படுத்த தமிழ் அரசியல் பரப்பில் உள்ள பலதரப்பட்டவர்களுடனும் பேசியிருந்தேன். அதற்கான சாதக பெறுபேறும் கிடைத்தது. அதேநேரம் தமிழரசுக் கட்சியை ஓரங்கட்டும் நிலையும் எம்மிடம் இல்லை. அவர்களுடனும் பேசியே பயணிக்க வேண்டும். தவறான பாதையில் மக்கள் வழிநடத்தப் படுவதை உணர்ந்து அதை வெளிப்படுத்தி தேசியத்தின் பாதையில் மக்களை கொண்டுசெல்ல நாம் வழிவகுத்தோம். அதன் ஒரு பகுதியாகவே இம்முறை தமிழ் தேசிய பேரவை என்ற கூடின் கீழ் உள்ளூர் அதிகார சபை தேர்தலில் மக்களிடம் சென்றிருந்தோம். அதற்கான அங்கீகாரதை மக்கள் தந்துள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளின் போக்குக்கு மக்கள் ஒரு பாடத்தைகொடுத்தார்கள். அந்த பாடத்தின் ஊடான கிடைத்த படிப்பினைகள் தற்போது தமிழ் தேசிய பாதையை மீளவும் உறுதிபடுத்திக் கொடுத்துள்ளது என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. https://seithy.com/breifNews.php?newsID=333105&category=TamilNews&language=tamil தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மலினப்படுத்தாத தரப்பினருக்கு ஆதரவு வழங்குவோம்! யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவை பெறுவதற்காக இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகியவை அக்கட்சியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. பல சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவை பெரும் கட்சிகளே ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை காணப்படுவதனால், அக்கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகியவை கடந்த இரு தினங்களாக பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணை தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் கூறுகையில், உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு தமக்கு ஆதரவு தருமாறு பல்வேறு தரப்பினரும் எம்முடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர். எமது கூட்டணியில் உள்ள ஏனைய தரப்பினருடனும் கலந்துரையாடி தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மலினப்படுத்தாத தரப்பினருக்கு ஆதரவு வழங்குவோம் என தெரிவித்தார். https://seithy.com/breifNews.php?newsID=333116&category=TamilNews&language=tamil தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சிக்கவில்லை! தனி மனித தீர்மானம் எடுக்கும் கட்சியாக நாங்கள் இல்லை. தலைவர் என்ற முறையில் நாம் இதனை தெளிவாகச் சொல்கிறேன். முன்பு அவ்வாறான நிலைமை இருந்திருக்கலாம். ஆனால் தற்போது அவ்வாறில்லை. ஆகக் குறைந்தது தலைவர், செயலாளராவது கலந்து பேசி எல்லா விடயங்களையும் இணைந்து தான் செயற்படுகிறோம். ஆகவே, தனி மனித தீர்மானம் என்ற பேச்சு அபாண்டமானது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (9) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், வடக்கு, கிழக்கு பெரும்பான்மையான சபைகளை கைப்பற்றி ஆளும் வகையில் முதல் நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி இருக்கிறது. அவ்வாறு எமக்கு வாக்களித்து எம்மை அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட, எமக்கு ஊக்கமளித்த, தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற அனைவருக்கும் வடக்கு, கிழக்கு வாழும் மக்கள் எல்லோருக்கும் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மீண்டெழுவதற்கான வாய்ப்பைத் தந்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி கூறுகின்றோம். மிகக் கேவலமாக தேர்தல் காலத்தில் எங்களை எதிர்த்துப் போட்டியிட்டு இல்லாதவற்றை சொல்லி தங்களின் மகிழ்ச்சியை கொண்டாடியவர்கள் இப்பொழுது நாங்கள் தேசிய மக்கள் கட்சியோடு டீல் பேசுகிறோம் என்று பொறுப்புள்ளவர்களே குறிப்பிட்டு பேசுகிறார்கள். தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் என்ற முறையில் பொறுப்போடு இதனை மறுதலிக்கிறேன். எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து ஆட்சி அமைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எந்த டீலையும் செய்யவில்லை. இந்த பரப்புரைகள் வேலை செய்யாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர் நளிந்த ஜயதிஸ்ஸ கூட தம்மை தமிழ் கட்சிகள் அணுகவில்லை என்பதை கூறியிருக்கிறார். அடுத்த கட்ட செயற்பாடுகளை ஆராய்வதற்காக நாளைய தினம் சனிக்கிழமை அரசியல் குழு கூடி, இவ்வாறான தேர்தல் விடயங்களை எந்தெந்த சபைகளில், எவ்வாறு செயற்படுவது, யார் யாரை முன்னிலைப்படுத்தி தவிசாளர் முதல்வரை தீர்மானிப்பது என்பது தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம். ரெலோ, புளோட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் எங்கள் கட்சியின் பொதுச்செயலாளருடன் பேசியுள்ளார்கள். செல்வம் அடைக்கலநாதன் தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட்ட கட்சிகளாக நாம் மீண்டும் செயற்பட கோரிக்கை விடுக்கிறோம் என்றார். https://seithy.com/breifNews.php?newsID=333118&category=TamilNews&language=tamil
  13. சண்டையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு... நான் பஸ் டிரைவர் சார்.. பைலட் இல்ல 😁
  14. தமிழினப்படுகொலை நினைவகத் திறப்பு நிகழ்வு https://www.facebook.com/uthayan.s.pillai/videos/1053096896714981
  15. Journalist Journalist மாணவி தற்கொலை – எமது அமைப்பாளருக்கு தொடர்பில்லை – லக்ஷ்மன் நிபுணாராச்சி மலையக பெண்களுக்கு இது புதிது அல்ல சகஜமான விடையம் உண்மையை கண்டு பிடியுங்ஙள் கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை சம்பவத்துடன் எமது கட்சி அமைப்பாளர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி திரிபுபடுத்தப்பட்டதாகும். அவர் இதில் சம்பந்தப்பட்டவில்லையென ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி தெரிவித்தார் கணக்காய்வு அறிக்கைகளின் ஊடாக முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியினால் நேற்று வெள்ளிக்கிழமை (9) பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். விவாதத்தில் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றும் போது, பாடசாலை மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்டமை தொடர்பில் இந்த சபையில் நாங்கள் கதைத்தோம். 2024 ஒக்டோபர் மாதத்தில் குறிப்பிட்ட சம்பவம் நடந்துள்ளதுடன், டிசம்பர் மாதத்திலேயே பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு பெற்றோர் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் 2025 ஜனவரி மாதத்திலேயே கைது செய்யப்படுகின்றார். சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இவர் இரண்டு நாட்களில் பிணையில் விடுவிக்கப்படுகின்றார். சிறுவர் துஷ்பிரயோகத்தில் அவர் சம்பந்தப்பட்டிருந்தால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த மாதம் 8 ஆம் திகதியே அவருக்கு இடமாற்றம் வழங்கப்படுகின்றது. போராட்டம் மேற்கொள்ள திட்டமிட்ட பின்னரே இந்த நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது. இந்த 5 மாதங்களாக என்ன செய்தது கல்வி அமைச்சு, பிரதமர் கல்வி அமைச்சராக பதவியேற்று 6 மாதங்களாகியும் ஏன் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதி கிடைக்காத காரணதத்தினாலேயே மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். உங்கள் கட்சி அமைப்பாளர் ஒருவருக்கு இதில் குற்றச்சாட்டு முன்வைவக்கப்பட்டுள்ளதாக நிபுணாராச்சி எம்.பி உரையாற்றுகையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த குற்றச்சாட்டு சும்மா தெரிவிக்கப்படவில்லை. மாணவியின் பெற்றோர் அது தொடர்பில் கூறுகின்றனர். குறித்த நபரே வகுப்பரையில் அந்த மாணவியை நிற்கவைத்து, பாடசாலையில் நடந்த சம்பவம் தொடர்பில் மற்றைய மாணவர்களின் முன்னால் மாணவியை அவமதித்துள்ளார். அவர் உங்களின் கட்சியின் அமைப்பாளர் என்று நாங்கள் காலையில் கூறவில்லை. நீங்களே இதனை அரசியலாக்க வேண்டாம் என்று கூறினீர்கள். குறித்த ஆசிரியர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான முறைமை எப்படி இருந்திருக்கிறது என்பதனை பாருங்கள். அந்த செயற்பாட்டு முறை வேகமானதான இருந்திருந்தால் அந்த மாணவியின் உயிரை காப்பாற்றியிருக்கலாம். சம்பந்தப்பட்ட அமைப்பாளரின் வீட்டுக்கு முன்னால் 7 பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்படும் ஒருவருக்கு இப்படி பாதுகாப்பு கொடுப்பதா? சிறுமியின் மரணத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பொறுப்பு கூற வேண்டியவரின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா? அவர் வேறு கட்சியை சேர்ந்தவராக இருந்திருந்தால் இன்று சிறையில் இருந்திருப்பார். அவர் மறைமுகமாகவோ, நேரடியாகவோ இந்த மாணவியை அவமதிப்பு செய்துள்ளதாக பெற்றோரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையிலேயே அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் அமைப்பாளர் மட்டுமல்ல கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டவர். 35ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளார். அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளில் தீர்மானிக்கப்படும். மக்கள் அரசாங்கத்திடம் முறைமை மாற்றம் தொடர்பிலேயே எதிர்பார்த்தனர். இதனையே நீங்களும் எதிர்பார்த்தனர். ஆனால் நீங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் மெதுவானதாக இருக்கிறது என்றார். இதன்போது முஜிபுர் ரஹ்மான் எம்.பி. முன்வைத்த சில விடயங்கள் தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி பதிலளித்த ஆளும் கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி எம்.பி. கூறுகையில், இந்த விடயத்தை இவர்கள் அரசியல் செய்யப் போவதில்லை என்று கூறிக்கொண்டே எமது அமைப்பாளர் ஒருவரை இதனுள் சம்பந்தப்படுத்துகின்றனர். எமது அமைப்பாளர் இதற்குள் கிடையாது. அவர் குறித்த கல்வியகத்தின் உரிமையாளரே, அவர் ஆசிரியரும் கிடையாது. முழுமையாக திரிபுபடுத்தலையே செய்கின்றனர். திரிபுபடுத்தியே ஊடகங்களுக்கு கூறுகின்றனர். அந்த பிள்ளை தொடர்பான கவலை எங்களிடையே இருக்கிறது. பிரதமரும் இது தொடர்பில் கூறியுள்ளார். தவறுகள் மற்றும் தாமதங்கள் இருந்தால் அது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
  16. இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை பிடித்தோ இல்லையோ இந்திய பாகிஸ்தானிய ஊடகங்கள் மிகப்பெரிய போரை (புழுகுப்போரை ) நடாத்தி இருந்தன. ஸ்ராலிலினின் பேரணியால் போர் நின்றது என்று சொல்பவர்கள் கூட இன்றும் வாழ்கிறார்கள்.
  17. போர் நிறுத்தம் இரு நாடுகளுக்கும் இடையில் பிற்பகல் 5 மணிக்கு அமலாகிறது. சவூதி அரேபியா மேற்படி இரு நாடுகளுக்கும் நடுநிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.
  18. ஐபிஎல் ஒரு கிழமைக்கு பின் போடப்பட்டுள்ளதாம்!!
  19. அனுரவின் தனிப்பட்ட ஜெட் பயணத்துக்கு ஏற்பாடு செய்தது யார்? [Friday 2025-05-09 05:00] http://seithy.com/siteadmin/upload/anura-jet-090525-seithy.jpg ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வியட்நாமில் இருந்து திரும்புவதற்கான தனியார் ஜெட் விமானத்திற்கான செலவுகளை யார் ஏற்றுக்கொண்டார்கள் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியபோது பாராளுமன்றத்தில் சூடான வாதங்கள் எழுந்தன. விமானச் செலவுகளை ஒரு நிறுவனம் ஏற்றுக்கொண்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருவதாகவும், இது குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜகருணா சபையில் தெரிவித்தார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கை அரசாங்கம் ஜெட் விமானத்திற்காக ஒரு சதம் கூட செலவிடவில்லை என்றும், அனைத்து செலவுகளையும் வியட்நாமில் உள்ள ஒரு பௌத்த சங்கம் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார். மே 6 ஆம் திகதி வியட்நாமில் நடைபெறும் ஐ.நா. வெசாக் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற ஜனாதிபதி அழைக்கப்பட்டதாக அவர் கூறினார். "ஜனாதிபதி உரைக்குப் பிறகு தேர்தலுக்குத் திரும்பி வர முடியாது என்று நாங்கள் அவர்களிடம் தெரிவித்தோம். எனவே, ஏற்பாட்டாளர்களான வியட்நாமில் உள்ள ஒரு புத்த சங்கம் ஜெட் விமானத்தை ஏற்பாடு செய்தது," என்று அவர் கூறினார். http://seithy.com/breifNews.php?newsID=333028&category=TamilNews&language=tamil
  20. அநுரவும் 6 மாதத்துக்குள் பல நாடுகளுக்கு சென்றுளார்.
  21. நீலன் திருச்செல்வத்தின் மகன் என்பதால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். எப்படி சந்திரிக்காவுக்கு மிக நெருங்கினார் என சொன்னால் நன்னா இருக்கும். சிங்களவர்களில் பல கெட்டிக்காரர்கள் உள்ள போது??
  22. முடிப்போம் என யார் சொன்னார்கள்? இவர்கள் எப்படி நடுநிலையாளர்கள் ஆனார்கள்? ஒரு முடிவுக்கு வர எல்லோரும் ஒன்றானார்கள் ஆயின் பிறகென்ன பேச்சுவார்த்தை?அதன் அர்த்தம் என்ன? பேச்சுவார்தையை புலிகள் குழப்பியதாக நாடகமாடியவர்களில் எத்கனை பேர் இங்குள்ளீர்கள்?? இப்படியான நொண்டிச்சாட்டுகளை இப்போதும் கூறி ஏனையவர்களை மடையர்கள் ஆக்காதீர்கள். புலிகளை பயங்கரவாதிகள் என் கிறீர்கள். எமது அரசியல் கட்சியாக கூட்டமைப்பை அனுப்புகிறோம் என புலிகள் கூறினார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.