Everything posted by nunavilan
-
பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!
பாமக பொருளாளர் திலகபாமா பதவி பறிப்பு.. புதிய அட்டாக்கை தொடங்கிய ராமதாஸ்.. பதிலடி கொடுத்த அன்புமணி!By Yogeshwaran Moorthi விழுப்புரம்: சென்னையில் பாமக மாவட்டச் செயலாளர் கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்தி வரும் நிலையில், இன்னொரு பக்கம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமகவின் பொருளாளர் திலகபாமாவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். அந்த பதவிக்கு சையது மன்சூர் என்பதை நியமனம் செய்துள்ளார். இந்த நிலையில், ராமதாஸ் நியமனத்திற்கு எதிராக அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் உச்சக்கட்ட மோதல் வெடித்துள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்று கால்களை பிடித்து அன்புமணியும், செளமியாவும் கதறி அழுதார்கள். எனக்கு தெரியாமலேயே பாஜக உடன் கூட்டணி அமைக்க செளமியா பணிகளை செய்தார். ராமதாஸ் குற்றச்சாட்டுகள்தனது தாயையே பாட்டிலால் அடிக்க சென்றவர் அன்புமணி. அவருக்கு கொஞ்சம் கூட தலைமைப் பண்பே இல்லை. நான் செய்த சத்தியத்தையும் மீறி அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கியதே தவறு. சீனியர்கள், நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் கொஞ்சம் கூட மதிப்பு அளிப்பதில்லை என்று குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். திலகபாமா நீக்கம்இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை சோழிங்கநல்லூரில் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் திலகபாமா பங்கேற்றிருந்தார். அவருக்கு அன்புமணிக்கு அருகே இருக்கை போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாமக பொருளாளார் பதவியில் இருந்து திலகபாமா நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார். ராமதாஸ் அறிவிப்புஅவருக்கு பதிலாக பாமக துணைத் தலைவராக செயல்பட்டு வந்த சையது மன்சூர் என்பதை பொருளாளராக நியமனம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து சையது மன்சூர் பேசுகையில், ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை கட்சியின் பதவிகள் மாற்றி அமைக்கப்படும். அந்த விதிகளின் அடிப்படையிலே எனக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாமக பதவி நியமனங்கள் ராமதாஸால் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். https://tamil.oneindia.com/news/villupuram/pmk-shocker-s-ramadoss-removes-treasurer-thilagabama-signals-new-attack-ahead-of-2026-708339.html
-
Miss World 2025 பட்டம் தாய்லாந்து வசமானது
Miss World 2025 பட்டம் தாய்லாந்து வசமானது 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி வென்றுள்ளார். 72வது உலக அழகி போட்டி இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் சம்மேளன மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்றுது. இந்த ஆண்டு, 108 போட்டியாளர்கள் உலக அழகி போட்டியில் பங்கேற்கின்றதுடன், அவர்கள் 4 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் 10 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி வென்றுள்ளார். https://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/Miss-World-2025-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/50-358326
-
2009 இல் இலங்கை விவகாரத்தில் ஐநா இழைத்த தவறை மீண்டும் நினைவுபடுத்தினார் டொம் பிளெச்சர் - “ஐநா உரிய தருணத்தில் செயற்படவில்லை உரிய தருணத்தில் எச்சரிக்கை விடுக்கவில்லை என உலகம் பின்னர் தெரிவித்தது”
உக்ரேனில், காசாவில் எப்படி உங்களால் செயற்பட முடிகிறது??
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
Tamil Vs Kannada | Basic understanding of Kannada language and Tamil language
-
Imagine Dragons - Thunder
Lady Gaga - Always Remember Us This Way (from A Star Is Born) That Arizona sky burnin' in your eyes You look at me and, babe, I wanna catch on fire It's buried in my soul like California gold You found the light in me that I couldn't find So when I'm all choked up And I can't find the words Every time we say goodbye Baby, it hurts When the sun goes down And the band won't play I'll always remember us this way Lovers in the night Poets tryin' to write We don't know how to rhyme But, damn, we try But all I really know You're where I wanna go The part of me that's you will never die So when I'm all choked up And I can't find the words Every time we say goodbye Baby, it hurts When the sun goes down And the band won't play I'll always remember us this way Oh, yeah I don't wanna be just a memory, baby, yeah Hoo, hoo, hoo, hoo Hoo, hoo, hoo, hoo Hoo, hoo, hoo, hoo, hoo So when I'm all choked up And I can't find the words Every time we say goodbye Baby, it hurts When the sun goes down And the band won't play I'll always remember us this way, way, yeah When you look at me And the whole world fades I'll always remember us this way
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: அஞ்சு வண்ண பூவே இசை: ஏ.ஆர்.ரகுமான் வரிகள்: கார்த்திக் நீதா பாடியவர்: சாருலதா மணி படம்: Thug Life
-
வடக்கை நாம் இழந்துவிட்டோமா? சரத் வீரசேகர கேள்வி
உங்களை உங்கள் இனமே கை கழுவி விட்டு விட்டது. உங்கள் இனவாத கருத்து எடுபடாது.
-
ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்
ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று முன்தினம் (29) மேற்கொண்டார். இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், குறித்த தொழிற்சாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் முகாமையாளரிடம் கேட்டறிந்ததோடு, அதனை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும், அங்கு பணிபுரியும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் முகமாக தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின் போது, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் உள்ளிட்ட தரப்பினர் கலந்துக் கொண்டனர். ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சா...ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேக...கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று முன்தினம் (29) மேற்கொண்டார்.https://adaderanatamil.lk/news/cmbbpk68p016yqpbszibgoe31
-
பேச்சுக்களில் முழு இணக்கம் இல்லை- தொடர்ந்து பேச இணக்கம்!
பேச்சுக்களில் முழு இணக்கம் இல்லை- தொடர்ந்து பேச இணக்கம்! உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முழுமையான இணக்கம் எட்டப்படவில்லை. கொள்கை இணக்கப்பாடு அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியதோடு தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற சபைகளில் தாங்கள் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையில் முழுமையான இணக்கப்பாடுகள் எட்டாத நிலையில் காணப்பட்டதோடு மீண்டும் சந்தித்து உரையாடுவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. வட, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (30) மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது வட, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இச்சந்திப்பின்போது வட, கிழக்கு மாகாணங்களில் சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் ஆட்சியமைப்பது அவசியம் என தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டதாகவும், அதன்படி தமது இரு கட்சிகளும் ஒத்துழைப்புடன் இணைந்து செயற்பட்டால் அவ்விரு மாகாணங்களிலும் கணிசமான சபைகளில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றமுடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார். அதற்குப் பதிலளிக்கையில், இருதரப்பினருக்கும் இடையில் கொள்கை ரீதியில் இணக்கப்பாடு எட்டப்படும் பட்சத்தில் இணைந்து ஆட்சியமைக்க முடியும் எனவும், மாறாக வெறுமனே தேர்தலை இலக்காகவைத்து சபைகளையும், பதவிகளையும் கைப்பற்றுவதற்காக மாத்திரம் கூட்டிணையவேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனவும் எடுத்துரைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தமிழ்த்தேசியத்தைப் பாதுகாப்பதற்கே தமிழ்மக்கள் ஆணை வழங்கியிருப்பதாகவும், எனவே தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி வாக்கு கோரிய சகல கட்சிகளும் அதனைப் பாதுகாத்து நடைமுறைப்படுத்தும் வகையில் இணைந்து செயற்படவேண்டும் எனவும் தான் தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியதாக கஜேந்திரகுமார் கூறினார். இதேவேளை இச்சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஏற்கனவே இரு கட்சிகளாலும் வெளியிடப்பட்ட நிலைப்பாடுகளுக்கு அமைய ஒவ்வொரு சபைகளிலும் கூடுதல் ஆசனங்களைப்பெற்ற கட்சி ஆட்சியமைப்பதற்கும், மற்றைய கட்சி அதற்கு ஆதரவு அளிப்பதற்கும் இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டதாகத் தெரிவித்தார். https://seithy.com/breifNews.php?newsID=334001&category=TamilNews&language=tamil
-
திரும்பிய அகதியை கைது செய்தது சரியா?- மனோ கணேசன் கேள்வி
திரும்பிய அகதியை கைது செய்தது சரியா?- மனோ கணேசன் கே http://seithy.com/siteadmin/upload/mano-ganesan-190525-seithy.jpg தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, உங்களை நம்பி, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில், எதற்காக கைது செய்தீர்கள்? கைது செய்து, இன்று பிணையில் வெளியே விடாமல், சிறையில் அடைக்கிறீர்கள்? வெளிநாடு சென்ற தமிழர்களை திரும்பி “வாங்கோ, வாங்கோ” என நீங்கள் தானே வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள்? உங்களை நம்பி வந்தால், திரும்பி வந்தால் விமான நிலையத்தில் கைது செய்வதா? என தமுகூ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை துணை தூதரகம் தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா? வெளிநாட்டு அமைச்சுக்கு தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன. ஐநா அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்கு பயண சீட்டு வாங்கி கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து, விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. இவை உங்களுக்கு தெரியாதா? என மனோ கணேசன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பில் மனோ எம்பி தனது எக்ஸ் தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது; ஊழல் பேர்வழிகளை கைது செய்து சிறையில் அடையுங்கள். அதை செய்யத்தான் வேண்டும். இன்னமும் நானூற்றுக்கணக்கான ஊழல் கோப்புகள் இருப்பதாக சொன்னீர்கள். அனைவரையும் கைது செய்து, விசாரித்து, ஆவன செய்யுங்கள். சட்டத்தில் இடமிருந்தால் ஊழல் பேர்வழிகளுக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்குங்கள். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால், எதற்காக தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில், கைது செய்து, பிணையில் வெளியே விடாமல், சிறையில் அடைக்கிறீர்கள்? 75 வயதான சின்னையா சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை துணை தூதரகம்தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா? வெளிநாட்டு அமைச்சுக்கு தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன. ஐநா அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்கு பயண சீட்டு வாங்கி கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து, விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள் தானே திரும்பி வர சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைதா? என மனோ கணேசன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=333979&category=TamilNews&language=tamil
-
சுவிட்சர்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத் தமிழன்
அஸ்வினுக்கு வாழ்த்துக்கள். உலக அளவில் விளையாடி புகழ் பெற வாழ்த்துக்கள்.
-
பயங்கரவாதத்துக்கு எதிராக கனேடிய அரசு எடுக்கும் நடவடிக்கையை 'இனப்படுகொலை' என்பீர்களா? - கனேடிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் விஜயதாஸ ராஜபக்ஷ கேள்வி
அங்கு கியூபெக் மக்க@ பிரிந்து போக நினைத்த போது கனேடிய அரசு சர்வஜன வாக்கேடுப்பு ஒன்றை அம்மக்களிடம் நடாத்தி ஜனநாயகத்தை நிலைநிறுத்தியது. உங்களால் வடக்கு கிழக்கில் அப்படி ஒன்றை நடாத்த துணிவுள்ளதா? மக்களை சிறிய பரப்புக்குள் வர செய்து அவர்கள் மேல் குண்டு போட்டி கொன்றதை சிங்களத்தில் எப்படி கூறுவார்கள்?
-
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
ஆச்சரியமான காணொளி. Magic Vs Astrology...RAJESH SIR-ஐ மிரளவைத்த Magician!!!
-
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
ஆழ்ந்த இரங்கல்கள். அந்த 7 நாட் கள் படக்காட்சி
-
வடக்கு ரயில் சேவைகள் ஒரு மாதம் இடைநிறுத்தம்!
வடக்கு ரயில் சேவைகள் ஒரு மாதம் இடைநிறுத்தம்! 00] http://seithy.com/siteadmin/upload/train-021124-seithy.jpg மாகோவிலிருந்து அநுராதபுரம் வரையிலான பிரதான புகையிரத மார்க்கத்தில் ஐந்து பாலங்களில் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளதால், மீண்டும் ஒரு மாத காலத்திற்கு வடக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலங்கள் அகற்றப்பட்டு புதிய பாலங்கள் அமைக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐந்து பாலங்கள் ஏற்கனவே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய கடன் உதவியுடன் ஐந்து பாலங்கள் அமைக்கப்படவுள்ளதோடு, சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும். பொசன் பௌர்ணமி தினத்துக்கு பின்னர் கட்டுமாணப்பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்திய கடன் திட்டத்தின் கீழ் 9,127 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த புகையிரத மார்க்கம் புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட போதிலும், சமிக்ஞை கட்டமைப்பின் கட்டுமானம் தாமதமாகி வருகிறது. சமிக்ஞைகள் இல்லாததால், தற்போது அந்தப் பகுதியில் டோக்கன் முறையில் புகையிரதங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவுடன் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மாதத்திற்குள் சமிக்ஞை கட்டமைப்பின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டால் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் பணிகளை முடிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=333925&category=TamilNews&language=tamil
-
உகந்தைமலை பகுதியில் புத்தர் சிலை- மக்களைக் குழப்பும் செயற்பாடுகளை கைவிட வேண்டும்!
உகந்தைமலை பகுதியில் புத்தர் சிலை- மக்களைக் குழப்பும் செயற்பாடுகளை கைவிட வேண்டும்! உகந்தைமலை பகுதியில் புத்தர் சிலையினை அமைத்து சட்ட விரோதமாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை அடிப்படைவாதிகள் கைவிட வேண்டும். அரசாங்கம் விழிப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லாது விட்டால் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை தமிழ்அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார். கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் 10 வீட்டுத்திட்டத்தின் கீழ் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் ஆகிய இடங்களில் வீடு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடுகளை அமைக்கும் திட்டத்தினை கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்க முன்னெடுத்துள்ளது. இதன்கீழ் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு பகுதியில் வீடு அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தலைவர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியிலும் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிக்கான வீட்டினை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது. மிகவும் வறிய நிலையில் தகர கொட்டில்களில் வாழும் குடும்பங்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கம் அமைப்பானது கடந்த 12வருடமாக வடகிழக்கில் பல்வேறு சமூக நல திட்டங்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், இந்த உகந்தை மலையில் ஒரு புத்தர் சிலையை நிறுவி இருக்கின்றார்கள். உண்மையில் நாங்கள் மதத்திற்கும் மரியாதை கொடுக்கின்றவர்கள். புத்த பகவானை பொருத்தவரையில் அவர் உண்மையில் அமைதியாக மக்கள் வாழ வேண்டும் குழப்பங்கள் இருக்கக் கூடாது காருண்யம் பேணப்பட வேண்டும் எந்த இடத்திலும் குழப்பங்கள் கலவரங்கள் சண்டைகள் தனது பெயரால் இடம்பெறக்கூடாது என விரும்புபவர். இவ்வாறு இருக்கத்தக்கதாக உகந்தை மலையில் முருகன் ஆலயத்திற்கு பக்கமாக இப்போது சட்டவிரோதமாக ஒரு புத்தர் சிலையை அமைத்திருக்கின்றார்கள். இதன் காரணமாக இப்போது அந்த இடத்தில் ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது. நாங்கள் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்ற ஒரு விடயம் இந்த விடயத்தில் நீங்கள் ஒரு இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சகல மக்களையும் சமத்துவமாக சம தர்மமாக வழிநடத்த வேண்டும் என்கின்ற உங்களுடைய வார்த்தைகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்ற வேளையில் இந்த நாட்டில் மீண்டும் ஒரு கலாசார ரீதியான பண்பாட்டு ரீதியான ஒரு ஆக்கிரமிப்பை அல்லது முருகன் ஆலயத்திற்கு பக்கத்தில் இன்னும் ஒரு சிலையை நிறுவுவதன் மூலமாக நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தாமல் இவ்வாறான சட்ட விரோதமான செயற்பாடுகளை தடுக்க வேண்டும். குறிப்பாக சொல்லப் போனால் வன வள திணைக்களமானது இந்த விடயத்தில் அக்கறை இன்றி இருக்கின்றது. அல்லது அனுமதி கொடுத்து இருக்கின்றது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் முருகன் ஆலயம் அமைக்கின்ற விடயத்தில் அவர்கள் தடைகளை விதித்திருந்தார்கள் ஆனால் புத்தர் சிலை வைக்கின்ற விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள். இது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் சட்ட விரோதமாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை அடிப்படைவாதிகள் கைவிட வேண்டும்.இதனை அரசாங்கம் விழிப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லாது விட்டால் தேவையற்ற விளைவுகளை கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்று ஏற்படுவதற்கு வழி கூறும் என்பதனை கூறிக் கொள்கின்றேன். அடுத்ததாக மட்டக்களப்பு மகிழவட்டவான் பாலம் உடைந்து இருக்கின்றது. அந்த உடைந்த பாலத்தை செய்வதற்காக ஆக்கபூர்வமான செயல்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதற்காக 7 கோடி ரூபாய் நிதி வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலமாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அங்கு மண் பரிசோதனை செய்வதன் மூலமாக அடியில் இருக்கின்ற பாறையை கண்டறிந்து அதில் பாலத்தை அமைப்பதற்கான செயல்பாடுகளை அவர்கள் முன்னெடுத்து இருக்கிறார்கள். இது வீதி அபிவிருத்தி திணைக்களம் எனக்கு அண்மையில் குறிப்பிட்ட ஒரு செய்தி. ஆகவே அவ்வாறு இருக்கின்ற போது தேவை இல்லாத ஒரு குளறுபடிகளை ஏற்படுத்துவதற்காக சில அரசியல் சக்திகள் அந்த இடத்தில் பாலம் அமைக்கவில்லை,அரசியல்வாதிகள் வரவில்லை என்று எல்லாம் போலியான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கின்றார்கள.; இது அரசாங்கத்தின் செயல்பாடு தாமதமாக நடைபெறுகின்றது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். அதற்கான நிதி 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. என்பதனையும் நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். அடுத்ததாக தமிழரசு கட்சி இந்த பிரதேச சபைகளை அமைக்கின்ற விடயத்தில் சிக்கலான ஒரு பிரதிநிதித்துவம் காரணமாக சில ஆசனங்கள் தமிழரசு கட்சி பெரும்பான்மையாக வென்று இருந்தாலும் ஆசனங்கள் தேவைப்படுகிறது. எனவே இந்த இடத்தில் தமிழ் பேசும் கட்சிகள் அதாவது தமிழ் பேசும் உறுப்பினர்களை கொண்ட கட்சிகள் தமிழ் தேசிய கட்சிகள் அல்லது சுயேட்சை குழுக்களாக போட்டியிட்டாலும் அவர்களையும் இணக்கப்பாட்டுடன் இந்த சபைகளை அமைப்பதற்கு உதவி செய்ய வேண்டும். தேசிய மக்கள் சக்தி கூறி இருக்கின்றது எந்த இடத்தில் கூடுதலான ஆசனங்கள் புறப்பட்டு இருக்கின்றதோ அந்த இடங்களில் அந்தந்த கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு தாங்கள் தடையாக இருக்க மாட்டோம் ஆட்சி அமைக்கின்ற விடயங்களில் தாங்கள் ஒரு நடுநிலையாக செயல்படுவோம் என்கின்ற கருத்தையும் கூறி இருக்கின்றார்கள். அதே போன்று இன்னும் ஒரு விடயம் வடபுலத்தில் வர்த்தமானி மூலமாக பறிக்கப்பட்ட காணிகள் அல்லது சுவீகரிக்கப்பட்ட காணிகள் விடயத்தில் இப்போது இன்னும் ஒரு வர்த்தமானி மூலமாக அந்த காணிகளை மீண்டும் வாபஸ் பெற்று அந்தந்தகாணிகளை மக்கள் பக்கமாக செல்வதற்கு அனுமதி அளிப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றார். அந்த அடிப்படையில் பார்க்கின்ற போது இந்த நல்ல விடயத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். நல்ல விடயங்களை யார் செய்தாலும் பாராட்டுவோம். எனவே நாட்டில் குழப்பம் இல்லாமல் காணி அபகரிப்பை மற்றும் ஏனைய தேவையற்ற விடயங்களை கைவிட்டு நல்லிணக்க விடயங்களை கையாள வேண்டும். ஆகவே வட குளத்தில் பறிக்கப்பட்ட அல்லது அபகரிக்கப்பட்ட சுவிகரிக்கப்பட்ட காணிகளை மீளவும் மக்களுக்கு ஒப்படைக்கின்ற விதத்தில் புதிய வர்த்தமானியை வெளியிட்டதற்காக இந்த இடத்தில் ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். இன்னும் ஒரு விடயம் கூறப்படுகிறது மட்டக்களப்பில் பொது மருத்துவ மாதுக்கள் பயிற்சி நிலையம் என்று சொல்லப்படுகின்ற அந்த பயிற்சி பாடசாலையை இங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை பதில் சுகாதார அமைச்சின் செயலாளர் செய்துகொண்டு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. இந்த விடயம் அரச கர்ம மொழியாக தமிழும் சிங்களமும் காணப்படுகின்ற போது தமிழில் பயிற்சி கொடுக்கின்ற இந்த பயிற்சி நிலையத்தை மூடு விழா செய்வது என்பது தேவையற்ற ஒரு விடயமாகவும் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குகின்ற விடயமாகவும் காணப்படுகின்றது. இதில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதை விட இவ்வாறான செயல்பாடுகளை செய்யக்கூடாது செய்தால் அதுவும் இன நல்லிணக்கத்திற்கு ஆபத்தாக அமைந்து விடும் என்கின்ற கருத்தை கூறுகின்றேன். மட்டக்களப்பில் மூன்று இனங்கள் காணப்படுகிறது. தமிழர் முஸ்லிம் சிங்களவர்கள் என காணப்படுகின்றது. மட்டக்களப்பில் கிட்டத்தட்ட 74 சதவீதமானோர் தமிழர்களாகவும் 26 சதவீதம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சில சபைகளில் தமிழர்கள் மாத்திரம் பெரும்பான்மையாக இருக்கின்ற சபைகளில் சபைகளை அமைக்கின்ற விடயத்தில் தமிழ் பெரும்பான்மையோடு தமிழ் அரசு கட்சியின் பெரும்பான்மை மற்றும் தமிழ் தேசிய கட்சியின் பெரும்பான்மையோடு அமைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் சில முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் கலந்து வாழுகின்ற பிரதேசங்களில் தமிழர்களின் ஒத்துழைப்பு முஸ்லிம் சபைகளை அமைப்பதற்கு தேவைப்படுகின்றது. அதேபோன்று தமிழ் சபைகளை அமைப்பதற்கு முஸ்லிம் பிரதிநிதிகளின் அல்லது உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. பரஸ்பரம் இந்த உதவிகள் உதாரணமாக ஓட்டமாவடி பிரதேச சபை ஏறாவூர் நகர சபை அமைக்கின்ற போது இதன் விடயத்தில் தமிழ் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு அவர்களுக்கு தேவைப்படுகின்றது. அதேபோன்று ஏராவூர் பற்று, வாழைச்சேனை மற்றும் வாகரை போன்ற பிரதேச சபைகளை அமைக்கின்ற விடயத்தில் தமிழர்களுக்கு முஸ்லிம்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது. எனவே பரஸ்பர அடிப்படையில் இந்த ஒத்துழைப்புகளை செய்கின்ற விடயம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை திருகோமலையில் செயல்பாட்டில் நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இது அவர்களுக்கும் தேவைப்படுகின்றது எங்களுக்கும் தேவைப்படுகிறது. ஆகவே அதற்கு இடையில் தமிழ் தேசியம் சார்ந்தவர்களும் இந்த விடயத்தில் ஒத்துழைப்புகளை வழங்கினால் மிகவும் நன்றாக அமைந்திருக்கும் என்பதனை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். https://seithy.com/breifNews.php?newsID=333880&category=TamilNews&language=tamil
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது
-
பணத்துக்காக நான் படம் பண்ண வரல -- மணி ரத்தினம்
பணத்துக்காக நான் படம் பண்ண வரல -- மணி ரத்தினம்
-
தமிழரசு கட்சியின் யாப்பை மீறி பல விடயங்கள் நடைபெற்றுள்ளது
தமிழரசு கட்சியின் யாப்பை மீறி பல விடயங்கள் நடைபெற்றுள்ளது. தலைமை பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்று தருவேன்
-
குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!
மே 19 போர் வீரர் நினைவஞ்சலி உரை: குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி! கடந்த 19 ஆந் திகதி தலைநகர் கொழும்பு போர் வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் இலங்கையின் உள்நாட்டுப் போரில் (1979 - 2009) உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் 16 ஆவது தேசிய நிகழ்வு இடம்பெற்றது. அதில் பங்கேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரை தென்னிலங்கை அரசியலில் ஒரு பெரும் சூறாவளியை கிளப்பியிருப்பதுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்களில் ஓரளவுக்கு பலவீனமடைந்திருந்த NPP இன் வாக்கு வங்கியில் அநேகமாக மேலும் ஒரு சரிவு ஏற்படுவதற்கு வழிகோலள முடியும். அடுத்து இந்த உரை நிகழ்த்தப்பட்டிருக்கும் காலம் (Timing) அரச தரப்புக்கு பெருமளவுக்கு உசிதமற்றதாகவே இருந்து வருகிறது என்ற விடயத்தையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். அதாவது, ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் NPP பெற்றுக் கொண்ட அமோக வெற்றியையடுத்து சில காலம் பதுங்கிக் கிடந்த தீவிர தேசியவாத / இனவாத சக்திகள் (உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர்) ஓரளவுக்குப் புத்துணர்ச்சி பெற்று, மீண்டும் 'இனம்' மற்றும் 'மதம்' போன்ற தேசாபிமான சுலோகங்களுடன் களமிறங்கியிருக்கும் ஒரு சூழ்நிலையலேயே சிங்களப் பொதுச் சமூகம் பூஜித்து வரும் 'ரணவிருவாக்களை' (War Heroes) வெறும் சிப்பாய்களாக (Soldiers) 'தரமிறக்கும்' விதத்தில் ஜனாதிபதி பேசியிருக்கிறார். போரில் உயிர் நீத்த வீரர்களை குறிப்பிடுவதற்கென கடந்த 25 ஆண்டுகளாக பொது வழக்கில் உள்ள சிங்களச் சொல் 'ரணவிருவா' (War Hero) என்பது. ஆனால், ஜனாதிபதி தனது உரை நெடுகிலும் அச்சொல்லை பயன்படுத்துவதை மிகக் கவனமாக தவிர்த்துக் கொண்டதுடன், அதற்குப் பதிலாக 'சிப்பாய்கள் (Soldiers) என்ற சொல்லைப் பயன்படுத்தினார். தென்னாசிய கலாச்சார பாரம்பரியங்களை பொருத்தவரையில் போர் வீரர்களை 'வெற்றி வீரர்கள்' என வர்ணிப்பதும், அவர்களை அதிமானுடர்களாக கட்டமைப்பதும் வரலாறு நெடுகிலும் இடம்பெற்று வந்திருக்கும் இயல்பான ஒரு செயல். தமிழில் கலிங்கத்துப் பரணி தொடக்கம் கலைஞரின் 'பாயும் புலி பண்டார வன்னியன்' வரையில் அனைத்துப் போர் இலக்கியங்களும் இந்த ரணவிரு ' Concept' ஐயே முன்வைக்கின்றன. எவரும் அந்தப் போர் வீரர்களை வெறும் சிப்பாய்களாக பார்ப்பதுமில்லை; வர்ணிப்பதுமில்லை. 'இரத்தத் திலகம்' (1963) தொடக்கம் 'அமரன்' (2024) வரையில் திரையிடப்பட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களும் 'ஜவான்களை' வீரமும், தேச பக்தியும் நிறைந்த உத்தம புரிஷர்களாக சித்தரித்துக் காட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் என்று சொல்லலாம். 'எம்மைப் பொருத்தவரையில் அவர்கள் எமது தாய் மண்ணுக்காக போராடி உயிர் நீத்தவர்கள். வெறும் Soldiers அல்லது Officers அல்ல. தாய் மண்ணை உயிரினும் மேலாக நேசித்த ரணவிருவாக்கள். ஜனாதிபதி ஆனாலும் சரி அவர்களை இவ்விதம் சிறுமைப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது' என்பது எதிர் தரப்பினர் ஆவேசத்துடன் முன்வைக்கும் வாதம். 'டயஸ்போரா' புலிகளிடமிடமிருந்து காசு மற்றும் இன்னபிற காணிக்கைளைப் பெற்றுக் கொண்டு ஜனாதிபதி மாபெரும் தேசத் துரோகத்தை இழைத்திருக்கிறார்' என கடும் உணர்ச்சிவசப்பட்ட தொனியில் பேசியிருக்கிறார் விமல் வீரவங்ச - "ஜனாதிபதி தனது உரையில் எந்தவொரு இடத்திலும் வாய் தவறியும் கூட 'ரணவிருவா' என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அது மட்டுமன்றி, அவர் 'இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாடு', 'இறைமை' மற்றும் 'பிரிவினைவாத பயங்கரவாதம்' போன்ற சொற்களையும் தவிர்த்துக் கொண்டார்........ இதுவரையில் எந்தவொரு அரச தலைவரும் செய்யத் துணியாத ஒரு செயல் இது..........." "டயஸ்போரா" புலிகளின் மனதை கொஞ்சமும் புண்படுத்தக் கூடாது என்ற கரிசனையுடன் நிகழ்த்தப்பட்ட உரை இது" என்கிறார் உதய கம்மன்பில. மறுபுறம், 1983 வன்செயல்களைத் தூண்டிய முக்கிய புள்ளிகளில் ஒருவரான எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதிக்கு இது தொடர்பாக கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மற்றொரு யூடியூப் சண்டியராக எழுச்சியடைந்திருக்கும் ராஜாங்கன சந்தாரதன தேரர் என்ற சர்ச்சைக்குரிய பிக்கு 'அடேய் அநுர, நீ புலிகளுக்கு ....... தை கொடுக்கும் துரோகி....... உன்னை நாங்கள் சும்மா விடப் போவதில்லை....' எனக் கடுமையாக ஜனாதிபதிக்கு அச்சுறுத்துல் விடுத்திருக்கிறார். தீவிர சிங்கள தேசியவாதிகள், அந்த முகாமைப் பிரதிநிதித்துவப்படுத்தும் (பலங்கொடை கஸ்ஸப தேரர் போன்ற) ஒரு சில முன்னணி தேரர்கள் மற்றும் பிரபல்யமான யூடியூபர்கள் பலரும் இது தொடர்பாக AKD ஐ கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறார்கள். "கடும் மத வெறுப்பாளர்களான எமது ஆட்சியாளர்களும், அவர்களுடன் கைக்கோர்த்துக் கொண்டிருக்கும் ஒரு சில காவியுடை கயவாளிகளும் புத்த சாசனத்தையும், நமது இனத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்....." "இதனைப் பார்த்துக் கொண்டு மகாநாயக்க தேரர்கள் வாளாவிருக்கக் கூடாது. 'இந்த ஆட்கள் இனிமேலும் நமது நாட்டை ஆட்சி செய்வதற்கு இடமளிக்க முடியாது' என்ற செய்தியை அவர்கள் மக்களுக்கு விடுக்க வேண்டும்" என்று ஆவேசத்துடன் பேசுகிறார் மட்டக்களப்பிலிருந்து சண்டித்தனம் செய்து கொண்டிருக்கும் அம்பிட்டியே சுமனரதன தேரர். 'இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்' என்ற விதத்தில் சமூக ஊடகங்களில் வாதப்பிரதிவாதங்கள் நிகழும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்திருக்கிறது. வடக்கிலும், தெற்கிலும் வருடாந்த போர் நினைவேந்தல் நிகழ்வுகள் வங்குரோத்து அரசியல்வாதிகளின் சுயநல அஜென்டாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான கருவிகளாக மாறி வெகு நாட்களாகிவிட்டன. இந்தப் பின்னணியில், ஜனாதிபதியின் உரைக்கு எதிராக வெகுண்டெழுந்திருக்கும் தென்னிலங்கையின் 'மாபெரும் தேசாபிமானிகளுக்கு' சவால் விடுக்கும் விதத்திலான ஓர் அங்கதக் குறிப்பு இது - "சிங்களவர்களின் வேண்டுகோளின் பேரில் இராணுவ சட்ட திட்டங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும் 'சிப்பாய்' (சொல்தாதுவா) என்ற சொல்லை நீக்கி விட்டு, 'ரணவிருவா' எனப் பெயரிடுவதற்கும், ரணவிரு நலன்புரிச் சேவைகளுக்கென ஒரு நிதியத்தை ஸ்தாபிப்பதற்கும் ஒவ்வொரு சிங்களப் பிரஜையிடமிருந்தும் வருடாந்தம் ரூ. 1000/- ரணவிரு நினைவேந்தல் வரி ஒன்றை அரவிடுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்". - பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரி மறுபுறம், வடக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் அரசியல் குறித்த சிவா முருகுப்பிள்ளையின் இந்த முகநூல் பதிவு முக்கியமானது - "...............மே 18, 2009 அன்று பல ஆயிரம் பொதுமக்களும் கொல்லப்பட்டது உண்மை. இந்தக் கொலைகளை இலங்கை ராணுவம் எவ்வளவு செய்ததோ அதற்கு எந்த வகையிலும் குறைவில்லாது புலிகளும் செய்தனர்." "இது ஒரு மிருகம் மக்களை கேடயமாக கைது செய்து. தம்மை காப்பாற்றிக் கொண்டு சென்று, இன்னொரு அரசு மிருகம் கொல்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த உச்ச பலி கொடுப்பு நிகழ்வு ஆகும்". "இந்தத் தேர்தலில் பிரதான நீரோட்டத்திலிருக்கும் அனைத்து 'தேசியம்' பேசும் தமிழ் கட்சிகளும் அன்று 'மனிதக் கேடயங்களை விடுவியுங்கள்' என்று குரல் கொடுக்கவில்லை". "மாறாக 'உள்ளுக்கை வரவிட்டு அடிப்பார்கள்' என்று கூறி உசுப்பேத்தியவர்கள்". "........கனடா போன்ற நாடுகள் தமது மண்ணில் வாழ்ந்த பூர்வீக மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்த நாடுகள். இவ்வாறான ஒரு நாட்டின் அரசியல் தலைவர்களிடமிருந்து எமது அரசியல் விடுதலையை தேடி நிற்கிறோம் என்பது எமது சமூகத்தின் அவலம்............." "உங்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியும், நினைவுச் சின்னங்களும் அழிந்த மக்கள் பற்றியதோ எதிர்காலம் நாசமாய் போன எங்கள் இனம் பற்றியதோ அல்ல. முழுக்க முழுக்க உங்களைப் பற்றியது". "அது வேண்டுமென்றால் உங்களுக்கான வாக்கு வங்கி சரிவடையாமல் பார்த்துக் கொள்ளலாம்." "தீர்வுகளை, அதிகாரப் பரவலாக்கத்தை நாங்கள் உள்ளுக்குள்ளே தான் போராடி, பேச்சுவார்த்தை நடத்தி தந்திரோபாயங்கள் மூலம் (கடந்த காலத்தில் தவறவிட்டது போல அல்லாது) பெற்றுக்கொள்ள வேண்டும்." ஒரே வரலாற்று நிகழ்வுக்கு இரு தரப்புக்கள் வேறு வேறு வியாக்கியானங்களை வழங்குவதை 'Contested Histories' என்று சொல்வார்கள். இலங்கையை பொருத்தவரையில் 1956 ஆட்சி மாற்றத்தையும், 30 ஆண்டு கால உள்நாட்டுப் போரையும் சிங்கள மற்றும் தமிழ் தரப்புக்கள் முற்றிலும் வேறுபட்ட கண்ணோட்டங்களில் நோக்கி வருகின்றன. 2009 முள்ளிவாய்க்கால் அவலத்தை தமிழர்கள் மாபெரும் இனப் படுகொலை என வர்ணித்து, அங்கு மரணித்தவர்களுக்கு வருடாந்தம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் அதே வேளையில், தெற்கு சிங்கள தரப்பு அதனை ஒரு வெற்றி விழாக் கொண்டாட்டமாக பெருமிதத்துடன் நினைவு கூர்ந்து வருகின்றது. ஆனால், இந்த ஆண்டு போர் வீரர்களை நினைவு கூரும் அரச வைபவத்தில் பங்கேற்று ஜனாதிபதி ஆற்றிய உரையையும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேசிங்க பாராளுமன்றத்தில் நிகழ்த்திய பின்வரும் உரையையும் போர் குறித்த தெற்கின் பார்வையில் ஒரு 'Paradigm Shift' ஏற்பட்டு வருவதைக் காட்டும் குறியீடுகளாக கருத முடியும் - ".....இதனை வெற்றி விழாவாக கொண்டாட முடியாது. அது ஒரு தரப்பினரின் மனதை புண்படுத்த முடியும். அதற்குப் பதிலாக, போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் ஒரு நிகழ்வாகவே அது இருந்து வருதல் வேண்டும்..........." ".........தெற்கு இளைஞர்களைப் போலவே, உண்மை மற்றும் நீதி என்பவற்றுக்கு குரலெழுப்பிய வடபுல இளைஞர்களும் வீரர்கள் ஆவார்கள் ......... தெற்கில் போலவே வடக்கிலும் இளைஞர்கள் மரணித்த பொழுது நாங்கள் கண்ணீர் வடித்தோம். எங்களிடம் துளியும் இனவாதமில்லை........... நாங்கள் அவர்களையும் நினைவு கூர வேண்டும்................ அதில் எந்தத் தவறுமில்லை." - அமைச்சர் கிரிசாந்த அபேசிங்க https://www.facebook.com/mlm.mansoor/posts/pfbid0MAZ5EBPAkVhDL6vVh7YV1QtA4avPLmscx71aHRBaWxm8NwLL82Q3e6SRYNrQTN8Al
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இங்கிலாந்து ஒரு ஆச்சரியமான குழுவாக (டெச்ட்) ல் தெரியவில்லை. இந்தியா ஒரு சவாலான போட்டியையே கொடுக்கும். இங்கிலாந்து ஒரு சராசரியான குழு. ஒரு வேளை போட்டி மைதானங்கள் சில சவாலை கொடுக்கலாம்.
-
தமிழீழ தேசிய இன விடுதலை போராட்டத்தின் தேசிய தலைவரின் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் பின்னால் ஒரு வரலாறு உண்டு
தமிழீழ தேசிய இன விடுதலை போராட்டத்தின் தேசிய தலைவரின் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் பின்னால் ஒரு வரலாறு உண்டு. அதே போன்று தான் இந்த புகைப்படத்திற்கும் பெரிய வரலாறு உண்டு. இந்த புகைப்படமானது 1987 ஜனவரி 6 ஆம் தியதி தொண்டமானாறு கெருடாவில் உள்ள விடுதலைப் புலிகளின் பேஸ் ஒன் எனும் முகாமில் 1987 ஜனவரி அன்று இரவு எடுக்கப்பட்டது. இதற்கு முன்பாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தேசியத் தலைவர் தமிழகத்தில் இருந்து வந்த நிலையில், கடைசியாக இந்தியாவில் இருந்து 1987 ஜனவரி 5ஆம் தியதி அன்று தான் புறப்பட்டு மாதகல் வழியாக யாழ்ப்பாணம் வந்தது குறிப்பிடத்தக்கது. தாயகம் திரும்பிய அன்றைய மறு தினமே இந்த முகாமிற்கு தலைவர் வருகை தந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் தளபதி கிட்டு தலைமையில் யாழ்குடா நாடு அன்று ஓரளவு கட்டுப்பாடு ஆக இருந்தது. இந்த முகமானது சிங்கள ராணுவ நிலைகளின் மிக அருகில் இருக்கும் ஒரு அபாயகரமான பகுதியில் இருந்த காவல் முன்னரங்கு நிலை முக்கிய முகாம்களில் ஒன்றாகும். தேசியத் தலைவர் அவர்கள் இந்த முகாமிற்கு வருகை தந்து, அனைவரிடமும் கதைத்து, கலந்துரையாடிக் கொண்டிருந்த பொன்னான தருணங்கள் ஆகும். சில மணி நேரங்களின் பின்பு எடுக்கப்பட்டது தான் இந்த புகைப்படம். இந்த புகைப்படத்தில் பாதி உருவத்தில் முன்னர் நின்று கொண்டிருப்பது வீரச்சாவடைந்த பூலோகம் ஆவார். அடுத்ததாக கைகட்டி கொண்டு நிற்பவர் வீரச்சாவடைந்த கேப்டன் அலன் ஆவார். அவரின் அருகில் நிற்பது வீரச்சாவடைந்த கேப்டன் மோரிஸ் ஆவார். பின்புறம் இருந்து எட்டி பார்த்துக்கொண்டு இருப்பவர் முதல் கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் ஆவார். அதேபோன்று வீரச் சாவடைந்த கேப்டன் வினோத் அவர்கள், வீரச் சாவடைந்த கேப்டன் விடுதலை அவர்களும் இப் புகைப்படத்தில் உள்ளனர். தேசிய தலைவரின் அருகில் காற்சட்டையுடன் நிற்பது வீரச்சாவடைந்த கிருபா அவர்கள். கிருபாவின் பின்னால் நிற்பது வீரசாவடைந்த மேஜர் கணேஷ் அவர்கள். கிருபாவின் அருகில் இருப்பது வீரச்சாவடைந்த சுந்தர் அவர்கள். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் கேப்டன் அலன் அவர்களும், கிருபா அவர்களும் 38 ஆண்டுகளுக்கு முன் இன்றைய இதே நாளில் தான் வடமராட்சி ஆபரேஷன் லிபெரேஷனில் கலந்து கொண்டு இதே அன்றைய நாள் அதிகாலையில் வீரச்சாவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தில் இருக்கும் ஓரிருவர்களைத் தவிர பெரும்பாலானவர்கள் வீரச்சாவடைந்த மாவீரர்கள். இந்த புகைப்படம் என்பது நமது தாயக வீர வரலாற்றின் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமான புகைப்படம் ஆகும். இவர்களின் வீரவரலாற்றின் வழியில் நமது மண்ணின் விடுதலைக்கான பயணம் தொடரும்
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
மிக குறுகிய காலத்தில் டெஸ்ட் போட்டியின் தலைவராக கில் வந்தது நம்ப முடியவில்லை. டெஸ்ட் போட்டியில் மிக்க அனுபவம் உள்ளவர்களையே பல நாட்டு குழுக்கள் உள்வாங்குகின்றன. இந்தியா ரி 20 போட்டிக்கு தெரிவு செய்த வீரர்கள் போல் தெரிவு செய்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. இந்தியா ஒரு பரீட்சாத்தமாக பார்க்கிறதா எனவும் எண்ண தோன்றுகிறது.
-
கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதற்காக ஹக்கீமும் அதாவுல்லாவும் பொது இணக்கப்பாடு!
அதாஉல்லாவை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க தீர்மானிக்கவில்லை! எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸ் தலைவரான ஏ.எல்.எம். அதாஉல்லாவை களமிறக்குவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பதாக சில ஊடகங்களில் வெளிவந்திக்கும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோருடன் எமது கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மையே. இந்தப் பேச்சுவார்த்தையில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பிலும் மற்றும் சில பொதுவான விடயங்களுமே பேசப்பட்டன. மேலும், முஸ்லிம் கட்சிகளுக்கிடையேயும் முக்கியஸ்தர்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. ஆனால், கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவைக் களமிறக்குவது குறித்தோ அதற்கு எமது கட்சி இணக்கம் தெரிவிப்பது தொடர்பிலோ இந்தச் சந்திப்பில் எதுவுமே பேசப்படவில்லை என்றும் மு.கா. செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார். https://seithy.com/breifNews.php?newsID=333796&category=TamilNews&language=tamil
-
1958ம் ஆண்டு தமிழர் இனக்கலவரத்தை நினைவுகூருதல்
Amirthanayagam Nixon அமரர் ஜேஆர், சந்திரிகா, மகிந்த சமரசிங்க, அமரர் மங்கள சமரவீர, ஜி.எல்.பீரிஸ், மிலிந்த மொறகொட மற்றும் ரணில் ஆகிய ஏழு பேரையும் நான் சிங்கள அரசியல்வாதிகளாக ஒருபோதும் எனது புவிசார் அரசியல் கட்டுரைகளில் குறிப்பிட்டது இல்லை. ஏனெனில், இந்த ஏழு பேரினதும், கட்சி அரசியல் வெவ்வேறாக இருந்தாலும், ”சுயநிர்ணய உரிமை” வடக்குக் கிழக்கை ”சிங்கள மயப்படுத்தல்” மற்றும் “தமிழ்த் தேசியம்” என்ற கோட்பாட்டை சிதைத்தல் போன்ற உத்திகளை வகுப்பதில் இவர்கள் சிறந்த இராஜதந்திரிகள். தமிழர் பகுதிகளில் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் ”இலங்கை இராணுவக் கட்டமைப்பு“ என்ற பொறிமுறையை இந்த ஏழு பேரும், காலத்துக்கு ஏற்ப பாதுகாத்தனர். தமிழர் பகுதிகளில் “இராணுவ பொறிமுறை“ நிர்வாகத்தை மொசாட் உதவியுடன் ஆரம்பித்தவர் ஜேஆர். 2009 இல் போரை வென்றது மகிந்தவாக இருக்கலாம். அந்த நேர புவிசார் அரசியல் சாதகமாகவும் இருந்திருக்கிறது. ஆனால்-- -- மேற்படி சுட்டிக்காட்டப்பட்ட அந்த ஏழுபேருமே சிங்கள உண்மையான பௌத்த தேசிய காவலர்கள். புலிகளை பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாதமே பிரச்சினை எனவும் மிக நுட்பமாக சித்தரித்து சர்வதேசத்தை நம்பவைத்தார்கள். புலிகளுக்கு எதிரான மனநிலையுள்ள ஆங்கிலம் தெரிந்த படித்த தமிழர்களை தமக்குச் சாதகமாக பயன்படுத்தியதும் இந்த ஏழு பேரும் தான். (அமரர் லக்ஸ்மன் கதிர்காமரின் சர்வதே விவகார அறிவுத் தரத்தை (Sophistication) மிக நுட்பமாக பயன்படுத்தியவர் சந்திரிகா) ஆனால் ஜேவிபி, சந்திரிகாவை தவிர ஏனைய ஆறு பேரையும் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் எனவும் இலங்கைத்தீவை பிளவுபடுத்தவுள்ளனர் என்று பொய்யான பரப்புரை மேற்கொண்டு, சிங்கள மக்களின் அனைத்துக் கவனத்தையும் திசை திருப்பியுள்ளனர். இந்த அறுவடைதான் தற்போதைய JVP - NPP அரசாங்கம். ஆனால் மேற்படி சுட்டிக்காட்டிய சிறந்த இராஜதந்திரிகள், JVP - NPP அரசாங்ககத்தில் இல்லை. ஆதரவாக இருக்கும் தமிழர்கள் சிலருக்கும், அந்தளவு நுட்பமான அறிவு இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால் சர்வதேச அரங்கில் ஏழு பேராலும், தமிழர்களுக்கு எதிராக வகுக்கப்பட்ட இராஜதந்திர வியூகங்களை JVP - NPP சாதகமாக பயன்படுத்த முற்படுகிறது. இராணுவ பொறிமுறை பரிந்துரைகள் மூலமே வடக்கில் ஐயாயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானி அறிவித்தல் கடந்த வாரம் வெளியானது. அம்பாறை உடந்தை முருகன் கோவிலுக்கு அருகில் அமைக்கப்பட்ட புத்தர் நிலையும் இந்த இராணுவ பொறிமுறை அறிவுறுத்தல் தான். 2024 நம்பவர் இடம்பெற்ற தேர்தலில் சஜித் அல்லது ரணில் ஜனாதிபதியாக வந்திருந்தாலும், இந்த வர்த்தமானி அறிவித்தலும் புத்தர் சிலை வைப்பும் நடத்துதான் இருக்கும். 1949 இல் கிழக்கு மாகாணம் கல்லோ குடியேற்றத் திட்ட செயற்பாட்டுக்கு 1983 இல் ஜேஆர் நுட்பமாக செதுக்கிய உத்தியின் வளர்ச்சிதான் இவை. இடையில் நடந்த 30 ஆண்டு கால போர் அதற்குத் தடையாக இருந்தது. ஆனால் 2009 மே மாததத்துக்குப் பின்னர், இலகுவாக சிங்கள மயப்படுத்தல் நடக்கிறது. அதுவும் 2015 நல்லாட்சி என்று தூக்கிப் பிடித்த மைத்தி - ரணி அரசாங்கம், தொல்பொருள் திணைக்களம், காணி திணைக்களம், வனஇலாக திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றின் மூலம் சட்டரீதியான முறையில் குடியேற்றங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது. 2009 இற்குப் பின்னர் இவை பற்றி விஞ்ஞான ரீதியாக விளக்கமளிக்க வேண்டியது யாருடைய பொறுப்பு? . அநுரகுமார அல்ல, ஜேஆர் காலத்தில் இருந்து வகுக்கப்பட்ட இராணுவ பொறிமுறை இயங்குகின்ற முறைமை பற்றிய விளக்கங்கள் முக்கியமானவை. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்.