-
Posts
52124 -
Joined
-
Days Won
38
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nunavilan
-
ரணில் விசேட உரை! முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (17) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக உரையாற்றுவது இதுவே முதல் தடவையாகும். இதன்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை குறித்து ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு வருவதில்லை எனவும் தீர்மானித்துள்ள நிலையில், பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.. https://tamil.adaderana.lk/news.php?nid=194466
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
nunavilan replied to விசுகு's topic in உறவாடும் ஊடகம்
-
தமிழகத்தில் மீண்டும் மிரட்டும் கொரோனா; 17 பேருக்கு தொற்று பாதிப்பு தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 12 நாட்களில் 17 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 4 பேர் உட்பட 12 நாட்களில் 17 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து நோய் தொற்று வேகமாக பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பலர் உயிரிழந்தனர். இதையடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா பரவல் குறைந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 11 ஆம் தேதி 67 பேரிடம் நோய் அறிகுறிகள் தென்பட்டதில் சோதனை மேற்கொண்டதில், சென்னை, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 4 பேர் உட்பட 12 நாட்களில் 17 பேர் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் இது குறித்து பயம் கொள்ள வேண்டாம் எனவும், தொற்று ஏற்பட்டால் ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை அணுக வேண்டும் எனவும் பொது சுகாதராத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/310699
-
மன்னார் காற்றாலை திட்டம் மீள்பரிசீலனை மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். காற்றாலை மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக இலங்கை அரசுக்கும் இந்திய அதானி நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (14) அழைக்கப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கலாநிதி அவந்தி பெரேரா இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இது தொடர்பான மனுக்கள் இன்று எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது. இந்த மனுக்கள் வனவிலங்கு மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம், சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் இன்று (14) அழைக்கப்பட்ட போது, அமைச்சரவை செயலாளர் மற்றும் எரிசக்தி அமைச்சர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கலாநிதி அவந்தி பெரேரா, இந்த மாதம் 7 ஆம் திகதி உத்தேச காற்றாலை மின் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார். இதன்படி, இலங்கை அரசுக்கும் இந்திய அதானி நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் மற்றும் மனுக்களில் உள்ளவற்றை கருத்தில் கொண்டு, உரிய திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்து, அதன் பிறகு முடிவு எடுக்கப்படும் என, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். தற்போதைய இடைக்கால அமைச்சரவையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் இது குறித்து எடுக்கப்படும் தீர்மானத்தை அறிவிப்பதற்காக திகதியை வழங்குமாறு கோரினார். அதுவரை திட்டத்தின் தற்போதைய நிலை அப்படியே தொடரும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு வாய்மொழியாக அறிவித்தார். இந்த விடயங்களுக்கு இணக்கம் தெரிவித்த மனுதாரர்களின் சட்டத்தரணிகள், அந்தந்த மனுக்களில் பிரதிவாதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் உத்தேச அமைச்சரவை உறுப்பினர்களை பிரதிவாதிகளாக நியமித்து மனுவில் திருத்தம் செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்க அவதானிப்புகள் இருப்பின் அவற்றை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=194417
-
வணக்கம் , சின்னகுட்டி தாசன்.
-
தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் மீட்பா….?அடவா….?
nunavilan replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
-
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடகிழக்கில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. அதன்பின்னர், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே கட்சியின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். தென்பகுதி மக்கள் தமக்குரிய தலைமையினை தெரிவு செய்துள்ளனர். கடந்த காலங்களில் தமிழ்த் தேசியம் என்ற நிலைமையினை தக்க வைத்து தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியிருந்தமையால் நாம் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை. இன்று தமிழ்த் தேசியம் சீரழிந்து சிதறடிக்கப்பட்டு மக்கள் கலங்கிய குளத்தில் நீந்துகின்ற மீன்களாக உள்ளனர். பல்வேறு சக்திகளாலும் எமது மக்களின் வாக்குகள் கவரப்படுகின்ற பரிதாப நிலை இன்று ஏற்ப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் ஒரே அணியாக திரண்டு ஈரோஸ் அமைப்பினூடாக போட்டியிடும் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார். குறித்த ஊடக சந்திப்பில் கட்சியின் செயலாளர் எ.இ.ராசநாயகம் மற்றும் தலைவர் துஸ்யந்தன், கட்சியின் முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். https://www.pathivu.com/2024/10/euros49949.html தமிழர் பகுதிகளில் தனித்து போட்டியிட போவதாக ஈரோஸ் அறிவிப்பு! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று (05.10.2024) இடம்பெற்றுள்ளது. அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே கட்சியின் செயலாளர் எ.இ.ராசநாயகம் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/eealavar-jananayaga-munnani-in-coming-election-1728160954#google_vignette
-
டேவிட் ஐயா பற்றிய சில நினைவுகள்..... டேவிட் ஐயா கிளிநொச்சியில் காலமானார் என்ற செய்தியைக்கேட்டபோது அவரது பெருமைமிகு வாழ்வையெண்ணி மனது அசை போட்டது. தன் சொந்த நாட்டில் அவர் ,மறைந்தது ஒருவித நிறைவினைத்தந்தது. ஒரு காலத்தில் சர்வதேசரீதியாகப்புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கியவர் டேவிட் ஐயா என அன்பாக அழைக்கப்பட்ட எஸ்.ஏ.டேவிட் (சொலமன் அருளானந்தம் டேவிட் ) அவர்கள். அவர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சமயம் அவர் தங்கியிருந்த கொழும்பு Y.M.C.A கட்டடம் அவரால் வடிவமைக்கப்பட்ட கட்டடங்களிலொன்று என்பதால், அதன் காரணமாக அந்த நிறுவனத்தால் அவர் இருக்கும் வரையில் அங்கு தங்கியிருப்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். யாழ் பல்கலைக்கழக நூல் நிலையக்கட்டடம் அவரது வடிவமைப்பில் உருவான கட்டடங்களிலொன்று என்றெண்ணுகின்றேன். இவரைப்பற்றி நான் விரிவாக அறிந்து கொண்டது எண்பதுகளின் ஆரம்பத்தில் மருத்துவர் ராஜசுந்தரம் மூலம்தான். மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்தினர் அக்காலகட்டத்தில் காந்தியம் அமைப்புடன் இணைந்து தன்னார்வத்தொண்டினை ஆற்றிவந்தார்கள். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்த நாவலர் பண்ணைக்கு மருதோடை என்னுமிடத்திலிருந்து இலகுவாகச்செல்வதற்கேற்ற வகையில் பாதையொன்றை உருவாக்குவதும் அத்தொண்டுகளிலொன்று. அதற்காக வார இறுதி நாள்களில் மாணவர்கள் பலர் செல்வதுண்டு. அவ்விதம் செல்லும் சமயங்களில் புகைவண்டி வவுனியாவை அடைய நள்ளிரவாகிவிடும். வவுனியாவில் இறங்கி மருத்துவர் இராஜசுந்தரத்தின் வீட்டில் தங்கி, மறுநாள் காலை அவரது ஜீப்பில் நாவலர் பண்ணைக்குச்செல்வது வழக்கம். செல்லும் வழியெல்லாம் இராஜசுந்தரம் அவர்கள் வாய்க்கு வாய் டேவிட் ஐயா என்று கூறிக்கொண்டே அவரது சேவைகளைப்பற்றிக்கூறிக்கொண்டு வருவார். அப்பொழுதுதான் விரிவாக அவரைப்பற்றி அறிந்து கொண்டது. அதற்கு முன்னர் சில தடவைகள் அவரைப்பற்றிக்கேள்விப்பட்டிருந்தாலும் அவராற்றும் பல்வகையான சேவைகளின் தன்மையினை அறிந்திருக்கவில்லை. பல வருடங்களின் முன்னரே அவர் வன்னிப்பிரதேசத்தில் பண்ணைகளை வாங்கி இயக்கி வந்ததாக அறிந்தேன். 77 இனக்கலவரத்தைத்தொடர்ந்து மலையகத்திலிருந்து வன்னி நோக்கிப்புலம்பெயர்ந்த அகதிகளை இரு கரம் நீட்டி வரவேற்றது காந்தியம் அமைப்பே. அவ்விதம் வரும் அகதிகளைக்குடியேற்றி, அவர்களுக்கு விவசாயம் செய்வதை விளங்கப்படுத்திச் சொந்தக்கால்களில் நிற்க வைப்பதுதான் காந்தியம் அமைப்பின் பிரதான நோக்கம். அதற்காக அவ்விதம் அமைக்கப்படும் குடியேற்றத்திட்டங்களுக்கு அறிவு போதிக்கும், உதவி புரியும் மாதிரிப்பண்ணைகளாக விளங்கிய பண்ணைகளிலொன்றே நாவலர் பண்ணையும். இங்கு நியாய விலையில் குழந்தைகளுக்கான திரிபோஷா மா போன்ற பொருள்கள் வழங்கப்பட்டதுடன், குழந்தைகளைப்பராமரிக்கு வசதிகளும் ஏற்படுத்தித்தரப்பட்டன. அப்பண்ணைகளில் விவசாயம் செய்வதில் அக்குடியேற்றவாசிகளைப்பங்கு பற்ற வைப்பதன் மூலம் அவர்களுக்கு விவசாய அறிவினைப்போதிப்பதுதான் அம்மாதிரிப்பண்ணைகளின் நோக்கமாகவிருந்தது. இப்பண்ணைகள் பற்றிய அறிவு எனக்கு டேவிட் ஐயா மீதான மதிப்பினை அதிகரிக்கவே வைத்தது. திருமணமாகாத அவர் தன் வாழ்க்கையினை ஈழத்தமிழர்களின் நலன்களுக்காகவே அர்ப்பணித்திருந்தார். அவர் நினைத்திருந்தால் அவரது கட்டடக்கலை அறிவுக்கும், அனுபவத்துக்கும் வெளிநாடுகளில் ஏன் இலங்கையிலேயே சீரும் சிறப்புமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவரோ தான் உழைத்ததையெல்லாம் காந்திய அமைப்புக்கே செலவிட்டார். இவரைச் சில தடவைகள் சந்தித்திருக்கின்றேன். ஆனால் கதைத்ததில்லை. நகர அதிகார சபையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயம் இவர் தனது கட்டட வரைப்படங்களுடன் , அனுமதி வேண்டி வந்திருப்பதைக்கண்டிருக்கின்றேன். அப்பொழுதுதெல்லாம் வெள்ளை நிற 'சேர்ட்டு'டன் கால்களில் வெறும் செருப்புடன் தான் வருவார். இப்பொழுதும் ஞாபகத்திலிருக்கிறது. இன்னுமொரு தடவை டேவிட் ஐயாவின் மீது பெரு மதிப்புக்கொண்ட கட்டடக்கலைஞர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரூடாக ஒரு சில தொழில்ரீதியான உதவிகளை நானும், நண்பரொருவரும் செய்திருக்கின்றோம். ஆனால் அப்பொழுதும் நேரில் அவரைச்சந்திக்கவில்லை. அக்காலகட்டத்தில் காந்தியம் அமைப்பானது தமீழீழ மக்கள் விடுதலைக்கழகத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்ததன் காரணமாக இலங்கை அரச படைகளின் கவனம் அவ்வமைப்பின் மீதும் விழுந்தது. அதன் விளைவாகவே மருத்துவர் ராஜசுந்தரம், டேவிட் ஐயா, அண்மையில் கனடாவில் மறைந்த சண்முகலிங்கன் போன்றவர்களெல்லாரும் கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். பின்னர் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்திலேற்பட்ட மாற்றங்கள் காரணமாக அவரது வாழ்க்கை நீண்ட காலம் தமிழகத்தில் கழிந்தது. தமிழர் உரிமைகள் விடயத்தில் இறுதி வரையில் அவர் தன் கருத்துகளில் தெளிவாக இருந்தததை அவ்வப்போது பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் வெளிவரும் செய்திகள் மூலம் அறிய முடிந்தது. ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் காந்தியம் அமைப்பின் பங்களிப்பும் முக்கியமானது. முக்கியமாக அகதிகள் புனர்வாழ்வுக்காக அவ்வமைப்பு வட, கிழக்கில் ஆற்றிய சேவை போற்றப்பட வேண்டியதொன்று. மலையகத்தமிழர்களையும் வட, கிழக்கில் குடியேற்றி அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்க முற்பட்ட செயலானது தீர்க்கதரிசனம் மிக்கவொன்றாக அச்சமயம் தோன்றியது. ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் காந்தியம் அமைப்பின் பங்களிப்பை எவ்விதம் மறைக்கவோ, ஒதுக்கவோ முடியாதோ அவ்விதமே டேவிட் ஐயாவின் பங்களிப்பினையும் மறைக்கவோ, ஒதுக்கவோ முடியாது. தன் வாழ்வையே ஈழத்தமிழர்களின் நல் வாழ்வுக்காக அர்ப்பணித்தவர் அவர். அவரைப்பற்றி வரலாறு சரியாகவே இனங்கண்டு , நினைவு கூரும். Navaratnam Giritharan
- 1 reply
-
- 2
-
விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
nunavilan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நாலாவது விரல் -
பாடல்: மனசிலாயோ படம்: வேட்டையன் இசை: அனிருத் பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், யுகேந்திரன் வாசுதேவன், அனிருத், டிப்தி சுரேஸ் வரிகள்: சுப்பர் சுபு, விஸ்ணு எட்வன்
-
Nixson Baskaran Umapathysivam is with Manoranjan Selliah and 3 others வடக்கு மாகாண ஆளுநர் நியமனமும் JVP/NPP இன் தேர்தல் வியூகமும் இரண்டல்ல; இதை JVP/NPP யாழ் அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரின் அண்மைய காணொளியில் தெளிவாகச் சொல்லியிருந்தார். ஜனாதிபதித் தேர்தல் கால மனநிலையைத்தான் JVP/NPP இந்தப் பொதுத்தேர்தலிலும் கொண்டிருக்கிறது. தொங்கு பாராளுமன்றம் அமைகிற பொழுது யார் யாருடன் உடன்பட்டுப் போகலாம் என்பதையே இராமலிங்கம் சந்திரசேகர் அக்காணொளியில் விளக்கியிருந்தார். வடக்கு ஆளுநராக NPP அரசினால் நியமிக்கப்பட்டிருக்கும் நாகலிங்கம் வேதநாயகன், தமிழரசுக்கட்சி சார்பு நிலையையும் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டு அரசியலைப் பின்னணியாகக் கொண்டவர். இவரது நியமனத்தில் உள்ள அரசியலைச் சொல்கிற சில பதிவுகளில் முன்னைய ஆட்சியின் பங்குதாரர்களின் நெருக்குவாரத்தில் விருப்பு ஒய்வுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டதென்பது யாழ்மைய எதார்த்த அரசியலாக இருந்ததில் மறுப்பதற்கில்லை. முன்னைய ஆட்சியாளர்களினால் நியமிக்கப்பட்டிருந்த வடக்கு ஆளுநர்கள், ஆட்சியாளர்களின் யாழ்மைய தம்முடைய அரசியல் குத்தகைக்காரர்களின் மனவிருப்பத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டிருந்தது. இது பெரும் கூட்டு ஊழலுக்கு வழி செய்ததான கருத்து உண்டு. JVP/NPP க்குப் பலமான கட்டுமானமும் வாக்குகளும் இல்லாதினால் பெருவாரியாக பாராளுமன்ற ஆசனங்களைப் பெறும் என்கிற நம்பிக்கையை வைத்திருக்கும் கனவான் அரசியல்வாதிகளான தமிழரசுக்கட்சியைப் பலப்படுத்த/வலுப்படுத்த மறைமுகமாக நகர்த்தப்பட்ட அரசியல் காய் நகர்த்தலே வடக்கு ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் நியமனமாகும். குத்துமதிப்பாகத் தமிழரசுக்கட்சிக்குள் மட்டுமல்லாது தமிழ்த்தேசியத் தலைமையை சம்பந்தனுக்குப் பின்னாடி சுமத்திரன் நெருங்கியிருப்பதையே தமிழரசுக்கட்சிக்குள் அகவயமாக முன்னெடுக்கப்படும் களையெடுப்பாகும். கிட்டதட்ட தமிழரசுக்கட்சி சுமத்திரனின் சுற்றி வழைப்புக்குள் இருக்கிறது. இந்த சுமத்திரனின் ஊடறுப்புத் தாக்குதலுக்கான பக்க பலத்தை JVP/NPP/அநுரா அரசு, வழமையான ஆளுங்கட்சிகளைப்போலவே வழங்குகிறது?
-
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்; சுமந்திரன் நம்பிக்கை
nunavilan replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
M. A. Sumanthiran 5h · 2024 இல் தமிழ்த் தேசியம் தேவையா? இந்த நாட்டுக்கு வயது எத்தனையோ, அத்தனை வயது தமிழரசுக் கட்சிக்கும் உண்டு. அன்றிலிருந்து இன்று வரை தமிழர் தம் சுயாட்சிக்கான ஓயாத அரசியற் குரலாகத் தமிழரசுக் கட்சி ஒலித்து வந்திருக்கிறது. இன்று எம் மக்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. போரின் பின்னான இந்தப் 15 ஆண்டுகளில் தனித்த தமிழ் அரசியலால் விளைந்த நன்மைகள் என்ன? தமிழ்த் தேசியம் இன்றும் அவசியமானதா? தென்னிலங்கையில் மக்கள் ஏற்படுத்தியிருக்கும் அரசியல் மாற்றத்தில் நாமும் இணைந்து கொண்டால் என்ன? போன்ற கேள்விகளை எமது மக்கள் பலர் கேட்கிறார்கள். இந்த நிலைக்கு மக்கள் வந்திருப்பதற்கு போரின் பின்னான தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் நாம் கண்ட மறுதலிக்க முடியாத கோளாறுகள் பலவும் காரணம் என்பது நிதர்சனம். இதற்கு இந்த அரசியல் வெளியில் பயணித்து தவறியவர்களுக்கும், அப்படிப்படவர்களைக் கிரமமாக அப்புறப்படுத்தத் தவறியவர்களுக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. நிற்க, தமிழ்த் தேசிய அரசியலுக்கு இன்றும் தேவைப்பாடு இருக்கிறதா என்ற கேள்வியை மாற்றம் வேண்டும் மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டிய கடைப்பாடு இருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அல்லது மக்கள் விடுதலை முன்னணியோடு ஊழல் எதிர்ப்பு, அரசியல் கலாச்சார மாற்றம், சட்டத்தின் முன் சமவுரிமை என்ற விடயங்களில் தமிழரசுக் கட்சிக்கு உடன்பாடுண்டு. அந்த விடயங்களிலே நாம் அந்தக் கட்சியின் அரசாங்கத்தோடு ஒத்துழைப்போம். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் சிறுபான்மைகள் தொடர்பான நிலைப்பாடுகள் மாற வேண்டும். எண்ணிக்கையில் சிறிதான மக்கள் கூட்டங்களுக்குப் பெரும்பான்மை மக்களது அரசியல் அபிலாசைகளைத் தாண்டிய, பிரத்தியேகமான அரசியல் அபிலாசைகள் இருக்கின்றது என்பதை அந்தக் கட்சி வெளிப்படையாக ஏற்க, குறிப்பாக சிங்கள மக்களிடையே சொல்ல இன்றும் தயங்கி வருகிறது. ஊழலற்ற இலங்கை என்பது மட்டும் தமிழர் எம் அரசியற் பிரச்சினைக்குத் தீர்வாகிவிடாது. தமிழர்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளைத் தாண்டி ஆளும் கட்சிக்குப் கணிசமான வாக்குகளைச் செலுத்துவதென்பது, தமிழர்களுக்குத் தேசியப் பிரச்சினை ஒன்றில்லை என்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுவான நிலைப்பாட்டை மெய்ப்பிப்பதாகவே அமையும். அனுர குமார திசானாயக 2015-2017 வரை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் வரையப்பட்ட புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதாகச் சொல்லியிருக்கிறார். தமிழ்த் தேசிய வெளியிலிருந்து தமிழ் வாக்குகள் அகல்வது, அந்த அரசியலமைப்பு நிறைவேற்றல் நடவடிக்கையில் தமிழரது அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவைப்பாட்டை நீர்த்துப் போகப்பண்ணும். இந்தத் தேர்தலில் 2024 இல் தமிழ்த் தேசிய அரசியல் அவசியமா என்ற கேள்விக்குப் மக்கள் சொல்லும் பதில் கனதியானது. அந்தப் பதில் தீர்க்கமான “ஆம்” ஆக இருக்க வேண்டும். இல்லாது போனால் எமது பிரதேசங்களில் (எமது ஆட்புலத்தில்), எமது வாழ்வாதாரத்தை (எமது ஆதாரத்தை), நாமே ஆளுகை செய்யும் எமது நீண்ட கால அரசியல் போராட்டத்தின் அடிப்படைகளையே கேள்விக்குட்படுத்துவதாய் வந்து முடியும். இதனாற் தான் வேட்பு மனுத்தாக்கிய கையோடு இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவின் சிலைக்கு நாம் மாலை அணிவித்தோம். நாம் அன்றும் இன்றும் ‘தமிழ் அரசு’க் கட்சி.  -
இலங்கையில் எம்.பி-க்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்? இரா.செந்தில் கரிகாலன் 6 Min Read தெற்காசியாவிலேயே மிகச்சிறந்த ஜனநாயகத் தேர்தல் என்று அரசியல் நோக்கர்களால் சொல்லப்படுகிற நடைமுறை கொண்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. Published:05 Aug 2020 12 AMUpdated:05 Aug 2020 12 AM இலங்கை நாடாளுமன்றம் கொரோனாவால் இரண்டு முறை தள்ளிவைக்கப்பட இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக 2.17 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அந்த நாட்டில்,1.62 கோடிப்பேர் வாக்களிக்கத் தகுதியடையவர்களாக இருக்கிறார்கள். அதிகமான வாக்காளர்களை, (17,85,964) ஹம்பகா தேர்தல் மாவட்டம் கொண்டுள்ளது . மிகக் குறைந்த வாக்காளர்களை, (2,87,024) வன்னி தேர்தல் மாவட்டம் கொண்டுள்ளது. நாடு முழுவதும்,12,984 வாக்களிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் சார்பில் 3,652 பேரும் சுயேட்சை குழுக்கள் சார்பில் 3,800 பேரும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். 75,000 போலீஸார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு அங்கு குறைவுதான் என்றாலும், மக்கள் சமூக இடைவெளியுடன் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்களிப்பு மையங்களை அதிகரிப்பட்டுள்ளன. வாக்களிக்கும் நேரமும் ஒருமணிநேரம் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றம் இலங்கை பாராளுமன்றத்துக்கு ஒட்டுமொத்தமாக 225 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களில், 196 பேர் வாக்களிப்பின் மூலமாகவும், 29 பேர் தேசியப் பட்டியல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தியாவைப் போல, அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி, குறைந்த வாக்குகள் பெற்றவர் தோல்வி என்கிற நடைமுறை இலங்கையில் இல்லை. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவப் படியே உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுகின்றனர். அதன்படி, ஒரு கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் ஒட்டுமொத்தமாகப் பெற்ற வாக்குகளின் அடிப்படையில், அந்தக் கட்சிக்கு உறுப்பினர் இடம் ஒதுக்கப்படும். இலங்கையில் 1978-ம் ஆண்டில் புதிய அரசியல் சாசனம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதன் ஒரு பகுதியாக தேர்தல் நடைமுறைகளும் இப்படி மாறிவிட்டன. தெற்காசியாவிலேயே ஜனநாயகமான மிகச்சிறந்த தேர்தல் முறையாக இலங்கையில் பின்பற்றப்படும் தேர்தல்முறை கருதப்படுகிறது. அதுகுறித்து, விரிவாகப் பார்ப்போம். இலங்கையில் ஒட்டுமொத்தமாக, 9 மாகாணங்களும், 25 மாவட்டங்களும் உள்ளன. ஆனால், தேர்தலுக்காக இவை, 22 மாவட்டங்களாகப் பிரிக்கப்படும். இப்படிப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 160 தேர்தல் தொகுதிகள் இருக்கும். அதோடு ஒரு மாகாணத்துக்கு கூடுதலாக, 4 உறுப்பினர் என்கிற வகையில் மொத்தமுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு 36 பேர் என ஒட்டுமொத்தமாக 196 பேர் தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களில் இருந்தும், மக்கள் தொகைக்கேற்ப உறுப்பினர் இடங்கள் இருக்கும். குறைந்தபட்சமாக திரிகோணமலை மாவட்டத்தில் இருந்து நான்கு உறுப்பினர்களும் அதிகட்சமாக கொழும்பு மாவட்டத்தில் இருந்து 19 உறுப்பினர்களும் தேர்தெடுக்கப்படுகின்றனர். தேர்தல் மாவட்டங்கள் நம் நாட்டைப் போல, ஒரு தொகுதியில் ஒரு கட்சியின் சார்பாக ஒருவர்தான் போட்டியிட முடியும் என்கிற நடைமுறையும் அங்கு இல்லை. உதாரணமாக, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து, 7 உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுகின்றனர். ஆனல், இந்த மாவட்டத்தில் ஒரு கட்சியில் இருந்தே 10 பேர் போட்டியிடலாம். பத்துக்கும் குறைவாக உள்ள உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்ட மாவட்டங்களில், 3 பேர் கூடுதல் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். பத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் மாவட்டங்களில், ஆறு பேர் கூடுதல் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். உதாரணமாக, திரிகோணமலை மாவட்டத்தில், ஏழு வேட்பாளர்களையும், கொழும்பு மாவட்டத்தில் 22 வேட்பாளர்களையும் ஒவ்வொரு கட்சி/சுயேச்சை குழுக்கள் சார்பில் நிறுத்தவேண்டும். தேர்தல் நடைமுறை: ஒரு வாக்குச் சீட்டில் மேலே கட்சிகளின் பெயர்கள் வரிசையாக இடம் பெற்றிருக்கும். அதில் நமக்கு விருப்பத்துக்குரிய கட்சிக்கு வாக்களிக்கலாம். அடுத்ததாக, அதே வாக்குச் சீட்டின் கீழ்ப்பகுதியில், தாம் ஆதரித்த கட்சியின் சார்பில் அந்தத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் தாம் விரும்பும் மூன்று பேருக்கு விருப்பு வாக்கையும் அளிக்க முடியும். ஆனால், இது கட்டாயமல்ல. அதாவது, தான் விரும்பும் கட்சிக்கு மட்டுமல்லாது, அந்தக் கட்சிக்குள்ளும் யாரை உறுப்பினராகக் கொண்டு வரவேண்டும் என்பதையும் மக்களே தேர்வு செய்யும் ஜனநாயகமும் இலங்கை தேர்தல் நடைமுறையில் உண்டு. கீழே உள்ள வாக்குச்சீட்டு யாழ் தேர்தல் மாவட்டத்துக்கானது. ஏழு உறுப்பினர்களைக் கொண்ட இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் பத்துபேர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்று முதல் பத்து வரை ஒரு எண் வழங்கப்படும். வேட்பாளர்கள் `நான் இந்தக் கட்சி, என் எண் இது’ என்று சொல்லித்தான் வாக்கு சேகரிப்பார்கள். வாக்களிக்கும்போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கும் ஒருவர், கீழே உள்ள பத்து இலக்கங்களில் அகில இந்தியக் காங்கிரஸில் தங்களின் விருப்பத்துக்குரிய 3 வேட்பாளர்ளை டிக் செய்து தேர்வு செய்ய முடியும். யாழ்ப்பாண தொகுதி வாக்குச் சீட்டு எழுச்சி முகநூல் பக்கம் தேர்தல் முடிந்தவுடன் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். வாக்கு எண்ணிக்கை கணக்கீடுகள் எல்லாம் ஒரு தேர்தல் மாவட்டம் என்கிற அளவில்தான் நடைபெறும். ஒரு மாவட்டத்தில், முதலில், அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்படும். பிறகு சுயேட்சைக் குழுக்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பின்னர் பதிவான வாக்குகளில் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள்/சுயேச்சைக் குழுக்கள் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள். அந்த வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டு மீதமுள்ள வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அடுத்ததாக, ஒரு மாவட்டத்தில் எந்தக் கட்சி/சுயேச்சை அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்களோ, அவர்களுக்கு ஒரு இடம் முதலில் வழங்கப்பட்டுவிடும். உதாரணமாக, ஆறு உறுப்பினர்களைத் தேர்வு செய்யவேண்டிய ஒரு தேர்தல் மாவட்டத்தில் 1 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். 5 சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளாக, கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற 10,000 வாக்குகள் என வைத்துக்கொண்டால் அந்த வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கபப்டும். மீதமுள்ள 90,000 வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதில், கட்சி (அ) 17,000 வாக்குகள், கட்சி (ஆ) 38,000 வாக்குகள், கட்சி (இ) 15,000, கட்சி (ஈ) 20,000 வாக்குகள் பெறுகிறார்கள் என வைத்துக்கொண்டால் முதலில், 38 ஆயிரம் வாக்குகள் பெற்ற கட்சி (ஆ) வுக்கு ஒரு உறுப்பினர் வழங்கப்பட்டுவிடும். மீதமுள்ள, 5 இடங்களை ஒட்டுமொத்த வாக்குகளான 90 ஆயிரத்தை வகுக்க, 18,000 வரும். இதுதான் ஒரு உறுப்பினரைத் தேர்தெடுக்கத் தேவையான வாக்குகள். அதன்படி, முதல் சுற்றில் கட்சி (அ) வுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. கட்சி (ஆ) வுக்கு இரண்டு இடங்கள் கிடைக்கும் (மீதம் 2000), கட்சி (இ) வுக்கும் ஒரு இடம் கூட கிடைக்காது. கட்சி (ஈ) வுக்கு ஒரு இடம் கிடைக்கும் (மீதம் 2000). ஒட்டுமொத்தமாக உள்ள 5 இடங்களில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டன. இப்போது மீதமிருக்கும் 2 இடங்களுக்கான தேர்வு. யாழ்ப்பாணம் 2015 தேர்தல் முடிவுகள் இப்போது, கட்சி (அ) 17,000 வாக்குகளுடனும், கட்சி (ஆ) 2,000 வாக்குகளுடனும், கட்சி (இ) 15,000 வாக்குகளுடனும் கட்சி (ஈ) 2,000 வாக்குகளுடனும் இருப்பார்கள். இதில் அதிகமான வாக்குகளை வைத்திருக்கும் கட்சிகளுக்கு அந்த இடம் ஒதுக்கப்படும். அதன்படி கட்சி (அ) வுக்கும், கட்சி (இ) வுக்கும் ஒவ்வொரு இடங்கள் கிடைக்கும். இறுதியாக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் என்று முடிவான பிறகு, அந்தக் கட்சிகளின் சார்பில் விருப்ப வாக்குகள் எந்த வேட்பாளருக்கு என்று பார்க்கப்படும். அந்தப் பட்டியலின் அடிப்படையில், அந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் கிடைத்துள்ளனவோ அதற்கேற்ற வகையில் மேலிருந்து கூடுதலாக வாக்குகள் பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதேபோல 29 தேசிய இடங்கள் தேர்வு செய்யும் முறையைப் பார்ப்போம். இலங்கையில் ஒட்டுமொத்தமாக, 1.62 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில், 1.5 கோடிப்பேர் ஒட்டுமொத்தமாக வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அது அப்படியே 29 ஆல் வகுக்கப்பட்டால், 5,17,241 வாக்குகள் வரும். ஒவ்வொரு கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகளில் இதை வகுக்க எவ்வளவு வருகிறதோ அவ்வளவு இடங்கள் ஒவ்வொரு கட்சி/சுயேச்சைக் குழுக்களுக்கு ஒதுக்கப்படும். அதற்குப் பிறகும் இடங்கள் மீதமிருந்தால், மேலே குறிப்பிட்டதைப் போல, அதிக வாக்குகளைப் பெற்றவர்களுக்கு மேலிருந்து கீழ் வரிசையில் ஒதுக்கப்பட்டு அனைத்து இடங்களும் நிரப்பப்படும். இன்று மாலையில் இருந்தே வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கிவிடும். வாக்குகளை எண்ண, 71 வாக்கு எண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர் பகுதிகளான வடக்கு கிழக்கில், ஒட்டுமொத்தமாக 29 உறுப்பினர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். பெரும்பான்மையான இடங்கள் சிங்களப் பகுதிகளில் இருந்தே தேந்தெடுக்கப்படுவதால், சிங்களக் கட்சிகளுக்கிடையேதான் பிரதான போட்டி இருக்கும். இதுவரை ராஜபக்சேவின் அணிக்குத்தான் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான, ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுற்றிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்த, சஜித் பிரேமதேசா, ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் தனி அணியாகி, சிறுபான்மை முஸ்லிம் மற்றும் தமிழ்க் கட்சிகளை இணைத்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்திக்கிறார். சிங்களக் கட்சிகள் மட்டுமல்ல, தமிழ்க் கட்சிகளும் பல பிரிவுகளாக நின்றே தேர்தலைச் சந்திக்கின்றன. தமிழ்த்தேசிய கொள்கையுடைய கட்சிகளே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என மூன்று அணிகளாகப் பிரிந்து தேர்தலைச் சந்திக்கின்றன. சண் மாஸ்டர் இந்தத் தேர்தல் குறித்து, சென்னையில் வசிக்கும் ஈழத்தை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் பேசும்போது, ``இராஜபச்சே குடும்பத்தைப் பாதுகாத்து இன்று கோத்தபாய இலங்கையின் அதிபராக வருவதற்கான சூழ்நிலையை சம்பந்தர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உருவாக்கிய சூழலில் இந்தத் தேர்தல் எம் மக்கள் முன் வந்துள்ளது. இனப்படுகொலைக்கு நீதியைப் பெறவும், பொதுவாக்கெடுப்பின் வழி அரசியல் தீர்வு காண வேண்டும் என்று தமது தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளவர்களைத்தான் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்ய வேண்டும். அதுவே இலங்கை தீவில் தமிழர்களின் இருப்புக்கும் வாழ்வுக்கும் உதவும்'' என்றார் அவர். தொடர்ந்து, ஜெனிவாவிலிருந்து, மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ பேசும்போது, ``கடந்தகாலத் தேர்தல்களில் தமிழர்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற தமிழ் அரசியல்வாதிகள் இணக்க அரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களைப் பலி கொடுத்து, தமிழின அழிப்பை பன்னாட்டு சமூகத்துக்கு எடுத்துச் சொல்லத் தவறிவிட்டனர். இனி வரும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களாவது தமிழர் நலன் கருதி தமிழ் உணர்வுடன் செயல்பட வேண்டும். தமிழ்த் தேசியத்துக்கு எதிர்த்திசையில் நின்று தமிழ் மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும், நீதிக்கான செயற்பாடுகளையும் கடந்தகாலங்களில் இருந்து இன்றுவரை கொன்றழித்தவர்களையும், சிங்களப் பேரினவாத கட்சிகளையும் அவர்களின் அடிவருடிகளான ஒட்டுக் குழுக்களையும் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும். அடுத்ததாக, தமிழின அழிப்பு குறித்து தமிழ்நாடு சட்டசபையிலும், இலங்கை வடக்கு மாகாண சபையிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பன்னாட்டுப் பாராளுமன்றங்கள் மத்தியில் நாம் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழின அழிப்பு, மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் புரிந்த பேரினவாத இலங்கை அரசும் அதன் அரசியல் தலைவர்களும், இராணுவத் தலைவர்களும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்'' என்கிறார் அவர். பொஸ்கோ பொதுவாக இலங்கையில் அதிபர் தேர்தலோ, பிரதமர் தேர்தலோ, தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களக் கட்சிகளுக்குக்கான சிங்களர் ஒருவரை அதிபராகவோ, பிரதமராகவோ தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாகத்தான் இருக்கும். மாகாண சபைத் தேர்தல்கள் மட்டுமே தமிழருக்கான குறைந்தபட்ச அதிகாரத்துக்கான தேர்தலாக இருக்கும். ஆனால், இந்தத் தேர்தலில் பெரும்பான்மை என்பதைத்தாண்டி, மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பெற்றுவிட வேண்டும் என்பதே ராஜபக்சே சகோதரர்களின் எதிர்பார்ப்பு. அப்போதுதான், ஜனாதிபதிக்கு இருந்த அளவு கடந்த அதிகாரத்தைக் குறைக்க, மைத்திரிபால சிரிசேனா ஆட்சியில் செய்யப்பட்ட 19-வது சட்டத்திருத்தத்தை மாற்ற முடியும். அதற்காகவே கொரோனாவை இராணுவத்தின் துணைகொண்டு ஒழித்த கையோடு தேர்தலையும் நடத்திவிடத் துடித்தார்கள்... அவர்கள் விருப்பப்படி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பெறுகிறார்களா, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத் தமிழ் மக்களின் ஆதர்ச அரசியல் அமைப்பாக இருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக களமிறங்கியிருக்கும் அணியினரை தமிழ் மக்கள் தேர்தெடுத்திருக்கிறார்களா என்பது நாளை அல்லது நாளை மறுநாள் தெரிந்துவிடும்." என்றார். https://www.vikatan.com/government-and-politics/a-detailed-explainer-for-sri-lankas-parliamentary-electoral-process
-
திருகோணமலை மாவட்டத்தில் 4 உறுப்பினர்கள் தெரிவுக்கு 217 வேட்பாளர்கள் போட்டி -03 கட்சிகள், 03 சுயேச்சைக் குழுக்கள் நிராகரிப்பு திருகோணமலை மாவட்டத்தில் 04 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக களத்தில் 17 கட்சிகளின் சார்பில் 119 வேட்பாளர்களும், 14 சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 98 வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். அத்துடன் இம்முறை கட்சிகள் பல பிரிந்து புதிய அணிகளாக போட்டியிடுவதால் மாவட்டத்தில் கடும் போட்டி நிலை உருவாகியுள்ளது. 20 கட்சிகள் வேட்புமனுவை கையளித்த போதும் அவற்றில் 03 கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன், 03 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. திருகோணமலை தினகரன் நிருபர் https://www.thinakaran.lk/2024/10/12/breaking-news/89940/4-உறுப்பினர்கள்-தெரிவுக்/#google_vignette
-
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்; சுமந்திரன் நம்பிக்கை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் பெரும் ஆதரவுடன் நாங்கள் வெற்றியடைவோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். ” இலங்கை தமிழரசுக் கட்சியால் யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று (நேற்று) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எமது கட்சியில் சிவஞானம் சிறீதரனை முதன்மை வேட்பாளராக உள்ளடக்கி இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வவுனியாவிலே வேட்புமனுவைத் தாக்கல் செய்கின்ற காரணத்தினாலே யாழ். மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் இந்த வேட்புமனுவைக் கையளித்துள்ளார். நாளை(இன்று) வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் காலம் முடிவடைகின்றபோது அந்த வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்று அறிந்து எங்களுடைய மற்றைய கருத்துக்களை நாங்கள் சொல்வோம். ஆனாலும், இந்தத் தடவை எங்களுடைய வேட்புமனுவிலே இளையவர்களுக்கும் ஆற்றல் உள்ளவர்களுக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பல தடவைகள் நாங்கள் சொல்லி வந்த போதும் அது இந்தத் தடவை பெருமளவுக்குச் சாத்தியமாகி இருக்கின்றதென்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கின்றோம். அதிலும் இம்முறை இரண்டு பெண் வேட்பாளர்களை நாங்கள் நிறுத்தியுள்ளோம். அதிலும் கடந்த தேர்தலை விடவும் ஒன்றிலிருந்து இரண்டாக உயர்ந்துள்ளமை நூறு சதவீத அதிகரிப்பாகும். எங்களுடைய வேட்பாளர்களின் சராசரி வயது 48 ஆகும் . இந்த ஒன்பது பேரினதும் சராசரி வயது ஐம்பதுக்கும் குறைவாகத்தான் இருக்கின்றது. இது முற்போக்கான நல்ல விடயம் என்பதையும் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.” என்றார். https://thinakkural.lk/article/310569
-
நாம் ஒரு பலமான எதிர்க்கட்சியாக வருவோம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சர்வஜன அதிகார கட்சியானது, நாடு முழுவதும் அதிகளவிலான ஆசனங்களைப் பெற்று ஒரு பலமான எதிர்க்கட்சியாக செயற்பட்டு, நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவோம் எனவும் அக்கட்சியின் புத்தளம் மாவட்ட தலைமை வேட்பாளரான சிலாபம் நகர சபையின் முன்னாள் பிரதித் தலைவரும், சட்டத்தரணியுமான சாதிக்குள் அமீன் தெரிவித்தார். பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பதக்கம் சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் சர்வஜன அதிகாரம் கட்சியின் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த நாட்டு மக்கள் நல்லதொரு மாற்றத்தை விரும்புகிறார்கள். மக்கள் விரும்பிய ஆட்சியை எந்த ஆட்சியாளர்களும் பெற்றுக்கொடுக்கவில்லை. ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சியை வழிநடத்தக்கூடிய ஒரு பலமான எதிர்க்கட்சி இருக்க வேண்டும். ஆனால், கடந்த காலங்களில் இந்த நாட்டில் அப்படியொரு பலமான எதிர்க்கட்சி இருக்கவில்லை. இந்த நாட்டில் பலமான எதிர்க்கட்சி இருந்திருந்தால் இந்த நாடு இப்படியான மோசமான நிலைக்கு சென்றிருக்காது. எனவேதான் புதிய பாராளுமன்றத்தில் ஒரு பலமான எதிர்க்கட்சியாக செயற்படுவததற்கு இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் எமது கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும். எமது சர்வஜன அதிகாரத்தின் தலைவரான திலித் ஜயவீர, மூவின மக்கள் மீதும் அன்பு கொண்டவர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் கணிசமான அளவு வாக்குகளைப் பெற்றிருந்தார். எமது கட்சி புதிய கட்சியாக இருந்தாலும் மக்கள் எமது கட்சியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எமது கட்சியின் தலைவரான திலித் ஜயவீரவிடம் இனவாதம் இல்லை. அவரது கைகள் சுத்தமானவை. சொந்த முயற்சியதல்தான் அவர் இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறார். அவர் நிச்சயமாக நாட்டு மக்களுக்கு நல்லதொரு தலைமைத்துவத்தை, எதிர்காலத்தை அவர் நிச்சயமாக பெற்றுக்கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. எமது கட்சி அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிடுகிறது. எனவே, சர்வஜன அதிகாரத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள். எமக்கு எதிர்க்கட்சிக்கு உரிய அந்தஸ்தைப் பெற்றுத் தாருங்கள். அதுவே, மக்கள் விரும்பும் ஆட்சிக்கு அடித்தளமாக அமையும். -புத்தளம் நிருபர் ரஸ்மின்- https://tamil.adaderana.lk/news.php?nid=194332
-
ஸ்ரீவாணி மேடம் பொத்தூரி விஜயலட்சுமி மூலம் : பொத்தூரி விஜயலட்சுமி தமிழாக்கம் : ராஜி ரகுநாதன் பத்மாவும் சாவித்திரியும் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரு கவர்ன்மென்ட் அண்டர்டேக்கிங் கம்பெனியில் பணி புரிகிறார்கள். கம்பெனி பேருந்துக்காகக் காத்திருந்தார்கள். பொழுது போவதற்காக ஏதேதோ கதை பேசிக் கொண்டிருந்தார்கள். பத்மா திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு, “அதோ அங்கே வருவது ஸ்ரீவாணி மேடம் தானே?” என்றாள். “எங்கே?” என்று கேட்டாள் சாவித்திரி. “அதோ, நடந்து வர்றாங்க பார்” என்றாள் பத்மா. “சீ சீ அவுங்களாக இருக்காது. ஸ்ரீவாணி மேடம் ஏன் நடந்து வரப் போறாங்க? காரில் தான் வருவாங்க. யாரையோ பார்த்து யாரோ என்று நினைக்கிறீங்க நீங்க” என்றாள் சாவித்திரி. “இல்லை சாவித்திரி. வருவது அவுங்கதான்” என்றாள் பத்மா. அதற்குள் ஸ்ரீவாணி அருகில் வந்துவிடவே, பத்மா கைகளைக் குவித்து, “வணக்கம், மேடம்” என்றாள். புன்னகையுடன் பதில் வணக்கம் தெரிவித்துவிட்டு அவர்களைக் கடந்து சென்றாள் ஸ்ரீவாணி. “என்ன ஆச்சு இவுங்களுக்கு? இன்று ஏன் இப்படி இருக்காங்க?” என்று கேட்டாள் பத்மா. “உண்மைதான். என்ன ஆயிற்றோ தெரியவில்லை” என்றாள் சாவித்திரி. வியப்போடு அவள் சென்ற வழியையே இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பேருந்து வந்து ஹாரன் ஒலி எழுப்பியவுடன் திடுக்கிட்டு பஸ்ஸில் ஏறினார்கள். பஸ்ஸில் அமர்ந்த பின்னும் ஸ்ரீவாணியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தர்கள். ஸ்ரீவாணி நல்ல வழக்கறிஞராகப் பெயரெடுத்த பெண்மணி. அவளுடைய கணவன் ரங்கசாயி, இஞ்சினியரிங் படித்த பின் இரட்டை பிஹெச்.டி. செய்தான். அமெரிக்காவுக்குச் சென்று பதினைந்து ஆண்டுகள் இருந்துவிட்டுத் திரும்ப வந்து சொந்தமாக ஒரு தொழிற்சாலை அமைத்தான். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. ஸ்ரீவாணி தன் கம்பெனியின் லீகல் விவகாரங்களைப் பார்த்துக் கொள்வாள். அதோடு சமூக சேவைகளிலும் ஈடுபடுவாள். பத்மா தான் வேலை செய்யும் கம்பெனியின் பெண்கள் தின விழாவுக்காக ஸ்ரீவாணியைத் தலைமை தாங்க அழைத்தாள். அவள் வந்தாள். நல்ல உயரமும் உடல் வாகுமாக பார்ப்பதற்கு அழகான வடிவம். கழுத்தில் இரட்டை வட தாலிச் சங்கிலி. கருகமணி. கை நிறையத் தங்க வளையல்கள், காதுகளில் வைரத்தோடு. காஞ்சீபுரம் பட்டுப் புடவை. இவை எலலாவற்றையும் விட அதிகமாக மனதைப் பறிக்கும் புன்னகையோடு விளங்கிய அந்த உருவத்தைப் பார்த்து மெய் மறந்த சபையினர், அவளுடைய உரையைக் கேட்டு மேலும் பரவசமடைந்தனர். “தற்போதைய சமுதாயத்தில் பல பெண்கள் மன உளைச்சலால் அவதிக்குள்ளாகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் டாக்டர்களைச் சுற்றி அலையாமல் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியை தேடிக் கொள்ள வேண்டும். தினமும் சிறிது நேரம் பிறரைப் பற்றி யோசித்து அவர்களுக்கு நன்மை செய்ய முன் வரவேண்டும். அவர்கள் நம் உறவினர்களாகவோ நண்பர்களாகவோதான் இருக்க வேண்டும் என்று தேவையில்லை. கண்ணுக்கு எதிரில் தெரியும் யாராயிருந்தாலும் சரி, அவர்களின் கஷ்டங்களை நம் கஷ்டங்களாக எண்ணி அவர்களுக்கு உதவி புரிய வேண்டும். உதவி புரிவதற்கு ஆயிரமோ லட்சமோ செலவு செய்யத் தேவையில்லை. நமக்கு எந்த ஒரு நஷ்டமும் எற்படாமல் நமக்கு மன நிம்மதியை அளிக்கக் கூடிய சாதனங்கள் பல உள்ளன. உதாரணத்திற்கு, அண்மையில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். பழைய துணிகளுக்கு பாத்திரங்கள் விற்பது அவளுடைய தொழில். கையில் பிறந்து சில மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தையை வைத்திருந்தாள். அவனுக்கு ஒரு நைலான் சட்டையை அணிவித்திருந்தாள். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. அவன் விக்கி விக்கி அழுதான். எனக்குப் பரிதாபமாக இருந்தது. அந்தப் பெண்ணை அழைத்தேன். “ஏதாவது புடவைத் துணி இருந்தால் எடுத்து வாருங்கள், அம்மா. பாத்திரம் தருகிறேன்” என்றாள் வந்தவுடன். “துணி போடுவதற்காக உன்னை அழைக்கவில்லை. முதலில் அங்கே உட்கார்” என்று சொல்லி விட்டு, சமையலறையில் இருந்த சாதத்தில் சிறிது தயிர் ஊற்றிப் பிசைந்து எடுத்து வந்து அவளைச் சாப்பிடச் சொன்னேன். அவள் சாப்பிடுவதற்குள் வீட்டிலிருந்த ஒரு வேஷ்டியைக் கத்தரித்து தையல் மிஷினில் குழந்தைக்கு நான்கு சட்டைகள் தைத்தேன். நைலான் சட்டையைக் கழற்றிவிட்டு மெத்தென்ற கைத்தறி சட்டையை அணிவித்தவுடன் அந்த பச்சைக் குழந்தை ஆசுவாசமடைந்தது. அதைப் பார்த்து அந்தத் தாய் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் போதாது. அவர்கள் இருவரின் மகிழ்ச்சியைப் பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இதுபோன்ற ஆனந்தத்தை அவ்வப்போது அனுபவித்து வந்தால் டிப்ரெஷன் நம் அருகில் கூட வராது” என்று அவள் உரையாற்றியபோது கைத்தட்டல் விண்ணை எட்டியது. விழா முடிந்தபின் பலர் அவளிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டார்கள். அவர்களுள் பத்மாவும் சாவித்திரும் இருந்தார்கள். அப்படிப்பட்ட பெண்மணி இன்று அள்ளி முடிந்த தலை, பழைய புடவை, கழுத்தில் சாதாரண கருகமணி, கைக்குக் கண்ணாடி வளையல் என்று ஒரு ஏழையைப் போல ஏன் தோற்றமளிக்கிறாள்? அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையிலும் அதே டாபிக். அவர்களுக்குச் சற்று தூரத்தில் அமர்ந்திருந்த சுஜாதா இவர்களுடைய பேச்சு காதில் விழவே டக்கென்று எழுந்து இவர்களின் அருகில் வந்தாள். அவள் அதே ஆபீசில் வேறு டிபார்ட்மென்ட். வெறும் முகப் பரிச்சயம் மட்டுமே. “நீங்கள் யாரைப் பற்றி பேசுகிறீர்கள்?” என்று ஆரவத்தோடு கேட்டாள். “சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் நம்முடைய விமென்ஸ் டே மீட்டிங்கிற்கு வந்தார்களே அந்த ஸ்ரீவாணி மேடத்தைப் பற்றி” என்றாள் பத்மா. “ஒரு நிமிடம்” என்று கூறிச் சென்று தன் டிபன் பாக்சை எடுத்து வந்து இவர்களோடு அம்ர்ந்த சுஜாதா, “இப்போது சொல்லுங்கள் என்ன விஷயம்?” என்று கேட்டாள். “அன்று ஃபங்ஷனில் பார்த்தபோது எத்தனை கிரேஸ்ஃபுலாக இருந்தார்கள்? அதன் பிறகு ஒருமுறை டிவியில் கூட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பார்த்தேன். எப்போது பார்த்தாலும் மகாலட்சுமி போல இருக்கும் மேடம், இன்று மிகவும் ஏழை போல காட்சியளித்தாங்க” என்றாள் சாவித்திரி. ஏளனமாகச் சிரித்தாள் சுஜாதா. “அவள் எங்களுக்கு தூரத்துச் சொந்தம். என் வீட்டுக்காரருக்கு ஒன்று விட்ட அத்தை மகள். அவர்கள் ஒரு மாதிரியான மனிதர்கள். இங்கு வேலையை விட்டு விட்டு அமெரிக்கா சென்றார்கள். அங்கு இருக்க முடியாமல் மீண்டும் இங்கே திரும்பி வந்தார்கள். ஏதாவது வேலையில் சேரலாம் அல்லவா? அதுவுமில்லை. தாமே பத்து பேருக்கு வேலை கொடுப்போம் என்று ஒரு இண்டஸ்ட்ரி தொடங்கினார்கள். குழந்தைகள் பிறக்கவில்லை. ஏதாவது குழந்தையைத் தத்து எடுத்து வளருங்கள் என்று சொன்னாலும் கேட்கவில்லை. “தெய்வம் எங்களுக்கு குழந்தைகளைக் கொடுக்காத போது மீண்டும் இந்த வளர்ப்புகள் எல்லாம் எதற்கு? எங்கள் ஃபாக்டரியில் பணிபுரிபவர்களே எங்கள் பிள்ளைகள்” என்று டயலாக் பேசினார்கள். நூறு ரூபாய் சம்பாதித்தால் அதில் தொண்ணூற்று ஒன்பது ரூபாய் செலவு செய்தால் ஒழிய அவர்களுக்குத் திருப்தி இருக்காது. ஆடம்பரத்திற்கும் தானத்திற்கும் குறைவு கிடையாது. நாளை என்று ஒன்று இருக்கிறது என்ற நினைவே கிடையாது. அதி புத்திசாலித்தனமோ அல்லது அறிவீனமோ தெரியவில்லை. யாரோடும் சேர மாட்டார்கள். அவர்களுடைய உலகம் அவர்களுக்கு. என்ன எதிரடி விழுந்ததோ தெரியவில்லை. எந்த விஷயமும் இன்னும் எங்கள் வரை வரவில்லை” என்று பேச்சும் சாப்பாடும் ஒரே தடவையாக முடித்துக் கொண்டு எழுந்து சென்றாள் சுஜாதா. கிடுகிடுவென்று கையைக் கழுவிக் கொண்டு மொபைலை எடுத்து கணவனுக்கு அந்தச் செய்தியை பரபரப்பாகப் பகிர்ந்தாள். மனைவி கூறியதைக் கேட்டு கணவன் சூரியம் மகிழ்ச்சியடைந்தான். அவர்களுக்கு நன்றாக வேண்டும் என்று நினைத்தான். அவன் அத்தனை மகிழ்ச்சியடைந்ததற்குக் காரணம் இருந்தது. எப்போதோ ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சூரியத்திற்கு பண உதவி தேவைப்பட்ட போது ரங்கசாயியிடம் சென்று கேட்டான். அவன் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் கொடுத்து உதவினான். அதுவரை எல்லாம் நன்றாகவே இருந்தது. ரங்கசாயி ஒரு தெய்வம் என்று புகழ்ந்தான் சூரியம். அதன் பின் சூரியம் குடும்பத்தினர் கொஞ்சம் செட்டில் ஆனபின் கடனைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டபோது சூரியத்திற்குக் கோபம் வந்தது. தன்னைப் போல ரங்கசாயி கூட அந்தக் கடன் பாக்கி விஷயத்தை மறந்து போயிருப்பான் என்று நினைத்தான் சூரியம். இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என்று காலம் கடத்திப் பார்த்தான். அவ்வாறு வாயிதா போட்டால், எரிச்சலடைந்து கேட்பதை விட்டு விடுவார் என்று எதிர்பார்த்தான். ஆனால் ரங்கசாயி கெட்டிமனிதன். “நீ மனிதனா? மிருகமா? வயிற்றுக்கு சோறு தின்கிறாயா? புல்லைத் தின்கிறாயா?” என்று திட்டித் தீர்த்து, விரட்டி விரட்டி கொடுத்த கடனை வசூல் செய்துவிட்டான். சூரியத்திற்கு மிகவும் கஷ்டமாகி விட்டது. “அந்த ரங்கசாயிக்கு என்ன கேடு? குழந்தையா, குட்டியா? போகும்போது பணத்தை மூட்டை கட்டி எடுத்துச் செல்வானா? வேண்டியவர்களுக்கு ஆபத்தில் உதவினால், அந்தப் பணத்தை அணா, பைசவோடு வசூல் செய்ய வேண்டுமா?” என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு திரிந்தான். அவ்விதம் தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டான். இப்போது அந்த ரங்கசாயிக்கு ஏதோ கஷ்டம் வந்தது என்றும் அவன் மனைவி ஏழைபோல நடந்து செல்கிறாள் என்றும் தன் மனைவியின் மூலம் தெரிந்து கொண்ட சூரியத்திற்குச் சொல்ல முடியாத ஆனந்தம் தொற்றிக் கொண்டது. அதனைத் தன் மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான். உடனே போன் செய்து நான்கைந்து உறவினர்களுக்குக் கூறினான். அவர்கள் மூலம் இன்னும் பலருக்கும் அந்தச் செய்தி பரவி விவாதத்திற்கு உரியதானது. “உலகம் என்றால் இப்படித்தான்.. ஏதோ பெரிய பாக்டரி இருக்கிறதென்று பெருமையடித்துக் கொண்டார்களே என்று சமீபத்தில் என் மகனை ரங்கசாயிடம் அனுப்பினேன். அவன் போக மாட்டேன் என்று சொன்னாலும் உறவினர் மகனுக்கு ஒரு வேலை போட்டுத் தர மாட்டானா என்று நப்பாசையில் அவனை பலவந்தமாக அனுப்பினேன். என் பிள்ளை பத்தரை மாற்றுத் தங்கம். பரீட்சைக்கு முன்னால் ஏதோ ஜுரம் வந்ததால் பத்தாவது பெயில் ஆகி விட்டானே தவிர ஒரு கலக்டரோ ஒரு கவர்னரோ ஆக வேண்டிய புத்திசாலி என் மகன். அப்படிப்பட்ட இளைஞனை அழைத்துச் சென்று லாரியிலிருந்து சரக்குகளை இறக்கும் உத்தியோகத்தில் வைத்தானாம். என் மகனுக்கு ஏற்கெனவே டஸ்ட் அலேர்ஜி. அந்த வேலை அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதோடு சம்பளமும் ரொம்ப கம்மி. ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்றானாம். இந்த நாட்களில் பிச்சைக்காரன் கூட அதைவிட அதிகம் சம்பாதிக்கிறான். என் மகனுக்கு ரோஷம் அதிகம். வேலையும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று வந்துவிட்டான். வேண்டியவர்கள் வீட்டுப் பிள்ளை ஆயிற்றே, பக்கத்தில் இருத்தி வியாபாரத்தின் நெளிவு சுளிவுகளை கற்றுத் தந்து அதில் ஒரு பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வோம் என்று இல்லை. நாளைக்கு அவர்களுக்குப் பிறகு அவனே பொறுப்பாக பார்த்துக் கொள்ளப் போகிறான். அந்த அளவு கூட அவர்களுக்கு இங்கித ஞானம் இல்லாமல் போய் விட்டது. இப்போது நன்றாக ஆனது. நன்றாக வேண்டும் அவர்களுக்கு” என்று புலம்பினாள் ஒரு இல்லத்தரசி. “உண்மைதான் அண்ணி. என் பெண் கல்யாணம் நிச்சயம் ஆன உடனே சென்று அவர்களிடம் கூறினோம். கல்யாணத்திற்கு வர இயலாது, தில்லிக்குப் போகிறோம் என்று சொல்லி இருநூறு ரூபாய் பெறுமான ஒரு புடவையும் ஒரு அகல் விளக்கு அளவுக்கு வெள்ளியில் ஒரு குங்குமச்சிமிழும் வைத்துக் கொடுத்தாள் அந்த மகராசி. ஒரு ஐநூறு ரூபாயை என் வீட்டுக்காரரின் கையில் வைத்து மாப்பிளைக்கு கொடுங்கள் என்றாள். இருக்கிற சொத்தையெல்லாம் போகும்போது கூட எடுத்துச் செல்லப் போகிறார்களா, என்ன? ஒரு பத்தாயிரமோ, பதினைந்தாயிரமோ கையில் வைத்து செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல அவளுக்கு மனசு வரவில்லை. என்ன செய்வது? கருமித்தனம். போனால் போகிறது. எங்கள் கவலை என்னவென்றால், யார் மூலமாகவோ எங்களுக்குத் தெரிந்தது. அதன் பின் பத்து நாட்களில் அவர்களுடைய பாக்டரியில் வேலை செய்யும் பெண்ணை அங்கேயே பணி புரியும் ஒரு பையனுக்கு திருமணம் செய்வித்தார்களாம். குடும்பத்திற்குத் தேவையான பாத்திரங்கள், கட்டில் மெத்தை எல்லாம் வாங்கித் தந்தார்களாம். குறைந்தபட்சம் கல்யாணச் சாப்பாட்டோடு சேர்ந்து இருபதாயிரம் வரை செலவாகியிருக்கும். வேண்டியவர்களுக்கு இலையிலும் வேண்டாதவர்களுக்குத் தட்டிலும் என்று சொல்வார்களே, அது சரியாகத் தான் இருக்கிறது. வேண்டுமென்றால் வேலியில் கூடக் காய்க்கும். வேண்டாம் என்றால் மரத்தில் கூட காய்க்காது” என்று தோளில் இடித்துக் கொண்டாள் மற்றொரு இல்லத்தரசி. மற்றொரு இடத்தில் மற்றொரு விவாதம் நடந்தது. “இந்த ரங்கசாயி செய்யும் வேலையெல்லாம் தலைகீழ் வேலைகளே. ஒரு முறை அவர்கள் வீட்டில் ஏதோ சுப நிகழ்ச்சி என்று அழைத்தார்கள். உறவினர்களுக்கு விருந்து போட்டதோடு ஏழைகளுக்கு அன்னாதானமும் செய்தார்கள். சொந்தக்காரர்களுக்கு புளியோதரை, பூரணம் போளி, சர்க்கரைப் பொங்கல், வடை எல்லாம் போட்டு அனுப்பிவிட்டு ஏழைகளுக்கு பூரி, குருமா, புலாவ், ஜாங்கிரி, ஐஸ்க்ரீம் எல்லாம் பரிமாறினான். இது என்னடா என்று கேட்டபோது ஏழைகளுக்குப் பாவம் இதெல்லாம் யார் கொடுப்பார்கள் என்று விதண்டவாதம் செய்தான். அவனுக்கு ஆமாஞ்சாமி போடுவதற்கு அவன் மனைவியும் கூடவே இருக்கிறாள். இரண்டும் இரண்டு ஆப்பை. இரண்டும் கழண்ட ஆப்பை என்பார்களே, அது சரியாகத் தான் இருக்கிறது” என்றாள் ஒரு பெரிய மனிஷி. “கோடிக்கணக்கில் சொத்து இருந்தால் எத்தனை வேண்டுமானாலும் தானம் செய்யலாம். அதில் பெருமைப் பட எதுவுமில்லை. ஆனால் இவர்களுக்கு இருப்பதோ ஒரு பாக்டரி, ஒரு சொந்த வீடு, அவ்வளவுதான். வங்கியில் பணம் தங்காது. இருந்தால் கணவன் மனைவி இருவருக்கும் கை சும்மா இருக்காது. ஏதாவது செலவு செய்து விடுவார்கள். புத்தி கெட்ட விதமாக ஏதாவது செய்திருப்பார்கள். அதனால்தான் இந்த நிலைமை. தனக்காகத் தெரியாவிட்டால் யாரையாவது கேட்டாவது தெரிந்து கொள்ளவேண்டும். நான் பல தடவை சொல்லிவிட்டேன். கேட்கவில்லை” என்று குமுறினார் ஒரு மேதாவி. அதையெல்லாம் கேட்டு வருந்திய மனிதன் சேகரம் ஒருவனே. அவனுக்கும் ரங்கசாயிக்கும் தூரத்து உறவுமுறை உண்டு. நான்கைந்து முறை ரங்கசாயி, சேகரத்திற்கு உதவியுள்ளான். ரங்கசாயிக்கு போன் செய்து என்ன பிரச்சினை என்று கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் அப்படிச் செய்வதற்குத் தயக்கமாக இருந்தது. ஏனென்றால் ரங்கசாயியிடம் வாங்கிய கடன் ஒன்று பாக்கியிருந்தது. அவனுக்கு வலியச் சென்று போன் செய்தால் அவன் பணத்தைக் கொடு என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது? தன்னிடம் பணம் இல்லையே, என்ற சங்கோஜம் அவனைத் தடுத்தது. அதனால் எதுவும் தெரியாததுபோல் இருந்துவிட முடிவு செய்தான். அதுவுமின்றி, ரங்கசாயி தன் ஒருவனுக்கு மட்டுமல்ல. நிறைய பேருக்கு உதவியுள்ளான். யாரோ ஒருவர் அவனுடைய கஷ்டகாலத்தில் உதவ முன்வராமல் போகமாட்டார் என்று நினைத்துச் சும்மா இருந்தான் சேகரம். மொத்தத்தில் ரங்கசாயி பற்றியும் ஸ்ரீவாணி பற்றியும் அன்று நிறைய பேர் விவாதித்துக் கொண்டார்கள். சுஜாதா ஒவ்வொரு நாளும் அதே வேலையாக பத்மாவிடமும் சாவித்திரியிடமும், “என்ன ஆச்சு? மேற்கொண்டு ஏதாவது தெரிந்ததா? ஸ்ரீவாணியைப் பார்த்தீர்களா?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள். “இன்று கூட பார்த்தோம் அதே அவதாரம்தான். பாவம். நடக்க முடியாமல் அவங்களுக்குப் பெருமூச்சு வாங்கியது” என்றாள் சாவித்திரி. அந்தச் செய்தியை முடித்தவரை உடனுக்குடன் உறவுகளிடம் பரப்பி மகிழ்ந்தாள் சுஜாதா. சூரியம் பொறுக்கமுடியாமல் ஒருமுறை ரங்கசாயியின் பாக்டரிக்கு போன் செய்தான். “சார் ஊரில் இல்லை. திரும்பிவர நீண்ட நாட்கள் ஆகும். எங்கே சென்றாரோ எங்களுக்குத் தெரியாது” என்று பொதுப்படையாக கூறினார்கள். விவரம் கேட்டபோது எங்களுக்குத் தெரியாது என்றார்கள். ரங்கசாயியின் வீட்டுக்கு போன் செய்து பார்த்தான். அந்த நம்பர் வேலை செய்ய வில்லை என்று பதில் வந்தது. போனைக்கூட பிடுங்கி விட்டார்கள் போலிருக்கிறது. அவன் முகம் காட்ட முடியாமல் தலைமறைவாகி விட்டான் என்று தீர்மானித்து மனைவி சுஜாதாவிடம் கூறினான். “ஸ்ரீவாணி வேலையில் இருந்தாலாவது பிழைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட ஆபத்து நேரங்களில் கைகொடுக்கும். அதையும் விட்டு விட்டு வீட்டில் உட்கார்ந்திருந்தாள். தனக்கு மிஞ்சித்தானே தானமும் தருமமும்? சொந்த வியாபாரம், சொந்த கம்பெனி என்று பெருமை பேசி சமூக சேவையில் இறங்கினாள். நாமெல்லாம் வியாபாரம் செய்ய முடியாமல்தான் உத்தியோகம் செய்கிறோமா? இப்போது பாருங்கள். பாவம். இருவரும் சாலைக்கு வந்து விட்டார்கள்” என்றாள் சுஜாதா. பிறர் கூறித் தெரிந்து கொண்டதையும் தானாக யூகித்ததையும் ஊராரிடம் வலியச் சென்று பரப்பி மகிழ்ந்தாள் சுஜாதா. அதன் காரணமாக உறவினர்களுள் சுஜாதாவுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது. காலையில் எழுந்தது முதல் யாராவது ஒருவர் போன் செய்து, “என்னா ஆச்சு சுஜாதா? ஏதாவது தெரிந்ததா? புதிய செய்தி உண்டா?” என்று கேட்கத் தொடங்கினார்கள். அவர்களை ஏமாற்ற வேண்டாம் என்று இருப்பது இல்லாதது எல்லாவற்றையும் கலந்து கதை கட்டி பொழுது போக்கிக் கொண்டிருந்தாள் சுஜாதா. வரவர சுஜாதாவால் சஸ்பென்சைத் தாங்க இயலவில்லை. எப்படியாவது ஸ்ரீவாணியைப் பிடித்து விவரங்கள் எல்லாம் வரவழைத்து சுற்றத்தாருடன் பகிந்து கொள்ள வேண்டும் என்று துடித்தாள். அதை எப்படிச் செய்வது என்று யோசித்து ஒரு திட்டம் தீட்டினாள். ஒரு நாள் காலையிலேயே எழுந்து ஆட்டோ ஏறி அரை கிமீ பயணம் செய்து பத்மாவும் சாவித்திரியும் பஸ் ஏறும் ஸ்டாப்பிற்குச் சென்றாள். யாருக்கும் சந்தேகம் வராமால் முன்பாகவே அங்கு சென்று அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். பத்மாவும் சாவித்திரியும் வந்தார்கள். சுஜாதாவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு, “நீங்கள் எப்படி இங்கே?” என்று கேட்டார்கள். “நேற்று இந்த ஏரியாவில் என் தோழியின் வீட்டில் பங்ஷன் நடந்தது. இரவு வெகு நேரமாகிவிட்டது. அதனால் இங்கேயே தங்கி விட்டேன். அதுதான் காலையில் பஸ் பிடித்துப் போகலாம் என்று வந்தேன்” என்று சுவர் எழுப்பினாற்போல் பொய் சொன்ன சுஜாதா, “எங்க ஸ்ரீவாணி வந்துட்டாளா?” என்று சாதாரணமாகக் கேட்பது போலக் கேட்டாள். “இன்னும் இல்லை. இனிமேல்தான் வருவார்கள். சில நாட்கள் அவர்கள் முன்னால் வருவார்கள். வேறு சில நாட்கள் எங்கள் பஸ் முன்னால் வந்து விடும்” என்றாள் சாவித்திரி. “கடவுளே இன்று ஸ்ரீவாணி முன்னால் வர வேண்டும்” என்று மனதிற்குள் இறைவனை வேண்டிக் கொண்டாள் சுஜாதா. அவளுடைய வேண்டுதல் பலித்தது. “அதோ ஸ்ரீவாணி மேடம்” என்றாள் பத்மா. பத்மாவும் சாவித்திரியும் வியந்து போய் எத்தனை சொல்லியிருந்தாலும் எதிரில் ஸ்ரீவாணியைப் பார்த்த சுஜாதா வாயடைத்துப் போனாள். சாதாரண புடவை, வெறும் காது, கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு, கைகளில் இரண்டு கண்ணாடி வளையல்கள், ரொம்ப இளைத்துப் போய் பெருமூச்சு வாங்க நடந்து வந்து கொண்டிருந்தாள் ஸ்ரீவாணி. சுஜாதா வியப்பிலிருந்து மீள்வதற்குள் அருகில் வந்த ஸ்ரீவாணி அவளிடம் பேசினாள். . “சுஜாதா, நீ என்ன இங்கே நிற்கிறாய்?” என்று கேட்டாள். “நான் ஏதோ வேலையாக வந்தேன். அதிருக்கட்டும். அக்கா, நீ என்னக்கா, இப்படி ஆகிவிட்டாய்? உனக்கு உடம்பு சரியில்லையா?” என்று கேட்டாள் சுஜாதா. “நன்றாகத் தான் இருக்கிறேன் சுஜாதா. சரி நான் கிளம்புகிறேன். எனக்கு நேரமாகிறது” என்றாள் ஸ்ரீவாணி. கிடைத்தாற்போல் கிடைத்து நழுவ இருந்த ஸ்ரீவாணியைப் பார்த்து சுஜாதாவுக்கு பரபரப்பு ஏற்பட்டது. “எனக்கும் புத்திசாலித்தனம் உள்ளது. இந்த வாய்ப்பை நழுவ விடுவேனா?” என்று நினைத்துக் கொண்டாள். “வா அக்கா. நானும் உன்னோடு வருகிறேன்” என்றாள். “பஸ் வந்துவிடும் சுஜாதா” என்று நினைவூட்டினாள் பத்மா. “நான் ஆட்டோவில் வருகிறேன், பத்மா. ரொம்ப நாள் கழித்து அக்காவைப் பார்க்கிறேன் அல்லவா? கொஞ்சம் நல்லது கெட்டது பேசி விட்டு மெதுவாகக் கிளம்புவேன்” என்று கூறிவிட்டு ஸ்ரீவாணியோடு சேர்ந்து நடக்கத் தொடங்கினாள் சுஜாதா. “எப்படி இருக்கிறாய் சுஜாதா? உன் கணவர் குழந்தைகள் நலமா?” என்று அன்போடு விசாரித்தாள் ஸ்ரீவாணி. “நாங்கள் நன்றாக இருக்கிறோம். அக்கா, நீ சொல். என்ன செய்தி? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள் சுஜாதா. “நாங்கள் நன்றாக இருக்கிறோம், சுஜாதா. ஒரு குறைவுமில்லை. அண்மையில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு நல்ல பணியில் ஈடுபட்டுள்ளோம். கர்நாடாகா பார்டரில் இருக்கும் ஒரு குக்கிராமத்தில் தேவதாசி வழக்கத்திற்கு பலியான ஒரு பெண்ணை அந்தச் சிறையிலிருந்து விடுவித்து கைவேலைகளில் பயிற்சி கொடுத்தோம். புடவையின் மேல் வொர்க் செய்து ஒரு நாளைக்கு ஒரு நூறு ரூபாயாவது அவள் சம்பாதிக்கும்படி செய்தோம். அவள் தாய்மையை அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினாள். ஒரு குழந்தையை வளர்ப்பேன் என்று கூறினாள். தாயும் தந்தையும் எயிட்ஸ் நோயால் இறந்து போய் அனாதையாக மாறிய ஒரு ஐந்து வயது சிறுமியை அந்தப் பெண் தத்து எடுக்கும்படிச் செய்துள்ளோம். ஒரு குழந்தைக்காக தவமிருந்த தாய்க்கும் குழந்தை கிடைத்தது. அனாதையான சிறுமிக்கும் தாய் கிடைத்தாள். அவரகளைப் பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது. இது போன்ற அனுபவங்கள் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும், சுஜாதா” என்றாள் ஸ்ரீவாணி. சுஜாதாவுக்கு எரிச்சலாக இருந்தது. இந்த தற்பெருமைக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று நினைத்துக் கொண்டாள். அதை மறைத்துக் கொண்டு, “அன்றொருநாள் உன் வீட்டுக்கு போன் செய்தோம் அக்கா. அந்த நம்பரில் போன் எதுவும் இல்லை என்று பதில் வந்த்து. பாக்டரிக்கு போன் செய்தால் அங்கே மாமா இல்லை என்றார்கள். எங்கே போயிருக்கிறார்? உங்கள் போனுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள் சுஜாதா. “எங்களுக்கு அமெரிக்கன் கம்பெனியில் இருந்து நல்ல ஆர்டர் கிடைத்திருக்கிறது, சுஜாதா. எப்போதும்போல் லாபம் கிடைக்கும்தான். ஆனால் மேலும் ஒரு பத்து பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும். அதை நினைத்து எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் அந்த வேலையாகத்தான் அமெரிக்கா சென்றுள்ளார். இன்னும் ஒரு மாதம் அங்கேயே தங்க வேண்டி இருக்கும். போனைப் பற்றி கேட்கிறாயா? பழைய போனை எடுத்து விட்டு சமீபத்தில் ரிலையன்ஸ் போன் வாங்கியுள்ளோம்” என்றாள் ஸ்ரீவாணி. எச்சில் விழுங்கினாள் சுஜாதா. “அப்படியா அக்கா? ரொம்ப சந்தோசம். அது சரி, அக்கா, நீ ஏன் நடந்து செல்கிறாய்? உன் கார் எங்கே? நகையெல்லாம் ஏன் கழற்றி விட்டாய்?” பொறுமையிழந்த சுஜாதா நேரடியாக பாயிண்டுக்கு வந்தாள். “அதுவா? அண்மையில் எனக்குக் கொஞ்சம் ஆரோக்கியம் சரியில்லை, சுஜாதா. மெனோபாஸ் நேரம் அல்லவா? இடுப்பு வலி. அதோடு, இருந்தாற்போல் இருந்து இடது காலில் வலி. கேரள மருத்துவம் பார்க்கலாம் என்று யாரோ சொன்னார்கள். சரி என்று ஆரம்பித்தேன். பஞ்ச கர்மா சிகிச்சை. ஐந்தாறு வாரங்கள் செய்து கொள்ளவேண்டும். நன்றாக இருக்கிறது. எண்ணெய் மசாஜ் செய்வார்கள் அல்லவா? அதனால், கால் மெட்டியோடு எல்லாவற்றையும் எடுத்துவிடச் சொன்னார்கள். அங்கு சென்று எடுப்பானேன் என்று வீட்டிலேயே கழற்றி வைத்து விட்டு தினமும் செல்கிறேன். அதோடு வாக்கிங் செய்வது நல்லது என்று சொன்னார்கள். சரி உடம்பு குறையுமே என்று நடந்து செல்கிறேன். ஆங், சொல்ல மறந்து விட்டேன். என் தங்கை ராதாவின் மகளுக்கு பிரசவ நேரம். “தனியாக இருக்கிறாள் கொஞ்சம் உதவியாக இரு” என்று கேட்டாள். சரி என்றேன். என் ட்ரீட்மென்ட் சென்ட்டரும் இங்கே அருகில்தான் இருக்கிறது. அவரும் ஊரில் இல்லை. இங்கேயே இருந்து ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்கிறேன். இது முடிந்ததும் வீட்டுக்குச் செல்வேன்” என்று எல்லாம் விவரித்து விட்டு, “நீ எங்கே போகவேண்டும்? எதிர்பாராமல் உன்னை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. முடிந்தபோது ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வா” என்று கூறிக் கொண்டே ஒரு சந்திற்குள் திரும்பினாள் ஸ்ரீவாணி. வாயடைத்துப் போன சுஜாதா, மெதுவாக இயல்பு நிலைக்கு வந்தாள். நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பஸ் பிடித்துச் செல்ல வேண்டும். ஓட்டமாக ஓடி பஸ் ஸ்டாண்டை அடைந்தாள். ஆனால் அதற்குள் பஸ்கள் சென்று விட்டன. வேறு வழியில்லை. ஆட்டோவில்தான் செல்ல வேண்டும். அத்தனை தூரம் வருவதற்கு எந்த ஆட்டோகாரரும் சம்மதிக்கவில்லை. ரிடர்ன் தொகையும் கொடுக்க வேண்டும் என்றார்கள். சற்று நேரம் அங்குமிங்கும் அலைந்து விட்டு, வேறு வழியின்றி இருநூறு ரூபாய் கொடுத்து ஆட்டோவில் சென்றாள். ஆபீஸுக்குச் சென்று பார்த்தால் கேட் மூடியிருந்தது. பார்மாலிடி எல்லாம் முடித்துவிட்டு உள்ளே சென்றால் லஞ்ச டைம் ஆகியிருந்தது. பாஸிடம் திட்டு வாங்கினாள். ஒடிந்துபோன மனதோடு லஞ்ச பாக்சை எடுத்துக் கொண்டு ஹாலுக்குச் சென்றால் அங்கு பதமாவும் சாவித்திரியும் எதிரில் வந்தார்கள். “ஸ்ரீவாணி மேடத்திற்கு என்ன ஆச்சாம்?” இருவரும் ஒரே குரலில் கேட்டார்கள். “ஒரு மண்ணாங்கட்டியும் ஆகவில்லை” என்று எரிந்து விழுந்து விட்டு ஒரு நாற்காலியில் சாய்ந்தாள். “அதிர்ஷ்டக்காரர்களுக்கு யாரும் தீங்கிழைக்க முடியாது. தரித்திரத்தை யாராலும் தீர்க்கவும் முடியாது” என்று நினைத்தபடி கண்களைச் சோர்வோடு மூடினாள் சுஜாதா. அவள் கண்கள் கண்ணீரைப் பெருக்கின. https://solvanam.com/2024/09/08/ஸ்ரீவாணி-மேடம்/
- 1 reply
-
- 3
-
ஹான் காங் – இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஜெகதீஷ் குமார் அக்டோபர் 10, 2024 No Comments தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்குக்கு 2024- ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவிலிருந்து இந்த விருதைப் பெறும் முதல் எழுத்தாளர் இவர். ஹான் காங் தன் நாட்டினரால் ஆற்றல் வாய்ந்த தொலை நோக்குப் பார்வையாளர் என்று கொண்டாடப்படுபவர். வரலாற்றுத் துயரை துணிவுடன் எதிர்கொள்ளும், மனித வாழ்வின் பலவீனங்களை வெளிப்படுத்தும், அவரது கவித்துவமிக்கதும் தீவிரமானதுமான உரைநடைக்காக ஹான் காங்குக்கு இந்த விருது அளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. நோபல் கமிட்டியின் தலைவரான ஆண்டர்ஸ் ஓல்சன், தன் அறிக்கையில், “ஹானின் எழுத்து உடலுக்கும், ஆன்மாவுக்கும், இறந்தவர்களுக்கும், உயிருள்ளவருக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்த தனித்துவமிக்க விழிப்புணர்வோடு எழுதப்படும் புதுமையுடையது,” என்று குறிப்பிடுகிறார். ஐம்பத்து மூன்று வயதான ஹானின் தந்தையும் ஒரு நாவலாசிரியரே. அவரது குடும்பம் பொருளாதார ரீதியான சிரமத்தின் காரணமாக அடிக்கடி இடம்பெயர வேண்டியிருந்தது. “இப்படி இடம் மாறிக்கொண்டே இருந்தது சிறுகுழந்தையான எனக்குக் கடினமாக இருந்தது. ஆனால் நான் எப்போதும் புத்தகங்களால் சூழப்பட்டிருந்தேன். அவை என்னைக் காப்பாற்றின,” என்று ஹான் தான் அளித்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகிறார். ஹானுக்கு 9 வயதாக இருந்தபோது, குவாங்ஜு எழுச்சிக்கு சில மாதங்களுக்கு முன்பு அவரது குடும்பம் சியோலுக்கு குடிபெயர்ந்தது, அப்போது அரசாங்கத் துருப்புக்கள் ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றனர். இந்த நிகழ்வு மனித குலத்தின் வன்முறைத்திறன் குறித்த தன் பார்வையை வடிவமைத்ததாக ஹான் கூறுகிறார். அவரது எழுத்திலும் இதன் பாதிப்பு உண்டு. 2014-ல் வெளிவந்த “மனிதச் செயல்கள்” ( Human Acts ) என்ற நாவல் போராட்டக் குழு ஒன்றின் மீது காவல்துறை நிகழ்த்தும் சோதனையைக் கூர்மையாக அவதானிக்கிறது. கொரியாவின் யோன்சேய் பல்கலைக் கழகத்தில் இலக்கியம் பயின்ற ஹான் வெளியிட்ட முதல் படைப்பு கவிதைகளே. 1998 ல் வெளிவந்த இவரது முதல் நாவல் “கருப்பு மான்” ( Black Deer ) தொலைந்து போன பெண்ணொருத்தியின் மர்மத்தை ஆராய்வது. இந்த காலகட்டத்தில்தான் இவருக்குத் தாவரமாக மாற ஆசைப்படும் பெண்ணொருத்தியின் கதையைச் சிறுகதையாக எழுதும் எண்ணம் தோன்றியிருக்கிறது. பின்னாளில் இக்கதை ஒரு நாவலாக உருக்கொண்டது. 2016-க்கான புக்கர் விருது வென்ற இவரது மீமெய்யியல் நாவலான த வெஜிடேரியன், தமிழில் “மரக்கறி” என்ற பெயரில் கவிஞர் சமயவேல் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்த நாவல் மன அழுத்தத்துக்கு ஆளான இல்லத்தரசி ஒருவரை மையமாகக் கொண்டது. அவள் தன் மன அழுத்தம் காரணமாக இறைச்சி உண்ணுவதை நிறுத்தி தன் இல்லத்தினரை அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறார். காலப்போக்கில் உண்ணுவதையே முற்றிலுமாக நிறுத்தி விடுகிறாள். சூரிய ஒளியை மட்டுமே உண்டு வாழக்கூடிய ஒரு மரமாக வாழ ஏங்குகிறாள். த வெஜிடேரியன் மனத்தெளிவுக்கும், மனப்பிறழ்வுக்கும் இடையேயான எல்லைகளை ஆராய்கிறது. ஆசைக்கும், வன்முறைக்கும் இடையேயான எல்லைகள்; செயலூக்கத்துக்கும், வெறிச்செயலுக்கும் இடையேயான எல்லைகள் ஆகியவற்றையும் ஆராய்கிறது. 2007-ல் கொரிய மொழியில் மூன்று தனித்தனி நாவல்களாக வெளியிடப்பட்ட இந்த நாவல் நேர்த்தியாகவும், சிலிர்ப்பூட்டும் வகையிலும் சொல்லப்பட்ட ஓர் இருண்ட நாவல். டெபோரா ஸ்மித் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நாவலின் மையக்கதாபாத்திரம் யோங்-ஹை இறைச்சி உண்பதை நிறுத்தி விடுவது மட்டுமல்லாமல், உடலுறவிலும் நாட்டமிழந்து விடுகிறாள். அவள் பிரா அணிந்து கொள்வதை நிறுத்தியதை பெண்மைக்கு மாறான நடத்தை என்றும், அவளது அப்போதைய மாற்றத்தைச் சரிசெய்து கொள்வதற்கான தவறான செயல் என்றும் அவள் கணவன் எச்சரிக்கிறான். அவள் ஏதோ நோய்க்கு அடிமையானதைப் போல அவளது குடும்பமே அவளது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறது. அவளது தந்தை அவளுக்கு வலுக்கட்டாயமாக உணவளிக்க முயற்சிக்கிறார், அவளை அறைந்து, பின்னர் சிறிது பன்றி இறைச்சியை அவள் உதடுகளில் திணிக்கிறார். அவள் வாயைத் திறக்காதபோது அவர் அவளை மீண்டும் அறைகிறார். நாவல் முழுக்கவே யோங்-ஹையின் செயல்கள் ஏதோ ஒரு ஆணின் பார்வையிலேயே காட்டப்படுகின்றன. நாவலின் முதல் பகுதி அவளது கணவனின் பார்வையில் உள்ளது. தன் மைத்துனியைப் பற்றி ஏக்கத்துடன் கற்பனை செய்பவன் அவள் கணவன். தொலைபேசியில் அவள் குரலைக் கேட்டதும் கிளர்ச்சியடைபவன். அவன் தன்னை வலுக்கட்டாயமாக உடலுறவுக்கு உட்படுத்த முயலும்போது யோங்-ஹை தன்னை வழங்குவதில்லை. அவன் மீது வசைச் சொற்களைப் பொழிகிறாள். மீறி அவன் வன்புணர்வு செய்யும்போது கூரையை வெறித்தபடி படுத்துக் கிடக்கிறாள், ஒரு ஜப்பானிய வீரனுக்குப் போர்க்காலத்தில் இன்பமளிக்கும் விலைமாதுவைப் போல. அவளது நடத்தையாலேயே அவள் அவனைத் தன்னிடமிருந்து விலகிச் செல்ல வைத்து விடுகிறாள். நாவலின் இரண்டாவது பகுதி யோங்-ஹையின் மைத்துனரின் பார்வையில் சொல்லப்படுகிறது. தவறான பெண்ணை மணந்து கொண்டதாக வருந்தும் அவன் ஹையின் பேச்சு, ஆடையுடுத்தும் விதம், உணவுண்ணாமையால் துருத்தித் தெரியும் அவளது கன்னத்து எலும்புகள் ஆகியவற்றால் கவரப்படுகிறான். அவன் மனைவியுடன் ஒப்பிடுகையில் அவள் அழகற்றவள்தான். ஆனால் அவள் வனாந்தரத்தில் வளரும் ஒரு மரத்தைப் போல புத்துணர்வைப் பரப்பிக் கொண்டிருப்பதாக அவனுக்குப் படுகிறது. ஆனால் இத்தருணத்தில் ஹை இறைச்சியைத் துறந்து இரண்டு ஆண்டுகளாகியிருக்கிறது. அவளது திருமண வாழ்க்கை முறிந்து, மனநலக் காப்பகத்தில் பல மாதங்கள் கழிக்கிறாள். அவளது மைத்துனன் ஒருமுறை தன் மனைவி மூலம் ஹையின் பிருஷ்டத்தில் உள்ள மங்கோலியன் குறியைப் பற்றிக் கேள்விப்படுகிறான். அந்தப் பிம்பத்தால் உந்தப்பட்டு, நிர்வாணமாக உடலுறவில் ஈடுபடும் ஆண்களும் பெண்களும் கொண்ட, அவர்களின் உடல் முழுவதும் பூக்களால் வர்ணம் பூசப்பட்ட ஓவியங்களால் தன் நோட்டுப் புத்தகத்தை நிரப்புகிறான். பின் அவளது நிர்வாண உடலில் பூக்களை வர்ணம் தீட்டுவதற்கு ஒப்புக்கொள்ள வைக்கிறான். அந்தச் செயலின் மூலம் அவள் மீது தனக்குள்ள காம இச்சையிலிருந்து விடுதலையடைகிறான். என்கிறான். பெண்ணின் அந்தரங்க வாழ்க்கைக்குள்ளாக வெளிச்சம் பாய்ச்சியதில் இந்த நாவல் வழக்கத்துக்கு மாறான ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கிறது. பெண்ணின் வலி, இன்பம், ஆர்வம், வெறுப்பு, புரிந்து கொள்ள முடியாத தனிமை ஆகியவற்றை ஆராய்கிறது. இது பெண்ணிய நாவல் என்ற தோற்றத்தை முதலில் கொடுத்தாலும் இந்த நாவல் ஆராயும் விஷயங்கள் அதையும் மீறியவை. முதல் பகுதியில் திருமணம், சமூகம் என்ற இரு விஷயங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சும் நாவல், இரண்டாம் பகுதியில் கலை, பாலுணர்வு, பெண்ணுடல் போன்றவற்றின் மீதான பொதுப்பார்வையையும் ஆராய்கிறது. இறுதிப்பகுதியில் இயற்கை மற்றும் மரணம் அதன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஹை மரக்கறி உணவுக்கு மாறியது, தன்னை ஒரு மிருகமாக உணர்ந்து வாழ்வதை நிராகரிக்கும் ஒரு முயற்சி. மைத்துனரால் அவள் உடலெங்கும் தீட்டப்பட்ட வண்ணப்பூக்கள் அவளுக்கு வரும் கெட்ட கனவுகளிலிருந்து அவளுக்கு விடுதலை அளிக்கின்றன. முதல் பகுதியில் மூன்று ஆண்டுகள் மனநல காப்பகத்தில் கழிக்கும் அவள் மூன்றாம் பகுதியிலும் அங்கேயே கழிக்கிறாள். அவளை அங்கு வந்து சந்திக்கிறாள் அவளது சகோதரி. அவளது பார்வையில்தான் இந்த இறுதிப் பகுதி சொல்லப்படுகிறது. தன் குழந்தைப் பருவத்தை ஹையுடன் மிருகத்தனமான தந்தையுடன் கழித்த அவளது சகோதரிக்கும் ஹையின் நடத்தைகள் குழப்பத்தை விளைவிப்பதாகவே உள்ளன. ஹான் இதுவரை எட்டு நாவல்கள், பல குறு நாவல்கள், கட்டுரை மற்றும் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். “த ஒயிட் புக்” என்ற நாவலும் சர்வதேச புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டதுதான். அவரது இன்னொரு நாவலான “கிரீக் லெசன்ஸ்” பேசும் திறனை இழந்த பெண் ஒருத்தி பழைமையான கிரேக்க மொழியைக் கற்றுக் கொள்வதன் மூலம் அதை மீட்டெடுக்க முயலவதைப் பற்றியது. “ஒரு மொழியைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள விவரிக்க முடியாத நம்பிக்கையின் கொண்டாட்டம் இந்த நாவல்” என்று டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிடுகிறது. இருபது ஆண்டுகளாக இவரது படைப்புகளை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் கற்பித்து வரும் இலக்கியப் பேராசிரியர் அங்கி முகர்ஜி, “ அவரது எழுத்து உடலுக்கும், பால் பிரிவினைக்கும், அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்துக்குமான அரசியலைத் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டே இருக்கிறது. ஆனால் ஒருபோதும் அது இலக்கியத்துக்கு உரிய கற்பனையையும், அழகியலையும் விட்டு விடுவதில்லை. அவரது எழுத்து எப்போதும் உபதேசம் செய்வதில்லை. மாறாக அது விளையாட்டுத்தனமாகவும், வேடிக்கையாகவும், அதிமெய்யியல் தன்மையோடுமே இருக்கின்றது,” என்று குறிப்பிடுகிறார். மேலும்: Han Kang: ‘Writing about a massacre was a struggle. I’m a person who feels pain when you throw meat on a fire’ | Books | The Guardian Korean writer Han Kang in line for prestigious award (joins.com) South Korean author Han Kang wins 2024 Nobel Prize in literature | Arts and Culture News | Al Jazeera Leaves Sprouting on her Body – Adam Mars-Jones – London Review of Books The Darkness of Primitive Desires – LARB Han Kang Is Awarded Nobel Prize in Literature – The New York Times இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு – தினமணி https://solvanam.com/2024/10/10/ஹான்-காங்-இலக்கியத்திற்/