Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. முச பிடிக்கிற நாய் தனது தொகுதியில் எப்படி தோற்றார் என்ற கேள்விக்கு பதில் என்ன? திரும்பவும் அரசியலுக்குள் வர இன்னொருவரின் தலை உறுள வேண்டும் என்பது எத்ததைய வெ ட்க கேடாக உங்களுக்கு தெரிக்கிறது? தற்போதைய நிலையில் கார்ணி தான் சரியான தேர்வு. பொருளாராதாரத்துக்கு பின் எதுவும். நீங்களும் மனைவியும் பியர் பொலிவியர்ருக்கு வாக்களித்ததால் மொத்த கனடாவும் அவர்களுக்கு வாக்களித்து வெல்ல வேண்டும் என்பது இ;ல்லை தானே. மக்கள் உங்களை விட கெட்டிக்காரர்களாக இருக்க வாய்ப்புண்டு.
  2. உங்களின் "லாம் " விடைகள் யார் நீலன் என்பதை என்னை மட்டுமில்லை என்போன்றவர்களின் இமையை உயர்த்த வைத்தது. நீலனை சிறிலங்கா அரசு 100 வீதம் பயன்படுத்திக் கொண்டது என்பதைமட்டும் உறுதியாக நம்புகிறேன். அவரின் கொலையை எப்போதும் நியாயப்படுத்தவில்லை.
  3. சுமந்திரன் தோற்ற போது உங்களுக்கு ஏன் கறன் பாயவில்லை. இப்போ தமிழ் நாட்டை ஒப்பிட வந்து விட்டீர்கள்? சாவகச்சேரி , பருத்திதுறை தொகுதிகளில் தமிழரசு கட்சி சேர்ந்து பயணிக்க தயாரா? அல்லது புறணி கூறலா???
  4. அலசல்: கார்ணி – ட்றம்ப் சந்திப்புசிவதாசன்கனடிய பிரதமர் கார்ணியின் அமெரிக்க ஜனாதிபதியுடனான முதல் சந்திப்பு நேற்று நடந்தது. யூக்கிரெய்ன் அதிபர் செலென்ஸ்கியின் சந்திப்பைப்போல இதுவும் வெடித்துச் சிதறுமோ என ஐயப்பட்ட சிலருக்கு ஆறுதல். செலென்ஸ்கி சந்திப்பின் பின்னர் தேனீர் கூட் வழங்காமல் அவமதித்து அனுப்பியமைக்கும் கார்ணியின் சந்திப்பின் பின்னர் வெள்ளை மாளிகையில் விருந்து வைத்து அனுப்பியமைக்குமுள்ள வித்தியாசம்?: கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு! பாவம் செலென்ஸ்கி வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை. ட்றம்ப் கார்ணியை உபசரித்து அனுப்பியமை ட்றூடோ, செலென்ஸ்கி உட்படப் பலருக்கு பாடம் புகட்டுவதற்காகவும் இருக்கலாம். இதைத் திட்டமிட்டுச் செய்யக்கூடியவர் ட்றம்ப். இரண்டாம் ஆட்சியில் ட்றம்ப் தன்னை ஒரு சக்கரவர்த்தியாகவே feel பண்ணத் தொடங்கிவிட்டார். சாமரங்கள், ஆலவட்டங்கள் இல்லையே தவிர மந்திரிகள், ஆலோசகர்கள் புடைசூழ அவர் முன் சமூகம் தரும் பிரதானிகள் – நெட்டன்யாஹு தவிர்ந்த – அனைவருக்கும் ஒரு protocol உண்டு. ட்றம்புடன் பேசுவதற்கென்று ஒரு மொழியுண்டு. செலென்ஸ்கிக்கு அது தெரியாது. மூக்குடைபட்டு அனுப்பப்பட்டார். கார்ணிக்கு அது தெரியும். “நீங்கள் பல சொத்துக்காரர். எல்லாச் சொத்துக்களும் விற்பனைக்கென்று வருவதில்லை. நீங்கள் இருக்கும் இந்த வெள்ளை மாளிகைகூட விற்பனைக்கில்லை. விரைவில் உங்களை அழைத்துக் கெளரவிக்கவிருக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையும் அப்படித்தான்” என ட்றம்பின் மொழியிலேயே நக்கலும் நளினமுமாகச் சிரித்துக்கொண்டே கூறினார் கார்ணி. “கனடாவின் சொந்தக்காரரோடு பேசிவிட்டுத்தான் வருகிறேன். அது ஒருபோதும் விற்பனைக்கு வரப்போவதில்லை” என அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருந்தார். அதற்காக ‘கனடாவை அபகரிக்கும்’ திட்டத்தை ட்றம்ப் விட்டுவிட்டதாக எண்ணிவிடக்கூடாது. ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் எடுத்த போதிருந்த ட்றம்ப் தான் இப்போதும் இருக்கிறார். அவருக்குத் தேவை அமெரிக்க உற்பத்தித் துறை அமெரிக்காவுக்கு மீள வேண்டும் என்பதே. அதில் அவரது பிடி தளரவேயில்லை. “கனடாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் எங்களுக்குத் தேவையில்லை” என்பதை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். தேர்தலுக்கு முன்னர் முன்வைத்த வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் ஒப்புவிக்கிறார். “கொஞ்சக் காலத்துக்கு அமெரிக்கர்கள் கஷ்டப்படத்தான் போகிறார்கள். அது பரவாயில்லை” என எளிமையாகக் கடந்து போகிறார். எனவே அவரது மனதை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் கார்ணி அங்கு சென்றிருந்தால் அதில் அவருக்கு வெற்றியில்லை. ஆனால் செலென்ஸ்கியின் சந்திப்பைப்போல “முற்றும்” போடப்படாமல் கார்ணியின் சந்திப்பு “தொடரும்” எனக்குறியிடப்பட்டிருப்பது கார்ணியின் வெற்றி. கார்ணிக்கு முன்னிருந்த ஜே.டி. வான்ஸ் மற்றும் மார்க்கோ ரூபியோ போன்ற விகடகவிகள் கார்ணிக்கு முன் பவ்வியமாக இருந்தமை அவதானிக்கத்தக்கது. வாய்களைத் திறந்து அவமானப்பட அவர்களுக்கு விருப்பமில்லாமலிருக்கலாம். ஆனால் வழக்கமான ஊடகக் கொழுந்துகளில் ஒன்று வெடி ஒன்றைக் கொழுத்திப் போட்டது. அதைக் கார்ணி மிகவும் இலாவகமாகத் திருப்பி அவரிடமே கையில் கொடுத்துவிட்டார். நாடு திரும்பியதும் அவருக்கு நிறைய வேலை இருக்கிறது. நோஞ்சான் அரசாங்கத்தில் நல்ல, அனுபவமுள்ள மந்திரிகளை நியமிக்க வேண்டும். பொய்லியேவுக்கு அட்மிசன் கிடைக்குமட்டும் வகுப்பு அமைதியாகவிருக்கும். கடற்கரையில்லா அல்பேர்ட்டா மாகாணத்தின் முதல்வி பிரிந்துபோவதற்கான மக்கள் வேட்கையை அறிய கருத்துக்கணிப்பை நடத்தப் போகிறாராம். சில வேளைகளில் அல்பேர்ட்டாவை மனதில் வைத்துக்கொண்டுதான் ட்றம்ப் “51 ஆவது மாநில” கர்ச்சிப்பைச் செய்கிறாரோ என்னவோ. அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் எரிபொருள் பெரும்பாலும் இங்கிருந்துதான் போகிறது. என்னவோ இப்பெண்ணும் ட்றம்பின் மார்-எல்-லாகோ மாளிகைக்கு விஜயம் செய்து வந்தவர். எதையும் அறுதியாகக் கூற முடியாது. சந்திப்பின் பாகம் -2 வரும் வரை.. https://veedu.com/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/?fbclid=IwY2xjawKImvFleHRuA2FlbQIxMQBicmlkETFJVWhyRnJkbXJMYU8wckF0AR4ZWz1Sy28_a0y8z08kf97PqvpvEm7xrH_fNN1CB0tjZql8TLo5kIoHkWiX_A_aem_SSjgb-vsIHTsLaBveiSCOQ
  5. வடக்கு கட்சிகள் என்பிபியை ஆட்சியமைக்க அழைக்கின்றவாம்! 00] http://seithy.com/siteadmin/upload/Bimal0Ratnayake-070525-seithy.jpg வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியமைக்க, தேசிய மக்கள் சக்தியிடம் (NPP) கோரிக்கை விடுத்துள்ளன என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். வடக்கில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும், சில கட்சிகள் ஆட்சியமைக்க தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன என்றும் அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். வடக்கில் தமது கட்சி 150 இடங்களைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். "பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சிகள் கூட அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன. கட்சியின் கொள்கையின்படி நாங்கள் அதைப் பற்றி முடிவு செய்வோம்" என்றும் அவர் கூறினார். http://seithy.com/breifNews.php?newsID=332953&category=TamilNews&language=tamil
  6. சம்பவம் உண்மை போல் உள்ளதே??? இணையவன் சொன்னது போல் சீன ஆயுதங்களால் தாக்கி இருப்பார்களா? How Many Indian Rafael Jets Get Destroyed? PM Shehbaz Tells in National Assembly
  7. யாழ்ப்பாணம் மாநகர சபை தமிழ் தேசிய பேரவை – 12 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 13 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 10 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 04 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 04 ஆசனங்கள். ஐக்கிய தேசிய கட்சி – 01 ஆசனம் ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனம் 13 vs 32
  8. வேலணை பிரதேச சபைக்கான முடிவுகள்! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் வேலணை பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. வேலணை பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 2,673 வாக்குகள் - 8 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 1,840 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) - 1,313 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 976 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான முடிவுகள்! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 9,881 வாக்குகள் - 11 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 7,908 வாக்குகள் -9 உறுப்பினர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 5,047 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 4,543 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முடிவுகள் May 7, 2025 - 03:48 AM - 0 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 10,370 வாக்குகள் - 13 உறுப்பினர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 9,124 வாக்குகள் - 12 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 7,702 வாக்குகள் - 10 உறுப்பினர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) - 3,567 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 3,076 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் நாவிதன்வௌி பிரதேச சபைக்கான முடிவுகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. நாவிதன்வெளி பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 4,154 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் சுயாதீன குழு - 4 (IND4) - 2,175 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் சுயாதீன குழு - 1 (IND1) - 1,351 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் சுயாதீன குழு - 3 (IND3) - 1,085 வாக்குகள் - 1 உறுப்பினர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1,075 வாக்குகள் - 1 உறுப்பினர் நாவிதன்வௌி பிரதேச சபைக்கான முடிவ...நாவிதன்வௌி பிரதேச சபைக்கான முடிவுகள்உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. நாவிதன்வெளி பிரதேச சபைய...
  9. சாவகச்சேரி நகர சபைக்கான முடிவுகள் May 7, 2025 - 04:06 AM - 0 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. சாவகச்சேரி நகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC) - 2,959 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) - 2,594 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 1,445 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA ) - 738 வாக்குகள் - 2 உறுப்பினர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) - 535 வாக்குகள் - 1 உறுப்பினர் காரைதீவு பிரதேச சபைக்கான முடிவுகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. காரைதீவு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) - 3,680 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,481 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1,490 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) - 1,100 வாக்குகள் - 1 உறுப்பினர் சுயேட்சைக் குழு (IND1) - 479 வாக்குகள் - 1 உறுப்பினர் https://adaderanatamil.lk/news/cmad54azl004dqpbs5kkd0qvg நானாட்டான் பிரதேச சபைக்கான முடிவ...நானாட்டான் பிரதேச சபைக்கான முடிவுகள்உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.நானாட்டான் பிரதேச சபைக்கான முடிவுகள் May 7, 2025 - 04:45 AM - 0 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. நானாட்டான் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP) - 4,518 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) - 3,006 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,856 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் சுயாதீனக் குழு (IND1) - 1,380 வாக்குகள் - 2 உறுப்பினர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 1,314 வாக்குகள் - 2 உறுப்பினர் மன்னார் நகர சபைக்கான முடிவுகள்! May 7, 2025 - 04:33 AM - 0 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மன்னார் மாவட்டம் மன்னார் நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. மன்னார் நகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 2,255 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,123 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,943 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 1,807 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் மன்னார் நகர சபைக்கான முடிவுகள்!...மன்னார் நகர சபைக்கான முடிவுகள்!உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மன்னார் மாவட்டம் மன்னார் நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. மன்னார் நகர சபையில் இலங்கை தமி...
  10. Prime Minister of Islamic Republic of Pakista இந்தியாவால் திணிக்கப்பட்ட இந்தப் போர் நடஇந்தியாவால் திணிக்கப்பட்ட இந்தப் போர் நடவடிக்கைக்கு வலுக்கட்டாயமாக பதிலளிக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமையும் உள்ளது, மேலும் பலமான பதிலடி கொடுக்கப்படுகிறது. முழு தேசமும் பாகிஸ்தான் ஆயுதப் படைகளுடன் நிற்கிறது, மேலும் முழு பாகிஸ்தான் தேசத்தின் மன உறுதியும் உற்சாகமும் உயர்ந்தது. பாகிஸ்தான் தேசமும், பாகிஸ்தான் ஆயுதப் படைகளும் எதிரிகளை எவ்வாறு கையாள்வது என்பது அறிந்தவை. எதிரிகள் தங்கள் தீய இலக்குகளில் வெற்றிபெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
  11. அமைச்சர் பதவி வேணுமல்லவா உக்ரேனிய அம்மணிக்கு.
  12. எனும் போது ஒரு சமூக விரோதியை கூட கொன்றிருக்க கூடாது. சமூகம் தான் அவனை சமூக விரோதி ஆக்கியது. ஏன் சுட்டு கம்பத்தில் கட்ட வேண்டும்???
  13. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக புலிகள் இருந்த்தார்கள். சந்திரிக்காவோ அல்லது நீலனோ ஒரு பேச்சும் நடத்தாமல் தீர்வு கண்டு விடுவார்களா?? அல்லது ஒரு திணிப்பை திணிப்போம் என தொடங்கினார்களா? அல்லது உலகத்துக்கு தாங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முயல்கிறோம் என நடிக்க சந்திரிக்கா நீலனை பயன்படுத்தினாரா??
  14. போகவில்லை.நோர்வேயின் ந(டி)டுநிலைமையை நம்பி தான் புலிகள் பேச்சுவாத்தைக்கு போனார்கள்.
  15. இதொரு சின்ன பிரச்சனை. Global NewsFreeland says Mark Carney is her son’s godfather | Watch...Watch Freeland says Mark Carney is her son’s godfather Video Online, on GlobalNews.ca2 min --------
  16. இன்றும் நாளையும் பாடசாலைகள் மூடப்படும் அரசு அறிவித்துள்ளது.
  17. UL 122 எனும் சிறிலங்கா விமானம் சென்னையில் இருந்து கொழும்பு வந்த போது அதில் 6 காஸ்மீரிய பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து கொழும்பில் அவ்விமானம் தரை இறங்கியதும் சல்லடை போட்டு தேடப்பட்டு யாரும் கண்டு பிடிக்கப்படவில்லையாம்.
  18. அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கட்டுரை, கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு மன்னாரில் வைத்து சம்பந்தர் சொன்னது என்ன? கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் போன்ற கருத்துருவாக்கிகள் ஒன்றாகச் சந்தித்த மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. கடந்த 7 ஆண்டுகளில் இப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்தது இதுதான் முதல் தடவை எனலாம். ஏற்கனவே, சில ஆண்டுகளுக்கு முன் மன்னாரில் இதைப்போன்ற வேறொரு சந்திப்பு நிகழ்ந்தது. முன்னாள் மன்னார் ஆயரால் ஒழுங்குபடுத்தப்பட்ட அந்த சந்திப்பில் அரசியல் கட்சி தலைவர்களும், சிவில் சமூக பிரதிநிதிகளும், மதகுருக்களும் பங்குபற்றியிருந்தார்கள். அந்த சந்திப்பின் முடிவில் தமிழ் தேசியப் பேரவை ஒன்றை உருவாக்குவதென்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், பிறகெதுவும் நடக்கவில்லை. அது நடந்து மூன்று ஆண்டுகளின் பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றொரு சந்திப்பு நடந்திருக்கிறது. முன்னைய சந்திப்பின் விரிந்த வடிவம் இது. இதில் முடிவுகள் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. முதலில் அரசியல் விமர்சகர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அதன் பின் மதகுருமார்களும், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். மதிய இடைவேளைக்குப்பின் அரசியற்கட்சித் தலைவர்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். முடிவில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தனது கருத்துக்களைத் தெரிவித்தார். சுமாராக எட்டு மணித்தியாலங்கள் நீடித்த இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளே பங்குபற்ற அழைக்கப்பட்டிருந்தன. ஆனால், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை. எனவே, கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கு பற்றிய ஒரு சந்திப்பாகவே அது முடிந்தது. அதில் கருத்துத் தெரிவித்த விமர்சகர்கள், மதகுருமார்கள், சிவில் அமைப்புக்ளைச் சேர்ந்தவர்கள் போன்றோர்களை விடவும் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சி பிரமுகர்கள் தெரிவித்த கருத்துக்களே அதிகம் காட்டமாக இருந்தன. தமது தலைமையை நோக்கி நேரடியாகவும், மறைமுகமாகவும் கூர்மையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. காலை 9.30 மணியிலிருந்து பி.ப 5.30 மணி வரையிலும் தன் மீது வைக்கப்பட்ட எல்லா விமர்சனங்களையும் சம்பந்தர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். முதுமை காரணமாக மிக நீண்டநேரம் அவரால் ஆசனத்தில் நிமிர்ந்து இருக்க முடியவில்லை. ஆசனத்தின் ஒரு மூலையில் சரிந்து உட்கார்ந்தவாறு ஒரு கையால் முகத்தைத் தாங்கியபடி ஒன்றில் அரைக்கண்களைத் திறந்தபடி அல்லது முழுவதுமாக கண்களை மூடியபடி எல்லாவற்றையும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். முடிவில் அவர் பதில் சொன்னார். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அநேகமாக நேரடியாகப் பதில் சொல்லவில்லை. பெருமளவிற்கு மறைமுகமாகவே பதில் வந்தது. ஆனால், பெரும்பாலான கேள்விகளுக்கு ஏதோ ஒரு பதில் சொல்லப்பட்டது. அவர் பதில் கூறியபின் அந்த பதில்களின் அடிப்படையில் அவரைக் கேள்வி கேட்பதற்கு ஏற்பாடுகள் இருக்கவில்லை. நேரமும் போதவில்லை. தவிர இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர் பதிலைச் சொல்லிவிட்டு எழுந்து சென்று விடுவதே வழமை என்று அவரது கட்சிக்காரர்கள் சொன்னார்கள். இப்படியாக அவருடைய பதில்களை வைத்து கேள்வி கேட்கக்கூடிய ஒரு சூழல் இல்லையென்றால் அது முற்றுப் பெறாத விவாதமாகவே அமையும் என்று அவரை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். இது போன்ற எல்லாக் கூட்டங்களிலும் இறுதியிலும் இறுதியாக அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு எழுந்து போகும் ஒரு நிலமைதான் தொடர்ந்து வருகிறது. இதுதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சந்திப்பிலும் நடந்தது. இவ்வாறான சந்திப்புக்கள் முழு அளவிலான விவாதங்களாக மாற்றப்படாதவரை அவை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விளைவுகளைத் தரப்போவதில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விமர்சனங்களில் உண்மை உண்டு. அதேசமயம் இது போன்ற சந்திப்புக்கள் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கத்தை பலப்படுத்தக் கூடியவை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அச்சந்திப்பின் விளைவாக பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படாமல் விடக்கூடும். ஆனால், அந்தச் சந்திப்பின் முடிவில் சம்பந்தர் தெரிவித்த கருத்துக்களுக்கூடாக கூட்டமைப்பின் எதிர்கால வழிவரைபடமானது ஓரளவுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எனவே, சம்பந்தர் தெரிவித்தவற்றை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். இலங்கைத் தீவில் இதுவரையிலும் உருவாக்கப்பட்ட எந்த ஒரு யாப்பும் தமிழ் மக்களின் பங்களிப்போடு உருவாக்கப்படவில்லை. ஆனால், இம்முறை தமிழ் மக்களின் பங்களிப்போடு ஒரு யாப்பை உருவாக்கத்தக்க நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. நாடாளுமன்றம் சாசனப்பேரவையாக மாற்றப்பட்டிருக்கிறது. யாப்புக்கான வழிகாட்டல் குழுவில் கூட்டமைப்பும் பங்கேற்கிறது. வழிகாட்டல் குழுவின் கீழ் உபகுழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் கூட்டமைப்பு பங்குபற்றுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் புதிய யாப்பானது வரவிருக்கும் வரவு செலவுத்திட்ட அறிக்கைக்கு முன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே கூறியிருக்கின்றார். ஆனால், நடப்பு நிலைமைகளை வைத்துப் பார்த்தால் அதைவிட வேகமாக அதாவது நவம்பர் மாதத்திற்கு முன்னதாகவே புதிய யாப்பானது முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அந்த யாப்பு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும். அப்படியொரு பெரும்பான்மை ஜெயவர்த்தனவிடம் இருந்தது. சந்திரிக்காவிடம் அப்படியொரு பெரும்பான்மை இருந்திருந்தால் அவருடைய தீர்வுப்பொதி நடைமுறைக்கு வந்திருக்கும். அதன்பின் மஹிந்தவிடம் அப்படியொரு பெரும்பான்மை இருந்தது. இப்பொழுதுள்ள நாடாளுமன்றத்தில் அரசாங்கம் அப்படியொரு பெரும்பான்மையைப் பெறுவதாக இருந்தால் ஆறு வாக்குகள் தேவை. கூட்டமைப்பிடம் பதினாறு வாக்குகள் உண்டு. ஐ.தே.கட்சியும் ஸ்ரீ.ல.சு.கட்சியும் இரண்டு ஆண்டுகளுக்கு இணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முன்பு ஒப்புக் கொண்டிருந்தன. அதன்படி இந்த ஆண்டின் முடிவு வரையிலும் இத்தேசிய அரசாங்கத்தை அவர்கள் பாதுகாப்பார்கள். இத்தேசிய அரசாங்கத்தை கூட்டமைப்பும் ஆதரித்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும். அதன் மூலம் புதிய யாப்புக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறலாம். அதன்பின் அடுத்த ஆண்டில் அந்த யாப்புக்கு பொது மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டி இருக்கும். அதற்காக ஒரு வெகுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டி வரும். அந்த வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி பெற்றால் புதிய யாப்பு நடைமுறைக்கு வரும். அதாவது, இனப் பிரச்சினைக்குரிய ஒரு தீர்வையும் உள்ளடக்கிய புதிய யாப்பொன்று அடுத்த ஆண்டில் நடைமுறைக்கு வரும். சம்பந்தர் மறைமுகமாக வெளிப்படுத்திய கூட்டமைப்பின் வழி வரைபடம் இதுதான். இதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு எப்படி இருக்கும் என்பது பற்றி அவர் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. அதை அவருடைய பேச்சின் தொடர்ச்சிக்கூடாகவும் அவர் தனது பதிலைப் படிப்படியாகக் கட்டியெழுப்பிய போக்கிற்கூடாகவும் ஊகிக்கக்கூடியதாக இருந்தது என்பதே சரி. அவர் சமஷ்டி பற்றிய உலகளாவிய உதாரணங்களை ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டு வந்து முடிவில் ஒற்றை ஆட்சிக்குள் சமஷ்டி என்ற பொருள்பட ஓர் ஆங்கில வார்த்தையைப் பிரயோகித்தார். (Unitary Federalism) அப்படியொரு முறைமை ஒஸ்ரியாவில் உள்ளது என்றும் குறிப்பிட்டார். இதை ஏற்கனவே சில மாதங்களிற்கு முன் ரணில் விக்ரமசிங்க கூறி விட்டார். அதைப் போலவே கடந்த ஆண்டு இலங்கைக்கு வந்து போன மகாத்மாகாந்தியின் பேரனும் இதே தொனிப்பட – ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி உணர்வுள்ள ஒரு தீர்வு ஒன்றைப்பற்றி – குறிப்பிட்டிருந்தார். தமது தீர்வுப் பொதியை தமிழ் மக்களின் முன் வைத்து அதை அவர்களுக்கு விளங்கப்படுத்தப் போவதாகவும் சம்பந்தர் தெரிவித்தார். அத் தீர்வையும் உள்ளடக்கிய புதிய யாப்பை எதிர்த்து ராஜபக்‌ஷ அணியினர் விரைவில் போராட்டமொன்றை நடத்த இருப்பதாகவும், அதை அவர்கள் குழப்பப்போவதாகவும், ஆனால் தமிழர்கள் அதை குழப்பக்கூடாதென்றும் அவர் கேட்டுக் கொண்டார். சந்திரிக்காவையும், மைத்திரியையும், ரணிலையும் அவர் நம்புகிறார் என்பது அவருடைய பேச்சில் தொனித்தது. “நாங்கள் முழுநாட்டுக்குமான மாற்றத்தைத்தான் கொண்டு வந்தோம். வடக்கு கிழக்கிற்கு மட்டுமல்ல” என்று கூறிய அவர், இந்த அரசாங்கத்தை அதாவது ஆட்சி மாற்றத்தை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தினார். ஆட்சி மாற்றத்தின் பின்னரும் நிகழ்ந்து வரும் பௌத்த மயமாக்கல் சிங்கள மயமாக்கல் போன்றவற்றையாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்று சுரேஸ் பிரேமச்சந்திரன் கேட்டிருந்தார். அவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்றும், அரசாங்கத்திற்கு எதிரான தரப்புகளும் படைக்கட்டமைப்புக்குள் மஹிந்தவுக்கு ஆதரவாக காணப்படும் அணியும்தான் மேற்கண்டவாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அவர்கள் எல்லாரும் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் சம்பந்தர் தனது பதிலில் கூறினார். இது ஏறக்குறைய இவ்வாண்டு ஜெனிவாவில் காணப்பட்ட ஒரு நிலைமைதான். இந்த அரசாங்கம் கடுமையான சவால்களுக்கு மத்தியில் முன்னேறிக்கொண்டிருப்பதாகவும், அதை பலவீனப்படுத்தக்கூடாது என்றும் சில மேற்கத்தைய நாட்டு பிரதிநிதிகள் தமிழ் தரப்பிடம் கூறியிருக்கிறார்கள். அதாவது, இந்த அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் விதத்தில் நகர்வுகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம் என்ற மறைமுகச் செய்தி அதில் உண்டு. மன்னாரில் வைத்து சம்பந்தரும் அதைத்தான் சொன்னார். அதாவது, மஹிந்த செய்வதைப் போல தமிழ் மக்களும் இந்த அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தக் கூடாது என்று தொனிப்பட. எனவே, மேற்கண்ட அனைத்தையும் தொகுத்து நாம் பின்வருமாறு ஒரு முடிவுக்கு வரலாம். மஹிந்த குழப்பா விட்டால் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வையும் உள்ளடக்கிய புதிய யாப்பொன்று வருமாண்டு அமுலுக்கு வரும். அதற்குரிய வாக்கெடுப்பில் தமிழ் மக்களை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கூட்டமைப்பு கேட்கப்போகிறது. மஹிந்தவை மறுபடியும் ஒருமுறை தோற்கடிப்பதாக நம்பிக்கொண்டு தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும். ஆனால், இங்குள்ள முக்கியமான கேள்வி என்னவெனில், தமிழ் மக்கள் ஒரு தீர்வுக்காக வாக்களிக்கப் போகிறார்களா? அல்லது மஹிந்தவுக்கு எதிராக வாக்களிக்கப் போகிறார்களா? என்பதுதான். ஒரு தீர்வுக்காக வாக்களிப்பது நடைமுறையில் மஹிந்தவுக்கு எதிராக வாக்களிப்பதுதான் என்று காட்டப்படப்போகிறது. வரப்போகும் தீர்வு எத்தகையது என்பதை மக்களுக்கு விளங்கப்படுத்தப் போவதாக சம்பந்தர் கூறுகிறார். யாப்பு விவகாரங்கள் பெருமளவுக்கு சிக்கலானவை. சாதாரண வாக்காளர்கள் அவற்றில் அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை. ஒற்றையாட்சியா? சமஷ்டியா? என்பதில் கூட அந்த வார்த்தைகளை அவற்றுக்கான அரசறிவியல் பெறுமானங்களோடு சாதாரண வாக்காளர்கள் விளங்கிக் கொள்வார்கள் என்பதற்கில்லை. சாதாரண வாக்காளர்கள் பெரும்பாலும் உணர்ச்சிகரமான விவகாரங்களால் தான் தூண்டப்படுகிறார்கள். அறிவுபூர்வமான விவகாரங்களால் தூண்டப்படும் வாக்காளர்களின் தொகை ஒப்பீட்டளவில் குறைவு. எனவே, இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்லது யாப்பு போன்ற அறிவுபூர்வமான விவகாரங்களை விடவும் மஹிந்த எதிர்ப்பு போன்ற உணர்ச்சிகரமான விவகாரங்களே அதிகம் எடுபடும். எனவே, ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி அல்லது சிலசமயம் ஒற்றையாட்சிக்குள் “தமிழரசு” என்ற விதமாக வார்த்தைகளை வைத்து விளையாடும் பொழுது எத்தனை விகிதமான சாதாரண வாக்காளர்கள் அந்த சூழ்ச்சியை விளங்கிக் கொள்ளப்போகிறார்கள். கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய வடக்கு கிழக்கு இணைந்த ஒரு சமஷ்டி பற்றியே கூறப்பட்டுள்ளது. அந்தச் சமஷ்டிக்கும் வரப்போகும் சமஷ்டி என்று சொல்லப்படும் ஏதோ ஒன்றுக்கும் இடையில் இருக்கக்கூடிய வேறுபாடுகளை சாதாரண தமிழ் வாக்காளர்கள் எப்படி விளங்கிக் கொள்வார்கள்? அதிலும் குறிப்பாக மிகக் குறுகிய கால அவகாசத்துள் தீர்வுப் பொதியை முன்வைத்து விளக்கமளித்துவிட்டு வாக்களிக்குமாறு கேட்கப்படும் பொழுது சாதாரண தமிழ் வாக்காளர்கள் எப்படிப்பட்ட முடிவை எடுப்பார்கள்? இங்கு கால அவகாசம் என்பது ஒரு முக்கியமான அம்சம். யாப்புருவாக்கத்தில் சாதாரண சனங்களின் கருத்துக்களைப் பெறப் போவதாக சொல்லிக் கொண்டு உருவாக்கப்பட்ட குழுவானது மிகக் குறுகிய காலமே செயற்பட்டது என்பதை சுட்டிக் காட்ட வேண்டும். பல தசாப்தகால பிரச்சினை ஒன்றுக்கான தீர்வை சில மாதங்களுக்குள் விவாதித்து முடிவெடுப்பது எப்படி? நடப்பு நிலைமைகளை வைத்துப் பார்த்தால் தீர்வுப் பொதியை அல்லது புதிய யாப்பை சாதாரண தமிழ் மக்கள் முன்னிலையில் வைத்து விவாதிப்பதற்கான கால அவகாசம் மிகக் குறைவானதாகவே தெரிகிறது. ஏனெனில், சம்பந்தர் கூறுவது போல இப்போதுள்ள தேசிய அரசாங்கத்திற்கான உடன்படிக்கை முடிவுறும் காலமும் புதிய யாப்புக்கான வாக்கெடுப்புக் காலமும் ஏறக்குறைய நெருங்கிய இடைவெளிக்குள் வருகின்றன. எனவே, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டியா? அல்லது ஒற்றையாட்சிக்குள் சமஷ்டியா? என்ற வாதப் பிரதிவாதங்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஆழமாகவும், பரவலாகவும் நடத்தப்படுமா? அல்லது கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக் காட்சியில் வருவது போல “மற்ற வாழைப்பழம் எங்கே?” என்று கேட்டால் அதாவது “நீங்கள் வாக்குறுதி அளித்த சமஷ்டி எங்கே?” என்று கேட்டால் “அதாண்ணே இது” என்று கூறப்போகிறார்களா? அந்த நகைச்சுவைக் காட்சியில் செந்தில் திரும்பத் திரும்ப அப்பிடிச் சொல்லும் போது ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த கவுண்டமணி அழத் தொடங்கி விடுவார். வருமாண்டில் சில சமயம் தீர்வற்ற தீர்வு ஒன்றுக்கு விரும்பி வாக்களித்து விட்டு அதன்பின் தமிழ் மக்களின் நிலையும் கவுண்டமணியின் நிலைமையைப் போலாகிவிடுமா? நிலாந்தன் எழுதிய இக்கட்டுரை ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் முதலில் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. Maatramமன்னாரில் வைத்து சம்பந்தர் சொன்னது என்ன?கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊ…
  19. தமிழீழம் என்ற கோரிக்கையை முதன் முதலில் முன்வைத்த வி. நவரட்ணம் ஐயா 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி காலமானார். 2005 ஆம் ஆண்டின் ஒரு பேட்டியில், தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே அரசாங்கத்தின் கீழ் வாழ முடியாது, தமிழர்களுக்கென்று தனிநாடு மட்டுமே இதற்கான தீர்வு என்று அவர் வலியுறுத்தியிருந்தார். இவரது கட்சி 1970 ஆம் ஆண்டின் தேர்தலில் போட்டியிட்டபோது சிறியளவு ஆதரவே இருந்தது. ஆனால் சில வருடங்களுக்குள்ளாகவே இவரது கட்சிக்கு தமிழர்கள் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தன. 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது இவரது கட்சிக் கொள்கையின் நகல் என்றும் நவரட்ணம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். நவரட்ணம் அவர்கள் 1910 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 18 ஆம் திகதியன்று ஊர்காவற்றுறையிலுள்ள கரம்பனில் பிறந்தார். இவர் இலங்கை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று 58 ஆண்டுகளாக சட்டத்தரணியாக இருந்தார், 1963 முதல் 1970 ஆம் ஆண்டு வரையில் ஊர்காவற்றுறை தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவராவார். தந்தை செல்வா தலைமையில் 1949 ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சி உருவாக்கப்பட்டபோது திரு நவரட்ணம் மற்றும் டாக்டர் ஈ.எம்.வி நாகநாதன் ஆகியோர் அக்கட்சியின் கூட்டு செயலாளர்களாக இருந்தார்கள். ஆனால் 1970 ஆம் ஆண்டில் தனிக் கட்சி உருவாக்கித் தேர்தலில் நின்றபோது அவரது கட்சி உறுப்பினர்கள் அனைவருமே தோல்வியைத் தழுவினர். ஆனால் ஆறு ஆண்டுகளுக்குள் நவரட்ணம் அவர்களின் அரசியலை அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஆதரித்தன. 1991 ஆம் ஆண்டில் இவர் கனடா, மொன்றியலில் இருந்த காலகட்டத்தில் “தமிழ் இனத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் ” (“The Fall and Rise of The Tamil Nation” என்ற நூலை எழுதினார். இதன் இரண்டாம் பதிப்பு 1995 இல் வெளிவந்தது. தமிழர் இறைமை என்பது பேரம் பேச முடியாதது என்பது இந்நூலின் முக்கிய கருவாகும். 2005 ஆம் ஆண்டு பேட்டியின்போது, சுதந்திரத்தின் ஒருதலைப் பட்சமான பிரேரணையை ஈழத் தமிழர்கள் முன்மொழிய வேண்டும் என்று தனது கருத்தைத் தெரிவித்தார். சிறி லங்கா என்பது இலங்கை அல்ல. 1972 ஆம் ஆண்டு சட்டத்துடன் வந்த சிறி லங்கா என்பது சட்டவிரோதமானது. சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த அனைத்து அரசியலமைப்புக்களும் தமிழர்களை அடிமைப்படுத்தும் நோக்குடனேயே அமைக்கப்பட்டன என்றார் அவர். மேலும் அவரது கருத்துக்கள் சில வருமாறு: ஒஸ்லோவில் எதுவுமே நடக்கப் போவதில்லை. பிரபாகரன் வஞ்சிக்கப்படுவார் என்று நான் எண்ணவில்லை. இடைக்கால சுயாட்சி அமைப்பால் சிலவற்றை சாதிக்கலாம் என்று விடுதலைப் புலிகள் எண்ணியிருக்கலாம். ஆனால் இதன்மூலம் எதுவுமே நடக்கப்போவதில்லை என்பதே எனது கருத்தாகும். சில குறுக்குவழிகள் இருக்கக்கூடும் என்று இந்த நடைமுறையில் ஈடுபட்டுள்ளவர்கள் நினைக்கக்கூடும். ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. கடந்த காலங்களில் எத்தனை ஒப்பந்தங்கள் போடப்பட்டன? ஆனால் ஒன்றுகூட அமுலுக்கு வரவில்லை. புலிகள் இப்போது ஒரு வரிசையில் செல்கிறார்கள். எனக்கு இதுபற்றி பெரிதாக விளங்கவில்லை. ஆனால் எதுவும் சாதகமாக இருக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் எதிலும் ஈடுபடுவதிலும் அர்த்தமில்லை. அவை அனைத்துமே தமிழர்களை ஏமாற்றவே உள்ளன. நாங்கள் சமஷ்டி ஆட்சியைக் கேட்டோம். ஆனால் இதுகுறித்து நாங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளுமே தோல்வி கண்டன. ஆகவேதான் நான் தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்தேன். உடனிருக்க வேண்டிய தேவை இருப்பின், சிங்கள் மற்றும் தமிழ் இன நாடுகள் இருதரப்பு ஒப்பந்தங்களைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் கூட்டுக்குழு போன்ற தொடர்ச்சியான சூழ்ச்சிப் பொறிகள் எவையும் இருக்கக்கூடாது. இந்தியா அல்லது பிற நாடுகள் எவையுமே எங்களது அபிலாஷைகள் குறித்து எமக்கு கட்டளையிடக்கூடாது. நாங்களே எங்கள் தேவைகளைக் கவனிக்க வேண்டும். இந்தியா பற்றிக் கூறியுள்ள நவரட்ணம் அவர்கள், இரண்டு இந்தியாக்கள் உள்ளன. புதுடில்லி இந்தியாவிலிருந்து வேறுபட்டது. புதுடில்லிக்கு தனது நண்பர்கள் யார் என்பது தெரியாது. தமிழர்களை அடிமைப்படுத்தி தனக்கு நன்மைகளை அடையலாம் என அது நினைக்கிறது என்றார். இந்தியாவின் முக்கிய ஊடகங்கள் எழுதுபவற்றை வாசிக்கும்போது எனது இரத்தம் கொதிக்கிறது. சர்வதேச சமூகத்துக்கும் சிங்கள அரசியல் போக்கு குறித்து அவ்வளவாகத் தெரியாது. அண்மையிலேயே அவை ஓரளவுக்கு உணரத் தொடங்கியுள்ளன. சர்வதேசம் கடந்த கால வரலாற்றை உற்றுக்கவனிக்க வேண்டும். ஆனால் உலகை ஏமாற்றக் கூடிய அளவுக்கு சில தமிழர்கள் சிங்கள அரசாங்கத்துடன் தொடர்ந்து பிரச்சாரம் செய்வது சிங்களத்துக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாகும். இப்போக்கு திருச்செல்வத்துடன் தொடங்கியது. சந்திரிக்காவுடன் லக்ஷ்மன் கதிர்காமர் தமிழர்களுக்கு எதிரான போக்கைக் காட்டினார். கதிர்காமர் தன்னை ஒரு மனிதராகப் பார்க்கும்படியும், ஒரு தமிழராக முத்திரை குற்ற வேண்டாம் என்றும் உலகுக்குக் கூறினார். இவர் ஊர்காவற்றுறை, மண்கும்பானில் பிறந்து யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி பயின்றவர். இவரது தமையனாரான ராஜன் கதிர்காமர் ஒருதடவை இலங்கைக் கடற்படைத் தளபதியாக இருந்தவர். ராஜன் கதிர்காமர் வித்தியாசமாக யோசித்தார். இவர் யாழ்ப்பாணத் தீவுகள் ஏழையும் சூழவுள்ள கடலை ஆழப்படுத்தி அங்கு ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தை உருவாக்க எண்ணினார். இவர் ஒரு தமிழராக உணர்ந்து செயற்பட்டார். நீலன் திருச்செல்வத்தின் தந்தையாரான திருச்செல்வம் 1965 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் தாம் ஒரு அமைச்சர் பதவியைப் பெற்று, டட்லி சேனாநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய உடனுமே தமிழர்கள் ஏமாற்றப்படத் தொடங்கிவிட்டனர் என்று நான் நம்புகிறேன். இது 1968 இல் உறுதிப்படுத்தப்பட்டது. திருச்செல்வம் திருகோணமலையை விட்டுக்கொடுத்தார். அமிர்தலிங்கம் சேருவவிலவை விட்டுக்கொடுத்தார். இவர்கள் எல்லாம் சிங்கள மயமாக்கலுக்கு உதவி செய்தார்கள். செல்வநாயகம் உட்பட சமஷ்டிக் கட்சித் தலைவர்கள் எவருமே 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்புக் கூட்டத்தில் பங்கெடுக்கவில்லை. சேர் பொன் ராமநாதன் தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதை உணர்ந்தார். ஆனால் அவரது சொந்த மருமகன் மகாதேவாவோ அல்லது அவரது மருமகன் நடேசபிள்ளையோ இதை உணர்ந்து கொள்ளவில்லை. பின்னர் ஜி.ஜி பொன்னம்பலம் இந்த வரிசை அரசியலுக்குள் இழுக்கப்பட்டார். அவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு தமிழர்களாகியமை பிரச்சனையாகியது. இதன்மூலம் ஏதாவது ஒன்று சாத்தியமில்லை என்றால் அதைப்பற்றி மறந்துவிட வேண்டும் என்று இந்த அரசியல் தலைவர்களில் சிலர் தமிழர்களுக்கு புத்திமதி கூறினர். தமிழர்களின் உரிமைகளுக்கு எதிராக இவர்கள் இவ்வாறு கூறினர். பிரபாகரனின் அரசியலில் இதுபோன்ற ஒத்துழைப்பு அநீதிகள் இடம்பெறவில்லை. சமாதானப் பேச்சுக்களின் போர்வையில் இழுப்பதே சிங்கள தலைவர்களின் தந்திரமாகும். பிரபாகரனின் காலத்தின் பிறகு அல்லது அவருக்கு வயதானவுடன் தமது விருப்புக்களுக்கு உடன்படச் செய்வதன் மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்ற அவர்கள் விரும்பினர். வயதானவுடன் சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்த பொன்னம்பலம் மற்றும் சுந்தரலிங்கம் போலவே அவர்கள் பிரபாகரனையும் எண்ணினர். ‘எவ்வளவு காலத்துக்குத்தான் பிரபாகரன் இருக்க முடியும். இவருக்குப் பின்னர் ஒரு பிரபாகரன் வரமாட்டார்’ என்பதே சிங்களத்தின் வாதம் என்றார் நவரட்ணம் அவர்கள். Tamil Heritageதமிழீழம் என்ற கோரிக்கையை முதன் முதலில் முன்வைத்த வி. நவரட...தமிழீழம் என்ற கோரிக்கையை முதன் முதலில் முன்வைத்த வி. நவரட்ணம் ஐயா 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி காலமானார். 2005 ஆம் […]
  20. அந்த நேரம்புலிகளின் கை ஓங்கி இருந்தது.எனவே எமக்கு சார்பாக தேவையானதை வற்புறுத்த முடியும் என புலிகள் நினைத்து இருக்கலாம். சந்திரிக்கா காலத்தில் அப்படி இல்லை. மாறாக பொருளாதார தடையை போட்டு மக்களை கொன்றார்.
  21. உலகம் உக்ரேனுக்கு ஒரு முடிவை கொடுத்தது போலவாக இருக்குமோ?? அல்லது அன்றாடும் இறக்கும் பலஸ்தீனியர்களுக்கு கொடுக்கும் முடிவாக இருக்குமோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.