Everything posted by கிருபன்
-
சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம்
சாந்தனுக்கு துயிலாலயம் அங்குரார்ப்பணம் February 28, 2025 11:41 am மறைந்த சாந்தனின் ஓராண்டில் துயிலாலயம் இன்று காலை எள்ளங்குளம் இந்து மயானத்தில் அவரை புதைத்த இடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் சாந்தன் உயிரிழந்தார். அவரின் உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு தாயக மண்ணில் விதைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 33 ஆண்டுகள் தாயக மண்ணுக்காக சிறையிருந்து சிறையிலேயே சாவடைந்த சாந்தனின் முதலாம் ஆண்டு நாளில் அவர் விதைக்கப்பட்ட இடத்தில் துயிலாலயம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சாந்தனின் தாயார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/the-dedication-of-the-temple-to-santhan/
-
சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் - சிறிதரன் எம்.பி
சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் - சிறிதரன் எம்.பி சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற வார்த்தைக்கு அமைய தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு சிறிதரன் உரையாற்றியிருந்தார். 4 விடங்களை முன்வைத்து நீதியமைச்சரிடம் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் வினவியிருந்தார். 1. தற்போது எத்தனை தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்? 2. இந்த தமிழ் அரசியல் கைதிகள் எந்தெந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? 3. இவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள்? 4. மனிதாபிமான அடிப்படையிலோ,ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையிலோ இவர்களை விடுதலை செய்ய முடியுமா?என்ற கேள்விகளை சிறிதரன் சபையில் முன்வைத்தார். இந்த கேள்விகள் முக்கியமானவை எனவும் இந்த விடயம் தொடர்பில் முழுமையான விளக்கத்தை வழங்க தாம் எதிர்பார்ப்பதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். எனினும் பாதீட்டினுடைய செலவு அறிக்கையை நாளை சமர்ப்பிக்கவுள்ளதால் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். எனவே ஒருவார கால அவகாசம் கோரியிருந்தார். இதற்குப் பதிலளித்த சிறிதரன் எம்.பி அமைச்சரின் கருத்துக்கு தலைசாய்ப்பதாகக் குறிப்பிட்டார். மனிதாபிமான அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இதேவேளை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பெயரைக் குறிப்பிட்டும் அவர்களது விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த நீதியமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சபையில் குறிப்பிட்டவர்களின் பெயர் விபரங்களை இன்றைய தினம் தனக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். Hiru Newsசிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற அடிப்படையில் தமிழ் அரசியல...சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் - சிறிதரன் எம்.பி. Most visited website in Sri Lanka.
-
தனித்தே போட்டி; சுமந்திரன் அறிவிப்பு
தனிவழி செல்வதில் சுமந்திரன் விடாப்பிடி சுரேஷ் சுட்டிக்காட்டு! நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தொடர்ந்து தனிவழியில் செல்லும் முடிவில் மாற்றங்கள் இன்றியே பயணிக்கின்றார் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அவர் இன்று நேற்று அல்ல. இரண்டு வருடங்களின் முன்னரும் இதே கொள்கையிலேயே இருந்தார். இன்றும் அதே முடிவுடன் தான் அவர் இருக்கின்றார். தமிழ்மக்களைப் பொறுத்தவரை அனைவரும் ஓரணியாகத் திரளவேண்டும் என்பது அவர்களுடைய தேவையாக இருக்கின்றது.அதனை அனைவரும் புரிந்துகொண்டு ஓரணியில் திரள்வது தொடர்பாகப் பணிகளை முன்னெடுத்துள்ளோம். தமிழரசுக்கட்சி தனித்துப் போட்டியிடவேண்டுமென்றால் அது அவர்களின் முடிவு-என்றார். https://newuthayan.com/article/தனிவழி_செல்வதில்_சுமந்திரன்_விடாப்பிடி%C2%A0சுரேஷ்_சுட்டிக்காட்டு!
-
யாழ். போதனா நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம்!
யாழ்ப்பாணம் போதனாவில் இடம்பெறும் தொழிற்சங்கப் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்; பணிப்பாளர் நம்பிக்கை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில், மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் விரைவில் முடிவுக்குவரும் என்று யாழ்ப்பாணம் போதனா பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். போராட்டத்தை மேற்கொண்டுவரும் தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். https://newuthayan.com/article/போதனாவில்_இடம்பெறும்_தொழிற்சங்கப்_போராட்டம்_விரைவில்_முடிவுக்கு_வரும்;_பணிப்பாளர்_நம்பிக்கை%C2%A0
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
- ஈஸ்டர் தாக்குதல் எச்சரிக்கையை கார்டினல் புறக்கணித்தார்: ஞானசார தேரர் குற்றச்சாட்டு
ஈஸ்டர் தாக்குதல் எச்சரிக்கையை கார்டினல் புறக்கணித்தார்: ஞானசார தேரர் குற்றச்சாட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து கார்டினல் மால்கம் ரஞ்சித்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் அது காதில் விழவில்லை என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார், அரசாங்க புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தனர் என்று கூறினார். “தாக்குதலுக்கு முன்பே நாங்கள் கார்டினலை அணுகி அவருடன் நீண்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி, சாத்தியமான அச்சுறுத்தல் குறித்து எச்சரித்தோம். இருப்பினும், அவர் எங்கள் எச்சரிக்கைகளை புறக்கணித்தார்,” என்று அவர் குற்றம் சாட்டினார். “பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் என்ற முறையில், தாக்குதல் குறித்து தொடர்புடைய பணியாளர்களுக்குத் தெரிவிக்க எங்களுக்கு அதிகாரம் இருந்தது. ஆனால் நாட்டின் பாதுகாப்புப் படைகளைக் கட்டுப்படுத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை. புலனாய்வுப் பிரிவுகளால் கூட அணுக முடியாத பல ரகசியத் தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தன,” என்று ஞானசார தேரர் கூறினார். “2014 முதல் தாக்குதல் குறித்து நான் எச்சரித்து வந்தேன். அந்த நேரத்தில் அந்தந்த அரசாங்கத் தலைவர்களுக்கு 17 கடிதங்களை அனுப்பினேன். நாட்டில் வேறு பல தீவிரவாதக் குழுக்கள் தோன்றுவது குறித்தும் நான் கவலை தெரிவித்தேன்,” என்று அவர் கூறினார். அரசாங்கத்தின் எந்த உதவியும் இல்லாமல், இந்தத் தகவல்கள் அனைத்தையும் நாங்கள் சுயாதீனமாகச் சேகரித்தோம். நாட்டின் இன ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் நலன்களுக்காக நாங்கள் இதைச் செய்தோம்,” என்று அவர் கூறினார். “இறுதியாக, நாங்கள் அறிக்கையை ஒப்படைத்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்று ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தன்னிடம் இருக்கும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு தற்போதைய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/ஈஸ்டர்-தாக்குதல்-எச்சரிக/- இஷா கோபிகரை நினைவூட்டும் ‘என் சுவாசக் காற்றே’!
இஷா கோபிகரை நினைவூட்டும் ‘என் சுவாசக் காற்றே’! 26 Feb 2025, 8:10 PM சில திரைப்படங்கள் சில நினைவுகளின் எச்சங்களாகத் திகழும். அப்படத்தோடு சம்பந்தப்பட்டவர்களே அதனை மறந்திருந்தாலும், அதனைப் பார்த்து ரசித்தவர் மனதில் கோடானுகோடி எண்ணங்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். எந்தவொரு கலைப்படைப்புக்கும் அது பொருந்தும். அந்த வகையில், ‘என் சுவாசக் காற்றே’ திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மீதமிருக்கிறது. அந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் தந்த பாடல்களைக் கேட்டுவிட்டு, ‘மிஷன் இம்பாஸிபிள்’ டாம் க்ரூஸ் போன்று அரவிந்த் சாமி சாகசம் செய்யும் ஸ்டில்களை பார்த்துவிட்டு ஆவலோடு அப்படத்தைக் காண தியேட்டருக்குச் சென்றுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. வீணான ‘காஸ்ட்டிங்’! ஒரு அழகான நாயகன். அழகழகான நாயகி. இரண்டு பேருக்கும் காதல் மெதுவாக மலர்கிறது. அதனைச் சிதைக்க ஒரு வில்லன் வருகிறார். அவர் நாயகனுக்கு நன்கு தெரிந்தவர். நாயகனை ஒரு மனிதர் ‘வளர்ப்பு மகன்’ ஆகப் பாவிக்கிறார். அவரது ஒரிஜினல் மகன் தான் வில்லன். ‘உன் அப்பனை கொன்னுடுவேன்’ என்று சொல்லியே சிறு வயது முதலே தனக்குச் சாதகமாகச் சில தவறுகளைச் செய்ய வைக்கிறார். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நினைவூட்ட வேண்டியிருக்கிறது. நம் நாயகன் வளர்ப்பு தந்தையின் மீது பாசம் கொண்டவராக மட்டுமல்லாமல், ஒரு கம்ப்யூட்டர் ஹேக்கர் ஆகவும் இருக்கிறார். அவ்வாறு ஒரு குற்றத்தைச் செய்யும்போது அவர் மாட்டிக்கொள்ளும் சூழல் வருகிறது. உயிருக்கே ஆபத்து எனுமளவுக்கு நிலைமை மாறுகிறது. அதன்பின் நாயகன் என்னவானார்? நாயகி உடனான அவரது காதல் என்னவானது? அந்த வில்லன் என்னவானார் என்பதுதான் இப்படத்தின் மீதிக்கதை. இதில் நாயகனாக அரவிந்த் சாமி, நாயகியாக இஷா கோபிகர், வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தனர். நாயகனை வளர்ப்புமகனாக கருதும் மனிதராக ரகுவரன் தோன்றியிருந்தார். இது போக தேவன், சந்தானபாரதி, தலைவாசல் விஜய் உட்படப் பலர் இதில் நடித்திருந்தனர். ரகுவரன், பிரகாஷ்ராஜ் இருவரும் அக்காலகட்டத்தில் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்ட வில்லன் நடிகர்கள். ஆனால், அவர்கள் இருவரும் சேர்ந்து தோன்றிய காட்சிகள் எதுவும் விசிலடித்துக் கொண்டாடும் அளவுக்கு அமையவில்லை. சின்னி ஜெயந்த், வடிவேலுவைக் கொண்டு நகைச்சுவை ட்ராக் ஒன்றும் இதில் சேர்க்கப்பட்டிருந்தது. ‘கோபப்படுற மாதிரி காமெடி பண்ணக்கூடாது’ என்று சொல்கிற அளவுக்கு அவர்களது காட்சிகள் இருந்தன. சிறப்பானதொரு ‘காஸ்ட்டிங்’ இப்படத்தில் இருந்தும், தகுந்த காட்சியமைப்பு இல்லாததால் அவர்களது பங்களிப்பு வீணாகிப் போனது. ரஹ்மானின் இசை! நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட பாடல்களுக்கு ஏற்றவாறு படத்தில் சில காட்சிகளை அமைத்திருந்தார் இயக்குனர் கே.எஸ்.ரவி. இவர் தெலுங்கி ‘ஆக்ரஹம்’, தமிழில் ‘ஹானஸ்ட்ராஜ்’, ‘மிஸ்டர் ரோமியோ’ படங்களை இயக்கியவர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரையும் இவரையும் வித்தியாசப்படுத்த முடியாமல், அக்காலகட்டத்தில் பத்திரிகைச் செய்திகளில் குழப்படி நடந்ததுண்டு. ’பாடல்களை எழுதிய வைரமுத்துவே, அதற்கு முன்னதாக வரும் காட்சிகளுக்கு வசனம் எழுதினாரோ’ என்று நினைக்கும் அளவுக்கு அக்காட்சிகள் அமைந்திருக்கும். அதனால் படத்திற்கு எந்தப் பயனும் இல்லை. தூய தமிழில் வசனங்கள் அமைந்தாலும், அதனைக் கொண்டாடும்விதமான பாத்திர வார்ப்போ, காட்சிச் சூழலோ படத்தில் இல்லை. சுருக்கமாகச் சொன்னால், ஒரு ஐரோப்பியப் படத்தில் தமிழ் ஆடியோவைச் சேர்த்தது போலிருந்தது இப்படம் தந்த அனுபவம். அதே நேரத்தில், ‘தீண்டாய் மெய் தீண்டாய்’ எனும் காலத்தால் அழியாப் பாடலை இதில் தந்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். காதல் இணையின் முதல் ஸ்பரிசத்தை என்றென்றைக்கும் நினைவுகூரத்தக்க பாடல் அது. ’சின்னச் சின்ன மழைத்துளிகள்’ பாடலானது, மழையில் நனையும் ஒவ்வொரு கணமும் என் நினைவினில் வந்து போகும். ‘என் சுவாசக் காற்றே நீயடி’ பாடல் மயிலிறகொன்று முகத்தைக் கொஞ்சுகிற அனுபவத்தைத் தரும். ‘காதல் நயாகரா’, ‘திறக்காத காட்டுக்குள்ளே’ பாடல்களும் காதல் மழையைப் பொழியும். இவை போதாதென்று ‘ஜும்பலக்கா’ பாடலிலும் காதல் பாடம் எடுத்திருப்பார் கவிஞர் வைரமுத்து. இந்தப் பாடல்களின் காட்சியாக்கம் இப்போதும் ’கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்’ தரத்தில் இருக்கும். அந்த வகையில் கண்களுக்கு விருந்து படைத்திருப்பார் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன். பாடல்கள் படம்பிடிக்கப்பட்ட இடங்களையும் இப்படக்குழு தேடித் தேடித் தேர்ந்தெடுத்ததை உணர முடியும். போலவே, இப்படத்தில் கலை இயக்குனரும் ஆடை வடிவமைப்பாளரும் ஒவ்வொரு பிரேமும் ’கலர்ஃபுல்’ ஆக இருக்க வேண்டுமென்று உழைத்திருப்பார்கள். ’தீண்டாய்’ பாடலுக்கு முன்பாக, ‘லைட் பர்பிள்’ வண்ணத்தில் சேலையணிந்து இஷா கோபிகர் வரும் காட்சி படத்தில் உண்டு. அந்தக் காட்சி மற்றும் அப்பாடலில் இஷா கோபிகர் இடம்பெற்றவற்றின் ஸ்டில்கள் பத்திரிகைகளை அந்தக் காலகட்டத்தில் அலங்கரித்தன. கூடவே, ‘மிலிட்டரி கட்’ ஹேர்ஸ்டைலில் அரவிந்த் சாமி வேறுவிதமாகத் தோற்றமளிக்கும் ஸ்டில்களும் வெளியாகின. இப்போதும் ‘என் சுவாசக் காற்றே’ பார்க்கும்போது அவற்றைச் சிலர் நினைவுகூரக்கூடும். தியா மிர்சா அறிமுகம்! இந்தியில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்தவர் தியா மிர்சா. உலக அழகிப்போட்டியில் பங்கேற்றவர். இப்படத்தில் வரும் ‘ஜும்பலக்கா’ பாடலில் ராஜு சுந்தரத்தோடு, மிங்க் எனும் நடிகை ஆடியது நமக்குத் தெரியும். இதில் கூட்டத்தில் ஒருவராக நடிகை தியா மிர்சாவும் ஆடியிருக்கிறார் என்பது பலரும் அறியாத தகவல். ஆக, அவர் திரையுலகில் அறிமுகமான திரைப்படம் ‘என் சுவாசக் காற்றே’ என்று சொல்லலாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் அச்சம்பவத்தை நினைவுகூர்ந்த தியா, படப்பிடிப்பு முடிந்ததும் நல்லதொரு சம்பளம் தந்ததாக கூறியிருக்கிறார். அதேநேரத்தில், அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் ரஹ்மான் என்பதை மறந்து, ‘கீரவாணி இசையமைத்த பாடல் அது’ என்று சொல்லியிருந்தார். ’என் சுவாசக் காற்றே’வை இன்று காணும்போது பாடல்களையும் சண்டைக்காட்சிகளையும் படம்பிடித்துவிட்டு, பின்னர் அரவிந்த் சுவாமி, இஷா கோபிகர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துவிட்டு, இறுதியாக செண்டிமெண்ட், நகைச்சுவை உள்ளிட்ட இதர காட்சிகளை ஆக்கியதாகத் தோன்றுகிறது. அக்காட்சிகளை வரிசைப்படுத்தினால், அவற்றின் உள்ளடக்கத்தில் இருக்கும் பட்ஜெட் குறைபாடு தெளிவாகத் தெரியும். படம் முழுக்க ஒரேமாதிரியான தரம் ‘மெயிண்டெய்ன்’ செய்திருக்கப்பட்டிருக்காது. இப்படத்தின் மிகப்பெரிய பலவீனம் அது. இப்படத்தில் பிரகாஷ்ராஜ் வருமிடங்களில் ஒலிக்கும் ‘ஷெனாய்’ வாத்திய இசை மனதைப் பிறாண்டியதாகத் தோன்றியிருக்கிறது. பின்னாட்களில்தான், இப்படத்தில் ரஹ்மானுக்குப் பதிலாக ‘சபேஷ் முரளி’ பின்னணி இசை அமைத்தனர் என்பது தெரிய வந்தது. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு அப்பாத்திரம் இயல்பில் இருந்து விலகியதாகத் தெரிந்தது. ’வேட்டையாடு விளையாடு’ படத்தில் தென்பட்ட டேனியல் பாலாஜி மற்றும் அவரது நண்பராக வந்தவரின் வில்லத்தனத்தைப் பார்த்தபோது, எனக்கு ‘என் சுவாசக் காற்றே’தான் நினைவுக்கு வந்தது. மகன் – வளர்ப்பு மகன் ‘ஈகோ’ மோதல், மணிரத்னம் பட பாணியில் காதலர்கள் பேசுகிற வசனங்கள், விளம்பரப்படம் போன்று அமைந்திருந்த காட்சியாக்கம், அவற்றுக்குச் சற்றும் பொருந்தாத ஒரு கதை என்று இருந்தது ‘என் சுவாசக் காற்றே’. ஆனாலும் அரவிந்த் சாமி, இஷா கோபிகர், ரகுவரன், ரஹ்மான், ஆர்தர் வில்சன், ராஜு சுந்தரம் என்று சில ஆளுமைகளுக்காகத் தன்னில் இருக்கும் பொலிவை மங்க விடாமல் தங்க வைத்திருக்கிறது இப்படம். https://minnambalam.com/cinema/en-swasa-kaatre-reminds-isha-gopikar/- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
சீமான் வீட்டு பாதுகாவலர் மற்றும் டிரைவருக்கு நீதிமன்றக் காவல்! 28 Feb 2025, 8:40 AM நடிகை அளித்த புகாரில் சீமான் வீட்டில் ஒட்டிய சம்மனை கிழித்து காவலர்களை தடுத்த விவகாரத்தில் சீமான் வீட்டு காவலாளி மற்றும் உதவியாளருக்கு வரும் 13 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை வளசரவாக்கம் போலீஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்து, 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, சீமான் மனுவையும் தள்ளுபடி செய்தார் நீதிபதி. இதுதொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க கிருஷ்ணகிரி சென்றதால் நேற்று ஆஜராகவில்லை. இதனையடுத்து நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் கதவில் நேற்று மீண்டும் சம்மன் ஒட்டப்பட்டது. அதில், பிப்ரவரி 28-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு ஆஜராகத் தவறினால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சம்மன் ஒட்டப்பட்ட சில நிமிடங்களில் போலீசார் கண்முன்னே சம்மன் கிழிக்கப்பட்டது. உயரதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு இதுதொடர்பாக விசாரிக்க நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்ராஜேஷ் மற்றும் போலீஸார் சீமான் வீட்டுக்குள் சென்றனர். ஆனால் அங்கே சீமான் வீட்டு பாதுகாவலராகப் பணியாற்றி வரும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அமல்ராஜ், போலீஸாரை வீட்டின் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது, இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மோதலில் ஈடுபட்ட அமல்ராஜை கைது செய்த போலீசார், நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவரிடமிருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், சம்மனை கிழித்ததாக சீமான் வீட்டு டிரைவர் சுபாகரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் நீலாங்கரை காவல் நிலையத்தில் வைத்து சுமார் 5 மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அமல்ராஜ் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், ஆயுதச் சட்டம், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளிலும், ஓட்டுநர் சுபாகர் மீது 3 பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், பாதுகாவலர் மற்றும் சீமான் உதவியாளர் தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து நேற்று சோழிங்கநல்லூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு அமல்ராஜ், சுபாகர் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவரையும் மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். விஜயலட்சுமி வழக்கில் சீமான் இன்று ஆஜராகவில்லையென்றால், அவர் கைது செய்யப்படுவார் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று தனது வீட்டில் நடந்த சம்பவத்தையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் ‘நாளைக்கு நான் ஆஜராக போவதில்லை” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/political-news/judicial-custody-for-amalraj-and-subakar/- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
வெளி மாநிலத்துக்கு தப்ப முயன்றாரா… போலீஸ் வளையத்துக்குள் சீமான் 27 Feb 2025, 5:27 PM நாளை போலீஸில் ஆஜராகாத பட்சத்தில் சீமான் கைதுசெய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியாரை கடுமையாக விமர்சித்து வந்தார். அவருக்கு எதிர்க்கட்சியான அதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. திராவிட கழகத்தினர், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆகியோர் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். சீமானின் தொடர் விமர்சனம் இதனால் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதற்கு முன்பு திருச்சி சரக டிஐஜியான வருண் குமார் மீது சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் திருச்சி காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி , திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோரையும் சீமான் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நேரத்தில, பெரியாரை விமர்சனம் செய்த வழக்கில் கைது செய்தால் அரசியல் ரீதியாக சீமானுக்கு ஆதரவு பெருகும் என்று கருதி பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் கைது செய்தால்தான் சரியாக இருக்கும் என்று காவல்துறையினரும், ஆட்சியாளர்களும் முடிவெடுத்திருக்கின்றனர். இந்தநிலையில் தான் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து, மேஜிஸ்திரேட் முன்பு ஆஜர்ப்படுத்தி 164 ஸ்டேட்மெண்ட் பெற்று மேல் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் இருந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தை நாடினார் சீமான். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் விஜயலட்சுமி புகார் தொடர்பான விசாரணையை 12 வாரங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் பேரில் தான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இருந்து, இன்று (பிப்ரவரி 27) சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. அதே நேரத்தில் நேற்று பெங்களூருவில் உள்ள விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் பெண் இன்ஸ்பெக்டர் தலைமையில் சென்ற டீம் விசாரணை மேற்கொண்டது. போலீஸுக்கு வந்த தகவல் இதில், விஜயலட்சுமி ஆடியோ வீடியோ ஆதாரம், புகைப்படங்கள் ஆகியவற்றை கொடுத்திருந்தார். இதற்கிடையே சீமான் நேற்றும், நேற்று முன்தினமும் ராணிப்பேட்டை, வேலூரில் நிர்வாகிள் கூட்டத்தை நடத்தினார், இன்று கிருஷ்ணகிரி சென்று நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்ததால், நேற்று இரவே கிருஷ்ணகிரி சென்று ஹோட்டலில் தங்கிவிட்டார். அதனால் சீமானால் இன்று நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு சென்று வாய்தா கேட்டு மனு கொடுத்தனர். அதேசமயம் நேற்றிரவு சீமான் தங்கியிருந்த ஹோட்டலை போலீசார் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். காரணம், கிருஷ்ணகிரியில் இருந்து அண்டை மாநிலமான பெங்களூரு வழியாக சீமான் தப்பித்துவிடலாம் என்று தகவல் கிடைத்ததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக காவல்துறை வட்டாரத்தில் கூறுகிறார்கள். இந்தசூழலில் நீலாங்கரை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சீமான் வீட்டுக்கு சென்று போலீசார் சம்மன் கொடுத்தனர். வீட்டில் உள்ளவர்கள் சம்மனை வாங்க மறுத்ததால், கேட்டில் அதை ஒட்டினர். அப்போது சீமான் வீட்டின் டிரைவரான சுபாகர் ஆவேசமாக வந்து கேட்டில் ஒட்டிருந்த சம்மனை கிழித்து எறிந்தார். இதை கண்ட அங்கிருந்த போலீசார் தட்டிக்கேட்ட போது, போலீசாருக்கும் சீமான் வீட்டில் இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு செக்யூரிட்டியாக இருந்த அமுல்ராஜ் தான் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுக்க, உடனடியாக அவரை மடக்கி பிடித்து இழுத்து வந்து ஜீப்பில் ஏற்றினார்கள் போலீசார். சம்மனை கிழித்த சுபாகரையும் கைது செய்தனர். இவர் சென்னையை சேர்ந்தவர். செக்யூரிட்டி அமுல்ராஜ் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்த கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார், இதற்கு லைசென்ஸ் இருக்கிறதா, ரினிவெல் செய்யப்பட்டுள்ளதா என விசாரித்து வருகின்றனர். கைதாக வாய்ப்பு? மேலும் இன்று வழங்கப்பட்ட சம்மனுக்கு சீமான் நாளை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை என்றால் அதிரடியாக கைது செய்யப்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். நீலாங்கரையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக கிருஷண்கிரியில் உள்ள தனது கணவருக்கு தொடர்புகொண்டு சீமான் மனைவி பதற்றமாக தகவலை தெரிவித்திருக்கிறார். இந்தநிலையில், நாளையும் நான் நேரில் ஆஜராகமாட்டேன். என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும், நான் தர்மபுரியில் நடக்கும் கூட்டத்துக்கு செல்கிறேன் என்று பேட்டி அளித்திருக்கிறார் சீமான் . இதனால் அடுத்து என்ன நடக்க போகும் என்ற எதிர்ப்பார்ப்பும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது https://minnambalam.com/political-news/seeman-in-police-surveillance-what-happened/- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பிரித்தானிய நேரப்படி நாளை வெள்ளி (28 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS ஒரே ஒருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் மற்றைய 23 பேரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் எப்போதும் தமிழன் இப்போட்டியில் 23 பேருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது ஆப்கானிஸ்தார் இங்கிலாந்து அணிக்கு கொடுத்த அதிர்ச்சி போன்று அவுஸ்திரேலியா அணிக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அரையிறுதிக்கு முன்னேறுமா?- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாகிஸ்தான் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையேயான ஒன்பதாவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டது. எனவே யாழ்களப் போட்டியாளர்கள் எல்லோருக்கும் மழை முட்டைகளைப் பொழிந்துள்ளது! யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை (மாற்றமில்லை):- வடக்கில் சுற்றுலா விருத்தியில் அரசாங்கம் அக்கறை காட்டுமா? — கருணாகரன் —
வடக்கில் சுற்றுலா விருத்தியில் அரசாங்கம் அக்கறை காட்டுமா? February 26, 2025 — கருணாகரன் — யுத்தத்தினால் அழிந்து சிதிலமடைந்திருக்கின்ற வடக்குப் பிரதேசங்களை அபிவிருத்தியினால் மேம்படுத்துவதும் அங்குள்ள மக்களை உளரீதியில் புதுநிலைப்படுத்துவதும் ஒன்றாக நடக்க வேண்டும். யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்த பிறகும் இவை சரியாக நடக்கவேயில்லை. 2013 – 2018 வரை ஐந்து ஆண்டுகள் வடக்கு மாகாணசபை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில் இருந்தது. அப்போதும் வடக்கின் அபிவிருத்தியைப் பற்றியும் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் நிலையைப் பற்றியும் பொறுப்பானவர்கள், பொறுப்பாகச் சிந்திக்கவில்லை. இதனால்தான் இன்னும் இங்கே ஏகப்பட்ட பிரச்சினைகள். புதிய (NPP) அரசாங்கம் எல்லாவற்றிலும் மாற்றங்களையும் புதுமைகளையும் செய்ய முயற்சிக்கிறது. என்பதால், வடக்கின் நிலைமைகளிலும் நியானமான – அவசியமான – மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அதைச் செய்ய வேண்டிய கடப்பாடு, மாற்றங்களை வலியுறுத்தும் அரசாங்கத்துக்கு உண்டு. அதை ஓரளவு உணர்ந்திருக்கிறபடியால்தான் வடக்கின் அபிவிருத்திக்கென 5000 பில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. வட பிராந்தியத்திற் சில சிறப்புத் திட்டங்களை விருத்தி செய்வதற்கும் முயற்சிக்கிறது. வடக்கின் அபிவிருத்தியில் முக்கியமான ஒன்று, சுற்றுலாத்துறையை வளர்ப்பதாகும். சுற்றுலாத்துறையை மேம்படுத்திக் கொள்வதன் மூலமாக பிரதேச அபிவிருத்தியைச் செய்ய முடியும். பொருளாதார ரீதியிலும் வளர்ச்சியை உருவாக்கலாம். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் இது உதுவும். ஒரே கல்லில் மூன்று காய்கள். பொதுவாகச் சுற்றுலாத்துறையில் பொருளாதாரம், பண்பாடு போன்றவற்றில் வளர்ச்சி ஏற்படுவதுண்டு. மக்களுக்கான தொழில் வாய்ப்புகளும் பெருகும். ஆகவே அரசாங்கம் வடக்கில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதைப்பற்றிக் கவனத்திற் கொள்ள வேண்டும். அதற்கான வளங்களும் வாய்ப்புகளும் வடக்கிற் தாராளமாகவே உண்டு. 1. இயற்றை வளங்களோடு இணைந்திருக்கும் சுற்றுலா மையங்களை அடையாளம் கண்டு, அவற்றை வளப்படுத்தி, சுற்றுலாவுக்கேற்ற மாதிரி வடிவமைப்பது. இதற்கு பூநகரி – கௌதாரிமுனை மணல்மேடுகள், கௌதாரிமுனைக் கடற்கரை (Beach), வேலணைக் கடற்கரை, நெடுந்தீவு, இயக்கச்சி – சுண்டிக்குளம் – ஆனையிறவுக் கடனீரேரி பறவைகள் சரணாலயம் (Nature Park), மன்னார் கடற்கரைகள், முல்லைத்தீவு – நாயாற்றுக் கடற்கரை, இரணைமடுக்குளம், வன்னேரிக்குளம் பறவைகள் சரணாலயம், காரைநகர்க் கடற்கரை (Casuarina Beach) போன்றவை உண்டு. இதை விட வேறு மையங்களையும் அடையாளம் காண முடியும். இவை ஏறக்குறைய மாலைதீவு, கியூபா போன்ற நாடுகளில் உள்ள சுற்றுலாவுக்கு நிகரானவையாக இருக்கும். இயற்கையோடிணைந்த உணவு முறைகளையும் இங்கே சேர்த்துக் கொள்வதாக இருக்கும். 2. பண்பாட்டுச் சுற்றுலா (Cultural tourism) வுக்குரிய இடங்களை விருத்தி செய்வது. இது குறித்த பிராந்தியத்தின் பண்பாட்டு அடையாளங்கள், சொத்துகளின் மீது கவனத்தைக் குவிக்கும் வகையிலானது. இதற்கு நல்லூர், சந்நிதி, நயினாதீவு, கீரிமலை, மாவிட்டபுரம், மடு, திருக்கேதீஸ்வரம், புல்லாவெளி, பொன்னாலை, கந்தரோடை போன்ற இடங்களிலுள்ள வரலாற்றுச் சிறப்புடைய ஆலயங்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பௌத்த சின்னங்கள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி அமைப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம். கூடவே இதற்குத் தோதாக வடக்கின் கலை வெளிப்பாடுகளைக் (கூத்து, நாடகம், நடனம், ஓவியக் கூடம்) காணக் கூடியவாறு செய்ய வேண்டும். கேரளாவின் கதகளி, கண்டிய நடனம் போன்றவை உதாரணம். இந்தச் சுற்றுலாவில் பண்பாட்டைத் தேடி அறிய விரும்புவோரும் ஆன்மீக யாத்திரிகர்களும் அதையொட்டிய சுற்றுலாப் பயணிகளும் அதிகமாக வரக்கூடும். 3. காலனிய கட்டிடங்கள் மற்றும் அதையொட்டிய மரபுரிமைகளை மையப்படுத்திய சுற்றுலா. (Colonial architectural heritage tourism). இதற்கு ஏற்கனவே உள்ள யாழ்ப்பாணக் கோட்டை, ஊர்காவற்றுறைக் கோட்டை, மன்னார்க் கோட்டை, நெடுந்தீவில் உள்ள புராத கட்டிடங்கள், யாழ்ப்பாணம் பழைய கச்சேரி, சங்கானைத் தேவாலயம் மற்றும் மந்திரிமனை, சங்கிலியன் தோப்பு, மன்னார் அரிப்பு அல்லிராணி மாளிகை போன்ற புராதன சின்னங்களை மையப்படுத்த வேண்டும். அவற்றின் சூழலைச் சுற்றுலாவுக்குரியவாறு மாற்றியமைக்க வேண்டும். மேலும் பூநகரி, இயக்கச்சி, ஆனையிறவு, வெற்றிலைக்கேணி, பருத்தித்துறை போன்ற இடங்களில் உள்ள காலனித்துவ காலக் கோட்டைகள், வெளிச்ச வீடுகள் யுத்தத்தினால் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன. இவற்றையும் மீளமைப்புச் செய்தால், அவையும் இந்த வகைச் சுற்றுலாவுக்கு பெரிதும் உதவும். இதற்கு ஹொலண்ட் அரசுடன் ஒரு உடன்பாட்டுக்கு வரலாம். அல்லது அந்த நாட்டின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும். 4. இதற்கு அப்பால் புதிதாக சுற்றுலா மையங்களை உருவாக்குவது. உதாரணமாக, வடமராட்சியில் முள்ளிக்குளம் மருதங்கேணிக்கும் இடையிலுள்ள களப்பை அகழ்ந்து படகுச் சவாரிகளை உருவாக்குவது. இதற்காக வெளிநாட்டுக் கடனைப் பெற்றாலும் அது பயனுடையதே. ஏனென்றால் அது செலவீனத்தை விடப் பன்மடங்கு வருவாயை ஈட்டித் தரக் கூடியது. அந்தக் களப்பு இயற்கை வளம் நிறைந்த அழகான சூழலில் அமைந்துள்ளது. பசுமைச் சுற்றுலாவாக இதை உருவாக்கலாம். அருகே வங்காள விரிகுடாவுடன் இணைந்த இந்து சமுத்திரமுண்டு. அதனுடைய கரை அழகான கடற்கரையகும். இங்கே கடலுணவும் கடற்கரைக் காட்சியும் மேலதிக வாய்ப்பாக உள்ளன. இதைப்போல இன்னோரிடம், நெடுந்தீவு உட்பட அனலைதீவு, எழுவை தீவு, கௌதாரிமுனை போன்ற இடங்களுக்கான படகுச் சவாரிகளை உருவாக்குவது. இந்த இடங்கள் மிக அழகானவை. அங்கே சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதிகளையும் கலை மற்றும் விற்பனைப் பொருட்களையும் உருவாக்கினால் போதும். அந்த இடங்களும் அபிவிருத்தியடையும். 5. வடக்கின் பிரத்தியேகமான அறிவுத்துறை, தொழிற்துறை சார்ந்த இடங்களை விருத்தி செய்தல். இவையும் ஒரு தொகுதி சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடியவையே. இவ்வாறு வடக்கின் சுற்றுலாவை பல வகையில் விருத்தி செய்யலாம் – செய்ய வேண்டும். இலங்கையின் பிரதான வருவாயில் ஒன்று சுற்றுலாத்துறையாகும். அதற்கு வடக்கு மாகாணமும் தாராளமாகப் பங்களிக்க முடியும். சம நேரத்தில் வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுலாவுடன் தொடர்புடைய பல்வேறு தொழில்வாய்ப்புகளைப் பெறக் கூடியதாகவும் இருக்கும். ஆனால், புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் வடக்கின் சுற்றுலாத்துறைக்கென சிறப்பான நிதி ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அது குறித்த சிரத்தையைக் காணவும் முடியவில்லை. இது புதிய அரசாங்கத்தின் முதலாவது பாதீடு என்பதால், அடுத்த ஆண்டுகளில் இதைக் குறித்த அக்கறைகள் மேலெழக் கூடும். அதைக்குறித்த சிந்தனை இருக்குமானால், எதிர்காலத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யக் கூடியதாக இருக்கும். வடக்கு மாகாணசபையில் சுற்றுலாத்துறைக்குப் பொறுப்பாக இருப்போருக்கு இதைப்பற்றிய புரிதலோ கற்பனையோ போதாது. அவர்கள் வழமையான – பாரம்பரியமான சில இடங்களை (மையங்களை) யே அடையாளப்படுத்தி வைத்துள்ளனர். அந்த இடங்கள் பலரும் பார்த்துப் பழகியவை என்பதை விட அனைவரையும் கவரக் கூடியவையும் அல்ல. புதிய இடங்களைத் தேடிக் காணும் முயற்சியோ, அவற்றைச் சுற்றுலாத்துறைக்கு ஏற்றமாதிரி மேம்படுத்தக் கூடிய அக்கறையோ இல்லை. கேட்டால், தமக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று ஒற்றை வரியில் தமது பொறுப்பை முடித்துக் கொள்கிறார்கள். இந்த விமர்சனம் அவர்களைக் குற்றம் சாட்டுவதற்கானதல்ல. பதிலாக அவர்களுடைய பொறுப்பை உணர வைப்பதற்கும் அவர்களை முயற்சிக்குமாறு தூண்டுவதற்குமானதாகும். சுற்றுலாத்துறையின் அடிப்படைகளில் ஒன்று, கொண்டாட்டத்தையும் அறிவூட்டலையும் வியப்பையும் சமனிலையில் அளிப்பதாகும். அதுவே தீராத கவர்ச்சியையும் தாகத்தையும் உண்டாக்குவது. பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டுவதாக இருத்தல். எண்ணும்தோறும் வியப்பூட்டுவது. பார்க்க முன்பும் பார்த்த பின்பும் தேடலுக்கு உரியதாக இருத்தல். இவை இருந்தால்தான் பலரையும் கவர முடியும். இவையில்லாத சுற்றுலா மையங்கள் விரைவில் சலிப்படைய வைத்து விடும். ஆகவே சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய வகையில் சுற்றுலா மையங்களின் சூழலையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்புகளையும் புத்துணர்வாக்கம் செய்து கொண்டேயிருக்க வேண்டும். புதிய மையங்களை அறிமுகப்படுத்த வேண்டும். எப்போதும் பளபளப்பாக இருக்கக் கூடியவாறு நாம் சில பொருட்களையோ பாத்திரங்களையோ மினுக்கி, நேர்த்தியாக அடுக்கி வைப்பதில்லையா? அதைப்போல இந்தச் சுற்றுலா மையங்களை மினுக்கிக் கொண்டேயிருக்க வேண்டும். உலகம் விந்தைகளால் நிரம்பியுள்ளது. இயற்கையாகவும் செயற்கையாகவும் இந்த விந்தை உள்ளது. அவற்றைப் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் என்று மக்கள் பெருந்தொகை பணத்தைச் செலவழித்துப் பயணம் செய்கிறார்கள். கூடவே தங்களுடைய நேரத்தையும் செலவிடுகிறார்கள். அப்படிச் செல்வோரை நாமும் கவர்ந்திழுக்க வேண்டும் என்றால் அதற்கான ஈர்ப்பை உண்டாக்கக் கூடிய சுற்றுலாப்புள்ளிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். மட்டுமல்ல, இதொரு உலகளாவிய போட்டி என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகில் பல நாடுகள் சுற்றுலாப் பொருளாதாரத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. அவற்றுடன் நாம் போட்டியிட வேண்டியுள்ளது. எனவே இதற்கமைய எங்களையும் எங்களுடைய சுற்றுலா மையங்களையும் மேம்படுத்தி வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். வடக்கில் சில சுற்றுலா மையங்கள் இயல்பாக, இயற்கையாக இருக்கின்றன. அவற்றை மேலும் விரிவாக்கிப் புதுக்குவது அவசியம். குறிப்பாக பூநகரி கௌதாரிமுனையில் உள்ள Beach சும் இயக்கச்சி – சுண்டிக்குளம் – ஆனையிறவுக் கடனீரேரியில் உள்ள பறவைகள் சரணாலயம் மற்றும் Nature Park க்கும். போக்குவரத்துக்கு வாய்ப்பாக வீதிகளைப் புனரமைத்து, தங்குமிடம், உணவு போன்ற அடிப்படை வசதிகளோடு இவற்றை சற்று வளமாக்கினால், மிகச் சிறப்பான சுற்றுலா மையங்களாக மிளிரும். கௌதாரிமுனை Beach ஆழம் குறைந்த கடலைக் கொண்டது. மிக நீண்ட Beach. சுற்றயல், மணல் மேடுகளும் தாழம் புதர்களும் நிறைந்த அழகான இயற்கை அரண். நீராடுவதற்கும் நீந்திக் களிப்பதற்கும் அருமையான இடம். இதை இப்பொழுது படையினரே நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதை மாற்றிச் சுற்றுலாத்துறை அமைச்சிடம் வழங்க வேண்டும். அத்துடன் இந்த Beach க்குச் செல்லக் கூடிய போக்குவரத்துப் பாதையைச் சீராக்கி, போக்குவரத்தையும் குறைவான செலவில் உருவாக்கலாம். இந்த Beach க்கு அண்மித்ததாக மண்ணித்தலையில் சோழர் காலச் சிவன் கோயில் ஒன்றுள்ளது. அதனுடைய சிதைவுகளே எஞ்சியுள்ளன. ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த மாதிரி வரலாற்று எச்சங்கள்தான் ஈர்ப்புக்குரியவை. அங்கிருந்து 15 நிமிடத்தில் யாழ்ப்பாணத்துக்குப் படகில் செல்ல முடியும். அதற்கான இறங்குதுறை ஒன்றை அமைத்தால், உள்ளுர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலகுவாக இந்த Beach இல் நிறைவர். இதைப்போல இயக்கச்சி – சுண்டிக்குளம் – ஆனையிறவுக் கடனீரேரியோடிருக்கும் Nature Park கும் பறவைகள் சரணாலயமும் (Bird sanctuary) சற்று விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். சரணாலயத்தை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதைப் பறவைகளே விரிவாக்க வேண்டும். ஆனால், அந்தச் சூழலை நாம் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். அதைப் பார்க்கச் செல்லும் வழிகளைப் புனரமைப்புச் செய்ய வேண்டும். அங்கே 136 பறவை இனங்கள் உண்டு. 187 தாவரங்கள் இருப்பதாக ஆய்வு செய்திருக்கிறார்கள். ஒரு பக்கம் பறவைகள் தங்குவதற்கான வில்லுகளும் (குளங்களும்) நீண்ட வெளியும் உண்டு. ஓரம் நீளத்துக்கும் களப்புக் கடலும் கண்டற்காடுகளும். மறுபக்கத்தில் அலைமோதிக் கொண்டிருக்கும் இந்து சமுத்திரம். நமது பிரதேசத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டுமாக இருந்தால், அதற்குரிய சிறப்பம்சங்கள் அங்கங்கே இருக்க வேண்டும். அல்லது அவற்றை உருவாக்க வேண்டும். கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தாமரைத் தடாகம் என்ற வணிகக் கட்டிடம் இவ்வாறு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும். அதைப்போல எல்லா இடங்களிலும் கட்ட முடியாது. அதற்கு மக்களிடமுள்ள தாங்குதிறன் இடமளிக்காது. ஆனால், வெவ்வேறு பிராந்தியங்களில் அந்தந்தப் பிராந்தியங்களின் வளங்கள், வாய்ப்புகளுக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொன்றையும் உருவாக்கலாம். அது அந்தந்தப் பிராந்தியங்களின் அடையாளங்களைக் கொண்டிருந்தால் சிறப்பு. யுத்தம் முடிந்த பிறகு, மிக அதிகமானோர் வடக்கு நோக்கி வந்தனர். நீண்டகாலமாக யுத்தம் நடந்த ஒரு பிரதேசத்தை, யுத்த்ததினால் அழிந்த பகுதிகளை, யுத்த காலத்தில் முழுதாகவே மூடப்பட்டுத் தடை செய்யப்பட்டு, இருண்டிருந்த ஒரு பிராந்தியத்தைப் பார்ப்பதற்கு விரும்பினார்கள். யுத்தத்தின் எச்சங்களையும் வடுக்களையும் கண்டு திரும்பினார்கள். இது யுத்தம் முடிந்த பிறகான சூழல். இனியொரு புதிய யுகத்தைக் காண்பதற்கான காலம். அதற்கான அக – புற விழிகளை நிறைக்கும் வகையில் இன்றைய – நாளைய சுற்றுலா அமைய வேண்டும். சுற்றுலா மட்டுமல்ல, இன்றைய நாளை நாட்களும் சூழலும் அமைவது அவசியம். அதற்கான வாசல்கள் திறக்கப்படட்டும். https://arangamnews.com/?p=11848- யூ.எஸ். எயிட் உதவி இடைநிறுத்தமும் இலங்கையின் இரு ட்ரம்ப் விசிறிகளும்
யூ.எஸ். எயிட் உதவி இடைநிறுத்தமும் இலங்கையின் இரு ட்ரம்ப் விசிறிகளும் February 25, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளில் இறங்குவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்ற மறுகணமே அவர் பிறப்பித்த உத்தரவுகள் தொடக்கம் கடந்த ஒரு மாதகாலமாக அவரது நிருவாகத்தின் நடவடிக்கைகள் சர்வதேச கடப்பாடுகளில் இருந்து விலகுவதே அவரது வெளியுறவுக் கொள்கையின் தீர்க்கமான அம்சமாக இருக்கிறது என்பதை மீணடும் தெளிவாக நிரூபித்து நிற்கின்றன. உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் சர்வதேச உடன்படிக்கை ஆகியவற்றில் இருந்து விலகியதை தொடர்ந்து அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை இடைநிறுத்துவதற்கும் ட்ரம்ப் நிருவாகம் தீர்மானித்தது. அமெரிக்காவின் உலகளாவிய உதவிக்கான ஒரு கட்டமைப்பாக ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக செயற்பட்டு வந்திருக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் ‘யூ.எஸ். எயிட்’ (United States Agency for International Development – USAID) செயற்திறன் அற்றதாகவும் கோட்பாட்டு முரண்பாடுகளை கொண்டிருப்பதாகவும் ஒரு காரணத்தைக் கூறி ட்ரம்ப் நிருவாகம் வெளிநாட்டு உதவிகளை 90 நாட்களுக்கு முடக்கியிருக்கிறது. அந்த நிறுவனத்தை மூடி இராஜாங்கத் திணைக்களத்துடன் இணைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்க அரசாங்கத்தின் நிறுவனங்கள் அமெரிக்காவின் உலக மேலாதிக்க மற்றும் மூலோபாய நலன்களை பேணிப்பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கின்ற போதிலும், உலகம் பூராவும் வாஷிங்டனின் மென் அதிகாரத்தை (Soft Power) மேம்படுத்தும் ஒரு முக்கிய கருவி என்று வர்ணிக்கப்பட்டுவந்த யூ.எஸ். எயிட் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான டொலர்கள் உதவிகளை நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் வழங்கிவருகிறது. வெளிநாட்டு உதவிகளை முடக்கும் ட்ரம்ப் நிருவாகத்தின் தீர்மானத்தின் விளைவாக உயிர் வாழ்வுக்காக அமெரிக்க உதவியில் தங்கியிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு பாரதூரமான பாதிப்பு ஏற்படப் போகிறது. அமெரிக்க அரசாங்கத்தின் செயற்திறன் திணைக்களத்தின் (Department of Government Efficiency) தலைவரான உலகின் பெரிய தனவந்தர் இலன் மஸ்க் யூ.எஸ். எயிட் நிறுவனம் அமெரிக்கவை வெறுக்கும் தீவிரவாத இடது – மார்க்சியவாதிகளினதும் நம்பமுடியாத பயங்கரமான கும்பல்களினதும் கூடாரமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். எந்தவிதமான சான்றையும் முன்வைக்காமல் யூ.எஸ். எயிட்டை ‘கிறிமினல் அமைப்பு ‘ என்று வர்ணித்த மஸ்க் ‘அந்த நிறுவனம் சாவதற்கான நேரம் வந்து விட்டது’ என்றும் கூறினார். அதேவேளை, ஜனாதிபதி ட்ரம்ப் யூ.எஸ்.எயிட் தீவிரவாத கிறுக்கர்கள் கும்பல் ஒன்றினால் நிருவகிக்கப்பட்டு வந்ததாகவும் அவர்களை தாங்கள் வெளியேற்றிக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் கூறினார். வெளிநாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்கு இதுகாலரை அமெரிக்க நிருவாகங்கள் கடைப்பிடித்து வந்திருக்கும் கொள்கைகளும் நடைமுறைகளும் பல சந்தர்ப்பங்களில் அமெரிக்காவின் நலன்களுக்கும் விழுமியங்களுக்கும் முரணானவையாக அமைந்திருப்பதாக கருதும் ட்ரம்ப் “அந்த உதவிகள் வெளிநாடுகளின் சிந்தனைகளை மேம்படுத்துவதற்கும் நாடுகளுக்குள்ளும் நாடுகள் மத்தியிலும் இணக்கப்போக்கான, உறுதிவாய்ந்த உறவுகள் பாதிக்கப்படுவதற்கும் வழிவகுத்திருப்பதாக” கூறுகிறார். ட்ரம்ப் நிருவாகத்தின் இந்த தீர்மானங்களை உலக நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் கடுமையாக கண்டனம் செய்துவருகின்ற அதேவேளை, இலங்கையில் இரு அரசியல்வாதிகள் ஆதரித்து விசித்திரமான கருத்துக்களை வெளியிட்டு ட்ரம்பின் விசிறிகள் போன்று நடந்து கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்சவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்சவுமே அவர்கள். இலங்கையில் யூ.எஸ். எயிட்டின் நிதியுதவிகள் குறித்து விசாரணை செய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்த நாமல் ராஜபக்ச “மற்றைய நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்யாத” ட்ரம்பின் கொள்கையை பாராட்டியிருப்பதுடன் அமெரிக்க வரியிறுப்பாளர்களின் நிதி ஒதுக்கீடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். வெளிநாடுகளில் அரசாங்கங்களுக்கு எதிராக கிளர்ச்சிகளை தூண்டிவிடும் நடவடிக்கைகளுக்கு யூ.எஸ். எயிட்டின் நிதி பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதாகவும் ட்ரம்ப் கூறியிருப்பது நாமல் ராஜபக்சவை கவர்ந்திருக்கிறது போன்று தெரிகிறது. தங்களது ஆட்சிக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி இருந்ததாக கூறும் ராஜபக்சாக்களுக்கு உலகம் வெறுக்கின்ற ட்ரம்ப் ஒரு ‘சிறந்த அரசியல்ஞானியாக’ தெரிவது விசித்திரம். அதேவேளை, அமெரிக்காவை வெறித்தனமாக தாக்கிப் பேசுவதை வழக்கமாகக் கொண்ட விமல் வீரவன்சவும் யூ.எஸ். எயிட் நிறுவனத்தின் ‘தவறான செயல்களை’ ஜனாதிபதி ட்ரம்ப் அம்பலப்படுத்துவதாகக் கூறி அவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் செய்திருக்கும் பதிவொன்றில் ” அமெரிக்க தனவந்தர் ஜோர்ஜ் சோரோஸ் ஊடாக வழங்கப்படும் யூ.எஸ். எயிட் நிதியுதவி இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் தோற்றுவித்த நெருக்கடிகளை அம்பலப்படுத்துகின்றமைக்காக அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி. குழப்ப நிலைகளுக்கு ஆதரவளிக்கின்ற தூதுவர்களையும் அம்பலப்படுத்துமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். டொனால்ட் ட்ரம்பை வெளிநாடுகளின் விவகாரங்களில் தலையீடுகளைச் செய்யாத வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடிப்பவராக ராஜபக்சவும் வீரவன்சவும் ‘கண்டு பிடித்திருப்பது’ தான் இங்கு விசித்திரமான ஒரு விடயமாகும். டென்மார்க் நாட்டுக்கு சொந்தமான கிறீன்லாந்து தீவை அமெரிக்காவுக்கு சொந்தமாக்கப் போவதாகவும் மத்திய கிழக்கில் காசா பள்ளத்தாக்கில் இருந்து பாலஸ்தீன மக்களை வெளியேற்றிவிட்டு அந்த பள்ளத்தாக்கை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப் போவதாகவும் கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக்குவதற்கு விரும்புவதாகவும் ட்ரம்ப் கூறியதை அறிந்த பின்னரும் கூட இந்த இரு இலங்கை அரசியல்வாதிகளும் ட்ரம்பை ‘தலையீடு செய்யாத கொள்கைக்காக’ பாராட்டுகிறார்கள் என்றால் அதை என்னவென்று சொல்வது? ராஜபக்சவும் வீரவன்சவும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மீதான தங்களது வெறுப்பின் காரணமாகவே யூ.எஸ். எயிட் மீதான ட்ரம்ப் நிருவாகத்தின் தாக்குதலை ஆதரிக்கிறார்கள் என்று தெரிகிறது. மூன்று வருடங்களுக்கு முன்னர் ராஜபக்சாக்களின் ஆட்சியை வீழ்த்திய மக்கள் கிளர்ச்சியின் பின்னணியில் வெளிநாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெறும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் செயற்பட்டதாக இவர்கள் ஏற்கெனவே குற்றஞ்சாட்டி வந்திருக்கிறார்கள். பல தொண்டர் நிறுவனங்களுக்கும் சிந்தனைக் குழாம்களுக்கும் (Think Tanks) எதிரான தங்களது தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்துவதற்கு யூ.எஸ். எயிட்டுக்கு எதிராக ட்ரம்ப் நிருவாகம் நடவடிக்கையில் இறங்கியிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். வீரவன்சவை பொறுத்தவரை, உள்நாட்டுப்போர் காலகட்டத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் இடர்பாடுகளுக்கு மத்தியில் செய்த மனிதாபிமான உதவிகளைக் கூட பயங்கரவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் வழங்கப்படும் ஆதரவு என்று விமர்சித்தவர். இராணுவ ரீதியாக அன்றி அரசியல் ரீதியாக தேசிய இனப்பிரச்சினைக்கு இணக்கத் தீர்வைக் காணவேண்டும் என்று குரல் கொடுத்த தொண்டர் நிறுவனங்களுக்கு எதிரான விசமத்தனமான பிரசாரங்களின் முன்னரங்கத்தில் வீரவன்ச போன்றவர்கள் நின்றார்கள். அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கும் சிவில் சமூக அமைப்புக்களுக்கும் எதிராக ‘போர்க்கொடி’ தூக்கியவர்கள் பெரும்பாலும் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற்றைக் கூட ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாதவர்கள். இன்று இத்தகையவர்கள் நிறவெறியையும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான உணர்வுகளையும் கொண்ட ஒரு அமெரிக்க ஜனாதிபதியை பாராட்டுவதில் திருப்தி காண்கிறார்கள். அமெரிக்க மக்களின் வரிப்பணம் வெளிநாடுகளில் ஒதுக்கீடு செய்யப்படுவதில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ச தங்களது குடும்பத்தின் ஆட்சிக் காலத்தில் சொந்த நாட்டு மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டதில் இருந்த வெளிப்படைத் தன்மையின் இலட்சணத்தை ஒருகணம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இவர்களுக்கும் ட்ரம்புக்கும் இடையே உணர்வுகள் ஒத்துப் போவதற்கு காரணம் ‘மற்றவர்கள்’ மீதான வெறுப்பேயாகும். குறுகிய மனப்பான்மை என்பது பெரும்பாலும் வெறுப்புணர்வில் இருந்தே வெளிக் கிளம்புகிறது. அமெரிக்காவில் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் எதிரான வெறித்தனமான உணர்வைக் கொண்ட ஜனாதிபதி ட்ரம்ப்பை, தங்களது அரசியல் மீட்சிக்கு இனவாதத்தில் மாத்திரம் நம்பிக்கை கொண்டிருக்கும் இவர்கள் கோட்பாட்டு அடிப்படையிலான தங்களது நேசசக்தியாக வரித்துக் கொள்வதில் காட்டும் நாட்டம் ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல. யூ.எஸ். எயிட் உதவி நிறுத்தம் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களை மிகவும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. அத்தகைய நிறுவனங்கள் சகலதுமே வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையாகவும் செயற்படுகின்றன என்று கூறமுடியவிட்டாலும், உண்மையில் சமூகங்களின் நலன்களுக்காக பயனுறுதியுடைய செயற்திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளரான கலாநிதி ஜெகான் பெரேரா கடந்த வாரம் ‘முற்றுகைக்குள்ளாகியிருக்கும் யூ.எஸ். எயிட்டும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் ‘ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் பட்டினிக் கொடுமை மற்றும் போர்ச் சூழல்களில் மக்களின் இடர்பாடுகளைத் தணிப்பதில் அமெரிக்க உதவி முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை வகிக்கும் உலகின் பிராந்தியங்களில் பெரும் எண்ணிக்கையான மக்களின் உயிர்வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்கின்ற அதேவேளை, யூ.எஸ். எயிட் உதவி நிறுத்தம் இலங்கையில் முற்றிலும் வேறுபட்ட காரணத்துக்காக செய்திகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். இலங்கையிலும் உலகம் பூராவும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு இதுகாலவரையில் மிகவும் பெரியளவில் நிதியுதவியைச் செய்த நிறுவனமாக யூ.எஸ். எயிட் விளங்கி வந்திருக்கும் நிலையில், நிதியுதவி இடைநிறுத்தம் பல தொண்டர் நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களின் எண்ணிக்கையில் குறைப்புச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது மாத்திரமல்ல, சில தொண்டர் நிறுவனங்கள் ஏற்கெனவே மூடப்பட்டும் விட்டன என்றும் ஜெகான் பெரேரா கூறியிருக்கிறார். முன்னைய அரசாங்கங்களில் முக்கிய பொறுப்புக்களை வகித்த அரசியல்வாதிகள் ஊழல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களே மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக யூ.எஸ். எயிட் உதவி நிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கும் சிவில் சமூக அமைப்புக்களுக்கும் எதிராக பிரசாரங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். தங்களது வீழ்ச்சிக்கு தவறான ஆட்சிமுறையும் ஊழல் முறைகேடுகளுமே உண்மையில் காரணம் என்பதை இந்த அரசியல்வாதிகள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. யூ.எஸ். எயிட்டின் நிதியுதவியைப் பெற்றுவந்த அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் சதி வேலைகள் காரணமாகவே தாங்கள் இடைநடுவில் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்டதாக இவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள் என்றும் ஜெகான் பெரேரா எழுதியிருக்கிறார். யூ.எஸ். எயிட் உதவி திடீரென்று இடை நிறுத்தப்பட்டதனால் இலங்கை உதவிகளைப் பெறுவதற்கு ‘மாற்றுவழிகளை நாடவேண்டியிருக்கும்’ என்று அரசாங்க பேச்சாளரான சுகாதார, தகவல்துறை அமைச்சர் நாளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருக்கிறார். யூ.எஸ். எயிட் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அந்த நிறுவனம் இலங்கைக்கு 200 கோடி டொலர்களை (சுமார் 72 ஆயிரம் கோடி ரூபா) உதவியாக வழங்கியிருக்கிறது என்று கூறப்படுகிறது. கெடுபிடியுத்தம் (Cold War) உச்சக்கட்டத்தில் இருந்த காலப்பகுதியில் உலக நாடுகளில் சோவியத் யூனியனின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கியமான ஒரு அங்கமான வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக ஜனநாயக கட்சி ஜனாதிபதியான ஜோன் எவ். கென்னடியினால் 1961 ஆம் ஆண்டில் யூ.எஸ். எயிட் நிறுவனம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. https://arangamnews.com/?p=11836- ‘காதல் என்பது பொது உடைமை’ - தன் பாலினம்… காதலோடு அங்கீகாரமும் பொது உடைமையாகட்டும்!
தன் பாலினம்… காதலோடு அங்கீகாரமும் பொது உடைமையாகட்டும்! 26 Feb 2025, 5:41 PM அ. குமரேசன் சில திரைப்படங்கள் எடுத்துக்கொண்ட உள்ளடக்கத்தாலும் அதை வெளிப்படுத்தும் கலையாக்கத்தாலும் பேசப்பட வேண்டிய படைப்புகளாக இருக்கும். வேறு சில படங்கள் அவற்றில் பேசப்பட்ட கருத்துகளைப் பற்றிச் சமுதாயத்தையே பேச வைப்பவையாக இருக்கும். பேச வைக்கிற ஒரு படம்தான் ‘காதல் என்பது பொது உடைமை’. காதல் மதம் பார்த்து, சாதி பார்த்து, இனம் பார்த்து, வயது பார்த்து, நாடு பார்த்து – ஏன் பாலினம் பார்த்துக்கூட – வருவதல்ல. எதிர்ப் பாலினத்தவர்களிடையே மட்டும்தான், பெண்ணுக்கும் ஆணுக்கும்தான், காதல் பூக்கும் என்றில்லை. சமுதாயத்தில் அப்படித்தான் நம்பப்படுகிறது, அதுதான் இயற்கை என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. (எதிர்ப் பாலினத்தவர்களின் இயற்கையான காதலை மட்டும் சமுதாயம் ஏற்றுக்கொள்கிறதா என்ன? அப்படி ஏற்றுக்கொள்ளுமானால் எதற்காக ஆணவக் கொலைகள் நடக்கின்றன?) தன்பாலின ஈர்ப்பாளர்கள்தான் நாயகப் பாத்திரங்கள் என விளம்பரப் படங்களாலும் விமர்சனங்களாலும் ஏற்கெனவே தெரிந்துவிட்டது. ஆகவே, தன் மகள் சாம் யாரையோ காதலிக்கிறாள் என்றறிந்ததும் அவனை வீட்டுக்கு அழைத்து வரச் சொல்லும் தாய்க்கு, அவளுடைய காதல் இணை “அவன்” அல்ல, ”அவள்” என்று தெரிய வருகிற இடம் நமக்கு எதிர்பாராத திருப்பமாக இல்லை. ஆனாலும், தாய் லட்சுமி, மகள் சாம், அவளது இணை நந்தினி, அவளை அழைத்து வந்த நண்பன் ரவீந்திரன் இவர்களுக்கிடையே அதிர்ச்சியும் ஆத்திரமும் அழுகையுமாக அந்த நிமிடத்தில் எழுகிற உணர்ச்சிப் பேரலை நம்மையும் மூழ்கடிக்கிறது. லட்சுமியிடமிருந்து மணவிலக்குப் பெற்ற தேவராஜ், பிரிவுக்கான காரணம், முன்பு சாமை காதலித்தவன்தான் ரவீந்திரன், அவளுக்கும் நந்தினிக்கும் காதல் துளிர்த்த பொழுது என்ற விரிவாக்கங்கள் கதைக் கட்டுமானத்திற்கு வலுச் சேர்க்கின்றன. படத்தில் மூன்று அணைப்புக் காட்சிகள். முதலாவது சாம்–நந்தினி காதல் அணைப்பு; இரண்டாவது கலங்கி நிற்கும் சாமுக்கும் நந்தினிக்கும் ரவீந்திரனின் தோழமை அணைப்பு; மூன்றாவது கொந்தளிப்பான உச்சத்தில் லட்சுமி–சாம்–தேவராஜ் பாச அணைப்பு. அந்த அணைப்புகள் பார்வையாளர்களுக்கு ஒரு கதகதப்பைக் கடத்துகின்றன. பால் புதுமையினர் எனப்படும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய புரிதலின் கதகதப்பு அது. இவர்களின் தேர்வு இயற்கையானதென்று புரிந்துகொள்ள முதல் அணைப்பும், தோழமைகள் ஆதரவாகத் தோள் கொடுக்க இரண்டாவது அணைப்பும், குடும்பங்கள் தெளிந்து அங்கீகரிக்க மூன்றாவது அணைப்பும் வேண்டுகோள் விடுப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். இரு பெண்களிடமும் வீட்டுப் பணிப்பெண் மேரி கேட்கிற பாமரத்தனமான கேள்வியும், படித்தவர்களுக்கே பாதை காட்டும் பேச்சும் அழகானவை. லட்சுமி தனக்குக் கூடுதலாகக் கொடுக்கும் 500 ரூபாயைத் திருப்பிக்கொடுக்கிற இடம் பணத்துக்காக அல்ல, பண்பாடாகவும் வீட்டில் நடந்ததை வெளியே சொல்ல மாட்டேன் என்கிற பக்குவமிகு சுயமரியாதையைக் காட்டுகிறது. கலையாக வரும் கருத்து ‘லேடீஸ் அன் ஜென்டில்விமன்’ என்ற ஆவணப்படம் ஒன்று 2017இல் வெளியானது. தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான சமூக அங்கீகாரத்தைக் கோரும் அந்த ஆவணப்படத்தை இந்த மக்களின் உரிமைக் களத்தில் நிற்பவரும் இயக்குநருமான மாலினி ஜீவரத்தினம் உருவாக்கியிருந்தார். அதில் பங்கேற்று, இவர்களின் இயற்கைத் தன்மை, மனித உரிமை உள்ளிட்ட பார்வைகளில் கருத்துகளைக் கூறும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.. இக்கருத்துகள் ஒரு கலைப் படைப்பாகவும் உருவாக்கப்பட்டால் பலரையும் சென்றடையுமே என்று விரும்பினேன். அதை இந்தப் படம் நிறைவேற்றியிருக்கிறது. இத்தகையோரைத் துணைப் பாத்திரங்களாகக் கொண்ட சில படங்களும் வலைத் தொடர்களும் வந்திருக்கின்றன. இவர்களையே மையப் பாத்திரங்களாகக் கொண்ட முதல் தமிழ்ப்படம் இதுவாகத்தான் இருக்கும். முன்பு கமல்ஹாசன் தயாரிப்பிலும் நடிப்பிலும் வந்த “வேட்டையாடு விளையாடு”, தன்பாலின ஈர்ப்பு கொண்ட இரு ஆண்களைக் கொலை வன்மக் கொடூரர்களாகச் சித்தரித்தது. வடிவேலு போலீஸ் ஏட்டய்யாவாக நடித்த ஒரு படத்தின் ஒரு காட்சியில், இவர்களில் ஒருவர் நகைச்சுவைக்கு உரியவராக (“அவனா நீயி?”) நடக்கவிடப்பட்டிருப்பார். அப்படிப்பட்ட படங்களோடு ஒப்பிட்டால் இது எவ்வளவு மேன்மையான படைப்பு என்று புரிந்துகொள்ளலாம். ஆங்கிலத்தில் ‘கரோல்’, ‘இமேஜின் மீ அன் யூ’, ‘சேவிங் ஃபேஸ்’, ‘பாட்டம்ஸ்’, ‘கால் மீ பை யுவர் நேம்’, ‘லவ் சைமன்’, ‘புரோக் பேக் மவுன்டெய்ன்’, ‘ஷெல்டர்’ ஆகியன உள்ளிட்ட சில படங்கள் இவர்களை மையப்படுத்தி வந்திருக்கின்றன. மலையாளத்தில் வந்த ‘காதல் தி கோர்’ படம் தன்பாலின ஈர்ப்புள்ள இரு ஆண்களின் கதையைக் கூறியது. தமிழில் முதல்முறையாக வந்துள்ள இந்தப் படம், முதல் முயற்சிகளுக்கே உரிய சவால்களையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. கருத்தாக்கம், கலையாக்கம் இரண்டிலும் இந்தப் படம் வெற்றி பெற்றிருக்கிறது. முற்போக்கான சிந்தனைகளோடு வெளியான பல படங்கள் செய்நேர்த்தியில் தோல்வியடைந்திருக்கின்றன. இந்தப் படம் இடைவேளைக்குப் பிறகு முழுக்க முழுக்க உரையாடலாகவே அமைந்திருக்கிறது. ஆனால் அது பாத்திரங்களுக்கு இடையேயானதாகப் போய்விடாமல் பார்வையாளர்களுடனான உரையாடலாக மாறிவிடுகிறது. ஒரே பாலினத்தவர்கள் இணைவது இயற்கைக்கு மாறானதில்லையா, அப்படி வாழ்ந்தால் குழந்தை எப்படிப் பிறக்கும், குடும்ப உறவு என்னாகும், உளவியல் ஆலோசனைகளால் சரிப்படுத்திவிட முடியாதா என்றெல்லாம் சுற்றி வருகிற கேள்விகளுக்கு வானவில்லாகப் பதில்கள் கிடைக்கின்றன. பால் புதுமையினர் கதையாகக் காட்சியளித்தாலும் உண்மையில் இது அம்மா–மகள் கதைதான். அம்மாவின் இடத்தில் சமூகத்தை வைத்துப் பார்க்கலாம். மாறுதலும் ஆறுதலுமான இப்படிப்பட்ட படங்களுக்கென்றே வந்தவராகத் திகழும் ரோகிணி தாயாகவும், சாம், நந்தினி பாத்திரங்களில் லிஜோமேல் ஜோஸ், அனுஷா பிரபு ஆகியோரும், நண்பனாக காலேஷ் ராமானந்த், தகப்பனாக வினீத், மேரியாக தீபா சங்கர் என அனைவரும் சிறப்பான நடிப்பால் அந்தக் கதாபாத்திரங்களின் மேல் காதலை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்களோடு பார்வையாளர்களைப் பயணிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சரணவன். உமாதேவியின் பாடல் வரிகளுக்கு லயம் சேர்த்து, தேவையான இடங்களில் மௌனத்தையும் இசையாக்கியிருக்கிறார் கண்ணன் நாராயணன். சீராகத் தொகுத்தளித்திருக்கிறார் டேனி சார்லஸ். கருத்தும் கலையும் இரண்டறக் கலந்ததாகத் தமிழ் சினிமாவை உலகத் திரைகளுக்குக் கொண்டு செல்வோரின் அணியில் இணைந்திருக்கிறார் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். இக்குழுவினருக்கு ஆடுகளத்தை அமைத்துக் கொடுத்திருக்கும் தயாரிப்பாளர்களும் வெளியீட்டாளர்களும் அழுத்தமான கைகுலுக்கலுக்கு உரியவர்கள். பேசுவது முக்கியம் படத்தைப் பற்றிப் பேசுவதோடு நில்லாமல், படம் பேசுகிற செய்தி தொடர்பாகப் பேசுவது முக்கியம். வரவேற்றோ எதிர்த்தோ கூட பொதுவெளியில் பேசப்பட வேண்டும். ஒரு படைப்பாக்கம் அப்போதுதான் முழு வெற்றி பெறும். படத்தை உருவாக்கியவர்கள் அதைத்தான் விரும்புவார்கள். இந்தியாவில் இவர்களின் திருமண உரிமையை அங்கீகரிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது. உலகில் அந்த உரிமையை ஏற்கெனவே அங்கீகரித்த நாடுகள் இருக்கின்றன. நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா, ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, நார்வே, ஸ்வீடன், போர்ச்சுகல், ஐஸ்லாந்து, அர்ஜென்டினா, டென்மார்க், பிரேசில், பிரான்ஸ், உருகுவே, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அமெரிக்கா, அயர்லாந்து, கிரீன்லாந்து, கொலம்பியா, பின்லாந்து, ஜெர்மனி, மால்டா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, தைவான், ஈகுவடார், கோஸ்டாரிகா, சிலி, ஸ்விட்சர்லாந்து, கியூபா, ஸ்லோவேனியா, அன்டோர்ரா,. எஸ்டோனியா ஆகிய நாடுகள் சட்டப்பூர்வமாக தன்பாலினத்தவர் மணவாழ்வை அங்கீகரித்திருக்கின்றன. மெக்சிகோவின் பல்வேறு மாகாணங்களில் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வேறு சில நாடுகளிலும் இந்த அங்கீகாரத்திற்கான இயக்கங்கள் தொடர்கின்றன. ஆகவே இது மேற்கத்திய நாகரிகம் என்று சட்டென்று தள்ளுபடி செய்ய சிலர் முயல்வார்கள். ஆனால், நாட்டின் தொன்மையான இலக்கியங்களில் இந்த மக்களின் கதைகள் இடம்பெற்றுள்ளன. ஆலயச் சிற்பங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், இடையில் ஊடுறுவிய மேல்தட்டுத்தனமான கருத்துகளால் தன்பாலின உறவே ஒழுக்கக்கேடானது என்ற வெறுப்பு வளர்க்கப்பட்டுவிட்டது. ஒட்டுமொத்த சமுதாயத்தில் இந்த உறவை நாடுகிறவர்கள் சிறிய எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள் என்பதாலேயே அவர்களின் உணர்வுப் பூர்வமான உறவு இயற்கைக்கு மாறானதாகிவிடாது. சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ள நாடுகளில், பல்வேறு சமூகப் பாதுகாப்புகள் உள்ளன. மருத்துவம், காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட ஏற்பாடுகள் இருக்கின்றன. பாகுபாடுகளைத் தடுக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. இத்தகைய சட்டப் பாதுகாப்புகள் தங்களுடைய உறவை வெளிப்படையாக அறிவிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளன. சமூக அரவணைப்பை உறுதிப்படுத்தியுள்ளன. எளிமையாகச் சொல்வதென்றால் இணையராக உறவினர் இல்லங்களுக்கும் பொது நிகழ்வுகளுக்கும் சென்று வர முடிகிறது. தாங்கள் தனிமைப்பட்டுவிடவில்லை என்ற தன்னம்பிக்கை மேலோங்குகிறது.அங்கீகாரத்தால் விளையும் தன்னம்பிக்கை ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றத்தில் இவர்களையும் பங்கேற்கச் செய்கிறது. கலை, அரசியல், தொழில் வணிகம் என பல்வேறு துறைகளில் கம்பீரமாக ஈடுபடும் தன்பாலின இணையர்கள் பலர் இருக்கிறார்கள். அயர்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் லியோ வரட்கர், அவரது கூட்டாளி மாத்யூ பர்ரட் இருவரும் பெயர் பெற்ற தன்பாலின இணையராவர். போலந்து அரசியலில் அன்னா கிராவ்போஸ்கா, இசபெல்லா கிராவ்போஸ்கா இரு பெண்களும் தங்களின் பணிகளுக்காக மதிக்கப்படுகிறவர்கள். ஜெனீவா ரோசெல். பார்பரா லின்: இருவரும் அறிவியலில் சிறப்பாகப் பங்களித்திருக்கிறார்கள். புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் டிம் குக் தனது பாலின ஈர்ப்பு அடையாளத்தை வெளிப்படையாக அறிவித்தவர். டென்னிஸ் நட்சத்திரம் மார்ட்டினா நவரத்திலோவா தனது பாலியல் தேர்வைத் தயக்கமின்றி வெளிப்படுத்தியவர். உலகறிந்த எழுத்தாளர் ஆஸ்கார் ஒயில்ட் தயக்கக் கயிறுகளை அறுத்துக்கொண்டவர்தான். ஹாலிவுட் திரைப்படத் துறையில் நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலரும் இத்தகைய இணையர்களாக இயங்குகிறார்கள். இவர்கள் பொதுச் சமூகத்தில் இவர்களைப் பற்றிய நேர்மறைக் கண்ணோட்டத்தை உருவாக்குவதிலும் சிறப்பாகப் பங்களித்து வருகிறார்கள். எதிர்ப்பதில் மத ஒற்றுமை! உலகின் இத்தகைய காட்சிகளைக் காண மறுத்து இது ஒழுக்கக்கேடு என்றும், இதை அனுமதித்தால் சமூக ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்றும் கூறி, குறிப்பாக மதம் சார்ந்த அமைப்புகள் கடுமையாக எதிர்க்கின்றன. இந்தியாவில் இவர்களைத் தண்டனைக்குரிய குற்றவாளிகளாகக் கூறும் பழைய விக்டோரியா காலத்துச் சட்டத்தைத் (சட்ட உரை 377) தள்ளுபடி செய்யக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கில் தங்களையும் இவர்களின் எதிர்த் தரப்பினராக இணைத்துக்கொள்ளக் கோரி பல அமைப்புகள் இணைந்துள்ளன. இவ்வாறு இணைந்திருப்பதில் எல்லா மதங்களையும் சேர்ந்த அமைப்புகள் இருப்பது கவனிக்கத்தக்கது. இதிலே மத ஒற்றுமை! மதம் சார்ந்த கோட்பாடுகள் இவர்களை அங்கீகரிப்பதற்கு முக்கியமானதொரு தடையாகப் பல நாடுகளிலும் இருக்கின்றன. தனி மனித ஒழுக்கம் அல்லது சமூகச் சீர்குலைவு ஆகியவற்றை விட அந்த அமைப்புகளின் கவலை, இது அங்கீகரிக்கப்படுமானால் வேலிகளைத் தாண்டிய உறவுகள் வலுப்பெறும், அது மத ஆதிக்கத்திற்கு சவாலாக வரும் என்ற அச்சம்தான் என்று ஊகிப்பது கடினமல்ல. சாதி அமைப்புகளுடைய எதிர்ப்பும் இந்த அச்சத்திலிருந்தே வருகிறது. அவர்கள் யோசிக்க மறுப்பது என்னவென்றால், எதிர்ப் பாலினத்தவரிடையேயான ஈர்ப்புதான் ஆகப் பெரும்பான்மை. தன் பாலின ஈர்ப்பு கொண்டோர் மிகக்குறைவே. அந்த எண்ணிக்கையாலும் எதிர்காலத்தில் அது பெருகிவிடுவதாலும் மதமோ சாதியோ தகர்ந்துவிடும் என்று கவலைப்படுவது கற்பனையான பேய் பிசாசை நினைத்துப் பயப்படுவது போன்றதுதான். இந்நிலையில், இவர்களுக்குரிய அங்கீகாரம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அடுத்த விசாரணை ஏப்ரல் 18 அன்று நடைபெற இருக்கிறது. அந்த விசாரணை எங்கே இட்டுச் செல்லுமோ என்ற கவலையுடன் இந்த மக்கள் அந்த நாளை எதிர்பார்த்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஓர் ஆறுதல் இதனிடையே, ஒரு ஆறுதலாக, தமிழ்நாட்டில் இவர்களுக்கான கொள்கை ஒன்றை உருவாக்கும் பணியில் மாநில அரசு ஈடுபட்டிருக்கிற செய்தி வந்திருக்கிறது. மதுரையைச் சேர்ந்த இரு பெண்களின் உறவுரிமை தொடர்பான ஒரு வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்பான ஆய்வுகளைப் படித்து, இடைக்கால ஆணை ஒன்றைப் பிறப்பித்தார். அதில், உச்சநீதிமன்றத்தின் முந்தைய வழிகாட்டல்படி மாறுபாலினத்தவர்களுக்கான கொள்கையை உருவாக்குவதில் தற்போதைய நிலவரம் என்னவென்று கேட்டதுடன், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் சேர்த்து ஒரே கொள்கையாக உருவாக்கலாம் என்ற கருத்தையும் கூறியிருந்தார். அரசுத் தரப்பிலிருந்து, தனித்தனிக் கொள்கைகள் உருவாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனிக் கொள்கைகளாக உருவாக்கப்பட்டாலும் முதலில் ஒன்று, பிறகு இன்னொன்று என்றில்லாமல் இரண்டையும் ஒரே நேரத்தில் வெளியிடப் பணித்துள்ளார். வரும் செப்டம்பரில் அடுத்த விசாரணை நடைபெற உள்ளது. தனித்தனிக் கொள்கைகளாக வேண்டாம், ஒருங்கிணைந்த ஒரே கொள்கையாகவே உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாறுபாலினத்தவர்கள் சிலரும், தன்பால் ஈர்ப்பாளர்கள் சிலரும் முன்வைத்திருக்கிறார்கள். தனித்தனிக் கொள்கைகளாக இருந்தால், ஒவ்வொரு பிரிவினருக்குமான கூடுதல் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும், ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினருக்கான வாய்ப்புகளில் ஆக்கிரமிக்கிறார்கள் என்ற அச்சத்திற்கு இடமில்லாமல் போய்விடும் என்று கருதுகிறேன். எப்படியானாலும், இந்தக் கொள்கைகளை வகுப்பதில், மாறுபாலினத்தவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள், அறிவியலாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோருடன் விரிவான கலந்துரையாடலை அரசு நடத்த வேண்டும், எல்லோரும் ஏற்கத்தக்கக் கொள்கை ஆவணங்களை உருவாக்க வேண்டும். கடந்த காலம் எப்படியோ, இனி வரும் காலத்தில் இத்தகைய மக்களின் இத்தகைய அங்கீகாரங்கள் நிலைபெற்றால்தான் நாகரிகமடைந்த சமுதாயம் என்று சொல்லிக்கொள்ள முடியும் https://minnambalam.com/cinema/kadhal-enbadhu-podhu-udaimai-review-may-love-and-recognition-become-common/- ஹமாஸ் மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது
ஹமாஸ் மேலும் நான்கு உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது February 27, 2025 9:46 am ஹமாஸ் மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது. பதிலுக்கு, இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை ஹமாஸிடம் ஒப்படைத்துள்ளது. ஐந்து வாரங்களாக நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் காசாவில் மீண்டும் போர் வெடிக்கும் என்ற அச்சம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. பிணைக் கைதிகளின் உடல்கள் தெற்கு காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. நள்ளிரவில் உடல்கள் கெரம் ஷாலோமிடம் ஒப்படைக்கப்பட்டன. மேற்குக் கரை நகரமான ரமல்லாவில் இஸ்ரேல் பணயக்கைதிகளை ஒப்படைத்தது. இஸ்ரேல் கைதிகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது. இந்த வழியில் இஸ்ரேல் 600 கைதிகளை விடுவித்தது. இதனிடையே, புதன்கிழமை இரவு ஹமாஸால் ஒப்படைக்கப்பட்ட நான்கு உடல்களும் டிஎன்ஏ பரிசோதனைக்காக டெல் அவிவில் உள்ள தடயவியல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன. முன்னதாக, கைதிகளை விடுவிப்பதில் இஸ்ரேல் தாமதப்படுத்தியது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்த கவலைகளை எழுப்பியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கைதிகளை விடுவிக்க மறுப்பதன் மூலம் இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியது. கைதிகளை விடுவிக்காமல் இரண்டாம் கட்ட போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்றும் அவர்கள் கூறினர். இந்தக் கட்டத்தில்தான் மத்தியஸ்தர்கள் முன்முயற்சி எடுத்து இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சமாதானத்தை ஏற்படுத்தினர். https://oruvan.com/hamas-hands-over-bodies-of-four-more-hostages-to-israel/- வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி பூஜைகள் அமைதியாக இடம்பெற்றது
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி பூஜைகள் அமைதியாக இடம்பெற்றது நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றது. அந்தவகையில் புதன்கிழமை (26) மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு விசேட அபிசேகபூஜைகள் இடம்பெற்றது. ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது. இம்முறை ஆலயத்தில் மாலை 6மணிவரை மாத்திரமே பூஜைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் மாலை 6 மணிவரை ஆலயத்தில் விசேடவழிபாடுகளை மேற்கொண்ட பொதுமக்கள் அதன்பின்னர் தமது வீடுகளிற்கு சென்றிருந்தனர். இதேவேளை புதன்கிழமை (26) காலை முதல் ஆலய பகுதியில் நெடுங்கேணி பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும் பொதுமக்களின் வழிபாட்டுசெயற்பாடுகளுக்கு எந்தவித தடைகளையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. கடந்தவருடம் சிவாரத்திரி தினமன்று மாலை 6மணிக்கு பின்னர் சிவராத்திரி பூஜைகளை செய்யமுற்ப்பட்ட 8பேர் நெடுங்கேணி பொலிசாரால் அடாவடியான முறையில் கைதுசெய்யப்பட்டனர். அந்த செயற்பாடு பதற்றம் ஒன்றை உருவாக்கியிருந்ததுடன், பொலிசாரின் செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்றிருந்தது. https://akkinikkunchu.com/?p=314068- மட்டக்களப்பு வாகரை புச்சாங்கேணியில் நடப்பது என்ன?
மட்டக்களப்பு வாகரை புச்சாங்கேணியில் நடப்பது என்ன? Vhg பிப்ரவரி 26, 2025 மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் எல்லை கிராமமான கட்டுமுறிவை அண்டிய பகுதிகளில் 25 தொடக்கம் 30 வருடங்களுக்கு மேலாக வாழும் மக்களை வன இலாகா என கூறிக்கொண்டு அங்கு சென்ற அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். அத்தோடு, மானிடவியலுக்கு ஒவ்வாத நடைமுறைகளை அம்மக்களின் மீது திணித்து தாக்கியதையடுத்து அங்குள்ள மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத்தின் கவனத்திற்கு உடன் கொண்டு சென்றுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (25-02-2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தபகுதி மக்களின் ஆதங்கங்களையும், குமுறல்களையும் கேட்டறிந்து கொண்டார். இது தொடர்பாக வாகரைப் பிரதேச செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து தெரிவித்துடன், பிரதேச செயலாளர் ஊடாக அந்தப் பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகருக்கு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அங்கு அம்மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் பற்றி ஆய்வு செய்யுமாறு பணிப்புரை விடுத்திருந்தார். மேலும் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் நேரடியாக தொடர்பு கொண்டு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்று (25-02-2025) இரண்டு மணியளவில் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட புச்சாக்கேணி கிராமசேவகர் பிரிவில் உள்ள நான்காம் கட்டை பகுதிக்குச் சென்ற வனவள இலகா பிரிவினர் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களை அச்சுறுத்தி அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என அச்சுறுத்தியதோடு மூன்று பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதற்காக தகவல்களைச் சேகரித்து சென்றுள்ளனர். அத்தோடு, அங்கு வசித்த மக்களின் குடியிருப்புகளைத் தீக்கிரையாக்கியுள்ளதுடன், அங்குள்ள மக்களையும் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக கேள்வியுற்று கதிரவெளியில் இருந்து சென்ற இரு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் நியாயம் கேட்டபோது அவர்களும் மிக மோசமாக தாக்கப்பட்டதுடன் கைவிலங்கு போடப்பட்டு குற்றவாளிகளை அழைத்துச் செல்வது போன்று மிகவும் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர். இந்தநிலையில், அப்பகுதி மக்களின் மனித உரிமை, மனிதாபிமானம், என்பன அப்பட்டமான இதன்போது மீறப்பட்டதையும், மனித உரிமை ஆர்வலர்களுக்கு தெரியப்படுத்தியதுடன், மீறப்பட்ட மனித உரிமைகளுக்காக மனித உரிமை ஆணைக்குழு மற்றும் அது சார்ந்த அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்து ஆறுதல் வழங்கியதுடன், இந்த விடயம் தொடர்பில் மக்களுடன் தானும், தமிழரசு கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து பக்கபலமாக இருப்போம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார். https://www.battinatham.com/2025/02/blog-post_482.html- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்
சங்குச் சின்னத்தில் ஈ.பி.டி.பி.யும் இணையலாம்; சுரேஷ் அழைப்பு சங்கு சின்னத்தின் பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தொடக்கம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரை இந்தக் கூட்டணியில் இணைய முடியும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் நேற்று மேலும் தெரிவித்ததாவது: உள்ளூராட்சித் தேர்தலை வடக்கு, கிழக்கில் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் நாங்கள் தற்போது கவனம் செலுத்தியுள்ளதுடன், இதற்காகப் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். பல கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதற்குத் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளன. இந்தக் கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணியாக அல்லாமல், தமிழ் மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் கூட்டணியாகவே அமைய வேண்டும். இன்று (நேற்று) இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் சமத்துவக் கட்சி, சனநாயக தமிழரசு கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி என்பன கலந்து கொண்டன – என்றார். https://newuthayan.com/article/சங்குச்_சின்னத்தில்_ஈ.பி.டி.பி.யும்_இணையலாம்;_சுரேஷ்_அழைப்பு- இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம்
யாழில் வெடித்தது மீனவர் போராட்டம் – கலகம் அடக்கும் பொலிஸார் களத்தில்! இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. யாழ்.மாவட்ட தீவக கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தீபக மீனவ அமைப்புகள் சேர்ந்து முன்னெடுத்துவரும் குறித்த போராட்டத்தின் போது, யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்தில் மனுவொன்றை கையளித்துவிட்டு இந்திய துணை தூதரகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த போராட்டத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கடற்றொழில் சங்கங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் பங்குபற்றியுள்ளனர். “தாண்டாத தாண்டாத எல்லையை தாண்டாதே, அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, இந்திய அரசே எங்களை வாழ விடு, மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே” போன்ற கோஷங்களை எழுப்பிய நிலை கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட பேரணி இந்திய துணை தூதரகத்தை அடைந்த நிலையில், அங்கு கடும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டத்திலிருந்து ஐவரை மட்டும் உள்ளே அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. போராட்டக் களத்தில் கண்ணீர் புகை குண்டுகளுடன் கலகமடக்கும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். https://www.samakalam.com/யாழில்-மீனவர்-போராட்டம்/- தமிழை வளர்க்கிறோம், வாழ வைக்கிறோம் என்று ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழைக் கட்டாயமாக்க இயலவில்லை: அன்புமணி
தமிழை வளர்க்கிறோம், வாழ வைக்கிறோம் என்று ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழைக் கட்டாயமாக்க இயலவில்லை: அன்புமணி editorenglishFebruary 27, 2025 தமிழைக் கட்டாய பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தெலுங்கானாவில் மாநிலப் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பாடத்திட்டங்களைப் பின்பற்றும் பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகளாகியும் இன்று வரை அந்தச் சட்டத்தை செயற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழை வளர்க்கிறோம், வாழ வைக்கிறோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழகத்தில் தமிழை இன்னும் பயிற்று மொழியாகவோ, கட்டாயப்பாடமாகவோ கொண்டு வர முடியவில்லை. தமிழ்மொழியைக் கட்டாயப்பாடமாக்குவதில் தமிழக ஆட்சியாளர்கள் செய்த துரோகங்கள் மிக நீண்டவை. சி.பி.எஸ்.இ உள்ளிட்ட பாடத்திட்டத்தைப் பின்பற்றும் தனியார் பள்ளிகள் தமிழைக் கட்டாய பாடமாக்கத் தேவையில்லை; அதற்குப் பதிலாகத் தமிழைக் கூடுதல் கட்டாயப்பாடமாக்கினால் போதுமானது. தமிழ்ப் பாடத்திற்கு சி.பி.எஸ்.இ உள்ளிட்ட வாரியங்கள் தேர்வு நடத்தத் தேவையில்லை; தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறையே நடத்தி அதற்கான சான்றிதழை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டமை மோசடியானது. தனியார் பள்ளிகள் எந்தப் பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றனவோ, அந்தப் பாடத்திட்டத்தின்படி தமிழ்ப் பாடத்திற்கு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப் பட்டால் தான் மாணவர்கள் தமிழைப் படிப்பார்கள். மாறாக பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடம் கிடையாது; பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற தமிழ் கட்டாயம் கிடையாது; எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையில், தமிழக அரசுத் தேர்வுத்துறை நடத்தும் தேர்வை பெயரளவில் எழுதினால் போதுமானது என்றால் எவரும் தமிழ் படிக்க மாட்டார்கள். இன்னொருபுறம், தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாக்கும் அரசாணை செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து 200-ம் ஆண்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு 25 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை விசாரணைக்குக் கொண்டு வரவோ அல்லது தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்கிச் சட்டம் கொண்டு வரவோ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம், தமிழை வெறுக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்குத் தமிழக ஆட்சியாளர்கள் செலுத்தி வரும் பதில் மரியாதை தான். இது தமிழ்த் துரோகம். தாய்மொழிக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை கேரளம், தெலுங்கானம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற பிற திராவிட மாநில அரசுகளிடமிருந்து தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இனியும் அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்வதை விடுத்து, தமிழகத்தில் தமிழைக் கட்டாயப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயல்படுத்த தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/212229/- சேவை ஏற்றுமதிக்கு 15% வரிவிதித்தால் அறிவு வளங்கள் நாட்டை விட்டுவெளியேறுவது நடைபெறும்: ஹர்ஷ டி சில்வா
சேவை ஏற்றுமதிக்கு 15% வரிவிதித்தால் அறிவு வளங்கள் நாட்டை விட்டுவெளியேறுவது நடைபெறும்: ஹர்ஷ டி சில்வா editorenglishFebruary 27, 2025 சேவை ஏற்றுமதிகள் மீதான அரசாங்கத்தின் அண்மைய 15% வரிவிதிப்பு முறையை மறுபரிசீலனை செய்யக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும் இணைந்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; பொருளாதார நெருக்கடியின் போது, தொலைதூர வேலைகளை நமது நாட்டிலிருந்தே இணையவழியாகச் செய்யும் வேலைகள் தான் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்ததுடன் அறிவுவளமானது நாட்டிலிருந்து வெளியேறுவதையும் தடுத்தது. இலங்கையானது டிஜிட்டல் வேலைகளுக்கான சொர்க்கமாகத் தன்னை உலக முதலீடுகளுக்குச் சந்தைப்படுத்த முயற்சிக்கும் அதேநேரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவதென்பது முரண்பாடாகவுள்ளது. இந்த வரிவிதிப்பானது முதலீட்டாளர்களுக்குக் குழப்பமான செய்தியைச் சொல்வதுடன் எமது நாட்டின் போட்டித்தன்மையைக் குறைத்து மதிப்பிடுவதாக அமைகின்றது. டிஜிட்டல் தொழில்முனைவோரைச் சோர்வடையச் செய்யும் இவ்வாறான வரிவிதிப்பு முறைகளைச் செயற்படுத்தும் இந்த அரசாங்கமானது எப்படி எமது தகவல் தொழினுட்பப் பணியாளர்களை வளர்க்கப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இவ்வாறு சேவை ஏற்றுமதிக்கு 15% வரிவிதித்தால் அறிவு வளங்கள் நாட்டை விட்டுவெளியேறுவதுடன் எமது நாட்டின் தகவல் தொழினுட்பத்துறையானது போட்டித்தன்மையை இழந்து மிகவும் பாதிப்புறும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். https://globaltamilnews.net/2025/212224/- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாகிஸ்தான் தங்கள் வீட்டுக் கூரையில் ஏறி கோழி பிடிக்கும் என்று நினைத்தேன்😁 இப்படி கூமுட்டையாக இருக்கும் என்று யார் கண்டார்கள்😩- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் (27 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! இப்போட்டியில் பாகிஸ்தான் தனது பெருமையை கொஞ்சம் காத்து எல்லோருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்குமா அல்லது முட்டைகளை உடைத்து எறியுமா?- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வேலையிடத்தில் திரும்புற பக்கம் எல்லாம் ரிவியில் கிரிக்கெட்தான் ஓடிக்கொண்டு இருந்தது. என்றாலும் கடைசி மூன்று ஓவர்களை குமிந்துநின்று பார்த்தோம்!- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இப்ராஹிம் ஸட்ரானின் அதிரடியான 177 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து சவாலான 325 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, வெற்றி இலக்கை நோக்கிப் பயணித்தபோதும், ஜோ ரூட்டின் 120 ஓட்டங்களைத் தவிர பிறர் நிலைத்து ஆடாததால் இலக்கை எட்டமுடியாமல் 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 317 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. அஸ்மத்துல்லா ஒமர்ஸாய் 58 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 08 பேருக்கு தலா இரண்டு புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றைய 16 பேருக்கும் புள்ளிகள் இல்லை. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: - ஈஸ்டர் தாக்குதல் எச்சரிக்கையை கார்டினல் புறக்கணித்தார்: ஞானசார தேரர் குற்றச்சாட்டு
Important Information
By using this site, you agree to our Terms of Use.