Everything posted by கிருபன்
-
சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம்
சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் February 26, 2025 06. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறவுள்ளது. எள்ளாங்குளம் துயிலும் இல்லத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ’33 ஆண்டுகள் தாயக மண்ணுக்காக சிறையிருந்து சிறையிலேயே சாவடைந்த சாந்தனின் முதலாம் ஆண்டு நாளில் அவர் விதைக்கப்பட்ட இடத்தில் அவர் குடும்பத்தாரால் உருவாக்கப்பட்டு தாயாரால் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள ஆலயத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்’ என்று குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த சாந்தன் விடுவிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் உள்ள தடுப்பு முகாமில் வைத்து நோய்வாய்ப்பட்டிருந்தார். பின்னர் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி காலை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. www.ilakku.orgசாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் | February 26, 202506. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின்
-
இந்தியா – இலங்கை பெற்றோலிய குழாய் இணைப்புத் திட்டம் சாத்தியமாகுமா?
இந்தியா – இலங்கை பெற்றோலிய குழாய் இணைப்புத் திட்டம் சாத்தியமாகுமா? இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள பல்துறை பெற்றோலிய குழாய் இணைப்பு, அரசியல் ரீதியாக சாத்தியமானதாக இல்லாவிட்டாலும், பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக இருந்தால் மட்டுமே நிறைவேறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டபிளியூ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகளை இரு தரப்பினரும் தற்போது மதிப்பீடு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “திட்டத்தின் சாத்தியக்கூறுகளை நாங்கள் மதிப்பிடுவோம். அது சாத்தியமானால் மட்டுமே முன்னேற்றம் இடம்பெறும். அரசியல் காரணங்களுக்காக அதை முடிவு செய்ய முடியாது. இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகியவற்றை உள்ளடக்கிய முத்தரப்பு திட்டமாக இது முன்மொழியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஜனாதிபதி புதுடில்லிக்கு விஜயம் செய்தபோது இந்தத் திட்டம் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு ஆரம்பட்ட இணக்கப்பாட்டுக்கான ஒப்பந்தடம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி இணைப்பின் ஒரு பகுதியாகும். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான மின் கட்ட இணைப்புக்கான திட்டமும் இதன்மூலம் சாத்தியமாகும். இதற்கிடையில், திறந்த சந்தையில் இருந்து விலைமனுக் கோரல் செயல்முறை மூலம் எரிபொருள் கொள்முதல் செய்வதற்குப் பதிலாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தாரில் இருந்து நேரடியாக எரிபொருள் கொள்முதல் செய்வது குறித்து இலங்கை பரிசீலித்து வருகிறது. இங்குள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்துடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும், அந்த நாட்டின் தொழில்நுட்பக் குழுவுடன் மற்றொரு சுற்று கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் ராஜகருணா கூறியுள்ளார். இருப்பினும், அண்மையில் ஜனாதிபதி அங்கு சென்றபோது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் எந்த கலந்துரையாடலும் நடைபெறவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. https://akkinikkunchu.com/?p=313897
-
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பதிலீடின்றி முற்றாக நீக்கவேண்டும்; அதுவே ஊடகவியலாளர் பாரதிக்கான அஞ்சலி - அரசியல்வாதிகள் பலரும் சுட்டிக்காட்டு
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பதிலீடின்றி முற்றாக நீக்கவேண்டும்; அதுவே ஊடகவியலாளர் பாரதிக்கான அஞ்சலி - அரசியல்வாதிகள் பலரும் சுட்டிக்காட்டு Published By: Vishnu 26 Feb, 2025 | 02:34 AM (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம், அவ்வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும். அதேவேளை அச்சட்டத்தினை பிறிதொரு சட்டத்தினால் பதிலீடு செய்யாமல், முழுமையாக நீக்குவது மிகமிக அவசியமாகும் என பயங்கரவாதச்சட்ட ஒழிப்பை நீண்டகாலமாகக் கோரிவரும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோகணேசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ராஜநாயகம் பாரதிக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவஞ்சலி கூட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் பாரதியுடனான தமது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டபோதே அவர்கள் மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தினார். அதன்படி முதலாவதாக உரையாற்றிய இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், 'இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கெனக் கொண்டுவரப்பட்டு, இப்போது பயங்கரவாதத்துக்குத் துணைபோகின்ற பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாகத் துடைத்தெறிவதைத் தவிர வேறெதுவும் நாம் ஊடகவியலாளர் பாரதிக்குச் செலுத்தக்கூடிய சிறந்த அஞ்சலியாக அமையாது. தற்போதைய ஆட்சியாளர்கள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவோம் என்ற மிகமுக்கிய வாக்குறுதியை அளித்து ஆட்சிபீடமேறியவர்களாவர். ஆனால் இன்றளவிலே அவர்கள் அதனை மறுபக்கம் திருப்பி வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் நீதிமன்றத்தின் ஊடாக விடுதலை பெறமுடியாமல் சிறைச்சாலைகளில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பது தான் அதற்காக அமைதியாக, ஆர்ப்பாட்டமின்றி, எழுத்தின் ஊடாகப் போராடிய பாரதிக்குச் செலுத்துகின்ற அஞ்சலியாக இருக்கும்' எனச் சுட்டிக்காட்டினார். அவரைத்தொடர்ந்து அவ்விடயத்தை ஆமோதித்துப்பேசிய தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், பயங்கரவாதத்தடைச்சட்டம் குறித்து தானும் பாரதியும் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியதை நினைவுகூர்ந்தார். தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாகக்கூறி ஆட்சிபீடமேறியதாக சுட்டிக்காட்டிய அவர், அதனை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டார். அத்தோடு கடந்த அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதாகவும், அதுவரை அச்சட்டத்தின் பிரயோகத்துக்கு இடைக்காலத்தடை விதிப்பதாகவும் கூறியிருந்த போதிலும், அவை உரியவாறு நிறைவேற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார். அதேவேளை நிகழ்வில் உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு குறிப்பிட்டார்: 'இங்கு ரவூப் ஹக்கீமினால் முன்மொழியப்பட்டு, மனோகணேசனால் வழிமொழியப்பட்ட ஒரு விடயத்தை நானும் மீளவலியுறுத்த விரும்புகிறேன். பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும். அச்சட்டம் நீண்டகாலத்துக்கு முன்னரே நீக்கப்பட்டிருக்கவேண்டும். இச்சட்டம் நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் பாரதி ஊடகவியலாளராகப் பணிபுரிந்ததுடன், இச்சட்டத்தின்கீழ் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை நாம் பார்த்திருக்கிறோம். தற்போதைய ஆட்சியாளர்கள் ஏற்கனவே வாக்குறுதியளித்ததைப்போல் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கவேண்டும். அதேவேளை இச்சட்டத்தைப் பிறிதொரு சட்டத்தினால் பதிலீடு செய்யாமல், முழுமையாக நீக்கவேண்டியது மிகமிக அவசியமானதாகும்' என வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/207693
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (26 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 8) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 08 பேர் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் 16 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ஏராளன் நுணாவிலான் நந்தன் செம்பாட்டான் வாதவூரான் எப்போதும் தமிழன் கோஷான் சே நீர்வேலியான் இங்கிலாந்து ஈழப்பிரியன் வீரப் பையன்26 சுவி அல்வாயன் தமிழ் சிறி நிலாமதி ரசோதரன் வசீ வாத்தியார் குமாரசாமி நியாயம் சுவைப்பிரியன் புலவர் கந்தப்பு பிரபா கிருபன் இப்போட்டியில் யார் புள்ளிகளை எடுப்பார்கள்?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவுஸ்திரேலியாவுக்கும் தென்னாபிரிக்காவும் இடையேயான ஏழாவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டது. எனவே யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை (மாற்றமில்லை): தொடர்ந்தும் @alvayan முதல்வராக நிலைக்கின்றார்!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மழை குழப்பியதால் இரண்டில் ஒன்று வெளியே போகும் ஏனெனில் இங்கிலாந்து தென்னாபிரிக்காவையும், ஆப்கானிச்தானையும் வெல்லும்💪🦾 அல்வாயனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு! கீழே இறங்காமல் சறுக்குமரத்தில் பணமுடியை எடுக்கப்பார்க்கின்றார்🤣
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
அவல நாயகன் sudumanal அமெரிக்காவின் நரித்தனம் உக்ரைனில் அரங்கேறுகிறது. 2000 களிலிருந்து -குறிப்பாக 2008 இலிருந்து- ரசியாவை சீண்டியபடி இருந்த அமெரிக்கா ரசியா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சூழலை படிப்படியாக உருவாக்கி உச்ச நிலையில் கொணர்ந்து விட்டது. ரசியா ஆக்கிரமித்தது. நடுநிலையாக இருந்த உக்ரைனை நேற்றோ அமைப்பில் சேர்க்க வேண்டும் என ஜோர்ஜ் புஷ் 2008 இல் றுமேனியாவில் நடந்த நேற்றோ மாநாட்டில் முன்மொழிந்தார். உக்ரைன் மறுத்தது. ஜேர்மனியும் பிரான்ஸ் உம் இது ரசியாவுடனான போரை உருவாக்கும் ஆபத்தை கொண்டது என எச்சரித்தன. 2014 இல் அமெரிக்கா உக்ரைன் ஆட்சி கவிழ்ப்பை செய்து தனக்கு தலையாட்டும் அரசை நிறுவியது. பின்னர் செலன்ஸ்கி உக்ரைன் அதிபராக ஜனநாக முறையில் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டார். அவரும் அமெரிக்காவின் எடுபிடியாக இருந்தார். நேற்றோவில் உக்ரைனை சேர்க்கும் முயற்சியை -மக்கள் விருப்பத்தை அறிவதற்கான வாக்கெடுப்பு இன்றி- தன்னிச்சையாக முடிவுசெய்தார். உக்ரைன் நடுநிலையாக இருக்கவேண்டும் எனவும், நேற்றோ தனது எல்லைவரை வருவது ரசியாவுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையும் எனவும் திரும்ப திரும்ப புட்டின் வலியுறுத்தினார். புட்டினின் இந்த சிவப்பு எச்சரிக்கை கோட்டை உக்ரைன் தாண்டியதால் ரசியா உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடுத்தது. உக்ரைன் இதை எதிர்பார்து இருக்கவில்லை. போர் தொடங்கி 7 நாளின் பின் செலன்ஸ்கி தாம் நேற்றோவில் சேர மாட்டோம் நடுநிலையாக இருப்போம் என அறிவித்து ரசியாவுடனான (இஸ்தான்புல்) பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார். உடனே அமெரிக்காவும் பிரித்தானியாவும் செலன்ஸ்கியை பேச்சுவார்த்தை மேசையைவிட்டு வெளியேறுமாறும், தாம் போருக்கு உதவி செய்வதாகவும் கூறி உக்ரைனை அழிவுக்குள் தள்ளினர். இவ்வாறாக இந்தப் போரை கனடா ஐரோப்பா சகிதம் 3 வருடமாக நடக்கவிட்டு நாட்டை நாசமாக்கி மக்களை மரணிக்கவிட்டு உக்ரைனை தமது நலன் சார்ந்து பலிக்கடா ஆக்கினர். இப்போ செலன்கி சர்வாதிகாரி எனவும் அவர்தான் இந்த போருக்கு முழுக் காரணம் எனவும் ட்றம்ப் வாய்கூசாமல் பேசுகிறார். இனி தான் உதவிசெய்ய மாட்டேன் எனவும் இதுவரை தாம் செய்த உதவி 450 பில்லியனுக்கான திரும்பச் செலுத்தலாக உக்ரைன் நாட்டின் கனிமவளத்தில் 50 வீதம் தமக்கு சொந்தமாகும் என ஒரு எதேச்சாதிகார ஒப்பந்தம் ஒன்றிற்கு செலன்ஸ்கி கையெழுத்திட வேண்டும் என்றும் ட்றம்ப் மிரட்டுகிறார். (450 பில்லியன் என்பது பொய் எனவும் உண்மையில் 100 பில்லியன் எனவும் சொல்லப்படுகிறது).செலன்ஸ்கி உடன்படாத படத்தில் உக்ரைனில் இன்னொரு ஆட்சி கவிழ்ப்பை செய்து அமெரிக்கா தனது இலக்கை சாத்தியமாக்கும் என ஊகிக்க இடமுண்டு. செலன்ஸ்கி ஒரு தேர்ந்த அரசியல்வாதி அல்ல என்பதாலும் போருக்கு வழங்கப்பட்ட உதவிகளில் பெரும் ஊழல் நடந்திருப்பதாலும் செலன்ஸ்கி அமெரிக்க கொள்ளைக்கு உடன்பட நேரலாம். அமெரிக்கா களவெடுக்க இருப்பது போக மிகுதி வளத்தை களவெடுக்க பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒரு பகுதியும் “சமாதானப்படை” அல்லது “உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் படை” என்ற பெயரில் உக்ரைனுக்குள் போக ஆயத்தமாகின்றனர். இதுதான் மேற்குலகின் மேக்அப் ஜனநாயகம். சும்மா கிடந்த சங்கை எடுத்து ஊதி மேற்குலகம் உக்ரைனை நாசமாக்கிய வரலாறு இது. வண்டியை ஓட்டிய அமெரிக்கா இப்போது ஐரோப்பாவை கழற்றி விட்ட பின்னும், ஐரோப்பா இப் போரை இல்லாமலாக்கி சமாதான வழியில் உக்ரைனை மீட்க தயாரில்லை. அவர்கள் உக்ரைனின் கோவணத்தையும் உருவ தயாராகின்றனர். ஐரோப்பாவை அமெரிக்காவின்றி சுயாதீனமான வண்டியாக ஓடவைத்து காட்டும் ஆரம்பப் புள்ளியை நலிந்துபோன உக்ரைனிலிருந்து தொடங்கிக் காட்டும் கங்கணத்தோடு நிற்கிறார்களோ என்று இன்னொரு பக்கத்திலும் யோசிக்க வேண்டியிருக்கிறது. உக்ரைனுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நேரடி போர் அல்ல இது என்பதை -நேற்றோ குடும்பத்தின் பெரியண்ணனாக இருக்கும்- அமெரிக்காவின் மிரட்டல்களும், உக்ரைனை புறம்தள்ளி ட்றம்ப்- புட்டின் பேச்சுவார்த்தை நடைபெறுவதும் தெளிவாக நிரூபிக்கிறது. இந்த பேச்சுவார்த்தை அணுகுமுறையில் ட்றம் புட்டின் இருவருமே தவறிழைக்கிறார்கள். இதை எதன் பெயரிலும் நியாயப்படுத்த முடியாது. செலன்ஸ்கி ஒரு அவல நாயகனாக தோற்றமளிக்கிறார். பாவம் உக்ரைன் மக்கள்! https://sudumanal.com/2025/02/24/அவல-நாயகன்/#more-7071
-
டிராகன்: அரியர் வைப்பது கெத்தா? திரைப்படங்கள் கல்லூரி மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
டிராகன் : விமர்சனம்! 22 Feb 2025, 10:56 AM இரண்டரை மணி நேரம் இடையறாத ‘எண்டர்டெயின்மெண்ட்’! ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் என்ன செய்ய வேண்டும்? ‘ஜாலியான’ திரையனுபவத்தைத் தர வேண்டும். அதேநேரத்தில், சமூகத்திற்குத் தேவையற்ற விஷயங்களைக் கிஞ்சித்தும் சொல்லிவிடக் கூடாது. ‘என்ன பாஸ், பூமர் மாதிரி பேசுறீங்க’ என்றொலிக்கும் ‘மைண்ட்வாய்ஸ்கள்’ கேட்கிறது. மேற்சொன்ன இரண்டையும் ஒன்றிணைத்து, சிறப்பானதொரு ‘மெசேஜ்’ உடன் சீராக நகர்கிற ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தைத் தர முடியுமா? ‘முடியும்’ என்ற நம்பிக்கை மிகுதியுடன் ‘டிராகன்’ படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. ‘ஓ மை கடவுளே’ படத்தை இதற்கு முன் இவர் இயக்கியிருக்கிறார். அதுவே, இவரால் அப்படியொரு முயற்சியில் வெற்றியைப் பெற்றிட முடியும் என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது. ’லவ் டுடே’ இயக்குனர் கம் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், காயாடு லோஹர், ஜார்ஜ் மரியான், இந்துமதி மணிகண்டன், விஜே சித்து, அர்ஷத்கான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இதற்கு இசையமைத்திருக்கிறார். ‘டிராகன்’ படம் ‘பீல்குட்’ அனுபவத்தைத் தருகிறதா? யார் இந்த ‘டிராகன்’? தனபால் ராகவன் எனும் டி.ராகவன் பள்ளியில் நல்லபிள்ளையாகத் திகழ்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று, நல்லதொரு கல்லூரியில் பொறியியல் படிக்க இடமும் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார். அதே சூட்டோடு தனது மனதுக்குப் பிடித்த தோழியிடம் காதலைச் சொல்கிறார். அவரோ, ‘உன்னை மாதிரி நல்ல பையன்லாம் எனக்கு செட் ஆகாது; அவனைத்தான் பிடிக்கும்’ என்று அங்கிருக்கும் ‘ரக்டு பாய்’ ஒருவரைக் கை காண்பிக்கிறார். அவ்வளவுதான். அந்த நொடி முதல் ‘பேட் பாய்’ ஆகும் உத்தேசத்தோடு செயல்படத் தொடங்குகிறார் டி.ராகவன். ஆங்கிலத்தில் அவரது பெயரில் உள்ள ‘ஏ வி ஏ’ எழுத்துகளை எடுத்துவிட்டு ‘ஓ’ எனும் எழுத்தைச் சேர்த்து அவருக்கு ‘டிராகன்’ என்று புதிய பெயரைச் சூட்டுகிறார் நண்பன் அன்பு (விஜே சித்து). ஏஜிஎஸ் பொறியியல் கல்லூரியில் (?!) படிக்கச் செல்லும் ராகவன், அங்கு ’டிராகன்’ ஆக உருவெடுக்கிறார். இல்லாத சேட்டைகளை எல்லாம் கற்றுக்கொண்டு, அவற்றைச் செயல்படுத்தி 48 அரியர்களுடன் வெளியேறுகிறார். காதலி கீர்த்தி (அனுபமா), உடனிருக்கும் நண்பர்கள் வற்புறுத்தியும் அவர் கேட்பதாக இல்லை. இரண்டாண்டுகள் கழித்து, ஒருநாள் பொழுது விடுகிறது. வேலைக்குச் செல்வதாகப் பெற்றோரிடம் (ஜார்ஜ் மரியான், இந்துமதி) சொல்லிவிட்டு, நண்பர்களின் பிளாட்டுக்கு சென்று பகல் முழுக்க டிவி பார்க்கிறார். மாலை ஆனதும் நண்பர்கள் சிலரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வந்து, சம்பளம் வாங்கியதாகச் சொல்லி தந்தையிடம் கொடுக்கிறார். ‘அதற்கு இதற்கு’ என்று சொல்லி அந்தப் பணத்தைத் திரும்ப வாங்குவதோடு, தந்தையின் சம்பளத்தில் இருந்து கொஞ்சம் பணத்தைச் செலவுக்குப் பெற்றுக்கொள்கிறார். இப்பேர்ப்பட்ட டிராகன் தனது ’பேட்பாய்’தனத்தை மூட்டை கட்டி வைக்கிற சூழ்நிலை ஒன்று உருவாகிறது. ‘நீயெல்லாம் கல்யாணத்துக்கு சரிப்பட்டு வரமாட்டே’ என்று சொல்லிவிட்டு ‘பை’ சொல்லிவிடுகிறார் காதலி கீர்த்தி. கோபாவேசம் உச்சத்திற்கு ஏற, அவருக்கு கணவராக வரப்போகிறவரை விட ஒரு ரூபாய் அதிகம் சம்பாதிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டுகிறார். கீர்த்தியைக் கல்யாணம் செய்பவரின் சம்பளம் ஒரு லட்சத்து இருபதாயிரம். இந்த தகவலைக் கேட்டதுமே நண்பர்கள் பதைபதைத்துப் போகின்றனர். அப்போது, கிரிக்கெட் விளையாட்டின்போது அறிமுகமாகும் ஒரு நபர் (அஸ்வத் மாரிமுத்து) மூலமாக ஒரு கன்சல்டன்ஸி பற்றி அறிகிறார் ராகவன். பெற்றோரிடம் பொய் சொல்லி பத்து லட்சம் ரூபாய் வாங்கி வந்து அவர்களிடம் கொடுக்கிறார். கல்லூரி முடித்தது போன்று பொய்யாகச் சான்றிதழ்களை தயார் செய்து, வேறொரு நபரின் உதவியுடன் நேர்காணலில் பங்கேற்று, ஒரு அமெரிக்க ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். ஆனால், அதில் சேர்ந்ததும் வேலைகளைக் கற்றுக்கொண்டு திறம்பட உழைக்கிறார். மூன்றாண்டுகள் கழித்து அவரது சம்பளம் மாதத்திற்கு மூன்று லட்சம் ரூபாயைத் தொடுகிறது. இஎம்ஐ மூலமாக புதிய வீடு, கார் என்றிருக்கும் ராகவனுக்கு ஒரு பெரிய தொழிலதிபர் (கே.எஸ்.ரவிக்குமார்) தனது பெண் பல்லவியை (காயாடு லோஹர்) கல்யாணம் செய்து தர முன்வருகிறார். இந்த நிலையில், ராகவன் பொய் சொல்லி ஏமாற்றி வேலைக்குச் சேர்ந்தது ஒருவருக்குத் தெரிய வருகிறது. அவர் வேறு யாருமல்ல. ராகவன் படித்த கல்லூரியின் பிரின்சிபல் மயில்வாகனன் (மிஷ்கின்). கடைசி செமஸ்டரில் அவர் முகத்தில் தனது ஐடி கார்டை விசிறியெறிந்துவிட்டு வந்தவர் ராகவன். அவ்வளவுதான். எந்த ரகசியத்தைத் தன்னைச் சார்ந்தவர்கள் அறியக்கூடாது என்று ராகவன் நினைத்தாரோ, அது உடையப் போகிறது. அதன்பிறகு என்னவானது? மயில்வாகனன் என்ன செய்தார்? அதனை ராகவன் எப்படி எதிர்கொண்டார் என்று சொல்கிறது ‘டிராகன்’ படத்தின் மீதி. உண்மையைச் சொன்னால், இதுவும் ‘சதுரங்க வேட்டை’ வகையறா கதைதான். ஆனால், ‘அறம் இல்லாததைச் செய்தால் வாழ்க்கை என்னவாகும்’ என்ற கருத்தைச் சொன்ன வகையில் கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. ’சூது கவ்வும்’ திசை நோக்கிய திரைக்கதையின் முடிவில் ‘தர்மம் மறுபடி வெல்லும்’ என்று அவர் சொல்லியிருக்கிறாரா? அதனை அறிய விரும்புபவர்கள் இந்தப் படத்தைத் தாராளமாகக் காணலாம். போலவே, சுமார் இரண்டரை மணி நேரம் இடையறாது, இமைக்க மறந்து தியேட்டரில் உயிர்ப்போடு ஒரு திரைப்படத்தைக் காண வேண்டுமே என்பவர்களுக்கும் ஏற்றதாக இருக்கிறது இப்படம். அந்த அளவுக்கு இதில் ‘எண்டர்டெயின்மெண்ட்’ அம்சங்கள் எல்லா தரப்புக்கும் ஏற்ற வகையில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கின்றன. ‘பீல்குட்’ அனுபவம்! இந்த படத்தில் நடித்த அனைவருமே மிகச்சிறப்பான நடிப்பைத் தந்திருக்கின்றனர். குறிப்பாக பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், ஜார்ஜ் மரியான், இந்துமதி மணிகண்டன், மிஷ்கின் மற்றும் அர்ஷத்கான் நடிப்பு அபாரம். ‘ஜென்ஸீ’ தலைமுறை பாஷையில் சொல்ல வேண்டுமானால் ‘வேற லெவல்’. காயாடு லோஹர் கவர்ச்சிப்பதுமையாக வந்து போயிருக்கிறார். கொஞ்சமாக நடிக்கவும் செய்திருக்கிறார். அது, அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்றுத் தரக்கூடும். இவர்கள் தவிர்த்து கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், விஜே சித்து, ரவீந்தர், பி.எல்.தேனப்பன், சுஜாதா பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிராகன்’ படத்தின் மிகப்பெரிய சிறப்பு, தொழில்நுட்பக் கலைஞர்களை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தந்திருக்கும் செறிவு மிகுந்த உள்ளடக்கம். அது, இப்படத்தை அடுத்தடுத்து பல முறை காண வேண்டும் என்ற உத்வேகத்தைத் தூண்டிவிடுகிறது. ‘ரிப்பீட் ஆடியன்ஸ்’ வரவழைக்கும் அளவுக்குச் சிறப்பான உள்ளடக்கத்தைத் தருவது சாதாரண விஷயமல்ல. அந்த வகையில் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி, படத்தொகுப்பாளர் லியோன் ஜேம்ஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் வி.செல்வா, சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் விக்கி மற்றும் திலீப் சுப்பராயன், நடன இயக்குனர் ஜேடி, ஒலிக்கலவையைக் கையாண்டிருக்கும் எம்.ஆர்.ராஜகிருஷ்ணன், டிஐ, விஎஃப்எக்ஸ், ஆடை வடிவமைப்பில் பங்கேற்றவர்கள் என்று பலரது உழைப்பைச் சிறப்பாகத் திரையில் மிளிரச் செய்திருக்கிறார் இயக்குனர். குறிப்பாக, லியோன் ஜேம்ஸ் தந்திருக்கும் பின்னணி இசை இப்படத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. கல்லூரி மாணவ மாணவியர் கரகோஷம் எழுப்பும்போது ‘பனைமரத்துல வவ்வாலா.. ..க்கே சவாலா..’ என்று குறிப்பிட்ட கல்லூரியை, அதில் பயில்பவரைச் சொல்வது வழக்கம். அது போன்ற முழக்கங்களை வெவ்வேறு சூழல்களைக் கொண்ட காட்சிகளில் புகுத்தி ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’ தந்திருக்கிறார் லியோன். ஆரவாரமிக்க காட்சிகளில் மட்டுமல்லாமல் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிற இடங்களில் மயிலிறகால் வருடுவது போன்ற இசையைத் தந்திருக்கிறார். இனி அவரை தெலுங்கு, இந்தி, மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் முழுதாகக் கொத்திக்கொண்டு போனால் ஆச்சர்யப்படத் தேவையில்லை. ‘டிராகன்’னில் லியோன் தந்திருக்கும் பாடல்களில் ’வழித்துணையே’ சட்டென்று மனதோடு ஒட்டிக்கொள்ளும் ரகம். அது போக ‘ஏண்டி விட்டுப்போன’, ’இட்ஸ் ரைஸ் ஆப் எ டிராகன்’, ’மாட்டிக்கினாரு ஒர்த்தரு’ உள்ளிட்ட பாடல்களும் நம்மைத் திரைப்படத்திற்குள் இழுத்துக் கொள்கின்றன. சுமார் இரண்டே கால் மணி நேரம் இளசுகளின் ஆட்டம் என்றால், கடைசி இருபது நிமிடங்கள் மட்டும் பெரியவர்கள் ‘இது எங்களுக்கான பகுதி’ என்று காலரை தூக்கிவிட்டுக் கொள்ளும் அளவுக்கு நெகிழ வைக்கிறது ‘டிராகன்’. முக்கியமாக, அறத்தின் வழி நடப்பவர்கள் உண்மையில் தோற்றவர்களா, வெற்றி பெற்றவர்களா என்று சொல்லியிருக்கிறது. அதனைப் பாடமாகச் சொல்லித்தராமல் ‘படமாக’ உணர வைப்பதுதான் ‘டிராகன்’னின் வெற்றி. இதில் பிரதீப் ரங்கநாதன், அவருடன் வருபவர்கள், அர்ஷத் கான் உள்ளிட்ட சிலர் ஏற்று நடித்த பாத்திரங்கள் ஆபாசமாக, கொச்சையாகப் பேசுகிற அல்லது அப்படியான அர்த்தம் தொனிக்கிற வார்த்தைகளைப் பாதியில் முழுங்குகிற இடங்கள் வசனங்களில் இடம்பெற்றுள்ளன. அது போக காயாடு லோஹரின் கவர்ச்சியும் கொஞ்சம் ‘ஏ’ ரகம். இது போக, ’பள்ளி யூனிபார்மில் இருக்கும்போதே தங்கப்பதக்கமும் வாங்கிக்கொண்டு ஒரு கல்லூரியில் பிளேஸ்மெண்டும் கிடைக்க வழி இருக்கிறதா’ என்று லாஜிக் சார்ந்த சில கேள்விகளையும் எழுப்புகின்றன இதில் வரும் சில காட்சிகள். மேற்சொன்ன விஷயங்களைத் தவிர்த்திருந்தால், ‘டிராகன்’ ஒரு முழுமையான, சிறப்பான ‘பீல்குட்’ திரைப்படமாக, குடும்பச் சித்திரமாக இருந்திருக்கும். ‘பூமர் மாதிரி பேசாதீங்க, புஷ்பா மாதிரி படங்களையே குடும்பத்தோடு பார்க்கறப்போ இதெல்லாம் ஜுஜுபி மேட்டர்’ என்று சிலர் சொல்லக்கூடும். அவ்வாறு சொல்லத் தயாராக இருந்தால், ‘டிராகன்’ குழந்தைகளையும் பெரியவர்களையும் அழைத்துச் சென்று குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படம் தான். இப்படிப்பட்ட திரையனுபவத்தைப் பெறத்தான் எத்தனை காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது..! https://minnambalam.com/cinema/pradheep-dragon-movie-review/
-
தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – ஸ்டாலின் அழைப்பு
தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – ஸ்டாலின் அழைப்பு February 25, 2025 1:05 pm அரசியலை கடந்த தமிழ்நாட்டு நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் அமைச்சரவைக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர், “தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் செயல்கள் மொழிப்போருக்கு வித்திடும் வகையில் உள்ளது. அதற்கு தமிழ்நாடு அரசு தயாரக உள்ளது. நீட், நிதிகுறைப்பு தொடர்பாக ஒன்றிய அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் பதில் இல்லை. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கியிருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் கிட்டத்தட்ட 8 தொகுதிகளை குறைக்க நினைக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியா வஞ்சிக்கப்படுகிறது. நீட் மும்மொழிக்கொள்கை, உள்ளிட்ட பிரச்னைகள் அனைத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகளவில் இருந்தால் தான் குரல் கொடுக்க முடியும். தொகுதிகள் குறைக்கப்பட்டால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். ஒட்டுமொத்த எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் தமிழ்நாட்டிற்கு தான் பாதிப்பு ஏற்படும். இந்நிலையில் கூட உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மும்மொழிக்கொள்கை மற்றும் நீட் தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்படும் எனவும், அரசியலை கடந்த தமிழ்நாட்டு நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூட வேண்டும்.” என முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். https://oruvan.com/all-parties-should-unite-to-protect-tamil-nadus-rights-stalin-calls/
-
ரெலோவுக்கு அழைப்பு விடுத்த - தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம்
ரெலோவுக்கு அழைப்பு விடுத்த - தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் Vhg பிப்ரவரி 25, 2025 எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) கலந்துரையாடலுக்கு வருமாறு இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதமாக குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற அமர்வுகள் இடம் பெறுவதால் தான் கொழும்பில் நிற்பதாகவும் குறித்த திகதி ஒன்றில் கலந்துரையாடலை நடத்தலாம் எனவும் பதில் வழங்கியுள்ளார். இந்த கலந்துரையாடலானது இவ்வார இறுதியில் இடம்பெற உள்ள நிலையில் ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் கட்சிகளும் இணைந்து கலந்துரையாடலை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.battinatham.com/2025/02/blog-post_257.html
-
இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையினை இரத்து செய்த ஹமாஸ்!
இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சை ஹமாஸ் நிறுத்தியதால் காசாவில் மீண்டும் போர் பதற்றம் மேற்குக் கரைக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் நுழைவு Gayan AbeykoonFebruary 25, 2025 இஸ்ரேல் ஒத்தி வைத்திருக்கும் 600க்கும் அதிகமான பலஸ்தீன கைதிகளை விடுவிக்கும் வரை இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று ஹமாஸ் அமைப்பு அறிவித்திருக்கும் நிலையில் காசாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 20 ஆண்டுகளில் முதல் முறையாக இஸ்ரேலிய டாங்கிகள் நுழைந்திருக்கும் சூழலில் அங்கு வன்முறை அதிகரித்துள்ளது. காசாவில் அமுலில் உள்ள போர் நிறுத்தத்தில் கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பு ஆறு இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்த நிலையில் அவர்களுக்கு பகரமாக இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டிய 620 பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதையே இஸ்ரேல் ஒத்திவைத்துள்ளது. வாராந்தம் இடம்பெறும் பணயக்கைதிகளின் விடுதலையின்போது மேடை அமைத்து நடத்தப்படும் நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அடுத்த கட்ட பணயக்கைதிகள் விடுதலையின்போது இவ்வாறான நிகழ்வு இடம்பெறுவதில்லை என்பது உறுதி செய்யப்படும் வரை பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதை இடைநிறுத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் கடந்த ஞாயிறன்று (23) அறிவித்தது. போர் நிறுத்த உடன்படிக்கையின் முதல் கட்டம் எதிர்வரும் மார்ச் ஆரம்பத்தில் நிறைவடையவுள்ள நிலையில், இரண்டாம் கட்டத்திற்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்பிக்காத சூழலிலேயே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படும் வரை இஸ்ரேலுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்று ஹமாஸ் தலைவர் ஒருவரான மஹ்மூத் மர்தாவி அறிவித்துள்ளார். தவிர, போர் நிறுத்த உடன்படிக்கையின் விதிகளை கடைப்பிடிக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கவும் மத்தியஸ்த நாடுகளான எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்காவை அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இந்தக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை இஸ்ரேலின் எந்த நிபந்தனைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவதை எகிப்து நிராகரித்திருப்பதாக இந்தப் பேச்சுவார்த்தையுடன் தொடர்புட்ட அதிகாரி ஒருவர் ஏ.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். பலஸ்தீனர்களின் விடுதலையை எதிர்பார்த்து காசாவின் கான் யூனிஸ் நகரிலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ரமல்லா நகரிலும் குளிரான காலநிலைக்கு மத்தியில் பல மணி நேரமாக காத்து நிற்கின்றனர். ‘இது கடினமாக உள்ளது’ என்று 20 ஆண்டுகள் இஸ்ரேலிய சிறையில் இருக்கும் தனது சகோதரனின் விடுதலைக்காக காத்திருக்கும் ஹசன் யாசீன் குறிப்பிட்டுள்ளார். சகோதரனுடன் இணையும் எதிர்பார்ப்புடன் அவர் ரமல்லா நகரில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் காத்திருக்கிறார். 21 ஆண்டுகளின் பின்னர் தனது கணவரின் விடுதலையை எதிர்பார்த்து ஐதா அலி டரக்மே தூபாஸில் இருந்த ரமல்லா நகரை வந்தடைந்தபோதும் அவர் எதிர்பார்த்தது போல் விடுதலை இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். காசாவில் 15 மாதங்கள் நீடித்த போரில் 48,000இற்கு அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையிலேயே கடந்த ஜனவரி 19 ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. போர் நிறுத்த காலத்தில் இதுவரை 25 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதோடு பதிலாக நூற்றுக்கணக்கான பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) இராணுவ நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய நெதன்யாகு, ‘எந்த நேரத்திலும் உக்கிர மோதலை ஆரம்பிப்பதற்கு நாம் தயாராக உள்ளோம்’ என்று எச்சரித்துள்ளார். மறுபுறம் மேற்குக் கரையிலும் இஸ்ரேல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தனது படை நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த படை நடவடிக்கையின் அங்கமாக 20 ஆண்டுகளில் முதல் முறையாக மேற்குக் கரையில் இஸ்ரேலிய டாங்கிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஜெனின் நகர் மற்றும் அதன் அகதி முகாமில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 25க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு வீடுகள், வீதிகள் என உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஜெனின் அகதி முகாமில் இருக்கும் 120 வீடுகளை இஸ்ரேலியப் படை முற்றாக அழித்திருப்பதோடு மேலும் பல வீடுகள் பகுதி அளவு சேதமாக்கப்பட்டிருப்பதாக ஜெனின் மாநகர சபை தெரிவித்துள்ளது. இங்கு இடம்பெற்று வரும் சுற்றிவளைப்புகளில் பெரும் எண்ணிக்கையானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த படை நடவடிக்கைகளால் மேற்குக் கரையின் வடக்கே உள்ள அகதி முகாம்களில் இருந்து 40,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2025/02/25/world/115601/இரண்டாம்-கட்ட-போர்-நிறுத/
-
உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் குறித்து ஐநாவில் இரண்டு தீர்மானங்கள் - அமெரிக்கா ரஸ்யாவிற்கு ஆதரவு
உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் குறித்து ஐநாவில் இரண்டு தீர்மானங்கள் - அமெரிக்கா ரஸ்யாவிற்கு ஆதரவு 25 Feb, 2025 | 10:16 AM உக்ரைன் மீது ரஸ்யா போரை ஆரம்பித்து மூன்று வருடங்களாவதை குறிக்கும் விதத்தில் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ள அதேவேளை இந்த தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பின் போது அமெரிக்கா ரஸ்யாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. உக்ரைனின் ஆள்புல ஒருமைப்பாட்டை ரஸ்யா மீறியுள்ளதை கண்டிக்கும் விதத்தில் ஐக்கியநாடுகள் பொதுச்சபை கொண்டுவந்த தீர்மானத்திற்கு ரஸ்யாவுடன் அமெரிக்காவும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.இந்த தீர்மானத்தை பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது. இதன் பின்னர் உக்ரைன் மோதலிற்கு முடிவை காணவேண்டும் என தெரிவிக்கும் ஆனால் ரஸ்யாவை கண்டிக்காத ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு ரஸ்யாவும் அமெரிக்காவும் ஆதரவளித்துள்ளன. பாதுகாப்பு சபையின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை அமெரிக்காவின் இரண்டுநெருங்கிய சகாக்களான பிரிட்டனும் பிரான்சும் புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/207592
-
சமாதானம் என்பதன் அர்த்தம் உக்ரைன் சரணடைவதல்ல - வெள்ளை மாளிகையில் பிரான்ஸ் ஜனாதிபதி
சமாதானம் என்பதன் அர்த்தம் உக்ரைன் சரணடைவதல்ல - வெள்ளை மாளிகையில் பிரான்ஸ் ஜனாதிபதி Published By: Rajeeban 25 Feb, 2025 | 11:41 AM சமாதானம் என்பதன் அர்த்தம் உக்ரைன் சரணடைவதல்ல என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைனின் பாதுகாப்பு குறித்த உத்தரவாதங்கள் அவசியம் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நானோ அல்லது அமெரிக்க ஜனாதிபதியோ பலவீனமான சமாதானத்தை விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்காவும் அதன் ஜனாதிபதியும் பிரான்சின் சிறந்த நண்பர்கள் என தெரிவித்துள்ளார். உக்ரைனை பாதுகாக்கும் விடயத்தில் ஐரோப்பா தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது என தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி உக்ரைனின் பாதுகாப்பில் ஐரோப்பா 128 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது ஏனென்றால் ஐரோப்பாவின் கூட்டு பாதுகாப்பின் முன்னணியில் உக்ரைன் உள்ளது என தெரிவித்துள்ளார். உக்ரைன் மக்களின் பெரும் துணிச்சலை நான் போற்றுகின்றேன் பாராட்டுகின்றேன் என தெரிவித்துள்ள அவர் வலிமை மிக்கவர்களின் விருப்பத்தை திணிக்க கூடிய,சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளை மீறக்கூடிய உலகில் வாழ்வதற்கு எவரும் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/207605
-
சிறீதரன், கஜேந்திரகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! - பெரமுன கோரிக்கை
சிறீதரன், கஜேந்திரகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! பெரமுன கோரிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிறீதரன் ஆகியோர், தையிட்டி - திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன், அந்த விகாரை உடைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நாட்டில் இன்று இனவாதத்தைப் பரப்புவது யார்? தேவநம்பியதீசன் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு முன்னால் வந்து சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற தமிழ்ப் பிரிவினைவாத அரசியல்வாதிகள் போராட்டம் நடத்துகின்றனர். அதுமட்டுமல்ல விகாரை இடிக்கப்படும் எனவும் கூறுகின்றனர். இது இனவாதத்தை தூண்டும் செயல் இல்லையா? அவர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை என்ன? யாழ்ப்பாணத்துக்கு சென்று, மக்களை அரவணைத்துக்கொண்டு இனவாதத்தை இடமில்லை என ஜனாதிபதி அறிவிப்பு விடுத்தார். ஆனால் அங்குள்ளவர்களோ இன்று இனவாதத்தைத் தூண்டுகின்றார். அதேபோல யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு, கறுப்பு கொடி ஏற்றியுள்ளனர். இது இனவாத செயல் இல்லையா? அரசாங்கம் உண்மையில் இவாதத்துக்கு எதிராகச் செயற்படுகின்றது என்றால், இத்தகையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்றார். https://newuthayan.com/article/சிறீதரன்,_கஜேந்திரகுமார்_மீது_நடவடிக்கை_எடுக்க_வேண்டும்!
-
ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார பிணையில் விடுவிப்பு! இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால், தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி, ஞானசார தேரர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. https://www.samakalam.com/சிறைத்தண்டனை-விதிக்கப்-3/
-
இன்று ஜெனிவாவுக்கு செல்லும் விஜித தலைமையிலான குழு
ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்பம்; இன்று அமைச்சர் விஜித உரை! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நிலையில், நேற்றைய தொடக்க அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தொடர்பில் குறிப்பாக எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை. இருப்பினும் விசேடமாக இஸ்ரேல் – பலஸ்தீன மோதலால் மக்கள் மிகமோசமான துயரத்துக்கு முகங்கொடுத்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச சட்டங்களுக்கு முரணாக இஸ்ரேலினால் காஸா மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும், ஹமால் உள்ளிட்ட ஏனைய பலஸ்தீன ஆயுதக்குழுக்களின் மீறல்கள் குறித்தும் சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். அதேபோன்று சர்வதேச மனித உரிமைகள் நிலைவரம், உலகளாவிய ரீதியில் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள், காலநிலை மாற்ற சவால்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தவறான பிரயோகம் என்பன உள்ளடங்கலாக உலகநாடுகள் மத்தியில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தவல்ல பொதுவான விடயங்கள் குறித்து வோல்கர் டேர்க் அவரது உரையில் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இக்கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், செவ்வாய்க்கிழமை (25) ஜெனிவா நேரப்படி பி.ப 3.40 மணிக்கு உரையாற்றவுள்ளார். இதன்போது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை இலங்கை தற்போது நடைமுறையிலிருக்கும் தீர்மானத்தை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது குறித்து எதிர்வரும் 3 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வாய்மொழிமூல அறிக்கையை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/ஜெனிவா-கூட்டத்-தொடர்-ஆரம-2/
-
ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 6 மணி நேரம் விசாரணை!
ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 6 மணி நேரம் விசாரணை! ‘தையிட்டி விகாரையை இடிக்க வாரீர்’ என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 2 ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை கடந்த வௌ்ளிக்கிழமை (21) பெற்றுள்ளனர். ‘தையிட்டி விகாரையை இடிக்க வாரீர்..’ என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள் பகிரப்பட்டன. குறித்த பதிவுகள் பகிரப்பட்டு சில மணிநேரங்களில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த பதிவு போலியானது என தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பு ஒன்றினையும் நடாத்தி அது போலியான விளம்பரங்கள் என அறிவித்திருந்தார். அந்நிலையில் கடந்த வாரம், ‘விகாரையை இடிக்க வாரீர்’ என போலி முகநூல்களில் விளம்பரப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பலாலி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் யாழ். பிராந்திய ஊடகவியலாளர்களான கந்தசாமி பரதன், தம்பித்துரை பிரதீபன் ஆகிய 2 ஊடகவியலாளர்களிடம் வாக்கு மூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பிரிவுக்கு அழைத்த பொலிஸார், ஊடகவியலாளர்களை அங்கிருந்து உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 2 ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளை பெற்று சோதனையிட்டதுடன், அவர்களிடம் சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டனர் பின்னர், குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் தாம் அழைக்கும் போது நீதிமன்றுக்கு சமூகமளிக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் இருவரையும் பொலிஸார் விடுவித்துள்ளனர். அதேவேளை, தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த, முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வாசுகி சுதாகரன் உள்ளிட்டோரை பலாலி பொலிஸார் வாக்கு மூலம் வழங்க என வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பிரிவுக்கு அழைத்து சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வைத்த பின்னரே வாக்கு மூலங்களை பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/ஊடகவியலாளர்களிடம்-பொலிஸ/
-
செவ்வந்தியின் புதிய படங்களை பாருங்கள்...
செவ்வந்தியின் தாயும் சகோதரனும் கைது editorenglishFebruary 25, 2025 கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இஷாரா செவ்வந்தியின் தம்பி மற்றும் தாயாரும் அடங்குகிறார்கள். இஷாரா செவ்வந்தியே கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை வழங்கிய பெண் என அடையாளம் காணப்பட்டுத் தேடப்பட்டு வரும் முக்கிய சந்தேக நபராவார் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/212077/
-
காணாமல்போன மகனைத் தேடி போராடி வந்த ‘மாரி அம்மா’ காலமானார்
காணாமல்போன மகனைத் தேடி போராடி வந்த ‘மாரி அம்மா’ காலமானார் February 24, 2025 5:27 pm வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறைப் போராட்டத்தின் 3000 ஆவது நாளான இன்று, தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த மாரி அம்மா என்றழைக்கப்படும் வேலுசாமி மாரி என்பவரே தனது 79 ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரின் மகனான வேலுச்சாமி சிவகுமார் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்டார். இந்நிலையில், மாரி அம்மா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் முன்னின்று போராடியிருந்தார். வவுனியா ஏ – 9 வீதியில் சுழற்சி முறையில் இடம்பெற்று வரும் போராட்டத்திலும் இவர் தொடர்ச்சியாகப் பங்குபற்றியிருந்தார். தனது மரணத்துக்கு முன்பதாக தனது மகனை நேரில் பார்த்து விடுவேன் என ஏங்கிய ஒரு தாயின் ஏக்கம் இன்றுடன் நிறைவேறாமல் முற்றுப் பெற்றுள்ளது. https://oruvan.com/mari-amma-who-fought-to-find-her-missing-son-passes-away/
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போட்டி முடிய 60 புள்ளிகள் வித்தியாசம் வந்தாலும் வரலாம்😜
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் (25 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் SA 12 அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும் 12 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! அவுஸ்திரேலியா ஏராளன் சுவி அல்வாயன் தமிழ் சிறி ரசோதரன் வசீ வாத்தியார் நியாயம் வாதவூரான் சுவைப்பிரியன் கோஷான் சே நீர்வேலியான் தென்னாபிரிக்கா ஈழப்பிரியன் வீரப் பையன்26 நிலாமதி நுணாவிலான் நந்தன் செம்பாட்டான் குமாரசாமி எப்போதும் தமிழன் புலவர கந்தப்பு பிரபா கிருபன் இப்போட்டியில் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆறாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து சராசரியான 236 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, இலகுவான ஓட்ட இலக்கை ரச்சின் ரவிந்திராவின் சதத்துடன் 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 240 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பங்களாதேஷ் அணி வெல்லும் எனக் கணித்த @ஏராளன் க்குப் புள்ளிகள் இல்லை, மற்றைய அனைவருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் (24 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ ஒரே ஒருவர் மாத்திரம் பங்களாதேஷ் வெல்லும் எனக் கணித்துள்ளார். ஏனையவர்கள் அனைவரும் நியூஸிலாந்து வெல்லும் எனக் கணித்துள்ளனர். பங்களாதேஷ் ஏராளன் இப்போட்டியில் போட்டியில் ஒருவருக்கு மாத்திரம் முட்டையா அல்லது 23 பேருக்கு முட்டையா?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 241 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி, இலகுவான ஓட்ட இலக்கை விராட் கோலியின் சதத்துடன் 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 244 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பாகிஸ்த்தான் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு புள்ளிகள் இல்லை. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
-
சமாதானம் உருவாகுமா? - மாறிவரும் பூகோள அரசியல்
சமாதானம் உருவாகுமா? sudumanal மாறிவரும் பூகோள அரசியல் THanks for image: Aljazeera தான் ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்திற்குள் உக்ரைன்-ரசியா போரை சமாதானம் மூலம் முடிவுக்கு கொண்டுவருவேன் என ட்றம்ப் தேர்தலுக்கு முன் கூறிவந்தார். அது அவளவு இலகுவில் முடியாமல் போனது. ஏன், இப்போதும் அது சாத்தியமற்றது என்பதிலிருந்து சாத்தியமானது என்ற எல்லைக்கள் வந்தபாடில்லை. அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நிழல்யுத்தம் என பலரும் நினைத்திருந்தார்கள். அது உண்மையில் நேற்றோவுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நிழல்யுத்தம் என்ற வியாபகத்தைக் கொண்டது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கான அச்சுறுத்தலாக ரசியா இருக்கிறது என அமெரிக்காவால் ஒருபோதும் பர்க்கப்படவில்லை. மாறாக ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு அச்சுறுத்தலென உருவாக்கப்பட்ட புனைவுக் கதையாடலைக் கொண்டு போருக்கான சூழலை உருவாக்கி ரசிய ஆக்கிரமிப்பை சாதித்ததுதான் நடந்தது. வரலாற்று ரீதியில் தன்னை ஐரோப்பாவாகவே உணர்ந்து செயற்பட்ட ரசியா 2000 ஆண்டளவில் நேற்றோவில் சேர விண்ணப்பித்திருந்தது. அது நேற்றோவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதற்கான பௌதீகக் காரணம் ரசியா மிகப் பெரும் பிரதேச அளவைக் கொண்டது என்பது ஆகும். அதேநேரம் அவர்களது மனக்கட்டமைப்பானது ரசியா மீது வரலாற்று ரீதியிலான அச்சம் கொண்டிருக்கிறது. ரசியா கம்யூனிச நாடு இல்லை என்றபோதும் சோவியத் வழி உருவாகிய கம்யூனிச வெறுப்பு மனநிலையின் தொடர்ச்சியும் ஐரோப்பாவை விட்டு அகலவில்லை.. இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பிய நாடுகளை தோற்கடித்து மொஸ்கோவுக்கு வெறித்தனமாக முன்னேறிய கிட்லரின் படைகளை சோவியத் யூனியன் எதிர்கொண்டு, 27 மில்லியன் மக்களின் உயிர் அர்ப்பணிப்பை பெரும் விலையாகக் கொடுத்து தோற்கடித்திருந்தது. அந்த சாகசம் ஐரோப்பியர்களின் மனக்கட்டமைப்பில் சோவியத் இன் மையமாக செயற்பட்ட ரசியா மீதான கள்ளப் பயம் ஒன்றினையும் ஏற்படுத்தியிருந்தது. ரசியாவை பலவீனப்படுத்தி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற பிரமை அவர்களை தொற்றிக் கொண்டது. அதனால்தான் 1989 இல் கொர்பச்சேவ் க்கு நேற்றோ கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் ஓர் அங்குலம்கூட நேற்றோ ஜேர்மனை விட்டு ரசியா நோக்கி நகராது என கொர்பச்சேவ் நம்பினார். இந்த பேச்சில் மிக முக்கியமாக அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஜேம்ஸ் பெக்கர் அவர்களும் இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார். கம்யூனிசத்தை எதிர்கொள்ளவென 1949 இல் உருவாக்கப்பட்ட (அமெரிக்க-மேற்கு ஐரோப்பிய கூட்டான) நேற்றோ கூட்டமைப்புக்கு எதிர்நிலையாக, (சோவியத் யூனியன்- கிழக்கு ஐரோப்பிய கூட்டணியான) வார்சோ கூட்டமைப்பு 1955 இல் உருவாக்கப்பட்டது. 1989 இல் வார்சோவை கலைத்துவிட கொர்பச்சேவ் முடிவுசெய்தபோதுகூட நேற்றோவைக் கலைத்துவிட அவர் கோரவில்லை. சோவியத் இன் வீழ்ச்சி, அதாவது முதலாளித்துவம் காட்டி வெருட்டிய ‘கம்யூனிச’ கட்டமைப்பும் வீழ்ச்சியடைந்தபோது நேற்றோவுக்கான தேவை இல்லாமலாகியது. அது வாழ்வா சாவா என்ற நிலையில் கிடந்தபோது அதை உயிர்ப்பூட்டி வளர்க்க புதிய எதிரிகள் தேவைப்பட்டார்கள். அது ரசியாவாக இருந்தது. எனவே ‘நேற்றோ விரிவாக்கம்’ அதை உயிர்ப்பித்தது. அதற்கெதிராக ரசியா பலமுறை ஆட்சேபம் தெரிவித்திருந்தது. அதையெல்லாம் தனக்கான ரொனிக்காக எடுத்துக் கொண்டு நேற்றோ விரிவாக்கத்தை ரசிய எல்லைவரை கொண்டுபோய் சீண்டுவதன் மூலம் ரசியா எதிரியின் இடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. சோவியத் வீழ்ச்சிவரை இருதுருவ முகாமாக இருந்த உலகம் அமெரிக்காவின் கையில் ஒருதுருவ உலகமாக மாறியது. 2010 களில் உருவான அரபுவசந்த நிறப் புரட்சியை ரசியாவுக்குள் காண மேற்குலகம் ஆசைப்பட்டது. அல்லது அது நடக்கும் என நம்பியது. இதன் அங்கமாக 2014 இல் ஒறேஞ்ச் புரட்சி என அழைக்கப்பட்ட ‘மைடான்’ கிளர்ச்சியை உருவாக்கி, ஒரு ஆட்சிக் கவிழ்ப்புச் சதியை உக்ரைனில் அமெரிக்கா நிறைவேற்றியது. உக்ரைனும் ரசியாவும் சகோதர நாடுகளாக இருந்ததால் நிறப்புரட்சி ரசியாவுக்குள் இலகுவில் சாத்தியமாகும் என அவர்கள் நம்பி ஏமாந்தனர். அந்த ஆட்சிக் கவிழ்ப்பில் வந்தவர்தான் பெற்றோ புறொசெங்கோ என்பவர். உசாரடைந்த ரசியா மூன்று நாள் போர் தொடுத்து கிரைமியாவை தமதாக்கியது. கிரைமியா செங்கடலால் சூழப்பட்ட ஒரு குடாநாடு. சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த -கடற்படைத்தளமாக இருந்த- இக் குடாவை சோவியத் சிதைவின்போது, ரசியா-உக்ரைன் இடையிலான பாதுகாப்பு உடன்பாட்டின் அடிப்படையில் உக்ரைனுக்கு வழங்க ரசியா ஒப்புக் கொண்டது. எதிர்பாராத விதமாக 2014 ஆட்சிக்கவிழ்ப்புடன் அமெரிக்க சார்பு அரசு உருவாகியதால், தமக்கிடையேயான உடன்படிக்கையை மீறி கிரைமியா அமெரிக்காவின் அல்லது நேற்றோவின் கைக்கு போய்விடலாம் அல்லது அவர்களின் இராணுத் தளமாக மாற்றப்படலாம் என ரசியா அச்சமடைந்தது. போர்தொடுத்து கைப்பற்றியது. புறொசெங்கோவின் அரசு டொன்பாஸ் உள்ளடங்கிய கிழக்கு உக்ரைனில் வாழ்ந்த ரசிய மொழிபேசும் சிறுபான்மையினரை பயங்கரமாக ஒடுக்கியது. சுமார் 14000 பேர் அவரது ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்டனர். எல்லாமே அமெரிக்காவினதும் நேற்றோவினதும் நிகழ்ச்சிநிரலுடன் நடத்தப்பட்டது. இதற்கெதிரான ரசிய சிறுபான்மையினப் போராட்டக் குழுக்களுக்கு ரசியா உதவிசெய்தது. 2008 இல் றுமேனியாவில் நடந்த நேற்றோ மாநாட்டில் ஜோர்ஜ் புஸ் யூனியர் உக்ரைனை நேற்றோவோடு இணைக்கும் திட்டத்தை முன்மொழிந்தபோது, அதை வன்மையாக எதிர்த்தவர்கள் ஜேர்மன் சான்சலர் அங்லா மேர்க்கல் உம் பிரான்சின் சாக்கோசியும் ஆவர். இது ரசியாவுடனான மோதலில் கொண்டு போய் நிறுத்தும் என அவர்கள் அன்றே எச்சரித்திருந்தார்கள். அதுவே இறுதியில் நடந்தது. உக்ரேன் நேற்றோவினது ஆடுகளமாக மாறியது. நேற்றோவின் விரிவாக்கத்தை ஆரம்பத்திலிருந்து எச்சரித்து வந்தது ரசியா. அது வரைந்த சிவப்புக் கோட்டுக்குள் நேற்றோ உக்ரைனின் முதுகில் பிடித்து தள்ளி போருக்குள் மாட்டிவிட்டது. ட்றம்பின் வருகைக்குப் பின் ஏற்படுகிற மாற்றங்கள் யாரும் இலகுவில் எதிர்வுகூற முடியாத அதிரடிகளாக வெளிப்படுகிறது. அது அவரின் தனிப்பட்ட குணாம்சமாக எடுத்துக்கொள்ளப்பட முடியுமா என்பது கேள்விக்குறியாக இருப்பினும், சீனாவினதும் பிரிக்ஸ் அமைப்பினதும் எழுச்சி உலக ஒழுங்கையும் ஒருதுருவ உலகையும் அசைத்துப் பார்க்கும் நிலைக்கு வருவதை கவனத்தில் எடுத்து அமெரிக்கா தன்னை தகவமைத்து தனது உலகாதிக்க நிலையை (ஒருதுருவ ஒழுங்கை) பேண சில அசைவுகளை செய்யவேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடே MAGA (Make America Great Again) என்ற கோசமாகும். அதை அவர் பொருளாதாரப் போராகவே அறிவிக்கிறார். எனவே இதுவரை அரசியல் போராக இருந்த நிலையை மாற்றி போருளாதாரப் போர் என்ற நிலைக்குள் வருகிறபோது, அரசியல் நண்பர்களாகவும் அமெரிக்காவின் இழுவை வண்டிகளாகவும் இருந்த கனடா, ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றின் இடம் ஆட்டம்காணத் தொடங்கியிருக்கிறது. இது மீண்டும் தடத்தில் ஓடுமா இல்லையா என்பதை எதிர்வுகூற முடியாதுள்ளது. மூன்று பெரும் ஆதிக்கசக்திகளாக அமெரிக்கா சீனா ரசியா உள்ளன. தன்னை ஐரோப்பா என அடையாளப்படுத்தி உள்ளமைந்திருந்த ரசியாவை ஆசியா நோக்கி தள்ளியதோடல்லாமல் சீனாவின் நண்பனாகவும் ஆக்கியது, நேட்டோவினதும் மேற்குலகத்தினதும் அணுகுமுறை!. இதை ட்றம்ப் சரியாகவே கணித்திருக்கிறார். அவர் ரசியாவை தன் பக்கம் இழுக்க முடியாவிட்டாலும்கூட, ஒருவேளை சீனாவுடன் அமெரிக்கா போர் தொடுக்க வேண்டி ஏற்பட்டால், ரசியாவை அதில் ஈடுபடாமல் பிரித்து வைத்திருக்கவாவது சில தந்திரோபாயங்களை செய்தாக வேண்டி இருக்கிறது. நிக்சன் காலத்தில் அவர் அப்போதைய சோவியத் யூனியனுடன் சீனா உறவு கொண்டுவிடாதபடி சீனாவுடனான உறவைப் பேணிய தந்திரோபாயத்தை செய்தார். அதையொற்றிய வழிமுறையை ட்றம்ப் இப்போ சீனாவின் பக்கமாக ரசியாவை தள்ளாதிருக்க முயற்சி எடுக்கிறார். அது எந்தளவு சாத்தியமாகும் எனத் தெரியாது. ஏனெனில் அமெரிக்கா மீதான அபிப்பிராயத்தை புட்டின் அவளவு இலகுவாக மாற்றிக் கொள்வாரா என்பது கேள்விக்குறி. இது இப்படியிருக்க, ட்றம்ப் இன்னொரு படி மேலே போய் G-7 பணக்கார நாடுகளின் கூட்டமைப்பில் ரசியாவையும் உள்ளடக்கி G-8 அமைப்பாக மாற்றவேண்டும் என ஒரு முன்மொழிவை வைக்கிறார். ரசியாவின் எல்லைவரை நேற்றோவை கொண்டு போனது பிழை என்கிறார். ரசியா அதுகுறித்து பாதுகாப்பு அச்சம் கொண்டதை புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார். என்னவிதமான குத்துக்கரணம் இது. இவைகளெல்லாம் ட்றம்பின் ஒரு தந்திரோபாய அணுகுமுறை. எனவே உக்ரைனை கைவிட ட்றம்ப் முடிவு செய்திருக்கிறார். உக்ரைன் போரில் அமெரிக்க ஆதிக்கம் அற்ற நேட்டோவை வைத்து ஐரோப்பா என்ன செய்யப் போகிறது என்ற மிகப் பெரும் கேள்வி எழுகிறது. புரூசல்ஸில் 12.2.25 அன்று நடந்த நேற்றோ பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் Pete Hegseth அவர்கள் மிகத் தெளிவான செய்தியொன்றை ஐரோப்பாவுக்கு தெரிவித்துள்ளார். “நாம் நேற்றோவை பலப்படுத்த வேண்டும். அதற்கான பங்களிப்பு ஐரோப்பாவிடமிருந்து அதிகரிக்க வேண்டும்” என்பதை வலியுறுத்திய அதேவேளை, உக்ரைன்-ரசிய போர் சமாதான வழியில் நிறுத்தப்பட வேண்டும் என்றார். 2014 இல் இருந்த உக்ரைன் எல்லையை திரும்ப பெறுவது சாத்தியமில்லை எனவும், கிரைமியாவை உக்ரைன் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை எனவும், உக்ரைன் நேற்றோவில் சேர்வது என்பது நடைபெறாத காாரியம் எனவும் அவர் சொன்னதோடு மட்டும் நிற்கவில்லை. உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதத்தை ஐரோப்பாதான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், “நாம் (அமெரிக்கா) அதில் பங்கேடுக்க மாட்டோம்” என்றும் சொல்லியிருக்கிறார். ஒருவேளை உக்ரைனில் சமாதானப் படையை நிறுத்தும் நிலை உருவானால், அது ஐரோப்பிய, ஐரோப்பியரல்லாத படைகளாக இருக்க வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் ‘நேற்றோ’ என்ற லேபலின் கீழ் அது இருக்கக் கூடாது என்றார். இதேநேரம் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க துணை ஜனாதிபதி JD Vance அவர்கள் ஐரோப்பாவுக்கு (வெளிப்பாட்டுச் சுதந்திரம் உட்பட) ஜனநாயகம் பற்றி காட்டமாக வகுப்பெடுத்திருக்கிறார். என்னவிதமான கோமாளித்தனமும் அதிகாரத்துவமும் இது!. ஐரோப்பாவை இது அதிரவைத்திருக்கிறது. ஐரோப்பிய-அமெரிக்க உறவை பாதிக்க வைக்கக்கூடியளவு இந்த உரை அமைந்திருக்கிறது பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும், பெரியண்ணன் உறவிலும் அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஐரோப்பா இந்த அதிரடி கூற்றுகளில் ஆடிப் போயிருக்கிறது. அமெரிக்காவின் இச் செய்தியானது ரசியாவிடம் தாம் தோற்றுப் போய்விட்டதை, அதன் யதார்த்தத்தை- வெளிப்படுத்துவதாக அமைகிறது எனவும், தற்போதைய “ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பு” தகரத் தொடங்கியிருக்கிறது எனவும் அரசியல் விஞ்ஞானி மியர்ஸைமர் அவர்கள் கூறுகிறார். அமெரிக்காவின் மீது தொங்குநிலையில் ஐரோப்பா நிற்பதிலுள்ள ஆபத்தை ஏற்கனவே மக்ரோன் உணர்ந்திருந்ததால், ஐரோப்பாவுக்கான தனி இராணுவத்தை கட்டமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்னர் முன்வைத்திருந்தார். அமெரிக்காவில் பாதுகாப்புக்கும்கூட தங்கியிருந்த ஒரு இழுவை வண்டியாக ஐரோப்பா இருக்கிறது. அமெரிக்கா கூப்பிட்ட இடங்களுக்கெல்லாம் இழுபட்டு போர்க்களம் ஏவியவர்கள் ‘நேற்றோ’வினர். அதாவது ஐரோப்பிய நாடுகளும் கனடாவும். இந்தவகை தொங்குநிலைதான் கனடாவையும் 51 வது மாநிலமாக ட்றம்ப் முன்மொழியும் திட்டமாகும் என்பது வேறு கதை. “ரசியாவை பலவீனப்படுத்துவது” என்பது ஐரோப்பிய நலனிலிருந்து எழுந்ததால், அதை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்றவாறான அணுகுமுறையோடு அமெரிக்கா தன்னை அதற்குள்ளிருந்து வெளியே இழுத்துக்கொண்டுவிட்டது. அது தனது தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டது. எதிர்காலத்தில் தன்னை உலக அதிகார சக்தியாக பேண வேண்டிய அரசியல் வியூகங்களை அது முதன்மைப்படுத்தத் தொடங்கியுள்ளது. அதனால்தான் அது ஐரோப்பாவோடு குடும்பச் சண்டையில் ஈடுபட்டாலும், நேற்றோவை உறுதியாக மேலும் கட்டமைக்கும் உறுதியுடனேயே இருக்கிறது. சமாதானத்தை விட்டுக் கொடுப்புகளுடன் உக்ரைன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது. இதை ஐரோப்பா ஏற்றுக் கொண்டால் “ரசியாவைப் பலவீனப்படுத்த வேண்டும்” என்ற ஐரோப்பிய நோக்கத்தை நடுவழியில் விட்ட அவமானம் ஏற்பட்டுவிடும். ட்றம்ப் சொல்வதை ஏற்க மறுத்தால், அமெரிக்கா ஐரேப்பாவின் பாதுகாப்பை நடுவழியில் விடவைத்த தவறை ஐரோப்பா செய்ததாகிவிடும். அதேநேரம் அமெரிக்காவை ஐரோப்பா ட்றம்பின் கண்களுக்கு உள்ளால் பார்க்கவில்லை. “ஒரு ஆழ் அரசின் (deep-state) கட்டுமானத்தை பலவீனப்படுத்தி, அரசு (state) வடிவத்துள் நிறுத்த முனையும் ட்றம்ப் இன் முயற்சி இன்னும் நான்கு வருடங்களுக்குள் காலாவதியாகிவிடும்; மீண்டும் பழைய அமெரிக்க-ஐரோப்பிய தேன்நிலவு நடக்கும்” என ஐரோப்பிய ஒன்றியம் கருத இடமுண்டு. ட்றம்பின் காஸா குறித்த, கனடா குறித்த, கிறீன்லாண்ட் குறித்த, பனாமா கால்வாய் குறித்த அதிரடிகளை அமெரிக்க மக்கள்கூட ஏற்றுக்கொள்வார்களோ தெரியாது. ஆழ் அரசின் (deep state) தலைமைக் காவலரான சிஐஏ அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையை வகுத்து எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளையும் போருக்குள் தள்ளுகிற வரலாறு கொண்டது. எனவே ‘ஆழ் அரசு’ (deep-state) வடிவத்தின் அழிவை அல்லது அரசு (state) வடிவ உருமாற்றத்தை அது ஏற்றுக்கொள்ளும் என நம்ப இடமில்லை. எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கிறபோது சமாதான இலக்கை ட்றம்ப் சாதிப்பது என்பது ஐரோப்பாவின் (பலவீனப்பட்ட) கைகளில் வந்து நிற்கிறது. இந்த யுத்தத்தை அமெரிக்காவானது நேற்றோ சகிதம் வழிநடத்திக் கொணர்ந்து, இப்போ ஐரோப்பாவையும் பலிக்கடாவான உக்ரைனையும் கைவிட யோசிப்பது ஒரு அவலச்சுவையாக மேடையேறியிருக்கிறது. போர் தொடங்கி சில மாதங்களிலேயே இஸ்தான்புல் பேச்சுவார்த்தையை குழப்பி செலன்ஸ்கியை வெளியேறவைத்தது அமெரிக்காவும் பிரிட்டனும்தான். அப்போது தாம் நேற்றோவில் சேராமல் நடுநிலையாக இருப்போம் என செலன்ஸ்கி உடன்பாட்டுக்கு வர தயாராக இருந்தார். டொன்பாஸ் ரசிய சிறுபான்மையினருக்கான அதிகாரப் பகிர்வை முன்வைத்து வரையப்பட்ட முனிச் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் ரசியா முன்வைத்திருந்தது. செலன்ஸ்கி அதையும் ஒப்புக்கொண்டிருக்கவோ அல்லது மாற்று தீர்வுகளை நோக்கியோ போக இந்த பேச்சுவார்த்தை வழியாட்டியிருக்கவும் கூடும். இவைகள் நடந்திருந்தால், உக்ரைனில் இவளவு அழிவுகளும் உயிர்ப்பலிகளும் ஏற்படாமல் செலன்ஸ்கியால் தவிர்த்திருக்க முடியும். மேற்குலகின் பலிக்கடாவாகப் போய், வந்தடைந்திருக்கும் ஒரு துயர வரலாறை எழுத வேண்டி வந்திராது. ஐரோப்பாவுக்குள்கூட சுவிஸ் உம் ஆஸ்திரியாவும் நேற்றோவில் இணையாமல் நடுநிலையாக இருக்கின்றன. ரசியாவின் சகோதர நாடாக இருந்த உக்ரைனுக்கு ஏன் முடியாமல் போனது. அது ஐரோப்பாவினதும் நேற்றோவினதும் சூழ்ச்சியால் நிகழ்ந்தது. அந்த சூழ்ச்சி 2014 இல் அரங்கேறி அதன் தொடர்விளைவுகள் 2022 போரில் கொணர்ந்து நிறுத்தியது. உக்ரைன் அதிபர் இந்த சூழ்ச்சி வலைக்குள் மாட்டுப்பட்டு தனது நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றார். இன்று இருபது வீத நிலப் பிரதேசங்களை ரசியாவிடம் பறிகொடுத்து, நேற்றோ அங்கத்துவமும் இல்லாமல் தொடங்கிய இடத்தில் வந்து நிற்கிற அவலம் நிகழ்ந்துள்ளது. இவையெல்லாம் உக்ரைன் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்திற்கு அருகாமையில் செலன்ஸ்கியை நிறுத்தியிருக்கிறது. ட்றம்பின் தீர்வை அவர் ஏற்றுக்கொள்வும் முடியாத நிலையில் மேற்குலகம் அவரை சூழ்நிலையின் கைதியாக மாற்றியுள்ளது. மறுகரையில் ரசியாவை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்த வகைதொகையின்றி போட்ட பொருளாதாரத் தடை ‘பூமராங்க்’ ஆக மாறி ஐரோப்பாவை தாக்கியுள்ளது. மிக முக்கியமாக தொழில்நுட்ப ரீதியில் பலமாக தன்னை நிலைநிறுத்தி வைத்திருந்த ஜேர்மனி பலத்த அடிக்கு உள்ளாகியிருக்கிறது. ட்றம்பின் சமதானத் திட்டத்தை செலன்ஸ்கி ஏற்றுக்கொள்ள மறுக்கும் இடத்து, 2014 இல் நிகழ்த்தியதுபோல் இன்னொரு ஆட்சிமாற்றத்தை அமெரிக்கா நிகழ்த்தி தனது பெரியண்ணன் பாத்திரத்தை நிரூபிக்கவும் இடமுண்டு. அதன் அறிகுறியாக அண்மையில் உக்ரைன் பாராளுமன்றத்தில் -2014 இன் அமெரிக்க சதிநாயகன்- புறொசெங்கோவின் ஆதரவாளர்கள் குழப்பம் விளைவித்ததையும், செலன்ஸ்கிக்கு எதிராக கோசம் எழுப்பியதையும் கண்டோம். இவ்வாறான நிலைமைகளை பார்க்கும்போது, உக்ரைனுக்கு சமாதானம் அவளவு எளிதில் கைகூடுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. உக்ரைனின் இறைமையை ரசியா அங்கீகரிக்கும் விதத்திலும், ரசியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உக்ரைன் நேற்றோவின் களமாக அமையாத உத்தரவாதத்துடனும், டொன்பாஸ் ரசிய சிறுபான்மையினர் குறித்த உடன்பாடுகளுடனும் இருபக்க விட்டுக் கொடுப்புகளுடன் சமாதானம் உருவாகுமா? ravindran.pa சுடுமணல்சமாதானம் உருவாகுமா?மாறிவரும் பூகோள அரசியல் THanks for image: Aljazeera தான் ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்திற்குள் உக்ரைன்-ரசியா போரை சமாதானம் மூலம் முடிவுக்கு கொண்டுவருவேன் என ட்றம்ப் தேர்தலுக்கு முன் கூறிவந்தார். அது…