Everything posted by கிருபன்
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
தமிழை வாசித்து கிரகிக்கவில்லை என்று நினைக்கின்றேன் அல்லது @விசுகு ஐயா எழுதிய சிலவற்றை நான் எழுதியதாகக் குழம்பிவிட்டீர்கள் போலிருக்கு. ஏதாவது உருப்படியான கருத்தை வைத்தால் மந்திக்கு மயிர்வெட்டும் வேலையை விட்டுவிட்டு வந்து பதில் வைக்கின்றேன்.😎
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
இப்படி விழல்க் கருத்துக்களை வைப்பதற்கு இடையிடையே யாழுக்கு நீங்கள் கட்டாயம் வரவேண்டும்😜 உங்களின் கதையின்படி, இங்கிலீசு பேசும் அமெரிக்கர்கள், ஆங்கிலேயர்கள், கனடியர்கள், அவுஸ்திரேலியர் எல்லாம் அறிவாளிகள்தான்!😂🤣 என்னிடம் மூன்று திருக்குறள் நூல்கள் உள்ளன. ஒன்று கலைஞர் கருணாநிதியின் உரையுடன்! இலவசமாகப் படிக்க: https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0612.pdf
-
சோல்பரி ஆணைக்குழு நியமிக்கப்பட்ட 80வது ஆண்டில் ஈழத்தமிழர் இறைமையின் தொன்மை குறித்து சில தெளிவுகள் – சூ. பற்றிமாகரன்
தகவல் பிழைகளை சரி செய்யலாமே.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
எனக்கும் இந்த தேர்தல் முடிவு வியப்பைத் தந்தது! ஒரு இடைத்தேர்தலில் ஆளும்கட்சி தோற்பது அல்லது மிகக் குறைந்த பெரும்பான்மையில் வெல்லுவதுதான் வழமையாக நடப்பது. ஆனால் பிற எதிர்க்கட்சிகள் போட்டியிடாத தேர்தலில் பல உதிரிகளோடு உதிரியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் கட்டுப்பணத்தை இழந்தது பெரிய வியப்புத்தான்😜 அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பல கூட்டணிகள் மோதும்போது தனியே தேர்தலில் நிற்கும் நாம் தமிழர் கட்சி 8% வீதத்தைக் கூட எடுக்கமுடியாமல் மீண்டும் உதிரியாகத்தானே போகப்போகின்றது.. என்னுடன் பல தமிழக என்ஞினியர்கள் வேலை செய்கின்றார்கள். அவர்களுடன் அரசியல் பேசுவது குறைவு என்றாலும் அண்மைய பெரியார்-பிரபாகரன் பிரச்சினையை எப்படி தமிழகத்தில் பார்க்கின்றார்கள் என்று கேட்டேன். ஈரோடு தேர்தலுக்குத்தான் சீமான் பெரியாரை அவதூறு செய்வதைக் கையில் எடுத்தார் என்பதில் அவர்கள் தெளிவாக உள்ளார்கள். மற்றும்படி யாரிடம் அதிக பணமும், கோர்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவும், மீடியாவில் ஆதிக்கமும் உள்ளதோ அவர்கள்தான் தேர்தலில் வெல்லுவார்கள் என்று சொன்னார்கள். போகிற போக்கைப் பார்த்தால் பாஜக தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக வர அதிக வாய்ப்பு உள்ளது. நாம் தமிழருக்கு “வாய்ப்பில்லை ராஜா”
-
'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா?
'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா? Getty Images சித்தரிப்புப் படம் தினுக் ஹேவாவிதாரண பிபிசி சிங்களம் ''எனது முன்னாள் காதலன் மூலமாகவே இது எனக்கு முதலில் அறிமுகமானது. அவர் தான் எனக்கு இதைக் பழக்கப்படுத்தியது'' என 27 வயதான நயோமி தனது அனுபவங்களை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார். ஐஸ் போதைப்பொருள் என சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுகின்ற மெத்தம்பெட்டமைன் (methamphetamine) என்ற போதைப்பொருள் பாவனைக்கு தான் ஒரு வருடத்திற்கு முன்பாக பழக்கப்பட்டதாக நயோமி தெரிவிக்கின்றார். உடலுறவு கொள்ளும் போது தனக்கும், தனது முன்னாள் காதலனுக்கும் போதைப்பொருள் கட்டாயம் அவசியமான நிலைமை ஏற்படுவதாக அவர் மேலும் தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். தனது அடையாளத்தை பாதுகாத்துக் கொள்ளுமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய, அவரையும், அவரது அனுபவங்களை பற்றி கருத்து தெரிவித்தவர்களையும் குறிப்பிடுவதற்கு பிபிசி புனைப் பெயர்களை பயன்படுத்த தீர்மானித்தது. கெம்செக்ஸ் என்றால் என்ன? உடலுறவில் அதிக இன்பத்தை பெற்றுக்கொள்வதற்காக, உடலுறவிற்கு முன்பாக போதைப்பொருள் அல்லது மருந்து வகைகளை பயன்படுத்திக் கொள்ளும் செயற்பாடு கெம்செக்ஸ் (Chemsex) என அழைக்கப்படும் என்று பாலியல் நோய் தொடர்பான விசேட மருத்துவர் டொக்டர் வினோ தர்மகுலசிங்க பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். ''உடலுறவு செய்வதற்கு முன் ஏதேனும் ரசாயன பொருட்களை எடுத்துக்கொண்டால், அதை கெம்செக்ஸ் என அடையாளப்படுத்துவோம். பலர் இதனை உடலுறவு இன்பத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்துகின்றனர். என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாங்கள் கூறவில்லை.'' என அவர் குறிப்பிடுகின்றார். தொடர்ந்து பேசிய அவர், ''இவ்வாறான சந்தர்ப்பங்களில் மருத்துவர்களின் அனுமதியுடனான மருந்துகள் அல்லது அனுமதியற்ற மருந்துகள் அல்லது ரசாயன பொருட்களாக இருக்கக்கூடும். பார்ட்டி நிகழ்வுகளிலேயே அதிகளவானோர் இதனை பயன்படுத்துகின்றனர். அவ்வாறான இடங்களில் பாதுகாப்பற்ற உடலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவ்வாறான இடங்களில் பாலியல் ரீதியான நோய்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பம் அதிகளவில் காணப்படுகின்றது'' என்கிறார். மேலும், ''அதிகளவில் தெரிவு செய்யப்பட்ட குழுக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி தெளிவூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கையில் இது தொடர்பான தரவுகளை சேகரிக்கும் திட்டமொன்று இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.'' என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். ஆண், பெண் உறவின் போது உடலுறவு செயற்பாடுகளை அதிக நேரம் செய்வதற்கு மற்றும் அந்த செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு போதைப்பொருள் பயன்பாடு ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாக கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தினால் 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதி வெளியான அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக தன்பாலின சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் இந்த கெம்செக்ஸ் பாலியல் செயற்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக போதைப்பொருள் பயன்பாட்டிற்கு உட்படுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் புதிய எச்.ஐ.வி. தொற்றாளர்களில் 43 வீதம் ஆண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையில் உடலுறவு செயற்பாடுகளில் ஈடுபடுவோர் என எச்ஐவி/எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒன்றிணைந்த வேலைத்திட்டமான 'UNAIDS'-னால் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், தன்பாலின சேர்க்கையில் ஈடுபடுவோர் இடையில் கெம்செக்ஸ் அதிகரித்துள்ளதுடன், ஏனைய தரப்பினரும் இந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' தனது முன்னாள் காதலனால், தான் முகம் கொடுத்த அனுபவங்கள் குறித்து நயோமி, பிபிசி சிங்கள சேவையுடன் பகிர்ந்துக்கொண்டார். ''எனது முன்னாள் காதலன் வெளிநாட்டில் இருந்த ஒருவர். அவர் வெளிநாட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு பழகியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் அவர் இலங்கைக்கு வந்தவுடன் ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்தியிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் இருவரும் நண்பர்களை போன்று பழகினோம்'' ''இந்த சந்தர்ப்பத்தில் எனது முன்னாள் காதலனை நேசித்த பெண் திடீரென வேறொரு திருமணத்தை செய்து கொண்டுள்ளார். அந்த சம்பவத்தை அடுத்து மனஅழுத்தத்திற்கு உள்ளானமையினால் மீண்டும் ஐஸ் போதைப்பொருளை அவர் பயன்படுத்த முற்பட்டார்.'' ''நான் அவருடைய சிறந்த நண்பி என்பதனால், அவரை அந்த பழக்கத்திலிருந்து வெளியில் கொண்டு வர முயற்சி செய்தேன். அவருடைய மனதை சரி செய்யும் அதேவேளை, மெதுவாக இதனை நிறுத்துமாறு மனதை மாற்றினேன். இவ்வாறு சிறிது காலம் செல்லும் போது எங்களுக்கு இடையில் காதல் ஏற்பட்டது'' ''நான் குறிப்பாக போதைப்பொருள், சிகரெட் போன்றவற்றை ஏற்கனவே பயன்படுத்தி இருந்தாலும், ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்தியிருக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் முயற்சி செய்து பார் என அவரே எனக்கு ஐஸ் போதைப்பொருளை ஒரு நாள் வழங்கினார். எனக்கிருந்த ஆர்வத்தினால் நான் அதனை முயற்சி செய்தேன்.'' என அவர் கூறுகின்றார். Getty Images 'நான் அவருடைய சிறந்த நண்பி என்பதனால், அவரை அந்த பழக்கத்திலிருந்து வெளியில் கொண்டு வர முயற்சி செய்தேன்' என்கிறார் நயோமி போதைப்பொருளின் விளைவுகள் ஐஸ் போதைப்பொருளை எடுத்துக்கொண்டதன் பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது தனக்கு இதற்கு முன்னர் ஏற்படாத உணர்வொன்று ஏற்பட்டதாகவும், சோர்வின்றி இருந்ததாகவும், தான் அதற்கு பின்னர் தொடர்ச்சியாக இதை பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். ''நானும், காதலனும் சந்திக்கும் போது நாங்கள் பயன்படுத்த பழகியிருந்தோம். அவர் வீட்டிலிருந்து வரும் போது அதனை தேடி எடுத்துக்கொண்டு வருவார். நாங்கள் இருவரும் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்திய பின்னர் செக்ஸ் செய்யும் போது ஏற்படும் உணர்வில் மாற்றம் இருந்தது.'' ''எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செக்ஸ் செய்ய முடிந்ததுடன், பல தடவைகள் செக்ஸ் செய்ய முடிந்தது. அதனை எடுத்துக்கொண்டு செக்ஸ் செய்யும் போது ஒரு பலம் இருந்தது.'' ''நாங்கள் ஒரு வருட காலத்திற்கு அண்மித்த காலம் ஐஸ் போதைப்பொருளை எடுத்துக்கொண்டு செக்ஸில் ஈடுபட்டோம். இறுதியாக நாங்கள் இருவரும் சந்திக்கும் வரை, இந்த போதைப்பொருள் இல்லாமல் முடியாதிருந்தது'' ''சிறிது காலத்தில் பின்னர் போதைப்பொருளை எனது காதலனுக்கு கண்டுபிடிக்க முடியாது போகும் போது, எனக்கு அந்த தொடர்பு இருந்தது. இறுதியாக அவரை காப்பாற்ற வந்த நானே, அவருக்கு அதனை வாங்கிக் கொடுக்கும் இடத்திற்கு தள்ளப்பட்டேன்.'' ''போதைப்பொருளை வாங்குவதற்காகவே என்னை அவர் தேடி வருகின்றார் என்பதை சிறிது காலம் செல்லும்போதே நான் உணர்ந்தேன், ஏனென்றால், இறுதியில் அதனை தேடிக்கொள்ள முடியாத இடத்தில் அவர் இருந்தார்.'' என அவர் குறிப்பிடுகின்றார். Getty Images 'நாங்கள் இருவரும் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்திய பின்னர் செக்ஸ் செய்யும் போது ஏற்படும் உணர்வில் மாற்றம் இருந்தது' என்கிறார் நயோமி 'இதன் பாரதூரத்தை நானே உணர்ந்தேன்' சிறிது காலம் செல்லும் போது தனது காதலனின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், அவரும், தானும் மனதளவில் மாத்திரமன்றி, உடலளவிலும் பாதிக்கப்பட்டதாகவும் நயோமி தெரிவிக்கின்றார். ''நானும், எனது காதலனும் போதைப்பொருள் உட்கொள்வதனால் பாதிக்கப்பட்டுவதை சிறிது காலம் சென்றே உணர்ந்தேன். அதனை பயன்படுத்தி ஒரு நாள் செல்லும் வரை எதனையும் உட்கொள்ள முடியாது. நாங்கள் இருவரும் மெலிவடைந்தோம்." "என்ன நடந்தது என நண்பர்கள் எங்களிடம் கேட்க ஆரம்பித்தார்கள். போதைப்பொருள் பயன்படுத்தி ஒரு வருடம் ஆகும் போது எனது காதலன் செக்ஸ் செய்ய கூட சிரமப்பட்டார். அதன் பின்னர் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையான மருந்துகளை கூட அவர் எடுத்துக்கொண்டார். செக்ஸ் செய்ய முடியாத இடத்திற்கு அவர் தள்ளப்பட்டார்.'' என்கிறார் நயோமி. தொடர்ந்து விவரித்த நயோமி, ''எனது காதலன் அவரது வீட்டிற்கு சென்று ஒரு வார காலம் அறையிலிருந்து வெளியில் வரவில்லை என நண்பர்கள் கூறும் போதே அதன் பாரதூரத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதன்பின்னர் நான் அது தொடர்பில் தேட ஆரம்பித்தேன். சில வேலைகளில் வானொலி கேட்பேன். இசைகளை கேட்க ஆரம்பித்தேன்.'' ''சிறிது காலம் செல்லும்போது எனது காதலனின் மூக்கில் ரத்தம் வடிய ஆரம்பித்தது. சில சந்தர்ப்பங்களில் 'மருத்துவரை நாடுவோம்' என கூறும் போது கூட இறுதி வரை அவர் அதற்கு இணங்கவில்லை. அவர் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார். அவர் சண்டையிட்டார். சந்தேகப்பட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் கூட கூறாமல் அவர் வெளிநாடு செல்ல தீர்மானித்தார். நான் மனோ வைத்திய ஆலோசனைகளை பெற்று தற்போது சிறியளவு வழமைக்கு திரும்பி வருகின்றேன்.'' எனக் கூறினார். Getty Images "இதைப் பயன்படுத்திய பிறகு, நீங்கள் ஒரு நாளைக்கு எதுவும் சாப்பிட முடியாது. நீ குடிப்பவை மட்டுமே உன் உடலுக்குள் நுழையும்" 'பாலியல் சார்ந்த நோய்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பம் அதிகம்' ''போதைப்பொருட்களை பயன்படுத்துவோர், பின்னர் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுகின்றனர். அதனூடாக ஹெபடைடிஸ் பி போன்ற பாலியல் ரீதியான நோய்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகம்" என பாலியல் நோய் தொடர்பான விசேட மருத்துவர் டொக்டர் நிமாலி ஜயசூரிய பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். ''இலங்கைக்குள் இந்த செயற்பாடுகள் இருக்கின்றன என்பது தொடர்பான தகவல்கள் இருக்கின்றன. எனினும், எங்களுக்கு அது தொடர்பில் சரியாக தெரியாது. ஹெராயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் போன்றல்ல, சிறந்த கல்வி அறிவை கொண்ட 20 - 40 வயதுக்கு இடைப்பட்ட வயதுடையோர் ஐஸ் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது'' என அவர் குறிப்பிடுகின்றார். 'எனது தொழிலுடன் இதனை பழகிக் கொண்டேன்' தான் சில சந்தர்ப்பங்களில் இசை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் போது சில போதைப்பொருட்களை பயன்படுத்துவதாக 20 வயதான யோமால் பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார். ''நான் பணியாற்றும் தொழிலுடன் பல சந்தர்ப்பங்களில் இசை நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பேன். அந்த நிகழ்ச்சிகளில் மக்களுடன் உணர்வை எடுக்க வேண்டும் என்றால், சில போதைப்பொருட்கள் இருக்கின்றன. அவற்றை நான் பயன்படுத்தினேன்'' ''அந்த போதைப்பொருளை பயன்படுத்தி 30 நிமிடங்கள் ஆகும் போது, அந்த உணர்வு உடலுக்கு தெரியும். சில சந்தர்ப்பங்களில் 7 - 8 மணித்தியாலங்கள் ஆனாலும் ஆடிப்பாடி இருக்க முடியும். அதன் பின்னர் எனது காதலியுடன் நான் செக்ஸ் செய்துள்ளேன். அந்த சந்தர்ப்பத்தில் நான் அதிக நேரம் செக்ஸில் ஈடுபட்டுள்ளேன்'' என்கிறார் யோமால். ''எனினும், இந்த போதைப்பொருட்களை பயன்படுத்திய பின்னர், பல நாட்களுக்கு அதன் தாக்கம் எனக்கு இருக்கும். சில சந்தர்ப்பங்களில் நடுக்கம் ஏற்படும். அந்த சந்தர்ப்பத்தில் எனது அருகாமையிலுள்ள நண்பர்களை கூட நான் தேடுவேன். போதைப்பொருளின் தாக்கத்தினால் காரணமாகவே அவர்களை தேடுவேன். இரண்டு நாட்களுக்கு உணவு உட்கொள்ள முடியாது" என யோமால் தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். Getty Images "அந்த போதைப்பொருளை பயன்படுத்தி 30 நிமிடங்கள் ஆகும் போது, அந்த உணர்வு உடலுக்கு தெரியும்" 'நான் இதிலிருந்து மீண்டு வர முயற்சிக்கிறேன்' அதிக நேரம் உடலுறவில் ஈடுபடும் ஆர்வம் காரணமாக பல்வேறு போதைப்பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்ததாக 36 வயதான பெத்தும் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். ''நான் திருமணம் செய்து 8 வருடங்கள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். இதனை எடுத்துக்கொண்டால், அதிக நேரம் செக்ஸ் செய்ய முடியும் என எனது நண்பர் ஒருவனே தெரிவித்தான்'' ''எனது நண்பனுடன் ஒருநாள் நான் முயற்சி செய்தேன். அதன் பின்னர் ஸ்பா சென்றேன். அன்று அது உண்மை என்பதை புரிந்துக்கொண்டேன். அதன் பின்னர் மாதத்தில் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை பார்ட்டிகளில் பயன்படுத்துவேன். சில போதைப்பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்தேன்" என்று கூறுகிறார். தற்போது அதனை நிறுத்துவதற்கு நான் பாரியளவில் முயற்சி செய்கின்றேன் என்று கூறிய அவர், "ஏனென்றால், நான் கதைக்கும் விதம் கூட மாறியுள்ளதை நான் உணர்கின்றேன். இதனை எடுத்துக்கொண்டால் தூக்கம் வராது. ஏன் இப்படி இருக்கின்றீர்கள் என்று எனது மனைவி கேட்கின்றார். என்னை அவர் மருத்துவரிடம் அழைத்து செல்ல முயற்சிக்கின்றார். நான் போக மாட்டேன்.'' என்கிறார். ''நான் அவரிடம் சென்றால், நான் இவ்வாறானதை பயன்படுத்துவதே இதற்கான காரணம் என்பது சிறிது நேரத்தில் தெரியவரும. நான் இதிலிருந்து மீண்டு வர பாரியளவில் முயற்சி செய்கின்றேன்" என பெத்தும் கூறுகின்றார். Getty Images "எச்ஐவி மற்றும் ஹெபடைடிஸ் பி போன்ற பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து பெரும்பாலும் உள்ளது" பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா? மூட நம்பிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய கதைகள் காரணமாகவே உடலுறவை நீடிக்க போதைப்பொருள் பாவனைக்கு மக்கள் தூண்டப்படுகின்றார்கள் என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மனோஜ் பெர்ணான்டோ பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவிக்கின்றார். மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோர் போதைப்பொருளை பயன்படுத்துவது இலகுவான நிலைமை என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ''வெற்று நம்பிக்கை காரணமாகவே போதைப்பொருளை பயன்படுத்த அதிகளவான மக்கள் முன்வருகின்றனர். பாலியல் சக்தி வலுவடையும் என எந்தவிதமான விஞ்ஞான ரீதியான உறுதிப்பாடுகளும் இல்லை. அனைத்து போதைப்பொருட்களுக்கும் இந்த கதையே இருக்கின்றது. ஹெராயின், ஐஸ் போன்ற போதைப்பொருளுக்கு அடிமையான போது மனிதனிடம் நம்பிக்கைகள் காணப்படுகின்றன. பாலியல் சக்தி அதிகரிக்கும், மகிழ்ச்சி இருக்கும் போன்ற கதைகள் சில இருக்கின்றன.'' ''சிலர் மனதளவில் ஏற்படுகின்ற அழுத்தங்கள் காரணமாக போதைப்பொருட்களை எடுக்க ஆரம்பிக்கின்றனர். ஒரு பிம்பத்தை இந்த போதைப்பொருட்களுக்கு ஏற்படுத்தியுள்ளனர். திரைப்படங்களில் பார்க்கின்ற விடயங்கள் போன்றே போதைப்பொருள் பயன்பாட்டாளர்கள் பல்வேறு நடைமுறைகளை முன்னெடுக்கின்றனர். நண்பர்கள் ஏற்படுத்துகின்ற விடயங்கள் காரணமாக பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர்.'' என்கிறார் பெர்ணான்டோ. "மருந்துகளுக்கு பாலியல் செயல்முறையை நீட்டிக்கும் திறன் இல்லை. இந்த மாதிரியான போதைப்பொருளைப் பயன்படுத்துபவர் நீண்ட நேரமாக உடலுறவு கொள்கிறார் என்று நினைக்கிறார். அப்படி நடந்தாலும், தாங்கள் அந்தச் செயலில் நீண்ட நாட்களாக ஈடுபட்டுவிட்டதாக மனதளவில் நினைக்கிறார்கள்'' என அவர் குறிப்பிடுகின்றார். "மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது சிலர் தூக்கம் மற்றும் உயிரற்றதாக உணர்கிறார்கள். இந்த வகையான மருந்தை உட்கொள்பவர்கள் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக மாற நீண்ட நேரம் எடுக்கும். எனவே, இந்த உயிர் சக்தியை அடைய எடுக்கும் காலப்போக்கில், அவர்கள் உடலுறவில் ஈடுபட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள்." ஆனால் உண்மை என்னவென்றால், ஐஸ் அல்லது ஹெராயின் அல்லது பிற போதைப்பொருள்களால் பாலுறவு செயல்முறையை நீண்டதாக ஆக்க முடியாது' என பெர்னாண்டோ கூறினார். (இங்கு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவர்களின் பெயர்கள் அவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க மாற்றப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளவும்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg0p993er9o?at_campaign=ws_whatsapp
-
சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாரிய மோசடியா?
சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாரிய மோசடியா? February 8, 2025 04:15 pm மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை வதனகுமார் குற்றம்சாட்டியுள்ளார். குளத்தின் நடுவே உள்ள மைதானத்துக்கு இரண்டு தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் காரியாலயத்தில் நேற்று (07) இடம்பெற்ற ஊடக மாநட்டில் வைத்தே அவர் இதனை வௌிப்படுத்தியிருந்தார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த கிருஸ்ணபிள்ளை வதனகுமார், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதுடன், அதன் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி எருவில் கிழக்கில் மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவலை பெற்றோம், இருந்த போதும் அவ்வாறு இல்லாத மைதானத்துக்கு நிதி ஓதுக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தோம். அதன் பின்னர் இது தொடர்பாக பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் சட்டமூலம் தகவலை பெற்ற போது எருவில் தெற்கு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதில் முதலில் கிழக்கிலுள்ள மைதானத்துக்கு எனவும் பின்னர் இரண்டாவது முறை எருவில் தெற்கு மைதானத்துக்கு என எழுத்து மூலமாக தகவல் தந்தனர். இவ்வாறு முன்னுக்கு பின் முரணான தகவல்தரப்பட்டுள்ளன. அதேவேளை இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்துக்கு இரண்டு கோடி ரூபா ஒதுக்கப்பட்டதாக மாவட்ட செயலகம் தகவல் அறியும் சட்ட மூலமாக தெரிவித்திருந்தது. அது தொடர்பான மேலதிக தகவலை கேட்டிருந்த போது பிரதேச செயலாளர், அந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார். இருந்தும் கடந்த 3ம் திகதி பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட தகவலின்படி மாவட்ட அரசாங்க அதிபரால் சில மாற்றங்கள் செய்துள்ளதாக தகவலை வழங்கியுள்ளனர். அதன்படி இராசமாணிக்கம் ஞாபகாத்த மண்டபம் என இருந்ததை அந்த மண்டபம் ஊடாக பிள்ளையர் ஆலய பரிபாலனசபைக்கு அந்த 2 கோடி ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரச அதிகாரிகள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி கொண்டிருப்பதன் காரணத்தினால் பாரிய சந்தேகம் ஏற்படுகின்றது. மாவட்ட செயலகத்தில் இருந்து வருகின்ற ஒரு தகவல் அதேபோன்று பிரதேச செயலகத்தில் முதற்கட்டமாக ஒரு தகவல் பிறகு இல்லை எனவும் பின்னர் அமுல்படுத்தப்பட்டுள்ளது என வருகின்றது. இவ்வாறு தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்படுகின்ற விடயங்கள் சரியானமுறையில் தகவலாக வழங்கப்படவில்லை. அதேபோன்று 400 மில்லியன் ரூபா நிதியில் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது? எவ்வளவு நிதி திருப்பி அனுப்பபட்டுள்ளது? என்ற தகவலை கேட்ட போது மாவட்ட உதவி அரசாங்க அதிபர் இந்த சட்டத்தின் சரத்தின் 5 கீழ் இந்த தகவலை வழங்கமுடியாது என கடிதம் வழங்கியுள்ளார். எனவே இது தனிநபர் சார்ந்த விடயம் அல்ல சட்டத்தின் பிரகாரம் தகவல் வழங்கவேண்டும் என்பதை அவர்கள் உணர வேண்டும் சத்தியசாஜிபாபா சமுத்தி மற்றும் சக்தி இல்லத்துக்கு நிதி ஒதுக்கியுள்ளனர். இதில் சத்தியசாஜிபாபா சமுத்தி என்பது பாரிய நிதிவசதியை கொண்டது அவர்கள் இலவச மருத்துவம் உட்பட பல வேலைகளை செய்துவருகின்றனர். அதேவேளை சக்தி இல்லம் ஒரு தனியாரது இதுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவசர அவசரமாக வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக சரியான திட்டமிடல் இன்றி இந்த நிதியினை மோசடி செய்துள்ளனர் அவ்வாறே எருவில் தெற்கில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்திற்கு இரண்டு தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டு பாரியளவு நிதி மோசடி இடம்பெற்றுள்ளதுடன், தற்போது ஒதுக்கப்பட்ட 50 இலட்சம் ரூபா நிதியில் கிட்டத்தட்ட 27 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக அதே தமிழரசு கட்சியினுடைய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் காண்டீபன் பிரதேச செயலகம், மற்றும் மாகாண உள்ளுராட்சி மன்ற திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் செய்துள்ளார். இவ்வாறு மிக மோசமான முறையில் நிதிகள் ஒதுக்கப்பட்டு அவர்களுடைய ஆதரவாளர்கள் மூலம் அந்த நிதி சுரண்டப்பட்டு பிரச்சார வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், முறையான அபிவிருத்தி இடம்பெறவில்லை மக்களுடைய வரிப்பணம் மிக மோசமாக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவே இவ்வாறுனவர்களை மக்கள் தெரிவு செய்வதனால் எமது பிரதேசத்தில் இன்றும் மக்கள் ஏழைகளாகவும் அடிமைகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதனை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரச அதிகாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதுடன் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் அடங்கிய ஆவனங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, இலங்கை கணக்காய்வாளர்கள் திணைக்களம், மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளதுடன், இந்த மோசடி தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார். https://tamil.adaderana.lk/news.php?nid=199871
-
டெல்லி தேர்தல்… அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி!
கெஜ்ரிவால் ஃபார்முலாவை கையிலெடுத்த மோடி… ஆம் ஆத்மி தோல்விக்கு என்ன காரணம்? 8 Feb 2025, 6:35 PM கடந்த 2013ல் மகா கும்பமேளா நடந்தபோது, டெல்லியில் காங்கிரஸை தூக்கி எறிந்து ஆம் ஆத்மி ஆட்சியில் அமர்ந்தது. ஷீலா தீட்சித்தின் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர் ஆம் ஆத்மிஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த பத்து ஆண்டுகாலம் வேகமாக நகர்ந்து, இப்போது மீண்டும் கும்பமேளா நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வென்றிருக்கிறது. 2013ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்தபோதிலும் 48 நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால். அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க ஒரு அமைப்பை உருவாக்கும் ஜன் லோக்பால் மசோதாவை டெல்லி சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2015ல் நடைபெற்றத் தேர்தலில் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி. மீண்டும் முதல்வரானார் அரவிந்த் கெஜ்ரிவால். 2020ல் நடந்த தேர்தலிலும் 62 இடங்களில் வெற்றி பெற்று முதல்வரானார். இருமுறை அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தும், இந்த முறை தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம்? நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்… இரண்டு முறை ஆட்சியில் இருந்தபோதும், டெல்லியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தோல்வி மற்றும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி ஆகியவை ஆம் ஆத்மியின் தோல்விக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ‘டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து’ என்ற வாக்குறுதியைப் போலவே, அனைவருக்கும் குழாய் நீர் இணைப்பு வழங்கப்படும். பாரிசுக்கு இணையாக யமுனை நதி சுத்தம் செய்யப்படும். 20 லட்சம் வேலைவாய்ப்புகள் என பல கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளித்தது ஆம் ஆத்மி. ஆனால் அவை பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை. இது ஆட்சிக்கு எதிரான உணர்வை மக்களிடத்தில் தூண்டியது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். பாஜகவின் பிரச்சார உத்தி! காங்கிரஸை எதிர்த்ததைக் காட்டிலும் பாஜக ஆம் ஆத்மியை எதிர்த்தே அதிக பிரச்சாரம் செய்தது. காற்று மாசுபாடு, போக்குவரத்து நெரிசல், நகர்ப்புற வீடுகள், சுகாதாரம் மற்றும் பொதுப் பாதுகாப்பு போன்ற டெல்லி மக்களை நேரடியாகப் பாதிக்கும் ஹைப்பர்-லோக்கல் பிரச்சினைகளில் பாஜக கவனம் செலுத்தியது. டெல்லியின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதத்தை கொண்ட பூர்வாஞ்சலி சமூகத்தின் வாக்குகளை குறிவைத்து பாஜக தேர்தல் பணிகளை செய்தது. இது பாஜகவின் வெற்றிக்கும், ஆம் ஆத்மியின் தோல்விக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. குடிசைவாசிகளின் வாக்குகள் மீதும் பாஜக கவனம் செலுத்தியது. அந்தவகையில் தேர்தலுக்கு முன்னதாக, நகரத்தில் ஜேஜே கிளஸ்டர்களில் வசிப்பவர்களுக்கான 1,675 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் இரண்டு நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. ஊழல் குற்றச்சாட்டுகள்! 2013ல் ஆட்சிக்கு வர காங்கிரஸை வீழ்த்தி ஆம் ஆத்மி என்ன உத்தியை பயன்படுத்தியதோ, அதையே தற்போது பாஜக ஆம் ஆத்மிக்கு எதிராக செய்திருக்கிறது. 2013ல் கெஜ்ரிவால், யுபிஏ கால ஊழல்கள் மற்றும் காங்கிரஸின் வீழ்ச்சியில் முக்கிய பங்கு வகித்த நிர்பயா வழக்கு ஆகியவற்றைக் குறிப்பிட்டு பிரச்சாரம் செய்தார். 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கெஜ்ரிவால் பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, சிறைக்கும் சென்று வந்திருக்கிறார். கெஜ்ரிவால் மட்டுமல்ல டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் சிபிஐ, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டனர். இது ஆம் ஆத்மியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியது. அதோடு அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் உள்கட்டமைப்புக்காகவும், மக்களுக்காகவும் எதுவும் செய்யவில்லை. மாறாக தன்னுடைய வீட்டை ஷீஷ் மகால் போல், அதாவது கண்ணாடி அரண்மனை போல் மாற்றியிருக்கிறார். சுமார் 40 கோடிக்கு தனது வீட்டுக்குள்ளேயே அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறார் என்று குற்றம்சாட்டியது பாஜக. உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி மாநில பாஜக தலைவர் வரை பலரும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஏன்… காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இதையே சுட்டிக்காட்டி ஆம் ஆத்மிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். இது கெஜ்ரிவால் மீது இருந்த நம்பிக்கையை மக்களிடையே குறையச் செய்துள்ளது. பட்ஜெட் அறிவிப்பு! டெல்லி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, வெளியான மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வாக்காளர்களை கவரும் வகையில் வருமான வரிச் சலுகையை பாஜக அரசு அறிவித்தது. ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி பிரச்சாரத்தின் போது தனது உரையில் அடிக்கடி இதை சுட்டிக்காட்டி பேசினார். மிகவும் நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட் என்று அவர் கூறியது ஆம் ஆத்மியின் வீழ்ச்சிக்கும், பாஜகவின் வெற்றிக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது. காங்கிரஸ் vs ஆம் ஆத்மி இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் மாநில சட்டப்பேரவையில் தனி தனியே போட்டியிட்டு ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தற்போது சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இந்தியா கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்பதையே டெல்லி தேர்தல் முடிவுகள் காட்டுவதாக இக்கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மி மீது நம்பிக்கையை இழந்ததால் முக்கிய எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்ததும், ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் இருப்பது குறித்து முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து பேசியதும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி தோல்விக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. https://minnambalam.com/political-news/what-is-the-reason-for-aaps-defeat/
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை!! அதிமுக, பாஜக போட்டியிருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சமாவது யோசிக்கவேண்டாமா? ஈரோடு கிழக்கு : டெபாசிட்டை இழந்தது நாம் தமிழர் கட்சி 8 Feb 2025, 5:22 PM ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட்டை இழந்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குகள் இன்று (பிப்ரவரி 😎 எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதுமுதலே திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவர் பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். குறிப்பாக 7வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், சந்திர குமார் 55,849 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 12,028 வாக்குகள் பெற்று பின்னடைவில் இருந்தார். அதேபோன்று 15வது சுற்றில் சந்திரகுமார், 1,02,480 வாக்குகளை பெற்ற நிலையில், சீதாலட்சுமி 21,802 வாக்குகளை பெற்றார். மோசமான சாதனை! அவர் டெபாசிட் பெற மொத்தம் 25,673 வாக்குகள் தேவை என்ற நிலையில், மொத்தமுள்ள 17 வாக்கு சுற்றுகள் முடிவில் சீதாலட்சுமி வெறும் 23,810 வாக்குகளை மட்டுமே பெற்று தனது டெபாசிட்டை இழந்துள்ளார். அவருடன் சுயேச்சையாக போட்டியிட்ட 44 பேரும் தங்களது டெபாசிட்டை இழந்தனர். இதன்மூலம் 2021 சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூரில் தோல்வியடைந்த சீமானை தவிர்த்து, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யாருமே இதுவரை தேர்தலில் டெபாசிட் பெற்றதில்லை என்ற பரிதாப சாதனை தொடர்கிறது. அதே வேளையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், 90,629 வாக்குகள் வித்தியாசத்துடன் மொத்தம் 1,14,439 வாக்குகள் பெற்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளார். https://minnambalam.com/political-news/ntk-seetha-failed-to-get-deposit/
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. sudumanalNovember 4, 2023 அமெரிக்க ஜனநாயகத்தின் இழிநிலைகளில் ஒன்று இப்போ காஸா குறித்து ட்றம்ப் முன்மொழிகிற திட்டம். ஒருவரது பூர்வீக நாட்டை போரினாலும் ஆக்கிரமிப்பினாலும் திட்டமிட்ட குடியேற்றத்தாலும் தமதாக்கிக் கொள்ளலாம் என்ற காலனிய அதிகார மமதைதான் அது. அது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கா என்ற நாடே அப்படித்தான் உருவாகியது. கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என வேறும் முன்னுதாரணங்கள் இருக்கின்றன. காஸாவின் இடத்தில் அதன் பூர்வீக மக்களை துடைத்தழித்து இஸ்ரேலை அகலக் கால்பதிக்க வைப்பதும் அதே காலனிய முறைமைச் சிந்தனைதான். இன்னும் ஒருபடி போய் காஸாவின் கடல்சார் பகுதியை அண்டி அதை உல்லாசப்பிரயாண நிலமாக (மத்திய கிழக்கின் rivera வாக) ட்றம்பின் றியல் எஸ்ரேற் மருமகன் (யறெட் குஸ்னர்) இன் திட்டத்துக்கான நிலமாக மாற்ற முயற்சிக்கிற இழிநிலை அது. இது பல்கட்சி ஆட்சிமுறை ஜனநாயகத்தை செழிக்கப் பண்ணும் என்ற விதியை கேலிசெய்வதாக அமைகிறது. காஸா மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலமாம். வாழத் தகுதியில்லாத நிலமாம். துயர நிலமாம். அழிவுகளின் கூடாரமாம். அமெரிக்கக் குண்டுகளினால் இடிபாடாக்கப்பட்ட நிலத்தைப் பார்த்து அமெரிக்க சனாதிபதி இப்படியெல்லாம் சொல்கிறார். குண்டுகள் தானாக அமெரிக்க களஞ்சியத்திலிருந்து பறந்து வந்துதானே மக்களைக் கொன்றது! இவளவு இஸ்ரேலியக் குண்டுவீச்சுக்குள்ளும் மனிதவதைகளினுள்ளும் உணவு, நீர், மின்சாரம் என எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி வதைத்தும், கூட்டமாக ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு காஸாவுக்குள் துரத்தி அலையவிட்டும்கூட இன்னமும் அந்த மண்ணில் மக்கள் வாழ்கிறார்கள். வாழ்வை மீண்டும் கட்டியமைக்க அவர்கள் கட்டியமைக்கும் நம்பிக்கையோடு இடப்பெயர்வுகளிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எமது நிலம். இங்கிருந்து போக மாட்டோம் என்கிறார்கள். அது வாழத் தகுந்த நிலமா இல்லையா என்பதை அவர்கள் இரத்த சாட்சியாக உலகத்தின் முன் நிரூபித்திருக்கிறார்கள். அதை அமெரிக்காவோ இஸ்ரேலோ தீர்மானிப்பது ஜனநாயகமா என்ன. ஐநா உட்பட உலகின் பெரும்பான்மை நாடுகளும் சமூகப் புத்திஜீவிகளும் இந்த பழைய காலனிய ஒழுங்கின் மீள்வரவை எதிர்த்து கருத்துச் சொல்லியபடி இருக்கிறார்கள். ஜேர்டானும் எகிப்தும் இந்த 2 மில்லியன் பலஸ்தீன மக்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ட்றம் கட்டளையிடுகிறார். அந் நாடுகள் மறுத்திருக்கின்றன. நெத்தன்யாகுவோ சவூதி அரேபியாவிடம் பெரும் தரிசு நிலங்கள் இருப்பதாகவும் அங்கு பலஸ்தீன நாட்டை அமைத்துக் கொள்ளலாம் என இன்னொரு கோமளித்தனத்தை முன்வைக்கிறார். இவ்வாறு ட்றம்ப் இன் அறிவித்தல்கள் வெளிவந்தபடி இருக்கின்றன. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி தன்னும் இதற்கு எதிராக மூச்சு விடவில்லை. இது ஏன்?. பல்கட்சி ஆட்சிமுறை என்பது ஜனநாயகக் கட்டமைப்பில் அவசியமான ஒரு முறைமைதான். அது deep state நிலவுகிற அமெரிக்கா போன்ற நாடுகளில் எதையும் பிடுங்காது. ஏனெனில் அந்த deep state தான் வெளிநாட்டுக் கொள்கையை மாறாமல் வைத்திருக்கவோ அதன்வழியில் இற்றைப்படுத்தவோ செய்கிறது. அரசாங்கங்கள் அல்ல. அது பலம்படைத்த உளவு நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள், சியோனிச லொபிகள், இலுமினாட்டிகள், இனமேலாதிக்க புத்திசீவிகள் போன்றவர்களால் state என்பது deep state வடிவம் எடுக்கிறது. அமெரிக்கா உலகம் பூராக நடத்திய போர்கள் இரு கட்சிகளாலும் நடத்தப்பட்டன. பல கட்சி ஆட்சிமுறையின் பன்மைத்துவம் என்பதை அந்த அரசு வடிவம் பொய்மையாக்கிவிடுகிறது. சுவிஸ் போன்ற நாடுகளில் பல்கட்சி ஆட்சிமுறை மேன்மைப்பட்ட நிலையில் இருப்பதற்குக் காரணம் இந்த deep state அற்ற தன்மைதான். 7 பேர் கொண்ட உயர் சபைதான் சுவிஸை ஆள்கிறது. அதுவும் ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு தலைவராக தேர்வு அடிப்படையில் வருகிறார்கள். மக்களுக்கான நேரடி ஜனநாயகம் கொண்டதாகவும் இருக்கிறது. சில விமர்சனங்கள் இருக்கிறபோதும் அந்த முறைமை பயனளிக்கும் வகையிலேயே செயற்படுகிறது. இந்த deep state முறைமைதான் இருபெரும் வல்லரசாக இருந்த அமெரிக்கா சோவியத் யூனியனுக்கு இடையில் சமாதானம் என்பதை நிலைநாட்டிய கெனடியைக் கொன்றொழித்தது. 1962 இல் சோவியத் யூனியனின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் துருக்கியில் அமெரிக்கா நிறுவிய (அணுவாயுதம் உட்பட்ட) தளத்துக்கு எதிர்வினையாக சோவியத் யூனியன் கியூபாவில் அணுவாயுத்தை நிறுவியது. அப்போது அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க சிஐஏ கெனடியை வற்புறுத்தியோது அதை அவர் மறுத்தார். சமாதான முயற்சியை முன்வைத்தார். அவரும் குருச்சேவ் உம் பேசித் தீர்த்துக் கொண்டார்கள். துருக்கியிலிருந்தும் கியூபாவிலிருந்தும் அணுவாயுதங்கள் திரும்பப் பெறப்பட்டன. அது அமெரிக்க deep state இனை மீறிய செயலாக அமைந்ததால் அவர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. உலகம் முழுவதுமான ஆட்சிக் கவிழ்ப்புகள், போர்கள், தலைவர்களை கொலை செய்தல் என இயங்குகிற deep state இன் முக்கிய தூண்கள் சிஐஏ உம் எப்.பி.ஐ உம் ஆகும். இப்பே ட்றம்பின் வருகைக்குப் பின் ஒரு சுவாரசியமான முரண் எழுந்துள்ளது. ட்றம் deep state க்கு எதிரானவராக இருக்கிறார். state என்ற வடிவத்தை அவர் பேண விரும்புகிறார். அதேநேரம் ஜனாதிபதிக்கான அதிகாரத்தை முழு அளவில் தனது கையில் மட்டுமே வைத்திருக்க விரும்புகிறார். சிஐஏ இலிருந்து பலரை வேலைநீக்கம் செய்திருக்கிறார். அந்த கட்டமைப்பினுள் ஊழல் நிலவுவதாகவும் பெருமளவு நிதியை அது விழுங்குகிறது என்றும் வெளிப்படையாக குற்றம் சுமத்துகிறார். தனது முதலாவது ஆட்சிக் காலத்தின்போது தன்னை சுயாதீனமாக இயங்க விடாமல் செய்தது என்கிறார். இருந்தபோதும் அதையும் மீறி இந்த deep state வடிவத்துக்கு எதிராக அவரது முதல் ஆட்சிக்காலத்திலும் இருந்திருக்கிறார். அதனால் அவர் போர் எதையும் செய்யவில்லை. புட்டினோடு உறவாக இருந்தார். வடகொரியாவுக்கு விஜயம் செய்தார். இம்முறை ட்றம் கையில் எடுத்திருப்பது பொருளாதாரப் போரைத்தான். சீனாவினதும் ப்ரிக்ஸ் அமைப்பினதும் வளர்ச்சி அமெரிக்க பொருளாதாரத்தை சாய்த்துவிடலாம் என்ற அச்சம் அது. மீண்டும் அமெரிக்காவை மேல்நிலையில் நிறுத்துவேன் என்று சபதம் எடுத்திருக்கிறார். இந்தப் பொருளாதாரப் போர் அரசியல் போர்களில்தான் முடியும் என பொருளாதார நிபுணரும் அரசியல் விஞ்ஞானியுமான ஜெப்ரி சக்ஸ் கூறுகிறார். சீனாவின் பொருளாதாரத்தை வீழ்த்த ட்றம்ப் தாய்வானை இன்னொரு உக்ரைனாக மாற்றும் நிலைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. deep state இனை மறுத்து, அதற்கு பதிலீடாக தனிப்பெரும் தலைவராக தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து ட்றம்ப் செயற்படுவதும்கூட ஒன்றும் ஜனநாயகப் பெறுமதியைத் தரப்போவதில்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தான். பொருளாதாரப் போர் அரசியல் போராக பரிணமிக்கும நிலைக்கு சாத்தியம் இருப்பதால், deep state முறைமைக்கும் ட்றம்ப் க்குமுள்ள முரண்பாடுகள் புஸ்வாணமாகியும் போகலாம். கனடா, மெக்சிக்கோ, சீனா என தொடங்கும் மோசமான வரிவிதிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தையும் வந்தடையலாம் என ஏற்கனவே தயார்ப்படுத்தல்கள் ஆரம்பமாகிவிட்டன. டென்மார்க்கின் கிர்ின்லாண்ட் இனை வாங்க அல்லது அழுத்தம் கொடுத்து தனதாக்க ட்றம் புற்பட்டிருக்கிறார். பனாமாக் கால்வாயை மீள எடுக்கப் போகிறோம் என்கிறார். யமேய்க்கா BRICS இல் சேர தடைவிதிக்கிறார். தென்னாபிரிக்காவில் காணிச் சீர்திருத்த சட்டத்தை பயங்கரமானது என வர்ணித்து அந்த அரசுக்கு எச்சரிக்கை விடுகிறார். ட்றம்பின் வலதுகையும் தென்னாபிரிக்காவில் பிறந்தவருமான எலான் மஸ்க் இந்தச் சட்டத்தை இனவெறிச்சட்டம் என கேலிக்குரிய வியாக்கியானம் கொடுத்திருக்கிறார். 7.7 வீத வெள்ளையர்கள் தென் ஆபிரிக்காவின் 78 வீதமான விவசாய நிலங்களை சொந்தமாகக் கொண்டிருக்கின்றனர். நெல்சன் மண்டேலா சாதித்த அரசியல் விடுதலை காலத்திலிருந்து இன்றுவரை காணி மீள் பகிர்தல் என்பதை எந்த தென்னாபிரிக்க அரசும் சாத்தியமாக்க முடியாமல் திண்டாடுகிறது. அந்தளவுக்கு வெள்ளையின அதிகாரம் தென்னாபிரிக்க அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்நிலையில் இப்போ தென்னாபிரிக்க அரசு கொண்டுவந்திருக்கிற காணிச் சீர்திருத்தச் சட்டத்தை இனவெறிச் சட்டம் என்று மஸ்க் சொல்வதையெல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. https://sudumanal.com/2025/02/07/கேட்டுத்-தொலைக்க-வேண்டிய/
-
DeepSeek அதிரடி வெற்றியும் ஆயிரம் கேள்விகளும்
DeepSeek அதிரடி வெற்றியும் ஆயிரம் கேள்விகளும் பிப்ரவரி 7, 2025 -சைபர் சிம்மன் உலகம் முழுவதையும் கிழக்கு நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சீனாவின் ‘டீப்சீக்’ செயலி. அதோடு, செயற்கை நுண்ணறிவுத் துறையின் (AI – ஏஐ) எதிர்காலம் தொடர்பான விவாதத்தில் சீனாவை மையத்துக்குக் கொண்டுவந்துள்ளது. டீப்சீக் (DeepSeek) ஏற்படுத்திய அதிர்வலைகள் பல மட்டத்தில் தொடர்கின்றன. கூடவே, பலவிதமான கேள்விகளும் தொடரவே செய்கின்றன! அறிமுகமான வேகத்தில் டீப்சீக் பெற்றுள்ள வெற்றி, ஏஐ துறையில், குறிப்பாக ஏஐ திறன் கொண்ட சாட்பாட்கள் (Chatbots) பிரிவில் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சரியான போட்டியாகவும் அதிர்ச்சி வைத்தியமாகவும் பேசப்படுகிறது. அமெரிக்கப் பங்குச்சந்தையில் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளுக்கு ஏற்பட்ட இரத்தக்களரி நிலையில் இருந்தே டீப்சீக்கின் தாக்கத்தை உணரலாம். மேலும், ‘அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான எச்சரிக்கை மணி இது’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருப்பதில் இருந்து, இதன் அரசியல் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளலாம். சீனப் போட்டி: ஏஐ துறையில் சீனாவின் போட்டி தொடர்பான விவாதங்கள் புதிதல்ல என்றாலும், அதிகம் அறியப்படாத சீன புத்தாக்க நிறுவனமான டீப்சீக் தனது ‘ஆர்1’ சாட்பாட் (R1 Chatbot) மூலம், அமெரிக்க ஏஐ ஆதிக்கத்துக்கு எதிரான சவாலை உறுதிசெய்துள்ளது, முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அத்துடன், சராசரிப் பயனாளிகள் முதல் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் வரை பலதரப்பினரும் டீப்சீக் மூலம் சீனாவின் கை ஓங்குவதற்கான வாய்ப்பு பற்றிப் பரபரப்பாகப் பேசிவருகின்றனர். ‘சாட்ஜிபிடி’ (ChatGPT), ‘கிளாடு’ (Claude), ‘கூகுள் ஜெமினி’ (Google Gemini), ‘கிராக்’ போன்ற இன்னொரு ஏஐ சாட்பாட் தான் என்றாலும், டீப்சீக் வேறு எந்த ஏஐ சாட்பாட்டும் பெறாத கவனத்தைப் பெற்றுள்ளது. தடையும் செலவும்! இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஏஐ ஆய்வில் சீனா முன்னிலை பெற்றுவிடக் கூடாது என்னும் நோக்கத்தில், அந்நாட்டுக்கு அதிதிறன் வாய்ந்த ஏஐ சிப்களை விற்பனை செய்ய அமெரிக்கா தடை விதித்திருந்தது. ஏஐ செயலிகளை உருவாக்க வேண்டும் என்றால், பெரும் ஆற்றல் கொண்ட சிப்கள் அவசியம் எனக் கருதப்படுகிறது. இத்தகைய சிப் தயாரிப்பில் அமெரிக்காவின் என்விடியா (NVIDIA) நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. ஆனால், இந்தத் தடையை மீறி, முன்னணி ஏஐ சாட்பாட்களுக்கு நிகரான சாட்பாட்டை டீப்சீக் சத்தம் இல்லாமல் உருவாக்கிக் காண்பித்துள்ளது. இரண்டாவது காரணம், டீப்சீக் உருவாக ஆன செலவு. அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பில்லியன் டொலர் கணக்கில் முதலீடு பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, டீப்சீக் வெறும் 5.6 மில்லியன் டொலரில் (இந்திய ரூ.48.77 கோடியில்) சாட்பாட்டை உருவாக்கியிருக்கிறது. ஏஐ சாட்பாட்களை இயக்கும் மொழி மாதிரிகளை உருவாக்கவும், அவற்றுக்குப் பயிற்சி அளிக்கவும் பெரும் பொருள்செலவு தேவைப்படும் எனக் கருதப்படும் நிலையில், சொற்ப முதலீட்டில் டீப்சீக் தயாராகி உள்ளது. ஆனால், அதன் ஆற்றலும் செயல்பாடும் சாட்ஜிபிடிக்கே சவால் விடுகிறது. ஏஐ உலகின் தற்போதைய நிலையைக் குலைக்க இந்த இரண்டு காரணங்களுமே போதுமானது. வன்பொருள் தடை, பெரும் முதலீடு தேவை ஆகிய இரண்டு சவால்களையுமே, தொழில்நுட்பம் சார்ந்த புதுமையான அணுகுமுறையால் டீப்சீக் வென்றெடுத்திருக்கிறது. டீப்சீக் நிறுவனர் லியான் வென்பென் (Liang Wenfeng), தன்வசம் இருந்த பழைய ஆற்றல் குறைந்த என்விடியா சிப்களைக் கொண்டே, ஏஐ சாட்பாட் செயல்பாட்டுக்குத் தேவையான செயல்திறனைச் சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார். அதேபோல, பயிற்சி செயல்பாடுகளுக்கும் தொழில்நுட்பப் புதுமையாக்கத்தின் மூலம் செலவைப் பல மடங்கு குறைத்து, முதலீடு ஒரு பொருட்டல்ல என உணர்த்தியிருக்கிறார். பொதுவெளித் தன்மை: பொதுவாக, புதிய தொழில்நுட்பச் சேவைகளின் செயல்பாடு ரகசியமாக வைக்கப்படும். ஆனால் டீப்சீக், தனது செயல்முறை தொடர்பான நுட்பங்களை மிக விரிவாக ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டு, சாட்பாட்டையும் பொதுவெளியில் ஓபன் சோர்ஸ் (Open Source) தன்மையில் வெளியிட்டுள்ளது. அத்துடன், டீப்சீக் சாட்பாட்டை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து, தங்கள் விருப்பம் போலப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்பாட் நுட்பங்களைப் பயன்படுத்தப் பலவிதமான கட்டணம் கட்டப்பட வேண்டிய நிலையில், டீப்சீக் இலவசமாகக் கிடைப்பது கவனிக்கத்தக்கது. தணிக்கை சர்ச்சை: சாட்ஜிபிடியுடனான ஒப்பீட்டில் டீப்சீக் அதிக மதிப்பெண்கள் பெறக்கூடியதாக இருந்தாலும், சர்ச்சைக்குரிய தலைப்புகள் தொடர்பான கேள்விகளுக்கான அதன் பதில்கள் அல்லது பதில் அற்ற தன்மை கவலையளிக்கிறது. உதாரணமாக, சீனாவின் டியான்மென் சதுக்கம் போராட்டம் தொடர்பான கேள்விக்கு இந்த சாட்பாட் பதில் அளிக்காமல் நழுவிச்செல்கிறது. இதேபோலவே, சீனா தொடர்பான எந்த சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கும் இதன் பதில்கள் தணிக்கைக்கு உள்ளாகியிருப்பதைப் புரிந்துகொள்ளலாம். இந்தியாவின் அருணாசலப் பிரதேசம் போன்ற கேள்விகளுக்கும் டீப்சீக் சேவையின் பதில்கள் இதே வகையில் அமைந்துள்ளன. இணைய உலகில், சீனாவின் ‘ஃபயர்வால்’ தடுப்புகள் நன்கு அறியப்பட்டவை என்பதால், அதேபோன்ற தணிக்கை கொண்ட டீப்சீக் எப்படிச் சிறந்த சேவையாக இருக்க முடியும் என்னும் கேள்வி எழுகிறது. அதேவேளையில், எல்லா சாட்பாட்களுமே பலவித சர்ச்சைக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி வம்பில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கப் பயிற்சி அளிக்கப்பட்டவைதான். எனவே, தகவல் தணிக்கை என்பது சாட்பாட்களின் பொதுவான பிரச்சினை. ஆனால், டீப்சீக்கைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும்போது, மற்ற ஏஐ செயலிகள் அளவுக்குத் தணிக்கை செய்யப்படவில்லை என்கிற கருத்தும் இருக்கிறது. அதேபோல சீனா சார்பில் டீப்சீக் தகவல்களைத் திரட்டலாம் எனும் தனியுரிமை சார்ந்த அச்சமும் இருக்கிறது. இந்தக் காரணத்தால் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் டீப்சீக் பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கிறது. சாட்பாட்கள் உள்ளிட்ட ஏஐ சேவைகள் திரட்டும் தகவல்கள் தொடர்பான தனியுரிமைப் பிரச்சினை எல்லா சேவைகளுக்கும் பொதுவானதே. சீன செயலிகள் விஷயத்தில் இது கூடுதலாக இருப்பதாகக் கருதலாம். இதனிடையே டீப்சீக் பயிற்சிக்காகத் தனது மொழிமாதிரி நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது; இது காப்புரிமை மீறல் என்றும் ஓபன் ஏஐ (Open AI) குற்றம்சாட்டியுள்ளது. சாட்ஜிபிடி பயிற்சிக்கான தகவல் திரட்டலில், காப்புரிமை மீறல் புகார்களுக்கு இலக்காகியிருக்கும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் இந்தக் குற்றச்சாட்டு முரண்நகை என்றாலும், ஏஐ பயிற்சியில் காப்புரிமை தொடர்பான கேள்விகளின் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது. இந்தியாவுக்கு வாய்ப்பு: டீப்சீக் தொடர்பான விவாதங்கள் இப்படிப் பலவிதமாக அமைந்தாலும், ஏஐ தளத்தில் இது ஓர் எச்சரிக்கை மணி என்னும் கருத்தை மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒருவிதமான செய்தியை உணர்த்தும் எச்சரிக்கை மணி. உதாரணமாக, ஏஐ சேவைகள் உருவாக்கத்துக்குப் பெரும் தொழில்நுட்ப ஆற்றலும், மாபெரும் முதலீடும் தேவை என்னும் எண்ணத்தை இது தகர்த்திருக்கிறது. ஏஐ சந்தையை இது அகலத் திறந்திருக்கிறது. சொற்பமான முதலீட்டில் சீன நிறுவனத்தால், வெற்றிகரமான ஏஐ சாட்பாட்டை உருவாக்க முடியும் என்றால், மற்ற நாடுகளுக்கும் இது சாத்தியமே என்னும் நம்பிக்கையையும் அளிக்கிறது. குறிப்பாக, இந்தியா கவனிக்க வேண்டிய விஷயம் இது. ஆனால், ஏஐ சேவைகள் செயலாக்கம் இன்னமும் மின்சார வடிவில் பெரும் ஆற்றலைக் கோருவதாகவே இருக்கிறது. இது ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்கமும் கணிசமானது. இந்த அம்சத்தில் டீப்சீக் எப்படி என்பது தெரியவில்லை. ஏஐ சேவைகளை இயக்கும் தரவு மையங்களின் அகோர மின்பசி நிச்சயம் ஒரு முக்கியப் பிரச்சினை. ஆக, ஏஐ ஆய்வு – சேவைகள் தொடர்பான பிரச்சினைகள் மீது டீப்சீக் புதிய வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லலாம்! -இந்து தமிழ் திசை 2025.02. https://chakkaram.com/2025/02/07/deepseek-அதிரடி-வெற்றியும்-ஆயிரம/
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
ஈரோடு கிழக்கு : நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம்… திமுக வேட்பாளர் காட்டம்! 8 Feb 2025, 3:00 PM நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம் என ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ள திமுக வேட்பாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்ரவரி 08) காலை முதல் நடைபெற்று வருகிறது. தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து, திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ஒன்பது சுற்றுகள் முடிவில் திமுகவின் சந்திரகுமார் 61,880 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 13,456 வாக்குகளும் பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 48,424 வாக்குகளாக உள்ளது. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் சென்னை அண்ணா அறிவாலயத்திலும், ஈரோடு கிழக்கு தொகுதியிலும் ’பெரியார் வாழ்க’ என கோஷமிட்டு திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். திமுக முதலிடத்தில் உள்ளது! இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேசுகையில், “இந்த நேரத்தில் எங்கள் தலைவர் ஸ்டாலின் சொன்னதையே சொல்கிறேன். ‘உதிரிகளை களத்தில் இறக்கியிருக்கிறார்கள்” என்று அவர் சொன்னார். அதுதான் நடந்துள்ளது. எங்களுக்கு எதிரியே இல்லை என்று நான் நினைக்கவில்லை. தேர்தலில் 46 பேர் போட்டியிட்டோம். அதில் முதல் கட்சியாக பெரும் வாக்கு வித்தியாசத்தில் திமுக முதலிடத்தில் உள்ளது. பிரதான எதிர்க்கட்சி ஒன்று தங்களது கட்சியில் உள்ளவர்களுக்கு சில கட்டளைகள் விதித்ததாக கருதுகிறோம். அதேநேரத்தில் நோட்டாவுக்கு வாக்குகள் அதிகரித்ததால் தேர்தலை புறக்கணித்துள்ளார்கள் என்று சொல்ல முடியாது. திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்தது என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. பிரதான எதிர்க்கட்சிகள் இல்லாத போது, நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர்; திமுக யாரைக் கண்டும் அஞ்சியதில்லை. அஞ்சப்போவதும் இல்லை” என்று சந்திரகுமார் தெரிவித்தார். https://minnambalam.com/political-news/ntk-gets-accidental-votes-dmk-attack/
-
டெல்லி தேர்தல்… அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி!
டெல்லி தேர்தல்… அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி! 8 Feb 2025, 3:24 PM புது டெல்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (பிப்ரவரி 08) தோல்வியடைந்தார். டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. பாஜக 43 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, 2 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது பின்னடைவை சந்தித்தார். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதும், பின்னடைவை சந்திப்பதுமாக இருந்தார். இறுதியில், 14-வது சுற்று முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் 25,999 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாகிப் சிங், 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் 30,088 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். டெல்லியில் தொடர்ந்து இரண்டு முறை முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், தோல்வி அடைந்திருப்பது அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கெஜ்ரிவால் தோல்வி தேசிய அளவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்! தோல்வியை அடுத்து கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “மக்களின் தீர்ப்பை நாங்கள் மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். இந்த வெற்றிக்காக பாஜகவை வாழ்த்துகிறேன். மேலும் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்புத் துறையில் நாங்கள் நிறைய பணிகளைச் செய்துள்ளோம். ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக மட்டுமல்லாமல், மக்களிடையே இருந்து அவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வோம்” என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/political-news/arvind-kejriwal-lost-delhi-assembly-election/
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@suvy ஐயா, நீங்கள் உங்கள் உடல்நிலையில் கவனம் எடுங்கள். மற்றையவை எல்லாம் தேக ஆரோக்கியத்திற்குப் பின்னர்தான்.🙏🏽
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கடையை இழுத்துப் பூட்டலாம் என்று நினைக்கின்றேன்🙃
-
வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மாதம் ‘ஜனவரி’
வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மாதம் ‘ஜனவரி’ February 8, 2025 12:00 pm உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவானது. இந்நிலையில் 2025 அந்த சாதனையை முறியடிக்க உள்ளது. ஆண்டில் தொடக்கத்திலேயே அதற்கான முன்னறிவிப்பாக ஜனவரி மாதத்தின் சாதனை அமைந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் நிதியுதவி பெற்ற கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற ஆய்வு நிறுவனம்(C3S) நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி ஜனவரி 2025 உலக வரலாற்றில் மிக வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளது. 2025 ஜனவரியில் உலக வெப்பநிலையை தணிக்கக் கூடிய ‘லா நினோ’ வளிமண்டலப் போக்கு நிலவினாலும், புவியின் வெப்பநிலை இதுவரை எந்தவொரு ஜனவரி மாதமும் இல்லாத அளவில் பதிவாகியுள்ளது 2025 ஜனவரி மாதத்தில் சராசரி வெப்பநிலை, தொழில்துறை புரட்சிக்கு முன் (1850 க்கு முன்) பூமியின் சராசரி வெப்பநிலையை விட 1.75 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. 1991-2000 ஜனவரி சராசரி வெப்பநிலையை விட 2025 ஜனவரி சராசரி வெப்பநிலை 0.79 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. ஆர்க்டிக் கடல் பனி ஜனவரி மாதத்திற்கான மிகக் குறைந்த அளவை எட்டியது. இது சராசரியை விட 6% குறைவாகும். “ஜனவரி 2025 விசித்திரனமான மாதம்” என்று C3S இன் துணை இயக்குநர் சமந்தா பர்கெஸ் தெரிவித்துள்ளார்.. https://oruvan.com/january-is-the-warmest-month-in-history/
-
தென்னாபிரிக்கா, பாக்கிஸ்தானுக்கு தூதுவர்களாக முன்னாள் கடற்படை தளபதிகள் ;வெளிநாட்டு தூதரகங்களிற்கு அரசியல் நியமனங்கள்
தூதர்களாக அரசியல் நியமனங்கள் – கடுமையாக எதிர்க்கும் இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கம் February 8, 2025 10:06 am உலகின் முக்கிய நாடுகளுக்கான தூதர்களாக அரசியல் நியமனங்களை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கம் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை வெளிநாட்டு சேவைக்குள் அனுபவம் வாய்ந்த, தொழில்முறை வெளிநாட்டு சேவை அதிகாரிகள் இருக்கும்போது, இராஜதந்திர சேவைக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் வழங்கப்படுவதை கண்டித்து இலங்கை வெளியுறவு சேவை சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கம் என்பது நாட்டின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்த சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகளைக் கொண்ட ஒரு சேவை என்பதை அந்த அறிக்கை நினைவு கூர்ந்தது. இதேவேளை, தொழில்முறை வெளியுறவு சேவை அதிகாரிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அரசியல் நியமனங்களை மேற்கொள்வதன் மூலம் இராஜதந்திர சேவை குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு தூதரகங்களுக்கு அரசியல் நியமனங்களை மேற்கொள்வது, தேர்தலின் போது அரசாங்கம் முன்வைத்த கொள்கை அறிக்கைக்கு முரணானது என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தலின் போது அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கொள்கை அறிக்கையில், தொழில் இராஜதந்திரிகளின் தொழில்முறை சிறப்பை அடிப்படையாகக் கொண்ட புள்ளிகள் முறையின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இராஜதந்திர சேவைக்கான அரசியல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடலை நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரிடம் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இன்றுவரை அத்தகைய கலந்துரையாடலை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://oruvan.com/sri-lanka-foreign-service-association-strongly-opposes-political-appointments-as-ambassadors/
-
மேற்குலக நாடுகளைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த போரை முடிவுக்குக் கொண்டுவந்தார்!
மேற்குலக நாடுகளைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த போரை முடிவுக்குக் கொண்டுவந்தார்! மேற்குலகைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த போரை முடிப்பதற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கினார் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில், மேற்குலக நாடுகளைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த ராஜபக்ச போரை முடிவுக்குக் கொண்டுவந்தார். போர் முடிவடைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வந்தனர். அமெரிக்காவில் இருந்தும் குழுவொன்று வந்தது. போரை நிறுத்துமாறு மகிந்த ராஜபக்சவிடம் அவர்கள் வலியுறுத்தினர். ஏனெனில் பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல முயற்சித்தனர். அவர்களின் கோரிக்கைக்குச் செவிமடுக்காமல் மகிந்த போரை முடிவுக்குக் கொண்டுவந்தார். 1987 வடமராட்சி சமரின்போது இந்தியா பருப்புப் போட்டவேளை, ஜே.ஆர். ஜயவர்தன போரை நிறுத்தினார். அன்று போரை நிறுத்தி இருக்காவிட்டால் 4, 5 நாட்களில் போர் முடிந்திருக்கும். வெளிநாடுகளுக்குப் பணிந்து அன்று போரை நிறுத்தினர். மகிந்த ராஜபக்ச வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை. மேற்குலகைப் பகைத்துக்கொண்டு போரை முடிக்க அரசியல் தலைமைத்துவத்தை வழங்கினார். அதனால்தான் மகிந்தவுடன் மேற்குலகம் பகையாக உள்ளது. தமிழ்ப் பிரிவினைவாத டயஸ்போராக்களும் அவர்மீது பகை வைத்துள்ளனர். இதனால் மகிந்தவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=311429
-
பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்; வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசு – சீமான் கண்டனம்
பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்; வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசு – சீமான் கண்டனம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நால்வர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், ஆத்திரத்தையும் ஏற்படுத்திய நிலையில், அந்த வேதனை செய்தி மறைவதற்குள் மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி சிறுமிக்கு தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல் எனும் செய்தி இதயத்தை நொறுங்கச் செய்கிறது. நாள்தோறும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத்தவறி, சட்டம் ஒழுங்கை முற்றுமுழுதாக சீரழித்துள்ள தி.மு.க. அரசின் நிர்வாகத் திறனற்ற அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்குழந்தைகள் முதல் பல்கலைக்கழக மாணவி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் கொடுமைகள் வார்த்தைகளால் சொல்லிமாளக்கூடியதல்ல. அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி கலைஞர் பேருந்து நிலையம் வரையில் பெண்கள் எங்குமே பாதுகாப்பாகச் செல்ல முடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் கொடுஞ்சூழல் நிலவுகிறது.கடந்த 23.12.24 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை, 01.02.25 அன்று சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உதவி கேட்டு வந்த 13 வயது சிறுமிக்கு மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் பாலியல் தொல்லை, 14.01.25 அன்று மதுரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, 18.01.25 அன்று கரூரில் பள்ளி மாணவிக்கு காவலர் பாலியல் தொல்லை, 21.01.25 அன்று திருப்பூரில் அரசுப்பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை, 24.01.25 அன்று திண்டுக்கல் நத்தம் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை, 18.01.25 அன்று தென்காசி வீராணத்தில் காவலர்களால் இளம்பெண் பாலியல் துன்புறுத்தல், 25.01.25 அன்று கிழக்கு கடற்கரைச் சாலையில் மகிழுந்தில் பயணித்த பெண்களை வீடுவரை விரட்டி சென்ற கொடுமை, 03.02.25 சேலம் தலைவாசலில் பள்ளி மாணவிக்கு முதியவர் பாலியல் தொல்லை, 05.02.25 கிருஷ்ணகிரி பர்கூர் அருகே பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை, 05.02.25 அன்று கள்ளக்குறிச்சியில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தூண்டுதலில் பெண் கிராம நிர்வாக அலுவலர் முகத்தில் சாணியை வீசி கீழே தள்ளி கொடுந்தாக்குதல், 05.02.25 அன்று கலைஞர் பேருந்து நிலையத்தில் நின்ற 19 வயது பெண் பாலியல் துன்புறுத்தல், 05.02.25 அன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 8 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, 06.02.25 அன்று வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை, 06.02.25 அன்று மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி 4-ம் வகுப்பு சிறுமிக்கு ஆசிரியர், தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் தொல்லை, 06.02.25 அன்று சேலம் அரசு பள்ளி மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை, 18.11.24 அன்று திருவள்ளூர் பள்ளிப்பட்டு அருகே 3-ம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை, 21.11.24 அன்று நாகர்கோவிலில் பள்ளி மாணவிக்கு அரசு பேருந்தில் நடத்துநர் பாலியல் தொல்லை, 07.12.24 அன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை, 21.12.24 அன்று சங்கரன்கோவிலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, 26.12.24 அன்று ராஜபாளையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை என தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பெருங்கொடுமையாகும். கடந்த 31.12.22 அன்று சென்னை, விருகம்பாக்கத்தில் கனிமொழி பங்கேற்ற தி.மு.க. நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இருந்த பெண் காவலர் ஒருவருக்கு தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்தது முதல் நேற்று முன்தினம் (05.02.25) தமிழ்நாடு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் கல்பனா நாயக் அவர்களே தம்மை கொல்ல சதி நடப்பதாக புகார் கூறியது வரை பெண் காவலர்களுக்கே பாதுகாப்பற்ற மிக மோசமான சூழல் தமிழ்நாட்டில் உள்ள நிலையில் தி.மு.க. ஆட்சியில் சாதாரண பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? வீட்டை விட்டு வெளியில் சென்ற பெண் குழந்தைகள் மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா? என்று பெற்றோர் ஒவ்வொரு நாளும் பரிதவிக்கும் கொடுமையான நிலைக்கு தமிழ்நாட்டு மக்களைத் தள்ளிவிட்டுள்ளது தி.மு.க. அரசு. பெண்களுக்கு எதிரான இத்தனை கொடுமைகளையும் தடுக்கத் தவறி கைகட்டி வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசு, பெண் சுதந்திரம், பெண்கள் பாதுகாப்பில் முதலிடம் என்றெல்லாம் பேசுவதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்றே இல்லாமலாக்கி, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலமாக மாற்றி இருப்பதுதான் தி.மு.க. அரசின் நான்கு ஆண்டு காலச் சாதனையா? இதுதான் உலகம் வியக்கும் திராவிட மாடல் ஆட்சியா? பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் வேளையில் காவல்துறையை தனது நேரடிக்கட்டுபாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்படும் பள்ளிக் குழந்தைகள் பற்றி துளியும் கவலையின்றி, திருநெல்வேலியில் அல்வாவை ரசித்து ருசித்து சாப்பிட்டுகொண்டிருக்கிறார் என்பதுதான் வேதனையின் உச்சம். இனியும் இத்தகைய மெத்தனப்போக்கு தொடர்ந்தால் பெண்களும், குழந்தைகளும், பெற்றோரும் அல்லற்பட்டு ஆற்றாது சிந்தும் வேதனைக் கண்ணீரின் வெப்பத்தில் தி.மு.க. ஆட்சி அழிவது உறுதி! ஆகவே, போச்சம்பள்ளி, மணப்பாரப்பட்டி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெற்ற மகள்போல போற்றிப் பாதுகாக்க வேண்டிய பிஞ்சு குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிச் சிதைக்கும் கொடூரர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மிகக்கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற கொடுமைகள் இனியும் தொடராவண்ணம் பெண்கள், குழந்தைகளைப் பாதுகாத்திட சட்டத்தை கடுமையாக்கிவிட வேண்டுமெனவும், தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=311356
-
இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கோரி இந்திய நாடாளுமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!
இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கோரி இந்திய நாடாளுமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்! இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கோரி, இந்திய நாடாளுமன்றத்துக்கு முன்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அந்த நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மீனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், கைதுகள் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, மீனவர் பிரச்சினையை ஒரு பிராந்திய பிரச்சினையாக கருதக் கூடாது எனவும், இது ஒரு தேசிய பிரச்சினையாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இந்திய மீனவர்கள், கைது செய்யப்பட்டு உயிரிழப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள போதிலும் மத்திய அரசாங்கம் அதற்கு தீர்வை பெற்றுக் கொடுக்க தவறியுள்ளதாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். இதேவேளை, மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். https://www.hirunews.lk/tamil/396138/இந்திய-இலங்கை-மீனவர்-பிரச்சினைக்கு-நிரந்த-தீர்வு-கோரி-இந்திய-நாடாளுமன்றத்துக்கு-முன்பாக-ஆர்ப்பாட்டம்
-
இஸ்ரேலின் 3 கைதிகளுக்காக 183 பலஸ்தீன கைதிகள் விடுதலை!
இஸ்ரேலின் 3 கைதிகளுக்காக 183 பலஸ்தீன கைதிகள் விடுதலை! இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது பகுதியாக, 183 பலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக, மூன்று இஸ்ரேலிய கைதிகள் காசாவில் விடுவிக்கப்பட உள்ளனர். மனிதாபிமான உதவிகள் மற்றும் பிற முக்கிய பொருட்கள் காசாவிற்குள் கொண்டு செல்வதைத் தடுப்பதன் மூலம் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து கைதிகள் 5 ஆவது தடவையாக விடுவிக்கப்படவுள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் 12,000க்கும் மேற்பட்ட சடலங்களில் சில இஸ்ரேலிய கைதிகளின் எச்சங்கள் இருப்பதால், அவற்றை ஒப்படைக்க முடியாமல் போகலாம் என்று ஹமாஸ் கூறியுள்ளது. மேலும் இஸ்ரேல் பளு அதிகமான உபகரணங்கள் என்கிளேவ் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கிறது என்று காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. 6.75 பில்லியன் டொலர் மதிப்புள்ள குண்டுகள், வழிகாட்டுதல் கருவிகள் மற்றும் உருகிகள், 660 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஹெல்ஃபயர் ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்வதில் அமெரிக்க வெளியுறவுத்துறை கையெழுத்திட்டுள்ளது https://www.hirunews.lk/tamil/396124/இஸ்ரேலின்-3-கைதிகளுக்காக-183-பலஸ்தீன-கைதிகள்-விடுதலை
-
அரசியல் பிரச்சினையைத் தீர்க்காமல் ஒருபோதும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது - சத்தியலிங்கம் எம்.பி
அரசியல் பிரச்சினையைத் தீர்க்காமல் ஒருபோதும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது - சத்தியலிங்கம் எம்.பி நாட்டில் உள்ள அரசியல் பிரச்சினையைத் தீர்க்காமல் ஒருபோதும் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்தமைக்கு வெறுமனே ஊழல் மாத்திரமே காரணம் இல்லை எனவும் குறிப்பிட்டார். எனவே இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய முக்கிய பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கு உள்ளதாகவும் பத்மநாதன் சத்தியலிங்கம் கூறினார். தற்போது நாட்டின் பொருளாதார பிரச்சினையைத் தான் முதலில் தீர்க்க வேண்டும் எனவும் அதற்குரிய வழிவகைகளையே மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் கூறியிருக்கின்றமை பாரதூரமான விடயம் என சத்தியலிங்கம் சுட்டிக்காட்டினார். அரசியல் தீர்வு,புதிய அரசியல் யாப்பு தொடர்பில் இப்போதைக்கு சிந்திக்கவில்லை எனக் கூறுவதும் பாரதூரமான விடயம் எனக் குறிப்பிட்டார். இன்றைய தினம் சூரியன் வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். விழுதுகள் நிகழ்ச்சியின் முழுமையான காணொளி கீழே.. https://www.hirunews.lk/tamil/396126/அரசியல்-பிரச்சினையைத்-தீர்க்காமல்-ஒருபோதும்-பொருளாதாரத்தைக்-கட்டியெழுப்ப-முடியாது-சத்தியலிங்கம்-எம்-பி
-
கடவுச்சீட்டு விவகாரம் - யாழ் மக்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி!
கடவுச்சீட்டு விவகாரம் - யாழ் மக்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி! கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது ,தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://newuthayan.com/article/கடவுச்சீட்டு_விவகாரம்_-_யாழ்_மக்களுக்கு_காத்திருக்கும்_நற்செய்தி!
-
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவை இரத்துச்செய்ய வேண்டும் ; ரவி கருணாநாயக்க
நாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்தாகியுள்ளது adminFebruary 8, 2025 நாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்தாகியுள்ளது . ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான தனிநபர் பிரேரணை, இன்று (7) பிற்பகல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையை புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/210964/
-
காற்றாடி
நான் ஊரில் இரண்டு தவணை ஏ எல் படித்தேன். ஹாட்லியில் கணேசலிங்கம் மாஸ்ரரிடம் தூய கணிதம், உடுப்பிட்டி பீக்கோன் ரியூசனில் நல்லையா மாஸ்ரரிடம் தூயகணிதம், பிரயோக கணிதம், தில்லையம்பலம் மாஸ்ரரிடம் தூயகணிதம் என்று எல்லோரையும் போல ஓடுப்பட்டுப் படித்தேன். ஓ எல் ரிசல்ட்ஸ் தந்த செருக்கும், கூவிற வயசில் இருந்ததாலும் ஏ எல் படிப்பில் அக்கறை காட்டவில்லை. கெமிஸ்ற்றி, பிஸிக்ஸ் படிக்க வந்த பெண்பிள்ளைகள் மேல்தான் முழு நாட்டமும் போனது!🥰 பாடசாலையில் முதல் வரிசையில்தான் இருப்பேன். கணேசலிங்கம் மாஸ்டர் வந்து முதல்நாளே மற்றைய இடங்களில் படிப்பிக்காத தூயகணிதத்தில் கடினமான graph sketching (தமிழ் இப்ப தெரியாது) கேள்விகளைத் தந்தார். சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்தமாதிரித்தான் இருந்தது. பின்னால் திரும்பி அவரிடம் ரியூசனில் படிக்கும் நண்பனை எப்படிச் செய்வது என்று கேட்டேன். அவன் மெதுவாக சொல்ல ஆரம்பிக்க, கணேசலிங்கம் மாஸ்ரர் எனது மேசையை நோக்கி வந்தார். கன்னம் பழுக்கப்போகின்றது என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் வந்து எனது மேசையில் சோக்கால் இரண்டு கோடுபோட்டுவிட்டு கரும்பலகைக்குப் போய் ஒரு கேள்வியை விளங்கப்படுத்தினார். அதை அவர் எனக்காகத்தான் செய்தார் என்று புரிந்துகொண்டேன். மிச்சக் கேள்வி எல்லாவற்றையும் நான் கிறுகிறுவென்று செய்து முடித்தேன்😎 அவர் சொல்லித்தந்த method ஐ நான் இன்னமும் மறக்கவில்லை. பலருக்குச் சொல்லிக்கொடுத்திருக்கின்றேன், எனது வாரிசுகள் உட்பட! கணிதத்தில் இன்றுவரை குன்றாத காதலுக்கு ஓ எல் வரை படிப்பித்த சர்வானந்தா மாஸ்ரர், நம்ம ஊர் அரசன் வாத்தி, ஏ எல்லில் குறுகிய காலம் என்றாலும் கணேசலிங்கம் மாஸ்டர், நல்லையா மாஸ்டர், தில்லையம்பலம் மாஸ்டர் ஆகியோர் எனது ஆசான்கள். அதே போல இலண்டனிலும் இரண்டு ரீச்சர்கள் எனது மதிப்புக்குரிய ஆசான்களாக இருந்ததால் 100க்கு கீழே இலண்டன் ஏ லெவலில் எடுத்ததில்லை!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தேர்தல் முடிந்து விட்டதுதானே.. பிரச்சாரத்திற்குப் போனவர்கள் எல்லாம் வீட்டுக்குப் போய் நாலு நாட்கள் ஆகிவிட்டது!😃 @வீரப் பையன்26ஐ இன்னமும் காணவில்லை! போட்டி விதிகளின்படி பத்துப் பேருக்கு மேலே கலந்துகொண்டால்தான் யாழ் களத்தில் போட்டி தொடரும்😁