Everything posted by கிருபன்
-
காற்றாடி
கணேசலிங்கம் மாஸ்ரரிடம் ஏ லெவல் படித்தவர்களுக்கும் இப்படியான அனுபவம்தான்.. கணிதம் நன்றாக ஓடவில்லை என்றால் தொடையில் மயிர் முளைத்திருந்தாலும் அவருக்குப் பயந்து அரைக்காற்சட்டையுடன் வகுப்புக்குப் போனதாக எனது அண்ணாவின் வகுப்புத்தோழன் (நமக்கு நண்பன்!) சொல்லியிருந்தான்!
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
சுவி ஐயாவின் கதை ஒரு மார்க்கமாகப் போகின்றது. தொடருங்கள்.. நம்ம பாஷையில் ஜவுளிக்கடையை புடவைக்கடை என்றுதானே சொல்வது?🥹
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம் கையளிக்கும் - டிரம்ப் 07 Feb, 2025 | 11:05 AM காசாவில் மோதல்கள் முடிவடைந்ததும் அந்த பகுதியை இஸ்ரேல் அமெரிக்காவிடம் கையளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்ப் தெரிவித்துள்ளார். காசாவை அமெரிக்கா கையகப்படுத்துவது குறித்த டிரம்பின் கருத்திற்கு மாறாக அவரது நிர்வாகத்தின் அதிகாரிகள் கருத்து வெளியிட்டிருந்த நிலையிலேயே டிரம்ப் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். சண்டை முடிவடைந்ததும் இஸ்ரேல் காசா பள்ளத்தாக்கினை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் என தெரிவித்துள்ள அவர் பாலஸ்தீனியர்களை வேறு பகுதிகளில் மீள்குடியேற்றும் தனது திட்டத்தினை மீள வலியுறுத்தியுள்ளார். இதற்கு அமெரிக்க இராணுவத்தினர் அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/206044
-
பலாலி ஓடுபாதையை விரிவாக்குவதற்காக ஒருதலைப்பட்டசமாக காணிகளை அபகரிக்கக் கூடாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பலாலி ஓடுபாதையை விரிவாக்குவதற்காக ஒருதலைப்பட்டசமாக காணிகளை அபகரிக்கக் கூடாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 07 Feb, 2025 | 09:16 AM பலாலி ஓடுபாதையை விரிவாக்குவதற்காக ஒருதலைப்பட்டசமாக காணிகளை அபகரிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்காக பலாலியில் மேலும் நிலத்தை அரசாங்கம் அபகரிக்கப் போவதாக தினக்குரல் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக உள்ளது. தற்போது பலாலி ஓடுபாதை 1,300 மீற்றராகவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3,400 மீற்றராகவும் ரத்மலானை விமான ஓடுபாதை 1700 மீற்றராகவும் உள்ளது. தற்போது உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள உள்ள பலாலி விமான நிலையத்திற்கான விமான ஓடுபாதையை மேலும் 2,400 மீற்றர் வரை நீடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது இரத்மலானை விமான ஓடுபாதையின் அளவை விட அதிகமானதாகும். அரசாங்கம் மேலும் காணிகளை அபகரிக்கும் நோக்கில் செயற்படுவதால் பலாலி பிரதேசத்தில் மீள்குடியேற்றுவதற்காக காத்திருக்கும் பலாலி மக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்று அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என்று கூறியிருந்தாலும், உயர்பாதுகாப்பு வலயமாக காணப்படும் பலாலி பகுதிக்குள் விமான ஓடுபாதை நீடிப்புக்காக மேலும் காணிகளை அபகரிக்க இந்த அரசாங்கம் சிந்திக்கின்றது. இந்த விடயங்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் கலந்துரையாடப்பட வேண்டும். யாழ்ப்பாண மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி கருத்துக்களைக் கேட்டறிய வேண்டும். எங்களுக்கும் கருத்துகள் உள்ளன. நீங்கள் உண்மையில் மிகவும் திறமையான சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கப் போகிறீர்கள் என்றால் உண்மையில் யாழ்ப்பாணம் பொருத்தமற்ற இடமாகும். அது ஒரு மூலையில் உள்ளது. வன்னியில் எங்காவது கட்டலாம். வவுனியாவில் அல்லது அனுராதபுரத்தில் அமைக்கலாம், கிழக்கில் அமைக்கலாம். மத்திய பகுதி யொன்றில் அமைக்கவேண்டும். ஏதோ ஒரு மூலையில் அமைக்கத் தேவையில்லை. எனவே இவை விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் ஆகும். மேலும், பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, அரசாங்கம் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/206030
-
சபையை விட்டு வெளியேற்ற நேரிடும் ; அர்ச்சுனா எம்.பியை எச்சரித்த பிரதி சபாநாயகர்
மக்கள் தவறுதலாக தேசிய மக்கள் சக்தியின் மூன்று கத்தரித்தோட்ட வெருளிகளை யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்துவிட்டார்கள் -இராமநாதன் அச்சுனா ! ShanaFebruary 7, 2025 யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள் சக்தியின் மூன்று கத்தரித்தோட்ட வெருளிகளை யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்துவிட்டார்கள் இந்த மூன்று கத்தரித்தோட்ட வெருளிகளினால் யாழ்ப்பாணத்தில் ஏதாவது நடந்திருக்கின்றதா என்றால் இல்லை. யாழ்ப்பாணத்தில் பிறக்காத அமைச்சர் சந்திரசேகர் தான் சண்டித்தனம் செய்து என்னை ஏதாவது செய்யலாமா என்று சிந்திக்கலாம் 44 ஆயிரம் போராளிகள் உயிர் கொடுத்த எங்களின் தேசியத்தலைவரின் வழியில் நின்ற என்னை அச்சுறுத்தலாம் என நினைப்பது மிகவும் நகைச்சுவையானது என யாழ் மாவட்ட சுயேட்சை உறுப்பினர் இராமநாதன் அச்சுனா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) நடைபெற்ற புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நான் உரையாற்றும் போது அமைச்சர் சந்திரசேகர் சபையில் இருப்பார் என நினைத்தேன். அவருக்கு தெளிவாக ஒன்றை சொல்கின்றேன். நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன். தேசியத் தலைவன் பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையை பார்த்து வளர்ந்தவன். நாங்கள் சர்க்கஸ் கூடாரம் வைத்தாலும் அங்கு கழுதைகள், குதிரைகள் வந்த நின்றாலும் அவற்றுடன் சேர்ந்து படம் எடுப்பதற்கும் தயாராகத்தான் இருக்கின்றோம். ஆனால் அவ்வாறான கழுதைகளை எங்களின் தலைவராக ஏற்றுகொள்ள யாழ் மண்ணில் பிறந்த எந்த தமிழரும் தயாரில்லை. யாழ்ப்பாணத்தில் பிறக்காத அமைச்சர் சந்திரசேகர் சண்டித்தனம் செய்து என்னை ஏதாவது செய்யலாமா என யோசிக்கலாம். 44 ஆயிரம் போராளிகள் உயிர்கொடுத்த எங்களின் தேசியத்தலைவரின் வழியில் நின்ற என்னை வெருட்டலாம், அச்சுறுத்தலாம் என நினைப்பது மிகவும் நகைச்சுவையானது. எமது இனத்தை காத்த ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக இன்றுவரை போராடிக்கொண்டிருக்கின்றோம். அவரின் குழந்தைக்காக போராடிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த அரசு கூட அவரை விடுதலை செய்யவில்லை. முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக படுகொலை செய்த இராணுவத்தை பாதுகாக்கும் நிலைமிக்குத்தான் தேசிய மக்கள் சக்தி அரசு போயுள்ளது. படுகொலைகளுக்கான எந்த பொறுப்புக் கூறல்களும் இல்லை. யாழ்ப்பாணத்தில் 3000 வேலையில்லாத பட்டதாரிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்க உங்களினால் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க முடியுமா? எமது மக்கள் தவறுதலாக இந்த அரசின் 3 கத்தரித்தோட்ட வெருளிகளை தேர்வு செய்துவிட்டார்கள் இந்த 3 கத்தரித்தோட்ட வெருளிகளினால் யாழ்ப்பாணத்தில் ஏதாவது நடந்திருக்கின்றதா என்றால் இல்லை. மனம் போன போக்கில் இவர்கள் உள்ளார்கள். கடற்புலி படை, நிலப்படை,கரும் புலிப்படை, வான்படை என வைத்திருந்ததுதான் எமது தமிழீழம் .எமது தேசியத்தலைவர் பிறந்த வல்வெட்டித்துறைக்கும் எனக்கு உங்களிலும் விட அதி கூடிய வாக்குகளை வழங்கிய சாவகச்சேரிக்கும் ஜனாதிபதி போய் சர்க்கஸ் கூடாரத்தில் நின்று ஆடுவதற்கான தேவையை யாழ் மண் உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் பாதையோர வியாபாரிகள், பஸ் நிலையம் என பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றீர்கள். நான் உங்களுக்கு ஆதரவாக இருந்தவன். ஆனால் ஒருங்கிணைப்புக்குழு கட்டத்தில் என்னை பங்கேற்க விடக்கூடாது என்பதற்காக 23 ஆம் திகதி நடந்த சம்பவத்திற்காக 29 ஆம் திகதி கைது செய்தீர்கள். முடிந்தால் அமைச்சர் சந்திரசேகரை வரச் சொல்லுங்கள் என்றார். https://www.battinews.com/2025/02/blog-post_835.html
-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது முக்கிய வெளிநாட்டுப் பணிகளுக்கான அரசியல் நியமனங்களை செய்கிறது
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது முக்கிய வெளிநாட்டுப் பணிகளுக்கான அரசியல் நியமனங்களை செய்கிறது editorenglishFebruary 7, 2025 இலங்கை வெளிநாட்டுச் சேவையை அரசியலாக்குவது குறித்து கடந்தகால விமர்சனங்கள் இருந்தபோதிலும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் முக்கிய தூதரகங்களுக்குத் தலைமை தாங்குவதற்கான அரசியல் நியமனங்களைச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர், வெளிவிவகார அமைச்சு, அமெரிக்காவுக்கான தூதுவராக தொடர்ந்து பணியாற்றும் திரு.மகிந்த சமரசிங்கவைத் தவிர, ஏனைய அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட அனைத்து இலங்கை தூதுவர்களையும் திரும்ப அழைத்தது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவிபெறும் செயன்முறைக்காகவே மகிந்த சமரசிங்க அவரது பணியைத் தொடர அனுமதிக்கப்படுகிறார் என தற்போதைய அரசாங்கம் கூறிவந்தது. இருந்தபோதும், முக்கியமான தலைநகரங்களில் இலங்கையின் தூதரகங்களுக்குத் தலைமை தாங்குவதற்கு மேலும் சில அரசியல் நியமனங்களைச் செய்ய அரசாங்கம் இப்போது முயன்றுள்ளமை தெரிய வருகின்றது. அவர்களில், டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தலைவராக பேராசிரியர் ஜனக குமாரசிங்க பரிந்துரைக்கப்படுவார் என்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி உதேனி ராஜபக்ச தென்னாபிரிக்காவிற்காக பரிந்துரைக்கப்பட்டுவார் என்றும் கூறப்படுகிறது. நிமல் சேனாதீர ஐக்கிய இராச்சியத்திற்கான உயர்ஸ்தானிகராக தெரிவு செய்யப்படுகிறார் என்றும் பேராசிரியர் அருஷா குரே ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்குப் பரிந்துரைக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும், சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மனைவியான சோனாலி சமரசிங்கவை நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர தூதுக்குழுவின் அமைச்சர் ஆலோசகராக நியமிப்பதாக அண்மையில் முடிவெடுக்கப்பட்டதாகவும் இராசதந்திரி மஹிசினி கொலோன், புதுடெல்லிக்கான இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. https://globaltamilnews.net/2025/210846/
-
‘GovPay’ வசதி இன்று ஜனாதிபதியால் தொடக்கிவைக்கப்படுகிறது
‘GovPay’ வசதி இன்று ஜனாதிபதியால் தொடக்கிவைக்கப்படுகிறது editorenglishFebruary 7, 2025 அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தொடக்க நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் தொடக்க நிகழ்வானது இன்று (7/2/2025) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக் கூடியவாறு இத்திட்டமானது அறிமுகப்படுத்தப் படுகின்றது. இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களானவை சீரமைத்து நவீனமயப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இது அரச வருமான சேகரிப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. தரவு அடிப்படையில் முடிவெடுப்பதை ஊக்குவிப்பதோடு, மிகவும் திறமையான மற்றும் குடிமக்களுக்கு ஏற்ற அரசு சேவை வழங்கலுக்கு இந்தத் திட்டமானது வழிவகுக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ண்சார் (டிஜிட்டல்) பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன கருத்து வௌியிடுகையில், “இந்தக் கட்டண வசதி தற்போது 16 அரச சேவைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் 30 சேவைகளுக்கு இச் சேவையினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென எதிர்பாரக்கிறோம். எதிர்காலத்தில், இந்த முறை மூலம் பணம் செலுத்துவதற்கான செலவை 15 ரூபாவினால் குறைக்கவும் நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்.” https://globaltamilnews.net/2025/210843/
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவது இலங்கைக்குச் சாதகமானது
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவது இலங்கைக்குச் சாதகமானது editorenglishFebruary 7, 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் தீர்மானம், இலங்கைக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்தார். இந்த மாதம் 24 ஆம் திகதி தொடங்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில், இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்த முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். “ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தீர்மானங்களை இயற்றுவதும் கலப்பு நீதிமன்றத்தை நிறுவுவதற்கான திட்டங்களைத் தொடங்குவதும் அமெரிக்காவே. இப்படியாக அமெரிக்காவின் முனைப்பில் கொண்டுவரப்படும் தீர்மானங்களிற்கு மேற்கத்தைய நாடுகள் ஆதரவளித்து வந்தன. அமெரிக்கா இந்த ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகிக் கொண்டால் அது இலங்கைக்கு நன்மைபயப்பதாகவே அமையும். நமது எதிர்கால மனித உரிமைகள் திட்டத்திற்கு இது நல்லதொரு தொடக்கமாகும். தேசிய திட்டத்தை நாமே சொந்தமாக முன்வைக்க முடியும். இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் ஆதரவு கிடைத்தால், இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானத்தை முறியடிக்க முடியும்” என கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/210840/
-
கருணா அம்மான் பிள்ளையானை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் என பிள்ளையானிற்கு தெரிவித்த சுரேஸ்சாலே- டெய்லி மிரர்
பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில் ராஜபக்ச- கருணா பிள்ளையானை கொலை செய்ய திட்டமிடுகின்றார் என தெரிவித்த சுரேஸ்சாலே- டெய்லி மிரர் Published By: Rajeeban 06 Feb, 2025 | 04:41 PM nirmala kannakara உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் தொடரும் அதேவேளை தேசிய புலனாய்வு பிரிவிற்காக பணியாற்றிய முன்னாள் உயரதிகாரிகள் சிலருக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவரது செயலாளர்களில் ஒருவரான ஆசாத்மௌலானவுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ள இந்த அதிகாரிகள்; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சிறைத்தண்டiயை அனுபவித்தவேளை பிள்ளையான் சிறையிலிருந்தவாறே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான திட்டமிடலில் ஈடுபட்டார் என ஆசாத்மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சிக்கும் தெரிவித்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். ஆசாத்மௌலானா தெரிவித்துள்ள விடயங்கள் சிஐடி அதிகாரி ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ள விடயங்களுடன் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது. 2024 ஜூன் 13ம் திகதி டெய்லிமிரருக்கு வழங்கிய விசேட பேட்டியில் தேசிய புலனாய்வு சேவையும் இராணுவபுலனாய்வு பிரிவினரும் சிஐடியினரை தவறாக வழிநடத்தியிருக்காவிட்டால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தவிர்த்திருக்கலாம் என தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக உள்ள செனிவிரட்ண தெரிவித்திருந்தார். தேசிய புலனாய்வு பிரிவினரும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் சிஐடியினரை தவறாக வழிநடத்தாமல் சரியான தகவல்களை வழங்கியிருந்தால் நானும் எனது சிரேஸ்ட அதிகாரிகளும் தாக்குதலை தவிர்த்திருப்போம் என அவர் குறிப்பிட்டிருந்தார். 2018 நவம்பர் 30 திகதி வவுணதீவில் இரண்டு பொலிஸ்கான்ஸ்டபிள்கள் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவினரும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் சிஐடியினரை தவறாக வழிநடத்தியிருந்தனர் என தெரிவித்திருந்தார். இதுவே ஜஹ்ரானின் நடவடிக்கைகளின் திருப்புமுனையாக அமைந்ததுடன்,ஐந்து மாதங்களின் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு காரணமாக அமைந்தது. இந்த கொலைகளிற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களே காரணம் என புலனாய்வு பிரிவினர் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டினார்கள்,இதன் மூலம் சிஐடியினர் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் செயற்பட்ட முஸ்லீம் அமைப்பின் மீது தமது கவனத்தை திருப்புவதை தடுத்தார்கள் என செனிவிரட்ண தெரிவித்திருந்தார். 2018 டிசம்பர் 5, 8 . 14ம் திகதிகளிலும், 2019 ஜனவரி 3ம் திகதியும் புலனாய்வு அமைப்புகள் பொய் அறிக்கைகளை சிஐடிக்கு அனுப்பியுள்ளன என ரவி செனிவிரட்ண தெரிவித்திருந்தார். உயிரிழந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களை 2018 நவம்பர் 26ம் திகதி நினைவுகூரூவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமையினாலேயே முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள்இந்த கொலைகளை செய்தனர் என அந்த அறிக்கைகள் தெரிவித்தன. பல தடவை பிள்ளையானை விசாரணை செய்துள்ளதாக தெரிவித்துள்ள சிஐடியினர் இந்த சதி முயற்சியில் தொடர்புபட்டுள்ளவர்களை விசாரணை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசிங்கம் கொலை தொடர்பில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்தவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்காக ஜஹ்ரான் குழுவினரின் உதவியை பெறுவதற்கு பிள்ளையான் உதவினார் என பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்தார். பிரிட்டனை தளமாக கொண்ட சனல்4 2023 செப்டம்பரில் சர்ச்சைக்குரிய ஆவணப்படமொன்றை வெளியிட்டது.இந்த ஆவணப்படத்தில் பிள்ளையான் மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய முக்கிய பாதுகாப்பு அதிகாரியொருவர்ஜஹ்ரானையும் அவரது குழுவினரையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை பிள்ளையான் செய்தார் என ஆசாத் மௌலானா தெரிவித்திருந்தார். 2018 ஜனவரிமாதம் புத்தளம் மாவட்டத்தில் உள்ள வனாத்தவில்லுவில் உள்ள லக்டோவத்தை என்ற தென்னந்தோட்டத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது என ஆசாத் மௌலானா தெரிவித்திருந்தார். 2022 டிசம்பர் 30 ம் திகதி ஜெனீவாவில் ஆசாத் மௌலானா வழங்கிய அறிக்கையின் பிரதி எங்களிடம் உள்ளது ( டெய்லிமிரர்)சனல் 4வெளியிட்ட ஆவணப்படமும் உள்ளது. உள்ளக தகவல்களை வழங்கும் நபர் ஒருவர் தெரிவித்த விடயங்களை வைத்தே பின்வரும் விடயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பிணை வழங்குதல் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம்24ம் திகதி மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் பிள்ளையானிற்கு எவ்வாறு பிணை வழங்கியது என்பது குறித்த விபரங்களை தெரிவித்த உயர் அதிகாரியொருவர், ராஜபக்ச சகோதரர்களில் மேலும் ஒருவரை இலங்கையின் ஜனாதிபதியாக்குவதற்காக பிள்ளையான் செய்த உதவிக்காக பிள்ளையானிற்கு பிணை கிடைப்பதற்கு உதவுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் நீதித்துறையை சேர்ந்த மூவரிடம் பசி;ல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்தார் என தெரிவித்தார். 2007 நவம்பர் 2ம் திகதி போலிகடவுச்சீட்டில் பிரித்தானியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் அந்த நாட்டில்கைதுசெய்யப்பட்டார். இலங்கையின் தேசிய புலனாய்வு சேவையே இந்த கடவுச்சீட்டை வழங்கியிருந்தது. கருணா அம்மானை அகற்றிவிட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக பிள்ளையானை கொண்டுவருவதற்கு இலங்கையின் தேசிய புலனாய்வு அமைப்பு விரும்பியது. கருணா அம்மான் பிள்ளையானை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளார் என இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக விளங்கிய சுரேஸ்சாலே பிள்ளையானிற்கு தெரிவித்தார் என இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். கருணா அம்மானின் மெய்ப்பாதுகாவலர்களை பிள்ளையான் கொலை செய்யவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பிள்ளையானின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது அவர் அதன் தலைவரானார். 2008 ஜனவரி 23ம் திகதி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது.அதன் முதல் கூட்டம் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் 2008 இல் இடம்பெற்ற கிழக்குமாகாண சபை தேர்தலில் பிள்ளையான் வெற்றிபெற்றார்.அதனை தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவரை முதலமைச்சராக்கினார். ஆசாத் மௌலானா அவரின் ஒருங்கிணைப்பு செயலாளராக மாறினார். 2007 முதல் அதாவது மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் முதல் இராணுவபுலனாய்வு பிரிவினர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு மாதாந்தம் 3.5 மில்லியன் வழங்கி வந்ததாக ஆசாத் மௌலான தெரிவித்துள்ளார். பிள்ளையானின் உத்தரவின் பேரில் மௌலானவே இந்த பணத்தை இராணுவபுலனாய்வு பிரிவிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார். 2015 இல் மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கூலிப்படைக்கு பணம் வழங்கப்படுவது தொடர்ந்தது என பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். எனினும் புதிய அரசாங்கத்தின் கீழ் மாதாந்த கொடுப்பனவுகள் எதிர்காலத்தில் சாத்தியமில்லை என சுரேஸ்சாலே பிள்ளையானிற்கும் ஒரு முறை தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வு பிரிவே இதுவரை காலமும் அவர்களிற்கு மாதாந்தம் பணம் வழங்கி வந்தது இதனால் எதிர்வரும் காலத்தில் கொடுப்பனவுகள் சாத்தியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக புலனாய்வு பிரிவு கொடுப்பனவில் பதிவு செய்வதற்காக 15 பொய் பெயர்களை வழங்குமாறும் சாலே பிள்ளையானை கேட்டுள்ளார். பிள்ளையானின் உத்தரவுப்படி ஆசாத் மௌலானா 15 போலி பெயர்களை வழங்கினார் சாலே இராணுவபுலனாய்வு பிரிவினரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு பிள்ளையானிற்கு உத்தரவிட்டார் என அந்தஅதிகாரி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/205993
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ? adminFebruary 6, 2025 ஊழலுக்கு, எதிராக தன்னை முன்னிலைப்படுத்தும் அருச்சுனா இராமநாதன் , அண்ணன் மகனை வேலைக்கு அமர்த்தி , அவரின் சம்பளத்தையும் மோசடியாக தானே பெற்றுக்கொள்வது சரியா என கேள்வி எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது செலவு விபரங்களை பட்டியலிடுகையில், தனக்கான சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் என்பன தனது செலவீனங்களுக்குப் போதுமானதாக இல்லை இதனால் தனக்கு கீழ் நியமிக்க வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சலுகையில், ஆய்வு அலுவலராக தனது அண்ணன் மகன் ராமநாதன் அறிவன்பன் என்பவரை நியமித்து, அவருக்கு நாடாளுமன்றத்தினால் கொடுப்பனவாக வழங்கப்படும் 56,000 ரூபா பணத்தை முழுமையாக அவரிடம் இருந்து பெற்றே தனது செலவீனங்களை ஈடுசெய்வதாக தெரிவித்திருக்கிறார். அதேவேளை தனது மகனின் பாடசாலை கல்வி செலவு , கொழும்பில் உள்ள வீட்டின் வாடகை செலவு என்பன உட்பட தனது ஆடைகளுக்காகவே 70 ஆயிரத்திற்கு மேல் செலவு உள்ளதாகவும். அதனால் தான் தனக்கு கீழ் நியமிக்கப்பட கூடிய ஆளணியில் அண்ணாவின் மகனை நியமித்து அந்த சம்பளத்தை முழுமையாக பெற்றுக்கொண்டாலும் தனது வாழ்க்கை செலவினை ஈடு செய்யமுடியாது திண்டாடி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளமை தொடர்பில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர் https://globaltamilnews.net/2025/210830/
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
அருச்சுனா புலிக்கொடியை ஆட்டினால் அவரும் நம்ம ஆளுதான் 😜
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாகிஸ்தான் அணி வீரர்களின் விபரங்கள்: பாகிஸ்தான் (PAK) BATTERS: Mohammad Rizwan† (c), Babar Azam, Fakhar Zaman, Saud Shakeel, Tayyab Tahir, Usman Khan ALLROUNDERS: Salman Agha, Faheem Ashraf, Kamran Ghulam, Khushdil Shah BOWLERS: Abrar Ahmed, Haris Rauf, Mohammad Hasnain, Naseem Shah, Shaheen Shah Afridi இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கின்றன. போட்டியில் பங்குபற்ற ஆர்வம் காட்டியவர்கள் பலரை இந்தப் பக்கம் காணவில்லை! விரைந்து பதில்களைத் தந்தால்தான் போட்டி நடாத்த முடியும்! எனவே உங்கள் பதில்களை விரைந்து பதியுங்கள் 😀 போட்டி முடிவு திகதி ஞாயிறு 16 பெப் 2025 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. கூகிள் ஷீற்: https://docs.google.com/spreadsheets/d/1Rce_f8BLYqqz6IXE5VMYBoNb9zklFymMYdlDoQ1u-cg/edit?usp=sharing
-
யாழ்ப்பாணம்: பிழையான கேள்வியும் சரியான பதிலும்….!
யாழ்ப்பாணம்: பிழையான கேள்வியும் சரியான பதிலும்….! February 5, 2025 — அழகு குணசீலன் — 28 அமைப்புக்களின் கூட்டணியான என்.பி.பி.யும் அதன் பிரதான பங்காளியான ஜே.வி.பி.யும், அதன் தலைவர்களும், ஜனாதிபதியும் அள்ளி வீசிய தேர்தல் வாக்குறுதிகளை -கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள். “இந்த வாக்குறுதிகளை உங்களால் நிறைவேற்ற முடியாது அப்படியானால் அவற்றை எப்படிச் செய்யப் போகிறீர்கள்? என்பதை விவாதிப்பதற்கு ஒரு பொருளாதார விவாதத்திற்கு வாருங்கள்” என்று எதிரணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு சரியான பதில் அளிக்கப்படவில்லை. அரசியல் செயற்பாடுகளுக்கான வீதிவரைபடம் அவர்களிடம் இருக்க வில்லை என்பதால் விவாதத்திற்கும் செல்லவில்லை. மாறாக மெயின் ரோட்டில் பயணிக்காது, பைரோட்டில் பயணித்ததாகவே அவர்களின் பதில்கள் அமைந்திருந்தன. யாழ்ப்பாணம் உட்பட இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்களில் அநுர தனது வழமையான பாணியில் “மூடப்பட்ட கேள்விகளை” (CLOSED QUESTINS) அவரைக் காணக்கூடும் மக்களிடம் கேட்டு ( கொந்தாய்த ?, ஓணத? ) மக்களை பிரதான விடயத்தில் இருந்து திசை திருப்புவதை வழமையாகக் கொண்டுள்ளார். மூடப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இரு வகையாக மட்டுமே இருக்க முடியும். ஒன்று ஆம் அல்லது இல்லை என்பது. மற்றையது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட சில விடைகளை கொடுத்து அதில் சரியானதை அல்லது கிட்டத்தட்ட சரியானதை (MULTIPLE CHOICE) தேர்வு செய்யச் சொல்வது. யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியின் கேள்விகள் இந்த பாணியிலானவை. காங்கேசன்துறையில் ஜனாதிபதி மாளிகை தேவையா? என்று கேட்ட அவர், அங்கு கேட்கவேண்டிய பிரதான பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடம் கேட்க வில்லை. இதன்மூலம் இலங்கையர்களாக தெற்கின் பிரச்சினைதான் வடக்கிலும், கிழக்கிலும் என்று ஜனாதிபதி கூற வருகின்றார். இது தென்னிலங்கை பொருளாதார பிரச்சினையை முதன்மைப்படுத்தி சிறுபான்மையினர் இனப்பிரச்சினையை மழுங்கடித்தல். ஜனரஞ்சக சினிமா அரசியலை பேசி திசைதிருப்புதல். அநுரவை காண ரிக்கட் என்றால், அந்த நடன -நடிகையை காண ஏறியதுபோல் பலர் பனைமரத்தில் ஏறிச்சாகவும் தயாராக இருந்திருப்பார்கள். இதுதான் இன்றைய யாழ்ப்பாணத்தின் அவதாரம். பொருளாதார நெருக்கடியுள்ள ஒரு நாட்டில், சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமைகளும், அடையாளங்களும் அங்கீகரிக்கப்படாத நிலையில் பொதுக்கொண்டாட்டம் யார் கேட்டார்கள். அந்தந்த சமூகம் அவர்களுக்கு உரிய கொண்டாட்டங்களை கொண்டாட முடியாதவாறு மத்தளமாக அடி வாங்குகிறார்கள். பொருளாதார சுமையினால் திண்டாடுகிறார்கள். உரிமைகள் மறுக்கப்படுகிறார்கள். ஆனால் பொதுக்கொண்டாட்டம் என்ற பெயரில் தனது ஒக்டோபர் வெற்றியை கொண்டாட போகிறது என்.பி.பி. பிற்போக்கு பாராளுமன்ற கட்சி அரசியலுக்கு ஒக்டோபர் புரட்சி முலாம் (?). ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தனது தேவைக்கு ஏற்ப கேள்விகளை கேட்டு மக்களை திசை மாற்றியுள்ளார். அவர் மக்களை கேள்வி கேட்க சொல்லி அதற்கான பதிலை வழங்கியிருக்கவேண்டியதே முறையானது. சரி, மாறாக அவர் கேள்வி கேட்டிருந்தாலும் அந்த கேள்விகள் எப்படி அமைந்திருக்க வேண்டும்? அந்த மக்களின் முக்கிய பிரச்சினைகள் சம்பந்தமாக அல்லவா அமைந்திருக்க வேண்டும். உங்களுக்கு சமஷ்டி வேண்டுமா? அல்லது 13 வது திருத்தத்தை -மாகாணசபையை முழுமையான அதிகாரங்களுடன் அமுல்படுத்தவா? வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதை விரும்புகிறீர்களா? இல்லையா? வடக்கு கிழக்கில் அரசாங்கம் மேற்கொள்ளும் குடியேற்றங்கள், தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள், அமைக்கப்படும் விகாரைகள் உங்களுக்கு விருப்பமா? இராணுவ முகாம்கள் வேண்டுமா? அல்லது அவற்றை மூடிவிடவா? வடக்கு, கிழக்கில் தமிழ்மொழியில் நிர்வாகத்தை விரும்புகிறீர்களா? சகல தமிழ்மொழி மூல மாணவர்கள் சிங்களம் கற்கவும், சிங்கள மொழிமூல மாணவர்கள் தமிழ் கற்கவும் ஏற்பாடு செய்தால் உங்களுக்கு சிங்களம் கற்க விருப்பமா..? …………………? அப்போது மக்கள் “எப்பா” / “ஓணந ” , அல்லது “ஓவ்”/ “ஓண” என்று மனம் திறந்து பதிலளித்திருப்பார்கள். இறுதியாக….. இந்த யுத்தத்திற்கு பின்னணியில் இருந்து ஆட்சி இயந்திரத்திற்கு முட்டு கொடுத்து உங்கள் உறவுகளை கொன்றதற்கும், காணாமல் ஆக்கப்பட்டதற்கும் …, வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரித்ததற்கும்…. சுனாமி நிர்வாக கட்டமைப்புக்கு எதிராக நான் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தது உண்மையில் அரசாங்கத்திற்கு எதிராக அல்ல தமிழ் மக்களுக்கு எதிரானது என்பதை இப்போதாவது உணர்கிறேன் என்றும்…. ஒட்டு மொத்தமாக இனப்பிரச்சினை தீர்வுக்கான இந்திய -இலங்கை சமானதான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல் தடுத்ததில் விடுதலைப்புலிகளுக்கு சமமான பங்கு ஜே.வி.பி.க்கும் உண்டு என்பதற்கு பொறுப்பேற்று…. உங்களிடம் மன்னிப்புக்குக்கோரவே வல்வெட்டித்துறைக்கு வந்தேன் என்று அவர் கட்டியணைத்த அந்த தாயின் காலடியில் வீழ்ந்திருக்க வேண்டும். பிராயச்சித்தம் தேடியிருக்கவேண்டும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 1983 இனக்கலவரத்திற்கு மன்னிப்பு கோரினார். அந்த முன்மாதிரியில் அல்லது புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பாணியில் ராஜீவ் கொலை, முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு கூறியது போன்று அது ஒரு “துன்பியல் நிகழ்வு ” என்றாவது கூறியிருக்கலாம். இதற்கு பெயர்தான் மக்கள் சந்திப்பு. மக்களின் கருத்தை அறிந்து அதை நடைமுறைப்படுத்துவது. அதை விடுத்து தான் தெற்கில் இருந்து கொண்டு போன ராஜபக்சாக்களுக்கு எதிரான அரசியலை விற்பனை செய்வதல்ல. அதுவும் வல்வெட்டித்துறை அரசியல் சந்தையில்….! கமலஹாசனின் தசாவதாரம் பற்றி பேசிய ஜனாதிபதி அதில் கடந்த நான்கு மாதங்களில் தானும் சில அவதாரங்களுக்கு சொந்தக்காரன் ஆகிவருவதை மறந்து விட்டார். ஆகக்குறைந்தது ஜனாதிபதி தேர்தல் மேடை, பாராளுமன்ற தேர்தல் மேடை, பாராளுமன்ற உரைகளில் அவர் போட்ட “வேடங்களையாவது” நினைத்து பார்த்திருக்க வேண்டும். அநுரகுமார திசாநாயக்க தலைசிறந்த அரசியல் பேச்சாளர். சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான ஆய்வுகள், கொள்கைகளில் அல்ல. மாறாக சின்னச்சின்ன வசனங்களை, சிரித்து, சிரித்து பேசி, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மக்களுக்கு ஏற்றுவதில், வல்லவர். பேச்சு முடியும் வரை மக்களை தன் உரையோடு கட்டிப்போடுபவர். “மூடப்பட்ட கேள்விகள்” என்று சர்வதேச ஆய்வுகள் கூறுகின்ற “ஆம்”, “இல்லை” என்று பதிலளிக்க மட்டும் வாய்ப்பளிக்கின்ற கேள்விகள் ஜனாதிபதியின் கேள்விகள். ஒரு வகையில் மக்கள் முழுமையான பதிலை அளிப்பதை தடுக்கின்ற கேள்விகள் இவை. இதன் மூலம் கேள்வி கேட்பவர் மிக இலகுவாக தனது பக்கம் -தனக்கு வேண்டிய பதிலை மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். வியாபார- விளம்பரப்பாணி வித்தை. யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், அதிகாரிகளுடனான உத்தியோகபூர்வ சந்திப்பில் ஜனாதிபதி “மாற்று நொடியே” போட்டார். அவர்தான் அநுர. அதுதான் அவரின் அரசியல் பாணி. யாழ்.மாவட்டத்திற்கு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டது என்றால் அதற்கான ஆதாரத்தை அவர் முன்வைக்கவில்லை. அருகில் அரசாங்க அதிபர், ஆளுநர் இருக்கிறார்கள் அந்த விபரங்களை அவர் அவர்களிடம் கேட்டிருக்க வேண்டும் அல்லது அவர்கள் அந்த விபரங்களை தெரிவித்திருக்கவேண்டும். ஏனெனில் ஒட்டு மொத்த விபரம் அவர்களுக்குத்தான் தெரிந்திருக்கும். பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டதா? இல்லை யென்றால் எவ்வளவு திருப்பி அனுப்பப்பட்டது? என்ன காரணம் என்பதை அன்று அல்ல இந்த ஆண்டின் ஆரம்பத்தில் முதலாவது ஒருங்கிணைப்பு கூட்டத்தில் விபரங்களை பெற்றிருக்க வேண்டும். அதில் ஒருங்கிணைப்பு குழு தலைவராக, ஜே.வி.பி அமைப்பாளராக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் பொறுப்பில்லாமல் இல்லை. கடந்த ஆண்டின் கால்வாசிக்கு இந்த ஆட்சியே பொறுப்பு. அடுத்தடுத்த தேர்தல்கள், ஆட்சிமாற்றம் கூட இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம். வடக்கு கிழக்கில் நிலவிய அசாதாரண காலநிலை கூட சில திட்டங்களுக்கு தடையாக இருந்திருக்க முடியும். விகாரை காணிப்பிரச்சினையில் அரசாங்கத்தின் -ஜனாதிபதியின் உண்மையான நம்பிக்கைக்குரிய முகவராக தன்னை காட்டமுயற்சித்த ஆளுநர் நிதி விடயத்தில் நிலைமையை என்ன நடந்தது பற்றி சொல்லவில்லை. தன்னை அரசுக்கு விசுவாசமாக காட்டுவதில் செலுத்திய கவனத்தை அதிகாரிகளுக்கு ஆதரவாக அல்லது கண்டனமாக காட்டவில்லை. தமிழ்த்தேசிய கட்சிகளின் கொள்கை அடிப்படையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கோரிக்கை சரியானதே. ஆளுநரின் பதில் அதில் ஒரு சமரசத்தை காண்கிறது. ஒரு வகையில் இது ஒரு பிழையான முன்மாதிரி. மக்களின் காணிகளை அடாத்தாகப்பிடித்துக்கொண்டு பின்னர், அதற்கு பதிலாக வேறுகாணி உங்களுக்கு தருகிறோம் என்ற கருத்தியல் மேலாண்மை அரசியல். இது வடக்கு மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தி திட்டம் அல்ல. விகாரைக்கு பிடிக்கப்பட்ட காணி. இது போன்ற சமரச முயற்சிகளும், முன்மாதிரிகளும் எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்த முன்மாதிரி மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். வீதி அபிவிருத்தி பற்றிய அதிகாரிகளின் முன்மொழிவுக்கோரிக்கைக்கு ஜனாதிபதியின் பதில் இன்னும் வேடிக்கையானது. அபிவிருத்தி திட்டம் ஒன்றுக்கான செலவு, மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சரியான மதிப்பீட்டை செய்வதற்கு முதலில் பிரதேச செயலகம், மாவட்ட மட்டத்தில் அத்திட்டத்திற்கான அங்கீகாரம் பெற்று, களநிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபின்னரே சரியான நிதித்தேவையை மதிப்பீடு செய்யமுடியும். இந்த முடிவு இல்லாமல் திட்டவரைபு ஒன்றை செய்வதற்கு அதற்கான அதிகாரிகளுக்கு திணைக்களத்தலைவர்கள் கட்டளையிடுவது தவறான நிர்வாக முன்மாதிரி. இதை அதிகாரிகள் சிரமதானமாக, எழுந்தமானமாக செய்யமுடியாது. அப்படி ஒரு திட்டம் இல்லாத நிலையில் இல்லாத திட்டத்திற்கு அதுவும் ஜனாதிபதி விரும்புகின்ற சரியான மதிப்பீட்டு செலவுத் தொகையை ஏறக்குறைய என்று சொல்லாமல் சரியாக ரூபா, சதத்தில் எப்படி ஒரு அதிகாரி சொல்லமுடியும். அப்படி, இப்படி எல்லாம் இல்லை சரியான மதிப்பீடு வேண்டும் என்று திசைதிருப்பி அதிகாரிகள் மீது அதிகாரத்தை பிரயோகிக்கும் அவர், அதே கூட்டத்தில் , பொருளாதார நெருக்கடி, நிதி தட்டுப்பாடு, அபிவிருத்திக்கு நிதியில்லாமை பற்றியும் பேசுகிறார் என்பது ஒன்றுக்கொன்று முரணானது. இதன் படி பார்த்தால் சரியான செலவு மதிப்பீட்டை சொல்வியிருந்தால் காசு இல்லை என்று சொல்லியிருப்பார் என்றே கொள்ளவேண்டி உள்ளது. இது பட்டதாரிகளின் வேலையில்லா பிரச்சினைக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புக்களை தேடுங்கள் என்பது போன்றது. பட்டதாரிகள் தனியார் துறை வேலைவாய்ப்புக்களை விரும்பாததற்கு காரணம் அங்கு ஓய்வூதியம் இன்மை என்ற காரணமும் அமைச்சருக்கு தெரிகிறது. அப்படியானால் முதலில் செய்யவேண்டியது இந்த இரு அரச, தனியார் துறைகளில் நிலவும் வேறுபாடுகளை நீக்கவேண்டியது இல்லையா? அரச, தனியார் வேலைவாய்ப்பில் உள்ள கவர்ச்சி வேறுபாட்டை போக்காமல் தனியார் துறைக்கு போங்கள் என்பது உண்மையில் அரசாங்கத்தின் பொறுப்பற்ற பதில். தனியார் துறை சமூகநலன் அடிப்படையில் வேலை வழங்குவதில்லை. அளவுக்கு அதிகமாகவும் வேலை வழங்குவதில்லை. அதை கடந்த காலங்களில் அரசாங்கமே பல்வேறு திட்டங்கள் ஊடாக செயற்படுத்தி வந்துள்ளது. தேர்தல் மேடைகளில் தனியார் துறையை இழுத்து மூடுவோம் என்றவர்கள் இப்போது அங்கு தான் வேலைவாய்ப்பு இருக்கிறது போங்கள் என்று கூறுகிறார்கள். இது தவறான உயர்கல்விக்கொள்கையின் விளைவு என்பதால் இதனால் கிராமப்புற வறிய பட்டதாரிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதற்கான மாற்று திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். இவ்வாறு ஒன்றுக்கு ஒன்று முன்னுக்கு பின் முரணான கேள்விகளையும், பதில்களையும் வழங்கி “பராக்கு காட்டும்” அரசியலை செய்கிறது என்.பி.பி. இதில் இருந்து வடக்கு கிழக்கின் மற்றைய மாவட்டங்கள் சில விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை கவனத்தில் எடுத்து வடக்கு, கிழக்கு மற்றைய மாவட்டங்களில் மக்களும், சிவில் அமைப்புக்களும், அதிகாரிகளும் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்புக்களில் அவரின் அரசியல் தேவைக்கு பதிலளிப்பதை தவிர்த்து அந்தந்ந மாவட்டங்களின் மக்களின், சமூக பொருளாதார அரசியல் தேவைகளை முதன்மை படுத்தி கேள்வி எழுப்ப வேண்டும். ஜனாதிபதியை பதிலளிக்க தூண்ட வேண்டும். 159 உறுப்பினர்களை கொண்ட ஒரு பாராளுமன்றம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்காமல் இழுத்தடிப்பது காலம் போகப்போக நிலைமையை இன்னும் மோசமாக்கும். தென்னிலங்கையில் அநுர ஆட்சி ஆதரவை இழந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அதிகாரத்திற்காக இனவாதத்திற்கு எதிராக இனவாதம் செய்யாது ஆட்சி அதிகாரத்தை அரசியல் தியாகம் செய்ய இவர்கள் ஒன்றும் கௌதம புத்தர்கள் அல்ல. வடக்கு, கிழக்கில் மக்கள் அரசியல் தீர்வு குறித்து கேள்வி எழுப்பும்போது, அரசாங்கம் தென்னிலங்கை மக்கள் சந்திப்புக்களில் வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளை தெரிவித்து சிங்கள மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அரசாங்கம் கேட்டறிய முடியும்.. இப்படி நடந்தால் தான் அது மக்கள் சந்திப்பு. அரசாங்கம் பன்மைத்துவ சமூகங்களிடையே ஒரு தொடர்பாளராக செயற்பட முடியும். இல்லையேல் மக்கள் சந்திப்பு என்பது ஆளும் கட்சியின் தேர்தல் வெற்றிக்கான செயற்திட்டம். குருநாகல் மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன் என்று கூறியிருக்கிறார். அந்த பிரச்சினைகள் எவை? எவ்வாறு தீர்க்கப்போகிறார்? என்பது குறித்து பேசவில்லை. இது வடக்கு கிழக்கில் தனக்கு ஆதரவு இருக்கிறது என்று தெற்கில் காட்டி அரசியல் அதிகாரம் பெறுவதற்கான முயற்சியாக இருக்கக்கூடாது. https://arangamnews.com/?p=11771
-
அ.முத்துலிங்கத்துக்கு விருது
அ.முத்துலிங்கத்துக்கு விருது jeyamohanFebruary 6, 2025 அ.முத்துலிங்கம் அவர்களுக்கு கனடாவின் டொரெண்டோ பல்கலைக் கழகம் வழங்கும் மதிப்புமிக்க விருந்தான ARBOR AWARD வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் பண்பாட்டுக்கும் பல்கலையின் கல்விப்பணிக்கும் அளித்த பங்களிப்புக்காக அளிக்கப்படும் விருது இது. அ.முத்துலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் https://www.jeyamohan.in/211914/
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
காசாவை ‘கைப்பற்றும்’ ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி கடும் எதிர்ப்பு February 6, 2025 ‘‘காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சீரமைக்கும். இங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் வேறு நாடுகளில் குடியேற வேண்டும்’’ என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே நேரம் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பதில் அளித்துள்ள சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சகம், “பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம். பாலஸ்தீன அரசை நிறுவாமல் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்த மாட்டோம். பாலஸ்தீன அரசு குறித்த சவூதி அரேபியாவின் நிலைப்பாடு உறுதியானது மற்றும் அசைக்க முடியாதது. பாலஸ்தீன மக்களை இடம்பெயர வைக்கும் முயற்சிகள் மூலம், பாலஸ்தீன மக்களின் சட்டபூர்வமான உரிமைகள் மீறப்படுமானால் அதனை சவுதி அரேபியா சந்தேகத்துக்கு இடமின்றி நிராகரிக்கிறது. சவூதி அரேபியாவின் இந்த நிலைப்பாடு பேச்சுவார்த்தைகளுக்கோ, சமரசங்களுக்கோ உட்பட்டது அல்ல” என்று தெரிவித்துள்ளது. பாலஸ்தீனியர்களை கட்டாய இடமாற்றம் செய்யும் முயற்சியை எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “இரு நாடுகள் தீர்வின் அடிப்படையில் பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினரும் போர் நிறுத்தம் மற்றும் மோதலுக்குப் பிந்தைய நிர்வாகத்தை எடுத்துக் கொள்வார்கள் என்று சீனா நம்புகிறது” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காசாவை கையகப்படுத்துவது குறித்த ட்ரம்ப்பின் கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று துருக்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன், “பாலஸ்தீனியர்களை அவர்களது சொந்த மண்ணில் இருந்து விலக்கி வைக்கும் எந்தவொரு திட்டமும் மேலும் மோதலுக்கு வழிவகுக்கும். பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட்டு அவர்களின் நிலைமைகள் மாறினால், வர்த்தகத்தை துண்டித்தல், தூதரை திரும்பப் பெறுதல் என இஸ்ரேலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை துருக்கி மறுபரிசீலனை செய்யும்” என குறிப்பிட்டார். “ட்ரம்பின் காசா திட்டம் சர்வதேச குற்றத்தின் கீழ் வரும். இது சட்டவிரோதமானது, ஒழுக்கக்கேடானது மற்றும் முற்றிலும் பொறுப்பற்றது. அதோடு, ட்ரம்ப் கூறி இருப்பது முட்டாள்தனமானது. கட்டாய இடப்பெயர்வுக்கு தூண்டுவது ஒரு சர்வதேச குற்றம். சர்வதேச சமூகம் 193 நாடுகளால் ஆனது. அமெரிக்காவின் விருப்பத்தை, புறக்கணிக்க வேண்டிய நேரம் இது.” என்று பாலஸ்தீன பிரதேசத்துக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதி பிரான்செஸ்கா அல்பானீஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் இணைந்து வாஷங்டனில் டொனால்டு ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அமெரிக்கா காசா பகுதியைக் கைப்பற்றும். மேலும், நாங்கள் அதை சொந்தமாக்கிக் கொள்வோம். காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள். காசாவில் உள்ள வெடிக்காத ஆபத்தான அனைத்து குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை அகற்றுவதற்கு நாங்கள் பொறுப்பேற்போம்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/china-saudi-arabia-turkey-strongly-oppose-trumps-announcement-to-capture-gaza/
-
கொங்கோ – நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறையின் பின் உயிருடன் எரிப்பு
கொங்கோ – நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறையின் பின் உயிருடன் எரிப்பு February 6, 2025 கொங்கோவின் கோமா நகரசிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியார்கள் கொங்கோவின் கோமா நகரத்திற்குள் நுழைந்ததை தொடர்ந்து பெரும் குழப்பம் நிலவியவேளை கோமா நகரின் சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர். கோமாவின் முன்ஜென்ஸ் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பிச்செல்ல முயன்றவேளை பெண்கைதிகளை தாக்கினார்கள் என ஐநா அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அந்த சிறையிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தப்பிச்சென்றனர் அவர்கள் பெண்கைதிகளின் பகுதிக்கு தீ மூட்டினார்கள் என கோமாவில் உள்ள ஐக்கியநாடுகள் அமைதிப்படையின் பிரதிதலைவர் தெரிவித்துள்ளார். பெரும்சிறை உடைப்பு நிகழ்ந்தது 4000க்கும் அதிகமானவர்கள் தப்பிச்சென்றனர்,அந்த சிறையில் 100க்கும் அதிகமான பெண்களும்தடுத்துவைக்கப்பட்டிருந்தனர், அவர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பின்னர் அந்த பகுதிக்கு தீமூட்டினார்கள் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர்என கோமாவில் உள்ள ஐக்கியநாடுகள் அமைதிப்படையின் பிரதிதலைவர் தெரிவித்துள்ளார். ருவாண்டா ஆதரவு எம்23 கிளர்ச்சியாளர்கள் அந்த நகரினை அடைந்த பின்னர் சிறைச்சாலை அமைந்துள்ள பகுதியிலிருந்து பெரும் புகைமண்டலம் எழுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. https://www.ilakku.org/more-than-100-women-raped-and-burned-alive-in-dr-congo-jailbreak-un-says/
-
“ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள்” - சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)
பிள்ளையான் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவித்தவேளை பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான திட்டமிடலில் ஈடுபட்டார் என பிள்ளையானின் செயலாளர்களில் ஒருவரான ஆசாத்மௌலானா என்பவர் செனல் 4இற்கு தெரிவித்தார் என அந்த அதிகாரி டெய்லிமிரருக்கு சுட்டிக்காட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர். மௌலானா ஏற்கெனவே இது குறித்த விபரங்களை செனல் 4இற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் தெரிவித்திருந்தார். இது குறித்து டெய்லி மிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் தொடரும் அதேவேளை தேசிய புலனாய்வு பிரிவிற்காக பணியாற்றிய முன்னாள் உயரதிகாரிகள் சிலருக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிவனேசதுரை சந்திரகாந்தன் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவரது செயலாளர்களில் ஒருவரான ஆசாத்மௌலானவுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ள இந்த அதிகாரிகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவித்தவேளை பிள்ளையான் சிறையிலிருந்தவாறே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான திட்டமிடலில் ஈடுபட்டார் என ஆசாத்மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் பிரிட்டனின் செனல் 4 தொலைக்காட்சிக்கும் தெரிவித்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். ஆசாத்மௌலானா தெரிவித்துள்ள விடயங்கள் சி.ஐ.டி. அதிகாரி ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ள விடயங்களுடன் ஒத்துப்போவதாக கூறப்படுகின்றது. ஆசாத் மௌலானா முன்வைத்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சி.ஐ.டியினர் பல தடவை பிள்ளையானை விசாரணை செய்துள்ளதாக தெரிவித்துள்ள சி.ஐ.டியினர் இந்த சதி முயற்சியில் தொடர்புபட்டுள்ளவர்களை விசாரணை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசிங்கம் கொலை தொடர்பில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்தவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்காக ஜஹ்ரான் குழுவினரின் உதவியை பெறுவதற்கு பிள்ளையான் உதவினார் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/பிள்ளையான்-மீதான-குற்றச்சாட்டு-தொடர்பில்-விசாரணை/175-351491
-
அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா திருப்பி அனுப்பிய இந்தியர்கள் பகிர்ந்த அனுபவம் 06 Feb, 2025 | 11:10 AM புதுடெல்லி: பயணம் முழுவதும் கைகளில் கைவிலங்கு, கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்டதாக அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த காரணத்துக்காக திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். முதல் கட்டமாக அமெரிக்காவில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு 104 பேர் வந்தடைந்தனர். “கடந்த ஜனவரி 24-ம் தேதி அமெரிக்க எல்லைக்குள் நான் நுழைந்தபோது அந்த நாட்டு எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் என்னை பிடித்தனர். முறையான விசா மூலம் என்னை அமெரிக்காவுக்கு அனுப்புவதாக சொல்லிய டிராவல் முகமை நிறுவனம் என்னை ஏமாற்றி மோசடி செய்துவிட்டது. அமெரிக்கா செல்வதற்காக சுமார் 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று செலவு செய்துள்ளேன். நான் பிரேசிலில் சில மாதங்கள் தங்கி இருந்தேன். அதன் பின்னர் அமெரிக்காவுக்கு சென்றேன். அங்கு 11 நாள் காவலில் இருந்த நிலையில் நாடு திரும்பி உள்ளேன். அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியபோது எங்களின் கைகளில் கைவிலங்கு மற்றும் கால்கள் பயணம் முழுவதும் சங்கிலியால் பூட்டப்பட்டது. நாங்கள் வந்த விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கிய பிறகே சங்கிலி அகற்றப்பட்டது” என்று 36 வயதான ஜஸ்பால் சிங் தெரிவித்துள்ளார். அவர் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹர்தோர்வால் கிராமத்தை சேர்ந்தவர். “அமெரிக்க அதிகாரிகள் எங்களை வேறொரு முகாமுக்கு அழைத்து செல்வதாக சொல்லி பயணத்தை தொடங்கினர். ஆனால், செய்தி மூலமாக நாங்கள் நாடு கடத்தப்பட்டதை அறிந்தோம். வெளிநாட்டுக்கு சென்று பணம் சம்பாதித்து குடும்பத்துக்கு உதவலாம் என்ற எங்களது கனவு இப்போது தகர்ந்தது” என்கிறார் ஜஸ்பால் சிங்கின் உறவினர் ஜஸ்பீர் சிங். பின்னணி என்ன? - அமெரிக்காவில் கடந்த மாதம் 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவியேற்றார். அதன் பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஐ.நா அமைப்புகளில் இருந்து வெளியேறுவது, உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது, வங்கதேசம், பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துவது, டிக்டாக் செயலிக்கு நிபந்தனை விதிப்பு என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். குறிப்பாக அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார். அதன்படி, பிரேசில், மெக்சிகோ, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் குடிமக்கள் அவரவர் நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அதன்படி, சி-17 என்ற ராணுவ விமானத்தில் நேற்று 104 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் வந்த ராணுவ விமானம் நேற்று பிற்பகல் 1.55 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் குருராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அமெரிக்க ராணுவ விமானத்தில் நாடு திரும்பிய 104 பேரில் 30 பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள். ஹரியானா, குஜராத்தை சேர்ந்த தலா 33 பேர், மகாராஷ்டிரா, உ.பி.யை சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரை சேர்ந்த 2 பேர் அடங்குவர். முன்னதாக அமெரிக்காவில் இருந்து 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. எனினும், இந்தியர்கள் எத்தனை பேர் இதுவரை திருப்பி அனுப்பப்பட்டனர் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி பேசினார். பின்னர் ட்ரம்ப் கூறுகையில், ‘‘சட்டவிரோத குடியேற்றம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசினேன். அந்த விஷயத்தில் எது சரியோ அதை இந்தியா செய்யும் என்று தெரிவித்தார்’’ என்று கூறினார். இதையடுத்து இந்தியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. இதற்கிடையில், வரும் 13-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அப்போது அதிபர் ட்ரம்பை சந்தித்து இருநாட்டு உறவை மேம்படுத்த பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமெரிக்காவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக புளூர்பெர்க் கடந்த மாதம் புள்ளி விவரம் வெளியிட்டது https://www.virakesari.lk/article/205942
-
அதிகாரிகள் தவறுகளை விட்டுள்ளனர் காணிகளை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் எடுப்பேன் - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்
அதிகாரிகள் தவறுகளை விட்டுள்ளனர் காணிகளை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் எடுப்பேன் - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் 06 Feb, 2025 | 12:08 PM காணி விடயத்தில் அதிகாரிகளும் சில இடங்களில் தவறிழைத்துள்ளனர். படிப்படியாக காணிகளை விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருக்கும் (PARL)ஆளுநருக்குமிடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இடம்பெயர்ந்த மக்களின் வலி வேதனை எனக்குத் தெரியும். காணி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உணர்வுபூர்வமான விடயம். மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். அரசாங்கமும் அந்த விடயத்தில் நேரான சிந்தனையில்தான் உள்ளது. காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மாறாக நான் நடந்து கொள்ளமாட்டேன். காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் திணிப்பதற்கும் நான் தயாரில்லை அதிகாரிகளும் சில இடங்களில் தவறிழைத்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் விரைவில் நடமாடும் சேவை நடத்தி தீர்க்கக் கூடிய காணிப் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் . மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படவேண்டும் என்பது ஜனாதிபதியினது நிலைப்பாடு எனவும் அந்த நிலைப்பாட்டையே நானும் வலியுறுத்துகின்றேன் , மாவட்டச் செயலர்களாக 4 மாவட்டங்களில் பதவி வகித்தவன் என்ற அடிப்படையில் பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் தொடர்பான விவரங்கள் தெரியும் . ஏற்கனவே பாதுகாப்புத் தரப்பினருடன் பேச்சு நடத்தி வருவதாகவும் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/205947
-
குற்றப்புலனாய்வுப்பிரிவு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடக் கூடாது - அருட் தந்தை சிறில் காமினி
குற்றப்புலனாய்வுப்பிரிவு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடக் கூடாது - அருட் தந்தை சிறில் காமினி 06 Feb, 2025 | 12:12 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் அரசியல் தலையீடு தேவையற்றது. எனவே இந்த விசாரணைகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்படுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும். குற்றப்புலனாய்வுப்பிரிவு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடக் கூடாது என பேராயர் இல்ல பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி வலியுறுத்தினார். நேற்று புதன்கிழமை (05) கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை வலியுறுத்திய அவர் மேலும் குறிப்பிடுகையில், மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதோடு, அவரைப் போன்ற பல விசாரணை அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டனர். இதனால் அந்த விசாரணைகளுக்கு பாரிய தடைகளும் இடையூறுகளும் ஏற்படுத்தப்பட்டன. அதன் பின்னர் அந்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுமில்லை. எனினும் அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவு மீண்டும் அந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த சில காரணிகள், சில தெளிவற்ற காரணிகள் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டியிருந்தது. கால வரையறை காரணமாக சில காரணிகள் குறித்த ஆழமாக விசாரணைகளை முன்னெடுக்க முடியாமல் போனதாக அந்த அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு புதிய விடயங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. அவற்றில் ஒன்று செனல் 4 செய்தி சேவையின் ஆவணக் காணொளியில் வெளிப்படுத்தப்பட்ட காரணிகளாகும். முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா 'உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் காணப்படுகிறது.' எனக் குறிப்பிட்டிருந்தமையும் மீள விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய ஒரு காரணியாகும். இந்த விசாரணைகள் சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் முன்னெடுக்கப்படுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மாத்திரமின்றி நாட்டில் இடம்பெற்றுள்ள கொலை சம்பவங்கள் குறித்த விசாரணைகளிலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரசியல் தலையீடுகள் காணப்பட்டன. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் எந்தவகையிலும் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். செனல் 4 செய்தி சேவையில் பல்வேறு காரணிகளை வெளிப்படுத்திய அசாத் மௌலானா தொடர்பில் தற்போது பல்வேறு விடயங்கள் கூறப்படுகின்றன. அவரை நாட்டுக்கு அழைத்துவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் இது அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய காரணியல்ல. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் எதற்காக யாரால் மேற்கொள்ளப்பட்டன என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாகும். எனவே அதற்கான விசாரணைகள் நிச்சயம் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்குரியது என்பதால், அதனை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைகளிலும் அரசியல்வாதிகளின் தலையீடு தேவையற்றது. அதேபோன்று அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விசாரணைகளைக் கைவிட்டு விட வேண்டாம் என்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/205951
-
வேலை வாய்ப்பு எனக் கூறி பாரிய மோசடி
வேலை வாய்ப்பு எனக் கூறி பாரிய மோசடி February 6, 2025 07:29 am அரசு நிறுவனங்களின் இலட்சினைகளை பயன்படுத்தி போலியாக வேலை வாய்ப்புக்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் இலட்சினையை பயன்படுத்தி மோசடியான விளம்பரம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி அந்த விளம்பரம் பரப்பப்பட்டுள்ள நிலையில், அது ஒரு போலியான விளம்பரம் என்று இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது. மேலும், கடந்த சில நாட்களாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் இலட்சினையை பயன்படுத்தி இதேபோன்ற வேலை வாய்ப்பு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்று அரசின் இலட்சினையை பயன்படுத்தி வெளியிடப்படும் போலி விளம்பரங்களுக்கு பதிலளிப்பது பொருத்தமற்றது என இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல சுட்டிக்காட்டியுள்ளார். "போலி வலைத்தளங்கள் மூலம் பெரும்பாலும் உங்கள் தேசிய அடையாள அட்டையின் நகல்கள், கடவுச்சீட்டு நகல்கள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எந்த சூழ்நிலையிலும் நீங்கள் அத்தகைய வலைத்தளங்களைப் பார்வையிட்டு உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்கக்கூடாது." என்றார். https://tamil.adaderana.lk/news.php?nid=199775
-
“ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள்” - சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)
“ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள்” - சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வெளிநாட்டில் நிரந்தர வதிவிட உரிமை கோரும் மௌலானா, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து பிள்ளையானின் முன்னாள் செயலாளர் ஆசாத் மௌலானா வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து டெய்லிமிரருக்கு பதில் அளிக்கும்போதே பிள்ளையான் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, உயிர் அச்சுறுத்தல் என தெரிவித்து வெளிநாட்டில் நிரந்தர வதிவிடத்தை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆசாத் மௌலானா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் ஆறு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்றது. ஏன் அவர் அந்தவேளை அது குறித்த விபரங்களை அம்பலப்படுத்தாமல் நான்கு வருடங்கள் காத்திருந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கும் சனல் 4ற்க்கும் சென்றார்? தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரட்ண உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை சி.ஐ.டியின் தலைவராக பணியாற்றினார். ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள். அவர்களுக்கு ஆயுதங்களை கைவிட்டவர்களிற்கும், ஐ.எஸ். மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா? நான் ஆயுதப் போராட்டத்தை விரும்பாததால் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து முதலமைச்சரானேன். 2015 முதல் 2020 வரைசிறையிலிருந்த ஒருவரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற பேரழிவு தாக்குதலை எவ்வாறு திட்டமிட முடியும். ஆசாத் மௌலானவை நாட்டிற்கு மீண்டும் அழைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை சிறந்த விடயம். நான் சி.ஐ.டியினருக்கு ஒத்துழைப்பு வழங்கி போலியான கட்டுக்கதைகளை உருவாக்கியமைக்காக ஆசாத்மௌலானவை கைதுசெய்ய உதவுவேன் என தெரிவித்துள்ளார். (S.R) https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதியும்-சி-ஐ-டியினரும்-முட்டாள்கள்/175-351501
-
அநுரவின் வெற்றிக்கு புலம்பெயரிகளே காரணம்! - விமல் வீரவன்ஸ கண்டுபிடிப்பு
அநுரவின் வெற்றிக்கு புலம்பெயரிகளே காரணம்! - விமல் வீரவன்ஸ கண்டுபிடிப்பு விமல் வீரவன்ஸ கண்டுபிடிப்பு கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் தலையீட்டாலேயே வடக்கு மாகாணத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் இயல்பாக வாக்குகள் கிடைத்திருக்கும் என நான் நம்பவில்லை. ஏனெனில் அங்குள்ள குடும்பங்களில் 90 சதவீதமானவற்றில் எவரேனும் ஒருவர் வெளிநாட்டில் இருப்பார்;. அவர்கள் அங்கு பலமாக உள்ளனர். எனவே, அங்கிருந்து வரும் தகவலுக்கமைய இங்கு தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கப்படலாம். அந்த சக்திகளை (புலம்பெயர்) திருப்திப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதை காணமுடிகின்றது. இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றன. மைத்திரி – ரணிலின் ஆட்சிக் காலத்திலும் முகாம்கள் அகற்றப்பட்டன. அத்தியாவசியமானவை எனக் கருதி வைக்கப்பட்டிருந்த படைமுகாம்கள்தான் தற்போது அகற்றப்பட்டு வருகின்றன. மஹிந்த ராஜபக்சவை வீட்டில் இருந்து வெளியேற்ற முற்படுகின்றமை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோத்தாபய ராஜபக்சவை கைதுசெய்ய முற்படுகின்றமை உட்பட பல நடவடிகைகள் இவ்வாறு புலம்பெயரிகளைத் திருப்திப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுவருகின்றன. அநுரகுமார இன்று சுதந்திரமாக யாழ்ப்பாணம் செல்வதற்குகூட, போரை முடிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச வழங்கிய அரசியல் தலைமைத்துவம்தான் காரணமாகும் என்பதை மறக்கக்கூடாது – என்றார். https://newuthayan.com/article/அநுரவின்_வெற்றிக்கு_புலம்பெயரிகளே_காரணம்!
-
பெப்ரவரி 15 முதல் உத்தரதேவி ரயில்!
பெப்ரவரி 15 முதல் உத்தரதேவி ரயில்! பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிமுதல் யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில், உத்தரதேவி ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி, காலை 5:30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படுகின்ற ரயில் மதியம் 1:15 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையவுள்ளது. கொழும்பிலிருந்து காலை 11.50 மணியளவில் பயணிக்க ஆரம்பிக்கும் ரயில் மாலை 6:50 மணியளவில் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய சேவைகள் கடந்த 31ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்ட இரவு நேர தபால் சேவையானது காங்கேசன்துறையிலிருந்து இரவு 8 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து, அதிகாலை 4.20 மணியளவில் கொழும்பு கோட்டையைச் சென்றடையும். கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 8 மணியளவில் பயணத்தை ஆரம்பிக்கும் ரயில் யாழ்ப்பாணத்தை அதிகாலை 3.55 மணிக்கு வந்தடையும். இதேவேளை ஏற்கனவே இடம்பெற்று வருகின்ற யாழ் தேவி ரயில்சேவையானது காலை 5:45 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து சேவையினை ஆரம்பித்து யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை 12:20 மணியளவிலும், காங்கேசன்துறையை 1.45 மணியளவிலும் வந்தடையும். காங்கேசன்துறையிலிருந்து இரவு 10:30 மணியளவில் சேவையை ஆரம்பிக்கும் யாழ் தேவி ரயில் சேவையானது யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை இரவு 11 மணியளவில் அடைந்து தொடர்ந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை காலை 7 மணியளவில் சென்றடையும். வழமைபோல யாழ்ராணி ரயில் சேவையானது காலை 6 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து சேவைகளை ஆரம்பித்து யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை காலை 6:35 மணியளவில் அடைந்து தொடர்ந்து அனுராதபுரத்தினை 10:30 இற்கு சென்றடையும் இதேவைளை அனுராதபுரத்திலிருந்து மாலை 2:30 மணிக்கு சேவைகள் ஆரம்பமாகி யாழ் ரயில் நிலையத்தினை மாலை 6:10 மணியளவில் அடைந்து காங்கேசன்துறைக்கு மாலை 6:50 மணிக்கு சென்றடையும். மேலும் விசேட சேவையாக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கடுகதி ரயில் சேவை கொழும்பு கோட்டையிலிருந்து காலை 5:30 மணிக்கு ஆரம்பித்து யாழ்ப்பாணத்தை காலை 11:50 மணியளவில் வந்தடையும். மேலும் யாழிலிருந்து மாலை 2:15 மணிக்கு ஆரம்பமாகி கொழும்பை இரவு 8:50 இற்கும் சென்றடையும். https://newuthayan.com/article/பெப்ரவரி_15_முதல்_உத்தரதேவி_ரயில்!
-
அர்ச்சுனா எம்.பி.யின் கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் கடும் எதிர்ப்பு!
அர்ச்சுனா எம்.பி.யின் கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் கடும் எதிர்ப்பு! ஜனாதிபதி அண்மையில் யாழில் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வெளிப்படுத்திய கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். தனது இல்லத்தில் வைத்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கண்டனம் வெளியிட்டார். அங்கு அவர் தெரிவிக்கையில்; தையிட்டியில் காணப்படும் விகாரையை இடிக்க முடியாதென கூறும் அர்ச்சுனா இராமநாதன் பெரிய விளானில் இருப்பதாக கூறும் தனது பத்து ஏக்கர் காணியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிப்பாரா? வடக்கு, கிழக்கில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணியற்று காணப்படுகிறார்கள். அவர்களுக்கு அர்ச்சுனாவால் காணியை கொடுக்க முடியுமா? நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மண்டைதீவில் கடற்படை சுவீகரித்துள்ள காணியை மக்களுக்கு முடிந்தால் பெற்றுக் கொடுக்கட்டும். காணி தொடர்பான முழுமையான காணி விபரங்கள் அர்ச்சுனா உட்பட்ட எந்தவித நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கிடையாது. இவர்கள் காணி தொடர்பில் எப்படி சரியான விடயங்களை கொண்டு செல்ல முடியும்? வடமராட்சி கிழக்கில் கோரியடியில் இருந்து சுண்டிக்குளம் வரை மக்களின் காணிகள் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பூங்காவில் மக்கள் இருக்க முடியாது. ஆனால் மக்கள் வசிக்கின்றார்கள். காலப்போக்கில் அவர்களை காணியை விட்டு அகற்றுவார்கள். இது தொடர்பான விடயங்களை அர்ச்சுனா முதலில் தேடி அறிந்து பேச வேண்டும் மக்களின் காணி பிரச்சனைகள் எங்கெல்லாம் காணப்படுகின்றது என்பதனை அர்ச்சுனா எங்களிடம் கேட்டால் கூட்டிச் சென்று காட்டுவோம். மக்களின் காணி என்று தெரிந்தும் அதை அபகரித்து விகாரைகளை கட்டினார்கள், முகாம்களை அமைத்தார்கள். மக்களின் காணியை அபகரித்து என்ன கட்டினாலும் அதை இடிக்கத்தான் வேண்டும். அதை தவறென கூறும் அர்ச்சுனா எம்பி முதலில் காணி தொடர்பான முழுமையான ஆவணங்களை தேடி அறிந்து கொண்டு பேச வேண்டுமெனவும் மேலும் அவர் தெரிவித்தார். https://newuthayan.com/article/அர்ச்சுனா_எம்.பி.யின்_கருத்திற்கு_வடமாகாண_காணி_உரிமைக்கான_மக்கள்_இயக்கத்தின்_தலைவர்_கடும்_எதிர்ப்பு!