Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. வாகை மலருக்கு இத்தனை சிறப்புகளா! : எப்படி யோசித்தார் நடிகர் விஜய்? Kumaresan MAug 22, 2024 10:54AM தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்தார் அடர்சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகை மலருக்கும் பல்வேறு சிறப்புகள் உள்ளன. தமிழ் நிலத்தில் சொல்லப்பட்டுள்ள ஐந்து நிலங்களில், ஒவ்வொரு நிலத்தின் பெயரும், அங்கு முக்கியமாக வளரும் மரம், அல்லது செடியின் பெயரைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. பாலை நிலத்தில் வளரும் முக்கிய மரம் வாகை மரமாகும். வாகைப் பூவைத் தொடுத்து, வெற்றிச் சின்னமாகக் கழுத்தில் அணிந்துக் கொள்வர். பெண்கள் காதணியாக அணிந்து கொள்வர் என்று சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. தொல்காப்பியம் நூலில் போர் காலங்களில் வீரர்கள் அணியும் பூக்கள் பற்றிச் சொல்லும் பாடலில், வாகைப் பூப் பற்றி கூறப்பட்டுள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றியை கொண்டாடியதாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. “வெற்றி வாகைச் சூடினான்” எனும் தொடர் இன்னமும் வழக்கில் உள்ளது. இந்த மரத்தின் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயன்கள் கொண்டவை. வாகை வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்று. இது, தமிழீழத்தின் தேசிய மரமாகும். வாகைப் பூக்களைப் போல் தூங்கு மூஞ்சி மரப் பூக்களும் தோன்றுவதால் வாகை மரமானது தூங்கு மூஞ்சி மரமென்றே பலரும் கருதி கொள்கின்றனர். ஆனால் வாகை மரமென்பது Flea Tree ரகத்தை சேர்ந்தது ஆகும். தூங்கு மூஞ்சி மரம் Rain Tree ரகத்தை சேர்ந்தது. ஆகும். இரண்டும் வெவ்வேறு மரங்களென்றாலும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/political-news/why-actor-vijay-choose-vaagai-flower-in-tvk-party-flag/
  2. எந்த வேட்பாளருக்கும் ஆதரவு இல்லை என கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எந்த வேட்பாளருக்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. நாட்டின் புதிய ஜனாதிபதியை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் தாம் நாட்டிலுள்ள கத்தோலிக்க மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவே ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொழும்பு பேராயரின் ஊடகப் பேச்சாளர் சிறில்காமினி பெர்ணாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் சந்தித்துள்ள போதிலும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவை வெளியிடப்போவதில்லை எனத் தெரித்துள்ளார். இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச, ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார, பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச உட்பட மேலும் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://www.samakalam.com/எந்த-வேட்பாளருக்கும்-ஆதர/
  3. தங்கலான் : விமர்சனம்! christopherAug 15, 2024 18:27PM இயக்குநர் பா.ரஞ்சித் என்றதும் சமூக நீதி அரசியல், ஒடுக்கப்பட்டோரின் குரல், தலித் அரசியல் என அவர் பேசிக்கொண்டிருக்கும் பல்வேறு விஷயங்கள் மனதில் தோன்றும். ஒரு தேர்ந்த அரசியல் தெளிவு கொண்ட இயக்குநர் பா. இரஞ்சித். இவர் குறித்து இயக்குநர் வெற்றி மாறன் கூறும்போது “பா. இரஞ்சித் ஒரு தெளிவான அரசியல்வாதி . அதனால் தான் அவரது படங்களில் சிறிதளவும் அரசியல் தவறுகள் தெரிவதில்லை” எனக் கூறியுள்ளார். ஆனால், இந்த சித்தாந்தங்கள் எல்லாம் கடந்து பா.இரஞ்சித் எனும் சிறந்த கலைஞனின் படைப்புகள் கலை ரீதியாகவும் மிக முக்கியமானவைகளாக உள்ளன. குறிப்பாக, பா. இரஞ்சித் இடம் உலகப் புகழ்பெற்ற கலை இலக்கிய கோட்பாடான ‘மாய எதார்த்தவாதம்’ குறித்த மிகுந்த ஆர்வம் இருந்ததை பல்வேறு இடங்களில் பார்த்திருக்க முடியும். ‘குதிரைவால்’ போன்ற படங்களை அவர் தயாரித்ததற்கு காரணமும் அதுவே. தற்போது வெளியாகியுள்ள ‘ தங்கலான் ‘ திரைப்படத்தில் அதன் வெளிப்பாடு மிக அதிகமாகவே தெரிந்ததைக் காண முடிந்தது. ஒன்லைன்: கர்நாடகா எல்லையில் உள்ள கோலார் பகுதியில் இருக்கும் தங்க சுரங்கத்தை தேடிக் கண்டுபிடிக்க விக்ரம் மற்றும் அவரது கிராமத்தினரை நாடுகிறார் ஆங்கிலேயரான டேனியல். சொந்த நிலத்தில், பண்ணை அடிமையாக இருப்பதற்கு வெள்ளைக் காரனிடம் தகுந்த கூலிக்கு வேலை செய்யலாம் என நினைத்து ஊர் மக்களுடன் உதவி செய்ய ஒப்புக் கொள்கிறார் விக்ரம். ஆனால், அந்தப் பகுதியை ‘ ஆரத்தி ‘ என்கிற வனதேவதை காத்து வருகிறாள் என்பது அந்த ஊர் மக்களின் நம்பிக்கை. ஆக, விக்ரம் தன் மக்களின் துணையோடு சுரங்கத்தை கண்டுபிடித்தாரா? யார் அந்த ‘ஆரத்தி’ ? எதற்காக அந்த தேவதை இந்தத் தங்க சுரங்கத்தைக் காக்க வேண்டும் போன்ற விஷயங்களைச் சொல்வதே ‘தங்கலான்’ திரைப்படத்தின் கதை. அனுபவ பகிர்தல்: இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது, தொழில் நுட்ப ரீதியாக தமிழ் சினிமாவின் ஓர் மிகச் சிறந்த படத்தைப் பார்த்த அனுபவம் நமக்கு கிடைத்தது. அதற்குக் காரணம் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் சரியான நடிகர் தேர்வு. இவை அனைத்தும் அந்த வாழ்வியலை நாம் அப்படியே நேரில் காணும் ஒரு உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது. படத்தில் வரும் சில அரசியல் மற்றும் வரலாற்று சார்ந்த குறியீடுகள் நமக்கு சுவாரஸ்யம் தந்தது. அவை குறித்து மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தையும் உருவாக்கியது. தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதிதான மாய எதார்த்தவாத திரை மொழியில் ஒரு வரலாற்று கதையை பார்க்கும் அனுபவம், படத்தின் பல கூறுகளை ஆழ்ந்து சிந்தித்து, விவாதிக்க தூண்டுகிறது. ஜீவி பிரகாஷின் பின்னணி இசை மற்றும் படத்தின் ஒலிப்பதிவு சேர்ந்து இயக்குநர் நினைக்கும் உணர்வை நமக்குக் கடத்துகிறது. இந்தப் படத்தை நல்ல ஒலிவசதி உள்ள திரையரங்கில் பார்த்தல் நன்று. விரிவான விமர்சனம்: படத்தின் முதல் காட்சியிலேயே நம்மை அந்தக் கதை உலகிற்குள் அழைத்து செல்கிறார் பா.இரஞ்சித். இதற்கு முக்கியக் காரணம் நேர்த்தியான தொழில் நுட்பம், நடிகர்களின் இயல்பான நடிப்பு. நடிகர் விக்ரம், தான் ஏற்ற கதாபாத்திரத்தை மிக சிறப்பாக நடித்துள்ளார் எனக் கூறுவதோ, எழுதுவதோ புதிதான விஷயம் அல்ல. அந்த அளவிற்கு தனது நடிப்பாற்றலின் உச்சத்தை ஏற்கனவே நிரூபித்துள்ளார் விக்ரம். இந்தப் படத்தின் அவரது உடல்மொழி, பாவனை, வசன உச்சரிப்பு என அனைத்தும் கச்சிதம் என்பதைத் தாண்டி சர்வதேச தரம் என்று தான் சொல்ல வேண்டும். அவர் மட்டுமின்றி படத்தில் நடித்த பார்வதி, கணவனிடத்து அதிகாரம் காட்டுவது, பின் கொஞ்சிக் கொள்வது என அந்த வாழ்வியல் சார்ந்த பெண்ணாகவே தன்னை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக, முதன் முதலாய் ரவிக்கை கட்டும் போது அவர் உடல் எவ்வாறு உணர்ந்தது என்பது வரை நமக்கு பாவனைகளில் கடத்துகிறார். படத்தில் நடித்த ஹரி கிருஷ்ணன், பிரீத்தி கரண், அர்ஜுன் போன்ற நடிகர்களின் திறமைக்கு இதையடுத்து நிச்சயம் தகுந்த பாத்திரங்கள் அவர்களை வந்து சேர வேண்டும். படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், நம்மை பெரிதும் கவர்ந்தது பசுபதியின் கதாபாத்திரம் தான். அந்தக் கதாபாத்திரம் எழுதப்பட்டிருந்த விதம், பசுபதியின் நடிப்பு என அனைத்தும் நம்மால் ரசிக்க முடிந்தது. இன்னும் சொல்லப் போனால் படத்தின் முதன்மை கதாபாத்திரம் ஒரு விஷயத்தை செய்து முடிக்கும் போது கூட நமக்கு வராத உணர்ச்சி, பசுபதி கதாபாத்திரம் இன்னோரு பாத்திரத்தை அடிக்கும் போது ஏற்படுகிறது. ஆரத்தியாக வரும் மாளவிகா மோகனன், சண்டைக் காட்சிகளில் மிகவும் கடினமாக உழைத்தது தெரிகிறது. நடிகர்களின் நடிப்பு இவ்வளவு நேர்த்தியாக வெளிப்பட்டதற்கு மற்றொரு காரணம் கிஷோரின் ஒளிப்பதிவு. குறிப்பாக விக்ரம் – பார்வதி காதல் காட்சி, விக்ரம் கம்பீரமாக வந்து நிற்கும் ஒரு சண்டைக் காட்சி என பல்வேறு காட்சியை மெருகூட்டுவது ஒளிப்பதிவு தான். தலை இல்லா புத்தர் சிலை, ஆடை அரசியல், நிலத்தின் அரசியல், சாதி அரசியல் என இரஞ்சித் பேசும் அனைத்து விஷயங்களையும் படத்தின் சின்னச் சின்னக் கூறுகளாக வைத்தது இரஞ்சித்திடம் எப்போதும் இருக்கும் தனிச் சிறப்பே. ஆனால், படத்தின் முதன்மை கதாபாத்திரம் முதல் பசுபதி பாத்திரம் தவிர்த்து எந்த கதாபாத்திரத்துடனும் நம்மால் ஒட்ட முடியவில்லை. படத்தின் முதல் பாதி வரை எந்த ஒரு ஒட்டுதலும் இல்லாமல் நகரும் திரைக்கதை இரண்டாம் பாதியில் இருந்து விறுவிறுப்பாகிறது. படத்தில் பேசப்படும் மாய எதார்த்தாவாதம் தமிழ் சினிமாவிற்கு மிகப் புதுமையானது என்பதால் படத்தின் மைய சித்தாந்தத்திற்கே எதிரான சில புரிதலை மக்களுக்குக் கடத்த நேரிடுமோ என்கிற எண்ணம் சற்றுத் தோன்றியது. எதார்த்தவாதத்தில் இருக்கும் சமூக நீதிக் கோட்பாடு, வரலாற்று கொடுமைகள் போன்ற விஷயத்தை மாய எதார்த்தவாத கதை சொல்லல் முறை கொண்டு சொல்ல வினைந்தது சரியாக ஒன்று சேரவில்லை. ஆக, படத்தின் பல காட்சிகள் பார்வையாளர்களோடு ஒட்டாமல் நகர்கிறது. அடுத்தடுத்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் மரணங்களும் நம்மைப் பெரிதாக பாதிக்கவில்லை. படத்தின் பல்வேறு கூறுகள் கலை ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் ஆய்வு செய்து பார்க்கக் கூடிய அளவிற்கு படைத்திருந்தாலும் அதில் இருக்கும் சுவாரஸ்ய குறைவு நம்மை நெருடுகிறது. மொத்தத்தில் இந்த ‘ தங்கலான் ‘ நமக்குத் தரும் புது அனுபவத்தை கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்து நேர்த்தியான திரைக்கதையோடு தந்திருந்தால் மிகச் சிறந்த திரைப்படமாக இருந்திருக்கும். இருந்தாலும், இந்தத் திரைப்படம் தரும் அனுபவத்திற்காக நிச்சயம் அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் தான். https://minnambalam.com/cinema/pa-ranjith-and-vikaram-thangalan-movie-review/
  4. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா? Aug 20, 2024 10:54AM வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், தற்போது அக்கொடி எந்த நிறத்தில் இருக்கும் என்ற சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. தளபதி என்று ரசிகர்களால் அழைக்கக்கூடிய பிரபல நடிகர் விஜய் தனது நற்பணி மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதிகாரப்பூர்வமாக ’தமிழக வெற்றிக் கழகம் கட்சி’ பெயரை கடந்த பிப்ரவரியில் அறிவித்தார். கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடத்துவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. மாநாட்டுக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநில முதல்வர்களை அழைக்கவும் திட்டமிட்டுள்ளார் விஜய். முறையாக அழைப்பு கொடுப்பதற்கு முன்பு நான்கு முதல்வரிடமும் பேசப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள். மாநாட்டுக்கு முன்பாக ஈசிஆர் சாலையில் உள்ள பனையூர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி விஜய் கட்சி கொடியை அறிமுகம் செய்கிறார். இதற்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பார்கள் என 300 பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொடியின் வர்ணங்கள் பற்றி தவெக நிர்வாகியிடம் விசாரித்தோம். அதற்கு, “மஞ்சள், வெள்ளை, சிவப்பு என மூவர்ண நிறத்தின் மத்தியில் வாகை பூ பதிக்கப்பட்டுள்ளது. வாகை பூ வெற்றியை உணர்த்தும். சங்ககாலத்தில் போரில் வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு வாகை பூக்களை சூடுவார்கள். அந்த வகையில் மூவர்ண கொடியில் வாகை பூ பதிக்கப்பட்டுள்ளது. இனி எங்கள் பயணம் வெற்றியை நோக்கிதான்” என்கிறார் தவெக நிர்வாகி ஒருவர். https://minnambalam.com/political-news/vijay-tvk-flag-introduction-do-you-know-what-the-color-is/
  5. தமிழ் பொது வேட்பாளர் தேவையற்ற விடயமே என்கிறார் சாணக்கியன்! தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் தமிழ் பொது வேட்பாளர் தேவையற்ற விடயம் என்பதில் ஒருமித்த கருத்துடன் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே இவ்வாறான தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அரங்கேற்றப்பட்டது என்பது முற்று முழுதான உண்மை எனவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இன்று கோடிக்கணக்கான சொத்தினை கொண்டுள்ளார். அவருக்கு அந்த சொத்து எவ்வாறு வந்தது என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். மட்டு. ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அந்த வகையில் அனுரகுமார திஸாநாயக்கா, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ குறிப்பிடக் கூடிய மூவராவர். அத்தோடு நாமல் ராஜபக்சவும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் தெற்கிலேயுள்ள வாக்குகள் சிதறிச் சின்னா பின்னமாகக் கூடிய நிலை உருவாகலாம். அந்த வகையில் தமிழ் மக்களுடைய வாக்குகளுக்குக் கூடிய பெறுமதி காணப்படும். அதில் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய அதிகூடிய வாக்குகள் இருக்கிறது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சிந்தித்து தமது பெறுமதியான வாக்கினை அளிக்க வேண்டிய கடப்பாடுடையவர்கள். இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத் தமிழரசுக் கட்சியினராகிய நாம் நேற்று முன்தினம் எமது மாவட்ட, தொகுதி மற்றும் பிரதேச மட்ட மகளீர், வாலிபர் அணி உறுப்பினர்களை அழைத்து அவர்களது கருத்துக்களை உள்வாங்கியிருந்தோம். அந்தவகையில் நாம் அனைவரது தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்தே முடிவை எடுக்க வேண்டுமென்ற கருத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். அத்தோடு மாவட்டக் குழுவின் தீர்மானத்தை மத்திய குழுவுக்குச் சமர்ப்பிப்போம். வவுனியாக் கூட்டத்தில் கலந்து கொண்ட 33 உறுப்பினர்களில் ஒருவரைத் தவிர மற்றைய உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தேவையற்றதொன்று என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இவ்வாறான நிலையில் கட்சி உறுப்பினர்கள் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கும் வகையில் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் தமிழரசுக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் கட்சி உறுப்பினர்களிடையே குழப்பநிலை உருவாகலாம். நாம் கட்சி ரீதியாக பொது வேட்பாளருக்கு ஆதரிப்பதாக எதுவித கருத்தும் இதுவரை வெளியிடவில்லை. அவர் தனது விருப்பத்திற்கிணங்க சில கட்சிகளின் ஆதரவுடனே முன்னெடுக்கப்பட்ட விடயமாகும். அத்தோடு தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை தானே முதலில் குருக்கள் மடத்தில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டில் வெளிப்படுத்தியதாகவும் ஊடகமொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே இவ்வாறான தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அரங்கேற்றப்பட்டது என்பது முற்று முழுதான உண்மை. இவ்வாறான நிலையில் ரணில் விக்கிரமசிங்க தனக்கெதிராக நாமல் ராஜபக்ச களம் இறங்குவார் என எதிர்பார்க்கவில்லை. அவரின் நினைப்பில் ஜனாதிபதி தேர்தல் வரும்போது மொட்டுக்கட்சி தமக்கு ஆதரவளிக்குமென்ற உணர்வே காணப்பட்டது. தமிழ்ப் பற்றாளர்கள் ராஜபக்ச தரப்பினருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது தெரியும். அதனால்தான் வாக்கைப் பிரிக்கும் செயற்பாடாகத்தான் இருக்கும் என ஆரம்பத்திலிருந்தே கூறுகிறேன். இந்தப் பொது வேட்பாளர் என்ற விடயத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உறுதியாக இருக்கிறார். ஏனெனில் அவருக்கான அடையாளம் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவர். இது தமிழ் மக்களை அடகு வைக்கும் செயற்பாடாகும். இவ்வாறான காலகட்டத்தில் எமது இளைஞர்களின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு பதில் கூற வேண்டிய தேவையுள்ளது. இது நாம் எடுத்த தீர்மானமல்ல.இஸ்லாமிய சகோதர்களில் சிலர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ பக்கமும் இருக்கின்றனர். எனவே மாவட்ட தமிழ் மக்கள் எமது கட்சியின் முடிவின்படி செயற்பட வேண்டுமென்றார். http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தேவ-2/
  6. முன்னைய தேர்தல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அரசியல் கோலங்களுடன் 2024 ஜனாதிபதி தேர்தல் August 19, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இந்த தடவையே மிகவும் அதிக எண்ணிக்கையில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதுகாலவரையில் ஜனாதிபதி தேர்தல் பிரதான இரு அரசியல் கட்சிகளின் அல்லது அவற்றின் தலைமையிலான கூட்டணிகளின் வேட்பாளர்களுக்கு இடையிலான நேரடிப் போட்டியாகவே இருந்து வந்தது. ஆனால் இந்த தடவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான மும்முனைப் போட்டியாகவே தேர்தல் அமையப்போகிறது. இறுதி நேரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வனும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாரிசுவுமான நாமல் ராஜபக்ச களத்தில் இறக்கப்பட்டிருப்பதை அடுத்து மும்முனைப் போட்டி என்ற தோற்றப்பாட்டில் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்குமா என்ற கேள்வியுடன் சில அரசியல் அவதானிகள் குழப்பகரமான கருத்துக்களை வெளியிடுகிறார்கள். அதேவேளை நாமல் ராஜபக்சவையும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவையும் சேர்த்து ஐந்து பிரதான வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டியாக ஜனாதிபதி தேர்தலை சில ஊடகங்கள் காண்பிக்க முயற்சிக்கின்றன. விக்கிரமசிங்கவும் பிரேமதாசவும் பெருவாரியான கட்சிகள், குழுக்களுடன் சேர்ந்து கூட்டணிகளை அமைக்கிறார்கள். ராஜபக்சாக்களை கைவிட்டு வருபவர்கள் இருவருடனும் இணைகிறார்கள். சில கட்சிகளின் தலைவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு மாறாக அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்தத்தில் முடிவுகளை எடுத்து வெவ்வேறு அணிகளில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். கட்சித் தாவல்கள் தீவிரமடைந்திருக்கின்றன. எவர் எந்தப் பக்கம் நிற்கிறார் என்று குழப்பமாக இருக்கிறது. இந்த இலட்சணத்தில் புதிய அரசியல் கலாசாரம், முறைமை மாற்றம் பற்றியும் வாய்கூசாமல் பேச்சு. இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் முற்றிலும் வேறுபட்ட ஒரு அரசியல் சூழ்நிலையில் இடம்பெறுகிறது. இரு வருடங்களுக்கு முன்னர் ராஜபக்சாக்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட படுமோசமான பொருளாதார நெருக்கடி இலங்கையின் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையிலான பிரமாண்டமான மக்கள் கிளர்ச்சியை மூளவைத்தது. ராஜபக்சாக்களை அதிகாரத்தில் இருந்து விரட்டிய அந்த கிளர்ச்சிக்கு பிறகு முதற் தடவையாக தங்களது வாக்குரிமையை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இலங்கை வாக்காளர்களுக்கு கிடைத்திருக்கிறது. கிளர்ச்சியின் விளைவாக நாட்டு மக்களின் அரசியல் சிந்தனையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்குமானால் அதை இந்த தேர்தல் நிச்சயம் பிரதிபலிப்பதாக அமையவேண்டும். முன்னைய ஜனாதிபதி தேர்தல்களைப் போலன்றி இந்தத் தடவை பிரசாரங்கள் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்படி அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி விட்டன. சஜித் பிரேமதாசவும் அநுரா குமாரவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக கடந்த வருடமே அறிவித்து தங்கள் பிரசாரங்களை முன்னெடுக்கத் தொடங்கினார்கள். ஆனால், ஜனாதிபதி விக்கிரமசிங்கவை பொறுத்தவரை தேர்தலில் போட்டியிடப் போவதாக கடந்தமாத பிற்பகுதியிலேயே அறிவித்தார். அவரது ஐக்கிய தேசிய கட்சி பலவீனமடைந்திருப்பதால் தன்னை தேர்தலில் ஆதரிக்கக்கூடிய கூட்டணி ஒன்றை உருவாக்குவதில் அவர் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. தனது கட்சியின் சார்பிலான வேட்பாளராக அன்றி பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து பிரிந்து வந்திருப்பவர்களை உள்ளடக்கிய ஒரு விசித்திரமான கதம்பக் கூட்டணி ஒன்றின் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக அவர் போட்டியிடுகிறார். 32 அரசியல் கட்சிகள் குழுக்களை உள்ளடக்கிய கூட்டணி ஒன்று தொடர்பான உடன்படிக்கை கடந்த வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் பிரதான அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் தேசியத் தேர்தல் ஒன்றில் சுயேச்சையாக போட்டியிடுவது இதுவே முதற்தடவையாகும். பொதுஜன பெரமுனவின் சார்பில் தனியான வேட்பாளரை களமிறக்குவதற்கு ராஜபக்சாக்கள் தீர்மானித்ததை அடுத்து அவர்களைக் கைவிட்டு அந்த கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் பக்கத்துக்கு வந்து விட்டார்கள். அதனால் ஜனாதிபதி மகிழ்ச்சி அடைந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரும் தனக்கு கொண்டுவரக்கூடிய வாக்குகளின் எண்ணிக்கையைப் பற்றி உண்மையில் அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம். தங்கள் தொகுதிகளில் மக்கள் மத்தியில் ஜனாதிபதிக்கு ஆதரவு அதிகரித்துவருவதன் காரணமாகவே அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்சாக்களை கைவிட்டு அவரை ஆதரிக்க முண்டியடிக்கிறார்கள் என்று சில அவதானிகள் கூறுகிறார்கள். ராஜபக்சாக்களின் அதிவிசுவாசிகளாக இருந்த அரசியல்வாதிகள் கூட தங்களது ஆதரவாளர்களின் வேண்டுகோளின் பிரகாரமே விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு தாஙகள் தீர்மானித்ததாக பகிரங்கமாகக் கூறுகிறார்கள். ஜனாதிபதி தனது பிரசாரத்தை முற்றிலும் வித்தியாசமான ஒரு தந்திரோபாயத்துடன முன்னெடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. தன்னை அல்ல தேசத்தையே முன்னிலைப்படுத்தி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்போவதாக அவர் பிரகடனம் செய்திருக்கிறார். எவரையும் எதிர்த்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் மற்றைய வேட்பாளர்களைப் போலன்றி தனது எதிர்காலத்துக்காக அல்ல நாட்டின் எதிர்காலத்துக்காகவே போட்டியிடுவதாகவும் கூறும் அவர் தேர்தலில் வெற்றிபெற்றால் சகல கட்சிகளுடனும் சேர்ந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். “என்னுடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு பிரேமதாசவுக்கும் அநுரா குமாரவுக்கும் முன்னரும் நான் அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர்கள் அதை நிராகரித்துவிட்டார்கள். அதற்காக அவர்கள் இப்போது கவலைப்படக்கூடும். அடுத்த தடவை அவர்களை எந்த ஆட்சேபனையும் இல்லாமல் அரசாங்கத்திற்குள் கொண்டுவருவேன். அவர்களுக்கு மாத்திரமல்ல, பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான நாமல் ராஜபக்சவுக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என்று கடந்த வாரம் பத்திரிகை ஆசிரியர்களையும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்தபோது ஜனாதிபதி கூறினார். தேர்தல் பிரசார மேடைகளில் பெரும்பாலும் அவர் எந்த வேட்பாளரையும் தாக்கிப் பேசப்போவதில்லை என்பது நிச்சயம் என்று தெரிகிறது. இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்து அபிவிருத்தியை நோக்கி வழிநடத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையே ஒரேயொரு மார்க்கம் என்று கூறும் அவர் அந்த உடன்படிக்கையின் பிரகாரம் தனது தலைமையிலான அரசாங்கம் கடந்த இரு வருடங்களாக முன்னெடுத்துவரும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடருவதற்கு தனக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஆணை தருமாறு மக்களை கேட்கிறார். மற்றைய பிரதான வேட்பாளர்களும் கூட சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை எதிர்க்கவில்லை என்பதையும் சில திருத்தங்களுடன் அதையே தொடரப் போவதாகக் கூறுவதையும் ஜனாதிபதி சுட்டிக் காட்டுகிறார். புதிய வாக்குறுதிகளை அவர் வழங்கவில்லை. தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்கே அவர் மக்களின் ஆணையைக் கோருகிறார். அத்துடன் கடந்த காலத்தைப் போன்று கட்சி அரசியல் செய்வதில் நாட்டம் காட்டாமல் சகல கட்சிகளும் ஆதரிக்கக்கூடிய ஒரு சுயேச்சை வேட்பாளராகவே தன்னை முன்னிறுத்தியிருக்கும் விக்கிரமசிங்க கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட புதிய ஒரு ‘அவதாரமாக’ தன்னைக் காட்சிப்படுத்துகிறார். ஆழமான கட்சி அரசியல் போட்டாபோட்டிகள் நிறைந்த அரசியல் கலாசாரத்தைக் கொண்ட இலங்கைச் சமுதாயத்தில் ஜனாதிபதியின் தற்போதைய அணுகுமுறை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் மக்கள் மத்தியில் அதற்கு எந்தளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதும் முக்கியமான கேள்விகள். கடந்த வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் தங்களது நியமனப்பத்திரங்களை கையளித்த பிறகு மூன்று பிரதான வேட்பாளர்களும் ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். “இலங்கை மக்களுக்கு பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்காகவே நான் மக்களின் ஆணையை நாடி நிற்கிறேன். நாம் நாட்டைப் பொறுப்பேற்று உறுதிப்பாட்டைக் கொண்டுவந்தோம். உங்களுக்கு இப்போது உணவு, எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் எல்லாம் கிடைக்கின்றன. இது ஒரு தொடக்கம் மாத்திரமே. உறுதிப்பாடுடைய ஒரு தேசமாக இலங்கையை மாற்றுவதற்கு பெருமளவு பணிகளை செய்ய வேண்டியிருக்கிறது. நாம் ஆட்சிப்பொறுப்பை ஏற்று சட்டம் ஒழுங்கை நிவைநாட்டியிருக்காவிட்டால் பங்களாதேஷின் கதி இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும். அதனால் இந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு எனக்கு ஒரு ஆணையைத் தருமாறு மக்களிடம் வேண்டுகிறேன். “நெருக்கடியான காலப்பகுதியில் நாட்டைப் பொறுப்பேற்குமாறு கேட்கப்பட்டபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பயந்து ஓடினார்கள். அத்தகைய ஆட்களிடம் நாட்டைக் கையளிக்கப் போகின்றீர்களா இல்லையா என்பதை தீர்மானியுங்கள்” என்று ஜனாதிபதி கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது தந்தையார் பாணியில் பொதுமக்கள் யுகம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக சூளுரைத்தார். “பொதுமக்களின் யுகம் ஒன்றை உருவாக்குவதாக நான் உறுதியளிக்கிறேன். அபிவிருத்தியின் பயன்களை நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் அனுபவிக்கக்கூடிய சூழ்நிலையை நான் உருவாக்குவேன். எனக்கு ஆதரவாக அணிதிரளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று அவர் கூறினார். மக்களுக்கு மாற்றம் ஒன்று அவசியமாகத் தேவைப்படுகிறது என்று கூறிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார தங்களது முகாம் மாத்திரமே அத்தகைய மாற்றத்தை கொண்டுவரக்கூடிய வல்லமையைக் கொண்டது என்று குறிப்பிட்டார். “கடந்த காலத்தில் பெருமளவு தேர்தல்கள் நடத்தப்பட்ட போதிலும் கூட வருடக்கணக்காக மககள் சொல்லொணா இடர்பாடுகளை அனுபவித்தார்கள். இந்த தேர்தலில் எங்களால் வெற்றிபெற முடியும். துன்பங்களை அனுபவிக்கும் நிலவரம் மாறவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நாட்டையும் மக்களையும் இடர்பாடுகளில் இருந்து மீட்டெடுக்கக்கூடியதாக இந்த தேர்தலை எம்மால் மாற்றமுடியும். அதை எமது முகாமினால் மாத்திரமே சாதிக்கமுடியும் ” என்று அவர் கூறினார். நாமல் ராஜபக்சவை பொறுத்தவரை தனது அரசியல் எதிர்காலத்தை மனதிற்கொண்டு பொதுஜன பெரமுனவை மீளக்கட்டியெழுப்பும் ஒரு முயற்சியாகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். மக்கள் கிளர்ச்சியின் விளைவாக ராஜபக்ச குடும்பம் ஆட்சியதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டதற்கு பிறகு அந்த குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறார் என்பதே நாமல் ராஜபக்சவின் பிரவேசத்தைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாகும். ராஜபக்ச குடும்பத்தின் எந்தவொரு உறுப்பினரும் இந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. ஜனாதிபதி விக்கிரமசிங்கவை ஆதரிப்பதே அவர்களுக்கு இருக்கக்கூடிய சிறந்த தெரிவு என்று ஒரு கட்டத்தில் பரவலாக நம்பப்பட்டது. ஆனால் தங்களது எதிர்கால அரசியல் வாய்ப்புக்களை உறுதிசெய்யும் நோக்கில் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அல்லது நிபந்தனைகளுக்கு இணங்குவதற்கு ஜனாதிபதி திட்டவட்டமாக மறுத்துவிட்டதை அடுத்து பொதுஜன பெரமுனவின் சார்பில் தனியான வேட்பாளரை நிறுத்தும் முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். விக்கிரமசிங்கவுடன் முரண்படுவதற்கு முன்னதாகவே தங்களது கட்சியின் சார்பில் நிறுத்தப்படக்கூடிய வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை முன்னிறுத்தியதன் மூலம் ஜனாதிபதியை பயமுறுத்தும் பாணியில் ராஜபக்சாக்கள் நடந்துகொண்டார்கள். தங்களுக்கு மக்கள் மத்தியில் தற்போது இருக்கின்ற செல்வாக்கை பரீட்சித்துப் பார்ப்பதற்கான ஒரு உரைகல்லாக தம்மிக்கவையும் அவரது பணத்தையும் பயன்படுத்தும் ராஜபக்சாக்களின் பிரயத்தனம் இறுதியில் பயனளிக்கவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று அவர் கடைசி நிமிடத்தில் அறிவித்தார். அதனால் வேறு வழியின்றி நாமல் ராஜபக்சவை களமிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ராஜபக்சாக்களுக்கு ஏற்பட்டது. தேர்தலில் போட்டியிடாவிட்டால் பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கி சிதறடிக்கப்பட்டுவிடும் என்றும் அதனால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அஞ்சிய ராஜபக்சாக்கள் கட்சியைப் பாதுகாப்பதற்காக நாமல் ராஜபக்சவை போட்டியிட வைத்திருக்கிறார்கள். ஆனால் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு மக்கள் வாக்களிக்கப் போகிறார்களா அல்லது பொதுஜன பெரமுனவை பாதுகாக்க வாக்களிக்கப் போகிறார்களா? போரை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக தங்களது தவறுகளைப் பொருட்படுத்தாமல் சிங்கள மக்கள் என்றென்றைக்கும் தங்களுக்கு விசுவாசமானவர்களாக இருக்கவேண்டும் என்ற விபரீதமான எண்ணம் ராஜபக்சாக்களிடம் நிலைகொண்டிருக்கிறது. அதேவேளை, சாத்தியமானளவுக்கு கூடுதல்பட்ச வாக்குகளைப் பெறுவதற்காக ராஜபக்சாக்கள் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் உரிமைகளுக்கும் அபிலாசைகளுக்கும் எதிராக பெரும்பான்மையினவாத அணிதிரட்டலை மீண்டும் செய்வதில் நாட்டம் காட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மூன்று பிரதான வேட்பாளர்களும் தேர்தல் நோக்கங்களுக்காக என்றாலும், சிறுபான்மைச் சமூகங்களுக்கு நேசக்கரத்தை நீட்டுவதால் ராஜபக்சாக்களின் முயற்சிகள் சிங்கள மக்கள் மத்தியில் இந்த தடவை பெரிதாக எடுபடுவதற்கு வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. எதிர்காலத்தில் நாட்டுக்கு தலைமை தாங்கும் குறிக்கோளைக் கொண்ட இளம் அரசியல் தலைவரான நாமல் ராஜபக்ச தனது குடும்பத்தின் மூத்தவர்களைப் போலன்றி இனவாதமற்ற அரசியல் பாதையை தெரிவுசெய்தால் ஆரோக்கியமானதாக இருக்கும். அவ்வாறு தன்னை மாற்றிக் கொள்வதற்கு முன்வருவாரா? குறைந்த பட்சம் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆரோக்கியமான ஒரு நிலைப்பாட்டை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவிப்பதன் மூலம் இனங்களுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான தனது சிந்தனையை அவர் வெளிக்காட்ட முடியும். ஜனாதிபதி தேர்தலில் 23 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் 16 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச போன்ற முன்னணி அரசியல்வாதிகளும் அவர்களில் அடங்குவர். ஜனாதிபதியாக தெரிவாவதற்கு அல்லாமல் வேறு நோக்கங்களுக்காகவே அவர்கள் போட்டியிடுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. பெருவாரியான சுயேச்சை வேட்பாளர்களைப் பொறுத்தவரையிலும் கூட நிலைமை அதுவே. ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியில் முன்னரங்கத்தில் நின்ற செயற்பாட்டாளர்களால் ஒரு பிரிவினரால் அமைக்கப்பட்ட ‘மக்கள் போராட்டக் கூட்டணி ‘ என்ற இயக்கத்தின் சார்பில் நுவான் போபகே என்ற சட்டத்தரணி தேர்தலில் போட்டியிடுவதும் கவனிக்கத்தக்கது. வழமையாக ஜனாதிபதி தேர்தல்களில் முக்கியத்துவம் பெற்றுவந்த சில அடிப்படைப் பிரச்சினைகள் இந்த தடவை பிரதான வேட்பாளர்களின் கவனத்தைப் பெறுவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. குறிப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கைக்கு அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை 13 வது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் பொலிஸ், காணி போன்ற முக்கிய அதிகாரங்கள் குறித்து தெளிவற்ற நிலைப்பாடுகளுடன் கூடிய அறிவிப்புக்களை தவிர வேறு எதையும் பிரதான வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களில் எதிர்பார்க்க முடியாது. இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு சமஷ்டி அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு தயாராக இருப்பதாக தென்னிலங்கையின் எந்த வேட்பாளராவது உறுதியளித்தால் அவரை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என்று கூறும் அரசியல்வாதிகளும் வடக்கில் இருக்கிறார்கள். இன்றைய அரசியல் நிலைவரங்கள் குறித்த அவர்களது புரிதலின் இலட்சணம் அது. இது இவ்வாறிருக்க, தமிழ்ப் பொது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு என்ற புதிய அமைப்பினால் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு ஆரம்பத்தில் இருந்தே தமிழ்ப்பொது வேட்பாளராக நியமிக்கப்படக்கூடியவருக்கு இருக்கவேண்டியவை என்று வரையறுத்த தகுதிகள் சகலவற்றுக்கும் முரணாக அரியநேத்திரனின் நியமனம் இடம்பெற்றது. அரியநேத்திரன் தமிழ்த் தேசிய அரசியல் அபிலாசைகளின் ஒரு குறியீடே தவிர வேறு ஒன்றுமில்லை என்று அவரை நியமித்தவர்கள் கூறுகிறார்கள். அவரும் தனது குறியீட்டுக் கடமை தேர்தல் தினத்துடன் முடிந்துவிடும் என்று கூறுகிறார். அதனால் அவரைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. அவரை நிறுத்தியவர்கள் தேர்தல் பிரசாரங்களை எவ்வாறு முன்னெடுக்கப்போகிறார்கள்? தேரதலுக்கு பிறகு என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். (ஈழநாடு ) https://arangamnews.com/?p=11118
  7. ‘விளக்கம் எதுவும் கோரி கடிதம் எனக்கு அனுப்பப்படவில்லை’: பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் கருத்து August 19, 2024 பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேத்திரன் அவர்களுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ‘இலக்கு‘ ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன், ”இதுவரையில் தமிழரசுக்கட்சியிடம் இருந்து விளக்கம் கோரிய கடிதம் எனக்கு எதுவும் அனுப்பப்படவில்லை. ஏற்கனவே ஒரு வாரத்துக்கு முதல் ஒரு கூட்டம் கூட்டப்பட்டு அதில் 7 நாட்களுக்குள் பதில் தரவேண்டும் என்றொரு செய்தி வந்திருந்தது. பின் நேற்று மீண்டும் இரண்டாம் முறையாக கூட்டப்பட்ட கூட்டத்தில் 2 வாரத்துக்குள் விளக்கம் தர வேண்டும் என செய்திகளைப் பார்த்தேன். ஆனால் எனக்கு எந்த விளக்கமும் கோரி கடிதங்கள் அனுப்பப்படவில்லை. அப்படி அனுப்பப்பட்டால் அதற்குப் பதில் அளிக்க நான் தயாராக இருக்கிறன். எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது, பொது வேட்பாளர் தெரிவு தொடர்பில் அடிக்கடி கூட்டம் கூட்டப்படுவது எந்தமாதிரியான மன நிலையில் அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர் எனத் தெரியவில்லை. நான் பொது வேட்பாளராக போட்டியிடுவதன் நோக்கம், தந்தை செல்வாவின் கொள்கையின் அடிப்படையில் தான் நான் போட்டியிட முடிவெடுத்துள்ளேன். ஆகவே நான் 22ம் திகதி என்ன முடிவு வருதோ அதை ஏற்றுக்கொள்ளத்தயாரக இருக்கிறேன். பொது வேட்பாளராக நான் போட்டியிடுவது தவறாக இருந்தால், ஜனாதிபதித்தேர்தலில் யாரை ஆதரிக்கப்போகின்றார்கள் என்ற எந்த ஒரு முடிவையும் கட்சி இது வரையில் எடுக்கவில்லை. ஆனால் இது தொடர்பில் முடிவெடுக்காமலே கட்சியில் இருக்கிறவர்கள் தனிதனியாகக் கருத்துக்களைக் கூறுகின்றார்கள். அவர்களுக்கு எதிராக கட்சி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற வருத்தம் எனக்குள்ளது. ஏன் பொதுவேட்பாளராக நியமிக்கப்பட்ட இவ்வாறு துரிதமான கூட்டங்களை நடத்துகின்றனர் என்பதை மக்கள் மற்றும் தமிழ்தேசியத்தில் பற்றுள்ளவர்கள் உண்ர்ந்து கொள்ள வேண்டும் என்றுதான் என்னால் கூற முடியும்” என்றார். https://www.ilakku.org/i-have-not-been-sent-a-letter-seeking-any-explanation-general-candidate-b-aryanethrans-opinion/
  8. ஜனாதிபதி தேர்தல்; வாக்களிப்பது எப்படி?; 50 வீதம் கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? இம்முறை பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் பலர் போட்டியிடுகின்றமையினால் 2 ஆம் , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஆகவே தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் யாருக்கும் கிடைக்காத பட்சத்தில் 2 , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக வாக்காளர்கள் தெளிவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ந.ஜெயகாந்தன் இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதிகளவில் வாக்குகளை பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படும் மற்றும் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையில் நிலவும் கடும் போட்டியால் இம்முறை எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காதுபோகும் நிலைமையே காணப்படுகின்றது. இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், அவர்களில் சுயேச்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளராக சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள் சக்தி வேட்பாளரராக அனுரகுமார திஸாநாயக்கவும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நாமல் ராஜபக்‌ஷவும் போட்டியிடுவதுடன், இவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ, வர்த்தகர் திலித் ஜயவீர ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோன்று தமிழ்ப் பொது வேட்பாளராக அரியநேந்திரனும் களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் இம்முறை தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காது போகலாம் என்பதுடன், இதனால் தேர்தலில் 2 ஆம் , 3ஆம் விருப்பத் தெரிவு வாக்குகள் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் போது 2 ஆம் , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை இது வரையில் உருவாகியிருக்கவில்லை. ஆனபோதும் இம்முறை பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் பலர் போட்டியிடுகின்றமையினால் 2 ஆம் , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் யாருக்கும் கிடைக்காத பட்சத்தில் 2 , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக வாக்காளர்கள் தெளிவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. முதலில் வாக்களிக்கும் முறை தொடர்பாக அவதானம் செலுத்துவோமாக இருந்தால், தேர்தலில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் வேட்பாளர் ஒருவருக்கோ அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகளையோ வாக்குச்சீட்டில் அடையாளமிட முடியும். குறிப்பாக வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்புவாராயின் தான் விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியில் மட்டும் 1 என்ற இலக்கத்தை அல்லது X எனும் புள்ளடியை இடுவது பொருத்தமாகும். அல்லது முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் இருக்குமாயின் முதலாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியினுள் 1 எனவும் இரண்டாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 2 எனவும் மூன்றாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 3 எனவும் அடையாளமிடுவது பொருத்தமாகும். இதேவேளை எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கொன்று அடையாளமிடப்படாத அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு X என்ற அடையாளமிடப்பட்டுள்ள அல்லது ஒரு வேட்பாளருக்கு 1 எனவும் மற்றுமொரு வேட்பாளருக்கு X என்ற அடையாளமும் இடப்பட்டுள்ள அல்லது இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் மாத்திரம் அடையாளமிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டுக்கள் செல்லுபடியற்றதானதாகும் என்பதுடன் வாக்கு எண்ணும் போது அவை நிராகரிக்கப்படும். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு முறைமை இவ்வாறாக இருக்கும் நிலையில், சிலருக்கு விருப்பத் தெரிவு வாக்களிப்பு முறை தொடர்பாக குழப்பங்கள் காணப்படுகின்றன. ஏன் இந்த முறைமை காணப்படுகின்றது. அதனால் என்ன பிரயோசனம்? மற்றைய தேர்தல்களின் போது இப்படி இலக்கமிட்டு வாக்களிப்பதில்லையே என்ற கேள்விகள் அவர்களிடையே எழுகின்றன. அதாவது ஜனாதிபதித் தேர்தல் என்பது முழு நாட்டிற்கும் ஒரு நபரை தெரிவு செய்வதற்கான தேர்தலாகவே காணப்படுகின்றது. இதனால் அவர் பெரும்பான்மையான ஆதரவை பெற்றவராக இருக்க வேண்டும். இதன்படி அந்த நபர் ஜனாதிபதியாக வேண்டுமென்றால் தேர்தலின் போது அளிக்கப்பட்டு செல்லுபடியான வாக்குகளில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அதாவது குறைந்தது 50 வீத வாக்குடன் மேலதிகமாக ஒரு வாக்கை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான நிலைமையில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்தை விடவும் அதிகமான வாக்குகள் கிடைக்காது போகும் பட்சத்தில் மீண்டும் தேர்தலை நடத்தாது அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த விருப்பத் தெரிவு முறைமை பின்பற்றப்படுகின்றது. குறிப்பாக இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் வரையில் போட்டியிடும் நிலையில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காது அடுத்தக்கட்ட்டமாக விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறானவொரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் விருப்பத் தெரிவு வாக்குகள் எவ்வாறு எண்ணப்படும் என்பது தொடர்பாக உதாரணங்களுடனான விளக்கத்தைப் பார்ப்போம். தேர்தலில் A, B, C, D மற்றும் E என்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதாக எடுத்துக்கொண்டால் அவர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்காக அளிக்கப்பட்டுள்ள வாக்குகளில் 100 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக கருதுவோம். இதன்படி A = 40 , B = 35 , C = 15 , D = 6 , E = 4 என்ற அடிப்படையில் வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என்று வைத்துக்கொள்வோம். இவ்வாறாக இவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளுக்கமைய எவரும் 50 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன்போது முதல் இரண்டு இடங்களை வகிப்பவர்களை தவிர்த்து மற்றையவர்கள் போட்டியிலிருந்து விலக்கப்பட்டவர்களாக கருதப்படுவர். இதன்படி இந்த இடத்தில் A என்பவரும் B என்பவரும் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றனர். C , D , E ஆகியோர் போட்டியிலிருந்து விலக்கப்படுகின்றனர். ஆனபோதும் C , D , E ஆகியோருக்குரிய 25 வாக்கு வாக்கு சீட்டுகளும் A மற்றும் B ஆகியோருக்கு கிடைத்துள்ள 2 ஆம் , 3 ஆம் விருப்பு வாக்குகளை எண்ணுவதற்காக எடுத்துக்கொள்ளப்படும். இவ்வேளையில் முதல் இரண்டு இடங்களை பெற்றுக்கொண்டுள்ள A என்பவருக்கும் B என்பவரினதும் முதலில் எண்ணப்பட்ட வாக்குச்சீட்டுகள் மீண்டும் எண்ணுவதற்கு எடுத்துக்கொள்ளப்படாது. அத்துடன் அந்த வாக்கு சீட்டுகளில் காணப்படும் விருப்பத் தெரிவு வாக்குகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இதனைத் தொடர்ந்து 15 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ள C என்பவரின் வாக்குச் சீட்டுகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும். இதன்போது Cயிற்காக மாத்திரம் புள்ளடியிடப்பட்ட மற்றும் அவருக்கு 1 என்று குறிப்பிட்டு வேறு யாருக்கும் விருப்பு வாக்குகள் குறிப்பிடப்படாத வாக்குச்சீட்டுகள் ஒதுக்கப்படும். இதன் பின்னர் Cயிற்கு 1 எனவும் A அல்லது Bயிற்கு 2 எனவும் விருப்பத் தெரிவு வாக்கு வழங்கப்பட்டிருக்குமாயின் Aயிற்குறிய வாக்கு சீட்டு அதற்குரிய பெட்டியிலும் Bயிற்குறிய வாக்கு சீட்டு அதற்குறிய பெட்டியிலும் போடப்படும். இதேவேளை Cயிற்கு 1 என குறிப்பிடப்பட்டுள்ள வாக்கு சீட்டியில் 2 ஆவது விருப்பு வாக்கு Dயிற்கோ அல்லது Eயிற்கோ குறிப்பிடப்பட்டிருந்தால் 3 ஆவது விருப்பு வாக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ளதா என ஆராயப்படும். அவ்வாறாக 3 ஆவது விருப்பு வாக்கு Aயிற்கோ அல்லது Bயிற்கோ குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த வாக்கு சீட்டு A அல்லது B ற்காக ஒதுக்கப்பட்டுள்ள குறித்த பெட்டியினுள் போடப்படும். ஆனபோதும் அந்த வாக்கு சீட்டில் 2 ஆவது விருப்பு வாக்கு Dயிற்கும் 3 ஆவது விருப்பு வாக்கு Eயிற்கும் குறிப்பிடப்பட்டிருந்தால் அது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாது ஒதுக்கி வைக்கப்படும். இதேவேளை D மற்றும் E ஆகியோருக்குரிய வாக்குச்சீட்டுகளும் ஆராயப்பட்டு A அல்லது Bயிற்கு 2 மற்றும் 3 ஆம் விருப்பு வாக்குகள் குறிப்பிடப்பட்டிருந்தால் அதற்குரிய பெட்டிகளுக்குள் போடப்படும். இவ்வாறாகவே C , D , Eக்குரிய 25 வாக்குகளும் எண்ணப்பட்டு A , Bக்குரிய விருப்பு வாக்குகள் ஆராயப்படும். இவ்வாறாக 2ஆம் மற்றும் 3ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் போது Aயிற்கு 3 மேலதிக வாக்குகளும் Bயிற்கு மேலதிகமாக 10 வாக்குகளும் கிடைத்துள்ளதாக கருதுவோமாகவிருந்தால் Aயிற்கு முதலில் கிடைத்த வாக்குகள் அடங்கலாக மொத்தமாக 43 வாக்குகள் ( A= 40+3 = 43) கிடைத்துள்ளன. அதேபோன்று Bயிற்கு 45 வாக்குகள் (B = 35+10 = 45)கிடைத்துள்ளன. இதன்படி தற்போது 88 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக இருக்கின்ற நிலையில் அவற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற B என்பவர் வெற்றி பெற்றவராக கருதப்படுவார். இதேவேளை 2 ஆம் மற்றும் 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்கு எண்ணும் நடவடிக்கையின் பின்னர் A என்பவரும் B என்பவரும் சமமான வாக்குகளை பெற்றுக்கொள்வார்களாக இருந்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திருவுளச்சீட்டு மூலம் மேலதிக வாக்கொன்றை வேட்பாளர் ஒருவருடன் இணைத்து அவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க நடவடிக்கையெடுக்கப்படும். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காவிட்டால் மேற்கூறிய முறைமையே பின்பற்றப்படும். இதேவேளை இந்தத் தேர்தலில் 1 , 2 , 3 ஆம் விருப்பத் தெரிவு அடிப்படையில் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதற்கு எண்ணியுள்ள வாக்காளர்கள் சில விடயங்களை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதாவது தேர்தலில் 39 வரையான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதும் அவர்களில் நால்வருக்கிடையில் கடும் போட்டி நிலவுகின்றது. இவ்வாறான நிலைமையில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படுபவர்களுக்கு 1 ஆம் விருப்பை வழங்கிவிட்டு மற்றைய சாதாரண வேட்பாளர்களுக்கு 2 , 3 ஆம் விருப்பு வாக்குகள் வழங்கப்படுமாக இருந்தால் இரண்டாவது வாக்கு எண்ணும் நடவடிக்கையில் போது அந்த வாக்குச்சீட்டு கவனத்தில் கொள்ளப்படாதவொன்றாகவே அமையும். குறிப்பாக யாருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் 2 ஆம் , 3 ஆம் விருப்ப தெரிவு வாக்குகளை எண்ணும் போது அதிகூடிய வாக்குகளை பெற்றுக்கொண்ட இரண்டு வேட்பாளர்களுக்கு கிடைத்துள்ள 2 , 3 ஆம் விருப்பு வாக்குகள் மாத்திரமே எண்ணப்படும். இவ்வேளையில் ஏற்கனவே பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் கிடைத்துள்ள 1ஆம் விருப்பு வாக்கு எண்ணப்பட்டிருப்பதால் அந்த வாக்கு சீட்டுகள் மீண்டும் வாக்கு எண்ணப்படும் போது எடுத்துக்கொள்ளப்படாது. இதன்போது அவர்கள் இருவர் தவிர்த்த மற்றைய வேட்பாளர்களுக்காக முதலாம் விருப்ப தெரிவு வாக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டுகளில் 2 , 3 ஆம் விருப்ப தெரிவு வாக்குகளே எண்ணப்படும். இதனால் விருப்ப தெரிவு வாக்குகளை வழங்க விரும்பின் சாதாரண வேட்பாளர் ஒருவருக்கு 1 ஆம் விருப்பை வழங்கிய பின்னர் பிரதான வேட்பாளருக்கு 2 ஆவது விருப்பு வழங்கப்பட்டிருக்குமாக இருந்தால் பிரயோசமானதாக அமையும் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும். https://thinakkural.lk/article/307995
  9. அரியநேத்திரனுக்கு இரண்டு வார அவகாசம்; கட்சிக் கூட்டங்களில் பங்கேற்கவும் தடை பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேத்திரனுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்றையதினம் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரதான வேட்பாளர்களுடன் போச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எமது அடிப்படை நிலைப்பாடு வடக்கு – கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஆகும். மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாகவும், பேசிய விடயங்களையும் கூட்டத்தில் தெரியப்படுத்தினோம். சில முன்னேற்றகரமான கருத்துக்களை அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவர்களது தேர்தல் அறிக்கை வெளிவந்த பின்னரே எமது இறுதி முடிவு எடுக்கப்படும். நாமல் ராஜபக்ஸ அவர்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து சந்தித்து இருந்தார். அவர்களிடம் உள்ள விடயங்களை தெரியப்படுத்தினார். அது அதி தீவிர சிங்கள வாக்குளை பெற்றுக் கொள்வதை நோக்கமாக கொண்டிருந்தது. அதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் கலந்துரையாடியிருந்தோம். தற்போது தெற்கில் சிங்கள பௌத்த பேரினவாதம் தலைத் தூக்காமல் உள்ளது. அது தொடர்பில் கலந்துரையாடினோம். எமது மக்களை வழிகாட்டுவதற்காக நாங்கள் ஆவணம் ஒன்றை தயாரிக்கவுள்ளோம். அதற்கான சிறு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் பொது வேட்பாளராக வர்ணிக்கப்பட்டுள்ள அரியநேந்திரன் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது என குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/308047
  10. விமல் தரப்பினர் நல்லூர் கந்தனை வழிபட்டனர் Freelancer / 2024 ஓகஸ்ட் 18 , பி.ப. 08:59 - 0 ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட தரப்பினர் யாழ்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் தற்போது திருவிழா இடம்பெற்று வரும் நிலையில், அவர்கள் நேற்று அங்கு சென்றுள்ளனர். இதேவேளை, சர்வஜன அதிகார கூட்டணியின் முதலாவது அங்குரார்ப்பண தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றது. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/விமல்-தரப்பினர்-நல்லூர்-கந்தனை-வழிபட்டனர்/175-342396
  11. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படும் ; சஜித் உறுதி ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பாராளுமன்ற ஜனநாயக முறைமை ஏற்றுக்கொள்ளப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (18) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, ஜனாதிபதி முறைமையை மாற்றியமைப்பதாக எவ்வளவோ பேர் தம்பட்டம் அடித்தாலும் எவரும் செய்யவில்லை. எனக்கு பதவிகள் வேண்டாம். நான் ஒன்று உறுதியளிக்கிறேன். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நிச்சயமாக ஒழிக்கப்படும். ராஜபக்ஸவிடம் முறையிட்டு நாட்டை திவாலாக்கிய குழுவின் பிரதான பாதுகாவலர் தான் ஜனாதிபதி. ராஜபக்ஸவை பாதுகாக்கும் பொலிஸ்மா அதிபர் ரணில் விக்ரமசிங்க என்றும் குறிப்பிட்டார். R https://www.tamilmirror.lk/செய்திகள்/நிறைவேற்று-அதிகார-ஜனாதிபதி-முறை-நீக்கப்படும்-சஜித்-உறுதி/175-342398
  12. சங்கும் சிலிண்டரும் - நிலாந்தன் இலங்கைத் தீவின் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய நிலைமைகள் வளர்ந்து வருகின்றனவா? முதலாவது சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி. அவர் காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இலங்கைத் தீவின் தேர்தல் வரலாற்றில் ஒரு ஜனாதிபதி சுயேட்சைச் சின்னத்தில் போட்டியிடுவது இதுதான் முதல் தடவை. உண்மையில் அவர் சுயேச்சை அல்ல. தாமரை மொட்டு கட்சியின் பெரும்பாலான பகுதி அவருக்கு பின் நிற்கின்றது. அப்படிப் பார்த்தால், அவர் தாமரை மொட்டுக்களின் மறைமுக வேட்பாளர்களில் ஒருவர். தாமரை மொட்டுக் கட்சி என்பது யுத்த வெற்றிக்கு பின் எழுச்சி பெற்றது. ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை குடும்பமயப்படுத்தி நிறுவனமயப்படுத்தி கட்டியெழுப்பியதே பொதுஜன பெரமுன எனப்படும் தாமரை மொட்டுக் கட்சியாகும். ஆனால் ரணில் இப்பொழுது அதில் பெரும் பகுதியைச் சாப்பிட்டு விட்டார். இலங்கைத் தீவின் கட்சி வரலாற்றில் இறுதியாகத் தோன்றிய பெரிய கட்சியும் சிதையும் ஒரு நிலை. அதன் விளைவாகத்தான் ரணில் சுயேட்சையாக நிற்கிறார். ரணில் சுயேட்சையாக நிற்கிறார் என்பதற்குள் ஓர் அரசியல் செய்தியுண்டு. அது என்னவென்றால் இலங்கைத்தீவின் பிரதான கட்சிகள் யாவும் சிதைந்து போகின்றன என்பதுதான். இலங்கைத் தீவின் மூத்த கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் வாரிசு அவர். ஆனால் அந்தக் கட்சி சிதைந்து சஜித் பிரேமதாசாவின் தலைமையில் வேறொரு கட்சி ஆகிவிட்டது. அதுபோல இலங்கைத் தீவின் மற்றொரு பெரிய பாரம்பரிய கட்சியாகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிதைந்து அதிலிருந்துதான் தாமரை மொட்டுக் கட்சி தோன்றியது. இப்பொழுது தாமரை மொட்டுக் கட்சியும் சிதையத் தொடங்கிவிட்டது. இக்கட்சிகள் ஏன் சிதைக்கின்றன? ஏனென்றால் இலங்கைத் தீவின் ஜனநாயகம் சிதைந்து விட்டது. இலங்கைத் தீவின் ஜனநாயகம் எங்கே சிதையத் தொடங்கியது? இலங்கை தீவின் பல்லினத்தன்மையை சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் ஏற்றுக்கொள்ளத் தவறியபோதுதான். அதாவது இனப்பிரச்சினைதான் இலங்கைத் தீவின் பாரம்பரிய கட்சிகள் சிதைவதற்குக் காரணம். ஈழப் போரின் விளைவாக சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் பாரம்பரிய கட்சிகள் இரண்டுமே சிதைந்து விட்டன. அந்த சிதைவிலிருந்து தோன்றிய மற்றொரு பெரிய கட்சியும் சிதையத் தொடங்கிவிட்டது. அந்தச் சிதைவின் வெளிப்பாடுதான் ரணில் சுயேட்சையாக நிற்பது. அதாவது இனப்பிரச்சனையைத் தீர்க்கத் தவறினால் இலங்கைத் தீவின் ஜனநாயகம் மேலும் சிதையும் என்பதன் குறியீடு அது. அவருடைய சின்னம் சிலிண்டர். அதுவும் ஒரு குறியீடு எந்த ஒரு சிலிண்டருக்காக நாட்கணக்கில் மக்கள் வரிசையில் காத்து நின்றார்களோ அதே சிலிண்டர்தான். அது நாட்டை பொருளாதார ரீதியாக அவர் மீட்டெடுத்ததன் அடையாளமாகக் காட்டப்படக்கூடும். எனினும் ஒரு நாட்டின் ஜனாதிபதி சுயேட்சையாகப் போட்டியிடும் அளவுக்கு நாட்டின் கட்சி நிலவரம் உள்ளது என்பதை அது காட்டுகிறது. அதாவது ரணில் ஒரு வெற்றியின் சின்னமாக இங்கு தேர்தலில் நிற்கவில்லை. சிதைவின் சின்னமாகத்தான் தேர்தலில் நிற்கின்றார். மற்றொரு சுயேச்சை, தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன். அவருடைய சின்னம் சங்கு. அது மகாவிஷ்ணுவின் கையில் இருப்பது. போர்க்களத்தில் வெற்றியை அறிவிப்பது. சுடச்சுட பண்பு கெடாது வெண்ணிறமாவது. தமிழ்ப் பண்பாட்டில் பிறப்பிலிருந்து இறப்புவரை வருவது. பிறந்த குழந்தைக்கு முதலில் சங்கில் பாலூட்டுவார்கள். திருமணத்தில் முதலில் பாலூட்டுவது சங்கில்தான். இறப்பிலும் சங்கு ஊதப்படும். அரியநேத்திரன் ஒரு குறியீடு. அவருடைய சின்னமும் ஒரு குறியீடு. தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகின்றவர், தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீடு. தமிழ்ப்பொது நிலைப்பாடு என்பது பிரயோகத்தில் தமிழ் ஐக்கியம்தான். தமிழ் ஐக்கியத்தின் குறியீடாக நிக்கும் ஒருவர் சுயேட்சையாக நிற்பதன் பொருள் என்ன? அவர் கட்சி கடந்து நிற்கிறார் என்றும் வியாக்கியானம் செய்யலாம். அவர் ஒரு கட்சி பாரம்பரியத்தில் வந்தவர்தான். ஆனால் அந்தக் கட்சியின் வேட்பாளராக அவர் இங்கு நிற்கவில்லை. தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளின் பிரதிநிதியாகவும் அவர் தேர்தலில் நிற்கவில்லை. அவர் ஒரு பொது நிலைப்பாட்டின் பிரதிநிதியாக நிற்கிறார். அதை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்கின்றன. இது ஒரு புதிய பண்பாடு.கட்சிக்காக வாக்குக் கேட்காமல்,ஒரு தனி நபருக்காக வாக்கு கேட்காமல்,ஒரு பொது நிலைப்பாட்டுக்காக வாக்கு கேட்பதற்கு ஒருவரை பொதுவாக நிறுத்தியிருப்பது என்பது. அரியநேத்திரன் தமிழரசுக் கட்சிப் பாரம்பரியத்தில் வந்தவர். ஆனால் அவருடைய கட்சி பொது வேட்பாளர் தொடர்பாக இன்றுவரை முடிவு எடுக்கவில்லை. கடைசியாக அந்த கட்சியின் மத்திய குழு கடந்த வார இறுதியில் கூடியபொழுதும் முடிவு எடுக்கப்படவில்லை. கட்சியின் பேச்சாளரான சுமந்திரன் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பொழுது, தமிழ் அரசியலுக்கு தலைமை தாங்கும் கட்சி தங்களுடையது என்ற பொருள்பட பேசியிருக்கிறார். உள்ளதில் பெரிய கட்சி என்ற அடிப்படையில் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம். ஆனால் ஒரு மக்கள் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவதாகக் கருதும் ஒரு கட்சி, அதிலும் குறிப்பாக இனஅழிப்புக்கு நீதி கோரும் ஒரு மக்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதாகக் கருதும் ஒரு கட்சியானது, எவ்வாறு தலைமை தாங்க வேண்டும்? அது எதிர்த் தரப்பின் அல்லது வெளித் தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு பதில் வினையாற்றும் அரசியலை முன்னெடுக்க வேண்டுமா? அல்லது செயல்முனைப்போடு நீதியைக் கோரும் போராட்டமாக அந்த அரசியலை வடிவமைக்க வேண்டுமா? கட்சியின் மூத்த தலைவர் சிவஞானம் கூறுகிறார், மக்கள் முடிவெடுப்பார்கள் என்று. தலைமை தாங்குவது என்பது மக்களை முடிவெடுக்க விட்டுவிட்டு மக்களின் முடிவைக்ககட்சி பின்பற்றுவது அல்ல. கட்சி முடிவெடுத்து மக்களுக்கு வழிநடத்த வேண்டும். பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முடிவுகளை எடுத்து மக்களுக்கு வழிநடத்துவதற்குப் பெயர்தான் தலைமைத்துவம். ஆனால் தென்னிலங்கை வேட்பாளர்கள் எதைத் தருவார்கள் என்று அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம் வரும்வரையும் காத்திருப்பது என்பது ஒரு போராடும் இனத்துக்கு அழகில்லை; மிடுக்கில்லை; அதற்கு பெயர் தலைமைத்துவமும் இல்லை. பொது வேட்பாளர் விடையத்தில் தமிழரசுக்ககட்சி இரண்டாக நிற்கிறது என்பதே உண்மை நிலை. ஒருமித்த முடிவு எடுக்க முடியாமலிருப்பதற்கு அதுதான் காரணம். அதாவது தலைமைத்துவம் பலமாக இல்லை என்று பொருள். தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளுக்காகக் காத்திருப்பது தலைமைத்துவப் பலவீனம்தான். கிடைக்கும் தகவல்களின்படி எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் 13ஆவது திருத்தத்திற்கு மேல் எந்த ஒரு தீர்வையும் தரப்போவதில்லை. தமிழரசுக் கட்சி முன்வைக்கும் சமஸ்டித் தீர்வுக்கு எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் தயாராக இல்லை. ஆயின், யாருடைய தேர்தல் அறிக்கைக்காக தமிழரசுக் கட்சி காத்திருக்கின்றது ? அவர்கள் சமஸ்ரியைத் தர மாட்டார்கள் என்று தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவர்களுக்காக காத்திருப்பது எதைக் காட்டுகின்றது? சமஷ்டி அல்லாத வேறு ஏதோ ஒன்றுக்கு இறங்கிப்போகப் போகிறோம் என்பதையா? அவர்கள் யாருமே சமஸ்ரித் தீர்வுக்கு உடன்படத் தயாரில்லை என்றால், அதன் பின் கட்சி என்ன முடிவு எடுக்கும்? தேர்தலைப் பரிஷ்கரிக்குமா? அல்லது பொது வேட்பாளரை ஆதரிக்குமா? பகிஸ்கரிப்பது தவறு என்று ஏற்கனவே சுமந்திரன் கூறியிருக்கிறார். அப்படியென்றால் பொது வேட்பாளரை ஆதரிப்பதைத்தவிர வேறு தெரிவு இல்லை. அல்லது அவர்கள் தரக்கூடியவற்றுள் பெறக்கூடியவற்றை எப்படிப் பெறலாம் என்று காத்திருக்கிறார்களா? அதற்குச் சிறீதரன் அணி தயாரா? கட்சியின் மத்திய குழு கூடுவதற்கு முதல் நாள் சனிக்கிழமை கிளிநொச்சியில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது அங்குள்ள விவசாய அமைப்புகள் அப்பொதுக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தின. அதில் தமிழ்மக்கள் பொதுச்சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இறுதியில் பேசினார். அவருடைய உரை மிகத் தெளிவாக இருந்தது. அதில் அவர் தமிழ்ப் பொது வேட்பாளரை நியாயப்படுத்திப் பேசினார். கடந்த மாதம் 22 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க ஒரு தனியார் விருந்தினர் விடுதியில் மாவை சேனாதிராஜாவை சந்தித்தது பற்றியும், மாவையிடம் கையளித்த ஆவணம் ஒன்றைப்பற்றியும் அதிலவர் குறிப்பிட்டார். அந்த ஆவணத்தில் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதைப் பற்றிய அம்சங்கள் காணப்பட்டதாகவும் அவர் கூறினார். போலீஸ் அதிகாரத்தை இப்போதைகுத்த் தர முடியாது என்றும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் பின் நாடாளுமன்றத்தில் அதை தீர்மானிக்கலாம் என்றும் ரணில் கூறியுள்ளார். அதை பதிமூன்று மைனஸ் என்று சிறீதரன் வர்ணிதார். ஆயின், தமிழரசுக் கட்சி 13 மைனசை ஒரு பேசுபொருளாக ஏற்றுக்கொள்ளத் தயாரா? இல்லையென்றால், யாரிடமிருந்து சமஸ்ரி வரும் என்று சமஷ்ரிக் கட்சி காத்திருக்கின்றது? சமஸ்ரியை யாராவது ஒரு சிங்களத் தலைவர் தங்கத்தட்டில் வைத்துத்தருவார் என்று இப்பொழுதும் சமஷ்ரிக் கட்சி நம்புகின்றதா? போராடாமல் சமஸ்டி கிடைக்கும் என்று சமஸ்ரிக் கட்சி நம்புகின்றதா? தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவே அவ்வாறான ஒரு போராட்டந்தான் என்பதனை சமஸ்ரிக்கட்சி ஏற்றுக் கொள்கிறதா? அக்கட்சி முடிவெடுக்காமல் தடுமாறுவதும் ஒரு விதத்தில் பொது வேட்பாளர் அணிக்குச் சாதகமானது. உள்ளதில் பெரிய கட்சி முடிவெடுக்காமல் இரண்டாக நிற்பது பொது வேட்பாளருக்கு நல்லது. ஏனென்றால் தமிழரசுக் கட்சியின் வாக்காளர்களும் உட்பட தமிழ்மக்கள் தங்களுக்குத் தெளிவான இலக்குகளை முன்வைத்து தங்களை வழிநடத்த தயாரானவர்களின் பின் திரள்வார்கள். ஏற்கனவே ஈரோஸ் இயக்கத்தின் சுயேச்சைக் குழு பெற்ற வெற்றி ஒரு மகத்தான முன்னுதாரணமாகும். அது இலங்கைத்தீவின் தேர்தல் வரலாற்றில், தமிழரசியலில் ஒரு நூதனமான வெற்றி. அந்தத் தேர்தலில் அமிர்தலிங்கம், சம்பந்தர், யோகேஸ்வரன், ஆனந்தசங்கரி உட்பட பல மூத்த தலைவர்கள் தோல்வியடைந்தார்கள். அதைவிட முக்கியமாக திருகோணமலையில் இரண்டு ஆசனங்கள் கிடைத்தன. அன்றைக்கு அந்த சுயேட்சைக் குழுவுக்குக் கிடைத்த வெற்றி தமிழ்க் கூட்டுணர்வுக்குக் கிடைத்த வெற்றி. இன்றைக்கும் தமிழ்க் கூட்டுணர்வை பிரதிநிதித்துவப்படுத்தும் அரியநேத்திரனுக்கு தமிழ் மக்கள் வாக்குகளை அள்ளிக் கொடுப்பார்களாக இருந்தால், அது தமிழ்த் தேசிய அரசியலின் போக்கை மட்டுமல்ல, இலங்கை தீவின் ஒட்டுமொத்த அரசியல் போக்கைகையும் தீர்மானிக்கும் வாக்களிப்பாக அது அமையும். https://www.nillanthan.com/6860/
  13. ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்! August 17, 2024 இலங்கையில் 9-ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து, இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக போட்டியிடுகின்றார். இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்ப் பொதுவேட்பாளர் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் நாளை காலை 9 மணிக்கு தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு வணக்கம் செலுத்துவார். அதன் பின் ஊடகச் சந்திப்பு இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.ilakku.org/ஜனாதிபதித்-தேர்தல்-2024-தமிழ/
  14. தமிழரசுக் கட்சியும் பிளவுபடுகிறதா? இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு சிலர் வெளியேறி புதிய கட்சியையோ அல்லது புதிய தமிழரசுக் கட்சி என்ற பெயரில் கட்சியையோ ஆரம்பிக்க முயன்றால் பொது வேட்பாளரை விட மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என வட மாகாண சபை அவை தலைவரும் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலை வருமான சி. வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால், தமிழரசு கட்சியில் உள்ள சிலர் வெளியேறி புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியை விட்டு சிலர் வெளியேறி புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக நானும் கேள்விப்பட்டேன். கட்சியிலிருந்து யாரும் வெளியேறலாம் புதிய கட்சியை யாரும் ஆரம்பிக்கலாம் இவை ஜனநாயக நடைமுறை. இதைப் பற்றி நான் பேச வரவில்லை. ஆனால் தமிழரசு கட்சியை உடைத்து வெளியேறி புதிய கட்சி ஆரம்பிப்பது தற்போது பொது வேட்பாளர் விடையத்தில் நடந்ததைப் போல பல மடங்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றார். இதன்போது கேள்வி அனுப்பிய ஊடகவியலாளர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனக்கு 60 கோடி ரூபா தந்தது மக்களின் அபிவிருத்தியை மேற்கொள்ள என கருத்து தெரிவித்திருக்கிறார். அவருடைய கருத்து அபிவிருத்தி அரசியலுக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்களா என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என கேள்வி எழுப்பினார். இதன் போது பதில் அளித்த சிவஞானம் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு மட்டும் ஜனாதிபதியால் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறவில்லை. ஏனைய பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் முன்மொழிவு திட்டங்களின் அடிப்படையில் நிதி கூடி குறைந்திருக்கலாம். அத்தோடு இலங்கை தமிழரசுக் கட்சி அபிவிருத்தி சார்ந்த வேலைகளை முன்னெடுக்காது என்று எப்போதும் கூறியது கிடையோது, தமிழ் மக்களுடைய உரிமை எவ்வாறு முக்கியமோ மக்களுடைய அபிவிருத்தியும் எங்களுக்கு முக்கியம்தான் என தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=288245
  15. வாட்ஸப்பில் கண்டது.. நெஞ்சுக்கு நீதி பரபரப்பான பேச்சாற்றல் மிக்க பாராளுமன்ற உறுப்பினர் யாரென்று கேட்டால் பலரது நாவிலும் வரக்கூடிய பெயர் மட்டக்களப்பு சாணக்கியன் என்பதேயாகும். அந்தளவு தூரத்துக்கு கடந்த காலங்களில் அவரது பாராளுமனன்ற உரைகள் அமைந்திருந்தன. குறிப்பாக தொல்பொருள் திணைக்களத்தின் முன்னெடுப்புகள் பற்றிய அவரது உரைகள் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் காலம்சென்ற அமிர்தலிங்கம் அவர்களை நினைவூட்டின. அதன் காரணமாகவே அவர் ஊடகங்களிலும் முன்னிலை வகித்தார். கூடவே அவருக்கிருந்த பன்மொழித் தேர்ச்சியும் அவரைப்பற்றிய பிம்மங்களை கட்டியமைப்பதில் பெரும் பங்கு வகித்தது. ஊடகங்கள் அவரை தங்களது பரபரப்புச் செய்திகளுக்காக நன்கே பயன்படுத்திக்கொண்டனவேயன்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்துகொண்டிருக்கும் பாரிய அபிவிருத்திப்பணிகளை அவர் குழப்பியடிக்க முனைகின்றார் என்பதையிட்டு அவை கவனம் கொள்ளவில்லை. அதன் காரணமாக சாணக்கியனுக்கு கிடைத்த அத்தகைய ஊடக வெளிச்சங்கள் அவரை வானுக்கும் மண்ணுக்குமாக துள்ளிக்குதிக்க வைத்தன. காலம் செல்லச்செல்ல வெட்டிப் பேச்சுகளில் வீறாப்பு கொண்டலைபவராக அவர் முழுவதுமாகவே மாறிப்போனார். போராட்டப் பாதையில் வந்த சக பாராளுமன்ற உறுப்பினர்களை மாடுமேய்த்தவன்,படிக்காதவன்,கிணற்றுத்தவளைகள்,என்றெல்லாம் நாகரீகமற்ற வகையில் திட்டித்திரிந்தார். தான் வெளிநாடுகளில் கற்றவன்,மொழியறிவு கொண்டவன் என்றெல்லாம் சுய தம்பட்டம் அடித்துக்கொண்டார். மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களை குழப்பியடிப்பதிலே கண்ணும் கருத்துமாக இருந்து மக்கள் நலப்பணிகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். பிரச்சனைகளைப் பற்றிப்பேசி அவரைத் தீர்ப்பது அவரது நோக்கமாக இருக்கவில்லை. அவற்றைப் பேசுவதன் ஊடாக ஊடகங்களில் இடம்பிடிப்பதே ஒன்றே அவரது நோக்கமாக மாறிப்போனது. அவர் செல்லும் இடமெல்லாம் அவரது மாதாந்த கையூட்டுப்பெறும் ஊடகவியலாளர்கள் அவர் பின்னாலே சென்றனர். கச்சேரி கூட்டங்களில் கூட அவர் முகநூலில் லைஃப் போடுவதற்காகவே முன் தயாரிப்புகளோடு சென்று பேசினார். அரச அதிகாரிகளை கண்டபடி திட்டித்தீர்த்தார். பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் மட்டக்களப்புக்கு வந்தபோது அவர் அமர்ந்திருந்த தலைமை வரிசையிலே தானும் அமர்ந்தால் அபச்சாரம் என்று சொல்லி மக்கள் வரிசையிலே போய் குந்தியிருந்து நாடகமாடினார். மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல்த்தரை பிரச்னையை தனது அரசியல் நலனுக்காக பயன்படுத்தி குழப்பியடித்து அம்பாறை மற்றும் பொலன்னறுவை சிங்கள விவசாயிகளை மட்டக்களப்பு நகருக்குள்ளே வந்து ஆர்ப்பாட்டம் செய்ய செய்யத் தூண்டுமளவுக்கு அவரது ஆத்திரமுட்டல்கள் வழிவகுத்தன. ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மட்டக்களப்புக்கு வருகைதரும் போதெல்லாம் கறுப்புக்கொடி காட்டி அபிவிருத்திப்பணிகளை புறக்கணித்தார். யுத்தத்தின் எச்சங்களாக வாழும் ஆயிரக்கணக்கான பெண் தலைமை குடும்பங்களில் ஏழ்மைமிகு வாழ்வு குறித்தோ காலை உணவு கூட இன்றி பாடசாலை செல்லும் வாகரை மண்ணின் ஏழைக்குழந்தைகள் குறித்தோ தொழிலின்றி அலையும் இளைஞர் கூட்டம் மட்டக்களப்பில் பெருகி வருவது குறித்தோ ஒரு மக்கள் பிரதிநிதியாக அவருக்கு எவ்வித கரிசனையும் இருக்கவில்லை. வீதிகளை அமைப்பதும் குளங்களை தூர்வாருவதும் கால்வாய்களையும் அணைக்கட்டுகளை அமைப்பதையும் அவசியமற்றவையாக அவர் கருதினார். பாடசாலைகளை தரமுயர்த்துவதும் அவற்றிற்கு கணனி மற்றும் நவீன விஞ்ஞான கூடங்கள் அமைத்துத் தருவதும் கேலிக்கூத்தானவை என்பதே அவரது பார்வையாக இருந்தது. இவைதான் நாளும் பொழுதும் அவரும் அவர் சார்ந்த தமிழரசுக் கட்சியினர் உச்சரிக்கும் 'தேசியத்தின் அடிப்படைகள்' என்பதைக்கூட அவர் தெரிந்திருக்கவில்லை. அதனால்தான் 'தமிழ் தேசியம்' 'தமிழரின் உரிமை' என்று வெற்றுக்கூச்சலிடும் வாய் சவடால்களிலேயே அவரது காலம் கழிந்தது. அதனால்தான் எத்தனையோ வருட பட்டறிவுகளைத் தாண்டி அரசுடன் இணைந்து மக்களின் வாழ்வை வளப்படுத்தும் தரப்பினரை ஒட்டுக்குழுக்கள் ஓணான் குழுக்கள் அரசின் கைக்கூலிகள் என்று வாய்க்கு வந்தபடி திட்டித்திரிந்தார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு சிதைந்து போவதற்கும் அதிலிருந்து டெலோ புளொட் போன்ற அமைப்புக்கள் வெளியேறுவதற்கும் இவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சுமந்திரனும் இவரும் இணைந்து போட்ட காட்டுக்கூச்சல்களே காரணமாய் அமைந்தன. இறுதியாக இவரது மேட்டிமைத்தனங்களும் பரம்பரையாதிக்க மனப்பாங்கும் அவர் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மூத்த தலைவர்களைக் கூட மனமுடையச் செய்து வருகின்றது. அனைவரையும் எடுத்தெறிந்து நடக்கும் இவரது நடவடிக்கைகளினால் இவரை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்று எண்ணும் நிலைக்கு மட்டக்களப்பு மக்கள் வந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட மக்களது எவ்வித முன்னேற்றங்களிலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக சாணக்கியனின் பங்குபற்றுதல்கள் இல்லையென்பதை அவர்கள் உணரத்தொடங்கியுள்ளனர். மக்களுக்கும் அவருக்குமான இடைவெளிகள் அதிகரித்தவண்ணமுள்ளன. அடுத்த பாராளுமன்றத்தேர்தல் அண்மிக்கின்றது என்கின்றபோதுதான் அவருக்கு தான் மீண்டும் மக்களிடம் செல்ல வேண்டும் என்கின்ற ஞானம் பிறந்துள்ளது. அதன்காரணமாகத்தான் எந்த ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வரக்கூடாது என்று கறுப்புக்கொடி காட்டி கடந்த காலங்களில் கொக்கரித்துத் திரிந்தாரோ அவரை கொழும்புக்குத் தேடிச்சென்று அவரது ஜனாதிபதிக்குரிய விசேட நிதி ஒதுக்கீட்டில் பங்கு கேட்டு காலில் விழுந்திருக்கின்றார். சந்தர்ப்பம் பார்த்திருந்த ஜனாதிபதியும் தனது ஜனாதிபதித்தேர்தலை முன்னிட்டு இவரது வாயை அடைக்க 45 கோடி ரூபாய்களை அவருக்காக ஒதுக்கி வேலையை கச்சிதமாக முடித்துள்ளார். தற்போது 'நக்குண்டார் நாவிழந்தார்' என்னும் நிலையில் சாணக்கியன் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக ஒரு துரும்பைத்தானும் தூக்கி போட முடியாதுள்ளார். அதுமட்டுமன்றி அவருக்காக ஆதரவாக பிரச்சாரம் செய்தாக வேண்டிய நிலைக்கு வந்துள்ளார். அண்மையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து கவர்னரை அழைத்து ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவான இரகசியப் பிரச்சாரக் கூட்டமொன்றை நாடாத்தியுள்ளார். விரைவில் தேர்தல் மேடைகளில் ஏறி ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவும் வாய்ப்புள்ளது. சுருங்கச்சொன்னால் யார் யாரையெல்லாம் கடந்த காலங்களில் வசை பாடித்திரிந்தாரோ இரவும் பகலும் எடுத்துக்கெல்லாம் எவர்களோடு வம்பிழுத்து திரிந்தாரோ அவர்கள் பாதையில் அவர்களுக்கு பின்னே பயணிக்கும் நிலைக்கு வந்துள்ளார். அதாவது வெட்டிப் பேச்சும் வீறாப்பும் வேலைக்குதவாது என்பதை மட்டுமல்ல வானுக்கும் பூமிக்கும் துள்ளிக் குதிப்பதனாலோ கறுப்புக் கொடிகளாலோ காரியமாற்ற முடியாது என்பதை காலம் கெளரவ சாணக்கியன் அவர்களுக்கு உணர்த்தியுள்ளது. அதனால்தான் அவர் தடம் புரண்டு நிற்கின்றார். அரசியலில் அவரவர்க்கு ஒவ்வொரு வழியுண்டு. அதனால்தான் பல்வேறு சிந்தனைகள்,பல்வேறு கட்சிகள். அதுதான் ஜனநாயகம். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நியாயமுண்டு. ஆனால் நாம் பேசுகின்ற பேச்சுக்கும் நாம் நம்புகின்ற அரசியலுக்கும் உண்மையாக நடப்பதுதான் அரசியல் நாகரீகம், அரசியல் நேர்மை, அதுதான் நெஞ்சுக்கு நீதி. அதன் வழி நடப்பவர்களே தலைவர்கள்.
  16. ரஷ்யாவுக்குள் உக்ரைனின் இராணுவ தளம் அமைப்பு gayanAugust 17, 2024 ரஷ்யாவில் தன்னுடைய ஊடுருவலை உக்ரைன் இராணுவத்தினர் தொடரும் சூழலில் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் இராணுவ நிர்வாக மையத்தை அமைத்துள்ளதாக உக்ரைன் மூத்த இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார். அந்த பிராந்தியத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டவும் அங்குள்ள மக்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது என்று இராணுவ தளபதி ஒலெக்ஸாண்டர் சிர்ஸ்கி தெரிவித்தார். உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனிய துருப்புகள் 35 கிலோமீற்றர் தூரம் வரை உள்ளே சென்றுள்ளனர் என்றும் 82 குடியிருப்பு பகுதிகள் உட்பட 1,150 சதுர கிலோ மீற்றர் பரப்பை ஆக்கிரமித்துள்ளனர் என்றும் தளபதி சிர்ஸ்கி தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர், கடந்த 10 நாட்களாக உக்ரைன் படைகள் ரஷ்யாவில் முன்னேறி வருகிறது. https://www.thinakaran.lk/2024/08/17/world/79075/ரஷ்யாவுக்குள்-உக்ரைனின்/
  17. “ரூ.60 கோடி வாங்கினார் சாணக்கியன்” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தனிப்பட்ட முறையில் 60 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் குற்றஞ்சாட்டியுள்ளார். எவ்வாறாயினும் குறித்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியே தமக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். தம்மால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளைக் கருத்திற்கொண்டு, வழங்கப்பட்ட அந்த நிதியில் தற்போது மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் அரசியல் நோக்கத்திற்காகக் கோவிந்தன் கருணாகரம் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். R https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ரூ-60-கோடி-வாங்கினார்-சாணக்கியன்/150-342273
  18. வேட்பாளர்கள் சிலரின் தேர்தல் பிரச்சார பேரணி இன்று ஆரம்பம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலர் இன்று (17) தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறாக சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட பேரணி இன்று அனுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க இன்று தென் மாகாணத்தில் தனது ஆரம்பக் கூட்டங்களை ஆரம்பித்துள்ளார். சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேர்தல் பிரச்சார பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரம் இன்று கம்பஹாவில் ஆரம்பமானது. https://newuthayan.com/article/வேட்பாளர்கள்_சிலரின்_தேர்தல்_பிரச்சார_பேரணி_இன்று_ஆரம்பம்
  19. 34 வருடங்களின் பின் வழிபட அனுமதி நிதர்ஷன் வினோத் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு சென்று வழிபட வௌ்ளிக்கிழமை (16) அனுமதி வழங்கப்பட்டது. அங்கு பெருமளவிலான மக்கள் சென்று பொங்கல் பொங்கி சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். கடந்த முப்பது வருட காலத்திற்கும் மேலாக இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலய வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டநிலையில் அங்கு சென்ற பொது மக்கள் ஆலயத்தை சிரமதானம் செய்ததன் பின்னர் பொங்கல் பொங்கி பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர். நீண்ட காலத்தின் பின்னர் தமது ஆலயத்திற்குச செல்ல அனுமதிக்கப்பட்டதை மிகவும் சந்தோசமாக வரவேற்ற பொது மக்கள் ஆலயம் சிதைவடைத்திருப்பதை பார்த்து கடும் மனவேதனை அடைந்திருந்தனர். இதன்போது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஶ்ரீமோகன், செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன், கடற்படை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அந்த வகையில் இன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்கு சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை கிருஷ்ணன் ஆலயம் என்ற காரணத்தால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசேட தினங்களிலும் வழிபட பொதுமக்கள் அனுமதி கோரியதால் அது தொடர்பாக உரிய தரப்புக்களுடன் பரிசீலிப்பதாகவும் வலிகாமம் வடக்கிலுள்ள ஏனைய காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். https://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/34-வருடங்களின்-பின்-வழிபட-அனுமதி/46-342288
  20. எனது ஒன்றுவிட்ட அண்ணர் பல ஆயிரங்களை 2009 ஆரம்பத்தில் கொடுத்தவர். இப்போதும் இரண்டு வேலைகளைச் செய்து இந்தக் கடன்களை கட்டிக்கொண்டுதான் இருக்கின்றார். இரண்டு வேலைகள் என்பதால் வாரத்தில் 4-5 நாட்கள் குழந்தைகளைக் காணாமலேயே போய்விடும் என்றார்.
  21. விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா: கனடாவின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்றது! adminAugust 15, 2024 தமிழ் போராளிகளின் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடிப்பதற்கான கனடாவின் தீர்மானத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கைய மூலம் வரவேற்றுள்ளது. உலகத் தமிழர் இயக்கத்துடன் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளாக நீடிக்கும் கனடா அரசின் முடிவை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது. அண்மைய மதிப்பாய்வின் படி, விடுதலைப் புலிகளின் எச்சங்கள் சர்வதேச நிதி சேகரிப்பு மற்றும் கொள்முதல் வலையமைப்பைக் கொண்டிருப்பதாக கனடா கூறுகிறது. புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் சார்பாக நிதி திரட்டுவதன் மூலம் குழு தொடர்ந்தும் பங்களிப்பை வழங்கி வருவதாக உலகத் தமிழர் இயக்க மதிப்பாய்வு குறிப்பிடுகிறது. மீளாய்வு செயல்முறைக்குப் பின்னர் எடுக்கப்பட்ட இந்த முடிவு, குறித்த அமைப்புகளால் தொடர்ந்து அச்சுறுத்தலை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி குற்றவியல் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக கனடா அரசாங்கம் முதன்முதலில் பட்டியலிட்டது. மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்வது சட்டப்பூர்வ தேவையாகும். அண்மைய மதிப்பாய்வு 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைந்தது. அண்மைகாலமாக தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக கனடா அரசாங்கம் தொடர்ந்தும் மூன்றாவது முறையாக பட்டியலிட்டுள்ளது. இந்தியாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்புடன் பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/205863/
  22. யாழில் உயிரிழந்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி adminAugust 15, 2024 விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட இந்தியப் படையினரின் நினைவாக பலாலி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டிலிருந்து 1990 வரை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்தினருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றன. இந்த மோதல்களில் கொல்லப்பட்ட இந்திய படையினர் நினைவாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மலரஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் யாழ். இராணுவ தலைமையகத்தின் இராணுவ உயரதிகாரிகள், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரங்கத்தின் அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணத்திள்ள இராணுவத்தினர் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2024/205868/
  23. பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை : 14 முக்கிய அம்சங்கள்! Aug 15, 2024 16:30PM 78-வது சுதந்திர தினமான இன்று(ஆகஸ்ட் 15), செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை பல்வேறு துறைகளிலும் உலகின் முன்னணி நாடாக மாற்றுவதற்கு தேவையான, வருங்காலத்திற்கான தொடர் இலக்குகளை எடுத்துரைத்தார். அவை, வாழ்க்கையை எளிதாக்கும் இயக்கம்: ‘வாழ்க்கையை எளிதாக்குதல்’ என்ற தமது தொலைநோக்கு கொள்கையை ஒரு இயக்கமாக செயல்படுத்துவது. முறையான மதிப்பீடுகள், கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதன் வாயிலாக நகர்ப்புறங்களில் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது. நாளந்தா உணர்வுக்கு புத்துயிரூட்டுதல் : பண்டைக்கால நாளந்தா பல்கலைக்கழக உணர்வுக்கு புத்துயிரூட்ட வேண்டும். உயர்கல்வி கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம், இந்தியாவை உலகளாவிய கல்வி மையமாக மாற்ற வேண்டும். 2024-ல் நாளந்தா பல்கலைக்கழகத்தை தொடங்கியிருப்பதில் இவை அடங்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப்-செமிகண்டக்டர் உற்பத்தி : செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மாற்ற வேண்டும். இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை குறைத்து, தொழில்நுட்ப தன்னிறைவை அதிகரிக்க வேண்டும். திறன் இந்தியா : இந்திய இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, உலகின் திறன்மிகு தலைநகராக மாற்ற வேண்டும். தொழில் உற்பத்தி மையம் : இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றியமைப்பது. அதன் பரந்து விரிந்த வளங்கள் மற்றும் திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தயாராக உள்ளது. “இந்தியாவில் வடிவமைப்பு, உலகிற்கான வடிவமைப்பு”: உள்நாட்டு வடிவமைப்பு திறன் பாராட்டத்தக்கது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். உலகளாவிய விளையாட்டுச் சந்தையில் முன்னணி : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்களை சந்தைப்படுத்த, இந்தியா தனது செழுமையான பழங்கால மரபுகள் மற்றும் இலக்கியங்களை ஊக்குவிக்க வேண்டும். உலகளாவிய விளையாட்டுச் சந்தையில் இந்திய வல்லுநர்கள் முன்னிலை வகிக்க வேண்டும், விளையாடுவதில் மட்டுமின்றி விளையாட்டுகளை உருவாக்குவதிலும் முன்னோடியாக திகழ்வதுடன், இந்திய விளையாட்டுகள் உலகளவில் சென்றடைய செய்ய வேண்டும். பசுமை வேலைவாய்ப்புகள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் இயக்கம் : பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் முயற்சியில் பசுமை வேலை வாய்ப்புகள் முக்கியம். பசுமை வளர்ச்சி மற்றும் பசுமை வேலை வாய்ப்பில் நாடு தற்போது கவனம் செலுத்திவருகிறது. இது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கூடிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் நீடித்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவது. ஆரோக்கியமான இந்தியா இயக்கம் : 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, இந்தியா, ‘ஆரோக்கியமான இந்தியா’ என்ற பாதையை பின்பற்ற வேண்டும். இதற்காக தேசிய ஊட்டச்சத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது . மாநில அளவிலான முதலீட்டுப் போட்டி : முதலீடுகளை ஈர்க்கவும், நல்லாட்சிக்கான உத்தரவாதம் வழங்கவும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், மாநில அரசுகள் தெளிவான கொள்கைகளை உருவாக்க வேண்டும். உலக குறியீடுகளுக்கேற்ப இந்தியாவின் தரம் : தர நெறிமுறைகளை கடைபிடிப்பதற்கான உறுதிப்பாடு அங்கீகரிக்கப்பட வேண்டும் . இந்தியாவின் தர விதிகள் சர்வதேச குறியீடாக மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும். பருவநிலை மாற்ற இலக்குகள் : 2030-க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி என்ற இலக்கை அடைவதுதான் இந்தியாவின் குறிக்கோள். மருத்துவக் கல்வி விரிவாக்கம் : அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75 ஆயிரம் புதிய மருத்துவ இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட இருக்கிறது. நாட்டின் மருத்துவக் கல்வி திறனை விரிவுபடுத்தி, அதிகரித்து வரும் சுகாதார சேவை வல்லுநர்களின் தேவையை பூர்த்தி செய்வது தான் இதன் நோக்கம். அரசியலில் புது ரத்தம் பாய்ச்சுதல் : அரசியலில் ஒரு லட்சம் இளைஞர்களை, குறிப்பாக அரசியல் பின்புலம் இல்லாத குடும்பங்களை சேர்ந்தவர்களை ஈடுபடுத்த வேண்டும். வாரிசு, சாதிய தீமைகளை எதிர்த்துப் போராட, இந்திய அரசியலில் புது ரத்தம் பாய்ச்சுவதே இதன் நோக்கம். https://minnambalam.com/india-news/pm-modi-outlines-plan-for-2047-vision/
  24. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் பெயர் பட்டியல்! 2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 01. திலித் சுசந்த ஜயவீர 02. சரத் மனமேந்திர 03. அபூபக்கர் முகம்மது இன்பாஸ் 04. ஏ. எஸ். பி. லியனகே 05. பானி விஜேசிறிவர்தன 06. பிரியந்த புஸ்பகுமார விக்கிரமசிங்க 07. அஜந்தா டி சொய்சா 08. பத்தரமுல்லை சிரலதன தேரர் 09. சரத் பொன்சேகா 10. நுவன் சஞ்சீவ போபகே 11. ஹிதிஹாமிலாவின் டொன் ஒஷால லக்மால் அனில் ஹேரத் 12. ஜனக பிரியந்த குமார ரத்நாயக்க 13. கே.கே. பியதாச 14. மையில்வாகனம் திலகராஜா 15. சிறிபால அமரசிங்க 16. பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 17. சரத் கீர்த்திரத்ன 18. கே. ஆனந்த குலரத்ன 19. நாமல் ராஜபக்ஷ 20. அக்மீமன தயாரதன தேரர் 21. கே.ஆர். கிஷன் 22. பொல்கம்பொல ரலாலாகே சமிந்த அனுருத்த 23. விஜயதாச ராஜபக்ச 24. அனுர சிட்னி ஜயரத்ன 25. சிறிதுங்க ஜயசூரிய 26. மஹிந்த தேவகே 27. முகமது இல்லயாஸ் 28. லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஷ 29. ஆண்டனி விக்டர் பெரேரா 30. கீர்த்தி விக்கிரமரத்ன 31. சஜித் பிரேமதாச 32. ரணில் விக்கிரமசிங்க 33. மரக்கலமான பிரேமசிறி 34. லலித் டி சில ;வா 35. பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்கா 36. டி.எம். பண்டாரநாயக்கா 37. அனுரகுமார திஸாநாயக்க 38. அகம்பொடி பிரசங்க சுரங்ச அனோஜ் டி சில்வா 39. அனுருத்த ரணசிங்க ஆராச்சிகே ரொஷான https://akkinikkunchu.com/?p=288069
  25. பிரித்தானியக் கலவரத்துக்கும் காலனித்துவத்துக்கும் என்ன தொடர்பு?…. நியூசிலாந்து சிற்சபேசன் அண்மையிலே பிரித்தானியாவில் நடைபெற்ற கலவரங்கள் முற்றிலும் எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. அங்கு குடியேறிகள் தொடர்பான ஒவ்வாமை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. காலாதிகாலமாகத் தொடர்கின்றது. மருத்துவம், கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றிலேயே அரசு தொடர்பில் பாமரனின் அபிப்பிராயம் உருவாகின்றது. அவற்றிலே குறைகள் ஏற்படுவது இயல்பானது. அவ்வாறு ஏற்படுகின்றபோது, செல்லும் செல்லாததுக்குச் செட்டியார் என்பதுபோல, குடியேறிகள் மீதான காழ்ப்புணர்வு பொங்கிப்பிரவாகிக்கின்றது. அதுவே, காலவோட்டத்தில் இயல்பாகவும் ஆகிவிடுகின்றது. அதனால், குடியேறிகள் தொடர்பான நல்லெண்ணமின்மை, நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக, அதிகரிக்கின்றது. நாய்க்கு எங்கே அடித்தாலும் காலைத் தூக்கிக்கொண்டு ஓடும் என்பார்கள். அதுபோல, எந்தவொரு பிரச்சினையிலும் குடியேறிகளை நோக்கிச் சுட்டுவிரல் நீட்டுகின்ற மனப்பாங்கு வானுயரவளர்ந்துவிட்டது. அத்தகையதொரு சூழலிலேயே, ஜூலை 29ம் திகதியன்று, லண்டனிலிருந்து வடமேற்கே சுமார் இருநூறு மைல் தொலைவிலே, ஐரிஷ் கடலோரமாகவுள்ள, சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றிலே மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டனர். மேற்படி தாக்குதலின் சூத்திரதாரி, படகு மூலம் பிரித்தானியாவுக்கு வந்த அகதி என்னும் தகவல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. அதனால் பதற்றநிலை ஏற்பட்டது. அந்த தகவல் தவறானது என்பதைப் பொறுப்புள்ள தரப்புக்கள் உரத்துச் சொன்னபோதும், சோசியல் மீடியா யுகத்தில் அஃது ஈனஸ்வரமாகியது. தீவிர வலதுசாரி குரல்கள் உரத்து ஒலிக்க ஆரம்பித்தன. அதனுடைய தொடர்ச்சியாக, பிரித்தானியாவின் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின. அவையே கலவரமாக மாறின. “நான் இறக்கும் வரை இங்கிலாந்து தான். எங்கள் நாடு எங்களுக்கு திரும்ப வேண்டும்,” என்னும் பிரித்தானியப் பாடலை ஆங்காங்கே உரத்த குரலில் பாடி உணர்சிகளைக் கொந்தளிக்கச் செய்ததாகவும் சொல்லப்படுகின்றது. மிட்லன்ஸ் என்று சொல்லப்படுகின்ற பிரித்தானியாவின் மையப்பிரதேசங்களில் உருக்கொண்ட கலவரம் தேசத்தின் நாலாபக்கமும் பரவின. பிரித்தானிய அரசு துரிதமாக செயற்பட்டு சட்டம் ஒழுங்கு நடைமுறைகளை நிலைநாட்டியது. அதனால், கலவரங்கள் தணிக்கப்பட்டன. ஆனால், இனங்களிடையேயான முறுகல் தீர்க்கப்பட்டதாக நம்பமுடியவில்லை. அஃது எளிதான காரியமுமல்ல. பிரித்தானியாவின் சனத்தொகைப் பரம்பலை, குடியேறிகளின் வருகை மாற்றியுள்ளமை யதார்த்தமாகும். குடியேறிகள் தொடர்பில், திட்டமிட்ட அணுகுமுறையை இறுக்கமாக நடைமுறைப்படுத்த பிரித்தானியாவினால் முடியவில்லை. அதற்கு வரலாற்றுச் சுமையும் காரணமாகும். பிரித்தானியக் காலனித்துவத்தின் தொடர்ச்சியே குடியேறிகள் என்பது வெள்ளிடைமலையாகும். அன்றோருகாலத்தில் ஐரோப்பியர் வளங்களைத் தேடினார்கள். ஐரோப்பாவிலிருந்து ஆசியாவுக்கான கடல்மார்க்கமான கேப் வழித்தடம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வழித்தடத்தை பயன்படுத்தி திரைகடல் ஓடினார்கள். திரவியம் தேடினார்கள். நாடுகளைக் கைப்பற்றினார்கள். கைப்பற்றிய நாடுகளை, பிரித்தானியாவிலிருந்து, ஆட்சி செய்ய காலனித்துவ முறைமையை உருவாக்கினார்கள். அதுவே பிரித்தானிய சாம்ராஜ்யமாகியது. அவ்வாறு கைப்பற்றிய தூரதேசங்களிலிருந்து கடல்மார்க்கமாக வளங்களை பிரித்தானியாவுக்குக் கொண்டுசென்றனர். இயற்கை வளங்களை மட்டுமல்ல, மனிதவளங்களையும் சேர்த்தே கொண்டுசென்றனர். இந்தியா உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து மனிதவளத்தை “கூலி” என்னும் அடையாளத்துடன் வலிந்து கொண்டுசென்றனர். “கூலி” என்பதே, கடல்போக்குவரத்து வேலையிலே “லஸ்கர்” என அடையாளமாகியது. இவ்வாறு “கூலி” என்னும் அடையாளத்துடன் கொண்டுசெல்லப்பட்டவர்களே, பிரித்தானியவில் நுழைந்த ஆரம்பகால “குடியேறிகள்” என பெருவெட்டில் சொல்லலாம். பொதுக்கட்டுமானம், ரயில்கட்டுமானம், மிட்லன்ஸ் என்று சொல்லப்படுகின்ற மன்செஸ்டர், பர்மிங்கம் பிரதேசங்களிலே தொழிற்சாலை, ஹீத்ரோ விமான நிலையக் கட்டுமானம் எனப் பல்வேறு தேவைகளுக்காகவும் “கூலி” களைக் கொண்டுசென்றனர். அவ்வாறு ஹீத்ரோ விமானநிலைய வேலைத்திட்டத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட பஞ்சாபிகளே, விமான நிலையத்தை அண்டிய சவுத்ஹால் பிரதேசத்தின் அடையாளமாக இன்றும்கூட காணப்படுகின்றனர். ஆக, “குடியேறிகள்” பிரித்தானியாவை நோக்கிச் செல்ல ஆரம்பித்தமைக்கு யார் காரணமென்பது சிதம்பர ரகசியமல்ல. அடுத்த குடியேற்ற அலை, இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியபோது ஏற்பட்டதாகச் சொல்லலாம். அதுவே, பெருமளவிலான குடியேறிகள் பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்த காலகட்டம் எனலாம். 1970களில் ஆபிரிக்க நாடுகள் காலனித்துவத்திலிருந்து சிலிர்த்துக்கொண்டன. ஆபிரிக்கர்களுக்கே ஆபிரிக்கா என்னும் கோஷம் வலுப்பட்டது. ஆபிரிக்காவிலே, காலனித்துவக் காலங்களில், வலிந்து குடியேற்றப்பட்டவர்களிலே இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமானதாகும். அத்தகையோரை, உகண்டா, தன்சானியா போன்ற ஆபிரிக்க நாடுகள் துரத்தியடித்தன. அவ்வாறு ஆபிரிக்காவிலிருந்து விரட்டப்பட்ட இந்தியர்களுக்கான போக்கிடம் பிரித்தானியாவேயாகும். அதனாலே, மற்றுமொரு குடியேற்ற அலை ஏற்பட்டது. அதேபோன்று, ஆபிரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளிலிருந்து, காலனித்துவத்தின் தொடர்ச்சியாகபிரித்தானியவை நோக்கிய ஆபிரிக்க குடியேற்ற அலைகள் இடம்பெற்றன. ஆக, பிரித்தானியக் காலனித்துவத்தின் விட்டகுறை தொட்டகுறையாகவே குடியேற்ற அலைகள் ஏற்பட்டதாகச் சொல்லலாம். ஆகப்பிந்திய கணக்கெடுப்பின்படி, மொத்த சனத்தொகையில் ஒன்பது விழுக்காடு ஆசியப் பின்னணியினரும், தலா நான்கு விழுக்காடு ஆபிரிக்க மற்றும் பிற பின்னணியினருமே “குடியேறிகள்” என அடையாளமாகின்றனர். வெள்ளையர் அல்லாதவர்களைக் குடியேறிகள் என வகைப்படுத்துவதிலே கூட பொருள் குற்றம் உண்டு. காரணம்: குடியேறிகள் என்று தற்போது அடையாளப்படுவோரிலே, கணிசமானோர் பிரித்தானியாவில் பிறந்தவர்களாகும். அதனால் குடியேறிகள் அல்லர். எதுஎப்படியாகிலும், இனங்களிடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பது இலகுவல்ல. இயல்புநிலை எளிதில் வசப்படக்கூடியதல்ல. ஆக, பாட்டன் போட்ட விதை, பேரனுக்குக் கிடைத்த கனி என்பார்கள். பிரித்தானியாவிலே பாட்டன் போட்ட விதை, பேரனுக்கு எதனைத் தந்திருகின்றது என்பது ரகசியமல்லவே! நியூசிலாந்து சிற்சபேசன் https://akkinikkunchu.com/?p=287960

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.