Everything posted by கிருபன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியில் கலந்துகொண்ட P.S. பிரபா வெற்றிபெற வாழ்த்துக்கள்! ஐபில் போட்டியில் 17 கலந்துகொண்டனர். இங்கு பலரைக் காணவில்லை! இன்னும் 2 நாட்கள்தான் உள்ளன!
-
ஏ.ஆர்.ரகுமானின் சர்வதேச இசைக் கல்லூரி!
ஏ.ஆர்.ரகுமானின் சர்வதேச இசைக் கல்லூரி! -சாவித்திரி கண்ணன் சர்வதேச அளவில் இசைக் கொடியை பறக்கவிட்டு, ‘உலக இசை நாயகனாக’ வலம் வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். சமூக புறக்கணிப்புகளை சகித்து மேலெழுந்து வந்தாலும், அவர் ஒருபோதும் சனாதனிகளின் அங்கீகாரத்திற்கு ஏங்கியதில்லை. மாறாக, எளிய பின்புலமுள்ள மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் இசை கற்பிக்கிறார்; தமிழ்நாடு உலகத்திற்கு தந்த இசைக் கொடையே ஏ.ஆர்.ரகுமான்! அவரது தந்தை சேகர் அளப்பரிய திறமைகள் இருந்தும் – பல இசை அமைப்பாளர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருந்தவர் என்ற வகையில் – ஜொலிக்க முடியாமல் போனவர். தந்தை தொட நினைத்த உச்சத்தை எல்லாம் இந்த தனயன் அனாயசியமாக தொட்டுவிட்டார். ஒன்பது வயதில் தந்தையை இழந்த ரகுமான் தன் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியால் பள்ளிப் படிப்பை கைவிட நேர்ந்தது. தந்தை வைத்திருந்த இசைக் கருவிகளை வாடகைக்கு விட்ட வகையிலும், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, விஜயபாஸ்கர், ஹம்சலேகா..என அப்போதிருந்த இசை அமைப்பாளர்களின் இசை குழுக்களில் ஒரு இசைக் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார். சென்னை வானொலி, பொதிகை தொலைகாட்சிக்கும் இசை நிகழ்ச்சி செய்துள்ளார். நிறைய விளம்பரப் படங்களுக்கு அசத்தலாக இவர் இசை அமைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் மணிரத்தினத்தின் ரோஜா பட வாய்ப்பு பெற்று இந்திய திரைஇசை உலகையே தன் முதல் படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தார். தமிழ் திரை இசையில் தனிபெரும் இசை சக்கரவர்த்தியாக கோலோச்சிய இளையராஜாவின் பாடல்களில் சற்றே ஒரு சலிப்பு ஏற்படத் தொடங்கிய நேரம் அது! 1990 களில் ரகுமானின் கொடி உயர, உயர இளையராஜாவின் வாய்ப்புகள் குறைந்தன! ”சிறு வயதில் வறுமையால் கல்வி கற்க முடியாமல் போனது, வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் பெற்ற அவமானங்கள், தூக்கிவிட ஆளில்லாமல் துவண்டு விழுந்து தனிமைப்பட்ட பொழுதுகள்.. என்னை தற்கொலைக்கு தூண்டியுள்ளன” என்று ஒருமுறை ரகுமான் கூறியுள்ளார். இந்தச் சூழல்களில் இறை நம்பிக்கையே அவரைத் தேற்றியது. திலீப்குமார் என்ற அவரது இயற்பெயரை அல்லா இரக்கா ரகுமான் என மாற்றிக் கொண்ட தருணத்தில் அல்லலுற்ற அவர் மனம் அமைதி அடைந்தது! ஆன்மீக ஒளி உள்ளமெங்கும் நிறைந்தது! இன்று வரை ரகுமான் யாரிடமும் கோபப்பட்டதாகவோ, வெறுப்பை காட்டியதாகவோ ஒரு நிகழ்வைக் கூட சொல்ல முடியாது. பள்ளிப் படிப்பை கூட முடித்திராத ஏ.ஆர்.ரகுமானுக்கு உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களான அண்ணா பல்கலைக் கழகம், டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக், பெர்கிலீ காலேஜ் ஆப் மியூசிக், அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகம் போன்றவை ‘டாக்டரேட்’ பட்டம் தந்து கெளரவித்துள்ளன. 32 பிலிம் பேர் விருதுகள், 11 IIFA விருதுகள், ஆறு தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் போன்ற இந்திய விருதுகள், ஆஸ்கார், கோல்டன் குளோப், பாப்தா, கிராமி போன்ற சர்வதேச விருதுகள்.. என நீளமான பட்டியல் போடும் அளவுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும், பல்வேறு நாடுகளும் அவருக்கு விருதுகள் தந்துள்ளன. இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்ற ரகுமான் இந்த விருதுகள் யாவும் அவரைத் தேடி வந்தவைகளே! பல விருதுகளை அவரால் சென்று வாங்க முடியாத நிலையில், அதை தன் நண்பர்களை பெற வைத்து, அந்த விருதுகளும் நண்பர்களிடமே தங்கிவிட்டன என்கிறார். நெளஷ்த் அலிகான், மைக்கேல் ஜாக்சன், சாரா பிரிஷ்மென், மைக்கேல் பொல்டர் போன்ற சர்வதேச இசை விற்பன்னர்கள் பலரோடு ஈகோ இல்லாமல் பணியாற்றிவர் ரகுமான். இவ்வளவு பிஸியான நிலையிலும், அவர் ஒரு லட்சியத்தை மனதில் ஏந்தி, அதற்காக தன் நேரத்தையும், உழைப்பையும் கணிசமாக செலவழித்து வருகிறார். பொருளாதார வசதி இல்லாத தான், அனுபவித்த துன்பங்களை மனதில் வைத்து, ‘அன்று தன்னைப் போல தூக்கிவிட ஆளில்லாத வறுமையில் உழலும் இளையோர்களை கண்டெடுத்து ஊக்குவிக்க வேண்டும், உலகத் தரத்திற்கு அவர்களை உயர்த்த வேண்டும்’ என்ற குறிக்கோளுடன் கடந்த 16 ஆண்டுகளாக சமூகத்தில் மிகப் பின்தங்கிய நிலையில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவச் செல்வங்களை தேர்ந்தெடுத்து இசைப் பயிற்றுவிக்கிறார். அதுவும், குறிப்பாக அரசு மாநகராட்சி பள்ளி மாணவர்களில் இசை ஆர்வமுள்ளவர்களை கண்டெடுத்து கட்டணமில்லா இசையைக் கற்பிக்கிறார். எதிர்கால இசைத் தலைமுறையை உருவாக்குவதற்காகவே அவர் ஏற்படுதிய கே.எம்.காலேஜ் ஆப் மியூசிக் அண்ட் டெக்னாலஜி என்ற பெரிய இசைக் கல்வி நிறுவனத்தில் எளிய சமூக பின்பலமுள்ள மாணவர்களுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இடம் தருகிறார். இங்கு உலகத் தரத்திற்கான இசைக் கல்வியை மாணவர்களுக்கு தானே நேரடியாகவும், மிகப் பெரிய இந்திய மற்றும் சர்வதேச இசை ஆசிரியர்களைக் கொண்டும் பயிற்றுவிக்கிறார்! இதற்காக அவர் உருவாக்கியதே உலகின் முதல் சிம்பொனி இசைக் குழுவான ‘சன்சைன் ஆர்கெஸ்டிரா’ (Sunshine Orchestra). ரகுமானும் சிம்பொனி இசை தந்து ‘மேஸ்ட்ரோ’ பட்டம் பெற்ற போதிலும், ஒருபோதும் தன் பெயருக்கு முன்னால் ‘மேஸ்ட்ரோ’ எனப் போட்டுக் கொள்ள மாட்டார். போட அனுமதிக்கவும் மாட்டார். ரகுமானின் இசைக் கல்லூரியில் ஹிந்துஸ்தானி, வெஸ்டர்ன், பாப், ஜாஸ், நாட்டுப்புற இசை என அனைத்து வகை இசையும் அதற்கான ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கப்படுகிறது. இசை வரலாறு தொடங்கி நவீன ரெக்கார்டிங் தொழில் நுட்பம் வரை கற்பிக்கிறார். கிடார், வயலின், ப்ளுட், பியானோ, மற்றும் பல மேற்கத்திய இசைக் கருவிகளில் பயிற்சி தருகிறார். ஒரு வருட சர்டிபிகேட், இரண்டு வருட டிப்ளமா, நான்கு வருட படிப்பு போன்றவற்றை இங்கு அறிமுகப்படுத்தி அவரவர் விருப்பத்திற்கேற்ப கற்பிக்கிறார்கள். இங்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டு மாணவர்களும் வந்து, உரிய கட்டணம் செலுத்தி பயின்று செல்கிறார்கள். அவர்களில் இலங்கையில் இருந்து வந்த தினேஷ் சுபாஷினியும், பங்களாதேஷில் இருந்து வந்த இமான்ஷாப் அவர்களும் இன்று அங்கு பிரபல கம்போசர்களாக உள்ளனர். இந்த இசைக் கல்லூரி லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் யூனிவர்சிட்டியுடன் இணைந்து செயல்படுகிறது. அந்த வகையில் இலண்டன், அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்தும் ஆசிரியர்கள் வந்து கற்பிக்கிறார்கள். இங்கு படித்த மாணவர்கள் பலர் சர்வதேச இசைக் குழுக்களில் வாய்ப்பு பெற்று இயங்கி வருகின்றனர். தன் வேலைபளுவால் தனக்கு வரும் வாய்ப்புகளை ரகுமான் தன் மாணவர்களுக்கு சிபாரிசு செய்கிறார். அந்த வகையில் ஹாலிவுட் படங்களின் வாய்ப்புகளைக் கூட தன் மாணவர்களுக்கு தந்துள்ளார் ரகுமான். நம்மிடையே நிலவிய ஏற்றத் தாழ்வுகளால் தலைமுறை தலைமுறையாக நாம் அனுபவித்த அனைத்து சாபங்களையும் ஒழித்து, ஏழைகளை முன்னேற்றி, கலை மற்றும் அறிவியல் துறைகளில் தலைவர்களை உருவாக்கும் கனவுகளுடன் தான் இயங்குவதாக ரகுமான் குறிப்பிடுகிறார். ஹிந்தி, மலையாளம், குஜராத்தி, பெங்காலி, ஹாலிவுட், சீனா மற்றும் ஐரோப்பிய படங்களுக்கு எல்லாம் பணியாற்றினாலும், தாய் மொழியாம் தமிழ் மீது அளப்பரிய பற்று கொண்ட ரகுமான், தான் இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற அந்த தருணத்தில், அந்த சர்வதேச மேடையில், ”எல்லா புகழும் இறைவனுக்கே” எனத் தமிழில் பேசினார். தன் டிவிட்டரில் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளை அவ்வப்போது பகிர்வதும் ரகுமான் வழக்கம். இதன் தொடர்ச்சியாகத் தான் தமிழிசை மரபுகளை ஆழமாக ஆய்வு செய்தவரும், அதன் தொன்மை, வரலாறு, பண்கள், சுருதி முறைகள் போன்றவற்றை எடுத்தியம்பும் ‘கருணாமிர்தசாகரம் என்ற நூலை இயற்றியவரும், ‘கர்நாடக இசையின் மூலம் தமிழிசையே’ என பல்வேறு ஆய்வுகள் செய்து நிருபித்தவருமான மாபெரும் இசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் குறித்து உரிய ஆய்வாளர்களைக் கொண்டு ஆய்வைச் செய்து அரிய நூல் ஒன்றையும் வெளிக் கொண்டு வந்தார்! இப்படியாக தான் உருவான தமிழ்ச் சமூகத்திற்கும், ஆதரவற்ற எளியோருக்கும் விளம்பரமில்லாமல் அளப்பரிய நற்காரியங்களைச் செய்யும் ரகுமான், எந்த அதிகார மையத்துடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர். ஆன்மீகத்தில் ஆழ்ந்து திளைப்பவரென்றலும், பற்றற்வர் போல பாசங்குதனம் செய்யாதவர்! நாளொன்றுக்கு ஐந்து முறை தொழுகை, ரம்ஜான் மாதம் முழுக்க நோன்பு, இறைதூதர்களின் சமாதியான தர்க்காகளுக்கு சென்று வழிபாடு, தியானம் போன்றவற்றில் ஈடுபடும் ரகுமான் இவற்றையுமே கூட மக்களோடு மக்களாக – சராசரி மனிதர்களில் ஒருவராகவே – செய்கிறார். பழங்குடிகள் நிறைந்த நாகாலாந்தின் இசைக் கலாச்சாரத்தைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ள ரஹ்மான், இந்த ஆவணப் படத்தின் பணிகளோடு அங்கு இருக்கும் பழங்குடி குழந்தைகளுக்கான ஆசிரமம் ஒன்றை தத்தெடுத்து, அங்கு இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இசைக் கற்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளார். ஒரு தமிழன் சர்வதேச மனிதனாக தன்னை முழுமையாக தகவமைத்து சாதி, மதம், இனம் ஆகிய எல்லைகளை முற்றிலும் கடந்து, உலகளாவிய முறையில் எப்படி இயங்குவது என்பதற்கு ஏ.ஆர்.ரகுமானே இலக்கணம். எத்தனை உச்சத்திற்கு சென்றாலும், ‘எளியோரை ஏற்றம் பெற வைப்பதே முதன்மை இலக்கு’ என்று இயங்குவது தனிச் சிறப்பாகும். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/18004/arrahman-music-college-for-poor/
-
நவநாசிச பாணியில் தமிழர் குடித்தொகையை மாற்ற முயற்சி! பேராசிரியர் பத்மநாதன் குற்றச்சாட்டு!
நவநாசிச பாணியில் தமிழர் குடித்தொகையை மாற்ற முயற்சி! பேராசிரியர் பத்மநாதன் குற்றச்சாட்டு! (ஆதவன்) நவநாசிச பாணியில் பல அரசதுறைகள், பலம் பொருந்தியவர்கள் 'மற்றும் செல்வாக்கு பொருந்தியவர்களுடன் இணைந்து தமிழர் குடித்தொகையை மாற்றியமைப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது என்று பேராசிரியர் பத்மநாதன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் பத்மநாதனின் 'ஒரு மறைந்துபோன நாகரிகத்தின் தரிசனம் ஆதிகால யாழ்ப்பாணம்' நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- தமிழ்த் தேசியத்தின் உற்பத்திக்கு அடிநாதமாகக் காணப்படும் மொழிவழக்கும். இடையறாத நிலப்பரப்பும் கிறிஸ்துவுக்கு முதல் நூற்றாண்டிலேயே உருவாகிவிட்டது. இலங்கைத் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் முன்னோர்கள் நாகர்களின் வழிமுறைச் சந்ததியினரே. 19ஆம் நூற்றாண்டில் சுதந்திரம் கிடைத்த பின்னர் சிங்களத் தலைவர்கள், படித்தவர்கள், அரச சட்டசபையில் (ஸ்டேட் கவுன்ஸில்) இருந்தவர்கள், பக்குவமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். தமிழர்கள் ஒரு தேசிய இனம். ஆதலால், நாட்டில் ஒரு சமஷ்டி முறையிலான ஆட்சி அமையவேண்டும் என்றார்கள். நாங்கள் என்ன செய்தோம்? எட்டியும் பார்க்க வில்லை. இப்போது என்ன சொல்கின்றோம்? ஒஸ்லோ பிரகடனத்தில் எழுதப் பட்டுள்ளது என்கின்றோம். எங்களுடைய கோமாளித்தனம் தொடர்ந்து வந்ததனால் எங்கள் இருப்புக்கே பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 15 இலட்சம் தமிழர்கள் உள்ளனர். ஆனால், 17 கட்சிகள் உள்ளன. மலையகத்தில் உள்ள கட்சிகளுடன் சேர்த்தால் 24 கட்சிகள். இவற்றைக் கொண்டு எங்கே போகப்போகின்றோம்? நாங்கள் தற்போது என்ன செய்யவேண் டும் என்றால், எமது இருப்பைப் பாதுகாப்பதற்கு என்னென்ன நிறுவனங்கள் உள்ளனவோ தற்போதைய அரசமைப்பின்படி என்னென்ன நிறுவனங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அவற்றை பயன்படுத்தி இயக்கவேண்டும். அவற்றின் மூலம் இந்த ஆவணங்களை தேடவேண்டும், தேடிப் பாதுகாக்க வேண்டும், அருங்காட்சியகங்களை அமைக்க வேண்டும். காட்சிப்படுத்த வேண்டும். மீண்டும் எங்களின் தேசிய உரிமையை, எழுச்சியை வளர்க்கவேண்டும். பன்னாட்டு ரீதியாகவும் சிங்கள மன்னர்களின் ஆட்சி வழக்கின்படியும், தமிழ் மக்களின் அரசுகள், பிராந்தியங்கள் தனித்துவமானவை. அரசுரிமையில் இறைமையில் பங்குள்ளவை என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட விடயம். இதுபற்றி எங்களுடைய துறையில் உள்ளவர்கள்தான் அடக்கி வாசிக்கின்றார்கள். உள்ளதைச் சொல்வதற்குப் பயப்படக்கூடாது. ஒன்றுமட்டும் சொல்கின்றேன். தமிழீழம் என்ற பேச்சுக்கு இடமில்லை. எந்த ஒரு நாடும் ஆதரிக்காது. இந்த யுகத்தில் ஒருவராலும் அமைக்க முடியாது - என்றார். ( https://newuthayan.com/article/நவநாசிச_பாணியில்_தமிழர்_குடித்தொகையை_மாற்றியமைக்க_முயற்சி!
-
யாழில் மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்
மாணவியை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய ஆசிரியர் விளக்கமறியலில்! (புதியவன்) யாழில் பாடசாலை மாணவியை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியரே 10 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியுள்ளார் . இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்துபெற்றோர் ஆசிரியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஆசிரியரை கைது செய்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. இதேவேளை அந்த ஆசிரியரால் மேலும் சில மாணவிகளும் பாலியல் துர்நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (ஞ) https://newuthayan.com/article/மாணவியை_பாலியல்_துர்நடத்தைக்கு_உட்படுத்திய_ஆசிரியர்_விளக்கமறியலில்!
-
மாவை- சிறீதரன் இடையே கருத்து முரண்பாடுகளாம்!
மாவை- சிறீதரன் இடையே கருத்து முரண்பாடுகளாம்! (ஆதவன்) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும், மாவை சேனாதிராஜாவும் வெவ்வேறு சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் முன்னிலையாகியதாக அரசதலைவர் சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கில் சிறீதரன் மற்றும் மாவை சேனாதிராஜா இடையே வெவ்வேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. கட்சியின் சார்பாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் நான் உள்ளிட்ட மூவர் ஒரே நிலைப்பாட்டுடன் செயற்படுகின்றோம். ஆனால், மீதமுள்ள 4 பேரும் இரு தரப்பாகப் பிரிந்து வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் செயற்படுகின்றனர். இதனை மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுத்துரைத்தேன். கட்சியின் முன்னணி அங்கத்தவர்கள் யாப்பை தெரியாதது போல் நடந்துகொள்வது தொடர்பிலும் விளக்கமளித்தேன் - என்றார். (ச) https://newuthayan.com/article/தமிழரசின்_வழக்கில்_மாவை-_சிறீதரன்_இடையே_கருத்து_முரண்பாடுகளாம்!
-
ஜனாதிபதியின் வடக்கு - கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் சுமந்திரன் வெளிப்படுத்திய தகவல்.
துரோகி என சொல்வார்கள் என்பதற்காக உண்மையை கூற அஞ்ச மாட்டேன் adminMay 27, 2024 யாராவது ஒருவர் என்னை துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையை சொல்வதற்கு நான் எப்போதுமே பயந்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் “கடந்த 2005 ஆம் ஆண்டு ரணிலின் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம் அதை இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைப்பதாக ஐனாதிபதி ரணில் முன்னிலையில் கூறியது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அந்த தேர்தலில் என்ன நடந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம் தானே. ஆனாலும் கிழக்கு மாகாண மக்கள் வாக்களித்தனர். கிழக்கு மாகாண மக்களுக்கும் இந்த அறிவித்தல் கொடுத்தாலும் அங்கு மக்கள் வாக்களித்தனர். ஏனென்றால் அதை அமுல்படுத்துகிற அதிகாரம் அந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருக்கவில்லை. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் மக்கள் வாக்களிக்கவில்லை. எனினும் ஒருசிலர் வாக்களித்தவர்கள் என நினைக்கிறேன். வாக்களித்த ஒரு சிலரும் அந்த நேரம் நூறுவீதம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தான் வாக்களித்தவர்கள். ஆனபடியால் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் யாருக்கு அந்த வாக்கு போயிருக்கும் என்பதில் எவருக்கும் எந்தவிதமான சந்தேகமும் இதுவரையில் இருந்த்தில்லை. எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை கதைப்பதற்கு பயந்து இதைச் சொன்னால் துரோகி என்று சொல்லிவிடுவீர்கள் பயந்திருக்கிற ஒரு சூழலைத் தான் இன்றைக்கும் காணப்படுகிறது. எனினும் நான் எப்போதுமே யாராவது ஒருவர் என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையைச் சொல்வதற்கு பயப்பட்டதில்லை என தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/203473/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியில் கலந்துகொண்ட புலவர் ஐயா வெற்றிபெற வாழ்த்துக்கள்! ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியில் ஜேர்மனி வெல்லாது! பிரான்ஸ் அடிக்கத்தான் சான்ஸ் அதிகம்😀
-
நம்பிக்கையை இழந்து செல்லும் தமிழ்ச்சமூகம்
எதிர்ப்பரசியலின் காலம் முடிந்தது (02) May 25, 2024 — கருணாகரன் — தமிழர்களுடைய எதிர்ப்பு அரசியலின் காலம் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியோடு – 2009 உடன் – முடிந்து விட்டது. தமிழரசுக் கட்சியே எதிர்ப்பரசியலைத் தொடக்கி வைத்தது. தான் தொடக்கி வைத்த எதிர்ப்பரசியலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியாமல் அது திணறியது. அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர்கள், அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள். அதாவது விடுதலை இயக்கங்கள். அதனுடைய உச்சம் விடுதலைப்புலிகள் ஆகும். எதிர்ப்பரசியலைப் பல பரிமாணங்களில் விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர். அரசைத் திணற வைக்கும் அளவுக்கு அதிருந்தது. தமக்கான கட்டுப்பாட்டுப் பிரதேசம், அதற்கான ஆட்சிக் கட்டமைப்பு, அதற்குரிய படைத்துறைகள், அரசை நிலைகுலைய வைக்கும் பல்திறன் தாக்குதல்கள் – விரிந்த போர், அதற்குள்ளும் மக்களைத் தம் வசமாக வைத்திருக்கும் அரசியல் உத்திகள் என இது விரிந்திருந்தது. இது பற்றிய விமர்சனங்கள், மாற்று அபிப்பிராயங்கள் இருந்தாலும் எதிர்ப்பரசியலில் புலிகளின் இடம் முக்கியமானது. 2009 இல் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதோடு இவை அனைத்தும் முடிவுக்கு வந்தன. ஆனால், இனப்பிரச்சினையின் – இன ஒடுக்குமுறையின் – அனைத்துப் பிரயோக நிலையும் அப்படியேதானுள்ளது. இப்போது கூட ஆயுதப் போராட்டமொன்றைச் செய்வதற்கான அத்தனை நியாயங்களும் உண்டு. அதைத் தொடரக் கூடிய அளவுக்கு பயிற்சி பெற்றவர்களும் தாராளமாக உள்ளனர். சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், சுகு ஸ்ரீதரன், துரைரத்தினம், சித்தார்த்தன், முருகேசு சந்திரகுமார், நடராஜா கமலாகரன் போன்ற தலைவர்களிலிருந்து இந்தக் கட்டுரையாளர் உள்பட பல பத்தியாளர்கள், ஆயிரக்கணக்கான போராளிகள் வரை அதற்கான அனுபவத் தகுதியோடுள்ளனர். ஆனால், கள யதார்த்தம்? இதுதான் ஊன்றிக் கவனிக்க வேண்டியது. ஆகவே எதிர்ப்பரசியலை மேற்கொள்வதாக இருந்தால், அது புலிகளை விடப் பன்மடங்கு வீரியமுள்ளதாகவும் பல பரிமாணத்தைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். அதைச் செய்வதற்கு யாருண்டு? எந்தத் தரப்பு உள்ளது? எதிர்ப்பரசியல் என்பது ஆயுதப் போராட்டத்தின் வழியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. மக்களை அணிதிரட்டிச் செய்யலாம் என்று சிலர் சொல்லக் கூடும். ஆம், குறைந்த பட்சம் அரகலயவைப் போலாவது மேற்கொள்ளலாம். அதாவது மக்கள் இயக்கங்களாகவோ மக்களின் அணிதிரளல்களாகவோ எழுச்சியடைந்து ஆட்சித் தரப்பை அசைப்பதாக இருக்க வேண்டும். அதைச் செய்ய முடியாமலிருப்பது ஏன்? அப்படி எதுவும் நிகழவில்லையே. அதற்கான சூழலும் ஏது நிலைகளும் தமிழ்ச் சூழலில் தாராளமாக இருந்தன. இருக்கின்றன. இதைப் புரிந்து கொண்டு, மக்கள் இயக்கத்தைக் கட்டுவதற்கும் மக்களை அணி திரட்டுவதற்கும் எந்தத் தமிழ்த் தலைவர்களும் முயற்சிக்கவில்லை. (திரட்டப்பட்ட – திட்டமிடப்பட்ட போராட்டங்கள் எல்லாமே பிசுபிசுத்துப் போனதாகத்தான் இருந்தன). அதற்குப் பெரும் அர்ப்பணிப்பைச் செய்ய வேண்டும். அதற்கும் அவர்கள் தயாரில்லை. உண்மையான நிலைமை என்னவென்றால், இதற்கான ஆளுமைகள் இன்று இல்லாமற் போய் விட்டன. அல்லது தமது ஆளுமையையும் ஆற்றலையும் இவர்கள் வெளிப்படுத்தத் தவறி விட்டனர். இன்றுள்ள அரசியற் கட்சிகளைச் சற்று ஆழ்ந்து நோக்கினால் ஒரு உண்மை தெளிவாகப் புலப்படும். எஸ்.ஜே.வி. செல்வநாயத்தைச் சொல்லியே தமிழரசுக் கட்சி இன்னும் உயிர் வாழ்கிறது. அப்படித்தான் பத்மநாபாவைச் சொல்லி ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் சிறி சபாரத்தினத்தைச் சொல்லி ரெலோவும் உமா மகேஸ்வரனை வைத்து புளொட்டும் செயற்படுகின்றன. இப்படித்தான் பிரபாகரனை (புலிகளை) வைத்துப் பல தரப்புகளும் பிழைத்துக் கொள்கின்றன. எவையும் தமது தொடக்க நிலைத் தலைவர்களைக் கடந்து, புத்தடையாளமாக எழுச்சியடையவில்லை. தாம் ஒரு பேராளுமை என்ற உணர்வோடு எழுந்து ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டவோ, மக்களை எழுச்சியடைய வைக்கவோ, புதிய அரசியலை முன்மொழிந்து அதை முன்னெடுக்கவோ முடியாமலே பலரும் உள்ளனர். இன்னொரு நிலையில் சொல்வதானால், பேரிழப்புகளையும் பெரும் தியாகங்களையும் செய்த மக்களின் முன்னால், இந்தத் தலைவர்கள் எதையும் செய்ய முடியாதவர்களாக – எதையும் செய்வதற்குத் தயாரில்லாதவர்களாகச் சிறுத்துள்ளனர். இதனால்தான் இவர்களில் பலரும் தமது மெய்யான விருப்புக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் அப்பால், புலிகளின் நிழலில் தமது அரசியலைச் செய்கின்றனர். சரி பிழைகளுக்கு அப்பால், புலிகள் மேற்கொண்ட அர்ப்பணிப்பு அவர்கள் மீதான மதிப்பை இன்னும் பெரும்பாலான தமிழ் மக்களிடம் வைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவே ஒவ்வொரு தரப்பும் முயற்சிக்கிறது. இதற்கப்பால், தமது சிந்தனையின் வீரியத்திலும் செயற்பாட்டுப் பெறுமதியிலும் சுயமாக நிற்க முடியாமலே அனைத்துத் தரப்பும் உள்ளன. தமது சிறுமைகளையும் இயலாமைகளையும் மறைத்துக் கொள்வதற்காக இவர்கள் மேற்கொள்ளும் உத்திகள் அல்லது உபாயங்களே – 1. சர்வதேச சமூகத்துக்கு எமது (தமிழ் மக்களின்) ஒற்றுமையைக் காட்ட வேண்டும். தமிழ் மக்கள் தேசமாகத் திரண்டு நிற்க வேண்டும் (கட்சிகளாகிய – தலைவர்களாகிய நீங்களே ஒன்றாகத் திரண்டு நிற்கக் கூடிய நிலையில் இல்லை. ஆனால், மக்கள் ஒன்றாகத் திரண்டு நிற்க வேண்டுமாம்). 2. இலங்கை அரசுடன் எந்த நிலையிலும் சமரசத்துக்கோ விட்டுக் கொடுப்புக்கோ செல்ல முடியாது. அரசையும் அதை ஆதரிக்கின்ற சிங்கள மக்களையும் தொடர்ந்து எதிர்க்க வேண்டும். (ஆனால் இவர்கள் அவ்வப்போது அரசோடும் ஆட்சித் தரப்புகளோடும் சிங்கத் தலைமைகளோடும் தேவைக்கேற்ப விட்டுக் கொடுப்புகள், கூட்டுச் சேர்க்கைகள், டீல்களை வைத்துக் கொள்வார்கள்). தாம் மட்டும் எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னுக்கு நிற்க மாட்டார்கள். 3. பிராந்திய சக்தியாகிய இந்தியாவின் வழிகாட்டலின்படியே நாம் செயற்பட வேண்டும் (இதில் ஏகப்பட்ட குழப்பங்கள். இந்தியாவை நம்ப முடியாது என்று சிலரும் இந்தியாதான் தமிழருக்கு ஆதரவாக இருக்கும் எனச் சிலரும் உள்ளனர்) 4. அரசாங்கமும் சிங்களத் தரப்புமே பொறுப்புக் கூறல், நீதியை வழங்குதல், தீர்வை முன்வைத்தல், பரிகாரம் காணுதல் போன்றவற்றுக்கு முழுப்பொறுப்பு. (தமக்கு – தமிழ்த்தரப்புக்கு – இதில் எந்தப் பொறுப்பும் இல்லை எனச் செயற்படுதல்). ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள தரப்பு என்ற வகையில் அரசுக்கு கூடுதல் பொறுப்புண்டு. அதற்காக நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்று சொல்லித் தப்பி விட முடியாது. போன்றனவாகும். இந்தக் கோரிக்கைகள் பலவும் அடிப்படையில் நியாயமானவையே. ஆனால், இதைச் செய்வதற்கு (செயற்படுத்துவதற்கு) உரிய அழுத்தத்தைக் கொடுப்பதற்கு எத்தகைய பொறிமுறைகள் தமிழ்த்தரப்பில் உருவாக்கப்பட்டன? மேற்கொள்ளப்பட்டன? பாராளுமன்ற உரைகள், ஊடக அறிக்கைகள், அவ்வப்போது நடத்தப்படுகின்ற ஊடகச் சந்திப்புகள், அங்கங்கே நடக்கின்ற சிறிய அளவிலான சில மணி நேரப்போராட்டங்களுக்கு அப்பால் எந்தப் பெரிய அரசியல் நடவடிக்கையும் எந்தத் தரப்பினாலும் மேற்கொள்ளப்படவில்லை. வெளிச் சக்திகளை (பிராந்தியச் சக்தியான இந்தியாவையும் சர்வதேச சமூகத்தையும்) தமிழ் மக்களுடைய (தமிழ் பேசும் மக்களுடைய) அரசியல் நியாயத்தின் பக்கம் நிற்க வைப்பதற்கான அக – புறச் சூழலைக் கூட உருவாக்கவில்லை. இதற்கான இராசதந்திரப் பொறிமுறையோ, அதைச் செயற்படுத்தக் கூடிய அணியோ, கவனத்திற்குரிய ஆளுமையோ உருவாகவும் இல்லை. பதிலாக வெறும் கட்டாந்தரையாகவே தமிழர்களின் எதிர்ப்பரசியற் களம் கடந்த 15 ஆண்டுகளாக இருக்கிறது. இந்தக் கட்டாந்தரையில் எத்தகைய நன்மையான பயிர்கள் வளர முடியும்? இதற்கு அப்பால் 1980 களில் இருந்ததைப்போல, தமிழ் – சிங்கள முரண்பாட்டை (பகையை) வளர்ப்பதற்கும் ஆயுதப் பயிற்சியைத் தருவதற்கும் இந்தியா உட்பட எந்தத் தரப்பும் தற்போது தயாரில்லை. மட்டுமல்ல, பிரிவினையை ஊக்கப்படுத்தவும் எந்த நாடும் முன்வரவில்லை. ஆக எதிர்ப்பரசியல் என்பது செயற்பாட்டு வடிவத்தில் தமிழ்ச்சமூகத்திடம் முழுதாக இல்லாதொழிந்து விட்டது. இதைப் புரிந்து கொள்ளாமல், அல்லது மக்களை ஏமாற்றுவதற்காக அரசின் குற்றங்களையும் தவறுகளையும் ஒடுக்குமுறைகளையும் பற்றி சும்மா பேசிக் கொண்டிருப்பதும் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருப்பதும் தொலைக்காட்சி உரையாடல்களில் ஆக்ரோமாகப் பேசுவதும் எதிர்ப்பு அரசியல் அல்ல. அது வெறுமனே ஒரு ஒரு தலைப்பட்டசமான ஊடகப் பணி – ஒற்றைப்படைத்தன்மையான (கறுப்பு – வெள்ளை) அரசியல் விமர்சனம் மட்டுமே. அதற்கு அப்பால், அதற்கு எந்த வகையான அரசியற் பெறுமானமும் இல்லை. மக்கள் விழித்துக் கொண்டால், அதற்குப் பலமும் கிடையாது. அரசியற் பெறுமானம் என்பது, முன்னெடுக்கப்படும் அரசியல் உண்டாக்கும் நல்விளைவுகளாகும். இதை (இந்த உண்மையை – இந்த யதார்த்தத்தை) ப் புரிந்து கொண்டு, 2009 க்குப் பிறகு போருக்குப் பிந்திய அரசியலை தமிழர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும். முதற்கட்டுரையிற் குறிப்பிட்டதைப்போல அப்படி ஒரு முன்னெடுப்பைச் செய்திருந்தால், இன்று தமிழர்கள் இருந்திருக்கக் கூடிய சூழல் வேறாக இருந்திருக்கும். அதாவது இப்படிக் கையறு நிலையில் நின்று புலம்பும் துயர நிலையைச் சந்தித்திருக்க வேண்டியதில்லை. என்பதால் எந்த நிலையிலும் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து, ஒரு தீர்வை எட்டவே வேண்டும் என்பதே நம்முன்னே உள்ள ஒரே தெரிவாக உள்ளது. அதைத் தவிர வேறு தெரிவுகளுண்டா? அப்படியென்றால் அது என்ன? எப்படியானது? என்று எதிர்ப்பரசியலை முன்மொழிவோர் சொல்ல வேண்டும். மக்கள் தேசமாகத் திரண்டு என்ன செய்வது? அதனுடைய அடுத்த கட்டம் என்ன? என்று அவர்கள் தெளிவாக்க வேண்டும். https://arangamnews.com/?p=10789
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்னும் நான்கு நாட்களே உள்ளன. போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் தாமதிக்காமல் இன்றே பதில்களை பதியுங்கள். குறைந்தது பத்துபேர் பங்குபற்றினால்தான் போட்டி யாழில் நடக்கும்😎
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
மீதமான கேள்விகளுக்கு பதில்களும் போட்டியாளர்களின் நிலைகளும் வெள்ளிக்கிழமையளவில் தரப்படும்😑
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இன்றைய இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து சுருண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்காகிய 114 ஓட்டங்களை எடுத்தது. முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி 2024 க்கான ஐபில் போட்டிச் சம்பியனாகியது! கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்லும் என சரியாக கணித்த நான்கு பேருக்கு தலா 5 புள்ளிகள் கிடைக்கின்றன. ஏனையவர்கள் 5 புள்ளிகளை இழக்கின்றார்கள்!
-
தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்களிடம் சில கேள்விகள் - நிலாந்தன்
தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்களிடம் சில கேள்விகள் - நிலாந்தன் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழரசியலில் ஒரு உத்வேகத்தை-momentum-தோற்றுவித்திருக்கிறது என்று கொழும்புமைய ஊடகம் ஒன்றில் ஆசிரியராக இருந்த ஒரு மூத்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். அதனால்தான் பொது வேட்பாளருக்கு எதிராக கருத்துக்களைத் திரட்டுபவர்கள் அதிகம் ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் காணப்படுகிறார்கள். அதில் பல கருத்துக்கள் தர்க்கபூர்வமானவை அல்ல. தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு அதை எதிர்ப்பவர்களை எந்த அளவுக்கு தற்காப்பு நிலைக்குத் தூண்டியிருக்கிறது என்பதற்கு கடந்த வாரம் வெளிவந்த ஒரு செய்தி நல்ல எடுத்துக்காட்டு. அச்செய்தியில் சம்பந்தர் ஒஸ்லோ பிரகடனம் என்று அழைக்கப்படும் ஆவணத்தை முன்வைத்து கருத்து தெரிவித்திருக்கிறார். 13 சக, எக்கிய ராஜ்ய என்றெல்லாம் உரையாடப்பட்ட ஓர் அரசியல் பரப்பில், இப்பொழுது ஓஸ்லோ ஆவணத்தை முன்னிறுத்த வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை பொது வேட்பாளர் என்ற தெரிவு ஏற்படுத்தியிருக்கின்றதா? கடந்த 15 ஆண்டுகளாக ஏன் அந்த ஆவணத்தை முன்வைத்து உரையாடப்படவில்லை?அதைவிட முக்கியமாக அந்த ஆவணத்தை அடிப்படையாக வைத்துத்தான் 2015-2018 வரையிலும் ஒரு புதிய யாப்புக்கான இடைக்கால வரைபு தயாரிக்கப்பட்டதா ? முதலில் அந்த ஒஸ்லோ ஆவணத்தைப் பார்க்கலாம். அது ஒரு பிரகடனம் அல்ல. ஆங்கிலத்தில் Oslo communique என்றுதான் காணப்படுகின்றது. தமிழில் அதனை நிலைப்பாட்டு ஆவணம் என்று கூறலாம். அதில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளும் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வந்திருந்தன. அந்த நிலைப்பாடு பின்வருமாறு…”உள்ளக சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ் பேசும் மக்களுக்கு, தமது வரலாற்று ரீதியிலான, பாரம்பரிய வாழ்விடத்தில், ஐக்கிய இலங்கைக்குள், சமஸ்ரி அடிப்படையிலான தீர்வு தொடர்பாக இரு ஆராய இரு தரப்பும் உடன்படுகின்றன.” அதாவது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்ரி அடிப்படையிலான ஒரு தீர்வை ஆழமாக ஆராய்வது என்றுதான் அங்கு கூறப்பட்டிருக்கிறது. அதே சமயம் அந்த உடன்பாடு எத்தகைய ஓர் அரசியல் சூழலில் எட்டப்பட்டது? அது நோர்வையின் அனுசரணையோடு இணைத்தலைமை நாடுகளால் முன்னெடுக்கப்பட்ட ஒரு சமாதான முயற்சி. அதாவது மூன்றாவது தரப்பு ஒன்றின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்ட ஒரு சமாதான முயற்சி. இது மிக முக்கியமானது. இலங்கையின் இனப்பிரச்சினை ஒரு உள்நாட்டுப் பிரச்சினை அல்ல. அது ஓர் அனைத்துலகப் பிரச்சினை. உலகில் உள்ள எல்லாத் தேசிய இனப்பிரச்சனைகளும் சாராம்சத்தில்,அனைத்துலகப் பிரச்சனைகள்தான். உள்நாட்டு பிரச்சினை ஒன்றில் வெளிநாடுகள் தலையிடும் போதுதான் தேசிய இனப்பிரச்சினைகள் உலகின் கவனத்தை ஈர்க்கும் வளர்ச்சிகளைப் பெறுகின்றன. எனவே தேசிய இனப்பிரச்சனைகள் சாராம்சத்தில் அனைத்துலகப் பிரச்சினைகள்தான். அவற்றுக்கு அனைத்துலகத் தீர்வுகள்தான் உண்டு. உள்நாட்டுத் தீர்வுகள் கிடையாது. திம்புவில் தொடங்கி ஒஸ்லோ வரையிலும் அதுதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 15ஆண்டுகளாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் அதைத்தான் நிரூபிக்கின்றன. இலங்கை இனப்பிரச்சனைக்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு. மூன்றாவது தரப்பு ஒன்றின் தலையீட்டோடு அந்த தீர்வு உருவாக்கப்பட வேண்டும். எனவே ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தை அதன் அனைத்துலகப் பரிமாணத்துக்குள் வைத்து முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தரப்பின் கண்காணிப்பின் கீழ் ஓர் உடன்படிக்கைக்கு வர எந்த ஜனாதிபதி வேட்பாளர் தயார்?அவ்வாறு எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளராவது தயாராக இருந்தால், ஒரு பொது வேட்பாளருக்கான தேவை இருக்குமா? எனவே பொது வேட்பாளர் என்ற தெரிவுக்கு எதிராக ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தை முன்வைப்பவர்கள் அந்த விடயத்தில் தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான வேட்பாளர்களில் யார் ஒரு மூன்றாவது தரப்பின் மேற்பார்வையில் தமிழ் மக்களோடு உடன்பாட்டுக்கு வரத் தயார்? என்பதனை வெளிப்படுத்த வேண்டும். கடந்த மே தினத்தில் கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உரையாற்றியதுபோல, தமிழ் மக்களோடு அப்படி ஓர் உடன்படிக்கைக்கு வரக்கூடிய தென்னிலங்கை வேட்பாளர் தமிழ்மக்கள் மத்தியில் 100வாக்குகளை பெறலாம். ஆனால் தென்னிலங்கையில் அவர் ஆயிரம் வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதுதான் இலங்கைத் தீவின் இன யதார்த்தம். 15ஆண்டுகளின் பின்னரும் அதுதான் இலங்கைத்தீவின் இன யதார்த்தமாக உள்ளது என்பது எத்துணை குரூரமானது? தமிழ் மக்களோடு மிகச்சாதாரண அடிப்படைகளில் ஓர் உடன்படிக்கைக்கு வரக் கூட எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் தயாராக இல்லை. இப்போதுள்ள ஜனாதிபதிதான் ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணம் உருவாக்கப்படுகையில் பிரதமராக இருந்தவர். அவர் இப்பொழுது என்ன கூறுகிறார்? இனப்பிரச்சினையை வடக்கின் பிரச்சினையாகத் தந்திரமாகக் குறுக்குகிறார். இப்பொழுது பொருளாதார நெருக்கடிக்குத்தான் தீர்வு தேவை என்று சூசகமாகக் கூறுகிறார். எல்லாவற்றையும் விட முக்கியமாக போலீஸ் அதிகாரம் இல்லாத ஒரு 13ஐத்தரலாம் என்று கூறுகிறார். அதாவது 13மைனஸ். மற்றவர் சஜித் பிரேமதாச. அவர் 13பிளஸ் என்று கூறுகிறார். ஒரு தீர்வை முன்வைத்து மூன்றாவது தரப்பு ஒன்றின் மேற்பார்வையின் கீழ் ஒரு பன்னாட்டு உடன்படிக்கைக்கு வர அவர் தயாரா? மூன்றாவது அனுரகுமார. அவர் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு என்பதை இதுவரை துலக்கமான வார்த்தைகளில் தெரிவிக்கவில்லை. எனவே மேற்சொன்ன மூன்று வேட்பாளர்களில் யாருமே தமிழ்மக்களோடு மூன்றாவது தரப்பு ஒன்றின் மேற்பார்வையின் கீழ் உடன்பாட்டுக்கு வரத் தயாராக இருக்கப்போவதில்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவரோடு ஏதோ ஒரு உடன்பாட்டுக்கு வரலாம் என்று கருதும் தரப்புக்கள் தமிழ்மக்களுக்குப் பின்வரும் விடையங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு பிரதான வேட்பாளராவது தமிழ் மக்களோடு மூன்றாவது தரப்பு ஒன்றின் கண்காணிப்பின் கீழ் உடன்பாட்டுக்கு வரத் தயாராக இருக்கிறாரா? அது ஓஸ்லோ ஆவணத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்குமா?அல்லது 2015-2018 வரையிலும் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தோடு இணைந்து உருவாக்கிய ஒரு புதிய யாப்புக்கான இடைக்கால வரைபில் காணப்படும்”எக்கிய ராஜ்ஜிய”என்ற தீர்வா? இவற்றுடன் மேலும் ஒரு கேள்வியை கேட்கலாம். கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ்த் தரப்பின் ஆதரவைப் பெற்ற ஒரே ஒரு வேட்பாளர்-மைத்திரிபால சிறிசேனதான்-வெற்றி பெற்றார். அவர் உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின்படி, நிலைமாறு கால நீதியை நிலைநாட்ட, அதாவது பொறுப்புக் கூறலுக்கு ஒப்புக்கொண்டது. அதன்படி ஒரு புதிய யாப்பை உருவாக்கும் நோக்கத்தோடு நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டது. 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் புதிய யாப்பு ஒன்றுக்கான இடைக்கால வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த இடைக்கால வரைபின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன அதனைக் காட்டிக்கொடுத்தார். ஒரு யாப்புச் சதி முயற்சி மூலம் அவர் நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சித்தார். இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், 2015 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் அவருக்கு வழங்கிய மிக அரிதான ஒரு மக்கள் ஆணைக்குத் துரோகம் செய்தார். அதாவது தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றதால் ஜனாதிபதியாக வந்த ஒருவர் தமிழ் மக்கள் தனக்கு வழங்கிய மக்கள் ஆணைக்குத் துரோகம் இழைத்தார். நல்லாட்சிக் காலத்தில் காணிகள் விடுவிக்கப்பட்டன, கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான சுமார் 10 ஆண்டுகால வளர்ச்சியில் அவை இயல்பாக ஏற்பட வேண்டிய மாற்றங்கள்தான். ஆனால்,மைத்திரியுடனான சமாதானத்தின் இதயம் என்று கூறத்தக்கது, ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிதான். ஆனால் அதைத் தோற்கடித்ததே அவர்தான். இவ்வாறான ஏமாற்றுகரமான 15 ஆண்டுகளின் பின்னணியில், தமிழ்த்தரப்பின் ஆதரவைப் பெற்று ஜனாதிபதியாக வந்த ஒருவர் மைத்திரியைப்போல மஹிந்தவின் வீட்டில் அப்பம் சாப்பிட்டு விட்டு தலைகீழாக நிற்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? மேற்படி கேள்விகளுக்கு பொது வேட்பாளரை எதிர்க்கும் தரப்புகள் தெளிவான விடைகளை வழங்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளிலும் நடந்த எந்த ஒரு பேச்சுவார்த்தை மேசையிலும் தொட்டுக்கூடப் பார்க்கப்படாத ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தை இப்பொழுது மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய தேவை என்ன? அதைக் குறித்து உரையாட வேண்டிய ஒரு காலகட்டத்தில் அதுபற்றி உரையாடப்படவில்லை. தமிழ் மக்களின் நவீன வரலாற்றில் இனப் பிரச்சனையைத் தீர்க்கும் நோக்கத்தோடு அதிகளவு முன்மொழிவுகள் மேசையில் வைக்கப்பட்ட ஒரு காலகட்டமாக 2018-2021வரையிலுமான காலகட்டத்தை குறிப்பிடலாம். 2015-2018 வரையிலும் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்றன. இதன்போது தமிழ்க்கட்சிகளும் தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் அமைப்புகளும் வெவ்வேறு தீர்வு முன்மொழிவுகளை மேசையில் வைத்தன. தவிர,தமிழ் மக்களிடமும் அது தொடர்பாகக் கருத்து அறியப்பட்டது. அந்த யாப்புருவாக்க முயற்சியைத்தான் மைத்திரி குழப்பினார். அதன் பின் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நிபுணர் குழுவை உருவாக்கினார். தமிழ்த் தரப்பு அங்கேயும் யோசனைகளை முன் வைத்தது. இவ்வாறாக நவீன தமிழ் வரலாற்றில் தமிழ் மக்கள் அதிகளவு தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்த அக்காலகட்டத்தில் ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தைக் குறித்து யாரும் உரையாடவில்லை. இப்பொழுது மட்டும் ஒரு பொது வேட்பாளருக்கு எதிராக ஏன் அந்த ஆவணம் தூசு தட்டி எடுக்கப்பட்டிருக்கிறது? விடுதலைப் புலிகள் இயக்கம் சம்பந்தப்பட்ட ஒரு நிலைப்பாட்டு ஆவணத்தை முன்னிறுத்தினால் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவைப் பலவீனப்படுத்தலாம் என்று சிந்திக்கப்படுகின்றதா? ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவை முன்வைக்கும் சிவில் சமூகங்கள், தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரையும் தாம் நம்பவில்லை என்றுதான் கூறுகின்றன. ஜனாதிபதித் தேர்தலை ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் என்ற அடிப்படையில் அவை நிராகரிக்கின்றன. இது ஏறக்குறைய தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சியின் நிலைப்பாட்டுக்கு சமாந்தரமானது. சிவில் சமூகங்களைப் பொறுத்தவரை,தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு தமிழ்த் தேசிய ஐக்கியத்தின் குறியீடு. தமிழ் மக்களை ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைப்பதற்கான ஆகப்பிந்திய முயற்சி. அவ்வாறு தமிழ் அரசியல் சக்தியை,தமிழ் வளத்தை,தமிழ்ப் பலத்தை,ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைப்பது ஏன் தவறானது என்பதற்கு அதை எதிர்ப்பவர்கள் விளக்கம் கூறுவார்கள்? https://www.nillanthan.com/6770/
-
சிறிலங்கன் விமான சேவையை வாங்கப் போவது யார்? இறுதிச் சுற்றில் மூன்று நிறுவனங்கள்
சிறிலங்கன் விமான சேவையை வாங்கப் போவது யார்? இறுதிச் சுற்றில் மூன்று நிறுவனங்கள் May 26, 2024 சிறிலங்கன் ஏர்லைன்சை வாங்கப் போகும் மூன்று நிறுவனங்களை அந்நாட்டு அரசு இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்துள்ளதாக கொழும்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்த ஆறு நிறுவனங்களில் மூன்று, அமைச்சரவையால் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், Sheriza- Supreme group மற்றும் Hayleys கொம்பனி ஆகிய இரண்டு உள்ளூர் நிறுவனங்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சிறிலங்கன் ஏர்லைன்சை கொள்வனவு செய்யும் மூன்று இறுதிப் போட்டியாளர்களில் ஆசியாவில் குறைந்த கட்டண விமான சேவையான Air asia-வும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதியமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட பொது நிறுவனங்களின் மறுசீரமைப்புப் பிரிவானது சிறிலங்கன் ஏர்லைன்சை தனியார் துறைக்கு எடுத்துச் செல்வதற்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து ஏலங்களை அண்மையில் கோரியதுடன், ஆறு நிறுவனங்கள் இதற்காக முன்வந்தன. AirAsia, Fitz Air, Darshan Elites Investment Holdings, Fitz Aviation, Sheriza Technologies Subsidiary Supreme Company, Treasure Republic Guardian Company மேலும் Hayleys இவ்வாறு சிறிலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான தகுதிகளை அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் தொடர்பில் அமைச்சரவை உபகுழுவினால் மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளை மதிப்பிட்டு சிறிலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு மூன்று நிறுவனங்கள் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதில் இரண்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்கள் மற்றும் Hayleys இலங்கையைச் சேர்ந்தது. இது ஒரு முன்னணி பொது நிறுவனம் ஆகும். மேலும், சுப்ரீம் குளோபல் நிறுவனம் இலங்கையில் பல முதலீடுகளில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம் ஆகும். மேலும், அந்த நிறுவனம் தனது லட்சிய முன்மொழிவை ஷெரிசா டெக்னாலஜிடம் முன்வைத்துள்ளது. இது கட்டார் நாட்டின் ஷேக்கான நயீப் பின் ஈத் அல் தானியின் முதலீடாகும். அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இயங்கி வரும் இலங்கையின் தேசிய விமான சேவையானது தனது முன்னேற்றத்தையும், வேலை பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், இனி விமான சேவையை பராமரிக்க முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.ilakku.org/சிறிலங்கன்-விமான-சேவையை/
-
அனைத்து அசையும், அசையா சொத்துக்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்!
அனைத்து அசையும், அசையா சொத்துக்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்! adminMay 25, 2024 அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அத்துடன், இலங்கைப் பிரஜைகளின் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உரிமைப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் தகவல்களையும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு தொடர்ச்சியாக வழங்குமாறும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உட்பட எந்தவொரு நிதி நிறுவனத்தினாலும் பராமரிக்கப்படும் அனைத்து நடப்புக் கணக்குகளின் விவரங்கள் மற்றும் கடன்கள் மற்றும் முற்பணங்கள் பற்றிய தகவல்களும் வழங்கப்பட வேண்டும். மேலும் இந்த தகலுக்கு அமைய ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு நபரோ அல்லது அரச நிறுவனமோ எந்தவொரு தகவலையும் பராமரிக்கவில்லை என்றால், அந்த தகவலை இந்த ஆண்டு ஜூலை 1 முதல் பராமரிக்கத் தொடங்க வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/203417/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
நாளை ஞாயிறு (26 மே) எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 07) மே 26, ஞாயிறு 19:30, சென்னை: Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR எதிர் SRH நான்கு பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவருமே சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்லும் கணிக்கவில்லை. நாளை நான்கு பேருக்கு 5 புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லாரும் 5 புள்ளிகளை இழப்பார்களா? போட்டியாளர் பதில் வீரப் பையன்26 CSK முதல்வன் CSK சுவி KKR ஏராளன் RR நிலாமதி RR அஹஸ்தியன் RR ஈழப்பிரியன் CSK கல்யாணி KKR கந்தப்பு CSK கறுப்பி CSK எப்போதும் தமிழன் RR வாதவூரான் RR கிருபன் KKR நீர்வேலியான் CSK கோஷான் சே RR நுணாவிலான் KKR புலவர் CSK
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1 ஈழப்பிரியன் 2 வீரப் பையன்26 3 சுவி 4 நிலாமதி 5 குமாரசாமி 6 தியா 7 தமிழ் சிறி @ஈழப்பிரியன் ஐயா, @வீரப் பையன்26, @suvy, @நிலாமதி அக்கா, @குமாரசாமி ஐயா, @theeya மற்றும் @தமிழ் சிறி ஐயா வெற்றிபெற வாழ்த்துக்கள்! இன்னும் 6 நாட்களே உள்ளதால், விரைந்து கலந்துகொள்ளுங்கள். போட்டி முடிவு திகதி வெள்ளி 31 மே 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 கூகிள் ஷீற்றைப் பயன்படுத்தி பதில்களைப் பதிந்தால் தரவேற்ற உதவியாக இருக்கும். https://docs.google.com/spreadsheets/d/1lHvsIOJ4JmDZJ3zcOty944J-wzK0Opz-2n0AAQ5lmRs/edit?usp=sharing
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@theeya, இறுதியாக வரும் அணிகள் பற்றிய 6 கேள்விகளுக்கும் பதில்கள் தரவில்லை. பதில்களை உங்கள் அட்டவணையில் இருந்து எடுக்கின்றேன். மாற்றவேண்டும் என்றால் சொல்லுங்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உங்கள் தெரிவுகளின்படி USA சுப்பர் 8 க்கு தெரிவாகாது, இதற்கு உங்கள் தெரிவுகளின்படி NZ அல்லது BAN ஐ பதிலாகத் தரவேண்டும். உங்கள் தெரிவுகளின்படி OMA சுப்பர் 8 க்கு தெரிவாகாது, இதற்கு உங்கள் தெரிவுகளின்படி AFG அல்லது SA ஐ பதிலாகத் தரவேண்டும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@வீரப் பையன்26, சிறிலங்காக் கொடியாக உள்ளதே! எது உங்கள் தெரிவு?
-
வெளிவருகிறது பொன்சேகாவின் போா் குறித்த நுால் – பல உண்மைகள் வெளிவரும் எனத் தகவல்
வெளிவருகிறது பொன்சேகாவின் போா் குறித்த நுால் – பல உண்மைகள் வெளிவரும் எனத் தகவல் May 25, 2024 சஜித் பிரேமதாசவுடன் நிலவும் முரண்பாடுகளின் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தான் தலைமை தாங்கிய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் எழுதிய புத்தகத்தை வெளியிடவுள்ளதாகவும் இதன் மூலம் இதற்கு முன்னர் வெளிவந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் கமல் குணரத்ன ஆகியோரின் புத்தகங்களிலுள்ள பல விடயங்கள் பொய்யென நிரூபிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, சஜித் பிரேமதாச போன்றவர்கள் பற்றிய பல உண்மைகளை இந்தப் புத்தகம் வெளிப்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சஜித் பிரேமதாசவுடன் நிலவி வரும் அரசியல் முரண்பாடே இந்த புத்தகம் விரைவாக வெளிவருவதற்கு முதன்மையான காரணம் எனவும் சரத் பொன்சேகாவின் தலைமைத்துவத்தின் கீழ் அக்கட்சியின் பல உறுப்பினர்களை கொண்டு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட வைக்கும் திட்டம் இருப்பதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது. இந்தப் புத்தகத்தை வெளியிட்டு அவரைச் சுற்றி பாராளுமன்ற உறுப்பினர்களை திரட்டி பெரும் பலம் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பாக சி.ஏ.சந்திர பிரேமா எழுதியுள்ள “கோட்டாவின் போர்’ என்ற நூலில் உள்ள பல விடயங்களும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவால் வெளியிடப்பட்ட “ரோட் ரு நந்திக்கடல்’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களும் கேள்விக்குள்ளாக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.ilakku.org/sarath-fonsekas-book-on-the-war-is-out/
-
யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில்
யாழ். வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் வட.மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதி செய்யும் வகையில் யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை கட்டிடத்தை நேற்று(24) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்திற்கு தேசிய வைத்தியசாலையை வழங்குமாறு நீங்கள் அனைவரும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தீர்கள். கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு கடந்த வாரம் அமைச்சரவையில் அனுமதி வழங்கினோம். அத்துடன், யாழ்ப்பாண வைத்தியசாலையை அடுத்த தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். யாழ்ப்பாண மாவட்டத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அப்போது கொழும்பில் மாத்திரமன்றி தெற்கு, வடக்கு, மற்றும் மத்திய மாகாணங்களிலும் சிறந்ததொரு வைத்தியசாலைக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். அத்தோடு நின்று விடாமல் அபிவிருத்தி செய்ய வேண்டிய ஏனைய பகுதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். நான் அடிக்கடி யாழ். மாவட்டத்திற்கு வருகை தருவதாக இங்கு குறிப்பிடப்பட்டது. உண்மையில் நான் இந்த முறை இங்கு வைத்தியசாலைகளை திறப்பதற்காக வந்தேன். நான் ஒரு நீண்ட வார இறுதி விடுமுறையில் வந்துள்ளேன். அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.நான் கடந்த முறை இங்கு வருகை தந்தபோது, நெதர்லாந்துத் தூதுவர் இந்த இரண்டு புதிய மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இங்கு வருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அதனால் இந்த வார இறுதியில் இங்கு வந்து இந்தச் செயற்பாடுகளை நிறைவு செய்யத் தீர்மானித்தேன். யாழ்ப்பாண மாவட்டம் நீண்டகாலமாக அபிவிருத்தியின் பலனை அனுபவிக்கவில்லை. வருமானம் போதியளவில் இல்லை. மக்கள் வேலைத் தேடும் நிலை காணப்படுகிறது. யாழ்.மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான அநேகமான சாத்தியங்கள் உள்ளன. யாழ்.மாவட்ட மக்களின் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட சில பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடிந்துள்ளது. தடுப்புக்காவலில் உள்ள கைதிகள் தொடர்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான பிரச்சினைகளும் உள்ளன. எங்களால் இன்னும் இதனை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை. அதற்கான தீர்வுகள் தற்போதுள்ள அரசியல் பிரச்சினைகளைச் சுற்றியே உள்ளன. நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல், காணாமல் போனோர் விவகாரம், இழப்பீடுகள், உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நாம் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க இதுவே நேரம் என்று நான் நம்புகிறேன். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சித்து வருவதோடு, வடகிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளேன். முன்னைய ஆணைக்குழு அறிக்கைகள் அனைத்தையும் ஆராய்ந்து தொகுக்கப்பட்ட நவாஸ் ஆணைக்குழுவின் அறிக்கை அண்மமையில் எமக்கு கிடைத்தது. இந்த அனைத்து ஆணைக்குழு அறிக்கைகளின் தாய் அறிக்கையாகவும், இது தொடர்பான கடைசி ஆணைக்குழு அறிக்கையும் அதுவாகவே இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதற்காக மற்றுமொரு ஆணைக்குழுவின் அவசியம் இல்லை. காணாமல் போனோர் அலுவலகம் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும் என்ற அவர்களின் பரிந்துரையை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதை அப்படியே செய்ய வேண்டும். காணாமற்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகள் தொடர்பான முழுப் பிரச்சினைக்கான தீர்வுகளிலும் மாற்றங்கள் செய்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். பொருளாதார நெருக்கடியால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்களால் அதிகளவு இழப்பீடு தொகையை செலுத்த முடியவில்லை. எனவே அதற்காக பணம் ஒதுக்க வேண்டும். அத்துடன் எது உண்மை, என்ன நடந்தது, நல்லிணக்கத்திற்காக நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்விக்குறி காணப்படுகிறது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை (TRC) கொண்டு வருவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. ஆனால் நீதிமன்ற அதிகாரம் குறித்த பிரச்சினைகள் அதற்குள் காணப்படுகிறது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் நீதித்துறை அதிகாரங்கள் எமக்கு இருக்க வேண்டுமா அல்லது அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நீதித்துறை அதிகாரங்களைச் செயற்படுத்தும் தனி நீதிமன்றம் வேண்டுமா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். மேலும் இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனவே, இது குறித்து அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை சட்டமாக்குவதற்கு எமக்கு ஆதரவளித்த மூன்று தூதுவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்குமாறு இரண்டு அமைச்சர்களுக்கும் அறிவித்துள்ளேன். இதன் மூலம் பல பிரச்சினைகள் தீரும் என நம்புகிறேன். எனவே, இதுபற்றி கலந்துராயடி, சாத்தியமான தீர்வுகளுடன் இணக்கப்பாட்டுக்கு வருவோம் என்று அமைச்சர்களிடம் தெரிவித்தேன். அத்துடன், வட மாகாணம் அபிவிருத்திக்காக சாத்தியக்கூறுகளை அதிகமாக கொண்டிருக்கிறது. இந்த மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பெருமளவில் உள்ளது. அதனால் யாழ்ப்பாணத்தை இலங்கையின் முக்கிய வலுசக்தி மையமாக கட்டியெழுப்ப முடியும். வடமாகாணத்தில் இந்த வலுசக்தியை நாம் இதுவரை பயன்படுத்தவில்லை. ஆனாலும் ஜிகாவொட்கள் அளவிலான வலுசக்தி இங்கு உள்ளது. மேலும், நாட்டில் போட்டி, ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். வடக்கு மாகாணம் அதற்குள் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. இங்குள்ள விவசாயிகளுக்கு அதற்கான திறன் உள்ளது. இதன் மூலம் வடமாகாண மக்களின் வருமான மட்டத்தை பாரியளவில் மேம்படுத்த முடியும். மேலும், கைத்தொழில்களைப் பொறுத்த வரையில் காங்கேசந்துறையில் முதலாவது முதலீட்டு வலயத்தை அமைப்பது குறித்தும், பின்னர் பரந்தன் மற்றும் மாங்குளத்தில் கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். மேலும் திருகோணமலையை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்றோம். வடக்கில் சுற்றுலாத்துறைக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். எதிர்வரும் காலங்களில் ஏற்படவுள்ள தரைமார்க்க தொடர்பின் மூலம் யாழ்ப்பாணம் உள்ளடங்களாக முழு வடக்கு மாகாணமும் புரட்சிகரமாக மாறும். இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் வடமாகாணத்தை இலங்கையின் பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய முடியும். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் சில நடனக் அம்சங்கள் இங்கு இடம்பெற்றன. அவர்களைப் பாராட்டுகிறேன். அவர்களில் பெரும்பாலானோர் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று துணைவேந்தர் கூறினார். அதாவது 2002 மற்றும் 2003 இல் பிறந்தவர்கள். அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உருவாக்கப்பட வேண்டும். அவர்களைத்தான் Gen Z என்று அழைக்கிறோம். அவர்கள் தங்கள் எதிர்காலத்திலம் குறித்து அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இதன் காரணமாகவே புதிய பொருளாதாரக் கட்டமைப்பிற்குள் விரைவான அபிவிருத்தியை நோக்கிச் செல்வதற்கான சட்டங்களைக் கொண்டுவருவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதையும் கூற வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/302396
-
தமிழ் காவல்துறையினரை கட்டாயப்படுத்தி பிரித் ஓத வைத்த காவல்துறை உயர்மட்டம்
தமிழ் காவல்துறையினரை கட்டாயப்படுத்தி பிரித் ஓத வைத்த காவல்துறை உயர்மட்டம் adminMay 25, 2024 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கெமுனு விகாரையில் நடைபெற்ற வெசாக் வழிபாட்டிற்காக தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர்களை கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காங்கேசன்துறை குமார கோவில் வளாகத்தில் கெமுனு விகாரை அமைக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் குமார கோவில் இருந்தவேளை, ஆலயத்திற்கு முன்பாக இராணுவத்தினரால் கெமுனு விகாரை எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாது நிர்மாணிக்கப்பட்டது. தற்போது குறித்த பகுதிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் மீள்குடியேறி குமார கோவிலில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் , குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் வெசாக் தினத்தில் கொழும்பில் இருந்து பிக்கு ஒருவர் அழைத்து வரப்பட்டு , தமிழில் பிரித் ஓதி வழிபாடுகள் இடம்பெற்றன. குறித்த வழிபாட்டில் காங்கேசன்துறை காவல்துறை பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடமையாற்றும் தமிழ் காவல்துறையினர் கலந்து கொள்ள வேண்டும் என காவல்துறை உயர் மட்டத்தினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டு , தமிழ் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தமிழில் பிரித் ஓதி வழிபாட்டில் ஈடுப்பட வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2024/203408/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வெள்ளிக்கிழமைக்குள் 10 பேர் கலந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றேன். கூகிள் ஷீற்றைப் பயன்படுத்தினால் பதில்களை தரவேற்றுவது இலகுவாக இருக்கும். ஒரு மினி ஹொலிடே போவதால் யாழுக்கு வருவதும் குறைவாக இருக்கும்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
T20 உலகக் கிண்ணப் போட்டியில் மோதும் அணிகளின் வீரர்களின் விபரங்கள் - விடுபட்ட அணிகள் குழு A: பாகிஸ்தான் (PAK) BATTERS: Babar Azam (c), Azam Khan, Fakhar Zaman, Iftikhar Ahmed, Mohammad Rizwan, Saim Ayub, Usman Khan ALLROUNDERS: Imad Wasim, Shadab Khan BOWLERS: Abbas Afridi, Abrar Ahmed, Haris Rauf, Mohammad Amir, Naseem Shah, Shaheen Shah Afridi அயர்லாந்து (IRL) BATTERS: Ross Adair, Andy Balbirnie, Neil Rock, Harry Tector, Lorcan Tucker ALLROUNDERS: Paul Stirling (c), Mark Adair, Curtis Campher, Gareth Delany, George Dockrell BOWLERS: Graham Hume, Josh Little, Barry McCarthy, Ben White, Craig Young குழு B: நமீபியா (NAM) BATTERS: Nikolaas Davin, Zane Green, JP Kotze, Malan Kruger, Dylan Leicher ALLROUNDERS: Gerhard Erasmus (c), JJ Smit, Jan Frylinck, Michael van Lingen, David Wiese BOWLERS: Peter-Daniel Blignaut, Jack Brassell, Tangeni Lungameni, Bernard Scholtz, Ben Shikongo, Ruben Trumpelmann குழு C : பபுவா நியூகினி (PNG) BATTERS: Assad Vala (c), Sese Bau, Kiplin Doriga, Hiri Hiri, Lega Siaka, Tony Ura ALLROUNDERS: Charles Amini BOWLERS: Semo Kamea, John Kariko, Kabua Morea, Alei Nao, Chad Soper, Norman Vanua, Jack Gardner குழு D : சிறிலங்கா (SL) BATTERS: Kusal Mendis, Pathum Nissanka, Sadeera Samarawickrama ALLROUNDERS: Wanindu Hasaranga (c), Charith Asalanka, Dhananjaya de Silva, Angelo Mathews, Kamindu Mendis, Dasun Shanaka BOWLERS: Dushmantha Chameera, Dilshan Madushanka, Matheesha Pathirana, Maheesh Theekshana, Nuwan Thushara, Dunith Wellalage பங்களாதேஷ் (BAN) BATTERS: Najmul Hossain Shanto (c), Jaker Ali, Litton Das, Tanzid Hasan, Towhid Hridoy ALLROUNDERS: Mahedi Hasan, Mahmudullah, Shakib Al Hasan, Soumya Sarkar BOWLERS: Taskin Ahmed, Mustafizur Rahman, Rishad Hossain, Shoriful Islam, Tanvir Islam, Tanzim Hasan Sakib நெதர்லாந்து (NED) BATTERS: Scott Edwards (c), Wesley Barresi, Michael Levitt, Max O'Dowd, Vikramjit Singh ALLROUNDERS: Bas de Leede, Sybrand Engelbrecht, Teja Nidamanuru, Tim Pringle, Saqib Zulfiqar BOWLERS: Aryan Dutt, Vivian Kingma, Kyle Klein, Logan van Beek, Paul van Meekeren
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இன்றைய மூன்றாவது Play-off Qualifier 2 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் மெதுவான ஆடுதளத்தில் சுழல்பந்துக்கு அடித்தாடமுடியாமல் திணறி 7 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் 36 ஓட்டங்களால் வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்லும் என சரியாக கணித்த நான்கு பேருக்கு மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. ஏனையவர்கள் மூன்று புள்ளிகளை இழக்கின்றார்கள்! இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கல்யாணி 65 2 நுணாவிலான் 65 3 நிலாமதி 61 4 அஹஸ்தியன் 59 5 கந்தப்பு 59 6 புலவர் 59 7 வீரப் பையன்26 53 8 முதல்வன் 53 9 சுவி 53 10 ஏராளன் 53 11 எப்போதும் தமிழன் 53 12 வாதவூரான் 53 13 கிருபன் 53 14 நீர்வேலியான் 53 15 கறுப்பி 51 16 ஈழப்பிரியன் 49 17 கோஷான் சே 49 @கறுப்பி சுமைதாங்குவதற்கு என்றே போட்டியில் கலந்துகொண்ட @goshan_che யிடம் தனது இடத்தைக் கொடுத்துவிட்டு இரு படிகள் முன்னேறியுள்ளார். பிந்தி போட்டியில் கலந்துகொண்டால் முன்னுக்கு வர சாத்தியம் என நினைத்த @ஈழப்பிரியன் ஐயா இறுதிப் படியை அண்மித்து நிற்கின்றார்!