Everything posted by கிருபன்
-
பலத்தைக் காட்ட ஏட்டிக்குப் போட்டியாக மேதினக் கூட்டங்களை நடத்தும் அரசியல் கட்சிகள்!
பலத்தைக் காட்ட ஏட்டிக்குப் போட்டியாக மேதினக் கூட்டங்களை நடத்தும் அரசியல் கட்சிகள்! இலங்கை முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் 40க்கும் மேற்பட்ட மேதினக் கூட்டங்களையும் பேரணிகளையும் ஏற்பாடு செய்துள்ளன. ஏட்டிக்கு போட்டியாக மேதினக் கூட்டங்களை நடத்தி தமது பலத்தை வெளிப்படுத்த அரசியல் கட்சிகள் எதிர்பார்த்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன மைதானத்திற்கு முன்னால் பிரதீபா வீதியில் நடத்தப்படவுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கோட்டை சதாம் வீதியில் நடக்கவுள்ளது. ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் கட்சித் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு தாமரைத் தடாகத்திற்கு அருகில் கன்னங்கர மாவத்தை பகுதியில் நடக்கவுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியின் மேதினக் கூட்டத்தை கம்பஹாவில் நடக்கவுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் கொட்டகலையிலும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்டம் தலாவாக்கலை நகரிலும், தமிழரசுக் கட்சியின் மேதினக் கூட்டம் கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளன. http://www.samakalam.com/பலத்தைக்-காட்ட-ஏட்டிக்கு/
-
2024 நாடாளுமன்றத் தேர்தல் “வீதிகளில் பார்க்கும் ஜனநாயகம்” : டி.அருள் எழிலன்
2024 நாடாளுமன்றத் தேர்தல் “வீதிகளில் பார்க்கும் ஜனநாயகம்” : டி.அருள் எழிலன் ஏப்ரல் 2024 - டி.அருள் எழிலன் · அரசியல் மொத்த இந்தியாவையும் காவி மயமாக்கி வரும் மோடி நாட்டின் தலைநகரான டெல்லியின் அடையாளங்களையும் மாற்றி வருகிறார். டெல்லி மக்களவை வளாகத்தில் ஒரு காந்தி சிலை இருக்கிறது. நியாயமாக இந்தப் பத்தாண்டுகளில் மோடி அந்தச் சிலையைக் கடாசி விட்டு அதில் சாவர்க்கர் சிலையை வைத்திருக்க வேண்டும். ஆனால், ஆச்சரியமாக அதைச் செய்யவில்லை. காந்தி சிலையை விட்டு வைத்திருந்தார். ஏன் தெரியுமா? பிரதமர் மோடியின் இந்தப் பத்தாண்டுகளில் நாட்டின் மொத்த எதிர்க்கட்சிகளும் இந்த காந்தி சிலையின் கீழ்தான் போராடிக் கொண்டிருந்தனர். எங்கே இந்த காந்தி சிலையை அகற்றி விட்டால் இவர்கள் மக்களிடம் சென்று போராடத் தொடங்கி விடுவார்கள் என்று மோடி அதை அகற்றாமல் விட்டார். இது வேடிக்கையாக நான் முன்பே எழுதியதுதான் என்றாலும் இன்றைய இந்தியா சந்திக்கும் பிரச்சனைகளுக்குப் பிரதான காரணம் இதுவே. மோடி வீழ்த்தவே முடியாத தலைவர், பாஜக வெல்லவே முடியாத கட்சி என்ற கதையை வளர விட்டதில் எதிர்க்கட்சிகளுக்கும் பங்குண்டு. மிக எளிதாக வீழ்த்த முடிகிற ஒருவரை வளர விட்டு அது இன்று குடியரசு விழுமியங்களுக்கே உலை வைக்கும் அளவுக்கு வளர்ந்து அனைத்தையும் அழிக்கும் நிலைக்கு வந்து நிற்கிறது. இதற்கிடையில் தேர்தல் போன்ற பாவனையில் இந்த மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ”தேர்தல் பாதை திருடர் பாதை, மக்கள் பாதை புரட்சிப்பாதை” இது தேர்தல் அமைப்பை நிராகரிக்கக் கூடிய மாவோயிஸக் குழுக்களின் தேர்தல் பற்றிய பார்வையாக இருந்தது. மொத்தமாக இந்தத் தேர்தல் அமைப்பில் பங்கேற்கும் அனைவரையுமே திருடர்கள் எனச் சுட்டிய தீவிர கம்யூனிஸ்டுகளே இந்த 18-ஆவது மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். காரணம் இந்தத் தேர்தலுக்குப் பின்னர் இந்தியாவில் ஜனநாயகமும் இந்திய அரசியலைமைப்பும் இருக்குமா என்ற அச்சம்தான். முதலாளித்துவத் தேர்தல் அமைப்பில் ஒருவரை ஒருவர் விமர்சிக்கவேனும் நாம் இருக்க வேண்டுமே என்ற பதற்றம்தான் காரணம். அந்த அளவுக்கு அச்சம் நிறைந்த தேர்தலாக இந்தத் தேர்தல் மாறியிருக்கிறது. இந்தியத் தேர்தல் கமிஷன் தரவுகள்படி இந்தியாவில் ஆறு தேசியக் கட்சிகளும் 57 மாநிலக் கட்சிகளும் 2 ஆயிரத்து 597 அங்கீகரிக்கப்படாத சிறு சிறு கட்சிகளும் களத்தில் உள்ளன. ஏதோ ஒருவகையில் கோடிக்கணக்கான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இக்கட்சிகளின் அடையாளம் இந்தத் தேர்தலுக்குப் பின்னர் இருக்குமா என்பதே கேள்விக்குறிதான். இந்தியாவில் உள்ளூராட்சித் தேர்தல் முதல் மக்களவைத் தேர்தல் வரை எல்லாத் தேர்தல்களுமே திருவிழாதான். மதப்பண்டிகை போலவே மக்களும் வாக்களிப்பதை ஒரு தெய்விகக் கடமையாகவே கருதிச் செய்கிறார்கள். ஆனால் ஒரு வாக்குச் சீட்டை இயந்திரத்தின் வழியே செலுத்துவதோடு அவர்களின் கடமை முடிந்து விடுகிறது. ஆனால் இந்தத் தேர்தல் நடத்தப்படும் விதங்கள் அதை மிக மோசமான மோசடியான தேர்தல் என்பதையே உணர்த்துகிறது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது தேசியக் கட்சியாகக் காங்கிரஸ் மட்டுமே இருந்தது. இன்னொரு தேசியக் கட்சியாக இருந்த இடதுசாரிகள் கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஜனதாக் கட்சி உட்பட வேறு சில கட்சிகள் தேசிய அளவில் இருந்தாலும் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்குச் சவால் கொடுக்கும் சக்திகளாக இல்லை. இந்திய விடுதலைக்குப் பின்னர் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்தது. சொல்லப் போனால் ஒரு தேசியக் கட்சிக்கு முதன் முதலாக விடை கொடுத்தது தமிழ்நாடுதான். கேரளத்தில் இடதுசாரிகளின் வெற்றி இரண்டு தேசியக் கட்சிகளின் ஆதிக்கங்களுக்கு வழி வகுத்தது. தமிழ்நாட்டில் முழுமையாக தேசியக் கட்சிகள் அப்புறப்படுத்தப்பட்டு மாநிலக் கட்சிகளே செல்வாக்குச் செலுத்துகின்றன. மோடி ஒரு பிராண்டாக மாறியது எப்படி? 2014-ஆம் ஆண்டு ஊழல் ஒழிப்பு வளர்ச்சி என்பதை முன் வைத்து குஜராத் அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு வந்தவர் மோடி. ஆர்.எஸ்.எஸ் அவரைப் பிரதமர் வேட்பாளராக டெல்லிக்கு அனுப்பி அதற்குரிய வேலைகளையும் செய்தது. இந்தியாவில் எல்லா அரசியல் கட்சிகளுக்குமே ஒரே ஒரு முகம்தான். ஆனால் பாஜகவுக்கும் ஒரு முகம்தான். அது மோடியாக முன் வைக்கப்பட்டது, ஆனால் அது ஆர்.எஸ்.எஸ் என்ற வலதுசாரி இந்துத்துவ அமைப்பின் ஒரு வெகுசனத் தேர்தல் அமைப்பு என்பதை ஏனோ யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அன்றிருந்த அதிருப்திகளை மோடி பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த பின்னர் இரண்டாவது முறையும் வென்று பத்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்தப் பத்தாண்டுகளில் கீழ் மட்டம் முதல் ஆர்.எஸ். எஸ் என்ற சிந்தாந்த அமைப்பையும், பாஜக என்ற அரசியல் கட்சியையும் இந்திய அரசு என்ற நிறுவனத்துடன் ஆழமாகப் பிணைத்து விட்டார். இந்திய ஒன்றியத்தின் அடிப்படையான கட்டமைப்பாக மக்களவை, நீதித்துறை, தேர்தல் ஜனநாயகம், ஊடகங்கள் எனச் சிலவற்றைக் குறிப்பிடுகிறோம் அல்லது நம்பிக்கொண்டிருக்கிறோம். மோடி முதன் முதலாகக் கையில் எடுத்தது இந்த அமைப்புகளை அல்ல. அவர் முதன் முதலில் ராணுவத்தை ஒற்றைத் தலைமையின் கீழ்க் கொண்டு வந்தார். மோடியின் விசுவாசிகளே ராணுவத் தலைமைப் பதவிக்கு வர முடிந்தது. பின்னர் தேர்தல் அமைப்பின் மாற்றம், நீதித்துறையில் மாற்றம் என ஒவ்வொன்றாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். விசாரணை அமைப்புகள் பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளையும் பலவீனமானவை எனக் காட்டின. 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபோது பாஜகவுக்கென இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கட்டமைப்பு இல்லை. இந்தியாவின் 28 மாநிலங்களிலும் எட்டு யூனியன் பிரதேசங்களிலும் பாஜக இல்லை அவர்கள் குஜராத்திலும், உத்தரபிரதேசத்திலும் மட்டுமே இருந்தனர். கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்றத் துவங்கி விஸ்தரித்துக்கொண்டனர். இப்போது பெரும்பான்மை மாநிலங்களில் பாஜக நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆட்சி செய்கிறது. இந்திய வாக்காளர்களில் வெறும் 30 சத வாக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் பாஜக எப்படி இத்தனை மாநிலங்களில் ஆட்சி செய்கிறது? நமக்கு மரபார்ந்த சில நம்பிக்கைகள் இருக்கின்றன. அதிலொன்று இப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள் என்பதுதான். என்னதான் இருந்தாலும் பாஜக இப்படி எல்லாம் செய்யாது என நம்பினோம். இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறோம் ஆனால் பாஜக எதை எல்லாம் செய்ய மாட்டார்கள் என நினைத்தோமோ அதை எல்லாம் செய்து முடித்து விட்டார்கள். ராமர்கோவில், காஷ்மீர் 370 சிறப்புச் சட்டம் ரத்து, இன்னும் எஞ்சியிருப்பது பொது சிவில் சட்டம் மட்டும்தான். அடுத்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில் இந்தத் தேர்தல் வெற்றி பாஜகவுக்கு மிக முக்கியமானது. அதை எல்லாம் மனத்தில் வைத்துத்தான் 400 தொகுதிகளில் வெல்வோம் என்கிறார்கள். உண்மையில் 400 தொகுதிகளில் வென்றால் அவர்கள் அரசியல் சாசனத்தை மாற்றி எழுதிய மதச்சார்பற்ற அரசியல் அமைப்பை மாற்றுவார்கள். மற்றவை எல்லாம் மிக எளிதாகச் செய்யக் கூடிய வேலைகள். 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் நூற்றுக்கணக்கான சட்டத்திருத்தங்களை பாஜக கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது. சீர்படுத்தும் அமைப்புகளையும் விசாரணை அமைப்புகளாக மாற்றியது. அமலாக்கத்துறை, ஐ.டி. தேர்தல் பத்திர நன்கொடை எனச் சத்தமில்லாமல் நடந்த சட்டத்திருத்தங்களின் விளைவை இன்று இந்தியா அனுபவிக்கிறது. தேர்தல் பத்திரங்களின் மூலம் பத்தாயிரம் கோடிக்கு மேல் வசூலித்துள்ளது பாஜக, தேர்தல் கமிஷனரை நியமிக்கும் உரிமையை பாஜக தனக்கேயான தனியுரிமையாக்கியுள்ளது. குற்றப்பத்திரிகையில் பெயர் இல்லாவிட்டாலும் கைது செய்யும் அதிகாரத்தை அமலாக்கத்துறையும், போதைப் பொருள் கட்டுப்பாட்டுத்துறையும் கொண்டுள்ளது. குற்றப்பத்திரிகையை 90 நாள்களுக்குள் செய்யாவிட்டாலும் ஆண்டுக்கணக்கில் ஒருவரைச் சிறை வைக்கும் அளவுக்குக் கொடூரமான அமைப்புகளாக இவை மாற்றப்பட்டு விட்டன. அதிகாரம் பொருந்திய உச்சநீதிமன்றத்தையே பலவீனமாக்கி இந்த அமைப்புகளை பாஜகவின் காவல்நிலையங்களாக மாற்றி விட்டார் மோடி . ஒரே மாத இடைவெளிக்குள் இரண்டு மாநில முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நாடு முழுக்க எழுத்தாளர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும், சமுகச் செயற்பாட்டாளர்களும் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. “இந்திய மக்களில் 20 சதவீதம் பேர் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். ஆனால் எங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து 2 ரூபாயைக் கூட எங்களால் எடுக்க முடியவில்லை. தேர்தல் விளம்பரங்களுக்குள், மாநிலத் தலைவர்களுக்கு பிளைட் டிக்கெட் போடக்கூடக் காசில்லாமல் இருக்கிறோம். இந்தியா ஜனநாயக நாடு என்பது பொய்” எனக் கொதித்துப் போய் காங்கிரஸ் தலைவர்கள் சொல்கிறார்கள். அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் இந்தியாவை ஆண்ட ஒரு கட்சியின் நிலையே மோடியின் இந்தியாவில் இதுதான்.உண்மையில் மோடியை மிக எளிதாக வீழ்த்தியிருக்க முடியும் எதிர்க்கட்சிகளின் போராட்டமின்மை, பத்தாண்டுகளில் இந்தச் சட்டத்திருத்தங்களின் தீவிரத்தன்மையைப் புரிந்து கொள்ளாமை. ஒருங்கிணைப்பின்மை, நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்காமை என வாய்ப்பை நழுவ விட்டு விட்டு இப்போது வாசல் வரை வந்து விட்ட டாங்கிகளுக்கு நடுவில் அன்பின் கதைகளைப் பேசிக்கொண்டிருக்கிறோம். மிசாவைவிட மோசமான காலம் இது. மோடி ஆட்சியின் கீழ் இன்றைய இந்தியாவைப் பலரும் மிசாக் காலத்துடன் ஒப்பிடுகிறார்கள். 1971-ஆம் ஆண்டு இந்திரா காந்தி மிசா (MISA) சட்டத்தை எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்தார். 1976-ஆம் ஆண்டு நாடு முழுக்க அதை அமல்படுத்தினார். அப்போதைய எதிர்க்கட்சியினர் லாலு, கலைஞர் கருணாநிதி, வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஓராண்டுக்குள் மிசாவின் கொடுமைகளை இந்திய மக்கள் குறிப்பாக வட இந்திய மக்கள் உணர்ந்து இந்திராகாந்தியை வீட்டுக்கு அனுப்பினார்கள். 1978-ஆம் ஆண்டு 9-ஆவது அட்டவணையில் இருந்து இச்சட்டமே நீக்கப்பட்டது. இந்திரா காந்தியின் அதிகாரக் குவிப்பு நோக்கங்களுக்கு அப்பால் மிசாவுக்கு வேறு நோக்கங்கள் இல்லை,மேலும் மிசா மதத்தோடு இணைக்கப்படவில்லை. அதனால் மிசாக் காலக் கொடுமைகளைக் கடந்து வரவும் முடிந்தது, இந்திரா காந்தியை மிசாவுக்காகத் தண்டிக்கவும் முடிந்தது. அன்று ஒரே ஒரு மிசா சட்டம் இருந்தது. இன்று ஏராளமான மிசா சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவை ஒவ்வொன்றும் இந்து மதத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் ஒவ்வோர் அமைப்பும் எதிர்க்கட்சிகளை வேட்டையாடும் அமைப்பாக உருவாகி நிற்கிறது. இந்தப் பத்தே ஆண்டுகளில் பல தேசியக் கட்சிகள் பாஜகவில் கரைந்துவிட்டன. அல்லது பாஜகவின் நிழலில் வாழும் கட்சிகளாக மாறிவிட்டன. அன்று மிசாவுக்கு எதிராக நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது இன்று நீதித்துறையின் அணுகுமுறை நம்பிக்கையின்மையைத் தோற்றுவித்து விட்டது. நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அதி முக்கியமான வழக்குகளில்கூட நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு ஆதரவான போக்கையே கொண்டிருந்தது. தேர்தல் கமிஷனரை நியமிக்கும் அதிகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியை விலக்கி வைக்கும் நடைமுறையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விட்டது. ஆனால் அதன் பாதகத்தை அனுபவிப்பது அரசியல் கட்சிகள். இதை எல்லாம் பேசுவதற்கான ஒரே ஓர் அமைப்போ தீர்ப்பாயங்களோ இன்றைய இந்தியாவில் இல்லை. தேர்தல் களம் மிகவும் நெருக்கடியோடும் சிக்கல்களோடும் அதிகார நெருக்கடிகளோடும் நடைபெறும் இந்த 18-ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு அல்லது பாஜகவின் சாதனை என்ற வார்த்தையே களத்தில் இல்லை. மோடி அரசு என்றுதான் ஒன்றிய அரசு நிறுவனங்களே விளம்பரங்கள் கொடுக்கின்றன. புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றுதான் அவர்கள் புதிய கோஷத்தை வைக்கிறார்கள். 400 தொகுதிகளை இலக்கு வைத்துள்ள பாஜகவின் எண்ணங்களுக்கு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகள் மூலம் வடிவம் கொடுத்தன. இந்தியா கூட்டணியைப் பலவீனமாக்கிக் காட்டும் ஊடகங்களின் சித்திரங்களுக்கு அப்பால் இந்தியா கூட்டணி வலிமை மிக்க கூட்டணியாக உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின், ஆம் ஆத்மி,காங்கிரஸ், சரத்பவார், உத்தவ் தாக்கரே, தேஜஸ்வி, அகிலேஷ் யாதவ் என இந்தியாவில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் முதன் முதலாக இணைந்து எதிர்கொள்ளும் தேர்தலாக இது உள்ளது. துவக்கத்தில் புதிய நாடாமன்றக் கட்டடத் திறப்பும், ராமர்கோவில் திறப்பும் தமக்கு 400 தொகுதிகளை வென்று கொடுக்கும் என நினைத்த மோடி பாஜகவுக்குக் கூட்டணி தேவை இல்லை என்றே கருதினார். நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை ஒரு புதிய குடியரசின் உருவாக்கம் போல மோடி காட்ட முயன்றார். மோடியின் எல்லா நிகழ்வுகளும் சடங்குகளும் இந்திய மக்களை நம்பவைக்கும் முயற்சி அல்ல, அனைத்தும் இந்துக்களை நம்பவைக்கும் முயற்சி. கடந்த பத்தாண்டுகளில் அவர் தரித்த பேரரசன் வேடம், முனிவர் வேடம், தலைமை பீடாதிபதி வேடம், ராமரை அர்ப்பணிக்கும் அர்ச்சகர் வேடம் என அனைத்தும் இந்துக்களை நம்பவைக்கும் முயற்சி. இந்து தேசியவாதத்தின் அடையாளப் பிம்பம். ஆனால் துரதிருஷ்டமாக இதை அனைத்து இந்துக்களும் பெரும்பான்மை இந்துக்களும் நம்பவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. மோடியின் அரசியல் நாடகங்களில் இதுவும் ஒன்று என்பதாகவே வட இந்திய மக்களே போதுமான ரெஸ்பான்ஸ் பண்ணவில்லை. அதன் பின்னர்தான் பாஜக வெற்றி பெற வலிமையான கூட்டணி அவசியம் என்பதை உணர்ந்தது. ஆனால் அதற்கு மேற்குவங்கத்தை தவிர ஏனைய எல்லா மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி தனது கூட்டணியை இறுதி செய்து விட்டது. விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பாஜகவால் இன்றுவரை கூட்டணியை உறுதி செய்ய முடியவில்லை. அதைவிட முக்கியமானது மோடியின் என்.டி.ஏ கூட்டணியில் 40க்கும் மேற்பட்ட கட்சிகள் ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மோடியின் அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் சிபி ஐயும் பெரிய கட்சிகளை உடைத்து மோடியிடம் ஒப்படைத்த கட்சிகள். தலைமைக்குத் துரோகம் இழைத்துத் தன்னோடு வந்தவர்களுக்குரிய நியாயத்தைக்கூட பாஜக செய்யவில்லை. மகாராஷ்டிராவில் ஷிண்டேவையும், அஜித் பவாரையும், பிகாரில் பராஸ் பாஸ்வானையும், நூற்றுக்கணக்கில் வந்து சேர்ந்தவர்களையும் நட்டாற்றில் விட்டிருக்கிறது பாஜக. இந்தியா முழுக்க பிராந்திய வாரியாகச் செல்வாக்குப் பெற்ற இந்தக் கட்சிகளின் வாக்குவங்கியைத் தன்னுடையதாக மாற்றி வெல்வதே பாஜகவின் வெற்றிச் சூத்திரம், எடப்பாடி பழனிசாமி நம்பகத்தன்மையை இழந்தது ஏன்? திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும்தான் கடந்த 55 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வருகின்றன. 1967-ஆம் ஆண்டு தேசியக் கட்சிகளுக்கு விடை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிலிருந்து எம்.ஜி.ராமச்சந்திரன் அதிமுகவை உருவாக்கினார். அதிமுகவுக்கென்று சிந்தாந்தப் பின்புலங்கள் எதுவும் இல்லை. பிம்ப அரசியல் வழியே நகர்ந்து வந்த அதிமுக 80 –களில் சில சாதியினரின் நலன்களுக்காகவும், 2000 மில்லேனியம் ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு நலன் என்ற அடிப்படையிலும் செயல்பட்டது. ஆனால் அதிமுகவின் இருப்பே திமுக எதிர்ப்பு, கலைஞர் கருணாநிதி எதிர்ப்பு என்ற அடிப்படையில் உருவானதுதான். அதன் பிம்ப அரசியல் ஜெயலலிதாவோடு முடிந்துவிட்டதாகவே தெரிகிறது. அதிமுக என்ற கட்டமைப்பின் 90 சதம் எடப்பாடி பழனிசாமியின் கைகளில் இருக்கிறது. ஆனால் அந்தக் கட்டமைப்பு எத்தகையது என்பதும் முந்தைய தலைவர்களுக்கு இருந்த கவர்ச்சிகரமான அம்சங்கள் எதுவும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லாமல் இருப்பதும் அவரது பலவீனம். ஆனால் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தன்னை ஒருவர் வளர்த்துக்கொள்ள முடியும். ஆனால் துரதிருஷ்டமாகத் துரோகத்தில் தொடங்கிய எடப்பாடி பழனிசாமியை இன்று தமிழ்நாட்டு மக்களோ அதிமுக தொண்டர்களோகூட நம்பவில்லை. ஜெயலலிதாவிடம் இருந்து இரவோடு இரவாக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்த சசிகலாவைத் தடுத்து பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ். பின்னர் பன்னீர் சசிகலாவுக்குத் துரோகம் செய்தார். அவரைச் சிறைக்கு அனுப்பும் உத்தரவு வந்தபோது நம்பிக்கைக்குரிய விசுவாசி என நம்பிப் பழனிசாமியிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஊழல் வழக்கில் சிறை சென்றார். எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்குத் துரோகம் செய்தார். ஆனால் இது அனைத்தின் பின்னாலும் பாஜக இருந்தது. இதை முடித்துக் கொடுத்தவர் அப்போதைய பாஜக தலைவர் வெங்கையா நாயுடுவும் ஆளுநர் வித்யாசாகர் ராவும். எடப்பாடி பழனிசாமி மோடியின் தயவில் ஆட்சியில் இருந்து பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் பாஜக கூட்டணியைத் தொடர்ந்தார். இந்தத் தேர்தலில் அண்ணாமலையின் நடவடிக்கைகளில் அதிருப்தியாகி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அதிமுக சொல்கிறது. ஆனால், அரசியல் தளத்தில் அதிமுகவோ எடப்பாடி பழனிசாமியோ பாஜகவை எதிர்ப்பதில்லை. பாஜக கொண்டு வந்த காஷ்மீர் 370 ரத்து, குடியுரிமைத் திருத்தச்சட்டம், வேளாண் சட்டங்கள் என எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொடுத்த அதிமுக தனிநபர்களை எதிர்ப்பதை பாஜக எதிர்ப்பாகக் காட்ட முயல்கிறது.ஒன்றிய பாஜக அரசு திமுகவுக்கு எதிராகக் கட்டமைக்கும் கதைகளையே அதிமுகவும் பேசுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் பேசும் எது ஒன்று குறித்தும் அதிமுக பேசுவதில்லை. தமிழ்நாட்டில் நடைபெறும் இந்தத் தேர்தலில் இரண்டாம் இடம் யாருக்கு என்பதற்காகவே பாஜக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக டம்மி வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளது. வென்றே ஆகவேண்டும் என்ற வேட்கை அதிமுகவுக்கு இருந்திருந்தால் கடுமையான போட்டியைக் கொடுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் ஆனால் பாஜக இரண்டாம் இடம் வரட்டும் என்பதற்காகப் பலவீனமான வேட்பாளர்களை அதிமுக நிறுத்தியுள்ளது. திமுக கூட்டணி முன்பே உருவான கூட்டணி இந்துத்துவ எதிர்ப்பையும் பாஜக எதிர்ப்பையும் திவீரமாக அரசியல் களத்தில் வைக்கும் கட்சிகள் எனவே திமுக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுடன் பேசவே இல்லை,. அவர்களுக்கிருந்த இரண்டு வாய்ப்பு ஒன்று பாஜக அல்லது அதிமுக இதில் பாமகவைக்கூடத் தன் பக்கம் தக்கவைத்துக்கொள்வதில் அதிமுக ஆர்வம் காட்டவில்லை. நாடாளுமன்றத் தேர்தலை முக்கியமான ஒன்றாகவே அதிமுக கருதவில்லை. காரணம் டெல்லி செல்லும் எம்.பிக்கள் அவர்கள் வாக்களிக்கும் முறைகளால் ஏற்படும் பிரச்சனைகளைச் சரி செய்து கொள்வதும், கட்டமைப்பில் புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தோம் என்று சொல்லிக் கொள்ளவும், அதனால் பாஜகவுக்கு மறைமுகமாக உதவி புரிவதுமே அதிமுக எடப்பாடி பழனிசாமியின் நோக்கம். இதனால்தான் பாஜகவை எடப்பாடி பழனிசாமி எதிர்க்கிறார் என்பதை எவரும் நம்பவில்லை. அந்த நம்பிக்கை உருவாகும் விதமான அரசியலும் இனி அதிமுகவில் சாத்தியமில்லை. இந்தத் தேர்தலுக்குப் பின்னர் ஜனநாயகம் ஜீவித்திருக்குமா என்ற கவலை எதிர்க்கட்சிகளுக்கு இருந்தாலும் மோடியும் பாஜகவும் மிகப்பெரிய அளவு அச்சம் அடைந்திருக்கிறார்கள்.அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தொலைக்காட்சிகள் மட்டுமே கருத்துக்கணிப்புகள் மூலம் சாத்தியமாக்கிக் கொடுத்திருக்கின்றன. நிச்சயம் மோடியால் பெரும்பான்மையைப் பெற முடியுமா என்பது கேள்விக்குறி. இந்தியா கூட்டணிக் கட்சிகள் புயல் போல இந்தி மண்டலங்களில் தேர்தலை ஒரு போர் போல நடத்தினால் மோடி எளிதில் வீழ்த்தப்படுவார். கைதுகள், வங்கிக்கணக்குகள் முடக்கம் இதை எல்லாம் கடந்து மக்களை நம்பி வீதிக்கு வந்தால் வெற்றி நிச்சயம். இதுவே வரலாறு உணர்த்தும் உண்மை. ஏனெனில் எப்போதும் இந்தியாவில் ஜனநாயகத்தை நாம் வீதிகளில் பார்க்க முடியும் அதிகார பீடங்களில் அல்ல. https://uyirmmai.com/article/uyirmmai-april-2024-arul-ezhilan-article-06/
-
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் கர்நாடக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
தேவ கவுடாவின் பேரன் நடத்திய ஆபாச லீலைகள்… லீக் ஆன வீடியோக்கள்! காத்திருந்து கதை முடித்த பாஜக, குமாரசாமி AaraApr 30, 2024 08:58AM கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனும், ஹசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணாவை மையமாக வைத்து ஆபாச புயல் வீசி வருகிறது. இதுபற்றி விசாரிக்க விசாரிக்க பல திடுக்கிடும் அதிர்ச்சிகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி ஹசன் உள்ளிட்ட தொகுதிகள் மக்களவைத் தேர்தலை சந்தித்தன. தேர்தலுக்கு மூன்று நாள் முன்பிருந்தே… எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களோடு இருக்கும் ஆயிரக்கணக்கான செக்ஸ் வீடியோக்கள் ஹசன் பகுதியில் சமூக தளங்களில் வெளியாயின. இதைக் கண்டு அதிர்ந்துபோன பிரஜ்வல் ரேவண்ணாவின் தேர்தல் ஏஜெண்ட், ‘எங்களது வேட்பாளரை மையப்படுத்தி மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோக்கள் பரவ விடப்பட்டுள்ளன’ என்று போலீசில் புகார் அளித்தார். ஆனால், இந்த வீடியோக்கள் பரவிய நிலையில், ஏற்கனவே பிரஜ்வல் வீட்டில் வேலை பார்த்த ஒரு பெண் கொடுத்த புகாரில் இப்போது பிரஜ்வல் ரேவண்ணா மீதே பெண் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிந்த அடுத்த நாள் 27 ஆம் தேதி காலை பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு பறந்துவிட்டார். இப்போது இந்த ஆபாச வீடியோக்கள் பற்றி விசாரிக்க கர்நாடக காங்கிரஸ் அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. கர்நாடகா முழுதும் காங்கிரஸ் கட்சி சார்பிலும் பல பெண்கள் அமைப்பு சார்பிலும் பிரஜ்வல் ரேவண்ணாவை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சர்ச்சையால் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியும், அதனோடு கூட்டணி வைத்துள்ள பாஜகவும் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளன. வரும் மே 7 ஆம் தேதி கர்நாடகாவில் 14 தொகுதிகளில் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த விவகாரம் கர்நாடகா மட்டுமல்ல நாடு முழுதும் பாஜகவுக்கு எதிரான பிரம்மாஸ்திரமாக புறப்பட்டுள்ளது. மோடி மௌனம் ஏன்? விளாசிய பிரியங்கா இதற்கிடையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளார். “இந்துப் பெண்களின் தாலி பற்றி பேசிய பிரதமர் மோடி அவர்களே… சில நாட்களுக்கு முன் நீங்கள் யாருக்காக வாக்கு சேகரித்தீர்களோ அவர்தான் ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளார். இதுபற்றி ஏன் மௌனம் காக்கிறீர்கள்? இந்த பெண்களின் நிலை பற்றி பேச முடியாத உங்களுக்கு, பெண்களின் தாலி பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?” என்று கிழித்தெடுத்திருக்கிறார் பிரியங்கா. கர்நாடகாவின் உள் அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது மதச்சார்பற்ற ஜனதா தளத்தோடு பாஜக கூட்டணி அமைத்ததை விரும்பாத, பாஜகவினர் சிலர்தான் இந்த வீடியோக்களை வெளியே விட்டிருக்கிறார்கள் என்றும் இதற்கு தேவ கவுடா குடும்பத்திலேயே சிலர் ஆதரவாக இருந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. யார் இந்த பிரஜ்வல்? 33 வயதே ஆன பிரஜ்வல் இப்போதைய ஹசன் தொகுதி எம்பி.யாக இருக்கிறார். முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மூத்த மகனும் ஹோலேநரசிபூர் தொகுதி எம்எல்ஏவுமான ரேவண்ணாவின் மகன் தான் பிரஜ்வல். ராஜா வீட்டு காளைக் கன்றுக்குட்டியான பிரஜ்வால் 2014 இல் இருந்தே தனது தாத்தா தேவ கவுடாவுக்காக அரசியல் பணிகளில் இறங்கினார். பெங்களூருவில் படித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் உயர் கல்வி பயிலப் போன அவர் பாதியில் படிப்பை முடித்துவிட்டு அரசியலில் இறங்கினார். தான் 1991, 1998, 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்ற ஹசன் மக்களவைத் தொகுதியை தனது பேரன் பிரஜ்வலுக்காக 2019இல் விட்டுக் கொடுத்தார் தேவ கவுடா. வீடியோ விவகாரம் புதிதல்ல… பிரஜ்வல் பற்றிய ஆபாச வீடியோக்கள் இன்று தேசம் முழுதும் பேசுபொருளானாலும், கர்நாடகாவில் இதுபற்றி விவாதம் முதன் முறையாக 2023 ஜூன் மாதத்திலேயே வெளி வந்திருக்கிறது. அப்போது, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் எம்பி. பிரஜ்வல் சார்பில் ஊடகங்கள் மற்றும் மூன்று தனியார் நபர்களுக்கு எதிராக ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில், “மேற்குறிப்பிட்டவர்களால் பிரஜ்வலுக்கு எதிராக போலிச் செய்திகள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோ ஒளிபரப்புதல், வெளியிடுதல் மற்றும் பரப்புதல் போன்ற அச்சுறுத்தல் உள்ளது” என்று அதற்குத் தடை கேட்டது பிரஜ்வல் தரப்பு. ஜூன் 2, 2023 பிரஜ்வல் பற்றிய அவதூறுகளை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம். இந்த வழக்கில் பிரஜ்வல் ஊடகங்களைத் தவிர மூன்று தனி நபர்களையும் குறிப்பிட்டிருந்தார். அந்த 3 பேரில் ஒருவர் பிரஜ்வல் வீட்டில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக டிரைவராக பணியாற்றி, 2023 மார்ச் மாதம் வெளியேற்றப்பட்டவரான கார்த்திக். அனைத்து ரகசியங்களும் அறிந்த டிரைவர் பிரஜ்வல் ரேவண்ணாவின் குடும்பத்தில் ஒருவராக அறியப்பட்டவர் கார்த்திக். அவர் பிரஜ்வல் ரேவண்ணா மீதும், அவரது தாயார் பவானி மீதும் கடுமையான புகார்களை கூறினார். ‘நரசிபுரா பகுதியில் இருக்கும் எனக்குச் சொந்தமான 13 ஏக்கர் நிலத்தை என்னையும் என் மனைவியையும் கடத்திச் சென்று அடைத்து வைத்து மிரட்டி தங்களுக்குச் சொந்தமாக பிரஜ்வலும் அவரது தாயாரும் மாற்றிக் கொண்டனர். எனக்கும் என் குடும்பத்துக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்” என்று போலீசிலும் புகார் கொடுத்தார் கார்த்திக். அந்த டிரைவர் கார்த்திக் தான் இப்போது இந்த ஆபாச வீடியோக்கள் வெளியீட்டுக்கு பின்னால் இருப்பார் என்று கருதுகிறது பிரஜ்வல் தரப்பு. ஏனென்றால் பிரஜ்வல் கல்லூரி காலம் தொட்டே அவருக்கு நெருக்கமானவர் கார்த்திக். தாத்தா பிரதமராக இருந்தவர், சித்தப்பா கர்நாடக முதலமைச்சர், அப்பா எம்.எல்.ஏ. என்று அதிகாரம் குவிந்த குடும்பத்தில் பிறந்த பிரஜ்வல் அதற்கேற்ப எல்லா ஆட்டங்களையும் ஆடினார். அவரது எல்லா விஷயங்களையும் அறிந்தவர்தான் டிரைவர் கார்த்திக். பல ரகசியங்கள் அறிந்த டிரைவர் கார்த்திக் நில பிரச்சினையால் ரேவண்ணா குடும்பத்தின் மீது ஹசன் காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் தேவகவுடா குடும்ப செல்வாக்கு காரணமாக பாஜக ஆட்சியில் கூட போலீஸ் நடவடிக்கை ஏதும் இல்லை. இந்த பின்னணியில்தான் 2023 ஜூன் மாதம் தன்னைப் பற்றிய ஆபாச படங்களை கார்த்திக் வெளியிடுவார் என்று தடை கேட்டு நீதிமன்றத்தை நாடினார் பிரஜ்வல் ரேவண்ணா. டிரைவர் மூலம் பாஜகவுக்கு வந்த ஆபாச படங்கள்! இந்த நிலையில்தான் கடந்த பல ஆண்டுகளாக மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு எதிராக ஹசன் மாவட்டத்தில் கடுமையாக கள அரசியல் செய்து வந்த லோக்கல் பாஜகவுக்கு இந்த மேட்டர் பெரும் சாதகமாக இருந்தது. கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் ஹோலே நரசிபுரா தொகுதியில் ரேவண்ணாவை எதிர்த்து போட்டியிட்டுத் தோற்ற வழக்கறிஞரும் உள்ளூர் பாஜக தலைவருமான தேவராஜ கவுடா, ரேவண்ணா குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அந்த டிரைவர் கார்த்திக்கை அணுகினார். பிரஜ்வல் தொடர்பான ஆயிரக்கணக்கான ஆபாச படங்களை பென் டிரைவில் பாஜக பிரமுகர் தேவராஜ கவுடா வாங்கியிருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய தேவராஜ் கவுடா, ‘என்னை அழுக்கு மனிதன் என்று ரேவண்ணா சொல்கிறார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் எவ்வளவு அழுக்கு மனிதன் என்று அவர் வாங்கி வைத்திருக்கிற ஸ்டே ஆர்டரில் இருந்தே தெரிகிறது. ஒருநாள் அந்த அழுக்கெல்லாம் வெளியே வந்து தேவ கவுடாவின் குடும்பமே நாற்றமெடுக்கும்” என்று கடுமையாக எச்சரித்தார் தேவராஜ கவுடா. பாஜக -ஜேடியூ கூட்டணிக்குப் பிறகும் கூட அவர் ரேவண்ணா பற்றியும் பிரஜ்வல் பற்றியும் தொடர்ந்து விமரிசித்து வந்தார். இந்த பின்னணியில்தான்… பிரஜ்வலின் ஆபாச ஆட்டங்கள் அடங்கிய வீடியோக்களை அவரது முன்னாள் டிரைவர் கார்த்திக் மூலம் பெற்று… சரியாக ஹசன் தொகுதி தேர்தலுக்கு முன்பாக சமூக தளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள் என்று கர்நாடக அரசியல் வட்டாரங்களில் கூறுகிறார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் இதுகுறித்து தேவராஜ கவுடாவிடம் கேட்டபோது, “ரேவண்ணாவின் மகனின் வீடியோக்கள் மற்றும் படங்கள் பற்றி அந்த டிரைவரிடம் இருந்து எனக்கு தெரியவந்தது. அவருக்கு எப்படி வீடியோக்கள் கிடைத்தன என்று எனக்குத் தெரியவில்லை,” என்று ஓப்பனாக கூறியிருக்கிறார். இதுமட்டுமல்ல… “பாதிக்கப்பட்ட பெண்களில் சிலரை மீடியாவின் முன் கொண்டுவர நினைத்தேன். ஆனால் அவர்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதை சம்பந்தப்பட்டதால் அதைத் தவிர்த்துவிட்டோம். பெண்கள் மீதான மரியாதைக்காக, நான் வீடியோக்களை வெளியிடவில்லை. அது அவர்களின் வீடுகளில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். பெண்கள் தற்கொலை செய்து கொண்டால் யார் பொறுப்பு? பாஜக -ஜேடியூ கூட்டணி அமைந்த பிறகு கூட பிரஜ்வாலுக்கு ஹசன் லோக்சபா டிக்கெட் வழங்க வேண்டாம் என்று மாநில பாஜக தலைவர் விஜயேந்திரருக்கு கடிதம் எழுதினேன்” என்று பேட்டியளித்துள்ளார் தேவராஜ் கவுடா. குமாரசாமி- ரேவண்ணா மோதலும் ஒரு காரணம்! தேவ கவுடாவின் குடும்பத்துக்குள் அதிகார மையங்கள் இருக்கின்றன. குறிப்பாக மூத்த மகன் ரேவண்ணாவுக்கும், அவரது தம்பியான முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து நடந்து வருகிறது. குமாரசாமியின் முயற்சியைத் தோற்கடித்துதான் 2019 இல் தேவ கவுடாவின் எம்பி தொகுதியான ஹசன் தொகுதியை தனது மகன் பிரஜ்வலுக்கு வாங்கினார் ரேவண்ணா. இந்த நிலையில் ரேவண்ணா குடும்பத்தை அரசியலில் இருந்து அகற்ற இதை குமாரசாமியே ஊக்குவித்திருக்கலாம் என்றும் கர்நாடக அரசியலில் பேசப்படுகிறது. இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த வீடியோ விவகாரம் பற்றி பேசிய மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி, “ உண்மை வெளிவரட்டும், யார் தவறு செய்தாலும், நாட்டின் சட்டப்படி அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும். இதில் ஏன் குடும்பப் பெயரைக் கொண்டுவருகிறீர்கள்? சம்பந்தப்பட்ட தனி நபரைப் பற்றிப் பேசுங்கள், இது எங்கள் குடும்பப் பிரச்சினை அல்ல… இது ரேவண்ணாவின் குடும்ப பிரச்சினை. எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டு குடும்பங்களும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறோம்” என்று கூறியுள்ளார் குமாரசாமி. நீக்கப்படும் ரேவண்ணா, பிரஜ்வல்? இதற்கிடையே, “மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைக் காப்பாற்ற பிரஜ்வல் மற்றும் எச்.டி.ரேவண்ணாவை 24 மணி நேரத்தில் கட்சியில் இருந்து நீக்க வேண்டும்” என அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் சமுருத்தி மஞ்சுநாத் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மாநிலத் தலைவர் குமாரசாமிக்கும், அகில இந்திய தலைவர் தேவ கவுடாவுக்கும் எழுதிய கடிதத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவு தொடர்பாக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் கட்சி தொண்டர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவே கவுடா, மாநில தலைவர் எச்.டி.குமாரசாமி ஆகியோர் உரிய முடிவு எடுக்க வேண்டும். 19 ஜேடி(எஸ்) எம்எல்ஏக்கள் முக்கியமா அல்லது ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா முக்கியமா என்பது குறித்து அப்பா-மகன் இருவரும் இப்போது முடிவெடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் ஜேடியூ கட்சியில் இருந்து ரேவண்ணா, பிரஜ்வல் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. இந்த ஆபாச புயலால் கர்நாடக அரசியலும், தேவ கவுடா குடும்பத்திலும் திருப்பங்கள் அதிகரிக்கின்றன. https://minnambalam.com/political-news/prajwal-revanna-sex-abuse-allegations-full-backround/
-
40 வருடங்களாக உரிமை மறுக்கப்படும் பிரதேச செயலகம்
40 வருடங்களாக உரிமை மறுக்கப்படும் பிரதேச செயலகம் லக்ஸ்மன் கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்கு தசாப்தங்களாக இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றி அப்பகுதியில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று மார்ச் 25ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு முன்னரும் பல தடவைகளில் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதனால் இதுவொன்றும் புதிதல்ல. அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படாத காரணத்தினால், அப்பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலக பிரிவு சுமார் 39,000 சனத்தொகையையும் 29 கிராம சேவகர் பிரிவுகளையும் 06 பாரம்பரிய தமிழ் கிராமங்களையும் உள்ளடக்கியதான ஒரு பிரதேச செயலகம். இந்நிர்வாக அலகானது 1989ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் 93/600/034 இலக்க 93.03.17 திகதிய, 93/600/034(1) இலக்க 93.03.31 திகதிய அமைச்சரவை மசோதாக்கள் மற்றும் 93.07.09ஆம் திகதிய அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 93.07.28ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதியுடன் பிரதேச செயலகமாக மாற்றப்பட்டது. அதனடிப்படையில், தனியானதொரு பிரதேச செயலக பிரிவாக 30 வருடங்களுக்கு மேலாக பொது மக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்றது. கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் உப அலுவலகமாக தரமிறக்குவதற்கான தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் உப அலுவலகமாக தரமிறக்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. அந்தவகையில்தான் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் இனப் பாகுபாடு இடம்பெறுவது உகந்ததல்ல. 2002இல் உருவாக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகம் 2006இல் முழுமையான பிரதேச செயலகமாக இயங்க முடியுமாயின், 34 வருடங்களாக இயங்கும் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் மாத்திரம் ஏன் தரமுயர்த்தப்பட முடியாது என்ற நாடாளுமன்ற உறுப்பினர்களது கருத்தும் வெளிவருகிறது. உண்ணா விரதங்களையும், போராட்டங்களையும் நடத்தியதுடன், பல்வேறு நிருவாக ரீதியான முயற்சிகளையும் அரசியல்வாதிகள், கல்முனை சிவில் சமூகத்தினர் மேற்கொண்டிருந்தபோதும், இதுவரையில் எதுவுமே நடைபெறவில்லை. இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக புளொட் அமைப்பின் உறுப்பினராக இருந்த பொழுது உண்ணாவிரதங்களையும், போராட்டங்களையும் நடத்தினார். கோட்டபாய அரசாங்கத்தில் அவரினால் கல்முனை பிரதேச செயலகத்தினைத் தரமுயர்த்திக் கொடுக்க முடியவில்லை. 2019இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபொழுது ஜனாதிபதி தெரிவாகி ஒருவாரத்தில் கல்முனை தமிழ்ப் பிரிவு தரம் உயரும் என்று முழக்கமிட்டார். முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ போய் இப்போது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கிறார். வியாழேந்திரன் அமைச்சராக இப்போதும் இருக்கிறார். அடுத்தவர், விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்து அந்த அமைப்பிலிருந்து பிரிந்து அரசுடன் இணைந்து பிரதி அமைச்சரான கருணா எனும் வி.முரளிதரன் கல்முனை விடயத்தில் பல உறுதிப்பாடுகளைக் கூறியிருந்தார். ஒன்றும் நடைபெறவில்லை. கடந்த தேர்தலில் கல்முனை தமிழ்ப் பிரிவினைத் தரமுயர்த்துவேன் என்ற தேர்தல் அறைகூவலுடனேயே போட்டியிட்டார். அவரது இந்த உறுதியை நம்பி வாக்களித்த மக்களுக்கு அம்பாறைக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவமே இல்லாமல் போனது. கல்முனை தமிழ்ப் பிரிவுக்கான துருப்புச் சீட்டை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏதோ ஒரு வகையில் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். தமிழர் அரசியலில் அரசுடன் தமிழ்ப் பிரதிநிதிகள் இணைவதும், தமிழர்கள் இணைந்து அமைச்சர்களாக இருப்பதும் ஒன்றும் வரலாற்றில் நடக்காத ஒன்றல்ல. இதுவும் கடந்தே போனதுதான் வரலாறு. இருக்கும் வரைக்கும் இருப்போம் முடிந்தவரைக்கும் உழைப்போம். ஏதோ காலம் கடத்துவோம் என்று வாழும் அரசியல் வாழ்க்கைக்குப் பெயர் ஆளும் கட்சியென்று மகிழ்ச்சி கொள்வோம். தம்மால் முடியாமல் போனதற்குத் தமிழ்த் தேசியத் தரப்பு மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்களே தவிர வேறு ஒன்றும் நடைபெறவில்லை. கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் பழம்பெரும் கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசங்களாகும். அவ்வாறிருக்கின்ற அந்த எல்லைகளை கல்முனை தெற்குப் பிரதேச செயலகத்தோடு நில அளவை செய்து கல்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். கிராமங்களின் வீதிகளின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் மக்களும் சிங்கள மக்களும் வாழ்ந்த பிரதேசம் தற்போது இஸ்லாமாபாத் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் கல்முனையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற விடயமாக இருக்கின்றன. நாட்டில் இருக்கின்ற நிருவாக நடைமுறைக்கு மாறாக இப் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் மோசடி நடைபெறுவதாகவே குற்றம்சாட்டப்படுகிறது மிகக் குறைவான கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாகப் பிரதேச செயலாளர் பிரிவுகள் காணப்படுகின்ற போதும், 29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ள கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமாகவே இருந்துவருகிறது. இது. அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை மட்டுமல்ல, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் கவலைக்குள்ளாகும் செயலாகும். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் 1989இல் சுற்றுலா உதவி அரசாங்க அதிபர் பிரிவாக இயங்கி 1993 முதல் இற்றை வரை உப பிரதேச செயலகமாக இயங்குகிறது. காணி, நிதி வளம் அற்றதாக இயங்கும் இந்த பிரதேச செயலகத்திற்குக் கணக்காளர் நியமிப்பு இதுவரையில் நடைபெறவில்லை. சாண் ஏற முழம் சறுக்கும் தமிழர் அரசியலில் சாத்தியங்கள் கடந்த நல்லாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் வலுப்பெற்ற வேளை நாட்டில் ஏற்பட்ட ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான முரண்பாடு, ஈஸ்டர் தாக்குதல், பிரதமர் மாற்றம், ஆட்சிக் குழப்பம் உள்ளிட்ட பல அதனைக் குழப்பியடித்தது. ஏற்கெனவே 1993இல் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்து அவ்வேளையில் நாட்டில் ஏனைய பகுதிகளில் இருந்த உப பிரதேச செயலகங்கள் பிரதேச செயலகங்களாகத் தரம் உயர்த்தப்பட்டன. அதற்குப் பின்னர் பல பிரதேச செயலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டும் இருக்கின்றன. இவ்வாறான நிலையில் கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகமே நிறைவுபெறாத ஒன்று. கல்முனை தமிழ்ப் பிரிவு 34 வருடங்களைத் தாண்டியும் நிறைவேறாத கனவாகவே இருந்து கொண்டிருக்கிறது. இதனை வைத்தே முஸ்லிம் அரசியல்வாதிகளும், சில தமிழ் அரசியல்வாதிகளும் தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். காலத்தையும் கடத்துகிறார்கள். மக்களையும் ஏமாற்றுகிறார்கள். ஆனால், யதார்த்தத்தினைச் சொல்வதற்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும்தான் ஆட்களில்லை. அந்தவகையில், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் அரசியல் தலைவர்களது நடவடிக்கைகள் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதாகவே அமைந்திருக்கிறது. இன விரோதம் வலுத்தேவிட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் கல்முனையில் உருவாகியிருக்கின்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்கள் வழங்கப்படாமல் திட்டமிட்டுத் தடுக்கப்படுவது கவலையானதே. இவ்வாறான சம்பவங்களும் இன முறுகல் நிலைகளும் உருவாகாமல் தடுக்க கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்களை வழங்கி மக்கள் தங்கள் சேவைகளை வினைத்திறனாகவும் பாதிப்பின்றியும் பெறுவதற்கு அரசாங்கம் தீர்வைக்காண வேண்டும். அடிக்கடி ஒரு பொரி விழுவதும், அது பெருந்தீயாகப் பற்றி எரிவதும் பின்னர் தானாக அணைவதுபோன்று ஆகிவிடுவதும்தான் தமிழ் மக்களின் நிலைப்பாடு. ‘பிட்டும் தேங்காய்ப்பூவும் போல’ என்று பொது வெளியில் பேசிக்கொண்டு உள்ளே வேறுவிதமாகச் செயற்படும் பாங்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் இருக்கிறது என்பது வெளிப்படை. இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே அனைவருடையதும் கனவு நிலைப்பாடாகும். இலங்கையில் இனப் பிரச்சினை உருவான வேளை, சிறுபான்மை, தமிழ் என்றிருந்த தமிழ் முஸ்லிம் மக்கள் காலப்போக்கில் பிரிந்து இரு துருவங்களானார்கள். அதன் பின்னர் தமிழ் பேசும் என்று மாற்றம் பெற்றது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இப்போதும் தமிழர் தரப்பு அவற்றையெல்லாம் மறந்து சகோதரர்களாக வாழ்வோம் என்றே சொல்கிறார்கள். முயற்சி செய்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீராத நம்பிக்கையாக இருக்கின்ற முஸ்லிம்களின் இணக்கப்பாட்டுடன் கல்முனைத் தமிழ்ப் பிரிவு பற்றிய பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/40-வருடங்களாக-உரிமை-மறுக்கப்படும்-பிரதேச-செயலகம்/91-336332
-
யாழில் ஆரம்பமான புதிய கட்சி!
யாழில் ஆரம்பமான புதிய கட்சி! இனியபாரதி. ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் இன்றுமுதல் ஆரம்பித்து வைக்கபடுவதாக அந்த கட்சியின் உபதலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை(29) ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் புலேந்திரன் உதயகுமார் என்பவரை தலைவராக கொண்டு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நாம் வெகுஜன அமைப்பாக செயற்பட்டு வருகின்றோம் . கல்வி ,வாழ்வாதாரம், போரால் பாதிக்கப்பட்டோர் என பல தரப்பட்ட சேவைகளை நாம் செயற்படுத்தி வருகின்றோம். அதனடிப்படையில் இன்று முதல் எமது சேவைகளை ஐக்கிய மக்கள் கட்சி என்ற பெயரில் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளோம். எமது மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் இலங்கையின் அரசியல் அபைப்பிற்குட்பட்டு செயற்படுத்த இருக்கின்றோம். தற்பொழுது எமக்கு தேர்தல் நோக்கமில்லை. இருந்தாலும் இது குறித்து தேர்தல் காலத்திலேயே இறுதி முடிவினை எடுப்போம். .இன, மத, மொழி வேறுபாடின்றி பலதரபட்ட மக்களிற்காகவும் இணைந்து செயற்படவுள்ளோம். தமிழ் இனம்சார்ந்த பிரச்சினைகளுக்காக பல கட்சிகளும் குரல் கொடுத்து கெண்டிருக்கின்ற நிலையில் அந்த கட்சிகளின் கண்ணுக்கு புலப்படாத பொதுமக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சேவையாற்றுவது எமது நோக்கமாகும் என அவர் தெரிவித்தார். (ச) https://newuthayan.com/article/யாழில்_ஆரம்பமான_புதிய_கட்சி!
-
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம் April 29, 2024 யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள ரப்றோபானா சீ பூட் நிறுவனத்திற்கு நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் எரிக் சொல்கெய்ம் உள்ளிட்ட நோர்வே குழுவினர் வருகை தருகின்றனர். நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவரின் முதலீட்டில் இயங்கும் இந்த நிறுவனத்தின் பணிகளை ஆராய்தல் மற்றும் எதிர்காலத் திட்டமிடல் போன்ற நடவடிக்கைகளுக்காகவே நாளை செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு இந்தக் குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர். இக்குழுவில் நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் சுற்றுச் சூழல் விவகார ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்முடன் நோர்வேயின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு வருகை தருகின்றனர். https://www.ilakku.org/யாழ்ப்பாணம்-வருகின்றார்/
-
தனது ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வர அனுமதியளிக்காததால் சங்கடத்தில் அமெரிக்கா !
அமெரிக்க, ஜேர்மனி ஆய்வு கப்பல்கள் தடை ஏன்? பாதுகாப்பு அமைச்சு விளக்கம் April 29, 2024 அமெரிக்காவின் ஆய்வுக் கப்பல் இலங்கையின் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பிற்குள் ஆய்வுக் கப்பல்களை அனுமதிப்பதில்லை என்ற அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கு அமைய பாதுகாப்பு அமைச்சு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. எனினும், எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக அந்த கப்பல் நாட்டின் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 19 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த மேற்படி கப்பல் 22 ஆம் திகதி புறப்பட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சீனாவின் எதிர்ப்பை மீறி ஜெர்மனி ஆய்வுக் கப்பல் இரண்டாவது தடவையாகக் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்கப்பட்டுள்ளதாக வார இறுதிப் பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த கப்பலுக்கு கடந்த மார்ச் மாதத்தில் முதலில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் திகதி மீண்டும் அந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கப்பல் பணியாளர்களை மாற்றம் செய்யவும் எரிபொருள் உள்ளிட்ட சேவை வசதிகளைப் பெறவும் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் தமது நாட்டிற்கு சொந்தமான கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதி வழங்கப்படாத நிலையில் சீனா எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. ஜனாதிபதியின் தீர்மானத்தின் பிரகாரம் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைவதற்கு ஒரு வருட காலத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி கவனம் செலுத்துவதே இதற்குக் காரணமாகும். 2023 ஆம் ஆண்டு முதல் 14 மாதங்களுக்குள் 2 சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்கு வருகை தந்தமையினாலேயே இரு நாடுகளும் இது தொடர்பிலான கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தது. https://www.ilakku.org/அமெரிக்க-ஜேர்மனி-ஆய்வு-க/
-
இலங்கை வந்த ஈரான் அதிபா்! ரணில் வகுத்திருந்த திட்டங்கள் – அகிலன்
இலங்கை வந்த ஈரான் அதிபா்! ரணில் வகுத்திருந்த திட்டங்கள் – அகிலன் April 28, 2024 மத்திய கிழக்கில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் உலகை அதிரவைத்துக் கொண்டிருந்த பின்னணியில்தான் ஈரான் அதிபா் கலாநிதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்தாா். அவரது இந்த விஜயம் இறுதிவரையில் கேள்விக்குறியாகத்தான் இருந்தது. போா் ஒன்றில் யாராலும் வெல்லமுடியாத நாடு எனக் கருதப்படும் இஸ்ரேல் மீது அதிரடித் தாக்குதலை நடத்தியதன் மூலம், சா்வதேசத்தின் கவனம் இப்ராஹிம் ரைசி மீது திரும்பியிருந்தது. அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் முதலாவது எதிரியாக அவா் மாறியிருந்தாா். இதனால், அவரது ஒவ்வொரு நகா்வும் அவதானிக்கப்படுகிறது. போா் பதற்ற நிலை தீவிரமடைந்திருந்த நிலையில்தான் அவா் இலங்கை வருவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஈரானின் போா் நகா்வுகளின் பின்னணியில் பிரதான நபராக இப்ராஹிம் ரைசி இருக்கிறாா் என்பது இரகசியமானதல்ல. அதனால் அவரது பயணங்களும் இலகுவானதாக இருக்காது, ஆபத்துக்கள் நிறைந்ததாக இருக்கும் என்பதும் எதிா்பாா்க்கப்பட்டதுதான். ஆனாலும், பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் கடந்த வார விஜயத்தை திட்டமிட்ட படி முன்னெடுத்தாா். எந்தச் சவாலையும் எதிா்கொள்ளும் திராணி தனக்கு இருக்கிறது என்பதை இதன் மூலம் அவா் வெளிப்படுத்தியிருக்கின்றாா். அமெரிக்காவும், இந்தியாவும் அவரது வருகைகை்கு இராஜதந்திர ரீதயாக எதிா்ப்பை வெளியிட்டதாக செய்திகள் வந்தன. ஜனாதிபதித் தோ்தலை எதிா்கொண்டிருக்கும் ரணில் அதனை எதிா்கொண்டு இப்ராஹிம் ரைசியை வரவேற்றாா். இராஜதந்திர ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் இந்த விஜயம் றிஸ்க்கானது என்பது ரணிலுக்குத் தெரிந்தே இருந்தது. ஆனால், இந்த விஜயத்தின் மூலம் ரணில் எதிா்பாா்த்த பலன்கள் அவற்றைவிட முக்கியமானது. பாதுகாப்பு அணிகள் இப்ராஹிம் ரைசியின் அவரது வருகைக்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே அவரது விஷேட பாதுகாப்பு அணிகள் இலங்கை வந்திருந்தன. அவா் வந்திறங்கிய மத்தள விமான நிலையம் உட்பட, அவா் பயணம் செய்யும் பாதைகள் அனைத்துமே கவனமாகப் பரிசோதிக்கப்பட்டன. மத்தளவிலிருந்து உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக மலைப்பாதைகள் ஊடாக பதுளைக்கு அவா் செல்ல வேண்டியிருந்தது. இந்தப் பயணத்துக்கு ஹெலிக்கொப்டா் ஏற்பாடு செய்யலாம் என இலங்கை தரப்பு ஆலோசனை முன்வைத்தது. ஆனால், ஈரான் அதிகாரிகள் அதனை நிராகரித்து தரைப் பாதையைத்தான் தெரிவு செய்தாா்கள் என்று சொல்லப்படுகின்றது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஈரான் அதிபர் மேற்கொண்ட இந்த விஜயம், பொருளாதார ரீதியாக மட்டுமன்றி அரசியல் இராஜதந்திர ரீதியாகவும் முக்கியமானது. தனித்துவமான “எண்ணெய்க்கான தேயிலை” ஒப்பந்தத்தால் குறிக்கப்பட்ட இந்த விஜயம், அதன் சாத்தியமான அரசியல் தாக்கங்கள் பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. வெளித்தோற்றத்தில் ஒரு பொருளாதார பரிமாற்றம் என்றாலும், வருகை உடனடி ஆதாயங்களுக்கு அப்பால் பல சா்வதேச பரிமாணங்களைக் கொண்டுள்ளது. வெளிநாட்டு கையிருப்பு குறைதல், சா்வதேசக் கடன்களின் அதிகரிப்பு மற்றும் தவறான பொருளாதார முகாமைத்துவம் போன்ற காரணிகளின் கலவையால் உருவாகிய இலங்கையின் பொருளாதார நெருக்கடி, மலிவு விலையில் எண்ணெய்க்கான அவசரத் தேவையை இலங்கைக்கு உருவாக்கியுள்ளது. இதற்கு இலங்கைக்கு கைகொடுத்த முக்கிய நாடுகளில் ஈரான் பிரதானமானது. பாரம்பரியமாக, எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை இந்தியாவை நம்பியிருந்தது. இருப்பினும், உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், ஈரானின் சலுகை கவர்ச்சிகரமானதாக மாறியது. “எண்ணெய்க்கான தேயிலை” ஒப்பந்தமானது, ஈரானுடனான கடனைத் தீர்ப்பதற்கும் எதிர்கால எண்ணெய் இறக்குமதியைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு அதன் மிக மதிப்புமிக்க ஏற்றுமதியான தேயிலையை பண்டமாற்று செய்ய அனுமதிக்கிறது. இந்த விஜயம் இரு நாடுகளின் மூலோபாய நகர்வை வெளிப்படுத்துகின்றது. அணுசக்தித் திட்டத் தடைகள் காரணமாக சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஈரானுக்கு, புதிய பொருளாதாரக் கூட்டாண்மைகளை உருவாக்க இது ஒரு வாய்ப்பாகும். இலங்கை, தனது வர்த்தக உறவுகளை பன்முகப்படுத்த முயல்கிறது, ஈரானை ஒரு நீண்ட கால ஆற்றல் வழங்குனராக பார்க்கிறது. மேலும், இந்த விஜயமானது வரலாற்று ரீதியாக இலங்கைக்கு குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கும் ஒரு தேசத்துடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. குறைந்த விலையில்.. அமெரிக்கா, இந்தியா போன்றவற்றின் அழுத்தங்கள் இஸ்ரேலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கு மத்தியிலும் தன்னை வரவேற்ற ரணில் துணிந்தது ஈரான் அதிபருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. அதற்கும் மேலாக இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டனான உறவைப் பலப்படுத்திக்கொண்டமையும் இன்றைய போா்ச் சூழலில் இப்ராஹிம் ரைசிக்கு அவசியமான ஒன்றாகவே இருந்தது. பாகிஸ்தானின் நிலைதான் இலங்கைக்கும் ஏற்படலாம் என உள்நாட்டில் அரசியல் சக்திகள் தெரிவித்த நிலையில் இப்ராஹிம் ரைசியை வரவேற்க ரணில் தீா்மானித்தமைக்கு சில காரணங்கள் இருந்தன. இப்ராஹிம் ரைசியுடனான பேச்சுக்களின் போது, சா்வதச சந்தை விலையை விட குறைந்த விலையில் எண்ணையை வழங்க ஈரான் அதிபா் சம்மதித்ததாகத் தெரிகின்றது. இதன் மூலம் இன்னும் சில வாரங்களுக்குள் உள்ளுா் சந்தையில் எரிபொருள் விலை குறையலாம். அதன் விளைவாக அத்தியவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளும் குறைவடையும். ஜனாதிபதித் தோ்தலில் தான் போட்டியிடுவதை அறிவிப்பதற்கு அது அவருக்குப் பொருத்தமான தருணமாக அமையும். ஈரானும் இவ்விடயத்தில் ரணிலுக்கு உதவும் மனப்பான்மையுடன்தான் உள்ளது. இலங்கையின் நெருங்கிய பிராந்திய பங்காளியான இந்தியா, இந்த நகா்வுகளை கவலையுடன் பார்க்கக்கூடும். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையில் இந்தியா நீண்டகாலமாக ஒரு மேலாதிக்க நிலையைக் கொண்டுள்ளது. பலப்படுத்தப்படும் இலங்கை – ஈரான் உறவு இந்த நிலையைச் சிக்கலாக்கும். இந்தியா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவைப் பேண முயற்சிப்பதன் மூலம் இலங்கை எச்சரிக்கையுடன் நடந்துகொள்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் மிகுந்த இராஜதந்திரத்துடனும், மதிநுட்பத்துடனும் நடந்துகொள்கின்றாா். இந்தியா விரும்பாத ஒன்றைச் செய்யும் அதேவேளையில், இந்தியாவின் தேவைகள் சிலவற்றையும் செய்வதற்கான சமிஞையைக் கொடுக்கின்றாா். இவ்வாறான நகா்வுகளின் மூலம் புதுடில்லியை அவரால் சமாதானப்படுத்த முடிகின்றது. ரணிலின் எதிா்பாா்ப்பு பொருளாதார நெருக்கடிக்குத் தீா்வைக் கொண்டுவருகிறோம் எனக் கூறிக்கொள்ளும் தற்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை பாதுகாப்பதாக தன்னை சித்தரிக்க இந்த விஜயத்தை பயன்படுத்திக்கொண்டது. இது அவர்களின் இமேஜை உயர்த்தி, அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை ஸ்திரப்படுத்தும் என்பது ரணில் தரப்பின் எதிா்பாா்ப்பு. இருந்த போதிலும் இலங்கை – ஈரான் கூட்டாண்மையின் எதிர்காலத்தை பல சவால்கள் சூழ்ந்துள்ளன. ஈரான் மீதான அமெரிக்காவின் தடைகள் இலங்கைக்கு எண்ணெய் வர்த்தகத்தை கடினமாக்கலாம். இலங்கையில் அரசியல் நிலையற்றதாகவே உள்ளது, மேலும் தலைமையில் ஏற்படக்கூடிய எந்த மாற்றமும் “எண்ணெய்க்கான தேயிலை” ஒப்பந்தத்தின் தொடர்ச்சியை பாதிக்கலாம். ஈரானின் தொழில்நுட்பம் இவ்வாறான சவால்கள் இருந்தபோதிலும், அதற்கு அப்பால், ஒத்துழைப்புக்கான கதவுககள் சில விடயங்களில் திறந்தே இருக்கின்றது. ஈரான் விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. இந்தத் துறைகளில் அறிவுப் பரிமாற்றம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு நீண்டகாலத்தில் நன்மை பயக்கும். அதனை வழங்குவதற்கான உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம், முதன்மையாக பொருளாதாரக் கருத்தினால் உந்தப்பட்ட அதேவேளையில், கணிசமான அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது இலங்கையின் புதிய பங்காளிகளைத் தேடுவதையும், பரந்த பொருளாதார உறவுகளுக்கான ஈரானின் விருப்பத்தையும், பிராந்திய புவிசார் அரசியலின் சிக்கல்களையும் குறிக்கிறது. இந்த உறவின் நீண்ட கால தாக்கத்தை பார்க்க வேண்டும். ஆனால் இந்த விஜயம் சந்தேகத்திற்கு இடமின்றி இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது. இந்த புதிய அத்தியாயம் எவ்வாறு அமையும் என்பதை சா்வதேச அரசியல், இராஜதந்திர நகா்வுகள்தான் தீா்மானிக்கப்போகின்றன. இதற்குள் இலங்கையும், ஈரானும் எவ்வாறு அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். https://www.ilakku.org/இலங்கை-வந்த-ஈரான்-அதிபா்/
-
கிலோ கணக்கில் தங்கம் மீட்பு; மூவர் கைது
கிலோ கணக்கில் தங்கம் மீட்பு; மூவர் கைது (யோகி) கிளிநொச்சியில் நேற்றிரவு 11 மணியளவில் சிறிய மகிழுந்து ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட (27) நான்கு கிலோ 170 கிராம் தங்க கட்டி மீட்கப்பட்டதுடன் மகிழுந்தில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதி வழியாக வவுனியாவுக்கு குறித்த மகிழுந்தில் மேற்படி எடையுடைய தங்கம் கடத்தப்படுவது தொடர்பாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த சிறப்பு தகவல்களின் அடிப்படையில் உடனடியாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்துக்கு அண்மையில் வைத்து வாகனத்தை சோதனையிட்ட சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த தங்கத்தை மீட்டதுடன் சந்தேகத்தின் பெயரில் மகிழுந்தில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட மூவரைக் கைது செய்துள்ளனர் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (ஏ) https://newuthayan.com/article/கிலோ_கணக்கில்_தங்கம்_மீட்பு;_மூவர்_கைது
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் (மாதவன்) தெற்குடன் இணைந்த வேட்பாளர் சாத்தியம் - சட்டத்தரணி சுவஸ்திகா தெரிவிப்பு அரச தலைவர் தேர்தலில் தமிழ் கட்சிகள் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்பது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது எனத் தெரிவித்த சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருலிங்கம் தெற்கு சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து பேசி தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவாராயின் சாத்தியமான நிலைமைகளை ஏற்படுத்தும் என தெரிவித்தார். தமிழ் மக்கள் எதிர்ப்பு வாக்கு அரசியலில் இருந்து மீள்வதுடன் தெற்கு மக்களுடன் இணைந்து எவ்வாறு எமது உரிமைகளை பெற முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருலிங்கம் தெரிவித்தார். நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் வல்லமை அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் தேர்தல் காலங்களில் எவ்வாறு அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுதல் தொடர்பான கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பேசும் மக்கள் இவ்வளவு காலமும் எதிர்பாபு வாக்குகளில் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் இனி வரும் காலங்களில் தெற்கு மக்களுடன் இணைந்து எவ்வாறு தமது உரிமைகளை பெற முடியும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது நானும் அதை வரவேற்பேன். ஆனால் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பொது வேட்பாளராக நிறுத்துவது தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமற்ற விடயம். ஏனெனில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் அரச தலைவர் தேர்தலில் வெற்றி பெற மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் ஆனால் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பது கேள்வியே. ஏனெனில் தமிழ் பொது வேட்பாளரை நியமிக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் தெற்கு சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து பேசி தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் தொடர்பில் சாதகமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியும் ஆகவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு வாக்கு அரசியலை முன்னெடுப்பதை நிறுத்தி தெற்கு மக்களுடன் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவார்களாயின் தமிழ் மக்கள் சார்ந்து பிரச்சினைகளின் சாதகமான நிலைப்பாட்டினை அடைந்து கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். ( https://newuthayan.com/article/தமிழ்_பொது_வேட்பாளர்_குறுகிய_அரசியல்;
-
நான்கு காவல்துறைஅதிகாரிகளுக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை
நான்கு காவல்துறைஅதிகாரிகளுக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை adminApril 28, 2024 தம்பலகாமம் – பாரதிபுரத்தில் இடம்பெற்ற மனிதக்கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டிருந்த நான்கு காவல்துறைஅதிகாரிகளுக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மனிதக்கொலை தொடர்பிலான சட்டவிரோத ஒன்றுகூடலின் பங்காளிகளாக இருந்தார்கள் என்ற குற்றசாட்டில் குறித்த காவல்துறை உத்தியோகத்தர்கள் நால்வருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு திருகோணமலை பாரதிபுரத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த 4 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை வழங்கப்க்கப்பட்டுள்ளது. வட மத்திய மாகாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும் தற்போதைய குளியாப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதியுமான மனோஜ் தல்கொடபிட்டியவினால் இந்த தண்டணை வழங்கப்பட்டுள்ளது. தம்பலகாமம் – பாரதிபுரம் கிராமத்தில் நிராயுதபாணியாக இருந்த 8 தமிழ் பொதுமக்கள் மீது ஒரு குழுவினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு கொலை செய்தனர். குறித்த சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் சட்டவிரோத ஒன்றுகூடலில் இருந்ததாக இந்த நான்கு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும் எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 4 காவல்துறை அதிகாரிகளில், காவல் நிலைய பொறுப்பதிகாரி, காவல்துறை இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு சார்ஜன்ட்கள் உள்ளடங்குகின்றனர். 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு திகதியில் இந்த குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். https://globaltamilnews.net/2024/202118/
-
யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம்!
யாழ்ப்பாணத்தில் அரிசி விநியோகம்! adminApril 28, 2024 யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் குறித்து யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 131652 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் கடந்த 20ஆம் திகதி முதல் கிராம அலுவலர் பிரிவு ரீதியாகவும், கிராம அலுவலர் பிரிவு கொத்தணி ரீதியாகவும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. யாழ். மாவட்டத்தின் மொத்த சனத்தொகையோடு ஒப்பிட்டு நோக்குகின்ற போது 62.66 வீதமான குடும்பங்கள் மேற்படி அரிசி விநியோகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டத்தில் அரிசி வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்திருந்த, பதிவு செய்யப்பட்ட 17 அரிசி ஆலைகளூடாக அரிசி விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், 110220 குடும்பங்களுக்கான அரிசி, குறித்த அரிசி ஆலைகள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 98175 குடும்பங்களுக்கு பிரதேச செயலாளர்களால் கிராம மட்ட அலுவலர்களூடாக அரிசி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், தொடர்ச்சியாக அரிசியை பொதுமக்களுக்கு விநியோகிக்கின்ற நடவடிக்கையினை பிரதேசசெயலாளர்கள் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மூலம் முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை, நெடுந்தீவு, காரைநகர், சாவகச்சேரி, சண்டிலிப்பாய், சங்கானை, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 90 வீதத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரிசி விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/202122/
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
எனது விருப்பமும் அதுதான். எனக்கு பல இன நண்பர்கள் இருக்கின்றார்கள். ஆனால் உந்த சிங்கள இனத்தில்தான் “ஹாய்” என்று சொல்லுவதற்குக்கூட ஒருவருமில்லை. இனியும் எவரையும் சேர்ப்பேன் என்றும் நினைக்கவில்லை. இந்தத் திரியில் அலசப்பட்ட எல்லா கருத்துக்களையும் வாசிக்கவில்லை. எனினும் தமிழர்கள் ஒற்றையாட்சிக்குக் கீழே வாழுவதை ஏற்றுக்கொள்ளும் நிலை இன்னும் வரவில்லை. கையாலாகாத தமிழ்த் தேசிய அரசியல் கோமாளிகளால் மக்களின் ஆதர்சனமான அரசியல் விருப்பங்கள் முன்னெடுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியத்தை நலிவுபெறச் செய்து இலங்கைத் தேசியத்தை ஏற்றுக்கொள்ளவைக்க பல செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. தமிழ்த் தேசிய முன்னெடுப்பு என்பது தோல்வி தழுவிய கோஷம் என்பதும், பொருளாதார அபிவிருத்தியே போதும் என்பதும், மக்கள் கொண்டாட்டத்தையும், கேளிக்கைகளையும் விரும்புவதால் அவற்றுக்கான வெளிகளை திறந்துவிடுவதன் மூலம் தேசிய உணர்வை மழுங்கடிக்கலாம் என்றும் பல வேலைத்திட்டங்கள் நடக்கின்றன. ஆனால் சிங்கள இனம் தமது ஒடுக்குமுறை அரசியலில் இருந்து ஒரு இம்மிகூட நகரவில்லை. வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்பும், பொருளாதார நடவடிக்கைகளில் இறுக்கமான பிடியும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. தேசிய அரசியலை முழுமையாக நீர்த்துப்போகச் செய்ய தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்தி அவர்களை நீதிமன்றுக்கு ஏறச் செய்தாயிற்று. தாயகத் தமிழரை புலம்பெயர் தமிழரிடம் இருந்து பிரிக்கும் வேலைத்திட்டங்களும் நடக்கின்றன. நிலாந்தனின் கட்டுரையைப் படித்தால் பலவற்றைப் புரிந்துகொள்ளமுடியும். 👇🏾
-
புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழரசியலில் முதலீடு செய்யக்கூடாதா? - நிலாந்தன்
புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழரசியலில் முதலீடு செய்யக்கூடாதா? - நிலாந்தன் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தாயகத்தில் கட்சிகளுக்குள் காணப்படும் அணிகளை புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பும் பிரதிபலித்தது. இந்நிலையில் தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இரண்டு அணிகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர் தரப்பில் ஆதரவு அணிகள் உண்டு. எனினும் சிறீதரன் அணிக்கு ஆதரவானவர்கள் தனக்கு எதிராகச் செயல்படுவது குறித்து சுமந்திரன் அதிகம் எரிச்சலடைந்து இருப்பதாகத் தெரிகிறது. அதன் விளைவுதான் அவர் அண்மையில் வழங்கிய ஒரு நேர்காணல் ஆகும். ” கட்சிகள் விற்பனைக்கு உண்டு உங்களுக்கு வேண்டுமா? ” என்று என்று ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முதலாளியின் சார்பாக பேசிய ஒருவர் தன்னிடம் கேட்டதாக சுமந்திரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கின்றார். புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகள் சிலர் கட்சிக்குள் செல்வாக்கு செலுத்த முற்படுவதை சுமந்திரன், கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஓர் அரசியல்வாதி புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பின் மீது இவ்வளவு கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருப்பது இதுதான் முதல் தடவை. சுமந்திரன் கூறுவதுபோல புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களில் ஒருவர் இரண்டு சிங்களக் கட்சிகளின் பதிவுகளை வாங்கி இருப்பதாக ஒரு தகவல் ஏற்கனவே வெளிவந்தது. அந்த முதலீட்டாளரின் அலுவலர் என்று கருதப்படும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் சில கட்சித் தலைவர்களை சந்தித்து உரையாடியும் இருக்கிறார். தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த போகிறோம் அதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவை வெல்ல வைக்கப் போகிறோம் என்றும் அவர் கதைத்திருக்கிறார். ஏனைய கட்சிகளை ஒருங்கிணைப்பது அவருடைய நோக்கம் என்று ஊகிக்கப்பட்டது. எனினும் அந்த முயற்சி பின்னர் தொடர்வதாகத் தெரியவில்லை. இவ்வாறு கட்சிகளை வாங்குவது; கட்சிப் பிரமுகர்களுக்கு நிதி உதவி செய்வது; கட்சிப் பிரமுகர்களை புலம்பெயர்ந்த நாடுகளுக்கு அழைத்துக் கொண்டாடுவது; அல்லது புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வரும் கட்சி பிரமுகர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்வது; தாயகத்தில் நிகழும் போராட்டங்களுக்கு நிதி அனுசரனை புரிவது; வெளிநாடுகளில் பிரகடனங்களை வெளியிடுவது… போன்ற பல்வேறு வழிகளிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தாயகத்து அரசியலின் மீது செல்வாக்குச் செலுத்த முற்படுகின்றது. இது தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல சீக்கியர்கள், சில ஆப்பிரிக்க சமூகங்கள், ஆர்மீனியர்கள் போன்ற புலப்பெயர்ச்சி நடந்த எல்லாச் சமூகங்களிலும் இது ஒரு அரசியல் யதார்த்தம். புலம்பெயர்ந்த யூதர்கள் கடந்த நூற்றாண்டில், இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியதோடு நவீன அரசியலில் புலம்பெயர் சமூகங்களின் யுகம் துலக்கமான விதங்களில் மேலெழுந்து விட்டது. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ஈழப் போரின் காசு காய்க்கும் மரமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் காணப்பட்டார்கள். 2009க்கு பின்னரும் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து தொடர்ந்து போராடுவது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம்தான். நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் கூர்முனை போல காணப்படுவது அவர்கள்தான். ஐநா மைய அரசியலில் அவர்கள்தான் பிரதான செயற்பாட்டாளர்கள். அதுமட்டுமல்ல தாயகத்தில் உள்ள கட்சிகளுக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் நிதி உதவிகளைச் செய்து வருகின்றது. 2009 க்கு பின் தமிழ் மக்கள் தமது சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டு எழுவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் சமூகமே உதவியது. நிதி ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தாயகத்தில் உள்ள மக்களை தோல்விகளிலிருந்தும் காயங்களில் இருந்தும் அவமானத்திலிருந்தும் இழப்புணர்விலிருந்தும் மீட்டெடுத்ததில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்துக்குக் கணிசமான பங்கு உண்டு. கடந்த 15 ஆண்டுகால அரசியலில் தாயகத்தில் இடம்பெற்ற பெரும்பாலான எழுச்சிகள் போராட்டங்களின் பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமே உண்டு. எழுக தமிழ், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்… போன்ற எல்லாவற்றின் பின்னணியிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் உண்டு. அதுபோல 2009 க்கு முன்பு சுனாமியின் தாக்கத்திலிருந்து தாயகம் மீள்வதற்கும் 2020 க்கு பின் பெருந்தொற்று நோய்க்காலத்திலும் அண்மை ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடியிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் பெருமளவுக்கு உதவியது. அதேசமயம் தாயகத்து அரசியல் நிலைமைகளின் மீது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ரிமோட் கண்ட்ரோல் செய்ய முற்படுகிறது என்ற குற்றச்சாட்டிலும் உண்மைகள் உண்டு. கள யதார்த்தத்துக்கு வெளியே பாதுகாப்பாக இருந்து கொண்டு, தாயகத்தில் தன்னியல்பாக எழுச்சி பெறும் செயற்பாட்டாளர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படுவது; காணாமல் ஆக்கப்பட்ட வர்களுக்காகப் போராடும் சங்கங்களுக்கிடையில் பிரிவுகளை ஏற்படுத்தியது; பல்கலைக்கழக மாணவர்களும் உட்பட தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களை ரிமோட் கொண்ட்ரோல் செய்ய முற்படுவது; தாயகத்தோடு கலந்தாலோசிக்காமல் ஈழத் தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரகடனங்களை தயாரிப்பது… போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் புலம்பெயர்ந்த தரப்பில் உள்ள சில தனி நபர்களின் மீதும் சில நிறுவனங்களின் மீதும் உண்டு. சுமந்திரன் அந்த நேர்காணலில் கூறுவது போல புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பு தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கின்றது. அதற்கு முதலாவது காரணம், தாயகத்தை விட்டுப் பிரிந்து வாழ்வதால் ஏற்படும் பிரிவேக்கம். இரண்டாவது காரணம், புலம்பெயர்ந்த நாடுகளில் காணப்படும் ஒப்பீட்டளவில் சுதந்திரமான அரசியல் சூழல். மூன்றாவது காரணம் சீனச்சார்பு இலங்கை அரசாங்கங்களின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முற்படும் மேற்கத்திய நாடுகள் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களை மறைமுகமாக ஊக்குவிப்பது, வளர்த்து விடுவது. இது போன்ற காரணங்களால் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் தாயகத்தை விடவும் அதிகம் உணர்ச்சிகரமாகவும் எழுச்சிகரமாகவும் சுதந்திரமாகவும் போராடக் கூடியதாக இருக்கின்றது. அவ்வாறான தீவிர நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் சுமந்திரனை தேசிய நீக்கம் செய்யும் ஓர் அரசியல்வாதியாகப் பார்க்கிறார்கள். அவர் வெளி நாடுகளுக்கு வரும்போது அவருக்கு எதிர்ப்புக்கு காட்டுகிறார்கள். இப்பொழுது கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவில் அவர்கள் சுமந்திரனை ஒரு வில்லனாகப் பார்க்கிறார்கள். கட்சி சுமந்திரனை நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடும் ஆவேசத்தோடும் காணப்படுகிறார்கள். இவற்றால் சுமந்திரன் எரிச்சலடைந்ததன் விளைவே மேற்சொன்ன நேர்காணல் ஆகும். புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் நாட்டுக்குள் முதலீடு செய்ய வரும்பொழுது அரச புலனாய்வுத்துறை அவர்களை கண்காணிக்கும். அக் கண்காணிப்பை மீறி அவர்கள் எதையும் செய்ய முடியாது. அவ்வாறு புலனாய்வுத் துறையின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் தமிழ் முதலீட்டாளர்கள் தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறார்கள் என்று எடுத்த எடுப்பில் தீர்ப்புக் கூறுவது சரியா? இதே விதமான குற்றச்சாட்டுக்கள்தான் தடுப்பிலிருந்து வந்த முன்னாள் இயக்கத்தவர்கள் மீதும் வைக்கப்பட்டன. 2009க்குப் பின்னரும் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் நாட்டில் சுதந்திரமாக முதலீடு செய்வதில் உள்ள அரசியல் ராணுவ வரையறைகளை அது உணர்த்துகின்றது. அது இன ஒடுக்குமுறையின் ஒரு பகுதி தான். இந்த இடத்தில் ஒடுக்குமுறைக்கு எதிராகத்தான் கதைக்கலாமே தவிர ஒடுக்கப்படும் தரப்பு புலனாய்வுத் துறையின் முகவராக செயல்படுகிறது என்ற பொருள்பட யாரும் கதைக்க முடியாது. தீவிரமான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை எடுத்தால் அது தென்னிலங்கையில் இனவாதத்தைத் தூண்டும் என்பது சம்பந்தர் வழமையாகக் கூறும் ஒரு வாதம். இது எப்படியிருக்கிறது என்று சொன்னால், குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் ஒரு பெண்ணைப் பார்த்து நீ வாய் காட்டியபடியால்தான் உன்னுடைய கணவன் உன்னைத் தாக்குகிறான் என்று கூறுவதைப் போன்றது. இங்கு குடும்ப வன்முறை பிழை என்ற நிலைப்பாட்டைதான் முதலில் எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் இப்பொழுது தனிநாடு கேட்கவில்லை. தாங்கள் ஒரு தேசமாக இருப்பதற்குரிய அடிப்படைகளைத் தான் கேட்கிறார்கள். தாங்கள் ஒரு தேசமாக இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்பது குற்றமா? அப்படிக் கேட்டால் அது சிங்கள இனவாதிகளை உசுப்பேத்தும் என்று சொன்னால் சிங்கள இனவாதிகளை உசுப்பேத்தாமல் இருக்க எப்படிப்பட்ட அரசியலை தமிழ் மக்கள் முன்னெடுக்க வேண்டும்? அதற்கு பெயர்தான் நல்லிணக்கமா? கடந்த 15 ஆண்டுகளிலும் சம்பந்தர் அப்படிப்பட்டதோர் அரசியலுக்குத்தான் தலைமை தாங்கினார். 2015 ஆம் ஆண்டிலிருந்து ஐநாவின் நிலை மாறுகால நீதிக்கான தீர்மானத்தின் பிரகாரம் சம்பந்தர் ரணில் விக்கிரமசிங்கவோடு இணைந்து ஒரு புதிய யாப்பை உருவாக்க முயற்சித்தார். அதற்காக அவர் அதிகமாக விட்டுக் கொடுத்தார். அந்த உத்தேச யாப்பின் இடைக்கால வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா என்ன சொன்னார் தெரியுமா? சம்பந்தரைப் போல விட்டுக் கொடுக்கும் ஒரு தலைவரை இனிக் காண முடியாது. சம்பந்தரின் காலத்தில் ஒரு தீர்வைப் பெறவில்லை என்றால் பிறகெப்பொழுதும் பெற முடியாது என்ற பொருள்பட டிலான் பெரேரேரா நாடாளுமன்றத்தில் பேசினார். அதில் உண்மை உண்டு சம்பந்தர் அந்தளவுக்கு அடியொட்ட வளைந்து கொடுத்தார். ஆனால் அந்த விட்டுக்கொடுப்பின் விளைவாக கூட்டமைப்பு எதைப் பெற்றது? நிலைமாறகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன அதைக் காட்டிக்கொடுத்தார். 2018, ஒக்டோபர் மாதம் அவர் ஒரு யாப்புச்சதிப் புரட்சியில் ஈடுபட்டு நிலைமாறு கால நீதியைத் தோற்கடித்தார். இது தொடர்பாக 2021ஆம் ஆண்டு வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பின்போது சுமந்திரன் பின்வரும் பொருள்படக் கூறினார்… கடந்த ஆறு ஆண்டுகளாக (அதாவது 2015 இலிருந்து) ஒரு பரிசோதனையை முன்னெடுத்தோம். அதில் தோற்று விட்டோம்… என்று. அதுதான் உண்மை. சம்பந்தர் அந்தளவுக்கு விட்டுக் கொடுத்தும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தை மகிழ்விக்க முடியவில்லை. அதுதான் இலங்கைத்தீவின் யதார்த்தம். இப்படிப்பட்டதோர் பின்னணியில் ஒடுக்குமுறையைத்தான் விமர்சிக்க வேண்டுமே தவிர ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் மக்களின் தீவிரத்தையல்ல. இக்கட்டுரையில் முன் சொன்ன உதாரணத்தைப் போல குடும்ப வன்முறை சரியா பிழையா என்ற நிலைப்பாடு தான் இங்கு முக்கியம். மனைவி வாய் காட்டினாரா அல்லது ருசியாகச் சமைக்க வில்லையா என்பது இங்கு விவாதமே அல்ல. எனவே புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பில் ஒரு பகுதி தீவிரமான நிலைப்பாடுகளை எடுக்கிறது என்பதற்காகவோ அல்லது தாயகத்து அரசியலின் மீது அளவுக்கதிகமாக செல்வாக்கு செலுத்த விளைகிறது என்பதற்காகவோ அவர்களை தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குபவர்கள் என்று கூறுவது யாருக்கு இறுதியாகச் சேவகம் செய்யும்? தமிழ்த் தேசிய அரசியல் சமூகம் என்பது புலம்பெயர்ந்த தமிழர்களையும் உள்ளடக்கியதுதான். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாயகத்தின் நீட்சியும் அகட்சியும் தான். அவர்களும் ஈழத் தமிழ் ரத்தம்தான். ஈழத் தமிழர்களுக்கு இரண்டு சிறகுகள் உண்டு. ஒன்று தமிழகம் மற்றது புலம்பெயர்ந்த தமிழ் சமூகம். இதில் ஒரு சிறகை வெட்டினாலும் ஈழத் தமிழர்கள் பறக்க முடியாது. தேர்தல் காலங்களில் கட்சிக்குக் காசை வாரி வழங்கியது போலவே கட்சிக்குள் அணிகள் தோன்றும் போது அந்த அணிகளையும் புலம்பெயர்ந்த தமிழர்கள் கையாளப் பார்ப்பார்கள் என்பது ஒர் அரசியல் யதார்த்தம். கட்சி தனக்குள் உடையும் பொழுது புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்ல அரச புலனாய்வுத் துறையும் அதற்குள் புகுந்து விளையாடும். எனவே இதுவிடயத்தில் முதலில் விமர்சிக்க வேண்டியது புலம்பெயர்ந்த தமிழர்களை அல்ல. மாறாக, தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரு மூத்த கட்சியை இரண்டாக உடைத்த கட்சிக்காரர்களைத் தான் விமர்சிக்க வேண்டும். https://www.nillanthan.com/6725/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
மும்பை தோற்றது மகிழ்ச்சி!
-
“நான் கற்றுக் கொண்டதும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு போதுமே கற்றுக்கொள்ளாததும்”
“நான் கற்றுக் கொண்டதும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு போதுமே கற்றுக்கொள்ளாததும்” April 26, 2024 — குசல் பெரேரா — வடக்கில் தமிழர்கள் மத்தியில் மதத்தீவிரவாதம் வெளிக்கிளம்புவதற்கு யார் பொறுப்பு? மக்களின் உணர்வுகளை மதிக்காத — கொழும்பில் வாழ்க்கையைக் கொண்ட பொறுப்பற்ற தமிழ் தலைமைத்துவமே அதற்கு பொறுப்பு என்று நான் சொல்வேன். அநீதிக்கு எதிராகவும் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் எந்தளவுக்கு வெளிப்படையாகவும் பற்றுறுதியுடனும் நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பதிலேயே அவர்களின் பலம் தங்கியிருக்கிறது. சிங்கள தெற்கில் பிரதான அரசியல் நீரோட்ட தலைவர்கள் பெரும்பான்மை இனத்துவ தீவிரவாதத்தை முன்னெடுக்கிறார்கள். போரின் முடிவுக்கு பின்னரான தமிழர் அரசியலில் பாரம்பரிய அரசியல் தலைவர்கள் தங்களது மக்களுடன் நிற்கத் தவறியதே மதத்தீவிரவாதத்தை அனுமதிக்கிறது. இது உண்மையில் எங்கிருந்து ஆரம்பித்தது? 2005 நவம்பரில் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவுசெய்ததுடன் இது ஆரம்பித்தது. சமாதானத்தைப் பேசுவதற்காக வடக்கு — கிழக்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெருமளவில் வாக்களித்து 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெறுவதற்கு நல்ல வாய்ப்பைக் கொடுக்கும் என்று அந்த நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக புலம்பெயர் தமிழ்ச்சமூகம் “தமிழ் ஈழத்தை” வென்றெடுப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தது. “தமிழர்களுக்கு சமாதானம் இல்லை” என்று உரத்துக் குரலெழுப்புவதற்கும் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையுடன் “தனியான தமிழ் அரசு” ஒன்றுக்காக மேற்குலகின் ஆதரவைத் திரட்டவும் வசதியாக “கடும்போக்கு சிங்கள பௌத்தவாதியான” ராஜபக்சவை பதவியில் அமர்த்துவதற்கு அந்த சமூகம் தீர்மானித்தது. இந்த கர்வத்தனமான சிந்தனை “தமிழ் ஈழம்” என்ற பிரபாகரனின் வெறித்தனமான அபிலாசையின் வழியில் அமைந்தது. விடுதலை புலிகளினால் தீர்மானிக்கப்பட்ட தேர்தல் பகிஷ்கரிப்பு 50.29 சதவீத வாக்குகளுடனும் ஒரு இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் சற்று அதிகமான பெரும்பான்மையுடனும் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவுசெய்தது. வடக்கு — கிழக்கில் மாத்திரம் 10 இலட்சத்து 22 ஆயிரம் வாக்காளர்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தார்கள். கடும்போக்கு சிங்கள பௌத்த தலைவர் ஒருவர் எந்தளவு செலவானாலும் அதைப் பொருட்படுத்தாமல் இறுதிவரை போரை முன்னெடுப்பார் என்பதை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தெரிந்திருக்கவில்லை. 2002 பெப்ரவரி போர்நிறுத்த உடன்படிக்கை போரில் ஈடுபட்டு நன்கு அனுபவத்தைப் பெற்ற விடுதலை இயக்கப் போராளிகளை “நிருவாகிகள்” பதிவிகளுக்கு மாற்றியது. வயதில் நாற்பதுகளின் நடுப்பகுதியிலும் ஐம்பதுகளின் முற்பகுதியிலும் இருந்த அவர்கள் போரில் சலிப்படைந்து சமருக்கு செயலூக்கத்துடன் தலைமைதாங்கும் ஆற்றல் இல்லாதவர்களாகவும் இருந்தார்கள். நியூயோர்க்கில் 9/11 தாக்குதல் அரசு அல்லாத ஆயுதக்குழுக்கள் சகலதையும் உள்ளடக்கியதாக “உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” என்ற சுலோகத்தின் கீழ் போர் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷூக்கு வாய்ப்பைக் கொடுத்தது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள்கவும் புலம்பெயர் தமிழர்கள் இருந்தார்கள். விடுதலை புலிகளும் விதிவிலக்காக இருக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம், வட அமெரிக்கா, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா உட்பட சுமார் 35 நாடுகளில் அந்த இயக்கம் தடைசெய்யப்பட்டது. 2009 மே மாதத்தில் விடுதலை புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டபோது உயிருடன் எஞ்சியிருந்த தமிழர்களுக்கு வன்னியின் மனித அவலமே மிச்சமாக இருந்தது. அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பு அவர்களது எதிர்காலத்துக்கு எதையும் விட்டு வைக்கவில்லை. மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் விடுதலை புலிகளின் கீழ் வாழ்ந்த தமிழ் மக்கள் போருக்கு பின்னரான குழப்பநிலையில் ஒரு அரசியல் தலைமைத்துவம் கூட இல்லாதவர்களாக கையறு நிலையில் இருந்தார்கள். வெறுமனே பெயரளவில் மாத்திரம் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிகளுக்கு ஒத்தூதிக்கொண்டே இருக்கவேண்டியிருந்தது. அதுவே போருக்கு பின்னரான வடக்கு — கிழக்கு. போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்களுக்காக ராஜபக்சாக்களைத் தண்டிப்பதற்கு புலம்பெயர் தமிழ்ச்சமூகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை விரைந்து பற்றிப்பிடித்துக் கொண்டது. அந்த தீர்மானங்களே தமிழ் மக்களின் “அதிமுக்கியமான அரசியல் தேவை” என்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரித்து நின்றது. அதேவேளை, போரின் முடிவுக்கு பிறகு சரியாக ஒரு வருடம் கழித்து ஜனாதிபதி ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு களத்தில் உள்ள பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது. போரினால் பாதிக்கப்பட்ட சகல பகுதிகளிலும் ஆணைக்குழ பொது விசாரணை அமர்வுகளை நடத்தியது. சிதறிப்போயிருந்த தமிழ்ச்சமூகத்தை ஒன்றுபடுத்தி அவர்களின உடனடி மனக் குறைகளுக்கு தீர்வைக் கோரும் வாய்ப்பு அதன் மூலமாக உள்ளூர் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு கிடைத்தது. ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை: ———————————/ போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு பரிகாரம் காணவேண்டிய அவசியத்தை உணர்ந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 2010 செப்டெம்பரில் சமர்ப்பித்த “இடைக்கால அறிக்கையில்” பல விடயங்களுக்கு மத்தியில் பின்வரும் முன்மொழிவுகளைச் செய்திருந்தது ; (1) நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களின் வழக்குகளை ஒவ்வொன்றாக ஆராய்வதற்கு ஒரு விசேட பொறிமுறை ( 2) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படவேண்டும் (3) தடுப்புக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு அவ்வாறு விடுவிக்கப்பட்டதற்கான சான்றுப்பத்திரம் வழங்கப்படவேண்டும். மீண்டும் அவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படக்கூடாது (4) அரசாங்க ஆதரவுடனான குடியேற்றங்களுக்கு தனியார் நிலங்கள் பயன்படுத்தப்படாது என்று தெளிவான கொள்கை அறிக்கை ஒன்றை அரசாங்கம் வெளியிடவேண்டும்.(5) அதிமுன்னுரிமைக்குரிய நடவடிக்கையாக சட்டவிரோத ஆயுதக்குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்படவேண்டும். புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினதும் வெளிநாட்டு நிதியுதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ராஜபக்ச விரோத அரசியலுக்கு இசைவான முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் விக்கிரமசிங்க அரசாங்கத்துடனான தங்களது செயற்பாடுகள் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு சகல தீர்வுகளுடனும் கூடிய புதிய அரசியலைமைப்பு ஒன்றைத் தரும் என்று நம்பினார்கள். அதனால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் இருந்த மிகவும் அவசரமானதும் முக்கியமானதுமான முன்மொழிவுகளை அவர்கள் முற்றுமுழுதாக அலட்சியம் செய்தார்கள். வடமாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அநாவசியமாக முரண்பட்டுக் கொண்டார்கள். மக்களை மையப்படுத்திய அபிவிருத்தி திட்டம் ஒன்றை முன்னெடுத்து வடக்கு நிருவாகத்தை இராணுவமய நீக்கம் செய்வதற்கு அவர்கள் முதலமைச்சருக்கு ஆதரவை வழங்கி யிருக்கவேண்டும். முன்மொழிவுகளுக்கு முக்கியத்துவமில்லை: ——————————- கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கைக்கும் 2011 டிசம்பர் 16 பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதன் இறுதி அறிக்கைக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு 9 வது அத்தியாயத்தின் கீழ் 9.45 தொடக்கம் 9.74 வரையான பந்திகளில் காணப்பட்ட முன்மொழிவுகளை முற்றாக அலட்சியம் செய்தது. உனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டியவை என்று ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் முன்வைக்கப்பட்ட அவதானங்களினதும் முன்மொழிவுகளினதும் ஒரு சுருக்கமாக அந்த பந்திகள் அமைந்திருந்தன. 8.193 பந்தியை கொழும்பு சிவில் சமூகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் நிச்சயமாக வலியுறுத்தியிருக்கவேண்டும். “சட்டத்தையும் ஒழுங்கையும் பேணிப்பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒரு சிவில் நிறுவனமே பொலிஸ் திணைக்களம். அதனால் அரசின் பாதுகாப்புக்கு பொறுப்பான ஆயுதப்படைகளுடனான தொடர்புகளில் இருந்து பொலிஸ் திணைக்களம் பிரிக்கப்படவேண்டும் என்று அந்த பந்தியும் சிவிலியன் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படைகளின் ஈடுபாடு படிப்படியாக நீக்கப்படவேண்டும் ; பாதுகாப்பு படைகளினால் தனியார் நிலங்கள் பயன்படுத்தப்படுவதை நியாயபூர்வமான கால எல்லை கொடுக்கப்பட்டு இல்லாமல் செய்யவேண்டும் என்று 9.171 பந்தியும் கூறுகின்றன. மேற்குலகில் பெரிய ஆரவாரம் செய்ப்பட்டபோதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் 14 வருடகால தீர்மானங்கள் வடக்கு — கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்தப் பயனையும் கொண்டுவரவில்லை. மாறாக, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவசியமான தேவைகளுக்கு முக்கியமானதாக இருந்தபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால் வடக்கு — கிழக்கு மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்கும் தாங்கள் எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கும் பரிகாரம் வேண்டி ஆர்ப்பாட்டம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். ராஜபக்சாக்களை தண்டிப்பதற்கு முன்னதாக “காணாமல்போன” தங்களது உறவினர் பற்றிய தகவல்கள் அந்த மக்களுக்கு அவசரமானவையாகும் முக்கியமானவையாகவும் இருந்தன. இழந்த தங்களது நிலங்களையும் அன்றாட வருமானத்துக்கான ஆதாரங்களையும் மீளப்பெறுவதில் அவர்கள் கடும் அக்கறை செலுத்தினார்கள். அன்புக்குரிவர்கள் எங்கே? காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களைக் கோரி வடக்கிலும் கிழக்கிலும் ஆர்ப்பாட்டம் செய்யும் தாய்மார்களுக்கும் மனைவிமார்களுக்கும் ஆதரவளிப்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்தவொரு தலைவரும் ஒருபோதும் நினைக்கவில்லை. வடக்கு,கிழக்கில் சிவில் சமூகத்தை அரசியல் ரீதியில் அணிதிரட்டி அவர்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கவும் முயற்சிகள் செயயப்படவில்லை. 2,495 நாட்களுக்கு தொடர்ச்சியாக போராடுவது என்பது ஒன்றும் சாதாரணமான விடயம் இல்லை. “எங்களது அன்புக்குரியவர்கள் எங்கே?” என்ற கேள்வியுடன் 2023 டிசம்பர் இறுதிவரை தொடர்ச்சியாக ஆறு வருடங்களும் ஒன்பது மாதங்களும் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது ஒன்றும் பகிடி இல்லை. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த தாய்மாரையும் மனைவிமாரையும் மகிந்த ராஜபக்சவுக்கு பிறகு மூன்று ஜனாதிபதிகள் ஏழு வருடங்களுக்கும் கூடுதலான காலமாக அலட்சியம் செய்திருக்கிறார்கள். இந்த போராட்டங்களில் சம்பந்தப்பட்டவர்களில் 180 க்கும் அதிகமான தாய்மாரும் உறவினர்களும் கடந்த ஏழு வருடங்களில் இறந்துவிட்டதாக வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாக ஐ.நா. பிரகடனம் செய்த கடந்த ஆகஸ்ட் 30 காணாமல்போனேரின் உறவினர்கள் சங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. அந்த ஏழு வருட காலத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களும் ஏனைய அரசியல் தலைவர்களும் எங்கே போனார்கள்? தீர்வு காணப்படாத இந்த பிரச்சினைகள் எல்லாம் போதாது என்று கடந்த ஒரு தசாப்த காலத்தில் தமிழர்களின் நிலங்கள் சிங்கள சமூகத்தவர்களினால் ஆக்கிரமிக்கப்படும் போக்கும் தீவிரமடைந்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசு அலட்சியம் செய்திருக்கிறது அல்லது அரச ஆதரவுடன் சிங்கள பௌத்த தீவிரவாதிகள் இந்த ஆக்கிரமிப்புகளுக்கு அனுசரணை செய்கிறார்கள். மன்னாரிலும் வடபகுதி கடல் பரப்பிலும் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பை தடுத்துநிறுத்த அரசாங்கம் அக்கறையுடன் நடவடிக்கை எடுக்காததால் நெருக்கடி தீவிரமடைந்திருக்கிறது. இடம்பெற்ற மோதல்களில் யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை, அவர்களின் பிரச்சினைகளும் மனக்குறைகளும் அதிகரிக்கின்றன. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கோ அல்லது வேறு எந்த அரசியல் தலைவருக்குமோ அவற்றைப் பற்றி அக்கறை கிடையாது. அரசியல் அலட்சியத்தின் விளைவுகள்: ———————————————— வெட்கக்கேடான இந்த அரசியல் அலட்சியத்தின் விளைவுகளை வடக்கு, கிழக்கு தேர்தல் முடிவுகளில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. ஜனாதிபதி தேர்தல்களில் சிங்கள தெற்கின் இரு பொது வேட்பாளர்களை ஆதரித்த பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு 2015 பாராளுமன்ற தேர்தலில் சமஷ்டி முறையின் அடிப்படையிலான தீர்வைக்காணும் உறுதிமொழியுடன் கூடிய விஞ்ஞாபனத்தை முன்வைத்து போட்டியிட்டது. கூட்டமைப்பில் இருந்து கூடுதல்பட்ச எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்யுமாறு அதன் தலைவர் இரா. சம்பந்தன் வடக்கு,கிழக்கு வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பெரிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்துடன் சமஷ்டித் தீர்வொன்றுக்கு உறுதியான ஆணையைத் தந்தால் தெரிவு செய்யப்படவிருந்த விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அனுகூலமாக இருக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கூறினார்கள். சமஷ்டித் தீர்வைப் பிரதான சுலோகமாகக் கொண்டு கூட்டமைப்பில் இருந்து 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள். பதிவுசெய்யப்பட்ட 884, 326 வாக்குகளில் மொத்தம் 470, 542 வாக்குகள் அவர்களுக்கு கிடைத்தன. 45 ஆயிரம் வாக்குகளுடன் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இருந்து ஒரேயொரு உறுப்பினர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார். தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் இருவருடன் சேர்த்து எல்லாமாக கூட்டமைப்பின் சார்பில் 16 உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றார்கள். ஒவ்வொரு பிரச்சினையிலும் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் பாதுகாக்கும் பிரமையுடன் செயற்பட்ட சம்பந்தன் — சுமந்திரன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மேலும் ஒரு ஐந்து வருடங்களை அதிகரித்துக் கொண்டிருந்த பிரச்சினைகளுடனும் வேதனையுடனும் தமிழ் மக்கள் கழித்தார்கள். மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அரசியல் அலட்சியத்துடன் செயற்பட்ட கூட்டமைப்பை 2020 ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் நிராகரித்தார்கள். தெரிவுசெய்யப்பட்ட முன்னைய 14 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐவரை இழந்த கூட்டமைப்புக்கு தேசியப் பட்டியல் மூலமும் ஒரேயொரு ஆசனமே கிடைத்தது. வேறு மூன்று தமிழ்க்கட்சிகளில் இருந்து நான்கு பேர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்தது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 327, 168 வாக்குகள் கிடைத்தன. 2020 ஆம் ஆண்டில் வாக்காளர்கள் தொகை பத்து இலட்சத்து 8 ஆயிரமாக அதிகரித்திருந்த போதிலும், 2015 தேர்தலில் கூட்டமைப்பு பெற்ற வாக்குளையும் விட இது 143, 374 வாக்குகள் குறைவானதாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டபோதிலும் அதன் மக்கள் ஆதரவின் சரிவைத் தடு்க்க முடியவில்லை. தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தின் பொறுப்பற்ற அரசியல் போக்கை மாற்று அரசியல் அணியொன்று சவாலுக்கு உட்படுத்தாத நிலையில், சம்பந்தன் — சுமந்திரன் தலைமைத்துவத்துக்கு ஒரு மாற்றாக இந்து சார்பு நகர்வொன்றின் மூலம் மாற்றம் பிரதிபலித்திருக்கிறது போன்று தோன்றுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெளியில் கூட “மக்கள் சார்பான” எந்தவொரு அரசியல் மாற்று அணியும் இருப்பதாக தெரியவுமில்லை. தமிழரசு கட்சிக்குள் நிலவும் தலைமைத்துவக் குழப்பத்தையும் தமிழ்ச் சமூகத்தில் மாற்று அரசியல் அணியான்று இல்லாத நிலையையும் அனுகூலமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்து தீவிரவாதம் செல்வாக்குப் பெறக்கூடிய ஆபத்து வெளிப்படையாகத் தெரிகிறது. இலங்கையில் இந்து மதம் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது என்றும் அதனால் நாட்டில் உள்ள இந்துக்களை ஓரணியில் திரட்டுவதற்காக ஜனாதிபதி தேர்தலில் இந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்றும் “சிவசேனை” என்ற உதிரி அமைப்பொன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தமிழரசு கட்சியின் சம்பந்தன் — சுமந்திரன் தலைமைத்துவம் தமிழ் மக்களை இரக்கமற்ற முறையில் அலட்சியம் செய்தமை அரசியல் மாற்று ஒன்று இல்லாமல் துடைத்தெறியக்கூடிய சிறிய ஒரு தவறு அல்ல. மதசார்பற்ற அரசியலை மதத்தீவிரவாதம் முந்திச்செல்வதற்கு முன்னதாக மிகவும் தீர்க்கமானதும் தெளிவான சிந்தனையுடன் கூடியதுமான அரசியல் தீர்மானம் ஒன்றை அது அவசரமாக வேண்டிநிற்கிறது. (பைனான்சியல் ரைம்ஸ்) https://arangamnews.com/?p=10677
-
ஆணைக்குழுக்களை அமைத்து ஈஸ்டா் தாக்குதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது – சரத் பொன்சேகா
ஆணைக்குழுக்களை அமைத்து ஈஸ்டா் தாக்குதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது – சரத் பொன்சேகா April 27, 2024 ஆணைக்குழுக்களை அமைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அதன்போது சரத் பொன்சேகா மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு 5 வருடங்களாகியுள்ளன. இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பேராயர் தனது வேதனையை வெளிப்படுத்தும் போது அவரை விமர்சிக்கின்றனர். அவ்வாறு நடக்கக் கூடாது. இதில் நீதி கிடைக்க வேண்டும். ஆணைக்குழுக்களை அமைத்து இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. பயங்கரவாதிகளை அவ்வாறான ஆணைக்குழுக்களால் அடையாளம் காண முடியாது. புலனாய்வு அதிகாரிகள் மற்றும் குற்றவியல் விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கே அதனை செய்ய வேண்டும். இது தொடர்பான பொறிமுறைகளும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுக்கே தெரியும். அதன்படி அவர்களை அதற்கு நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவத்தில் பிரதான நபரான சஹரானுக்கு யார் சம்பளம் கொடுத்து வளர்த்துள்ளனர். அவரை உருவாக்கியவர்கள் யார்? சலே என்பவரே அவரை வளர்த்துள்ளார். 2014ஆம் ஆண்டிலேயே சஹரான் தொடர்பில் தகவல்கள் வெளியாகிய போதும் அவரை கைது செய்ய முடியாது போயுள்ளது. தமது கடமைகளை தவறியவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். நாடு இந்த நிலைமைக்கு வர காரணமானவர்கள் யார்? பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். சம்பவத்திற்கு முன்னர் அது தொடர்பில் தகவல்கள் தெரிந்தும் அதனை தடுக்காது தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். எவ்வாறாயினும் எனக்கு அதிகாரம் கிடைக்குமாக இருந்தால் அந்த நபரை சட்டத்தின் முன்னால் கொண்டுவந்து தண்டனையை கொடுத்தே தீருவேன்” என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தாா். https://www.ilakku.org/ஆணைக்குழுக்களை-அமைத்து-ஈ/
-
வெடுக்குநாறிமலை பகுதியில் இரகசிய அகழ்வுப் பணி – கஜேந்திரன்
வெடுக்குநாறிமலை பகுதியில் இரகசிய அகழ்வுப் பணி – கஜேந்திரன் April 27, 2024 வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரதேசத்தில் தற்போது ரஜரட்ட பல்கலைக்கழகத்தை சார்ந்தவர்களால் இரகசியமான முறையில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுவதால் வரலாறு திரிவுபடுத்தப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரதேசத்தில் தற்போது ரஜரட்ட பல்கலைக்கழகத்தை சார்ந்தவர்களால் அகழ்வுப் பணியொன்று இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வரலாற்றை திரிபுபடுத்தும் நோக்கத்துடன் இந்த அகழ்வுப் பணி நடக்கின்றது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். வடக்கு, கிழக்கில் மூத்த பேராசிரியர்கள், தொல்லியல் சார்ந்தவர்கள் இருக்கின்ற போது அவர்கள் எவரையும் இந்தக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தாமல் இரகசியமான முறையில் அகழ்வுப் பணிகள் நடக்கின்றன . யுனெஸ்கோவின் கண்காணிப்பிலேயே இந்தப் பணிகள் நடக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம். இல்லையென்றால் குரூந்தூர் மலையை போன்று வரலாறு திரிபுபடுத்தப்படும் ஆபத்து இருக்கின்றது. இதனால் யுனெஸ்கோவின் கண்காணிப்பில் அகழ்வுப்பணி நடக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்” என்றார். https://www.ilakku.org/வெடுக்குநாறிமலை-பகுதியி/
-
இலங்கையில் மனித முக அமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி
இலங்கையில் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி Vhg ஏப்ரல் 27, 2024 இலங்கையில் மனித முக அமைப்பை கொண்ட ஆடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெனியாய, விஹாரஹேன செல்வகந்த பிரதேசத்திலேயே இந்த ஆடு பிறந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்ந்த ஆடு, இந்த குட்டியை ஈன்றுள்ளது. ஆட்டுக்குட்டி எவ்வாறாயினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.battinatham.com/2024/04/blog-post_113.html
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
படையெடுப்பை நெருக்கும் இஸ்ரேல் ரபா நகரின் மீது சரமாரித் தாக்குதல் எகிப்து உயர்மட்ட தூதுக்குழு இஸ்ரேல் விரைவு gayanApril 27, 2024 தெற்கு காசாவின் ரபா மீதான படையெடுப்புக்கான திட்டத்தை இஸ்ரேல் விரைவுபடுத்தி வரும் நிலையில் அந்த நகர் மீது தொடர்ச்சியாக செல் மற்றும் வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தனது நாட்டு எல்லையில் அமைந்திருக்கும் ரபா மீதான படை நடவடிக்கை பேரழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சும் எகிப்து புதிய போர் நிறுத்த முயற்சியாக உயர் பட்ட தூதுக்குழு ஒன்றை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது. காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீதான படையெடுப்புக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் வலுத்திருந்தபோதும் அங்கு தரைவழி நடவடிக்கைக்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. இதற்கான சமிக்ஞையாகவே அங்கு தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. ரபா நகர கடற்கரையில் வேலை செய்துகொண்டிருந்த மீனவர் ஒருவர், இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் ஒருவர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. காசா கடற்பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளை செயற்படுத்தி வரும் இஸ்ரேலினால் அங்குள்ள மீனவர்கள் தொடர்ந்து தொந்தரவுக்கு முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ‘நட்சரிட் இடைவழியில்’ செயற்படும் இஸ்ரேலிய படைகளை இலக்கு வைத்து பலஸ்தீன போராளிகள் கடந்த வியாழனன்று (25) மோட்டார் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக போர் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரபா மீதான படை நடவடிக்கைக்கு இஸ்ரேலிய படையினர் வெளிப்படையாக தயாராகி வரும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ரபா படையெடுப்பு தொடர்பில் சந்தேகங்கள் வலுத்து வரும் நிலையில் இஸ்ரேல் இரு மேலதிக படைப்பிரிவுகளை அழைத்திருப்பதோடு, ரபாவுக்கு அருகில் கான் யூனிஸ் நகரில் பாரிய அளவில் வரிசையாக கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பது செய்மதி படங்கள் காட்டுகின்றன. ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதற்கும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 133 பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் ரபா மீதான படை நடவடிக்கை அவசியம் என்று இஸ்ரேல் கூறி வருகிறது. எனினும் காசா விளிம்பில் உள்ள ரபா நகர் இடம்பெயர்ந்த மக்களின் கடைசி அடைக்கலமாக இருப்பதோடு அங்கிருந்து அவர்கள் எங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அவர்களை வெளியேற்றவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டபோதும் அது நடைமுறை சாத்தியமற்றது என்று ஐ.நா. அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் வடக்கில் காசா நகரில் உள்ள அல் ஷபா குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலை அடுத்து ஒரு குழந்தை மற்றும் பெண் ஒருவர் உட்பட மூவரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் காசா நகரில் இயங்கும் கடைசி மருத்துவமனையான அல் அஹ்லி அரபு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இஸ்ரேல் இராணுவம் நடத்திய பாரிய சுற்றிவளைப்பில் அங்குள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனை அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ரபா மீதான இஸ்ரேலின் படை நடவடிக்கை பேரழிவையும் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலையையும் ஏற்படுத்தும் என்று எச்சரித்திருக்கும் எகிப்து, உயர்மட்ட தூதுக்குழு ஒன்றை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது. இழுபறி நீடிக்கும் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் புதிய முயற்சியாக எகிப்து உளவுப் பிரிவு தலைவர் அப்பாஸ் கமால் தலைமையிலான குழு ஒன்றே இஸ்ரேல் விரைந்துள்ளது. இதில் ஹமாஸ் பிடியில் இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய கணிசமான எண்ணிக்கையான பலஸ்தீனர்கள் தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிப்பது தொடர்பிலேயே பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவிருப்பதாக எகிப்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. எனினும் முழுமையான போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய படை வாபஸ் பெறும் தமது நிபந்தனையில் இருந்து பின்வாங்கப்போதில்லை என்று ஹமாஸ் கூறி வருவதோடு அந்த நிபந்தனைகளை இஸ்ரேல் மறுத்து வருகிறது. ஹமாஸ் முழுமையாக தோற்கடிக்கப்படுவது மற்றும் அதன்பின் காசாவில் பாதுகாப்பு நிலைப்படுத்தப்படும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் கூறுகிறது. ரபாவையொட்டி இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், எகிப்துடனான காசா எல்லையில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்படுவதற்கு அதிருப்தியை வெளியிடவும் இஸ்ரேல் சென்றிருக்கு எகிப்து தூதுக் குழுவினர் திட்டமிட்டிருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. ரபாவில் உள்ள பலஸ்தீனர்கள் எல்லை கடந்து எகிப்துக்குள் வர அனுமதிக்கப்போதில்லை என்று எகிப்து ஏற்கனவே உறுதியாக குறிப்பிட்டுள்ளது. காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு எகிப்துடன் கட்டார் மற்றும் அமெரிக்கா மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. எனினும் ரபா மீதான படையெடுப்பு இந்த பேச்சுவார்த்தையை முறிக்கும் என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ‘ரபாவில் இஸ்ரேல் எதிர்பார்த்ததை அடையாது’ என்று மூத்த ஹமாஸ் அதிகாரியான காசி ஹமாத் தெரிவித்தார். ஏழு மாத போரில் ஹமாஸை ஒழிப்பது அல்லது பணயக்கைதிகளை விடுவிப்பது ஆகிய எந்த இலக்கையும் இஸ்ரேல் அடையவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். காசா போர் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்களுக்கு இடையில் மோதலை தூண்டி இருக்கும் சூழலில் அது பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வரும் நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று நடத்திய தாக்குதலில் பொதுமகன் ஒருவன் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. கபர் சுபா மலைப் பகுதியில் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகளை பயன்படுத்தி மேற்கொண்ட சிக்கலான அதிரடி தாக்குதலில் இரு இஸ்ரேலிய வாகனங்களை அழித்ததாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டது. இது தொடர்பில் இஸ்ரேல் நேரடியாக பதில் அளிக்கவில்லை. தெற்கு லெபனானில் ஷெபா கிராமத்தைச் சூழ ஹிஸ்புல்லா இலக்குகளை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியதாக அது குறிப்பிட்டது. இதில் பல வீடுகளும் சேதமடைந்திருப்பதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. காசாவில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா மோதல்களில் லெபனானில் குறைந்தது 380 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இதில் 252 ஹிஸ்புல்லா போராளிகளும் அடங்குவதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இந்தக் காலப்பகுதியில் 11 இஸ்ரேலிய படையினர் மற்றும் ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2024/04/27/world/56907/படையெடுப்பை-நெருக்கும்-இ/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
கிரிக்கெட் பேஸ்போல் ஆகிவிட்டது. இப்படி நாயடி, பேயடி பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கின்றது? 2021 இல் மைக்கேல் ஹோல்டிங் சொன்னது. இப்ப என்ன சொல்வார்? Michael Holding says IPL not cricket, asks ICC not to turn sport into soft-ball competition IANS / Updated: Jun 29, 2021, 11:00 IST NEW DELHI: Former West Indies pacer and commentator Michael Holdinghas cocked a snook at the Indian Premier League (IPL), terming it not quite cricket. "I only commentate on cricket," said Holding in an interview to Indian Express when asked the reason behind him not commentating at the cash-rich T20 league. https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/michael-holding-says-ipl-not-cricket-asks-icc-not-to-turn-sport-into-soft-ball/articleshow/83926601.cms#
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
வெள்ளை மாளிகைக்கு அருகில் பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 26 Apr, 2024 | 11:18 AM அமெரிக்காவில் வெள்ளைமாளிகைக்கு அருகில் அமெரிக்க மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக மாணவர்கள் வோசிங்டனில் ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழகத்திற்கு அருகில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். காசா யுத்தத்தின் மத்தியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் அமெரிக்க பல்கலைகழகங்கள் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களில் தங்களுக்கு உள்ள தொடர்பை முறித்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதற்காகவும் வோசிங்டனை சேர்ந்த மாணவர்களும் பேராசிரியர்களும் செயற்பாட்டாளர்களும் அங்குகுழுமியுள்ளனர். அமெரிக்காவின் ஏனைய பல்கலைகழகங்களை போல ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழகத்திலும் மாணவர்கள் வளாகத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழக மாணவர்களிற்கான எங்கள் ஆதரவை வெளிப்படுத்துவதற்காகவும் அமெரிக்காவின் ஏனைய பல்கலைகழக மாணவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காகவும் நாங்கள் இங்குவந்திருக்கின்றோம் என அனா வெசெல்ஸ் என்ற மாணவி அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகைக்கும்இராஜாங்க திணைக்களத்திற்கும் அருகில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. தலைநகரில் நாங்கள் எதனையாவது செய்யாவிட்டால் நாங்கள் எங்கள் தார்மீக கடப்பாடுகளை நிறைவேற்றவில்லை என்பதே அர்த்தம் என மாணவி வெசெல்ஸ் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181994
-
கடற்றொழிலை வலுப்படுத்தவும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஜப்பான்
கடற்றொழிலை வலுப்படுத்தவும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஜப்பான் 26 Apr, 2024 | 11:08 AM கடற்றொழில் அமைச்சுடன் இணைந்து உள்நாட்டு கடற்றொழில்துறையை வலுப்படுத்தவும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஜப்பானிய அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தை வழங்கியுள்ளது. 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உணவு மற்றும் போஷாக்கு பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன் மட்டக்களப்பு, முல்லைத்தீவு, அநுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சமூகத்தால் இயக்கப்படும் நான்கு சிறு குஞ்சு பொரிப்பகங்களை நிறுவி, ஐந்து NAQDA மீன்வளர்ப்பு அபிவிருத்தி நிலையங்களை மேம்படுத்தி, இனவிருத்தி மற்றும் வளர்ப்புத் திறனை அதிகரிக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்த்தேக்கங்களில் மீன்வளர்ப்புகளை அதிகரிக்கவும் நீர்த்தேக்கங்கள், இனப்பெருக்க அலகுகளுக்கு அடைகாக்கும் வளர்ப்பு மற்றும் மீனவ சமூகங்களிடையே முட்டை வளர்ப்பிற்கான கூண்டு வளர்ப்பு முறையை ஊக்குவித்தல். ஓராண்டுத் திட்டமானது NAQDA விற்கு மீன்குஞ்சுகளை ஏற்றிச் செல்வதற்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து உள்நாட்டு மீன்பிடித்தலுக்கும்ரூபவ் அதிகாரிகள் மற்றும் மீனவர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதற்கும் உற்பத்தி, முகாமைத்துவம், பதப்படுத்துதல் மற்றும் உள்நாட்டு மீன்வளத்தின் பெறுமதி சேர்த்தல் ஆகியவற்றிற்குமாக 3 நேரடி மீன் போக்குவரத்து லொறிகளை வழங்கும். ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி தனது உரையில், “ஜப்பானும் இலங்கையும் இரண்டு தீவு நாடுகளும் நமது பொருளாதாரங்கள் மற்றும் கலாசாரங்களில் மீன்வளத்தின் முக்கியத்துவத்திற்கான ஆழமான வேரூன்றிய பாராட்டைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த பகிரப்பட்ட முக்கியத்துவத்தை உணர்ந்து, ஜப்பான் 2023 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் மீன்பிடி அபிவிருத்திக்கு, குறிப்பாக கடல்சார் துறையில் ஆதரவளிப்பதற்கான தனது அர்ப்பணிப்பில் உறுதியாக உள்ளது. எமது தொடர்ச்சியான முயற்சிகளுடன் இந்த புதிய செயற்திட்டத்தை ஆரம்பித்ததன் மூலம், இலங்கையின் மீன்பிடித் துறையை வலுப்படுத்த ஜப்பான் உறுதிபூண்டுள்ளது. அதன் மூலம் உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் மேம்படும்ரூஙரழவ் என்று குறிப்பிட்டார். “இலங்கையின் உள்நாட்டு மீன்பிடித் துறையானது வரலாற்று ரீதியாக அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறது” என கடற்றொழில் அமைச்சராகிய டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். “இருப்பினும் சமீபத்திய நிதி சவால்கள் துறையில் தேவையான வளங்களை இழந்து, உள்நாட்டு மீனவ சமூகங்கள் மற்றும் கிராமப்புற மக்களிடையே கஷ்டங்களை அதிகப்படுத்தியுள்ளன. இந்தத் திட்டம் இத்துறையை புத்துயிர் பெறச் செய்வதற்கும் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் நிலையான நன்மைகளை உறுதி செய்வதற்கும் ஒரு முக்கிய படிமுறையாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார். சுமார் 3,000 உள்நாட்டு மீனவர்கள், சிறு குஞ்சு பொரிக்க வைத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள 40 விவசாயிகள் மற்றும் மீன் தீவனம் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற 20 விவசாயிகளுக்கு நேரடியாக ஆதரவளிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், குடும்ப உறுப்பினர்கள், நுகர்வோர், கருவாடு உற்பத்தியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் பங்குதாரர்கள் உட்பட மறைமுக பயனாளிகள் மீது இது நேர்மறையான தொடர் விளைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற கூட்டாண்மைகள் நிலையான அபிவிருத்தியை உந்துவதில் கூட்டு நடவடிக்கையின் தாக்கத்தை நிரூபிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையில், சமூகங்களுக்கு அதிகாரமளிக்கும் மற்றும் உள்நாட்டு மீன்பிடி போன்ற முக்கியமான துறைகளை வலுப்படுத்தும் ஒத்துழைப்புகளை வளர்ப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த திட்டத்தின் மூலம், நாங்கள் உணவு பாதுகாப்பை மட்டும் மேம்படுத்தவில்லை. கிராமப்புற வாழ்வாதாரங்கள், இலங்கையின் கிராமப்புற சமூகங்களுக்கு ஒரு நெகிழ்ச்சியான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நாங்கள் அமைத்து வருகிறோம் என்று இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃப்ரான்ச் கூறினார். உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிப்பதன் மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழிலின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது என்று இலங்கைக்கான குயுழு பிரதிநிதி விம்லேந்திர ஷரன் தெரிவித்தார். இந்தத் திட்டம் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாது கிராமப்புற சமூகங்களின், குறிப்பாக உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, மீளெழுச்சியை வலுப்படுத்துவதும் ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்த்தேக்கங்களில் தன்னிறைவான வளர்ப்புமுறை சார்ந்த மீன்வளத்தை மேம்படுத்துவது வெறுமனே தேவையானது மட்டுமன்றிரூபவ் இச்சமூகங்களின் மேம்பாட்டிற்கு இது இன்றியமையாததாகும். இலங்கையின் கிராமப்புற சமூகங்களில் உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் மீளெழுச்சி ஆகியவற்றில் நீடித்த நேர்மறையான தாக்கங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டில் குயுழு உறுதியாக உள்ளது. https://www.virakesari.lk/article/181996
-
ஏ9 வீதியில் விபத்து – இராணுவ சிப்பாய் பலி ! 9 பேர் காயம் !
ஏ9 வீதியில் விபத்து – இராணுவ சிப்பாய் பலி ! 9 பேர் காயம்! முல்லைத்தீவு – முறிகண்டி ஏ9 வீதியில் இன்று (26) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் 9 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த லொறி ஒன்றும் முறிகண்டி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்குச் சென்ற கெப் ரக வாகனமும் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்த 39 வயதுடைய இராணுவ சிப்பாயின் சடலம், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில், மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://thinakkural.lk/article/300269
-
நடக்கப்போவது என்ன தேர்தல்?
நடக்கப்போவது என்ன தேர்தல்? எம்.எஸ்.எம். ஐயூப் நாட்டில் முதலில் நடக்கப்போவது ஜனாதிபதித் தேர்தலா பொதுத்தேர்தலா என கயிறுழுப்பு ஒரு புறம் நடந்து கொண்டிருக்க மறுபுறத்தால் மீண்டும் நாட்டிலும் ஆட்சியிலும் ராஜபக்ஷ குடும்பத்தின் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கான திரை மறைவு வேலைகள் தீவிரம் பெற்று வருகின்றன. மொட்டை மீண்டும் மலர வைத்து ராஜபக்ஷ குடும்பத்தை மீண்டும் ஆட்சி பீடமேற்ற தற்போது மீண்டும் நாடு திரும்பியுள்ளார் 7 மூளைக்காரரான பசில் ராஜபக்ஷ. தேர்தல் மேகங்கள் கருக்கட்டியுள்ள நிலையில், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியுள்ளதால், தங்களின் ஆட்சியை மீள உருவாக்க முடியும், அதிகாரங்களை மீளப்பெற முடியும் என்று பொதுஜன பெரமுனவில் குறிப்பிட்டளவான அரசியல்வாதிகள் குதூகலித்து பசில் ராஜபக்ஷவின் மீள் வருகையைக் கொண்டாடுகின்றனர். 7 மூளைக்காரரென மொட்டுத் தரப்பினரால் கொண்டாடப்படும் பசில் ராஜபக்ஷவினால் மீண்டும் ராஜபக்ஷ சகோதரர்களை ஆட்சி அரியணையில் ஏற்ற முடியுமா? கருகிய மொட்டை மீண்டும் மலர வைக்க முடியுமா என்பதே இன்று பலரினதும் கேள்வியாகவும் சந்தேகமாகவும் உள்ளது. இதற்கான விடையை அறிய வேண்டுமானால் சில வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும். இலங்கையில் கடந்த 2005ஆம் ஆண்டு ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சி மலர்ந்தது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார். பின்னர் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் தடவையாகவும் வெற்றி பெற்று ஜனாதிபதியானார். மூன்றாவது தடவையாக 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தனது அரசில் அமைச்சராக இருந்தவரான எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வி கண்டதால் 2015ஆம் ஆண்டு ஜனவரி 9இல் ராஜபக்ஷ குடும்பத்தின் முதல் கட்ட ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. இதனால் அடிபட்ட பாம்பாகச் சீறிக்கொண்டிருந்த ராஜபக்ஷ சகோதரர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, அரியணையில் ஏற இனவாத ஆயுதத்தை கையில் எடுத்தனர். இதன் பெறுபேறாக மீண்டும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தனது சகோதரரான பசில் ராஜபக்ஷவை நிறுவனராகக் கொண்ட பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு ஜனாதிபதியானார். இதன் மூலம் மீண்டும் ராஜபக்ஷ சகோதரர்கள் அரியணை ஏறினர். 2019ஆம் ஆண்டு இறுதியிலிருந்து, தம்பி கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதி, அவரின் அண்ணனான மஹிந்த ராஜபக்ஷ பிரதமர், அடுத்த அண்ணனான சமல் ராஜபக்ஷ அமைச்சர், பிரதமர் அண்ணனின் மகனான நாமல் ராஜபக்ஷ அமைச்சர், அமைச்சர் அண்ணனின் மகனான சஷீந்திர ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சர், சகோதரியின் மகனான நிபுண ரணவக்க பாராளுமன்ற உறுப்பினர் என்று ராஜபக்ஷ குடும்பமே நாட்டை ஆளத் தொடங்கியது. 2005, 2010. 2019 ஜனாதிபதித் தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டபாய ராஜபக்ஷவும் ஜனாதிபதிகளாக வெற்றிபெற பல தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபட்டவர் ராஜபக்ஷ சகோதரர்களில் ஒருவரான பசில் ராஜபக்ஷ. இதனால்தான் அவரை அரச தரப்பினர் ‘7 மூளைக்காரர்’ என அழைத்துக் கொண்டாடினர். ராஜபக்ஷ குடும்பத்தை ஆட்சி அரியணையில் ஏற்றிய பசில் ராஜபக்ஷவினால் அந்த குடும்ப அரசில் கோலோச்ச முடியாத நிலை சட்ட சிக்கல்களினால் ஏற்பட்டிருந்தது. 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை மகிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் பொருளாதார அபிவிருத்திக்கான அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ பதவியேற்ற ஆரம்பத்தில் அரசில் இருக்கவில்லை. இவ்வாறான நிலையில்தான், கோட்டபாய ராஜபக்ஷவின் தவறான கொள்கை, அரசியல் அறிவின்மை காரணமாக ஆட்சியும் நாடும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தது. இதற்காகவே காத்திருந்த 7 மூளைக்கா ரரான பசில் ராஜபக்ஷ தனது விசுவாச அமைச்சர்கள், எம்.பிக்களை தன்னை தேசியப் பட்டியல் ஊடாக எம்.பியாக்குமாறு அழுத்தங்களை கொடுங்கள் என உசுப்பி விட்டார். இதனையடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடிகளைத் தீர்க்க வேண்டுமானால் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வந்து மீண்டும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்க வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன. பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக்க கோரி, ஆளும் கட்சியின் 113 எம்.பிக்கள் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்தனர். அதேவேளை, தேசியப் பட்டியலில் பெயரில்லாத, மாவட்டப் பட்டியலில் பெயரில்லாத ஒருவர் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு பிரவேசம் செய்வதானது அரசியலமைப்புக்கு முரண் இதனைவிடவும், இறுதியாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது, பசில் ராஜபக்ஷ இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்தமையால் அவ்வாறு நியமிக்கப்படுவதானது அரசியலமைப்புக்கு முரணானதென்ற எதிர்ப்பு எதிர்க்கட்சிகள் சட்ட நிபுணர்களிடம் இருந்து எழுந்தன. பசில் ராஜபக்ஷ அமைச்சரானால் தான் நாட்டையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியும் என்ற திட்டமிட்ட பிரசாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதால் மக்களும் நம்பத் தொடங்கினர். இதனைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்ப்புக்களையெல்லாம் மீறி நாட்டை, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜயந்த கோட்டேகொட எம்.பி. பதவி விலக அதனூடாக 7 மூளைக்காரரான பசில் ராஜபக்ஷ எம்.பியாக்கப்பட்டு, நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், இவரது நிதி அமைச்சுப் பதவிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான நிர்வாகத்தின் காரணமாகவே நாடு கடனில் மூழ்கியது. ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடின. வரலாறு காணாத பெரும் பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டு வரிசை யுகம் ஏற்பட்டு மக்கள் வாழ்வதற்காகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்ல, அரசின் பங்காளிக் கட்சிகளுடனும் பசில் ராஜபக்ஷ நல்லுறவு வைத்திருக்கவில்லை. பங்காளிக் கட்சிகளை இல்லாதொழித்து, ஒரே கட்சியாகப் பெரமுனவை வளர்த்தெடுத்து அதன்மூலம், பங்காளிக் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னை நிலைப்படுத்துவதே அவரின் திட்டமாக இருந்தது. இதனால் பங்காளிக் கட்சிகளுக்கு எதிராக பசில் ராஜபக்ஷ எடுத்த சில நடவடிக்கைகள் காரணமாக கோட்டபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பங்காளிக் கட்சிகள் அரசிலிருந்து வெளியேறின. இதனால் கோட்டபாய ராஜபக்ஷ அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அத்துடன், வரிசை யுகத்தினால் மக்களும் பொறுமையிழந்து கிளர்ச்சியில் ஈடுபட்டதனால் ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டபாய ராஜபக்ஷவும் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவும் விரட்டியடிக்கப்பட்டனர். அதுமட்டுமல்ல, நிதி அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்து பின்னர் எம்.பி. பதவியிலிருந்து பசில் ராஜபக்ஷவும் விலகவும் நேரிட்டதுடன், நாட்டிலிருந்து பின்கதவு வழியாக அமெரிக்காவுக்கும் தப்பிச் சென்றார். அத்துடன், இந்த 7 மூளைக்காரரான பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்களைத்தான் உயர் நீதிமன்றமும் ‘‘பொருளாதார படுகொலையாளிகள்’’ என அண்மையில் அறிவித்துள்ளது. இவ்வாறு நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அழிவை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவராக இருந்து விட்டு, மக்கள் கிளர்ச்சியை அடுத்து, பின் கதவால் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தயவால் முன் கதவால் நாடு திரும்பியுள்ள பசில் ராஜபக்ஷ தான் நாட்டையும் பொருளாதாரத்தையும் காக்கப்போகும் காவலனாக மொட்டுக்கட்சியினர் ஊதிப் பெருப்பித்துக் கொண்டிருக்கின்றனர். பசில் ராஜபக்ஷவும் நாடு திரும்பியது முதல் தேர்தல்கள் தொடர்பில் தீவிர செலுத்தி வருவதுடன், ஊடகங்களை வரவழைத்துப் பரபரப்பு பேட்டிகளையும் வழங்கி, மொட்டு மீண்டும் மலர்கின்றது. என்றவொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார். ஆனால், மக்கள் கடந்த காலத்தை மறக்கும் மறதி நோய்க்கு உட்படாதவரை மொட்டு மீண்டும் மலராது. இது ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் நன்கு தெரியும் என்பதனால், கடந்த காலத்தை மக்களை மறக்க வைப்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் கற்றுக்கொண்ட பாடம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நடக்கப்போவது-என்ன-தேர்தல்/91-336329