Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தமிழரசுக் கட்சியை அக்கட்சிக்காரர்களிடமிருந்தே காப்பாற்றுவது யார்? சில மாதங்களுக்கு முன்பு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பசுபதிப்பிள்ளை நினைவு நாள் கிளிநொச்சியில் அனுஷ்டிக்கப்பட்டடது. அதில் நினைவுரை ஆற்றிய இக்கட்டுரையாசிரியர் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். இரண்டு தேர்தல்கள் நடந்தால் அவை தமிழ் மக்களின் தோல்வியை வெளிக் கொண்டுவரும் என்று. ஒன்று, தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் தேர்தல். இரண்டாவது,மாகாண சபைத் தேர்தல். அண்மையில், தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தல் தமிழ் அரசியலின் சீரழிவை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அரசியல் விமர்சகர் ஜோதிலிங்கம் கூறுவதுபோல,தமிழ்மக்கள் மத்தியில் கட்சிகள் கிடையாது, தேர்தலில் வாக்குக் கேட்கும் குழுக்கள்தான் உண்டு என்பது சரியா?ஏனென்றால் கட்சிகளுக்குரிய கட்டுக்கோப்பு; யாப்பு; கூட்டுப் பொறுப்பு என்பன இருந்திருந்தால் பொதுச் செயலாளர் தெரிவில் அப்படி ஒரு குழப்பம் நடந்திருக்காது. அந்தக் குழப்பம் பின்வரும் விடயங்களை நமக்கு உணர்த்துகின்றது. முதலாவது, தமிழரசுக் கட்சி ஒரு கட்டுக்கோப்பான கட்டமைப்பாக இல்லை. அது சிதைந்து போய்விட்டது. ஒரு பொது முடிவை எடுக்க முடியாத அளவுக்கு கட்சி அதன் கூட்டுணர்வை இழந்துவிட்டது. இரண்டாவது, சிறீதரனின் தலைமைத்துவத்தை அவருடைய எதிரணி ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. அதாவது தொகுத்துப் பார்த்தால் தமிழரசுக் கட்சி தலைவருக்கான தேர்தலோடு இரண்டாகி நிற்கின்றது. ஆனால் இதுவிடயத்தில் தமிழரசுக் கட்சியின் சீத்துவக்கேட்டை விமர்சிக்கும் ஏனைய கட்சிகள் மட்டும் ஜனநாயகக் கட்டமைப்பாக உள்ளனவா? அங்கேயும் பரம்பரைத் தலைவர்கள்; கேள்விக்கிடமற்ற நிரந்தரத் தலைவர்கள் என்ற ஏற்பாடுகள்தானே உண்டு ? கட்சி மாநாடுகள் வைக்கிறார்கள். ஆனால் திரும்பத் திரும்ப ஒருவரே தலைவராகத் தெரிவு செய்யப்படலாமென்றால் அதன் பொருள் என்ன? கட்சிக்குள் வேறு தலைவர்கள் வரவில்லை என்பதா? அல்லது இருக்கின்ற தலைவர் கடவுளா? எனவே தமிழரசுக் கட்சியை விமர்சிக்கும் யோக்கியதை ஏனைய கட்சிகளுக்கு கிடையாது. தமிழரசுக் கட்சியைப் பின்பற்றி ஏனைய கட்சிகளும் தமது உயர்மட்டப் பொறுப்புகளை தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். உட்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்கவில்லையென்றால், தமிழ் அரசியலின் ஜனநாயக இதயத்தைப் பலப்படுத்த முடியாது. தமிழ் அரசியலின் ஜனநாயக இதயத்தைப் பலப்படுத்தவில்லையென்றால் தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்த முடியாது. ஏனென்றால், தேசியத்தின் இதயம் ஜனநாயகம்தான். தேசியவாதம் தொடர்பான மேற்கத்திய அறிஞர்களின் மேற்கோள்களின்படி, தேசியவாதத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்க வேண்டும். கட்சிகளுக்குள் ஜனநாயகம் இல்லையென்றால், அவை தங்களைத் தேசியக்கட்சிகள் என்று கூறிக் கொள்வதில் பொருள் இல்லை. எனவே தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தல் எல்லா விதமான விமர்சனங்களோடும் முற்போக்கானது. அது ஜனநாயகத்தின் மீது கொண்ட நம்பிக்கையால்,அல்லது கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகம் செழித்தோங்கியிருக்கிறது என்பதற்காக நடத்தப்பட்ட ஒரு தேர்தல் அல்ல. கட்சிக்குள் ஜனநாயகமே இல்லை;கூட்டு முடிவுகள் எடுக்கப்படுவதில்லை; தனியோட்டங்கள்தான் உண்டு; சுமந்திரனும் சம்பந்தரும் தங்களுக்கு இடையே பேசி முடிவுகளை எடுத்தார்கள்; சுமந்திரன் யாரையும் பொருட்படுத்தாமல் தனியோட்டம் ஓடினார்; என்ற குற்றச்சாட்டுக்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. ஆனால் சுமந்திரன் கூறுகிறார், கூட்டுப் பொறுப்பு என்று கூறி ஏனைய கட்சி முக்கியஸ்தர்களையும் அழைத்துக்கொண்டு சந்திப்புகளுக்குச் சென்றால், சந்திப்பு முடிவதற்கு இடையில் ஊடகங்களுக்குத் தகவல்கள் கசிய விடப்படுகின்றன என்று. அதாவது கட்சியின் முக்கியஸ்தர்கள் கூட்டுப் பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை என்று.அவ்வாறு கட்சியின் கூட்டுப் பொறுப்பை சிதைத்தமைக்கு அவருடைய தனி ஓட்டங்கள்தான் காரணம் என்று கட்சியின் மேல்மட்ட உறுப்பினர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு கட்சிக்குள் ஜனநாயகம் சிதைந்து போயிருந்த ஒரு காலகட்டத்தில், தலைமைப் பொறுப்புக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைமைகளை சுமந்திரனை உருவாக்கினார். அவர் அதை உருவாக்கக் காரணம் கட்சிக்குள் ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவா? அல்லது கதிரைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் சம்பந்தரையும் மாவையும் கதிரைகளை விட்டு அகற்ற வேண்டும் என்பதற்காகவா? நடப்பு நிலைமைகளைத் தொகுத்துப்பார்த்தால், இருவரையும் கதிரைகளை விட்டு அகற்றுவதற்காகத்தான் சுமந்திரன் ஒரு தேர்தலை நோக்கி நிலைமைகளை நகர்த்தினார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு தேர்தல் நடந்தால் அதில்,தான் வெல்வேன் என்று அவர் உறுதியாக நம்பினார். அதற்குரிய வேலைகளை அவர் ஏற்கனவே செய்துவிட்டார். எனவே,வெற்றி நிச்சயம் என்று நம்பியபடியால்தான் அவர் தேர்தலை நோக்கி நிலைமைகளை நகர்த்தினார். தனக்கு வெற்றி நிச்சயம் என்பதனால்,கட்சியை ஒரேடியாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று அவர் நம்பினார். ஆனால் சிறீதரன் தொடக்கத்திலிருந்து நம்பிக்கை தளராமல் உழைத்தார். கடைசிக் கட்டத்தில் தளம்பிக் கொண்டிருந்த வாக்காளர்கள் தமிழ்த் தேசிய உணர்வுக்குப் பயந்து விட்டார்கள். தமிழ்த் தேசிய உணர்வின் அடிப்படையில் சிறீதரன் வெல்லலாம் என்ற சந்தேகத்தில், தளம்பிக் கொண்டிருந்த வாக்காளர்கள் சுமந்திரனுக்கு எதிராக முடிவெடுத்தார்கள். வீட்டுச் சின்னத்துக்கு விழும் வாக்குகள் ஒரு கூட்டுணர்வின் அடிப்படையில் விழும் வாக்குகளே. அக்கூட்டுணர்வுதான் தமது ஆதரவுத் தளம் என்று நம்பும் அரசியல்வாதிகள் அதற்குப் பயப்படுவார்கள். ஆனால் அதற்காக, அதை ஒரு முழுமையான கொள்கை வெற்றியாக வியாக்கியானம் செய்யத் தேவையில்லை. குறிப்பாக இது கட்சிக்குள் நடந்த தேர்தல். இதில் பங்குபற்றியவர்கள் அரசியல்வாதிகள். பொதுமக்கள் அல்ல. அதாவது அரசியல் விலங்குகள். அரசியல் விலங்குகள் கொள்கைக்கு உண்மையாக இருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்யத் தேவையில்லை. அது சுமந்திரன் எதிர்பாராத தோல்வி.அவருடைய ஆதரவுத் தளம் நலன்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டது. கட்சிக்குள் நுழைந்ததிலிருந்து அவர் எப்பொழுதும் ஒரு “கிங்மேக்கராகவோ” அல்லது பட்டத்து இளவரசனாகவோதான் தன்னைக் கட்டமைத்துக் கொண்டார். அதற்கு சம்பந்தரும் ஆதரவு. கட்சிக்குள் இரண்டாம் மூன்றாம் நிலைகளில் இருப்பதற்கு அவர் பழக்கப்படவில்லை. தோற்கடிக்கப்பட்ட பின் அவரைப் பொறுத்தவரை அவரைவிடத் தகுதி குறைந்தவர் என்று அவர் கருதிய சிறீதரனின் கீழ் அவர் செயற்பட வேண்டியுள்ளது. அதற்கு அவருடைய “ஈகோ” இடம் கொடுக்குமா? மேலும் இத்தோல்வியானது,அவருடைய எதிர்காலத் தேர்தல் தோல்விகளையும் தீர்மானிக்ககூடும். அப்படிப்பட்டதோர் சூழலில்,அவர் தேசியப் பட்டியல் ஆசனத்தைக் குறி வைக்கக்கூடும். அதற்கு செயலாளர் அவருடைய ஆளாக இருக்க வேண்டும். அதனால்தான் தன்னைச் செயலாளராக நியமிக்கக் கேட்டிருக்கிறார். அது நடக்கக்கூடிய காரியம் இல்லையென்று அவருக்கே தெரியும். ஆனால் அதன்மூலம் கிழக்கில் உள்ள தன்னுடைய ஆளை செயலாளராக நியமிக்குமாறு நிர்பந்திக்கலாம் என்பதை அவர் சரியாகவே கணித்திருந்தார். இது அவர் எதிர்காலத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கைப்பற்றுவதற்கான முஸ்தீபு. அதாவது சுமந்திரன் கட்சிக்குள் தொடர்ந்தும் தனது முதன்மையைத் தக்கவைக்க முற்படுகிறார் என்று பொருள். அவர் சிறிதரனுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில் அது தெரிகிறது. கடிதம் எழுத வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? சிறிதரனோடு அதை நேரடியாக காதும் காதும் வைத்ததுபோல ஏன் பேச முடியவில்லை? அது இருவரும் தூரமாக இருப்பதைக் காட்டுகின்றதா? அதனை பகிரங்கப்படுத்துவதன்மூலமும்,அதை எழுத்தில் முன்வைப்பதன்மூலமும், குறிப்பாக கடிதத்தில் சில சட்ட நுணுக்கங்களைச் சுட்டிக்காட்டுவதன் மூலமும் எதிர்காலத்தில் சிறீதரனின் அணிக்கு எதிராகச் சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற மிரட்டல் அங்கே உண்டா? கட்சிக்குள் தன்னுடைய முக்கியத்துவத்தைத் தக்கவைக்க முடியவில்லை என்றால் அவர் கட்சிக்கு வெளியே போவாரா? ஒரு புதிய கட்சியை உருவாக்குவாரா? அதாவது தமிழரசுக் கட்சி உடையுமா? சுமந்திரன் ஒரு “கிங் மேக்கர்”தான். ஒரு “கிங்கைப்”போல ஒரு புதிய கட்சியைக் கட்டியெழுப்புவாரா? ஆனால் செயலாளர் தெரிவில் ஏற்பட்ட குழப்பம் மக்கள் மத்தியில் சுமந்திரனுக்குப் பாதகமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கின்றது. சுமந்திரன் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து அளாப்புகிறார் என்ற அபிப்பிராயம் மேலெழுந்திருக்கிறது. அவர் சிறீதரனுக்கு எழுதிய கடிதம் சாதாரண மக்களை அதிகம் சென்றடையாது. அரசியல் ஈடுபாடுடைய; அரசியல் கட்டுரைகளை வாசிக்கின்றவர்கள் மத்தியில் அதற்கு ஒரு கவனிப்பு இருக்கும். ஆனால் சாதாரண வாக்காளர்கள் சுமந்திரனை ஓர் அளாப்பியாகத்தான் பார்க்கிறார்கள். சிறீதரனைப் பொறுத்தவரை அவர் பழைய கூட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் ஏனைய கட்சிகளை ஒருங்கிணைக்க முன்பு அவர் தன்னுடைய சொந்தக் கட்சிக்குள் தன்னுடைய நிலையைப் பலப்படுத்தி கட்சியை ஒரு கட்டிறுக்கமான நிறுவனமாகக் கட்டியெழுப்ப வேண்டியவராகக் காணப்படுகிறார். கட்சி இரண்டாக உடைவதைத் தடுப்பதென்றால் இப்போதைக்கு சுமந்திரன் அணியை அனுசரித்துப் போகவேண்டும். கடந்த சில தசாப்தங்களுக்குள் தென்னிலங்கையில் இரண்டு பாரம்பரியக் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏற்கனவே சிதைந்து விட்டன. அது ஈழப் போரின் நேரடி விளைவு. ஆனால் தமிழ்மக்கள் மத்தியில் ஈழப் போரின் நேரடி விளைவாக இரண்டு பாரம்பரிய கட்சிகளும் இப்பொழுதும் அரங்கில் நிற்கின்றன.அவை பண்புருமாற்றத்துக்குத் தயாரா? பல ஆண்டுகளுக்கு முன் தமிழகம்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் யாழ்ப்பாணம் வந்திருந்தபொழுது தனிப்பட்ட சந்திப்பின்போது இக்கட்டுரை ஆசிரியரிடம் சொன்னார்…”உங்களுடைய தலைவர்களில் பலர் தீர்ந்துபோன சக்திகள்-spent forces-என்று”.தீர்ந்துபோன சக்திகளை வைத்துக்கொண்டு கட்சிகளைப் புதுப்பிக்கலாமா ? பல தசாப்தங்களுக்கு முன்பு செல்வநாயகம் சொன்னார்…தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று.ஆனால் இப்பொழுது அவருடைய கட்சியை அவருடைய கட்சிக்காரரிடம் இருந்தே காப்பாற்றுவது எப்படி? https://www.nillanthan.com/6511/
  2. விஜய் அரசியலுக்கு பின்னணியில் பாஜகவா? தமிழக வெற்றிக் கழகமாம்! கட்சியின் பெயரிலேயே ஒரு செய்தி இருக்க வேண்டாமா? விஜய் அரசியலில் இறங்குகிறாரா? அல்லது இறக்கப்படுகிறாரா? ஆனால், அரசியலில் ஈடுபடுவதற்கான அடிப்படைத் தகுதிகள் விஜய்க்கு இருக்கிறதா? அவருடைய வருகையால் பயன் யாருக்கு? பாதிப்புகள் யாருக்கு? அதென்ன தமிழகம்? தமிழ்நாடு என ஏன் குறிப்பிட முடியவில்லை..? குறிப்பிட்டால் உங்க பின்னணியில் இருப்பவர்களுக்கு பிடிக்காதோ..? ஆனால், ஒன்று! இது சரியான தருணம் தான்! அவரே குறிப்பிடுவதைப் போல மக்கள் ஒரு நல்ல அரசியல் கட்சிக்கு காத்திருக்கின்றனர் என்பது உண்மை தான்! விஜய் தன் அறிக்கையில், தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.’’ எனக் கூறியுள்ளார்! ஐயா விஜய் அவர்களே, உங்களால் இப்படி எல்லாம் சிந்திக்க முடிகிறதா? அல்லது யாரேனும் இதை எழுதி தந்தார்களா? ஏனென்றால், இது வரையிலான உங்கள் கனத்த மெளனம் அல்லது கள்ள மெளனம் சொல்லிய செய்திகள் வேறல்லவா? விஜய் தன் அறிக்கையில் என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும்.என்கிறார். ஆனால், தன் தாய், தகப்பனிடம் இருந்தே அண்மை காலமாக அவர் விலகி உள்ளார்! சாதராணமான பேச்சுவார்த்தை கூட இல்லாத நிலை! அவருடைய அரசியல் அவரது குடும்பத்தையே பிளந்துள்ளது. அரசியலில் ஈடுபட சில அடிப்படை பண்புகள் வேண்டும். அது தங்களிடம் இருக்கிறதா விஜய் அவர்களே? # முதலாவது துணிச்சல்! # இரண்டாவது யார் எதிரி? யார் நண்பன் என்ற தெளிவு! # மூன்றாவது வெளிப்படைத் தன்மை! இது தான் பாதை! இது தான் பயணம் எனச் சொல்ல வேண்டும். # நான்காவது நாட்டு நிலவரங்களில் ஒரு தொடர்ச்சியான அக்கறையும், அதனை ஒட்டி அபிப்ராயமும் வெளிப்பட வேண்டும். # ஐந்தாவது மக்கள் செல்வாக்கு! மேற்படி ஐந்து அம்சங்களில் கடைசி ஒன்றில் மட்டும் தான் அபரிதமான மதிப்பெண் பெறுகிறார்! மற்ற நான்கிலும் அவருக்கு என்ன மதிபெண் போடலாம் என பார்க்கலாமா..? துணிச்சல்: எம்.ஜி.ஆர் அரசியல் கட்சி ஆரம்பிச்ச போது கருணாநிதி தான் தன் பிரதான எதிரி என ஒரு பலமான எதிரியோடு மோதினார்! அவருடைய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை திரையிடவிடாமல் தடுத்தனர். பிலிம் ரோலை எரிக்கப் பார்த்தனர். எம்.ஜி.ஆர் தொண்டர்கள் ஆங்காங்கே திமுகவினரால் தாக்கப்பட்டனர். எம்.ஜி.ஆர், ‘மலையாளி’ என்றும், ‘அறிவில்லாதவர்’ எனவும் அவமானப்படுத்தப்பட்டார். எல்லாவற்றையும் எதிர்கொண்டு தான் எம்.ஜி.ஆர் முன்னேறினார்! ஆனா, விஜய்யின் துணிச்சல் பற்றி சொல்ல வேண்டும் என்றால், 2002-20011 திமுக ஆட்சி காலத்தில் சன்பிக்சர்ஸ் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் உங்கள் காவலன் படம் பாதிக்கப்பட்ட போது அமைதி காத்தீர்கள். 2011 தேர்தலில் ஜெயலலிதா கேட்காமலே அதிமுகவிற்கு ஆதரவு தந்து, அதிமுக வெற்றி பெற்ற பின், ”அந்த வெற்றியில் அணிலாய் என் பங்களிப்பும் இருந்தது” என சொன்னதற்காக ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்ட போதும், அமைதி காத்தீர்! தலைவா படத்தில் டைம் டூ லீட் என்ற வாசகத்தை பேனரில் வைத்தீர்கள்! படத்தை திரையிட ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. தியேட்டர்காரர்கள் பயந்தனர்! நீங்க கொட நாடு ஓடிச் சென்று கும்பீடு போட்டு ஜெயலலிதா காலில் விழப் போனீரீர்கள். ஜெயலலிதா பார்க்கவே விரும்பாத நிலையில் அவமானப்பட்டு திரும்பி வந்து அம்மா அவர்கள் தலைவா படம் வெளியீட்டிற்கு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, பேனரில் உள்ள வாசகத்தை அகற்றி படத்தை வெளியிட்டீர்கள்! உங்கள் கருத்து சுதந்திரத்தை காக்கவே நீங்கள் போராடவில்லையே! சர்க்கார் படத்தில் ஜி.எஸ்.டி பற்றி துணிச்சலாக வசனம் பேசினீர்கள்! பாஜகவினரின் கோபத்திற்கு ஆளானீர்கள்! ஹெச்.ராஜா போன்றவர்கள் உங்களின் கிறிஸ்த்துவ குடும்ப பின்னணியை இழிவுபடுத்தி பேசினர். ரெய்டுகள் நடத்தப்பட்டன! அதை சமாளிக்க மோடியை நேரில் சந்தித்தீர்கள். அதன் பிறகு கப்சிப் தான்! மோடியிடம் பேசப்பட்டது என்ன? அதன் பிறகு பாஜக தரப்பில் உங்களுக்கு இணக்கம் ஏற்பட்டது எவ்வாறு? தினமலர் உள்ளிட்ட இந்துத்துவ பத்திரிகைகள் உங்களை மிக மென்மையாக கையாளுவதன் ரகசியம் என்ன? உங்கள் தந்தையை விலக்கி வைக்கச் சொல்லி உங்களை நிர்பந்தித்தது யார்? யார் எதிரி? யார் நண்பன்? மோடியும் நண்பர், ஸ்டாலினும் நண்பர், எடப்பாடியும் எதிரியல்ல..என்கிற ரீதியான அரசியல் தான் விஜய் அரசியலாக உள்ளது! காரணம், தெளிவான கொள்கை இல்லை! மதவெறி அரசியல் கூடாது என்றால், பாஜக தான் எதிரி! ஊழல், குடும்ப அரசியல் கூடாது என்றால் திமுக எதிரி! அதிமுகவும் ஊழல் கட்சி என்பதால் எதிரி தான்! சாதி அரசியல் கூடாது என்றால், பாமக, கொ.ம.க ஆகியவை எதிரி! எதிரியைத் தீர்மானிக்காமல் அரசியல் செய்ய முடியாது. நாட்டு நிலவரங்களில் அக்கறை; 2009 லேயே ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டீர்கள். எனவே, மக்களை பாதிக்கும் விவகாரங்களில் உங்கள் கருத்தை நீங்கள் தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் இது வரை உங்கள் எதிரி யார் எனச் சொல்லவேயில்லை. தமிழ் நாட்டில் சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது! இளைஞர்கள், பிஞ்சு மாணவர்கள் கூட மது பழக்கத்தில் சீரழிகின்றனர்! தமிழக ஆட்சியாளர்களின் பேராசை இதற்கு பின்புலம். நீங்கள் இது வரை இது குறித்து கவலைப்பட்டு உள்ளீர்களா? ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் இங்கு ஓட்டுக்கு பணப்பட்டுவாடா கனஜோராக நடக்கிறது. ”பணத்தை வாங்காதீர்கள்…” என்று உரத்து உங்கள் குரல் ஒலித்திருக்க வேண்டாமா? தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலை சூறையாடிய நிலையில்,மக்கள் அமைதி போராட்டம் நடத்தும் போது குருவி போல் சுட்டுக் கொல்ல்லப்பட்டனர். நீங்கள் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றினீர்கள்? சினிமாவில் சுற்றுச் சூழல் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது குறித்து கொந்தளித்து வசனம் பேசிவிட்டு, தினசரி தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் ஆற்று மணல்களும், மலைகளை தரைமட்டமாக்கி என்சாண்ட் எடுக்கப்பட்டு இயற்கை வளம் கொள்ளை போவது குறித்தும் அமைதி காத்து வருவதில் என்ன பலன் இருக்கிறது..? மெர்சல்’ படத்தில் மருத்துவ கொள்ளைகள் குறித்து தோளுரித்து பேசினால் போதுமா? சம்பாதித்த பணத்தில் நான்கு மருத்துவமனைகளைக் கட்டி மருத்துவ சேவை என்றால் என்ன? என்பதை நிருபித்து காட்டி இருக்கலாமே! மேற்படி விவகாரங்களில் ஏன் உங்களால் கருத்து சொல்ல முடியவில்லை. காரணம், உங்கள் படத்தின் டிக்கெட்டுகளை ஆயிரம்,இரண்டாயிரம் என சட்டத்திற்கு புறம்பாக விலை வைத்து விற்பதில் ஆட்சியாளர்கள் மெளனம் காட்டுகிறார்கள்! பதிலுக்கு நீங்களும் அமைதி காக்கிறீர்கள் என புரிந்து கொள்ளலாமா..? வெளிப்படைத் தன்மை: மக்கள் இயக்கம் கண்ட பிறகு இந்த 15 ஆண்டுகளில் நீங்கள் எந்த ஒரு பொது விஷயத்திற்கும் வாய் திறப்பதில்லை. உங்கள் சம்பாத்தியம் என்ன? சொத்து மதிப்பு என்ன? பொதுச் சேவைக்கு உங்கள் சம்பாத்தியத்தில் எத்தனை சதவிகிதம் தருகிறீர்கள்..எதிலாவது வெளிப்படைத் தன்மை இருக்கிறதா? பாருங்கள்! கர்நாடகத்தில் பிரகாஷ்ராஜ் எப்படி சுதந்திரமாக அரசியல் கருத்துகளை மனம் திறந்து பேசுகிறார்! பாஜகவை துணிச்சலாக எதிர்க்கிறார். அநீதியை எதிர்க்க முடிந்தவர்களால் மட்டுமே மக்கள் நம்பிக்கையை பெற முடியும்.இனிமேலாவது துணிந்து அநீதியை எதிர்ப்பீர்களா? எனில், உங்களை நீங்கள் தூய்மையாக வைத்துக் கொண்டால் தான் அப்படி எதிர்க்க முடியும் என்பதை நினைவில் வையுங்கள்! 2026-க்கு தான் தேர்தலில் பங்கு பெறுவீர்கள் என்றால், அதற்கு இந்த தேர்தலையே ஒரு டிரைலராக நீங்க பார்க்கணும்! எடுத்த எடுப்பில் பெரிய வெற்றியை ஈட்டி நேரடியாக முதல்வராக முடியாது! இனியும் காலம் தாழ்த்தாது களத்திற்கு வாங்க. நீங்க என்ன பேசுறீங்க, என்ன செய்யிறீங்க என்பதைக் கொண்டு தான் உங்கள் பின்னணியில் பாஜக இருக்குதா? இல்லையா? என்ற முடிவுக்கு வர முடியும். ஏனென்றால், விஜய்க்கு தானாக அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் துணிச்சல் கிடையாது என்பதே உண்மை! இரண்டு திராவிட இயங்கங்கள் இங்கு மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்ற நிலையில், ‘அவர்களின் வாக்கு வங்கியை தான் ஒரு போதும் அள்ள முடியாது’ என்ற நிலையில் உங்களை இறக்கி ஆழம் பார்க்கிறதா பாஜக? என்ற சந்தேகத்திற்கு விரைவில் விடை கிடைத்துவிடும். எப்படி இருந்தாலும் விஜய் வருகையால் இரு திராவிடக் கட்சிகளுக்கு சற்று வாக்கு வங்கி பலவீனப்படும். விஜய் பாஜகவின் நிழலாக இயங்க நினைத்தால், அவரைப் பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை! சாவித்திரி கண்ணன் https://aramonline.in/16521/actor-vijay-politics/
  3. சிறிதரன் எதிர்நோக்கும் சவால்கள் எம்.எஸ்.எம். ஐயூப் தமிழர்களின் அரசியலைப் பற்றிய சில தென் பகுதி ஊடகவியலாளர்களின் அறிவு எந்தளவு என்பதை அவர்கள் இலங்கை தமிழ் அரசு கடசியின் புதிய தலைவர் தெரிவைப் பற்றி கடந்த 21 ஆம் திகதி எவ்வாறு அறிக்கையிட்டார்கள் என்பதன் மூலம் தெரிகிறது. அவர்கள் தமிழ்த் தேசியகடக கூட்டமைப்பையும் இலங்கை தமிழ் அரசு கட்சியையும் குழப்பிக் கொண்டே செய்தியை வெளியிட்டு இருந்தார்கள். 1949 ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்டு சொற்ப காலம் சென்றதிலிருந்து இலங்கையில் பிரதான தமிழ்க் கட்சியாக இருக்கும் தமிழரசு கட்சி இலங்கை வரலாற்றில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியிருக்கும் நிலையிலேயே சில தென்பகுதி ஊடகவியலாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன் தெரிவு செய்யப்பட்டார் என்று அறிக்கையிட்டு இருந்தார்கள். இதனை ஆச்சரியமாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் தென் பகுதியில் இடம்பெறும் சில அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளைப் பற்றி தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் போதிய அறிவு இல்லாமல் இருந்ததையும் கடந்த காலத்தில் கண்டோம். உதாரணமாக 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்ட நிலையில் சிங்கள பௌத்த மக்களில் ஒரு சாரார் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாகர் உலகிலிருந்து களனி விகாரைக்கு ஒரு நாகம் வந்த கதையைப் பற்றி பெரும்பாலான தமிழர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். நிலத்துக்கடியில் இருப்பதாகக் கூறப்படும் நாகர் உலகிலிருந்து ஒரு நாகம் புத்தரின் அடையாளச் சின்னங்களைத் தாங்கிய வண்ணம் களனி கங்கை ஊடாக வெளியே வந்து அச்சின்னங்களை மற்றொருவர் மூலம் தம்மிடம் கையளித்தாகவும் அது தேசத்தையும் பௌத்த சமயத்தையும் பாதுகாப்பதற்காக ஒரு புதிய தலைவர் வருகிறார் என்பதற்கான அடையாளமாகவே நிகழ்ந்தது என்றும் களனி மகா விகாரையின் பிரதம மதகுரு ஊடகங்களிடம் தெரிவித்தார். அதனை பொதுஜன முன்னணிக்கு ஆதரவான ஒரு தொலைக்காட்சி நிறுவனம் முக்கிய செய்தி என்று கூறி எவ்வித சந்தேகமும் இல்லாத செய்தியைப் போல் ஒளிபரப்பியது. இந்த வீடியோ இன்னமும் யூடியுப்பில் பார்க்கலாம். இச்செய்தி பௌத்தர்களில் ஒரு சாரார் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறப்படுகிறது. அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் யார் என்று கேட்டால் சிலவேளை பலருக்கு தெரியாதிருக்கலாம். தமிழரசு கட்சியைப் பற்றி அறியாத தென்பகுதி இளைய தலைமுறை ஊடகவியலாளர்கள் இனப் பிரச்சினை போன்ற சிக்கலான ஒரு விடயத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று நம்ப முடியாது. ஆனால் அவர்கள், அக்கட்சியை அறியாதிருக்க அல்லது தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒன்று தான் என்று நினைக்க நிறைய காரணங்கள் இருக்கின்றன. இலங்கை தமிழரசு கட்சி 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும் ஆரம்ப காலத்தில் தென் பகுதியில் அது 'பெடரல் பக்ஷய' (சமஷ்டி கட்சி) என்றே அழைக்கப்பட்டது. அதனை அடுத்து 1972 ஆம் ஆண்டு முதல் தமிழரசு கட்சி மூன்று கூட்டணிகளின் பிரதான கட்சியாக இருந்தது. 1972 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை தமிழர் ஐக்கிய முன்னணியினதும் 1976 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் வரை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினதும் (கூட்டணியினதும்) 2001 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் பிரதான உறுப்புக் கட்சியாக இருந்தமையால் அதன் பெயர் அறிதாகவே ஊடகங்களில் காணப்பட்டது. 2001 ஆம் ஆண்டு முதல் தேர்தல் காலங்களில் அதன் பெயர் ஓரளவுக்கு வெளியே தெரிய இருந்தது. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழரசு கடசியின் சார்பாக அதன் சின்னத்தின் கீழேயே போட்டியிட்டனர். 1980களின் ஆரம்பத்திலிருந்து தமிழ் அமைப்புக்களுக்கும் அரச படைகளுக்கும் இடையே போர் மூண்டதால் தமிழரசு கட்சி போன்ற கட்சிகளுக்கு ஊடகங்களில் இடம் கிடைக்கவே இல்லை. இவ்வனைத்து காரணங்களாலும் தமிழரசு கட்சி என்பது ஏதோ புதிய கட்சியொன்றைப் போல் தெற்கில் சிலர் காணலாம். தமிழரசு கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்காக இதற்கு முன்னர் ஒருபோதும் போட்டி நடைபெறவில்லை. பொது உடன்பாட்டிலேயே தலைவர் தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளார். இம் முறை தேர்தலானது யார் சிறந்த தமிழ் தேசியவாதி என்பதை தெரிவு செய்வதற்கான தேர்தலாகவே தெரிந்தது. தேர்தலுக்கு முன்னர் வெளியான தமிழ் பத்திரிகைகளிலும் இது தெரிய இருந்தது. அந்த வகையில் சிறிதரனுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருந்தது. சில தமிழ் ஊடகங்கள் சிறிதரன் உள்நாட்டுப் போரின் அதிக வடுக்களை சுமந்துக்கொண்டிருப்பவர் என்றும் சமந்திரன் சம்பந்தனின் சிபார்சின் பேரில் அரசியலுக்கு வந்து தமிழ்த் தேசியத்துக்குள் புதியவராக அறிமுகமான புதிய தமிழ் தேசிய பற்றாளர் என்றும் குறிப்பிட்டன. தென்பகுதி ஊடகங்களும் அரசியல்வாதிகளும் எப்போதும் தமிழ் தேசியவாதத்தை தமிழீழ விடுதலை புலிகளின் அரசியலாகவே காண்கின்றனர். கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட உடன் சிறிதரன் போரில் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி செயலுத்தியமை எதோ ஓர் ஆபத்தான சகுனமாக சிலர் பார்ப்பதாகவே தெரிந்தது. மூன்று தசாப்தங்களாக வான் தாக்குதல்களாலும் பீரங்கித் தாக்குதலாலும் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட ஒரு மண்ணில் அந்த கொலைகள் இடம்பெரும் போது அதற்கு சாட்சியாக இருந்த ஒருவர் புதியதோர் அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் போது தாம் கடந்து வந்த அந்த கொடுமையான பாதையை மறக்க மாட்டார் என்பது எவரும் பரிந்துகொள்ள வேண்டிய யதார்த்தமாகும். ஆனால் அந்த அனுபவம் இல்லாத காரணத்தால் ஒருவர் அதனை புரிந்துகொள்ளாமலும் இருக்கலாம். அதனையே தென்பகுதியில் காண முடிந்தது. இது சிறந்த தேசியவாதியை தெரிவு செய்யும் தேர்தல் என்ற அடிப்படையியே வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கருத்து தெரிவித்து இருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியான உடன் கருத்து தெரிவித்த அவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ் தேசியம் அழிந்துவிடக்கூடாது என்பதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார். கட்சித் தலைவரை தெரிவு செய்யும் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் போட்டியிட்டு சிறிதரன் வெற்றி பெற்ற நிலையிலேயே அவர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தேர்தல் முடிவின் பின்னர் கருத்து தெரிவித்த சிறிதரன், சுமந்திரனுடனும் தேர்தலுக்கு சற்று முன்னர் போட்டியிலிருந்து விலகிக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுடனும் இணைந்து தமிழ் தேசியத்தின் ஒவ்வோர் அங்குல இருப்புக்காகவும் பொறுப்புடன் செயற்படுவதாக என்று கூறியிருந்தார். அதேபோல் சுமந்திரனும் புதிய தலைவர் சிறிதரனுக்கு முழுமையான ஆதரவை வழங்கி தொடர்ந்தும் ஒற்றுமையாக பயணிப்போம் என்று கூறியிருந்தார். இவ்விருவரின் இக்கருத்துக்கள் வெறும் சம்பிரதாயத்துக்கானதாக இருக்கக்கூடாது. ஏனெனில் அக்கருத்துக்களால் அவர்கள் உலகுக்கு எடுத்துரைக்கப் போகும் ஐக்கியமானது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இது தமிழ் சமூகத்துக்கு மட்டுமன்றி முஸ்லிம் சமூகத்துக்கும் பொருத்தமானதாகும். இன்று இலங்கை தமிழ் அரசியலானது முன் நகர முடியாத ஒரு நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவே தெரிகிறது. தமது இருப்பை பாதிக்கும் பல பிரச்சினைக்ளுக்கு தீர்வு தேடி சாத்வீகமாக பல தசாப்தங்களாக போராடி வந்த தமிழ் தலைவர்கள் அப்போராட்டம் தோல்வியடையவே பிரிவினையை கோரினர். பிரிவினைப் போராட்டம் மரபு ரீதியான கட்சிகளை பின் நோக்கித் தள்ளிவிட்டு இளைஞர்களிடம் சென்றடைந்தது. அப்போராட்டமும் பெரும் அழிவோடு தோல்வியடைந்தது. இப்போது மீண்டும் ஜனநாயக ரீதியாக சமஷ்டி ஆட்சி முறையை கோருகிறார்கள். அதற்கு நாட்டின் ஆட்சியாளர்கள் எவரும் தயாராக இல்லை. மீண்டும் ஆயுதப் போராத்துக்குப் போகவும் முடியாது. ஜனநாயக போராட்டமும் ஓரிடத்திலேயே தேங்கிக் கிடக்கிறது. இது ஒரு நெருக்கடியான நிலைமையாகும். இந்த விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளிடையிலான போட்டா போட்டியும் நிச்சயமாக சிந்தனைக்கு தடையாகவே கருத வேண்டியுள்ளது. போராட்ட வடிவங்கள் மற்றும் சுலோகங்கள் தொடர்ந்தும் பயனளிக்காவிட்டால் அவற்றை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதாவது ஆயுதப் போராட்டத்துக்கு மீண்டும் போக வேண்டும் என்பதல்ல. ஆனால் தென் பகுதியிலும் சர்வதேசத்திலும் புதிய நண்பர்களை தேடலாம். தென் பகுதி பொருளாதார போராட்டங்களோடு தமிழர்களின் பிரச்சினைகளையும் இணைக்க வாய்ப்பு இருக்கிறதா என்று ஆராயலாம். கடந்த வருடம் இடம்பெற்ற 'அரகலய' போராட்டத்தின் போது ஓரளவுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தெற்கே எடுத்துச் செல்லப்பட்டன. இவற்றைத் தான் செய்ய வேண்டும் என்பதல்ல. தமிழர்களும் முஸ்லிமகளும் புதிதாக (out of the box)சிந்திக்க வேண்டிய கட்டாயத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்பதையே இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. ஆயினும், கட்சிகளாக பிரிந்து இதனை செய்யப்போகும் போது மற்றைய கட்சிக்காரர்களின் குற்றச்சாட்டுக்கள் மற்றம் முத்திரை குத்தல்கள் பற்றிய அச்சத்துடனேயே அதனை செய்ய வேண்டியுள்ளது. எனவே தான் கட்சிகளின் ஒற்றுமை ஊடாக ஒரு கூட்டுப் பயணம் அவசியமாகிறது. 31.12.2023 https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிறிதரன்-எதிர்நோக்கும்-சவால்கள்/91-332553
  4. ”உயிருடன் தான் இருக்கிறேன்” நடிகை பூனம் பாண்டே விளக்கம்! ManjulaFeb 03, 2024 13:45PM தான் உயிருடன் இருப்பதாக பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீடியோ ஒன்றை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். பாலிவுட் நடிகை பூனம் பாண்டே (32) ‘நஷா’ என்ற படத்தின் மூலமாக பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.இந்தி தவிர கன்னடம், போஜ்புரி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பூனம் நடித்திருக்கிறார். பூனம் நடிப்பில் கடைசியாக 2018-ம் ஆண்டு ‘ஜர்னி ஆஃப் கர்மா’ பாலிவுட் படம் வெளியானது. அதற்குப்பின் அவர் நடிப்பில் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த 2௦11-ம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பை வென்றால் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் என அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவர், 2௦2௦-ம் ஆண்டு தன்னுடைய காதலன் சாம் பாபே என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேற்று(பிப்ரவரி 2) திடீரென இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார் என பதிவிடப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். நன்றாக இருந்த பூனம் திடீரென எப்படி இறந்தார்? என சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வந்தனர். மேலும் அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தான் இறக்கவில்லை என இன்று(பிப்ரவரி 3) தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனம் பாண்டே அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ”நான் உயிருடன் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்தேன்,” என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள்,”விழிப்புணர்வு என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?” என கடுமையாக பூனம் பாண்டேவை விமர்சனம் செய்து வருகின்றனர். https://minnambalam.com/cinema/bollywood-actress-poonam-pandey-apologises-for-shocking-everyone/
  5. சுவிற்சர்லாந்தில் நடிகமணிக்கு ஒரு பெருவிழா! … அருந்தவராஜா .க காலம் அழைத்துச் சென்ற கலைஞர்களில் நடிகமணி வி.வி வைரமுத்து ஒருவரானாலும் காலகாலமாக மக்கள் மனங்களில் வாழ்ந்து நிறைந்திருக்கிறார். இலங்கையின் இசை நாடக வரலாற்றில் தனி ஆளுமை மிக்கவராகவும் பல்துறை கலை ஆற்றல் உள்ளவராகவும் விளங்கிய நடிகமணியவர்கள் அரிச்சந்திர மயானகாண்டம் நாடகத்தை 3000 தடவைகளுக்கு மேலாகவும் பக்த நந்தனார் நாடகத்தை1000 தடவைகளுக்கு மேற்படவும் நடித்துப் பெருமை சேர்த்தார். இவற்றை விட மேலும் பல நாடகங்கள் பற்பல முறை மேடையேற்றங்கள் கண்டுள்ளன. இலங்கையில் ஒரு அரங்க நடிகனுக்கு இரசிகப்பட்டாளம் அதிகம் உருவாகியிருப்பதும் நாடக அரங்குக்கு பின்னரான கதைக் களங்கள் உருவாகியும் பின்னர் அவை கொத்தணிக் கதைக் களங்களாகப் பல்கிப் பெருகிய பெருமையும் நடிக மணி வைரமுத்து அவர்களையே சாரும். இவ்வகை அரங்காடல், கதையாடல் என்பன வைரமுத்து அவர்களை இலங்கையின் தேசிய மகா கலைஞனாகவும் இனங்காட்டியது .பேராதனைப் பல்கலைகழகத்தில் சிங்கள நாடகப் பேராசான் சரத்சந்திரா முன்னிலையில் அரிச்சந்திரா மயான காண்டம் மேடையேற்றப்பட்டு பெரும் பாராட்டைப் பெற்றுக் கொண்டது . யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1984 இல் நடிகமணி யவர்களை அழைத்து கைலாசபதி கலையரங்கில் மதிப்பளித்தும் 2004 இல் கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கியும் தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது . இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனம் இவரது நாடகத்தை ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பியும் ஒலிப்பேழையாகவும் வெளியீடு செய்துள்ளது. லண்டன் BBC நிறுவனமும் இவரது நாடகத்தை ஒளிப்பதிவு செய்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் நடிக மணியின் இசை நாடகத்தை புதிய பாய்ச்சலுக்கான பல ஆலோசனைகள் , உதவிகளையும் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் . இவ்வாறு பெருமை பெற்றுள்ள கலைஞனுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அவரது 100 ஆவது அகவை வருடத்தை நினைவு கூரவும் சுவிஸ் நாட்டின் தலைநகரில் ஐரோப்பிய மதிப்பளிப்புக் கழக நிறுவுனர் வைகுந்தன் அவர்களில் தலைமையில் (28 .O1.2024 ) நிகழ்வு இடம்பெற்றது . இந்த நிகழ்வில் நடிக மணியவர்களின் பிள்ளைகள் உறவுகள் மற்றும் பலரும் பங்கு பற்றி நிகழ்ச்சிகளையும் வழங்கியிருந்தனர். பல் துறைக் கலைஞன் மயிலை இந்திரன் குழுவினரின் அரிச்சந்திரா மயானகாண்டம் , கலைவளரி இரமணன் குழுவினரின் பண்டாரவன்னியன் நாடகம் என்பன மேடையேற்றப்பட்டு மக்களின் பாராட்டைப் பெற்றுக் கொண்டன. நடிகமணி நினைவுப் பேருரையை நானும் (க.அருந்தவராஜா) வழங்கியிருந்தேன் . யாழ் பல்கலைக்கழகத்தில் 1984 இல் நடிக மணியவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும் போது அங்கு ஒரு மாணவனாக இருந்து அந்த நிகழ்வை கண்டு களித்தவன் என்ற வகையில் இன்று 40 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அவரது மறைவுக்குப்பின் சுவிஸ் நாட்டில் அவருக்கான நினைவுரையை வழங்கியிருக்கிறேன். காலங்கள் தான் ஓடுகின்றனவே தவிர நினைவுகள் காலைவரை கதவைத் தட்டிக் கொண்டேயிருக்கின்றன. காலத்தால் மறக்கமுடியாத மகா கலைஞன் நடிகமணி வி.வி.வைரமுத்து இலங்கையின் இசை நாடக வரலாற்றில் மாபெரும் சொத்து .காலங்கள் கடந்தும் பேசப்படுவார் . அருந்தவராஜா .க ஜெனீவா. https://akkinikkunchu.com/?p=267459
  6. மட்டக்களப்பு மாநகரம் - சிங்கள மயமாக காட்சி Vhg பிப்ரவரி 03, 2024 இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் மிகப்பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலைமையில் நாளை (04.02.2024 )திகதி மாலை 4.00 மணிக்கு இந்நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. இலங்கையின் சுதந்திர தினம் https://www.battinatham.com/2024/02/blog-post_40.html
  7. சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி போராட்டத்திற்கு அழைப்பு! kugenFebruary 3, 2024 இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில், தியாகச் சாவைத் தழுவிக்கொண்ட முதல் மனிதன் என்னும் மரியாதைக்குரிய திருமலை நடராஜன் அவர்கள், 1957.02.04 ஆம் திகதியன்று நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்து, திருமலையில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக்கொடியை ஏற்றியமைக்காக சிங்களப் பொலிசாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு 67 வருடங்கள் கடந்தும், இந்த நாட்டில் தமிழர்களின் இறைமை இன்றளவும் அங்கீகரிக்கப்படவில்லை. தமது பூர்வீக மண்ணில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பை நிலைநிறுத்த, அரசுக்கும் அரச கட்டமைப்புகளுக்கும் எதிராக எல்லாவழிகளிலும் போராடவேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ள எமது மக்களது அக உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும், எமது மக்களின் குரலாகவுமே யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் இந்த எதிர்ப்புப் போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாதவரை, ஈழத்தமிழர்களை இறைமையுள்ள தேசிய இனமாக இலங்கைத் தேசம் அங்கீகரிக்காதவரை, இந்த நாட்டின் சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாளே என்பதை மீள வலியுறுத்தும் இந்தப் போராட்டத்தில், அரசியற் கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகள் எவையுமற்று எமது இனத்தின் உரிமைக்கான ஏகோபித்த குரலாக எல்லோரும் இணைந்து, இதனை ஒரு மக்கள் திரட்சி மிக்க போராட்ட வடிமாக எழுச்சிபெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுநிற்கிறேன். என்றுள்ளது. https://www.battinews.com/2024/02/blog-post_28.html
  8. தமிழ்த் தேசியத்துக்கான ஒற்றுமை லக்ஸ்மன் தமிழ்த் தேசியம் பலப்படுதலொன்றே காலத்தின் தேவை என்பதனை உணர்ந்துகொள்ள தலைப்படுதலை முக்கியப்படுத்தல் நடைபெறுவதாகயில்லை. தனிப்பட்ட கோப தாபங்களையும், வெப்புசாரங்களையும் காண்பிப்பதற்கான தருணம் இதுவல்லவென்பதை யாரும் உணரவுமில்லை. தமிழர்களின் தேசியம் என்பது உணர்வு ரீதியானதே! இந்த உணர்வினை சரியாகக் கைக்கொள்ளவும் கையாளவும் தெரியாதவர்களாகவும், அதனைப்பற்றி புரிந்து கொள்ள முயலாதவர்களாகவும் தமிழர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியை இந்த இடத்தில் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த ஜதார்த்தத்தினை உணராது நடந்து கொள்வதுதான் தற்போது தமிழ்த் தேசியம் பற்றிப் பேச முனைபவர்களின் நிலை. தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டார். அந்தத் தேர்வானது அக்கட்சிக்குரியதே. ஆனாலும், தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமை இதிலிருந்து தொடங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்த்தேசியம் சார்ந்து சிந்திப்பவர்களிடம் பொதுவாக இருக்கிறது. இருந்தாலும் அது நடைபெறுமா என்பதுதான் புரியாத புதிர். இதற்கிடையில் பொதுச்செயலாளர் தெரிவு அமளிதுமளியில் முடிந்திருக்கிறது என்பதுடன் முற்றுப்பெறவுமில்லை. அந்த வகையில் இந்த எதிர்பார்ப்பைச் சீர் குலைக்கும் வகையில் இத் தெரிவு நிகழ்ந்துவிடக்கூடாது. தமிழ் மக்களது அரசியலுரிமைக்கான அரசியலை யார் முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதனை ஒவ்வொரு கட்சியிலுமிருக்கின்ற ஒரு சிலரே தீர்மானிக்கின்ற நிலைமைக்கப்பால் இம்முறை பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் தமிழரசுக்கட்சியின் தலைமை தெரிவு நடைபெற்றிருக்கின்றமையானது பாராட்டப்பட்டிருக்கிறது. ஆனாலும், சுயநலன்களுக்கப்பால் மக்களுக்கான அரசியல் முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இந்த இடத்தில்தான் தமிழ்த் தேசியத்துக்கான ஒற்றுமை என்கிற விடயம் முதன்மைபெறுகிறது. அண்மைய காலங்களாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமை பற்றிய பேச்சுக்கள் எழுந்தாலும் அதனை மேவும் வகையில் போராட்ட ஆயுத இயக்கங்களாக இருந்து அரசியல் நீரோட்டத்துக்குள் இணைந்தவர்களையும் விமர்சிக்கின்ற நிலை உருவாகியிருக்கிறது. இது காலத்தின் தேவையற்றது என்பதும், இது மேலும் தமிழ் தேசிய அரசியலில் முரண்பாட்டை ஏற்படுத்தும் என்பதும் மறக்கப்பட்டதனால் நடைபெறுவதாகவே உணர முடிகிறது. அதே நேரத்தில் அரசியல் தெளிவின்மை காரணமாகவும் இருக்கலாம். தமிழீழ விடுதலைப் போராட்டமானது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அனைவரும் ஒரே நோக்கத்திற்காகவே போராடத் தொடங்கியிருந்தனர். சகோதர இயக்க எதிர்ப்பு, படுகொலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பலனாக உருவான பல விரோதச் செயல்கள் பலராலும் மறக்கப்பட முடியாதவை என்பதனை யாரும் மறுக்கமாட்டார்கள். ஆனால், 2001ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கடந்தகால செயற்பாடுகளை, தவறுகளை மறப்போம் மன்னிப்போம் என்ற நிலைக்கு வந்ததன் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அது காலம் கடந்த முடிவு என்றாலும், அது நிகழ்ந்தது ஒரு மன நிலை மாற்றமே. இதனை அறியாதவர்கள் இன்றைய காலங்களில் தமிழ்த் தேசியம் பற்றிப் பேசுவது வியப்பானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழர்களுக்கான அரசியல் செயற்பாட்டுக்கானதாக ஆக்கி ஆரம்பத்தில் உதய சூரியனையே தேர்ந்தெடுத்திருந்தார். அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியவை இணைந்திருந்தன. உதய சூரியன் சின்னத்தில் எற்பட்ட பிரச்சினையால், 1976களிலேயே கிடப்பில் போடப்பட்டிருந்த வீட்டுச் சின்னம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. அச்சின்னம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் சின்னமாக பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் அதனை தமிழரசுக்கட்சி ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இது பெரும் முரண்பாடாக தொடர்ந்துகொண்டேஇருந்தது. இறுதியில் கடந்த வருடம் அக்கட்சி தனிவழி சென்றது. ஆனாலும் அவர்கள் இணைய வேண்டும் என்ற வேண்டுகோள்கள் வராமலில்லை. விடுதலைப் புலிகள் தங்களது கடந்தகால தவறுகளை மறந்து ஏனைய போராட்ட இயக்கங்களையும் இணைத்தே தமிழர்களின் தேசிய அரசியல் நடைபெறவேண்டும் என்ற நிலைக்கு வருவதற்கிடையில் பல பெரும் இழப்புக்களைத் தமிழர்கள் சந்தித்திருந்தார்கள். தேர்தல்கள் வரவிருக்கின்ற வேளையிலும் அதே போன்ற பல இழப்புகளைச் சந்தித்த பின்னர்தான் தமிழரசுக்கட்சி தன்நிலை உணரும் என்றால் அது ஒரு ஆபத்தான முடிவாகவே இருக்கும் என்பது கவனத்திலெடுக்கப்பட வேண்டும். யுத்தம் உக்கிரமடைந்து ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதனையடுத்து ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தினை தமிழரசுக்கட்சி சாதகமாக்கிக் கொண்டு தன்னுடைய ஏகாதிபத்திய ஆதிக்கத்தினை நடைமுறைப்படுத்தியதனால் உருவாகியிருக்கின்ற இந்த நிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி வெளியேறியது. அதன் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ். வெளியேறியது. அவ்வாறு பார்த்தால் ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த ஒற்றுமை தமிழரசுக்கட்சியின் ஏகாதிபத்திய நடைமுறை காரணமாக குலைந்து போனது என்றே கொள்ளலாம். பின்னர் 2023இல் தமிழரசுக்கட்சி தனி வழி தேடிச் சென்றது. தமிழர்களின் அரசியல் சின்னமாக வீடும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் அரசியல் கட்சியாகவும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதிலும் தமிழரசுக்கட்சியின் ஏகாதிபத்திய, மேட்டுக்குடி நிலைப்பாடு காரணமாக கட்சிகள் பல வெளியேறும் நிலை ஏற்பட்டிருந்தது. தமிழர்களின் அரசியலை பல கட்சிகளாக தனித்து நின்று மேற்கொள்ள முடியாது என்பதனைப் புரிந்து கொண்டமையினால் உருவான கூட்டமைப்பு சிதைந்து கொண்டிருக்கிறது. இது தமிழ்த் தேசிய நலனைக் கருத்தில் கொள்ளாத அரசியலாலேயே நிகழ்கிறது என்பதே உண்மை. தமிழ்த் தேசிய நலனும், அதன் நிலைப்பாடும் மாற்றமுறா வகையில் அரசியல் பயணம் தேவையாக இருக்கிறது இதனை மறந்து தங்களுடைய வெப்புசார, கோபதாப மநோநிலைகளை காண்பித்து வருபவர்கள் சற்றே அமைதி கொள்வதே தமிழ்த் தேசியத்துக்காற்றும் பணியாக அமையும். இல்லையேல் தேவையற்ற விளைவுகளை தமிழர்கள் எதிர்கொள்ளவும் அனுபவிக்கவும் நேரலாம். இந்த இடத்தில்தான் தமிழ்த் தேசிய அரசியலுக்கான ஒற்றுமை குறித்து விடயம் கவனத்திற்கு வருகிறது. தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக்கட்சி என மிதவாத அரசியலுடனும், ரெலோ, புளொட், ஈரோஸ், ஈ.பி.ஆர்எல்எவ், ஈ.என்.டி.எல்.எவ்., ஈரோஸ் என ஆயுத அரசியலுடனும் தொடர்ந்த தமிழர்களுடைய விடுதலைக்கான முயற்சிகள் பலனற்றுப் போனதற்கு தமிழர்களிடமில்லாததான ஒற்றுமையே காரணம். அதனைக் கட்டியெழுப்புவது முக்கியமானதாகும். தமிழரசுக்கட்சியின் விலகலுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சின்னமற்றதானது. ஆந்த நிலையில் ஏற்கனவே பதிவிலிருந்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அறிவிக்கப்பட்டது. இதில். ஈபிஆர்எல்எவ், ரெலோ, புளொட், தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன தற்போதுள்ளன. ஈழத் தமிழர்களின் வரலாற்றி;ல் சின்னங்கள் மாறுவதும், கூட்டணிகள் அமைக்கப்படுவதும் குலைவதும், பிரிவதும் சேர்வதும் சர்வ சாதாரணமானது என்ற வகையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உருவாகியிருப்பதாகவே கொள்ளமுடியும். ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள்; எட்டிவிட்டது. இருந்தாலும் இதுவரை இனப் பிரச்சினைக்கான தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைக்கவில்லை. இது ஒரு காலம் கடத்தும் செயற்பாடாகவே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில் மேலும் மேலும் பிளவுகள் தேவையற்றதே. அத்தோடு உருவாகிவரும் தமிழ்த் தேசிய அரசியலை தமிழ் மக்கள் வெறுக்கும், வேறு அரசியல்களுக்குள் சாய்கின்ற நிலை ஆபத்தானது என்பதனையும் தமிழர்களின் அரசியல் தரப்பினர் உணர்ந்து கொள்ளவேண்டும். எனவே தமிழ்த் தேசியம் பலப்படுத்தப்படுத்தல் ஒன்றே காலத்தின் தேவை என்ற அடிப்படையில் இனியேனும் தமிழ்த் தேசிய அரசியலானது தமிழ்த் தேசியத்துக்கானது என்ற உணர்வு ஏற்பட்டு ஒற்றுமை உருவாகட்டும். இது காலத்தின் கட்டாயமும் கூட. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசியத்துக்கான-ஒற்றுமை/91-332548
  9. உங்கள் பயணத்தில் எங்களையும் அழைத்துச் சென்றதற்கு மிக்க நன்றி ரஞ்சித். வன்னிக்கு நீங்கள் போன இடங்களை எல்லாம் போய்ப் பார்க்கவேண்டும் என்று நினைத்து பல வருடங்கள் ஆகின்றது. 2022 இல் கிளிநொச்சி, ஆனையிறவு ஊடாகப் போனபோது மிகவும் மனச்சோர்வு ஏற்பட்டது. எங்கள் பெருமிதங்களையும் சேர்த்து எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்! ஆனாலும் ஊருக்குப் போய் முதியவர்களாக எஞ்சி இருக்கும் சொந்தங்களைக் கண்டு பேசியபோதும், பதின்ம வயதில் கிடைத்த நண்பர்களுடன் மனம்விட்டு உரையாடியபோதும் ஏற்பட்ட சந்தோசத்திற்கு அளவில்லை!
  10. இப்போது இருக்கின்றதா என்று தெரியவில்லை. எனது பதின்ம வயதுகளின்போது சோளங்கன் ரீமுக்கு விளையாடிய பிரபலமானவர்களை நன்கு தெரியும். ஒருவர் மிக நெருங்கிய நண்பன். 91 இலிருந்து இப்போதும் இலண்டனில் கோடை காலம் என்றால் ஒவ்வொரு ஞாயிறும் கிரிக்கெட் விளையாடுகின்றான்.! அவ்வளவு கிரிக்கெட் பைத்தியம்!
  11. போதமும் காணாத போதம் – 17 பூதவராயர் கோயிலுக்குப் பின்பாகவுள்ள குளத்தில் மஞ்ஞை தனியாக குளித்துக் கொண்டிருந்தாள். மத்தியானத்தின் பலகோடி மலர்கள் நீரில் மலர்வதைப் போலொரு தரிசனம். என்னைக் கண்டுவிட்டாள். வடலிக் கூடலில் அமர்ந்திருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். இருவரின் பார்வையும் சந்திக்கையில் இமைகொட்டாது யுகம் குளிர்ந்தது. சூரியனுக்கு அருகிலிருப்பது போல சரீரம் தகித்தது. என்னில் ஊற்றுக்கொண்டு நிரம்பித் ததும்பினாள் மஞ்ஞை. குளித்து முடித்து கரையேறி மறைப்பில் புகுந்தாள். இன்று சந்திப்பதாக திட்டமிருக்கவில்லை. விழிப்புலனற்ற கலைஞன் மடியில் கிடக்கும் புல்லாங்குழல் துளைகளில் காற்று நுழைந்து கீதம் நிறைப்பதைப் போல இந்தச் சந்திப்பு நிகழ்கிறது. காற்றில் படபடக்கும் அரச மரத்து இலையின் நிழலென மஞ்ஞை நடந்து வந்தாள். வரலாற்றின் புதிய சொல்லென ஈரத்தோடு விரிந்திருந்த கூந்தல். பறக்க எத்தனிக்கும் ஜோடிப்புறாவின் அசைவுடனும் வடிவுடனும் கொங்கைகள். பிரபஞ்சமே அருந்தவம் செய்து ஏந்திய காற்றுச்சுடரின் அபிநயம் இவள்தான். எண்ணெய்க் கிண்ணக் கண்களில் திரியேற்றி என்னருகில் வந்தாள். எளிதில் மூண்டுவிடும் தீ என்னிடமிருப்பது மஞ்ஞைக்கு நன்றாகவே தெரியும். வடலிக்கூடலுக்குள் அலை பெருத்து மூர்க்கம் கொண்டோம். தஞ்சம் கோரும் தாகத்திற்கு அருந்துவதற்கு சுனைகள் பிறப்பித்தோம். மணல் ஒட்டிய சரீரங்கள் களைப்பில் மூச்செறிந்தன. வானத்தில் கனத்த மழைக்கான நிமித்தங்கள் தெரிந்தன. ஒரு துளி மஞ்ஞையின் தொப்புளில் விழுந்தது. அடுத்த துளியும் அங்குதான் நிறைந்தது. “எனக்கெண்டு மட்டும் தான் மழை பெய்யுது” என்றாள் மஞ்ஞை. எதுவும் சொல்லாமல் வானத்தையே உற்றுக் கவனித்திருந்தேன். நினைத்தது சரியாகவிருந்தது. வேவு விமானமிரண்டு வன்னி வான்பரப்புக்குள் பறந்தபடியிருந்தது. “என்ன வண்டு சுத்துதோ” என்று மஞ்ஞை கேட்டாள். ஓமென்று தலையை ஆட்டினேன். “நானிப்ப சுட்ட பழமாய் இருக்கிறேன். கொஞ்சம் ஊதி விடுங்கோ. சட்டையைப் போட்டுக்கொண்டு வெளிக்கிடுகிறேன். வேவு விமானம் வேற சுத்துது” என்றாள். கலவிக்குப் பின் கனியும் பெண்ணின் சரீரத்தில் ததும்பும் வாசனைக்கு இரையாகுபவன் பாக்கியவான். மலரினும் மெலிது காமம் சிலரதன், செவ்வி தலைப்படுவார் என்றால் நானும் மஞ்ஞையும் சிலரே. விடைபெற்றாள். வடலியிலே கள் வடியுமா! வடியட்டுமே! மஞ்ஞைக்கு செவித்திறனில் சிரமமிருந்தது. பக்கத்தில் நின்று அழைத்தாலும் சிலவேளைகளில் கேட்காது. வன்னிக்குள்ளிருந்த சர்வதேச தொண்டுநிறுவனமொன்று பரிசோதித்து வழங்கிய செவிப்புலனூட்டும் கருவியை பயன்படுத்துவதில்லை. ஏனென்று கேட்டால், பிடிக்கவில்லை என்பாள். எனக்கும் மஞ்ஞைக்கும் நடுவில் உறவு தோன்றிய தொடக்க நாட்களில் சந்திப்பு இடமாகவிருந்தது குன்று மரத்தடிதான். ஆளரவமற்ற பகுதியது. ஊரிலிருந்து கொஞ்சத்தூரத்தில் பிரிந்து செல்லும் ஒற்றையடிப்பாதையும் திடுமென அழிந்து போகும், அதன் பிறகு மூடிய காடு. அந்தக் காட்டிற்குள்தான் குன்று மரமிருந்தது. பெரியப்பாவுடன் பன்றி வேட்டைக்கு போகையில் அங்கு இளைப்பாறுவோம். மஞ்ஞை சைவ அனுட்டானங்களில் தீவிரம் கொண்டவள். மாமிசம் உண்பதில்லை. என்னை எதன்பொருட்டு சகித்துக்கொண்டாள் என்று அறியேன். மீன், கணவாய், முட்டை சாப்பிட்டால் அவளைப் பார்க்கப் போவதில்லை. முத்தமிடாமல் அருக்களிப்பாள். ஐயோ, வெடுக்கடிகுதென முகம் சுழிப்பாள். பன்றிகளை வேட்டையாடுவது அவளுக்குப் பிடிப்பதில்லை. தெய்வத்தின்ர அவதாரமென பிரசங்கிப்பாள். இனிமேல் வேட்டைக்குப் போகப்போவதில்லையென உறுதியளிப்பேன். “உங்கட கதையை நம்பமாட்டன். உருசையான இறைச்சியைப் பார்த்தால் மஞ்ஞை நீ ஆரெண்டு கேப்பியள்” என்பாள். ஒருநாள் மஞ்ஞையின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவளுடைய தாயார் பசுப்பால் கொடுத்தாள். பெரியளவில் குங்குமம் தரித்திருந்த அவளது முகத்தில் எண்ணற்ற எண்ணங்கள் ஓடின. “நீங்கள் எந்தவூரில இருந்து இடம்பெயர்ந்து வந்திருக்கிறியள் தம்பி” என்று கேட்டாள். “முகமாலை தெரியுமோ” கேட்டேன். “யாழ்ப்பாணம் போகேக்க பார்த்திருக்கிறேன்” என்றாள். கடைக்குச் சென்று திரும்பியிருந்த மஞ்ஞை, என்னைக் கண்டதும் திடுக்குற்றாள். ஆனாலும் உள்ளூர அதனைப் புதைத்துக்கொண்டு “என்ன, இஞ்சால் பக்கம் வந்திருக்கிறியள்” என்று கேட்டாள். “சும்மாதான்” என்றேன். அம்மா தருவித்த பசுப்பாலை முழுவதும் குடித்துமுடித்தேன். மஞ்ஞையின் தாயார் வந்த விஷயம் என்னவென்று சொல்லு என்று எனக்கு முன்னாலேயே நின்று கொண்டிருந்தார் என்பது விளங்கியது. “எங்கட வீட்டில வடகம் போட்டு விக்கிறம். அதுதான் ஒவ்வொரு வீடாப்போய் ஓர்டர் எடுக்கிறேன். உங்களுக்கு எதுவும் தேவைப்படுமோ” என்றேன். தாய் என்ன சொல்லப்போகிறாள் என்பதை மஞ்ஞை திகிலுடன் பார்த்தாள். நான் கதிரையிலிருந்து எழுந்து நின்றேன். “நீங்கள் இடம்பெயர்ந்து வரேக்கை, உங்கட ஊரிலயிருந்து வேப்பம் பூ கொண்டு வந்தனியளோ” என்று தாயார் கேட்டாள். நான் இல்லையென்றோ ஓமென்றோ சொல்லாமல் படலையைத் திறந்து வெளியேறினேன். மஞ்ஞை எனக்குப் பின்னால் ஓடிவந்து மன்னித்துக்கொள் என்றாள். “இதுக்கெல்லாம் மன்னிப்புக் கிடைக்குமாவென்று அவளிடமே கேட்டேன். நான் நெடுந்தூரம் நடந்து வந்ததன் பின்னரும் வயலுக்குள் தனித்திருந்த வீட்டின் வாசலிலேயே மஞ்ஞை நின்று கொண்டிருந்தாள். ஏழடி உயரமிருக்கும் குன்றின் மேலே வளர்ந்து நிற்கும் காட்டுப்பூரவசு மரத்தில் மஞ்ஞை ஏறியிருந்தாள். குன்றின் கீழே பதுங்கி அமர்ந்தேன். என்னுடைய எந்த அரவமும் அவளுக்கு கேட்கவில்லை. காத்திருந்து சலித்திருக்கலாம். அந்தியின் புற்றிலிருந்து கருக்கல் தலைநீட்டியது. மரத்திலிருந்து கீழே இறங்கி குன்றிலிருந்து மெல்லக் கால்வைத்து கீழே இறங்கினாள். எதிர்பாராத ஷணத்தில் அவளை ஏந்தினேன். உதிரும் மலரொன்றை கிளை ஏந்துமா? ஏந்தும்! மஞ்ஞை உதிரும் மலரல்ல. என்னை இறுக அணைத்து முத்தமிட்டு நனைத்தாள். எடை கூடிய பொழுதை எந்தப் பாடுமற்றும் என்னால் சுமக்கமுடியுமென ஆசிர்வதிக்கும் அருகதை அவளிடமிருந்தது. குன்று மரத்தடியில் பரவசத்தின் சங்கீத ஸ்வரங்கள் கிளைபிரிந்து அசைந்தன. ஓசைகள் அற்ற காட்டின் நடுவே, ஆதியின் முயக்கவொலி மூப்படைந்து நிறைகிறது. குன்றெழுந்து நிற்கும் காட்டுப்பூவரசில் வீசத்தொடங்குவது காற்று அல்ல. மஞ்ஞையின் மூச்சு. அவள் கண்களில் வழிவது கண்ணீரா! எனக்குள் அதிரும் தந்திகளை இவளே இயக்குகிறாள். ஒரு எழுத்துப்பிழையின் பிடிபடாத அர்த்தமென காமம் பொங்குகிறது. அழித்து அழித்துச் சரியாக எழுதும் அன்பின் ஈரச்சுவடுகள் குன்று மரத்தடியில் ஆழமாய்ப் பதிந்தன. கூவிக் கூவி அழைக்கும் தன் தொல்மரபின் பழக்கத்தை விட்டு குயில்கள் ரெண்டு எம்மையே பார்த்தபடியிருந்தன. “எப்போது தனியாகப் பார்த்தாலும் சேர்ந்து பிணைகிறோம். ஏதோவொரு பதற்றந்தான் நம்மை வழிநடத்துகிறதா” மஞ்ஞை கேட்டாள். நதியின் ஆழத்தில் அசையும் கூழாங்கல்லென குளிர்ந்ததொரு உச்ச நொடி. அப்படியே என் நெஞ்சில் சரிந்தாள். கொங்கைகள் அழுந்த கண்களை மூடியபடி கழுத்தின் வியர்வை குடித்தாள். தொலைவில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. கண்கள் வளர்ந்திருந்த மஞ்ஞையை தட்டியெழுப்பினேன். அவள் விழிப்புற்று என்னவென்று கேட்டாள். “ஆரோ வருகினம். கதைச்சுத் சத்தம் கேட்கிறது” சொன்னேன். காதைத் தீட்டி காட்டின் தாளில் வைத்தாள். நான் சில மாதங்களுக்கு முல்லைத்தீவில் வதியவேண்டியிருந்தது. எதற்கென்று யாரிடமும் சொல்லக்கூடாது. மஞ்ஞையை விட்டுச்செல்லும் துயரைச் சந்திக்கவியலாது முகத்தை திருப்பினேன். தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் அவளைச் சந்தித்தேன். பூதரவராயர் குளத்தடி, வடலிக்கூடல், குன்றுமரத்தடி, ஊஞ்சலாடி கட்டிடமென கூடிப்புணர்ந்தோம். “ஒரு வேலையாய் முல்லைத்தீவுக்கு போகவேண்டியிருக்கு, திரும்பிவர ரெண்டு மாசம் ஆகும்” என்றேன். மஞ்ஞை முகத்தில் தீப்பெருக்கு. “ரெண்டு மாசம் அங்க நிண்டு என்ன செய்யப்போகிறியள்” கேட்டாள். “சொந்தக்காரர் ஒருவர் படுத்த படுக்கையாகிவிட்டார் அவரை பராமரிக்கும் வேலைக்காகச் செல்லவிருக்கிறேன்” சொன்னதும், சின்ன வெறுப்புடன் “ ரெண்டு மாசத்தில அவர் செத்துப்போய்டுவாரா” என்று கேட்டாள். மேற்கொண்டு எதனைக் கதைத்தாலும் நான் உண்மையைச் சொல்ல வேண்டி வருமென்பதால் அமைதியாக இருந்தேன். “நான் இங்கேயிருந்து உங்களைப் பார்ப்பதற்காக முல்லைத்தீவு வருவேன். விலாசத்தை தந்துவிட்டுச் செல்லுங்கள்” என்றாள். தருவதாகச் சொன்னேன். ஊஞ்சலாடி கட்டிடத்திற்குள் நாமிருவரும் நிறைந்திருந்தோம். கூரைகளற்ற கட்டிடத்தின் மேலே வானம் கறுத்திருந்தது. அன்றைக்கும் முதல் துளி அவளது தொப்புளில் விழுந்தது. ஒரே மாதிரித்தான் ஒவ்வொரு துளியுமா என்றாள். ஒவ்வொரு துளியும் வேறு வேறானவை. ஒவ்வொரு துளிக்குள்ளும் எவ்வளவோ துளியல்லவா! என்றேன். “சரி. நாங்கள் இன்னொரு தடவை இந்த மழையை பெய்ய வைக்கலாம். ஆனால் நான் மேலிருப்பேன்” “இரு. உன்னுடைய மழை. உன்னுடைய துளி” என்றேன். “எங்கட நாட்டில இந்த தரித்திரம் பிடிச்ச சண்டையெல்லாம் முடிஞ்சு, ஒரு நல்ல காலம் வந்தால் எவ்வளவு சந்தோசமாய் இருக்கலாமெண்டு நினைக்கவே ஆசையாய் இருக்கு” என்றாள். “நல்ல காலம் வரும் மஞ்ஞை” கோலமயில் என்மீது அகவியது. மழை பொழியும் கார்த்திகையின் கானக வாசனை ஊஞ்சலாடி கட்டிடமெங்கும் ஊர்ந்து வந்தது. நான் முல்லைத்தீவுக்கு வந்து சேர்ந்தேன். வன்னியன் தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து மஞ்ஞையிடம் தகவல் சொல்லிவிடுமாறு கூறினேன். நான் கொடுத்துவந்த விலாசத்திற்கு கடிதம் வந்தால், அதனை வாங்கி வைக்குமாறு சொல்லியிருந்தேன். பிறகான நாட்களில் எந்த தொடர்பும் இருக்கவில்லை. மூன்று மாதங்கள் கழித்து அவளிடமிருந்து வந்த கடிதங்களைப் பெற்றுக்கொள்ள விலாசம் கொடுக்கப்பட்ட வீட்டிற்குச் சென்றேன். அங்கு எந்தக்கடிதங்களும் வரவில்லையென சொன்னார்கள். கேட்கவே திகைப்பாகவிருந்தது. தொலைத்தொடர்பு நிலையம் சென்று மஞ்ஞையிடம் பேசவேண்டும் அவருடைய வீட்டிற்கு தகவல் சொல்லி வரச்சொல்லுங்கள் என்றேன். சரி என்றார்கள். நீண்ட நேரமாகியும் பதில் அழைப்பு இல்லை. மீண்டும் அழைத்தேன். அவள் வீட்டில் இல்லை என்றார்கள். நான் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு கிளிநொச்சிக்கு வந்தடைந்தேன். நாம் சந்திக்கும் ஒவ்வொரு இடங்களுக்கும் ஓடிச்சென்றேன். எங்குமில்லை. அன்றிரவு பூதவராயர் குளத்தில் குளித்துவிட்டு நடந்து வந்தேன். மஞ்ஞை என்னை வழிமறித்து தன்னுடன் வருமாறு அழைத்துச் சென்றாள். ஈரம் துடைக்கவேண்டும் என்றேன். “இல்லை வா, நானே துடைக்கிறேன்” என்றாள். அவள் என்னை ஊஞ்சலாடி கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்றாள். “மஞ்ஞை இரவில இஞ்ச வந்து இருக்கிறது ஆபத்து. பாம்பு பூச்சிகள் கடிச்சுப் போடும்” என்றேன். அதொண்டும் கடிக்காது. வா… என்றாள். இரவின் சீவாளியை காற்றுச் சரிபார்த்தது. ஒவ்வொரு துளைகளையும் மூடித்திறந்த விரல்கள் மல்லாரி இசைத்தன. காற்றை ஊதும் தொண்டைப்பை விரிந்து சுருங்குகிறது. மூச்சு இழைந்து ராகமென தவிக்கிறது. ஸ்வரநீர் அணைசின் வழியாக இறங்கி நனைக்கிறது. அகவுகிறாள். தோகையென உடல் விரித்து அகவுகிறாள் மஞ்ஞை. “நீ ஏன் என்னை விட்டுச் சென்றாய்” கேட்டாள். “நான் எங்கே விட்டுச்சென்றேன். அதுதான் வந்து விட்டேனே” “இல்லை, நீ என்னை விட்டுச் சென்றிருக்கக் கூடாது” “மஞ்ஞை நான் என்ன செத்தாபோனேன். திருப்ப திருப்ப இதையே சொல்லிக்கொண்டே இருக்கிறாய்” வானத்தைப் பார்த்தபடி ஊடல் ஆடினோம். அவள் தொப்புளில் முதல் மழைத்துளி விழுந்ததும் “அய்யோ குண்டு விழுகுது” என்றாள். “உங்களுக்கு என்ன விசரே அது மழைத்துளி தான்” என்றேன். “இல்லை குண்டு விழுந்து கொண்டேயிருக்கு” என்றாள் அதிகாலையில் ஊஞ்சலாட்டு கட்டிடத்தில் கண்விழித்தேன். ஆடைகளை அணிந்து கொண்டு புறப்பட்டேன். மஞ்ஞை எனக்கு முன்பாகவே எழுந்து சென்று விட்டாளே, அவளுடைய வீட்டிற்கு சென்றுவிட்டு போகலாமெனத் தோன்றியது. படலையத் திறந்து கொண்டு உள்ளே போனேன். வீடு பூட்டிக்கிடந்தது. கதவைத் தட்டினேன். தாயார் வந்து கதவைத் திறந்தார். மஞ்ஞை இன்னும் வரவில்லையோ என்று கேட்டேன். அவள் இனிவரமாட்டாள் தம்பி என்றார். “நேற்று இரவு என்னுடன் தானிருந்தாள். சாமத்தில் தான் எழுந்து வந்திருக்கிறாள்” என்றேன். தாயார் வீட்டின் கதவை அகலத் திறந்தபடி கதறியழுதார். மஞ்ஞையின் சிறிய புகைப்படமொன்றுக்கு முன் அசைந்தாடிக் கொண்டிருந்தது சுடர். பிரபஞ்சமே அருந்தவம் செய்து ஏந்திய காற்றுச்சுடரின் அபிநயம் அணையுமோ! https://akaramuthalvan.com/?p=1702
  12. உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கின்றது, அறம் உட்பட! ஆனால் ஆசான் படித்த பாமரர்கள் முன்னால், அந்தப் பாமரர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக இருப்பது hopeless என்று அவர் நினைப்பதால் இருக்கலாம்!
  13. போர் நிறுத்தப் பேச்சு: ஹமாஸ் தலைவர் கெய்ரோவுக்கு விரைவு February 2, 2024 காசாவில் உயிரிழப்பு 27,000ஐ தாண்டியது முற்றுகையில் உள்ள காசா மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் காசாவில் முன்மொழியப்பட்ட போர் நிறுத்தம் தொடர்பில் பேசுவதற்காக ஹமாஸ் தலைவர் நேற்று (01) எகிப்து தலைநகர் கெய்ரோவை சென்றடைந்தார். இஸ்ரேலுடன் போரிட்டு வரும் ஹமாஸ் அமைப்பு முன்மொழியப்பட்டிருக்கும் ஆறு வார போர் நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு செய்து வருகிறது. பாரிஸில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்தப் போர் நிறுத்த முன்மொழிவு தயாரிக்கப்பட்டது. எனினும் நான்கு மாதங்களை நெருங்கும் இந்தப் போரில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் எந்தத் தணிவும் இன்றி நீடிக்கிறது. தெற்கு நகரான கான் யூனிஸை மையப்படுத்தி அங்கு போர் உக்கிரமடைந்திருக்கும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 27,000ஐ தாண்டியுள்ளது. இதன்படி காசாவில் குறைந்தது 27,019 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 66,139 பேர் காயமடைந்துள்ளனர் என்று பலஸ்தீன சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்கின் பிரதான நகரான கான் யூனிஸில் கடந்த புதன் இரவிலும் இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் உக்கிரமாக நீடித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. குறிப்பாக இரு மருத்துவமனைகளைச் சூழவே தாக்குதல்கள் இடம்பெற்றுவதாக உதவியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் கடந்த புதன்கிழமை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் காசாவில் மேலும் 119 பேர் கொல்லப்பட்டதாக அந்தப் பகுதிக்கான சுகாதார அமைச்சு கூறியது. இஸ்ரேலின் புதிய தாக்குதல்கள் குறிப்பாக காசா உள்துறை மற்றும் ஊடக அமைச்சு தலைமையகங்கள் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களால் காசா நகர வானில் கரும்புகை எழுந்ததாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் விபரித்துள்ளனர். மத்திய காசாவில் அல் நுஸைரத் அகதி முகாம் கடும் தாக்குதலுக்கு இலக்கானதோடு தெற்கு காசாவில் மிகப் பெரியதும் தொடர்ந்து இயங்கி வருவதுமான கான் யூனிஸ் நகரில் இருக்கும் நாசர் மருத்துவமனையைச் சூழ டாங்கிகள் குண்டு மழை பொழிந்ததாக பார்த்தவர்களை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கான் யூனிஸ் நகரில் உள்ள அகதி முகாம் ஒன்றில் இருந்து இஸ்ரேலிய வாகனங்கள் வெளியேறியதை அடுத்து அந்தப் பகுதியில் இருந்து 14 சடலங்களை பொதுமக்கள் மற்றும் அம்பூலன்ஸ் பணியாளர்கள் மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட உடல்கள் நாசர் மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டு அடக்கம் செய்வதற்காக தயார்படுத்தப்பட்டிருப்பதாக அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. “இங்கே இப்போது படுகொலை ஒன்று இடம்பெற்று வருகிறது” என்று பலஸ்தீன பகுதிக்கான எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் லியொ கேன்ஸ் குறிப்பிட்டார். காசாவில் உள்ள மருத்துவமனைகளின் கீழ் சுரங்கப்பாதைகளை செயற்படுத்தி வருவதாகவும் மருத்துவ வசதிகளை கட்டளை மையங்களாக பயன்படுத்தி வருவதாகவும் ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றம்சாட்டியபோதும் அதற்கான ஆதாரங்களை முன்வைக்க அதனால் இதுவரையில் முடியாமல் போயுள்ளது. ஹமாஸ் அமைப்பு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. மனிதாபிமான உதவிகள் தடைப்பட்டு வருவதன் காரணமாக மக்களிடையே பட்டினிச் சாவு ஏற்படும் சாத்தியம் பற்றி உலக சுகாதார அமைப்பின் அவசரப் பிரிவுக்கான பணிப்பாளர் மைக்கல் ரியான் புதனன்று (31) எச்சரித்திருந்தார். “காசாவின் பொதுமக்கள் இந்தப் போரின் பாங்குதாரர்கள் அல்ல என்பதோடு அவர்களும் அவர்களின் சுகாதார வசதிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார். மூன்று கட்டத் திட்டம் கட்டார் மற்றும் எகிப்து தலைமையிலான மத்தியஸ்த முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதோடு, ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே நேற்று கெய்ரோவை சென்றடைந்தார். கடந்த வார இறுதியில் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.சி. தலைவர் வில்லியம் பர்ன்ஸ் பாரிஸ் நகரில் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் போர் நிறுத்த முன்மொழிவு குறித்தே அவர் கெய்ரோவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். காசா பகுதியில் மேலும் உதவி விநியோகங்களுடன் ஆரம்பத்தில் ஆறு வார போர் நிறுத்தத்துடன் ஆரம்பிக்கும் மூன்று கட்டத் திட்டம் ஒன்று பற்றி ஆராயப்பட்டு வருவதாக ஹமாஸ் வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்டத்தில் காசா போராளிகள் தடுத்து வைத்திருக்கும் “பெண்கள், சிறுவர்கள் மற்றும் நோயுற்ற ஆண்கள் என 60க்கு மேற்பட்ட” பணயக்கைதிகள் மாத்திரம் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படவிருப்பதாக மேற்படி வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. மேலும் பணயக்கைதிகள் பரிமாற்றத்துடன் தொடர்புபட்ட சாத்தியமான அடுத்த கட்டங்களில் இஸ்ரேலிய படைகள் வாபஸ் பெறுவது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இஸ்ரேலிய தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் காசா பகுதியை கட்டியெழுப்புவதும் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ளது. சுமார் 1,140 இஸ்ரேலியர் கொல்லப்பட்ட கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்தே இந்தப் போர் வெடித்தது. இதில் போராளிகளால் கடத்தப்பட்ட சுமார் 250 பணயக்கைதிகளில் தொடர்ந்து 132 பேர் காசாவில் பிடிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இஸ்ரேல் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடத்திவரும் தாக்குதல்களால் காசா பகுதியில் பாதிக்கும் அதிகமான கட்டுமானங்கள் தரைமட்டமாக்கப்பட்டு அல்லது சேதமாக்கப்பட்டு மனிதர்கள் வாழ முடியாத பகுதியாக மாறி உள்ளது. உதவி விநியோகம் எனினும் காசாவில் இருந்து துருப்புகளை வாபஸ் பெறுவதை நிராகரித்திருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதாக மீண்டும் ஒருமுறை சூளுரைத்துள்ளார். அதேபோன்று உடன்படிக்கையின் ஓர் அங்கமாக ஆயிரக்கணக்கான பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கும் நெதன்யாகு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். காசாவில் பிடிக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளின் உறவினர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதால் நெதன்யாகு அரசு கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது. முன்கூட்டியே தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான குரலும் இஸ்ரேலில் வலுத்து வருகிறது. பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் ஒக்டோபர் தாக்குதலுடன் தொடர்புபட்டிருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதை அடுத்து பல நாடுகளும் உதவிகளை நிறுத்தியது காசாவில் மனிதாபிமான நெடிக்கடியை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்க உட்பட முக்கிய நன்கொடை நாடுகள் ஐ.நா நிறுவனத்திற்கான நிதியை நிறுத்தியுள்ளன. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் குழுக் கூட்டத்தில் பேசிய அதன் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், நன்கொடை நாடுகளை சந்தித்து அவைகளின் கவலைகளை கேட்டறிந்ததாகவும் நாம் எடுத்த நடவடிக்கைகள் பற்றி கோடிட்டுக் காட்டியதாகவும் கூறினார். இந்த நிதி நெருக்கடிக்குக் காரணமான இஸ்ரேலின் குற்றச்சாட்டு குறித்து சுயாதீன விசாரணைக்கு ஆதரவு வழங்குவதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் பேச்சாளர் டமரா அல்ரிபாய் ஏ.எப்.பி. இற்கு குறிப்பிட்டுள்ளார். ஜெரூசலத்தில் ஐ.நா தூதுவர்களை சந்தித்த நெதன்யாகு, பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தில் ஹமாஸ் முழுமையாக ஊடுருவி விட்டதாகவும் மற்ற நிறுவனங்கள் மூலம் அது மாற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். இந்தப் போர் பரந்த அளவில் தாக்கத்தை செலுத்தி வரும் சூழலில், மத்திய கிழக்கில் இயங்கும் ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. மறுபுறம் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் இஸ்ரேலிய படையினரின் சுற்றிவளைப்புகள் மற்றும் வான் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. https://www.thinakaran.lk/2024/02/02/world/39920/போர்-நிறுத்தப்-பேச்சு-ஹம/
  14. 32 வயதில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே கேன்சர் பாதிப்பால் உயிரிழந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Poonam pandey பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் பூனம் பாண்டே. இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நாஷா என்கிற இந்தி படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பேமஸ் ஆன இவர் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் ஆனது. தன்னுடைய நீண்ட நாள் காதலனான சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்துகொண்டார். கொரோனா சமயத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றதால், இதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். இதையடுத்து காதல் கணவருடன் ஹனிமூன் கொண்டாட கோவா சென்றிருந்த பூனம் பாண்டே, அங்கு தன் கணவர் தன்னை அடித்து துன்புறித்தியதாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து திருமணமான இரண்டே வாரத்தில் பூனம் பாண்டேவின் கணவர் சாம் மும்பை போலீசாரான் கைது செய்யப்பட்டார். பின்னர் சில தினங்களிலேயே தன்னுடைய கணவருடன் மீண்டும் இணைந்துவிட்டதாக பூனம் பாண்டே அறிவித்ததை பார்த்த நெட்டிசன்கள் அவர் விளம்பரத்திற்காக இதுபோன்று செய்துவருவதாக விமர்சித்தனர். இதுதவிர நிர்வாண படங்களிலும் நடித்து வந்த பூனம் பாண்டே அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தார். சமீபகாலமாக சோசியல் மீடியா பக்கமே தலைகாட்டாமல் இருந்த அவர் தற்போது மரணமடைந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் கேன்சர் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் "இன்று காலை எங்களுக்கு மிகவும் கடினமான ஒன்று. கர்ப்பப்பை புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதை உங்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர். பூனம் பாண்டேவின் மறைவு பாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. https://tamil.asianetnews.com/gallery/gallery/poonam-pandey-died-at-the-age-of-32-due-to-cervical-cancer-gan-s87u2c#image3
  15. ''ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தால் உட்கட்சி முரண்பாடுகள் வரும்’' - இரா.சாணக்கியன் வ.சக்தி கூட்டத்தை ஒத்தி வைப்பது தொடர்பான அதிகாரம் பதில் பொதுச் செயலாளருக்குத்தான் உள்ளது. இது ஒரு சட்ட ரீதியான விடயமாகும் அந்த அடிப்படையில் கூட்ட தீர்மானம் என்ன என்பது தொடர்பில் அவர் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக நான் அறிகின்றேன். அதற்குரிய கடிதத்தையும் நான் பார்த்திருந்தேன். இந்த விடையம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக்கள் வழங்கினால் உட்கட்சி முரண்பாடுகள் பல வரும் காரணமாக இதுதொடர்பில் மேலதிக விபரங்களை நான் தெரிவிக்க விரும்பவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை.சேனாதிராஜா, கட்சியின் கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்திருந்தார். உண்மையிலேயே கட்சியின் கூட்டங்களை நடாத்துவது, அதனை ஒத்திவைப்பது தொடர்பான அதிகாரங்கள் பொதுச் செயலாளருக்குத்தான் உண்டு. திருகோணமலையில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு பதில் பொதுச் செயலாளராக கடமையாற்றிய டொக்டர் சத்தியலிங்கம் வருகை தராத காரணத்தினால் கட்சியின் யாப்பின் பிரகாரம் இரண்டாவது துணைச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்றது. எனவே கூட்டத்தை நடாத்துவது. அதனை ஒத்தி வைப்பது தொடர்பான அதிகாரம் பதில் பொதுச் செயலாளருக்குத்தான் உள்ளது. இது ஒரு சட்ட ரீதியான விடயமாகும் அந்த அடிப்படையில் கூட்ட தீர்மானம் என்ன என்பது தொடர்பில் அவர் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக நான் அறிகின்றேன். அதற்குரிய கடிதத்தையும் நான் பார்த்திருந்தேன். இந்த விடையம் தொடர்பில் ஊடகங்களுககு கருத்துக்கள் வழங்குவது தொடர்பில் உட்கட்சி முரண்பாடுகள் பல வரும் காரணமாக இதுதொடர்பில் நான் மேலதிக விபரங்களை நான் தெரிவிக்க விரும்பவில்லை என்றார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அரசாங்கம் மூன்று வருடங்களாக வழங்காமல் உள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வடக்கு, கிழக்கிலுள்ள மாவட்டங்களுக்கு விசேட நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்க வேண்டும். யுத்தம் முடிவுற்று 15 வருடங்கள் கடந்த நிலையிலும் நாங்கள் இன்றுவரையில் எமது கோரிக்கைகள் அனைத்தும் தெற்கிலே இருக்கின்ற மாவட்டங்களோடு சமநிலைப்படுத்துவதற்கு மாறி மாறி வந்த அரசாங்கங்கள் அவற்றை மேற்கொள்வதற்குத் தவறியிருக்கின்றன. தேர்தல் வரவிருக்குமு் ந்நிலையில் 25 கோடி ரூபாய் நிதிதான் இந்த மாவட்டத்திற்கு தற்போது அபிவிருத்திக்காக வந்துள்ளது. அதுவும் மாவட்ட செலயகத்தின் ஊடாகத்தான் இந்த ஒதுக்கீடுகள் வருகின்றன. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே எந்த ஒதுக்கீடும் இல்லாத நிலையே இருக்கின்றது. இந்நிலையில் மக்களுடைய சிறிய சிறிய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது. இதேவேளை நிருவாக ரீதியான சீர்கேடுகளை நாம் சீர் செய்வதற்குரிய முயற்சிகளை எடுத்தாலும்கூட மக்களுடைய பொதுவான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு நிதி தொடர்பான விடையத்தில் போதுமான அளவு நிதியில்லை.மாறாக தெற்கிலே பல விடையங்க் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. (a) https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஊடகங்களுக்கு-கருத்து-தெரிவித்தால்-உட்கட்சி-முரண்பாடுகள்-வரும்/150-332522
  16. இளையராஜா இசை நிகழ்ச்சி; புதிய திகதிகள் அறிவிப்பு! கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் “என்றும் ராஜா ராஜாதான்” என்ற இசை நிகழ்ச்சிக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறித்த இசை நிகழ்வு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே நுழைவு சீட்டுக்களை பெற்றுள்ள மற்றும் பதிவு செய்துள்ளவர்கள், அந்த நுழைவுசீட்டுக்களையே பயன்படுத்தி நிகழ்ச்சியை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசை நிகழ்வு, கடந்த மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவிருந்தது. எனினும், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் புதல்வியும் பின்னணி பாடகியுமான பவதாரிணி, புற்றுநோய் காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இதனையடுத்து இசை நிகழ்வு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டது. (N) https://www.tamilmirror.lk/செய்திகள்/இளையராஜா-இசை-நிகழ்ச்சி-புதிய-திகதிகள்-அறிவிப்பு/175-332532
  17. ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை 115ஆவது இடம் புதியவன். டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊழல் மிக்க நாடுகளின் பட்டியலில் இலங்கை 115ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில் 100க்கு 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்ற நாடு என்ற வகையில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெறுகிறது. பூஜ்ய புள்ளி பெறும் நாடுகள் ஊழல்கள் மிக்க நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 180 நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பட்டியலுக்கு அமைய இலங்கை 2023 ஆம் ஆண்டு 115ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் இலங்கை 117 ஆவது இடத்தில் இருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையுடன் இந்தோனேஷியா , மலாவி, துருக்கி, ஈக்வடோர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் 115ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளன. ஊழலற்ற நாடாக டென்மார்க் முதல் இடத்தில் உள்ளதோடு தொடர்ந்து நியூசிலாந்து, நோர்வே, பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன. மேலும் தெற்கு சூடான், வெனிசுலா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் இறுதி இடங்களைப் பிடித்துள்ளன. நீதித்துறை பலவீனப்படுத்தப்படல், அரச அதிகாரிகளிடம் பொறுப்புக்கூறல் குறைதல் என்பன ஊழல் அதிகரிக்க காரணமாகவுள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/ஊழல்_நிறைந்த_நாடுகளில்_இலங்கைக்கு_115_இடம்:
  18. லண்டன் பிரமுகருடன் தொடர்பு – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், NIA அதிகாரிகள் சோதனை! February 2, 2024 நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீட்டில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தான் இன்று நாம் தமிழர் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று அதிகாலை முதல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட அமைப்புகள், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்போரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் பணியை என்ஐஏ மேற்கொண்டு வரும் நிலையில் இந்த ரெய்டு என்பது பெரும் அதிர்ச்சியை நாம் தமிழர் கட்சிக்கு கொடுத்தது. தமிழகத்தை பொறுத்தமட்டில் இன்று சென்னை, தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, கோவை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் சென்னை கொளத்தூரில் பாலாஜி, கோவையில் ஆலாந்துறை ஆர்ஜி நகர் நாம் தமிழர் கட்சியில் ஐடி விங்க் நிர்வாகி ரஞ்சித் குமார், கோவை காளப்பட்டி முருகன், தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இசை மதிவாணன் , சிவகங்கை மாவட்டம் இளையான்குடி விஷ்ணு பிரதாப் உள்ளிட்ட நிர்வாகிகளின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் விசாரணைக்கு முன்னிலையாகக் கோரி என்ஐஏ சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி என்ஐஏ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக்கூறி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கிய நிர்வாகிகள் மீது என்ஐஏ அதிகாரிகள் கண்வைத்துள்ளதால் நாம் தமிழர் கட்சி சிக்கலில் சிக்கலில் சிக்கி உள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை மேற்கொள்வதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருப்போரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த லண்டன் பிரமுகர் ஒருவருடன் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் பிரத்யேக செயலி ஒன்றின் மூலம் லண்டன் பிரமுகருடன் தொடர்பில் இருந்தாக கூறப்படுகிறது. இந்த தகவலை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் நாம் தமிழர் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த சோதனைக்கு முக்கிய காரணம் என்பது 2 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஓமலூரில் சிக்கிய 2 பேர் எனவும் கூறப்படுகிறது. அதாவது 2 ஆண்டுகளுக்கு முன்பு 2022ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காவற்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது செவ்வாய்பேட்டையை சேர்ந்த சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையத்தை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்பயப்ட்டனர். இவர்கள் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் கிளம்பியது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் 2 பேரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின்போது தான் நாம் தமிழர் கட்சி குறித்த தகவலை என்ஐஏ அறிந்ததாகவும், அதனடிப்படையில் அவர்கள் இன்று நாம் தமிழர் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டது தெரியவந்தது. https://globaltamilnews.net/2024/200289/
  19. சுயம் இழந்து, புலிகளின் ஒளியில் குளிர்காயும் தமிழ்க்கட்சிகள்! January 31, 2024 — கருணாகரன் — ஈழத்தமிழர்களின் விடுதலை மட்டும் கேள்விக்குறியாகவில்லை. விடுதலைப் போராட்டம் முறியடிக்கப்பட்டதற்குப் பின்னான (Post – War Politics) அரசியலும் கேள்விக்குறியின் முன்னேதான் நிற்கிறது. காரணம், போருக்குப் பின்னரான அரசியலைத் தமிழ்த்தரப்பு முன்னெடுக்கவில்லை என்பதேயாகும். போருக்குப் பிறகான அரசியல் எது? எப்படியானது? அதை எப்படி முன்னெடுப்பது என்ற தெளிவில்லாமல் அதை முன்னெடுக்கவே முடியாது. இந்தத் தெளிவைக் கொள்வது மிக முக்கியமானது. அதை விட அந்தத் தெளிவின் அடிப்படையில் துணிந்து அதைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது. ஏனென்றால் இன்னும் தமிழ் அரசியல் வெளியானது 1960, 1970, 1980 களின் அரசியலிலேயே உள்ளது. இதை தற்போதைய தமிழ் ஊடகங்கள், தமிழ் அரசியற் பத்தியாளர்களின் எழுத்துகள், அரசியற் கட்சிகளின் கொள்கைப் பிரகடனங்கள், தலைவர்களின் அறிவிப்புகளில் தெளிவாகக் காணலாம். ஆகவே இதைக் கடந்து போருக்குப் பிந்திய Post – War Politics அரசியலை முன்னெடுப்பதற்கு தெளிவும் அதை முன்னெடுக்கும் உறுதிப்பாடும் அவசியம். அதில்லாத காரணத்தினால்தான் தீவிரவாதம் பேசும் சிவஞானம் சிறிதரன் தமிழரசுக் கட்சிக்குத் தலைவராக முடிந்தது. சிறிதரனும் தமிழரசுக் கட்சியும் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பது கடும்போக்காளர் கஜேந்திரகுமாரைச் சுற்றி. சிறிதரன் மட்டுமல்ல, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விக்கினேஸ்வரன் போன்றோரும் கஜேந்திரகுமாரின் அரசியற் பிரகடனத்துக்குப் பின்னாலேயே ஓடிக் கொண்டிருக்கின்றனர். அதை விட்டு தாம் வேறு நிரலில் நின்றால், தம்மை மக்கள் நிராகரித்து விடுவார்களோ என்ற அச்சம் இவர்களைப் பாடாய்ப்படுத்துகிறது. மற்றும்படி இவர்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும், கஜேந்திரகுமாரின் பருப்பு எங்கும் வேகப்போவதில்லை என்று. அப்படித் தெரிந்து கொண்டே அதைத் தொடர்கிறார்கள் என்றால், இவர்களுக்குத் தங்களுடைய அரசியலில், தமிழர்களுக்கான அரசியலில், இந்தக் காலத்துக்கான அரசியலில் நம்பிக்கையும் தெளிவும் இல்லை என்றே அர்த்தமாகும். எத்தகைய சவால்கள், நெருக்கடிகள், எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு துணிந்து நின்று தமது அரசியலை முன்னெடுப்பதே தலைமைகளுக்கும் கட்சிகளுக்கும் அழகு. அதை இழந்தால் அவை தலைமைகளும் இல்லை. கட்சிகளும் இல்லை. இந்தக் கட்சிகள் மேலும் தடக்குப் படும் இடங்களுண்டு. சரியோ பிழையோ இந்தக் கட்சிகளும் தலைமைகளும் தமக்கென்ற அரசியற் பாரம்பரியத்தைக் கொண்டவை. உதாரணமாக ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கென்றொரு பாராம்பரியமும் அரசியற் கொள்கையும் உண்டு. அப்படித்தான் தமிழரசுக் கட்சிக்கும் புளொட்டுக்கும். ஆனால் இவற்றிற் சில அதைக் கைவிட்டு விடுதலைப்புலிகளின் ஒளியிலும் சிலபோது நிழலிலும் தமது அரசியலை மேற்கொள்கின்றன. இதற்கு மிகக் கிட்டிய உதாரணம், கடந்த வாரம் சிவஞானம் சிறிதரன், தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவானதற்குப் பின்பு, கிளிநொச்சியில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்று வழிபாடு நடத்திக் காட்சிப்படுத்தியதாகும். இதையிட்டு கடுமையான விமர்சனங்கள் பொதுவெளியில் எழுந்துள்ளன. பதிலாகச் சில ஆதரவான குரல்களும் அங்கங்கே ஒலிக்கின்றன. ஆனாலும் இதையெல்லாம் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோபக் கனல் எறிப்பதையும் நாம் காணமுடிகிறது. உதாரணமாக, “வலிக்கிறது. கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் அரசியல் மேடையாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை அனுமதிக்கக் கூடாது” என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளியாகச் செயற்பட்டவரும் தற்போது பசுமை ஆக்கச் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் ‘வன்னித் தமிழ் மக்கள் ஒன்றிய’த்தின் நிறுவனருமான கணபதி சிறிதரன் (தரன்ஸ்ரீ) குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் குறிப்பிடும்போது, “ராணுவத்தின் முற்றுகையில் களத்தில் கழுத்துப் பகுதியில் விழுப்புண் அடைந்து கதைக்க முடியாது. காலில் விழுப்புண் அடைந்து நடக்க முடியாது என்ற நிலையில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகில் இருந்த எங்களுக்கு உரித்தான (போராளிகளின்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். என்னோடு ஒன்றாகக் களமாடி, காயப்பட்டு நான்கு நாட்கள் கழித்து மரணத்தை அடைந்த நண்பனின் இறுதி நிகழ்வில் அவனுடைய உடலை நானும் சுமந்து விதைக்க வேண்டும் என்று விரும்பினேன். நடக்கவே முடியாது. முழுமையாக கதைக்க முடியாது. இருந்தும் இறுதித் தருணத்தில் நண்பனின் வித்துடலுக்கு விடை கொடுப்பதற்காக கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்றேன். ஒன்றாகப் பழகி உணவு அருந்தி, அருகில் உறங்கி, களமாடிய நண்பனை விதைப்பதற்காக… இப்பொழுது ஒவ்வொரு தடவையும் தாய்மண்ணுக்கு செல்லும்போதும் துயிலும் இல்லங்களுக்கு செல்வதற்கு நான் தவறுவதில்லை. இந்த தடவையும் நான்கு துயிலும் இல்லங்களுக்கு சென்றேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் அங்கே நான் புகைப்படங்களை எடுப்பதில்லை. ஆனால் பல ஆயிரம் நினைவுகளை மட்டும் மனதுக்குள் சுமந்து கொள்வேன்… வலிகளோடு… இன்று துயிலும் இல்லங்களும் அரசியல் மேடைகளாக மாற்றப்பட்டுள்ளன. அங்கே விடுதலைக்காகப் போராடித் தம்மை அர்ப்பணித்த ஆன்மாக்கள் அமைதியாக உறங்க வேண்டும். அவற்றை அரசியல் நாடகத்தினால் குலைக்கக் கூடாது….” என்று தரன்ஸ்ரீ குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு முன்பு, மாவீரர் நாளொன்றில் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் சிறிதரன் மாவீரர்நாள் சுடரை ஏற்றியிருந்தார். அதற்குப் பின்னர் அவர் அப்படிச் கூடர் ஏற்றக் கூடிய சூழல் அங்கே இருக்கவில்லை. அதற்கு மக்களும் போராளிகளும் இடமளிக்கவில்லை. ஆயினும் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தான் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அங்கே சென்று வழிபாட்டைச் செய்துள்ளார் சிவஞானம் சிறிதரன். இது பல தரப்பிலும் கடுமையான விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. இதற்கு முன் புலிகளின் காலத்திலும் சரி பின்னரும் சரி, எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறு எந்தவொரு அரசியற் தரப்பும் மாவீரர் துயிலும் இல்லங்களைத் தம்முடைய அரசியல் மேடையாகப் பயன்படுத்தவில்லை என்கின்றனர் அவர்கள். மட்டுமல்ல, “பேச்சுவார்த்தைக்குச் செல்லும்போதும், போர்க்களத்துக்குச் செல்லும்போதும் கூட மாவீரர் துயிலுமில்லங்களை ஒரு அரசியற் களமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தவில்லை. துயிலுமில்லங்களை அவர்கள் உயரிய இடத்தில் வைத்தே நோக்கினர் என்றும் கூறுகிறார்கள். ஆகவே இது தனியே தரன்ஸ்ரீயின் கவலை மட்டுமல்ல, வேறு பலருடைய கவலைகளும்தான். 2009 க்குப் பிறகு, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், அவர்களுடைய கொள்கையை, சித்தாந்தத்தை முன்னெடுப்போர், அவற்றின் தொடர்ச்சியாளர்கள் தாமே என்று தம்மைத் தாமே பிரகடனப்படுத்திக் கொண்டு இன்று, தமிழ் அரசியல் வெளியில் அரசியல் நாடகமாடும் போக்கு வரவரக் கூடியிருக்கிறது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸினர் (கஜேந்திரன், கஜேந்திரகுமார் அணி) தொடக்கம், தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறிதரன் வரையில் சிலர் இந்த நாடக அரசியலை எந்தக் கூச்சமுமின்றி மேற்கொள்கின்றனர். புலிகளின் தொடர்ச்சி தாம் என்று சொல்லும் இவர்கள், விடுதலைப் புலிகள் முன்னெடுத்த எந்தவொரு அரசியல் செயற்பாட்டு வடிவத்தையும் தமது அரசியலில் கொண்டிருக்கவில்லை. உதாரணமாக, புலிகள் போராடிக் கொண்டு – களத்தில் பெரும் சமராடிக் கொண்டே – மறுபக்கத்தில் சமூக வேலைத்திட்டங்களில் ஈடுபட்டனர். சூழலையும் பண்பாட்டையும் பாதுகாத்தனர். பொருளாதாரக் கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்தனர். பொருளாதாரத் தடைகளின் மத்தியிலும் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொறிமுறையை உருவாக்கிச் செயற்படுத்தினர். சட்ட விரோத மது உற்பத்தி மற்றும் விற்பனையை இல்லாதொழித்தனர். மண்ணகழ்வைத் தடுத்தனர். மொத்தத்தில் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கி வைத்திருந்தனர். ஊழலையும் பொறுப்பின்மையையும் அதிகார துஸ்பிரயோகத்தையும் இல்லையென்றாக்கினர். அவர்கள் உருவாக்கிய காடுகள் பல இடங்களிலும் இன்னும் உண்டு. பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் மரமுந்திரிகை, வேம்பு போன்ற தோப்புகள் வன்னியில் உள்ளன. சாதி, மத, பிரதேச வேறுபாடுகளற்ற ஒரு சமத்துவச் சமூகம் அப்போதிருந்தது. இதில் ஒரு சிலவற்றைக் கூட தற்போதைய அரசியற் தரப்புகள் மேற்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் நான்கு மரக்கன்றுகளைக் கூட நட்டுப் பராமரித்து வளர்க்க முடியாத நிலையில்தான் இவை உள்ளன. காடழிப்பும் மணல் அகழ்வும் சட்டவிரோத மது உற்பத்தியும் மதுப்பாவனையும் கட்டற்று அதிகரித்திருக்கிறது. இவற்றையெல்லாம் வெளியே இருந்து வந்து யாரும் செய்யவில்லை. அவ்வளவும் வடக்கில் – நம்முடைய சூழலில் உள்ளோரே செய்கின்றனர். இன்னும் சரியாகச் சொன்னால், இந்தத் தரப்பினரின் ஆதரவாளர்களிற் பலர் இவ்வாறு சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, சாவகச்சேரி போன்ற நீதி மன்றங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் உரிமையாளர்களையும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிற மணல் மற்றும் மரங்களையும் கொண்டு வந்தோரையும் ஆராய்ந்தால் அவர்கள் அனைவரும் நம்முடைய சூழலைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்து கொண்டே புலிகளின் அரசியலைத் தொடர்வதாகப் பாவ்லா காட்டுகிறார்கள். கிழக்கு மாகாணத்தின் நிலை சற்று வேறு. அங்குள்ள சமூகச் சூழலின் அடிப்படையில் சில பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் நிலவரம் வேறாக இருந்தது. அங்கும் இப்பொழுது மணல் அகழ்வும் சூழல் சிதைப்பும் சாதாரணமாகியுள்ளது. சரி, இன விடுதலை சார்ந்து புலிகளின் அரசியல் கோரிக்கையோடு பயணிப்பதாக இருந்தாலும் அதை முன்னெடுப்பதற்கான அரசியற் கட்டமைப்பும் பொறிமுறையும் இவர்களிடம் கிடையாது. வெறுமனே வாய்ச்சவாடல்களைச் செய்து இலங்கை அரசையும் சிங்கள இனவாதத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமா? ஆக அதுவும் பொய்யான நாடகமே! தவிர, விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள் இன்னும் நிர்க்கதியான நிலையில்தான் வாழ்கின்றனர். மாவீரர் குடும்பங்கள் பலவும் நெருக்கடியான வாழ்க்கையில் உள்ளனர். அவர்களைப் பராமரிப்பதற்கான, அவர்கள் சுயமாக வாழக்கூடிய ஏற்பாடுகளைக் கூட இவர்கள் செய்யவில்லை. அதற்கான எந்தப் பொறிமுறையும் இவர்களிடம் கிடையாது. ஆனால், மேடைகளிலும் பத்திரிகை அறிக்கைகளிலும் புலிகளின் இன்றைய பிரதிநிதிகள் போலத் தம்மைக் காண்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். இதற்காக புலிகள் தரப்பில் போராடி சாவினைத் தழுவிக் கொண்ட திலீபன் நினைவுநாள் தொடக்கம் புலிகளால் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் மாவீரர்நாள் வரையிலும் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள விளைகின்றனர். இதனுடைய உச்சக்கட்டமாகவே தற்போது தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறிதரனின் துயிலுமில்ல நாடகமும் நடந்தேறியுள்ளது. தம்மால் சுயமாக எதையும் செய்ய முடியாத நிலையில் புலிகளின் – அவர்களுடைய மாவீர்களின் ஒளியில் தங்களுடைய அரசியலை இவர்கள் மேற்கொள்ள விளைகின்றனர். இது அந்தப் போராளிகளுக்கும் அவர்களைப் பெற்று வளர்த்த பெற்றோருக்கும் அவர்களை மதிக்கின்ற மக்களுக்கும் இழைக்கின்ற அநீதியாகும். யுத்தத்தின்போது படையினர் ஆக்கிரமித்த பிரதேசங்களில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்கள் சிதைக்கப்பட்டன. “அது மிகமோசமான ஒரு பண்பாட்டுச் சிதைப்பு. அதற்காக எப்போதும் சிங்கள மக்களும் அவர்களுடைய வரலாறும் தலைகுனிய வேண்டும்” என்று அப்போது அரசியல் விமர்சகர் மு.திருநாவுக்கரசு குறிப்பிட்டிருந்தார். உண்மையும் அதுதான். என்னதான் எதிர்த்தரப்பாக இருந்தாலும் எவருடைய புதைகுழிகளையும் நினைவிடங்களையும் சிதைக்கும் உரிமை எவருக்கும் இல்லை. அப்படிச் செய்தால் அதொரு பண்பாட்டு அழிப்பே. நிச்சயமாக அரசியல் பண்பாடு வீழ்ச்சியடையும் இடங்களிலேயே இவ்வாறான செயல்கள் நிகழ்ந்தேறும். ஏறக்குறைய அப்படியான ஒரு பண்பாட்டுச் சிதைப்பே, இப்பொழுது நடந்து கொண்டிருப்பதுமாகும். தமது அரசியல் ஆதாயங்களுக்காக போராளிகளையும் போராட்டத்தில் தம்முடைய இன்னுயிரை ஈய்ந்தோரையும் பயன்படுத்திக் கொள்ளுதல் மிகத் தவறானதாகும். இந்த வியாபாரத்துக்கு மக்களும் இடமளிக்கக் கூடாது. அப்படி இந்த அரசியல் தரப்பினர் தம்மைப் புலிகளின் தொடர்ச்சியாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றால், (கவனிக்கவும், உருவாக்கிக் கொள்ளல் அல்ல. உருவகித்தல் என்பதை) புலிகளைப் போலச் செயற்திறனுள்ளவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதைச் செய்யாமல் வாய்ச்சொல் வீரர்களாக இருப்பது பொருத்தமற்றது. அது புலிகளுடைய இயல்புக்கும் அடையாளத்துக்கும் மாறானது. எதிரானது. (குறிப்பு – இந்தக் கட்டுரை புலிகளை தமது அரசியல் எஜமானர்களாகக் கருதிக் கொண்டு அல்லது புலிகளின் தொடர்ச்சி தாம் என்று உருவகித்துக் கொண்டு செயற்படும் அரசியற் தரப்பினைக் குறித்த விமர்சனங்களுக்காக எழுதப்பட்டது) https://arangamnews.com/?p=10415
  20. இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்குக் கறுப்புநாள்! பேரணிக்கு அழைக்கின்றது யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் (ஆதவன்) இலங்கையின் சுதந்திரதின நாளை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்துவதுடன், அன்று பேரணி ஒன்று முன்னெடுக்கப்படும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 4ஆம் திகதி கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் இருந்து டிப்போச் சந்தி வரையில் நடத்தப்படவுள்ள பேரணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்னர் இருந்தே தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புகள் ஆரம்பமாகியிருந்தன. இந்த இனவழிப்புச் செயன்முறை 2009ஆம் ஆண்டு ஈழப்போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகத்தைச் சூறையாடுவதில் தீவிரநிலை கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி, பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் என் பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு, தமிழர் தாயகத்தின் மீதான திட்டமிட்ட சிங்கள - பௌத்த குடியேற்றங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் உடனடியாக நிறுத்தப்பட்டு தமிழர் தாயகத்தின் நில ஒருமைப்பாடு பாதுகாக்கப்படவேண்டும். ஈழத்தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆள்வதற்கும் வழிநடத்துவதற்கும் சுய நிர்ணய உரிமை உடையவர்களாவர் என்பதை ஏற்று ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான முயற்சிகள் யாவும் திம்புக் கோட்பாட்டை அடியொற்றியே முன்னெடுக்கப்பட வேண்டும். சிறிலங்கா ஒற்றையாட்சி அரசமைப்புக்குட்பட்ட 13ஆம் திருத்தத்தை முற்றாக நிராகரிக்கின்றோம். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், இராணுவப் பிரசன்னம், சிங்கள பௌத்தமயமாக்கல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றுக்கான தீர்வுகள் தாமதமேதுமின்றி வழங்கப்பட வேண்டும் - என்றுள்ளது. https://newuthayan.com/article/இலங்கையின்_சுதந்திரதினம்_தமிழர்களுக்குக்_கறுப்புநாள்!
  21. சிறீதரனுக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் எஸ்.சிறீதரனுக்கு எம். ஏ.சுமந்திரன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதம் வருமாறு, முதலிலே தமிழ் மக்களின் முதன்மைக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன் கடந்த 21ம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பிலே தாங்கள் அதிகப்படியான வாக்குகளாலே தெரிவுசெய்யப்பட்டமை எமது கட்சியின் வரலாற்றிலும் இந்நாட்டின் வரலாற்றிலும் ஒரு முன்னுதாரணமாக திகழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வாக்கெடுப்பில் கலந்துகொண்ட பொதுச்சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட முறைகள், யாப்புக்கு முரணாக பலர் சேர்த்துக்கொள்ளப்பட்டமை சம்பந்தமாக பல நியாயமான கருத்துக்கள் வெளிப்பட்டாலும், போட்டியாளன் என்றவகையிலே அந்த முடிவை நான் முழுமையாக, பகிரங்கமாக ஏற்றிருக்கின்றேன். இது எங்கே சவாலுக்குற்படுத்தப்பட்டாலும் இந்த முடிவு என்னால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற என்னுடைய உறுதியான நிலைப்பாட்டை நான் தொடர்ந்தும் பேணுவேன் என்பதை மீளவும் எழுத்தில் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். பல குறை நிறைவுகளோடு ஒரு தேர்தல் நடைபெற்றாலும் அதில் பங்குபற்றிய பின்னர் தோல்வியுற்றதன் காரணமாக அந்த முறைமை தவறென்று சொல்லுகின்ற முன்னுக்குப்பின் முரணான செயலை நான் எப்போதும் செய்ய மாட்டேன். மாநாட்டை ஒட்டிய மத்திய செயற்குழு கூட்டம், அமைப்பு விதி 10 இன் படி கடந்த 27ம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு திருகோணமலை JKABS Beach Resort Hotel இல் கூடியபோதும் அதன் பின்னர் அமைப்பு விதி 7 (இ) இன்படி விஷயாலோசனை சபையாக பொதுச்சபை கூடியபோதும், பதில் பொதுச் செயலாளர் வைத்தியர் பா. சத்தியலிங்கம் சமூகமளித்திருக்காத சூழ்நிலையில் பிரதிப் பொது செயலாளராகிய நான் அக்கூட்டங்களின் செயலாளராக கடமையாற்றியவன் என்ற வகையில் கீழ்வரும் விடயங்களை தங்கள் மேலான கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றேன். 1. மத்திய செயற்குழு கூட்டத்தின் ஆரம்பத்தில் தாங்கள் என்னை கூட்டத்தின் பின்புறத்திற்கு அழைத்து தனியாக பேசிய வேளையில் இரண்டணிகளாக பிரிந்திருக்கும் கட்சி ஒன்றித்து பயணிக்க வேண்டும் என்ற கருத்தை தாங்கள் சொன்னபோது, அப்படி நிகழ்வதாக இருந்தால் தாங்கள் தலைவராகவும், நான் பொதுச் செயலாளராகவும் இருந்தால் மாத்திரமே அது சாத்தியமாகும் என்று உங்களுக்கு சொன்னேன். ஆனால் அது முற்றுமுழுதாக உங்களது கையிலேயே இருக்கின்றது என்பதையும் கூறினேன். அப்படியாக நாங்கள் இருவரும் இயங்குவது சம்பந்தமாக தங்களுக்கு பூரண இணக்கப்பாடு உள்ளது என்பதை கூறிய நீங்கள் கிழக்கு மாகாணத்திற்கு பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்படவேண்டுமென்கின்ற எதிர்பார்ப்பை எப்படி பூர்த்திசெய்ய வேண்டும் என்ற வினாவினை எழுப்பியிருந்தீர்கள். அதனை கூட்டத்தின்போது மற்றவர்களோடு பேசி தீர்ப்போம் என்று நான் கூறிய பின்னரே கூட்டம் ஆரம்பமானது. 2. கூட்டத்தின் ஆரம்பத்தில் சிரேஷ்ட உபதலைவர் பதவியை தாங்கள் எனக்கு கொடுப்பதாக பெருந்தன்மையோடு முன்வந்தபோது, நான் அதனை நிராகரித்ததற்கான காரணமும் மேற்சொன்ன எமது கலந்துரையாடல் தான். அதையே நான் கூட்டத்திலேயும் கூறியிருந்தேன். ஒரு பொது இணக்கப்பாட்டை எய்துவதற்கு இரண்டு இலக்குகள் அடையப்பட வேண்டும் என்று நான் அவற்றை அடையாளப்படுத்தினேன், 1. தலைவர் தெரிவிலே பிரிந்திருப்பதாக காணப்படும் இரு அணிகளும் ஒன்றுசேர்வது. II. பொதுச் செயலாளர் பதவி கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படுவது. இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட தாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. பா. அரியநேத்திரன், திரு. சீ.யோகேஸ்வரன், திரு. ஞா.ஸ்ரீநேசன் ஆகியோரோடு உரையாடிவிட்டு திருகோணமலை மாவட்ட கிளைத்தலைவர் திரு. சண்முகம் குகதாசன் அவர்களை “மட்டக்களப்பின் சம்மதத்தோடு” பொதுச்செயலாளர் பதவிக்கு தெரிவு செய்வதாக அறிவித்தீர்கள். இதை மத்திய செயற்குழு எவ்வித ஆட்சேபனையுமின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. இந்த முன்மொழிவை பொதுச்சபைக்கு மத்திய செயற்குழுவின் சிபாரிசாக முன்வைப்பதென்றும் இணங்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக பொதுச்சபையிலே இந்த முன்மொழிவுக்குப் போட்டியாக மத்திய செயற்குழு உறுப்பினர் இன்னொருவரின் பெயரை யாரவது முன்மொழிந்தால் அந்தப் பெயருக்குரியவர் அந்தப் போட்டியிலிருந்து தான் வாபஸ் பெறுவார் என்றும் இணங்கப்பட்டது. 3. பொதுச் செயலாளர் பதவிக்கு இப்படியாக ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டதன் காரணமாக, மற்றைய பதவி நிலைகளுக்கும் சேர்ந்து ஒரு இணக்கப்பாட்டிற்கு வருமாறு உங்களையும் என்னையும் மதியசெயற்குழு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கேட்டுக்கொண்டதற்கிணங்க நாம் இருவரும் மேடையில் அமர்ந்திருந்து இரு தரப்பினரின் பாரிய விட்டுக்கொடுப்புக்களோடு அப்படியானதொரு இணக்கப்பாட்டை எய்தினோம். இதிலே தலைவர் ஸ்தானத்தில் இருந்திருந்தும் கூட பல விட்டுக்கொடுப்புக்களை செய்ய நீங்களும் முன்வந்ததை நான் மனதார மெச்சுகிறேன். 4. இதைத் தொடர்ந்து பொதுச்சபை கூடியபோது அமைப்புவிதி 13 (உ) 1. இன்படி தலைமைதாங்கிய நீங்கள் மத்திய செயற்குழுவின் பிரேரணையை பொதுச்சபையில் முன்வைத்தீர்கள். பல வாதப்பிரதிவாதங்கள், சண்டைகள் நிகழ்ந்தாலும் கூட, நீங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி மத்திய செயற்குழுவின் யோசனையை தங்களது முன்மொழிவாக பிரேரித்தீர்கள், அதை திரு. பீட்டர் இளஞ்செழியன் வழிமொழிந்தார். மாற்று முன்மொழிவு எதுவும் இல்லாத நிலையில் பொதுச்சபை இதை ஏற்றுக்கொண்டது. இதை தாங்கள் கையாண்ட விதம் தங்களது ஆளுமையின் வெளிப்பாடு என்பதை அந்த நேரத்திலேயே நான் தங்களை பாராட்டியிருந்தேன் என்பதை தற்போது பதிவு செய்கிறேன். மதிய உணவுக்காக கூட்டம் கலைந்தபோது, திரும்பவும் கூடவேண்டிய தேவை இல்லை என்று பலர் சொன்னபோது, முன்னாள் தலைவர் அவர்கள் மாநாட்டு தீர்மானங்கள் சம்பந்தமாக பேசவேண்டும் என்று கூறியதன் காரணத்தால் தான் மதிய உணவுக்கு பின்னர் மீண்டும் கூட நேர்ந்தது. 5. மதிய உணவு இடைவேளைக்குப்பின் பொதுச்சபை மீண்டும் கூடியபோது, தங்களால் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு, முன்னர் சபை ஏற்ற தீர்மானத்தை இப்போது தமது நிலைப்பாட்டை மாற்றி அதனை நிராகரிப்பதாக ஒரு சிலர் குழப்பம் விளைவித்தனர். வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். ஏற்கனவே இடைவேளைக்கு முன்னர் சபை ஏற்றுக்கொண்ட தீர்மானத்தை மீண்டும் பரிசீலிக்க முடியாதென்று சொன்னதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அதனால், நீண்ட இழுபறிக்குப்பின் அந்த வாக்கெடுப்பை செயலாளர் ஸ்தானத்திலிருந்து நடத்துமாறு தாங்களும் என்னைக் கேட்டுக்கொண்டீர்கள். அப்படி வாக்கெடுப்பை நடாத்த என்னைப் பணிப்பதாக முன்னாள் தலைவரும் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்தார். வாக்கெடுப்பு நடத்தப்படுவது முறையற்றது என்ற கருத்தினை நான் கொண்டிருந்தபோதும் தங்கள் இருவரினதும் பணிப்புரைக்கமைய இவ்வாக்கெடுப்பை நடத்தினேன். அந்த வாக்கெடுப்பு எவ்வித குழப்பமுமின்றி ஒழுங்காக அவசரமின்றி நடத்தப்பட்டது தாங்கள் அறிந்ததே. மத்திய செயற்குழுவின் முன்மொழிவை ஏற்றுக்கொள்கிறவர்கள் முதலிலே கைகளை உயர்த்திக் காண்பித்தார்கள். அவை நிரை நிரையாக ஒழுங்காக எண்ணப்பட்டது. நான் அதனை ஒலிபெருக்கி மூலமாக எண்ணுகிறபோது, வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென்று கூறியிருந்த திரு. கருணாகரன் நாவலன் அவர்களும் கூடவே எழுந்துநின்று உயர்த்தப்பட்ட கைகளை எண்ணி இறுதியிலே அதன் தொகை 112 என்பதை உறுதிப்படுத்தினார். அதன் பின்னர், மத்திய செயற்குழுவின் தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் கைகளை உயர்த்தியபோது அவர்களின் தொகை 104 என்று என்னாலும் திரு. நாவலன் அவர்களாலும் உறுதிப்படுத்தப்பட்டது. வாக்களிப்பிக்கை நடத்திவிட்டு நான் வந்து அமர்ந்தபோது அதன் முடிவை அறிவிக்குமாறு நீங்கள் கேட்டுக்கொண்டதற்கமைய மீளவும் நான் ஒலிபெருக்கியிடம் சென்று, முடிவை அறிவித்தேன். அப்படியாக அது பதிவுசெய்யப்பட்டது. அதன் பின்னர், அடுத்தநாள் அதாவது 28.01.2024 அன்று மாநாட்டுக்காக கூடுவோம் என்று அறிவித்ததோடு கூட்டம் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டது. மத்திய செயற்குழுவினுடைய முன்மொழிவை பொதுச்சபை மதிய உணவு இடைவேளைக்கு முன்னரே ஏற்றிருந்த வேளையில், அது சம்பந்தமாக திரும்பவும் வாக்கெடுப்பொன்று நடாத்துவது தேவையற்றதும் முறையற்றதும் என்று நான் கூறியிருந்த பொழுதிலும், அப்படியான வாக்கெடுப்பை ஒரு சிலர் வலியுறுத்துகிறார்கள் என்ற காரணத்திற்காக அதை நடத்துமாறு என்னைப் பணித்திருந்தீர்கள். அப்படியாக வலியுறுத்தியவர்கள் அந்த வாக்கெடுப்பிலே முற்றுமுழுதாக கலந்துகொண்டார்கள். அது மட்டுமல்ல உயர்த்திய கைகளை எண்ணுகிற பணியிலும் சேர்ந்து ஈடுபட்டு அந்த எண்ணிக்கைகளை உறுதிப்படுத்தினார்கள். ஆகவே அந்தத் தீர்மானம் ஒரு தடவை அல்ல இரண்டு தடவைகள் அவர்கள் கேட்டுக்கொண்ட முறைக்கு அமைவாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. வாக்கெடுப்பில் கலந்து கொண்டபிறகு அதில் தோற்ற காரணத்தினால் வாக்கெடுப்பு முறை தவறென்று சொல்லுவது முறை கேடான செயலென்பதற்கப்பால் சட்டத்தின் அடிப்படையிலும் அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிலைப்பாடு. வென்றால் முறைமை சரி, தோற்றால் முறைமை பிழை என்பது கீழ்த்தரமான செயற்பாடாகும். குற்றவியல் சட்டக் கோட்பாடுகளிலே இதனை VOLUNTI NON FIT INJURIA என்பார்கள். இதற்குரிய சிறந்த உதாரணம்: குத்துச்சண்டை மேடைக்குள்ளே தானாக இறங்கியபிறகு தன்னை மற்றவர் அடிக்கிறார் என்று குற்றம் சொல்ல முடியாது. குடியியல் சட்டக் கோட்பாடுகளில் இதனை ACQUIESCENCE என்றும் ESTOPPEL BY CONDUCT என்றும் சொல்வார்கள். எமது கட்சி யாப்பு விதிகளுக்கு அமைவாகவும், சட்டப்படியும் தாங்களே இப்பொழுது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர். 28.01.2024 ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக நடைபெறவிருந்த பொது நிகழ்வு தவறான ஆலோசனைகளின் பேரிலும், கலந்துரையாடல் இன்றியும், அதிகாரமற்றதும் சட்டத்துக்கு முரணான அறிவிப்பினாலும் துரதிர்ஷ்டவசமாக பிற்போடப்பட்டுவிட்டது. எமது வரலாற்றில் முதன்முறையாக வாக்கெடுப்பினாலே தெரிவுசெய்யப்பட்ட தலைவராகிய நீங்கள் அப்படியான அதற்குகந்த விமர்சையோடு வைபவரீதியாக பதிவியேற்பது முக்கியமான விடயமாகும். அதுமட்டுமல்லாமல், தங்களது தலைமையுரையில் எமது மக்களுக்கான விடிவுப் பாதை எப்படியானது என்ற தங்களது யோசனைகளை செவிமடுக்க பலரும் காத்திருந்தார்கள். அத்தோடு, எமது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் அது முற்றுப்பள்ளி வைத்திருக்கும். ஆகவே தயவு செய்து காலம் தாழ்த்தாது வெகு விரைவில் அந்த பகிரங்க பொது நிகழ்வை நடாத்துமாறும் அன்புரிமையோடு நான் கேட்டுக்கொள்கின்றேன். இந்த விடயம் சம்பந்தமாக பலதரப்பட்ட குழப்பமான செய்திகள் பொது வெளியில் பரவுகின்ற காரணத்தினாலே கட்சியின் நலன் கருதி இக் கடிதத்தை ஊடகங்களுக்கும் வெளியிடுகின்றேன். தங்கள் உண்மையுள்ள ம. ஆ. சுமந்திரன முன்னாள் பிரதிப் பொதுச் செயலாளர் -(3) http://www.samakalam.com/சிறீதரனுக்கு-சுமந்திரன்/
  22. வலி வடக்கில் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிலங்களில் 500 ஏக்கரைச் சுவீகரிக்க முயற்சி! (இனியபாரதி) யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது. யாழ். சர்வதேச வானுர்தித்தளம் (விமான நிலைய) அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளுக்காகத் தற்போது படையினரிடம் உள்ள நிலங்களுடன் 500 ஏக்கரைச் சுவீகரித்துத் தருமாறு வானுர்தி(விமானப் போக்குவரத்து) அதிகார சபை விடுத்த கோரிக்கைக்கமைய இன்று நில அளவைப் பணிமனிமனை அதிகாரிகள் அப்பகுதிக்கு வருகை தந்து பார்வையிட்டுச் சென்றனர். இதற்கமைய ஏற்கனவே மக்களிடம் கையளிக்கப்பட்ட குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையிலேயே இந்த 500 ஏக்கரை சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுகின்றது. வானுர்தி (விமானப் போக்குவரத்து) அதிகார சபை ஊடாக நில அளவைத் திணைக்களத்திடம் சமர்ப்பித்த வரைபடம் சகிதம் சுவீகரிக்க முயற்சிக்கும் பகுதிகளின் கிராமசேவகர்களும் இதன்போது அப்பகுதிகளை நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றதனால் அப் பகுதி மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர். வலி. வடக்கில் ஏற்கனவே படையினரிடம் மூவாயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இதனை விடுவிக்குமாறு பலகோரிக்கைகள் முன்வைத்தபோதும் மௌனம் காக்கும் அரசு தற்போது இந்த இரகசிய முயற்சியில் ஈடுபடுகின்றமை அம்பலமாகியுள்ளது. வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ்-கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை(30) தெல்லிப்பழை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது காணி விடுவிப்பு மற்றும் விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரிடம் கேள்வியெழுப்பட்டது. இதன்போது விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்க எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் இது தொடர்பில் ஆராய்வதாகவும் தெரிவித்தார். இதேவேளை விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என தெரிவித்த வலி.வடக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன், அல்லாவிடின் அதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் நிம்மதியாக வாழும் சூழலில் இவ்வாறு மீளவும் காணிகளை சுவீகரிக்க முயற்சிப்பதை ஏற்கமுடியாது என்றார். https://newuthayan.com/article/வலி__வடக்கில்_மக்களிடம்__கையளிக்கப்பட்ட_நிலங்களில்_500_ஏக்கரைச்__சுவீகரிக்க__முயற்சி!
  23. சாந்தனை இலங்கைக்கு அழைக்க அமைச்சர் உறுதியளிப்பு! adminJanuary 31, 2024 ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விடுதலையாகிய சாந்தனை இலங்கைக்கு அழைப்பது வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். குறித்த வழக்கின் தீர்ப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ள நிலையில், அவரின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (31.01.24) சந்தித்தனர். மேலும், சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும் கேட்டுக் கொண்டனர். இதன்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானநந்தாவினால் குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டது. https://globaltamilnews.net/2024/200256/ சாந்தனின் விடுதலை விரைவில் சாத்தியம் அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோருடன் உரையாடிய பின்னர் சிறீதரன் தெரிவிப்பு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய் யப்பட்டு, 32 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்னரும்கூட இன்னமும் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சாந்தனின் விடுதலை விரைவில் சாத்தியம் என்றும், அதற்குரிய பேச்சுகள் இடம்பெற்றுள்ளன என்றும் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிறீதரன் உதயனுக்குத் தெரிவித்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப் பட்டு 32 ஆண்டுகால சிறைவாசத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தனை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர வேண்டிய கட்டாய நிலைமை தொடர்பில் சாந்தனின் தாயார் தில்லையம்பலம். மகேஸ்வரி அண்மையில் வலியுறுத்தியிருந்தார். சாந்தனும், தானும் இது தொடர்பில் பல்வேறு பேச்சுகளையும் கோரிக்கைகளையும் விடுத்துள்ள போதிலும், அவற்றை உரியதரப்புகள் கண்டுகொள் ளவில்லை என்றும். தற்போது உயி ருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய சிறுநீரகப் பாதிப்பு. கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் சாந்தன் அவதி யுற்று வரும்நிலையில், அவரை இலங் கைக்கு அனுப்ப இலங்கை. இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, சாந்தனின் விடு தலை தொடர்பில் இலங்கையின் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட் டோருடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும், அவர் அடுத்த சில தினங்களுக்குள் விடுவிக்கப்படுவார் என்று தனக்குத் தெரி விக்கப்பட்டுள்ளதாக சி.சிறீதரன் உதய னுக்கு நேற்று இரவு தெரிவித்தார். சிறீதரன் எம்.பி. மேலும் தெரிவித்ததாவது: சாந்தனின் விடுதலை தொடர்பில் பல் வேறு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப் பட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவ கார அமைச்சர் அலி சப்ரியுடன் இது தொடர்பில் நாங்கள் பேச்சு நடத்தியுள்ளோம். அவர் அடுத்த சில தினங்களுக் குள் சாந்தனின் விடுதலை சாத்தியம் என்று எங்களுக்குத் தெரிவித்துள்ளார். சென்னைத் துணைத்தூதரகத்தினருடனும் அலி சப்ரி பேச்சு நடத்தியுள்ளார். சாந்தனின் பயண ஆவணங்கள் அனைத்தும் முழு மைப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், இந் திய பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலை யும் சில கோப்புகளையும் பெற வேண்டி யுள்ளதாலேயே சாந்தன் இலங்கையை நோக்கிய பயணப்படுவது தாமதமாகின்றது. அடுத்த சில தினங்களில் இந்த ஆவணங்கள் கைக்கு கிடைத்ததும் சாந்தன் இலங்கைக்கு அனுப்பிவைக் கப்படுவார்- என்றார். (ஏ) https://newuthayan.com/article/சாந்தனின்_விடுதலை_விரைவில்_சாத்தியம்
  24. இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை! January 31, 2024 11:40 am பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு மீண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி அவர்களுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது சிறையில் உள்ள இம்ரானுக்கு அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் நேற்று (30) 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இம்ரான் 2022 இல் பிரதமர் பதவியில் இருந்து அவரது எதிரிகளால் வெளியேற்றப்பட்டார். மேலும் ஊழல் குற்றச்சாட்டில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் என்று இம்ரான் கூறுகிறார். https://tamil.adaderana.lk/news.php?nid=183439
  25. Working from home இல்லாத காலத்திலும் வாசித்துக்கொண்டுதான் இருந்தேன்.😁 இப்போது புத்தகத்தை கையில் தூக்கி வைத்து படிக்கவேண்டியதில்லை! Kindle app அல்லது ஒன்லைனில் அதிகம் படிப்பது. இடையிடையே printed புத்தகங்கள். ஆசான் ஜெயமோகனின் மகாபாரதம் நாவல் வரிசையில் 16வது புத்தகம் படிக்கின்றேன். பாண்டவர்களின் பாதி நாடு கேட்டு, ஆறு ஊர் கேட்கும் வரை வந்தாயிற்று. இன்னும் பத்து நாவல்கள் உள்ளன. 2026 இல் முடிக்கலாம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.