Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. நாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது - கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் பர்ணாந்து சில்வெஸ்டர் நறுவிலிக்குளம, மன்னார். வீரப்பிறப்பு:05.12.1969 வீரச்சாவு:10.07.1990 நிகழ்வு:யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவு அவன் பிறந்து வளர்ந்தது மன்னார் மாவட்டத்தின் நறுவிலிக்குளம் என்னும் கிராமத்தில். இவனது பெற்றோர் ஏதிலியாய் இருப்பது, இதற்க்கு அப்பாலுள்ள பண்டிவிரிச்சான் கிராமத்தில். ஆனால், இவன் எங்கே…? இவர்களுக்கே தெரியும், இவன் கரும்புலியாகி வீரம் விளைந்த வடகடலின் நீரிலும், காற்றிலும் இன்று கந்து வாழ்கிறான் என்பது. எனவேதான் இவனது தாய் தன துயரைத் துடைக்க பேரக் குழந்தைக்கு (மூத்த மகளின் மகனுக்கு) “கொலின்ஸ்” என்று பெயரிட்டு அழைக்கிறாள். அந்த அழியாத பெயர் இவர்களுக்கு ஓர் ஆறுதலையும், துணிவின் உறுதிப்பாட்டையும் தந்து நிற்பதை அந்த வீட்டாருடன் உரையாடக்கிடைத்த போது உணர முடிந்தது. அந்தச் சூழலில் அவனது வயோதிபத் தந்தை கூறினார்…. இவன் தம்பி, வலு கெட்டிக்காரன். நல்லாப் படிப்பான். அவன் படித்துக் கொண்டிருந்த வேளை எங்கள் ஊரிலையும் சிங்கள ஆமிக்காரங்கள் சுத்தி வளைத்து கனபேரை பிடித்துக் கொண்டு போனாங்கள். அதனால் நாங்கள் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தம். இது இவனுக்கு சரியான கவலை. அவன் தம்பி, “ஆமியின்ர கையில பிடிபட்டு சாவதைவிட ஒரு ஆமிக்காரனைத் தானும் சுட்டுட்டு சாகலாம்” என்று சொல்லுவான். இவன் வெளிநாடு செல்ல விரும்ப இல்லை, சொன்னபடி இயக்கத்தில்தான் சேர்ந்தான். இது அங்கிருந்த தாயாரின் வார்த்தை. இதைத் தொடர்ந்து மீண்டும் அந்தத் தந்தையாய் கூறத்தொடங்கினார். தம்பி இவன் விடுமுறை முடிந்து செல்வதற்கு முதல் நாள் தாயப் பார்த்து, அம்மா …. நான் இயக்க வேலையாக ஒரு இடத்திற்கு போக இருக்கிறன். இது முக்கியமான வேளை, இந்த வேலையின் உழைப்பு வீட்டிற்கு வராது, அது நாட்டிற்கு மட்டும்தான். என்று சொன்னான். நாங்கள் அப்போது அதனை பெருதாக கருதவில்லை. ஆனால் கொலின்ஸ் அம்முறை ஊருக்கு வந்தபோது அவனுக்கு தனது சாவு…. அதன் திகதி கூடத் தெரிந்திருந்தது. வந்தவன் தான் படித்த பாடசாலை, பழகிய இடங்கள் எங்கும் சென்றான். கூடித்திரிந்த நண்பர்களுடன் பாசத்தோடு கதைத்தான். அவனோடு படித்த கூடித்திரிந்த நண்பன் இவனைப்பற்றிச் சொல்லும்போது …. அண்ணை நாங்கள் ஒரு நாள் பொழுதுபடுகிற நேரம் சந்தி மதவடியில் கதைத்துக் கொண்டு நன்றனாங்கள். அப்ப கொலின்ஸ் எங்களைக் கண்டிட்டு வந்து மதவடியில இருந்து எங்களோட கதைத்துக் கொண்டிருந்தான். “நாட்டுக்காகச் சாக ஒருக்காலும் பயப்படக்கூடாது” என்ற கொலின்சின் வார்த்தை இப்பதான் எனக்கு விளங்குது….. என்றான். இந்த 21 வயது இளைஞன் கரும்புலி கொலின்ஸ். தன் சாவினால் இனத்திற்குச் சாதித்தது என்ன என்பதை சரியாக உணர வேண்டின் அவன் தன்னைத் தானே தற்கொடையாக்கிய 10.07.1990க்கு சற்று முன்னைய நாட்களை எண்ணிப் பார்க்க வேண்டும். அங்கு வடமராட்சியைச் சார்ந்த பகுதியில் தன்கூரிய பார்வையைச் செலுத்தியபடி எதிரியின் பாரிய கப்பல் ஒன்று நிலைகொண்டு நிற்கிறது. அதன் ஆதிக்கக் கண்ணோட்டம் எங்கும் செல்லும். அது கடற்படைப் படகுகளுக்கு வேவு பார்க்கும் தகவல் கொடுக்கும். எமது படகுகளை, படகோட்டிகளை, ஊர்மனைகளை அழிக்கவும் அடக்கவும் அது உதவிகள் செய்யும். இதை அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறுதிப்பாட்டுடன் மீண்டும் வடபகுதிக் கடற்கரைக்கு வருவோம். அங்கு…. “பொடியல் கரும்புலியாகிக் கப்பலை அடிக்கப் போறாங்களாம்” என கதை பரவுகிறது. கரையில் வரிப்புலிச் சீருடைகளுக்கு நடுவில் கரியநிற சீருடை தரித்த மூவர். அச்சீருடையுடன் நின்றவர்களில் கொலின்ஸ் ஒருவன். கடலலை இந்த மூன்று கரும்புலிகளின் பாதங்களைத் தொட்டுச் செல்கின்றது. அக்கரிய இருளில் கையசைத்து கூடியிருந்தவர்களிடமிருந்து விடைபெறுவது தெரிகிறது. படகு புறப்பட்டு……. பின் மறைகிறது. கண்கள் கடலை ஊடுருவுகின்றன. சிறிது நேரத்தில் கடலில் பெரிய ஒளிப்பிளம்பு அதோடு வெடியோசை அந்த உப்புக்காற்று அவர்களை அனைத்துக் கொண்டது. -வெளியீடு : உயிராயுதம் பாகம் 01 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/35c2b018-dffe-480d-9640-817b43adf576
  2. 04.07.2000 அன்று நாகர்கோவிலில் காவியமான 38 மாவீரர்களின் நினைவில்... 04.07.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நகர்விற்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய 38 மாவீரர்களினதும், தென்மராட்சியில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் நிஸ்மியா மற்றும் லெப். டயஸ் ஆகியோரினது நினைவு நாள் இன்றாகும். ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைச் சூட்டாதரவோடு டாங்கிகளின் துணையுடன் நாகர்கோவில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்து முன்னகர்ந்த சிறிலங்கா படையினரின் பாரிய படை நகர்விற்கு எதிராக விடுதலைப் புலிகளின் படையணிகள் தீரமுடன் களமாடி படைநகர்வை முற்றாக முறியடித்தனர். முற்று முழுதாக பெண் போராளிகளே இந்த முன்னகர்வு முயற்சியை முறியடித்து சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தினர். இந்த வெற்றிகர முறியடிப்புத் தாக்குதலின்போது 38 பெண் போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர். அவர்களின் விபரம் வருமாறு மேஜர் அன்பு (வைரமுத்து புஸ்பவதி – ஆவரங்கால், யாழ்ப்பாணம்) மேஜர் பிரியங்கா (வைத்தியலிங்கம் சசிகலா – புன்னாலைகட்டுவான், யாழ்ப்பாணம்) மேஜர் செல்வி (பரராஜசிங்கம் கலைச்செல்வி – அச்செழு, யாழ்ப்பாணம்) கப்டன் இலக்கியா (செல்வரத்தினம் பாமினி – வேலணை, யாழ்ப்பாணம்) கப்டன் கலைக்குயில் (அருள்) (பாலசிங்கம் பாலசாந்தினி – ஓமந்தை, வவுனியா) லெப்டினன்ட் யாழரசி (சூசைதாசன் கெல்சியா – சிலாவத்தை, மன்னார்) லெப்டினன்ட் சிவநங்கை (திலகராஜா விமோஜினி – ஸ்கந்தபுரம், கிளிநொச்சி) லெப்டினன்ட் வெண்ணிலா (நாகமூர்த்தி சுகந்தினி – உதயநகர், கிளிநொச்சி) லெப்டினன்ட் சுசீலா (தனுஸ்கோடி கலாரஜனி – கற்சிலைமடு, முல்லைத்தீவு) லெப்டினன்ட் நாமகள் (செல்வமதி) (கந்தையா சஜீந்தினி – துணுக்காய், முல்லைத்தீவு) லெப்டினன்ட் தணிகை (ஆறுமுகம் பத்மாவதி – வரணி, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கீதவாணி (இலட்சுமணன் தர்சினி – காரைநகர், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கலைப்பிரியா (கறுப்பையா தனலட்சுமி – ஒமந்தை, வவுனியா) லெப்டினன்ட் புரட்சிக்கங்கை (இரத்தினம் ஜெயவதனி – புத்தூர், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சமரிசை (ஞானபண்டிதர் றஞ்சிதமலர் – உருத்திரபுரம், கிளிநொச்சி) லெப்டினன்ட் முகிலா (கந்தசாமி பராசக்தி – நவாலி, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வாசுகி (தவராஜசிங்கம் பிறேமினி – திருநெல்வேலி, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஈழப்பிரியா (கிருஸ்ணானந்தம் ரேணுகாதேவி – மயிலிட்டி, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் பிறைநிலா (மரியதாஸ் கெங்காநாயகம் – மாதகல், யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் நளாயினி (அமுதச்சுடர்) (தருமகுலசிங்கம் கௌசல்யா – ஜெயந்திநகர், கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் நிலவாணி (மாடசாமி கஜனி – சாவகச்சேரி, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் செந்தாழினி (பாக்கியநாதன் சற்குணதேவி – துணுக்காய், முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் தமிழ்மலர் (திருநாவுகரசு ரசீபா – வேரவில், கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் கல்கி (தமிழிசை) (நடேஸ் தட்சாயினி – அராலி, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மதிமகள் (நாகராசா அனுசா – வரணி, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் இன்சுடர் (சுப்பிரமணியம் புஸ்பமலர் – பாரதிபுரம், கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் நாமதி (கந்தசாமி கலைமதி – சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் குமுதா (சபாபதிப்பிள்ளை விஜயலட்சுமி – வட்டக்கச்சி, கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் தமிழ்பாடிணி (வில்வமங்களம் விமலராகினி – காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அகநிலா (இராமச்சந்திரன் சசிகலா – புலோலி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை அலைமகள் (அகமகள்) (செல்லையா செல்வகுமாரி – சுண்ணாகம், யாழ்ப்பாணம்) வீரவேங்கை அகர்மொழி (முருகேசு யோகம்மா – காரைநகர், யாழ்ப்பாணம்) வீரவேங்கை பாரதி (தேவதாஸ் சாந்தமேரி – உடும்பிராய், யாழ்ப்பாணம்) வீரவேங்கை கலைமதி (கலைவதனி) (முருகேசு தயாளினி – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு) வீரவேங்கை பிறை (செல்வி) (இராசநாயகம் பகீரதி – நெடுங்கேணி, வவுனியா) வீரவேங்கை யாழ்மொழி (காந்தி) (செபமாலை மெறில்டா – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு) வீரவேங்கை மாதுரி (புரட்சிகலை) (இராசரரத்தினம் பத்மராணி – வேலணை, யாழ்ப்பாணம்) வீரவேங்கை யாழரசி (ஜோர்ச்மரியதாஸ் தர்சினி – பளை, யாழ்ப்பாணம்) இம் மாவீரர்களினதும் இதே நாளில் சாவகச்சேரிப் பகுதி மீது சிறிலங்கா படையினர் நடாத்திய எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் நிஸ்மியா (சிற்றம்பலம் ரஞ்சிதமலர் – கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு) மற்றும் கச்சாய் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் டயஸ்(இதயன்) – (ஜீவானந்தம் திவாகர் – கிரான், மட்டக்களப்பு) ஆகிய மாவீரர்களினதும் நினைவு நாள் இன்றாகும். https://www.thaarakam.com/news/d7235f98-8811-4ab9-ba3d-55ea4bfd6046
  3. நீங்களும் மனதளவில் ஒரு ஆசாரவாதி என்பதால் பெரிய எஜமானாக இருக்க விரும்புவதில் ஆச்சரியமில்லை😉 நாம திறமைக்கு மதிப்புக்கொடுக்கும் இடதுசாரித் தத்துவத்தில் நம்பிக்கையுள்ள, தினமும் கார்டியனும், பிபிஸியும் படிக்கும் சித்தாந்திகள் என்பதால் உங்களை எஜமானாக, பெரிதோ சிறிதோ, ஏற்றுக்கொள்ளப்போவதில்லை😁
  4. அதுதானே! யாழ் களத்தில் அரசியல், சமூக கருத்து எழுதும் எல்லோரும் சமூக ஆர்வலர்கள்தானே! இதை இன்னோர் இடத்திலும் குறிப்பிட்டிருந்தேன். நியாயம் கதைக்கிறவர் சொல்வதன்படி இந்த புதிய மகுடங்களை தமிழில் போட்டால் நல்லதுதான். Grand Master - மகா வல்லுநர்/நிபுணர் Veteran- பழம்பெருமான் Community Regular - குழும/சமூக ஒழுங்கர்
  5. உரிமைப் போரில் உணர்வுடன் கால்பதித்த, பொறியியல் பீட மாணவன் கப்டன் முத்துசாமி, மருத்துவ பீட மாணவன் லெப். சுதர்சன் உரிமைப் போரில் உணர்வுடன் கால்பதித்த, பொறியியல் பீட மாணவன் கப்டன் முத்துசாமி, மருத்துவ பீட மாணவன் லெப். சுதர்சன் தமிழ்த்தேசியஇனத்தின் இழந்த தாயக மீட்பிற்கான போராட்டத்தின் கண்ணுக்கெட்டிய கால இடைவெளியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உட்பட்ட எமது மக்களை இழந்திருக்கின்றோம். ஒவ்வொருவருடைய இழப்பும் எமக்குப் பேரிழப்பாகயிருந்தபோதும் விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியில், எமது இளைய தலைமுறையினர் வாழ்வும் வளமும் எதிர்காலத்தில் எமது இனத்தின் தனித்துவத்தோடு அமைந்ததாக இருக்குமென்ற எண்ணம் எமது மக்களையும் ,இளையோர்களையும் போராட்டத்தின்பால் முழு வீச்சாகப் பயணிக்க வைத்தது. தான்சார்ந்த தேசிய இனத்தின் விடுதலையில் பங்கெடுத்து தமது பிறப்பின் அர்த்தத்தை புரிய வைத்த தற்கொடையாளர்களோடு ஒப்பிடும்போது நாம் என்ன செய்துவிட்டோம் என்று எண்ணத் தோன்றுகின்றது. மண்ணுக்காக மரணித்தவர்கள் தம் வாழ்வை அர்ப்பணித்து தமிழ்த் தேசியம் வாழ வழிசமைத்தார்கள். தமது குடும்பத்தின் வாழ்வு மேம்பாட்டை விட ஒட்டுமொத்த தமிழ் குடும்பங்களின் வாழ்வு மேம்பாட்டை கொள்கையாகக் கொண்டவர்கள். இவ்வாறனவர்களின் குறுகிய கால வாழ்வு எமது எதிர்காலச் சந்ததிக்கு படிக்கின்ற பாடமாக இருக்கவேண்டும் என்பது என்போன்ற தமிழ் உணர்வாளர்களின் ஏக்கமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதைலைப் புரட்சி வாதிகளின் எழுச்சியினால் உந்தப்பட்ட இளையோர்கள் பலராக இருந்த போதும் உச்சமான தற்கொடையில் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு முகம்கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதில் தமிழ்த் தேசியம் நினைவில் கொள்வதை அண்மைக்கால சம்பவங்களும் அதன் மூலம் வெளியிடப்படும் செய்திகளும் தெரிவிக்கின்றன. 1983 ம் ஆண்டு யூலை சிங்களப் பேரினவாதத்தினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு தமிழ் இளைஞர்களை தமிழீழ விடுதலைப் புரட்சி வாதிகளாக மாற்றியதை கடந்த முப்பது வருட காலம் எமக்கு காட்டி நிற்கின்ற வேளையில், மட்டக்களப்பில் இக்காலத்தில் விடுதலைப் புரட்சிவாதிகளாக மாறியவர்களும், பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை மேற்கொண்டவர்களுமான பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவன் கப்டன். முத்துச்சாமி (முரளிதரன் ) களுவாஞ்சிக்குடி, யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன்,லெப். சுதர்சன் (சிவகுருநாதன்) ஆரையம்பதி, ஆகியோரின் தற்கொடையை கொண்டு முன்னிறுத்தி இக் கட்டுரையை வரையமுற்படுகின்றோம். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பல்வேறு தரப்பட்டவர்கள் இருந்தபோதும் இவர்கள் இருவரும் உயர்கல்வியில் இருந்துகொண்டு இனப்பற்றோடு, இன அழிப்பை தடுத்து நிறுத்தி தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது போர்க்கருவி ஏந்திய போராட்டமே என்பதில் நம்பிக்கை கொண்டதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டனர். மூதூர், கூனித்தீவு என்னும் ஊரில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் 28 .06 .1987 நாள் அன்று அதிகாலை வேளையில் சிங்கள இராணுவத்தினரின் சுற்றி வளைப்புத் தாக்குதலுக்கு உட்பட்டது. இச் சம்பவத்தில் மூதூர் கோட்டத்தளபதி மேஜர்.கயேந்திரன் கப்டன்.முத்துசாமி, லெப். சுதர்சன் உட்பட ஒன்பது பேர் வீரச்சாவடைந்தனர். இதனால் மட்டக்களப்பு மாவட்ட கல்விச் சமூகமும், விடுதலைப் போராளிகளும் ,தமிழ்மக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் மீளாத் துக்கத்தில் ஆழ்ந்திருந்தனர் .தம்முடன் பயின்ற மாணவர்களான இவர்கள் சாதிக்க வேண்டியதும், மக்களை வாழவைக்க கல்வியைப் பயன்படுத்த வேண்டியதும் எதிர்காலத்தில் அதிகம் இருந்தும், இவர்களின் இழப்பு மாணவர் சமூகத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் மிகுந்த மனவேதனையையும் உண்டுபண்ணியிருந்தன. தாங்கள் கல்வியில் மேம்பாடடைந்து, காலம் கை கூடினால் தமிழ்மக்களின் விடுதலைக்காக ஏதாவது செய்யலாம் என்ற நிலையில் பலர் இருக்கின்றபோது உயர் கல்வியிலிருந்த இவர்கள் உடன் களத்தில் இறங்கியதற்கு சிங்களப் பேரினவாதத்தின் கடும்போக்கே காரணமாக விருந்தன. இவ்வாறு உணர்வான,கல்வியில் சிறந்தவர்கள் தம்மை இழந்து தமிழீழ விடுதலைக்கு பலம் சேர்த்துள்ளனர். அறிவில் கூர்மையான கப்டன்.முத்துசாமி மிகவும் எளிமையான வாழ்வு முறையை போராளி நிலையில் மேற்கொண்டவர். ஊர்களால் சூழப்பட்ட மட்டக்களப்பில் ஊர்மக்களின் வாழ்வோடு ஒன்றித்து ஒரு போராளியாகத் தென்பட்ட முத்துசாமி தான் தங்கியிருக்கின்ற ஊர்களில் அம்மக்களின் அன்புக்குரியவராகக் காணப்பட்டார்.இவரைப்பற்றி ஒரு மூத்த போராளி குறிப்பிடுகையில், முரளிதரன் என்னும் பெயரைக் கொண்ட இவர் முத்துசாமி என்ற பெயரை தான் விரும்பியே பெற்றுக்கொண்டார். என்றும் ஊர் ஒன்றித்த மக்களோடு வாழ்வில் அளப்பெரிய மகிழ்ச்சி கொண்டிருந்தார் என்றும் தெரிவித்தார் இந்தியாவில் விடுதலைப்புலிகளின் மூன்றாவது பாசறையில் போர்க்கல்வி உட்பட்ட அனைத்துப் பயிற்சிகளையும் பெற்றுக்கொண்ட கப்டன் முத்துசாமி அவர்கள் மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் முதல் பாசறை ஏற்படுத்தப்பட்ட போது, அறிவியல் போராளியான கப்டன் முத்துசாமி அவர்களுக்கு போர்க்கல்வியை ஊட்டும் பயிற்சி ஆசிரியர் என்ற பணியை தளபதி அருணா கொடுத்திருந்தார். இப்பாசறையின் முடிவுக்குப் பின்னர்தான் இம்மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களும் அதிகப்பட்டிருந்தன.. இப்பாசறையை ஆரம்பிப்பதற்கு முன்னர் 1985 ம் ஆண்டு காலப்பகுதியில் தளபதி அருணா ,தளபதி குமரப்பா ,தளபதி சொர்ணம் ,மூத்த போராளி நியுட்டன், மற்றும் கப்டன் முத்துச்சாமி, கப்டன் ஜிம்கலி, கப்டன்.கரன் ,லெப்.ஜோன்சன் (ஜுனைதீன்) லெப்.ஜோசெப், லெப்.கஜன், லெப்.உமாராம், லெப். ரவிக்குமார், லெப் கலா, லெப் அரசன், லெப். ஈசன், லெப்.சகாதேவன்,லெப்.பயஸ், லெப்..புவிராஜ் ஆகியோர் தலைவரின் பணிப்பின்படி மட்டக்களப்புக்கு வந்திருந்தனர். இவர்களின் வருகையோடு மட்டக்களப்பில் சிங்களப்படைகளுக்கெதிரான தாக்குதல்களும் தீவிரப்பட்டன. இம்மாவட்டத்தின் முதல் மாவீரர், மூத்த போராளி லெப்.பரமதேவா அவர்களின் வீரச்சாவைத்தொடர்ந்து தளபதி அருணாவின் வருகை அமைந்திருந்தது. இவர்கள் வரும்போது மட்டக்களப்பில் குறிப்பிட்ட சில போராளிகள் மாத்திரம் தங்கியிருந்தனர். இவர்களில் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ், அம்பாறை மாவட்டத் தளபதி டேவிட் போன்றவர்கள் பொறுப்பிலும், செயல்பாட்டிலும் இருந்தனர். 1983 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கைத்தீவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பினைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் இளைஞர்கள் பலர் விடுதலைப் புரட்சிவாதிகளாக மாறியிருந்த போது, பொறியியல் பீட மாணவனான களுவாஞ்சிக்குடி ஊரைச் சேர்ந்த முரளிதரன் அவர்களும், தமிழ்மக்களின் விடுதலைக்கும்,பாதுகாப்புக்கும் தன்னால் இயன்றதைச் செய்யவேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடாக சிலர் இணைந்து உருவாகிய “கிழக்குக் குழுவில்” முக்கிய பங்காளராக செயல்பட்டதன் மூலமாக தனது விடுதலைப் பயணத்தைத் தொடங்கி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 29 .06 .1960 அன்று தாய் மண்ணில் பிறந்த முரளிதரன் ஆரம்ப கல்வியை தான் பிறந்த களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சரஸ்வதி வித்தியாலயத்திலும், பின்பு பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திலும் மேற்கொண்டார். மிகவும் புத்திசாலி மாணவனான இவர் க. பொ .த .உயர் வகுப்பை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கணிதபிரிவில் பயின்று பேராதனை பல்கலைக் கழக பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி கல்வியைக் மேற் கொண்டிருந்த வேளையில் 1983 ம் ஆண்டு யூலை இனக்கலவரத்தின் போது பாதிக்கப்பட்டு தாய் மண் திரும்பிய வேளையில் தமிழ் மக்களின் அழிவையும் பாதுகாப்பையும் எண்ணி மிகவும் மனவேதனை கொண்டிருந்தார். இதனால் தன் இன மக்களுக்கான விடுதலையும், பாதுகாப்பும் முக்கியமெனக்கருதி, கல்வி மேம்பட்டைத் துறந்து தம்மக்களின் எதிர்காலத் தலைமுறையின் மேம்பாட்டு வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்து தமிழீழ விடுதலைக்காக புறப்பட்டார். விடுதலைப் புலிகளின் பயிற்சிப் பாசறையில் அறிவுக் கூர்மையுடன் செயல்பட்ட முத்துசாமி மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் போர்க்கல்வியை பயிற்றுவிக்கும் ஆசானாகவும், இராணுவ தொழில் நுட்பங்களைக் இலகுவாகக் கையாளும் திறன் மிக்கவராகவும் இருந்ததனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் இனங்காணப்பட இராணுவத் தொழில் நுட்பப் போராளிகளில் ஒருவராக இவருடைய திறமை, உறுதிமிக்க போராளிகளையும்,வல்லமையுள்ள விடுதலை வீரர்களையும் இயக்கத்திற்குப் பெற்றுக் கொடுத்திருந்தது.தொலைதூர வெடிக்க வைக்கும் சாதனத்தை இயக்குவதில் பல்வேறு வகைகளைத் கையாண்டு சாதனைகளை மேற் கொண்டிருந்தார். 1985 .09 .02 ம் .நாள் அன்று தளபதி அருணாவின் தலைமையில் நடத்தப்பட்ட ஏறாவூர் சிங்கள காவல் நிலைய அழிப்பிலும்,அக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிங்களப் படைகளுக்கெதிரான தாக்குதலிலும் தன்னை ஈடுபடுத்தியிருந்தார். இவர் போராளியாக வாழ்ந்த காலத்தில் நீண்ட காலம் வாழ்ந்தது மயிலவெட்டுவான் என்ற வயல் கிராமத்தை அண்டிய பகுதியாகும்.இவ்வூர் மக்களால் மிகவும் விரும்பப்பட்டவராக காணப்பட்ட கப்டன் .முத்துசாமி அவர்கள் வீரச்சாவடைந்த நாள்முதல் ஒவ்வொரு ஆண்டும் அம்மக்களால் நினைவு வணக்கம் செலுத்தப்படடவராக இருந்தார். .ஒரு போராளியின் புனிதப்பயணம் மிகவும் நிதானமானது, நேர்மையானது, உண்மையானது, உறுதியானது என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்களில் கப்டன் முத்துச்சாமியும் ஒருவராகவிருந்தார். படித்தவர்கள் , பட்டதாரிகள், பணக்காரர்கள், பாமரர்கள் எல்லாம் ஒன்று கூடும் இடமாக தேசிய விடுதலை இயக்கம் இருப்பது அவர்கள் சார்ந்த தேசிய இனத்தின் விடுதலையை வென்றெடுப்பதற்கு பலமாக அமையும் என்பதற்கமைய கப்டன் முத்துச்சாமி போன்றவர்களும் களத்தில் பயணித்தார்கள். இவ்வாறு விலைமதிக்க முடியாத போராளிகளை இழந்திருக்கின்றோம். கப்டன்.முத்துசாமி அவர்களின் விடுதலைப் போராளி வாழ்க்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல தாக்குதல்கள் இராணுவ தொழில் நுட்ப வல்லமையைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன. இவருடைய அறிவுத்திறமையினால் தாக்குதல்கள் இலகுவாக்கப்பட்டு, இலத்திரனியல் தொழில் நுட்பத்தில் மிகவும் திறமையாக செயல்படுத்தப்பட்டதை அவதானிக்க முடிந்தது. குச்சவெளி சிங்கள காவல்நிலைய அழிப்பில் தன்னை ஈடுபடுத்திய பின்பு மட்டக்களப்பில் முதல் பாசறையில் பணிமுடித்ததை தொடர்ந்து ஏறாவூர் சிங்கள காவல் நிலையத் தாக்குதலிலும் முன்னணி வீரராக பங்குகொண்டார். பின்வரும் 1985 ம் ஆண்டு ஆரம்பம் முதல் 1987 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வரை மாவட்டத்தில் நடந்த தாக்குதல்களுக்கு முக்கிய பங்களிப்பையும் வழங்கியிருந்தார். இத் தாக்குதல்களில் எல்லாம் கப்டன்.முத்துசாமி அவர்களின் இராணுவத் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தன. மட்டக்களப்பு நகரில் ராஜேஸ்வரா படமாளிகைக்கு முன்பாக கண்ணி வெடித்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. தொலை தூர வெடிக்க வைக்கும் சாதனத்தைப் பயன்படுத்தி மிகவும் துல்லியமாக தாக்கப்பட்டதில் சுமார் பத்து அதிரடிப் படையினர் அழிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் வந்தாறுமூலையைச் லெப். ஈசன் அவர்களும் இணைந்திருந்தார் மட்டக்களப்பு – பதுளை நெடுஞ்சாலையில் கொடுவமடு பாலத்திற்கு அருகில் நிகழ்த்தப்பட்ட கண்ணிவெடித்தாக்குதலினால் அதிரடிப் படையினரின் கவசவாகனம் வானுயர எழுந்து வெடித்து சுக்கு நூறாகிய சம்பவம் சிங்களப் படைத்துறையை அதிரவைத்த நிகழ்வாக அமைந்திருந்தன. இத் தாக்குதலில் தளபதி பொட்டு அம்மான் கண்ணி வெடிக்கவைத்திருந்தார். போரதீவு கட்டெறும்பூச்சிச் மரசந்திக்கருகாமையில் கண்ணி வெடித்தாக்குதல், மயிலவெட்டுவானில் போராளிகளின் முகாம் நோக்கிய தாக்குதலில் ஈடுபட்ட படையினர் மீதான பொறிவெடித்தாக்குதல், செங்கலடி பதுளை நெடுஞ்சாலையில் கறுத்தப்பாலத்தை அண்மித்த ஆலையத்திற்கருகாமையில் கிளைமோர் தாக்குதல், கொம்மாதுறை செங்கலடி தொடரூந்து பாதையில் நடை ரோந்துப்படையினர் மீதான பொறி வெடித்தாக்குதல் என்பவற்றில் கப்டன்.முத்துசாமி அவர்களின் அறிவுக்கூர்மை வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இதனால் அச்சமின்றி பயணத்தை தொடரமுடியாதவாறு படையினர் பதுங்கிருந்த காலமாகவும், போராளிகள் மீதான பயமும் மிகுந்திருந்தது. இக் காலத்தில் நடத்தப்பட்ட வெடிமருந்து தொடர்பான அனைத்துத் தாக்குதல்களிலும் இவருடைய பொறியியல் மூளை பயன்படுத்தப் பட்டதைக் குறிப்பிட முடியும். வந்தாறுமூலை – மயில வெட்டுவான் பாதையில் சிவத்தப் பாலம் என்ற இடத்தில் ஒரு கண்ணி வெடித்தாக்குதல் நடத்தப்பட்டது. கப்டன்.முத்துச்சாமி அவர்களின் தயாரிப்பில் லெப்.வைரவன் (வந்தாறுமூலை) கண்ணிவெடியை வெடிக்க வைத்திருந்தார். இத் தாக்குதலில் பல படையினர் அழிக்கப்பட்டிருந்தனர். அமெரிக்கா தயாரிப்பான சுரி குழல் துப்பாக்கி (Colt Commando Ar15) ஒன்று முதன் முதலாக விடுதலைப் புலிகளால் கைப்பெற்றபட்டிருந்தன என்பதும் குறிப்பிடக்தக்கது. 1986 ஜூன் மாதம் விடுதலைப் புலிகளால் தளபதி குமரப்பா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மாங்கேணி சிங்களப் படை முகாம் மீதான தாக்குதலில் கப்டன்.முத்துச்சாமி தலைமையிலான போராளிகள் காயாங்கேணி என்னுமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். கும்புறுமூலையில் இருந்தும் வாகனேரியில் இருந்தும் வரும் படையினர் காயாங்கேணி பாலத்தின் ஊடகத்தான் வரமுடியும் இந்த பாலத்தில் வைத்து தடுத்து தாக்கும்பணி இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. கப்டன்.முத்துசாமி அவர்களின் பொறியியல் மூளையினால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகள், பொறிவெடிகள் வெடித்தபோது படையினர் நிலைகுலைந்தனர். இவ்வாறு முத்துசாமி என்ற போராளியின் வருகை மட்டக்களப்பில் படையினருக்கு ஏற்படுத்திய தாக்கம் அளவிடமுடியாதவாறு அமைந்திருந்தன. மட்டக்களப்பு -அம்பாறை மாவட்டத்தில் சிங்களப் படையினருக்குக்கெதிரான தாக்குதல்களை தீவிரப் படுத்தும் நோக்கோடு சுமார் பத்துபேர் அடங்கிய குழுவொன்று 1985 ம் ஆண்டு நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்தது. இக்குழுவில் இணைந்திருந்த நாகர்கோயில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த போராளி பேனாட் (குருசுமுத்து துரைசிங்கம்) என்பவர் 09.09.1985 நாள் அன்று மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் என்ற ஊரில் படையினரின் பதுங்கிக் தாக்குதலில் வீரச்சாவடைந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த போராளிகளில் முதல் மாவீரராக மட்டக்களப்பு மண்ணில் வீழ்ந்த வீரவேங்கை பேனாட் என்பவரை இச்சந்தர்ப்பத்தில் போர்க்காவிய வரலாற்றில் பதிவுசெய்கின்றோம். களுவாஞ்சிக்குடி ஊரில் முதல் மாவீரராக பதிவாகியவர் 2 ம் சுந்தரம் (தம்பிப்பிள்ளை அருள்ராஜா) ஆவார். மாவட்டத்தின் ஆரம்பகால போராளிகளின் ஒருவரான இவர் அரசியல் போராளியாகவும் செயல்பட்டிருந்தார். மக்கள் மத்தியில் மிகவும் பணிவாக செயல்பட்டு மக்களுக்கான சேவையையும் வழங்கியிருந்தார் இந்த வரிசையில் அடுத்து பார்க்கப் போகின்றது ஆரையம்பதி என்னும் ஊரைச் சேர்ந்த லெப். சுதர்சன் (சிவகுருநாதன் ) என்பவராகும். ஆரையம்பதி ஊரில் சிறந்த பண்பாளராக மக்களால் மதிக்கப்பட்ட ஆசிரியப் பெருமகன் பூபாலபிள்ளை அதிபர், பாக்கியம் ஆசிரியை ஆகியோரின் மூத்தபிள்ளையும் ஏகப்புதல்வனுமான சிவகுருநாதன் 13 .05 1964 நாள் அன்று பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை ஆரையம்பதி இராமக்கிருஷ்ண மிஷன் பள்ளிக்கூடத்திலும் உயர்கல்வியை மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியிலும் மேற்கொண்டிருந்தார். உயர் கல்வியில் உயிரியல் பிரிவில் சித்தியடைந்து யாழ் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தில் 1984 கல்வியாண்டில் பயின்று கொண்டிருந்த வேளையில் வீரச்சாவடைந்தார்.. இவருடைய ஒரேயொரு தங்கை ஒரு மிருக மருத்துவர் வெளிநாடு ஒன்றில் வசிக்கின்றார். இரண்டு பிள்ளைகளை அன்பாக வளர்த்து வந்த பெற்றோருக்கு மகனின் விடுதலை உணர்வை குறைத்து மதிப்பிட முடியாத போதும், தாய் மண்ணுக்காக களத்தில் வீழ்ந்தபோது கண்கலங்கி எதிர்கால மருத்துவரை இழந்த தவிர்ப்பில் ஆழ்ந்துபோயிருந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ் சாவகச்சேரி பாசறையில் பயிற்சி பெற்று உறுப்பினராக மருத்துவக் கல்வியை மேற்கொண்டநிலையில் விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவிலும் தனது பணியை மேற்கொண்டார். மூதூர் கோட்டத்தில் தளபதி அருணாவின் திட்டமிடலில் சிங்கள படை முகாம் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் தயாராகவிருந்த வேளையில் மருத்துவ பணி மேற் கொள்வதற்காக மூதூர் சென்றிருந்த குழுவில் லெப்.சுதர்சன் அவர்களும் இடம் பெற்றிருந்தார். ஆரையம்பதி என்னும் ஊர் மட்டக்களப்புக்குத்தென்புறமாக அமைந்திருக்கின்ற தமிழரின் முக்கிய ஊராகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியாளர்களை அதிகமாகக் கொண்ட ஊர்களில் ஆரையம்பதியும் ஒன்றாகும். இவ்வூர் மக்களின் உணர்வுகள் தமிழ்த் தேசியத்தின் பால் ஒன்றித்து இருந்ததனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப மறைவிடங்களில் ஒன்றாகவும் விளங்கியிருந்தது. யாழ்ப்பாணத்தில் அரியாலை என்னும் ஊர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றதுபோல் மட்டக்களப்பில் ஆரையம்பதி ஊர் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இதே தாக்குதலில் வீரச்சாவடைந்த 2லெப்.கோபி (நாகமணி – ஆனந்தராஜா), மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் முதல் பெண் மாவீரர் லெப் .அனித்தா அவர்களின் சொந்த ஊரான ஆரையம்பதியில் பல மூத்த போராளிகள் வாழ்ந்து தமிழீழ விடுதலைக்கு தங்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள். இந்தியப் படையினர் எம் மண்ணில் நிலை கொண்டிருந்தபோது TELO தேசவிரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட லெப் .கலா அவர்களும், நெருக்கடியான காலகட்டத்தில் பாரிய துரோகத்தனத்தில் ஈடுபட்ட கருணாவின் செயலைக் கண்டித்து தமிழ்த் தேசியத்தைக்காத்து நின்று கருணாவினால் படுகொலை செய்யப்பட்ட லெப் .கேணல் நீலன் அவர்களையும் ஆரையம்பதி மண்தான் பெற்றிருக்கின்றது என்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அடையாளப்படுத்தப்பட்ட இடமாகவும் ஆரையம்பதி ஊர் பதிவு செய்யப்படுகின்றது. தமிழ் உணர்வு பொங்கி வழிந்த காலத்தில், கல்வியில் சிறந்து விளங்கியபோதும் எழுச்சி கொண்ட இளைஞனாக எழுந்து தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்த பூபாலபிள்ளை.சிவகுருநாதன் அவர்களின் தற்கொடையை எழுதுகின்ற போது கல்வியில் சிறந்து விளங்கிய பல தமிழ் இளையோர்களைப்பற்றியும், விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு அவர்கள் இணைந்தது பற்றியும் குறிப்பிடுகையில் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் மேஜர்..பிரான்சிஸ், லெப் .உமாராம் போன்றோர் பற்றியும் நினைவு படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் அம்பாறை ஹாடி தேசிய தொழில் நுட்ப கல்லூரி மாணவனான மேஜர்.பிரான்சிஸ் (இராசையா சடாச்சரபவான் கோட்டைக்கல்லாறு), தொழில் நுட்பவியலாளர் லெப் .உமாராம் (முத்துக்குமார் .சந்திரகுமார்) கல்லடி, ஆகியோரின் அர்ப்பணிப்புகளும், தமிழ் மக்களால் நினைத்துப் பார்க்கவேண்டியதொன்றாகும். பிறிதொரு கட்டுரையில் இவர்கள் பற்றி எழுதுவோம். கல்வியில் மேம்பாடடைந்து, தமது குடும்பங்களை மேம்படுத்துவோம் என்ற நிலையில் எமது இனம் சுயநலம் கலந்ததாக அரசியலிலும் அரங்கேறிய வேளையில் மேற் கூறியவர்கள் தங்களை இழந்து தமிழ் மக்களின் உரிமைப் போருக்கு வலுச்சேர்த்திருக்கின்றார்கள். இவர்களுடைய அர்ப்பணிப்பு வீண்போகக்கூடாது. இவர்களின் இழப்புக்களை எமது மக்களின் உணர்வுகளுக்கு கொடுக்கும் உந்து விசையாகப் பயன்படுத்துவோம். தங்களை இழந்து தமிழினம் வாழ வழிகோலியவர்களை வரலாற்றில் மறக்காமல் விடுதலைப் பாதையில் ஒன்றுபட்ட மக்கள் சக்தியுடன் பயணித்து உரிமையை நிலைநாட்டுவோம். கப்டன்.முத்துசாமி, லெப்.சுதர்சன் ஆகியோர் பிறந்தது வாழ்ந்தது மட்டக்களப்பு மண்ணில், வீழ்ந்து விதையாகிப் போனது மூதூர் மண்ணில் என்பது பெருமைக்குரியதாக இருக்கின்றது. ஏனெனில் மூதூர் மண்ணின் வரலாற்றுப் பெருமை தமிழரின் பூர்வீகதாயகத்தை எமக்கு எப்போதும் நினைவுபடுத்துகின்றது. தமிழர் தாயகத்தின் திருகோணமலையை அண்டியதான நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோட்டம் தமிழரின் பாரம்பரிய வாழ்விடம் என்பதிலும் நிலை நிறுத்தப்படுகின்றது. இந்த மண், எங்களின் சொந்த மண் என்பதில் இந்த மண்ணை பாதுகாக்க வேண்டிய கடமையும், அர்ப்பணிப்பையும் எமது போராளிகள் உணர்ந்ததனால், விதையாக வீழ்ந்த பல மூத்த போராளிகளை வரலாற்றில் பெற்றிருக்கின்றோம். இந்த மண்ணில் காட்டிக்கொடுப்புக்கு மத்தியில் நடந்த சிங்கள இராணுவச் சுற்றிவளைப்பில் வீரச்சாவடைந்த மூதூர் கோட்டத்தளபதி மேஜர். கஜேந்திரன் உட்பட்ட மாவீரர்கள் அனைவரும் வரலாற்றில் சாதனையாளர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பாசத்துக்குரியவராகவும், அவரால் மிகவும் விரும்பப்பட்டவர்களில் ஒருவராகவும் இருந்த மூதூர் கோட்டத் தளபதி மேஜர்.கணேஷ் அவர்களின் வீரச்சாவை அடுத்து ஒரு தன்னலமற்ற, தமிழ்நலத்துடன் செயல்பட்ட மாபெரும் விடுதலை வீரனான மேஜர். கஜேந்திரன் அவர்களுடன், வரலாற்றில் புதிய அறிவியல் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்தப் பயணித்த கப்டன்.முத்துசாமி, மருத்துவ மாணவன் லெப்.சுதர்சன், கப்டன்.குளியா (சிறி) அரசடி திருகோணமலை, லெப் .சுரேஷ் ஆலங்கேணி, 2ம் லெப்.கோபி ஆரையம்பதி, வீரவேங்கை தாவுத் வல்வெட்டித்துறை,வீரவேங்கை நிமால் கட்டைபறிச்சான், மூதூர் ,வீரவேங்கை லோயிட் மூதூர் ஆகியோரையும் தமிழீழ மண் இழந்தது. மூதூர் மண்ணை ஆக்கிரமித்து சிங்களப் பேரினவாதத்தின் கீழ் முழுமையாகக் கொண்டுவரவேண்டுமென்ற எண்ணம் 1948 ம் ஆண்டிலிருந்து அல்லை – கந்தளாய் குடியேற்றத்திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. சிங்களப் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தமிழ் அரசியல் வாதிகள் எதிர்த்த போதும், 1971 ம் ஆண்டு சேருவில என்ற சிங்களத் தொகுதி உருவாக்கப்பட்டது. அறவழியில், அரசியல் வழியில் காட்டப்படும் எதிர்ப்புகளை சிங்கள அரசு மதிப்பதற்கு மாறாக அடக்கு முறையை மேற்கொண்டு தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதனை ஆட்சி மாறிய சிங்கள அரசியல் கட்சிகள் கொள்கையாகக் கொண்டிருந்தன. இதன் பயனாக தமிழர் நிலம் பறிக்கப்படும் அபாயம் தொடர்ந்து கொண்டிருந்ததால் போராடப் புறப்பட்ட இளைஞர்பட்டாளத்தின் கரங்களில் ஏந்தப்பட்ட போர்க்கருவிகள் ஆக்கிரமிப்பு வாதிகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருந்தன. மூதூர், தமிழ், முஸ்லிம் மக்களின் தாயக பூமி என்பதனை நீண்ட வரலாறு எமக்கு உணர்த்துகின்றபோதும், சிங்கள ஆக்கிரமிப்பின் தாக்கம் தமிழ் மக்களை மாத்திரமல்ல முஸ்லிம் மக்களையும் சொந்த நிலத்தை இழக்கும் தன்மையை உருவாக்கியுள்ளது. அண்மைக்கால பௌத்த பிக்குகளின், புத்த கோயில் உருவாக்கங்கள் இதனை தெளிவாக காட்டிநிற்கின்றன. எனவே இந்த நிலை தொடரவேண்டுமா? என்பதுதான் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு முன்னுள்ள பாரிய பிரச்சனையாகும். இவ்வாறான நிலையிலுள்ள மண்ணில் எமது போராளிகளின் அர்ப்பணிப்புகள், எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருந்தது மட்டுமல்லாமல் தொடரும் நிலப்பறிப்பையும் தடுத்து நிறுத்தியிருந்தது, இந்த மண்ணில் வீழ்ந்த இன்னுமொரு போராளியான 2 வது லெப். கோபி ஆரையம்பதி ஊரைச் சேர்ந்தவர்.இந்த இராணுவச் சுற்றி வளைப்பில் இரண்டு போராளிகளை இழந்த துயரத்தில் ஆழ்ந்திருந்த ஆரையூர் மக்கள் விலை மதிக்க முடியாத எதிர்கால மருத்துவரையும் , புகைப்படக்கலையில் திறமை மிக்கவர் ஒருவரையும் விடுதலைக்காக அர்ப்பணித்ததில் பெருமையடைந்திருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில், விடுதலைப் போராட்டக்களத்தில் உயர்கல்வி மாணவர்களை உள்வாங்கிய விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மிகவும் பேரிழப்பான சம்பவமாக இது அமைந்திருந்தது. வாழ்வதும், வீழ்வதும், தன் இனத்தின் வாழ்வுக்காக என்ற தத்துவத்தின் அடிப்படையில் போராளியாக எமது மண்ணில் எமது மக்களோடு வாழ்ந்த இவர்களின் தற்கொடை பதவிக்காக துரோகத்தின் உச்சக் கட்டத்தில் செயலாற்றி சிங்களத்தின் காலடியில் மண்டியிட்ட மானம்கெட்டவர்களின் வாழ்க்கைக்கு மத்தியில் மட்டக்களப்பு மக்களின் வீரத்தையும், தன்மானத்தையும் காத்து நின்ற செயலாகும். கப்டன் முத்துசாமி, லெப்.சுதர்சன் ஆகிய இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு இணைந்துகொண்ட வேளையில், அக்காலத்தில் இயங்கிய எந்தவொரு விடுதலை இயக்கத்திலும் இவ்வாறானவர்கள் மட்டக்களப்பில் இணைந்திருந்ததில்லை மட்டக்களப்பின் விடுதலை வரலாற்றில் விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலப் போராளிகளுக்கு அம் மக்கள் கொடுத்த அங்கீகாரம் வேறு எந்த போராட்ட இயக்கத்திற்கும் கிடைத்ததில்லை. வரலாற்றில் எமது மக்களோடு வாழ்கின்ற போராளிகளான இவர்களை பல்கலைக்கழகங்களில் படித்து வெளியேறியவர்களும்,படித்துக்கொண்டிருப்பவர்களும், பட்டம்பெற்று வெளிநாடுகளில் வாழ்வோரும் முன்மாதிரியான விடுதலைப் போராளிகளாக நினைத்துப் பார்க்கவேண்டும். இவர்களின் அர்ப்பணிப்புக்களுக்கு நாம் என்ன செய்யலாம் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். மேற்கூறிய ஒவ்வொருவருடைய உள்ளத்திலும், எரிந்துகொண்டிருக்கின்ற விடுதலைச்சுடராக ஒளிரவேண்டும் என்பதே எமது மக்கள் எதிர்பார்க்கின்ற விடுதலையோடு இணைந்ததான நன்றி உணர்வாகும். இவர்களின் பெயரோடு அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். தமிழ் இளையோரின் கல்வி மேம்பாட்டுக்கும் கரம் கொடுப்போம். தேசியத் தலைவர் கூறியதுபோல் போராளியாக உருவாக்கப்பட்டு விடுதலைப் போராட்டத்திற்குள் நுழைந்தவர்கள் என்ற வரிசையில் நிமிர்ந்து நிற்கின்கின்ற இம் மாவீரர் போன்றவர்கள் தொடர்ந்தும் விடுதலைப்பாதையில் பயணித்திருந்தால் மட்டக்களப்பில் ஏற்பட்ட துரோகத்தனமும் துடைத் தெறியப்பட்டிருக்கும். பிற்காலத்தில் மட்டக்களப்பில் தமிழ் மக்களை வழிநடத்திய பொறுப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும். இவ்வாறு நடந்ததைக் கொண்டு நோக்குகின்றபோது எமது விடுதலையை பெறுவதற்கு நாம் இழக்க வேண்டியது அதிகம் உண்டு என்று எண்ணத் தோன்றுகின்றது.எமது மாபெரும் அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் அரசியல் வழியில் விடுதலையைப்பெற அரசியலில் நிற்பவர்கள் இதய சுத்தியோடு செயல்படும் காலத்தில் இணைந்திருப்பதை எண்ணிக்கொள்ளவேண்டும். எமக்காக வீழ்ந்தவர்களை எமது இனத்தின் இறுதி இருப்பு வரை எமது நெஞ்சினில் நினைவாக வைத்திருப்போம். இவர்களின் உடல் எம் மண்ணில் வீழ்ந்தாலும் விடுதலைக்கான குரல் எமது செவிகளில் என்றும் கேட்டுக் கொண்டே இருக்கின்றது, தமிழ் உணர்வோடு வாழ்வோம். உரிமைக்காக ஒன்றுபட்டு பயணிப்போம். உலக ஓட்டத்தில் ஒன்றித்து தன்னாட்சியுரிமையை நிலைநிறுத்துவோம். தமிழ்காந் ) https://www.meenagam.com/உரிமைப்-போரில்-உணர்வுடன-2/
  6. தேசியத் தலைவர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற தளபதி. லெப். கேணல் கங்கையமரன் லெப். கேணல் கங்கையமரன் வீரவணக்க நாள் இன்றாகும்.! 29.06.2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனைவிழுந்தான் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ‘கடற்புலிகளின் தளபதி’ லெப். கேணல் கங்கையமரன், மேஜர் தசரதன் ஆகிய மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடற்புலிகளின் தொடக்க காலம் முதல் கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப். கேணல் கங்கையமரன், கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடத்தியவர் என்பதும் விடுதலைப் போராட்டத்திற்கு அயராது உழைத்து கடற்புலிகளின் வளர்ர்ச்சிக்கும் பெரிதும் துனையாக திகழ்ந்தவர். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற தளபதி.பின்னைய நாட்களில் கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு சிறிலங்காக் கடற்படையில் பல கலங்களை தாக்கி பல சாதனைகளை அதன் தலைநகரிலும் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. https://www.thaarakam.com/news/af546055-9557-42aa-86c9-52932fb58a66
  7. “ரணகோச” நடவடிக்கை சமரின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவில்.... 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் ஐயன், லெப்.கேணல் தணிகைச்செல்வி உட்பட ஏனைய 75 மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். லெப்.கேணல் ஐயன் (சூரியகாந்தி உதயசூரியன் – யாழ்ப்பாணம்) லெப்.கேணல் தணிகைச்செல்வி (சுப்பிரமணியம் சத்தியதேவி – யாழ்ப்பாணம்) மேஜர் தேன்மொழி (டிலானி) (தில்லைநாயகம் யூடிஸ்ராதிலகம் – யாழ்ப்பாணம்) மேஜர் யாழிசை (பரராஜசிங்கம் மங்கையற்கரசி – யாழ்ப்பாணம்) மேஜர் கலைமகள் (இராமலிங்கம் பிருந்தா – யாழ்ப்பாணம்) மேஜர் ராஜன் (மரியநேசன் அன்ரூமாட்டின் – யாழ்ப்பாணம்) மேஜர் செழியன் (கிருஸ்ணபிள்ளை சத்தியநாதன் – யாழ்ப்பாணம்) மேஜர் வதனன் (சபாரத்தினம் சந்திரகுமார் – வவுனியா) கப்டன் பைந்தமிழினி (நாகலிஙகம் மாலாதேவி – முல்லைத்தீவு) கப்டன் ரஜனி (கந்தையா மஞ்சுளாதேவி – யாழ்ப்பாணம்) கப்டன் யசோ (வேலு ராஜலக்சுமி – யாழ்ப்பாணம்) கப்டன் மென்குழலி (அமுதம்) (தங்கவேலு புஸ்பலதா – முல்லைத்தீவு) கப்டன் சுதன் (நாதன் சண்முகவரதன் – யாழ்ப்பாணம்) கப்டன் செல்வந்தன் (இசிதோர் யூலியஸ் – மன்னார்) கப்டன் ரஜீவன் (வெள்ளைச்சாமி நாகராசா – வவுனியா) கப்டன் காவினியன் (கலைமேகன்) (இராசரத்தினம் ரஜிந்தன் – யாழ்ப்பாணம்) கப்டன் கனகசுந்தரம் (கனகராஜ்) (வேலுப்பிள்ளை விமலேஸ்வரன் – மட்டக்களப்பு) கப்டன் தமிழேந்தி (வில்லியம் றொசான் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் குமாரன் (இராசு தனபாலசிங்கம் – முல்லைத்தீவு) லெப்டினன்ட் சாந்தி (கிருஸ்ணசாமி சசிரேகா – கிளிநொச்சி) லெப்டினன்ட் கலா (எழிலரசி) (வேலாயும் லீலாதேவி – கிளிநொச்சி) லெப்டினன்ட் சதா (செல்வராசா சிவமலர் – வவுனியா) லெப்டினன்ட் உசா (திருச்செல்வம் நிரோயினி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கீதாஞ்சலி (வீரசிங்கம் கவிதா – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இளங்கோவன் (சிவராசா விக்கினேஸ்வரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மருதநம்பி (கிருஸ்ணமூர்த்தி வதனரூபன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் புரட்சிக்காவலன் (பாலசுப்பிரமணியம் ராஜகௌசர் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சிறிகுந்தன் (தங்கராசா இராசேந்திரன் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் இசைவாணி (ஈழரசி) (மரியதாஸ் ரஞ்சிதமலர் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் வாணி (மகேஸ்வரன் யசோதரை – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் கலைச்செல்வி (முத்துச்சாமி ரஜினா – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அன்பினி (கோபாலரத்தினம் உதயவாணி – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் கண்ணகி (எட்மன் மோகனா – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் சுவர்ணா (பாடினி) (பொன்னையா தனலட்சுமி – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் பிரியங்கா (வனஜா) (சுந்தரலிங்கம் சுலக்சனா – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அன்பழகி (சண்முககேசரம்பிள்ளை யாழினி – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் சிறிபரன் (கந்தையா ஞானப்பிரகாசம் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அகப்பாலவன் (கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி – அம்பாறை) 2ம் லெப்டினன்ட் அகலையன் (யோகராசா யோகேஸ்வரன் – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் புரட்சிநெறியன் (சின்னத்துரை சத்திவேல் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை சொக்கன் (பூவண்ணன் சாந்தன் – மன்னார்) வீரவேங்கை கதிர்நிலவன் (கிருஸ்ணசாமி மாரியப்பன் – வவுனியா) வீரவேங்கை சிந்துஜா (ஏபிரகாம் பிலோமினா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை நிரோயினி (பெனடிக்ற் ஜஸ்மின் – கிளிநொச்சி) வீரவேங்கை கோமளா (தவசி தவப்புதல்வி – முல்லைத்தீவு) வீரவேங்கை இசைவாணி (சிவஞானசுந்தரம் சிவாஜினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழரசி (ஐயாத்துரை யோகேஸ்வரி – முல்லைத்தீவு) வீரவேங்கை அருணா (தியாகினி) (மயில்வாகனம் பிரியதர்சினி – கிளிநொச்சி) வீரவேங்கை வித்தியா (பெருமாள் நாகேஸ்வரி – வவுனியா) வீரவேங்கை பாமா (கவி) (பாலசிங்கம் சிவராணி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை பாமகள் (சுடரவள்) (சிவசுப்பிரமணியம் சந்திரமதி – மன்னார்) வீரவேங்கை இன்விழி (வடிவேல் சிவனேஸ்வரி – கிளிநொச்சி) வீரவேங்கை சுடரொளி (அஞ்சப்பு சிவகுலரஞ்சினி – கிளிநொச்சி) வீரவேங்கை மாங்குயில் (மிர்ணா) (செல்வன் ரஜனி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை மலரினி (அமுதினி) (ஆறுமுகம் யோகேஸ்வரி – முல்லைத்தீவு) வீரவேங்கை காந்தி (சிற்றம்பபலம் புனிதமலர் – முல்லைத்தீவு) வீரவேங்கை யாழினி (சிந்துஜா) (செல்லத்துரை காந்தரூபி – முல்லைத்தீவு) வீரவேங்கை புலிமகள் (செல்லத்துரை சுரேக்கா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை கலையரசி (இளவரசி) (வைத்தியலிங்கம் மிதுலா – மன்னார்) வீரவேங்கை வினிதா (தவராசா றஜிதா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை பவப்பிரியா (பரஞ்சோதி சிவதர்சினி – மட்டக்களப்பு) வீரவேங்கை மித்திரா (கவி) (இராசநாயகம் மரியகுணகுந்தா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இசைவேங்கை (யேசுராசா மேரிதயானி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை ரூபிகா (மகாதேவன் ஜீவந்தினி – முல்லைத்தீவு) வீரவேங்கை கலைச்செல்வி (சுதா) (டேவிற் மேரிசுகிதா – முல்லைத்தீவு) வீரவேங்கை அருமைநிலா (சிவராசா சிவறஞ்சினி – முல்லைத்தீவு) வீரவேங்கை சாளினி (சாளி) (குருசாமி தயாளினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை ஜெயகீதா (முருகேசு பிறேமலதா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை வசந்தி (அப்துல்கரீம் கற்பகரூபவதி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை அகநிலா (வல்லிபுரம் யோகராணி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை உதயா (சோமசுந்தரம் கவிதா – திருகோணமலை) வீரவேங்கை திருமலர் (வேலுப்பிள்ளை சிவமலர் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை சாவித்திரி (இளவரசி (வைத்தியலிங்கம் தவமதி – முல்லைத்தீவு) வீரவேங்கை தவநிதா (சியாமளா) (நாகராசா இசையரசி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை அருமலர் (தவராசா தயானா – முல்லைத்தீவு) தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/9b66fca7-5efe-44bb-826b-035a05340f72
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் ஐயா🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
  9. கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.! கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் யாழ் குடாநாட்டு சிறிலங்கா படையினருக்கான ஆயுத – தளபாட வெடிமருந்து ஏற்றிச் சென்ற ‘உகண’ விநியோகக் கப்பல் முழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். குடாவில் நிலை கொண்டிருக்கும் படையினருக்குத் தேவையான ஆயுதங்கள் வெடிபொருட்களுடன் காங்கேசன்துறைத் துறைமுகம் நோக்கி டோறா பீரங்கிப் படகுகளின் வழித்துணையுடன் சென்ற “உகண” கப்பல் 26.06.2000ம் அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளால் வழிமறிக்கப்பட்டு தாக்குதல் தொடுக்கப்பட்டது. சுமார் எட்டு மணிநேரம் இடம்பெற்ற கடும் சமரின் நடுவே தமது வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட படகுகளால் குறித்த கப்பலை கடற்கரும்புலிகள் தகர்த்து மூழ்கடித்தனர். இதன்போது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு ஒன்றும் கடுமையாகச் சேதமடைந்தது. இத்தாக்குதலின்போது ஆறு கடற்கரும்புலிகள் தமது இன்னுயிர்களை ஈர்ந்து கடலன்னை மடியில் வீரகாவியமாகினர். விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.! கடற்கரும்புலி லெப்.கேணல் ஞானேஸ்வரன்:- மீன் பாடும் தேன் நாடாம் இதுதான் இவன் பிறந்த மண். மட்டக்களப்பு 12ம் பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்ற இவன் கனரக ஆயுதப் பயிற்சியினைப் பெற்றுக்கொண்டான். இதன்பின்னர் யாழ்.மாவட்டம் வந்து வேவுப்பயிர்சிகளை நிறைவு செய்தவன், பல தாக்குதல்களுக்கான வேவு நடவடிக்கைகளில் முன்னின்று செயற்படுகிறான். கொக்குத்தொடுவாய்ச் சமர், ஓயாத அலைகள் 01, ஓயாத அலைகள் 02, ஜெயசிக்குறு என தனது வேவுத்திறனை வெளிப்படுத்திய ஞானேஸ்வரன் சென்றகளமேல்லாம் வீரவடு ஏந்தி வென்று வந்திருந்தான். கடற்கரும்புலிகள் அணியில் தன்னை சேர்த்துக்கொண்டிருந்த இவன், உகணக் கப்பலை தகர்த்து வீரவரலாறாகிப் போனான். கடற்கரும்புலி மேஜர் சூரன்:- மன்னார் மாவட்ட தாக்குதல் அணியில் இருந்துதான் இவனது செயற்பாடு தொடங்கியது. பல தாக்குதல்களில் சண்டைசெய்த சூரன், தவளைத் தாக்குதலில் தனது இடதுகாலை தொடையுடன் இழந்தான். இதன் பின்னர் புலனாய்வுத்துறையில் சிலகாலம் தனது செயற்பாட்டை விரித்திருந்தான். இந்தக் காலப்பகுதியில்த் தான் தனது சுயவிருப்பில் கடற்கரும்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொள்ளுகின்றான். இவனிற்கான கரும்புலிப் படகு வழங்கப்பட்ட போது, தனது படகு இயந்திரங்களைப் படியவிடுதல், ஆயுதங்களை சுத்தம் செய்தல், தொலைத்தொடர்பு சாதனங்களை சீர்செய்தல் என படகின் முழுப் பராமரிப்பு வேலைகளையும் ஒருகையில் ஊன்றுகோலுடன் கடற்கரை மணலில் ஓடிஓடிச் செய்வான். இவ்வாறாக இவன் பெருவிருப்புடன் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது. தேசவிடியலை நெஞ்சினில் சுமந்த கனவுகள் மெய்ப்பட உகண கப்பலை தகர்த்து வீரவரலாற்றை எழுதினான். கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன்:- எந்த இறுக்கமான கடற்சண்டையாக இருந்தாலும் சரி, நடவடிக்கைப் படியாக இருந்தாலும் சரி, பழுதடையும் இயந்திரங்களை இலகுவாக சீர் செய்து கொண்டு அந்த இடத்துக்கு விரையும் நல்லப்பன் மற்றவர்களால் மதிக்கப்படும் சிறந்த இயந்திரப் பொறியியலாளன். இயந்திரம் சீர்செய்யும் களத்தில் இவனது பணி ஆழமானது. திருத்த முடியாது என கைவிடப்படும் இயந்திரங்களை எல்லாம் தன் பெரு முயற்சிகளினால் சீர் செய்துவிடும் நல்ல தற்துணிவு இவனிடத்தில் இருந்தது. அமைதியான அவனது சுபாவம். தானும் தனது வேலையென ஒதுங்கிப்போகும் பக்குவம் எல்லோரையும் இவனிடத்தில் ஈர்க்கவைத்தது. படகோட்டியாக, தொலைத்தொடர்பாளனாக, சகல ஆயுதங்களையும் இயக்கி சண்டை செய்யக்கூடிய வல்லமை பெற்றிருந்த நல்லப்பன் பல கடற்சமர்களில் பங்கெடுத்தான். கடற்கரும்புலிகள் அணியில் இணைந்திருந்த நல்லப்பன், ஆழகடலேங்கும் விடுதலைக்கு பலம் சேர்க்கும் பணியிலும் தனது கடமையைச் செய்திருந்தான். இவ்வாறாக விடுதலைக்காக உழைத்த நல்லப்பன். எதிரியின் உகண கப்பல் தகர்ப்பில் வீரவரலாறு படைத்தான். கடற்கரும்புலி மேஜர் சந்தனா:- சுறுசுறுப்பு, சுட்டித்தனம், மிடுக்கான கதை, மற்றவர் மனத்தைக் கவரும் நகைச்சுவையான பேச்சு இவை எல்லாவற்றிற்கும் சொந்தக்காரிதான் கடற்கரும்புலி மேஜர் சந்தனா. 1990ம் ஆண்டு தன்னைப் போராளியாக மாற்றிக்கொண்டவள். மகளிர் படையணியின் தாக்குதலணியில் செயற்ப்பட்ட சந்தனா களங்கள் பலதை எதிர்கொண்டாள். இருமுறை பலமான விழுப்புண்களையும் தாங்கிக்கொண்டாள். இதன்பின்னர் தமிழீழ சட்டக்கல்லூரியில் கற்பதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் சந்தனாவும் ஒருவர். தமிழீழத் தேசியத் தலைவர் முன்னிலையில் சட்டவாளராக உறுதிப் பிரமாணம் செய்து வெளியேறிய சந்தனா நீதியான, நேர்மையான செயற்பாட்டின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டாள். எனினும் மக்களின் நல்வாழ்விற்காய் தன்னை அர்ப்பணிக்கத் துணிந்த சந்தனா, கடற்கரும்புலிகள் அணியில் இணைந்து இலக்கிற்காக நீண்டகாலம் காத்திருக்க நேருகிறது. நீண்டகாலமாய் காத்திருந்த இவள் பொறுமைக்கு வாய்பாய் உயரக்கடலில் எதிரியின் எண்ணைக் கப்பலான உகணக் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொள்ளுவதே இவளது இலக்கானது. உகண கப்பலில் மோதியபோது உப்புநீரில் தீ மூண்டு வீரவரலாறாகிப் போனாள். கடற்கரும்புலி கப்டன் பாமினி:- தொடக்கத்தில் மக்களுக்கான அரசியல்ப் பணியை செய்துவன்தவள் பின்னாளில் கடற்புலிகளின் சுகன்யா தரைத்தாக்குதல் அணியோடு இணைந்து ஓயாத அலைகள் 01, சத்ஜெய எதிர்ச்சமர், ஜெயசிக்குறு எதிச்சமர் என எ.கே எல்,எம்.ஜி (AK – LMG) உடன் அணித்தலைவியாக நின்று களங்களை எதிர்கொண்டாள். இந்த அமைதியானவளுக்கு கிடைத்த இலக்கு ஆழமானது. சிறிலங்கா படைகளுக்கு விநியோகப் பணியில் ஈடுபட்ட உகண கப்பல் மீது துணிகரத் தாக்குதலில் வெற்றிச்செய்தியை பரிசாக்கி வீரகாவியமானாள் எங்கள் பாமினி. கடற்கரும்புலி கப்டன் இளமதி:- தீவகம் வேலணை இதுதான் இவளது சொந்தமான். இந்தமண் 1990ம் ஆண்டு சிறிலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட போது நமது மண்ணை எதிரியிடமிருந்து மீட்க வேண்டும் என்பதற்காக தன்னையும் போராளியாக மாற்றிக்கொண்டவள் தான் இளமதி. பிறப்பிலே இவளது கால் ஒன்று இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும் தன்னால் பயிற்சிகளை எடுத்து ஒரு போராளியாக முடியும் என்ற இவளது நம்பிக்கை வெற்றியைத் தந்தது. பயிற்சியின் பின்பு தொலைத்தொடர்புக் கல்வியைப் பெற்றிருந்த இளமதி கடற்புலிகளின் தரையோர பாதுகாப்பு நிலையத்தில் தனது கடமையைச் செய்தாள். இந்த நேரத்தில் கொக்குத்தொடுவாய்ச் சமரில் இவளது சகோதரி வீரச்சாவடைந்த போது இவளுக்குள் இருந்த விடுதலை உணர்வு இன்னும் இன்னும் பெருவீச்சாகியது. இதுவே கடற்கரும்புலியாக இவளை மாற்றியது. செவ்வானம் படையணியில் கடற்கரும்புலிகளுக்கான பயிற்சிகளை நிறைவு செய்தவளுக்கு, இலக்கு இலகுவில் கிடைக்கவில்லை. தொடர்ந்து தனது மனதை தளரவிடாது கடற்தாக்குதல் அணியில் தொலைத்தொடர்பாளராக, படகுச் சாரதியாக, இயந்திரத் திருத்துனராக தனது பணியைச் செய்திருந்த இளமதி எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த நாளும் வந்தது. கூட நின்ற தோழியருக்கு இனி நான் வரமாட்டேன் வெற்றிச் செய்திதான் வரும் என்று கூறிச்சென்றவள் எதிரியின் உகண கப்பல் தகர்ப்பில் வெற்றிச் செய்தியைத் தந்து வீரகாவியமாகிப் போனாள். https://www.thaarakam.com/news/c446d938-e356-4f2b-b44a-2a701833ee1a
  10. எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் முகுந்தா.! 19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகுந்தா அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.இம்மாவீரருக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம். எங்கள் விடுதலைக்கான பயணத்தில் அவளது இழப்பு எவராலும் ஈடுசெய்ய முடியாத ஒன்று. ஒரு தனி மனிதப்பிறவி. போராளி என்பதை மீறி, தன்னை அர்ப்பணித்து அவள் ஆற்றிய பணி அதிகம். எத்தனையோ போராளிகள் கூட்டிணைந்து நடத்தும் தாக்கு தல்களின் வெற்றிக்கு மூலவேர்களைத் தாங்கி நின்றவள் முகுந்தா. சாதாரண சம்பவங்களை அல்லாமல் தான் வாழ்ந்த கடைசி நிமிடம்வரை மறக்க முடியாத எத்தனையோ மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவங்களைச் சந்தித்து, அவற்றி லிருந்து விரிந்த புதிய சிந்தனை களைக் கொண்டு மேலும் மேலும் கட்டியெழுப்பப்படவேண்டிய எங்கள் படையணியைப்பற்றி அடிக்கடி கனவு கண்டவள். விடுதலை நெருப்பைக் கண்ணினுள் எரியவிட்டு, கண்ணி வயல்களுக்குள்ளால் ஊர்ந்து தவழ்ந்து பனி, மழை, வெயில், பகல், இரவு பாராது அவள் எடுத்த வேவுத் தகவல்கள்தான் சமர்க்களங்களில் எமது தாக்குதலுக்கான மூலாதாரமாகியது. தம்மால் செய்யமுடியாது என்று வேறு யாரும் கைவிட்ட வேலைகளை என்னால் முடியும். நான் செய்கிறேன் என்று முன் வந்து செய்து முடித்தபோது அவளுள் பிரகாசித்துக் கொண்டிருந்த ஆளுமையை எம்மால் இனம்காண முடிந்தது. 1990 இல் நடுப்பகுதியில் வல்வெட் டித்துறையிலிருந்த தனது குடும்பத்தை விட்டு, விடுதலைப் போராட்டப் பாதையில்முகுந்தாவும் வந்து சேர்ந்தாள். 1991இல் வேவுப் பயிற்சிக்கென விடுதலைப் புலிகள் மகளிர் படையணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரத்தில் தனது பெயர் இல்லை என்பதைப் பார்த்துவிட்டு, ஆர்ப்பாட்டம் செய்து அடம்பிடித்து அந்தக்கடினமான பணியில்தன்னைச் சேர்த்துக் கொண்டாள். அன்றிலிருந்து தொடங்கிய வேலை அவள் இல்லாத சண்டைகளும் வேவுகளும் இல்லையென்று சொல்லு மளவுக்கு நீண்டிருந்தது. கட்டைக்காடு, பூநகரி, மண்டைதீவு, கொக்குத் தொடுவாய், வெற்றிலைக் கேணி, சூரியக்கதிர் 1-2, 1996இல் ஆனையிறவுதட்டுவன்கொட்டி, முல்லைத்தீவு, சத்ஜெய என்று விரிந்து சென்ற சமர்க்களங்களில் எமது தாக்குதலுக்கு உயிர்நாடியாக அவளது வேவுத் தகவல்கள் இருந்தன. அவள் வேவுபார்த்த நடவடிக்கைகளில் சூரியக்கதிர்-2 சற்று வித்தியாசமானது. மக்களோடு மக்களாக யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிச் சென்றவர்களோடு சேலை கட்டி, தென்மராட்சி முகாமொன்றுக்குச் சென்று, இராணுவத்தினரிடம் நீர்வாங்கிக் குடித்து அங்கிருந்து ஆயுத தளபாடங்கள், நிலைகள் பற்றிய தகவல்களைக் கொண்டுவந்து சேர்த்ததுவரை தனியாகச் சென்ற துணிவு, எத்தகைய வேலை யையும் இந்த மண்ணுக்காய் ஏற்றுச் செய்து முடிப்பாள் இவள் என்பதை நிரூபித்தது. தானும் ஒரு கரும்புலியாகச் சென்று தனது அர்ப்பணிப்பின் மூலம் நிறையச் சாதிக்க வேண்டும் என்ற கனவு முகுந்தாவுள்ளும் விரிந்தது. 1994இல் அண்ணைக்குக் கடிதம் எழுதியபோது வேவுப்பணியையும் தான் அவ்வாறுதான் நினைக்கின்றேன் என்று அண்ணையிடம் இருந்து பதில் கிடைக்க, தொடர்ந்தும் தனது பணியில் முழுமூச்சாக முகுந்தா ஈடுபடத் தொடங்கி விட்டாள். தாக்குதலுக்குமுன் மாதக்கணக்காக வேவுபார்த்து சண்டைக்கு வழிகாட்டி, தாக்குதலில் பங்குபற்றி, விழுப்புண் ணேற்று அவை குணமடைய மீண்டும் வேவுக்குச் சென்று......... இப்படி ஒரு சுழற்சிமுறையில் மீண்டும் எமக்கருகில் அவள் வந்து விடுவாள். இவ்வளவுக்கு நடுவில் அவள் ஒரு குஷியான பேர்வழி, முகாமில் அவள் நிற்கிறாள் என்பது வாசலில் நிற்கும் போதே தெரிந்து விடுமளவிற்குப் பெரிய தொண்டை . இதனால் "தொண்டா" என்றே எல்லோரும் அவளை கூப்பிடத் தொடங்கி விட்டனர். மரணப் பொறிக்குள் நின்று கொண்டு எந்தவித நெருக்கடிக்குள்ளும் குறித்த வேலையைச் செய்து முடிக்கும் அவளது செயலாற்றலும் திறமையுமே இறுதி நாட்களில் விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் சிறப்புப் படையணி ஒன்றுக்கு பொறுப்பாளராக அவளை நியமிக்க வைத்தது. அந்தப் படையணியைத் திறம்பட வழிநடத்தி பெரிய பெரிய விடயங்களையெல்லாம் பெண் போராளிகள் சாதிக்க வேண்டும் என்று தனது சின்னஞ்சிறிய இதயத்துக்குள் ஏராளமான கனவுகளைச் சுமந்து கொண்டிருந்தாள் அவள். 199706-18 அன்று அவளது துடிப்பு அடங்கிப்போன வேளையில் அந்தக்கனவு மொட்டுக்கள் முகையவிழ்த்து பூக்களா கியிருந்தன. அவற்றை அள்ளியெடுத்து எமது இதயங்களோடு இறுகத் தழுவிக் கொண்டு எம்மால் நிமிர்ந்து நிற்கமுடிந்ததே தவிர, கண்ணீர் சொரிய முடியவில்லை . ஆம் அவளுக்கும் அதுதான் விருப்பம். அவளது நினைவுகளை மீட்டுப் பார்க்கும் இந்தச் சிறிய பக்கத்தில் மட்டும், நாம் எழுதிய மொழியில் மட்டும் அடங்கி விடாது. நீண்டு பரந்து எம்மில் வியாபித்து....... முகுந்தா மறந்துவிட முடியாத ஒருத்தி. https://www.thaarakam.com/news/e24a96ac-2034-4870-9a44-552f9d12df5c
  11. பையனைக் கண்டது சந்தோஷம்😀. ஆனாலும் தேர்தலுக்கு பின்னால் இவ்வளவு காலம் ஒதுங்கியிருக்காமல் இருந்திருக்கலாம்☺️ பச்சை குத்தும் அனுமதி கிடைத்தால் @அன்புத்தம்பி க்கு பார்த்து பதமாக குத்துங்கோ. அவர்தான் இப்ப பக்திப் பிரவாகமாக இறைவனிடம் கையேந்துங்கள் என்கின்றார்!
  12. தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ, தலைசாய்ந்து தாய்மண்ணில் வீழ்ந்த மேஜர் டேவிட். ஒரு போராளியின் புனிதப்பயணம். தமிழர் வரலாற்றை நிலைநிறுத்தும் வரலாற்றுப்போரில், வரலாறாகிப்போன மேஜர் டேவிட், உண்மையில் ஓர் புரட்சி வீரன். தென்தமிழீழ எல்லையில், சிங்களத்தின் நிலப்பறிப்பில் 1963ம் ஆண்டு காலப்பகுதியில் உருவான அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் என்ற பழந்தமிழ் ஊரில் இன்ஸ்பெக்டர் ஏற்றம் என அடையாளப் படுத்தப்பட்ட இடத்தில் வாழ்ந்த தமிழ்க்குடும்பத்திலிருந்து எழுந்த விடுதலைப் போராளிபற்றிய நினைவுப்பதிவில் தொடக்கத்தின் முதல் அத்தியாயமாக நாம் கண்ட போராளிகளில் ஒருவராக டேவிட் அவர்களின் போராளி வாழ்க்கை அமைந்திருந்தது. அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாது எல்லைத் தமிழ் ஊர்களில் எழுச்சிமிகு மக்களையும் அணைத்துக்கொண்டு, கொண்ட இலட்சியத்திற்காக குறிக்கோள் தவறாது சென்றதையும் டேவிட்டின் போராளிப்பயணம் வெளிப்படுத்தியிருந்தது. தமிழ்ப்பேசும் மக்களின் பாரம்பரிய தாயகப் பகுதியான இவ்வூர்களில் தமிழர்கள் என்ற அடையாளத்தில் வாழ்ந்த மக்கள் விசாலமான நிலப்பரப்பைக்கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் பசுமை நிறைந்த, தமிழர் வரலாற்றில் நால்வகை நிலங்களை உள்ளடக்கிய இவ்வூர்களில் என்றும் தமிழர்கள், தமிழர்களாக வாழ்ந்து வந்தனர். சிங்கள பேரினவாத அடக்கு முறைகளில் நிலப்பறிப்பு, திட்டமிட்ட குடியேற்றத்தினால் சிங்கள மாவட்டமாக மாற்றப் பட்டுக் கொண்டிருக்கின்ற அம்பாறையில் தமிழர் விடுதலைக்காக எழுந்த ஆரம்பப் போராளிகளில் மேஜர் .டேவிட் அவர்களும் ஒருவராவர். லெப்.சைமன், லெப் ஜோசெப், 2வது லெப் நிசாம் ஆகிய ஆரம்பப் போராளிகளுடன் இவருடைய விடுதலைப் பயணமும் ஆரம்பமாகியது. 1983ம் ஆண்டு யூலை தமிழின அழிப்பின் மத்தியில் உருவான விடுதலையின் வெளிச்சங்களாக களமிறங்கிய மேஜர் டேவிட் இந்தியாவின் முதல் பாசறையில் பயிற்சிபெற்று வெளியேறிய நிலையில் தாய்மண் நோக்கிய பயணத்தில் விடுதலைக்காக தலைமையின் பணிப்பில் செயல்திறன்மிக்க போராளியாக தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டார். 1983ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் பல இயக்கங்களின் மத்தியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராளிகளாக அறிமுகமானவர்களில் மேஜர் டேவிட் அவர்களும் இணைந்திருந்தார். 1983ம் ஆண்டு ஆரம்பத்தில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் முதல் போராளி யோகன் (பாதர்) அவர்கள் பொறுப்பாளராகவும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராமு என்கின்ற போராளியின் செயல்பாடு மாவட்டத் தொடர்புகளிலும் இயக்கத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. ராமு அவர்களின் இடமாற்றத்திற்கு பின்பு, 1983ம் ஆண்டு தமிழின அழிப்பைத் தொடர்ந்து படைத்துறைப் பயிற்சிக்காக போராளிகளின் இணைப்பும், யோகனின் பயணமும் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் முதல் அரசியல் துறைப்பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ் அவர்கள் தொடர்பாளராக செயலாற்றினார். முதல் பாசறை முடிவில் இம்மாவட்டத்திற்கு வந்தவர்களில் மேஜர். டேவிட் அவர்களும் ஒருவராகவிருந்தார். 1983ம் ஆண்டு யூலை தமிழின அழிப்பைத் தொடர்ந்து கொழும்பு வெலிக்கடை, போகம்பர சிறைகளில் தடுத்து வைக்கப்பட்ட போராளிகளில் அழிக்கப்பட்டவர்கள்போக மீதிப் போராளிகள் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டிருந்தனர். 1983.09.23 ம் நாள் அன்று தமிழ் மக்களின் ஒத்துழைப்புடன் சிறை உடைக்கப்பட்டு போராளிகள் வெளியேறியிருந்தனர். இவர்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் அரசியல் கைதியான நிர்மலா நித்தியானந்தன் அவர்கள் தப்பிப்போக முடியாத நிலையில் தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். . நிர்மலா நித்தியானந்தன் அவர்களை சிறையிலிருந்து மீட்கும் ஒரு நடவடிக்கையை விடுதலைப் புலிகள் திட்டமிட்டபோது மேஜர் டேவிட் அவர்களும் ஒருவராக களமிறங்கினார். இது மட்டக்களப்பில் இவருடைய முதல் நடவடிக்கையாக இருந்தது. இந்த நடவடிக்கையில் மேஜர் பிரான்சிஸ் அவர்களும் முக்கியமானவராக இருந்தார். 1984. 06.10ம் நாள் அன்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட இந்த நடவடிக்கையில் நிர்மலா நித்தியானந்தன் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்டார். மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களிலிருந்து முதல் பாசறைக்கு அனுப்பிவைக்கப்பட்ட 20 போராளிகளில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு போராளிகளும் அடங்கியிருந்தனர். இவர்களில் மேஜர். டேவிட் ஒருவராகவும், லெப். சைமன், லெப். ஜோசெப் , 2வது லெப். நிசாம் போன்றவர்களும் உட்பட்டிருந்தனர். போராளி ஒருவர் உருவாகும் விதம், போராளியாக மக்கள் மத்தியில் அறிமுகமாகும்போது மக்களால் மதிக்கப்படும்விதம், என்பவற்றில் மேஜர். டேவிட் பொருத்தமானவராக தென்பட்டார். இவருடைய பக்குவமான போராளி வாழ்க்கையால் தேசியத்தலைவரால் அம்பாறை மாவட்டத்தின் முதல் பொறுப்பாளராகவும், முதல் தளபதியாகவும் நியமனம் பெற்று செயல்பட்டார். கிழக்கின் மூத்த போராளிகளில் ஒருவரான இவருடைய போராளி வாழ்க்கையில் கஞ்சிக்குடியாறு ஊரை அண்டியுள்ள காட்டுப்பகுதி மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. குறிப்பிட்ட சில போராளிகளுடன் இக் காட்டுப்பகுதியில் முகாம் அமைத்து வாழ்ந்த இவரையும், போராளிகளையும் அவ்வூர்களிலுள்ள மக்கள் விசுவாசத்துடன் நேசித்ததையும் அவதானிக்க முடிந்தது. 1983ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பின் புறநகர்ப் பகுதியான நாவற்கேணி ஊரிலும், வந்தாறுமூலையிலும், ஆரையம்பதியிலும் போராளிகள் தங்கியிருந்தனர். இவர்களினால் இம்மாவட்டத்தில்1984. 09.22 ம் நாள் அன்று மேற்கொள்ளப்பட்ட முதல் சிங்கள காவல் நிலையத்தாக்குதலிலும் மேஜர்.டேவிட் பங்குபற்றியிருந்தார்.போராட்ட வரலாற்றில் முக்கியத்துவப் பதிவைப்பெற்ற களுவாஞ்சிக்குடி சிங்கள காவல்நிலையத் தாக்குதலில் பங்குபற்றியதன்மூலம் வரலாற்றுப் பதிவிலும் மேஜர். டேவிட் இடம்பெற்றிருந்தார். அளவான உயரம், நிமிர்ந்தநடை, கறுப்பு நிறத்தில் சுருளான தலை முடியைக்கொண்ட அமைதியான சுபாவம், பதட்டமில்லாமல் முடிவெடுக்கும் தன்மை என்பன அடங்கிய சிறந்த போராளியான மேஜர். டேவிட் சகபோராளிகள் உட்பட மக்கள் அனைவரிடமும் அன்பாகப் பழகுவார். ஒரு போராளியின் புனிதப் பயணம், கல்லும் ,முள்ளும் நிறைந்த கடினமானதுதான் ஆனால் உறுதி தளம்பாது, உண்மை வீரனாக மக்களுக்காக, மக்களோடு பயணிப்பது என்பதில் மேஜர். டேவிட் விதிவிலக்கானவராக இருக்கவில்லை. இலங்கைத்தீவில் தமிழர் தாயகத்திற்கான வரலாற்றில் வாழ்கின்ற இனங்களில் தமிழரின் சொந்த பூமியான இத்தீவில் வந்தேறு குடிகளான சிங்களவர்களைவிட பூர்வீகக் குடிகளாக தமிழர்கள் வாழ்ந்ததாக வரலாற்றுக்குறிப்புக்கள் சொல்லுகின்ற நிலையில் தற்பொழுது வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுடைய தாயகமாகவும் சொந்த மண்ணாகவும் பேணப்படுகின்றன. இம் மாகாணங்கள், ஆட்சியிலுள்ள சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றபொழுது, விடுதலைக்கான போராட்டங்கள் நடப்பது இயற்கையான ஒன்றாகும்.இலங்கைத்தீவின் வரலாற்றை அறிந்துகொள்வதும், எமது தன்னாட்சி உரிமைக்கான நியாயங்களைத் தெரிந்துகொள்வதும் தமிழர்களாகிய எமக்கு அவசியமான ஒன்றாகும். மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட முதல் தாக்குதல் தளபதி லெப். பரமதேவாவின் வீரச்சாவைத் தொடர்ந்து, 1984ம் ஆண்டு இறுதிப்பகுதியில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் முதல் படைத்துறைத்தளபதியாக அருணாவின் வரவு அமைந்திருந்தது. இதற்கு முன்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பொறுப்பாளர்களாக யோகன் (பாதர்), பசிர் ஆகியோர் செயலாற்றியிருந்தனர். இக்காலகட்டங்களில் பெரும்பாலான தமிழ்மக்களின், அறிவாளர்களின் ஆதரவு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கிடைக்கப்பெற்றிருந்தது. மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் தளபதி அருணா அவர்களினால் நிருவாகம் ஒழுங்குபடுத்தப்பட்டபோது. தேசியத் தலைவரின் பணிப்பின் பேரில் அம்பாறை மாவட்ட தளபதியாக மேஜர். டேவிட் அவர்களும், மாவட்ட அரசியல் பொறுப்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேஜர். டயஸ் அவர்களும், தொலைத்தொடர்பு தொழில்நுட்பப் பொறுப்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிருந்தன் மாஸ்டர் அவர்களும், 1987ம் ஆண்டு இறுதிப்பகுதியில் இவருக்கு பின் அம்பாறை மாவட்ட தளபதியாக பணியாற்றிய மேஜர். அன்ரனி தாக்குதல் தளபதியாகவும் பணியில் இருந்தனர். இதே காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொலைத் தொடர்பு பணியும் ஆரம்பமானது. இதற்காக 48 என்ற குறியீட்டுடன் அம்பாறையிலும், 46 குறியீட்டுடன் மட்டக்களப்பிலும், 45 குறியீட்டுடன் மூதூரிலும், செயல்பட தொடங்கியது என்பது ஒரு வரலாற்றுப் பதிவாகும் இம் மாவட்டங்களின் முதல் பயிற்சிப் பாசறை வந்தாறுமூலை ஊரை அண்டியுள்ள காட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஈரளக்குளம் மதிரையடி என்ற இடத்தில் நடத்தப்பட்டது. அருணா தளபதியாக பணியிலிருந்தவேளையில், தளபதி அருணாவின் தலைமையில் நடத்தப்பட்ட ஏறாவூர் சிங்கள காவல்நிலையத்தாக்குதல், அம்பாறை மாவட்ட தம்பட்டை இராணுவ வழிமறிப்புத் தாக்குதலிலும், மேஜர்.டேவிட் பங்குபற்றியிருந்தார். 1985 ஆண்டு சிங்கள ரோந்துப் படைக்கெதிரான தாக்குதல் தளபதி அருணாவின் வழிநடத்தலில் அம்பாறை மாவட்ட தளபதி டேவிட் அவர்களின் தலைமையில் நடந்தது. அக்காலத்தில் பாரிய தாக்குதலாகவும், சிங்களப் படைகளை அச்சமூட்டும் தாக்குதலாகவும் இது அமைந்திருந்தது. தளபதி சொர்ணம் அவர்களின் ஆர்.பி. ஜி உந்துகணைத்தாக்குதலில் கவாசவாகனம் தாக்கப்பட்டு இயங்க முடியாத நிலையில் பல படையினரும் அழிக்கப்பட்டனர். குறிப்பிட்ட சில மணித்தியாலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இப் பகுதியை மீட்பதற்கு கடல் வழியைப் பயன்படுத்துமளவுக்கு சிங்களப்படை நெருக்கடியைச் சந்தித்த தாக்குதலாகும், போராளிகளின் உறுதியான போர் நடவடிக்கையைத் தெரியப்படுத்தும் தாக்குதலாகவும் அக்காலத்தில் வெளிப்படுத்தப்பட்டன. இத் தாக்குதலில் போராளி நசார் அவர்களும், ஒரு ஆதரவாளரும் விழுப்புண்ணடைந்திருந்தனர். தம்பட்டைத் தாக்குதல் மட்-அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் போராளிகளின் எழுச்சியை சிங்கள அரசுக்கும், சிங்களப் படைகளுக்கும் தெரியப்படுத்தியிருந்தன. தென் தமிழீழத்தில் அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால வளர்ச்சியில் மேஜர். டேவிட் ஒரு தூணாக செயல்பட்டார். அதுமட்டுமல்லாமல் இவரால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட போராளிகள் ஒவ்வொருவரும் பின்னாளில் சிறந்து விளங்கினார்கள். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகளின் இலட்சியத்திற்கான பயணம் ஓர் தேசிய இனத்தின் எழுச்சியில் எழுந்த பேரலையாக அமைந்திருந்தன. இந்த நூற்றாண்டுகளில் உலகத்தில் நடத்தப்பட்ட நீதியான தேசிய விடுதலைப்போராட்டம் எமது தாய்மண்ணின் விடுதலைக்கான போராட்டமாகும். உலகம் முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற நிலையில், ஒரு நாட்டில் அடக்குமுறை ஆட்சியாளர்களுக்குகெதிராக மக்கள் கிளர்ந்தெழ துணை போகின்ற இந்நாடுகள் சிறுபான்மை இனமாக விடுதலைக்காகப் போராடுகின்ற தேசிய இனத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத்தவறுவது ஏன் ? என்ற கேள்வி எங்களுக்குள் எழுகின்றது. எந்த அணியையும் சாரா சொந்த மக்களின் பலத்துடன் அளப்பெரிய தற்கொடைகளைப் புரிந்து விடுதலைப்போர் நடத்திய விடுதலைப் புலிகள் தமிழீழத் தாய்மண்ணை ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரித்து அதற்குத் தளபதிகளை நியமித்திருந்தனர். யாழ்ப்பாணம், வன்னிப் பெருநிலப்பரப்பு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு – அம்பாறை என வகுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கேணல்.கிட்டு, மாத்தையா, லெப். கேணல்.விக்டர், லெப்.கேணல்.சந்தோசம், லெப்.கேணல்.புலேந்திரன், அருணா, போன்றோருடன் அம்பாறை, மூதூர் போன்ற கோட்டங்களுக்கு முறையே மேஜர். டேவிட், மேஜர்.கணேஷ் ஆகியோரும் தளபதிகளாக பணிபுரிந்தனர். உணர்வோடு, உயர்ந்த இலட்சியத்திற்காக எமது தாய்மண்ணிலிருந்து எழுந்த தமிழ்த் தேசியத்தின் தலைவர் வழியில் முன்னிலையில் பின்தொடர்ந்த மேஜர்.டேவிட் போன்றவர்களின் உணர்வு, வீரம் என்றும் அளவிட முடியாதது. எதற்கும் அஞ்சாது எண்ணிக்கையில் குறைந்தளவு போராளிகளைத் தன்னுடன் இணைத்து சிங்களத்திற்கு எதிராக தாய்மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ்மக்களின் பாதுகாப்புக்காகவும் போரிட்ட மேஜர். டேவிட் தென் தமிழீழத்தின் எழுந்த விடுதலைக்கான போராளிகளில் ஒருவராக வரலாற்றில் பதிவுசெயயப்பட்டுள்ளார். போராளி என்ற உணர்வுமயமான சொல்லுக்கு இணையாக வாழ்ந்த மேஜர். டேவிட் அம்பாறை மாவட்டத்தின் தொடக்கத்தின் ஆரம்பம் என்றும் குறிப்பிடமுடியும். வாழ்ந்தால் தலைநிமிர்ந்து வாழ்வோம் இல்லையேல் தலைசாய்ந்து தாய்மண்ணில் வீழ்வோம் என்று தன்மானத்துடன் களமாடி வீழ்ந்தவர்களில் மேஜர். டேவிட் அவர்களையும் இணைத்துக்கொள்வோம். 1987ம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சுமார் 35 போராளிகளுடன் கஞ்சிகுடியாறு காட்டுப்பகுதியிலிருந்து வெளியேறி வந்த மேஜர். டேவிட் குழுவினரைப் பார்த்தவுடன் மண்ணின் விடுதலைக்காக தங்களை இழந்து விடுதலை இயக்கத்தின் வளர்ச்சியில் தமிழ்மக்கள் தனி உரிமையுடன், தன்மான உணர்வுடன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற உறுதி ஒவ்வொரு போராளியின் முகத்திலும் தென்பட்டதைப் பார்க்கமுடிந்தது. அன்று ஒவ்வொரு போராளியிடமிருந்த அர்ப்பணிப்பு பின்பு இல்லாமல் போனதற்கு இம் மாவட்டங்களில் சுயநலமுள்ள உறுப்பினர்களின் வளர்ச்சி போராட்டத்தை அழிப்பதற்கு காரணமாகவிருந்தன. காலத்தால் அழியாத பதிவை மேஜர்.டேவிட் பெற்றுக்கொண்டதற்கு குறிப்பிட்ட காலப்போராளி வாழ்க்கையே காரணமாகும். ஒரு போராளிக்கு சாவில்தான் ஒய்வு என்பதற்கமைய வீரத்துடன் வாழ்ந்து போனவர்களில் ஒருவராகத்தான் மேஜர். டேவிட் அவர்களை கணிக்கமுடிகின்றது. 1990ம் ஆண்டு யூன் மாதம் 11ம் நாள் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த வேளையில் தாய்மண் நோக்கிய சிறிலங்கா படை நகர்வினை தடுத்து நிறுத்தும் தாக்குதல் வியூகத்தை வகுக்கும் நோக்கில், பொத்துவில் பாணமை சாலையில் அமைந்துள்ள லகுகல என்ற இடத்தில், பொத்துவில் வட்ட அரசியல் பொறுப்பாளர் லெப். பாருக் (முகமது ராபிக்) அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சிங்களப் படையினரின் பதுங்கித் தாக்குதலில் 1990. 06. 15ம் நாள் அன்று இருவரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். தமிழீழத்தில் பல ஊர்களில் பல தாக்குதல்களில் பங்கு கொண்ட மேஜர். டேவிட் தான் பிறந்த மண்ணில் தனது விடுதலைக்கான இறுதிப்பயணத்தை முடித்துக்கொண்டார். லெப். பாருக் பொத்துவில் மண் ஈன்றெடுத்த இஸ்லாமியத் தமிழ் வீரன். உணர்வோடு எழுந்து , தமிழ் உறவோடு கலந்து உன்னத விடுதலைப் பயணத்தில் கால் பதித்தவன். தாய் மொழி ஒன்றாக, வெவ்வேறு மார்க்கங்களில் பயணித்தும் தாய் மொழிக்காக ஒன்றிணைந்து தாய் மொழியின் விடுதலையில் களமாடி தன்னை இழந்து தமிழ்மானம் காத்தவன். அன்பும், பண்பும் நிறைந்த அரசியல் போராளியாக பொத்துவில் மக்களுக்கு பணிபுரிந்து உறவுப் பாலமாக திகழ்ந்து உயிரிலும் மேலான விடுதலைக்காக வீழ்ந்தவன். இவன் வரலாறு என்றும் அழியாது. பொத்துவில் மண்ணின் காவிய நாயகர்களில் இவனும் ஒருவனாக உயர்ந்து நிற்கின்றான் மேஜர். டேவிட் உடன் களமாடி வீழ்ந்தவர்கள் மண்ணின் பெருமையை காத்துநிற்கின்றனர். எந்த மூலையிலும், எவ்வளவு ஆக்கிரமிப்புக்குள்ளும் வாழ்ந்த போதும், தமிழனின் பெருமையோடு வாழ்ந்த தலை சிறந்த போராளிகளை அம்பாறை மாவட்டம் பெற்றுக்கொண்டதற்கு மேஜர். டேவிட் போன்றவர்களின் தளபதி நிலையும், தளராத மனஉறுதியும் மானங்கெட்டு மண்டியிடாத தன்மையும் அளவுகோலாக இருந்தது. மேஜர் டேவிட் தளபதியாக இருந்த காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் வீரச்சாவடைந்தவர்களான, பாண்டிருப்பை சேர்ந்த 2ம் லெப் கனெக்ஸ் (ஞானமுத்து பேன்ட் வேலன்), ராஜ்குமார் (நல்லதம்பி சந்திரதாஸ்). கல்முனையை சேர்ந்த விஸ்வம் (முத்துலிங்கம் கருணாநிதி) , ராஜேஸ் (இராசையா ஜெகநாதன்) ,நெல்சன் (சின்னதுரை உதயகுமார்), பரிசுத்தம் (கணபதிப்பிள்ளை அத்மராஜா), பன்னீர் (இரத்தினம் பன்னீச்செல்வம்),லெப். கமலன் (சிவசுந்தரம் இராசநாயகம்), லெப். விக்கிரம் (சண்முகம் முத்துராமன்). காரைதீவை சேர்ந்த நாதன் (இளையதம்பி பாக்கியராஜா), சுந்தர் (நல்லதம்பி சுந்தரலிங்கம்), அஜந்தன் (சீனித்தம்பி குணசிங்கம்), குரு (சீனித்தம்பி பத்மநாதன்), 2ம் லெப் கல்கி (சாமித்தம்பி குகநாதன்), சுமன் (துரைராஜா ஜெயக்குமார்), திருமால் (வெள்ளைக்குட்டி துரையன்), நந்தன் (செ. குலசிங்கம்). வீரமுனையை சேர்ந்த கோபு (சண்முகம் இளங்கோ) மத்திய முகாமைச் சேர்ந்த மணி (இளையதம்பி மாசிலாமணி) அக்கரைப்பற்றைச் சேர்ந்த கப்டன்.பாருக் (அகமது லெவ்வை முகமது கனிபா), ரவி (தேவராசா), 2ம் லெப் ரமேஸ் (சி, லோகநாதன்), சந்திரன் (இ.சந்திரன்) பனங்காடுவை சேர்ந்த சுதர்சன் (ஐயம்பெருமாள் கருணாகரன்), தம்பிலுவில்லைச் ரவிக்குமார் (ம. புண்ணியமுர்த்தி), பவான் (கிருஷ்ணபிள்ளை சுவேந்திரராஜா), நிலம் (மயில்வாகனம் சிவகுமார்), லெப் வன்னி (வேலுப்பிள்ளை வன்னியசிங்கம்). திருக்கோயிலைச் சேர்ந்த தவம் (ஜெயரத்தினம் தவராஜா), விஜயன் (தம்பிராஜா முத்துலிங்கம்), ரகு (செல்லத்தம்பி யோகராஜா), ரோனி ஐயர் (வேலுப்பிள்ளை பூபாலபிள்ளை). தாண்டியடியைச் சேர்ந்த அசோக் (தம்பியப்பா சித்திரவேல்) பொத்துவில்லைச்சேர்ந்த கப்டன்நகுலன் (இளையதம்பி அருளானந்தம்) ஆகியோரையும் எமது தமிழினமும், எமது தாய்மண்ணும் வரலாற்றில் பெற்றுக்கொண்டது. இவர்களைப் போன்று எமது மண்ணில் வாழ்வது தொடர்ந்தால்தான் எமது உரிமையை நாம் பெற்றுக்கொள்ள முடியும். சுயநலம் அகன்று, தமிழ் நலன் ஒன்றே வாழ் நலமாக இருக்கின்றபோது எமது வரலாறு காட்டிய வழியில் இலட்சியத்தை வெல்லும்வரை ஓயாது தொடரமுடியும். காலவோட்டத்தில் தமிழ்மக்களின் பதிலில் ……………… தமிழ்காந் https://www.meenagam.com/தமிழர்கள்-தலைநிமிர்ந்து/
  13. சரியான கருத்து.👍🏾 ஆனால் வலதுசாரி பா.ஜ.க. மோடியை ஒரு மதத்தலைவர் போன்று காண்பித்து, இந்துத்துவத்தை நிறுவனமயப்படுத்தி, இந்தியாவில் பிளவுபட்ட சமூகங்களை மேலும் பிளவுபடுத்தும். இந்திய மக்கள் மதத்தலைவர், சாமியார் போன்ற தோற்றப்பாட்டைக் காட்டுபவர்கள் தவறுகள் புரிந்தாலும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை என்பதால், மோடியும் பரிவாரங்களும் எப்படியும் தமிழ்நாட்டிலும் காலூன்றி, வலதுசாரி சிந்தனையை ஒரு பகுதி மக்களுக்கு ஊட்டிவிடுவார்கள். இதனை சமத்துவ சமூகக்கொள்கையில் அக்கறை உள்ளோர் எதிர்கொண்டு முறியடிக்கவேண்டும்.
  14. இந்தோனேசியாவிலிருந்து படகுகளை தமிழீழத்திற்க்கு கொண்டு வரும்படி தலைவரால் பணிக்கப்பட்டிருந்தது. இந்தோனேசியாவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டு படகுகளை தமிழீழத்திற்க்கு கொண்டு வரும்படி தலைவர் அவர்களால் சர்வதேசக் கடற்பரப்பிலிருந்த போராளிகளுக்கு பணிக்கப்பட்டிருந்தது அதற்கமைவாக மாவீரரான லெப்.கேணல் வெற்றியரசன்( ஸ்ரிபன்) அவர்கள் தலைமையிலான கப்பல் ஒருபடகையும் மேஐர் நிர்மலன் தலைமையிலான கப்பல் இன்னொருபடகையும் என பொறுப்பெடுத்தது அதன்படி லெப்.கேணல் ரஞ்சன் தலைமையிலான கப்பலின் இழப்பிற்க்குப் பின் நடக்கும் முதல் விநியோகம் என்பதால் மிகவும் அவதானத்துடன் இந் நடவடிக்கை இடம்பெற்றது .இந்நடவடிக்கையானது ஸ்ரிபன் தான் கொண்டு செல்லும் படகை கரையிலிருந்து இருநூற்றம்பது மையிலில் தூரத்தில் வைத்து நிர்மலனிடம் கொடுக்க நிர்மலன் அந்த இருபடகுகளையும் முல்லைத்தீவு கடலிலிருந்து இருநூறு கடல்மைல் தூரத்தில் அப்படகுகளை விட அப்படகுகள் கடற்புலிகளின் கடற்சண்டைப்படகுகளின் துணையுடன் அப்படகுகள் தமிழீழத்தை வந்தடையும் இதுவே திட்டமாகும்.திட்டத்திற்கமைவாக முதலாவதாக நிர்மலனின் கப்பல் படகுகளை விடவேண்டிய இடத்திற்க்குப் தனது படகுடன் புறப்பட அதன் பின் இரண்டாவது நாள் ஸ்ரிபனது கப்பல் தனது படகுடன் புறப்பட்டது .புறப்பட்ட அன்றிரவு மூன்று கப்பல்கள் சுமார் நான்கு கடல்மைலகள் தூரத்தில் கிடையாக வேகமாக சென்றதை ஸ்ரிபனது கப்பலிலிருந்தவர்கள் ராடர் மூலமாக கண்காணித்தனர். இருந்தாலும் இரவென்பதாலும் கப்பல்களின் போக்குவரத்துப் பாதையென்பதாலும் இவர்கள் அக்கப்பல்களைக் கருத்திலெடுக்காமல் தங்களது பயனத்தைத் தொடர்ந்தனர்.14.06.2003அன்று அதிகாலை கடற்படைக்கப்பல்கள் நிர்மலனின் கப்பலை வழிமறிக்க இத்தகவல்களை உடனடியாக ஸ்ரிபனுக்கு நிர்மலன் கூற ஸ்ரிபன் தனது கப்பலை சர்வதேச கப்பல் பாதையில் சென்றார்.நிர்மலனது கப்பல் கூட்டி வந்த படகில் லெப்.கேணல் தென்னவனுடன் இன்னொரு போராளியும் உடனிருந்தார் . இவ் இக்கட்டான சூழலில் நிர்மலனின் கப்பலிலிருந்த லெப் கேணல் வீரமனி கப்பலிலிருந்து படகை கட்டியிளுத்து வந்த கயிற்றை வெட்டி இம்முற்றுகையிலிருந்து தப்புமாறு பணித்தான் .படகில் முற்றுகையை விட்டுத் தப்ப முயற்சித்தபோதும் கடற்படைக்கப்பல்கள் விடவில்லை இருந்தாலும் ஒருகட்டத்தில் கடற்படைக் கப்பலை மோதுவதைப்போல படகிலிருந்தவர்கள் முயற்சித்தபோது கடற்படைக்கப்பல்கள் விலகின அம் முற்றுகையிலிருந்து படகும் வெளியேறியது .அந்நேரம் சமாதானச் சூழல் என்பதால் இவர்களை மீட்கப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றது .ஒருகட்டத்தில் கப்பலிலிருந்தவர்களுடன் தொடர்பிலிருந்த தென்னவன் கப்பலுக்கு வரவா எனக் கேட்க கப்பலுக்கு கட்ற்படைகப்பல்கள் தாக்குதல் மேற் கொள்கின்றன வரவேண்டாம் நீங்கள் தப்புங்கோ என்றவுடன் கப்பலிலிருந்தவர்களுடன் படகிலிருந்தவர்களின் தொடர்பும் துண்டிக்கப் படுகிறது.பேச்சுவார்த்தைகள் பயனின்றிப் போக நீண்ட கடலனுபவம் கொண்ட போரளிகள் பதினொருவரும் நாட்டுப்பற்றாளர் ஒருவருமாக கடலிலே காவியமானார்கள்.லெப் கேணல் தென்னவனின் படகு அன்றிரவு ஸ்ரிபனின் கப்பலால் மீட்கப்படுகிறது. இந்நடவடிக்கையில் செவ்வனவே பங்காற்றி வெவ்வேறு சம்பவங்களில் கடலிலே காவியமான. லெப் கேணல் ஸ்ரிபன் வீரச்சாவு .17.09.2006 லெப் கேணல் தென்னவன். வீரச்சாவு .28.02.2007 எழுத்துருவாக்கம்..சு.குணா. https://www.thaarakam.com/news/8faf5982-2895-4087-804d-ce2183a9cc5e
  15. சர்வதேசக் கடற்பரப்பில் எம்.ரி சொய்சின் எண்ணைக் கப்பலில் காவியமான வீரமறவர்கள்! 14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எம்.ரி சொய்சின் (M.T. CHOSHIN) எண்ணைக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்து தாக்கி மூழ்கடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிய கப்பல் கப்டன் நிர்மலன், சீவ் ஒவிசர் கதிர், 2ம் ஒவிசர் வீரமணி, 3ம் ஒவிசர் கன்னியநாடன், றேடியோ ஓவிசர் கஜேந்திரன், சீவ் எஞ்சினியர் அன்புக்குமரன், 2ம் எஞ்சினியர் கடற்கரும்புலி வள்ளுவன், 3ம் எஞ்சினியர் கடற்கரும்புலி நிமால், எலக்ரிக் எஞ்சினியர் வீரநாதன், போஸன் கடற்கரும்புலி மணியரசன், ஏபிள் சீமன் செழியன், நாட்டுப்பற்றாளர் மோகன் ஆகிய ஆழக் கடலோடிகளின் 18 ம் ஆண்டு வீரவணக்க நாள் .! எம்.ரி சொய்சின் கப்பலில் தரணிமுழுவதும் கடலில் மேவி தமிழீழ விடியலை எண்ணி விழிமூடிய மாவீரர்கள்.! https://www.thaarakam.com/news/8f44676e-ffa0-48a0-95c2-482b931bebe1
  16. நாகர்கோவில் பதுங்கித் தாக்குதலும்! – லெப்.கேணல் றெஜித்தனும்! லெப்.கேணல் றெஜித்தன் 2008 ஜூன் மாதம் 11ஆம் திகதி வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார். எல்லோரும் பரபரப்பாக தொலைத்தொடர்புக் கருவிக்கு அருகில் காத்திருந்தோம். ‘எல்லாம்சரி, படுங்கோ’ என்றொரு செய்தி றெஜித்தன் அண்ணனிடம் இருந்து வரவேண்டும். நேரம் நள்ளிரவையும் தாண்டி நீண்டுகொண்டிருந்தது. எதிர்பார்த்த நேரத்துள் அந்தச் செய்தி வரவில்லையாதலால் ஏதாவது சிக்கலாகியிருக்க வேண்டுமென்று உள்மனம் சொல்லிக்கொண்டாலும், அப்படியேதும் இருக்கக்கூடாது என்று விரும்பினோம். சிலவேளை றெஜித்தன் அண்ணா எங்களை மறந்திருக்கலாமென்று ஒருவன் சொன்னான். ஆனால் அவர் அப்படிப்பட்டவரில்லை. செய்திக்காக நாம் காத்திருப்போமென்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஏற்கனவே இப்படியொரு செய்தியைச் சொல்வேன் எனச் சொல்லிவிட்டுத்தான் முன்னுக்குச் சென்றிருந்தார். அன்றிரவு முழுவதும் கடும்மழை பொழிந்துகொண்டிருந்தது. உள்ளேபோனவர்கள் படக்கூடியபாடுகளை நினைத்துக் கொண்டோம். மழைகாரணமாகவும் திட்டத்தில் ஏதும் பிசகு நடந்திருக்குமோ, எல்லாம் சரியாக நடந்தாலும் நாளைக் காலையில் நாம் எதிர்பார்த்தபடி எதிரி நடந்துகொள்வானோ, நாளைக் காலையும் மழைபெய்தால் என்ன நடக்கும்? என்று பலவாறு யோசித்துக்கொண்டிருந்தபோது றெஜித்தன் அண்ணாவிடமிருந்து தகவல் வந்தது. ‘படுங்கோ. விடிய வந்து கதைக்கிறன்’ என்பதாக அத்தகவல் இருந்தது. ஏதோ பிசகு நடந்துவிட்டதென்று விளங்கியது. நாங்கள் இப்போது நிற்பது வடமராட்சியின் செம்பியன்பற்றுப் பகுதியில். எமது தளத்திலிருந்து ஒரு தாக்குதல் நடவடிக்கைக்காகச் சென்ற அணியினர் சரியாகப் போய்ச்சேர்ந்தனரா என்ற தகவலைத்தான் எதிர்பார்த்திருந்தோம். அதிகாலையில்தான் தெரிந்தது, போனவர்கள் அனைவரும் திரும்பவும் வந்துவிட்டார்களென்பது. அதுவொரு பதுங்கித் தாக்குதல் திட்டம். நாகர்கோவில் முன்னணிக் காப்பரண் வரிசையிலிருக்கும் இராணுவத்தினர் காலைநேரத்தில் காப்பரண் வரிசைக்குப் பின்புறமாகவுள்ள பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது வழமை. காலை ஆறுமணிக்கு ரோந்து அணி காப்பரண் வரிசையிலிருந்து புறப்பட்டு நகரத் தொடங்கும். அந்த அணி மீது எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வைத்துத் தாக்குதல் நடத்துவதுதான் எமது திட்டம். தாக்குதல் திட்டம் மிகச்சிறியளவில்தான் தொடங்கப்பட்டது. பின்னர் பெரிதாகிப் பெரிதாகி இறுதியில் தலைவரே நேரடியாகக் கவனமெடுத்து நடத்தும் ஒரு தாக்குதலாக வந்துவிட்டது. இந்த ரோந்து அணி மீதான தாக்குதல் தனியே கண்ணிவெடித் தாக்குதலாகவும், அதன்பின்னர் தேவைக்கேற்ப எறிகணைவீச்சுத் தாக்குதலாகவும் தீர்மானிக்கப்பட்டது. நேரடியான ஆயுதச்சண்டையில் எமது அணியினர் ஈடுபடுவதில்லை என்று திட்டமிடப்பட்டது. எதிரியின் பகுதிக்குள் ஊடுருவதும் வெளியேறுவதும் நீரேரி – கண்டல்காடு வழியாகவே. உண்மையில் இந்த நீரேரி-கண்டல்காடு என்பது இரு தரப்புக்கும் பெரிய சாதக பாதகங்களைக் கொண்டிருந்தது. இருதரப்புமே மற்றப் பகுதிக்குள் இலகுவாக ஊடுருவ இந்தக் கண்டல்காடு உதவியாகவிருந்தது. இப்போது எமது அணியினரும் இக்கண்டல்காடு வழியாக ஊடுருவி கண்ணிவெடியை நிலைப்படுத்திவிட்டு உடனடியாகவே தளம் திரும்பிவிடுவர். இருவர் மட்டுமே அங்கே தங்கியிருந்து தாக்குதலைச் செய்யவேண்டும். எறிகணைகளுக்கான திருத்தங்களையும் களநிலைமையையும் அவர்களே கட்டளைப்பீடத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இருட்டியபின்னர் வெளியேறித் தளம் திரும்ப வேண்டும். இந்தப் பதுங்கித் தாக்குதலுக்குப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்ட கண்ணிவெடி ‘இராகவன் கண்ணிவெடி’. என் அறிவுக்கெட்டியவரையில் முதன்முதலில் பதுங்கித் தாக்குதலுக்கு இக்கண்ணிவெடியைப் பயன்படுத்தியது இத்தாக்குதலுக்கே ஆகும். ‘இராகவன்’ என்ற இக்கண்ணிவெடி இயக்கத் தயாரிப்பு. சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத்தளபதியாகவிருந்து ஓயாத அலைகள்-3 இல் வீரச்சாவடைந்த லெப்.கேணல் இராகவனின் நினைவாக இக்கண்ணிவெடிக்குப் பெயர் சூட்டப்பட்டது. உண்மையில் இது பதுங்கித்தாக்குதலுக்கான கண்ணிவெடியன்று. எதிரியின் பகுதிக்குள் ஊடுருவி இக்கண்ணிவெடியைக் கொண்டு தாக்குதல் நடத்துவதென்பது இலகுவான காரியமன்று. சுமார் 50 கிலோகிராம் நிறையுடைய இக்கண்ணிவெடி ஐம்பதாயிரம் சிதறுதுண்டுகளைக் கொண்டது. வழமையான கிளைமோர்கள் போலன்றி 360 பாகையுமே சிதறுதுண்டுகளைப் பாய்ச்சக்கூடியவாறு தயாரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஓர் உரல் போன்ற வடிவிலும் அளவிலும் இருக்கும் இதைக் காவிக்கொண்டு எதிரியின் பகுதிக்குள் ஊடுருவதும், நகர்வதும் இயலுமான காரியமன்று. ஆனால் நாகர்கோவில் பதுங்கித் தாக்குதலுக்கு இராகவன் கண்ணிவெடியைப் பயன்படுத்துவதென்று தீர்மானிக்கப்பட்டபோது முதலில் ‘இதென்ன விசர்வேலை?’ என்றுதான் தோன்றியது. ஆனால் அகிலன் வெட்டையில் நடந்த இராகவன் பரிசோதனை வெடிப்புக்குப் போன எல்லோருக்குமே அக்கண்ணிவெடி மீது ஒரு விருப்பு இருந்தது. அதுஏற்படுத்தும் தாக்கம், சேதம், சத்தம் என்பவற்றை அறிந்தவர்கள், அதைக் கொண்டு எப்படியாவது எதிரிமீது ஒரு தாக்குதலைச் செய்ய வேண்டுமென்ற அவாவைக் கொண்டிருந்தார்கள். இங்கும் தாக்குதலைச் செய்யவென ஒழுங்கமைக்கப்பட்ட அணியினர் ஏற்கனவே இராகவன் கண்ணிவெடிப் பரிசோதனைக்கு வந்திருந்தவர்கள். இதுவொரு மிகக்கடினமான பணியென்பதைத் தெரிந்தும் அவர்கள் இராகவனைக் கொண்டு தாக்குதல் நடத்துவதென முடிவெடுத்தார்கள். இப்போது தாக்குதலை நடத்துவதற்கென ஒழுங்கமைப்பட்ட அணியானது கரும்புலிகளுக்கான வேவு அணியே. ஐவரைக் கொண்ட இவ்வணி இரவோடிரவாக நகர்ந்து கண்ணிவெடியை உரியவிடத்தில் நிலைப்படுத்திவிட்டு மூவர் உடனேயே திரும்பிவந்துவிட இருவர் மட்டும் தம்மை நிலைப்படுத்திக் கொண்டுவிட வேண்டும். திட்டத்திலே நேரம் மிகமிக முக்கியமானதாக இருந்தது. இருளத் தொடங்கியதும் எமது தளத்திலிருந்து புறப்பட்டால், அதிகாலை நான்குமணிக்கும் மீளவும் எமது தளத்துக்கு அந்த மூவரும் திரும்பிவிடவேண்டும். இடையிலே நீருக்குள்ளால், பற்றைகளுக்குள்ளால் நகர்வது, அதுவும் அந்த உருப்படியைக் கொண்டு நகர்வதென்பது இலகுவான செயலன்று. இவையெல்லாம் கவனத்திலெடுக்கப்பட்டு பயிற்சிகள் தொடங்கின. அந்நேரத்தில் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்பு அணிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த மேலாளர் றெஜித்தன் அண்ணாவின் மேற்பார்வையிலேயே இத்தாக்குதலும், அதற்கான பயிற்சிகள் உட்பட ஏனைய நிர்வாக வேலைகளும் விடப்பட்டிருந்தன. ஏற்கனவே வெடிபொருள், கண்ணிவெடிப் பயிற்சிகளைப் பெற்றிருந்தாலும் இது தாக்குதலணிக்குப் புதியது. மின்கம்பி வழியில்லாமல் தொலைக் கட்டுப்பாட்டு முறைமூலமாக தாக்குதலை நடத்தப்போவதால் அக்கருவிகள் தொடர்பிலும் மேலதிகப் பயிற்சிகள் பெறவேண்டியிருந்தது. இராகவன் கண்ணிவெடி, தொலைக்கட்டுப்பாட்டு வெடித்தற் பொறிமுறை என்பவற்றைக் கற்பிக்கவும் பயிற்றுவிக்கவும் கேணல் ராயு அண்ணையிடமிருந்து ஒருவர் வந்திருந்தார். தாக்குதலுக்கான நாள் குறிக்கப்படவில்லை; ஆனால் பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. அப்போதைய யுத்தச் சூழ்நிலையைப் பற்றி அறிந்துகொள்வதும் முக்கியம். எல்லாவிடத்திலும் போர் மந்தமடைந்திருந்தது. அவ்வாண்டின் ஏப்ரலில் நடைபெற்ற தீச்சுவாலை இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் எந்தப் பெரிய சண்டையும் நடைபெறவில்லை. ஆங்காங்கே பதுங்கித் தாக்குதல்கள் மட்டும் எப்போதாவது நடந்துகொண்டிருக்கும். முன்னணிக் காப்பரணில் பதுங்கிச் சுடுவதும், இடையிடையே எறிகணை வீசிக்கொள்வதுமென்றுதான் களமுனை மந்தமாக நகர்ந்து கொண்டிருந்தது. வன்னியின் மறுமுனையில் மணலாறு, வவுனியா, மன்னார் முனைகளிலும் எல்லாமே அமைதியாக இருந்தது. ஆனால் ஆள ஊடுருவும் அணிகள் இருதரப்பிலும் மாறிமாறி ஊடுருவித் தாக்குதல்களை அவ்வப்போது நிகழ்த்திக் கொண்டிருந்தன. இந்நிலையில்தான் நாகர்கோவில் பகுதியில் இப்படியொரு பதுங்கித் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஜூலை மாசத்தின் நடுப்பகுதியிலிருந்து எமது பயிற்சிகள் தொடங்கியிருந்தன. தாக்குதல் நடத்துவதற்கான நாள் குறிக்கப்படாமல் பயிற்சி மட்டும் நகர்ந்துகொண்டிருந்தது. ‘எப்ப அடிக்கப் போறியள்? ஏதாவது பிரச்சினையெண்டா சொல்லுங்கோ’ என்று தலைவரும் இரண்டு மூன்றுதரம் கேட்டாலும் தாக்குதல் நடக்கவில்லை. ஏன் இழுபட்டுக்கொண்டிருந்தது என்று சரியாக நினைவில்லை. நாளை மறுநாள் தாக்குதல் நடத்துவது என்று நாம் தீர்மானித்து, நாளைக்கு இரவு அணி நகர்வதற்குரிய இறுதித் தயார்ப்படுத்தல்களை முடித்து நித்திரைகொண்டு எழும்பினால் யாரோ வேறொரு முனையில் தாக்குதலைத் தொடங்கியிருந்தார்கள். ஆம்! அது 24/07/2001 அதிகாலை. சிறிலங்காவின் தலைநகரில் தாக்குதல் தொடங்கிவிட்டிருந்தது. கட்டுநாயக்கா விமானத்தளம் எரிந்துகொண்டிருந்தது. உண்மையில் அதேநாளில் எமது தாக்குதலும் நடந்திருக்க வேண்டுமென்பது தலைவரின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கலாம். ஆனால் சரியான ஆயத்தமற்ற நிலையில் எம்மை அவசரப்படுத்தக்கூடாதென்பதற்காக விட்டிருக்கலாம். இப்போது எமது நிலை சற்றுச் சங்கடமாகப் போய்விட்டது. இன்றிரவு நகர்வதா இல்லையா என்பது முடிவில்லை. சிறப்புத் தளபதியிடமிருந்து மதியமளவில் செய்தி வந்தது இன்றிரவு நகரவேண்டாமென்று. அன்று முழுவதும் கட்டுநாயாக்காத் தாக்குதல் செய்திகளோடு எமது பொழுது போனது. எமது தரைக்கரும்புலிகள் அணியிலிருந்தும் கரும்புலிகள் சிலர் கட்டுநாயக்காத் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 27 ஆம் திகதி இரவு நகர்வதென்றும் 28 ஆம் திகதி காலை தாக்குதல் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க எமது அணி அன்றிரவு ஊடுருவியது. தாக்குதலணியை வழிநடத்தவும், மறுநாள் கண்ணிவெடித்தாக்குதல், எறிகணைத் தாக்குதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கவுமென றெஜித்தன் அண்ணா நாகர்கோவில் பகுதிக்கு நகர்ந்திருந்தார். உள்நுழைந்த அணி கண்ணிவெடியை நிலைப்படுத்திவிட்டு இருவரை விட்டுவிட்டு மிகுதி மூவரும் திரும்பிவந்துவிட்டால் எமக்குத் தகவல் தருவதாகச் சொல்லிவிட்டுத்தான் றெஜித்தன் அண்ணா போயிருந்தார். அவரிடமிருந்து வந்த தகவல், எமது திட்டம் சரிவரவில்லை என்பதை உணர்த்தியது. காலை ஆறுமணிக்கெல்லாம் றெஜித்தன் அண்ணா எமது இடத்துக்கு வந்துவிட்டார். என்ன சிக்கல் நடந்ததென்று கேட்டறிந்து கொண்டோம். சிக்கலை இன்றே நிவர்த்திசெய்து இன்றிரவே மீள ஊடுருவ வேண்டுமென்பது அவரின் திட்டமாக இருந்தது. அன்றையநாள் எனக்கு அலைச்சலாக அமைந்தது. -இளந்தீரன்- https://www.thaarakam.com/news/40ef8f9e-2053-485e-ac67-614a1ea7e065
  17. தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்து விட்ட தென்றல். லெப். கேணல் டேவிட் கடலில் கலந்த கவிதை…… தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்து விட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன். தமிழீழத்தின் விடுதலைப் போராட்டம், எல்லாக் காலங்களிலும், கடல் பிரயாணங்களை முதன்மைப்படுத்துவதாகவே அமைந்தது. எத்திசையும் கடலால் சூழப்பட்ட எம் தாயகத்தின், தாக்கமுள்ள நகர்வுகள் கடல் மூலமே மேற்கொள்ளப்பட்டன. எமது விடுதலைப் போராட்டத்தில், கடல் பயணங்கள் பிடித்திருந்த இடத்தின், அதே அளவு இடத்தை, எமது கடல் சரித்திரத்தில் டேவிட் பிடித்திருந்தான். அவனது இளமையிலேயே கடல் அவனை அழைத்தது. அவனது குடும்ப நிலை அவனை கடலுக்கு அனுப்பியது. “இயக்கம் கடலில் பிரயாணம் செய்ய வேண்டி வரும்” என்ற காலம் போய், “இயக்கத்தின் பிரயாணம் கடலில் தான்” என்று வந்துவிட்ட 1983-ல் இயக்கத்திற்காய் கடலில் இறங்கினான். தமிழீழத்தின் ஒவ்வொரு கரையிலும் கால் பதித்தான். நீண்ட பெரும் கடற்பரப்பு, கடற்பரப்பில் புள்ளியாய் நகரும் படகு, படகினைப் போல் பல்மடங்கு விரிந்து, எழுந்து, விழுங்க வரும் அலைகள், சமுத்திர ராட்சதனின் அலைவாய் மூடமுதல், விரைந்து, தத்திப் பாய்ந்து, வெளியேறி, திரும்பிப்பார்க்கும் லாவசம். திரும்பிய பார்வை நேரே நோக்க அடுத்த பெரும் அலை. படகினை பல்மடங்கு வேகத்துடன் துரத்தி, தீ உமிழும் பீரங்கி வாய்கள், அவற்றின் பல்முக நகர்வுகளிலும் தப்பி, தத்திச் செல்லும் வேகம், பின்னால் வரும் எதிரியின் கை அதிகமாய் நெருங்கின், நின்று – நிதானித்து இயந்திரத் துப்பாக்கியை இயக்க ஆணையிடும் உறுதி, அந்தக் கணத்தில் எதிரி அடையும் அதிர்ச்சி டேவிட்டை பல தடவைகள் கரை சேர்த்துள்ளது. அவனது கடற்பயணங்கள் மெய்சிலிர்க்கும் பல அனுபவங்களைக் கொண்டது. அவனது ஆசான்களும், நல்ல நண்பர்களும் கடலிலேயே கலந்து விட்டனர். அப்போதெல்லாம் கூட, அவன் கடலில் நிலைத்து நின்றான். அவனது தப்பியோடும் வாலகமும், தேவையின் போது எதிர்த்து நின்று எதிர்கொள்ளும் நெஞ்சுறுதியுமே அவனை நிற்க வைத்தது. இன்று இயக்கத்தின் வசமுள்ள பெருமளவு ஆயுதங்களுக்கு டேவிட்டை தெரியும். ஆம்! ஆவை எமது கைகளுக்க கிடைப்பதற்கிடையில் டேவிட் இருந்திருப்பான். அநேகமாக எப்போதுமே நாம் கரையில் காணும் டேவிட்டைக் கடலில் சந்திக்க முடியாது. ஒருங்கிணைந்த சிந்தனையுடன், தன்னை நம்பி படகில் ஏறிய “நீந்தத் தெரியாத சுமைகளுக்கு” உத்தரவிடும் டேவிட், கடுமையான வசைகளால் ஓட்டிமாரை கட்டுப்படுத்தும் மாலுமி. கடலில் டேவிட்டை, டேவிட்டாக பார்ப்பது கடினம். எப்போதாவது மிக அபூர்வமாக, சீரான, நேவியில்லாத ஒதுக்குப்புறபடகில், நல்ல நிலவும் சேர்ந்தால் அவனது படகு நிற்கும். இயந்திரச் சத்தத்தை மேவி அவன் குரல் ஒலிக்கும். “கடல் மேல் பிறக்க வைத்தான்…” அவனது குரல் இனிய சங்கீதம் இல்லைதான். ஆனாலும் அவன் பாடினால் நின்று, நிதானித்துக் கேட்கவைக்கும் வசீகரம். அந்த வசீகரம் அவனது குரலுக்கா? அல்லது அவன் பாடும் பாடல்களுக்கா? அவனது குரலில்; பாடல் கம்பீரம் பெறுவது தெரியும். அந்தக் குரலுக்கு, அவன் தெரிவு செய்யும் பாடல்களை விட, வேறுபாடல் எடுபடாதென்பதும் புரியும். அவனைத் தெரிந்த, அவனுடன் பழகாத எல்லோராலும் கூறப்படும், எண்ணப்படும், எண்ண வடிவங்களுக்கு அப்பாற்பட்ட போராளி. அநேக போராளிகளைப் போல் அவனுக்கும் “பழஞ்சோறு குழைத்துக் கையில் கொடுக்கும் அம்மா” “ஆமியின் வெடி கேட்டும் சிறுபற்றை சரசரக்காமல் தேத்தண்ணிச் செம்புடன் அண்ணனை, அண்ணனின் தோழர்களை தேடும் தங்கைகள்”. வீட்டின் நிலையை எண்ணுவதா? நாடா? என்ற கேள்விக்கு எப்போதுமே குழப்பமில்லாத பதிலைத் தன் வசம் வைத்திருந்த போராளி. மிக நெருக்கமான நண்பர்களிடம் மட்டும் “தங்கச்சியவை” என்று கூறிக் கண்கலங்கும் அண்ணன். எப்பேற்பட்ட வேலையாக இருந்தாலும் அவ் வேலையின் முக்கியத்துவம் விளங்கவைக்கப்பட்டால், அந்த வேலையை செய்து முடிக்கும் வரை அவன் ஓய்வது அபூர்வம். அவனது நினைவுகள் மீட்டப்படும் போது திரும்ப திரும்ப அவனது அக்குணநலனே எவருக்கும் முன்நிற்கும். தமிழீழத்தின் கடற்பரப்பில் மட்டுமல்ல, தமிழீழத்தின் தரைப் போர் வாழ்க்கையிலும் அவன் சாதித்தவை அதிகம். அதிலும் வடமராட்சியில் நடைபெற்ற அநேகமான சண்டைகளில் அவனது சுவடுகள் பதிந்திருந்தன. இந்திய இராணுவத்திற்கு முந்திய போர் வாழ்வில், ஒப்பிரேசன் லிபரேசனுக்கு முன்பும் பின்பும் வடமராட்சியில் அவன் பங்கு அதிகம். ஒப்பிரேசன் லிபரேசனுக்கென ஆமி புறப்பட்டதிலிருந்து, நெல்லியடி முகாமிற்குள் மில்லர் புகுந்தது வரை அவன் ஓயவில்லை. இந்திய இராணுவ யுத்தம் ஆரம்பித்த காலத்தில் தமிழ் நாட்டில் தங்கியிருந்தவன். யுத்தம் ஆரம்பித்து, கொழுந்துவிட்ட நேரத்தில் தள்ளியிருக்க முடியாமல், ஒரு கட்டுமரத்தில் வந்து சேர்ந்தான். இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் வடமராட்சியில் இயக்கத்தை உயிர்த்துடிப்புடன் வைத்திருந்ததில், அவன் பங்கு மிகப் பெரியது. அனேகமாக இயக்கத்தை எல்லாத் துறைகளிலும் தனது முத்திரை பதித்தவன். அரசியல்? அவன் அரசியல் வித்தகன் இல்லைதான் எனினும், தான் ஏந்திய துப்பாக்கி எதற்காக என்பதில் குழப்பமில்லாதவன். மக்களுடன் பழகும் போதினில் அந்த மக்களில் ஒருவனாக நின்று சிந்திக்கத் தெரிந்தவன். எல்லாத் தலைமறைவுக்கால வாழ்க்கையிலும், மக்களால் பாதுகாக்கப்பட்டவன். டேவிட் நின்றால் ஆமி பார்த்துச் சொல்லவதற்கென ஒரு முதியோர் படையே திரளும். அவன் உலவும் ஊர்களில் சிறுகுழந்தைக்கும் அறிமுகமாகிவிடும் முகராசி. சிறுவர்களை ஒருதடவை சந்தித்தால், மறுதடவை சந்திக்கும் போது அவர்களை பெயர் சொல்லி அழைக்கும் நட்புணர்வு அல்லது அவர்கள் வெட்கத்தில் முகம் சிவக்க இவன் ஒரு பெயர் வைத்திருப்பான். சிறுவர்கள் என்றல்ல எவருடனுமே நட்பைப் பேணுவதில் தனித்துவமானவன், பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் தனியான ஆர்வமுள்ளவன். எப்போதோ ஒருமுறை “வண்டி விட்ட கரையில்” லாம்பு வெளிச்சத்தில் சாப்பாடு கொடுத்தவரை யாழ்ப்பாணத்தில் கண்டு “என்னைத் தெரியேல்லையே, களுவன்கேணியில் றால் கறியோடை புட்டுச் சாப்பிட்ட நாங்கள் எல்லே” என்று கேட்டு அசத்துவான். பழைய நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்தால், மறந்துவிட்ட, திருப்பக் கிடைக்காத, நினைவுகளை மீட்டுவது டேவிட் தான். இவனது நட்பைப் பேணும் பண்பால் பலராலும் விரும்பப்பட்டவன். சில வேளைகளில் வேலை நேரங்களிலும் “நட்பைப் பேணப் போய்” வாங்கிக்கட்டிக் கொண்டு தலையைச் சொறிவான். இயக்கம் மிக அரிதாகச் சந்தித்த “எல்லா வேலைகளிலும் வல்லுனர்களாக விளங்கக்கூடிய” சிலரில் டேவிட் ஒருவன். ஆனால் கடல் என்பது ‘பெரிய கடலாக’ இருந்தது. அதில் இயக்கத்தின் கடற்பிரிவு மிகச் சிறியதாக இருந்ததால் அவனால் கடலை விட்டுவிட்டு வர முடியவில்லை. அவனது குறைந்த பாடசாலைக் கல்வியின் போதும் கூட பெரிய திட்டமிடல் திறன் இருந்தது. அது புரிந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அவனது எதிர்பார்ப்புக்களுக்கெல்லாம் அவனுக்கு களம் கிடைக்கவில்லை. கடல் அவனை மறித்து வைத்திருந்தது. அது ஒரு முக்கிய கடற்பயணம், தேவை பெரியது, டேவிட் தேவையான ஒழுங்குகளை வழமைபோல் சரிபார்க்கிறான். கடல் தெரிந்தவர்கள் கடலில் ஓடத்தயங்கும் காலநிலை. ஆனாலும் பிரயாணம் அவசியமானதானவும், ஒத்திவைக்க முடியாததாகவும் இருந்தது. கடலைத் தவிர எல்லாமே வழமைபோலத்தான். வழமையான தடபுடல்இ வேகமான பிக்கப்……, பெரிய நம்பிக்கை விதையை டேவிட் நெஞ்சில் விதைத்து விட்டு ஆயத்தமாகிறான். வழமையாக ஓடித்திரியும் நேவியையும் காணவில்லை. எல்லாமே நம்பிக்கையடன் இருக்கிறது. வண்டி புறப்படும், அதுவும் டேவிட் நேரில் புறப்படும் காரணம் சொல்லப்படாவிட்டாலும், வழமை போலவே ஊகித்துக் கொண்டு வழியனுப்புகிறார்கள். டேவிட்டை அன்புடன் வளர்த்துப் பாதுகாத்த மக்கள் – அவனுடன் மிக அன்பாகப் பழகியவர்களில் நல்லாய்க் கடல் தெரிந்தவர்கள் அன்று கரைக்கு வரவில்லை. படகு நீரில் இறங்குகிறது. “குழந்தைப் பிள்ளையை கையிலே பிடித்துக் கூட்டிச்செல்லும் வாஞ்சையுடன்” இரு கரையிலும் ஆட்கள் வரிசையாய் நின்று, படகினை கடலினுள் இழுத்துச் செல்கிறார்கள். இடுப்பளவு தண்ணீரில் இறங்கிய பின்னர், அணியத்தில் நின்ற அரி தடியால் ஊன்ற படகு தள்ளாடி, நகர, அண்ணாந்து நின்ற இஞ்சின் வால்கள் தண்ணீரில் குளிக்க, எல்லாம் வழமைபோலவே. “நல்லாய் சேவிஸ் போட்ட இஞ்சின் ஒரு இழுவையில் ஸ்ராட்வர”இ இருட்டில் நின்ற தோழர்களும் மக்களும் வண்டியில் நிற்பவர்களுக்கு “தெரியாது என்று தெரிந்தும்”இ கையை உயர்த்தி மெல்ல அசைக்கிறார்கள். வண்டியில் நின்றவர்களும் கையசைத்திருப்பார்கள்…….? ஒரு இஞ்சினில் கொஞ்சத்தூரம் ஓடிப்போய் நின்று தயாராகையில்இ “துணியில் பொத்தி ரோச்லைட் அடிப்பது” தெரிகிறது. அல்பா, அல்பா…… என்னமாதிரி? பிரச்சினையில்லை, குதிரைக்கு சாப்பாடு கொடுக்கினம்…… கரிகாலனின் பதில் வோக்கியில் கேட்கிறது. பின் ஒவ்வொரு இஞ்சினாக சத்தமிட படகு நகராமலே இஞ்சின் சத்தம் அதிகரித்து, குறைந்து, மிக அதிகரித்து, தணிவது கேட்கிறது. படகு வழமைபோல வலப்புறமாய் வட்டமிட்டு நிழலாய் நகர்கிறது. “எப்போதும் போல், ‘தேவையும் கடலும் தவிர’ மற்ற எல்லாம் வழமை போல்” நீரைக்கிழித்து, வெண்நுரை கிளம்ப, அலையில் எழும்பிப் பாய்ந்து…… படகு புறப்பட்டுவிட்டது. அதிகரித்த சத்தமும், கரையில் கூடிய கூட்டமும் சிறிது சிறிதாய் மறைய கடல் தெரியாதவர்களின் திருப்தி பெரு மூச்சுடன், கடலைத் தெரிந்தவர்களின் கனத்த பெருமூச்சு கலந்தபோது, “வண்டி வெளிக்கிட்டு விட்டது” இஞ்சின் சத்தம் கரைவதற்கு முன்னரே, கரையிலுள்ள வோக்கி…, அல்பா……… அல்பா என அழைத்தது. “தண்ணியடிக்குது தானே வோக்கியை அதுதான் லொக் ரியூப்பிலை வைத்திட்டினம் போல” எனக் கூறிவிட்டு, முயற்சியை கைவிடும் போதும் கூட, இஞ்சின் சத்தம் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது. நேரம் கரைய, முகாமுக்கு திரும்ப நினைக்கும் வேளையில், தூரத்து முகாம் வோக்கியில் ஒரு அவசர அழைப்பு. “வோக்கியில் அல்பா தொடர்பெடுத்தது…….” “என்னவாம்”…… “கிளியரில்லை, சரியாக விளங்கேல்லை பிறவோ…… பிறவோ…… என்று அவையள் கூப்பிட்டமாதிரியிருந்தது…… “சொல்லு”…… “போட்வெடிச்சிட்டுது, வண்டி அனுப்புங்கோ, எண்ட மாதிரிக் கிடந்தது. அவையளின்ரை கிளியரில்லை, ஒண்டும் விளங்கவில்லை”…… “ஆர் கதைச்சது……” “டேவிட் அண்ணை மாதிரித்தான் கிடந்தது, ஒண்டும் விளங்கேல்லை…… அடுத்த படகினை ஆயத்தம் செய்த வேளை, இஞ்சின் எடுக்கப் பிக்கப் விரைந்த வேளை, உறுதியற்ற வோக்கிச் செய்தியை நம்புவதா, இல்லையா என்று யோசித்த வேளை, நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. அலை விரித்துக் கொண்டிருந்தது. “சன்னதம் கொண்டு நின்றது கடல். தேடப்போகும் படகினை, தேடப்போகவென மற்றப்படகை, தயாராக வைக்க, வைக்கும் கடல்!” நேரம் செல்லச் செல்ல “வோக்கிச் செய்தி பிரமையோ?” என நினைக்க வைக்கும், வெறுமையுடன் காத்திருக்கும் வேளையில், தேடப்போன படகின் வோக்கி அழைக்கிறது. அரியைக் கண்டிட்டம், தூரத்தில் இன்னுமொரு ஆள் தெரியுது…… என்னமாதிரி…… என்னமாதிரி…… என்ற வோக்கிக்கு பதில் சொல்லாமல் தேடும் படகு கரைநோக்கி வர, “படகில் அரியுடன் ரட்ணா.” “என்ன நடந்தது?” “வோட் பிரிஞ்சிட்டுது, நடுவாலை முறிஞ்சு அணியம் தனிய, கடயார் தனிய ரெண்டாப் போச்சுது” “மற்றாக்கள் என்ன மாதிரி? டேவிட் அண்ணை என்ன மாதிரி?” “இருட்டுக்கை எல்லாரையும் கூப்பிட்டு ஒண்டாக்கினவர். எல்லாரையும் நீந்தச் சொல்லிப்போட்டு, அவர் கரிகாலனைக் கூப்பிட்டு தன்னட்டை எடுத்தவர். முழுவிடயங்களையும் சொல்லமுடியாது அரியும், ரட்ணாவும் மயங்கி விட்டார்கள். மீட்கப்பட்ட இருவரும் உப்பு நீரால் உதடுகள் வெடித்து, முகம் புண்ணாகி “கோலம் கெட்டுப்போய்”; இருந்தார்கள். படகுகள் போயின வந்தன. செய்தி கேள்விப்பட்ட சனமெல்லாம் கரைமுழுக்க கூடி நின்று தேடினர். படகுகளின் தேடுதலுக்கு மேலாக, டேவிட்டின் திறமையில் எவ்லோரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். “முதலும் இரண்டு நாள் கடலுக்கை கிடந்து, வந்து சேர்ந்தவன் தானே” “மன்னாரிலை ஒருக்கா இரண்டு பொம்பிளைப்பிள்ளையளைத், தனியக் கொண்டு வந்து சேர்த்தவனெல்லே” டேவிட்டின் நீச்சல் திறமையில் எல்லோருக்கும் நம்பிக்கை இருந்தது. “உந்த மட்டு மட்டு நீச்சல் பெடியள் வந்து சேந்திட்டாங்களாம் டேவிட் ஏன் வரமாட்டான்?” எல்லோரும் நம்பிக்கையுடன் காத்திருந்த போதும், அரி வைத்தியசாலையில் கூறிக் கொண்டிருந்தான் “எங்களை நீந்தச் சொல்லிப் போட்டு கரிகாலனைத்தான், இழுத்துக் கொண்டு நிண்டவர்” படகில் சென்றவர்களில் “கடலுடன் கொஞ்சமும் பரிச்சயம் இல்லாத, நீச்சல் தெரியாதவன்” கரிகாலன் மட்டும் தான். எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்த போதும், அரியையும், ரட்ணாவையும் தவிர வேறு எவரும் வரவில்லை…… கரிகாலன் வரவில்லை…… டேவிட்டும் வரவில்லை…… டேவிட் பங்கு கொண்ட தாக்குதல்கள் 1985 ஆம் ஆண்டு மன்னார் பொலிஸ் நிலையத் தாக்குதல் நடைபெற்ற போது தாக்குதற் குழுவை படகில் ஏற்றி மறுகரைக்கு (மன்னார் தீவுக்குள்) கொண்டு சேர்க்கும் கடற்புலிகள் குழுவின் உதவிப் பொறுப்பாளராக இருந்தார். படகில் சென்று பாதுகாப்பாக இறங்குவதே தாக்குதலின் முதல் வெற்றி எனக் கருதப்பட்டது. இத்தாக்குதல் முடிந்த பின்பு அப்போதைய மன்னார்த் தளபதி லெப். கேணல் விக்ரர் அவர்களால் டேவிட் பாராட்டப்பட்டான். 1987 ஆம் ஆண்டில் ஆனையிறவு முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சிறீலங்கா இராணுவம் முன்னேற முயன்ற போது கிட்டு அண்ணா தலைமை தாங்கிய தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த லெப். அங்கிளின் குழுவில் ஒருவராகச் சண்டை செய்து தோளில் காயமடைந்தார். 1987 ஆம் ஆண்டு யாழ். தொலைத் தொடர்பு நிலையத் தாக்குதலில் (8 இராணுவத்தினரைக் கைது செய்த போது) 50 கலிபர் துப்பாக்கியுடன் ஒரு குழுவை வழிநடத்தினார். 1987 ஆம் ஆண்டு பூநகரிக் கோட்டைத் தாக்குதலின் போதும் 50 கலிபர் குழு ஒன்றுடன் சென்று சண்டையில் ஈடுபட்டார். 1989 நெல்லியடியில் இந்திய இராணுவக் காவலரண் மீதான தாக்குதலின் போது அத்தாக்குதற் குழுவின் இரண்டாவது பொறுப்பாளராகச் சென்றார். 1990 ஆம் ஆண்டு வடமராட்சிக் கடலில் சிறீலங்காக் கடற்படையின் தாய்க்கப்பல் மீது நடாத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் (கரும்புலி மேஜர் காந்தரூபன், கரும்புலி கப்டன் வினோத், கரும்புலி கப்டன் கொலின்ஸ் ) நடவடிக்கையினை தலைமை தாங்கியவர் இவரே. நினைவுப்பகிர்வு: ச.பொட்டு புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். விடுதலைப்புலிகள் குரல்: 26 https://www.thaarakam.com/news/5504b56c-a41d-4191-bff3-cced8496238f
  18. இணையத்தில் பரவலாக இருக்கும் விடயங்களை ரஞ்சித் தொகுத்துத் தருகின்றார். அவற்றில் தவறுகள் இருந்தால் அவற்றினை இந்தத் திரியிலேயே சுட்டிக் காட்டலாமே. நான் முழுமையாகப் படிக்கவில்லை. எனினும் படித்த அளவில் ரஞ்சித் புனைந்து எழுதியதாகத் தெரியவில்லை. சிலவேளை 10 - 17 வருடங்களுக்கு முன்னர் வந்தவற்றைப் இப்போது பார்க்கும்போது புனைவாகவும், தவறாகவும் தெரிவது பார்வையில்தான் உள்ளது!
  19. நான் அஸ்ராஸெனிக்கா இரண்டும் போட்டுவிட்டேன். முதலாவதற்கு அடுத்த நாள் சில மணிநேரம் குளிர் காய்ச்சல் மாதிரி இருந்தது. தோள்மூட்டில் இரண்டு மூன்றுநாள் நோ இருந்தது. இரண்டாவதற்கு நோவைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஊசி போடாவிட்டால் சிலவேளை இந்திய கொரோனா அம்மன் ஆட்கொண்டு சுத்தியாட்டினாலும் ஆட்டுவார்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.