Everything posted by கிருபன்
-
இடைக்கால போர் நிறுத்தத் திட்டத்தை நிராகரித்தது ஹமாஸ்
இடைக்கால போர் நிறுத்தத் திட்டத்தை நிராகரித்தது ஹமாஸ் இஸ்ரேல் முன்மொழிந்த இடைக்கால போர் நிறுத்தத் திட்டத்தை ஹமாஸ் உத்தியோகப்பூர்வமாக நிராகரித்துள்ளது. பாலஸ்தீனத்துடன் 45 நாட்களுக்கான போர் நிறுத்த திட்டத்தை முன்மொழிந்த இஸ்ரேல், 10 பணயக்கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் இணங்கியது. எனினும் இவ்வாறான பகுதியளவான போர்நிறுத்த ஒப்பந்தங்களை தாங்கள் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும், அவை பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கானவை என்றும் ஹமாஸின் பிரதானப் பேச்சாளர் காலில் அல் ஹய்யா தெரிவித்துள்ளார். தாங்கள் நிறைவானதும், முழுமையானதுமான போர் நிறுத்த ஏற்பாட்டையே எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.hirunews.lk/tamil/403155/இடைக்கால-போர்-நிறுத்தத்-திட்டத்தை-நிராகரித்தது-ஹமாஸ்
-
வடக்கு மாகாணத்தில் ஊடகவியலாளர்களைக் கொன்றோர் மிகவிரைவில் சிறைக்குச் செல்வர்! அமைச்சர் சந்திரசேகர் உறுதி
வடக்கு மாகாணத்தில் ஊடகவியலாளர்களைக் கொன்றோர் மிகவிரைவில் சிறைக்குச் செல்வர்! அமைச்சர் சந்திரசேகர் உறுதி வடமாகாணத்தில் ஊடகவியலாளர்களைக் கொன்றோரும், ஆட்கடத்தலில் ஈடுபடுவோரும், மணல் கடத்தலில் ஈடுபடுவோரும் மிக விரைவாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள் - இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது: 'கடந்த காலங்களில் இலஞ்ச, ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராகச் சட்டம் செயற்படும். அவர்களின் முகவரி மகசின் சிறைச்சாலையென மாறுவது உறுதியாகும். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களும் கம்பியெண்ணி வருகின்றனர். அதேபோல படுகொலைகளில் ஈடுபட்டவர்கள், ஆட்கடத்தல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் சட்டம் செயற்படும். நாம் இவ்வாறு செயற்படும்போது தேசிய மக்கள் சக்தியினர் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக கொக்கரிக்கின்றனர். எமக்கு எவருடனும் தனிப்பட்ட பிரச்சினைகள் கிடையாது. குற்றமிழைத்தவர்களுக்கு மன்னிப்பும் கிடையாது. சட்டத்தை நாம் கையில் எடுக்கமாட்டோம். நீதிமன்றம் ஊடாகவே அதற்குரிய பணிகள் இடம்பெறும். வடக்கிலும் மணல் கடத்தல்காரர்கள் உள்ளனர், ஆட்களை கடத்தியவர்கள் உள்ளனர், ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் இருக்கின்றார்கள், மக்களின் காணிகளை அபகரித்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராகவும் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் நிம்மதியை சீர்குலைத்தவர்கள், தற்போது நடுங்க ஆரம்பித்துள்ளனர். சந்திரசேகரன் ரௌடி எனவும் கூறத்தொடங்கியுள்ளனர். என்னை ரௌடி என அழைப்பது மகிழ்ச்சி. மக்களுக்காக செயற்படுகின்றபோது, மக்களுக்காக குரல் கொடுக்கின்றபோது, மக்களுக்காக எம்மை அர்ப்பணிக்கின்றபோது அதை பார்த்து ரௌடித்தனம் என்கின்றனர். இதுதான் ரௌடித்தனம் எனில் அதனை ஏற்றுக்கொள்ள நான் தயார். கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவின் பைல்களை தூக்கித் திரிந்தவர்கள்தான் இப்படிச் சொல்கின்றனர். புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டபோது அதனை வரவேற்றவர்கள், இன்றைக்கு தாங்கள்தான் புலிகள் அமைப்பின் அர்ப்பணிப்புமிக்க தலைவர்கள் எனக் கூறிக்கொள்கின்றனர். புலிகள் காலத்தில் துரோகி முத்திரை குத்தப்பட்டவர்கள் இவர்கள்' -என்றார். https://newuthayan.com/article/வடக்கு_மாகாணத்தில்_ஊடகவியலாளர்களைக்_கொன்றோர்_மிகவிரைவில்_சிறைக்குச்_செல்வர்!
-
யாழ். வரணியில் நீரில் மூழ்கி இறந்த காதலனின் செய்தி கேட்டு காதலி உயிர்மாய்ப்பு!
யாழ். வரணியில் நீரில் மூழ்கி இறந்த காதலனின் செய்தி கேட்டு காதலி உயிர்மாய்ப்பு! வரணி சிட்டிவேரம் (சுட்டிபுரம்) பகுதியில் உள்ள குளமொன்றில் நீராடிய இளைஞர், குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கொடிகாமம் - தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த 23வயதுடைய சிவராசு சிலுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் சிட்டிவேரம் கண்ணகை அம்மன் கோவில் பகுதியில் உள்ள திம்புருவில் குளத்தில் நீராடியுள்ளனர். அப்போது குறித்த இளைஞர் தாமரைக் கொடியில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர், வரணி பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று அதிகாலை வீட்டில் உயிர்மாய்த்துள்ளார். வரணி பகுதியை சேர்ந்த 18 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/யாழ்._வரணியில்_நீரில்_மூழ்கி_இறந்த_காதலனின்_செய்தி_கேட்டு_காதலி_உயிர்மாய்ப்பு!
-
காணிகளை விடுவிப்போம் – யாழில் ஜனாதிபதி உறுதி
காணிகளை விடுவிப்போம் – யாழில் ஜனாதிபதி உறுதி adminApril 17, 2025 மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணத்திற்காக என கையகப்படுத்தியுள்ள காணிகளை மீள பெற்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை வருகை தந்த ஜனாதிபதி சங்கிலியன் பூங்காவில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார் அதன் போது உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்கள் மக்களை பிரித்துள்ளன. ஆனால் கடந்த பொது தேர்தலின் போது வடக்கு, கிழக்கு, தெற்கு, தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் என அனைவரும் ஒன்றுபட்டு வாக்களித்தனர். அப்படிப்பட்ட ஒன்றிணைந்த தேர்தல்களே வேண்டும். மீள பிரிய மக்கள் பிரிந்து வாக்களிக்க வேண்டாம். தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் என அனைவரும் ஒரு நாட்டு மக்களாக ஒன்றாக வாழ வேண்டும். சகல மக்களுககும் சமனான உரிமை வேண்டும். அவ்வாறான நாடு தான் எமக்கு தேவை. கடந்த காலங்களில் போர் புரிந்தோம் அதனால் என்ன நடந்தது ? அழிவுகளை தான் சந்தித்தோம். எம் உறவுகளை இழந்தோம். வடக்கிலும் தெற்கிலும் அதே நடந்தது. மீள அப்படி ஒரு நிலை எமக்கு வேண்டாம் எங்கள் தலைமுறைகள் போர் புரிந்தோம் அடுத்த தலைமுறைகள் போர் இல்லாது சமாதானமாக அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும். போர் இனவாத அரசியல்வாதிகளுக்கே தேவை எமக்கு தேவையில்லை. அரசியல்வாதிகளின் தலையீடு இல்லை எனில் திஸ்ஸ விகாரை பிரச்சனையை தீர்ப்போம் யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை பிரச்சனை இருக்கின்றது. அதனை இலகுவாக தீர்க்க முடியும். அதற்கு அந்த விகாரையை வைத்து வடக்கில் அரசியல் செய்பவர்கள் அதில் இருந்து விலக வேண்டும். அதேபோன்று தெற்கிலும் அந்த விகாரையை வைத்து அரசியல் செய்பவர்கள். அந்த அரசியலை கைவிட வேண்டும். அவ்வாறு அரசியல்வாதிகள் விகாரை பிரச்சனையில் இருந்து விலகுவார்களாக இருந்தால் எம்மால் அந்த பிரச்னையை மிக இலகுவாக தீர்க்க முடியும். விகாரை காணி உரிமையாளர்கள் , விகாரைக்குரிய விகாராதிபதி , நாக விகாரை விகாராதிபதி ஆகியோர் இணைந்து பேசி அதற்கு ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். நாட்டில் தொல்பொருள் எச்சங்கள் காணப்பட்டால் , அது தமிழா , சிங்களமா முஸ்லிமா , இந்துவா பௌத்தமா என பார்க்காது எமது நாட்டின் தொல்லியல் மரபு எமது பண்பாடு என ஒரு நாட்டு மக்களாக சிந்திக்க வேண்டும் ஆனால் இனவாதிகள் அப்படி பார்ப்பதில்லை. அதன் ஊடாக இனவாதத்தை தூண்ட முயல்கின்றனர். அப்படியான இனவாத குழுக்களை மக்கள் இனம் கண்டு , அவர்களை தோற்கடித்துள்ளார்கள். இனி அவர்கள் எந்த வேடம் அணிந்து வந்தாலும் அவர்கள் இனவாதிகள் என்பதனை மக்கள் இனம்கண்டு அவர்களை தோற்கடிப்பார்கள். அதேவேளை தேசிய மக்கள் சக்தியும் இனியும் இனவாதம் நாட்டில் தோண்ட இடமளிக்க மாட்டாது. யாழில் இருந்து புதிய அணி நாடாளுமன்றம் வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் பல பாரம்பரிய கட்சிகள் உள்ளன. கடந்த பொது தேர்தலில் அவற்றினை தவிர்த்து எமது கட்சியை சார்ந்த மூவரை தெரிவு செய்துள்ளீர்கள். புதிய ஒரு அணி யாழில் இருந்து நாடாளுமன்றம் வந்துள்ளது. யாழ்ப்பாண மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாம் வீணடிக்க மாட்டோம். இனவாதிகளுக்கு அஞ்சி மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாது இருக்கமாட்டோம். நாம் தேசிய ஒருமைப்பாட்டுக்காக என்றும் உழைப்போம். காணிகளை விடுவிப்போம். பாதுகாப்பு காரணங்களுக்கு என தமிழ் மக்களின் காணிகள் கையகப்படுத்தபட்டுள்ளது. அந்த காணிகளை பாதுகாப்பு தரப்பிடம் இருந்து மீள பெற்று காணி உரிமையாளர்களுக்கு கையளிப்போம். இன்னொரு யுத்தம் நாட்டில் தோன்றும் என்ற அச்சத்தில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை கடந்த அரசாங்கம் மீள கையளிக்கவில்லை. ஆனால் நாங்கள் இன்னொரு யுத்தம் நாட்டில் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணங்களுக்கு என காணிகள் தேவையில்லை. விரைவில் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்போம். மூடப்பட்ட வீதிகளையும் படிப்படியாக திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கிறோம். வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் மூடப்பட்டு இருந்த வீதிகளை திறந்துள்ளோம். கொழும்பில் பாதுகாப்பு காரணமாக என மூடப்பட்ட வீதிகளை திறக்கும் போது ஏன் யாழ்ப்பாணத்தில் வீதிகளை திறக்க கூடாது. நாட்டில் பாதுகாப்பு காரணமாக என மூட்டப்பட்ட வீதிகளை திறப்போம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என வெளிப்படுத்துவோம். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களையும் வெளிப்படுத்துவோம். அரசாங்கத்திடம் , பொலிசாரிடம் , இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்துவோம். ஒருவர் இறந்தால் அவருக்காக அழுது , அவருக்கு செய்ய வேண்டிய கிரியைகளை செய்து சில காலத்தில் ஆறுதல் அடைவோம். ஆனால காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது ? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா ? இல்லையா ? என்பது தெரியாமல் படும் வேதனைகளை நான் நன்கு அறிவேன். எனது சகோதரர் கூட காணாமல் ஆக்கப்பட்டவரே. அதனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வலி எனக்கு புரியும். எமக்கு அமைதி தேவை. அதற்காக அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கண்டறிந்து வெளிப்படுத்துவோம். நாங்கள் நாட்டை பொறுப்பெடுத்த காலம் முதல் நாட்டை வளப்படுத்தி வருகின்றோம். எதிர்வரும் 5 வருடத்தில் அந்நிய செலவாணியை அதிகரிப்போம். கைவிடப்பட்ட பல செயற்திட்டங்களை தற்போது மீள ஆரம்பித்துள்ளோம். காவல்துறை முப்படைகளில் வேலை வாய்ப்பு அதேபோன்று பல வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளோம். குறிப்பாக தமிழ் இளையோர் 2 ஆயிரம் பேருக்கு காவல்துறை திணைக்களத்தில் வேலை வாய்ப்புக்களை வழங்கவுள்ளோம். அதேபோன்று இராணுவம் , கடற்படை விமான படையிலும் தமிழ் இளையோருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் அதற்கு இங்குள்ள பெரியவர்கள் பெற்றோர்கள் இளையோர்களை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எடுத்து கூற வேண்டும். காங்கேசன்துறையில் ஒரு ஜனாதிபதி மாளிகை உள்ளது. அது எமக்கு தேவையில்லை. அதனை யாழ்ப்பாண மக்களுக்கு பயன்பட கூடியவாறு மக்களுக்காக அதனை வழங்கவுள்ளோம் யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்தார்கள். அது எமது இதயங்களை காயப்படுத்தி உள்ளது. நூலகம் எரிக்கப்பட்டது இனவாதத்தின் உச்சமாகவே நாங்கள் பார்க்கின்றோம். அதற்காகவே நூலகத்தை புனரமைக்க நிதி ஒதுக்கியுள்ளோம் நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகின்றார்கள் அவர்கள் வடக்கு செல்வது குறைவாக உள்ளது. உள்ளூர் விமான சேவையை மேம்படுத்துவோம் அதனால் நாம் உள்ளூர் விமான சேவைகளை வலுப்படுத்த உள்ளோம். அதன் ஊடாக சுற்றுலா பயணிகளை வடக்குக்கு செல்ல வைக்க முடியும். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அழகிய கடற்கரைகள் உள்ளன. அவற்றினை சுற்றுலா தளங்களாக மேம்படுத்துவோம் அதேவேளை யாழ்ப்பாணத்தய் அதன் பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தை மீள கட்டி எழுப்புவோம் வடக்கு கடல் வளத்தை பாதுகாப்போம் வடக்கு கடற்பரப்பில் உள்ள கடல் வளங்களை அழிக்க அனுமதிக்க மாட்டோம். அந்த கடல் வளங்களை நம்பி பெருமளவான கடற்தொழிலாளர்கள் உள்ள போது , அந்த வளங்களை அழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை அனுமதிக்க முடியாது. வடக்கு கடல் வளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதனை எடுங்கள் என கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளோம். புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு திரும்ப வர வேண்டும். வடக்கில் இருந்து பலர் புலம்பெயர் நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் மீள நாட்டிற்கு வர வேண்டும். எமது நாட்டினை கட்டியொழுப்ப தங்கள் முதலீடுகளை நாட்டில் மேற்கொள்ள வேண்டும். கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து நாட்டை கட்டியொழுப்ப நாட்டிற்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். இந்த நாட்டில் கடந்த காலங்களில் பணம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டம் இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் என சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் பாகுபாடு இருந்தது. இனிஅவ்வாறு இருக்காது. அனைவருக்கு சட்டம் பொதுவானதாக இருக்கும். முதலமைச்சர்கள் சிறைகளில் தற்போது வடமத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்கள் சிறையில் உள்ளனர். பல அமைச்சர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குகள் நடைபெறுகின்றன. முன்னாள் ஜனாதிபதியின் இரு மகன்களுக்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்குகள் நடைபெறுகின்றன. குற்றம் செய்த யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது. வெளியில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன நாம் ஒரு புது அத்தியாயத்தை தொடங்கியுள்ளோம். ஜனாதிபதி , நாடாளுமன்றில் அறுதி பெரும்பான்மை என்பன எங்கள் கைகளில் உண்டு ஆனால் கிராமத்தை கட்டியொழுப்ப எமக்கு மக்கள் ஆதரவு வேண்டும். உள்ளூர் சபைகளையும் எம்மிடம் தாருங்கள் பிரதேச சபைகளில் இருந்து வரும் முன் மொழிவுகளில் இருந்தே கிராமத்தை கட்டி எழுப்ப முடியும். பிரதேச சபைகள் நகர சபைகள் மாநகர சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி நடந்தால் அவர்களின் முன் மொழிவுகளை கண்களை மூடிக்கொண்டு ஏற்று அதற்கு நிதிகளை ஒதுக்குவோம் வேறு யாருடைய கைகளில் சபைகள் சென்றால் அவர்களின் முன் மொழிவுகளை பத்து தடவைகளுக்கு மேல் யோசனை செய்தே நிதி ஒதுக்குவோம். ஏனெனில் கடந்த காலங்களில் பல ஊழல்கள் இடம்பெறுள்ளன. ஆனால் தேசிய மக்கள் சக்தி ஊழலற்ற அரசாங்கம். மத்தியில் ஊழலற்ற அரசாங்கமாக காணப்படும் போது , கிராம அபிவிருத்திகளில் ஊழல் செய்ய முடியாது. எனவே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களியுங்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள 17 சபைகளையும் எமக்கு தாருங்கள். கடந்த காலங்களில் தெற்கு மக்களை சந்தித்து அவர்கள் பிரச்சனை தொடர்பில் அறிந்து கொண்ட அளவுக்கு வடக்கு மக்களை நாம் சந்தித்து அவர்கள் பிரச்சனைகளை அறியவில்லை எனும் உண்மையை நாம் ஏற்றுக்கொள்கிறோம் ஆனால் வடக்கு மக்கள் எங்களை நம்பியுள்ளீர்கள். கடந்த பொது தேர்தலில் எங்கள் கைகளை பிடித்து பலப்படுத்தியுள்ளீர்கள். எந்த கைகளை மேலும் பலப்படுத்துங்கள். உங்கள் கைகளை நாம் இறுக பற்றிக்கொண்டுள்ளோம். உங்கள் பிரச்சனைகளை படிப்படியாக தீர்த்து வைத்து , நாட்டில் சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம் என உறுதி அளிக்கிறேன் என தெரிவித்தார் https://globaltamilnews.net/2025/214460/
-
குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்!
ஆன்ரிமாரின் ரோதனையால் த்ரிஷாவையும் பிரியா வாரியாரையும் ரசிக்கமுடியாமல் போன கடுப்பில் கதை எல்லாம் வராது!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை வெள்ளி 18 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB எதிர் PBKS 18 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் 05 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி பிரபா செம்பாட்டான் வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் பஞ்சாப் கிங்ஸ் சுவைப்பிரியன் கந்தப்பு ஏராளன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 33வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்கள் மெதுவான ஆடுதளத்தில் அடித்தாட சிரமப்பட்டதால் அபிஷேக் சர்மாவின் 40 ஓட்டங்களுடனும், ஹென்றிக் க்ளாசனின் 37 ஓட்டங்களுடன் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களில் எவரும் அதிக ஓட்டங்களை எடுக்காவிட்டாலும் 20கள், 30கள் என அடித்தாடி இறுதியில் 18.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த @கந்தப்பு க்கு மாத்திரம் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
- IMG_0652.jpeg
-
குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்!
ஆம். காலைக் கூட நீட்டிக்கொண்டு ஹாயாகப் பார்க்கலாம்😜 ஆனால் வீட்டில் உள்ள சோபாவில் இருந்து பார்க்கவில்லை😆
-
புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை - ஈபிடிபி
புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை வழக்கமாக தேர்தல் காலங்களில் எமது கட்சிக்கு எதிராக சேறுடிப்பதையும், புலிகளின் தலைமைக்கும் எமது செயலாளர் நாயகத்திற்கும் இடையிலான முரண்பாடுகளை வைரலாக்குவதும் எமது அரசியல் எதிர் தரப்புக்கள் கையாள்வது வழக்கம். அவ்வாறு தற்போதும், சில காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாக்கப்பட்டு வருகின்றன. இவை தொடர்பாக எமது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கருதுகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் - புலிகளின் தலைமையும் எமது செயலாளர் நாயகமும், எமது மக்களின சுதந்திரமான - கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்துவதற்காக இரு வேறு ஆயுதப் போராட்ட அமைப்புக்களை வழிநடத்தியவர்கள். எங்களுடைய கைகளிலே ஐந்து விரல்கள் காணப்படுகின்போதிலும் அவை வித்தியாசமான செயற்பாடுகளை கொண்டவையாக காணப்படுகின்றன. அதே போன்றுதான், எமது மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட பிரதான ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் தலைவர்களும் வித்தியாசமான செயற்றிறன்களையும், வேறுவேறான சிந்தனைகளையும் கொண்டிருந்தனர். அந்தவகையில் எமது செயலாளர் நாயகத்திற்கும் புலிகளின் தலைமைக்கும் இடையில் தமது இலக்கினை அடைவது தொடர்பில் வித்தியாசமான சிந்தனைகள், இலக்கை அடைவதற்கான வழிமுறைகள் காணப்பட்டன. எத்தகைய அழிவுகளை கொடுத்தேனும் இலக்கை அடையும் வரையில் ஆயுதப் போராட்டத்தை வீரியமாக முன்னெடுக்க வேண்டும் என்பது புலிகளின் தலைமையின் சிந்தனை. விவேகம் அற்ற வீரம் விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், சர்வதேச பூகோள நிலவரங்களை அனுசரிக்க வேண்டும், இருப்பதை பாதுகாத்து முன்னோக்கி நகர வேண்டும், சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும், உருவாகும் சந்தர்ப்பங்களை பயன்படுத்த வேண்டும் என்பது எமது செயலாளர் நாயகத்தின் சிந்தனை. ஆனால் இருவருக்கும் இடையில் பொதுவான குணாம்சங்களும் காணப்பட்டன அதாவது, தாங்கள் ஒரு விடயத்தினை தீர்மானித்து விட்டால் அதில் உறுதியாக இருந்து அதற்காக கடுமையான உழைப்பை வெளிப்படுத்துவது. மற்றது, யாருடைய மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் போன்றவற்றுக்கு அடிபணியாத பிடிவாதம். நான் நம்புகின்றேன். இவ்வாறான இருவருக்கும் பொதுவான குணாசமங்கள்தான், இருவருக்கும் இடையிலான முரண்பாடுகளை வலுப்படுத்தின. இவர்களுக்கிடையிலானபிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு எம்மத்தியில் காலத்திற்கு காலம் இருந்த சமூக சிந்தனையாளர்கள் புத்திஜீவிகள் என்று பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை. தன்னுடைய பயணத்திற்கு எதிரான தடைகளும், மாற்றான சிந்தனைகளும் அழிக்கப்பட வேண்டியவை என்ற தன்னுடைய சிந்தாந்தத்திற்கு அமைய புலிகளின் தலைமை எமது செயலாளர் நாயகத்தை அழிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது. அவற்றை தன்னுடைய தற்துணிவினாலும் எமது தோழர்களின் அர்ப்பணிப்பாலும் எமது செயலாளர் நாயகம் முறியடித்தார். இந்த நிலை பல வருடங்களாக நீடித்த நிலையில் இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் திரட்சியடைந்து வீரியமடைந்தது. இப்போதும் 2009 இற்கு முற்பட்ட சூழல் இருக்குமாயின் இருவருக்கும் இடையிலான முரண்பாடு என்பது இன்னும் தீவிரமடைந்திருக்கும். இந்த முரண்பாடு என்பது ஈழத் தமிழர்களுக்காக பொங்கி எழுந்த இரண்டு தலைவர்களின் சிந்தனை வேறுபாடுகளினாலும் செயற்பாடுகளினாலும் ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறான பின்னணயில்தான், எமது மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான கருத்தாடல்கள் உருவாகின்ற சந்தர்ப்பங்களில் எமது செயலாளர் நாயகம் புலிகளின் தலைமையை கடுமையாக விமர்சிக்கின்றார். இந்த நிலையில் எமது மக்கள் ஒரு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும். எமது மக்களுக்காக உருவாகிய ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அனைத்தையும் களத்தில் இருந்து அகற்றி தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் பலத்தை பலவந்தமாக தமது கையில் எடுத்த புலிகளின் தலைமை, அதனை சரியான முறையில் பயன்படுத்த வில்லை என்ற ஆதங்கம் எமது செயலாளர் நாயகத்தின் மனதில் ஆழமாக பதிந்து இருக்கின்றது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் எமது மக்கள் சந்தித்த அனைத்து இழப்புக்களுக்கும் புலிகளின் தலைமையின் தவறான அணுகுமுறைகளே காரணம் என்பது எமது செயலாளர் நாயகத்தின் திடமான வாதமாக இருக்கின்றது. அதைவிட, எங்களுடைய செயலாளர் நாயகமும் சாதாரண மனிதன் என்ற அடிப்படையில், தன்னுடைய வழிமுறைகளை பின்பற்றி செயற்பட்டார்கள் என்ற ஒரே நோக்கத்திற்காக தன்னுடைய சக தோழர்களான பல ஆளுமைகளை கொலை செய்யப்பட்டமை எமது செயலாளர் நாயகத்தின் ஆழ் மனதில் ஆறாத வடுவாக இருந்து கொண்டே இருக்கின்றது. அவை எல்லாவற்றையும்விட முக்கியமானது 2009 இற்கு பிற்பட்ட காலத்தில் அவர் எதிர்நோக்கிய நடைமுறை சிக்கல்கள். அதாவது, நூற்றாண்டுகளாக எமது மக்கள் வழிபட்டு வந்த வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி வழிபாடு நடத்த அனுமதியுங்கள் என்றால், சுற்று நிரூபங்கள் என்றும் சட்டதிட்டங்கள் சாக்கு போக்கு சொல்கிறார்கள் பல்வேறு திணைக்களங்களும் கூகுளில் பார்த்துவிட்டு கையகப்படுத்தி வைத்துள்ள எமது மக்களின் காணிளை விடுக்க முயலும்போது அவர்கள் சொல்லுகின்ற ஆயிரம் வியாக்கியானங்களும் கால இழுத்தடிப்புக்களும் அவரை சினம் கொள்ள வைக்கின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம்..., காலத்தின் தேவையுணர்ந்து ஈடுஇணையற்ற தியாகங்களினால் உருவாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் பலம் சரியான முறையில் கையாளப்பட்டு பாதுகாக்கப்பட்டிருப்பின், இவ்வாறு ஒவ்வொருவும் கதை சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா? என்று செயலாளர் நாயகத்தின் உள்ளுணர்வு குமுறுகின்றது. அந்தக் குமுறல் புலிளின் தலைமைக்கு எதிரான விமர்சனமாக அவ்வப்போது வெளிப்படுகின்றது. இதுதான் உண்மை. ஆக எமது செயலாளர் நாயகம் வெளிப்படுத்தும் புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அறச் சீற்றத்தினை வெளிப்படுத்துகின்ற போது, புலிகளின் அமைப்பின் தியாகங்களை வைத்து போலி அரசியல் செய்கின்றவர்களினால் காண்பிக்கப்படுகின்ற பிம்பங்களையும் கற்பனைகளையும் விமர்சிக்கின்றார். ஆயுதப் போராட்டம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. எங்கெங்கு தவறுகள் இடம்பெற்றன. எவ்வாறு தவறுகள் இடம்பெற்றன என்பதை வெளிப்படுத்துகின்றார். எனவே எமது செயலாளர் நாயகத்தின் அறச் சீற்றமும், அரசியலுக்காக எதையும் மூடி மறைக்காமல் வெளிப்படுத்தும் வரலாற்று உண்மைகளுமே எமது அரசியல் எதிரிகளால் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுக்கப்பட்டு எமக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது என்பதே உண்மை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cm9k1qxzk00eyhyg3teekg89u
-
முரண்பாடுகளை அதிகரித்த மோடியின் வருகை
முரண்பாடுகளை அதிகரித்த மோடியின் வருகை தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. அதன் ஆரம்பத்தில் இருந்தே இந்திய எதிர்ப்புணர்வில் உறுதியாகவிருந்ததுடன் சீனாவுக்கு ஆதரவான ஒரு அரசியல் கட்சியாகவே செயற்பட்டது. அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்ததுடன், அதன் அப்போதைய தலைவர் ரோஹன விஜேவீர தலைமையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து தென்னிலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது. அனுரகுமார திசாநாயக்க உட்பட ஜே.வி.பியின் இன்றைய முன்னணி தலைவர்களில் பலர் இந்திய எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஜே.வி.பியில் இணைந்தவர்களாகவேயுள்ளனர். இலங்கையின் வடக்குக்கு ‘அமைதி காக்கும் படையை’ அனுப்பி வைக்க கைச்சாத்திடப்பட்ட 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த ஜே.வி.பி., இந்தியா, இலங்கையைப் பிரிக்கத் திட்டமிடுவதாகக் கூறி அதற்கு எதிராக ஆயுத கிளர்ச்சி மற்றும் படுகொலை வன்முறைகளை முன்னெடுத்தது. வேலையற்ற கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிராக ஒரு பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது இதன் விளைவாக சுமார் 60,000 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 37 வருடங்களுக்கு முன்னர் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மீது, இராணுவ அணிவகுப்பு மரியாதையில் விஜயமுனி என்ற கடற்படை அதிகாரி தாக்க முற்பட்ட சம்பவம் பதிவாகி இருந்தது. இந்த நிலையில், குறித்த நபர் ஜே.வி.பி. பின்னணியைச் சேர்ந்தவர் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இத்தாக்குதலில் கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையிலேயே அண்மையில் இலங்கை வந்த இந்தியப் பிரதமர் மோடிக்கான இராணுவ அணி வகுப்பு மரியாதையில் மோடியின் பாதுகாப்பு பிரிவினர் முன்னெச்சரிக்கையாக அணிவகுப்பு மரியாதையை ஏற்ற மோடிக்குப் பாதுகாப்பை வழங்கினர். அப்போது, நாட்டில் ஜே.வி.பியின் படுகொலைகள், வன்முறைகள் உச்சம் தொட்ட நிலையில், ஜனாதிபதியாக பிரேமதாச பதவியேற்ற பின்னர், இரும்புக் கரம் கொண்டு ஜே.வி.பி. அடக்கப்பட்டது. இதன் பின்னர் ஜே.வி.பி. தலைமைத்துவம் 1994இல் மீண்டும் தலைதூக்கி, ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் ஆதரவுடன், அதன் சோசலிச கொள்கைகளைப் பெருமளவில் கைவிட்டு விட்டு, தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்தத்தை ஆதரித்ததுடன், போருக்கான அதன் ஆதரவு மற்றும் பல்வேறு முதலாளித்துவ அரசாங்கங்களில் அதன் பங்கேற்பு அல்லது அரசியல் ஆதரவளிப்பினால் செல்வாக்கு இழந்துபோன ஜே.வி.பி. 2015இல் தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியை ஸ்தாபித்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் எதிர்கொண்டு வெற்றி பெற்று இன்று ஆட்சியாளர்களாகியுள்ளனர். ஆட்சி பீடம் ஏறுவதற்கு முன்னர் இருந்த ஜே .வி.பி. - என்.பி.பி. ஆகியவற்றின் கொள்கைகளும் பிரசாரங்களும் கொடுத்த வாக்குறுதிகளும் ஆட்சி பீடமேறிய பின்னர் ஒட்டுமொத்தமாக மாறியதே இன்று இவர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுவதற்கும் இவர்களின் ஆதரவாளர்கள் விசனப்படுவதற்கும் காரணமாகியுள்ளது. அதிலும், இந்தியாவின் எதிர்ப்புணர்வாளர்களாகவே தம்மை இறுதிவரை காட்டி வந்த இவர்கள், இன்று இந்தியா மீது கொண்டுள்ள காதல் இவர்களின் கொள்கை. இரட்டைவேடம் தொடர்பிலான பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இதுவே ஜே.வி.பியில் இன்றுமுள்ள சில தீவிர இந்திய எதிர்ப்புணர்வாளர்களினால் ஜே .வி.பி.- என்.பி.பி. கட்சிகளிடையில் பிளவுகளும் முறுகல்களும் ஏற்பட்டுள்ளதை அண்மைய இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கைக்கான விஜயம் அம்பலப்படுத்தியுள்ளது. மக்கள் விடுலை முன்னணி (ஜே.வி.பி.)- தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) ஆகியவற்றின் தலைவரான ஜனாதிபதி அனுரகுமார, தான் ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் தனது முதல் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவுக்குச் சென்றமை ஜே.வி.பி. - என்.பி.பிக்கிடையில் முதலில் புகைச்சலை ஏற்படுத்தியது. ஜனாதிபதி அனுரகுமார தனது முதல் விஜயமாக சீனாவுக்குச் செல்ல வேண்டுமென விரும்பியபோதும், அயல்நாடு என்றவகையில் இந்தியாவுக்கு முதலில் செல்ல அனுரகுமாரவுக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டதுடன், அதற்கான அழுத்தமும் இந்தியாவினால் கொடுக்கப்பட்டது. ஜனாதிபதி அனுரகுமாரவின் இந்த இந்திய விஜயம் தொடர்பில் ஜே.வி.பிக்குள் எதிர்ப்பலைகள் எழுந்ததுடன், நாட்டிலும் அனுரகுமார அரசுக்கு எதிரான விமர்சனங்கள், விசனங்கள் கிண்டல்கள் வெளிவரத் தொடங்கிய நிலையில், அனுரகுமாரவின் இந்திய விஜயத்தையும் அவரது உயர்மட்ட கலந்துரையாடல்களையும் அவரது கட்சிக்குக் கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாகத் தேசிய மக்கள் சக்தி வெளிக்காட்டி பிரசாரங்களை முன்னெடுத்தது. அண்மையில் கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, அதானியின் கொழும்பு மேற்கு துறைமுக அபிவிருத்தி ,திருகோணமலை துறைமுக மேம்பாடு குறித்தும் அதன் அறிவிப்பை இந்தியப் பிரதமர் வரும்போது வெளியிடலாமென்றும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டபோது, அவற்றையெல்லாம் நிராகரித்தார் ஜே.வி.பி அமைச்சர் ஒருவர். இந்தியாவுக்கு அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு விரும்பியோ விரும்பாமலோ கொடுக்கும் முக்கியத்துவம் வழக்கமாக சீனா ஆதரவுடன் இயங்கும் ஜே.வி.பியின் இடதுசாரி அடையாளத்தை மெதுவாக இழக்க வைக்கத் தொடங்கியிருக்கின்றது. என்பது ஜே.வி.பியில் உள்ள இந்திய எதிர்ப்புணர்வாளர்களை சினமடைய வைத்துள்ள நிலையில்தான், அண்மைய இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கைக்கான விஜயம் ஜே.வி.பிக்குள் புகைந்து கொண்டிருந்த முறுகலை, பிளவுகளைத் தீவிரப்படுத்தி விட்டுள்ளது. இதன் வெளிப்பாடுகளாகவே இந்தியப் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்கும் நிகழ்வு, இராப்போசன விருந்துபசாரம் போன்றவற்றை ஜே.வி.பி.யை பிரதிநிதித்துவப்படுத்தும் சில முக்கிய அமைச்சர்கள் புறக்கணித்தனர். இன்று நாடொன்றின் பிரதமரையே கூடி நின்று வரவேற்க முடியாத நிலைமை ஜே .வி.பி.-என்.பி.பி. அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மோடியின் இந்த விஜயத்தின்போது, இலங்கை மற்றும் இந்தியா இடையே பல பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கைக்குப் புலனாய்வுத் தகவல் வழங்குவது, திருகோணமலையில் சக்திவாய்ந்த ராடர் ஒன்றை நிறுவுவது, இலங்கை கடல் படைக்குப் பயிற்சி, விமானப் படைக்குப் பயிற்சி மற்றும் விமானங்களை வழங்குவது என்று 15க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இந்தியா மற்றும் இலங்கை இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனூடாக ஒட்டு மொத்தத்தில் மோடி, இலங்கையை வளைத்து கைக்குள் போட்டுள்ளார். சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் குறைப்பதற்கான முழு நடவடிக்கையில் இறங்கிய மோடிக்கு இது பெரும் வெற்றி அளித்துள்ளது.இதுவே ஜே.வி.பியிலுள்ள இந்திய எதிர்ப்புணர்வாளர்களை இந்தியப் பிரதமரிற்கான வரவேற்பை, சந்திப்பை, இராப்போசன விருந்தை புறக்கணிக்க வைத்தது. கொழும்பு பாதுகாப்பு மாநாடு மற்றும் இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் இணைந்து பணியாற்றவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக ஒரு சர்ச்சை உள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை. பிராந்திய பாதுகாப்பை நாம் நிறுவ வேண்டும். மேம்பட்ட மற்றும் திறமையானவர்களின் உதவியைப் பெற வேண்டும். இல்லையெனில், நாம் முன்னேற முடியாது என்றும் அனுரகுமார கூறியுள்ளார். எமது அயல் நாட்டின் தலைவர் மோடி நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுச் சென்றுள்ளார்.ஆனால், எதிர்க்கட்சியினர் சர்வதேசத்துக்கு நாட்டை அரசு காட்டிக்கொடுப்பதாக தற்போது குற்றஞ்சாட்டுகின்றார்கள். அரசு நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை.அவர்கள் காட்டிக்கொடுத்தவற்றை நாமே நிறுத்தியுள்ளோம். ரணில், மில்கோ நிறுவனத்தை இந்தியாவின் தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்வதற்குத் தயாராக இருந்தார். ஆனால், நாம் அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் அந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தோம். அதேபோன்று மஹவ - ஓமந்தை ரயில் பாதை மற்றும் மஹவ - அனுராதபுரம் ரயில் பாதை சமிக்ஞை கட்டமைப்பு ஆரம்பத்தில் இந்தியாவின் கடன் உதவி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், ஜனாதிபதி அனுரகுமார, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, இந்தியப் பிரதமர் இந்தத் திட்டங்களை அன்பளிப்பாக வழங்குவதாகக் குறிப்பிட்டார். அதேபோன்று இந்தியாவிடம் இருந்து நாம் கடன்களைப் பெற்றுக்கொண்டுள்ளோம்.தற்போது இந்தக் கடனுக்கான வட்டியைக் குறைப்பதாக இந்தியப் பிரதமர் மோடி எமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். எதிர்க்கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை முறியடித்து நாம் சர்வதேசத்தின் முழு ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். எனவே, எமது அரசை எந்தச் சதி முயற்சியாலும் கவிழ்க்கவே முடியாது என்று ஜே .வி.பி.யின் பொதுச் செயலாளரும் தே.ம.ச.யின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான ரில்வின் சில்வா வும் இந்தியாவுடனான காதலை உறுதிப்படுத்தியுள்ளார். ஆகவே, இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கைக்கான விஜயம் ஜே .வி.பி.-என்.பி.பி. அரசில் முரண்பாடுகளையும் பிளவுகளை ஏற்படுத்திவிட்டுள்ளதுடன் அதனை வெளியுலகத்திற்கும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. ஜே .வி.பி.-என்.பி.பி. அரசு ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளும் சிக்கித்தவித்து வரும் நிலையில் தற்போதைய இந்தியப்பிரதமரின் இலங்கை விஜயத்திற்கும் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கும் ஜே.வி.பியினரின் உள்ளம் கவர்ந்த சீன அரசு காட்டப்போகும் பிரதிபலிப்புக்கள் இலங்கையில் இந்திய-சீன தலையீடுகளின் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தவே போகின்றன. அனுரகுமார, தான் ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன், முதல் நாடாக இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் இலங்கையில் ஏற்படுத்திய அதிர்வலைகளை விடவும் கடந்த 4ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் ஜே .வி.பி.-என்.பி.பி. அரசு மீது அதிக எதிர்ப்பலைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளதுடன் இந்தியாவுக்கு எதிரான ஜே .வி.பியின் கொள்கை தொடர்பிலான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதுமட்டுமன்றி, ஜே .வி.பி.-என்.பி.பி. கட்சிகளுக்குள் முரண்பாடுகளையும் பிளவுகளையும் அதிகரித்துள்ளது. முருகானந்தம் தவம் https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முரண்பாடுகளை-அதிகரித்த-மோடியின்-வருகை/91-355661
-
“மன்னார்-ராமேஸ்வரம் இடையே படகு சேவை “
“மன்னார்-ராமேஸ்வரம் இடையே படகு சேவை “ மன்னார் மற்றும் இராமேஸ்வரம் இடையே படகு சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (17) அன்று தெரிவித்தார். மன்னார் பஜார் பகுதியில் வியாழக்கிழமை (17) காலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னாரில் இருந்து தமிழ்நாடு, இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. மேலும் மன்னாரில் காற்றைக்கொண்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுகிறது.ஆனால், கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குறித்த திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு,சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்,குறித்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதம் முதல்,மேலதிகமாக 4 இலட்சம் நபர்களுக்கு அஸ்வஸ்ய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன்,பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன்,திலகநாதன் மற்றும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/மன்னார்-ராமேஸ்வரம்-இடையே-படகு-சேவை/175-355691
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரி பிள்ளையானா? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை மாற்றுவதற்கு முயற்சிக்கப்படுவதாக பிவித்துறு ஹெல உறுமய தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஆனால் 2015 முதல் 2020ஆம் ஆண்டு வரையில் கைதாகி இருந்தவரை 2019இல் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியென கூற முயல்வதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் தனது அலுவலகத்தில் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே உதய கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார். நான் பிள்ளையானை அரசியல்வாதியாக அன்றி சட்டத்தரணியாகவே சந்தித்தேன். இந்த அரசாங்கத்தின் தலைவர்கள் நாட்டின் சட்டத்தை மீறி முறையில் கடந்த 8ஆம் திகதி பிள்ளையானை கைது செய்துள்ளனர். பயங்கரவாத தடைச்சட்ட ஒழுங்குவிதிகளுக்கமைய அவ்வாறான கைதுகளை செய்வதென்றால் அதற்கான காரணத்தை கைதாகுபவரின் உறவினர்களுக்கு எழுத்து மூலம் கூற வேண்டும். கைது செய்யப்பட்ட நபருக்கு சட்டத்தரணியை சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்கவும், குடும்பத்தினருடன் சந்திப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். ஆனால் அது எதுவும் பிள்ளையான் கைது செய்யயப்பட்ட விடயத்தில் நடக்கவில்லை. 9 ஆம் திகதி அவரின் சட்டத்தரணிக்கு அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவரின் குடும்பத்தினர் என்னை சந்தித்தனர். இதனை தொடர்ந்து நான் சீஐடி பணிப்பாளருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அதுபற்றி தெளிவுப்படுத்தினேன். இதன்படி இனி நானே பிள்ளையானின் சட்டத்தரணி என்பதனை கூறியதுடன், அதன்படி எழுத்துமூலம் நான் சட்டத்தரணியாக அனுமதி கேட்டேன். இதன்படி 13ஆம் திகதி பிள்ளையானை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி 30 நிமிடங்கள் நான் பிள்ளையானுடன் கதைத்தேன். நான்கு பொலிஸ் அதிகாரிகள் அவ்விடத்தில் இருந்தனர். சட்டத்தரணி சேவை பெறுநருடன் பேசுவது இரகியமானது. இவ்வாறாக கதைக்க அனுமதி கேட்ட போதும் அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் நான்கு அதிகாரிகளின் முன்னிலையில் நான் உரையாடினேன். அப்போது பிள்ளையான் கண்களில் கண்ணீர் வடிய உரையாற்றினார். தான் விடுதலைப் புலிகளிடம் இருந்து விலகி, எனது உயிரையும் பணயம் வைத்து விடுதலைப் புலிகளை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தேன். அன்று புலிகளுடன் இருந்தவர்கள் இப்போது எம்.பிக்களாகவும், வியாபாரிகளாகவும், அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களாகவும் இருக்கின்றனர். மேலும் சிலர் வெளிநாடுகளில் இருந்துகொண்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இவர்களில் எவருக்கும் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் என்னை மட்டும் இப்படி நடத்துகின்றனர் என்றார். ஏற்கனவே 5 வருடங்கள் என்னை தடுத்து வைத்திருந்து போதுமான சாட்சியங்கள் இல்லையென நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நான் மீண்டும் தடுத்து வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்றார். இந்த நாட்டை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்பதற்காக தீர்மானம் மிக்க பங்களிப்பு செய்தவர். இதனால் இவர் தேசிய வீரராக கருதப்பட வேண்டியவர். கருணாவும் பிள்ளையானும் விடுதலைப் புலிகளிடம் இருந்து விலகி அவர்களுக்கு எதிராக நடத்திய போராட்டமே விடுதலைப் புலிகளின் முடிவுக்கான ஆரம்பமாகும். பிள்ளையான் போன்று கருணா அம்மானும் திறமையான போராட்ட வீரராகும். இவரின் தலைமையில் கிழக்கில் இருந்து வந்தவர்களே கிழக்கில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடிந்தது. இவர்கள் புலிகளை தோற்கடிக்க பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். இப்போது 2006இல் நடந்த பேராசிரியர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தினத்தில் தான் எங்கே இருந்தேன் என்று தெரியாது என்றும், ஆனால் கிழக்கு யுத்தம் நடந்த காலம் என்பதனால் தான் மாவிலாறு முகாமிலேயே அந்தக் காலத்தில் இருந்திருப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு பயங்கரவாதிகளுக்கும், தெற்கு பயங்கரவாதிகளுக்கும் மன்னிப்பு வழங்கி மக்கள் மறந்துள்ளனர். இவ்வாறான நிலைமையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தீர்மானம் மிக்க பங்களிப்பை வழங்கிய பிள்ளையானுக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுப்பது ஏன். இப்போது பயங்கரவாதத்தின் அரசாங்கமே உள்ளது. இதனாலேயே பிள்ளையானுக்கு தண்டனை வழங்க முயற்சிக்கின்றனர். பிள்ளையானுக்கும் எனக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியில் நட்பு கிடையாது. பயங்கரவாத அமைப்பில் இருந்து விலகி அந்த பயங்கரவாத அமைப்புக்கு எதிராக போராடுவது மிகவும் அரிதாக நடக்கும் விடயமாகும். இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்ட தேசப்பற்றாளருக்காக நிபந்தனையின்றி முன்னிற்காவிட்டால் எதிர்காலத்தில் பயங்கரவாதத்தை கைவிட்டு அரசாங்கத்துடன் இணைவதற்கு பயங்கரவாதிகள் தயங்குவர். இதனால் செய்நன்றியை மறக்காமல் அதற்கான உபகாரத்தை வழங்குவதையே நான் செய்கின்றேன். இதேவேளை பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஏப்ரல் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக ஏப்ரல் 12ஆம் திகதி ஜனாதிபதி மட்டக்களப்பில் கூறியிருந்தார். நான் ஏப்ரல் 13ஆம் திகதியே பிள்ளையானை சந்தித்தேன். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் ஒரு வசனமேனும் கதைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் அவருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 2015 முதல் 2020ஆம் ஆண்டு வரையில் கைதாகி இருந்தவர் 2019இல் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியென எவராவது கூறுவராக இருந்தால் அவ்வாறு கூறுபவரின் மூளையை பரிசோதிக்க வேண்டும். குறைந்தது சஹரானுடன் புகைப்படம் எடுத்த அரசியல்வாதியை பிரதான சூத்திரதாரியென கைது செய்திருந்தால் அதில் தர்க்க ரீதியான விடயம் இருக்கும். ஆனால் தாக்குதலுக்கு 4 வருடங்களுக்கு முன்னர் இருந்தே சீஐடியின் கீழ் இருந்தவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியென கூறுவதனாது இதற்கு மேலும் நகைச்சுவையாக இருக்க முடியாது. ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பொறுப்பு கூற வேண்டிய சிலரை வெளியிடவுள்ளதாக மார்ச் 30ஆம் திகதி ஜனாதிபதி கூறியிருந்தார். இந்நிலையில் இன்னும் சிலநாட்களே 21ஆம் திகதிக்கு உள்ளது. இதனால் தன்னை நரியென ஏற்றுக்கொள்ளும் வரையில் முயலை தாக்கியது போன்றே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை விடயத்திலும் அரசாங்கம் நடந்துகொள்ள முயற்சிக்கின்றது. முயலை நரியாக மாற்றியது போன்றும், சிறுமி ஷேயா கொலை விசாரணையில் கொண்டையாவை குற்றவாளியாக கூறியது போன்றும் பிள்ளையானை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக மாற்றுவதற்கும் முயற்சிக்கப்படுகின்றது. பிரபாகரனுடனும் மோதிய பிள்ளையானை முயல் மற்றும் கொண்டையாவை போன்று அரசாங்கம் நினைத்துக்கொண்டிருந்தால் அரசாங்கம் செய்யும் பெரும் தவறாகும். பிள்ளையானை அவரின் உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகளை சந்திக்க விடாது அவருக்கு அழுத்தங்களை கொடுத்து அவரின் ஊடாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருடன் முயல் விளையாட்டை செய்ய முடியாது என்பதனை பொலிஸார் புரிந்துகொண்டுள்ளனர். அவர் பேராசிரியர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் வடக்கில் போராடிக்கொண்டிருந்த போது கொழும்பில் நடந்த காணாமல் போன சம்பவம் தொடர்பில் எனக்கு எப்படி தெரியும் என்றே கூறியுள்ளார். அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலோ, ராஜபக்ஷக்களுடன் இணைந்து செய்ததாக கூறி பிள்ளையான் சகலதையும் கக்கினார் என்று சமுக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யாகும் என்றார். -(3) https://www.samakalam.com/ஈஸ்டர்-தாக்குதல்-பிரதான/
-
யாழ் செல்லும் ஜனாதிபதியிடம் வலி.வடக்கு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!
காணி விடுவிப்பு கோரி ஊடக சந்திப்பினை மேற்கொண்டவர்களை அச்சுறுத்திய காவல்துறையினா் adminApril 17, 2025 யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதியிடம் தமது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்த காணி உரிமையாளர்களுக்கு காவல்துறையினா் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் , பலாலி வீதி கட்டுப்பாடுகள் இன்றி முழுமையாக திறக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் ஊடகங்கள் ஊடாக முன் வைக்கும் வகையில் வசாவிளான் சந்திக்கு அண்மையில் ஊடக சந்திப்பொன்றினை ” வலி. வடக்கு காணி விடுவிப்புக்கான அமையம்” எனும் அமைப்பு இன்றைய தினம் வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த ஊடக சந்திப்பு ஆரம்பமாக இருந்த சமயம் அவ்விடத்திற்கு சென்ற பலாலி காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறைக் குழுவினர் இவ்விடத்தில் ஊடக சந்திப்பினை நடாத்த முடியாது என ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களை அச்சுறுத்தி , அவர்களை தனித்தனியே ஒளிப்படங்கள் எடுத்ததுதான் , அவர்களின் பெயர் , அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை பதிவு செய்தனர். அத்துடன் அங்கிருந்த ஊடகவியலாளர்களையும் ஒளிப்படங்கள் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். அச்சறுத்தல்களையும் மீறி குறித்த ஊடக சந்திப்பு அவ்விடத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பலாலி காவல்து நிலைய பொறுப்பதிகாரி இனவாத ரீதியில் செயற்பட்டு வருபவர் எனவும் ,சட்டவிரோதமான முறையில் தையிட்டி கட்டப்பட்டுள்ள விகாரைக்கு எதிரான போராட்டங்களின் போதும் போராட்டக்காரர்களுடன் முரண்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர் என்பதுடன் , விகாரைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவர்களுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து கைது நடவடிக்கைகளை முன்னெடுக்க முற்படுபவர் எனவும் மக்களால் குற்றம் சாட்டப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/214432/
-
மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை மறந்து அலைபேசிகளில் மூழ்கியுள்ளனர்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை மறந்து அலைபேசிகளில் மூழ்கியுள்ளனர்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் adminApril 16, 2025 போர்த் தேங்காய், கிட்டிப்புள்ளு போன்ற விளையாட்டுக்கள் இன்றைய சிறுவர்களுக்குத் தெரியுமோ தெரியவில்லை. அப்படி மறந்துபோகின்ற எங்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை நினைவூட்டி அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையில் இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்தமைக்காக பாராட்டுகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின், பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் விளையாட்டுத் திணைக்களம், சுற்றுலாப் பணியகம் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபை இணைந்து நடத்திய வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டம் – 2025 நிகழ்வு மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் உரையாற்றுகையில், காலத்துடன் இணைந்து பல மாற்றங்களை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். பல விளையாட்டு நிகழ்வுகள் அருகிச் செல்கின்றன. பல விளையாட்டுகளை மறந்தே போய்விட்டோம். நடைபெறுகின்ற விளையாட்டு நிகழ்வுகளில்கூட இளையோர் பங்கேற்பும் மிகக் குறைந்துள்ளது. பாடசாலை மாணவர்கள், பாடசாலை அதன் பின்னர் தனியார் கல்வி நிறுவனம் என்று தமது நாளைச் செலவிடுகின்றனர். இல்லையேல் வீட்டில் இருந்து அலைபேசியைப் பயன்படுத்துகின்றனர். இப்படியிருந்தால் அவர்களால் எப்படி விளையாட்டில் ஈடுபட முடியும்? உண்மையில் மிகச் சிறப்பான நிகழ்வை வடக்கு மாகாண கல்வி அமைச்சும், பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ஏற்பாடு செய்திருக்கின்றன. தமிழ் – சிங்கள மாணவர்கள், கலைஞர்களை ஒருங்கிணைத்து செயற்படுத்தியிருக்கின்றார்கள். மறந்துபோகின்ற எங்கள் பாராம்பரியங்களை நினைவூட்டும் வகையில் இந்தக் கொண்டாட்டத்தை ஒழுங்குபடுத்தியிருப்பது மகிழ்வைத்தருகின்றது. எப்போதும் புத்தாண்டு பிறக்கும்போது நாம் சிறப்பாக அந்த ஆண்டு அமையவேண்டும் என்பதற்காக ஆலயங்களில் வழிபாடு செய்வோம். பிறந்திருக்கின்ற சித்திரைப்புத்தாண்டு எமது மாகாணத்தில் அபிவிருத்திகள் நடந்தேறி மக்கள் சந்தோசமாக வாழ்வதற்கு வழிசெய்யவேண்டும். கனவுகளை நிறைவேற்றுகின்ற ஆண்டாக இது அமையவேண்டும் என தெரிவித்தார். அதேவேளை சித்திரைப்புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர் இன்னிய வாத்திய இசையுடன் அழைத்துச் செல்லப்பட்டார். அத்துடன் தமிழ்ப் பாரம்பரியத்துடனான குடில் மற்றும் சிங்கள பாராம்பரிய குடில்கள் என்பன மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் ஆளுநர் பார்வையிட்டார். அவற்றைத் தொடர்ந்து மைதானத்தில் தமிழ் மற்றும் சிங்கள பாரம்பரிய கலாசார நடன நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றை ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் தமிழ்ப் பாரம்பரிய குடிலின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த ‘குந்தில்’ இருந்து பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து வேடப் போட்டியையும் பார்வையிட்டு பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளையும் ஆளுநர் ஆரம்பித்து வைத்தார். https://globaltamilnews.net/2025/214400/
-
ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
உங்கள் சிறுவயதில் மச்சம் படைத்திருக்கலாம்! ☺️
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை வியாழன் 17 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI எதிர் SRH 22 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் கந்தப்பு இப்போட்டியில் போட்டியில் 22 பேருக்கு முட்டைகளா அல்லது @கந்தப்பு க்கு மாத்திரம் முட்டைகளா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 32வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்களில் எவரும் அரைச் சதத்தை அடிக்கவில்லை என்றாலும் வேகமாக அடித்தாடிய அபிஷேக் போரெல், கேஎல் ராஹுல், ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸ், அக்க்ஷர் பட்டேல் ஆகியோரின் பங்களிப்புடன் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சாம்ஸன் காயம் காரணமாக வெளியேறியபோதும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ராணா ஆகியோரின் அரைச் சதங்களுடன் வெற்றி இலக்கை நோக்கிப் முன்னேறியது. எனினும் மிச்சல் ஸ்ராக்கின் இறுக்கமான இறுதி ஓவரில் 9 ஓட்டங்களை எடுக்கவேண்டிய நிலையில் 8 ஓட்டங்களை எடுத்ததால் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களை எடுத்துப் போட்டி சமநிலையில் முடிந்தது. அதன் பின்னர் வெற்றி தோல்வி சுப்பர் ஓவர் மூலமாகத் தீர்மானிக்கப்பட்டது. முதலில் ஆடவந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் 5 பந்துகளின் இரண்டு விக்கெட்டுகளை ரண் அவுட் மூலம் பறிகொடுத்தமையால் 11 ஓட்டங்களுடன் அவர்களின் ஆட்டம் 5 பந்துகளில் முடிந்தது. பதிலுக்கு ஆடவந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேஎல் ராஹுலும், ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸும் 4 பந்துகளில் 13 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்ட உதவினர். முடிவு: போட்டி சமநிலையில் முடிந்திருந்ததால் சுப்பர் ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நந்தன் முதல்வர் இடத்தைக் கைப்பற்றியுள்ளார். அத்துடன் பல நாட்களாக சுமைதாங்கியாக இருந்த @goshan_che இன் வலிக்கு நிவாரணம் வழங்க @சுவைப்பிரியன் இறுதி நிலைக்குச் சென்று எல்லோரையும் தாங்கிப் பிடிக்கின்றார்!
- IMG_0646.jpeg
-
குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்!
18 வயசுப் பெண்கள் குழந்தைப் பிள்ளைகள் மாதிரித் தெரிகின்றார்கள் என்பது உண்மைதான் 😏
-
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவாரென மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதி
சுமந்திரன் அதிரடி : தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர் M A Sumanthiran Sri Lanka ITAK By Raghav 5 hours ago இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட கிளையின் அங்கத்தவரான சந்தியோ அலன்டீலன் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரினால் வெளியிடப்பட்டள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் சம்மந்தமான விடயத்தில் நீங்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளீர்கள். இலங்கை தமிழரசுக் கட்சி இந்த குற்றச்சாட்டுக்கள் மிகவும் மோசமானதொன்று. ஆகையால் நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரை கட்சி உறுப்புரிமையில் இருந்து தாங்கள் உடனடியாக இடைநிறுத்தப்படுகிறீர்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் 16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் சந்தியோ அன்டீலன் அண்மையில் கைது செய்யப்பட்டார் இதனடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் அங்கத்தவரான அலன்டீலனை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/alandeelan-suspended-from-itak-party-membership-1744793493
-
ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை
ஷோபாசக்தி பற்றி கண்டண அறிக்கையை முன்னின்று தயாரித்தவர் அவருடன் உறவில் இருந்த பெண்ணியவாதி லீனா மணிமேகலை என்றுதான் தெரிகின்றது. சீமான் மீது விஜயலட்சுமி வழக்குப் போட்டதுபோல் ஏன் பாதிக்கப்பட்டதாகக் கூறுபவர்கள் வழக்கைப் போடமுயலவில்லை? கேஸ் நிற்காது என்பதனால்தான் இருக்கும்😜 கையெழுத்து வைத்தவர்கள் கேட்டவரின் “ முகத்திற்காக” வைத்திருக்கலாம்! ஷோபாசக்திக்கு முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவரின் நீண்ட பதிலில் தெளிவாகத்தான் இருக்கின்றது.. அவருக்கு பல்லிருக்கு பக்கோடா சாப்பிடுகின்றார்.. பக்கோடா மொறுமொறு இல்லாவிட்டால் வேறு பிராண்ட்டுக்குப் போகின்றார்!!
-
ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை
கண்டன அறிக்கை : உண்மைகளும் பொய்களும் April 15, 2025 ஷோபாசக்தி என்மீதான ஒரு கண்டன அறிக்கை நேற்று இணையத்தில் ‘அதற்கமை பெண்ணியக் குழு’ என்றொரு அமைப்பால் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தக் கண்டன அறிக்கை குறித்து எனது தரப்பைத் தெளிவுபடுத்தும் நோக்கமொன்றுக்காகவே இந்தப் பதிவை எழுதுகிறேன். எவரையும் அவதூறு செய்வதோ, குணச்சித்திரப் படுகொலை செய்வதோ, கடந்தகால உறவுகளின்போது நிகழ்ந்த தனிமனித அந்தரங்கங்களையோ, உணர்வுச் சிக்கல்களையோ, முரண்களையோ பொதுவெளியில் அறிக்கையிட்டு, கீழ்மையான கிசுகிசுப் பசி பிடித்து அலையும் சமூக வலைத்தளவாசிகளுக்கு மலிவுத் தீனி போடுவதோ எனது பதிவில் நிகழவே கூடாது என்ற கவனத்துடனும் பொறுப்புடனுமே இதை எழுதுகிறேன். கண்டன அறிக்கையில் 116 கையெழுத்துகள் என்பது பெருந்தொகைதான். ஆனால், இந்த அறிக்கையில் கையொப்பமிட்டிருப்பவர்களில் முக்கால்வாசிப் பேர்களை நான் முன்பின் அறிந்ததில்லை. அவர்களுக்கும் என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களில் பெரும்பாலானோர் கேரளா – டில்லி – வங்காளம் போன்ற இடங்ளைச் சேர்ந்தவர்களாகத் தெரிகிறார்கள். அறிக்கையில் கையொப்பமிட்டிருக்கும் மிகுதிக் கால்வாசிப் பேர்களில் பெரும்பாலானோரை எப்போதாவது இலக்கியக் கூட்டங்களில் அல்லது புத்தகச் சந்தையில் பார்த்திருப்பேன். அவ்வளவே அறிமுகம். அதேவேளையில், கண்டன அறிக்கையில் கையொப்பமிட்டிருப்பவர்களில் ஒருசிலர் என்னோடு இணைந்து பல வருடங்களாகக் கலை – அரசியல் செயற்பாட்டிலும், நெருங்கிய நட்பிலும் உறவிலும் தோழமையிலும் இருந்தவர்கள். இவர்களிடம் என்னுடைய அலைபேசி எண்ணும் மின்னஞ்சல் முகவரியும் இருக்கின்றன. இவர்களில் பலர் இந்த விநாடிவரை எனது முகநூல் நட்புப் பட்டியலிலும் இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் ஒரே ஒருவருக்குக்கூட கண்டன அறிக்கையில் கையெழுத்திட முன்பாக என்னிடம் எனது தரப்பு விளக்கத்தைக் கேட்டு அறிய வேண்டும் என்று தோன்றவில்லை. முதலாளித்துவ நீதிமன்றங்களில் கூட குற்றம் சாட்டப்பட்ட தரப்புக்கு விளக்கமளிக்கப் பல வாய்ப்புகளைக் கொடுத்த பின்பே தீர்ப்பிடுகிறார்கள். ‘அதற்கமை பெண்ணியக் குழு’வின் விசாரணை மன்றத்திலோ அவ்வாறான வாய்ப்புகள் ஏதும் கொடுக்கப்படாமல், நேரடியாகவே ‘குற்றவாளி’ எனத் தீர்ப்பிடும் நடைமுறை அமலில் இருக்கலாம். ஆனாலும், நான் எனது தரப்பைச் சொல்லித்தான் ஆகவேண்டும். எனது தரப்பை அறிந்துகொள்ளாது முன்னரும் ஒருமுறை ‘பாலியல் குற்றவாளி’ எனச் சமூக வலைத்தளங்களில் நான் அநீதியாகத் தீர்ப்பிடப்பட்டிருக்கிறேன். அந்த நிகழ்வை முதலில் இங்கே சுருக்கமாகக் குறித்துக் காட்டிவிடுகிறேன். ஏனெனில், அந்த நிகழ்வுக்கும் தற்போதைய கண்டன அறிக்கைக்கும் நெருங்கிய ஒற்றுமையிருக்கிறது. அந்தப் பாலியல் குற்றச்சாட்டு இன்றைக்குப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு என்மீது சுமத்தப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் கடந்த பதினைந்து வருடங்களாக என்மீது தொடர்ந்து அந்தக் குற்றத்தைச் சுமத்தினார்கள். தனிநபர்களோடு அரசியல் இயக்கங்களும் என்மீது அந்தக் குற்றத்தைச் சுமத்தின. ம.க.இ.க. மற்றும் சார்லஸ் ஆன்டனி போன்ற மே 17 இயக்கத்தின் அன்றைய முக்கிய செயற்பாட்டாளர்கள் நேரடியாகவே களத்தில் இறங்கி என்மீது குற்றம்சாட்டினார்கள். குற்றச்சாட்டும் மிகக் கடுமையானதுதான். பிரான்ஸ் தமிழச்சியிடம் நான் பாலியல் அத்துமீறல் செய்தேன் என்பது குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை நான் மறுத்தேன் (Link). அந்தக் குற்றச்சாட்டு திட்டமிடப்பட்ட கூட்டு அவதூறுக் குரல் என்றேன். ஆனாலும், அந்தப் பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்து இன்றுவரை என்மீது பழி சுமத்தப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு அவ்வப்போது சற்றே தூசி தட்டப்பட்டுச் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. பிரான்ஸ் தமிழச்சி மறுபடியும் யூ – டியூப் நேர்காணல்களில் தோன்றுகிறார். என்னோடு சேர்த்து என்னுடைய தோழர்களில் பலர் அவதூறுகளால் தாக்கப்படுகிறார்கள். அதைத் தாண்டியும் சகட்டுமேனிக்குப் பலரின்மீது தமிழச்சியால் பாலியல் குற்றம் சுமத்தப்படுகிறது. இவை எல்லாற்றுக்கும் ஆரம்பம் என்மீதான தமிழச்சியின் அவதூறுகளுக்கு 2010-இல் நூற்றுக்கணக்கான நபர்களும் சில அரசியல் இயக்கங்களும் கூட்டாகக் களம் அமைத்துக் கொடுத்ததே. அதுதான் இப்போது மறுபடியும் இந்தக் கண்டன அறிக்கை மூலம் நிகழ்த்தப்படுகிறது. கடந்த வருடம் பாரிஸில் நடந்த 51-வது இலக்கியச் சந்திப்பில் ‘பாலியல் சுரண்டல்: எதிர்கொள்ளலும் பொறுப்புக்கூறலும்’ என்றொரு அமர்வு நிகழ்ந்தது. அந்த அமர்விலும் தமிழச்சி என்மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டுக் குறித்த கேள்வி மறுபடியும் ஒருமுறை எழுப்பப்பட்டது. அமர்வை ஒருங்கிணைத்த விஜி அந்தக் கேள்விக்கு “தமிழச்சியின் குற்றச்சாட்டு ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்பது எங்களுக்குத் தெரியும்” எனப் பதிலளித்தார். அதாவது, நீண்ட பதினைந்து வருடங்கள் நான் பொய்ப் பழியைச் சுமந்து அலைந்ததன் பின்னாக, முதற்தடவையாக ஒரு பொது அரங்கில் என்மீதான குற்றச்சாட்டுப் பொய்யானது எனச் சொல்லப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதுவரை காலமும் தமிழச்சியின் இந்தப் பொய்க் குற்றச்சாட்டைத் தோன்றியபோதெல்லாம் தங்களது கையிலெடுத்து என்மீது அவதூறை வீசியெறிந்தவர்களும் தற்போதைய இந்தக் கண்டன அறிக்கையில் கையழுத்திட்டிருப்பவர்களுமான மோகனதர்ஷினி, பாரதி சிவராஜா, அஞ்சனா போன்றோர் தங்களது அந்த அவதூறுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்களா என்ன! இல்லை. இப்போதும் அந்த அவதூறுகள் முகநூலில் கிடக்கின்றன. இந்தப் பொறுப்பின்மையின் இன்னொரு வடிவம்தான் இப்போதைய கண்டன அறிக்கை. இந்தக் கண்டன அறிக்கையைத் தயாரித்தவர்கள் யார் என அறிக்கையில் விபரமில்லை. இதில் கையொப்பமிட்டிருக்கும் அனைவருமே இணைந்து இந்த அறிக்கையைத் தயாரிக்கவில்லை. ஏனெனில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கண்டன அறிக்கையே மின்னஞ்சலில் பலருக்கும் அனுப்பப்பட்டுக் கையெழுத்துகள் கோரப்பட்டன. லீனா மணிமேகலையின் மின்னஞ்சல் மூலமாக எனது தோழமைகள் சிலருக்கும் இந்தக் கண்டன அறிக்கை அனுப்பப்பட்டுக் கையெழுத்துக் கோரப்பட்டிருந்தது. எனவே, கையெழுத்திட்டவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து இந்த அறிக்கையைத் தயாரிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அறிக்கையின் உண்மைத்தன்மையைத் தீர விசாரித்துத் தெரிந்துகொள்ளாமல் Solidarity என்ற அடிப்படையில் பெரும்பாலான கையெழுத்துகள் பதிவாகியிருக்கின்றன. பகிரங்கமான ஓர் அரசியல் நிகழ்வுக்கு எதிராக, அதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக இந்தமுறையில் ஒரு கூட்டுக் கண்டன அறிக்கை வெளியாவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதுதான் நடைமுறை. ஆனால், உறவிலிருந்த இரு நபர்களுக்கு இடையேயான அந்தரங்கப் பிரச்சினைகளையும் உணர்வுச் சிக்கல்களையும் ஒருதரப்பின் மீதான Solidarity என்ற அடிப்படையில் மட்டுமே அணுகிக் கையெழுத்திடுவது ஒருபோதும் சரியாக இருக்காது. ‘ஷோபாசக்தியால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை ஆழமாகவும் விரிவாகவும் பரிசீலித்தோம்’ எனக் கண்டன அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பரிசீலனையாளர்கள் யார்? அவ்வாறு பரிசீலித்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் யார்? இந்த விபரங்களை மறைத்து வைப்பதன் மூலம் கண்டன அறிக்கையைத் தயாரித்த பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். Solidarity கையொப்பங்களின் பின்னே அவர்கள் மறைந்து நிற்கிறார்கள். ஆனாலும், இந்த அறிக்கையை முன்னின்று உருவாக்கியவர்கள் எவர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களின் சாரம் ஏற்கனவே சிவா மாலதியால் முகநூலில் (13 டிசம்பர் 2024) வைக்கப்பட்டது. அதைப் போன்றே கடந்த இரண்டு வருடங்களாகவே இந்தக் குற்றச்சாட்டுகள் அரசல்புரசலாகவும் கவிதையாகவும் லீனா மணிமேகலையால் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகளை இணைத்து உருப்பெருக்கி எழுதப்பட்டிருப்பதே இந்தக் கண்டன அறிக்கை. சிவா மாலதி கடந்த டிசம்பர் மாதத்தில் எந்தச் சூழ்நிலையில், என்னமாதிரியான குற்றச்சாட்டை என்மீது வைத்தார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. 51-வது இலக்கியச் சந்திப்பில் ‘இமிழ்’ தொகுப்பு வெளியீடு, யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ‘இமிழ்’ வெளியீட்டு நிகழ்வுக்கு எழுத்தாளர் கிரிசாந் பேசுவதற்கு அழைக்கப்பட்டது தொடர்பான விவாதங்களில் ‘இமிழ்’ தொகுப்பின் பதிப்பாசிரியர்களில் ஒருவன் என்ற முறையில் எனது நிலைப்பாட்டை ‘இமிழ் – வால்டேயரை நினைவுபடுத்தல்’ என்ற தலைப்பில் கட்டுரையாக (Link) எழுதியிருந்தேன். கிரிசாந் எழுதிய கட்டுரைகள் மீது எதிர்க் கருத்து இருப்பதற்காக அவரைச் சமூகப் புறக்கணிப்புச் செய்யுமாறு (சிவா மாலதி போன்றோர்) கோருவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருந்தேன். கடந்த டிசம்பர் மாதத்தில் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, கிரிசாந்தின் கவிதை நூல் வெளியீடு யாழ் நூலக மண்டபத்தில் நிகழ்ந்தது. ஒரு பார்வையாளனாக நானும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டேன். இதை விமர்சித்து சிவா மாலதி ‘பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டலும் சோபாசக்தியும்’ என்றொரு முகநூல் பதிவை எழுதியிருந்தார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டது மூலமாகப் பாலியல் குற்றவாளிகளை நான் காப்பாற்ற முயற்சிக்கிறேன் என்று சொன்னார். அவரது அர்த்தமற்ற வாதத்திற்குப் பலம் சேர்ப்பதற்காக என்மீதான பொய்களையும் தனது பதிவில் இணைத்திருந்தார். அந்தப் பதிவில், என்னால் பல பெண்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் என்னால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள் என்றும் சிவா மாலதி குறிப்பிட்டார். தற்கொலைக்கு முயன்றாக ஒரு பெண்ணின் அடையாளத்தைக் குறிப்பிட்டே எழுதியிருந்தார். சிவா மாலதி குறிப்பிடும் அந்தப் பெண் யார் என்பதை என்னைப் போலவே பலராலும் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், எனக்கும் இங்கே குறிப்பிடப்படும் அந்தத் தோழிக்கும் இருந்தது இரகசிய உறவல்ல. அது பகிரங்கமாகவே இருந்தது. சிவா மாலதி இந்தக் குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்பும் பின்பும் கூட அந்தத் தோழி என்னுடன் நல்ல நட்பிலேயே இருந்தார். சிவா மாலதியின் இந்தக் குற்றச்சாட்டு வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பின்பு, என்னால் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாகச் சொல்லப்பட்ட அந்தத் தோழி என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைப் புத்தக சந்தைக்கு வந்திருந்தார். இருவரும் நீண்ட நேரமாகப் பல விஷயங்களைப் பேசிக்கொண்டாலும், சிவா மாலதியின் பதிவு குறித்து நான் எதுவும் அவரிடம் சொல்லவில்லை. ஏனெனில், அந்தப் பொய்ச் செய்தியைச் சொல்லி அந்தத் தோழியைப் பதற்றப்படுத்த நான் விரும்பவில்லை. அன்று தில்லையின் ‘தாயைத்தின்னி’ நாவலை நான் புத்தக சந்தையில் வெளியிடுவதாக இருந்தது. நீங்களும் வாருங்கள் என அந்தத் தோழியையும் என்னுடன் அழைத்துச் சென்றேன். நானும் அவரும் சேர்ந்திருந்தே ‘தாயைத்தின்னி’ நாவலை மிகுந்த மகிழ்ச்சியோடு வெளியிட்டோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் (29 டிசம்பர் 2024) இப்போதும் தில்லையின் முகநூலில் இருக்கின்றன. என்னால் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட ஒருவர் இவ்வாறு நடந்துகொள்வது சாத்தியமா? இந்தத் தற்கொலைப் பொய் தற்போது வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையிலும் வெளியாகியுள்ளது. சிவா மாலதியின் இந்தப் பதிவைத் தனது முகநூலில் பகிர்ந்துகொண்ட (14 டிசம்பர் 2024) லீனா மணிமேகலை ‘இத்தனை வருடங்களாக நான் எனது கண்களைக் கட்டிக்கொண்டு இருந்துவிட்டேன். கனடா வந்ததும்தான் என் கண்கள் திறக்கப்பட்டு ஷோபாசக்தி பெண்களை வேட்டையாடுபவர் எனத் தெரிந்துகொண்டேன்’ என எழுதினார். லீனா மணிமேகலை போன்ற கூரிய புத்திசாலித்தனமும் மிகுந்த தைரியமும் கொண்ட ஒருவரின் கண்கள் பதின்மூன்று வருடங்களாகக் கட்டப்பட்டிருந்தன என்றால் அது வருந்தத்தக்கதுதான். ஆனால், அவரது கண்கள் கட்டப்பட்டிருக்கவில்லை. 2009 முதல் லீனா மணிமேகலைக்கும் எனக்கும் இருந்த உறவு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். நாங்கள் பிரிந்து இருவருமே வெவ்வேறு உறவுகளுக்குப் போய்விட்ட பின்பும்கூட இருவரும் நட்பாகவே இருந்தோம். சேர்ந்து வேலைகள் செய்திருக்கிறோம். 2021-இல் அவரது ‘Black July’ குறும்படத்திற்கு நான்தான் பிரதியெழுதிக் குரல் நடிப்பும் செய்திருந்தேன். 18 மே 2021-இல் அவர் படித்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக வகுப்பில் நடந்த Zoom meeting-லும் கலந்துகொண்டு நான் உரையாற்றினேன். ‘கோவிட்’ கெடுபிடிக் காலத்திற்குப் பின்பாக 2022 -இல் நான் இந்தியாவுக்குச் சென்றபோது, புதியதொரு உறவில் நுழைந்தேன். அப்போதிலிருந்துதான் லீனா மணிமேகலை என்மீது ‘பெண்களை வேட்டையாடுபவன்’ என்ற குற்றத்தைச் சுமத்த ஆரம்பித்தார். இதை அவர் இந்தக் கண்டன அறிக்கை சொல்வதுபோன்று பரிசீலனை – ஆய்வு செய்தெல்லாம் அறிக்கையிடவில்லை. முதலில், என்னுடன் உறவிலிருக்கும் தோழியின் முகநூலின் ‘கொமென்ட்’ பகுதியில் நுழைந்து என்னைக் குறித்த பொய்களை எழுதினார். அதை எனது தோழி அழித்தவுடன் ‘இதை உன்னால் அழித்துவிட முடியும். ஆனால், ஷோபாவைப் பொதுவெளியில் அம்பலப்படுத்த எனக்கு ஒரு நிமிடம் ஆகாது’ என்று மேசேஜ் அனுப்பினார். பின்பு எனது நெருங்கிய நண்பர்கள் வட்டத்திற்கு இதேபோன்று ‘பெண்களை வேட்டையாடுபவன்’ மின்னஞ்சல்களை அனுப்பினார். பின்பு ‘அந்தோணிதாசன்’ என என்னை விளித்துச் சாபமிடும் கவிதையும் எழுதினார். ஏற்கனவே என்னில் கோபமுற்றிருந்த சிவா மாலதி போன்றவர்களும் இவரோடு சேர்ந்துகொள்ள, இப்போது அவை எல்லாமே புனைவுகளாகவும் பொய்களுமாகச் சேர்ந்து மூன்றரைப் பக்கங்களில் கண்டன அறிக்கையாகப் பரிணமித்திருக்கிறது. நான் பல பெண்களோடு உறவில் இருந்தேன் என்பது உண்மை. என்னுடைய 23 வயதிலிருந்தே எனக்குத் தொடராகக் காதல்கள் இருந்தன. திருமணம், குழந்தைகள், ஒழுக்கவாதம், கலாசாரம் போன்ற எல்லைகளுக்குள் வாழ விரும்புவர்களுக்கு என்னுடைய வாழ்க்கைமுறையும் தேர்வுகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால், நான் மிக இளம் வயதிலேயே திருமணம் – குழந்தைகள் என்ற நிறுவன முறைக்கு வெளியே வாழும் ‘சுதந்திரக் காதல்’ வாழ்க்கைமுறையை வரித்துக்கொண்டவன். என்னுடைய அரசியல் கல்வியாலும் இளமையிலேயே அனார்க்கிஸத்தின் மீது எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பாலும் நான் இந்த வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவன். இதைப் பகிரங்கமாகவே பொதுவில் பலமுறை அறிவித்திருப்பவன். ‘எதுவரை’ இதழில் 2010 -இல் வெளியாகிய என்னுடைய நேர்காணலில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருந்தேன். ”காதல், பாலுறவு போன்றவை உட்பட எனக்கு எவ்விதமான ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளும் கலாசாரத் தளைகளும் கிடையாது. இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு அவர்களது தனிப்பட்ட தேர்வு. இதில் மதம், சட்டம், கலாசாரம் போன்றவற்றிற்கு எந்த வேலையும் கிடையாது.” எனது வாழ்க்கைமுறை பகிரங்கமானது. எனக்கு இருந்த காதல் உறவுகளும் பகிரங்கமானவை. இந்தக் கண்டன அறிக்கையில் ‘திருமணம், குடும்பமாக சேர்ந்து வாழ்தல் போன்ற பொய்யான வாக்குறுதிகள் என்னால் கொடுக்கப்பட்டது’ எனச் சொல்லப்பட்டிருப்பதை நான் முற்றிலும் மறுக்கிறேன். நான் எவருக்கும் அவ்வாறு வாக்குறுதி கொடுத்ததில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதேபோன்று என்னுடன் உறவிலிருந்த யாருமே அவ்வாறு என்னிடம் வாக்குறுதி கேட்டதில்லை என்பதும் உண்மையே. பாலியல் வன்முறை, பொருளாதாரரீதியாகச் சுரண்டியது, அதிகாரத்தை உபயோகித்துப் பாலியல் துர்ப்பிரயோகம் செய்தது போன்ற எந்தக் குற்றச்சாட்டுகளும் கண்டன அறிக்கையில் கிடையாது. பின்பு என்னதான் குற்றச்சாட்டு? காதல் உறவில் இருந்தவர்களை மேலாதிக்கம் செய்தேன், நம்பிக்கைத் துரோகம் செய்தேன், அவர்களுடன் திடீரெனத் தொடர்புகளைத் துண்டித்தேன் என்பவையே சாரமான குற்றச்சாட்டுகள். இந்தக் குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். எவரொருவர் மீதும் நான் மேலாதிக்கமோ பாலியல் சுரண்டலோ செய்ததில்லை. நம்பிக்கைத் துரோகம் சுட்டுப் போட்டாலும் – உண்மையாகவே துப்பாக்கியால் சுட்டாலும் – செய்வது என் இயல்பில்லை. உறவிலிருந்து பிரிந்த பின்பும் பலருடனும் நட்புரீதியான தொடர்புகளையும் சந்திப்புகளையும் இப்போதுவரை நான் வைத்திருக்கிறேன். பொத்தாம் பொதுவாக அவருக்கு அப்படி நடந்தது, இவருக்கு இப்படி நடந்தது எனக் கண்டன அறிக்கை சொல்கிறது. இப்படி யாரும் எவர்மீது வேண்டுமானாலும் எளிதாகக் குற்றம் சொல்லலாம். தனியொரு முகநூல் வம்பரும் இப்படிச் சொல்லலாம், 116 கையெழுத்துகள் சேர்ந்தும் சொல்லலாம். எண்ணிக்கை அல்ல உண்மையைத் தீர்மானிப்பது. இவ்வாறான ஒரு பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டை முன்வைக்கும்போது, சில குறிப்பான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பெயரைச் சொல்லாமல் இருப்பதில் நியாயம் இருக்கலாம். எனினும், எனது வாழ்க்கை எப்படிப் பகிரங்கமானதோ அவ்வாறே எனது காதல் உறவுகளும் பகிரங்கமானவையே, எல்லோருக்கும் தெரிந்தவையே என்றிருக்கும்போது இங்கே அந்தப் பெயர்களைக் குறிப்பிட்டிருக்க முடியும். அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் என்னால் ஆதாரபூர்வமாகக் காலவரிசைப்படி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து எது உண்மையென நிரூபணம் செய்திருக்க முடியும். அந்த வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இதை ஓர் எடுத்துக்காட்டோடு விளக்குகிறேன். 2010-இல், பிரான்ஸ் தமிழச்சியின் பெயரைக் குறிப்பிடாமல் ‘ஒரு பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்’ எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்லியிருந்தால் அந்தக் குற்றச்சாட்டின் தன்மையை நான் எவ்வாறு புரிந்துகொண்டிருக்க முடியும்? அந்தக் குற்றச்சாட்டை எப்படி ஆதாரத்தோடு என்னால் மறுத்திருக்க முடியும்? இந்தக் கண்டன அறிக்கையும் இவ்விதமே கற்பனைக் குற்றச்சாட்டுகளோடு வெளியாகிப் பொறுப்புக்கூறுமாறு என்னிடம் கேட்கிறது. பெயரற்ற பெண்கள் – கற்பனைக் குற்றச்சாட்டுகள் என்றிருந்தால் என்னால் எவ்வாறு எனது தரப்பைச் சொல்ல முடியும். பொத்தாம் பொதுவாக ‘மறுக்கிறேன்’ என்றுதான் சுருக்கமாகச் சொல்ல முடியும். எனினும், கண்டன அறிக்கையை மிகக் கவனமாகப் படித்து, முடிந்தவரை நான் பொறுப்புடன் என்னுடைய மறுப்பை இங்கே விளக்கமாக எழுதியிருக்கிறேன். கண்டன அறிக்கையின் பொய்களின் அணிவகுப்பில் அடுத்த குற்றச்சாட்டு ‘திருநங்கை செயற்பாட்டாளரை பாலியல் ரீதியாக சுரண்டியதோடு மட்டுமல்லாமல், தான் திரைக்கதை எழுதி நடித்த ரூபாவிலும்(Roobha) அந்த உறவில் நடந்தவற்றையெல்லாம் பயன்படுத்தி காட்சிகளாக்கியுள்ளார்’ என்பது. இந்தப் பாரதூரமான குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன். ‘ரூபா’ திரைப்படம் 2016-இல் கனடாவில் தயாரிக்கப்பட்டது. ஆனால், அந்தத் திரைப்படத்தின் கதை ‘செங்கடல்’ திரைப்படம் முடிந்த கையோடு லீனா மணிமேகலைக்காக என்னால் 2011- இல் ‘சிட்டு’ என்ற தலைப்பில் திரைக்கதையாக எழுதிக் கொடுக்கப்பட்டது. எனினும், முயற்சி மேற்கொண்டு நகரவில்லை. இதே கதை கனடாச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு, ‘ரூபா ‘என்கிற கதையாக என்னால் எழுதப்பட்டு, ‘ரூபா’ திரைப்பட இயக்குனரிடம் என்னால் கொடுக்கப்பட்டது. ‘ரூபா’ திரைக்கதை என்னுடைய உறவில் நடந்த உண்மைக்கதை என்பதில் சற்றும் உண்மையில்லை. குயர் சமூகத்தோடு எனக்கு நீண்டகாலமாகத் தொடர்பும் தோழமையும் இருக்கின்றன. நான் அவர்களோடு நிறைய உரையாடி அவர்களது வாழ்பனுபவம் குறித்து அறிந்திருக்கிறேன். கூவாகத்திற்குச் சென்று கள ஆய்வு செய்து லீனா மணிமேகலைக்காக ‘ரதிலீலா’ என்று இன்னொரு திரைக்கதையையும் எழுதிக் கொடுத்திருக்கிறேன். குயர் சமூகத்தவர்களுக்கு இலங்கை – இந்தியாவில் உரிமைகள் மறுக்கப்படும்போது, அவர்கள் அய்ரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோர என்னவகையான சட்ட வழிகள் இருக்கின்றன எனச் சொல்லியிருக்கிறேன். பிரான்ஸில் தஞ்சம் கோரிய சிலருக்கு ‘கலை மற்றும் சினிமாவுக்கான பிரெஞ்சு அகாதமி’யின் உறுப்பினர் என்ற முறையில் சாட்சியச் சான்றிதழ் கொடுத்திருக்கிறேன். ஆனால், இதையெல்லாம் நான் பாலியல் சுரண்டலுக்காகச் செய்தேன் என்று கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது எனக்கு இழைக்கப்படும் அநீதி அல்லாமல் வேறில்லை. பத்து வருடங்கள் காதலித்துத் திருமணம் செய்து குழந்தையும் பெற்றுவிட்டு, உறவில் ஏற்படும் சிக்கல்களாலும் முரண்பாடுகளால் விவாகரத்து வாங்கிப் பிரிந்துவிடுபவர்கள் உண்டு. அதற்கான உரிமை தார்மீகரீதியாக மட்டுமல்லாமல் சட்டப்படியும் அவர்களுக்குண்டு. அதுபோலவே காதலர்களுக்கும் பிரிந்து செல்வதற்கான உரிமை உண்டு. சிலவேளைகளில் இந்தப் பிரிவு நட்புணர்வுடன் சுமூகமாக நடக்கும். சிலவேளைகளில் முரண்பாடுகளால் எழுந்த கசப்புகளோடும் பழிவாங்கும் வன்மத்தோடும் இந்தப் பிரிவுகள் நிகழும். அங்கே நிச்சயமாக உணர்வுரீதியான பாதிப்புகளும் உளக்கொந்தளிப்புகளும் இருக்கும். ஆனால், இருவருக்கு இடையேயான இந்த உறவுச் சிக்கலை ‘பாலியல் சுரண்டல்’ எனச் சொல்லிப் பழிதீர்க்க நினைப்பது அருவருப்பானது. அதைப் பெண்ணியச் சாயம் பூசிய கண்டன அறிக்கையாக வெளியிடுவது தவறான முன்னுதாரணம். கண்டனத்திற்கு உரிய செயல். இத்தகைய பொய் அறிக்கைகளை உலாவவிடுவது என்பது எதிர்காலத்தில் உண்மைகளின், ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் அறிக்கைகளையும் சமூகம் சந்தேகத்தோடு அணுகத் தூண்டும் பொறுப்பற்ற செயல். கண்டன அறிக்கையில் குறிப்பிடப்படும் இன்னொரு விஷயம் “மிரட்டுதலும் மெளனிக்கச்செய்வதும் – ஷோபாசக்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுபவர்களிடம், நீங்கள் என்ன கலாசார காவலர்களா (cultural Policing) என்று கேட்கிறார்” என்பது. இந்தக் கண்டன அறிக்கையைத் தயாரித்தவர்கள், கையொப்பமிட்டவர்கள் இதை நிரூபிக்கத் தயாரா? ஏன் இந்தப் பொய்கள்! இது உண்மை என்றால் யாரை மிரட்டினேன் என இங்கு பகிரங்கமாகச் சொல்வதில் என்ன சிக்கல் உங்களுக்கு? கலாசாரக் காவலரா எனக் கேட்டு எங்கு எழுதினேன்? யாரை மிரட்டினேன்? ஆளும் சொல்லாமல் பேரும் சொல்லாமல் ‘ஷோபாசக்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுபவர்களிடம் கலாசாரக் காவலரா எனக் கேட்கிறார்’ எனக் கண்டன அறிக்கையில் புகார் சொல்லப்படுகிறது. என்னுடைய புகார் என்னவென்றால், அப்படி என்னால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்களின் சார்பில் இந்த நிமிடம்வரை எவரொருவரும் என்னிடம் பேசவில்லை என்பதுதானே. அடுத்த குற்றச்சாட்டு ‘அவருடைய சக அறிவுஜீவி கூட்டாளிகளை விட்டு அதையொட்டி கட்டுரை எழுத வைப்பது, அறிக்கை விடச் செய்வது என்று தனது செல்வாக்கை ஊடகமாக்கி, பாதிப்புக்குட்பபடுத்தப்பட்ட பெண்களையும் அவர்களுக்காக பேச வந்தவர்களையும் பிற்போக்காளர்களாக அடையாளப்படுத்தி குணக்கொலை (character assassination) செய்திருக்கிறார்’ என்பது. எனது அறிவுஜீவி கூட்டாளிகளை எப்போது எவர்மீது நான் ஏவிவிட்டேன்? இதற்காவது உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? சேறடிக்க வேண்டுமென்று இறங்கிவிட்டால் எந்த எல்லைக்கும் இறங்கிச் சேறு வீசிவிடுவீர்களா? எனது ‘அடியாள் எழுத்தாளர்கள்’ என ஒரு பட்டியல் அவ்வப்போது முகநூல் வம்பர்களால் வெளியிடப்படுவதுண்டு. இந்தப் பட்டியலில் உள்ள எழுத்தாளர்கள் ஒவ்வொரும் தங்களது எழுத்துத் திறனால் தங்களை இலக்கிய உலகில் நிறுவிக்கொண்டவர்கள். தங்களுக்கு எனத் தனித்துவமான பார்வைகளைக் கொண்டவர்கள். இலக்கியத்திற்கு எந்த மதிப்புமளிக்காத சமூகச் சூழலிலிருந்து தங்களது உழைப்பாலும் திறனாலும் எழுந்துவரும் இளம் எழுத்தாளர்களை இவ்வாறு கொச்சைப்படுத்துவது நாணயமற்றது. கண்டன அறிக்கையில் நகைச்சுவை அம்சங்களுக்கும் இடம் இருக்கக்கூடாது என்றில்லை. ஆனால், அது அசட்டு நகைச்சுவையாக இருப்பது இரசிக்கத்தக்கதல்ல. ‘தனது வயதையும், உடல் நலம் சார்ந்த பராமரிப்புக்கான தேவையையும் கூறி பெண்களிடம் கழிவிரக்கம் தேடுகின்றமை’ என்பதும் என்மீதான ஒரு குற்றச்சாட்டாம். இதை மறுப்பதென்றால் நான் மிகுந்த உடல் நலத்தோடு இருக்கிறேன் என்று மருத்துவச் சான்றிதழ் பெற்று இங்கே சமர்ப்பித்தால்தான் முடியும். வேண்டுமென்றால் அதையும் பொறுப்பாகச் செய்துவிடுகிறேன். ‘பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்ணொருவர் கூறுகையில் ஷோபாசக்தி குடிக்கு அடிமையாக இருப்பதுடன் தன்னையும் அப்பழக்கத்திற்கு ஆளாக்கிவிட முனைந்தார் என்பதாலேயே அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டதைக் குறிப்பிட்டார்’ என்றொரு கண்டனக் குற்றச்சாட்டு. இதெல்லாம் ‘குமுதம்’ கிசுகிசுவுக்கு நிகரான கண்டனம். இந்தக் கண்டனத்திற்கு என்ன பொறுப்புக் கூறுவது என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. ஒரு குடி அடிமையால் முப்பது வருடங்களாக இலக்கியத்திலும் சினிமாவிலும் இடையறாது இயங்க முடியுமா? ஒரேயொரு கிட்னியோடு முப்பது வருடங்களுக்கும் மேலாக முழுமையான தேக ஆரோக்கியத்தோடு இருக்க முடியுமா? என்றெல்லாம் நீங்களாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டியதுதான். கற்பனைக் குற்றச்சாட்டுகளுடன் கண்டன அறிக்கை வெளிவந்துவிட்டது. இனி என்ன நடக்கும்? என்மீது அரசியல்ரீதியாக நெடுங்காலமாகவே பகைமை பாராட்டிவரும் பெருமக்கள் இந்தப் பொய் அறிக்கையைப் பரப்பிச் செல்வார்கள். பாலியல் கிசுகிசுகளுக்காகவே காத்துக்கிடக்கும் முகநூல் வம்பர்கள் இதைக் காவிச் செல்வார்கள். கண்டன அறிக்கையை ஆதரிக்கிறேன் எனப் பொய் ஆதாரங்களும் பொய்ச் சாட்சியங்களும் இனி அணிவகுக்கும். அதேவேளையில் தீர ஆராய்ந்து தெளிந்து நடப்பவர்கள் இந்த அறிக்கையிலுள்ள பொய்களையும் அறிக்கையின் உண்மையான நோக்கத்தையும் தெரிந்துகொள்வார்கள். இந்த மறுப்புப் பதிவை எழுதி முடிக்கும் இந்தத் தருணத்தில் எனக்குத் தயக்கமோ வருத்தமோ ஏதுமில்லை. மாறாக, கடந்த இரண்டு வருடங்களாகவே என்மீது அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரப்பப்பட்டுக்கொண்டிருந்த அவதூறுகளுக்கு ஒட்டமொத்தமாகப் பதில் சொல்லி முடித்திருக்கும் மனநிறைவே என்னிடம் இருக்கிறது. கடைசியாக ஒன்று… இந்த அறிக்கையின் நோக்கம் என்னைப் பொறுப்புக்கூற வைப்பதுதான் என்றால், நான் பொறுப்பாக மறுப்புக்கூறி அந்த நோக்கத்தை இங்கே நிறைவேற்றி வைத்துவிட்டேன். ஆனால், அறிக்கையின் மைய நோக்கம் அதுவல்லவே. அது என்னவென்று அறிக்கை அறிவிக்கிறது: “ஷோபாசக்திக்குத் தளங்களை ஏற்படுத்திக் கொடுத்து, விருதுகளையும் அங்கீகாரத்தினையும் வழங்கிய ‘முற்போக்கு’ இயக்கங்கள், காந்தியவாதிகள், பதிப்பாளர்கள், அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்கிறது கண்டன அறிக்கை. என்னைத் தனிமைப்படுத்திச் சமூகப் புறக்கணிப்புச் செய்வது, என்னோடு தோழமை பாராட்டும் இயக்கங்களிலிருந்து என்னைப் பிரித்துவைப்பது, என்னைக் குறித்து எழுதும் ஊடகவியலாளர்களைத் தடுப்பது, எனது பதிப்பக வாய்ப்புகளைக் கெடுப்பது, என்னைத் தேடி வந்துகொண்டேயிருக்கும் சர்வதேச அளவிலான சினிமா வாய்ப்புகளுக்கு வேட்டு வைப்பது என்பவைதான் கண்டன அறிக்கையின் மைய நோக்கம். இதையெல்லாம் செய்யுமளவுக்குக் கற்பனைகளுக்கும் பொய்களுக்கும் சக்தி இருக்குமானால், முப்பது வருடங்களாக எந்த அதிகார சக்திகளுக்கும் ஆயுதங்களுக்கும் அஞ்சாமலும் பணியாமலும் எழுதிவரும் எனது எழுத்திலுள்ள நேர்மைக்கும் உண்மைக்கும் அதைவிட அதிக சக்தியுண்டு என்பதே எனது நன்நம்பிக்கை. -ஷோபாசக்தி 15.04.2025 https://www.shobasakthi.com/shobasakthi/2025/04/15/கண்டன-அறிக்கை-உண்மைகளும/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR43YTEm6EiiMBVsbEpDyij4Tlsosd_5QlFrRgQlWlYv-yjzXDyREzvslMgcxQ_aem_XMWxW8ugOe8AUcND3d66aA
-
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்– 4 BookDay11/03/2025 தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்– 4 எதிர்காலக் கதையைக் கூறி கடந்தகால, நிகழ்கால நடப்புகளைச் சாடிய நாவல் (The Handmaid’s Tale) அ. குமரேசன் கனடா நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர், கவிஞர், இலக்கியத் திறனாய்வாளர் மார்கரெட் அட்வுட் (Margaret Atwood). 18 கவிதை நூல்கள், 18 நாவல்கள் இவற்றுடன் சமூக நிலைமைகள் தொடர்பாகப் பல கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். 85 வயதில் இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறார், இலக்கிய விவாதங்களில் பங்கேற்று வருகிறார். சுற்றுச்சூழல் இயக்கத்தில் ஒரு முன்னணிச் செயற்பாட்டாளர். 1985ஆம் ஆண்டில் அவர் எழுதி வெளியிட்ட நாவல் ‘தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்‘ (The Handmaid’s Tale) (ஓரு சேடியின் கதை). பெண்களின் ஒழுக்க வாழ்வு பற்றிய வழிகாட்டல்களை விமர்சிக்கிறது, ஒழுக்க விதிகளை மீறுவதற்குப் பெண்களைத் தூண்டுகிறது, மதத்திற்கு உள்ள அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறது என்றெல்லாம் கூறி அமெரிக்காவிலும், வேறு சில நாடுகளிலும் இந்த நாவலுக்குத் தடை விதிக்கப்பட்டது. கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகள் இரண்டுமே நாவலுக்கு நிலையான தடை விதிக்க வற்புறுத்தின. அவருடைய சொந்த நாடான கனடாவில் தடை செய்யப்படவில்லை என்றாலும், பெண்ணின் உடல், பாலியல் உறவு சார்ந்த கொச்சையான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும், கட்டுப்பாடுகளை அவமதிக்கிறது என்றும் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானது. இந்தியாவில் தடை அளவுக்குப் போகவில்லை, ஆனால் சர்ச்சைகள் கிளப்பப்பட்டன. உலக அளவில் நாவலுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அந்தத் தடைகளும் எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் படிப்படியாக அடங்கிப் போயின. உண்மையில் இன்றளவும் எல்லாச் சமுதாயங்களிலும், நவீன வாழ்க்கை முறைகளிலேயே, தாண்டவமாடுகிற ஆணாதிக்க ஆணவங்களைச் சந்தியில் நிறுத்துகிறாள் ஓர் உயரதிகாரி வீட்டுச் சேடியான ஆஃப்ஃப்ரெட். வெளியானது இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில். எதிர்காலத்தில் (21ஆம் நூற்றாண்டில்) ஒரு கற்பனையான நாட்டில் (கிலியட்) நடக்கும் சர்வாதிகார ஆட்சியின் கொடுமைகளை, குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான வக்கிரங்களைப் பற்றிப் பேசுவது போல முக்காலத்திற்கும் உரிய பார்வையைப் பகிர்ந்திருக்கிறார் மார்கரெட் அட்வுட் (Margaret Atwood). ஒரு நாடு ஒற்றை மதவெறி ஆட்சியின் பிடியில் சிக்கினால் மக்கள் என்ன ஆவார்கள் என்றும் எச்சரித்திருக்கிறார். கதைக்குள் போவோம். அழிவுக்குப் பின்னால்… தடுக்கப்படாமல் அலட்சியமாக விடப்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் காரணமாக அமெரிக்க நாடு சிதைகிறது. ‘சன்ஸ் ஆஃப் ஜேக்கப்’ என்ற ஒரு கலவரக் குழு ஆட்சியைக் கைப்பற்றுகிறது. ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டுவதற்கு மாறாக, பழைய மதங்களிலிருந்து கடைந்தெடுத்த பிற்போக்குத்தனங்களை எல்லாம் எடுத்துத் தனதாக்கிக்கொண்டு, அனைத்து மதங்களையும் ஒடுக்கிவிட்டு ஒரு புதிய மதத்தை உருவாக்குகிறது. நாட்டின் அரியாசன மதம் அதுதான் என்று அறிவிக்கப்படுகிறது. சர்வாதிகாரத்திற்கே உரிய வழக்கப்படி முதலில் ஊடகச் சுதந்திரத்தை அந்த அரசு முடக்குகிறது. கடுமையான சமூக விதிகள், முக்கியமாகப் பெண்களைக் கட்டுப்படுத்தி வைக்கிற சடங்குகள் நடைமுறைக்கு வருகின்றன. பெண்கள் போராடிப் பெற்றிருந்த உரிமைகள் யாவும் விலக்கப்படுகின்றன. சட்டப்படியே எல்லாப் பெண்களும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். நாட்டின் பெண்களிலேயே உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் யாரென்றால், உயரதிகாரிகளின் மனைவிமார்கள்தான். அவர்கள் உட்பட அனைத்துப் பெண்களும் பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வகையினருக்கும் தனித்தனி நிறங்களில் சீருடைகள் கட்டாயமாக்கப்படுகிறது. அவர்களுக்கு சொத்துரிமை, பணம் வைத்திருக்கும் உரிமை, படிக்கும் உரிமை, எழுதும் உரிமை எதுவும் கிடையாது. அடிமட்டத்தில் உள்ள பெண்களுக்குக் கருவுறும் உரிமை கூடக் கிடையாது. அதிகார பீடத்திலிருந்து, எந்த ஆணுடன் ஒரு பெண் உறவுகொள்ள வேண்டும் என்று ஆணை வருகிறதோ அவனுடன்தான் அவள் செல்ல வேண்டும், அவனால் உருவாகும் கருவைத்தான் சுமக்க வேண்டும், பெற்றுத் தர வேண்டும். அப்படிப்பட்ட நிலைமையில் வைக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு ‘ஹேண்ட்மெய்ட்’ என்று பெயர். தமிழில் சேடி, பணிப்பெண், வேலைக்காரி, பெண் கையாள் என்று சொல்லலாம். அப்படியொரு சேடிதான் ஆஃப்ஃப்ரெட். ஏற்கெனவே திருமணமாகிப் பிரிந்துவிட்ட ஒருவனோடு வாழ விரும்பி, தன் மகளுடன் ஊரை விட்டு வெளியேற முயலும்போது பிடிபட்டுவிடுகிறாள். அவளையும் சிறுமியையும் பிரிக்கிறார்கள். அவள் விபச்சாரம் செய்ததாகக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைக்கிறார்கள். யாருடன் தப்பிக்க முயன்றாளோ அவன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. புதிய சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்ட பெண் மரண தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் அல்லது அரசாங்கம் சொல்கிறபடி யாருடைய வீட்டிலாவது சேடியாக வேலை செய்ய வேண்டும். அவளுடைய உண்மையான பெயர் மறைக்கப்பட்டு, யாருடைய வீட்டுக்கு அனுப்பப்படுகிறாளோ அவனுடைய பெயருடன் “ஆஃப்” என்ற முன்னொட்டு சேர்த்து அழைக்கப்படுவாள். உயிரோடு இருந்தால்தான் மகளைக் கண்டுபிடிக்க முடியும், இப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிற மற்ற பெண்களுக்கும் உதவ முடியும். ஆகவே ஆஃப்ஃப்ரெட் அதை ஏற்கிறாள். குழந்தை பிறக்காதவனான, கமாண்டர் எனப்படும் ஓர் உயரதிகாரியின் வீட்டுக்கு அனுப்பப்படுகிறாள். அவனுடைய பெயர் ஃப்ரெட். ஆனவே இவளுடைய பெயர் ஆஃப்ஃப்ரெட். அவனுடைய மனைவிக்குத் தனது உடலில் குறையா அல்லது அவனிடம் குறைபாடா என்று தெரியாத நிலையில் இவளைக் கணவனின் இருப்பிடத்திற்கு ஒரு சடங்குக்காக அனுப்பி வைக்கிறாள். உண்மையில் அது வக்கிரமான வல்லுறவு ஏற்பாடுதான், ஆனால் சடங்கு என்பதாக அமைத்திருக்கிறார்கள் அதிகார பீடத்தினர். ஆஃப்ஃப்ரெட் தனது கடந்த கால நினைவுகளுடன் வாழ்கிறாள். கணவன், மகள், நண்பர்களின் நினைவுகள் அவளை வாட்டுகின்றன. அவள் கிலியட் நாட்டின் கொடுமையான வாழ்க்கை முறையை எதிர்த்துப் போராட முடிவு செய்கிறாள். அதற்காக மற்ற சேடிகளுடன் ரகசியத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்கிறாள். ஆஃப்க்ளென் என்ற சேடி ஒத்தாசையாக இருக்கிறாள். ஏற்கெனவே நாட்டில் ஆட்சிக்கு எதிரான சில குழுக்கள் ரகசியமாகச் செயல்படத் தொடங்கியிருக்கின்றன. அவர்களோடும் இவள் தொடர்பு கொள்கிறாள். சுதந்திரத்தை மீட்கத் துடிப்போரின் நம்பிக்கையையும் மரியாதையையும் பெறுகிறாள். கமாண்டர் இவள் மீது மோகம் கொண்டவனாகத் தனிப்பட்ட முறையில் சந்திக்கிறான். அவளைப் பயன்படுத்திய பின்பு பாலியல் விடுதியில் அவளைத் தள்ளிவிடத் திட்டமிட்டிருக்கிறான். அரசாங்கத்திற்குத் தெரியாமல் இப்படிச் சந்திப்பதும் சட்டவிரோதம். அவனுடைய மோகத்தைப் பயன்படுத்திக்கொண்டு அதிகார அமைப்புகள் பற்றிய தகவல்களை அவனிடமிருந்து கறக்கிறாள் ஆஃப்ஃப்ரெட். மகளை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று எதையும் செய்யத் துணிகிறாள். இதனிடையே, கமாண்டரின் உதவியாளனான நிக் என்பவனுக்கும் இவளுக்கும் இடையே ஒரு நேசம் உருவாகிறது. ஆஃப்க்ளெய்ன் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வருகிறது. இவளுக்குத் தானும் செத்துப் போவதா அல்லது எப்படியாவது தப்பிப்பதா என்ற குழப்பம் ஏற்படுகிறது. நிக் உண்மையிலேயே நம்பக்கூடியவனா அல்லது அரசாங்கத்தின் கையாளா என்ற சந்தேகமும் தோன்றுகிறது. திடீரென ‘கடவுளின் கண்கள்’ என்ற படைப் பிரிவினர் ஆஃப்ஃபிரெட்டைக் கைது செய்கிறார்கள். வெளியே கொண்டுசெல்லப்படும்போது அவளை நெருங்கும் நிக், தன்னை நம்புமாறு கேட்டுக்கொள்கிறான். வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு வாகனத்தில் ஏறச் சொல்கிறார்கள். தயங்கினாலும் பிறகு துணிந்தவளாக வாகனத்தில் ஏறுகிறாள். அதற்கப்புறம் என்ன ஆகிறது என்று நாவல் சொல்லவில்லை. அந்த வாகனம் அவளைத் தண்டனைக் கூடத்திற்குக் கொண்டு செல்ல வந்ததா அல்லது தப்பிப்பதற்காக நிக் செய்த ஏற்பாடா, அவன் தன் மகளைக் கண்டுபிடித்தாளா, மற்ற பெண்கள் என்ன ஆனார்கள் என்ற பல கேள்விகள் சூழ்கின்றன. எதிர்காலக் கற்பனை நாடு ஒன்றில் தொடங்கிய நாவல், எதிர்காலக் கற்பனை மாநாடு ஒன்றில் நிறைவடைகிறது. 2195ஆம் ஆண்டில் நடைபெறும் அந்த மாநாட்டில் ஒரு ஆய்வாளர், “இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய, அக்காலத்துத் தொழில்நுட்பம் சார்ந்த ஒலிப்பேழை ஒன்று ஆராய்ச்சியில் கிடைத்திருப்பதாகவும், அதில் ஆஃப்ஃபிரெட் என்ற பெண் தன் கதையைப் பதிவு செய்திருக்கிறாள்,” என்றும் அறிவிக்கிறார். அவளுக்கும் அவளைச் சேர்ந்தவர்களுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதை அவரும் ஊகமாகவே முன்வைக்கிறார். நிகழ்கால உண்மைகள் நாவல் பற்றிய கருத்தரங்குகளில் மார்கரெட் அட்வுட் (Margaret Atwood), கதையில் வரும் நிகழ்வுகள் காலங்காலமாகப் பெண்கள் சந்திக்கிற அவலங்களின் சித்தரிப்புதான் என்று கூறியிருக்கிறார். பெண்களின் சுதந்திரத்தை மிதித்து நசுக்கும் மதங்களின் கட்டுப்பாடுகளோடு கலந்து தொடர்கிற ஆணாதிக்க வன்மங்களைச் சொல்வதற்குக் கற்பனையான எதிர்காலம் உதவியாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இன்று பல மதங்களில் பெண்கள் பற்றிய பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்று அங்கீகரிக்கிற அவர், அந்த மாற்றம் மேலும் வலுப் பெறுவதற்கு இப்படிப்பட்ட படைப்புகள் உதவும் என்ற நம்பிக்கையையும் பகிர்ந்திருக்கிறார். ‘தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்’ (The Handmaid’s Tale) நாவலுக்கு பல முக்கியமான விருதுகள் கிடைத்துள்ளன. கனடாவின் முக்கிய இலக்கிய விருதுகளில் ஒன்றான கவர்னர் ஜெனரல் விருது (1985), சிறந்த அறிவியல் புனைகதைக்கான ஆர்தல் சி. கிளார்க் விருது (1987), காமன்வெல்த் இலக்கிய விருது (1987), ‘லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையின் புனைகதை விருது (1986) ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். பல நாடுகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும், இளையோருக்கான படக்கதைப் புத்தகங்களாகவும் ஆஃப்ஃப்ரெட் உலகம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறாள். 2019ஆம் ஆண்டில் இதன் இரண்டாவது பாகமாக ‘தி டெஸ்டமென்ட்ஸ்’ (சாட்சியங்கள்) வெளியானது. கிலியட் நாடு பிறகு என்ன ஆனது எனக் கூறும் அந்த நாவல் புக்கர் பரிசைப் பெற்றது. முதல் பாகம் புக்கர் பரிசுக்கான பரிந்துரையை மட்டும் பெற்றது. பின்னர், 2000ஆவது ஆண்டில், குடும்ப ரகசியங்கள் பற்றிப் பேசும் ‘தி பிளைண்ட் அசாசின்’ (கண்மூடித்தனமான கொலையாளி) புக்கர் பரிசைப் பெற்றது. ‘தி டெஸ்டமென்ட்ஸ் மூலமாக, இரண்டு முறை அந்தப் பரிசைப் பெற்ற படைப்பாளிகளின் வரிசையில் இவரும் சேர்ந்தார். https://bookday.in/books-that-overcame-obstacles-series-4-written-by-a-kumaresan/
-
வர்த்தகப் போர்; போயிங் விமானங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது
வர்த்தகப் போர்; போயிங் விமானங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது April 16, 2025 12:27 pm சீனா மீது கடும் வரிகளை விதித்து வர்த்தகப் போரை தொடங்கி வைத்துள்ள அமெரிக்காவிற்கு எதிராக சீனா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க நிறுவனமான போயிங் தயாரித்துள்ள விமானங்களை சீன விமான நிறுவனங்கள் வாங்கக்கூடாது என்று சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. விமானங்களைத் தவிர, விமான பாகங்கள் மற்றும் கூறுகளும் விலை அதிகமாகியுள்ளது. முன்னதாக சீனாவின் ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் ஆகியவை 2025 மற்றும் 2027 க்கு இடையில் 179 போயிங் விமானங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த விமானங்களை வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையை தடையைத் தொடர்ந்து, சீன நிறுவனங்கள் ஐரோப்பிய நிறுவனமான ஏர்பஸ் மற்றும் சீன உற்பத்தியாளர் கோமாக் ஆகியவற்றை நம்பியிருக்க வேண்டியிருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளார். இதனிடையே, சீனாவின் தடை அமெரிக்க பங்குச் சந்தையில் போயிங் நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. பங்கு விலை மூன்று சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ளது. எவ்வாறாயினும், சீனாவின் அறிவிப்பு உலகளாவிய விநியோகச் சங்கிலி கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்களை வாங்குவதில் சிரமப்படும் இந்திய விமான நிறுவனங்களுக்கு உதவக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீன நிறுவனங்கள் தற்போது 100 போயிங் விமானங்களை வாங்குவதற்கு தயாராகியிருந்தது. எனினும், சீனாவின் தடை காரணமாக அந்த விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஆகாசா ஏர் நிறுவங்கள் வாங்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “ சீன விமான நிறுவனங்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட இந்த விமானங்களில் சில இந்திய நிறுவனங்களுக்கு திருப்பி விடப்படும் என்று விமானத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். https://oruvan.com/trade-war-china-bans-boeing-planes/