Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. இந்திய அரசியல் நாடகத்தை கவனித்தல் இந்தியாவிடம் இருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய, கற்கத் தவறிய விடயங்கள் பற்றி பலரும் சிந்திக்கிறார்கள். இருந்தாலும், இப்போதும் இந்தியாவையே தங்களுடைய அரசியல் தீர்வுக்காக நம்பியும் இருக்கின்றனர். அதே நேரத்தில், சிங்களவர்களும் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன என்பதை மறந்தும் விடுகின்றனர். ஏனென்றால், தமிழர்களுடைய விடயத்தில் அவர்கள் இந்தியா தமக்குச் சார்பான நிலைப்பாட்டிலேயே இருக்கிறது . என்பதால் அது மறுக்கப்படுவதாக இருக்கிறது என்பதே யதார்த்தம். உலக நடைமுறைகள், மாற்றங்களுக்கு ஏற்ப தமிழ்த் தேசிய அரசியல் கட்டமைக்கப்படாமையும், மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாமையும், அனுசரிக்காமையும்தான் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் இதுவரையில் நிறைவேறா ஒன்றாக இருந்து வருவதற்கு காரணமாகும். கடந்த வார இறுதியில் நடைபெற்ற இந்திய பிரதமரின் இலங்கை வருகை விட்டுச் சென்றிருப்பதும் இதனையே ஆகும். 2024 செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையைப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார். அவருக்கு இலங்கை மித்ர விபூஷண் விருதை இலங்கை வழங்கியிருக்கிறது. அபிவிருத்தி ஒத்துழைப்பு, பொருளாதார உறவுகள், பாதுகாப்பு உறவுகள், நல்லிணக்கம், இந்திய இலங்கை மீனவர் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் மீளாய்வு செய்து கொண்டனர். அதே நேரத்தில், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் இந்தியா தொடர்ந்து உதவுவதற்குப் பிரதமர் உறுதியளித்திருந்தார். அந்த வகையில் ஜனாதிபதி அனுரகுமார பொருளாதார ஸ்திரம் குறித்துப் பேசிய கருத்து இந்த இடத்தில் அடிபட்டுப் போனது. எரிசக்தி மின்சார துறைகளுக்கான உதவிகள், சம்பூர் சூரிய மின்சக்தி திட்ட நிர்மாணப் பணிகளின் ஆரம்பிப்பு மற்றும் பல்வேறு அபிவிருத்தி ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகியுள்ளன. இதற்கிடையில் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது விடுபட்டுப் போன இலங்கைத் தமிழர்கள் விவகாரம் குறித்து இந்தியப் பிரதமர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. இந்தியப் பிரதமரின் ஊடக அறிக்கையில், இலங்கை அரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என்றும் இலங்கை அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தியப் பிரதமரின் அபிவிருத்தி, இந்திய மீனவர் பிரச்சினை போன்ற பல்வேறு கருத்துக்களுக்கு பதிலளித்திருக்கிற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமிழர்களுடைய அரசியல் அபிலாசை, மாகாண சபை; தேர்தல் போன்ற விடயங்கள் குறித்து ஒரு வார்த்தையேனும் பகரவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும். இந்தியப் பிரதமர் வட கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்திருக்கிறார். மலையக அரசியல் தலைவர்களைச் சந்தித்திருக்கிறார். பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருக்கிறது. இருந்தாலும், தமிழரது அரசியல், தமிழ் அரசியல் தரப்பினருடைய நிலைப்பாடுகள் காரணமாக இறுக்கமான முடிவுகளுக்கு உரியதாக இல்லை என்ற குறைபாடே காணப்படுகிறது என்று கொள்ளலாம். ஜே.வி.பியைத் தலைமையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் மாற்றம் என்கிற அலையில் வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய அரசியல் அடிபட்டுப் போனது எல்லோருக்கும் வெளிப்படையானது. இந்த நிலையில், உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கடந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே அனுரகுமார திசாநாயக்கவை இந்தியா, புதுடெல்லிக்கு அழைத்துப் பேசியது. அது அவர்களுக்கு மேலும் ஒரு சக்தியைக் கொடுத்திருந்தது. இதனையடுத்து, அனுரகுமார ஜனாதிபதியானதும் முதல் விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டார். இப்போது உள்ளூராட்சித் தேர்தல் நடக்கவுள்ள சூழலில் இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வந்திருக்கிறார். அது கூடவும் அவர்களுக்குச் சாதகமாகவே அமையும். அதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. வடக்குக் கிழக்கில் உருவாகியிருக்கின்ற தமிழ்த் தேசிய அரசியல் வெறுப்பு என்கிற பாதகத்தை விளங்கிக் கொள்ளாத தமிழ்த் தேசிய அரசியல் கட்சியினர் இப்போதும் தமது வெறுப்புணர்வுகளையும், வெப்பு சாரங்களையும் கோப தாபங்களையும், இறுமாப்புகளையும், வெட்டுக்குத்துக்களையுமே வெளிப்படுத்தியே வருகின்றனர். உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் கூட இவ்வாறான சிந்தனைகளும் செயற்பாடுகளும் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினரிடம் காணப்படுவது நல்லவிதமான முன்னேற்றத்தைக் கொடுக்கப்போவதில்லை. அது தமிழர்களின் அபிலாசை நிறைவேற்றத்துக்கு எதிரான நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தும். இது தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பாதகமானது.வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் போராட்ட இயக்கங்களிடையே இருந்த ஒற்றுமை சீர்குலைவை தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிரான சக்திகளை உருவாக்கிக் கொண்டது. அதே நேரத்தில், அண்டை நாடான இலங்கையின் இனப்பிரச்சினை தமக்குச் சாதகமான மாற்றிக் கொண்டது. பயன்படுத்தவும் ஆரம்பித்தது. அது இந்தியாவுக்கு அதிக பயனையே கொடுத்தது எனலாம். எப்போதும் இந்தியா கைக்கொள்ளும் தமக்குச் சாதகமான ஆட்சிகளையே வைத்துக்கொள்ளல் நிலைப்பாடு ஒவ்வொரு நாட்டிலும் வாய்ப்பதில்லை. ஆனால், நாடி பிடிப்புக்காக அனுரகுமாரவை இந்தியாவுக்கு அழைத்ததன் காரணமாக இப்போது ஒரு சிறப்பான நட்பு அரசாங்கமாக அதனைப் பயன்படுத்துகிறது என்று கூறலாம். அது இலங்கை மித்ர விபூஷண் இந்தியப் பிரதமருக்கு வழங்கும் அளவுக்கு நிலைமை ஏற்படுத்தியிருக்கிறது. தாங்கள் தவறு செய்துவிட்டோமோ என்று தலையில் கை வைக்காமல் அதனையே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலே இப்போது நடைபெறுகிறது. இது இலங்கைக்கும் பொருந்தும். இந்த இடத்தில்தான், தமிழ்த் தேசிய அரசியலின் ஒற்றுமை முக்கியம் உடையதாக இருக்கிறது. இலங்கையில் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கு வெறுமனே புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்புத் திருத்தம் தீர்வாக அமைந்து விடப் போவதிதில்லை. இதய சுத்தியுடனான அதிகாரப் பகிர்தல் ஒன்று நடைபெற வேண்டும். அதற்குச் சிங்கள அடிப்படைவாதம் இடம் கொடுக்க வேண்டும். அது ஒற்றையாட்சியை உடைய இலங்கையில் ஒருபோதும் சாத்தியமில்லை.இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடா கொள்கையை கடைபிடித்து வரும் இந்தியா தம்முடைய முழுமையான பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தைக் கூட முழுமையாக அமல்படுத்துங்கள் என்று அழுத்தம் கொடுப்பதில்லை. ஆனால், இலங்கை அரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றம், இலங்கை அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துதல், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துதல் என்பவை 13ஆவது திருத்தத்தையே சுட்டி நிற்கிறது என்ற வகையில் இந்தியா ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்பது தெரிகிறது. இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியப் பிரதமரின் இக்கருத்து தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும். இருந்தாலும் தமிழ் அரசியல் தலைவர்களிடம் இல்லாத ஒற்றுமை காரணமாக அதன் பயன் முழுமையாகத் தமிழர்களுக்குக் கிடைக்காது என்றே சொல்ல வேண்டும். ஈழத்தமிழர்களின் நியாயமான உரிமைகளை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிற தமிழர்கள் தமிழரின் பாரம்பரிய பூமியான வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலேனும் குறைந்தது ஒரு சமஷ்டி முறையிலான ஆட்சி முறையை அமைப்பது தொடர்பில் இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளுமாக இருந்தால் சிறப்பு. அவ்வாறானால், ஒருமித்த தமிழர் நிலைப்பாடு ஒன்றுக்குத் தமிழ்த் தரப்பு வருதல் முக்கியமாகும். அதே நேரத்தில் தமிழ் மக்களின் நிலைப்பாடுகளைப் புரிந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியலின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய்தல் உடனடியாக நடைபெற வேண்டும். அதற்குக் காலம் தாழ்த்துதல் கூடாது. பூனைக்கு மணி கட்டுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதனைக் கட்டாது தவறவிட்டால் இறுதியில் பூனையைத் தேட வேண்டி ஏற்படலாம். இங்கு நடைபெற்ற யுத்தத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்த இந்தியா தமிழீழ விடுதலைப் போரை நசுக்குவதிலும், இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் காரணமாக அமைந்திருந்தது, அதனால் தான், போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் மூலம் சட்டத்தின் முன் நிறுத்தக் கோரி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் புலம்பெயர் மக்களின் நீதிக்கான போராட்டங்கள் ஊடாக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியா தான் அதை நீர்த்துப் போகச் செய்தது. இன்னொரு விதத்தில். இந்தியா வல்லாதிக்கம் அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவதாக அமைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளல் முக்கியம். லக்ஸ்மன் https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்திய-அரசியல்-நாடகத்தை-கவனித்தல்/91-355182
  2. எமது இறக்குமதி வரி விதிப்பை மீட்டுப் பார்க்க வைக்கும் ட்ரம்பின் வரி விதிப்பு ச.சேகர் சில மாதங்களாக பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் சர்வதேச இறக்குமதி வரி விதிப்பு பற்றி, கடந்த வாரம் அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்ததை தொடர்ந்து, உலகம் முழுவதும் பல தளம்பல்களை அவதானிக்க முடிந்திருந்தது. உலக பொருளாதார வல்லரசாக அறியப்படும் அமெரிக்கா, உலக நாடுகளுடன் வணிகங்களை மேற்கொண்டு வரும் நிலையில், தொடர் சங்கிலி முறை அடிப்படையில் உலகின் சகல நாடுகளும் பெருமளவில் இந்த வரி விதிப்பின் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளன. அமெரிக்காவின் பிரதான எதிரியாக கருதப்படும் சீனா, இந்த வரி விதிப்புக்கு எதிராக, தாமும் அமெரிக்க பொருட்கள் இறக்குமதிக்கு வரி விதிப்பை அதிகரிக்கவுள்ளதாக பதிலடி கொடுக்கும் வகையில் அறிவித்துள்ளது. இந்த வரிசையில் எமது நாட்டுக்கு என்ன நடந்தது என்பதை பார்த்தால், அமெரிக்கா இலங்கைக்கு 44சதவீதம் வரி விதிப்பை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மேற்கொள்கையில், அமெரிக்க அதிபர், இலங்கையினால் அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியின் அளவு பற்றி ஏளனமாக குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கை 88 சதவீத வரிவிதிப்பை கொண்டுள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு அதிகளவு இறக்குமதி வரி விதித்துள்ள நாடுகள் வரிசையில் இலங்கை உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளது. இலங்கையின் சர்வதேச விவகாரங்களில் அவதானம் செலுத்தியவர்கள் ஓரளவு உறக்க நிலையில், அல்லது இலங்கைக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்று துளியளவிலும் சிந்தித்துக்கூட பார்க்காத நிலையில் இருந்திருப்பார்கள் போலும். ஏனெனில், அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகிய கடந்த வியாழக் கிழமை காலைப் பொழுதில், நாட்டின் வணிகத் துறை அமைச்சர் முதலில் ஊடகங்களுக்கு வெளியிட்ட தகவலில், இலங்கைக்கு இதனால் பெருமளவில் பாதிப்பு ஏற்படாது என்பதைப் போன்றதொரு கருத்தைக் குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களில் ஒருவராக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் அமைச்சர் ஒருவர் குறிப்பிடுகையில், இந்த வரிவிதிப்பு இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இது பற்றி அமெரிக்காவுடன் கலந்துரையாட நாம் தயாராக இருக்கிறோம். அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது தற்போது அறவிடப்படும் 88 சதவீத வரியை நீக்குவது அல்லது அதனை ஒற்றை இலக்க பெறுமதி வரை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அரசாங்கமும் இந்த வரி விதிப்பால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராய நிபுணர் குழுவொன்றை நியமித்திருந்தது. உண்மையில் இந்த வரி விதிப்பினால் இலங்கையின் நிலை என்ன? என்ன நடக்கப்போகிறது? அமெரிக்காவுக்கு இலங்கையிலிருந்து அதிகளவில் என்ன ஏற்றுமதி செய்யப்படுகிறது? இவ்வாறான கேள்விகளுக்கான பதில்களை பார்க்கும் போது, இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 20 – 25 சதவீதமானவை அமெரிக்காவுக்கு செல்கின்றன. அதில் ஆடை உற்பத்திகள் முதலிடம் பெறுகின்றன. குறிப்பாக, பெண்களுக்கான உள்ளாடைகள் மற்றும் விளையாட்டுகள், உடற்பயிற்சிகளின் போது அணியும் ஆடைகள் இதில் அதிகம் அடங்கியுள்ளன. அதனைத் தொடர்ந்து, வாகன டயர் வகைகள் போன்ற இறப்பர் உற்பத்திகள், கருவா போன்ற வாசனைத்திரவியங்கள் மற்றும் சில விவசாய உற்பத்திகள் ஏற்றுமதியாகின்றன. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பண்டங்களின் பெறுமதி சுமார் 300 – 400 மில்லியன் டொலர்களாக அமைந்திருந்த போதிலும், இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பண்டங்களின் பெறுமதி 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளன. இந்த வரி விதிப்பின் காரணமாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பண்டங்களின் விலைகள் பெருமளவு அதிகரிக்கும். இதனால் அமெரிக்கர்களின் இறக்குமதி நுகர்வு குறைவடையும். இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பண்டங்கள் அத்தியாவசியமற்ற பொருட்களாக அமைந்திருப்பதன் காரணமாக, அவற்றை நுகர்வதை அந்நாட்டு மக்கள் குறைக்கலாம். இதனால் அமெரிக்காவுக்கான இலங்கையின் ஏற்றுமதி வீழ்ச்சியடையும். ஆடைகள் ஏற்றுமதியில் இலங்கைக்கு போட்டியாளராக திகழும் பங்களாதேஷை எடுத்துக்கொண்டால், அந்நாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியின் அளவு இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ளதை விட குறைவானதாக அமைந்துள்ளது. அதுபோன்று, இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்பனவும் குறைவானதாக அமைந்துள்ளது. இந்நிலையில், ஆடை இறக்குமதியில் இலங்கையின் தயாரிப்புகள் மீதான விலை பெருமளவு அதிகரிப்பதன் காரணமாக, பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நுகரும் தன்மை அங்கு அதிகரிக்கும். இதனால் இலங்கையின் ஏற்றுமதி குறைவடையும். இதனால், இலங்கையில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உற்பத்தியில் ஈடுபடும் ஆடைத் தொழிற்சாலைகளுக்கு கிடைக்கும் ஓடர்கள் வெளிநாடுகளுக்கு மாற்றப்படலாம். அதனால், உள்நாட்டில் ஆடைத் தொழிற்துறையில் பணியாற்றுவோருக்கு வேலை வாய்ப்புகள் இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம். இலங்கை ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, அதிலிருந்து மீண்ட வண்ணமுள்ளது. அந்நியச் செலாவணி இருப்பு, வரத்து என்பது இலங்கைக்கு கண்டிப்பான தேவையாக அமைந்துள்ளது. ஆடை உற்பத்தி தொழிற்துறை என்பது, இலங்கைக்கு அந்நியச் செலாவணியை தேடித்தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. அதில் சுமார் 20 முதல் 25 சதவீதம் பாதிப்படையும் என்பது, நாட்டின் பொருளாதாரத்தில் உணரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, அமெரிக்க டொலரின் பெறுமதி தற்போது பேணப்படும் சராசரி 300 ரூபாய் எனும் பெறுமதியிலிருந்து அதிகரிக்கக்கூடிய நிலை எழும். இதனால் ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கூட உள்நாட்டில் அதிகரிக்கும் சூழல் ஏற்படும். இன்னும் எளிமையாக குறிப்பிடுவதானால், இலங்கை வருமானமாக பெறும் 5 அமெரிக்க டொலர்களில் 1 அமெரிக்க டொலர் அமெரிக்காவிலிருந்தே இலங்கைக்கு வருகிறது. இவ்வாறான சூழலில், எமது இறக்குமதி வரி முறைமை தொடர்பில், பாராளுமன்றத்தில் பெரும்பாண்மையை கொண்டுள்ள இந்த அரசாங்கத்தினால் மீண்டும் கவனம் செலுத்தக்கூடிய ஒரு சிறந்த காலப்பகுதி எழுந்துள்ளது. அமெரிக்காவுடன் வரி விதிப்பு பற்றி பேச முன்வந்துள்ள இந்த அரசாங்கம், தற்போது அமுலிலுள்ள இலங்கைக்கான ஒட்டு மொத்த இறக்குமதி வரி முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும். அரசாங்கத்தின் கடந்த கால தேர்தல் வாக்குறுதியிலும் புதிய இறக்குமதி வரிக்கொள்கை அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் இப்போது மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம். இறக்குமதி வரி குறைக்கப்படுவதுடன், அவை எளிமைப்படுத்தப்பட வேண்டும். சுங்க வரிக்கு மேலதிகமாக அறவிடப்படும் CESS, PAL போன்ற இதர வரிகள் அகற்றப்பட்டாலே, இறக்குமதி வரி குறைந்துவிடும். விதிக்கப்படும் இறக்குமதி வரி உறுதியான பெறுமதிகளாக, இலகுவாக பின்பற்றக்கூடியதாக இருத்தல் வேண்டும். சாதாரணமாக, இறக்குமதிகளில் ஈடுபடுவோருக்கு இலங்கையின் இறக்குமதி வரி விதிப்பு எந்தளவு சிக்கல்கள் நிறைந்தது என்பது நன்கு தெரியும். இதனூடாக உள்நாட்டில் சுங்க வரித் திணைக்களத்தில் நடைபெறும் மோசடிகள், ஊழல்களையும் தவிர்த்துக் கொள்ளலாம். அந்த உறுதியான தீர்மானத்தை இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இலங்கையின் இறக்குமதி வரி நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை பாதிக்கிறது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பதால், தரமான தயாரிப்புகளை தமது தேவைகளில் பயன்படுத்தும் உரிமை மக்களுக்கு மறுக்கப்படுவதுடன், தெரிவுகளும் குறைந்து, விலையில் குறைந்த, தரத்திலும் குறைந்த தயாரிப்புகளுக்கு மக்கள் நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில், இறக்குமதி வரியினூடாக, அரசாங்கத்துக்கு வருமானம் கிடைக்கிறது, அதனை குறைப்பதால் அல்லது நீக்குவதால், அரசின் வருமானம் குறையும் என பிரதிவாதங்கள் எழுந்தாலும், மக்களின் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கும் போது, மக்கள் மீது நேரடியாக வரி அறவிட்டு, இழந்த தொகையை சீர் செய்து கொள்ளலாம். நாட்டின் ஏற்றுமதிக்காக அமெரிக்கா தவிர்த்து மாற்று நாடுகளை உடனடியாக நாட வேண்டிய தேவை இலங்கைக்கு நிலவுகிறது. இதனை அரசாங்கத்தினால் நேரடியாக மேற்கொள்ள முடியாவிடினும், அதற்கான உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கலாம். எவ்வாறாயினும், அமெரிக்க ஜனாதிபதி தாம் விதித்துள்ள இந்த வரியை மீள்பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திச் சேவைகள் குறிப்பிட்டுள்ளமை ஒருவிதமான நேர்த்தியான சமிக்ஞையை வழங்கியிருந்தாலும், அமெரிக்காவுடன் இலங்கை பேச்சு வார்த்தைக்கு செல்லும் முன்னர், அமெரிக்க பொருட்களுக்கு இலங்கை விதித்துள்ள வரியை நீக்கி அல்லது அதில் கணிசமான குறைப்பை மேற்கொண்டு, அந்த தகவலுடன் பேச்சு வார்த்தைக்கு சென்றால், சாதகமான பெறுபேற்றை பெறக்கூடியதாக இருக்கும் என்பது எமது அவதானிப்பாக உள்ளது. https://www.tamilmirror.lk/வணிகம்/எமது-இறக்குமதி-வரி-விதிப்பை-மீட்டுப்-பார்க்க-வைக்கும்-ட்ரம்பின்-வரி-விதிப்பு/47-355170
  3. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு சபைகளுக்கே வாக்காளர் அட்டைகள்! நீதிமன்ற அறிவுறுத்தலின் பின்பே ஏனையவற்றுக்கு விநியோகம் தபால் மூல வாக்காளர் அட்டைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இரு உள்ளூராட்சிச் சபைகளுக்கு மட்டுமே தற்போது தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. ஏனைய உள்ளூராட்சிச் சபைகள் தொடர்பான நீதிமன்றங்களின் அறிவுறுத்தல்கள் கிடைத்ததும் தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன என்று யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன் தெரிவித்தார். உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளவுள்ளது. தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் தபால் மூல வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுமுதல் ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தபால் மூல வாக்காளர் அட்டை விநியோகத்துக்காக அவற்றை தபால் திணைக்களத்திடம் கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பருத்தித்துறை நகர சபை மற்றும் வேலணை பிரதேச சபை ஆகியவற்றுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகளே இன்று விநியோகிக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 64 பேர் தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், இன்று 768 தபால் மூல வாக்காளர் அட்டைகளே விநியோகிக்கப்படவுள்ளன. பருத்தித்துறை நகர சபையில் 463 பேரும், வேலணை பிரதேச சபையில் 305 பேரும் தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர். ஏனைய உள்ளூராட்சிச் சபைகள் தொடர்பாக நீதிமன்றங்களின் அறிவுறுத்தல்கள் கிடைத்த பின்னர் அவற்றுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார். https://newuthayan.com/article/இரண்டு_சபைகளுக்கே_வாக்காளர்_அட்டைகள்!
  4. GMT நேரப்படி நாளை திங்கள் 07 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 20) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI எதிர் RCB 17 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் 06 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சுவி சுவைப்பிரியன் ரசோதரன் நுணாவிலான் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  5. கூல் டவுன் ப்ரோ! எல்லா விரல்களும் ஒரே மாதிரி இல்லைத்தானே.. நல்லா இல்லா விடயங்களை ஏன் நல்லா இல்லை என்று சொல்லவேண்டும்.. எழுதுபவர்களுக்காக இல்லை என்றாலும் வாசிப்பவர்களுக்காக செய்யவேண்டும்.. கிரிக்கெட் போட்டியில் 19 போட்டிகளில் 10 புள்ளிகளுக்கு மேல் அரங்கமுடியாமல் நிற்பவர்களிடம் இருந்து கனல் பறக்கும் வசனங்கள் வந்தால் அதை passion என்று பார்க்கவேண்டும்😀
  6. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 19வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடத் திணறி விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்ததனால் இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. மொஹமட் சிராஜ் 17 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி இரு விக்கெட்டுகளை 16 ஓட்டங்களில் இழந்திருந்தாலும், சுப்மன் கில்லின் அதிரடியுடன் ஆட்டமிழக்காமல் பெற்ற 61 ஓட்டங்களுடனும், பந்துகளை எல்லைக்கோட்டைத் தாண்டி பறக்கவைத்த வாஷிங்டன் சுந்தரின் 49 ஓட்டங்களுடனும் 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @suvy ஐயா தொடர்ந்தும் முதல்வராக நிலைக்கின்றார். கூடவே @நந்தன் உம் இரண்டாம் இடத்தில் சமமான புள்ளிகளுடன் நிற்கின்றார்.
  7. நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா? 6 Apr 2025, 11:59 AM சென்னையை அடுத்துள்ள காட்டங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கம் நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். Seeman meets Nirmala Sitharaman இந்தநிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்து பேசியதாக தவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முரண்பட்டு வரும் செங்கோட்டையன், ஏற்கனவே டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்தநிலையில், நேற்று மீண்டும் சந்தித்து பேசியுள்ளார். இதேபோல, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கே.சி.பழனிசாமி கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் நிர்மலா சீதாராமனை சந்தித்து 2026 கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது. இந்தநிலையில், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு சீமான் அளித்துள்ள பேட்டியில், “நான் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசவில்லை. ஒருவேளை நான் சந்தித்திருந்தால் வெளிப்படையாக சொல்லப்போகிறேன். அதில் எனக்கு எந்த ஒரு தயக்கமோ பயமோ இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்தியை வேட்பாளராக நியமிக்கப்போவதாக ஊடகங்களில் நேற்று செய்தி வெளியீட்டீர்கள். நான் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போகிறேன் என்றால் வேட்பாளரை ஏன் அறிவிக்கப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 6) தமிழகம் வந்துள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் நடத்திய அடுத்தடுத்த சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. https://minnambalam.com/does-seeman-meets-nirmala-sitharaman/
  8. முல்லைத்தீவு – புலிபாய்ந்தகல் பகுதியில் அத்துமீறி வாடி அமைக்கும் சிங்கள மீனவர்கள்! April 6, 2025 முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் – புலிபாய்ந்தகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் சில வாடிகளை அடாவடித்தனமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் கடந்த வருடமும் அத்துமீறி குறித்த பகுதியில் வாடி அமைப்பதற்கு சில பெரும்பான்மையின மீனவர்கள் முயற்சி மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி மீனவர்கள் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் இணைந்து குறித்த அத்துமீறல் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியிருந்தனர். இத்தகைய சூழலில் மீளவும், புலிபாய்ந்தகல் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த சில சிங்கள மீனவர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடமோ, கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணிப் பிரிவிடமோ எவ்வித அனுமதிகளையும் பெறாது அத்துமீறி வாடிகளை அமைத்துள்ளனர். அத்துடன் அவர்களின் மீன்பிடிப் படகொன்றும் அனுமதி பெறப்படாமல் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொக்குத்தொடுவாய் கடற்றொழிலாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று அப்பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தென்னிலங்கை மீனவர்களால் அத்துமீறி வாடி அமைக்கப்பட்டமை தொடர்பில் கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இதன்படி, அனுமதிகள் எவையும் பெறப்படாமல் அத்துமீறி அடாவடியாக தென்னிலங்கை மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள வாடிகளை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு கரைதுறைப்பற்று பிரதேச செயலக் காணிப் பிரிவால் அப்பகுதியில் துண்டுப்பிரசுரம் காட்சிப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது https://www.ilakku.org/sinhala-fishermen-encroaching-on-the-mullaitivu-pulibaindhakal-area-and-setting-up-a-wharf/
  9. டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக அங்குள்ள முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 50 அமெரிக்க மாநிலங்கள் உட்பட 1,200 இடங்களில் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. 'கைகளை விடுங்கள்' என்ற கோஷங்களை எழுப்பி மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூகப் பிரச்சினைகள் முதல் பொருளாதார பிரச்சினைகள் வரை அமெரிக்க ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களில் உள்ள குறைகளை, போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அமெரிக்காவின் புதிய வரித் திட்டம் மற்றும் வெளியுறவுக் கொள்கை என்பவற்றையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் விமர்சித்துள்ளனர். https://www.hirunews.lk/tamil/402206/டொனால்ட்-ட்ரம்ப்பிற்கு-எதிராக-ஆர்ப்பாட்டங்கள்-முன்னெடுப்பு
  10. இந்திய வம்சாவளியினருக்கு கடல்கடந்த இந்தியப் பிரஜை அந்தஸ்த்தை கோரும் மனோ கணேசன் எம்.பி இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் சுலபமாகக் கடல்கடந்த இந்தியப் பிரஜை எனும் அந்தஸ்தைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமருடனான சந்திப்பின்போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். அத்துடன், தங்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் பல குறைபாடுகள் காணப்படுகின்றது என்பதுவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். நேற்றைய தினம் இந்தியப் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர், 13ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார். https://www.hirunews.lk/tamil/402208/இந்திய-வம்சாவளியினருக்கு-கடல்கடந்த-இந்தியப்-பிரஜை-அந்தஸ்த்தை-கோரும்-மனோ-கணேசன்-எம்-பி
  11. கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பெயரை தொடர்ந்து அனுமதியின்றி பயன்படுத்தினால் நீதிமன்றத்தை நாடுவோம் - கோபாலகிருஸ்ணன் தங்களின் அனுமதியின்றி கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பெயர் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் த.கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் தம்முடன் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் கட்சியின் பெயரைப் பயன்படுத்த முடியாது என அப்போதே அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், தொடர்ந்தும் அந்த பெயர் பயன்படுத்தப்பட்டால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும், கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் தலைவர் த.கோபாலகிருஸ்ணன் கூறியுள்ளார். https://www.hirunews.lk/tamil/402215/கிழக்கு-தமிழர்-கூட்டமைப்பின்-பெயரை-தொடர்ந்து-அனுமதியின்றி-பயன்படுத்தினால்-நீதிமன்றத்தை-நாடுவோம்-கோபாலகிருஸ்ணன்
  12. மஹவ – ஓமந்தை ரயில் பாதையை இந்திய பிரதமர் மோடியும் ஜனாதிபதி அநுரவும் இணைந்து திறந்து வைத்தனர்!! April 6, 2025 அநுராதபுரத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (6) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபட்டார். அதன்பின்னர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்கவுடன் இணைந்து நவீனமயமாக்கப்பட்ட மஹவ – ஓமந்தை ரயில் பாதை மற்றும் மஹவ – அநுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பை மக்கள் பயன்பாட்டிற்காக இந்தியப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், “அநுராதபுரத்தில், மாஹோ-ஓமந்தை இடையேயான தரமுயர்த்தப்பட்ட புகையிரதப் பாதையினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் நானும் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தோம். அதேபோல மாஹோ முதல் அனுராதபுரம் வரையிலான தொகுதிக்குரிய நவீன சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் தொலைத் தொடர்பு பொறிமுறையினை ஸ்தாபித்தல் உள்ளிட்ட சமிக்ஞை தொகுதி திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையின் அபிவிருத்தி பயணத்தின் பல்வேறு அம்சங்களிலும் இலங்கைக்கான ஆதரவை நல்குவதில் இந்தியா பெருமிதம் கொள்கின்றது என குறிப்பிட்டுள்ளார். https://eelanadu.lk/மஹவ-ஓமந்தை-ரயில்-பாதையை-இ/
  13. அனுராதபுரம் ஸ்ரீ மகாபோதியில் மோடி வழிபாடு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இன்று (06) முற்பகல் அனுராதபுரத்தை வந்தடைந்தார். வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் இந்தியப் பிரதமருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இலங்கை விமானப் படையின் மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கை்கு அரச பயணம் மேற்கொண்டுள்ளார். https://www.samakalam.com/அனுராதபுரம்-ஸ்ரீ-மகாபோதி/
  14. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு! adminApril 5, 2025 இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் மலையக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலும் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய பிரதமர், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக குறிப்பிட்டார். இச்சமூகத்தினர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்குமான ஒரு வாழும் உறவுப் பாலமாக திகழ்கின்றனர். இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ஆதரவு வழங்கும் என இந்திய பிரதமர் தமது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார். https://globaltamilnews.net/2025/214150/
  15. பிரித்தானியாவின் தடை உணர்த்துவது? - நிலாந்தன் பிரித்தானியா இலங்கையில் போர்க் காலத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அதில் சம்பந்தப்பட்ட நான்கு பேருக்கு தடை விதித்திருக்கிறது. இதுவரை காலமும் கனடா அமெரிக்கா ஆகிய நாடுகள் தடை விதித்திருக்கின்றன. பிரித்தானியா இவ்வாறு தடை விதித்திருப்பது இதுதான் முதல் தடவை. முதலில் இந்த தடை வெளிவந்திருக்கும் பின்னணியைப் பார்க்கலாம். 58 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் இன்று முடிவடைகிறது. அக்கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே பிரித்தானியாவின் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இரு கிழமைகளுக்கு முன்பு ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னணியில்,அல்ஜசிராவின் “ஹெட் டு ஹெட்” நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சியும் இப்பொழுது வெளிவந்திருக்கும் பிரித்தானியாவின் தடையும் ஏறக்குறைய ஒரே நோக்கத்தை கொண்டவை. சீன இடதுசாரி மரபில் வந்த ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இரண்டு வரையறைகளை உணர்த்துவதே இந்தத் தடை மற்றும் அல்ஜசீராவின் நேர்காணல் இரண்டினதும் நோக்கம் எனலாம். முதலாவது வரையறை இந்த அரசாங்கம் சீனாவை நோக்கிச் சாய்வதில் உள்ள வரையறை. இரண்டாவது இனப்பிரச்சினை தொடர்பில் பொறுப்புக்கூறாமல் தப்புவதில் உள்ள வரையறை. இதை இன்னும் அறுத்துறுத்துச் சொன்னால்,பொறுப்புக்கூறல் என்ற கவர்ச்சியான தலைப்பின் கீழ் இலங்கை அரசாங்கத்தை தமது செல்வாக்கு மண்டலத்துக்குள் வைத்திருப்பதற்கான அழுத்தங்கள். பிரித்தானியாவின் தடை நான்கு பேர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் மூவர் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்த அரச படைப்பிரதானிகள். ஒருவர் தமிழ்த் தரப்பில் ஒரு தளபதியாகவிருந்து பின்னர் அரச தரப்புடன் இணைந்த கருணா. இந்த நால்வரும் இலங்கைத்தீவின் சிவில் யுத்தத்தில் செய்த குற்றங்களுக்கு எதிராகவே மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரித்தானிய அரசின் வெளிவிவகார,பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில்,கருணாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த காலமும் பின்னர் அரச தரப்போடு இணைந்து செயல்பட்ட காலமும் உள்ளிட்ட சிவில் யுத்த காலகட்டத்தில் செய்த குற்றங்கள் என்றுதான் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த உத்தியோகபூர்வ குறிப்பில் கருணா தொடர்பாக கூறப்படுகையில் “பயங்கரவாதக் குழுவான விடுதலைப் புலிகள் இயக்கம்” என்ற சொற்பிரயோகம் உண்டு. நாலாம் கட்ட ஈழப்போரில் கருணா அரச தரப்புடன் இணைந்து செயல்பட்டதை வைத்து இந்த தடை அரசு படைப்பிரதானிகளுக்கும் அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட்ட கருணாவுக்கும் எதிரானது என்றுதான் ஒரு பொதுவான தமிழ் விளக்கம் காணப்படுகின்றது. ஆனால் அது முழு உண்மையல்ல. இந்தத் தடைக்குள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் உண்டு. ஏற்கனவே ஐநாவின் அறிக்கைகளில் “போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புக்களுக்கும்” எதிராக என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்பதையும் இங்கு தொகுத்துக் கவனிக்க வேண்டும். அதுமட்டுமல்ல மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளிலும்“மனித உரிமை மீறல்கள்,மனித உரிமைத் துஷ்பிரயோகங்கள்” போன்ற வார்த்தைகள்தான் காணப்படுகின்றன. இன அழிப்பு என்ற வார்த்தை இல்லை. அதாவது பிரித்தானியாவின் தடையானது நடந்தது இனஅழிப்பு என்பதனை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த 15ஆண்டுகளாக ஐநாவின் அறிக்கைகளிலும் அதுதான் காணப்படுகின்றது. அங்கேயும் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றவை இனஅழிப்பு என்று உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதில் ஒப்பீட்டளவில் கனடாவில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்கள் இன அழிப்பு என்பதனை ஏற்றுக்கொள்கின்றன. தீர்மானங்களில் இன அழிப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது கனடாவின் இலங்கை தொடர்பான வெளியுறவு அணுகுமுறைகளில் வெளியுறவுக் கொள்கைத் தீர்மானமாக எடுக்கப்படவில்லை. அதாவது ஒரு ராஜதந்திர முடிவாக அது நடைமுறையில் இல்லை. எனவே கடந்த 15 ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளும் ஐநாவும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக எடுக்கும் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளைத் தொகுத்துப் பார்த்தால் அங்கே ஒரு பொதுத் தன்மையைத் தமிழர்கள் கண்டுபிடிக்கலாம். அது என்னவென்றால் இலங்கைத் தீவில் இடம்பெற்றது இன அழிப்பு என்பதனை உத்தியோகபூர்வ வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடாக மேற்கு நாடுகள் இதுவரை எடுத்திருக்கவில்லை. ஐநாவும் அது இனப்படுகொலை என்பதனை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது முதலாவது. இரண்டாவது,கடந்த 15 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடைகளை எல்லா நாடுகளும் தொடர்ந்து பேணுகின்றன. தாயகத்தில் செயல்படாத ஒரு அமைப்புக்கு எதிராகத் தடையைத் தொடர்ந்து பேணுவதன் மூலம் அவர்கள் தமிழ் மக்களுக்கு உணர்த்த முற்படும் வரையறைகள் எவை? மூன்றாவது, ஐநாவில் இலங்கை இனப்பிரச்சினையானது வரையறுக்கப்பட்ட ஆணையைக் கொண்ட ஐநாவின் உறுப்பாகிய மனித உரிமைகள் பேரவைக்குள்தான் பெட்டி கட்டப்பட்டிருக்கிறது. மனித உரிமைகள் பேரவையானது ஐநாவின் 8 உறுப்புகளில் ஒன்று. பாதுகாப்புச் சபை, பொதுச் சபை போன்று அதிகாரம் மிக்கதல்ல. ஒரு நாட்டுக்கு எதிராக படையினரை அனுப்புவதற்கோ அல்லது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கோ தேவையான ஆணை மனித உரிமைகள் பேரவைக்குக் கிடையாது. சம்பந்தப்பட்ட நாட்டின் அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே மனித உரிமைகள் பேரவை அந்த நாட்டில் இறங்கி வேலை செய்யலாம். குறிப்பாக 2021 ஆம் ஆண்டிலிருந்து ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள் ஓர் அலுவலகம் இயங்கி வருகிறது.இலங்கைத்தீவின் போர்க்களத்தில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஓர் அலுவலகம் அது. அப்படி ஒரு பொறிமுறை வேண்டும் என்று 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட்டாக ஒரு கடிதத்தை எழுதின.அந்தப் பொறிமுறையானது மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே பொறுப்பு கூறலைக் கொண்டு போகவேண்டும் என்பது கடிதத்தின் சாராம்சம் ஆகும். மேலும் அந்தப் பொறிமுறைக்கு ஒரு கால வரையறை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கூட்டுக் கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் கோரிக்கைகளில் பெரும்பாலானவை ஐநாவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்தப் பொறிமுறையானது ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு உட்பட்ட ஓர் அலுவலகமாகத்தான் உருவாக்கப்பட்டது. அதாவது பலவீனமான ஆணையை கொண்டது. இதுதான் ஐநாவில் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடியவற்றின் வரையறை. இவ்வாறு கடந்த 15 ஆண்டு காலமாக மேற்கை மையமாகக் கொண்ட, அல்லது ஐநாவை மையமாகக் கொண்ட நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தின் விளைவுகளைத் தொகுத்துப் பார்த்தால் பின்வரும் சித்திரம் கிடைக்கும். மேற்கு நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் அதே சமயம் நீதிக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.அதோடு தமிழ் மக்களுக்கு அனைத்துலக அளவில் இருக்கக்கூடிய ராஜதந்திர வாய்ப்புகளின் வரையறைகளையும் அவை உணர்த்துபவைகளாகக் காணப்படுகின்றன. எனினும் 15 ஆண்டுகளின் பின்னரும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்ட வழியில் தமிழ் மக்கள் மெதுமெதுவாக முன்னேறி வருகிறார்கள் என்பதனை பிரித்தானியாவின் தடை உணர்த்துகின்றது. குறிப்பாக நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பெற்ற ஆகப்பிந்திய வெற்றியாகவும் அதைக் கூறலாம். அண்மையில் கனேடிய உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் அத்தகையதே.கனடாவில் நிறைவேற்றப்படட இனஅழிப்பு அறிவூட்டடல் தீர்மானத்திற்கு எதிரான வழக்கில்,கனேடிய உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டுவது. இவை யாவும் வரையறைக்குட்பட்ட வெற்றிகள்தான்.நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் மேலும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.கனடா, அமெரிக்கா,பிரித்தானியா போன்ற நாடுகள் விதித்திருக்கும் தடைகளும் குறிப்பாக கனடாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்கு உற்சாகமூட்டுபவை.அதேசமயம் மேற்கு நாடுகளின் மேற்படி நகர்வுகள் யாவும் அந்தந்த நாடுகளின் பூகோள ராணுவ அரசியல் பொருளாதார நலன்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தான் என்பதையும் தமிழர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.அதை அவர்கள் தமிழ் மக்களின் பெயரால் “பொறுப்புக்கூறல்” என்ற தலைப்பின் கீழ் ராஜதந்திரமாக முன்னெடுக்கின்றார்கள். இந்த விடயத்தில் மேற்கு நாடுகள் மட்டுமல்ல இந்தியா,சீனா,ஐநா முதலாக உலகில் எந்த ஒர் அரசுக் கட்டமைப்பும் இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் அவ்வாறுதான் முடிவுகளை எடுக்கும்.அரசுகள் எப்பொழுதும் தங்களுடைய ராணுவப் பொருளாதார அரசியல் நோக்கு நிலைகளில் இருந்துதான் முடிவுகளை எடுக்கும்.ஏன் கடவுளுக்கு ஓர் அரசிருந்து அங்கு முடிவு எடுக்கப்பட்டாலும் அப்படித்தான் அமையும். இதில் தமிழர்கள்தான் தங்களுடைய நலன்களும் வெளி அரசுகளின் நலன்களும் இடை வெட்டும் ஒரு பொதுப் புள்ளியைக் கண்டுபிடித்து அங்கிருந்து தொடங்கி தமக்குக் கிடைத்திருக்கும் ராஜதந்திர வாய்ப்புகளை எப்படி முழு வெற்றியாக மாற்றுவது என்று திட்டமிட்டுச் செயற்பட வேண்டும்.அதாவது தமிழ் மக்கள் உலக அளவில் தங்களுக்குள்ள வரையறைகளையும் வாய்ப்புகளையும் நன்கு விளங்கி வைத்திருக்க வேண்டும்.கிடைத்திருக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி வரையறைகளை எப்படிக் கடப்பது அல்லது உடைப்பது என்று திட்டமிட்டுச் செயற்பட வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட தடைகளும் தீர்மானங்களும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த உற்சாகமூட்டும் வெற்றிகளாகும். தமிழ் மக்கள் யாருக்கு எதிராக நீதியைக் கேட்டு போராடுகிறார்களோ அவர்கள் அங்கு தண்டிக்கப்படுகிறார்கள்.மேற்கு நாடுகளின் தடைகள் ஒருவிதத்தில் தமிழ் மக்களுக்கும் வரையறைகளை உணர்த்துபவைதான்.என்றாலும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராக அதன் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்திகளாக அவை காணப்படுகின்றன.இந்த விடயத்தில் மேற்கு நாடுகள் தங்களோடு முழுமையாக இல்லை என்று கருதி தமிழ் மக்கள் அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தேவையில்லை. தடைகள் விடயத்தில் மேற்கும் ஐநாவும் அரைவாசி அளவுக்கு தமிழ் மக்களுக்குச் சாதகமாக நிற்கின்றன.எனவே தமக்கு கிடைத்திருக்கும் பாதியளவு சாதகமான ராஜதந்திர வாய்ப்புகளை முழு அளவு சாதகமானவைகளாக எப்படி மாற்றுவது என்றுதான் தமிழ்த் தரப்பு சிந்திக்க வேண்டும். வெளியரசுகள் அவற்றின் நலன் சார்ந்து எடுக்கும் நகர்வுகளை எப்படி ஈழத் தமிழர்கள் தமது நலன் சார்ந்து வெற்றிகரமாகக் கையாளலாம் என்று சிந்திக்க வேண்டும். இதைத் தொகுத்துச் சொன்னால் தமிழ் மக்கள் ஓர் அரசு போல சிந்திக்க வேண்டும். ஒரு அரசு இன்னொரு அரசோடு கொள்ளும் உறவுகளில் இரண்டு தரப்புக்கும் பொதுவான நலன்கள் ஒன்றை ஒன்று வெட்டும் புள்ளியில்தான் உறவுகள் விருத்தி அடைகின்றன. எனவே ஈழத் தமிழர்கள் ஓர் அரசு போல சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ராஜதந்திரத்தில் நலன்கள்தான் முக்கியம். அறம்;தர்மம்;நீதி போன்றவை அங்கே கிடையாது. தொப்புள்கொடி உறவு;இதயமும் இதயமும் கலக்கும் உறவு; என்பவையெல்லாம் கிடையாது. நலன்களும் நலன்களும் இடை வெட்டும் புள்ளிகளைத் தீர்க்க தரிசனமாகக் கையாள்வதுதான் ராஜதந்திரம். எனவே ஓர் அரசுபோலச் சிந்தித்து ஈழத் தமிழர்கள் முடிவெடுக்க வேண்டும்.பிரித்தானியாவின் தடை தமிழ் மக்களுக்கு அண்மையில் கிடைத்திருக்கும் ஒரு வெற்றி. அந்த வெற்றி முழுமையானது இல்லை. அதை எப்படி ஒரு முழுமையான ராஜதந்திர வெற்றியாக மாற்றுவது என்பது ஈழத் தமிழர்கள் ஓர் அரசுபோலச் சிந்தித்து முடிவெடுப்பதில்தான் தங்கியிருக்கின்றது. ஆனால் ஓர் அரசு போல் சிந்திப்பதென்றால் அதற்கு முதலில் தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள வேண்டும் https://www.nillanthan.com/7265/
  16. தகவலுக்கு நன்றி @கந்தப்பு . மாற்றிவிடுகின்றேன். பிஸியில் ராமநவமியைக் கவனிக்கவில்லை! கவனிக்கின்றேன்! கூகிள் ஷீற்றை மாற்றாமல் இவற்றை ஒழுங்கில் போடுகின்றேன்!
  17. GMT நேரப்படி நாளை ஞாயிறு 06 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 19) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH எதிர் GT 17 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் 06 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் குஜராத் டைட்டன்ஸ் வசீ சுவி ஏராளன் ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  18. வீர தீர சூரனைக் கொப்பியடித்ததாக ஒப்புக்கொண்ட @புலவர் ஐயா ஐந்தாம் இடத்தில் இருக்கின்றார். வீர தீர சூரனும் அவருடன் கோரஸ் பாடுபவர்களும் 17 ஆம் இடத்திலிருந்து தவிக்கின்றார்கள். அதற்குள் புள்ளிவிபரங்களைக் கரைத்துக் குடித்த @கந்தப்பு வும் நானும் எப்படி மாட்டுப்பட்டோம் என்று தெரியவில்லை!
  19. இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேஎல் ராஹுலின் அதிரடியான 77 ஓட்டங்களின் துணையுடன் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் விஜய் சங்கரைத் தவிர பிறர் நிலைத்து ஆடாததால் விஜய் சங்கரின் ஆட்டமிழக்காது எடுத்த 69 ஓட்டங்களுடன் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 158 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடியான 67 ஓட்டங்களுடனும் பிற வீரர்களின் வேகமான துடுப்பாட்டங்களாலும் 4 விக்கெட் இழப்பிற்கு203 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் பலர் விரைவாக விக்கெட்டுகளை இழந்ததால், நெஹால் வதேராவின் 62 ஓட்டங்களுடன் 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 155 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @suvy ஐயா சத்தமில்லாமல் முதல்வராக வந்துள்ளார். எனினும் @செம்பாட்டான் உம், @நந்தன் உன் சமமான புள்ளிகளில் முதல்வர் பதவியைக் குறிவைத்து நிற்கின்றனர்! @alvayan நாலாம் இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளார். இதில் சதிவேலை எதுவும் கிடையாது என்பதை புள்ளிவிபரத்துறை அறியத் தந்துள்ளது.😁
  20. அல்வாயன் கதிரையை விட்டு இறங்க விரும்பாததால் புள்ளிகள் கொடுக்கத் தாமதமாகும்.. 😉
  21. CSK 20-2 முட்டை பார்சல்கள் ரெடி பண்ணுகின்றார்கள்😩
  22. பிரபாகரன் உடல் எங்கே? புலிகள் இயக்கத்தில் என்ன நடந்தது? பிபிசி தமிழுக்கு கருணா அம்மான், பிள்ளையான் பேட்டி 5 ஏப்ரல் 2025, 04:12 GMT கருணா அம்மான், பிள்ளையான் நேர்காணல் - பிபிசி தமிழ் எக்ஸ்க்ளூசிவ் இலங்கையின் இன்றைய அரசியல் களம் குறித்தும், கடந்து வந்த தங்களின் பாதைகள் குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளும் அந்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களுமான கருணா அம்மான் (விநாயகமூர்த்தி முரளிதரன்) மற்றும் பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) கூறுவது என்ன? போர் முடிந்து 15 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் அனைவரின் மனதிலும் எழும் ஒரு கேள்வியானது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் எங்கே? அவரின் உடல் எப்படி அடையாளம் காணப்பட்டது என்ற கேள்வி பிபிசி தமிழால் முன்வைக்கப்பட்டது. புலம் பெயர்ந்த தமிழர்கள் பலரும் தன்னிடம் கேட்கும் முக்கியமான கேள்வி இதுவென்று கூறிய கருணா அம்மான், பிரபாகரனின் உடலை அடையாளப்படுத்தும் பணிக்காக சென்றிருந்தேன் என்று தெரிவித்தார். அடையாளம் காட்டிவிட்டு வந்த பிறகு, என்ன நடந்தது என்று எனக்கு உண்மையாகவே தெரியவில்லை என்று பதில் அளித்தார். "அவரின் உடலை அடையாளப்படுத்தி உலகுக்கு அவர் மரணித்த செய்தியை தெரிவித்தேன். உடல் எங்கே என்பதை அறிந்து கொள்வதற்கான அதிகாரம் கொண்டு செயல்படும் சூழலும் அன்று இல்லை. ராணுவ மேலாதிக்கம் அங்கே மேலோங்கி இருந்தது. அந்த ராணுவ கட்டமைப்பை உடைத்துவிட்டு ஆராய்வதற்கான வாய்ப்புகளும் இருக்கவில்லை என்பது தான் உண்மை," என்று கூறினார் அவர். காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில், பலர் அவர்களின் வீடுகளில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் அழைத்துச் செல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பிய போது, "ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கட்டாய ஆள்சேர்ப்பு இருந்தது என்பதை பல இடங்களில் இயக்கம் ஒப்புக் கொண்டது. ஆயுத இயக்கத்தில் விரும்பி இணைந்தவர்களும் உண்டு. வயதில் சிறியவர்கள் இணைந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு வந்த போது, அவர்களை நாங்கள் தேடிக் கண்டறிந்து வீட்டிற்கு அனுப்பியும் வைத்துள்ளோம். ஆனால் அது தொடர்பான முறையான தகவல்களை போலீஸுக்கு அவர்கள் வழங்கியதில்லை," என்று பிள்ளையான் பதில் கூறினார். ஒரு சூழ்ச்சி மூலமாக இருவரையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து முன்னாள் அதிபரும், பிரதமராகவும் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கே பிரித்து வந்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அது குறித்து உங்களின் கருத்து என்ன என்ற கேள்வியை முன்வைத்தது பிபிசி தமிழ். "சூழ்ச்சி மூலம் இயக்கத்தில் இருந்து வெளியேறினேன் என்று கூறுவது மிகவும் தவறானது. போராளிகளும் தளபதிகளும் உண்மையில் இயக்கத்தின் மீது வெறுப்படைந்திருந்தனர். தலைவருக்கு நெருக்கடி வரும் போதெல்லாம் எங்களின் அணி தான் அவரை காப்பாற்றியது. மெய்க்காவலர்களைக் கூட நாங்கள் தான் தேர்வு செய்து அனுப்புவோம். 25-க்கும் மேற்பட்ட கட்டமைப்புகளை இயக்கம் கொண்டிருந்தாலும் கிழக்கு மாகாண பொறுப்பாளர்கள் இல்லை. இந்த சமமற்ற சூழலை நான் வேலுப்பிள்ளையிடம் நான் அடிக்கடி சுட்டிக்காட்டினேன். ஆனால் என்னைத் தவிர முக்கியப் பொறுப்பில் கிழக்கு மாகாணத் தமிழர்கள் இடம் பெறவில்லை. மேலும் தளபதி மாத்தையா பிரபாகரனை கொலை செய்ய முயன்ற சம்பவத்திற்கு பிறகு, தலைமைக்குழுவில் இருந்த சந்தேகம் காரணமாக பிரபாகரன் யாரையும் வளர விரும்பவில்லை. மேலும் கிழக்கு மாகாண 'ஜெயந்தன் படை' மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்பைப் இயக்கத்தில் பலரும் விரும்பவில்லை. அவர்கள் தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தனர். சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டதை காரணம் காட்டவே நாங்கள் அப்படியே இயக்கத்தில் இருந்து வெளியேற நேரிட்டது," என்று கருணா அம்மான் தெரிவித்தார். 20 ஆண்டுகளாக அரசியல் ரீதியாக பிரிந்திருந்த இருவரும் இணைய காரணம் என்ன? இது குறித்து கருணா அம்மானும், பிள்ளையானும் கூறுவதும் என்ன? முழு விவரம் காணொளியில்... https://www.bbc.com/tamil/articles/cqj4zpxy8yyo
  23. அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் Bookday25/02/2025 அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் (ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய நாவல் ‘1984’) தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–2 – அ. குமரேசன் நல்லதொரு இலக்கியப் படைப்பு வாசித்து மகிழ வைப்பதோடு தனது வேலை முடிந்ததென்று நிற்பதில்லை. சித்தரிக்கப்பட்ட உண்மைகளை உரசிப் பார்க்கச் செய்யும். பொய்மைகளைப் புரிந்துகொள்ள உதவும். நிலைமைகளை மாற்றுவதற்குப் போராடுகிறவர்களோடு இணைந்திருக்கத் தூண்டும். அதன் காரணமாகவே உண்மைகளை மறைத்துப் பொய்மைகளைப் பரப்புகிறவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும். யாரும் அதைப் படிக்க இயலாமல் தடை போட முடுக்கிவிடும். அப்படிப்பட்ட ஒரு நாவல்தான் ‘ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து நான்கு’. பிரிட்டானிய எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய இந்த நாவல் ‘1984’ என்று எண்ணாகக் குறிப்பிடும் தலைப்பிலும் வெளியானது. 1984ஆம் ஆண்டில் மைக்கேல் ரோட்ஃபோர்ட் இயக்கத்தில் திரைப்படமாகவும் அரங்குகளுக்கு வந்தது. அதற்கு முன் அமெரிக்கா, அன்றைய சோவியத் யூனியன் உள்ளிட்ட சில நாடுகளில் புத்தகம் தடை செய்யப்பட்டது. வேறு சில நாடுகளில் எதிர்ப்புக்கு உள்ளானது. பிரிட்டனில் அதிகாரப்பூர்வமாகத் தடை செய்யப்படவில்லை என்றாலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. பள்ளிகளிலும் இதர நூலகங்களிலும் சிறிது காலம் புத்தகம் எளிதில் கிடைக்காது என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டது. சீனாவில் புத்தகம் கிடைத்தது, ஆயினும் அதன் மீதான விவாதங்கள், குறிப்பாக இணையவழி விவாதங்கள் கண்காணிக்கப்பட்டன, தணிக்கைக்கு உள்ளாகின. அத்தகைய முட்டுக்கட்டைகளைத் தாண்டி இன்று எங்கேயும் கிடைக்கிறது, உலகின் பல மொழிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) இதில் ஒரு வேடிக்கையும் நடந்தது. சோவியத் யூனியனில், சோசலிசக் கொள்கைகளுக்கு எதிரான சிந்தனைகளை முன்வைக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்த நாவலுக்கு, அமெரிக்காவின் பல மாநிலங்களில் கம்யூனிசச் சிந்தனைகளைப் பரப்புகிறது என்ற கண்டனத்துடன் தடை விதிக்கப்பட்டது! பாலியல் உறவைச் சித்தரிப்பதாகக் கூறி பள்ளி நூலகங்களிலிருந்து விலக்கப்பட்டது. பிரிட்டனில், அரசின் முழு அதிகாரத்தை நாவல் கேள்விக்கு உட்படுத்துகிறது என்ற அடிப்படையில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. வெவ்வேறு கோணங்களில் எதிர்ப்புகளையும் தடைகளையும் எதிர்கொண்ட நாவலின் கதை இப்படியாக இருக்க, நாவல் சொல்லும் கதை என்ன? சுதந்திரமான பொன்மயமான எதிர்காலம் பற்றிய கற்பனை சூழ் கனவுலகத்தை ஆங்கிலத்தில் ‘உட்டோப்பியன்’ என்ற சொல்லால் குறிப்பிடுவார்கள். அதற்கு நேர்மாறான, அடக்குமுறைகளும் துயரங்களும் நிறைந்ததோர் எதிர்காலம் பற்றிய கற்பனையை ‘டிஸ்டோபியன்’ என்பார்கள். 1949இல் ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதி வெளியான இந்த நாவல், 35 ஆண்டுகளுக்குப் பிந்தைய ஒரு வல்லாட்சி நாட்டையும் அதன் குடிமக்களையும் கற்பனையாக முன்வைக்கிறது. எதிர்காலக் கற்பனை என்றாலும், அது நாவல் வெளியான காலக்கட்டத்தின் மெய்யான நடப்புகள் பற்றிய மறைமுக விமர்சனம்தான். ‘1984’ கதைச் சுருக்கம் உறுதியாகத் தெரிய வராத, 1984 ஆக இருக்கலாம் என ஊகிக்கப்படும் ஆண்டில், போர்களாலும் உள்நாட்டுக் கலவரங்களாலும் உலகமே சீரழிந்து போயிருக்கிறது. எல்லா நாடுகளும் மூன்றே மூன்று அனைத்ததிகார வல்லரசுகளின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அந்த மூன்றில் ஒன்றான ஓசியானியா பேரரசுக்கு உட்பட்ட ஏர்ஸ்ட்ரிப் ஒன் என்ற பகுதியாக பிரிட்டன் மாறியுள்ளது. ஓசியானியாவை “கட்சி” (தி பார்ட்டி) என்ற குழு ஆள்கிறது. அதன் கொள்கை “இங்க்சாக்” (இங்கிலீஷ் சோசலிசம் என்பதன் சுருக்கம்) என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து நவீன வசதிகளுடனும் (கிட்டத்தட்ட செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் போன்றவை) இருக்கும் பேரரசின் ஆகப்பெரும் அதிபதி “பெரிய அண்ணன்” (பிக் ப்ரதர்). அவர் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துக் குடிமக்களை ஒடுக்கி வைத்திருக்கிறார். கட்டுப்பாடுகளை மீறினால் கடும் தண்டனைகள் நிச்சயம். அதைக் கண்காணிக்க “சிந்தனைக் காவல்” (தாட் போலீஸ்) என்ற படையே இயங்குகிறது. ஆட்சிக்கு எதிராகச் செல்கிறவர்கள் “ஆளல்லாதவர்கள்” (அன்பெர்சன்ஸ்) என அறிவிக்கப்பட்டு அவர்கள் இருந்ததற்கான தடயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். ஆகவே மக்கள் அச்சத்துடன் அவரைப் போற்றுகிறவர்களாக மாறியிருக்கிறார்கள். கட்சியின் வெளியமைப்பு உறுப்பினரான விஸ்டன் ஸ்மித் அரசின் உண்மை அமைச்சகத்தில் ஊழியராக இருக்கிறான். வரலாற்று ஆவணங்களைத் திருத்தி தலைமை கூறுவது போலப் பதிவு செய்வது அவனுடைய வேலை. பழைய ஆவணங்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுவிடும். வேலைகளில் ஈடுபடும்போது உண்மைகளை அறிய நேரிடும் வின்ஸ்டன் முந்தைய வரலாறுகளைத் தேடித் தெரிந்துகொள்ள முயல்கிறான். மனதளவில் தலைமையை வெறுக்கிறான். அதை எதிர்த்துக் கிளர்ச்சிகள் நடப்பதாகவும் தானும் அவற்றில் பங்கேற்பதாகவும் கனவு காண்கிறான். தான் ஒரு “சிந்தனைக் குற்றவாளி” என்று புரிந்துவைத்திருக்கிற அவன் எதிர்காலத்தில் சிறைவாசம் உண்டு என்ற தெளிவோடும் இருக்கிறான். 1950இல் நடந்த கலவரத்தில் பெற்றோரை இழந்தவனும், மனைவியைப் பிரிந்தவனுமான வின்ஸ்டன், பொதுமக்களுக்கு அரசியல் நிலைமைகளில் பெரிதாக அக்கறையில்லாமல் இருப்பதைக் கண்டு ஏமாற்றமடைகிறான். இந்நிலையில் அமைச்சகத்தில், அரசின் நோக்கங்களுக்கு ஏற்ற கதைகளை எழுதிக்கொடுக்கும் எந்திரங்களைப் பராமரிக்கும் சக ஊழியரான ஜூலியா அவனுடைய கவனத்திற்கு உள்ளாகிறாள். அவள் மீது தொடக்கத்தில் சந்தேகம் கொள்கிறான். அவள் தலைமையின் உளவாளியாக இருக்கலாம் என்று நினைக்கிறான். ஆட்சியின் உள்ளமைப்பில் இருக்கும் ஒ’ப்ரையன் என்ற அதிகாரி, அரசுக்கு எதிரான “சகோதரத்துவம்” என்ற ரகசிய இயக்கத்தின் உறுப்பினராக இருக்கக்கூடும் என்றும் ஊகிக்கிறான். நாட்களின் ஓட்டத்தில் ஜூலியாவும் ஆட்சியை வெறுப்பவள்தான் என்று அவனுக்குத் தெரியவருகிறது. இருவரும் நேசிக்கத் தொடங்குகிறார்கள். இங்க்சாக் சட்டப்படி, அரசின் அனுமதியின்றி யாரும் உறவுகொள்ள முடியாது. ஆகவே இவர்களது காதல் ரகசியமாகவே தொடர்கிறது. அவர்கள் சந்தித்துக்கொள்வதற்கு சாரிங்டன் என்ற கடைக்காரர் உதவி செய்கிறார். இருவரும் தங்களது குடும்பப் பின்னணிகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். விஸ்டனைத் தனியாக வீட்டுக்கு வரவழைக்கும் ஓ‘ப்ரையன், அவன் ஊகித்தது போலவே தன்னை சகோதரத்துவ இயக்கத்தின் உறுப்பினர்தான் என்று வெளிப்படுத்திக்கொள்கிறார். எமானுவேல் கோல்ட்ஸ்டீன் என்பவர் எழுதிய ‘ஆட்சிக் கூட்டமைப்பின் கோட்பாடும் நடைமுறையும்’ என்ற புத்தகத்தைத் தருகிறார். இதனிடையே ஓசியானியாவின் எதிரி அரசாகிய யூரேசியா (ஐரோப்பிய ஆசியா) திடீரென ஈஸ்டேசியா (கீழை ஆசியா) என மாறுகிறது, அது பெரிதாகக் கவனிக்கப்படாமல் போகிறது. விஸ்டன் அந்தப் புத்தகத்தை படிக்கிறான். ஆட்சிக்குழு எப்படி அதிகாரத்தைக் கையாளுகிறது என்பதை அந்த நூல் விளக்குகிறது. அரசால் விளம்பரப்படுத்தப்படும் பல்வேறு முழக்கங்களின் உண்மை நோக்கங்களையும் கூறுகிறது. ஆட்சியதிகாரம் கைப்பற்றப்பட்டது எப்படி என்ற அத்தியாயத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போது அவனும் ஜூலியாவும் கைது செய்யப்படுகிறார்கள். சாரிங்டன் உண்மையில் சிந்தனைக் காவல் படையின் கையாள் என்றும், ஒ’ப்ரையன் கூட அதிகாரபீடத்தின் அடியாள்தான் என்றும் அப்போதுதான் தெரியவருகிறது. சிறையில் விஸ்டன் பட்டினி போடப்படுகிறான். கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகிறான். சிறையதிகாரிகள் அவனை ஆட்சியின் விசுவாசியாக மாற்ற முயல்கிறார்கள். சகோதரத்துவம் என்ற இயக்கம் உண்மையிலேயே இருக்கிறதா என்று அவன் ஒருபோதும் தெரிந்துகொள்ள முடியாது என்கிறார் ஓ‘ப்ரையன். கோல்ட்ஸ்டீன் எழுதியதாகக் கொடுத்த புத்தகமே கூட அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டதுதான் என்று கூறுகிறார். லட்சியத்தை அடைவதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை, அதிகாரத்தை அடைவதுதான் லட்சியமே என்றும் தெளிவுபடுத்துகிறார். விஸ்டனை “அறை 101” எனப்படும் கூடத்திற்குக் கொண்டு செல்கிறார்கள். கொண்டுவரப்படும் ஒவ்வொரு கைதியின் பயம் என்ன என்று அறிந்து அந்தச் சூழல் ஏற்படுத்தப்படுகிற அறை அது. விஸ்டனின் மிகப்பெரிய பயம் எலிகள். எலிகள் நிறைந்த ஒரு கூண்டு அவன் முகத்தோடு சேர்த்துக் கட்டப்படுகிறது. அந்த எலிகள் கடித்துக் குதறிவிடும் என்ற அச்சத்தில் வின்ஸ்டன் விஸ்டன் ஜூலியாவைக் கைவிடுகிறான், கட்சியை ஏற்பதாக அறிவிக்கிறான். விடுவிக்கப்படும் வின்ஸ்டன், உணவகத்திற்குச் செல்கிறான். அங்கே, பல ஐரோப்பிய ஆசிய நாடுகளை ஒசியானா கைப்பற்றிவிட்ட செய்தி ஒலிபரப்பாகிறது. அதைக் கேட்டு மகிழ்கிறான். ஒருநாள் அங்கே ஜூலியாவைச் சந்திக்கிறான். இருவருமே ஒருவர்க்கொருவர் துரோகம் செய்ததை ஒப்புக்கொள்கிறார்கள். கடைசியில், முற்றிலுமாக ஆட்சியின் விசுவாசியாக மாறும் வின்ஸ்டன் பெரிய அண்ணனை முழுமையாக நேசிக்கவும் தொடங்குகிறான். ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) நாவலாசிரியரின் முந்தைய நூல்களும் அதிகார அமைப்புகளை விமர்சிப்பவைதான். குறிப்பாக, அவருடைய ‘விலங்குப் பண்ணை’ (அனிமல் ஃபார்ம்) சோசலிசத்தின் சமத்துவக் கொள்கைகளைக் கிண்டலடித்து எழுதப்பட்டதுதான். புதிதாக உருவாகி வளர்ந்து வந்த சோசலிச சோவியத் யூனியனுக்கு ஏகாதிபத்திய நாடுகளால் ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல், உள்நாட்டில் கலவரங்களைத் தூண்டுவதற்கான சதி, அந்த நிலையில் மேற்கொள்ள நேர்ந்த கடுமையான சில நடவடிக்கைகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டிருந்தால் அந்த நாவலை அப்படி எழுதியிருப்பாரா என்று தெரியவில்லை. ஆயினும், கலை இலக்கியப் படைப்பின் கருத்துச் சுதந்திரமும் விமர்சன உரிமையும் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டியவை. சோசலிசத்தைக் கட்ட முயலும் நாடுகளில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்ற பிரச்சாரத்தைத் தங்களது ஆயுதமாக முதலாளித்துவ சக்திகள் பயன்படுத்துவது தெரிந்ததுதான். ஆனால், முதலாளிய நாடுகளில் அறிவிக்காமலே செயல்படுத்தப்படும் கருத்துரிமை ஒடுக்குமுறைகளை அந்த சக்திகளோ, அவர்களின் ஊடகங்களோ கண்டுகொள்வதில்லை. ‘1984’ நாவலைத் தழுவியே தமிழ்நாட்டில் எழுத்தாளர் சுஜாதா ‘ஜினோ’ என்ற, சமத்துவ அரசுக் கொள்கைகளைப் பகடி செய்யும் அறிவியல் புனைவை எழுதியது கவனத்தில் கொள்ளத்தக்கது. 1903இல், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த வங்காள மாகாணத்தின் மோத்திஹரி நகரில் (இன்று அது பிஹார் மாநிலத்தில் இருக்கிறது) வெள்ளையின அதிகாரியின் குடும்பத்தில் பிறந்தவர் எரிக் ஆர்தர் பிளெய்ர். பின்னர் லண்டனுக்குத் திரும்பிச் சென்ற பிறகு, இலக்கியத்தில் ஈடுபட்டவர், ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதலானார். ‘டௌன் அன் அவுட் இன் பாரிஸ் அன் லண்டன்’ (1933), ‘தி ரோட் விகான் பியெர்’ (1937), ‘ஹோமேஜ் டு கட்டாலோனியா (1938), ‘அனிமல் ஃபார்ம்’ (1945) ஆகிய நாவல்களைப் படைத்தவர், 1949ஆம் ஆண்டில் ‘1984’ நாவலை வழங்கினார். அது வெளியான அடுத்த ஆண்டிலேயே, அதற்குக் கிடைத்த வரவேற்பு, எதிர்ப்பு இரண்டையுமே காணாமல், அவரை நெடுங்காலமாக வாட்டிவந்த எலும்புருக்கி நோய் முற்றிய நிலையில் காலமானார். இறப்புக்குப் பின் நாவல் பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றது. இன்று அரசியலில் அடிக்கடி கையாளப்படுகிற, அதிகார ஆணவத்தைக் குறிப்பிடும் “பெரிய அண்ணன்”, அரசுப் பீடங்களால் மக்களிடையே புகுத்தப்படும் சொல்லாடல்களைக் குறிக்கும் “நியூஸ்பீக்”. முரண்பாடான இரண்டு நிலைபாடுகளைக் கொணடிருக்கும் போக்கை அடையாளப்படுத்தும் “டபுள்திங்க்”, கொடிய ஆட்சிக்கு எதிராகச் சிந்திப்பதைக் கூட குற்றமாக்கும் குதர்க்கத்தைச் சுட்டிக்காட்டும் “தாட்கிரைம்”, அரியாசனவாதிகளுக்குச் சாதகமாக வரலாற்றுத் தடயங்களும், ஆதாரங்களும் அழிக்கப்படும் சூழ்ச்சியின் குறியீடாக “மெமரிஹோல்” என்ற ஆங்கிலச் சொற்கள் மேற்கத்திய நாடுகளின் அரசியல் களத்தில் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. அந்தச் சொற்கள் ‘1984’ நாவலிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவைதான். பாசிசம், சர்வாதிகாரம் ஆகியவற்றையும் சாடுகிற, ஜனநாயகப்பூர்வமான சமத்துவத்தையும், மதவாதங்களை மறுக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் வலியுறுத்துகிற கட்டுரைகள் உள்ளிட்ட எழுத்தாக்கங்களைத் தந்தமைக்காக இலக்கிய உலகில் கொண்டாடப்படுகிறவர். இன்று அவரது நூல்கள் இடம்பெறாத நூலகங்களே உலகில் இல்லை எனலாம். கல்வி, மொழி என அனைத்திலும் அதிகாரக் குவிப்புகள் உறுத்தலே இல்லாமல் நிகழ்த்தப்படும் காலக்கட்டத்தில் ‘1984’ போன்ற படைப்புகள், இக்கட்டுரையின் தொடக்கப் பத்தியில் கூறப்பட்டுள்ள வேலையைச் செய்யும்தானே? https://bookday.in/books-that-overcame-obstacles-series-2-written-by-kumaresan-asak/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.