வணக்கம் வாத்தியார் . ........!
பெண் : ஆசை ஆசை
இப்பொழுது பேராசை
இப்பொழுது ஆசை தீரும்
காலம் எப்பொழுது
ஆண் : கண்ணால் உன்னால்
இப்பொழுது காயங்கள்
இப்பொழுது காயம் தீரும்
காலம் எப்பொழுது
பெண் : மலையாய் எழுந்தேன்
நான் இப்பொழுது மணலாய்
விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதித்தாய் நீ இப்பொழுது
பெண் : தலை முதல்
கால் வரை இப்பொழுது
நீ தவறுகள் செய்வது
எப்பொழுது
ஆண் : ம்ம்.. இடைவெளி
குறைந்தது இப்பொழுது
உன் இதழ்களை துவைப்பது
எப்பொழுது
பெண் : அருகம்புல் ஆகிறேன்
இப்பொழுது அதை ஆடு தான்
மேய்வது எப்பொழுது
ஆண் : திருவிழா ஆகிறேன்
இப்பொழுது நீ எனக்குள்
தொலைவது எப்பொழுது
ஆண் : புல்வெளி ஆகிறேன்
இப்பொழுது நீ பனித்துளி
ஆவது எப்பொழுது
பெண் : ஆ… கொட்டும்
மழை நான் இப்பொழுது
உன் குடிநீராவது எப்பொழுது
ஆண் : கிணற்றில் சூரியன்
இப்பொழுது உன் கிழக்கில்
உதிப்பது எப்பொழுது
பெண் : புடவை கருவில்
இப்பொழுது நீ புதிதாய்
திறப்பது எப்பொழுது.......!
--- ஆசை ஆசை இப்பொழுது ---