Everything posted by suvy
-
அதிசயக்குதிரை
- சிரிக்கலாம் வாங்க
ஏன் அன்புத்தம்பி இன்று இந்த பகிடியை போட்டீங்கள்......ஒரு செக்கனில நிழலியின் ஞாபகம் வந்து போயிட்டுது ........! 😢- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பலர் தனிப்பட பிரார்த்தனை செய்வார்கள்......ஆனால் இது ஒரு கூட்டுப் பிரார்த்தனையாக உள்ளது.....எப்படியோ நோயாளி சுகமானால் மகிழ்சியே........! 🙏- பார்வை ஒன்றே போதுமே.......!
பார்வை ஒன்றே போதுமே...... (7). இப்பொழுது சாமிநாதனுக்கும் மனதில் ஒரு நிம்மதி உண்டாயிற்றுது. இனி இந்தக் குடும்பம் முன்னேறிவிடும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. அவரும் இங்கு வந்தபின் குடிப்பதையும் விட்டு விட்டார். ஒரு ஆம்பிளை இல்லாத வீட்டில் தான் இருக்க அவர்கள் அனுமதித்ததே பெரிய விஷயம். மேலும் தான் குடித்துக் கொண்டும் இருந்தால் நன்றாக இருக்காது என்று விட்டு விட்டார். இப்பொழுது தாடி மீசை எல்லாம் வளர்ந்து அவரது முகத்தோற்றமே மாறிவிட்டிருந்தது. எப்போதாவது முத்துதான் அவரை வற்புறுத்தி சலூனுக்கு அழைத்துச்சென்று கூட்டி வருவான். எப்போதும் அவன் கூடவே இருப்பதால் அவனிடம் ஒரு தனிப் பாசம் உண்டாகியிருந்தது. இப்பொழுது அவர்கள் வேலை செய்யும் இடங்களும் சுற்று சூழல்களும் மாற்றமடைந்து வந்து கொண்டிருக்கின்றது. மக்கள் நடமாட்டமும் பெருகி வருகின்றது. "மழைக் காலக் காளான்கள்" போல் அவ்விடத்தில் பல கடைகள் திறக்கப் படுவதும் சில கடைகள் வருமானமின்றி பூட்டப்படுவதுமாக இருந்தது. நடைபாதையில் வியாபாரம் செய்பவர்களை போலீசார் வந்து விரட்டி விடுவதும் பின் அவர்கள் சென்றதும் மீண்டும் இவர்கள் வியாபாரம் செய்வதுமாக இருந்தார்கள். அந்த வகையில் இவர்களது சப்பாத்து கடையும் பாதிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. இப்படி இருக்கையில் முன்பு சாமிநாதன் ஒரு கடைத் தாழ்வாரத்தில் படுத்து தூங்கியிருந்தபொழுது இவர் தலையில் தண்ணீர் ஊற்றிய சிப்பந்தி சோமு இப்பொழுது இவரோடும் நல்ல பழக்கமாகி இருந்தான்.சில மகிழ்ச்சியான தருணங்களில் சோமுவும் முத்துவும் சேர்ந்த இவரைக் கிண்டல் கேலி செய்து கலாய்ப்பார்கள். அந்த நேரங்களில் வீட்டில் வந்து இரவு எல்லோரும் சேர்ந்திருந்து சாப்பிடும்போது முத்து அதைச் சொல்ல எல்லோரும் சிரிப்பார்கள் அதில் சாமிநாதனும் சேர்ந்து கொள்வார். அவர்கள் போனதும் மகேஸ்வரி வந்து தனியாக இவரிடம் " ஐயா பிள்ளைகள் எதோ தெரியாமல் விளையாடுதுகள் நீங்கள் அதை மனசில் வைத்திருக்கக் கூடாது மன்னிக்க வேணும்" என்று சொல்லுவாள். இவரும் இல்லையம்மா எனக்கும் அதுதான் மிகவும் பிடித்திருக்கு நீங்கள் யோசிக்க வேண்டாம் என்று ஆறுதல் சொல்லுவார். (அவருக்கு தெரியும் தன்னோடு பத்து நிமிடங்கள் சந்திப்பதற்கு அனுமதி வேண்டி வாரங்கள் மாதங்கள் என்று காத்திருந்தார்கள் பல பிரமுகர்கள். அந்த யந்திர வாழ்க்கை ஒரு பொன்விலங்கு போல் என்னைக் கட்டிப் போட்டிருந்தது. இப்பொழுதுதான் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டு சுதந்திரமாய் மூச்சு விட முடிகிறது. சின்ன சின்ன சந்தோசங்களை அனுபவிக்கவும் மனம் விரும்புகிறது). முத்து கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து கடைக்கு வருவது குறைந்திருந்ததால் சோமு வந்திருந்து இவரோடு கொஞ்சநேரம் கதைத்து விட்டு போவான். இன்று கடையில் முத்துவும் வந்திருந்ததால் சோமுவும் வந்து கதைத்துக் கொண்டிருந்தான். அப்போது முத்து சோமுவிடம் என்ன சோமு இப்ப போலீஸ் கெடுபிடி எல்லாம் இங்கு அதிகமாகி இருக்காம். அடிக்கடி வந்து தொந்தரவு செய்கிறார்களாம் என்று சொல்ல, ஓம் முத்து வாரத்தில் நாலைந்து தடவை வந்து எல்லோரையும் விரட்டி விட்டு போவார்கள். இப்ப எங்கட கடையின் நிலமையைப் பார்க்கும்போது எனக்கும் வேலை போய் விடும்போல் இருக்கு. ஏண்டா என்ன விஷயம் என்று முத்து கேட்க, சோமுவும் இப்ப கடையில் வருமானமும் குறைவு. ஐயா வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்கவே சிரமப் படுகின்றார். எனக்கே இரண்டு மாதமாக சம்பளம் வரவில்லை. அவரும் கடையை யாருக்காகவாது விற்று விடுவதற்கு முயற்சி செய்கிறார். நல்ல பார்ட்டி இருந்தால் சொல்லுபடி தனது நண்பரோடு போனில் பேசிக்கொண்டிருந்தவர். இந்த இடத்தில நல்ல பேரோடு இருக்கிற கடை இனி யார் எடுப்பார்களா தெரியாது. இப்படி இவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போது சிரத்தையுடன் வேலை செய்து கொண்டிருந்த போதிலும் சாமிநாதனின் வியாபார மூளை உள்ளுக்குள் சில கணக்குகளைப் போட்டபடி இருந்தது. இங்கு வந்து தங்கிய இவ்வளவு காலத்தில் அந்தப் பக்கத்து கடைகள் காணிகளின் மதிப்புகள், வியாபாரங்களில் பெறுமதிகள் எல்லாம் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. கை வேலை செய்துகொண்டிருக்க மெதுவாக சோமுவிடம் பேச்சுக் குடுத்தார். ஏன் சோமு, உங்க முதலாளிக்கு இப்ப கடையை விக்க வேண்டிய அவசரம் என்ன. சோமுவும் அது வேறொன்றுமில்லை ஐயா இப்ப வியாபாரத்தால் வருமானமில்லை.அவருடைய பிள்ளைகளும் நகரத்தில் வசிக்கிறார்கள்.இனி அவர்களும் இங்கு வந்து கடையை கவனிக்கப் போவதில்லை. இவர்களுக்கும் வயதாகுதுதானே அதுதான் அவர்கள் இவைகளை வித்துவிட்டு தங்களோடு வந்திருக்கும்படி வற்புறுத்திக் கொண்டிருக்கினம். ஓமோம்....அதுவும் சரிதான் இப்ப இந்தக் கடை என்ன ஒரு பத்து லட்சம் போகுமோ. என்ன ஐயா நீங்கள் விவரம் புரியாமல் கதைக்கிறியள் அவர் போனில் இருப்பது லட்சம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.... சரி முத்து நேரமாச்சு நான் போட்டு பிறகு வாறன் என்று சொல்லிவிட்டு சோமு போகிறான்........! பார்ப்போம் இனி.........! ✍️- அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
அப்படியென்றால் உங்களுக்கு கடிச்சது மூட்டைப்பூச்சி இல்லையெனில் வேறெதுவாக இருக்கும்.....நீங்கள் தூங்கும்போது உங்கட மூன்று தெய்வங்களும் ஊசியால் குத்தி விளையாடுகிறார்கள் போல் உள்ளது......இனி செருப்பை கையில் வைத்துக் கொண்டு படுக்கவும்.......! 😂 நல்லாய் இருக்கு உங்களின் அனுபவம்.......!- நடனங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கலாம் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்.......! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் -- அக் குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு.......! --- ஒளவையார்---- பார்வை ஒன்றே போதுமே.......!
பார்வை ஒன்றே போதுமே..........( 6 ). சாப்பிட்டுவிட்டு எழுந்த சாமிநாதன் கை கழுவிவிட்டு தான் படுக்கும் கட்டிலின் கீழேயிருந்த பெட்டியை எடுத்து அதனுள் இருந்து ஒரு கைபேசியை எடுத்து சித்ராவிடம் கொடுக்கிறார். இதைப் பார் சித்ரா இது உனக்கு உபயோகப்படுமா என்று. இது விலை கூடிய ஆப்பிள் போன் ஐயா. இப்போதைக்கு என்னால் நினைத்தும் பார்க்க முடியாது. என்கூட படிப்பவர்களில் ஓரிருவர் வசதியானவர்கள் மட்டும் வைத்திருக்கினம். இதில் எல்லா வேலைகளையும் செய்யலாம் என்கிறாள். அப்படியா சரி அதை நீயே வைத்துக்கொள். அப்போ உங்களுக்கு ....எனக்கு முத்து வைத்திருக்கும் அந்த போனே போதும். அது ஒருமுறை சார்ஜ் போட்டால் ஒருவாரத்துக்கு மேல் சார்ஜ் இருக்குமாம்.யாரோ சொன்னார்கள். அவனும் புதிதாக நல்லதாக ஒன்று வாங்கிக் கொள்ளட்டும் என்கிறார். சித்ராவும் முத்துவும் ஓடிப்போய் அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்ள மகேஸ்வரியின் கண்களில் நட்பையும் மீறிய ஒரு சுடர் தெரிகின்றது. பிள்ளைகள் சும்மா பகிடியை விட்டுட்டு ஐயா சொல்லுறதை கவனமாக கேளுங்கோ. எனக்கும் முன்னம் இப்படி ஒரு யோசனை வரவில்லை. முத்து வீட்டு செலவுகள் பற்றி நீ யோசிக்காத. என்னிடமும் கொஞ்சப் பணம் இருக்கு. எங்கட வயலும் நல்லா விளைஞ்சிருக்கு, அறுவடை செய்து வித்தால் அதிலும் காசு வரும் சமாளிக்கலாம் என்று மகேஸ்வரி சொல்லிவிட்டு என்கூடப் படித்த பார்வதிதான் இப்ப கல்லூரி உப அதிபராக இருக்கிறா அவவிடம் சொன்னால் ஏதாவது செய்வா என்கிறாள். "கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமன்றோ" முத்துவும் அரை மனதுடன் படிப்பதற்கு சம்மதம் தெரிவிக்கிறான். இந்த விடுமுறை முடிந்து கல்லூரி தொடங்கியதும் அவன் சேர்ந்து விடுவான். காலம் எதற்காகவும் காத்திருப்பதில்லை. சித்ரா வக்கீல் படிப்பை எடுத்துக் கொண்டு படிக்க, முத்து பிஸினஸ் மேனேஜ்மண்ட் பற்றி படித்துக் கொண்டு வருகிறான். ஒருவர் பின் ஒருவராக இருவரும் தங்களது படிப்புகளை முடித்து பட்டங்கள், சான்றிதழ்களுடன் வெளியே வருகின்றார்கள். சித்ராவுக்கு சாமிநாதன் சங்கிலியையும், முத்துவுக்கு தனது கைக்கடிகாரத்தையும் பரிசாகக் கொடுக்கிறார்.அவர்கள் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்தும் அவர் வற்புறுத்தி அவர்களிடம் கொடுத்துவிடுகிறார். அன்று நடந்தது, கோபத்தில் சாமிநாதன் அந்த கிளப்பை விட்டு சென்றபின் ரேகா தள்ளாடியபடி ஒரு இளைஞனின் அணைப்பில் கவுண்டருக்கு வருகிறாள். அவளிடம் விடுதி மானேஜர் வந்து ரேகாம்மா சற்று முன்புதான் உங்கள் கணவர் இங்கு வந்து உங்களை விசாரித்து விட்டு சென்றார் என்று சொல்ல,அதைக் கேட்டதும் ரேகாவுக்கு போதை சட்டென்று குறைந்து விட்டது. இப்போ அவர் எங்கே எனக் கேட்டாள். அவர் உள்ளேதான் எங்காவது இருப்பார் என நினைக்கிறேன் என்று அந்த மானேஜர் சொன்னார்.ரேகாவும் ஒவ்வொரு மேசையாக அவரைப் போய்த் தேடியும் அவரைக் காணவில்லை. அப்போது அவளுடன் பொழுதைக் கழித்த அந்த வாலிபன் இன்னொரு நடுத்தரவயசுப் பெண்ணை அணைத்தபடி வந்து என்ன ரேகாம்மா பதட்டமாய் இருக்கிறீங்கள் ஏதாவது பிரச்சினையா என்று கேட்க ....ம் .....பிரச்சினை போலத்தான் இருக்கு. சற்று முன் எனது கணவர் இங்கு வந்திருக்கிறார் போல, என்னை உன்னுடன் சேர்த்து பார்த்திருப்பாரோ என்று சந்தேகமாய் இருக்கு. எதுக்கும் நீயும் கவனமாய் இருந்துகொள். அவனோ சந்தேகமே வேண்டாம் மேடம். நாங்கள் மாடியில் இருந்து இறங்கி வரும்போதே அவரை நான் பார்த்தேன். அவரும் எங்களைப் பார்த்தார். அதன்பின் அவர் கோபமாக எழுந்து சென்றதையும் நான் பார்த்தேன். ஓ...ஷிட் .....என்று புறுபுறுத்தவள், ஏன் நீ இதை எனக்கு முதலே சொல்லவில்லை என்று கடிந்து விட்டு வெளியே ஓடிவந்து ட்ரைவர் சுந்தரத்தை அழைக்க அவனும் பிடித்துக் கொண்டிருந்த சிகரட்டை கீழே போட்டு மிதித்து விட்டு ஓடிவந்து என்னம்மா என்றான். முட்டாள் உனக்கு எத்தனைதரம் சொல்வது சிகரெட் பிடித்து விட்டு என்முன்னே வராதே என்று, கொஞ்ச நேரத்துக்கு முன் ஐயாவைப் பார்த்தாயா, அவர் இங்கு வந்திருந்தாரா என்று கேட்டாள். அவர் வந்திருக்க வேண்டும். அவரது கார் அங்கு நின்றதைப் பார்த்தேன் ஆனால் அவரைக் காணவில்லை. சரி ....கெதியா வண்டியை எடு வீட்டுக்கு போகலாம் என்றாள். வீட்டுக்குள் ஓடிச்சென்றவள் அவசரமாக தங்களது அறைக்கு சென்று பார்த்தாள்.அங்கே சாமிநாதன் இல்லை.கட்டிலில் அவர் கந்தோருக்கு கொண்டுசெல்லும் கணனிக் கைப்பை கிடந்தது...........! பார்ப்போம் இனி........! ✍️ ( அன்புள்ளங்கள் நீங்கள் தரும் ஊக்கத்துக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்).- அதிசயக்குதிரை
- சிரிக்க மட்டும் வாங்க
- இனித்திடும் இனிய தமிழே....!
திருவாசகம் பற்றி வை.கோ. வின் அருமையான பேச்சு.......! 🙏- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : அன்று சென்றவனை இன்னும் காணவில்லை என்ன செய்வதடி தோழி? ஆஹா தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி கண்கள் வாடுதடி தோழி பெண் : ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி? பெண் : பன்னீர் நதியில் குளித்து வந்தாலும் பருவம் தூங்குமே தலைவி பெண் : வெந்நீர் நதியைப் பன்னீர் எனவே பேசலாகுமோ தோழி பெண் : இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம் ஏங்கலாகுமோ தலைவி பெண் : கடையிருந்தும் பொருள் கொள்வோரில்லையே கலக்கம் வராதோ தோழி.....! ---தூது செல்ல ஒரு தோழி இல்லையென்று ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது .........! 🤔- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கொஞ்சம் ரசிக்க
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
gowrybalan தோழி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கௌரிபாலன் & தோழி ........! 💐- பார்வை ஒன்றே போதுமே.......!
பார்வை ஒன்றே போதுமே........ (5 ). அவரது மனம் அவரை இடித்துரைத்தது. "நீயோ வேலை வேலை என்று அலைகிறாய் என்றாவது ஒருநாள் என்றாவது ஒருநாள் அவளைப்பற்றி யோசித்திருக்கிறாயா. பணமும் வசதிகளும்தான் வாழ்க்கையா. அவளும் உணர்ச்சிகளோடு ஊசலாடும் பெண்தானே. எவ்வளவு காலத்துக்குத்தான் வெறும் சுவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது". ஏன் நான் இவர்களுக்காகத்தானே ஓடி ஓடி உழைக்கிறேன். சிறுவயதில் இருந்து நான் பட்ட துன்பங்கள் இவர்களுக்கு வேண்டாம் என்றுதானே நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறேன். எவ்வளவு கஷ்டப்பட்டு இப்படி ஒரு வணிக வளாகத்தை உருவாக்கி இருக்கிறன். இதன் கிளைகள் பிறநாடுகளிலும் விரிய விரிய எனக்கும் பொறுப்புகள் அதிகரித்துக்கொண்டே போகின்றது தெரியுமா. கொஞ்சம் அசந்தாலும் அத்தனை உழைப்பும் வீணாகி விடுமே. நான் கொஞ்சம் மது அருந்துவதுண்டுதான் ஆனால் இதுவரை உன்னைத் தவிர இன்னொரு பெண்ணை நினைத்தும் பார்த்ததில்லையே. என் தாயின் இடத்தில் அல்லவா உன்னை வைத்திருந்தேன். அதுக்காக இன்றைய பசிக்கு இன்று சாப்பிடாமல், இன்று வாழாமல் இருக்கலாமா. மனசாட்சி கேட்டது. எல்லாம் ஒரு சில நிமிடங்கள்தான். எடுத்த துப்பாக்கியை கீழே வீசி எறிந்துவிட்டு சற்று நேரம் பால்கனியில் நின்று வானத்தைப் பார்த்தார். நல்ல நிலவு எறித்துக் கொண்டிருந்தது. அப்படியே கிளம்பி கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு லொறியில் ஏறி எங்கேயோ காடாய் தெரிந்த இடத்தில் இறங்கி மீண்டும் நடந்தார் நாள் வாரம் பார்க்காமல். அப்போது உள்ளிருந்து மகேஸ்வரி குரல் குடுக்கிறாள் சித்ரா ஐயாவை சாப்பிட வரச்சொல்லு என்று. அந்த அழைப்பில் தன்னுணர்வு பெற்றவர் பழைய நினைவுகளை உதறிவிட்டு எழுந்துவந்து சாப்பிட அமர்ந்தார்.எல்லோரும் அன்றைய சம்பவங்களை கதைத்துக் கொண்டே சாப்பிடுவது வழக்கம். அப்போது சாமிநாதன் முத்துவிடம் முத்து நான் ஒரு யோசனை சொல்கிறேன் கேட்பியா என்று சொல்ல உடனே மகேஸ்வரி குறுக்கிட்டு இதென்ன கேள்வி ஐயா ஏதோ கடவுள் அனுப்பியதுபோல நீங்கள் வந்த பின்தான் என்ர குடும்பம் தலையெடுத்திருக்கு. நாங்கள் பட்ட அவமானங்களில் இருந்து உங்களின் வழிகாட்டுதலும், உழைப்பும்தான் எங்களை மீட்டிருக்கு. நீங்கள் சொல்லுங்கோ அவன் செய்வான் என்கிறாள். முத்ததுவும் சொல்லுங்கய்யா செய்கிறேன். நீங்கள் நல்லதுதானே சொல்லுவீர்கள் என்றான். சாமிநாதனும் அவர்களிடம் உங்கள் நம்பிக்கைக்கு நன்றி. ஏன் மூத்து நீ மீண்டும் கல்லூரிக்கு சென்று படிக்கலாம்தானே.இன்னும் காலம் போய் விடவில்லையல்லவா என்று கேட்கிறார். கொம்மாவும் நீ வீட்டுக் கஷ்டத்தால கல்வியை தொடரவில்லையே என்று மிகவும் கவலைப் படுகிறா. அதுவும் சரிதானே. முத்துவும் என்னய்யா சொல்லுறீங்கள். அக்காவின் படிப்பு இன்னும் முடியவில்லை, இனிமேல்தான் நிறைய செலவுகள் இருக்கு. அது உங்களுக்கு தெரியும்தானே. அது எனக்குத் தெரியும் முத்து அதை சமாளிக்கலாம். உனக்குரிய கல்லூரி பக்கத்து நகரத்தில் இருப்பதால் நீ கல்லூரி விட்டதும் மாலையில் கொஞ்சம் வேலையும் செய்ய முடியும் இல்லையா. முத்துவும் அது முடியாது ஐயா சரியான கஷ்டம் என்கிறான். சித்ரா குறுக்கிட்டு ஏன் முடியாது தம்பி.நான் பல்கலைக்கழகம் சென்றாலும் சும்மா இருக்கப் போவதில்லை. கீழ்வகுப்பு பிள்ளைகளுக்கு டியூசன் எடுக்கப் போகிறேன். அது எனக்கும் படிச்சதை விடாமல் தொடர்வதற்கு உதவியாயும் இருக்கும். என்ன ஒரு சிறிய கணனி அல்லது கைபேசி இருந்தால் கூட நல்லதுதான். அறையில் இருந்தபடி ஆன்லைனில் வகுப்புகள் செய்ய முடியும். இப்ப அவ்வளவு வசதிகள் வந்து விட்டதுதானே. என்னுடைய சிலபல செலவுகளுக்கு அந்தப்பணம் உதவியாய் இருக்கும். ஐயா சொல்வதுபோல் நீ தயங்காமல் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம். ஏன் அக்கா உனக்கு வேணுமெண்டால் நீ என்னுடைய போனை பாவிக்கலாம். நான் இப்பொழுது சமாளிக்கிறன் பிறகு ஒன்டு வாங்கலாம். வேண்டாமடா தம்பி. அங்க இங்க ஓடியாடி வேலை செய்யும் உனக்கு அவசியம் போன் வேணும். அதுவும் நீ யாரோ வெளிவாட்டில் இருந்து வந்தவர்களிடம் செகன்ட் ஹான்டாக வாங்கிய பழைய நோக்கியா போன் அது. அதை வைத்து பாடம் சொல்லிகுடுக்க முடியாது, ஒன்டு செய்யலாம் சண்டைக்கு வாறவங்களின் மண்டையை உடைக்கலாம். இவர்கள் கிண்டலும் கேலியுமாக கதைக்க சாமிநாதன் மனம் விட்டு சிரிக்கிறார்.இப்படி சிரித்து எவ்வளவு காலமாகி விட்டது. தானும் ரேகாவும் தங்களது பிள்ளைகள் ரவிதாசோடும் நிமலாவோடும் எப்போதாவது சேர்ந்திருக்க நேரும் சமயங்களில் இப்படி மகிழ்ச்சியாய் இருப்பதுண்டு. அதெல்லாம் கனவாகிப் போச்சு.........! பார்ப்போம் இனி ........! ✍️- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒவ்வொரு ஊரும் இப்படி இருந்தால் அது எத்துணை சொர்க்கம்.........! 🙏- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சரியாகி விட்டது......மிக்க நன்றி மோகன் ......! 👏- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
பற்றைக் காட்டின் நடுவே பாதையொன்று பயணிக்கின்றது......! 💫Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிரிக்கலாம் வாங்க