Everything posted by Justin
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
பதிலுக்கு நன்றி வாத்தியார். சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப் பட்டவர், சுமந்திரனால் தமிழ் மக்களுக்கு அதிசயம் எதுவும் நிகழவில்லை. இவையிரண்டும் உண்மைகள். கேள்வி அதுவல்ல! சுமந்திரன் தமிழ் மக்களின் துன்பங்களைப் பற்றிப் பேசவில்லை என்பது எவ்வளவு தூரம் உண்மை? எவ்வளவு ஆதாரங்கள் இருக்கின்றன இந்தக் கூற்றுக்கு? இது தான் கேள்வி. "சுமந்திரனும் வேறு சில கூட்டமைப்பு அரசியல்வாதிகளும் யாழ் நூலகத்தில் இருந்து தப்பியோடினர்" என்று எழுதிய உங்கள் கருத்திற்கு படங்களை இணைத்து ஆதாரம் தந்திருந்தேன். அங்கேயும் சரி, வேறு இரு இடங்களிலும் சரி பேசாமல் போய் விட்டு, பின்னர் சுமந்திரனின் படத்தை இங்கே கண்டால் மீண்டும் வருவீர்கள். இது தான் உங்கள் கருத்துப் போக்கு. இந்த ஆண்டில் ஒரு கூடுதல் போக்கு, அப்படி வரும் போது அனுர காவடியோடு வருவீர்கள்😂! இத்தகைய, தரவுகளைத் தரும் போது "மெள்ள மாறி" விடுதல் தான் பெட்டிக் கடையைப் பூட்டுதல் எனப்படுகிறது. இப்போது கூட, ஆதாரங்களும் இல்லை, தரவுகளும் இல்லை, வெறும் அலட்டல் பாரதம் மட்டும் தான் கொண்டு வந்திருக்கிறீர்கள்!
-
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன்
சோசியல் மீடியாக்களின் குப்பை மேட்டுத் தனத்தினால், அதன் வழியாகப் பரவக் கூடிய உயிர்காக்கும் தகவல்களும் மறைக்கப் படுகின்றன என்பதை நிலாந்தன் சுட்டிக் காட்டியிருக்கிறார். நான் இங்கே பல தடவைகள் சுட்டிக் காட்டியிருப்பது போல, எந்த மூலத்தில் இருந்து தகவலை எடுத்தாலும், அந்த தகவலைச் சொல்பவருக்கு அடிப்படையான அறிவு நிலைத் தகுதியிருக்கிறதா எனச் சீர் தூக்கிப் பார்க்கும் பழக்கத்தை பார்வையாளர்கள் ("வியூவர்ஸ்" என்று அழகாகச் சொல்லியிருக்கிறார் நிலாந்தன்😎!) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தகுதியில்லாத பதிவர்களின் பின்னால் செல்லும் நிலை, உடல் ஆரோக்கியம் பற்றிய விடயங்களில் பல ஆண்டுகளாக நிலவுகிறது. ஒரு உதாரணம்: "நியாண்டர் செல்வன்" என்ற முகநூல் பதிவர் கணணித் துறை சார்ந்தவர். ஆனால், அவரது ஆர்வம் காரணமாக பேலியோ உணவு முறை என்ற விஞ்ஞான அடிப்படையற்ற ஒரு உணவு முறை பற்றிப் பதிவுகளை இட்டு வருகிறார். ஒரு புத்தகம் கூட இதைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று அறிந்தேன். இவரது நிபுணத்துவம் என்ன என்று சீர்தூக்கிப் பார்த்தால், இவரது உணவு ஆலோசனைகளைப் பின் தொடர்வதா இல்லையா என்று இலகுவாகத் தீர்மானிக்கலாம். இதை எப்படிச் செய்யலாம்? குறுக்கு வழியெதுவும் இல்லை! தேடி அறிந்து கொள்வது தான் ஒரே வழி.
-
படுபட்சி நாவல்: விசாரணை
😂இது தான் உங்கள் "வலுவான ஆதாரம்"?? "இது வரை அவர் எதையும் எழுதவில்லை, எனவே அவர் இதை எழுதியிருக்க முடியாது". அதை விட கிரிதரன் அவர்கள் பரீட்சை எழுதுவது மாதிரி "வலைத் தளத்தில் புனைவு தொடர்ந்து எழுதட்டும் பார்க்கலாம்" என்று வேறு சிறு பிள்ளைத் தனமான ஒரு சவாலை விட்டிருக்கிறார். கிரிதரன் அவர்கள் எழுத ஆரம்பித்த போது வலைத் தளங்களும், முகநூல் "இலக்கிய விமர்சகர்களும்"😎 இல்லாமல் இருந்தது கிரிதரனின் அதிர்ஷ்டம், ஒருவாறு லைசென்ஸ் எடுத்துக் கொண்டு இலக்கிய உலகில் நுழைந்து விட்டார் என நினைக்கிறேன். உங்களுடைய பிரச்சினைகள் ஒன்று அல்ல, பல்வேறு என நினைக்கிறேன்: அனுபவம் பொய் என்றீர்கள், அதை autofiction என்பதால் சீரியசாக முன்னிறுத்த முடியாத போது, இவர் இவ்வளவு நாளும் எழுதாமல் இப்ப எப்படி எழுதுவார்? என்ற மொக்கைக் காரணத்தோடு வருகிறீர்கள். ஆனால், எதிர்ப்பிற்கு உண்மையான காரணங்கள் இவையிரண்டுமே அல்ல. ஷோபா சக்தி மீதான காண்டு, அவர் செம்மைப் படுத்தி உதவிய இந்த எழுத்தாளர் மீதும் பாய்கிறது. அது தான் உண்மையான (ஆனால் வெளிப்படையாகச் சொல்ல வெட்கப் படும்) உங்கள் காரணம் என ஊகிக்கிறேன். ஆசி கந்த ராஜா, டொமினிக் ஜீவா, எஸ்.பொ, டானியல் ஆகியோரின் வரலாறு இந்த இடத்தில் அவசியமற்ற தேங்காய்ப் பொச்சு, அதை வைத்து "வெருளியை" நிரப்புகிறீர்கள் என நினைக்கிறேன்.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
@satan இந்த இடத்திலாவது நின்று பதில் சொல்லுங்கள், பெட்டிக் கடையை மூடிவிட்டு ஓடாமல்😂: சுமந்திரன், சாணக்கியன் தமிழ் மக்களின் அழிவுகளை மௌனமாக இருந்து மூடி மறைத்த ஆதாரங்கள் எவை? அதே போல, தமிழ் மக்களின் அழிவுகளை இன்று சுமந்திரனுக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் அதே கட்சியைச் சேர்ந்த பா.உக்கள் எத்தனை பேர் வெளிக் கொணரப் பாடுபடுகின்றனர்? அனேகமாக, நீங்கள் சைலன்ற் எஸ்கேப் தான், ஆனாலும் அப்படியான எஸ்கேப் போலி தான் நீங்கள் என வாசகர்கள் அறிய வேண்டுமென்பதால் கேட்டு வைக்கிறேன்!
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
புதிதாக ஏதும் சொல்வீர்கள் என்று பார்த்தால் அதே பழைய கதை தான்: "இன்ரர்னெற்றில் இருந்து அமெரிக்கர்கள் அகற்றி விட்டார்கள் ( ரஷ்யாவிற்கு இன்ரர்னெற்றைத் தொடவே வசதியில்லை, இன்னும் ரின் பால் பேணியில் நூல் கட்டிய போன் தான்! எனவே ரஷ்யாவால் மீள ஏற்ற முடியாது ஆவணங்களை😂!) "இந்தி தெரியாது போடா!" என்பவனுக்கு உண்மையிலேயே இந்தி தெரியாமலும் இருக்கலாம்!
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
நீங்கள் சரியாகத் தான் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஜேம்ஸ் பேக்கர் வாய் மூலம் வழங்கிய வாக்குறுதி இது என்று தான் தற்போது இருக்கும் ரஷ்ய தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். இதற்கு அமெரிக்கர்கள் சொல்லியிருக்கும் பதில் "கிழக்கு ஜேர்மனியில் இருந்து சோவியத் படைகள் வெளியேறும் வரை, ஒரு அங்குலம் கூட மேற்கு ஜேர்மனியில் இருக்கும் நேட்டோ படைகள் கிழக்கு ஜேர்மனி நோக்கி நகராது" என்ற வாய் வாக்குறுதி மட்டுமே கொடுக்கப் பட்டிருந்தது" இதையே, காலமாகி விட்ட கொர்பச்சேவும் கூறியிருந்தார் (அவர் பேச்சு வார்த்தையில் நேரடியாக ஈடுபட்டிருந்த ஒருவர்). இதைப் பற்றி ரஷ்யர்களும், உக்ரேனியர்களும், அமெரிக்கர்களும் எழுதிய பல நூல்கள் இருக்கின்றன. முதல் நிலை ஆதாரங்களும் இருக்கின்றன. ஆனால், யூ ரியூப் அலட்டல்களைக் கேட்டு விட்டு அப்படியே இங்கே வந்து ஒப்புவிப்பார்கள்- ஆதார ஆவணம் கேட்டால் தாறு மாறாகத் திட்டி விட்டுப் போய் விடுவார்கள். இப்போது திட்டுவது மட்டும் கொஞ்சம் குறைந்திருக்கிறது😂.
-
தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே.!
மனித அபிவிருத்திச் சுட்டெண் போன்ற பொருளாதாரம், மருத்துவம், கல்வி ஆகிய எல்லாவற்றையும் சேர்த்த ஒரு அளவீட்டில் பார்த்தால் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதை தான். இதில் மொழி எங்கே வருகிறது? இந்தக் கவுண்ட லொஜிக் படி பார்த்தால் இந்தியாவின் தேசிய மொழியான இந்தியைப் பேசும் பீகார் தான் "மிக்க வளர்ச்சியடைந்த" மாநிலம்😂!
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
அப்படி மூன்றாம் நபர் சொல்வதை பொய் என்று நிரூபியுங்களேன்? ஜோர்ஜ் புஷ் '89 இல் சோவியத் ரஷ்யாவுக்குக் கொடுத்த "எழுத்து மூல" வாக்குறுதியில் இருந்து ஆரம்பியுங்கள்😇!
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
"புரின் சர்வாதிகாரி" என்று சொல்லும் அதே ஆட்கள் தான் - குறைந்த பட்சம் இந்தக் களத்திலாவது- "ட்ரம்ப் ஒரு மெலிதான (lite) சர்வாதிகாரி" என்றாவது எழுதுகிறார்கள். கறுப்பின மக்கள் மேல் நடத்தப் பட்ட, நடத்தப் படும் அடக்கு முறையையும் அவர்கள் தான் இங்கே கண்டித்திருக்கிறார்கள். பெண்கள் - ஓம், பெண்கள்😉 - மேல் நடத்தபடும் அடக்கு முறைகள், மாற்றுப் பாலினர் மேல் நடத்தபடும் அடக்கு முறைகள் இவையெல்லாவற்றையும் இங்கே கண்டிக்கிறார்கள். உங்கள் "காய்ச்சல் இல்லாத கண்ணுக்கு" இவற்றுள் எதையாவது "புரின் புரியன்மார்" இங்கே பேசியதாக தெரிந்திருந்தால் ஒரு தடவை சுட்டிக் காட்டுங்கள்! புலிகள் மீது இருந்த குறைகளை சொல்வோரால் புலிகளின் பெயர் நாறியதை விட, அந்தப் பிழைகளுக்கு முரட்டு முட்டுக் கொடுக்கும் "மண் லாறி" களால் தான் அவர்கள் பெயர் இங்கே மிகவும் நாறியிருக்கிறதென நினைக்கிறேன்.
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
ஜேர்மன் நண்பரைப் போலவே உங்களுக்கும் விளக்கக் குறைவு போல தெரிகிறது: 1. சிங்களத் தலைவர்களின் இனவாதம், சிங்கள இராணுவத்தின் அட்டூழியம் - இவற்றைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் உயிர் பிழைக்க ஒரு ஈழவர் ரஷ்யா ஊடாகப் பயணித்து அமெரிக்கா வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். 2. சில வருடங்களில் அமெரிக்காவில் அவர் தானே விரும்பி பிரஜையாக வந்து விடுகிறார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். 3. அமெரிக்காவின் பிரஜையாக வந்த பின்னர், ரஷ்யாவைப் பார்த்து "எவ்வளவு அருமையான தலைமை அங்கே இருக்கிறது, எவ்வளவு அருமையான உள்ளூர்க் கொள்கைகள் இருக்கின்றன!" என்று விதந்துரைக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். இதைக் காணும் ஒருவர், "அப்ப ஏன் அவர் ரஷ்யாவிலேயே தங்கவில்லை? அல்லது அங்கே போய்ப் பிரஜையாக முயலவில்லை?" எனக் கேட்பது சாதாரணமாக எதிர்பார்க்கக் கூடியது தானே? இந்தக் கேள்வி ஏன் சிலருக்குக் கோபமூட்டுகிறது எனில், அவர்களுடைய "நான் சொல்வதைச் செய், ஆனால் நான் செய்வதைக் கண்டு கொள்ளாதே!" 😎 என்ற போலித் தனத்தைத் தோலுரித்துக் காட்டி விடுவதால் தான்!
-
படுபட்சி நாவல்: விசாரணை
இது வேறு பிரச்சினையல்லவா? இதற்கான ஆதாரங்கள் ந.செ சொல்வது போல அவரிடம் இருந்தால் அதை முன்வைத்துத் தான் பேச வேண்டும். தற்போதைக்கு ந.செ விடம் இருக்கும் "ஆதாரம்" கீழிருக்கும் வரிகளில்👇: இது ந.செ வின் அபிப்பிராயம் அல்லவா? இதை வைத்துக் கொண்டு முகநூலில் விவாதம் செய்யலாம். வேறெதுவும் செய்ய இயலாது. தற்கால இலக்கிய வாதிகளுக்கு (அல்லது அப்படியாகத் தம்மை அழைத்துக் கொள்வோருக்கு) காலை எழும்பியதும் "முகநூலில் என்ன விவாதிப்பது?" என்பது தான் யோசனை போல இருக்கிறது😂.
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
புரின், கிம், சகோதரத் தோழர் கடாபி, குர்திஷ் மக்களைக் கொன்ற சதாம் - இந்த தற்குறித் தலைவர்களை எதிர்ப்போர் இலங்கையில் வாழாமல் அமெரிக்கா, ஐரோப்பா என்று வந்தது புரிந்து கொள்ளக் கூடியது தானே? புரின், கிம், சகோதரத் தோழர் கடாபி, குர்திஷ் மக்களைக் கொன்ற சதாம், இவர்களையெல்லாம் முன்னுதாரணத் தலைவர்களாகப் புகழும் ஒருவர் ஏன் அந்தந்த உதாரணத் தலைவர்களின் கீழிருக்கும் நாடுகளிலோ அல்லது ராஜபக்சக்களின் இலங்கையிலோ போய் வாழ முனையவில்லை என்பது நியாயமான கேள்வி தானே? இந்த வேறு பாடு புரியாமலா இவ்வளவு நாளும் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள்?
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
அந்த எழுத்து வடிவ வாக்குறுதியை இங்கே இணைத்தால் நாம் புரிந்து கொள்ளலாமே மருதர்? "மேற்கில் தணிக்கை செய்து விட்டதால்" நம் போன்றவர்களுக்கு அது தெரியாமல் போயிருக்க கூடுமல்லவா😎?
-
படுபட்சி நாவல்: விசாரணை
"கற்பனை கலந்த சுய அனுபவம்" என்று லேபல் போட்ட பின்னர், "இது முற்றிலும் என் சுயசரிதை" என்று அவர் பேசி வந்தால் அது சவாலுக்குட்படுத்த வேண்டிய விடயம் தான். ஆனால், கற்பனை கலந்த சுய அனுபவத்தில் இல்லாத பாத்திரங்களைக் கொண்டு வரலாம், பாத்திரங்களின் உரையாடலை மாற்றலாம், நடந்த காலத்தையும் மாற்றலாம். மேலே சுட்டிக் காட்டியது போல, அவரது பேச்சுத் தான் பிரச்சினை, எழுத்தில் அவர் கொண்டு வந்திருக்கும் விடயம் அவரது படைப்புரிமை. அதைக் கால முரண்பாடு என்று சொல்ல முடியாது. வழமையாக, இது போன்ற ஆக்கங்களில் எழுத்தாளர்கள் வெளிப்படையாக தம் "அனுபவங்கள் இவை, கற்பனையில் உதித்தவை அல்லது மாற்றப் பட்டவை இவை" என்று புத்தகத்தின் பின்னுரையிலேயே (epilogue) தெரிவித்து விடுவர். அதன் பிறகு யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். இந்த விடயத்தில் அது நடக்கவில்லை என்று தெரிகிறது.
-
இளவயதினருக்கே எயிட்ஸ் நோய்! - வைத்தியர் சந்திரகுமார்
இள வயதினரிடையே எயிட்ஸ் அதிகரிக்க பிரதான காரணங்கள் பாதுகாப்பான உடலுறவு பற்றிய அறிவின்மை, மேலும் எயிட்ஸ் நோய் வைரஸ் தங்கள் உடலில் இருக்கிறதா என்பது தெரியாத நிலைமை. இந்த இரு காரணிகளையும் குறி வைத்து இலங்கையில் எயிட்ஸ் பரவலைக் கட்டுப் படுத்தும் வேலைத் திட்டங்களை USAID என்ற அமெரிக்க அரசின் நிறுவனம் 2025 ஜனவரி வரை முன்னெடுத்திருந்தது. ஏனைய தென்னாசிய நாடுகளோடு ஒப்பிடும் போது, இலங்கையில் இருக்கும் மருத்துவ அமைப்புகள் இந்த விடயத்தில் திறன்பட செயல்பட்டதாகவும் சில USAID இடங்களில் குறிப்பிட்டிருந்தார்கள். 2025 இல், ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன் இழுத்து மூடிய முதல் வெளிநாட்டுத் தொண்டு அமைப்பு இந்த USAID அமைப்பு. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், "ஏனைய நாடுகளில் ஒரு பாலின உறவை ஊக்குவிக்க மில்லியன் கணக்கில் செலவு செய்கிறது இந்த அமைப்பு" என்பதாக இருந்தது. இதை இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து இங்கே வந்து ட்ரம்ப் ஆதரவு "அமெரிக்கர்களாக" மாறி விட்ட சில ஈழத்தமிழ் நண்பர்களும் அடிக்கடி சுட்டிக் காட்டுவர். USAID உண்மையாக இதைச் செய்ததா? இலங்கையில் எயிட்ஸ் பரவலுக்கு பாரிய காரணியாக இருப்போர் beach boys எனப்படும் இளம் ஆண் பாலியல் தொழிலாளர்கள். இதை ஆய்வுகள் மூலம் அடையாளம் கண்ட பின்னர், இந்த பாலியல் தொழிலாளர்களிடையே பாதுகாப்பான உடலுறவு, கிரமமான இரத்தப் பரிசோதனைகள், எயிட்ஸ் இருந்தால் அதற்குரிய மருந்துகள் வாங்க உதவி போன்ற முக்கியமான திட்டங்களை மட்டுமே USAID செயற்படுத்தி வந்தது. இந்த நற்காரியத்தை "ஒரு பாலின உறவை ஊக்குவித்தல்" என்று ட்ரம்ப் தரப்பு சொல்ல, அதை நம்பி எங்கள் ஈழத்தமிழ் அமெரிக்கர்களும் USAID பூட்டப் பட்டதை ஆதரித்தார்கள். இனி இவர்களுள் சிலர் விடுமுறைக்கு இலங்கை போனால், இலங்கை மருத்துவ மனைகளில் இரத்தமேற்ற வேண்டிய (blood transfusion) நிலைமைகள் ஏற்படாமலிருக்க பிரார்த்திக் கொள்ள வேண்டும்😂. ஏனெனில், இரத்தங்கள் பரிசோதிக்கும் வேலைத் திட்டங்களில், அமெரிக்காவின் USAID விட்ட இடைவெளியை வேறெந்த அமைப்பு தற்போது எடுத்துக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை. https://www.tamilguardian.com/content/us-launches-2-million-partnership-end-aids-sri-lanka
-
படுபட்சி நாவல்: விசாரணை
இந்த நூலை இன்னும் வாசிக்கவில்லை. ஆனால், எழுத்தாளர் "autofiction" என்று பெயர் வைத்ததே "தன் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவுக் கதை" என்பதாலாக இருக்கலாம். Autofiction என்ற இலக்கிய வகையின் வரைவிலக்கணம் இப்படி இருக்கிறது: Autofiction, short for autobiographical fiction, is a genre of literature that combines elements of autobiography and fiction எழுத்தாளர் இதனை "சுயசரிதை-autobiography" என்று பெயரிட்டிருந்தால், கிரிதரன் , நெடுமாறன் ஆகியோரின் விமர்சனங்கள் நியாயமானவையாக இருக்கும். அப்படியொரு லேபல் இல்லாதவிடத்தில், இந்த விமர்சனங்கள் அர்த்தமற்றவை.
-
நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.
உங்கள் சட்ட அறிவையும் பொது அறிவையும் காட்டும் கருத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறோம், நன்றி😇! உண்மையில், இன்று சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளில் பலரை ரணில் மைத்திரி அரசின் நிர்வாகம் கைது செய்யவில்லை. உங்கள் "சட்ட வியாக்கியானத்தின்" படி அதனால் தான் ரணில் அரசு விடுதலை செய்யத் தடை இருந்திருக்கிறது போல! நீங்களெல்லாம் இலங்கை சுப்றீம் கோர்ட்டில் இருக்காமல் ஏன் இங்க நிக்கிறீங்களோ தெரியவில்லை😎!
-
சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து!
நிழலி சொல்லியிருப்பது நியாயமான கருத்து. பொட்டர் மட்டுமல்ல, திலீபன் கூட மருத்துவக் கல்லூரி செல்லும் வாய்ப்பிருந்த ஒரு படிப்பாளி என்று அறிந்திருக்கிறேன். @island உங்கள் கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்!
-
நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.
🤣ஆம் உறவே! அநுர பால்குடி. "ஆணைப் பெண்ணாக மாற்றுவது தவிர எல்லாம் செய்யும் வல்லமை பெற்ற" அதிபர் பதவியில் இருந்த படி, ஆனந்த சுதாகரனைக் கூட விடுவிக்காமல் இருக்கும் அநுர, நீங்கள் சொன்னது போல இனவாதியல்ல! இது வெறும் அலகு குத்திய காவடியல்ல உறவே, அலகை "வேறெங்கோ" குத்திக் கொண்டு தூக்கும் அபூர்வ காவடி😎!
-
இரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த என் நண்பனின் கதை இது - கண்டிப்பாக வாசிக்கவும் - நிழலி
இந்த மச்சை தானத்திலும், உடல் உறுப்பு தானத்திலும் எம்மவர்கள் அக்கறையாக ஈடு பட வேண்டும் என, சில ஆண்டுகள் முன்னர் ஒரு யாழ் கள உறவின் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பின் காலத்தில் எழுதியிருந்தேன். ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதி முறைகள் இருக்கலாம். அமெரிக்காவில், மச்சை தானத்திற்காக பதிவு செய்ய 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். ஆனால், 45 வயதிற்கு மேற்பட்டோரும் பதிவு செய்யலாம், ஆனால் பரிசோதனைக்கான செலவை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும். வயது ஒரு காரணமாக இருப்பதற்குக் காரணம், வயது அதிகரிக்கும் போது தானம் செய்பவரின் மச்சைக் கலங்கள் பெறுபவரின் உடலினுள் பெருக்கமடைவது குறைவாக இருக்கும் என்பதே.
-
நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.
அநுரவுக்கு அலகு குத்தி நீங்கள் தூக்கிய காவடியை இறக்கி வைப்பதா அல்லது புத்தர் சிலை விவகாரம் ஆரம்பித்த பின்னர் வந்து கருத்துச் சொன்ன ஏனையோரைக் காட்டி அனுர அரசுக்கு முரட்டு முட்டுக் கொடுப்பதா என்ற தெரிவுகளில் இரண்டாவதைத் தேர்ந்திருக்கிறீர்கள்😂! நான் இன்னொரு திரியில் சுட்டிக் காட்டியது போல, முள்ளிவாய்க்காலுக்குக் காரணமான மகிந்தவை பதவியில் அமர்த்த உதவிய புலிகளைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன😎? இது போன்ற முட்டாள் தனமான கேள்விகளைப் பத்தியாக மாற்ற நிலாந்தன் எந்த ஹோட்டலில் றூம் போட்டு யோசிக்கிறார் என்று அறிய வேண்டும்! அநுர பதவியில் இருப்பதால் , எந்த தமிழ் கட்சியாக இருந்தாலும் அனுரவோடு தான் பேச வேண்டும். இதை விட்டு விட்டு "நாம் 14 மாதங்கள் முன்பு ஆதரித்த சஜித் பதவிக்கு வரும் வரை பேச்சு வார்த்தையில் இறங்கோம்!" என்று நிற்க தமிழர்கள் என்ன நிலமும், இராணுவமும் வைத்துக் கொண்டு காலங் கடத்தும் வகையில் வசதியாக இருக்கிறார்களா என்ன?
-
சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்?
நீதிமன்றத்தின் தீர்ப்பையே உதாசீனம் செய்து "பெண்கள் உள் நுழைய முடியாது" என்று விதி வைத்திருக்கும் கோவில் அல்லவா இது? பெண்களை விலக்கி வைத்தவர்கள் திருடர்களை அவர்களுக்கு மாதவிடாய் வருவதில்லை என்ற காரணத்தால் அனுமதித்திருக்கிறார்கள். பிறகு தங்கம் திருடு போகாமல் இருக்குமா😎?
-
நீரில் மிதக்கும் பனிக்கட்டி? - நிலாந்தன்
2004 இல், மகிந்தவை மறைமுகமாக பதவிக்கு வர ஆதரித்து முள்ளிவாய்க்காலில் மக்களையும் இழந்து தாமும் அழிந்த புலிகளும் இப்போது இல்லை. 2024 இல் சஜித்தை ஆதரித்த சுமந்திரனும் இப்போது மக்கள் பிரதிநிதியாக இல்லை. ஆனால், முள்ளிவாய்க்கால் வரை புலிகளோடு அரசியல் துறைப் பிரபலமாக பயணித்த நிலாந்தன் மாஸ்ரர் மட்டும் எதையும் இழக்காமல் "ஆய்வாளர்" பதவியிலேயே இருக்கிறார்😂!
-
கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை வரலாற்றில் தமிழனுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்!
இதைக் கொஞ்சம் 30,000 அடி உயரத்தில் இருந்து பாருங்கள்: கொழும்புப் பல்கலையின் கலைப் பீடத்தினுள் வரும் ஒரு பிரிவு (division) பொருளியல் பிரிவு. ஆனால், கொழும்புப் பல்கலையின் சட்ட பீடத்தில் முதலாவது பீடாதிபதியே (Dean) பேராசிரியர் நடராஜா எனும் தமிழர் தான். அதன் பிறகு வி.ரி. தமிழ்மாறன் கூட பீடாதிபதியாக இருந்திருக்கிறார். வேறு சில தமிழர்களும் இருந்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், தற்போதும் கலைப் பீடத்தின் இது போன்ற பல பிரிவுகளில் முஸ்லிம்கள், அதுவும் பெண்கள் இருந்திருக்கிறார்கள். இந்தப் பெரிய பரப்புப் பார்வையில் இருந்து பார்க்கும் போது, பேராசிரியர் பொருளியல் பிரிவுக்கு தலைவராக வந்தது என்ன பெரிய ஆச்சரியம்? அவரது உழைப்பு மெச்சத் தக்கது! ஆனால், ஏன் இந்த தேவையற்ற "முதல் தமிழன்" அலட்டல்?
-
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
அப்ப இதை எழுதியது யார்😂? நீங்கள் எழுதும் ஒரு கருத்திலேயே உங்களோடு நீங்களே முரண்பட்டுத் தான் எழுதுகிறீர்கள் என்றால், உங்கள் கருத்துகளை வேறு யார் கவனிக்கப் போகிறார்கள்?