Everything posted by Justin
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
ஏன் இவ்வளவு facts சொல்லி மெனக்கெடுகிறீர்கள் எனத் தெரியவில்லை😂. சுமந்திரன் பின்கதவு (தேசியப் பட்டியல்), ஆனால் கஜேந்திரன் தேசியப் பட்டியல் (முன்கதவு). கஜேந்திரகுமார் தேர்தல்களில் எத்தனை தடவைகள் தோல்வி? சுமந்திரன் லவ்வர்சுக்கு facts என்பது பாகைக் காய் மாதிரி!
-
சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
திருந்த வேண்டியது வேறு யாரும் அல்ல! கருத்தாடலின் இடையில் திடீரென்று தூக்கத்தில் இருந்து விழித்து, ஒரு தரப்பைப் பார்த்துக் கேள்வி கேட்கும் நாட்டாமை மட்டுமே திருந்த வேண்டும்😂! (அது நடக்காதென்பதும் தெரியும்😎!)
-
தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
இப்படிக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தால், பிளேட்டை அப்படியெ எ மாத்திப் போட்டு "சிங்கள தொல்லியல் திணைக்களம் தமிழர்களின் காணியைப் பிடிக்குது, சிங்களப் பகுதிகளில் இப்படி செய்வார்களா?" என்று ஒரு "பொங்கல்" வைத்திருப்பீர்களே?
-
சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
சுயமரியாதை இயக்கக் கட்டுரையில் "மூத்திரச் சந்தைக்" கொண்டு வந்தவரைக் கேட்க மாட்டீர்களா😂? உண்மை. யாழ்ப்பாணம் மட்டுமல்ல, முறுகண்டியும் கூட அப்படித்தான் என அறிந்தேன். ஆனால், ஐரோப்பாவில் இருப்போருக்கு ஒரு ஐரோப்பிய நாட்டைச் சுட்டிக் காட்டுவது பொருத்தம் என்பதால் பிரான்ஸ் உதாரணமாகியது!
-
சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
இதற்கும் மேல் கட்டுரைக்கும் என்ன தொடர்பு😂? நீங்கள் பிரான்ஸ் பக்கம் போகவில்லைப் போல தெரிகிறது. மிகச்சாதாரணமாக முட்டுச் சந்தில் சிறு நீர் கழிக்கும் ஆட்களைக் கொண்ட இடங்கள் அங்கே இருக்கின்றன! லா சப்பலிலேயே நான் கண்டிருக்கிறேன்.
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
உங்கள் போன்ற கற்பனையுலகில் வாழும் ஆட்களுக்குப் பதில் எழுதும் நோக்கில், இறந்த ஒருவரின் படங்கள் வீடியோக்களை மீண்டும் இங்கே இழுத்து வரவேண்டிய அவசியம் இல்லை என்பதால் நான் இணைக்கப் போவதில்லை! ஆனால், இணையத்தில் "பிரபாகரன் இறப்பு" என்ற தேடற்சொல் மூலம் எப்படித் தேடல் செய்வது என்பது கூடத் தெரியாமலா "சனல் 4" பார்க்கிறீர்கள்😂?
-
ஜெர்மனி ICU வில்.
இது சரியான தகவலாகத் தெரியவில்லை. தகவல் மூலத்தை இணைத்தால் நன்றிகள். இரண்டாம் உலகப் போரின் பின் அமெரிக்கா ஜேர்மனியின் அகதிகள்/குடியேறிகள் கொள்கையை மாற்றியிருந்தால், அது வரை இலட்சக் கணக்கான துருக்கியர்கள் எப்படி ஜேர்மனிக்கு வந்தார்கள்? அவர்களுள் பலர் நிரந்தரக் குடிகளாக வேரூன்றினார்களே?
-
ஜெர்மனி ICU வில்.
"ஜேர்மனி அமெரிக்காவின் மடிக்குள் இருக்கும் நாடு" என்பதை விட, மேற்குலகின் பாரம்பரியத்திற்குள் இரண்டாம் உலகப் போர் முடிவின் பின்னர் மீள வந்து இணைந்து கொண்ட, அதனால் பலன் பெற்ற நாடு என்பது தான் சரியாக இருக்கும். இதற்கு ஒரு காரணம், மேற்கு, கிழக்கு என பிரிந்திருந்த வேளையில், மேற்கினை நன்கு அமெரிக்காவும் மேற்குலகும் உதவி செய்து வளர்த்தன. வெளியே இருந்து அகதிகளாக வந்தோர் கூட, கிழக்குப் பாதியில் சற்றுத் தங்கி, பின்னர் பளபளப்பாக இருந்த மேற்கு ஜேர்மனிக்குள் தான் நிரந்தரமாக வாழ வந்தார்கள் - இந்த சொந்த அனுபவத்தை மறந்தவர்கள், நித்தி புகைக்கும் அதே வஸ்துக்களைப் புகைக்கும் ஆட்களாக இருப்பார்கள் என சந்தேகிக்கிறேன்😎. ஜேர்மனி, குடியேறிகளை வரவேற்கும் நாடாகச் செய்த ஒரு தவறு, தன்னுடைய ஜனநாயகப் பாரம்பரியங்களோடு ஒத்து வராத, ஒன்றிணைய விரும்பாத மக்களையும் பிரஜைகளாக ஏற்றுக் கொண்டமை தான். அது புதிதாக வந்த இஸ்லாமியர்களாகவும் இருக்கலாம், சில தசாப்தங்கள் முன்னர் வந்த இலங்கையர்களாகவும் இருக்கலாம்!
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
சனல் 4 காட்டிய படத்தில் இருப்பது பிரபாகரன் அல்ல, அது வேறு யாரோ (இறந்த ஒருவரின் உடலா என்பதும் சந்தேகம்) ஆனால், சனல் 4 ஐ ஏன் பார்க்கிறீர்கள்? ரூபவாகினி உட்பட்ட உள்ளூர் ஊடகங்களில் காட்டப் பட்ட வீடியோக்கள் இன்னும் இணையத்தில் இருக்கின்றன. அவற்றைக் கண்டால் இறுக கண்களை மூடிக் கொண்டிருக்கிறீர்கள் போல தெரிகிறது😂!
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
"இதுக்கெல்லாம் ஆதாரமில்லை" என மனம் தளர்வது ஏன்? "பச்சைக் கலரு சிங்குச்சா, சிவப்புக் கலரு சிங்குச்சா" என்று நீங்கள் பத்து இடத்தில் எழுதி விட்டாலே அது சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் வரை நின்று பிடிக்கக் கூடிய ஆதாரமாகி விடுமே😇??
-
ஜெர்மனி ICU வில்.
இது "நான் வளர்கிறேனா மம்மி?" 😂என்று வேறு யாரோ ஒரு கட்சிக் காரரின் ஆட்கள் கேட்டது போல இருக்கிறது. இந்தியாவை விட 10 மடங்கிலும் குறைவான சனத்தொகை கொண்ட ஜேர்மனி உலக பொருளாதார பலத்தில் (GDP) மூன்றாமிடம். ஒரு பில்லியன் மக்கள் கொண்ட இந்தியா மிக அண்மையாக நான்காவது இடம் (அதுவும் ஜப்பான் படுத்து விட்டதால் கிடைத்த இடம்). கோவிட்டின் பின்னரான வளர்ச்சியில் ஜேர்மனியை விட மோசமான மந்த நிலையடைந்த ஜி7 நாடுகளும் இருக்கின்றன. ஆனாலும், இருக்கும் நாடுகளுள் ஜேர்மனி தான் இன்னும் ஐரோப்பாவின் பொருளாதார powerhouse என்று சொல்லக் கூடிய நிலையில் இருக்கிறது. முதல் உலகப் போரில் இருந்து அவர்களது பலமே உடனே சுதாரித்துக் கொண்டு மொடலை மாற்றி வளர்ச்சியைத் தூண்டுவார்கள். இப்படியான ஒரு நிலை இந்தியாவில் சாத்தியமில்லை.
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
பார்க்காமையால் தான் இங்கே இணையுங்கள் என்றேன். இப்போது தான் இது புரிந்ததா😂? இப்பவாவது இணையுங்கள், என்ன சொல்லியிருக்கிறார், யாரைச் சொல்லியிருக்கிறார் என்று பார்ப்பம்! நீங்கள் தாயகத்தில் யுத்த காலத்தில் வசித்து யுத்தத்தில் இறந்த, மின் கம்பத்தில் கட்டப் பட்ட உடல்களுள் ஒன்றைத்தானும் பார்த்தறியாத ஒருவர் போலத் தெரிகிறது (உங்கள் ஏனைய பாரதங்களும் அதைத் தான் காட்டுகின்றன😎). "12.7 mm தோட்டா" என்று செய்தியில் இருக்கிறது. இந்தத் துப்பாக்கி ரவை ஏற்படுத்தும் வெளியேறும் காயம் (exit wound) எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஜெர்மனி ICU வில்.
கொரொனா வந்து 2021 இல் மீண்டும் நாடுகள் மீண்ட போது பல பிரச்சினைகள்: அமெரிக்காவில் சும்மா நிவாரணமாகக் கிடைத்த காசினால் பணவீக்கம், பாரவூர்தி -HGV ஓட்டுனர்கள் இல்லாமையால் பிரிட்டனில் வினியோகச் சங்கிலிப் பாதிப்பும், விலையுயர்வும், அதே போல ஜேர்மனியிலும் விளைவு இருந்தது. ரஷ்யாவின் விலைகுறைந்த எண்ணையும், எரிவாயுவும் உள்ளூரில் விலைகளைக் குறைவாக வைத்திருக்க உதவின. ஆனால், அது தான் ஜேர்மனியின் நீண்ட கால வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்தது என்பது ஜேர்மனியில் வசித்தாலும் அதன் கலாச்சாரம் பற்றிய புரிதல் இல்லாமல் வாழும் சிலரின் தவறான கணிப்பு. வெளிநாடுகளுக்கு விற்கவென்றே பொருட்களைச் செய்து ஏற்றுமதி செய்த ஜேர்மனி, தற்போது அந்தப் பொருளாதார மொடல் சந்தைப் போட்டி காரணமாக வேலை செய்யாமல் விட்டதால் பாதிக்கப் பட்டிருக்கிறது. சீனாவும் இதே போன்ற ஒரு உற்பத்திக் குறைவினால் (manufacturing slowdown) பாதிக்கப் பட்டிருக்கிறது. இதையெல்லாம் ICU என்றால் "இந்தியா எப்பவோ அரை உயிரோடு புதைக்கப் பட்டு விட்டது" என்றல்லவா எழுத வேண்டும்😂? இவையளும் இவையிண்ட அரைவேக்காட்டு ஆய்வுகளும்!
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
இரண்டு பேர் மட்டும் இருக்கும் ஒரு கட்சியை வைச்சுக் கொண்டு தேர்தலில் தனக்கு ஒரு சீற் வெல்லலாம் என்று முன்மாதிரி காட்டியிருக்கிறாரே ஒரு அரசியல் வாதி? யாரென்று தெரிகிறதா😎?
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
🤣 அந்த வீடியோவை இங்கே இணைப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்? "ஞாபகம்" என்பது கொஞ்சம் சிக்கலான விடயம். நீங்கள் கனவில் கண்டது கூட "ஞாபகம்" ஆக பின்னர் தெரியக் கூடும்!
-
'அழுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்'; ஆய்வுகள் சொல்வது என்ன?
கண்ணீரின் இன்னொரு முக்கியமான நன்மை, அதில் இருக்கும் நுண்ணியிர்களுக்கெதிரான பதார்த்தங்கள். Lysozymes எனப்படும் நொதியங்கள், பல பக்ரீயாக்களின் மேல்படையான கலச்சுவரை அழிக்கக் கூடிய ஆற்றல் மிக்கவை. இதனால் தான், உணர்ச்சிகளால் மட்டுமல்லாமல் கண்ணுக்குள் தூசு விழுந்தாலும் உடனடியாக கண்ணீர் சுரந்து கண்களைப் பாதுகாக்கிறது.
-
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
அருமையான தீர்ப்பு! ஆனால், அந்த "2033 வரை பொதுப் பதவிகளுக்குப் போட்டியிடத் தடை" என்பது பிரச்சினையான விடயம். சிறையில் இருக்கும் போதே ஏதாவது பதவிக்குப் போட்டியிட்டு, தன் ஆதரவாளர்கள் மூலம் வென்று வெளியே வர முயல்வார். இவர்கள் விசப்பாம்பு போன்றவர்கள், ஒரே அடியில் அரசியல் வாழ்க்கையை முடித்து வைக்க வேண்டும். இல்லா விட்டால் மீள மீள வருவார்கள், அப்படி மீண்டு வரும் போது முன்னரை விட மோசமாக நடந்து கொள்வார்கள்!
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
வாங்கோ, வந்ததோட தொடர்ந்து எழுதுங்கோ!
-
டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!
"சார்லி கேர்க் அமெரிக்காவில் பேச்சுச் சுதந்திரத்தின் பிதாமகன்" என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவரை அவரது எண்ணங்களின் வெளிப்பாட்டிற்காக மட்டும் கொலை செய்வது நவீன உலகில் இல்லாதொழிக்கப் பட வேண்டிய ஒரு குற்றம். ஆனால், சார்லி கேர்க் வெளிப்படுத்திய, அமெரிக்க இளையோரிடம் பரப்பிய எண்ணங்களின் உள்ளடக்கத்தை அவர் இறந்த பிறகு திரித்துச் சொல்லக் கூடாது. அவரது எண்ணங்களில் சில இவை: பெண்கள் "பெண்கள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். அங்கே தங்களுடைய கணவரை அவர்கள் தேடிப் பெறுவதே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்" "குழந்தை குடும்பமா, தொழில் வெற்றியா என்று வரும் போது குழந்தை குடும்பம் தான் முன்னுரிமை பெற வெண்டும்" அமெரிக்காவின் பல்லினத்தன்மை The great replacement theory என சில வெள்ளையின மேலாண்மையுடையோர் நம்பும் சதிக் கோட்பாட்டை கேர்க்கும் ஆதரித்துப் பரப்பினார். இதன் அடிப்படை தான், "வெள்ளையின பெண்கள் எவ்வளவு அதிகமாகக் குழந்தைகள் பெற்று வெள்ளைத் தோல், நீலக்கண் குழந்தைகளை உருவாக்க முடியுமோ, அவ்வளவுக்கு அமெரிக்காவிற்கு நல்லது" என்ற போதனை. அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரம் சில மாதங்கள் முன்னர் சார்லி கேர்க் சொன்னது :" துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை பாதுகாக்க வேண்டுமானால், ஒவ்வொரு ஆண்டும் சிலர் துப்பாக்கி வன்முறைக்கு ஆளாகி உயிரிழப்பது தவிர்க்க இயலாதது. அது துவக்கு வைத்திருக்கும் உரிமைக்கு நாம் கொடுக்க வேண்டிய ஒரு விலை" நேற்று அவரது குடும்பமும் அமெரிக்கர்களின் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையைப் பேண அவரை விலையாகக் கொடுத்திருக்கிறார்கள். பரப்பிய பொய்த்தகவல்கள் "அமெரிக்காவின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் (mass shootings) ஏராளமானவை பால் மாற்றம் செய்து கொண்டவர்களால் (trans people) தான் நடத்தப் பட்டன" தரவுகள் இல்லாத இந்தப் பொய்யை, நேற்று சுடப் படுவதற்கு 1 நிமிடம் முன்னரும் கூறியிருந்தார். அவர் பேசிய இறுதியான பேச்சே இந்தப் பொய் தான் என்பது பதிவில் இருக்க வேண்டும். கோவிட் தடுப்பூசிகளுக்கு எதிரான போலித் தகவல்களும் பரப்பினார். 2020 தேர்தலில் ட்ரம்ப் தான் வென்றார் என்று இறுதி வரை பேசி வந்தார். எப்படி உருவானார் கேர்க்? 2008 இல் அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக ஒபாமா வந்த போது, உறுத்தல் ஏற்பட்ட வெள்ளையின மேலாண்மை கொண்ட ஒரு சிறு பிரிவில் இருந்து உருவானவர் தான் சார்லி கேர்க். 2012 இல் ஒபாமா இரண்டாம் தடவையும் வென்ற பின்னர், கல்லூரிகளில் கறுப்பின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சமவுரிமைத் திட்டத்தை (affirmative action) எதிர்த்து தொலைக்காட்சிகளில் தோன்றிப் பேச ஆரம்பித்தார். இதைக் கேட்ட பலர் "இந்த வெள்ளை இளைஞனுக்கு கறுப்பின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதால் அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது" என நம்ப ஆரம்பித்தார்கள். ஆனால், சார்லி கேர்க் எந்தக் கல்லூரிக்கும் தன் தகுதிகளை வைத்து விண்ணப்பித்து விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டதாக தரவுகள் இல்லை. பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், அமெரிக்காவின் எந்தக் கல்லூரியிலும் பணம் செலுத்தி, சராசரித் தகுதிகளோடு படித்திருக்கலாம். லோயராக, எஞ்சினியராக வந்திருக்கலாம். அவர் அதைச் செய்யாமல் உள்ளூர் கல்லூரியொன்றில் சேர்ந்து, அங்கேயும் கல்வி கைகூடாமல் படிப்பை இடையில் நிறுத்தி விட்டார். வாய்ப்பேச்சை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது உருவான திட்டம் தான் "Turning Point USA -TPUSA" என்ற அமைப்பின் உருவாக்கம். இந்த TPUSA அமைப்பு மூலம், கல்லூரிகளுக்குச் சென்று திறந்த வெளிக் கூட்டங்களில் "Prove Me Wrong" என்ற தலைப்பில் மேலே இருப்பது போன்ற கருத்துக்களை Sound Bites ஆக தூக்கி வீசுவது தான் அவர் பாணி. கல்லூரி மாணவர்கள் எனும் போது impressionable age உடைய, தகவல்கள் அறியும் ஆர்வமோ நேரமோ இல்லாத பலர் இருப்பார்கள்.அத்தகைய மாணவர்களிடையே, மேலே இருப்பது போன்ற விச விதைகளை விதைத்து, அவர்கள் தகவல் அறியும் முன்னரே வலதுசாரித் தனத்தை Cool Trend ஆக மாற்றி விடுவது தான் சார்லி கேர்க் அணியின் திட்டம்- Play book. அதில் கணிசமாக வெற்றியும் பெற்றார்கள். இந்த கேர்க் வெற்றியின் பலாபலன்: 2017 இல் ட்ரம்ப், 2024 இல் மீண்டும் ட்ரம்ப் 2.0. இதனால் மாற்றியமைக்கப் பட்ட அமெரிக்க உச்ச நீதிமன்றம். சாதாரண, மிதவாதிகளான மக்கள் எங்கும் நிவாரணம் பெற இயலாத நிலை. இப்படி மக்களை மிதவாதிகளாக அல்லாமல், வலதுசாரிகளாக மட்டும் இருக்க வற்புறுத்தும் "பேச்சுச் சுதந்திரத்தின்" பிதாமகன் தான் சார்லி கேர்க். தன் வாய்ப்பேச்சினால் தனது குடும்பத்தினருக்கு ஏராளமான செல்வம் சேர்த்து வைத்து விட்டிருக்கும் அமரர் கேர்க் நித்திய அமைதியில் இளைப்பாறட்டும்! அவர் விதைத்த நச்சு விதைகளை அடுத்த 50 ஆண்டுகளுக்கு அமெரிக்கர்கள் நாம் அறுவடை செய்வோம்!
-
இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது
இதோ, உங்கள் ஆவலுக்கு "அவல்!அருமையான பின்னூட்டங்கள் வீடியோவின் கீழே! (அவை காசாவை அமெரிக்கா எடுத்துக் கொள்ளும் என்ற அறிவிப்போடவே "உப்புக் கிணறு கிண்டினோம்"😎 என்று எங்கள் யாழ் கள ட்ரம்ப் விசிறிகள் போல அழ ஆரம்பித்து விட்டார்கள்).
-
ஆஸ்திரேலியாவில் 'அரை முழம் மல்லிகைப் பூவுக்கு 1980 டாலர்'; அபராதம்
விமானத்திலேயே பூச்சூடியபடி தான் பயணித்திருக்கிறார் போல! புறப்பட்ட இடத்தில் கூட விமான நிறுவன ஊழியர்கள் இது பற்றி எச்சரித்திருக்கலாம்.
-
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
மூவாயிரம் யூரோ செலவாகும் மருந்தை "சும்மா கொடுப்பதை" சொல்கிறீர்களா? ஒரு தடவை யோசித்துப் பாருங்கள்: உலகத்தில் ஏதாவது மருந்து இலவசமாக யாருக்காவது கிடைக்கிறதா? பெற்றுக் கொள்பவர் விலையைக் கொடுக்கா விட்டால் அது சும்மா வருகிறது என்று அர்த்தமல்ல. எங்கோ இருந்து வேறொருவர் விலையைக் கொடுத்திருக்கிறார் , பெறுனர் பயன் பெற்றிருக்கிறார் என்று தான் அர்த்தம். சில வளர்ந்த நாடுகளில் இது பெறுனரே வேறு வழிகளில் செலுத்தும் வரியாக இருக்கும், இலங்கை போன்ற நாடுகளாக இருந்தால், செல்வந்த நாடுகள் கொடுத்த நன்கொடையாக இருக்கும். ஒரு முதலைப் போட்டு, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து ஒரு பொருளை உருவாக்கி, அதை சும்மா கொடுத்தால், இந்தப் பொருளை தொடர்ந்து எப்படி உற்பத்தி செய்வது? இதைச் செய்யும் மாயாஜாலம் எதுவும் முதலாளித்துவத்திலோ, சோசலிச, கம்யூனிச அமைப்பிலோ கண்டு பிடிக்கப் படவில்லை. எனவே, வேலை செய்யும் மருந்துகள் விலைக்குத் தான் கிடைக்கும் (வேலை செய்யா போலி மருந்துகள் சும்மா கிடைக்கலாம், அது வேறு கதை😎). ஆனால், பெறுனருக்கு பொருளாதார வசதியில்லா விட்டால், அரசு தலையிட்டு மருந்தைப் பெற்றுக் கொடுக்கும் படி செய்யலாம். அமெரிக்காவிலேயே இந்த மாதிரியான நிவாரணங்கள் இருக்கின்றன.
-
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
ஒரு வழியாக எல்லா "புரின் புரியன்" மாரையும் வகேஷனில் இருந்து இழுத்துக் கொண்டு வந்தாச்சு😎!
-
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
மேலே ஓணாண்டியார் இணைத்த மருத்துவத் தகவல் கட்டுரையில் இருக்கும் அதே அடிநாதமான விடயத்தைத் தான் நானும் என் பாணியில் சொல்லியிருக்கிறேன். "இது முன்னோடி" என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், ஆனால் செய்தியைப் பிரசுரித்த அனைத்து இந்திய ஊடகங்களும் "ஊசி பாவிக்க தயார், அனைவருக்கும் இலவசம்" என்று கூறியிருக்கும் தகவலை நீங்கள் சரி பார்த்திருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், மருந்தைத் தயாரித்த ரஷ்ய அமைப்பின் தளத்தில் என்ரெறோமிக்ஸ் என்பதே mRNA தடுப்பூசியாக அல்லாமல், நான்கு மனிதனுக்குத் தொற்றும் வைரசுகளின் கலவை என்று இருக்கிறது. அதன் கீழ் ஒரு பந்தியில் mRNA தடுப்பூசி செய்கிறோம் என்று இருக்கிறது. இதையெல்லாம் கலந்து கட்டி ஒரு கற்பனைச் செய்தியை சில ஊடகங்கள் போட்டிருக்கின்றன. இப்படியான செய்திகள் முகநூலில், இன்ஸ்ராவில் ஓடும், யாழில் கஷ்டம் தான்!
-
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
இதை உங்களுக்கும், "நோபல் பரிசுக் குழுவில்" இருக்கும் தமிழ்சிறிக்கும் 😎 விளக்கி எவ்வளவு பயன் இருக்குமோ தெரியாது, ஆனாலும் ஏனைய வாசகர்களுக்காக: புற்று நோய்க்குத் தடுப்பூசி (cancer vaccine) என்று அழைப்பதற்குக் காரணம் இருக்கிறது. அது ஆரோக்கியமான ஒருவரில் புற்று நோய் வராமல் தடுக்கிறது என்பதால் அல்ல, உடலின் நோயெதிர்ப்பு சிஸ்ரத்தை ஏற்கனவே உருவாகி விட்ட புற்று நோய்க்கெதிராகத் திருப்பி விடும் வேலையைச் செய்வதால் தடுப்பூசி என்கிறார்கள். இதைப் பற்றிய ஆய்வுகள் உலகம் முழுவதும் நடக்கின்றன. கடந்த 2023 இல், அமெரிக்காவின் ஒரு முன்னணி ஆய்வு நிறுவனம் கணையப் புற்று நோய்க்கெதிராக எம்.ஆர்.என் ஏ தடுப்பூசியை நீங்கள் குறிப்பிட்ட 3 நிலை ஆய்வுகளுள், முதலாவது Phase 1 ஆய்வை செய்து முடித்திருக்கிறது. Memorial Sloan Kettering Cancer CenterIn Early-Phase Pancreatic Cancer Clinical Trial, Investig...Learn how MSK researchers are deploying mRNA vaccines against pancreatic cancer.https://www.nature.com/articles/s41586-023-06063-y 👆இந்த அமெரிக்க ஆய்வுக்கும், மேலே இருக்கும் "ரஷ்ய வக்சீன்" செய்திக்கும் ஒரு பாரிய வித்தியாசம் என்ன? அமெரிக்க ஆய்வை விஞ்ஞான முறைகளின் படி சஞ்சிகைகளில் peer review செய்து வெளியிட்டிருக்கிறார்கள். யாரும் சென்று பார்க்கலாம். ரஷ்யாவின் என்ரெறோமிக்ஸ் பற்றி எந்த ஆய்வு அறிக்கையும், peer review இற்கு உட்பட்டு வெளிவரவில்லை. எனவே, விஞ்ஞான உலகைப் பொறுத்த வரை, என்ரெறோமிக்ஸ் என்பது மாநகரசபையின் பைப் தண்ணீர் தான். அதை சும்மா கொடுத்தால் என்ன, அரையணாவுக்குக் கொடுத்தால் என்ன😂? புத்தியுள்ளோர் எடுத்துக் கொள்ளப் போவதில்லை!