Everything posted by Justin
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
பகிடியாகத் தான் நீங்கள் எழுதியிருப்பீர்கள் (பதில் சொல்ல இயலாமல் மூலைக்குள் அம்பிட்டால் வேறெப்படி சமாளிப்பதாம்😂?). நாங்களும் பகிடியாகத் தான் எடுத்துக் கொண்டோம். ஆனால், களவிதி ஒருவரை மனநோயாளி என்று குறிக்கும் பதங்களைப் பாவிப்பதைத் தடுக்கிறதென நினைக்கிறேன். எனவே, பகிடியை விட்டு விட்டு, ஏன் சீமான் பஞ்சாயத்து கோர்ட்டில் இருந்து டில்லி உச்ச கோர்ட் வர ஓட வேண்டிய தேவை வந்திருக்கிறதென எழுதுங்கள், கேட்கிறோம்!
-
யாழில் மாணவர்களை தவறான நடத்தைகளுக்குள்ளாக்கும் புதிய வலையமைப்பு !
இடியூ என்பது என்ன இணையத் தளமா அல்லது செயலியா? முழுப்பெயர் என்னவென்று சொன்னால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தளமா என்று தீர்மானிக்க உதவுமல்லவா?
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்ற தேவைக்காக மட்டும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் -unity for the sake of unity என்பதில் எனக்கு உடன்பாடில்லை. சீமான் என்ற தமிழக அரசியல்வாதி- அவரது தொடர் பொய்கள், எங்கள் ஈழமக்களின் துன்பங்கள், புலிகளின் தலைமையின் பிரபலம்- ஆகிய எல்லாவற்றையும் கூட்டிக் கலந்து தனது வாக்கரசியலுக்குப் பயன்படுத்துகிறார். இவர் தமிழகத்தின் ஏனைய அரசியல்வாதிகளை விட திறமான ஒருவரல்ல என்பதை வெளிக்காட்டும் பல சம்பவங்கள் நடந்து விட்டன. எனவே, ஏனைய தமிழக அரசியல் வாதிகளைப் போலவே அவரையும் நடத்துவதே முறை. அதை விட்டு விட்டு, அவரைத் தலையில் தூக்கி வைப்பது, அவர் செய்யும்/பேசும் ஈனத்தனமான செயல்களையும் வெள்ளையடிப்பது என யாழில் சில ஆதரவாளர்கள் நடந்து கொள்ளும் போது, அவர்களது செயல்களை சவாலுக்குட்படுத்த வேண்டும். "ஒற்றுமை" என்ற பெயரில், இத்தகைய நச்சு விதைகளைக் காவித் திரிவோரை நாம் அணைத்துக் கொள்ள முடியாதென நான் நினைக்கிறேன்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
இனி நா.த.க "Sex Offenders Wing" என்றும் ஒன்று ஆரம்பிக்கலாமென நினைக்கிறேன்! நம் ஆட்கள் கண்ணைக் கூட சிமிட்டாமல் "என்ன தவறு அதில்?" என்று இங்கே கொண்டு வந்து வீடியோ ஒட்டுவர்😂!
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
Arbitration வழி தீர்க்கும் படி சொல்லியிருக்கிறார்களா? இந்தக் கட்டளையின் எழுத்து வடிவத்தை தேடிப் பார்த்தேன், காணவில்லை! ட்ரம்பிற்கும் சீமானுக்கும் பல ஒற்றுமைகள். அவற்றுள் ஒன்று இவ்வாறு வழக்குகளை இழுத்து, தாமதமாக்கி சகல சந்து பொந்துகளுக்குள்ளாலும் பூந்து ஓடி, ஒழிந்து கொள்வது. இனி அமித்ஷாவின் அண்டர் வேயாருக்குள் இருந்து அடிக்கடி வெளியே வந்து "மானத்திற்காக இறந்தவர்களின் மகன் நான்" என்று வாய் வேட்டு விடுவார் என நினைக்கிறேன், ஆள் மானஸ்தன்😎!
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
நீங்கள் விசுகரிடம் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள். "பிரபாகரனை தலையில் வைத்திருக்கிறார்கள்" என்ற ஒரே காரணத்திற்காக விசுகர் இது வரை தடவிக் கொடுத்த அல்லது கண்டிக்காமல் மொள்ளக் கடந்து போன றௌடிகள், கள்ளர்கள், முடிச்சு மாறிகள் பலர் இருக்கிறார்கள். தற்போது சீமான், அவ்வளவு தான். ஒரு எடுகோளுக்காக: நாளை இனப்படுகொலையாளி கோத்தா ரீம் வந்து "பிரபாகரன் எங்களுக்கு வழி காட்டி தெரியுமா?" என்று ஒரு போடு போட்டால், விசுகர் கோத்தாவையும் தடவிக் கொடுக்க வழி தேடுவார்😂! No offense விசுகர்! இது உங்களுக்கே நான் பல முறை நேரடியாகச் சொன்னது தான்!
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
கேவலன்!
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
செலன்ஸ்கிக்கு அமெரிக்க மக்களிடையே ஆதரவு குறைந்திருப்பதாக எங்கே தரவு இருக்கிறது? ட்ரம்பின் கூல் எயிட்டை (அல்லது அவர் சொன்னால் பிளீச்சையும்) குடிக்கும் முட்டாள் கூட்டமொன்று இருக்கிறது, அது 2016 இல் இருந்த அதே சிறு எண்ணிக்கையில் தான் இருக்கிறது. ஆனால், பெரும்பாலான அமெரிக்கர்கள் - இரு கட்சிகளையும் சேர்ந்தோர்- செலன்ஸ்கி மீது மரியாதை வைத்திருக்கின்றனர். இன்று சில நகரங்களில் செலன்ஸ்கிக்கு ஆதரவாக சில ஆர்ப்பாட்டங்களும் நடக்கின்றன. வேர்மொன்ற் மாநிலத்திற்கு குடும்பத்தோடு விடுமுறை போயிருக்கும் புண்ணாக்குப் பயல் ஜேடி வான்சை, அங்கே நடக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வேறிடத்திற்கு மாற்றியிருக்கிறார்கள். செலன்ஸ்கி தலை நிமிர்ந்து உலக வலம் வரும் நிலையில், புண்ணாக்குப் பயல் ஜேடி சொந்த நாட்டிலேயே ஒழித்துத் திரிய வேண்டிய நிலை வந்திருக்கிறது😂.
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
இந்த சேகுவேரா அமெரிக்கா தொடர்பு உதாரணம் பற்றிக் கொஞ்சம் விளக்குங்கள். நான் அறிந்த வரை சேகுவேரா அமெரிக்கா எதிர் தரப்புகளில் தான் இருந்தார்கள்.
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
புதிதாக வாசிப்பவர்களுக்காக உடனுக்குடன் மாறும் - rapidly evolving😂 நிலைப்பாட்டை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்: 1. பெண்ணைத் தெரியாது. 2. விரும்பி வந்தார். 3. அவர் பாலியல் தொழிலாளி (இவர் சேவை நாடிப் போயிருக்கிறார்) பி.கு: இதற்குப் பிறகும் "அண்ணன் சீமான்", "தமிழ் தேசியம் வளர்க்கும் சீமான்" என்று யாழ் களத்தில் முட்டோடு வரும் எவருக்கும் நான் மரியாதை கொடுக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
இப்பவெல்லாம் சீமான் ஆதரவாளர்களுக்கு "வார்த்தைகள் முட்டுகின்றன"! யூ ரீயூபில் யாராவது வார்த்தைகளைக் கோர்த்து "வாய் வழி வரும் பேதியாக - verbal diarrhea" இணையத்தில் போட்டு விட அதை மட்டும் தான் "முட்டுக் கோலாக" கொண்டு வந்து இணைக்க வேண்டியிருக்கிறது😎!
-
சீன் போட்டுட்டு இருக்காத.. உன்கூட போய் வாழ்ந்தேன் பாரு..” சீமானுக்கு ஆவேசமாக பதில் கொடுத்த நடிகை
இன்னொரு செய்தியாளர் சந்திப்பில் "அந்த பொண்ணை எனக்குத் தெரியாது" என்று சொன்னது சீமானா? இப்ப சேர்ந்து வாழ்ந்தேன் என்பது சீமானின் "பொடி டபுளா"😎? எங்கப்பா முட்டுக் கொடுக்கிற ஆட்களைக் காணவில்லை இந்தப் பக்கம்? ரூம் போட்டு யோசிக்கிறார்களா?
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
இதே புரிதல் சீமானுக்கு இருக்க வேண்டும். சீமானின் சாக்கடைத் தனமான அரசியல் உத்திகளை ரசிக்கும் தீவிர சீமான் தம்பிகளுக்கும் இருக்க வேண்டும். தற்போதைய நிலையின் படி, இந்த இரு தரப்புகளும் மாறப் போவதில்லை (தங்களுக்கு இன்பம் தரும் ஒன்றை யார் மாற்றுவர்?). எனவே, நா.த.க நச்சுச் செடியாகத் தொடரப் போவதே நடக்கும்!
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
அடுத்த 4 வருடங்களுக்குள், ஒரு கட்டத்தில் புரின் ஓவல் அலுவலகம் வரக் கூடும். அப்போது எப்படி இந்த இருவரும் குனிந்து நின்று வழிவார்கள் என்பதையும் ஊடகங்கள் பதிவு செய்யும். அது தான் இன்னும் அருவருப்பான காட்சியாக இருக்குமென நினைக்கிறேன்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
நா.த.க பஸ் சாரதி கணக்கில்லை, "பஸ்" மட்டும் தான் முக்கியம் என்கிறீர்கள்😂? சரி. இந்தியாவிலோ, தமிழ் நாட்டிலோ ஆட்சியைப் பிடிக்கும் கட்சியின் தலைவர் பிரதமர்/முதல்வர் ஆகாத அதிசயம் இது வரை நடந்திருக்கிறதா? இப்பவே, கொன்டக்ரையும், பயணிகளையும் வெளியே தள்ளி விடும் சாரதி சீமான், நாதக வென்றால் ஒதுங்கிப் போய் விடுவார் என்கிறீர்களா?
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
இது வரை யாரும் கண்டிராத ஓவல் அலுவலக சந்திப்பாக இருந்தது😂. கமெராக்களுக்கு முன்னிலையில் வைத்தே செலன்ஸ்கியை அவமானப் படுத்தி அனுப்பியிருக்கிறார்கள். எல்லாம் ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த போது, இடையே புகுந்த (புண்ணாக்குப் பயல்!) ஜேடி வான்ஸ், செலன்ஸ்கியைப் பார்த்து "நீங்கள் ராசதந்திர வழிகளில் தீர்த்திருக்க வேண்டும்" என்றார். செலன்ஸ்கி அவருக்குக் கிட்டவாகக் குனிந்து "ஜேடி, என்ன வகையான ராசதந்திரத்தைச் சொல்கிறீர்கள்?" என்று கேட்கிறார். அது ஜேடி க்கும், ட்ரம்புக்கும் சுட்டு விட்டது. அடிப்படையில், ட்ரம்ப், ஜேடி வான்ஸ் போன்ற வலது சாரிகளின் ஒரு இயல்பு தங்கள் இமேஜ் பற்றிய ஒரு பாதுகாப்புணர்வின்மை - feeling insecure. உள்மனத்தில் இருக்கும் பாதுகாப்புணர்வின்மை தான் வெளியே பெண்கள், சிறு பான்மையினர், தங்களிடம் சார்ந்திருப்போர் நோக்கி அதட்டலாகவும், அதிகாரமாகவும் வெளிப்படுகிறது என நினைக்கிறேன். கனிம வள ஒப்பந்தம் கைச்சாத்தாகவில்லை, பத்திரிகையாளர் சந்திப்பும் ரத்து. ட்ரம்பின் கனிம வளச் சுரண்டலில் இருந்து தற்போதைக்குஉக்ரைன் தப்பி விட்டது . அடுத்து என்ன செய்யப் போகிறது எனப் பார்க்க வேண்டும்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
"தமிழர் கைகளில்"?? சீமானே தமிழர் இல்லையென்கிறார்கள், மலையாள பூர்வீகம் (எங்களில் பலரும் அதே தான்). பிறகு யார், எப்படிப் பட்ட தமிழர் ஆள வேண்டுமென்கிறீர்கள்? பிஜேபி அண்ணாமலை போன்ற தமிழர்களா? அல்லது எடப்பாடியைக் குறிப்பிடுகிறீர்களா?
-
அர்ச்சுனா ராமநாதனின் இனவாத கருத்துக்கள் பாராளுமன்ற உரை குறிப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும்
ஆங்கிலத்தில், ஒருவரது உடலைமைப்பியல், உயிரியல் இயல்புகளின் அடிப்படையில் உருவாகும் குழுக்களை race என்பார்கள். உதாரணமாக கறுப்பினத்தவர் என்பது race. பாரம்பரிய வாழ்விடம், மொழி, பண்பாடுகள், கடவுள் நம்பிக்கை, இவற்றின் அடிப்படையில் உருவாகும் வகைப்படுத்தலை ethnicity என்பார்கள். யூதர்கள் இதற்கு உதாரணம். ஹீப்று மொழியைத் தாய் மொழியாகப் பேசாத கறுப்பின யூதர்கள் இருக்கிறார்கள். Race என்பது உயிரியல் - biological features அடிப்படையில் எழுவது. Ethnicity என்பது ஒரு cultural, political construct. தமிழில் நாம் இரண்டு வகைப்படுத்தலையும் "இனம்" என்று அழைப்பதால் இந்தக் குழப்பம் விளைகிறதென நினைக்கிறேன். அமெரிக்காவில் வளரப் போகும் என் பிள்ளை, தமிழ்ப் பாரம்பரியத்தைப் பின்பற்றாமல் வளர்ந்தால் அவரைத் "தமிழ் இனம்" என்று சொல்ல முடியாது. அதே போல, அல்லாவை நிராகரிக்கும் இலங்கை முஸ்லிம் ஒருவரை "முஸ்லிம் இனத்தவர்" என்று சொல்ல முடியாது. இப்படி இன அடையாளம் - ethnic identity இல்லாமல் இருப்பதில் தவறொன்றும் இல்லை.
-
அர்ச்சுனா ராமநாதனின் இனவாத கருத்துக்கள் பாராளுமன்ற உரை குறிப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும்
யூதர்கள் ஒரு இனம் என்றால், பலஸ்தீனியர்கள் ஒரு இனம் என்றால் முஸ்லிம்களும் ஒரு இனம் தானே? மத அடையாளத்தை தங்கள் பாரம்பரிய அடையாளமாக வைத்துக் கொண்ட இனம் என்று சொல்ல முடியாதா? அரேபியாவில் இருந்து வந்தோரின் வழித்தோன்றல்களை "மூர்"கள் (Lankan Moors) என்று ஆங்கிலேயர் காலத்தில் அழைத்திருக்கிறார்கள். ஆனால், பின்னர் உள்ளூரில் முஸ்லிம்களாக மாறியோரை அப்படி அழைப்பதில்லை. எனவே "இலங்கை முஸ்லிம்கள்" தனி இனம் என்று தான் நான் நினைக்கிறேன். பிகு: ஒரு பக்கம் சைவர்களாக இருந்து கிறிஸ்தவர்களாக மதம் மாறிய தமிழர்கள் , தமிழர்கள் தானா? என்ற முணுமுணுப்பு. மறு பக்கம், தனி இனமாக இருக்க விரும்பும் முஸ்லிம்கள் "தமிழர்" என்று அடம் பிடிப்பு! இது "ஆளவந்தான் கமல் கொம்ப்ளெக்ஸ்"😎!
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
இத்தனைக்கும் காளியம்மா செய்த ஒரே "தீய செயல்" 😎 "சீமான் பிரபாகரனை 10 நிமிடங்கள் சந்தித்தார்" என்று உள் தகவலை பொதுவெளியில் போட்டுடைத்தது மட்டும் தான்! யாரிடமாவது அந்தக் கணத்தில் சீமான் முகபாவனையைச் சிறைப்பிடித்த விம்பங்கள் இருந்தால் இங்கே தயவு செய்து இணைத்து விடுங்கள், திரிக்கு சம்பந்தம் இருப்பதால்!
-
யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
இதை வேறு யாராவது சொல்லியிருந்தால் அரசியல்வாதியின் கோமாளிப் பேச்செனக் கடந்து போகலாம். இவர் அப்படியல்ல! இவர் தான் வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் மிருக வைத்திய மருந்தகம் நடத்தி வந்த "சக்தி டாக்டர்" எனப்படும் நிஜமான மிருக வைத்தியர்😂. அத்தோடு வவுனியாவில் சில அரிசி ஆலைகளும் இவரது குடும்பத்தினரிடம் முன்னர் இருந்தன, இப்போது என்ன நிலை எனத் தெரியவில்லை. பல்கிப் பெருகியிருக்கும் நாய்கள், மனிதர்களோடு போட்டி போட்டு கடைக்குப் போய் அரிசியை வாங்கிச் சமைத்துச் சாப்பிடுவதால் அரிசித் தட்டுப் பாடு வந்திருக்கிறதெனச் சொல்லும் மிருக வைத்தியர், அந்தச் சமூகத்திற்கே ஒரு அவமானம்!
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
பார்த்தியளே? காளியம்மா மீது "இருந்த மரியாதையும்" என்கிறார்கள்! எனக்கு விளங்கிய தமிழின் படி முன்னமே "அவ்வளவு பெரிய மரியாதை" அவரிடம் இருக்கவில்லைப் போல தெரிகிறது இதை வாசிக்கையில். என்ன காரணமாக இருக்குமென யோசிக்கிறேன்😎.
-
ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
பட்டறிவாளர்கள் - "பட்டு அறிந்தவர்கள்" என்று அர்த்தம். இங்கே ட்ரம்பும், ஜேர்மனியில் AfD யும் காரியம் முடித்திருக்கும் போது பல "பட்டறிவாளர்கள்" இங்கே உலாவருவர். உங்கள் போலவே, காசு/இலாபம் முன்னிறுத்தாமல் அட்வைஸ் கிடைக்கலாம்😂!
-
ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
தெரிந்து கொள்ளும் வசதிகளை வைத்துக் கொண்டு அறிந்து கொள்ளாமல் இருப்போர் சார்ந்து ஒரு கடமையும் ஏனையோருக்கு இல்லை! எனவே, வரலாறு தெரியாதவர்களுக்காக என் நேரத்தைச் செலவிடுவது என் தொழிலுக்கும், குடும்பத்திற்கும் செய்யும் துரோகம் - இவையிரண்டும் தான் முதன்மைப் பணிகள் எனக்கு. 160+ நாடுகளில் "எவற்றில் பிரச்சினையின்றி வாழலாம்?" என்ற நடைமுறை ஆலோசனையை குடியேற்ற ஆலோசகர்கள் (immigration consultant) யாரிடமாவது முறைப்படி பணம் செலுத்தி அறிந்து கொள்ளலாம்! நம்முடைய rate அதிகம்😎! தத்துவ ரீதியாக: ஒவ்வொருவரும் தங்களதும், தங்கள் வழித்தோன்றல்களதும், வாழ்க்கை இலக்குகள், விழுமியங்களுக்கு ஏற்ற இடங்களில் வாழ்வதே ஆதர்ச (ideal) நிலை. ஆதர்ச நிலை எல்லோருக்கும் கிடைக்காது. எனவே, வாழக் கிடைத்த நாடுகளில் இருக்கும் நிலையை தங்கள் தரப்பிற்கு ஆப்பு வரும் வகையில் மோசமாக்கிக் கொள்ளாமல் வாழ்வது தான் அடுத்த இலக்காக இருக்க வேண்டும். சுருக்கமாக: மரத்தில் இருந்து கொண்டு கொப்பை வெட்டத் துணை போகக் கூடாது😂!
-
ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
இந்த திரியில் எழுதி என்ன பயன் இருக்குமெனத் தெரியவில்லை, ஆனாலும் "I told you so!" 😉 என்று பிற்காலத்தில் சொல்லிக் கொள்ள உதவும் என்பதால் இந்த விடயம் சொல்ல வேண்டும்: நவநாசிகளும், நாசிகளும் "ஜேர்மனியர்" எனும் போது மண்ணிறத் தோல் கொண்டவர்களை நினைப்பதில்லை. அதனால் "சட்ட ரீதியாக வசிக்கும் எங்கள் ஆட்களையும் தூக்கி வெளியே அனுப்பி விடுவார்களா?" என்றால் பதில் "இல்லை" என்பது தான். ஆனால், சட்ட ரீதியாக வசிக்கும் எங்கள் ஆட்களுக்கு (குழந்தைகள், பேரன், பூட்டிகள்) நவநாசிகளின் ஆட்சியில் ஒரு மட்டத்திற்கு மேலே கல்வி, பதவிகளில் மேலே செல்ல முடியாத நிலை உருவாகும். இதற்காக அவர்கள் புதிய சட்டங்களைக் கூட இயற்ற வேண்டியதில்லை. இருக்கும் சட்டங்களை மீறி இனவாத வெள்ளை ஜேர்மனியர்கள் குடியேறி வம்சாவழியினரை ஒதுக்கி வைக்கும் போது, அந்த மீறல்களை அலட்சியம் செய்தாலே ஒதுக்கலை நிறுவன மயப்படுத்தி விடலாம்! ஒரு துரும்பையும் அசைக்க வேண்டிய அவசியமில்லை! இதற்கு முன்னுதாரணம் இருக்கிறதா? ஆம், 60 களில் இருந்து கறுப்பின மக்களை ஒதுக்கி வைக்க இந்த முறை தான் அமெரிக்காவில் பயன்பட்டது!இன்னும், 10 ஆண்டுகளில் மீண்டும் பயன்படப் போகிறது. இத்தகைய இன ஒதுக்கல் வாதிகளின் நுண்மைகளை , வரலாறு தெரியாத ஒருவருக்கு விளக்குவது கடினம். எனவே அவரவர் பட்டுத் திருந்துவதே ஒரே வழி.