Jump to content

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    6192
  • Joined

  • Last visited

  • Days Won

    70

Everything posted by Justin

  1. "புரின் சொல்வதை நம்புங்கள்" என்று தான் எழுதியிருக்கிறேன். ஆனால், "புரின் புரியன்மாருக்கே" உரிய மிகையுணர்திறன் காரணமாக, உடனே என் சட்டைக் கொலரைப் பிடித்து விட்டீர்கள்😎. (👇உங்களுக்கான பதில் அல்ல) புரின் சொன்னாலும், பைடன் சொன்னாலும், "பேராண்டி" சொன்னாலும், றொக்கற் பௌதீகவியல் ஒன்று தான்: ஏவுகணைகளின் பறப்புப் பாதையைப் பொறுத்து இரண்டு வகை: ஒன்று நேராகப் பறக்கும் cruise missile, மற்றது வளைவுப் பாதையில் மேலெழுந்து பின் கீழ் நோக்கி வரும் ballistic missile. நவீன கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ICBM ஏவுகணைகள் எல்லாமே ballistic தான். ஆனால், ballistic missile எல்லாம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ICBM ஏவுகணைகள் அல்ல. ஏன்? ஏவுகணை செல்லும் தூரத்தை (range) வைத்துத் தான் அது கண்டம் விட்டுக் கண்டம் பாயுமா என்று வகைப் படுத்துவர். இந்த தூரத்தைப் பொறுத்த வரையில், இது கண்டம் பாயும் ஏவுகணை அல்ல. https://armscontrolcenter.org/wp-content/uploads/2017/04/Ballistic-vs.-Cruise-Missiles-Fact-Sheet.pdf
  2. இதைத் தான் நானும் யோசித்தேன். ஒபெக் -OPEC உறுபத்தி செய்யும் மசகெண்ணை பரல்களின் எண்ணிக்கையைக் கூட்டினால், உடனே பெற்றோல் விலை குறையும். ஆனால், மீன் அதிகம் பிடிபட்டாலும் விலை வட்டுக்குள்ளேயே நிற்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு கொஞ்சம் capitalist greed போல தெரிகிறது😂!
  3. புரின் சொன்னால் நம்புவீர்களா😂? "...President Vladimir Putin says this morning's attack in the central Ukrainian city of Dnipro was carried out with a "new conventional intermediate range" missile. It was code-named Oreshnik, he adds." நடுத்தர வீச்சுடைய, ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் (Mach 10) செல்லும் hyper-sonic missile ஏவினோம் என்று புரின் சொல்லியிருக்கிறார். இது, இது வரை ஏவப் படாத வகையாக இருந்தாலும், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ICBM ஏவுகணை அல்ல. இதை அமெரிக்காவும், ஏனைய மேற்கு நாடுகளும் சொன்ன பிறகு புரின் சொல்லியிருக்கிறார். இந்த யூ ரியூபர்களின் குப்பைகளை இணைத்து யாழின் சேர்வர் இடத்தை வீணாக்குகிறீர்கள். மோகனின் பாங்க் பலன்சுக்கு வந்த சோதனையாக இருக்கப் போகிறது😂!
  4. முதலில் இளம்பிறையனை "யாழ் பல்கலை விரிவுரயாளர்" என்று அழைப்பதை தமிழ்வின் கைவிட வேணும். அவர் ஒரு "உடற்பயிற்சிப் போதனாசிரியர்" (demonstrator). "உடற்பயிற்சிப் போதனாசிரியருக்கும்" அரசியலுக்கும் என்ன தொடர்பு😂? சும்மா, பல்கலையில் காவல் கடமையில் இருக்கும் Marshal ஐ எல்லாம் கொண்டு வந்து ஒரு அரசியல் நிகழ்ச்சி செய்யும் ரொய்லெற் ஊடகங்கள் எங்கள் சாபக் கேடு!
  5. 🤣 எல! (சிங்களத்தில் எனக்கு மிகப் பிடித்தமான வார்த்தை, slang ஆக இருக்குமென நினைக்கிறேன்!)
  6. நேற்று 10 ஆம் பக்கத்தில் விட்டுட்டுப் போய் வந்து பார்த்தால், இப்ப 26 போகுது. ஆனால், a mixed bag of gifts போல நல்ல, நல்லதல்லாத பல விடயங்கள் சில நடந்திருக்கின்றன: 1. சுமந்திரன், தாயக மக்களால் நிராகரிக்கப் பட்டிருக்கிறார். எனக்கு ஏமாற்றம் தான், ஆனால் நான் அல்லவே வாக்காளன்? எனவே, மக்கள் முடிவின் படி, அவர் மீள எந்த வழியிலும் தமிழ் அரசியலில் பங்கு பற்றாமல் விலகி விட வேண்டும். இனி பேச்சு, ஏச்சு கேட்க வேண்டியதில்லை. அவருக்கு நிம்மதி😂! 2. சாணக்கியன் வென்றிருக்கிறார். படிப்படியாக தமிழரசின் தலைமையை அடையும் வரை அவர் தொடர்ந்திருக்க வேண்டும். 3. சிறிதரன், இனியாவது ஊழலை விட்டு விட்டு, கமுக்கமாகவாவது நல்ல விடயங்களைச் செய்ய வேண்டும். 4. அர்ச்சுனா: இவரது வெற்றிக்கு ஒரு காரணம் இருக்கிறது. அதை அவர் புரிந்து கொள்வாரா என்பது தான் முக்கியமான கேள்வி😎. எல்லா இடத்திலும் அகலக் கால் வைக்காமல், லேசர் fபோகஸ் மாதிரி "மருத்துவ துறையில் முறைகேடான விடயங்கள், malpractice என்பன குறித்து புதிய சட்டங்களை இயற்ற, அல்லது இருக்கிற சட்டங்களை பலமாக்க முயற்சி செய்ய வேண்டும். அதை மட்டும் செய்தாலே முழு இலங்கைக்கும் பெரிய நன்மை செய்த பெருமை கிடைக்கும். 5. NPP யில் தெரிவான தமிழ் உறுப்பினர்கள்: இவர்களிடம் பாரிய எதிர்பார்ப்பு மக்களுக்கு இருக்கும். இதை NPP யோடு இணைந்து இவர்கள் செய்ய வேண்டும் என்பது தான் என் எதிர்பார்ப்பு. மணல் கொள்ளை, போதை, மது வியாபாரங்கள், வாள் வெட்டு, பொலிசின் நேர்மை இவை போன்ற விடயங்கள் மிக அடிப்படையான baseline விடயங்கள். இதெல்லாவற்றையும் விட பெரிய பொறுப்பு, புலத் தமிழ் செயல்பாட்டாளர்களுக்கு இருக்கிறது: அது sit on your hands! இது வரை செய்ய முயன்று தோற்ற ரிமோட் கொன்ட்ரோல் அரசியலைக் கைவிட்டு விட்டு "உங்கள் பிள்ளை குட்டிகளைப் படிக்க வையுங்கள்" - நானும் அதைத் தான் செய்யப் போகிறேன்🤐.
  7. இதில் அதிசயம் எதுவும் இல்லை. 2020 replay மாதிரி இருக்கிறது எனக்கு. அந்த நேரம் எல்லா "தீ கக்கும்" தேசியவாதிகளும் "சும்மை தூக்கு, சும்மை தூக்கு" என்று விசர்க் கூத்தாடிக் கொண்டிருக்க, இனப்படுகொலையாளியின் கட்சியைச் சேர்ந்த அங்கஜன் சத்தமே இல்லாமல் பாரிய வெற்றி பெற்றார். இப்போது இனப்படுகொலையோடு தொடர்பில்லாத NPP க்கு மக்கள் பெருவாரியாக வழங்கியிருக்கிறார்கள். தங்களுக்கு பிடரியில் செருப்படி விழுந்தது தெரியாமல் புலம்பெயர் பட்டாசு ரீம் இன்னும் சுமந்திரன் தான் காரணமென்று வாயில் எச்சில் வடிய புலம்பித் திரிகிறது😂. இனியென்ன, அடுத்த தேர்தல் 2028 ஆ? புதிசாக ஏதாவது "மேக்கப்" போட்டுக் கொண்டு இதே பட்டாசு ரீம் வரும், விசர்க்கூத்தாடும்! de javu தான்!
  8. பந்தி பந்தியாக என்னவெல்லாமோ எழுதியிருக்கிறீங்கள், ஆனால் வடபகுதி தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் தமிழக மீனவர்களை என்ன செய்வது என்று ஒன்றும் சொல்லவில்லையே? "சீமான் வழியில் அரசியல்" என எடுத்துக் கொள்கிறோம்?
  9. FB?? இவைகளை நம்பிக் கருத்துரைப்பது வில்லங்கமான வேலை. சசிகலா ரவிராஜும் இப்படியான உறுதிப் படுத்த இயலாத முடிவுகளை நம்பி பிறகு ஒப்பாரி வைக்க வேண்டியிருந்தது😂!
  10. கஜேந்திரகுமார் அவர்களுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள். ஊழல் இவர்களிடம் இல்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால், "எங்கள் கொள்கையோடு ஒரே லைனில் வருவோரோடு மட்டுமே பேசுவோம்!" என்று தேர்தலில் பதவிகள் வென்று கொண்டிருந்தால், பா.உ பதவி மட்டும் தான் கிடைக்கும். சிங்களவரோடு, வெளிநாடுகளோடு, ஏனைய தமிழ் கட்சிகளோடு பேசாமல், ஒலிவாங்கியோடு மட்டுமே பேசிக் கொண்டிருக்க வேண்டிய நிலை வரும். மக்கள் இதைக் கண்டு விலகிப் போக முன்னர், சைக்கிள் காரர் கொஞ்சம் இறங்கி வர வேணும்!
  11. ஆசியர்கள், அதுவும் கலிபோர்னியாவில் என்றால் சீன, கொரிய வம்சாவழியினராக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். அவர்கள் அவ்வளவு உறைப்பு சாப்பிடுவதாகத் தெரியவில்லை (Szechuan chicken ஒரு புறநடை😂). தென்னாசியாவில் உண்மையாக எவ்வளவு பேருக்கு ஞாபக மறதி நிலை இருக்கிறது என துல்லியமாகக் கணிப்பது கடினம். அதுவும் இந்தியா போன்ற மருத்துவப் பதிவுகள் அதிகம் துல்லியமாக இல்லாத நாடுகளில் இந்தக் கணக்கீட்டை எடுப்பது மிகக் கடினம்.
  12. https://www.ucsf.edu/news/2016/02/401576/landmark-study-finds-dementia-risk-varies-significantly-among-racial-and-ethnic 👆 மேலே இருக்கும் ஆய்வு, கலிபோர்னியாவில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களில் செய்யப் பட்ட போது, வெள்ளையின மக்களுக்கும், ஆசியர்களுக்குமிடையே ஞாபக மறதியில் பாரிய வேறுபாடு இல்லை. உண்மையில் வெள்ளையின மக்களில் இது சிறிது அதிகமாக இருந்திருக்கிறது. ஆனால், ஞாபக மறதி வரும் ஆபத்தில் உச்சத்தில் இருக்கும் இரு குழுக்கள், கறுப்பின மக்களும், சுதேச அமெரிக்கர்களும். இந்த இரு இன மக்களும், பல்வேறு சமூக, பொருளாதார (socioeconomic status) நெருக்கடிகள் காரணமாக, ஏனைய ஆரோக்கியக் குறைபாடுகளாலும் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். எனவே, கார உணவு ஞாபக மறதியின் ஆபத்தை அதிகரிக்கும் ஒரு முக்கிய காரணியாகத் தெரியவில்லை.
  13. சில ஐடியாக்கள் சுமந்திரன் லவ்வர்சுக்கு: 1. மோகன் 15 முதல் 17 வரை யாழ் பராமரிப்புக் காரணமாக தடங்கலுக்குள்ளாகும் என்கிறார். "நான் சும் வாக்கு மாற்றிய வீடியோ 15 ஆம் திகதி இணைத்தேன், பராமரிப்பில் போய் விட்டது" என ஒரு கயிறு திரிக்கலாம். 2. இப்பவே "யாழ் அரச அதிபர் நேர்மையான தேர்தல் அலுவலர் அல்ல.." என்று கதையைக் கட்டி விடலாம் 3. சுமந்திரனோடு "பிஸ்ரல் ஏந்தி வந்த கடை வாயிற்காப்பாளர்" வாக்கை மாற்றி விட்டார் என்று இன்னொரு இணையத்தில் பொறுக்கிய படத்தை இறக்கி விடலாம்!
  14. ஒமோம், அந்த இடத்திலேயே விட்டுட்டு வேற விசயங்களைக் கதைக்க வேணும்😂! #கிறீஸ் போத்தல்
  15. சிறிதரனை விட சுமந்திரனை எதிர்ப்பீர்கள் என்று தெரியும், நீங்கள் மட்டுமல்ல, இங்கே இருக்கும் "சுமந்திரன் லவ்வர்ஸின்" நிலையும் அதுவே. இதையெல்லாம் தாயக மக்கள் பார்க்கவில்லை, கணக்கிலெடுப்பதில்லை. அங்கேயிருக்கும் மக்களுக்கு விளங்கிய படி, சிறிதரன் தமிழர்களிடையே மிகப் பெரிய ஊழல் அரசியல்வாதி. வெளிநாட்டு தமிழரின் உதவிகளில் மூக்கை நுழைத்து செல்வாக்கு செலுத்துவது முதல், அரச அதிகாரிகளின் நியமனத்தில் தனது செல்வாக்கினால் பதவி நீக்கங்கள், இடமாற்றங்கள் என உள்ளூரில் பிரபலமானவர் சிறிதரன். இப்போது ஜேவிபியின் சார்பில் தேர்தலில் நிற்கும் சில முன்னாள் அரச பணியாளர்கள் கூட சிறிதரனின் ஊழலால் பாதிக்கப் பட்டு, ஜேவிபியின் ஊழியர் சங்கத்தினால் காப்பாற்றப் பட்டோர் என்றால், சிறிதரனின் செயல்களால் நீங்கள் காக்க முனையும் so-called "தமிழ் தேசியம்" மீதான விளைவுகள் புரிய வேண்டும். இந்த "பெட்டி மாறியது, குட்டி மாறியது" என்பதெல்லாம் "சசிகலா வாக்குகளை சுமந்திரன் தூக்கி வென்றார்" என்பது போன்ற வட்சப் அலட்டல்கள். அலட்ட உதவும், ஆனால் தாயக அரசியலுக்கு இதனால் ஒரு விளைவும் இல்லை.
  16. பின்கதை என்னவாக இருந்தாலும், குழந்தையையும், தாயையும் தாக்கியது மிகவும் தவறான செயல். பிள்ளை நலமாக இருக்கிறதாமா?
  17. ஏன்? வீட்டுக்கு வாக்களிக்க விரும்புவோர் சுமந்திரன் உட்பட தனக்கு விருப்பமான ஒருவருக்கு அளிக்கலாம் அல்லவா? இவ்வளவு நாளும் சிறிதரன் பா.உவாக இருந்து சம்பாதித்த பார் வருமானம் போதாதாமா😂?
  18. சுமந்திரனும், அவர் மனைவியும் தென்னிந்திய திருச்சபையின் யாழ் மாவட்டப் பிரிவில் (Diocese)பதவிகளில் இருக்கிறார்கள். இப்போதும் சுமந்திரன் அந்தப் பதவிகளில் இருக்கிறாரா தெரியவில்லை, ஆனால் மனைவி இருக்கக் கூடும். அப்படி இருக்கும் ஒருவருக்கு வெளிநாட்டில் இருந்து மாதாந்தம் அங்கிலிக்கன் மிஷன் பணம் அனுப்பினால் அது அதிசயம் இல்லை. இங்கே சச்சியர் சொல்வது, அது "சுமந்திரனுக்கு மனைவி பெயரில் வருகிறது, அதை சுமந்திரன் மதம் மாற்றப் பாவிக்கிறார்" என. ஏற்கனவே குடியேறிகள் மீது காண்டில் இருந்த அமெரிக்கக் குடிகளை நோக்கி , ட்ரம்ப் குடியேறிகள் பற்றி பொய்களை அவிழ்த்து விட்டது போல இதுவும் "சுமந்திரன் லவ்வர்ஸ்"😎 என்ற சிறுகுழுவை நோக்கி எறியப் பட்ட red meat மட்டுமே.
  19. சச்சியருக்கு எல்லாக் கிறிஸ்தவர்களும் "மதமாற்றிகள்". அதே போல இங்கே யாழிலும் கத்தோலிக்கர், அங்கிலிக்கன், யெஹோவா எல்லாரும் மதமாற்றிகள் என்று நம்புவோர் இருக்கிறார்கள். இந்த கிறிஸ்தவ சபைகளிடையேயான வேறு பாடு தெரியாத அறியாமை தான் முதன்மைக் காரணம்.
  20. "வெளியுறவுக் கொள்ளை"? என் கண்பார்வை பிரச்சினையா அல்லது இந்த இடிவிழுவார் இவ்வளவு முக்கியமான ஆவணத்தில் கூட தமிழைச் சரிபார்க்கவில்லையா?
  21. வாலி, என்னப்பா சொல்கிறீர்கள்😂? "மருத்துவ தீயசக்தி" பில் கேட்சா? கொரனா தடுப்பூசி விரைவாக உருவாக பண உதவி செய்ததால் பில் கேட்ஸ் தீய சக்தியாகி விட்டரென்ற kool aid "ஐ நீங்களும் அப்படியே குடித்து விட்டீர்களா?
  22. ஹன்ரர் பைடனுக்கு சீனியர் பைடன் மன்னிப்புக் கொடுக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் சிறை போகாமல் பாதுகாக்க பைடன் குடும்பத்திற்கு ஏனைய வழிகள் இருக்கின்றன. செனட்டர் மெனண்டெசுக்கு என்ன நடக்குமெனச் சொல்லக் கடினமாக இருக்கிறது. வன்முறைக் குற்றங்கள் அல்லாமல், ஊழல் மோசடிக் குற்றங்களால் தண்டனை பெற்ற அரசியல் பிரபலங்களுக்கு இரு கட்சிகளின் ஜனாதிபதிகளும் முன்னர் மன்னிப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால், மெனெண்டஸ் தன் குற்றங்களுக்கு மன வருத்தம் கூட தெரிவிக்காமல் சமாளிக்கும் ஆளாக இருப்பது, மன்னிப்புப் பெற உதவாது.
  23. பகுதியளவில் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், யார் தீவிர இடதுசாரிகள் அமெரிக்காவில் பதவியில் இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தால் Bernie, AOC இனைத் தவிர வேறு யாரும் எனக்குத் தெரிய இல்லை. பேர்னியெல்லாம் நாட்டின் தலைமைக்கு வரமுடியாது என்று மக்கள் தீர்ப்பளித்த பின் மிதவாதிகளான பைடன், கமலா ஆட்சியில் தீவிரமாக இடது சார்பு இருக்கவில்லை. ஆனால், இனவாதம், கிறிஸ்தவ அடிப்படை வாதம் (நான் கிறிஸ்தவ தலிபான்கள் என்பேன்), வெள்ளையினத் தேசியவாதம் இவையெல்லாம் இணைந்த தீவிர வலதுசாரி அமைப்புகள், அமெரிக்காவைப் பொறுத்த வரை இடதுசாரிகளுக்கான பின்விளைவாக உருவாகவில்லை. "குடும்பங்களில் விளைவுகள்" என்பதன் மூலம் நீங்கள் ஒரு பால் திருமணம், இடைப்பாலினர் போன்ற விடயங்களைத் தொடுகிறீர்களென ஊகிக்கிறேன். பழைய காலத்தில் ஒதுக்கல் சட்ட பூர்வமாக இருந்த நிலை மாறி, சாதாரணமான ஏற்றுக் கொள்ளல், அத்தோடு தீவிர வலதுசாரிகளிடமிருந்து பாதுகாக்க சட்டப் பாதுகாப்பு என்பன உருவானது இயற்கையாகவே நிகழவேண்டிய ஒரு சமூக மாற்றம் என்று தான் நான் நினைக்கிறேன்.
  24. ட்ரம்ப், புரின் லவ்வர்ஸ் மகிழ்ச்சிக் களிப்பில் இருக்கிறார்களெனத் தெரிகிறது😎. யாரோ இங்கே சுட்டியது போல போலந்து வீழந்தால், இவையள் அனேகமாக நான் முன்னரே ஒரு தடவை குறிப்பிட்டது போல Ramstein Airbase இற்கு ஷொப்பிங் பையோடு போனால் C-17 விமானத்தில் அத்திலாந்திக்கைத் தாண்டி வட அமெரிக்கா வந்து விடலாம். பிறகு இங்கால இருந்து "சீ..இதெல்லாம் ஒரு நாடோ?" என்று புதிதாக ஆரம்பிப்பினம் என நம்புகிறேன்😂. சீரியசாகப் பார்த்தால்: KFC க்கு வாக்குப் போட்ட கோழிகள் நிலை தான். ட்ரம்பும், வான்சும் அன்றாடம் போட்டுத் தாக்கிய இனக்குழுக்கள் பல்வேறு காரணங்கள் சொல்லி ஒன்று வாக்களிக்காமல் விட்டிருக்கிறார்கள், அல்லது டரம்புக்கே வாக்களித்திருக்கிறார்கள். உதாரணமாக, 20 வருடங்களாக முழு நீலமாக இருந்த என் மாநிலம் (கமலா வென்றாலும்) பெருவாரியாக ட்ரம்புக்கு வாக்களித்திருக்கிறது. வாக்களித்தது யார் என்று பார்த்தால் ஸ்பானிய அடி அமெரிக்கக் குடிகள். அனேகமாக, மெக்சிக்கரையும், ஏனைய ஸ்பானிய குடியேறிகளையும் ட்ரம்ப் அள்ளு கொள்ளையாக நாடுக் கடத்தும் போது இவையள் மகிழ்வினம் என நம்புகிறேன். அதே போல, கறுப்பின மக்களில் ஆண்கள் கமலாவுக்கு அவ்வளவு வாக்களிக்கவில்லை. ஏன்? "பெண் எங்களை ஆள்வதா?" என்ற மேலாதிக்க மனநிலை. அத்தோடு "சட்ட விரோதக் குடியேறிகள் உங்கள் தொழில்களைப் பறிக்கீனம்" என்று ட்ரம்ப் சொல்ல நம்பி விட்டார்கள். பகிடி என்னவென்றால் இதை நம்பிய பலர் வேலை வாய்ப்புகள் இருந்தும் வேலைக்குப் போய் உழைக்காமல் தெருமுனையில் நின்று ஈயோட்டிய "குடி மக்கள்"😎. அடுத்த பகிடி: அரபு அமெரிக்கர்கள். "ட்ரம்ப் சமாதானம் தருவார்" என்று நம்பியதாக வெளியே சொல்லிக் கொண்டு தான் இவர்கள் ட்ரம்பை நோக்கிச் சாய்ந்தார்கள். ஆனால், இவர்களின் உண்மையான காரணம், பெண் வெறுப்பு வாதம், ஒரு பால் உறவு, இடைப்பாலினர் மீதான வெறுப்பு என்பதாக இருக்கிறது. மோடி வாலா இந்திய அமெரிக்கர்களும், பலஸ்தீன/அரபு அமெரிக்கர்களும் ட்ரம்போடு ஒரே கட்டிலில்: The strangest bedfellows! தென்னிந்திய/சிறிலங்கா வழி அமெரிக்கர்களின் இலக்கோ பங்கு மார்க்கெட்டில் இப்போது வருவதை விட இன்னும் இலாபம் வர வேண்டும், அதை வைத்துக் கொண்டு ஊர் சுற்றுலா, ரெஸ்லா, மான்ஷன் வீடு என்று ஜாலியாக இருக்க வேண்டும் என்பதாக எனக்குப் புரிகிறது. வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகள், மனைவி, தங்களுடைய மண்ணிறத் தோல் கொண்ட வம்சாவழியினருக்கு, தாம் இறந்த பிறகும் நீடித்திருக்கும் ஆப்பை உருவாக்கியிருக்கிறோம் என்பது புரியாமலே ட்ரம்பை ஆதரித்திருக்கிறார்கள்.
  25. நீலன், சுமந்திரன் போன்றோர் அரசியலமைப்பை மாற்றச் செய்த முயற்சிகளில் தனிநாடாக உருவாவது உள்ளடக்கப் படவில்லை. ஆனால், ஒற்றையாட்சிக்குள் சில உரிமைகளைப் பெறும் அம்சங்கள் இருந்தன. தமிழ்நெற் ஆசிரியர் தமிழ் தேசியத்தின் ஆதர்சமான (ideal) விடயங்களை மட்டும் முன்வைத்துப் பேசுவது அதியசமோ, "அதிரடிச் செய்தியோ" அல்ல! ஆனால், ஆதர்சமான விடயங்கள், அப்படியே ஆதர்சமாக மட்டும் தான் இருக்கும். மணிக்கணக்காகப் பேசலாம், பந்தி பந்தியாக எழுதலாம். தாயகத்தில் ஒரு துரும்பையும் இந்த ஆதர்ச நிலைப்பாடுகள் அசைக்க உதவாது. எப்படி ஆதர்ச நிலைப்பாடுகளை தாயகத்தில் தமிழ் மக்கள் அனுபவிக்கக் கூடிய தொட்டுணரக் கூடிய (tangible) விடயங்களாக மாற்றுவது என ஒரு திரியை கோசான் ஆரம்பித்து, இறுதியில் பலருக்கு ஆர்வம் இல்லாமையால் அது அணைந்து போயிருக்கிறது. அந்தத் திரியிலே கூட தீவிர தமிழ் தேசியர்கள் சிலர் வந்து எழுதினார்கள், "இது கடைசியில் எங்கே போகுமென்று தெரியும், எனவே இதில் நாம் பேச ஒன்றுமில்லை" என. பாவனைப் பயனைப் பார்ப்பதை விட மேலாக, பகட்டைப் பார்த்து கார், வீடு, உடை, நகைகள் வாங்குவது போலவே, தீவிர தமிழ் தேசியர்களும் வெளியில் என்ன தோற்றமென்று பார்த்துத் தான் தீர்வை எடை போடுகிறார்கள். உள்ளடக்கம், நடைமுறை நன்மைகள் என்னவென்று யோசிப்பது குறைவு.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.