Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. பனங்கட்டியில் இருப்பதும் சீனி தான் - எனவே இரத்தத்தில் சீனியின் அளவைக் கூட்டும் தான். வெள்ளைச் சீனியைக் கட்டுப் படுத்தும் படியான மருத்துவ ஆலோசனை பனங்கட்டிக்கும் பொருந்தும்.
  2. என்னிடம் நீளமாக எழுத எதுவும் இல்லை. The crux of the matter: 1. உங்கள் தவறான தரவுகள்: நீங்கள் ஓரின உறவை மனநோய் என்று தவறாகக் குறிப்பிட்டீர்கள். இது முதல் தடவையல்ல. மேலே கூட பால் மாற்ற சிகிச்சைகளைக் குழந்தைகளில் செய்கிறார்கள் என இணையக் குப்பையில் இருந்து ஆதாரமில்லாத தகவலை இங்கே பதிந்திருக்கிறீர்கள். ஓநாய் வீடியோ தேடும் நேரத்தின் பத்திலொரு பங்கு நேரம் போதும் - AAP இன் பால் மாற்ற சிகிச்சை விதிகள் எவையென்று தேடிப்பார்க்க. இப்படியான தவறான தகவல்களை எழுதி விட்டு சவாலுக்குட்படுத்துபவனை அடக்கு முறையாளன், சூடு சொரணையற்றவன் என்று சம்பந்தமேயில்லாமல் திட்டல் வேற. 2. திரியோடு ஒட்டிய கருத்து: ஈராக், ஈரான், மேற்கு பற்றிய திரியில் ஒரு பாலின உறவு , பால் மாற்றம் பற்றிய பொய் தரவுகளை யார் கொண்டு வந்தது? வாசகர்களே தேடிப் பார்க்கட்டும். 3. சீண்டல்: உங்கள் மருந்தே உங்களுக்கு ஏன் கசக்கிறது? நேரே பதில் சொல்லும் துணிவோ, நேர்மையோ இல்லாமல் உங்கள் தவறான தகவல்களைச் சுட்டிக் காட்டும் உறுப்பினர்களை எப்படி நீங்கள் விளித்திருக்கிறீர்கள் இது வரை? எனவே உங்கள் பாணியிலேயே ஈரானைப் பற்றி எழுதியிருக்கிறேன். உங்களுக்குப் புரிந்திருப்பது திருப்தி. பி.கு: இணையத்தில் கலாச்சார யுத்தம் நடத்தும் தீவிர வலது சாரிகள், தங்கள் மருத்துவ/அறிவியல் அடிப்படையற்ற குப்பைகளைப் பரப்ப உங்கள் போன்ற ஆட்களை நம்பியிருக்கிறார்கள். அவர்களின் தகவல்களை சரி பார்க்காமல் யாழுக்கு எடுத்து வருகிறீர்கள் - உங்களுடைய இந்த அறிவடிமைத் தனம் பற்றி ஒரு கரிசனைகூட இல்லாமல், சரியான தகவலைத் தர முயல்பவனை நோக்கி பாட்ஷா பாணி மிரட்டல் விட்டிருக்கிறீர்கள், அச்சம் வரவில்லை, புன்னகையே வருகிறது.
  3. இந்த கோவைக்காய் மருத்துவம் போன்ற பல செய்திகள் உதயன் பத்திரிகையில் வருகின்றன. அவற்றை தமிழன்பன் இங்கே இணைக்கிறார் என நினைக்கிறேன். உதயன் எங்கேயிருந்து எடுக்கிறதெனத் தெரியவில்லை. ஆனால், அனேகமாக ஊதிப் பெருப்பிக்கப் பட்ட நன்மைகள். சில தகவல்கள் முற்றிலும் தவறு. (இன்னொரு திரியில் பனஞ்சீனியில் வெள்ளைச் சீனியை விட அதிக நன்மை, குறைந்த கலோரி என்று ஒரு உருட்டலும் போகிறது - சீனி சீனி தான், வெள்ளை, கறுப்பு வித்தியாசமெல்லாம் சீனியை ஆரோக்கியமாக மாற்றாது)
  4. எங்கே எடுத்தீர்கள் இந்த "வரலாற்றுத் தகவலை" ?யூ ரியூப்?
  5. ம்ம்..ஹிற்லரின் வசனங்கள் எல்லாம் மேற்கோள் காட்டும் அளவுக்கு அவர் மேல் மதிப்பு வைத்திருக்கிறீர்கள் போல இருக்கிறதே? அது சரி, ஹிற்லர் அடக்கி வைத்து யார் மேல் கோபத்தைக் காட்டினார்? அவர் இப்போது எங்கே?
  6. ஏன் ஓநாய் வீடியோவையும் உகண்டாவின் LGBTQ எதிர் சட்டத்தையும் போட்டுக் குழப்பிக் கொண்டீர்களெனத் தெரியவில்லை, மீனை விட 2 அறிவு கூட இருப்பது காரணமாக இருக்கலாம்😎! ஆனால், உங்களுக்கு தெரியா விட்டாலும் homosexuality என்பது மனநோய் அல்ல! ஆனால், அதனைப் புரிந்து கொள்ளாமல் "அது இல்லை, இருக்க கூடாது, " என்று புலம்புவது கிட்டத் தட்ட ஒரு வரலாற்று, மானிடவியல் அறிவற்ற நிலை தான்-blissful ignorance!
  7. புலிகள் அமைப்பு/தமிழர் தரப்பு எப்போதும் தீர்வை நம்பிச் சென்று தலை குனிந்து வந்தனர் என்பதை நான் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறேன். என்னுடைய அபிப்பிராயம், தனி நாடு அல்லது அதற்கு மிக நெருங்கிய ஒரு தீர்வு தான் அவர்களது இலக்கு - போரிடும் போதும், போர் ஓய்வின் போதும். அந்தப் புத்தகத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு ஒப்புக் கொண்டது எப்படி என்பதை விளக்க அமரர் அன்ரன் பாலசிங்கம் வில்லாக வளைந்திருப்பது புரிகிறது. "அப்படி எதுவும் ஒப்புக் கொள்ளவில்லை" என்று கனேடிய ஆலோசனைக் குழுவின் கதையை முன்வைப்பதன் மூலம், புலிகளின் தலைமையின் நோக்கத்தை வெளிக்காட்டியிருக்கிறார்: பேச்சு வார்த்தையும் வேண்டும், ஆனால் தனி நாட்டையும் விட்டுக் கொடுக்க முடியாது. இது நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், "தீர்வுக்கு உடன்படா விட்டால் புலிகளை அழித்து விடுவது" என்ற மேற்கின் முடிவை அன்ரன் பாலசிங்கம் அறிந்திருந்ததாகவும் பதிவுகள், பகிர்வுகள் இருக்கின்றன (யாழில் கூட இருக்கலாம்). இதை எதிர் கொள்ள என்ன மாதிரியான திட்டம் (Plan B) புலிகளின் தலைமையிடம் இருந்தது என்பது உங்களுக்குத் தெரிந்தால் குறிப்பிடுங்கள். ஏனெனில், பேச்சுவார்த்தை முறிந்தால் புலிகளின் அடுத்த நகர்வு மேற்கின் எச்சரிக்கையின் பின்னணியில் என்ன என்ற தெளிவு இருந்திருக்கா விட்டால், புலிகள் செய்தது நிச்சயம் தற்கொலை என்று தான் நான் கருதுகிறேன்.
  8. அப்படித்தான் நான் நினைக்கிறேன். 1979 வரை ஷா மன்னரை அமெரிக்காக் காரங்கள் பொம்மையாக வைத்திருந்தார்கள். பின்னர் ஒரு நாள் ஈரானிய பொது மக்கள் திரண்டு வந்து "எங்களுக்கு சுதந்திரம், பெண்ணுரிமை, ஆங்கில வழிக் கல்வி, மக் டொனால்ட் உணவு, எதுவும் பிடிக்கவில்லை. எங்களை ஒரு ஆன்மீகத் தலைவரின் காலடியில் விழுந்து வாழ விடுங்கள்" என்று புரட்சி செய்தமைக்கமைய கொமெய்னிகள் உருவானார்கள். இன்று எல்லாம் ஈரானில் ஆன்மீக வழி தான். மாஷா அமினி என்ற பெண் தலை முடியை மறைக்காமல் தான் இருந்தமைக்காக மிகவும் வருந்தி தன் தலையை தானே சுவரில் மோதி கோமாவில் இருந்து இறந்தமையைக் கேள்விப் பட்டீர்களா? அப்படித் தான் பல விடயங்கள், மேற்கின் ஊடகங்களில் உண்மையாக வருவதில்லை. பின்ன எப்படி எனக்குத் தெரியும் என்கிறீர்களா? நான் கேபிளைக் கட் செய்து விட்டு அந்த கேபிள் பணத்தை அப்படியே ஒரு இன்ரெலிஜென்ற் தளத்திற்குக் கட்ட அவர்கள் எனக்கு இந்த உண்மைகளை வாரா வாரம் அனுப்பி வைக்கிறார்கள்! அதில் இருந்தே உங்களுக்குப் புதிதாக இருக்கும் விடயங்களெல்லாம் எனக்கு சாதாரணமாகக் கிடைக்கின்றன. உதாரணமாக, 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஜப்பான், சீனா, கொரியாக் காரங்களுக்கே பெண்ணடிமைத் தனத்தைசொல்லிக் கொடுத்ததே 2000 ஆண்டுகள் முன்பு வந்த ரோமனுகள் தான்! இது போல இன்னும் இருக்கு😎!
  9. நீண்ட காலமென்றால் எவ்வளவு காலம் என்றும் சொல்லுங்கள். சிங்களவரும் இதே வாதத்தோடு வருவர் என நினைக்கிறேன். தயாராக பதில் இருக்க வேண்டுமல்லவா?
  10. போறவர், வாறவர், தடுக்கி விழுந்தவர் என்று எல்லாரும் மணித்தியாலக் கணக்காகக் கதைக்கிறார்கள், வீடியோக்களுக்குப் பஞ்சமில்லை, ஆனால் கேட்கவும் பார்க்கவும் ஆட்கள் இல்லை!😂
  11. இதெல்லாம் ஒரு கேள்வியா விசுகர்? அமெரிக்கா தான் ஈரானையும் வளர்த்தது. அல் சபாப், தலிபான், ஐ.எஸ்.எஸ், ஐ.ஆர்.ஏ.....இப்படி உலகின் எல்லா ஆயுத தாரிகளையும் அமெரிக்கா தான் இரகசியமாக உருவாக்கியது என்பது உங்களுக்குத் தெரியாதா😂?
  12. அன்ரன் பாலசிங்கம் எழுதிய போரும் சமாதானமும் புத்தகம் நூலகம் இணையத்தில் இருக்கிறது. https://noolaham.net/project/720/71906/71906.pdf "ஒஸ்லோ பிரகடனம்" என்று அழைக்கப் படும் தீர்மானத்தின் விளக்கம் பக்கம் 669 இல் இருந்து 672 வரையான பகுதியில் இருக்கிறது. வாசித்துப் பாருங்கள். என் அபிப்பிராயம்: புலிகளுக்குப் பின்னான காலத்தில் "எக்க ராஜ்ஜிய, எக்கிய ராஜ்ஜிய" என்று தமிழ் அரசியல் விமர்சகர்கள் "சொற்சிலம்பம்" ஆடியது போலவே ஒஸ்லோ பேச்சு வார்த்தையிலும் சொற்களை வைத்து இரு தரப்பும் விளையாடியிருக்கின்றனர். பக்கம் 672 இல் தடித்த எழுத்தில் இருப்பதைப் பார்த்தால், புலிகள் "ஈயம் பூசின மாதிரியும் இருக்கோணும்" என்ற மன நிலையில் இருந்திருப்பதாக நான் கருதுகிறேன்.
  13. சிங்களப் பெண்ணை அவர் காதலித்தால் அவர் "சுத்தமில்லை" என்கிறீர்கள்😂! மற்ற படி சும்மா அலட்டிக் கொண்டிருக்கும் இன்னொரு பா.உ வின் கருத்துக்கு தன் நேரத்தைச் செலவழித்து சாணக்கியன் பதில் சொல்லாமை உங்களுக்கு ஆதாரமாகத் தெரிகிறது. எனக்குத் தெரியவில்லை! கீழே இருக்கும் பந்தி எனக்கில்லையானாலும் இதைச் சொல்ல வேண்டும்: பின்லாந்து பின்லாந்தியருக்கு, பிரிட்டன் பிரிட்டிஷ் காரருக்கு, சிறி லங்கா சிங்களவருக்கு என்று ஏற்றுக் கொண்டு விட்டு பிறகேன் சிங்களவன் அதிகாரத்தைப் பகிரவில்லையென நீங்கள் முறைப்பாடு செய்கிறீர்களென விளங்கவில்லை.
  14. எழுஞாயிறு, ஒரு பேட்டியில் சாணக்கியன் தனக்குக் காதலி எவரும் இல்லை என மறுத்ததைக் கேட்டேன். உங்கள் கருத்துகளுக்கு ஆதாரம் என்ன? மேலும், சிங்கள மனைவியைக் கொண்ட புலிகளின் நடேசனையும் இப்படித் தான் திட்டிக் கொண்டிருந்தீர்களா?
  15. யாழ் . பல்கலை, என் அபிப்பிராயத்தின் படி, ஒரு கடினமான ஆமை ஓட்டுக்குள் தன்னை ஒளித்துக் கொண்ட ஒரு அமைப்பு. வெளியே இருந்து வரும் செல்வாக்கு (சிங்களவர்கள், முஸ்லிம்கள், வெளிநாட்டவர்கள்) தம்மை மாற்றி விடக் கூடாது என்ற பயம் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், இலங்கையின் உயர் கல்விச் சூழலில், கல்வி நெறிகள், பட்டதாரிகள் தரத்தில் உயர்வாக இருக்கும் பல்கலைக் கழகங்கள் எவையென்று பார்த்தால், வெளியுலகத்தோடு அதிக தொடர்புகளை உருவாக்கிக் கொண்ட கொழும்பு, ஜெயபுர, பேராதனை ஆகியவை தான். சிங்களப் பகுதிகளில் இருக்கும் ருகுணு, களனி ஆகிய பல்கலைகளும் கூட யாழ் பல்கலை போன்ற ஆமை ஓட்டுக் கேசுகள் தான். நவீன கல்வியில், குறிப்பாக தொழில் நுட்ப, விஞ்ஞானக் கல்வி நெறிகளில் இப்படி மூடி வைத்துக் கொண்டு தரமாக எதையும் உருவாக்கி விட முடியாது. தமிழர்களுக்கு ஒரு பல்கலை என்று அலங்காரக் குஞ்சம் போல வைத்திருக்கலாம், ஆனால் சமூகத்தில் பல்கலைக் கழகத்தின் பணி குஞ்சமாக/அடையாளமாக இருப்பது மட்டுமல்ல, குஞ்சத்திற்கு மக்களும் அரசும் பணத்தை வாரி இறைப்பதும் வீண் செலவு தான் என நினைக்கிறேன்.
  16. பெரும் பகுதியைக் கேட்டேன். ஆனால், "தமிழர்களான எங்களிடையே ஒற்றுமையில்லை" என்ற முறைப்பாட்டை முன் வைக்கும் ஐயா, யாழ் பல்கலையிலாவது தமிழர்களின் ஒற்றுமையைக் கொண்டு வரும் முன் முயற்சிகளுக்குத் தடையாக இருக்கும் பல்கலைக் கழகப் பேரவையின் (Senate) உறுப்பினர் என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். ஒரு உதாரணத்திற்கு, யாழ் பல்கலைக் கழகத்தின் தலைமைப் பதவிகளில் சைவர் அல்லாதவர்கள் அமர முடியாத நிலை இருக்கிறது - மூதவை மட்டத்தில் தீர்மானிக்கப் படும் இந்தப் பதவிகளுக்கு தமிழ் கிறிஸ்தவர்கள் இப்போது விண்ணப்பது கூட இல்லை, ஏனெனில் எழுத்தில் இல்லாத விதி திறந்த இரகசியம் போல எல்லோருக்கும் தெரியும். இதை விட வேறு பாகுபாடுகளும் இருக்கின்றன, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தோர், யாழ்ப்பாணத்திலும் ஒரு குறிப்பிட்ட மரபுடைய பாடசாலையில் இருந்து வந்தோர் என ஒரு பட்டியல் உத்தியோக பூர்வமற்ற வகையில் இருக்கிறது. இப்போது வவுனியா வளாகம் ஏன் தனிப் பல்கலையாக உருவானது என்று ஊகிக்க முடிகிறதா? அதே போல, கிளிநொச்சி வளாகம் ஏன் தனியாகப் பிரிந்து போக முயல்கிறது என்று நோக்க முடிகிறதா? கிளிநொச்சி வளாகம், மிகவும் பயணச் சவால்கள் நிறைந்த , தண்ணீர் வினியோகம் தாங்கிகள் மூலம் செய்ய வேண்டிய ஒரு அமைவிடத்தில் இருக்கிறது. இதனாலேயே, குளு குளு பேராதனைக்கும், ஏனைய சிங்களப் பிரதேசங்களுக்கும் வட பகுதித் தமிழ் மாணவர்கள் போக, அங்கே போகாமல், வரண்ட மொனராகலையின் சிங்கள மாணவர்கள் கிளிநொச்சி வருகிறார்கள். இதைத் தடுக்கும் வழிகள் இலங்கையின் பல்கலைக் கழக அனுமதி முறையில் இல்லை. இப்படியாக, ஐயா சொல்லும் பல்கலையின் வளர்ச்சி பற்றிய ஒவ்வொரு பிரச்சினைக்கும் காரணங்கள் ஒன்று அல்ல, பல்வேறு. தமிழ் மூலம் படிப்பிப்பதால் மட்டும் இவற்றைத் தீர்க்க இயலாதென நினைக்கிறேன். மேலும், விவசாயம் போன்ற பாடங்களைத் தமிழில் படிப்பித்தால், பட்டதாரிகளால் தற்போதைய வேலை வாய்ப்புச் சூழலில் எப்படிச் சமாளிக்க முடியெமெனவும் யோசிக்க வேண்டும்.
  17. மேல் வீடியோவிலும் சரி, வேறெங்கும் அவர் பாய்வதற்கு முன்னரான உரையாடல் இல்லை. ஆனால், நியூ யோர்க் ரைம்சின் படி பின் வரும் உரையாடல் நடந்திருக்கிறது. Mr. Redden’s lawyer, Caesar Almase, asked the judge to sentence his client to probation. அவரது வக்கீல், அவருக்கு ஒத்தி வைக்கப் பட்ட தண்டனை கொடுக்கும் படி கேட்டிருக்கிறார். “I appreciate that, but I think it’s time he get a taste of something else,” Judge Holthus said at the hearing, just before the attack. “I just can’t with that history,” she added, appearing to refer to Mr. Redden’s criminal background. "புரிகிறது, ஆனால் இந்த முறை இவருக்கு வேறு வகையான ரேஸ்ற் உடைய ஒன்று அவசியமாகிறது. இவரது கடந்த கால வரலாற்றின் காரணமாக உங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள முடியாது" அதென்ன கடந்த கால வரலாறு? மூன்று வரையான வன்முறைக் குற்றங்களும், பல வன்முறை கலந்த குழப்படிகளும் (misdemeanor) செய்திருக்கிறார் பாய்ந்தவர். இவ்வளவு குற்ற வரலாறுள்ளவரை இன்று மீண்டும் திரும்பி வந்து 4 வருட சிறைத்தண்டனை கொடுத்திருக்கிறார் அதே நீதிபதி. நீதிபதியைத் தாக்கிய வழக்கு வேற நீதிபதியின் கீழ் நடக்கும், மேலும் பல வருடங்கள் சிறை கிடைக்கும். என்னைப் பொறுத்த வரை, நீதிபதி நக்கல் அடித்ததாகத் தெரியவில்லை. இது வரை வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள், அவர் திருந்தவில்லை, அதனைச் சுட்டிக் காட்டும் சொல்லாடல் தான் "வேற ரேஸ்ற்" என்பது. https://www.nytimes.com/2024/01/08/us/las-vegas-judge-attacker-sentenced.html
  18. என்ன சொன்னாராம் நீதிபதி? ஏற்கனவே aggravated battery இற்காக இந்த வழக்கு நடந்திருக்கிறது, தண்டனை ஒத்தி வைப்பை (probation) நிராகரித்து தீர்ப்பை வாசித்துக் கொண்டிருந்த நேரம் இவர் பாய்ந்து தாக்கியிருக்கிறார். அப்படி என்ன தான் சொன்னாராம்?
  19. நொச்சி அவர்களே, உங்கள் கருத்திற்கு நன்றிகள்! ஆனால், நெடுக்கர் காட்டமாகச் சொன்ன கருத்தை யாரையும் நோகடிக்காமல் அழகு தமிழில் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கருத்தோடு பெரும்பாலும் முரண்படுகிறேன்: சட்டம்: LGBTQ+ சார்ந்து அப்படி என்ன சட்டத்தை அரசுகள் உருவாக்கி , பண்பாட்டைக், கலாச்சாரத்தைச் சீரழித்து விட்டார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் அறிந்த வரையில், ஆண் பெண் உறவிற்கு இருக்கும் சாதாரண தன்மையை, அங்கீகாரத்தை ஒரு பால் உறவிற்கும் வழங்க வேண்டுமென்ற சமத்துவம் பேணும் சட்டங்கள் தான் உருவாக்கப் பட்டிருக்கின்றன. திரியில் இருக்கும் கொலைச் சம்பவத்தில் நிகழ்ந்தது போல, அரசுகள், மக்கள் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி "நீயும் உன் குடும்பமும் ஒரு பால் உறவில் ஈடுபட வேண்டும்" என்று சட்டம் இயற்றியதாக நான் அறியவில்லை! எனவே, உலகின் இன்னொரு பகுதியில், இயற்கையாகத் தமிழர் அடையாளத்தோடு பிறந்த எம்மை, ஒதுங்கியிருக்கும் படி செய்த சட்டங்களை விட்டு விலகி, லிபரல் ஜனநாயக நாடுகளில் "யாரும் எப்படியும் முன்னேறலாம்" என்ற சமத்துவ சட்டங்களால் ஈர்க்கப் பட்டு குடியேறிய நாம், இன்று இன்னொரு இயற்கையான அடையாளத்திற்கு சமத்துவம் கொடுப்பதை சீரழிவு என்கிறோம் , அதற்கெதிராக வலதுசாரிகளோடு கை கோர்த்து எதிர்ப்பைக் காட்டுகிறோம். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பி.கு: கொசுறுக் கேள்வியொன்று- உலகில் 35 நாடுகள் மட்டும் தான் ஓரின உறவை அங்கீகரித்திருப்பதால், பரந்து விரிந்த உலகம் இன்னும் இந்த LGBTQ+ விடயங்களை விரும்பாதோருக்கு திறந்திருக்கிறதல்லவா? அப்படியானால், ஏன் இன்றும் கூட அந்த 170+ நாடுகளில் இருந்து இந்த 35 நாடுகளுள் சில நோக்கி மட்டும் மக்கள் கும்பல் கும்பலாகக் குடியேறுகிறார்கள்? நாணயப் பரிமாற்ற வீதமா, சோசியல் காசா, அல்லது வேறேதுமா?
  20. வழமை போல, தரவுகளைப் புறந்தள்ளி விட்டு உங்கள் கற்பனைகளை அள்ளி விட்டிருக்கிறீர்களென நினைக்கிறேன்😎. உங்கள் கற்பனை உலகை குலைக்காமல், உண்மை அறிய விரும்பும் யாழ் வாசகர்களுக்கு மட்டும் எழுதுவது: உலகில், LGBTQ+ இனருக்கு அதிக பாதுகாப்பும், சமத்துவமும் வழங்கும் முதல் 10 நாடுகளில் நோர்வே உட்பட்ட ஸ்கண்டினேவிய நாடுகள் அடங்கும். இன்று வரை அமெரிக்கா, கனடா, பிரிட்டனில் நடக்கும் கலாச்சாரப் போர் (Culture war) ஸ்கண்டினேவிய நாடுகளில் பரவவில்லை. நோர்வே கிறிஸ்தவர்கள், LGBTQ+ இனை ஒதுக்காமல் வரவேற்கும் Evangelical Lutherans எனப்படும் தரப்பினர். நோர்வே திருச்சபை எந்த போப்பின் கீழும் இல்லாத சுதந்திர திருச்சபை (அங்கிலிக்கன் போல). 2015 இல் இருந்து ஒர் பாலினத் திருமணங்களை நோர்வே திருச்சபை தன் ஆலயங்களில் அனுமதித்திருக்கிறது. பொது மக்களிடையேயும் இந்த உறவுகளுக்கு எதிர்ப்புக் குறைவு. இவை நோர்வே அரசு, HRW ஆகியவற்றின் தளங்களில் இருக்கும் தரவுகள்! நெடுக்கர் சொல்லும் ஓர் பாலின உறவுகள் பற்றிய homophobia நோர்வேயில் இருந்தால், நிச்சயமாக நெடுக்கர் போன்ற குடியேறிகளிடையே தான் அதிகமாக இருக்குமென நினைக்கிறேன்.
  21. ஜெ.மோ வின் இந்தத் தொடர் காலத்திற்கு உகந்தது! "அறிவலட்சியம் கொண்டவன் தெனாவெட்டாகத் திரிய, வாசிப்பவனும், விடயம் தேடியறிபவனும் நாணிக்கோணி நிற்க வேண்டிய காலம் இது" என சில இடங்களில் முன்னர் எழுதியிருக்கிறேன். இதனை வாசிக்க வேண்டியோர் வாசிக்கப் போவதில்லை என்பது தான் பிரச்சினை!
  22. என்ன சொல்கிறீர்கள்? நெடுக்கரின் குடியேறி எதிர்ப்பு மனநிலை அவர் குடியேறியாக இருந்த போதே அவரது எழுத்தில் வெளிவந்திருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர் மீதான காண்டு போலி விஞ்ஞானக் கட்டுரையை இணைத்து வாதிடும் அளவுக்கு வெளிப்பட்டிருக்கிறது. இறந்தது பெண், கொன்றது ஆண் என்பதால் கொன்றவரை விட்டு விட்டு, எல்லாரையும் கை காட்டியிருக்கிறார்! இது பழைய நெடுக்கர் தான்! புதிதாக ஒன்றுமில்லை😎. நோர்வே ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை, ஆனால் ஐரோப்பிய ஒன்றிய பயண ஏற்பாடான செங்கன் (Schengen) நடைமுறையில் இருக்கிறது. எனவே, செங்கனில் இல்லாத பிரிட்டனின் பிரஜைகள் நடந்து தான் போக வேணும்! "போலந்துக் காரன் சட்டரீதியாக பிரிட்டனுக்குள் வரவும் கூடாது - எனவே ஐ.ஓவில் இருந்து நாம் அவுட், ஆனால் பிரிட்டன் பிரஜைகளை ஐரோப்பிய நாடுகளில் திறந்த வீட்டினுள் செல்லப் பிராணி செல்வது போல அனுமதிக்கவும் வேண்டும்!" இரண்டையும் எப்படி எதிர்பார்க்க முடியும்😎?
  23. ஆழ்ந்த அனுதாபங்கள்! இந்த சம்பவத்தை விபரிக்கும் செய்தி: https://www.newsinenglish.no/2024/01/03/more-murders-marred-holiday-weekend/ மேலே தமிழ் செய்தியில் சொல்லப் பட்டிருப்பது போல, காவல் துறையிடம் முறையிட்டு பாதுகாப்புக் கேட்குமளவுக்கு தெரிந்த நபரிடமிருந்து அச்சுறுத்தல் இருந்திருக்கிறது. காவல் துறை தங்கள் கடமையைச் செய்யவில்லையென இப்போது தாமதமாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. (இது போன்ற செய்திகளை வாசிக்கும் அனேகருக்கு உடனே ஏற்படுவது "இத்தனை வருட உழைப்பும், வாழ்க்கையும் இழக்கப் பட்டு விட்டதே" என்ற சோக உணர்வாகத் தான் இருக்கும்! ஆனால், இமிக்ரேஷன் கஷ்டங்களும், கலாச்சாரக் காவலர் உணர்வும் தான் உடனே வெளிப்படுகிறதென்றால், என்ன வகை மன அமைப்பென்று விளங்கவில்லை!)
  24. இது உங்களுக்கு மருந்து தந்த ஆயுள்வேத டொக்ரருக்கும் தெரியாது😂! (மீண்டும் கண்டது மகிழ்ச்சி!)
  25. திராவிடப் புள்ளிகளுக்கு இதையெல்லாம் போட்டோ எடுத்துப் போடுகிற துணிவாவது இருக்கும்..! அது இல்லாதோர் "பொலிசு, வழக்கு" என்று வந்ததும் மனைவியைக் கூட்டிக் கொண்டு போகும் "பம்மல்" பேர்வழிகளாக அல்லவா இருக்கீனம்😎?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.