Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. சிப்பிக்குள் முத்து (பித்தத்தில் கல்லு!) கூர்ப்பு ஒரு கோட்பாடு என்பதை விட ஆதாரங்கள் நிறைந்த ஒரு உண்மை எனலாம். கூர்ப்பு நிகழ்ந்தமைக்கான பல ஆதாரங்களில் ஒன்று எங்கள் உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள். சில உறுப்புகள், அவசியமின்மை காரணமாக, குறுகிப் போகின்றன (குடல் வால் -appendix ஒரு உதாரணம்). சில உறுப்புகள், பெரும்பகுதி அவசியமில்லாமல் போனாலும் சில உடற்றொழில்களுக்கு அவசியமாக இருப்பதால், தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கின்றன: இதற்கு உதாரணம் எங்கள் பித்தப் பை. எங்கள் மூதாதையர் வேட்டையாடி, பெருமளவு இறைச்சி, கொழுப்பு என்பவற்றை சந்தர்ப்பம் கிடைக்கும் போது மட்டும் வயிறு புடைக்க உண்ண வேண்டிய ஒரு காலம் இருந்தது. அந்த மூதாதையரில் கொழுப்பை இலகுவாகச் சமிக்கச் செய்ய பித்தப் பை உதவியது. மூன்று வேளையும் அதிக கொழுப்பு அல்லது கொழுப்பை உருவாக்கும் மாப்பொருள் என்பவற்றை உண்ணும் நவீன மனிதனில், பித்தப் பை ஒரு பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. இந்தப் பிரச்சினையின் பிரதான வடிவம், பித்தக் கல் (Gallstones). பித்தப் பையின் தொழில் என்ன? கொழுப்புணவு சமிக்க உதவும் பித்தம் (gall) என்ற சுரப்பை தயாராகச் சேமித்து வைத்துக் கொள்வது தான் பித்தப் பையின் பிரதான தொழில். பித்தம் ஈரலினால் சுரக்கப் படுகிறது. நீர், பித்த உப்புகள், கனியுப்புக்கள், சிறிது கொலஸ்திரோல் வகைக் கொழுப்பு என்பன தான் ஈரல் சுரக்கும் பித்தத்தின் கூறுகள். ஈரலில் இருந்து வரும் இந்த பித்தத்தை பித்தப் பை வாங்கித் தன்னுள் சேமித்து வைத்திருக்கும் போது, அதில் இருக்கும் நீரை உறிஞ்சிக் கொள்வதால் 3 - 4 மடங்குகள் செறிவான பித்தம் உருவாகிறது. பித்தப் பை (பச்சை நிறம்), ஈரல், முன் சிறு குடல், கணையம் ஆகியவற்றின் அமைவிடத்தைக் காட்டும் படம். ஈரலினுள் இருந்து வரும் பித்தம், ஈரல் கான் ஊடாக பித்தப் பையினுள் சேர்கிறது. உணவு உண்டு ஒரு மணி நேரத்தில், முன் சிறு குடலினுள் பித்தப் பையில் இருக்கும் பித்தம், கணையத்தின் சுரப்புகளையும் சேர்த்துக் கொண்டு நுழையும். பித்தம் கொழுப்பைச் சிறுகோளங்களாக மாற்றுவதால் கொழுப்பு சமிபாடடைய உதவும். பித்தப் பையில் சேரும் பித்தத்தில் பித்தக் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் பல காரணிகளால் அதிகரிக்கும். பெரும்பாலானவை கொலஸ்திரோல் கற்களாக இருக்கும். பட உதவி நன்றியுடன்: NIH, USA. சாதாரணமாக 30 முதல் 50 மில்லிலீற்றர்கள் வரையான செறிவான பித்தம் இப்படி பித்தப் பையில் சேமிக்கப் பட்டிருக்கும். உணவை எங்கள் உணவுக் கால்வாய் உணரும் வரை பித்தம் சேமிப்பில் இருக்கும். உணவு உள்ளே வருவதை எங்கள் சிறு குடல் உணரும் போது அது வெளிவிடும் ஓமோன் சுரப்புகளால் தூண்டப் பட்டு, பித்தப் பை சுருங்க ஆரம்பிக்கும். முன் சிறுகுடலினுள் திறக்கும் பித்தக் கால்வாய் திறந்து கொள்ளும். பித்தம் சிறு குடலினுள் நுழைந்து, கொழுப்பை சிறு சிறு கொழுப்புக் கோளங்களாக (micelles) உருமாற்றம் செய்யும். இப்படி உருமாற்றம் செய்யப் பட்ட கொழுப்பை, கொழுப்புடைக்கும் நொதியங்கள் இலகுவாக உடைத்து, குடல் உறிஞ்சிக் கொள்ள இலகுவாக இருக்கும். பித்தம் கொழுப்பு சமி பாட்டை இப்படி இலகுவாக்கா விட்டால், பெரும் பகுதி கொழுப்பு உறிஞ்சப் படாமல் கழிவுடன் வெளியேறும். கொழுப்பை சரியாக உடல் அகத்துறிஞ்சினால் தான் கொழுப்பின் பலன்களான கொழுப்பமிலங்களும், கொழுப்பில் மட்டும் கரையக் கூடிய விற்றமின் ஏ, டி போன்ற போசணைகளும் எங்கள் உடலுக்குக் கிடைக்கும். எனவே, பித்தப் பையும், பித்தமும் நவீன மனிதனுக்கு ஓரளவுக்கு அவசியமான எஞ்சியிருக்கும் உறுப்புகள் தான். ஆனால், நவீன மனிதனுக்கு நோய் தரும் பித்தக் கல் எப்படி ஒரு கூடவே வரும் சூனியமாக வருகிறது? பித்தக் கல் என்பது என்ன? பித்தப் பையில் உருவாகும் திண்மையான படிவுகளே பித்தக் கற்கள். இந்தக் கற்களில் 90% ஆனவை கொலஸ்திரோல் கற்கள். மிகக் குறைந்த வீதமானோரில் பித்தக் கற்கள் பித்தத்தின் நிறமிகளான பிலிருபின் போன்றவற்றால் உருவாக்கப் படுகின்றன. இந்த இரண்டாவது வகைக் கற்கள் உருவாவதற்கு சில நோய்கள் ஏற்கனவே இருப்பது காரணமாக இருக்கலாம் - அதிக குருதிக் கல அழிவுகளை ஏற்படுத்தும் தலசீமியா போன்ற நோய்கள் சிறந்த உதாரணங்கள். ஆனால், பெரும்பான்மையானோரில் உருவாகும் கொலஸ்திரோல் கற்கள் பரம்பரை காரணிகள், வாழ்க்கை முறை என்பவற்றால் உருவாகின்றன. கொழுப்பான கொலஸ்திரோல் எப்படிக் கல்லாகிறது? பித்தத்தில் ஏனைய பொருட்களோடு, ஈரல் சுரக்கும் கொலஸ்திரோலும் கலந்திருக்கிறது எனப் பார்த்தோம். சாதாரணமாக பித்தத்தில் 4% ஆக இருக்கும் கொலஸ்திரோலின் அளவு 8 முதல் 10% ஆக அதிகரிக்கும் தருணங்களில், பித்தத்தில் இருக்கும் கொலஸ்திரோல் பளிங்காகப் படிவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஆனாலும், அதிகரித்த கொலஸ்திரோல் தான் பெரும்பாலான பித்தக் கற்களுக்குக் காரணம் என்று சொல்லி விட முடியாது - பித்தக் கல் உருவாகும் பொறிமுறை அதை விடச் சிக்கலானது. அதிகரித்த கொலஸ்திரோலோடு, வேறு சில காரணிகள் சேரும் போது, கொலஸ்திரோல் பித்தக் கற்களை உருவாக்கும். இந்தக் காரணிகளில் சில மாற்ற இயலாதவை, சில மாற்றக் கூடியவை. மாற்ற இயலாத காரணிகள்: பரம்பரை/ஜீன் வழி மாற்றம் இந்த மாற்ற இயலாத காரணிகளில் முதன்மையானது. சிலரில், பித்தத்தின் கொலஸ்திரோல், ஏனையோரை விட மிக விரைவாகப் பளிங்காகப் படிவடைகின்றன. இதற்கு கொலஸ்திரோல் அளவு மட்டுமன்றி, வேறு சில "கருவாக்கும்" (nucleation) காரணிகளும் பங்களிப்புச் செய்கின்றன. இந்தக் கருவாக்கும் காரணிகள் எல்லாம் அடையாளம் காணப் படவில்லை. எனவே,எங்கள் நெருக்கமான இரத்த உறவுகளில் பித்தக் கல் இருந்திருந்தால், எங்களில் அது ஏற்படும் வாய்ப்பும் சிறிது அதிகரிக்கிறது. இரண்டாவது: பித்தக் கல் ஏற்படும் வாய்ப்புகள் ஆண்களை விடப் பெண்களில் அதிகம். பெண்களின் மாத விடாய் சக்கரம், கர்ப்பமுறும் இயலுமை காரணமாக உருவாகும் ஓமோன் மாற்றங்கள் பித்தப் பையில் இருந்து பித்தம் வெளியேறுவதைப் பாதிக்கின்றன - இதனால் இந்த அதிகரித்த ஆபத்து பெண்களில். மாற்றக் கூடிய காரணிகள்: எங்கள் உணவு, உடலுழைப்பு உட்பட்ட வாழ்க்கை முறை தான் மாற்றக் கூடிய காரணி. எங்கள் வாழ்க்கை முறை காரணமாக கொலஸ்திரோல் பித்தக் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என பல ஆய்வுகள் கண்டறிந்திருக்கின்றன. அதிகரித்த கொலஸ்திரோலை ஈரல் பித்தத்தின் வழியாக சுரப்பதற்கு, அதிக கொழுப்பு, அல்லது அதிக மாப்பொருள் என்பன கொண்ட உணவு முறை ஒரு காரணம். இதனால் உடற்பருமன் அதிகரித்தோர், நீரிழிவு நோய் ஏற்கனவே இருப்போர் ஆகியோரில் கொலஸ்திரோலினால் ஏற்படும் பித்தக் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இந்த இடத்தில் மீண்டும் வலியுறுத்த வேண்டியிருக்கும் ஒரு விடயம்: கொலஸ்திரோலை மட்டும் குறி வைத்து மருந்து எடுத்துக் கொள்வதால் பித்தக் கற்களின் ஆபத்தைக் குறைப்பது சாத்தியமில்லை. உதாரணமாக, கொலஸ்திரோலைக் குறைக்கும் மருந்துகள் பித்தக் கற்கள் உருவாவதைக் குறைக்கின்றனவா என்று தேடிய ஆய்வுகளில் உறுதியான முடிவுகள் கிடைக்கவில்லை. ஈரல் சுரக்கும் கொலஸ்திரோலோடு, வேறு அடையாளம் காணப் படாத காரணிகளும் பித்தக் கற்கள் உருவாவதைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கலாம், அந்தக் காரணிகள் எங்கள் வாழ்க்கை முறையோடு தொடர்புற்றிருக்கலாம். ஆனால், ஒட்டு மொத்தமாக, உடலின் அனுசேபத் தொழிற்பாட்டைச் சீராக வைத்திருக்கும் உணவு முறை, நீரிழிவுக் கட்டுப் பாடு, உடல் பருமன் கட்டுப் பாடு என்பன பித்தக் கல் உருவாகும் ஆபத்தைக் குறைக்கின்றன என்பது தெளிவாகியிருக்கிறது. சில மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வோரிலும் பித்தக் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். நெஞ்செரிவு (heartburn) என (தவறாக) அழைக்கப் படும் இரைப்பை அமில எரிவு (acid reflux) நிலைக்கு நிவாரணியாகப் பாவிக்கப் படும் H2R blocker மருந்துகள் (cimetidine, ranitdine), பித்தக் கற்கள் உருவாக்கும் வாய்ப்பை அதிகரிப்பதாக சில ஆய்வுகள் சொல்கின்றன. பித்தக் கற்களால் தோன்றும் வலியை எப்படிக் கண்டறிவது? எங்கள் வயிற்றை, வெளி மேற்பரப்பில் நான்கு கால் பங்குகளாகப் (quadrants) பிரித்து, அந்தக் கால்பங்குகளில் எந்தப் பங்கில் வலி மையங் கொண்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து எந்த உறுப்புப் பாதிக்கப் பட்டிருக்கிறது எனக் குத்து மதிப்பாகச் சொல்ல முடியும். வயிற்றின் வலது மேல் காற் பங்கில் (upper right quadrant) மையங் கொண்ட தீவிர வலி, பெரும்பாலும் ஈரல், பித்தப் பை ஆகியவற்றின் பாதிப்பினால் உருவாகிறது எனலாம். ஆனாலும், பித்தப் பையின் அமைவிடம் ஆளுக்காள் சிறிது வேறுபடுகிறது. இதனால், பித்தக் கற்களால் ஏற்படும் வலி, மேல் இடது, வலது காற்பங்குகளில் சம அளவில் உணரப் படும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, தீவிர வயிற்று வலி தொடர்ந்து அல்லது விட்டு விட்டுப் பல தடவைகள் உருவானால், உடனே மருத்துவ உதவி நாட வேண்டும். மருத்துவ மனையில், மீயொலித் தெறிப்புக் (ultra-sound) கருவி மூலம், பெரும்பாலான பித்தக் கற்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும். அவ்வாறு அடையாளம் காண இயலாத கற்களை CT ஸ்கான் மூலம் அடையாளம் காண்பர். சுருக்கமாக, பித்தக் கற்கள் பெரும்பாலும் கொலஸ்திரோல் கற்கள். பெண்களில் தான் அதிகம் உருவாகக் கூடியவையானாலும், இரு பாலாரும் பாதிக்கப் படும் வாய்ப்புகள் இருக்கின்றன. தவிர்க்க இயலாத பரம்பரைக் காரணியை விட்டு விட்டாலும், தவிர்க்கக் கூடிய உடல் அனுசேபத்தோடு தொடர்பான நோய்களைத் தவிர்ப்பதால் பித்தக் கற்களின் ஆபத்தைக் குறைக்கலாம். தொகுப்பு: ஜஸ்ரின் தகவல் மூலங்கள், மேலதிக தகவல்கள்: https://www.niddk.nih.gov/health-information/digestive-diseases/gallstones/definition-facts https://pharmacy.uconn.edu/wp-content/uploads/sites/2740/2023/06/Gallbladder-Disease-YAFI-JUN2023-FINAL.pdf
  2. மிக முக்கியமாக நகர சபைகள், மாகாண சபை இரண்டிற்கும் செயல்பாட்டில் track record இருப்போரைத் தெரிவு செய்ய வேண்டும். இதே போலவே வட மாகாணசபையும் கூடித் தேனீரும் வடையும் சாப்பிட்டு விட்டுக் கலைந்து போய், சுய பதவிகளுக்கான அரசியலுக்கு உழைத்த பாடமும் எங்களுக்கு ஒரு எச்சரிக்கை. இன்னொரு பக்கம் நகர சுத்தத்தில் மக்களின் பங்களிப்பு எங்கே? உதாரணமாக, நெகிழிக் கழிவுகளை பொறுப்பாக எறியவும், சேமிக்கவும் வேண்டும் என்ற அறிவு யாழ்ப்பாண நகர வாசிகளுக்கு இல்லையென்றால், அவர்கள் பின் தங்கியிருக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.
  3. அனேகமான மேற்கு நாட்டு விமான சேவைகளில் துப்பாக்கியையும் சன்னங்களையும் வேறாக்கி Hold luggage (UK) அல்லது Checked-in luggage (US/Canada) இல் எடுத்துச் செல்லலாம். கையோடு கொண்டு செல்லும் (hand luggage) பயணப் பொதியில் எடுத்துச் செல்ல முடியாது. செக்ட் இன் லக்கேஜில் கொண்டு செல்பவர், அதை விமானப் பொதியை விமான சேவையிடம் கையளிக்கும் போது அறிக்கையிட (declare) வேண்டும். "ஏதாவது அறிக்கையிட வேண்டிய, தடை செய்யப் பட்ட பொருட்கள் இருக்கின்றனவா?" என பொதியை ஏற்கும் விமான சேவை ஊழியர் கேட்க வேண்டியது அவரது சட்டக் கடமை. பயணி "இல்லை" எனப் பதில் அளித்தால் பொதியை அங்கேயே திறந்து பரிசோதிக்கும் உரிமை (search power) விமான சேவையின் ஊழியருக்கு இல்லை. அதோடு அவர் பணி முடிந்தது. துப்பாக்கி எடுத்துச் செல்லும் பயணி பொய்யைச் சொன்னால் அடுத்து என்ன நடக்கும்? விமான சேவையின் ஊழியர் நிறையைச் சரிபார்த்து, லேபலைப் போட்டு கவுண்டருக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் கொன்வேயர் பெல்ட்டில் பயணைப் பையைப் போடுவார். அது ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கும் பகுதிக்குச் செல்லும். ஹீத்ரோவில் நவீன முப்பரிமாண (3D) ஸ்கேனர் 2022 இல் இருந்து பயன்பாட்டில் இருக்கிறது. இந்த ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்வது விமான சேவையின் பணி அல்ல, அது விமான நிலையைப் பாதுகாப்பு அதிகாரிகளின் பணி. இந்தப் பாதுகாப்பு ஊழியர்களுக்கு பிரச்சினைக்குரிய பொதிகளைத் திறந்து சோதனை செய்யவும், பயணியையும், பொதியையும் விமானத்தில் ஏற்றாமல் தடுக்கவும் உரிமை இருக்கிறது. இந்தச் சோதனையில் ஒரு பிரச்சினைக்குரிய பொருள் தப்பினால், அது விமானம் ஏறி இலங்கை போயிருக்கும். இலங்கையில் ஸ்கானர் பாவிக்கின்றனரா தெரியாது, ஆனால் "அறிக்கையிட எதுவும் இல்லை" என்று நிறையப் பொதிகளை உருட்டிக் கொண்டு செல்ல முயற்சித்தால் நிச்சயம் நிறுத்தி எல்லாப் பைகளையும் திறந்து சோதிப்பர் - இது சுங்க அதிகாரிகளின் சோதனை. உணர்ச்சி மயப்பட்டு நாம் எதுவும் எழுதலாம். ஆனால், தரவுகளைப் பரிசோதித்த பின்னர் எழுதினால் இது போன்ற திரிகளில் பயணம் செய்யும் மக்களுக்குத் தெளிவையூட்டலாம் . நான் மேலே குறிப்பிட்ட தகவல்கள், பிரிட்டனின் அரச வலைத் தளத்திலேயே இருக்கும் தகவல்களில் இருந்தும், என் பயண அனுபவங்களில் இருந்தும் பெற்றவை.
  4. கடந்த காலங்களில் செய்திகள் சொன்னது போல சுமந்திரன் எல்லா இடத்திலும் இருந்திருப்பது போல (வாக்கு எண்ணும் அறைக்குள், கஞ்சா கடத்திய இடத்தில் , இப்படி பல..) இங்கேயும் இருந்திருப்பார் என நினைக்கிறேன்😎. சுமந்திரனை, சம்பந்தரைக் காய்த்துத்த் தொங்கப் போடப் பல ஆதாரமுள்ள விடயங்கள் இருக்கும் போது இணைய வெளியில் வந்தார் வரத்தார் எல்லாம் சொல்லும் தகவல்களைப் தொடர்வது சுமந்திரனுக்குத் தான் நன்மை தரும்!
  5. https://www.ft.com/content/7aeb25e6-c131-4f10-863f-3a0018b36867 ☝️ ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பின் பக்க விளைவான நிகழ்வு என்பதால் இங்கே இதை இணைக்கிறேன்: சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளைப் பின்பற்றி, டென்மார்க்கும் இந்த வாரம் அமெரிக்க படைகளை தங்கள் நாட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்கும் ஒப்பந்தங்களில் இணைந்திருக்கிறது. இது ஏன் முக்கியம்? நேட்டோவின் ஆரம்ப கால உறுப்பினராக இணைந்த பின்னரும், தன் நாட்டினுள் அமெரிக்கப் படைகளை நிறுத்தி வைக்கும் ஏற்பாட்டை டென்மார்க் அனுமதிக்காமல் இருந்திருக்கிறது. தற்போது டென்மார்க்கின் எதிர்காலப் பாதுகாப்புப் பற்றிய கவலை கொள்கையை மாற்றியிருக்கிறது. இதெல்லாம் ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த windfall வெற்றி! (யாருக்கு வெற்றியென்று கேட்கக் கூடாது😎!)
  6. ஆம், பதிலுக்கு நன்றி. இதைப் பற்றி மேலும் அறிந்து கொண்டேன், வளையியின் திசை முதலீட்டாளர்களின் (pessimism/optimism) சிந்தனையைக் காட்டும் அளவீடு என்கிறார்கள். ஒரு கை ஓசை என்ற உங்கள் குறிப்பிற்கு: உங்கள் மன நிலையே என்னுடயதும். துறை சார்/தரவு பகிரும் எழுத்துக்களுக்கு அதிக நேரம், உழைப்பு செலவாகும். அவற்றிற்கு பெரியளவு வரவேற்பு இல்லாமல் இருப்பது கூட ஒரு குறையில்லை, ஆனால் நக்கல் செய்வோரின் இலக்காகவும் அவை யாழில் மாறி வருகின்றமையை அவதானிக்கிறேன். டேஜா வோ (Deja Vu) 😂!
  7. இது போல ஒற்றை அளவீட்டை மட்டும் வைத்துக் கொண்டு அமெரிக்க பொருளாதார ஆரோக்கியத்தையோ அல்லது அமெரிக்காவின் உலக மேலாண்மையயோ அளப்பதைப் பற்றி ஏற்கனவே நாம் கருத்தாடியிருக்கிறோமென நினைக்கிறேன். சந்தையில் கொஞ்சம் பயம் பற்றிக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால், உள்ளூரில் தொழில் வாய்ப்புகள் உருவாகும் வீதமும் எதிர்பார்த்தது போல குறையவில்லை. நுகர்வோர் செலவு வீதமும் குறையவில்லை (இதை "head scratcher" என்கிறார்கள்). அமெரிக்கா கடன்முறியை விற்று செலவுக்கு எடுப்பது பல காலமாக நடந்து வருகிற செயல்பாடு. இதை உக்ரைன், இஸ்ரேலுக்கு செலவு செய்யாமல் உள்ளூரில் செலவு செய்யுங்கள் என்று ஒரு குழு உக்ரைன் யுத்தம் தொடங்கிய நாள் முதலே சொல்லி வருகிறது. இந்தக் குரல்களின் பின்னால் சென்று வாக்கு வேட்டை நடத்த சிவப்புக் கட்சி இப்போது முயல்கிறது. இது ஓர் உள்ளூர் அரசியல் கயிறிழுப்பு நிலை. இதே போல ஒரு நிலை முதல் உலகப் போரின் தொடக்கத்திலும், இரண்டாம் உலகப் போர் தொடக்கத்திலும் நிலவியது. அந்த நேர அமெரிக்காவின் தலையிடாக் கொள்கையினால் (isolationism) அடி வாங்கியதும், அழிவுற்றதும் ஐரோப்பாவேயொழிய அமெரிக்கா அல்ல! இன்றும் கூட அமெரிக்கா கை கழுவி விட்டால் பிரச்சினை ஐரோப்பாவிற்குத் தான் - இது தெரியாமல் துள்ளிக் குதிக்கும் அப்பிரண்டிசுகளை (உங்களை அல்ல!) நினைக்க எனக்குச் சிரிப்பு வருகிறது😂!
  8. இதற்கான ஆதாரத் தகவல்களை எங்கே எடுத்தீர்கள்😎? அரசியல் ரீதியில் தூர நோக்கற்ற சிவப்பு கட்சியினர் எப்போதும் புரினின் மறைமுக வால்களாக இருப்பதால் அரசியல் எதிர்ப்பு உக்ரைனிய உதவிக்கெதிராக இருக்கிறது. இத்தகைய எதிர்ப்பு இன்னும் இஸ்ரேல் விடயத்தில் வலுப்பெறவில்லையென்பதைக் கவனிக்க வேண்டும்!
  9. கார்த்திக் மனோகரனின் அரசியல் நிலைப்பாடு அவரது டி.என்.ஏ யை மாற்றாது😎, எனவே துவாரகா போலியா உண்மையா என்று அறிய அவரது டி.என்.ஏ பயன்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதில் இன்னொரு பிரச்சினை இருக்கிறது: ஒருவரின் டி.என்.ஏ மாதிரியை அவரது விருப்பமின்றி எடுக்க முடியாது. ஒரு குற்றத்தின் சந்தேக நபராக ஒருவர் இருந்தால் மட்டும் காவல் துறை நீதிமன்றக் கட்டளையூடாக டி.என்.ஏ மாதிரியைக் கட்டாயப் படுத்தி எடுக்கலாம். இது தெரிந்து கொண்டு தான் போலி துவாரகா ரீம் துணிவாக இறங்கியிருக்கிறது. எனக்குப் புரிந்த வரையில், நீதிமன்றை அணுகி போலித் துவாராகவை டி.என்.ஏ பரிசோதனைக்குக் கட்டாயப் படுத்தும் இயலுமை எல்லோருக்கும் கிடையாது. "அடையாள மோசடியால் இவரிடம் பணத்தை இழந்து விட்டேன்" என்று பணம் இழந்த ஒருவர் முறைப்பாடு செய்து இவரைச் சந்தேக நபராக்கலாம். டி.என்.ஏ பரிசோதனை கோரலாம். இது நடந்திருக்கிறதா? தெரியவில்லை. இன்னொரு வழி, கார்த்திக் மனோகரன் உட்பட்ட பிரபாகரன் இரத்த உறவுகள் யாராவது "குடும்பத்தின் நற்பெயருக்கு அடையாள மோசடியால் களங்கம் ஏற்படுத்தி விட்டார், இதனால் மன உளைச்சலில் இருக்கிறேன்!" என்று வழக்குப் போட்டு டி.என்.ஏ பரிசோதனையைக் கோர வழி வகுக்கலாம். சட்ட மொழியில் சொன்னால், மேல் இரு வழிகளிலும் standing (உரித்து?) உள்ள யாராவது தான் போலித் துவாரகாவின் டி.என்.ஏயை சட்டவழியில் கோர வைக்கலாம். என் ஊகம், இதனால் தான் போலித் துவாரகாவை முன்னிறுத்தியோர் கார்த்திக் மனோகரனைக் குறி வைக்கின்றனர்.
  10. இருக்கலாம், அப்படி இல்லாமலும் இருக்கலாம் - நிக்சனுக்கே அவரது தகவல் மூலங்கள் வெளிச்சம்! ஆனால், நான் அவதானித்த வரையில் நிக்சன், யோதிலிங்கம் ஆகியோரின் எழுத்துக்கள் அவர்களுடைய உணர்வு ரீதியான நிலைப்பாட்டினால் வரும் கருத்துக்கள், அதிகம் தரவுகளை அடிப்படையாகக் கொண்டவையாக இருப்பதில்லை. இதனை யாரும் எழுதி விட்டுப் போகலாம், இதற்கு ஆய்வு, ஆழம் எதுவும் தேவையில்லை. கூட்டமைப்பினரைப் போட்டுத் தாக்க பல காரணங்கள், கொள்கைத் தவறுகள் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் தொட்டு முடிந்து விட்டதால், இப்போது எங்கே எது நடந்தாலும் "இது கூட்டமைப்பின் விளையாட்டு" என்று ஒரே காலைத் தூக்குவது சரியல்ல!
  11. நிக்சனின் கட்டுரையை வாசித்தேன். சில ஊகங்களை வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு, குறிப்பாக சுமந்திரன், இரகசியப் பேச்சுக்களில் கலந்து கொண்டதாக (அந்த இரகசியம் நிக்சனுக்கு மட்டும் தெரிந்திருக்கிறதென நினைக்கிறேன்😎!), 2015 இல் இருந்து சதி நடப்பதாக முடிவுக்கு வந்திருக்கிறார். அவர் குறிப்பிட்ட எதிர்வீரசிங்கம் அரசியல் சார்பு இல்லாத ஒரு நபர் என அறிவேன். இப்போது அவர் இலங்கையில் வசிக்கவும் இந்த தமிழ் தேசிய அரசியல் சார்பில்லாத, அபிவிருத்தி நோக்கிய பார்வை தான் காரணம். இப்படி பலர் இருக்கிறார்கள். அமெரிக்காவில் காங்கிரஸ் விருது பெற்ற பௌதீகவியலாளர், தொழிலதிபர் சிவானந்தன் கூட தமிழ் தேசிய அரசியல் கலப்பில்லாத "இலங்கை அபிவிருத்தி" என்ற திசையில் செயல் படும் ஒருவர். இப்படித் தமிழ் புலம் பெயர் பிரபலங்கள் சத்தமின்றி தீவிர தமிழ் தேசிய அரசியலில் இருந்து விலகி நடக்க ஆரம்பித்து விட்டனர். இப்போது எஞ்சியிருப்பது "இரு தேசம், ஒரு நாடு" போன்ற தியரியின் படி கூட விளக்க இயலாத கொள்கைகளைப் பேசும் பேச்சாளர்கள் மட்டும் தான்!
  12. நல்லதொரு உரையாடல். சில அவதானங்களுக்கு அடிப்படையாக தமிழ் நாட்டின் நிலவரத்தை மட்டும் கருத்திலெடுத்திருக்கிறார் என நினைக்கிறேன். "நேரலை" என்பதை "லைவ்" என்று பத்து வருடம் முன்பு வரை தமிழ் நாட்டில் பாவித்திருக்கலாம். ஆனால், 30 ஆண்டுகள் முன்னரே இலங்கை வானொலியில் "நேரடி ஒலி/ஒளி பரப்பு" என்ற பதம் தான் பாவிக்கப் பட்டிருக்கிறது. இப்படி பல கலைச்சொற்களுக்கு ஏற்கனவே இலங்கையில் அழகான தமிழ்ச் சொற்கள் உருவாக்கி விட்டார்கள்.
  13. மூன்று வகையான ஈரல் அழற்சி (hepatitis) வைரசுகளில் இது "ஏ" வகை என நினைக்கிறேன். தென்னாசியாவில் 90% ஆன சிறார்கள் இந்த "ஏ" வைரசின் தொற்றுக்கு ஆளாகி, குணங்குறிகள் காட்டாமல் இருக்கலாம். சுத்தமற்ற குடி நீர் தான் தொற்றுப் பரவக் காரணம். காலத்திற்குக் காலம், சிறுவர்களிலும் நோய் வெளிப்படும் வகையில் தொற்றுக்கள் ஏற்பட்டிருக்கின்றன.
  14. சுமந்திரன் "தொடர்பில்லை" என்று சொன்னதில் என்ன தவறு இருக்கிறதென்று விளக்குங்கள் யாராவது? சுமந்திரனோ, வெளிப்படையாக ரணிலோ அதில் கையொப்பமும் வைக்கவில்லை, அதில் இருப்பவற்றை எழுதவும் இல்லை.அப்படியானால் தொடர்பில்லை என்பது சரியான விபரிப்புத் தானே? இங்கே புலவர் உட்பட சிலருக்கு இருக்கும் பிரச்சினை விளக்கக் குறைவு: இது முன்னர் வந்த ஏனைய பிரகடனங்கள் போல சிங்கள ஆட்சியாளருக்கும், தமிழரின் ஏக பிரதிநிதிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வுப் பிரகடனம் அல்ல! இரு தரப்பிலும் இருந்து சில அமைப்புகளின் பிரதிநிதிகள் aspirational document ஆக உருவாக்கி இப்போது இரு தரப்பிலும் இருக்கும் அரசியல் தலைமைகளுக்கு இதனைச் சமர்ப்பிக்கிறார்கள் அவ்வளவு தான். இப்பிரகடனம் வேலைக்காகுமா, ஆகாதா என்பது வேறு விடயம். ஆனால், அது பற்றிய உங்கள் விளக்கக் குறைபாட்டை, தேடியறியும் வசதியோ அல்லது விருப்போ இல்லாத மக்களுக்குக் கடத்துவது ஏன்? "செத்த வீட்டிலும் கூட நான் தான் பொடியாக இருக்க வேண்டும்!" என்று துடிக்கும் "தமிழ் தேசிய" உந்துதலா😂?
  15. 👇 கீழே இருக்கிற வரியைப் பார்க்காமல் எனக்குப் பதில் எழுதியிருக்கிறீர்கள்! பெரியோர் பார்த்துப் புரிந்து கொள்வர் என நினைக்கிறேன்!
  16. ரம்பா "நமக்கு" வேண்டப்பட்ட பிரபலங்கள் யார் மீதும் பாலியல் இம்சைக் குற்றச் சாட்டு வைக்கவில்லையென்பதால், "நடிகை, திரைக்கலைஞர்" போன்ற பெயர்களால் அழைக்கலாம்! குற்றச்சாட்டு வைத்தால் "கூத்தாடி, முன்னாள் கூத்தாடி" போன்ற செல்லப் பெயர்களால் அழைக்கலாம்! நான் வைத்த விதியல்ல, இங்க இருக்கிற பெருமக்கள் வைத்த விதி இது😎!
  17. யுத்த காலம் வேறு விதமான இலக்குகள், மக்கள் தங்கள் சுய புத்தியைப் பாவித்து இலக்குகளை வரிசைப் படுத்திக் கொண்டார்கள். யுத்தம் முடிந்த பின்னர் (போர் ஓய்வு தற்காலிகமாக வந்த காலத்தில் கூட), சில கட்டுப் பாடுகள் தளர்த்தப் பட்டன, வன்னியில் வாழ்ந்தோருக்கு இது புரியும். எனவே, இது போன்ற விடயங்கள் மூடியிருந்த நகரங்கள் திறக்கப் படும் போது நிச்சயம் உள் நுழையும். முகாமை செய்யலாம், முற்றாகக் கட்டுப் படுத்த இயலாது. முற்றாகக் கட்டுப் படுத்தினால் என்னவாகும்? வெளித்தோற்றத்தில் எல்லாம் சுத்தமாகத் தெரியும் (கலாச்சாரக் காவலர்களுக்கு இந்த வெளித்தோற்றம் மட்டும் தான் முக்கியமென்பதால் அவை அமைதியாகி விடுவினம்😎!). இருட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் முதல், திருமணம் தாண்டிய உறவு வரை எல்லாம் நடக்கும், இளவயதுக் கர்ப்பங்களும், அனாதைகளும் இருட்டிலேயே உருவாகி, இருட்டிலேயே முடிந்து போகும் (ஏனெண்டால் பாலியல் அறிவும் கலாச்சாரக் காவலர்களுக்கு ஒவ்வாமை என்பதால் எங்கள் சமூகத்தில் மிகக் குறைந்த நிலை!) ஒரு ஆரோக்கியமான சமூகம் தேவையென்றால், இது போன்ற விடயங்களை மதுக் கட்டுப் பாடு, போதை வஸ்துத் தடை, பாலியல் சுரண்டல் குறித்த எச்சரிக்கை என்பவற்றை உத்தியோக பூர்வமாக அமல் படுத்தி அனுமதிக்க வேண்டும். அப்படி முகாமை செய்யாமல் ஒரேயடியாகத் தடுத்தால் என்ன ஆகும் என்பதை அறிய தென்னாபிரிக்க நகரங்களில் நடக்கும் இரகசிய பார்ட்டிகளும், தீ விபத்துகளும், அதியுயர்ந்த HIV தொற்றுகளும் எப்படிப் போகின்றன என்று தேடி அறிந்து பாருங்கள்!
  18. அதையேன் பேசுவான்? இந்தா வருட இறுதிப் பார்ட்டிகள் வருகின்றன. போக விருப்பமில்லா விட்டாலும் "Asian Uncle Dance" என்று நான் செல்லமாக அழைக்கும் டான்சுகளைப் பார்ப்பதற்காகவே போவதுண்டு. Asian Uncle Dance என்ன என்று அறிய தமிழ் பாடசாலைப் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு வீடியோக்களைத் தேடிப் பாருங்கள், புரியும்😂!
  19. இந்த வீடியோக்களைப் பார்க்க நேரமும் இல்லை, நேரம் இருந்தாலும் "ஐம்பது பைசா கிளிக் பைற்" வியாபாரிகளுக்கு உழைப்புக் கொடுக்கவே கூடாதென்ற வன்மம் காரணமாகப் பார்ப்பதில்லை😂!
  20. ஏன் எல்லாரும் வீடியோக்களை மட்டும் இணைக்கிறார்கள் இங்கே? என்ன தான் சொல்கிறார்கள் என்று ஒரு சுருக்கமாக எழுதி விடுங்கள்! 😂
  21. மண்டபங்களின் உள்ளே நடத்துகிற நிகழ்வுகளுக்கும் மாநகரசபை அனுமதி எடுக்க வேணுமோ? தீ அபாய ஆபத்துக்களைத் தடுக்கும் fire safety code அனுமதி போல ஏதாவதா?
  22. நீங்கள் சொன்ன பிரகடனங்கள் எல்லாம் யுத்த காலத்தில், தமிழர் பிரதிநிதிகளாக தரப்பொன்று (அல்லது சில) இருந்த காலத்தில் இரு தரப்புப் பேச்சு வார்த்தைகளின் விளைவாக வந்தவையாக இருந்ததால் உடனே கவனம் பெற்றன. இது பேச்சு வார்த்தையின் முடிவுப் பிரகடனம் இல்லையல்லவா? எனவே யார் கவனிக்கப் போகிறார்கள்? இப்போது கூட, பிரகடனத்தின் உள்ளடக்கத்தைச் சுட்டிக் காட்டிய பிறகும் அதைப் பற்றி எதுவும் பேசாமல், வேறெதையோ தானே பேசிக் கொண்டிருக்கிறோம்? முந்தியே தெரிந்திருந்தால் வித்தியாசமாக பேசியிருப்போம் என்கிறீர்களா? நான் நம்பவில்லை😂.
  23. //ஜஸ்ரின் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுமா?// ஓம் அல்லது இல்லையெனப் பதில் சொல்ல முடியாத கேள்வி இது. இது ஒற்றைத் தீர்மானம் அல்ல, பல தீர்மானங்கள், இலக்குகளின் தொகுப்பு - எனவே எல்லாம் நடை முறையாகாது என உறுதியாகச் சொல்ல முடியும்😎. பொருளாதாரம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் ஏற்கனவே உள்ளூர் தமிழ் தலைமைகளாலும், புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளாலும் முன் மொழியப் பட்ட மாற்றங்கள் தான் - எனவே இதில் யாரும் எதிர்க்க, அதிர்ச்சி கொள்ள எதுவும் புதிதாக இல்லை! திட்டமிடல் பாசையில் இது போன்ற பிரகடனத்தை blue print அல்லது high-level summary என்று சொல்வார்கள். ஒவ்வொரு இலக்கினுள்ளும் பல செயல்கள் (action items) உள்ளடங்கியிருக்கும். அந்த செயல்கள் நடை பெறுமா என்பதைப் பொறுத்தே இலக்கு தப்பும் அல்லது தாழும்! (இந்த இலக்குகளை செயல் பட்டியலாக வகைப்படுத்தும் முயற்சியைத் தான் கோசான் "ஈழத்தமிழர் அபிலாசைகள்" என்ற திரியில் செய்ய முயன்றார் என நினைக்கிறேன். பின்னர் அதை யார் பொறுப்பெடுத்தார்கள் என அறியேன்!) அழுத்தம்? இலங்கை அரச தரப்பு வெளி அழுத்தங்களால் பணியவைக்கப் பட முடியாத சில தகைமைகளைக் கொண்டிருக்கிறது. எனவே, moderate optimism!
  24. வேறெங்கும் தமிழில் இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால், சுருக்கமாக கீழே தந்திருக்கிறேன் - 6 அம்சப் பிரகடனம்: 1. நாட்டின் பன்முகத்தன்மையை, எந்த ஒரு சமூகமும் தன் கௌரவத்தை இழக்காத வகையில் காக்கவும், முன்னேற்றவும் வேண்டும். 2. பொருளாதாரப் பிரச்சினையைப் பொருத்தமான ஒரு அபிவிருத்தி மாதிரி மூலம் தீர்க்க வேண்டும் - உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல், புலம்பெயர்ந்த இலங்கையரின் முதலீடு,நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வளர் திசையில் வைத்திருத்தல், நாட்டை ஒரு மத்திய தர வருமானமுள்ள நாடாக மாற்றுதல். 3. ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் - அந்த அரசியலமைப்பு தனி மனித, சமூக உரிமைகளை முன்னேற்றி, சமத்துவம், சம பிரஜாவுரிமை என்பவற்றை மக்களிடையே பேண வேண்டும். நிர்வாக அமைப்புகளின் பொறுப்புக் கூறலை உறுதி செய்ய வேண்டும். மாகாணங்களுக்கு போதிய அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். அப்படியொரு அரசியலமைப்பு வரும் வரை, தற்போதிருக்கும் அரசியமைப்பின் படி இதய சுத்தியோடு அதிகாரப் பகிர்வின் அலகுகளை அமல் படுத்த வேண்டும். 4. பிரிக்கப் படாத, ஐக்கியமான ஒரு நாட்டின் கீழ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். மத, இன, கலாச்சார மற்றும் வேறு அடையாளங்களை ஏற்றுக் கொண்டு, மதித்து இன மதக் குழுக்களிடையேயானா புரிந்துணர்வை உருவாக்க வேண்டும். 5. கடந்த கால நிகழ்வுகளில் இருந்து கற்றுக் கொண்டு, பொறுப்புக் கூறி, சமாதானமாகி, எதிர்காலத்தில் இத்தகைய துன்பங்கள் மீள நிகழாமல் உறுதி செய்யும் ஒரு இலங்கையை இலக்கில் நிறுத்த வேண்டும். 6. இரு தரப்பு மற்றும் பல் தரப்பு சர்வ தேச ஒப்பந்தங்களை மதித்து சுதந்திரமான, செயலூக்கமான வெளியுறவுக் கொள்கையை முன்னெடுத்து, உலகின் சமாதானம் நிலவும் ஜனநாயக நாடுகளின் வரிசையில் இலங்கை இணைய வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.