-
Posts
6119 -
Joined
-
Last visited
-
Days Won
68
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Justin
-
இது கற்பனையென்றால், ஏன் அகற்றினார்களாம்? அச்சம் தவிர வேறென்ன காரணம்?
-
உண்மை. இங்கே மட்டுமல்ல, வட அமெரிக்காவின் ஒரு பெரிய தமிழ்ச்சங்கம் கூட ராஜரட்ணம் அவர்களை மிகவும் வெள்ளையடிக்கும் சில கட்டுரைகளை மீள்பிரசுரம் செய்திருக்கிறார்கள். "என்னைய்யா இது? இப்படி காசு தந்தால் புனிதம் செய்வோம் என்பது போல நடக்கிறீர்களே?" என்று ஒரு செயற்குழு உறுப்பினரான நண்பரைக் கேட்டேன். புன்னகைக்கிறார் மௌனமாக. என் கவலை, இளம் தமிழ் சமுதாயத்திற்கு தவறான முன்னுதாரணங்களை வழங்கி விடுவோமோ என்பது தான். எங்கள் பல இளையோர் நிதித்துறை, காப்புறுதித் துறை ஆகிய துறைகளில் வேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
-
புலவர், இங்கே பதில் தேடப் படும் கேள்வி புரியாமல் எழுதுகிறீர்களா அல்லது மணியே எல்லாவற்றுக்கும் காரணம் என்று காட்ட வாசிப்போரை முட்டாள்களாகக் கருதி எழுதுகிறீர்களா? அந்த வழக்கு நீக்கப் பட்ட பிறகு மணி யார் தயவிலோ மேயரானது நீக்கப் பட்ட பிறகு நீங்கள், சாத்ஸ், எழுஞாயிறு மூவரும் சொல்லும் "நீக்கும்" காரணங்கள் எல்லாமே நீக்கப் பட்ட பிறகு நடந்தவை. Chronologically, பின்னர் நடந்தது எப்படி முன்னர் நடந்த ஒன்றுக்கு காரணமாகும்? எந்தப் பிரபஞ்சத்தில் இது சாத்தியம்?🤣 கஜேந்திரனுக்குப் பதவி கொடுப்பதற்காகவும், எதிர்காலத்தில் மணி பொன்னம்பலத்தை மிஞ்சி விடுவார் என்ற அச்சத்திலும் அவரை நீக்கியிருக்கிறார்கள். இதன் பிறகு மணி செய்பவை பற்றி முறையிட யாருக்கு அதிகாரம் இருக்கிறது முன்னணியில்? இலகுவாக யோசிக்க மாட்டீர்களா?
-
இப்போது கொஞ்சம் விபரம் வெளிவருகிறது: கட்சியில் மூன்றாம் நிலை வாக்குப் பெற்றவர், தேசியப் பட்டியலுக்கு உரிமை கோரக் கூடாது என்பதற்காக மணியை விலக்கினர் என்கிறீர்கள்?. ஏனெனில், மணி தேசியப் பட்டியல் தரவில்லை என்று வெளியே முறையிட்டு விலகவில்லை. சுகாசை சம்மதிக்க வைத்தமை போல, மணியை சம்மதிக்க வைக்க இயலாமையால் ஒரு துல்லியமான காரணம் சொல்லாமல் வெட்டி விட்ட்டனர். விலக்கிய பிறகு தலைமைக்குக் கட்டுப்பட அவரென்ன லூசா?😂
-
நாதம் இரு வெவ்வேறு வழக்குகளை இணைத்து historical fiction எழுதுகிறார் என நினைக்கிறேன். ராஜரட்ணமும் எழுதவில்லை, சட்ட ரீதியாக இயங்கிய புனர்வாழ்வுக் கழகத்திற்கு நிதி வழங்கியதாக அமெரிக்க நீதித் திணைக்களமும் குற்றப் பத்திரிகை வழங்கவில்லை. கற்பனைக்கு இடைவெளி கிடைத்து விட்டது. ராஜரட்ணம் 14 நிதி மோசடி சார்பான குற்றங்களுக்காக ஜூரிகளால் குற்றம் காணப்பட்டார். இதை எதிர்த்து மேன்முறையீடு செய்து தோற்றார். எல்லா விபரங்களும் கீழே அமெரிக்க நீதித் திணைக்கள வெளியீடுகளில் சுருக்கமாகத் தரப்பட்டிருக்கின்றன. அரைப் புனைவுகள் வாசிக்க விரும்பாதோர் கீழே சென்று வாசித்தறியுங்கள்.👇 https://www.justice.gov/archive/usao/nys/pressreleases/June12/guptarajatverdict.html மேலே "சிவபெருமான்" என நாதம் குறிப்பிடும் FBI informant தொடர்பு பட்ட வழக்கு 2006 இல் கனேடிய, அமெரிக்க தமிழர்கள் சிலரைச் சிக்க வைத்தது. கீழே இருக்கும் செய்திக் குறிப்பின் படி C1 என்பவர் தான் "சிவபெருமான்" போல. https://www.justice.gov/archive/usao/nye/pr/2006/2006Aug21.html 2006 இல் ஒரு பிரபல வழக்கில் பயன்படுத்திய "சிவபெருமானை" மீண்டும் 2007 இல் ராஜரட்ணத்தை உளவறிய அனுப்பியிருப்பார்களா என்பது சந்தேகமே! ராஜரட்ணம் கேசில் ஈழத்தமிழர்கள் யாரும் பயன்படுத்தப் படவில்லை என்பதே நான் நியூயோர்க் நண்பர்கள் மூலம் அறிந்தது.
-
எழுஞாயிறு, ஆக உங்களிடமும் பாபநாசப் படக்கதையை விட வேறு காரணங்கள் மணியை ஏன் நீக்கினார்கள் என்ற கேள்விக்கு இல்லை!😂 உங்கள் பாபநாச லொஜிக்கின் அபத்தத்தைச் சுட்டிக் காட்ட மட்டும் இதே பாபநாசப் படக்கதையை கொஞ்சம் மாற்றி போட அனுமதி தாருங்கள்: "புலிகளை அமெரிக்கா 90 களில் பயங்கரவாத வெளிநாட்டு அமைப்பாகத் தடை செய்தது, அதன் பின்னர் 2008 வரை பல்வேறு மேற்கின் பயங்கரவாதப் பட்டியலில் இருக்கும் அமைப்புகள் செய்த சில செயல்களைப் புலிகளும் செய்தனர். எனவே அமெரிக்கா புலிகளை 90 இல் தடை செய்ய நல்ல காரணம் இருந்திருக்கிறது". இப்படி யாராவது சொன்னால், உங்கள் துலங்கல் எப்படி இருக்கும்? இதே துலங்கல் தான் என்னுடையதும் உங்கள் பாபநாசப் படப் பாணிக் கதைக்கு. இலங்கை போன்ற ஒரு ஊழல் வழியும் நாட்டில், எல்லா வழிகளில் வரும் வருமானத்தையும் ஏற்றுக் கொண்டு மக்களுக்கு சில பணிகளையாவது செய்யாமல், சி,வி ஐயா மாதிரி "சும் தடுக்கிறார், ஆளுனர் கெடுக்கிறார்" என்று மூக்கால் அழுத படி இருந்ததையா நீங்கள் சீரிய பணியாகப் பார்க்கிறீர்கள்? நன்கொடையை ஏற்றுக் கொண்டு அதைத் திட்டங்களாக மாற்றாமல், இது மத்திய அரசு செய்ய வேண்டியதென்று வாதாடிக் கொண்டிருந்தால் ஆரிய குளம் பார்த்தீனியக் குளமாகவே இருந்திருக்கும். இப்படிச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தியமை தான் மணியின் வெற்றி. இந்தப் பட்டியலில் உள்ளவையெல்லாம் உங்கள் கருத்துப்படி "துரோகங்கள்" என்று வருமாக இருந்தால், கஜே குழு ஏனைய கட்சிகளுடன் பேச்சு வார்த்தைக்குக் கூடப் போகாமல் இருப்பதும் கூட துரோகமில்லையா? அல்லது அது "ராசதந்திரமா" அல்லது "நமக்குப் பிடித்தவன் செய்தால் வுட்றா வுட்றா!" விதிமுறையா? 😂
-
உயிர் சுவட்டு எரிபொருள் விற்கும் கம்பனிகள் நேரடியாக "பசுமைத் தொழில் நுட்பம் உங்களுக்குக் கேடு" என்று கூவி விற்பதில்லை. "விஞ்ஞானம் சொல்வது முற்றிலும் உண்மையில்லை" என்று emphatic ஆகச் சொல்லி, ஒரு சந்தேகத்தை விதைப்பார்கள்! இப்படி விதைத்த சந்தேகத்தை நேரம் வரும் போது தங்களுக்குச் சார்பாக அறுவடை செய்வார்கள்! இதைத் தான் சிறுகச் சிறுக விதைத்தல் என்பது! இப்படி உண்மை எது, பொய் எது, என்கிற குழப்பத்தை உருவாக்கி ஒரு சிறு குழுவை பின்னே வர வைத்து விட்டால், அறுவடை நாள் விதைத்தவரின் தரப்பிற்கு மிகச் செல்வம் தரும் நாளாக இருக்கும்! உங்களுக்குப் பின்னால் ஏற்கனவே எடுபட்டு வரும் ஒரு குழு இருக்கிறது, எனவே நீங்கள் விதைப்பதும் தொடரும்! இதைத் தவிர உங்களுக்கு நான் சொல்ல வேறெதுவும் இல்லை!
-
தேர்தல் நேரமே குறுக்கோட்டம் ஓடியவரை தேர்தல் முடிந்து தேசியப் பட்டியலுக்கு ஆள் தேடும் வரை வைத்திருந்தமை ஏன் என்று தான் மக்கள் கேட்டார்கள், நானும் கேட்கிறேன் பதில் உங்களிடமும் இல்லை! ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பெயின்ற் பேணியோடு வந்து கஜே குழுவின் பதவியாசையைப் பூசி மெழுக மட்டும் செய்கிறீர்கள். 😂
-
தகவல்களுக்கு நன்றி. ராஜ் ராஜரட்ணம் தன் குற்றத்திற்குத் தண்டனை அனுபவித்து விட்டார், எனவே அவரைப் பற்றி மேலும் பேச எதுவுமில்லை. ஆனால், செய்த குற்றம், தண்டனை என்பவை பற்றி சில வெள்ளையடிப்பு முயற்சிகளும், தவறான தகவல்களும் மேலே சிலரால் பரப்பப் படுகின்றன. உண்மையான , பொது வெளியில் தெரியவந்த தகவல்களின் அடிப்படையில்: 1. ராஜ் ராஜரட்ணம் அரசுடன் plea deal எதுவும் செய்யாமல் தண்டனையை ஏற்றுக் கொண்டார். அவர் தெரிவு அது. ஆனால், கூடப் பிடிபட்ட ஒரு இந்திய அமெரிக்கர் கையும் மெய்யுமாக ராஜரட்ணம் பிடிபட wire அணிந்து உதவினார். Plea deal- இது அமெரிக்க நீதித் துறையினால் மக்களின் வரிப்பணத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தி விசாரணையை விரைவாக்கும் ஒரு முறையேயொழிய, அடிமைகளின் எசமான்களால் எழுதப் பட்ட அமெரிக்க சட்டத்தின் விளைவல்ல😅. இந்த முறை பற்றித் தான் ராஜரட்ணம் தன் நூலில் குறைப்படுகிறார். ஆனால், plea deals இல்லா விட்டால் ராஜரட்ணம் மட்டுமல்ல, எந்தப் பெரிய சுறாவையும் சின்ன மீன் போட்டுப் பிடிக்க இயலாமல் போகும், குற்றமே வியாபாரமாக மாறும். 2. ராஜரட்ணம் சிறை மட்டும் செல்லவில்லை 93 மில்லியன் டொலர்கள் தண்டமும் கட்டினார். எனவே, குற்ற வழியில் கிடைத்த (illegal proceeds) பணத்தின் ஒரு பகுதியை இழந்திருக்கிறார். 3. ராஜரட்ணம் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவர் நீதி மறு சீரமைப்புப் (judicial reform) பற்றிப் பேசுகிறார். அவர் பேசும் இந்த நீதி மறு சீரமைப்பு, கிம் கர்டாஷியன் பேசும் மறு சீரமைப்பை விட வித்தியாசமானது. Wall Street நிதி நிறுவனங்களை, கடும் சட்டங்கள் மூலம் அரசு கட்டுப் படுத்தக் கூடாது என்று வாதிடும் deregulation ஆதரவாளர்களும் ராஜரட்ணம் பேசும் நீதி மறு சீரமைப்பையே ஆதரிக்கின்றனர். இதற்கும், உண்மையில் சாதாரண அமெரிக்க மக்களுக்கு அவசியமான நீதி மறு சீரமைப்பிற்கும் எந்தத் தொடர்புகளும் இல்லை!. 4. ராஜரட்ணம் அவர்களின் தண்டனை ஒரு இந்திய, யூத "ஷதி" என்று வாதிடும் சிலரும் இருக்கிறார்கள் (யாழில் அல்ல!). ராஜரட்ணத்தைக் கையும் களவுமாகப் பிடித்த இந்திய அமெரிக்கரான பிரீத் பராரா, பிரபலமான, மிகவும் நேர்மையான ஒரு US attorney. SDNY இல் இவர் இருந்த போது, பல பணமுதலைகளைச் சிக்க வைத்து ஏராளமான தண்டப் பணம் கட்ட வைத்த கெட்டிக் காரர். எனவே, சதி என்பதை விட, ஒரு நீதியான விசாரணையில் ராஜரட்ணம் தண்டனை பெற்றார் என்பதே உண்மை.
-
🤣இதைத் தான் பாபநாசம் பட திரை வசனம் என்றேன்: மணியை நீக்குகிறது கஜே குழு. நான்: ஏன் நீக்கினார்களாம்? சாத்ஸ்: கூட்டத்தில் தகராறு செய்தார், மேலும் டக்கி குழுவோடு சார்ந்தார்! நான்: அது நீக்கிய பின்னர் அல்லவா? நீக்க என்ன காரணமாம்? சாத்ஸ்: மேலே சொன்ன, நீக்கிய பின்னர் அவர் செய்தவை தான் காரணங்கள், அதிலேயே பதில் இருக்கே? இப்ப என் கேள்வி: கஜே குழுவுக்கு யார் time travel machine ஐ வழங்கி உதவினார்கள்?
-
உறவே, எனக்கு உண்மைக் காரணம் தெரிந்தால் நான் ஏன் எழுஞாயிறிடம் கேட்கிறேன்? உங்கள் கதை பாபநாசம் திரை வசனம் போலல்லவா இருக்குது?😂 முன்னா பின்னா தெரியாது என்கிறீர்கள், ஆனால் அது தான் நீக்கக் காரணம் என்கிறீர்கள். மணி நீக்கப் பட்டதற்கான காரணம் சளாப்பலாகக் கூறப் பட்டது, ஆனால் கூறப்பட்ட சம்பவங்கள் நடந்தது நீக்கப் படுவதற்கு ஒரு ஆறு மாதங்கள் முன்பான காலத்தில். அந்த நேரம் உடனே நீக்காமல், தேர்தலில் வென்று தேசியப் பட்டியல் போட்டி வந்த பின்னர் ஏன் நீக்கினார்கள்? இதைத் தான் எழுஞாயிறிடம் கேட்கிறேன். முன்னர் ரதி ஒரு தடவை கேட்ட போது "உங்களுக்கெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை!" என்றார். எனவே, தெரிந்து கொண்டு தான் சொல்லாமல் இருக்கிறார் எனக் கேட்கிறேன்.
-
நுணா, உங்களுக்காவது இந்த கடலட்டைப் பண்ணை பற்றிய சூழல் பாதிப்புகள் பற்றித் தெரியுமா? அறிக்கையேதாவது தேடித் தர முடியுமா?
-
இதை நீக்கக் காரணமாக கஜே குழு சொன்னதாக எனக்கு நினைவில்லை! இது நீக்கப் பட்ட பிறகா அல்லது முன்னரா? என்னைப் பொறுத்த வரை, நகர, மாகாண மட்டங்களிலாவது இனி நாம் தமிழர்களுக்கு ஏதாவது கிடைக்கும் வழியில் முன்னாள் துரோகிகளோடும் கூட சேர்ந்து தான் செயல்பட வேண்டும். அந்த வழியில், டக்கியோடு சேர்ந்து சில நல்ல திட்டங்களை மக்களுக்குச் செய்வதில் பெரிய விக்கினமேதும் இல்லையென நினைக்கிறேன். இது நடக்கா விட்டால், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நகர சபையையும், மாகாணத்தையும் கைப்பற்றுவது நடக்கும். மீண்டும் துரையப்பா காலம் போல முதல் சதுரத்தில் போய் நிற்க வேண்டி வரும்!
-
சில முன்பாதுகாப்பு நடவடிக்கைளை புட்டின் விரோதிகள் எடுக்கலாம் என நினைக்கிறேன்: 1. நில மட்டம் (ground), அல்லது நிலத்தின் கீழ் (basement) மட்டத்தில் மட்டுமே தங்கி நிற்க வேண்டும் ஹோட்டல்களில். 2. இந்த லெவலுக்கு மேலே போய் உச்சா போவதாக இருந்தாலும், எப்போதும் ஒரு பரசூட்டை அணிந்த படி தான் போக வேண்டும் (எலொன் மஸ்க்கிடம் கேட்டால், சட்டைப் பையில் அடங்கக் கூடிய பரசூட்டை உடனே வடிவமைக்க தன் எஞ்சினியர் படையை ஏவி விடுவார்!) 3.. மேலும் ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன!
-
புலவர், மணிக்குப் பதவி ஆசை வரமுதல் அவர் மூலம் சில ஆயிரம் வாக்குகளைப் பெற்று வென்ற கஜே குழு தேசியப் பட்டியல் ஆசையில் அவரைக் கட்சியில் இருந்து தூக்கிய பிறகு, முன்னணிக்குத் தடவி விட மணிக்கு என்ன தேவை இருந்தது என நினைக்கிறீர்கள்? உலக வங்கி என்ன அடிப்படையில் இந்த 2022 தரப்படுத்தலை செய்திருக்கிறது என்று அறிய ஆவல், ஒதுக்கிய பண அடிப்படையிலா அல்லது பூர்த்தியான திட்டங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலா? எதுவாக இருந்தாலும் எங்கள் பகுதி நிர்வாகங்கள் நன்கு செயற்படுவதில் மகிழ்ச்சியே!
-
அழகிய நகரம் திட்டத்தின் கீழ் ஆரிய குளப் பகுதி மீளமைப்பு, புல்லுக் குளத்தை அண்டிய பகுதி, நாயன்மார்க்கட்டுப் பகுதியில் சில வேலைகள் என பல திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டன. ஆரிய குளம், புல்லுக் குளம் பூர்த்தி, நாயன்மார்க்கட்டு ஏரியா பற்றித் தெரியவில்லை. இதுக்கேன் குறை நினைக்கிறேன்? 😂 நாம் மணியைப் பற்றிப் பேசும் போதே நீங்களும் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லிப் போங்கோவன் குறை நினைக்காமல்? ஏன் தேர்தல் வென்ற உடனேயே பொன்னம்பலத்தார் மணியை வெட்டினவராம்?
-
பல நகர அபிவிருத்தி சார்ந்த செயல்திட்டங்களைக் குறுகிய காலப்பகுதியில் செயல்படுத்திய ஒரு யாழ் மேயர் மணிவண்ணன். இனி யார் வந்து கதிரையைச் சூடாக்க ஆவலாக இருக்கிறார்கள் எனப் பார்க்க ஆவலாக உள்ளேன்!😂 மணி இனி தேசிய அரசியலுக்கு வர வேண்டியது தான், செயல்படக் கூடியவர்கள் தான் அங்கேயும் தேவை. கவனிப்பார் என நம்புகிறேன்.
-
உண்மையில் இந்தக் கடலட்டைப் பண்ணைகளால் சூழல் ஆபத்து, மீன்வளப் பாதிப்பு இருக்கிறதா? ஆம் எனின், இதைப் பற்றிய சூழல் பாதிப்பு (environmental impact) அறிக்கையைத் தயாரித்தது யார்? யாழ் பல்கலையில் மீன்/கடல் வளத்துறையோடு தொடர்பான ஒருவர் இருக்கிறார் - அவர் வட மாகாண சபையில் முன்னாள் அமைச்சரெனவும் நினைக்கிறேன். ஏன் இது போன்ற விடயங்களில் வடக்கில் இருக்கும் இரு பல்கலைகளில் ஒன்றான யாழ் பல்கலை ஆய்வுச் சமூகம் மௌனமாக இருக்கிறது? இதே மௌனம், அரசியல் கூச்சல் என்பன தான் சுன்னாகம் எண்ணைப் படிவிலும், மன்னார் காற்றாலைத் திட்டத்திலும் நிலவுகிறது. அரசியல்வாதிகளைத் தூக்கி ஒரு பக்கம் போட்டு விட்டு விஞ்ஞான ரீதியாக இதை அணுக ஒருவர் கூட யாழ், வவுனியா பல்கலைகளில் இல்லையா?
-
பெருமாள், உங்கள் தமிழ் பற்றுப் போல தமிழ் அறிவு இல்லையென்கிறீர்களா? தங்கள் இன, மத அடையாளத்தினால் நாடில்லாமல் அந்தரிக்கிற மக்களைப் பார்த்து, முடிந்தால் மத அடையாளத்தை விட்டு விட்டு வரட்டும் என்ற தொனியில் கருத்து வைத்தீர்கள். அருகிலிருக்கும் நாடுகளுக்கே ஓட்டைப் படகுகளில் தப்பி ஓடும் றோஹிங்கியாக்கள் அவுஸ் போல இடம் தேடுகிறார்கள் என்றீர்கள். இந்தக் குருட்டுத் தனமான இன/மதவாதக் கருத்திற்கு "சட்டை" போட்டால் நான் எழுதிய கருத்து வருகிறதா?, உங்கள் வாசிப்பு விளக்கம் என்ன? இவ்வளவு பட்டு, ஓடி அகதியாகி, இன்னொரு நாட்டு மக்களின் தயவினால் பாதுகாப்புடன் வாழ்கிற ஒரு சமூகத்தில் இருந்தபடி, இப்படியெல்லாம் பேச உங்களுக்கு வெக்கம், சூடு, சொரணை எதுவும் இல்லையா?
-
சரியான தகவல்கள் இல்லாத இடத்தில் பொய்யான தகவல்களும், சந்தேகங்களும் புகுந்து கொள்ளும் வெளி ஏற்படும் என்பதற்கு உதாரணமான கருத்து இது👆. எனவே, அடிப்படைத் தகவல்களை கீழே குறுங்கட்டுரையாகத் தொகுத்திருக்கிறேன்👇: றொஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு உலகைன் முஸ்லிம் நாடுகள் எவையும் உதவுவதில்லை. இப்போது நினைத்துப் பார்க்கிற போது, ஏதிலிகளாக இடம்பெயரும் எந்த முஸ்லிம் குழுக்களுக்கும் பணக்கார முஸ்லிம் நாடுகள் பெரிதாக உதவுவதில்லை - பஸ்தீனியர், ஆப்கானியர், சிரியர்கள் இப்படிப் பல குழுக்கள் பெருமளவு மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளால் ஏற்றுப் பராமரிக்கப் படுவதில்லை. ஆனால், வாழும் நாடுகளில் மதராசாக்கள் அமைத்து முஸ்லிம் மதத்தை மேலும் மேலும் நாகரிக உலகிலிருந்து அன்னியப் படுத்த இதே பணக்கார நாடுகள் பணத்தை வாரி இறைக்கும்: இலங்கையின் கிழக்கே இதற்கு நல்ல உதாரணம். யார் இந்த மக்கள்? வரலாற்று ரீதியாக இவர்கள் வங்க தேசம், அதை நிலப்பரப்பு ரீதியாக ஒட்டிய இந்தியப் பகுதிகளில் வாழ்ந்து, மியன்மாரின் றகைன் (Rakhine) மாநிலத்தினுள் குடியேறிய முஸ்லிம் மக்கள் எனக் ஐ.நா அமைப்புக் கூறுகிறது. ஆனால், நடை முறையில் இவர்கள் உலகின் மிகப் பெரிய நாடற்ற (stateless) மக்கள் குழுவாக இருக்கின்றனர். பௌத்தம் பெரும்பான்மையான மியன்மார் இவர்களைத் தங்கள் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. வங்க தேசமும் இவர்களைக் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த மக்களின் பூர்வீக நிலத் தொடர்பினால், இந்த இரு தேசங்களும் நியாயமாக றோஹிங்கியாக்களைக் குடிமக்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை. றோஹிங்கியா அகதிப் பிரச்சினை இது 2015 முதல் மியன்மாரில் இருந்து இந்த மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக இடம்பெயர் ஆரம்பித்ததோடு சர்வ தேச கவனம் பெற்றது. ஆனால், 2017 இல் தான் மியன்மார் பௌத்த குண்டர்களும் , இராணுவமும் சேர்ந்து பல றோஹிங்கியா கிராமங்களை அவர்களின் பாரம்பரிய வசிப்பிடமான றகைன் மாநிலத்தில் எரியூட்டி, ஒட்டு மொத்தமாக ஒரு மில்லியன் வரையான மக்களை இடம்பெயர வைத்தார்கள். இந்த ஒரு மில்லியன் வரையான றோஹிங்கியா மக்களில் பெரும்பாலானோர், மியன்மார் வங்க தேச எல்லைக்கருகில் இருக்கும் கொக்ஸ் பசார் (Cox Bazar) எனப்படும் வங்க தேசப் பகுதியில் அகதி முகாம்களில் வசிக்கின்றனர்.ஏனையோர், தாய்லாந்திலும், மிகச் சொற்பமானோர் இந்தியாவிலும் அகதிகளாக இருக்கின்றனர். ஐ.நா இந்த மக்களை நாடற்றவர்களா ஏற்றுக் கொண்டிருந்தாலும், பல நாடுகள் இவர்களை அகதிகள் நிலையில் கூட உள்ளே அனுமதிக்காத நிலை இருக்கிறது. எனவே, இவர்கள் அடிக்கடி மாதக்கணக்கில் வங்கள் கடலில் தத்தளிக்கும் நிலை ஏற்படுகிறது. என்ன தான் முடிவு இதற்கு? எல்லா அகதி மக்கள் போலவே, றோஹிங்கியா மக்களுக்கும் மேற்கு நாடுகளில், குறிப்பாக ஐரோப்பாவில் அவர்களுடைய நலன்களை முன்னிறுத்தும் அமைப்புகள் இருக்கின்றன. மியன்மாரில் றோஹிங்கியாக்களுக்கு நடப்பது இனச்சுத்திகரிப்பு என இந்த அமைப்புகள் தெரிவித்து , ஐரோப்பிய நாடுகளில் சட்ட, கொள்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த முயற்சிகளின் ஒரு மைல் கல் கடந்த ஜூலையில் நிகழ்ந்திருக்கிறது. ஐ.நாவின் சர்வதேச நீதிமன்றில் (ICJ), ஒரு மூன்றாம் தரப்பின் மூலம் வழக்குத் தொடரும் ஏற்பாட்டின் மூலம், கெம்பியா (Gambia) என்ற ஆபிரிக்க நாடு றோஹிங்கியா மக்கள் மீது மியன்மார் செய்யும் இனப்படுகொலை தொடர்பாக ஒரு வழக்கைப் போட்டிருக்கிறது. இந்த வழக்கைப் போட கெம்பியாவிற்கு உரிமை (standing) இல்லை என்று மியன்மார் தொடுத்த எதிர்ப்பை கடந்த ஜூலையில் சர்வதேச நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. இந்த இடத்தில் ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக் குற்றச் சாட்டை எப்படி சர்வதே நீதிமன்றில் முன்னெடுப்பது என்றும் யோசிக்க ஒரு முன்னுதாரணம் கிடைத்திருக்கிறது. றோஹிங்கியா மக்கள் அமைப்புகள் செய்தது போல, ஒரு மூன்றாம் தரப்பின் வழியாக தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை சர்வ தேச நீதிமன்றில் ஒரு வழக்காகத் தொடுக்கும் முயற்சி பிரித்தானியாவில் இருக்கும் ஒரு தமிழர் அமைப்பினால் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது, அதன் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை. தொகுப்புக்கான மூலங்கள்: https://www.unhcr.org/en-us/rohingya-emergency.html https://www.cfr.org/backgrounder/rohingya-crisis https://www.icj-cij.org/en/case/178 வாசித்துப் பயன்பெறுங்கள். ஊகங்கள், அதன் வழி வரும் வெறுப்புகள்-இவற்றை எங்களை விட மோசமான நிலையில் அவதியுறும் மக்கள் மீது பரப்பாதிருங்கள்!
-
கோசான், எனக்கும் இந்தக் குறைந்த பங்களிப்பு அதிசயம் தருகிறது. நாங்கள் மூன்று தசாப்தங்களாகப் பேசிக் கொண்டும், யாசித்துக் கொண்டும் இருக்கும் சில lofty தீர்வுகளின் துல்லியமான கூறுகளைப் பேச அனேகர் தயாராக இல்லை, அயர்ச்சியா அல்லது வேறெதும் காரணமா தெரியவில்லை. "ஒற்றை ஆட்சி" "எக்க ராஜ்ஜிய" "சமஷ்டி" ஆகிய சில சொற்களை வைத்துக் கொண்டு பக்கக் கணக்காக doctoral theses எழுதிய மக்கள் granular details என்று வந்தால் பட்டியலிடத் தயங்குகிறார்கள்! ஆனால், தொடருங்கள், நானும் எனக்குத் தெரிந்ததைப் பதிகிறேன். நேரத்திற்கு நன்றி!