Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. எப்படி வசி தரவுகள் கூட ஒருவரின் சுயமுடிவில் தான் சரியா பிழையா என்று தீர்மானிக்கப் பட முடியும் என்கிறீர்கள்? தரவு என்பது objective அல்லவா? 1972 நிலச்சீர்திருத்தம் மூலம் பெரிதும் காணிகளை இழந்தது தென்பகுதியில் வளவு காரர்கள் என அழைக்கப் பட்ட பணக்காரர்கள். ஏனெனில், மில்லியன் கணக்கான ஏக்கர்கள் வயல் காணிகளும், வயல் செய்யாத காணிகளும் அவர்கள் வசமிருந்தே அரசுக்குப் போனது. அதைக் கூட அரசு உடனே ஏழைகளுக்குக் கொடுக்கவில்லை. அரச கூட்டுத் தாபனங்கள் எதையும் செய்ய முதலே 1977 இல் இந்தச் சட்டமெல்லாம் உதாசீனம் செய்யப் பட்டு விட்டது! இவை தரவுகள்-data. இதை விட ஏதாவது தரவுகள் இருக்கின்றனவா, உங்கள் கருத்திற்கு பலம் சேர்க்க? அபிப்பிராயங்களுக்கும் (opinion), தரவுகளுக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா?
  2. இப்படிப் பட்ட வித்தியாசமான சிந்தனைகளை வரவேற்கிறேன் கந்தையர்😎. இந்த புதிய பார்வையின் படி பார்த்தால் முள்ளிவாய்க்காலிலோ அதற்கு முன்னரோ இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைக் கொன்றது என்று எங்கும் முறையிட முடியாது என்கிறீர்கள்? புலிகளுக்கு சாப்பாடு போட்டவன், நகை/காசு கொடுத்தவன், ஆஸ்பத்திரியில் நின்று காயப்பட்டவனைப் பார்த்தவன், வாயால் புலிகளை மெச்சியவன், எழுதியவன் எல்லாரும் சீருடை போடாத புலி வீரர்கள், அவர்களைக் கொன்றதை எப்படி சிங்களவன் அப்பாவிகளைக் கொன்றான் என்பதாம்? (தென்பகுதியில், இப்படி புலிகளின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்த பலர் காணாமல் போயிருக்கின்றனர், அதே நேரம் இன்னும் பலர் கைதாகி, சிறை சென்று தண்டனை அனுபவித்து மீண்டும் வெளியே வந்து வாழ்கின்றனர் - அப்ப சிங்களவரின் சிஸ்ரம் புலிகளின் சிஸ்ரத்தை விட டீசன்ட் என்கிறீர்கள்! அப்படியா?)
  3. தாழப் பறந்து ரேடாரில் இருந்து தப்புவதெல்லாம் இஸ்ரேல் 60 களில் பயன்படுத்திய நுட்பம், அதை புலிகள் பின்பற்றினர், இப்ப உக்ரைன் பின்பற்றுகிறது. இது "தமிழ் தான் உலகின் எல்லா மொழிகளுக்கும் தோற்றுவாய்" என்ற உருட்டல் போல அல்லவா இருக்கிறது?
  4. அரசியல் தலையீடாக இருக்கலாம் என ஊகிக்கிறேன். திரு. இந்திரகுமார் பதவிக்கு வந்த பின் டக்ளசை வந்து சந்திக்கும் படி அழுத்தம் கொடுக்கப் பட்டதாக அறிந்தேன். அவர் சில நாட்கள் தள்ளிப் போட்டார், இறுதியில் போய் சந்தித்தாரா என அறியேன். மறு பக்கம் பிரதி அதிபராக இருந்த திருமதி செல்வகுணாளன், புலத்தில் இருக்கும் பழையமாணவர் அமைப்புகளோடு தொடர்பு கொண்டு வெளிநாட்டுக் காசு பாடசாலைக்கு வர முயற்சிகள் செய்து வருபவர் (எல்லாக் காசும் பாடசாலைக்குத் தான் போகிறதா என்பது மில்லியன் டொலர் கேள்வி😎!) இந்தப் பின்னணியில் குறுகின காலத்தில் திரு.இந்திரகுமாரை அகற்றி, இவருக்கு பதவியுயர்வு வந்திருக்கிறது. (நான் மத்திய கல்லூரிப் பழைய மாணவன் என்பதால் இந்த வசந்தி/துலாபாரம்/பின் கதையெல்லாம் எனக்கு வந்து விடும் உடனே!)
  5. ஆம். இச்சட்டத்தின் நோக்கம், காலனித்துவ காலத்தில் வெளிநாட்டினரிடம் அல்லது வெளிநாட்டினரின் நிழலில் வாழ்ந்த பணக்காரர்களிடம் தேங்கி விட்ட காணிகளை மீள சுதேசமயப் படுத்துதல் என்பது தான். இந்த 1972 சட்டத்திற்கு, 1975 இல் ஒரு திருத்தம் கொண்டு வரப் பட்ட போது, பெருந்தோட்டக் (plantation) காணிகள் பலவற்றின் உரிமை காலனித்துவ கம்பனிகளிடமிருந்து அரச கூட்டுத் தாபனங்களிடம் மாறின. எனவே, இது அந்தக் காலப் பகுதியின் இடதுசாரி, சுதேசவாத அரசின் கொள்கையேயொழிய, இதனால் தமிழர்கள் பாதிக்கப் பட்ட பதிவுகளைக் காணவில்லை. 1977 இல் ஐ.தே.க ஆட்சிக்கு வந்த போது, மீண்டும் தனியார் உரிமையை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் காணிச்சட்டங்களை ஐதாக்கினர்.
  6. இது ஒரு நிர்வாகப் பதவி. பெண், ஆண், இடைப்பாலினர் ஆகிய எவரும் தகுதி இருந்தால் வழங்கப் பட வேண்டிய பதவி. இதில் "கலாச்சார விழுமியம் காக்க" அவர் பெண்கள் பாடசாலைக்குப் போக வேண்டுமென்கிறார்கள். அதென்னப்பா ஆண்கள் பாடசாலையின் "கலாச்சார விழுமியம்" 😂?
  7. சுவாரசியமான கட்டுரை. ஆனால் நரமாமிசம் உண்ணும் பழக்கம் வழக்கொழிந்தமைக்கான ஒரு முக்கியமான காரணத்தைத் தவற விட்டிருக்கிறார்கள். Prions எனப் படும் புரத மூலக் கூறுகளால் ஏற்படும் நோய்கள் நரமாமிசம் உண்பதால் உருவாகும் தீமைகளில் முக்கியமானது. பபுவா நியுகினி, இந்தோனேசியாவுக்கு அருகில் இருக்கிறது. அங்கே வாழும் பழங்குடியினர் நரமாமிசம் சாப்பிடுவதை நவீன காலத்திலும் ஒரு சடங்காகச் செய்து வந்தனர். அவர்களிடையே குணப் படுத்த இயலாத CJD (Kuru) எனப் படும் ஒரு மூளை நோய் தீவிரமாகப் பரவ இந்த நரமாமிசம் காரணமாக இருக்கிறது. இது போன்ற நோய்களால், முன்னோர் விழிப்படைந்து நரமாமிசம் உண்பதைக் கை விட்டிருக்கலாம்.
  8. எனக்கும் புதிதாகத் தான் இருக்கிறது. தேடிப் பார்க்கிறேன். ஆனால், இந்தத் திரியில் பல தவறான தகவல்களைப் பரப்பித் தான் இந்தக் கொலைகளை மிகப் பிரயத்தனப் பட்டு நியாயப் படுத்த வேண்டியிருக்கிற நிலையை அவதானிக்கிறேன். உதாரணமாக யோகேஸ்வரன் கொலை: கொலை நடந்த காலப் பகுதியில் செய்திப் பத்திரிகை வாசித்தோருக்குபுரிந்த தகவல், யோகேஸ்வரன் தான் அமிர், சிவசிதம்பரம் ஆகியோரை புலிகளின் ஆயுதக் குழு சந்திக்க ஏற்பாடு செய்தார். வந்தவர்களை பரிசோதிக்காமல் உள்ளே விடும் படி கோரியதும் அவரே. உள்ளே வந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் அமிரைச் சுட்ட போது குறுக்கே சென்று தடுக்க முயன்ற யோகேஸ்வரனும் சுடப் பட்டார். ஆனால் இப்ப புதுக் கதை என்னவென்றால் யோகேஸ்வரன் "1000 பேரைக் தந்தால் ஈழம் எடுத்துத் தாறன்" என்றி விட்டு, பின்னர் அரசோடு சேர்ந்தியங்கமையால் சுடப் பட்டார். இப்படிப் பல திரித்த கதைகள், அவற்றை நம்பவும் ஆட்கள் 😂 ! நல்ல வேளையாக எங்களிடம் இப்ப ஆயுத தாரிகள் இல்லை. இருந்திருந்தால், என்னையும் உங்களையும் கூட "வேள்விக்கு" கொண்டு போக ஆட்கள் வந்திருப்பர்!
  9. செய்தியில் இருப்பதை வாசித்தாலே தேர்தல் கடன் பத்திர முறை 2018 இல் இருந்து தான் நடைமுறையில் இருக்கிறதென விளங்கும். மேலதிக தகவல் பி.பி.சி யில்: இது வரை 160 பில்லியன் இந்திய ரூபாய்களுக்கு கடன் பத்திரங்கள் மூலம் பரிமாற்றம் நடந்திருக்கிறது. இதில் 57% பி.ஜே.பிக்கு, வெறும் 10% தான் எதிர் கட்சியான காங்கிரசுக்கு போயிருக்கிறது. பிடிக்காத காங்கிரசையும், திமுகவையும் தாக்க வேண்டுமென்பதற்காக பிழையான தரவுகள் மூலம் மிக முயற்சி செய்து மிளகாய் அரைக்கிறார் பெருமாள்😂!
  10. வணக்கம் வசி, பல இடங்களில் நீங்கள் குறிப்பிடும் உதாரணங்கள், கருத்துக்கள் சம்பந்தமில்லாமல் இருக்கின்றன. இங்கே curve-fitting பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எதிர்காலத்தை கணிக்கும் மொடலிங் செய்வதற்கான curve-fitting இற்கும், நடந்த சம்பவங்களின் சரி, பிழை, நிகழந்து விட்ட விளைவுகள் பற்றிப் பேசும் இந்த திரிக்கும் என்ன சம்பந்தம்? பல ஆயுதம் தரிக்காத மனிதர்கள் "ம்" என்றதும் சுட்டுக் கொல்லப் பட்ட நிலை பற்றிப் பேசுகிறோம். அந்த கொலைகளால் தமிழர்களின் போராட்டத்திற்கு ஏற்பட்ட ஒரு நன்மையும் எனக்குத் தெரியவில்லை (இல்லை, போராட்டம் 2009 இல் பெரும் உயிரழிவோடு முடிந்தமை தான் அந்த நன்மை என்று யாரும் வாதிட்டால் என்னிடம் பதில் இல்லை😎!). காரண காரியத் (cause and effect) தொடர்பை கண்ணால் கண்ட பின்னும், ஏன் curve-fitting உதாரணம்? ஒரு கருப்பொருள் உங்கள் மூளையில் தோன்றி விட்டது என்பதற்காக பொருத்தமில்லாத இடங்களில் திணித்து விடுகிறீர்களோ என்று தோன்றுகிறது!
  11. இதை ஏன் நம்பக் கஷ்டப் படுகிறீர்கள்😅? புலிகள் விரும்பிய தீர்வல்லாமல் ஒரு தீர்வுப் பொதியை சந்திரிக்காவுடன் சேர்ந்து நீலன் தயாரிக்க முயன்றார். அவருக்கு மேற்கின் ராஜதந்திர மட்டங்களிலும் மரியாதை இருந்தது (அவர் ஒரு அரசியலமைப்பு நிபுணர் என்பதால்). இது புலிகளைக் கோபப் படுத்தா விட்டால் வேறெது கோபப் படுத்தியிருக்கும் என்கிறீர்கள்? அமிர் இப்படி தானே கோபமூட்டினார்?
  12. சித்தார்த்தன் பா. உவை எப்படி மறப்பது😂? புளொட்டின் வவுனியா பிசினஸ் பொறுப்பு மாணிக்கதாசும் , சின்ன தாஸ் (அல்லது அலவாங்கு தாஸ்) என்ற அடியாளும். இவர்கள் சேர்க்கும் கப்பக் காசின் பங்கை வாங்க சித்தார்த்தன் கொழும்பிலிருந்து இராணுவ உலங்கு வானூர்தியில் யோசப் முகாமிற்கு வருவார், முகாமை விட்டு வெளியே வரார். வாகனத் தொடரணியாக தாஸ் அணி யோசப் முகாமுக்கு வந்து சித்தார்த்தனிடம் பங்கைக் கொடுத்து விட்டு திரும்பிப் போகும். இந்தச் சடங்கு ஓரிரு மாதங்களுக்கொருமுறை நடக்கும்! இரு தாஸ்களையும் புலிகள் கொன்ற பின்னர், ஊத்தை பவான் உள்ளூர் புளொட் தலைவரானார், அதன் பின்னர் சித்தார்த்தன் கை நனைப்பது கொஞ்சம் குறைந்தது. புலிகள் இல்லாமல் போன பின்னர் வவுனியா வந்து வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்டு, தேர்தலில் வென்று இப்போது "என் வேட்டி வெள்ளை" எனத் திரிகிறார்😎! சம்பந்தரிடம் அரசியல் சார்ந்து முறைப்பாடுகள் இருக்கலாம் . ஆனால், அவர் நிதி ரீதியில் ஊழல்கள் செய்ததாக சிங்களவர்களே சொல்ல மாட்டார்கள். நம் ஆட்கள் தான் காழ்ப்புணர்வினால் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
  13. 2000 களில் வடக்கு கிழக்கில் தமிழ் பா.உ என்றால் அவர்களது பணிப் பட்டியல் மிகக் குறுகியது: காசு வாங்கிக் கொண்டு அரச வேலை எடுத்துக் கொடுத்தல் பொலிஸ் பிடித்தால் வெளியே எடுத்து விடுதல் (இதற்கும் கூலி தான்). வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து காசுக்கு ஆட்களை வெளியே எடுத்து விட்டு வன்னியின் முன்னாள் பா.உ வினோகராதலிங்கம் போன்றோர் கோடிக் கணக்கில் உழைத்தனர். இது போன்ற கோல்மால் வேலைகளில் ஈடுபடாமல் இருந்த ஓரிருவரில் சம்பந்தரும் அடங்குவார். இந்த நிலையில் இருந்து, தமிழ் பா.உ என்றால் தீர்வு முயற்சியில் முழுமையாக ஈடு பட வேண்டுமென்ற புதிய தராததரத்தை அறிமுகம் செய்தது சுமந்திரன் என நினைக்கிறேன். 90 களில், இதே போன்ற ஒரு முயற்சியை தேசியப் பட்டியல் மூலம் உள்வாங்கப் பட்ட நீலன் திருச்செல்வமும் செய்ய முயன்று, பின் ஆதரவில்லாமல் வெறுத்துப் போய் விலகினார், பின்னர் புலிகளால் கொல்லவும் பட்டார். அவர் செய்ததெல்லாம், சந்திரிகாவுடனான தனிப் பட்ட நட்பைப் பாவித்து அந்த நேரம் அரசியலைமைப்பு மாற்றம் மூலம் தீர்வுக்கு முயன்றமை தான்.
  14. இதைப் பற்றி பல இடங்களில் விவாதித்திருப்பதால் மீள உரைத்தல் அலுப்புத்தரலாம்: ஆனால் இந்தப் பின் கதவால் வந்தார்கள் என்ற கருத்துக் கூட ஒரு மென்மையான சதிக்கதையே தவிர ஆதாரங்கள் கொண்ட கருத்துக்கள் , சந்தேகங்கள் அல்ல. என்னைப் பொறுத்த வரை, காழ்ப்புணர்வு தான் இவற்றின் மிக ஆழமான வேர். "போரை, ஆயுத வழியை அரசியலுக்கு வரமுதலே ஆதரிக்கவில்லை" என்று சுமந்திரன் சொல்வதை அந்த வழியில் தான் தமக்கு பிழைப்பு இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருப்போர் அச்சத்துடன் பார்ப்பதும் இன்னொரு காரணம். ஆனால், முதலில் தேசியப் பட்டியலில் வந்தவர் அதன் பின்னர் இரு தேர்தல்களில் அதே தீவிர தேசியம் சாராத கொள்கையைச் சொல்லியும் வென்றார் அல்லவா? எனவே, தாயகத்தில் இருப்போரின் முடிவுக்கு மதிப்பளித்து அவர்களை முடிவு செய்ய விட வேண்டியான். இத்தகைய தர்க்க ரீதியான முடிவுகளை எடுக்க முடியாமல் காழ்ப்பிலும், வெறுப்பிலும் உழல்வோர், பூடகமாக சுமந்திரன் வாழ்க்கை முடிவு பற்றியெல்லாம் எழுதி தங்கள் இருண்ட ஆன்மாவைத் தான் வெளிக்காட்டிக் கொள்கிறார்கள்.
  15. என்னுடைய கேள்வி: சுமந்திரன் இளையோரை முன்வர விடாமல் தடுத்தது எப்படி? இவ்வளவு நீளமாக எழுதியிருக்கிறீர்கள், இதில் பதில் இருக்கிறதா? அல்லது சும்மா எழுந்தமானமாக சொன்னதை padding செய்திருக்கிறீர்களா?
  16. சிங்கப்பூர் ஜெனரல் சொன்னது உண்மையாக நடந்ததா என்பதில் தான் ஆர்வமில்லை - இலகு தமிழில் சொல்லாமல் விட்டமைக்கு மன்னியுங்கள்😎! பால்ராஜ் சிங்கப்பூர் சென்றதை யார் மறுதலித்தார்கள் இங்கே? எனவே தான் உங்கள் இணைப்பு தொடர்பற்றது என்றேன். இணைப்புக் கூட சூசை சிங்கப்பூர் சென்றது பற்றியது. நிற்க: பால்ராஜ் அவர்களின் பெருமை பற்றிப் பேசும், நம்பிக்கையான, யாரும் மறுதலிக்க முடியாத பல பதிவுகள் இருக்கின்றன. அவையே பால்ராஜின் பெருமை சொல்லப் போதுமானவையாக இருக்கும் போது இப்படி நிரூபணமில்லாத கிளிஷேக்களை வைத்து அரசியல் செய்வோர் நிச்சயம் பால்ராஜின் நினைவை மரியாதை தான் செய்கிறார்கள்😂!
  17. இந்த விடயத்தில் எனக்கு ஆர்வமில்லை. ஆனால், சிறிதரன் தன்னை தீவிர புலி ஆதரவாளராகக் காட்டிக் கொள்ள இது போன்ற நடந்ததா, இல்லையா என்று யாரும் நிறுவ இயலாத சம்பவங்களைப் பேசுகிறார் எனக் கருதுகிறேன். "இது உண்மையா இருக்கலாம் ,நம்புங்கோ!" என்று suggestive ஆகத் தரப்பட்டிருக்கும் இணைப்புகளோ "வட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு ரண்டு கொட்டைப் பாக்கு" என்ற தோரணையில் இருக்கின்றன😂.
  18. https://www.bbc.com/news/live/world-68316979?src_origin=BBCS_BBC மிக அதிர்ச்சியான செய்தி. இறுதியாக நஞ்சூட்டப் பட்டு சிகிச்சைக்காக ஜேர்மனிக்கு கொண்டு செல்லப் பட்டுக் குணமான பின்னர், அங்கேயே தங்கியிருக்க அவருக்கு வாய்ப்புகள் இருந்தன. "ரஷ்யாவுக்கு வெளியே இருந்து எதுவும் செய்ய முடியாது" என்று மீண்டும் மொஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவர் நஞ்சூட்டப் பட்டு, ஆபத்தான நிலையில் இருந்தமை உலகச் செய்திகளாக வெளிவந்திருந்த நிலையிலும், "நீதிமன்றிற்கு வழக்கிற்கு வரத் தவறினார்" என்று உடனே கைது செய்து இரண்டு சிறைத் தண்டனைகள் கொடுத்திருந்தார்கள். துணிவான ஒரு மனிதர், இப்படியானவர்களை இப்போது மேற்கு நாடுகளில் கூட காண இயலாது!
  19. இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் 😂(நெடுக்கரிடம் இப்படி முன்வரக் காத்திருக்கும் அரசியல் ஆர்வமுள்ள, ஆனால் தடுக்கப் படும் அடுத்த தலைமுறை யார் எனக் கேட்டேன், பதில் கிடைக்கவில்லை. எனவே உங்களிடம் கேட்கிறேன்) மாவை வாரிசு அரசியல் செய்யும் சுய நல அரசியல் வாதி. சுமந்திரன் இப்படி இளையோரை அரசியலில் முன்னேற விடாமல் தடுத்த ஆதாரம், செய்திகள் எவையாவது உண்டா? மாறாக, அம்பிகா சற்குணநாதனை பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் முகமாக வேட்பாளராக்க முயன்ற போது, அவரை இணையத்தில் பாலியல் ரீதியாகக் கூட திட்டி ஒதுங்க வைத்தது சுமந்திரனின் எதிராளிகள். இதற்கு நிறைய ஆதாரங்கள் யாழ் களத்திலேயே செய்திகளாக இருக்கின்றன. (இன்னொரு விடயம், சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலுக்குக் கொண்டு வந்த இளையவரான சாணக்கியனையும் "அவர் தமிழரல்ல, கிறிஸ்தவ மதம் மாறி" என்று திட்டியவர்கள் இந்த திரியில் நிற்கிறார்கள்!) எனவே, எப்படி சுமந்திரன் இளையோரைத் தடுக்கிறார் என விளக்குங்கள்!
  20. இதற்கான காரணத்தை கோசான் குறிப்பிட்ட நினைவு: "மத்திய கிழக்கின் பாரிஸ்" என்று ஒரு காலத்தில் அழைக்கப் பட்ட லெபனான், பலஸ்தீன அகதிகளை ஏற்றுக் கொண்டது. அங்கே வேரூன்றி வாழ்ந்த பலஸ்தீன வழி மக்கள், இஸ்ரேல்/மேற்கு எதிர்ப்பு வன்முறையை ஆதரித்து ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் உருவாக வழி வகுத்தார்கள். இன்று லெபனானின் அரச இராணுவம் கூட ஹிஸ்புல்லாவின் பகுதிக்குள் செல்ல முடியாதளவு லெபனான் சீரழிந்து கிடக்கிறது. இந்த நிலையைக் கண்டு பயந்து தான் எகிப்து, ஜோர்தான், அமீரகம் ஆகிய எல்லா அரபு நாடுகளும் பலஸ்தீன மக்களை செற்றிலாக அனுமதிப்பதில்லை!
  21. பீற்றர் இளஞ்செழியன் சுமந்திரனின் ஆள் அல்லவா? அப்ப சுமந்திரனா பின்னால் இருப்பது? சும்மா சும்மா திட்டித் திரியும் பெருமாள் இப்போது எங்கே போனார்?
  22. நீங்கள் பார்க்காதது போலவே கட்டுரை எழுதியவரும் பார்த்திருக்க மாட்டார். பார்த்திருந்தால் வெறுமனே கட்டுரை எழுதி விட்டுப் பேசாமல் இருந்திருக்க மாட்டார் (அப்படியானால் வெறுமனே இருந்த வாக்குகளை சுமந்திரன் புள்ளடி போட்டார் என்கிறீர்களா? யாருக்கும் புள்ளடி போடாத வாக்குச் சீட்டுகள் செல்லுபடியற்றவையாக அல்லவா இருக்க வேண்டும்?) யாழ் களத்தில் அந்த நேரம் வந்த செய்திகளின் படி நடந்தவை இவை: சசிகலா ரவிராஜ் வென்று வருவதாக மிக முன்னதாகவே யாரோ தொலைபேசியில் உள்ளேயிருந்து சொன்னார்களாம், என்று அவரது மகள் முகநூலில் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். எல்லா வாக்குகளும் எண்ணி முடிந்த பின்னர் அவர் வெல்லவில்லை என்று பெறுபேறு வருகிறது. மரணவீடு போல அவர் அங்கேயே குளறி அழுகிறார். அவர் மருமகன் கலையமுதன் அங்கே வந்த சுமந்திரனை ஏதோ சொல்லிய படி அணுக முற்பட்ட வேளையில் சுமந்திரனின் பாதுகாப்பிற்கு வந்த விசேட அதிரடிப் படையினால் நையப் புடைக்கப் படுகிறார். உடனே, "சுமந்திரன் சசிகலாவின் வாக்குகளை மாற்றி விட்டார்" என்று கதைகளைப் பரப்பி விட்டார்கள். அடுத்த நாள் காலை, சசிகலா மகளின் முகனூல் செய்தியும், யார் வாழ்த்தினார் என்ற தகவலும் காணாமல் போய் விடுகிறது. ஆனால், சுமந்திரன் எதிர் தரப்பினால், பல்வேறு வர்ணங்கள் பூசி அவர் வெற்றி போலியானது என்ற கதைகள் இன்றும் தொடர்கின்றது. "கறுப்பாய் சத்தி எடுத்தவன், காகம் காகமாய் சத்தி எடுத்தான்!" என்று திரிவானது போல!
  23. இவ்வளவு முக்கியமான செய்தி, முன்னர் கேள்விப் பட்டிராத ஒரு ஊடகத்தில் மட்டும் வந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. இது உண்மையா அல்லது வழமை போல மாட்டை விட்டு மரத்தைப் பற்றி எழுதும் நம் ரொய்லெற் ஊடகங்களின் இன்னொரு படையலா😂?
  24. இது புதிய செய்தியோ, ஆச்சரியமான தகவலோ அல்ல. "...Asked about the feasibility of Israel’s military goal to eliminate Hamas and disallow the terrorist group from having any governing say in Gaza, Griffiths responded “Hamas is not a terrorist group for us, as you know, it is a political movement. https://www.jpost.com/israel-hamas-war/article-787084 ஐ.நா சபை அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் என்று பட்டியலிடுவதில்லை. அந்த வேலை தனித் தனியான நாடுகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அரசிய அமைப்புகளுக்கும் உரிய பணி. ஒரு அமைப்பை பயங்கரவாத அமைப்பு என பட்டியலிட்டால், ஐ.நாவின் எந்த அமைப்பும் தங்கள் பணியைச் செய்ய முடியாது, இது ஒரு சட்டம் சார்ந்த விடயம் என்று நினைக்கிறேன். இதை வைத்துக் கொண்டு ஹமாஸ் பயங்கரவாத இயக்கமா இல்லையா என்று நாடுகள் தீர்மானிக்க மாட்டா!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.