-
Posts
6119 -
Joined
-
Last visited
-
Days Won
68
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Justin
-
சில ஆயிரம் பேர் வேலை செய்யும் பிரதான ஜேர்மனிய மேற்குலக ஊடகங்களில் ஒருவர் கூட வாய் திறக்க முடியாதபடி என்ன மந்திரப் பூட்டா ஐயா போட்டிருக்கிறார்கள்?😂 அல்லது ரஷ்யாவில் இருப்பது போல "போர்" என்று உச்சரித்தால் 15 வருடம் தண்டனை என்று பயமூட்டி வைத்திருக்கிறார்கள் என்கிறீர்களா?😎 உங்களுக்கு நீங்கள் வாழும் நாடுகளில் இருக்கும் ஊடக சுதந்திரம் பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறீர்கள், இந்த லட்சணத்தில் ரஷ்ய ஊது குழல்களைத் தடை செய்தது பற்றிய கவலை வேறு வருகிறதே? மேற்குல தடை செய்தால் என்ன? ரெலிகிராமிலும், வேறு தளங்களிலும் RT பார்க்கலாம் அல்லவா? Fringe ஊடகங்களின் சதிக் கதைகளை நம்பி ஹிற்லர், புட்டின் வகையறாக்களை உலக ஹீரோக்களாக மாற்றுவதில் தான் இது முடியும்!
-
வாய்க்குள் அல்லது காதுக்குள் உங்கள் சினேகிதர்கள் முணுமுணுப்பதெல்லாம் ஐரோப்பிய அரசுகளின் வெளியுறவுக் கொள்கையை என்ன செய்யும்? ஒன்றும் செய்யாது! இரண்டு போரிலும் அமெரிக்காவின் வலிமை தேவைப் பட்டது போல, இனியும் தேவைப் படும். இல்லா விட்டால் புட்டின் போல யாராவது வந்து வாசல் கதவைத் தட்டும் போது வேற யார் சீனாவா உதவி அனுப்பும்? 😂
-
ரஷ்யாவிடம் எரிபொருளுக்குத் தங்கியிருப்பதை விட அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகளில் தங்கியிருப்பது நல்லதென ஐரோப்பாவே கருதும் போது வேறென்ன செய்ய முடியும் புட்டினால்? முதல் உலகப் போரிலும் சரி, இரண்டாம் போரிலும் சரி, இனி வரக் கூடிய போரிலும் சரி, அமெரிக்கா ஐரோப்பாவின் நண்பன் தான்! இதை வரலாற்று நூல்களை வாசிப்பதால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும் நுணா. யூ ரியூப், ரிக் ரொக் வீடியோக்களைப் பார்ப்பதால் இதை விளங்குவது கடினம்😎 உக்ரைன் தன் நட்டில் நிற்க அனுமதித்ததால் நிற்கிறார்கள். இலங்கை அரசு வெளியேறு என்று கட்டளை போட்டதால் MSF தவிர ஏனையோர் வெளியேறினார்கள். என்ன நுணா? ஒரு பிரபலமான தமிழ் தளத்தில் பொறுப்பாளராக இருக்கிறீர்கள், ஆனால் 13 வருடங்கள் முன்பு எங்கள் ஊரில் நடந்த சம்பவங்களையே "நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்" கணக்காக நினைவில் வைத்திருக்கிறீர்கள்?😂 பிறகு களம் எப்படி உருப்படும்?
-
நேட்டோ யூகோஸ்லாவியாவுக்கு எதிராக யுத்தம் செய்வது ஏன்?
Justin replied to nunavilan's topic in அரசியல் அலசல்
சோசலிசம் எமக்குப் பிடிக்காது, காரணங்கள் பல! நாணய மாற்று விகிதம் சோசலிச தேசங்களில் குறைவாக இருப்பதும், அவற்றுள் ஒரு காரணம்!🤑 -
ஓம், தங்களுக்குக் கீறல் விழும் எதிலும் எங்கள் ஆட்கள் சேர மாட்டார்கள் என்ற மாறா உண்மையை மறந்து விட்டேன்! நீங்க சொல்வது தான் நடந்திருக்கும்! - தப்பிப் பிழைத்தது தென்னமெரிக்கா! 🤣
-
நல்ல வேளையாக 1930 -40 களில் ஐரோப்பாவில் ஈழத்தமிழர்கள் இப்போது இருப்பது போல இருக்கவில்லை. இருந்திருந்தால் என்ன நடந்திருக்குமென யோசிக்கிறேன், ஒரு கற்பனைக்கு:😎 - ஹிற்லர், ருடோல்f ஹெஸ், கோயபல்ஸ் மூவரின் கூட்டுக்கு வாக்குப் போட்டிருப்பர். - கொயபல்ஸ் மூட்டும் கிச்சு கிச்சுக்கு எடுபட்டு, நெக்குருகி Hitler's Youth இல் சேர்ந்திருப்பர். - ஹிற்லருக்கு வேறு வழியில்லாமல் தான் யூதரைக் கொல்ல வேண்டி வந்ததென எங்காவது எழுதியிருப்பர். - பிரிட்டனும், சேர்ச்சிலும், அமெரிக்காவும் போர் வெறியர்கள், ஏகாதிபத்திய வாதிகள், வர்க்க (அதென்ன வர்க்கமெண்டு கேட்கப் படாது!😂) எதிரிகள் என்று முழங்கியிருப்பர். விசுகர் கோவிக்கா விட்டால் ஒன்று சொல்லலாம்: இங்கே எழுதும் சில ஈழத்தமிழர்களின் மடமைக் கருத்துகளைப் பார்க்கும் போது "குதிரைக்கு குணம் தெரிந்தே கடவுள் கொம்பு கொடுக்கவில்லை" என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது!🤣
-
32% வீதம் பேர் இன்னும் சரியென்று நினைக்கிறார்கள், இது "கணிசமான" எண்ணிக்கையல்லோ? 😎
-
ஏனைய அமெரிக்க மாநிலங்கள் போல் அல்லாமல், கலிபோர்னியாவின் மாநிலக் கொடியில் கலிபோர்னியாக் குடியரசென்று (California Republic) இருக்கிறது. இந்தக் கொடியின் பின்னால் ஒரு தனி நாட்டுக் கிளர்ச்சி இருந்தாலும் நவீன கலிபோர்னியாவில் பிரிந்து போதல் என்பது ஒரு ஜோக் தற்போது. ஆனால் "The Onion" பேப்பரில் வரும் விடயங்களையே நம்பும் அளவு புத்திசாலிகள் இருக்கும் உலகில், நெடுக்கர் கலிபோர்னிய சுதந்திரக் கோரிக்கையை சீரியசாக நம்புவது ஆச்சரியமில்லை!😂
-
முதலில் போரைத் துவங்கியது புட்டின் தான் என்றாலும், இதில் பெரிய நன்மைகள் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிற்குக் கிடத்திருக்கிறது. இது windfall என்பார்கள், சும்மா இருக்க மடியில் விழும் இலாபம்😂: நேட்டோவில் இராணுவ ஓர்மம் கொண்ட சுவீடன், பின்லாந்து இணைவு, நோட்டோ நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம், 2014 இல் உருவாக்கிய ஈட்டிமுனை நேட்டோ படையை நிரந்தர நேட்டோ படையாக்கும் முயற்சிகளில் முன்னேற்றம். புட்டினுக்கு மேற்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறது, இவர் 90 களில் அமெரிக்கா உள்நுழைய வைத்த sleeper agent ஓ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது!😅
-
அப்படியா?😂 அமெரிக்காவில் "பெரும்பான்மையான கறுப்பினப் பகுதிகள் (black majority neighborhoods/ black neighborhoods) என்றால் என்ன Upper Manhattan அல்லது அட்லான்ரா என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? Inner cities என்று அழைக்கப் படும் பிலாடெல்பியா, ஓக்லாண்ட், தென் சிக்காகோ இவை தான் இவர்கள் குறிப்பிடும் கறுப்பினப் பெரும்பான்மை பகுதிகள். இதைத் தான் சொன்னேன்: கறுப்பினப் பெரும்பான்மைப் பகுதிகளில் மத்திய வகுப்பிலும் கீழ் நிலை மக்கள் வாழ்கிறார்கள் என்ற புரிதலை யூரியூப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியாது. Read, Write, and Read more!
-
இதே கருத்துத் தான் ஏறத்தாழ என்னுடையதும். ராஜரட்ணம் சமூகத்தில் இணைவது மட்டுமல்ல, அடுத்த தலைமுறை தமிழ் இளையோருக்கு முன்னுதாரணமாக இருக்கவும் உரிமையும், தகுதியும் உள்ளவர் தான். ஆனால், அடிப்படைச் சட்டமும் தெரியாமல், அமெரிக்க சமூகங்களில் நீதி மறுப்பினால் யார் பாதிக்கப் பட்டிருக்கின்றனர் என்ற ஒரு துளிப் புரிதலும் இல்லாமல் பரப்பும் கற்பனைகளைக் கடந்து போக முடியவில்லை. குறைந்த பட்சம் பொது வெளியில் இருக்கும் வழக்காவணங்களையாவது வாசிக்காமல் சும்மா அலட்டிக் கொண்டிருக்கிறார் நாதம்!
-
தருகிற இணைப்பின் சுருக்கக் குறிப்பைக் கூட வாசிக்க மாட்டீர்களா நாதம்?😂 ஏழை கருப்பின மக்கள் மீதான பொலிஸ், நீதி முறைமைகள் பற்றியது. ராஜரட்ணம் வழக்கிற்கும், தண்டனைக்கும், இப்போது நீங்கள் செய்யும் வெள்ளையடித்தலுக்கும் இந்தக் கட்டுரைக்கும் ஒரு தொடர்பும் கிடையாது! நீங்கள் சட்டத்துறை சார்ந்தவராக இருந்தால் நிச்சயமாக உங்களால் ஒரு கேஸ் கூட வெல்ல முடியாது என்று உறுதியாகக் கூறலாம் - அப்படி இருக்கிறது உங்கள் ஒவ்வொரு கருத்தும்!
-
தமிழன், என் தோல் நிறத்தவர், என் கொள்கையை ஆதரிப்பவர் இது போன்ற காரணங்களுக்காக தரவுகளைப் புறக்கணித்து (அல்லது உங்களைப் போல தரவுகளை உரிய மூலங்களில் போய் எட்டியும் பார்க்காமல்😅) யார் பின்பக்கத்தையும் கழுவ வேண்டிய மனநிலை இருக்கக் கூடாது! வரலாற்றில் முன்னர் எடுக்கப் படாத ஆதாரம் ஏன் அனுமதிக்கப் பட்டது என்பதற்கு போய் கேஸ் ஆவணங்களை வாசிக்கும் ஆட்களுக்குப் புரியும் - நீங்கள் வாசிக்காதீர்கள்! உங்கள் நிலைக்கேற்ற ஆவணப் படங்களோடு நின்று கொள்ளுங்கள்! ராஜரட்ணம் செய்த குற்றத்திற்கு தண்டனை பெற்று விட்டார் - இனி அவர் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியவர் அல்லர். ஆனால், அவரது வழக்கை உங்கள் கற்பனைகளும் கலந்து, அரைகுறைப் புரிதலையும் வைத்துக் கொண்டு நீங்கள் எழுதும் புனைகதைகள் பயனற்றவை மட்டுமல்ல, இளம் தமிழ் சமூகத்திற்குத் தீங்கானவை! "நேர்வழி நட" என்று சொல்லிக் கொடுப்பதை விட்டு , "கொஞ்சம் கோணலாக நடந்து விட்டு தோல் நிறத்தின் பின்னால் போய் ஒளிந்து கொள்" என்று சொல்லிக் கொடுப்பது, தமிழ் சமூகத்திற்குத் தீங்கானது!
-
அப்ப நாலில் மூவர் ப்றெக்சிற்றை எதிர்த்தது "கணிசம்" இல்லையா கோபால்?😂
-
கமல்ஹாசனின் பாபநாசம் (அல்லது அதன் மலையாளப் பதிப்பு) பார்க்காமலா தலையைச் சொறிந்து கொண்டிருந்தீர்கள்?😂
-
அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு (கறுப்புத் தோல் உடையோருக்கல்ல!) பொலிஸ் கைது செய்யும் நேரம் முதல், தீர்ப்பு வரை பாரபட்சம் இருக்கிறது. ஆனால், இது பிணை முதற்கொண்டு சட்ட ஆலோசனை வரை due process எதுவும் நியாயமாகக் கிடைக்காத ஏழ்மை நிலையில் இருக்கும் கறுப்பின மக்களான ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கும், கரீபியன் வழி மக்களுக்கும் தான் பாரிய பிரச்சினை. ஒரு குற்றத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டு, மில்லியன் டொலருக்கு சட்ட நிறுவனம் மூலம் வாதாடி, அப்பீல் செய்து ஜூரி முறையில் சான்றுகளூடாகக் குற்றம் நிரூபிக்கப் பட்ட ராஜரட்ணம், மேல் குறிப்பிட்ட ஏழைக் கறுப்பின மக்களின் poster boy அல்ல😂 இதைத் தான் முதலே குறிப்பிட்டேன், நீங்கள் வாசிக்காமல் கடந்து போயிருப்பீர்கள்: ராஜரட்ணம் தனது நூலில் கேட்கும் நீதி மறுசீரமைப்பும், கிம் கர்டாஷியன் கேட்கும் ஏழை மக்களுக்கான நீதி மறு சீரமைப்பும் ஒன்றல்ல - முற்றிலும் வேறானவை! ராஜரட்ணம் கேட்பது தன் போன்ற நிதி நிறுவன முதலாளிகள் குற்றம் செய்தாலும் சும்மா விட்டு விடும் படி, கிம் கர்டாஷியன் கேட்பது ஏழை அமெரிக்கர்களுக்கு due process இனை வழங்கும் படி. இன/நிற பாரபட்சத்தினால் தண்டிக்கப் பட்டேன் என்று ராஜரட்ணம் ஆதரவாளர்கள் சொல்வது தவறு மட்டுமல்ல, காகக் கூட்டில் குயில் டோரா போடும் கீழத்தரமான நுட்பமும் கூட! பி.கு: ஆவணப் படம் , விக்கிபீடியாவை மட்டும் வைத்துக் கொண்டு இது போன்ற விடயங்களை நீங்கள் புரிந்து கொண்டால் ஒரு பாதகமும் இல்லை, ஆனால் பலர் வாசிக்கும் ஒரு பொது இடத்தில் உங்கள் அரை குறைப் புரிதலைப் பரப்பினால் கேள்விகள் வருவது தவிர்க்க இயலாதது.
-
இருக்க வேண்டும். அப்படி இருந்தால், குற்றத்தீர்ப்பும் 😂 ஒன்று அரச தரப்பு போடும் கிரிமினல் வழக்கு: இதற்கு அவசியமான சான்றுகளின் தரம் (threshold) மிக உயர்வாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், குற்றத்தீர்ப்பும் சிறையுட்பட்ட தண்டனை கிடைக்கும். கொஞ்சம் reasonable doubt இருந்தாலும் குற்றமற்றவர் என்ற தீர்ப்புத் தான். மற்றையது பாதிக்கப் பட்டவரின் குடும்பமோ , தரப்போ சந்தேக நபர் மீது போடும் சிவில் வழக்கு. இதில் குற்றத் தீர்ப்பு வழங்க தேவையான சான்றுகள் கிரிமினல் வழக்கை விடக் குறைந்த தரத்திலிருந்தாலே போதும். சிவில் வழக்குகளில் சிறைத் தண்டனை கொடுப்பது மிக அரிது, எனவே நட்ட ஈடு. சிவில் வழக்குகளின் தீர்ப்பு "இவர் மரணத்திற்குப் பொறுப்பாக இருந்தார் (liable)" என்று தான் எழுதப் படுமேயொழிய, "இவர் கொலை செய்தார் (guilty)" என்று இருப்பதில்லை. இது அமெரிக்க நீதி வட்டாரங்களில் மிகவும் சாதாரணமாக நடப்பது. சிவில் வழக்கின் முடிவை வைத்து கிரிமினல் வழக்கின் தீர்ப்பு பிழை என்று வாதிடுவதில்லை! இந்த அடிப்படை விடயம் கூடத் தெரியாமலா ராஜரட்ணம் வழக்கின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொண்டவர் போல எழுதுகிறீர்கள்?
-
புலம்பெயர்ந்த ஈழத் தமிழனின் எதிர்காலம் - பகுதி 1
Justin replied to இணையவன்'s topic in பேசாப் பொருள்
இணையவன், ஒரு அருமையான விடயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்: இப்போது ஆயுள் (life span) என்பதை விட நல ஆயுள் (health span) என்பதையே மேற்கு நாடுகளில் வலியுறுத்துகிறார்கள். 100 வயது வரை வாழலாம், ஆனால் அதில் கடைசி 30 வருடங்களை படுக்கையில் கழிப்பதை விட, வாழும் 60- 70 வருடங்களையும் செயல்பட்ட படியே வாழும் கலை தான் நீங்கள் குறிப்பிடும் எண்ணக் கரு! -
பொருந்தாத உதாரணங்களை மேற்கோள் காட்டுவதென்பது நாதமுனியின் ட்ரேட் மார்க் ஆகப் போய் விட்டதா இப்ப?😂 பற்றரி எதற்கென்று தெரியாமலே வாங்கிக் கொடுத்தவனுக்கும் மரண தண்டனை தந்த ஏழு பேரின் தீர்ப்பும், 14 தடவைகள் ஒட்டுக் கேட்ட ஆதாரங்களால் ஜூரிகளின் ஏகோபித்த தீர்ப்பும் ஒன்றல்ல நாதம்! ஒ.ஜே யின் வழக்கில் அவரைக் குற்றவாளியாக நிரூபிக்க அவசியமான சாட்சியங்கள் இருக்கவில்லை என்பதால் அது அமெரிக்க நீதித் துறையின் பலத்தைத் தான் காட்டியது, பலவீனத்தை அல்ல! ராஜரட்ணம் அவர்களின் வழக்கில் ஒரு தனித்துவம் எனவென்றால், அது வரை ஒட்டுக் கேட்ட (wire-tap) சாட்சியத்தை பிரதான சான்றாக சமஷ்டி நீதிமன்றங்களில் யாரும் சமர்ப்பித்து தண்டனையை வாங்கிக் கொடுத்திருக்கவில்லை. எனவே, நீதிபதி அந்த சான்றை அனுமதிக்க மாட்டார் என்ற தனது சட்டக் குழுவின் ஆலோசனையைக் கேட்டுத் தான் ராஜரட்ணம் கோர்ட்டுக்குப் போயிருக்கிறார். நீதிபதி காலை வாரி விட்டார், காரணம் வழக்குத் தொடுனர் குழுவின் iron-clad கேஸ். பின்னர், மேன்முறையீடு செய்த போதும் ராஜரட்ணம் தரப்பு இந்த ஒட்டுக் கேட்ட ஆதாரத்தை நீக்க வேண்டுமென வாதிட்டது. அப்பீல் நீதிபதிகளும் நீக்க மறுத்து விட தண்டனை பெற்றார். நாதம், உங்கள் நேரம், உழைப்பு என்பவற்றை மிகவும் மதிக்கிறேன். ஆனால், கொஞ்சம் ஆழமாக வழக்கு ஆவணங்களை வாசித்து விட்டு வாசிப்போருக்கு தரமான பதில்களைக் கொடுங்கள். இந்தத் திரியில் நீங்கள் கொடுத்திருக்கும் பல தகவல்களுக்கு ஆதாரங்கள் இல்லை, பல தகவல்கள் பிழை.
-
இளையோர் என்பதை நான் இணைத்த தரவுகளில் 24 இற்குக் கீழ் என வரையறுத்தார்கள். உங்கள் கருத்துக்குப் பலம் சேர்க்க வேன்டுமெனில் 54 இற்குக் குறைந்தோரை இளையோர் என அழைத்து விட்டுப் போங்கள்! என்ன கெட்டு விடும்?😂 Data are data!
-
இது சிண்டு முடிதல் அல்ல - ஒரு தேர்தல் முடிவின் demographic தரவு - அவ்வளவே!. வெள்ளையின இளையோரிடையே ப்றெக்சிற்றுக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்ததாக ஒரு தரவும் நான் காணவில்லை. ஆனால், இளையோர் பழமை வாதிகள் தரப்பில் மிகக் குறைவாகவே இருக்கின்றனர் என்பதைப் பல கணக்கெடுப்புகள் காட்டியிருக்கின்றன. 👇 https://www.ft.com/content/6734cdde-550b-11e7-9fed-c19e2700005f இந்த நிலையில் உங்கள் அபிப்பிராயங்களுக்கு ஒரு ஆதாரமும் இல்லை.
-
நேட்டோ யூகோஸ்லாவியாவுக்கு எதிராக யுத்தம் செய்வது ஏன்?
Justin replied to nunavilan's topic in அரசியல் அலசல்
நுணா, என்ன "சோவியத் நாடு" சஞ்சிகை கிடைக்கவில்லையோ?😎 -
நெடுக்கர், உங்கள் அபிப்பிராயத்திற்கு ஆதாரமாக கருத்துக் கணிப்பு உங்களிடம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு, "இல்லை" என்பது தானே பதில்? பிறகேன் இருக்கிற கருத்துக் கணிப்பு உண்மையா, ஐ.ஒ செல்வாக்குச் செலுத்தினதா என்றெல்லாம் சளாப்புகிறீர்கள்? என்ன வாக்கு வித்தியாசத்தில், எந்த வயது மட்டத்தினரின் வாக்குகளால் 2016 பிறெக்சிற் வென்றதெனத் தெரியாதா உங்களுக்கு? இளம் வயதினரின் (நீங்கள் அதில் அடங்கவில்லை) அபிப்பிராயம் என்னவென்பதையும் நான் தந்த இணைப்பில் சென்று பாருங்கள். ஆக, பிறெக்சிற்றின் பின்னால் பிரிட்டன் பட்ட, இன்னும் படுகிற மறைத்தன்மயான விளைவுகளால் இளைய ஐரோப்பியர் இனி உசாராக இருப்பர் என்பது தான் என் எதிர்வுகூறல். பிழையாகவும் இருக்கலாம்! இந்தக் கருத்துக் கணிப்பில் ஹங்கேரியின் வலது சாரி அரசின் செல்வாக்கு இல்லையென்று எப்படி நிரூபிப்பது?
-
என்ன நடவடிக்கைகள் பற்றி விளக்கம் கேட்டார்களாம்? இது விலக்கிய பிறகு நடந்தவையா அல்லது முன்னர் நடந்ததா? விலக்கிய பிறகு மணி செய்வதைப் பற்றி முறைப்படுவதைக் கைவிடுங்கள். அவர் கோபத்தில் செய்தாலும், தனது அரசியல் எதிர்காலத்திற்காக முனைப்போடு செய்தாலும் விளங்கிக் கொள்ளக் கூடியவை.
-
😅விளங்கினதா? நாடுகள் தங்கள் குடிகளிடம் ஒரு வாக்கெடுப்பை நடத்தி அதன் முடிவை நெடுக்கரிடம் கொடுத்தால் தான் பதில் வருமாம்! ஆனால், 2019 கணக்கெடுப்பின் படி மிக அதிக ஐரோப்பிய எதிர்ப்புணர்வு கொண்ட பிரான்ஸ் தவிர ஏனைய நாடுகளில் ஐரோப்பிய எதிர்ப்புணர்வு பெரும்பான்மை அல்ல: 2016 இல் விலகிய பிரிட்டனிலும் கூட பிரான்ஸ் அளவுக்கு இல்லை.👇 https://www.pewresearch.org/global/2019/10/14/the-european-union/