Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. மாவையின் வாரிசு சசிகலா ரவிராஜின் மருமகன் என்று இன்று தான் அறிந்து கொண்டேன். 2020 தேர்தல் நேரம் "சுமந்திரன் வாக்கெண்ணும் நிலையத்தினுள் சென்று சசிகலாவுக்கு விழுந்த வாக்குகளை தன் பெயருக்கு மாற்றி கொண்டார்" என்று இங்கே "ட்ரம்ப் சின்ட்றோமினால்" பாதிக்கப் பட்ட உறவுகள் பறையடித்த போது கூட இந்த conflict of interest😂 பற்றி எதுவும் மூச்சு விடவில்லையென நினைக்கிறேன்! தமிழக அரசியல் கட்சிகள், வாரிசு அரசியலும் செய்து ஏதோ மக்களுக்கும் சில நன்மைகள் செய்து கொண்டிருக்கும் போது போட்டுத் தாக்கும் "ஊழல் எதிர்ப்பு நீதிமான்கள்" எல்லோரும் இங்கே கப்சிப்! #தொண்டையில முள்ளு😎
  2. தமன்னா வரமுன்னர் இலங்கை நல்லாத் தான் இருந்தது என்கிறீர்கள்?
  3. கருணா குழுவால் சுட்டுக் கொல்லப் பட்ட யோசப் எம்.பி போல வாழ வேண்டுமென்று ஒருவர் சொல்கிறார் பெருமாளாவது வைச்சுக் கொண்டு வஞ்சகம் செய்யும் ஆளல்ல, அவரது ஆழம், யோசிப்பு எல்லோரும் அறிந்தது தான்! நீங்களோ அதற்கு சிரிப்புக் குறியும் போட்டு, கீழே இருக்கும் கருத்தை மிகவும் சாதாரணமாக எழுதியிருக்கிறீர்கள். எப்படி முடிகிறது ஒரு அரசியல் படுகொலையை நகைச்சுவையாக்க? பெரியோர், மூத்தோர் என்ற அடையாளத்தைத் தாங்கியிருக்கிறீர்கள், அதற்கேற்ப நிதானித்துக் கருத்தெழுதாமல் இப்படி இருக்கிறீர்கள்??
  4. கட்டுரையில் நிலாந்தனே சுட்டிக் காட்டியிருக்கிறார்: ஆயுதம் ஏந்தாத தமிழ் கட்சிகளில், ஒரே கொள்கை, ஆனால் மாறு பட்ட அணுகுமுறை என்று இருந்தோர் பலர் இருந்திருக்கிறார்கள், இத்தகைய அணுகுமுறையின் பல்வகைத் தன்மை தமிழருக்குப் புதிதல்ல. வாக்காளர்கள் அல்லது கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானோரிடம் பல்வகைத் தன்மைக்கு ஆதரவில்லா விட்டால் உரிய அரசியல் தலைவர்கள் தாமாகவே பதவியிழந்து போய் விடுவர் - மக்கள் விரும்பும் தலைவர்கள் முன் வரலாம், தொடரலாம்! ஆனால், எங்கள் தீவிர தேசியர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தீவிர தேசியர்கள் கேட்பது இதையல்ல: "தாயகத்தில் மக்கள் உனக்கு வாக்குப் போட்டாலும் நமக்குப் பிடிக்கவில்லையானால் நீ விலகி விட வேணும்"😎. இதைத் தான் சுமந்திரனிடம் எதிர்பார்க்கிறார்கள்.
  5. டார்வினின் கூர்ப்புக் கோட்பாட்டைக் கற்காமல், புரியாமல் உயிரியல் துறையில் மேற்கொண்டு எதைப் படித்தாலும் சான்றிதழை வைத்து முதுகு சொறியலாம், அதை விட வேறெதுவும் உருப்படியாக உருவாக்க முடியாது. மேற்கு நாடுகளில் "படைப்புக் கொள்கை- creationism" என்பதை பாடத்திட்டத்தில் புகுத்த வலது சாரி கிறிஸ்தவர்கள் முயல்வது போலவே, இந்தியாவில் புராணங்களைப் போலி விஞ்ஞானமாகப் புகுத்த மோடி அணி முயல்கிறது என நினைக்கிறேன். இதன் முதல் படி தான் கூர்ப்பை அகற்றியமை. இனி "கௌவரவர்கள் தான் IVF இனைக் கண்டு பிடித்தார்கள்" என்ற ஜோக்கை பாடத்தில் இணைத்து விடுவார்கள் என நினைக்கிறேன்😂.
  6. இந்த ஆலோசனையில் பிரச்சினையிருக்கிறதே? Saturated fat எனப்படும் நிறைவுற்ற கொழுப்பை தவிர்க்க வேண்டும், unsaturated fat எனப்படும் நிறைவுறா கொழுப்பை அன்றாடம் எடுக்கும் கலோரியில் 40% இனைப் பெற்றுக் கொள்வதற்காக எடுத்துக் கொள்ளலாம். அதிலும் mono-unsaturated fat எனப்படும் நிறைவுறா கொழுப்பின் வகையை எங்கள் உணவுகளைப் பொரிக்க, வறுக்கப் பயன்படுத்தவும் முடியும்.
  7. ஐரோப்பாவின் அறிவியல், பொருளாதார, சமூக வளர்ச்சிக்கும், ஆசிய, அமெரிக்க கண்டத்தின் மீதான அவர்களின் ஆக்கிரமிப்பிற்கும் நேரடியான தொடர்புகள் இருப்பதாகச் சொல்ல முடியாது. ஐரோப்பியர்கள் கீழை நாடுகளின் வளங்களைக் கண்டு கொண்டதும் அவற்றை வியாபாரமாக்கியதும் உழைத்ததும் உண்மை, ஆனால் கீழைத்தேய நாடுகளில் எடுத்த வளங்களால் தான் இன்று ஐரோப்பா அல்லது வெள்ளையர்கள் வளமாக இருக்கிறார்கள் என்பது மிகையான கருத்து - தற்காலத்தில் இந்தியா போன்ற நாடுகளில் தேச பக்தியை வைத்து மக்களைத் திரட்ட முனையும் போலி வரலாற்று ஆய்வாளர்களின் கண்டு பிடிப்புத் தான் இந்த வியாக்கியானம் என நினைக்கிறேன்.
  8. 5.7 முதல் 6.5 என்றால் நீரிழிவுக்கு முன்னான pre-diabetic நிலை, எனவே கவனம் தேவை! (மற்றையது முன்னிற்கும் (prostate) சுரப்பி பெரிதானாலும் இரவில் அடிக்கடி போக வேண்டியிருக்கும்)
  9. இந்திய கோமாதா துதி பாடும் ஊடகங்களில் வருகிற போலித் தகவல்களை நம்புகிறீர்கள் என ஊகிக்கிறேன். ஜேர்சி மாட்டின் பால், உள்ளூர் சிந்தி வழி மாட்டின் பாலை விட உள்ளடக்கத்தில் வேறல்ல - வித்தியாசம் பால் அளவில் தான் உள்ளூர் மாடு ஷொப்பிங், சுவரொட்டியைச் சாப்பிட்டு விட்டு, முதலீடு இல்லாமல் ஒரு லீற்றர் கறக்கும், ஜேர்சி புண்ணாக்கும் புல்லும் மெனக்கெட்டுப் போட்டால் 10 மடங்கு அதிகம் கறக்கும்! ஒரு கேள்வி: "பூண்டு" என்றால் என்ன? ஈழத் தமிழில் பூண்டு என்றால் களை என்று தான் அறிந்திருக்கிறேன்.
  10. தக்காளியின் விதைகளை நீக்கி விட்டு சாப்பிடலாம். விதைகளில் தான் ஒக்சலேற் இருக்கிறது. சின்ன வெங்காயத்திலும் ஒக்சலேற் இருக்கிறது (ஆனால், அதை நிறையச் சாப்பிடச் சொல்கிறது பதிவு), "முந்தானை முடிச்சு புகழ்" 😎முருங்கைக் காயிலும் ஒக்சலேற் இருக்கிறது. ஆனால், கல் உருவாக வெறுமனே ஒக்சலேற் அதிகரிப்பது மட்டும் போதாது, சிறு நீரில் கல்சியமும் அதிகரிக்க வேண்டும் - அப்படி அதிகரிக்காமல் தவிர்க்க மேலே இணையவன் சொன்ன வழிகள் தான் நிரூபணமான வழிகள்!
  11. மேலே இருப்பது போன்ற போலி, அரைவாசிப் போலி மருத்துவ தகவல்களை தனித்தனியாக மறுத்துரைக்கும் ஆர்வம் இல்லாமல் போய் விட்டது இப்போது! ஆங்கில மூலத்திலும் health.com, medical news போன்ற வியாபாரத் தளங்கள் இது போன்ற அடிப்படையில்லாத நம்பிக்கைகளைப் பரப்புகின்றன.
  12. உங்களுடைய படபடப்பு தேவையற்ற ஒன்று. என்ன எழுதியிருக்கிறேன் என்று சரியாக வாசித்தீர்களா? ஒரு டசின் பேர் முகத்தை மறைத்துக் கொண்டு நிற்கும் ஒரு நிகழ்வின் ஒன்றரை நிமிட பதிவை, ஐ.பி.சி. பாரிய ஆர்ப்பாட்டம் என்று சொல்லியிருக்கிறது😎. ஏன் இத்தகைய செய்தித் திரிப்பு அவசியமாக இருக்கிறது எங்கள் தமிழ் சூழலில்? இது தான் நான் எழுதியது. நீங்களோ, நான் முகங்கள் தேடியதாக அச்சம் கொள்கிறீர்கள். ஒரு கருத்தின் பின் புலம் கூடப் புரியாமல் ஏன் அவசரப் பட்டு எழுதுகிறீர்கள்? என்ன மிரட்டலை விட்டேன் என்கிறீர்கள்? அப்படி, தனிப்பட்ட மிரட்டல் விட்டு விதி மீறல் செய்திருந்தால் அங்கேயே முறைப்பாடு செய்யாமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இங்கே, அவதாரத்தின் பின் இருக்கும் ஆட்களின் அடையாளங்களை வெளிப்படுத்தும் முயற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன, ஆனால் அப்படி முயன்றது யார் தெரியுமா? "தீவிர தேசியத்தின் பால் நிற்கிறோம்" என்று சொல்லும் உறுப்பினர்கள் தான்! இங்கே நீங்கள் பயம் கொள்வது போல புலநாய்வு, ஆள்காட்டியென்று யாரும் மெனக்கெடுவதில்லை. எனவே, தேவையற்ற அலட்டலை விட்டு விட்டு கருத்துகளை அர்த்தமுள்ளதாக முன் வையுங்கள்!
  13. மக்களுக்குத் தெரியாது என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள்? என் ஊகம், ஒரு வன்முறை மூலம் நிர்ப்பந்தம் ஏற்படுத்திய பின்னர், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள பிரச்சினையில் மாட்டுப் பட விரும்பா மக்கள் முன்வர மாட்டார்கள்! அதனால் தான் ஒரு 12 பேர் (யூரியூபில் தெளிவாக தலைகள் தெரிந்த போது எண்ணியது, மேலே சொன்னது போல் 20, 30 அல்ல!) கமெராவின் முன் வராமல் ஒருவர் பின் ஒருவராக மறைந்து நிற்கின்றனர். முன்னைய கருத்தில் நான் சொன்னது போலவே, தீவிர தேசியக் குரல்களின் பக்கமிருந்து மக்களை அந்நியப் படுத்தும் வேலை தான் இந்த தீ வைப்பு வன்முறை. இது உரிய ஆட்களுக்கு உறைக்கா விட்டால், இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் தனி நபர் தர்ணாக்களாக சுருங்கிப் போகும்!
  14. குளிரான கால நிலையிலும் ஒரு 20, 30 பேர் வந்திருக்கிறார்கள் - பாராட்டுக்குரியது! அதை "பாரிய ஆர்ப்பாட்டம்" என்று கனடா நாட்டு ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளதாக ஐ.பி.சி நக்கல் அடித்திருக்கிறது.
  15. கேஸ் பை கேஸ் ஆக யாரும் ஆலோசனை கொடுக்க முடியாது. ஒரு கொள்கையில் இருந்து ஒருவர் மாறுகிறார் என்பதற்காக ஒருவர் மீது வன்முறையை அவிழ்த்து விடுவது சட்ட ரீதியிலும் தவறு, அதே நேரம் கொள்கையையும் வளர்க்காது (மேலே சொல்லியிருக்கிறேன் ஏன் என்று). எனவே, இதைச் செய்தோர் சாதாரண றௌடிகள் அல்ல, முட்டாப் பீசு றௌடிகள் என்பது என் அபிப்பிராயம் - இவர்களுக்கு வழி காட்டல் சட்டத்திடமிருந்து மட்டும் தான் கிடைக்க முடியும், ஏனையோர் நேரம் செலழிப்பது வீண் வேலை. இந்த தாக்குதலில் தீ மூட்டல் சம்பந்தப் பட்டிருக்கிறதென நினைக்கிறேன். அது எப்படி எதிரே நிற்பவரை உணர்ச்சி மயப்பட்டுத் தாக்குவது போல ஆகும் என்கிறீர்கள்? மேற்கு நாட்டு சட்டங்களில், தீ முட்டலுக்கு கடுமையான தண்டனை ஏன் இருக்கிறது என நினைக்கிறீர்கள்? ஏனெனில், simple arson எனப்படும் சிறிய தீ மூட்டல் கூட ஒரு திட்டமிட்டு, நேரமெடுத்துச் செய்யும் செயல். எனவே, "உணர்ச்சி மயப்பட்ட சூழலில் செய்தது" என்று யாருக்கும் விளங்கப் படுத்தித் தப்ப இயலாது. ஆனால், தீ மூட்டல் மட்டுமல்ல. தமிழ் தேசியத்தின் பெயரால் "கொள்கைப் பற்றில் செய்கிறோம்" என்று செய்யும் மிரட்டல்கள், புகைக் குண்டெறிதல், கூட்டம், குழப்புதல் எல்லாமே தமிழ் தேசியத்திற்கு வைக்கிற ஆப்புத் தான்! இதை கண்டிக்காமல், தடவிக் கொடுக்கும் எவருக்கும் அந்த ஆப்பில் பங்கிருக்கிறதென நம்புகிறேன்!
  16. கட்டிடங்களை எரிப்பது மட்டுமல்ல வன்முறையின் வெளிப்பாடு. புலம் பெயர் அமைப்புகளின் சகியாத்தன்மை, வன்முறை ஆதரவுப் போக்கு என்பவற்றைக் காட்டும் சம்பவங்கள் சில ஐரோப்பாவிலும், குறைந்தது ஒரு தடவை அவுசிலும் நடந்திருக்கின்றன: 25 வருடங்கள் முன்பு அல்ல, கடந்த 15 வருடங்களுக்குள்! யாழில் இவை பற்றி உரையாடப் பட்ட போதெல்லாம், வன்முறையை செல்லமாகத் தட்டிக் கொடுக்கும் கருத்துகளும் வெளிப்பட்டிருக்கின்றன. இந்தத் திரியிலும் இது போன்ற தட்டிக் கொடுத்தல் நீங்கள் உட்பட சிலர் செய்வது புதுமையல்ல! இப்படி வன்முறையை பூடகமாக ஆதரிப்பதன் விளைவுகள், சட்ட ரீதியாக இருக்கா விட்டாலும் சமூக ரீதியாக இருக்கும். இளையோர், வன்முறைப் போக்கு காரணமாக, தமிழ் தேசிய செயல்பாடுகளை விலக்கி வைத்து விடும் ஆபத்து இருக்கிறது. அடுத்த தலைமுறையை அன்னியப் படுத்தி விட்டால், சிங்களவர்கள் எதிர்பார்க்கும் விளைவை நாமே வெள்ளித் தட்டில் வைத்து அவர்களுக்குக் கொடுத்து விடுவோம்!
  17. மன்னிப்பெல்லாம் எதற்கு? கவலையை விடுங்கள். தீர்ப்பில் இருப்பது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் சொல்வது போல காரமாக இருக்கிறதா என அறிய நான் ஒன்ராரியோ உயர் நீதிமன்றின் வலைத்தளத்தில் ஜனவரி மாத தீர்ப்புகளைத் தேடிப் பார்த்தேன். அந்தத் தேடலில், கார்த்திக் நந்தகுமார் என்ற பெயரோ, அய்யப்பன் சமாஜம் என்ற பெயரோ சிவில், கிரிமினல் வழக்கு பகுதிகளில் காணவில்லை. எனவே தான் கேட்டேன். என் ஊகம்: வழக்கு நடக்கும் அளவுக்கு இந்த முறைப்பாடு முன்னேறவில்லை. வழக்கு ஏற்றுக் கொள்ளப் படாமல் தள்ளுபடி செய்யப் பட்டிருக்கிறது. வழக்கு நடந்திருக்கா விட்டால் 75K பணம் செலுத்தும் உத்தரவும் கொடுக்கப் பட்டிருக்காதென ஊகிக்கிறேன்.
  18. ஜெமோவின் தீவிர இந்திய தேசியவாதத்துடன் உடன்பாடு இல்லை. ஆனால்,சிக்கலான, அரூபமான விடயங்களை தெளிவாக தமிழில் வடிக்கும் அவரின் எழுத்துத் திறன் அவருக்கேயுரித்தானது. இந்தத் தொடர் சிறந்த உதாரணம். இந்த "சேர்டிபிகேட்/படிப்பு சான்றிதழ் கொண்ட பாமரர்கள்" பலரை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். அண்மையில் பொறியியலாளர்கள் சிலர் இருந்த குழுவில் விருந்தொன்றில் உரையாடிக் கொண்டிருந்தோம். நெட்பிளிக்ஸ் தொடர்கள், திரைப்படங்கள் பற்றிப் பேச்சுத் திரும்பியது. அதில் The Manifest என்ற ஒரு தொடர், காணாமல் போய் சில ஆண்டுகள் கடந்து திரும்பி வந்த ஒரு விமானத்தைப் பற்றியது - முற்றிலும் கற்பனைத் தொடர். "இப்படியான ஒரு சம்பவம் உண்மையாகவே நடந்தது, அமெரிக்க அரசு வெளியே வராமல் அமுக்கி விட்டது" என்று ஒரு பொறியியலாளர் உறுதியாக வாதிட்டார். யூ ரியூபில் யாரோ விட்ட வெடியை, பௌதீகவியலின் விதிகளைப் படித்து, பரீட்சை எழுதிப் பாஸ் செய்து, அமெரிக்காவில் பொறியியலாளராக இருக்கும் ஒருவர் நம்பியதை ஆச்சரியத்தோடு கடந்து சென்றேன். இது தான் இன்றைய நிலை😎!
  19. நீங்கள் குறிப்பிடும் வழக்கு விசாரிக்கப் பட்ட தகவல் எதையும் ஒன்ராரியோ உயர் நீதி மன்றின் பதிவுகளில் காணவில்லையே? அந்த தகவல் இருந்தால் இணைக்க முடியுமா?
  20. "சுகர் இல்லாத மது"😂 சுகர் இல்லாத மது இருக்கிறது, ஆனால் உங்கள் உடலில் சுகரை ஏற்றாத மது என்று ஒன்று இல்லை! ஏன் என்று மேலே நிழலிக்கு எழுதிய பதிலிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். முற்றாக அல்கஹோலைக் கைவிடுவது தான் ஆதர்சமான ஆரோக்கிய வழி, ஆனால் அப்படிக் கைவிடாமல் கொஞ்சம் (நிழலி சொல்லியிருப்பது போல) மத்திமமான எஞ்ஜோய்மென்ற் வாழ்க்கை வாழ எந்த வகை அல்ககோல் எடுத்துக் கொள்ளலாம் என்று மட்டும் தான் இங்கே பேசப் பட்டிருக்கிறது. பி.கு: பல ஆண்டு காலமாக நிரூபணமான ஆரோக்கிய விடயங்களும், பிடிக்காதவன் சொன்னால் "கக்கா" என்றால் நிச்சயம் அது "வெற்றிப் பாதை" தான்😎!
  21. நன்றி, நான் விசுகரிடம் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கான விடையும் இதில் இருக்கிறது. எதையும் தரா விட்டால் இராணுவ வழி தான் என்று திட்டம் வைத்திருந்திருக்கிறார்கள். கவலைக்குரிய விடயம் தான்.
  22. அது தான் இணையவனின் கருத்தும்: இவையெல்லாம் குறைவாக இருந்தும் இலங்கையுட்பட்ட உலக நாடுகளில் ஆயுட்காலம் குறைவாகத் தான் இருந்திருக்கிறது. இப்போது மருத்துவ அறிவியல் வளர்ந்து விட்டதால், பழங்காலத்தில் கண்டறியப் படாத நோய்களெல்லாம் இப்போது கண்டறியப் படுகின்றன, பெயர்கள் இருக்கின்றன, அனேகமான நோய்களுக்கு தடுப்பு முறைகளும், வந்த பின்னர் உயிர் போகாமல் காக்கும் மருந்துகளும் இருக்கின்றன. இதை வெறுமனே பணம் பார்ப்பதற்காக மருத்துவ உலகம் செய்யும் சதி என்று சொல்வது தலைகீழாக நின்று உலகத்தைப் பார்க்கும் ஒருவரது கருத்தாகத் தான் எனக்குத் தெரிகிறது. இத்தகைய தலைகீழ் பார்வை கொண்டோரின் இன்னொரு இயல்பு: தெருவோரம் வளரும் பச்சைப் பசேலாக இருக்கும் ஒரு களையைப் பிடுங்கி வந்து "இதைச் சாப்பிட்டால் இன்ன நோய் அண்டாது, இன்ன நோய் குணமாகும்" என்று யாராவது சும்மா சொன்னால் உடனே அதை நம்பி விடுகிறார்கள். நூற்றுக் கணக்கான ஆய்வறிக்கைகளின் பின், நவீன மருத்துவம் ஒரு மருந்தை "இந்தக் குறிப்பிட்ட நோய்க்கு மட்டும் பாவிக்கலாம்" என்று சந்தையில் விட்டால் "ஐயகோ பணம் பார்க்கும் பிசினஸ்" என்று ஓலமிடுவார்கள். தலைகீழ் உலகம் அவர்களுடையது!
  23. உங்களை மாதிரியே கவியரும் தொடர் கதை மூலம் ஒரு கொக்கியைப் போட்டு எல்லாரையும் இங்கேயே சுத்தி வர வைச்சிருக்கிறார்😂. சுவியர், கவியர் - யாழுக்குக் கிடைத்த இரு அரிய பொக்கிஷங்கள்!
  24. நிழலி, செறிந்த அல்கஹோலைக் குறைத்திருப்பது நல்ல விடயம். ஒரு சாதாரண பிராண்ட் வைன் ஒரு serving இல் (இது 5 அவுன்ஸ்) 1 முதல் 2 கிராம் சீனி இருக்கும் (ஒப்பீட்டிற்கு அண்ணளவாக அரைத்தேக்கரண்டிக்கும் குறைவான சீனி). இதுவே sweet wine என்ற வகையானால் இந்த சீனியின் அளவு 4 மடங்கு அதிகமாக இருக்கும். ஆனால், நீங்கள் sweet wine அருந்த மாட்டீர்களென ஊகிக்கிறேன். நீரிழிவு இருக்கும் என் நண்பர்கள் சிலர் "வொட்காவில் சீனி இல்லை, எனவே பருகலாம்" என புல் கட்டுக் கட்டுவர். உண்மையில், அல்கஹோலில் நேரடியாக சீனி இல்லா விட்டாலும், இரத்தத்தில் அல்ககோல் அதிகரித்தால், இரத்த குழூக்கோஸ் எரிக்கப் படாமல் சும்மா இரத்தத்தில் சுற்றித் திரியும். எனவே, குறைந்த அல்கஹோல் செறிவுடைய பானங்கள் பாதுகாப்பானவை என்று விளக்க முயல்வேன். "இவனோட கதைச்சால் வெறி இறங்கிடும்" என்று விலகி ஓடி விடுவர்😂.
  25. ஆம். இதைத் தான் நானும் அறிந்தேன். உலர்த்தப் பட்ட பேரீச்சம் பழம் (இது தான் அமெரிக்கக் கடைகளில் கிடைக்குமென நினைக்கிறேன்) அதிக சீனியும், குறைந்த நார்த்தன்மையும் கொண்டிருக்குமாம். உலராத பழம் அதிக நார், நீர்த்தன்மை கொண்டிருப்பதால் அதன் Glycemic Index குறைவாக இருக்கும் என்கிறார்கள். எனவே, பாதி / ஒரு பேரீச்சை தேனீரோடு எடுத்துக் கொள்வது பெரிய பிரச்சினையில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.