-
Posts
6119 -
Joined
-
Last visited
-
Days Won
68
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Justin
-
அதானே? இப்பிடி பல தற்செயல் மரணங்களுக்கு சும்மா சும்மா புட்டினைக் குற்றம் சொல்வார்கள்: அன்னா பொலிற்கோவ்ஸ்காயா சில மர்ம மனிதர்களின் துப்பாக்கி இயங்கும் நேரம் பார்த்து தற்செயலாக துப்பாக்கியின் முன் நின்றதால் இறந்தார். இவரைப் போல இன்னும் சில ரஷ்ய பத்திரிகையாளர்களும் தற்செயலாகத் துப்பாக்கியின் முன்னாள் நின்றதால் இறந்திருக்கின்றனர். செர்கி மக்னிற்ஸ்கியை ரஷ்ய பொலிஸ் கைது செய்து கொண்டு சென்ற போது அவர் தனது நீரிழிவுக்கான மருந்து மாத்திரைகளை எடுத்துச் செல்லத் தவறி விட்டார், அதனாலேயே சிறையில் அவர் நோய் வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். இதுக்கெல்லாம் புட்டின் என்ன செய்வார்? நீங்க தொடருங்கோ நெடுக்கர்!😎
-
ரஷ்யா - யுக்ரேன் போர்: 2023-ல் நடக்க வாய்ப்புள்ள 5 சாத்தியங்கள்
Justin replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இந்த ரண்டு வரியையும் 20 ஆல பெருக்கி, அதில ஒரு 10 சம்பந்தமில்லாத தகவல்களையும் சேர்த்து , பெட்டி, எண்கோணம் அப்படி இப்படியெண்டு நாலு ஷேப்புகளையும் சேருங்கொ - "ஆய்வு" கட்டுரை றெடி😂. எங்க பப்ளிஷ் பண்ணுறதா உத்தேசம்? -
ரஷ்யா - யுக்ரேன் போர்: 2023-ல் நடக்க வாய்ப்புள்ள 5 சாத்தியங்கள்
Justin replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இதைக்கொஞ்சம் விரிவாக எழுதினால் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தால் ஒரு புத்தகமாக வெளியிடலாமே? 😂 -
அட்ஜஸ்ட் செய்து வாழ வேண்டியது தானே ஓணாண்டியார்? பெரும்பாலான பெண்கள் அப்படி வாழும் போது ஆண்களும் செய்ய வேண்டியது தானே? 😂
-
இது வரலாற்றாசிரியர்கள் புத்தகத்தில் அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பயந்து எழுதிய வரலாறல்லவா? 😂அவர் குறிப்பிடுவது ரிக் ரொக், யூ ரியூப் போன்ற சுதந்திர ஊடகங்களில் வந்த வரலாறு. உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? கிழக்கு ஜேர்மனிக்குள் மேற்கின் மக்கள் புகுந்து விடாமல் கட்டிய பெர்லின் சுவரை 1989 இல் இடித்துத் தள்ளி மேற்கு செய்த சதி தான் கம்யூனிசத்தை வீழ்த்தியது!
-
இந்த உணர்வினுடைய தோற்றுவாய் ஆணாதிக்கத்தின் கீழ் வாழ்வது என நினைக்கிறேன். எல்லா திருமண அல்லது இணைந்து வாழும் வாழ்க்கையிலும் இத்தகைய நிலை ஒரு கட்டத்தில் வரலாம். இந்த உணர்வைச் செயலாக்குவதா இல்லையா என்பதை, அந்த உறவில் இருக்கும் வேறு காரணிகள் தீர்மானிக்கும். உதாரணமாக, 1. குழந்தைகள் இருக்கின்றனவா? 2. இணையின் நாளாந்த வாழ்க்கைக்கு என் இருப்பு அவசியமாக தேவையா? 3. சேர்ந்து வாங்கிய வீட்டுக் கடன் இருவரையும் மூழ்கடிக்குமா? குழந்தைகளைத் தெருவில் விடுமா? என்னுடைய தனிப்பட்ட கருத்து, ஒரு வயதுக்கு மேல் உங்கள் வாழ்க்கையின் pivot point மற்றவர்களாக (அனேகமாக குழந்தைகளாக) இருக்கும். அதை முன்வைத்தே இந்த உணர்வுகள் செயல் வடிவமாகுமா இல்லையா என்பது தீர்மானிக்கப் படும்.
-
அத்தகைய குடும்பங்களில் வாழும் பெண்கள் நிலை பரிதாபம் தான் - அவர்கள் தீர்வுகளைத் தேட வேண்டும். பிரிந்து போதல் தீர்வுகளில் ஒன்று. ஆனால், கொலை செய்து விட்டு தாங்கள் போய் சிறையில் மிகுதி வாழ்வைக் கழித்தல் என்பது நல்ல தீர்வாகத் தெரியவில்லை. சட்டப் பாதுகாப்புகள் உடைய நாடுகளில் battered wife defense மூலம் நிவாரணம் கிடைக்கலாம். இலங்கை, இந்தியா போன்ற கண்ணறைச் சட்ட அமைப்புடைய நாடுகளில் பெண்கள் நிலை கஷ்டம் தான்.
-
வழமையான எழுதியதும் விளங்காத, திரிக்கும் பொருந்தாத பெருமாள் பாணி எழுத்து?😂 களம் இதை மிஸ் பண்ணுகிறது! பம்பலும் தேவையல்லோ?
-
வழமை போல லொஜிக் பொருந்தவில்லையே பெருமாள்? "சாப்பிட மட்டுமே" போகும் பட்டினி கேஸ்கள் அல்லவா சாப்பாடு பற்றி அலட்டிக் கொள்வர்? அது யார் இங்கே? பதில் வேண்டாம், வாசகர்களுக்குப் புரிந்திருக்கும்!😎
-
இது உண்மை. ஆனால் பௌத்த முன்னுரிமையை இல்லாமலாக்குவது நமக்கு நடைமுறையில் அவசியமான ஆணியா என்று யோசிக்க வேண்டும். இல்லையென்றே நினைக்கிறேன்: 1. இந்தியா மதச்சார்பற்ற, உலகாயத (secular) ஜனநாயகம் என சட்டத்தில் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் இன்று இந்து மதத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் நாடு. 75% பௌத்தர்கள் கொண்ட சிறிலங்காவில் சட்டத்தை மாற்றி பௌத்த மேலாண்மையை பெயரளவில் இல்லாமல் ஆக்கினாலும், மதச்சார்பின்மைச் சட்டம் ஏனைய மதங்களைக் குறி வைக்கும், பௌத்த மேலாண்மை குறையாது - இது என் கணிப்பு. 2. பௌத்த மேலாண்மை எங்கள் மாகாணங்கள் அல்லது அலகுகளில் உள் நுழையாமல் இருக்க வேறு நுட்பங்களைப் பாவிக்கலாம். உதாரணம்: காணி உரிமை. காணிகளை எந்த மதக் கட்டுமானத்திற்கும் வழங்க முன்னர் அந்த மாகாண அதிகார அமைப்பின் ஆய்வு, அனுமதி தேவையென்று ஒரு சட்டம் இருந்தால் இதைச் செய்யலாம். இது pie in the sky தான். ஆனால், உதாரணமாகச் சொல்கிறேன்.
-
இதற்கு என்ன வேண்டும்? இந்த சமூக ஒருங்கிணைவுக் (social enjoyment) கொண்டாட்டத்திற்கு? 1. முதலில் விருந்தோம்புபவர் என்னை நினைத்து அழைத்திருக்கிறார் என்ற நன்றியுணர்வு வேண்டும். 2. விருந்தில் குறை இருந்தாலும் (உப்பில்லை, காரமில்லை வகையறா) விருந்தோம்புபவர் மனம் மகிழ அதைக் கடந்து போகும் பெருந்தன்மை (magnanimity) வேண்டும். எதை ருசித்தாலும் அது நாக்கைத் தாண்டும் வரை தான், எதை உள்ளே எடுத்தாலும் அடுத்த நாள் அது கழிவறையில் தான்😂 3. "நான் உன் விருந்திற்கு வருவதே உனக்குப் பெருமை, என்னைக் கேக்காமல் எப்படி நீ விரும்பமில்லா உணவு பரிமாறுவாய்?" என்ற சில்லறைக் குணம் இருக்கக் கூடாது! இந்த நிபந்தனைகள் எல்லாக் கலாச்சாரங்களுக்கும் பொருந்தும். இவை அமையாதோர் விருந்துக்குப் போகாமல் இருப்பது நல்லது, விருந்தோம்புபவருக்கு ஒரு இழப்பும் இருக்காது!
-
வெள்ளைகளை விடுங்கள். நான் கிறிஸ்தவன், 365 நாளும் மாமிச உணவுப் பிரியன். சைவ நண்பர்கள் பிள்ளைக்கு பூப்புனித நீராட்டு விழா வைத்தால் மாமிசம் இருக்காது, நான் முகம் சுழிக்க முடியுமா? மனதளவில் கூடமுகம் சுழிப்பதில்லை, மேலும் வழமைக்கு மாறாக டசின் கணக்கான மரக்கறிகளோடு சாப்பிடும் அரிய வாய்ப்பு என்று மகிழ்ச்சி தான் அடைந்திருக்கிறேன். பல்வேறு குடியேறிகளோடு வாழ்கிற சமூகத்திற்கு cultural sensitivity முக்கியமானது. எனவே தான் இந்த முறைப்பாடும், அதற்கு மேலாக இவர்கள் "அரை குறைகள்" என்ற எள்ளலும் பிற்போக்குத் தனத்தின் வெளிப்பாடுகள் என்கிறேன். நாதம், முன்னரே பெருமாளுக்குக் குறிப்பிட்டது போல, ஒரு பொது வெளியில் நடக்கும் உரையாடலில் ஒரு கருப்பொருளைப் பற்றிப் பேசும் போது அது "உங்களைப் பற்றியது" என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள்: நீங்கள் உலகத்தின் மையம் அல்ல! இந்த "கையைப் பிடிச்சு இழுக்கிறார்" என்ற சிறு பிள்ளைத் தனமான முறைப்பாடுகளை விட்டு விட்டு உரையாடுங்கள்!😂
-
பெருமாள், இது தனியாட்கள் பற்றியதல்ல, எங்கள் பிற்போக்கான, வாழும் நாடுகளைக் கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ள முயற்சியே எடுக்காத சோம்பேறித் தனத்தின் வெளிப்பாடு (symptom) தான் இந்த உணவு பற்றிய "நக்கல்" என்பதால் தான் எழுதினேன் - அது உங்களுக்கு பின்பக்கத்தில் குறி சுட்டு விட்டால் நான் பொறுப்பல்ல!😂 ஆனால் உங்களிடம் ஒரு கேள்வி: ஒரு நாள் நடக்கும் விருந்தில் ஒருவர் இன்னொரு கலாச்சார உணவை அறிமுகம் செய்தால் அதை பெருந்தன்மையோடு கடந்து போக முடியாதவர் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் ஜொனி வாக்கரும், ஜேன் வாக்கரும் எந்த வகை? இதில் யார் அரை குறை என நினைக்கிறீர்கள்? ஒரு மேற்கத்தைய உணவை ஒரு நாள் சாம்பிள் காட்டியவரா அல்லது ஜொனி/ஜேன் வாக்கருகளை மட்டும் தமிழ் பானமாக எடுத்துக் கொள்பவரா? 😎 சோறு ஒரு தானியம், அது இல்லாத நாடுகளில் கோதுமை இருக்கிறது. இதில் எதுவாக இருந்தாலும் மாச்சத்து எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். ஒரு கவளம் stikcy rice உணவில் சேர்த்துக் கொள்ளும் சீனனும், கொரியனும் இன்னும் ஆரோக்கியமாகத் தான் இருக்கிறார்கள். மூன்று நேரமும் சோறும் பருப்பும் சாப்பிடும் சிங்களவர்களுக்கு நீரிழிவு, அதே போல குறைந்தது இரண்டு நேரம் சோறு சாப்பிடும் தமிழர்களுக்கும் நீரிழிவு. என்ன வேறு பாடு? மலை போல குவித்துச் சாப்பிடுவது தான் பிரச்சினை. #முன்னோர் என்ன மூடர்களா என்ற பெயரில் இந்த சோற்றுச் சாபம் தேவையா எங்களுக்கு?
-
மாகாண பொலிஸ் என்று வைத்துக் கொண்டால், பணிக்குச் சேர அந்த மாகாணங்களில் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதி வாழ்ந்திருக்க வேண்டும், அந்த மாகாணங்களில் பெரும்பான்மையான மொழியில் தேர்ச்சி இருக்க வேண்டும், இரண்டாவது மொழியில் ஒரு குறிப்பிட்ட நிலைப் பரீட்சயம் இருக்க வேண்டும் என்பன தகுதிகளாக இருக்கும். மாகாண பொலிஸ் ஆணையாளர் (commissioner) அல்லது பொலிஸ்மா அதிபர் (IG) தான் படைக்குப் பொறுப்பு. ஆனால், மாகாணங்களிடையேயான குற்றத் தடுப்பிற்கு எப்படியும் ஒரு மத்திய பொலிஸ் படை தேவை, CBI, FBI, Carabinieri போல. அதை மத்திய அரசே இயக்கும். பொலிஸ் ஆணைக்குழு (Police Commission) என்ற ஒன்று இப்போது இலங்கையில் இருக்கிறது, இது IOPC போல பொலிசை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பா எனத் தெரியாதெனக்கு. ஆனால், IOPC போல ஒன்று உருவாக வேண்டும் இலங்கையில்.
-
ஓம், அரச/முடிக்குரிய மதம் என்ற நிலை இருக்கக் கூடாதென்கிறார்.
-
மனித உடல் - ஆணோ, பெண்ணோ- கூர்ப்பின் பாதையில் பல விடயங்களைச் சேர்த்தும் இழந்தும் உருவாகியிருக்கிறது. ஒரு புள்ளியில் அப்படியே தங்கி விடுவது கூர்ப்பில் நடப்பதில்லை. இனம் பிழைத்தல் (survival) தழைத்தல் (thriving) என்ற நோக்கமே கூர்ப்பின் இலக்கு. ஆணின் இனப்பெருக்கும் இயலுமை நீடிக்க, பெண்ணின் இயலுமை குறைதல் என்பது பல இணைகளோடு வாழ்ந்த ஆதி காலத்தில் இனம் தழைக்க உதவியது என்பது உண்மை. இப்போது இது இனம் தழைக்க உதவுமா என்பது தான் கேள்வி. எங்கள் நவீன சமூக அமைப்பில் ஒரு வாரிசை வளர்க்க இரு பெற்றோர் அவசியமாக இருக்கிறது. இரு பெற்றோரும் இல்லாத சில சமூகங்களில் உருவாகும் வாரிசின் பாதுகாப்பு மிகக் குறைவாக இருக்கிறது (அமெரிக்காவில் கறுப்பின மக்களின் நிலை இது). எனவே, எண்ணிக்கையைக் கூட்ட பெண்ணோ ஆணோ திருமண உறவை மீறி swing culture இற்குள் செல்ல வேண்டுமென்பது தற்போதைய மனித சமூகத்தில் இனம் பிழைக்க உதவாது. அபிலாஷ் நன்கு எழுதுகிறார், ஆனால் சில விடயங்களில் மிகக் குறைந்த அவதானிப்புகளைக் கொண்டு தவறான முடிவுகளையும் தியரியையும் முன்வைக்கிறார். இந்த தியரிகளை முன்வைப்பதற்கு முன்னர் மேலதிக வாசிப்புகள் அவசியம் என்பது என் கருத்து.
-
இதை விளக்குவது கடினம் வன்னியர்! இதுவும் ரசிக்கக் கூடிய ஒரு நிலை தான், a slice of life என்று சொல்லலாம். பொதுவாகவே குளிர்காலம் என்பது எனக்கு பல வழிகளில் பிடித்தமான சீசன்: ஒரு அமைதி வந்து விடும், எழுதுவது , வாசிப்பது போன்ற வேலைகளில் மனமொன்றக் கூடிய அமைதி நிலவும். வீட்டினுள் கிறிஸ்மஸ் மரமும் வந்து விட்டால் கூடுதல் bliss வரும். ஆனால், இவையெல்லாம் கதகதப்பான சூடேற்றப் பட்ட வீடுகளுக்குள் வசிப்போருக்கான மனநிலை. வீடில்லாதோர் பாடு கடுங்குளிரில் மிகத் துன்பம் என்பதை மறக்க முடியாது!
-
விருந்தும் மருந்தும் தினசரி விடயங்களல்ல. எப்பவாவது வரும் ஒரு நிகழ்வான விருந்தில் தினசரி செய்வது போல சோத்தால் குழம்பை அணைகட்டிச் சாப்பிடாமல்😂 வித்தியாசமாகச் சாப்பிட்டால் ஒரு விக்கினமும் இல்லை. ஒப்பீட்டளவில் வான்கோழி (white meat), குறைந்த உப்புடைய சோஸ்கள் எங்கள் நாட்டு உணவுகளை விட ஆரோக்கியமானவை - எனவே நன்மை தான் உடலுக்கு. விருந்தோம்புபவர் விருந்தாளியை எப்படி மதிக்க வேண்டுமோ, அதே போல விருந்தாளியும் விருந்தோம்புபவரின் உணவுக்கு ஒரு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்பது தான் நல்ல மரபென நினைக்கிறேன். என்னைப் பொறுத்த வரை இப்படி யாராவது என் விருந்தின் உணவை பொது வெளியில் விமர்சித்து , எனக்கு "அரைகுறை" பட்டமும் தருகிறார்கள் என்று அறிந்தால் அவர்களுக்கு என்னுடைய வீட்டு நிகழ்வுகளில் வாழ் நாள் தடை தான்!😎
-
இந்தக் கடுங்குளிரும் பனிமழையும் நீங்கள் இருக்கும் இடங்களின் சேவைகள், வசதிகள், மற்றும் உங்கள் உடல் பழக்கம் என்பவை பொறுத்து சுமையாக அல்லது சுகமாகத் தெரியும். சில யாழ் கள உறவுகள் வசிக்கும் மினசோட்டா மாநிலத்தில் பல வருடங்கள் வசித்தேன். நவம்பரில் தரையில் விழும் பனி, மார்ச் வரைக் கரையாது. ஆனால், நகரங்கள் பனி பெய்யும் போதே இரவிரவாக தெருக்களைச் சுத்தம் செய்து, பனி உருக்கும் உப்பைப் போட்டு காலையில் போக்குவரத்திற்கு வழி செய்து விடும் - எந்த வேறுபாடுமில்லாமல் நாளாந்த வாழ்க்கை நகரும். சில நாட்களில் windchill மூலம் ஏற்படும் உணரும் (feel-like) வெப்ப நிலை பூச்சியத்திற்குக் கீழே -30-40 வரை போயிருக்கிறது. அந்த நாட்களில் உங்கள் மூச்சுக் காற்று அப்படியே உங்கள் மீசை மீது பனித்துகளாக உறையும்😅. ஆனால், கையுறை, down feather coat எனப்படும் கோட், தொப்பி இவையெல்லாம் இருந்தால் வெளியே நடப்பதில் பிரச்சினையிருக்காது. வாகனங்கள் high crank Amp பற்றரியோடு வருவதால் அந்த உறைபனியிலும் ஸ்ரார்ட் ஆகி ஓடும்! இயந்திரத்தினுள் இருக்கும் நீர்த்துளிகள் உறைந்து விடாமலிருக்க இடைக்கிடை அன்ரி பிறீஸ் (anti-freeze) பெற்றோலோடு கலப்பதும் வாகனங்கள் சாதாரணமாக ஓட உதவும்! மிக நீண்ட உறைபனிக் கால நிலை கொண்ட நோர்வே, பின்லாந்து நாடுகளில் வாழும் மக்களுக்கு இதெல்லாம் ஜுஜுபியாகத் தெரியும்!😂
-
இன்று பிபிசி செய்தியின் படி, "ஐரோப்பியரல்லாத ஐரோப்பிய வாசிகள் மீது அசாதாரணமான துவேசம் (pathological hatred)" கொண்டிருந்ததாக சந்தேக நபரே சொல்லியிருக்கிறாராம். எனவே, இந்த மூன்று பலிகள் யாராகவும் இருந்திருக்கக் கூடும், அதே ரெயில் லைனில் சில ஸ்ரேஷன்கள் தள்ளிப் போயிருந்தால் லா சப்பலாக, ஈழத்தமிழராகவும் இருந்திருக்கக் கூடும்! துவேசக் கொலைஞர்களின் மனப் பிறழ்வுக்கும் குடியேறிகள் தான் காரணமாக இருக்கக் கூடும் என்று யோசிப்போர் இதையும் மனதில் வைக்க வேண்டும்!
-
எரிகிசொல்கிம் -சம்பந்தன் அதிரடி சந்திப்பு
Justin replied to Kuna kaviyalahan's topic in அரசியல் அலசல்
குற்றுவதை யார் வேண்டாமென்பது? 😏ஆமை வேகத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு அதிரடித் தலைப்பெதற்கு என்பது தான் கேள்வி!