Everything posted by இணையவன்
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
விளக்கத்துக்கு நன்றி வசி. நிச்சயமாக ஒரு சில நாளில் 1900 இனைத் தாண்டிவிடும் என்றே உறுதியாக நம்பினேன். இருந்தாலும் 1300 வரை இறங்கும் என்பதையும் நம்பக் கடினமாக உள்ளது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நேற்று Nasdaq 5 வீதத்தை இழந்தது. இது கோவிட் வீழ்ச்சிக்குப் பின்னரான பாரிய சரிவாகும். தொழில்நுட்ப நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட விலையேற்றம் முடிவுக்கு வருவதாகக் கூறுகிறார்கள். அமேசன் 7 வீதத்துக்கு மேல் சரிந்தது. தங்கம் வெள்ளி போன்றவை மிகக் குறைவான விலையில் உள்ளன. முதலீடு செய்ய விரும்புபவர்கள் இவற்றில் முதலிடுவது உறுதியானதாக இருக்கும். தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளின் பெறுமதி குறைவதால் Bit coin உம் சேர்ந்தே இறங்குகிறது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சுவி அண்ணா !
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
@பகிடி, உங்கள் கட்டுரைக்குப் பொருத்தமான தலைப்பொன்றைத் தந்தால் இதனை யாழ் 24 அகவைக்கு மாற்றி விடுகிறேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இந்த வருடம் Bit coin 20k வரை செல்லும் என்று கூறுகின்றனர். Ethereum இன் ஏற்ற இறக்கம் Bit coin இனை ஒத்ததாக இருந்தாலும் சில வேளைகளில் கணிசமான முன்னேற்றம் தெரிகிறது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நிலாமதி அக்கா!
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
பயணிக்கத் தூண்டும் படங்கள். நன்றி.
-
இலைச் சருகுகள்.
கதையின் ஆரம்பத்தில் நல்லதொரு கருவைத் தொட்டு வேறு விதமாக அவசரமாக முடித்துள்ளீர்கள். ஒருவேளை கதையின் ஆரம்பத்தை வாசித்ததும் வேறு திசையில் என் சிந்தனை இருந்திருக்கலாம். - பிள்ளைகளை வளர்த்து ஆளா சொத்துக்களைக் கொடுப்பது - திட்டமிடப்படாத வாழ்க்கை - மருமக்கள் பிள்ளைகளைச் சார்ந்து வாழவேண்டிய நிலை இவைற்றை எனது வாழ்க்கையில் தவிர்க்க நினைக்கிறேன்.
-
'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
படங்களும் வர்ணனையும் அருமை.
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
மனம்தான் (மூளை) சில உபாதைகளுக்குக் காரணம். அதை நம்பவைக்கத்தான் ஊரில் மிளகாய் சுற்றிப் போடுவார்கள். குளிர் நாடுகளில் மூட்டைப் பூச்சி வாழ முடியாது என்று நினைக்கிறேன். இங்கு Acariens என்ற சிறு பூச்சி உண்டு. இதை அழிப்பதற்கு வாரத்தில் ஒரு தடவை 10 நிமிடங்களுக்கு யன்னல்களைத் திறந்து வீட்டுக்குள் குளிர் வரவிடுவோம்.
-
பார்வை ஒன்றே போதுமே.......!
இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். முதலாவது பகுதி மட்டுமே இன்று வாசித்துள்ளேன். ஆரம்பம் நன்றாக உள்ளது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரான், பாஞ்ச் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
-
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது.......!
முத்தான வார்த்தைகளால் ஊர் நிலமையைச் சொல்லியுள்ளீர்கள். கவிதைக்கு வாழ்த்துகள் சுவி அண்ணா.
-
இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
தமிழில் மிகவும் பயனுள்ள தகவல்கள். தொடர்ந்து எழுதுங்கள் ராஜவன்னியன். இதே காலப் பகுதியில் இண்டெல் நுண்செயலிக்குப் போட்டியாக Motorola வின் நுண்செயலிகளும் இருந்தன. குறைந்த வேகத்திலேயே அதிக கட்டளைகளை நிறைவேற்றும். Amiga மற்றும் Apple கணணிகளில் இதனைப் பாவித்தனர். இண்டெல் 8பிட் வகை நுண்செயலி வந்தபோதே Motorola 16பிட் ற்கு மாறியிருந்தது. பின்னர் காலப்போக்கில் விண்டோஸ் பரவலினால் கைவிடப்பட்டது.
-
,எஸ்கியூஸ் மீ மூருகா
மென்மையான கிண்டலும் நகைச்சுவௌயும் கலந்து எழுதும் புத்தனின் ஆக்கம் அருமை. வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி. தனிக்காட்டு ராஜாவுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி சுவி அண்ணா, உதயகுமார், கிருபன், புங்கையூரான், பாஞ், ராசவன்னியன், உடையார், பெருமாள், தமிழ்சிறி, யாயினி, நுணாவிலான், நிலாமதி அக்கா, சசி வர்ணம், நந்தன், ஏராளன், ஜெகா துரை, ஈழபிரியன். 🙂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அகஸ்தியனுக்கும் நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நீங்கள் குறிப்பிட்ட ருலிப் முதலீட்டினை இன்றுள்ள கிறிப்டோ முதலீட்டுக்கு ஒப்பிட்டதைச் சில கட்டுரைகளில் பார்த்துள்ளேன். 🙂
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
அமெரிக்க வருடாந்த நுகர்வோர் விலை சுட்டெண் 7.5 ஆக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று அமெரிக்க ஐரோப்ப்பிய பங்குச் சந்தையில் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் பிரபா, இப்போது சரியாக இருக்க வேண்டும், பாருங்கள். நன்றி.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நீங்கள் குறிப்பிட்டது போன்று நீண்டகால அடிப்படையில் பிட் கொயின் நல்ல முதலீடு என்றே நினைக்கிறேன். இந்தச் சடுதியான ஏற்ற இறக்கங்களைத் தாண்டி சீரான நிலைக்கு வர வேண்டும். அப்படி வரும்போது தற்போதுள்ளது போன்று குறுகிய காலத்தில் முதலீடு செய்து விற்று பெரும்தொகையை இலாபமாக ஈட்டக்கூடிய நிலை இருக்குமா என்பது சந்தேகம். இந்த சீரற்ற நிலை காரணமாகத்தான் உள்ளூர் பணமாக மிட் கொயினை சல்வடோர் நாடு பயன்படுத்துவதை இரத்து செய்யுமாறு இன்று IMF கேட்டுள்ளது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
mining செய்வதில் 3ஆவது இடத்தில் உள்ள ரஷ்ஷியாவும் விரைவில் mining செய்வதைத் தடை செய்யும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. அதன் மத்திய வங்கி பாராளுமன்ற அறிவித்தலை எதிர்பார்த்து நிற்கிறது. பெப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் கிரிப்டோ தொடர்பான தனது புதிய சட்டங்களை அறிவிக்கலாம். இது கிரிப்டோவுக்குச் சாதகமானதாக இருக்கலாம். பிரான்சில் குறிப்பிட்ட அளவுக்குமேல் கிரிப்டோ மூலம் வருமானம் பெற்றவர்களுக்கு அதிகமான வரி விதிப்பது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர். https://journalducoin.com/analyses/taxation-et-regulation-de-bitcoin-et-des-crypto-actifs-en-france-en-2022-lheure-du-bilan/
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
எனக்கு பங்குச் சந்தையில் Technical அனுபவம் கூட இல்லை. Apple நிறுவனத்தின் மீது நீண்டகாலமாக பாவனையாளன் என்ற ரீதியில் முகுந்த ஈடுபாடு இருந்தது. Apple தொடர்பான சஞ்சிகைகள் எல்லம் வாங்கிப் படிப்பேன். 94-95 ஆண்டுகளில் Computer graphic படித்துக் கொண்டிருந்தேன். Apple அக் காலத்தில் மிக நெருக்கடியில் இருந்தது. அப்போது மிகப் பெரிய பகுப்பாய்வு நிறுவனங்கள், 2000 ஆண்டளவில் முற்றாக மூடப்பட்டுவிடும் என்று எதிர்வுகூறியிருந்தன. தீவிர ஆதரவாளன் என்பதாலோ என்னவே எப்படியும் தலைநிமிர்வார்கள் என்று நம்பினேன். அப்போது பங்குச் சந்தையில் சில சதங்கள் மட்டுமே பெறுபதியானதாக இருந்தது. பங்குகள் வாங்க வேண்டும் என்று ஆர்வமிருந்தது. ஆனால் இப்போது போன்று இணைய வசதியோ பங்குச் சந்தை பற்றிய அடிப்படை அறிவோ இல்லாததோடு கையில் ஒரு சதம் காசும் இருக்கவில்லை. இன்று பல தடவைகள் split செய்யப்பட்டு 150 ஈரோவுக்கு மேல் உள்ளது. அன்று 150 ஈரோவுக்கு பங்கு வாங்கியிருந்தால் இன்று அதன் பெறுமதி ஒரு லட்சம் ஈரோவுக்கு அதிகமாக இருக்கும். கிரிப்டோவில் முதலீடு செய்ய இன்று சாதகமாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் விருப்பமில்லாததற்கு நான் கூறும் காரணங்கள் : - சீரற்ற, நிலையற்ற தன்மை. இன்று சந்தையில் உள்ள கிரிப்டோக்களில் நாளை ஒன்று இன்னொன்றை தாண்டி மேலே வரலாம். - கிரிப்டோ தொடர்பான சட்டதிட்டங்கள் இன்று எதுவும் இல்லை. மேலத்தேய நாடுகள் இதனை எப்படிக் கையாள்வது என்று தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. - கிரிப்டோ உலக வெப்பமாதலில் கணிசமான பங்கு வகிக்கிறது. இது பற்றி இங்கு பேசப்பட்டதோ தெரியவில்லை. ஆரம்பத்தில் சீனாவில் நிலக்கரி மின்சாரத்தில் இயங்கிய கணணிகள் (mining) பின்னர் சீனாவால் தடைசெய்யப்பட அவற்றின் பெரும் பகுதி உக்ரெய்னுக்கு மாற்றப்பட்டு எரிவாயுவினால் உற்பத்தி செய்யப்படும் முன்சாரத்தில் இயங்கின. பின்னர் படிப்படியாக பெரும் பகுதி அமெரிக்காவுக்கும் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நகர்த்தப்பட்டுள்ளன. இன்று Bitcoin இன் மின் பாவனை நோர்வே நாட்டின் முழு மின்சார உற்பத்திக்கு ஈடாகக் குறிப்பிடப் படுகின்றது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
ழேற்று இரவு மட்டும் 1500 டொலர்களுக்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு பதட்ட நிலை உருவாகியுள்ளது. ஒருசிலர் வாங்க முற்படும்போது உருவாகும் ஏற்றத்தைப் பயன்ப்படுத்தி அதிகமானவர்கள் விற்க முயல்கிறார்கள் என்ற்று நினைக்கிறேன். சிரற்ற தன்மையால் வரும்காலத்திலும் இது ஒரு நிலையான முதலீட்டுத் தளமாக மாறுமா என்பது சந்தேகம். யாராலும் அடுத்த 10 நாட்களுக்குள் நடைபெறப்போகும் மாற்றங்களை அண்ணளவாகவேனும் எதிர்வுகூற முடியவில்லை.