Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. இவருக்கு வாக்களித்த கிளிநொச்சி வாக்காளர்கள்தான் இதுகுறித்துக் கேட்கவேண்டும்.
  2. தமிழ் வேட்பாளர் ஒருவர் வருவதால் ரணிலின் வெற்றிவாய்ப்புக் குறைந்துவிடும் அல்லது கூடிவிடும் என்றோ, அநுர குமார வந்துவிடுவார் என்றோ, சஜித் வராது போய்விடுவார் என்றோ கவலைப்பட்டு "சிங்ஹள‌ ஜனாதிபதிதுமாவை ஆதரிக்கக் காத்திருக்கும் தெமலர்கள்" இதனைப் பார்ப்பது நல்லது. இந்த இனக்கொலையாளிகளை ஆதரிப்பதோ புறக்கணிப்பதோ இல்லை இதன் பொருள் என்பதும், அது தமிழ் மக்களின் ஒற்றுமை சார்ந்த விடயமென்பதும் இந்த "சிங்ஹள தெமலர்களுக்குப்" புரிய வாய்ப்பில்லை என்பதும் எனக்குத் தெரியும்.
  3. தமிழர்களும் அவர்களின் தேசமும் ஹெக்டர் ஜெயவர்த்தனவின் ஆரம்ப உரையினையடுத்து, இலங்கையரச பிரதிநிதிகள் தமது ஆலோசனைகளை முன்வைக்க தமிழர் தரப்பினர் அனுமதிக்கவில்லை. அரச தரப்பு தமது ஆலோசனைகளை முன்வைப்பதற்கு முன்னர் ஹெக்டர் ஜெயவர்த்தனவின் ஆரம்ப உரையில் காணப்பட்ட இரு விடயங்கள் குறித்து தமது ஆட்சேபணையினைப் பதிவுசெய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். இவ்விரு விடயங்கள் தொடர்பில் அரச தரப்பு தரப்போகும் விளக்கங்களைப் பொறுத்தே தாம் தொடர்ந்தும் பேச்சுக்களில் பங்கேற்பதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப்போவதாகவும் தெரிவித்தனர். தமிழர் தரப்பினர் குறிப்பிட்ட இரு விடயங்களாவன, 1. அரசியல்த் தீர்வும் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கியிருக்குமா, இல்லையா? 2. தமிழர் தரப்பில் பங்கேற்கும் பிரநிதிகள் தொடர்பாக அரசினது நிலைப்பாடு என்ன? எதிர்வந்த மூன்று நாட்களான ஆவணி 13 முதல் 15 வரையான நாட்கள் இவ்விரு விடயங்கள் தொடர்பாக விவாதிப்பதிலேயே கழிந்தது. தமிழ்த் தரப்பினர் பேச்சுக்களின் நகர்வு குறித்தும், தமது நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கைகள் குறித்தும் தமது பக்க கூட்டறிக்கையினை முதலில் முன்வைத்தனர். இவற்றினை பேச்சுவடிவிலும் விளக்கமாக அவர்கள் வழங்கினர். தாம் திம்புவிற்குப் பேச வந்திருப்பதே நிலைத்து நிற்கக்கூடிய தீர்வொன்றினை எட்டுவதற்காகத்தான் என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் தெரிவித்தனர். அத்தீர்வு அடிப்படைக் கட்டமைப்புக்களைக் கொண்டு அமையவேண்டும் என்றும் அவர்கள் கோரினர். ஆடி 13 ஆம் திகதி தமிழ்த்தரப்பால் முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படை அம்சங்களே இந்த கட்டமைப்பின் பிரதான கூறுகளாக காணப்பட்டன. தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய எந்தத் தீர்விற்கும் இவையே அடிக்கற்காளாக இருக்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் பலந்தரவல்லைவையாக இருப்பதற்கு முன்வைக்கப்படும் தீர்வுகள் இந்த அடிப்படை அமசங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்று அவர்கள் கோரினர். தமிழர்களால் முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படை அம்சங்களில் முதலாவ‌து, இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசமாகக் கணிக்கப்பட வேண்டியவர்கள் என்பது. இது நடைமுறையில் உள்ள யதார்த்தம் என்று அவர்கள் வாதிட்டனர். தேசம் எனும் சொல் இரு அர்த்தங்களைக் கொண்டிருப்பதாக அவர்கள் கூறினர். தேசம் எனும் சொல் ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் ஒருங்கிணைந்த அடையாளமாகக் கருதப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். தமிழ் மக்கள் தமது அடையாளமாக உணர்வுகள், உணர்ச்சிகள், ஒற்றுமையாக வாழுதல், தமது அடையாளத்தை காத்துக்கொள்ளுதல் ஆகியவற்றினைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவதாக அவர்கள் விளக்கினர். இதன் ஒரு அங்கமாகவே ஆயிரக்கணக்கான தமிழ் இழ்ளைஞர்கள் தமது இனத்தின் அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஒன்றாகக் கூடி, தமது உணர்வுகளை வெளிப்படுத்தி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் வாதிட்டனர். தமது அடையாளத்தை பாதுகாக்க உறுதிபூண்டிருக்கும் தமிழர்கள், தமது உயிரைக் கொடுத்தேனும் அதனைக் காத்துக்கொள்ள முன்வந்திருப்பதாக அவர்கள் மேலும் வாதிட்டனர். இவ்வாதத்தினை முன்வைத்த நடேசன் சத்தியேந்திரா, இரு பிரபல பிரகடணங்களை இதற்கு மேற்கோள் காட்டிப் பேசினார். ருபேர்ட் எமேர்சன் என்பவர் தேசம் என்பதனை பின்வருமாறு வரையறை செய்கிறார், "தேசம் எனும் சொல்லின் மிகவும் எளிமையான பிரகடனமாக, ஒரு மக்கள் கூட்டம் தம்மை ஒரு தேசமாக உணர்ந்துகொள்வதைக் குறிப்பிட முடியும். இதனை நீங்கள் எவ்வாறான சுழல் ஆராய்ச்சிகளுக்கூடாக ஆராய்ந்து முடித்தபின்னரும்கூட, மக்களின் இந்த உணர்வே இறுதியானதாக இருக்கும்" என்று கூறுகிறார். பேராசிரியர் டெயிலர் எழுதும்போது, "தேசம் என்றால் என்ன, அது எங்கு இருக்கிறது? அப்படியொன்று உண்மையிலேயே இருக்கின்றதா? உண்மையிலேயே தேசம் என்பது மக்களின் மனங்களிலும், இதயங்களிலும் தான் இருக்கின்றது என்று ஒருவரால் கூறமுடியும். அது ஒரு எண்ணக்கரு. ஆகவே, அது நீதிமன்றங்களைக் காட்டிலும், இராணுவங்களைக் காட்டிலும் உண்மையானது. உங்களையும், என்னையும் காட்டிலும் உறுதியானது. எங்கள் தந்தைகளின் மனங்களில் இருந்ததுபோல எங்களின் பிள்ளைகளின் மனங்களிலும் அது இருக்கப்போகிறது. அது ஒரு எண்ணம், அது ஒரு கற்பனை" என்று வெளிப்படுத்துகிறார். இலங்கையின் தமிழ் மக்கள் தம்மை ஒரு தனியான தேசமாக உணர்வதற்கு அப்பால், காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் அரசியல் தேற்றங்களின் அடிப்படையிலும் ஒரு தேசத்திற்கு உரித்துடையவர்கள் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அவர்களுக்கென்று தனியான பாரம்பரியம் ஒன்றிருக்கிறது. பொதுவான கலாசாரப் பண்பாடு ஒன்று இருக்கிறது. அவர்களுக்கென்று தனித்துவமான மொழி ஒன்று இருக்கிறது. தெளிவாக அடையாளம் காணப்பட்ட பூர்வீகத் தாயகமும் பொருளாதார வாழ்க்கையும் அவர்களுக்கு இருக்கிறது. தாம் தனியான தேசமாக வாழும் விருப்பினை தமது நீண்டலாக வரலாற்றில் வெளி ஆக்கிரமிப்பிற்கெதிரான அவர்களின் போராட்டங்கள் காட்டிநிற்கின்றன. மேலும் 1956 ஆம் ஆண்டிலிருந்து 1970 வரையான காலப்பகுதியில் சமஷ்ட்டி கோரியும், பின்னர் 1977 ஆம் ஆண்டில் தனிநாடு கோரியும் அவர்கள் வக்களித்திருக்கிறார்கள். இதைவிடவும் 1972 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசுகளால் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்புக்களுக்கெதிரான தமது உணர்வுகளையும் தமிழர்கள் தெளிவாகவே வெளிக்காட்டியிருக்கிறார்கள்.
  4. எனது நோக்கம் இதுதான். எம் கண்முன்னே நடக்கும் சிங்கள பெளத்த செயற்பாடுகளின் சூட்சுமத்தை நாம் பார்க்கத்தவறிவிடுகிறோம். எம்மை இன்று பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் சிலரின் இணக்க அரசியலினாலும், தேசியத் துறப்பினாலும் மக்கள் அரசியலில் இருந்து விலகிவருகிறார்கள், அல்லது நடக்கும் சூட்சுமத்தைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். நான் மக்களைத் துரோகிகளாக ஒருபோதும் நினைத்ததுமில்லை, எழுதியதுமில்லை. இது தவறாக என்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. 25/11/2023
  5. 80 களில் தேசியத்திற்கு எதிராகச் செயற்பட்டார்கள் என்று பல ஜனநாயக அரசியல்வாதிகளை புலிகள், டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் என்று பல அமைப்புக்கள் மண்டையில் போட்டன. மறுக்கவில்லை. . ஆனால், ஜனநாயகவழியில் எமது அரசியலைச் செய்யக் கூடிய சூழ்நிலை 2009 இற்குப் பின்னர் எமக்குக் கிடைத்தது. புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று தமிழர்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் அரசியலில் பாரிய பங்கினைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இன்று செய்துகொண்டிருப்பது என்ன? கடந்த 15 வருட காலத்தில் அவர்களால் தமிழினம் அடைந்துகொண்டவை என்ன? கடந்த 15 வருட காலத்தில் சிங்கள மயமாக்கலினை அவர்களால் எவ்வளவு தூரத்திற்குத் தடுக்க முடிந்தது? பல கட்சிகளைக் கொண்ட தமிழர்களின் ஒரே தெரிவாகவிருந்த கூட்டமைப்பு இன்று ஒற்றைக்கட்சியாகவும், அக்கட்சி இரண்டாக உடைந்து செயற்படுவதற்கே நீதிமன்றத் தடை வந்திருப்பதற்கும் யார் காரணம்? இதற்குக் கூட புலிகள் மண்டையில் போட்டதுதான் காரணம் என்கிறீர்களா? இல்லையே? கூட்டமைப்பை உருவாக்கியவர்களே புலிகள் தானே? தாமே உருவாக்கியவர்களை, தாம் அழிக்கப்பட்டு 15 வருடங்களின் பின்னரும் அவர்களால் மண்டையில் போடமுடியுமா என்ன? எமது ஜனநாயக அரசியல்வாதிகளின் கையாலாகத்தனத்தை இன்னும் எவ்வளவு காலத்திற்கு புலிகளின் மண்டையில் போடுதலால்த்தான் நான் இந்த நிலைக்கு வந்தோம் என்று கூறிக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்? நான் பொதுமக்களைத் துரோகிகள் என்று எண்ணவுமில்லை, அப்படி எழுதவுமில்லை. அவர்களின் இனம்சார்ந்த அரசியல் சூனியமாக்கப்பட்டு, எமது இருப்புக் குறித்த பிரக்ஞையற்ற அரசியல் ஒன்று அவர்கள் மேல் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. இதனை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள் இல்லையென்பதே எனது வருத்தம்.
  6. இதுவும் தவறான கணிப்பே. வெசாக் பந்தலைப் பார்க்கப்போனவர்கள் இணக்க அரசியல் பேசுவதாகவும், தேசிய நீக்கம் செய்வதாகவும், இலங்கையராக இணைவதாகவும் நான் எங்கே கூறினேன்? அப்படிப் பேசிப்பேசியே இன்றைய தலைமுறையினை இன்றிருக்கும் அரசியல்வாதிகளும், நடுநிலைவாதிகளும், இணக்கவாதிகளும் மாற்றி வைத்திருக்கிறார்கள் என்றுதான் ஆதங்கப்படுகிறேன். மக்கள் தாமாக இணக்க அரசியலும், தேசிய நீக்கமும், சரணாகதி அரசியலும் செய்யப்போவதில்லை. அரசியல்வாதிகள் அவ்வாறு செய்வதாலேயே உங்களின் அரசியலும் வேண்டாம், நீங்களும் வேண்டாம் என்று மக்கள் ஒதுங்கிப் போகிறார்கள். இன்றிருக்கும் அரசியல் மயமற்ற தன்மையினை உருவாக்கியவர்கள் இந்த அரசியல்வாதிகள்தான்.
  7. நீங்கள் என்னை முற்றாகத் தவறாகவே ஆரம்பத்திலிருந்து கணித்து எழுதுகிறீர்கள். எனது ஆதங்கம் யாழ்ப்பாணத்தில் இன்றிருக்கும் இளைய தலைமுறை அரசியல் மயப்படுத்தப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்குள் உருவான இந்தத் தலைமுறை எமது அவலங்கள் குறித்தோ, அரசியல்த் தேவைகள் குறித்தோ சரியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. இன்னும் சில வருடங்களின் பின்னர் முள்ளிவாய்க்காலும் பலருக்கு மறந்துபோகும். எமது தாயகத்தில் ஆக்கிரமிப்பாளனினால் இறக்கிவிடப்படும் வானவேடிக்கைகள் மட்டுமே மனதில் நிறைந்திருக்கும். இதனைச் சுட்டிக் காட்டவே நான் இவ்வாறு எழுதுகிறேன். இவர்கள் எல்லோருமே ஒரே மக்களாக இருக்கலாம். வாதிடவில்லை. எனக்கிருந்த கேள்வி, சில நாட்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் அழுது புரண்ட மக்களால் சிங்கள பெளத்த வேடிக்கை நிகழ்வையும் தரிசிக்க முடியுமா என்பதுதான். அது கடிணமாக இருக்கும் என்பதாலேயே அப்படி நினைத்து எழுதினேன். அது சரியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். இதுகுறித்து வாதிடத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
  8. நிச்சயமாக இல்லை. ஒரு பகுதியினர் தமது இழப்புக்களுக்காக வருந்தும்போது, அதுகுறித்த பிரக்ஞையில்லாமல் சமூகத்தின் இன்னொரு பகுதி வளர்ந்து வருகிறது என்பதைத்தான் நான் கூற வந்தேன். அவர்களை நான் எதற்காகத் துரோகிகளாக்கவேண்டும்? அப்படி அவர்கள் என்ன துரோகம் செய்துவிட்டார்கள்? அவர்கள் ஆக்கிரமிப்புப் படையினை ஆதரிக்கிறார்கள் என்று நான் எழுதியதாகக் கூறுகிறீர்கள். எங்கே அப்படி எழுதினேன் என்பதைக் காட்ட முடியுமா? திருத்திக் கொள்கிறேன். நான் கூற வந்தது ஆக்கிரமிப்புப் படையின் சூட்சுமத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான். அவர்களின் இந்த அரசியல் தெளிவற்ற மனநிலையினைத்தான் நான் விமர்சிக்கிறேன். எவ்வளவு தவறான கருத்து. ஆரியகுளத்தில் விடுப்புப் பார்க்கச் சென்றவர்களை துரோகிகளாகக் காட்டி அவர்களை மண்டையில் போடவேண்டும் என்று நான் சொன்னேனா? ஏன் இப்படி எழுதுகிறீர்கள்? ஆக்கிரமிப்புப் படையினருக்கு ஆதரவாக இருந்து, சொந்த இனத்தின் இருப்பை அழித்தவர்களை மண்டையில் போட்டபோது நீங்களும், நானும் சரியென்றுதான் வாதிட்டோம். ஆனால், ஆரியகுளத்தில் வேடிக்கை பார்த்தவர்கள் ஆக்கிரமிப்புப் படைக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள் என்று நான் எங்கு எழுதினேன்? அப்படியிருந்தால் திருத்திக்கொள்கிறேன்.
  9. அட, இதை இன்னுமாடா சொல்லிக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்? 2009 இற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எல்லா அரசுகளுடனும் சமாதனாம் குறித்துப் பேசிக்கொண்டுதானே வருகிறோம்? அரசுகள், பிறநாட்டு அரசுகள், சர்வதேச அமைப்புக்கள் என்று தமிழர்கள் பேசாத இடம் என்று ஒன்றிருக்கிறதா? தமிழர்கள் சமாதானக் கதவினை இறுக மூடிவைத்திருக்கிறார்கள் என்று இவருக்கு யார் சொன்னது? இல்லாத காரணத்தைக் கண்டுபிடித்து அரசியல் பந்தி எழுதுகிறார் என்று நினைக்கிறேன்.
  10. இதுதான் உண்மையான காரணமா? கண்ணுக்கு முன்னால் இருக்கும் ஒற்றைக் காரணத்தை விட்டிவிட்டு இல்லாத காரணம் ஒன்றை ஏன் இவர் தேடுகிறார்? அரகலய சிங்களவர்களால் தமது பொருளாதார பிரச்சினைகளுக்காக நடத்தப்பட்ட ஒரு எதிர்ப்பு. தமிழர்கள் சிங்கள அரசிற்கெதிரான போராட்டம் ஒன்றைச் செய்வதைக் கனவிலும் நினைக்க முடியுமா? காணாமலாக்கப்பட்டவர்கள், காணி விடுவிப்பு என்று சில நடத்தும் போராட்டங்களே நசுக்கப்படும் நிலையில், அரகலய போன்றதொரு போராட்டத்தைத் தமிழர்கள் நடத்தினால் அரசு என்ன செய்யும் என்கிற விவஸ்த்தை வேண்டாமா? அதுசரி, அந்த அரகலயவைக் கூட அரசு எப்படி அடித்து துரத்தியது என்பதாவது இந்த பத்தி எழுத்தாளருக்குத் தெரியுமா? ஆக, பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பே நல்லிணக்கத்தையும் ஆரம்பிக்க வேண்டும். சரி, என்ன செய்யலாம் என்பதையாவது இவர் கூறுவாரா? அரசுடன் நல்லிணக்கமாகப் போய்க்கொண்டே அதன் ஆக்கிரமிப்பை எப்படித் தடுப்பது என்பதையாவது இவர் கூறுவாரா? அரசு செய்யும் என்று தமிழர்கள் ஒருபோதுமே நம்பியிருக்கவில்லை. தம்மைத்தாமேதான் பார்த்துக்கொள்கிறார்கள்.
  11. யாழ்ப்பாண நகரில் இயங்கும் பிரபல பாடசாலைகளுக்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து பெருமளவு பணம் வந்து சேர்கிறது. அரசாங்கப் பாடசாலைகளானாலும்கூட, இவை தமக்கான தேவைகளை புலம்பெயர் தமிழர்கள் (முன்னாள் மாணவ மாணவிகள்) ஊடாகவே பெற்றுவருகிறார்கள். சில பாடசாலைகளில் தேவைக்கு அதிகமான வசதிகள் செய்யப்பட்டும் வருகின்றன. ஆனால், யாழ்ப்பாணக் குடாநாட்டில் பிந்தங்கிய நிலையில் இன்னும் பல பாடசாலைகள் இருக்கின்றன. அண்மையில்க் கூட வடமாராட்சி கிழக்கு, தென்மாராட்சியின் ஒரு சில பகுதிகளில் ஒரு சில பாடசாலைகள் சரியான உதவியின்றி பூட்டப்படும் நிலையில், மாணவர்கள் இருந்து படிப்பதற்கு வசதிகளற்ற நிலையில் இருப்பதைக் காண முடிந்தது. இவ்வாறே, வன்னி, மட்டக்களப்பு என்று கவனிப்பாரின்றிக் கிடக்கும் பல பாடசாலைகள் இருக்கின்றன. செல்வச் செழிப்புடன் நகர்களில் இயங்கும் பாடசாலைகள் இவ்வாறு வசதிகளற்றுக் கிடக்கும் உள்ளூர்ப் பாடசாலைகள் ஒவ்வொன்றினைத் தத்தெடுத்தால் என்ன? அவர்களும் எமது பிள்ளைகளே.
  12. இவர் மட்டும் புதிதாக என்ன சொல்லிவிடப்போகிறார்? புலிகளைக் கொன்றோம், வென்றோம், ஒரு கையில் ஐ நா மனிதவுரிமை சாசனத்தையும், மறு கையில் துப்பாக்கியையும் ஏந்திப் போரிட்டோம், ஒரு பொதுமகனும் சாகவில்லை, மனிதாபிமானப் போர் நடத்தினோம், போர்க்குற்றங்கள் என்கிற பேச்சிற்கே இடமில்லை...... இன்னொரு போர்க்குற்றவாளி எழுதும் தனது புழுகல் உரை!
  13. யாழ்ப்பாணத்தில் வெசாக் கூடுகளைப் பார்க்கப்போன தமிழர்களை முள்ளிவாய்க்காலில் அழுத தமிழர்களுடன் ஒப்பிட்டு விமர்சித்தேன். அப்படி விமர்சிப்பதால் நான் அவர்களைத் துரோகிகள் பட்டியலில் சேர்த்துவிட்டதாக நிழலி நினைக்கிறார். அவ்வளவுதான்.
  14. யாழ்ப்பாணத் தமிழர்களை அரசியலில் இருந்து ஒதுங்கவைத்திருப்பது இன்றைய அரசியல்வாதிகளின் செயற்பாடுகள்தான் என்று நான் எழுதும்போது, நான் அவர்களைத் துரோகிகள் என்று கூறுகிறேன் என்று நீங்கள் கருதினால் நான் என்ன செய்வது? முள்ளிவாய்க்காலில் இனவழிப்பிற்கு நீதிகேட்டு அழும் தமிழர்களையும், நாகவிகாரையில் வேடிக்கை பார்க்கும் தமிழர்களையும் நான் ஒப்பிட்டால், நான் அவர்களைத் துரோகிகளாகப் பார்க்கிறேன் என்று நீங்கள் நினைப்பது உங்களின் விருப்பம், அதிலும் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. தமிழர்களாக ஒன்றிணையுங்கள், சேர்ந்தே போராடலாம் என்று நானழைப்பது உங்களைப்பொறுத்தவரையில் அவர்களை நான் துரோகிகளாக பார்க்கிறேன் என்று பட்டால், மன்னித்துக்கொள்ளுங்கள், அது எனது நோக்கமில்லை. மேய்ப்பாரின்றி அநாதைகளாக நிற்கிறோம். இதுதான் எனது ஆதங்கம். முடிந்தால் புரிந்துகொள்ளுங்கள். எனக்கு நேராகவே எழுதலாம், மூன்றாம் மனிதர் போன்று ஏன் பொதுவாக எழுதுகிறீர்கள்?
  15. தமிழர்கள் முன்வைத்த நான்கம்சக் கோரிக்கையினை முற்றாக நிராகரித்த அரசாங்கமும், பேச்சுவார்த்தைகளிலிருந்து விலக முடிவெடுத்த தமிழர்களும் இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் தான் முதலாவது கட்டப் பேச்சுக்களுக்கு அனுப்பிய குழுவையே ஹெக்டர் ஜயவர்த்தனவின் தலைமையில் ஜெயார் அனுப்பிவைத்தார். தமிழர் தரப்பில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. டெலோ அமைப்பின் மோகனுக்குப் பதிலாக கொழும்பு நீதிமன்றத்தில் தங்கத்துரையின் விடுதலைக்காக போராடிய சட்டத்தரணி நடேசன் சத்தியேந்திரா கலந்துகொண்டார். சட்டத்தரணி நடேசன் சத்தியேந்திரா ஆவணி 12 ஆம் திகதி இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் ஆரம்பமாகின. தாம் தயாரித்துக் கொண்டுவந்த அறிக்கையினை ஹெக்டர் படித்தார். " அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான எமது புதிய ஆலோசனைகளை உங்களுக்கு முன்வைக்குமுன், இலங்கையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தமிழ் மக்கள் குழுவை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு அமைப்புக்கள் முன்வைத்த நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கைகள் குறித்த இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவது எனது கடமை" என்று அவர் ஆரம்பித்தார். இலங்கையரசின் இந்த ஆரம்ப அறிக்கையே தமிழர் தரப்பினை சினங்கொள்ள வைத்தது. பேச்சுக்களில் கலந்துகொள்ளும் தமிழ்ப் பிரதிநிதிகள் இலங்கையின் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று முதலாம் கட்டப் பேச்சுக்களில் தான் முன்வைத்த வாதத்தினை ஹெக்டர் மீளவும் எழுப்பினார். முதலாம் கட்டப் பேச்சுக்களின்போது , தனது தரப்பே இலங்கையிலிருக்கும், தமிழர்கள் உட்பட அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அவர் வாதிட்டிருந்தார். ஹெக்டரின் இந்த கூற்றிற்கு ஆட்சேபணை தெரிவித்து தமிழர் தரப்பு வெளிநடப்புச் செய்ய எத்தனித்தவேளை, "இங்கு வந்திருக்கும் தமிழர் தரப்பை அரசியல் தீர்விற்காக பேச்சுக்களில் ஈடுபடக்கூடிய தரப்பாக தன்னால் ஏற்றுக்கொள்ளவியலும்" என்று சமாளித்திருந்தார். ஹெக்டரின் இந்த சமாளிப்பு அதிதீவிர சிங்கள மக்களிடையே கடுமையான எதிர்ப்பினைச் சம்பாதித்திருந்தது. தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல்த் தீர்வில் அவர்களால் முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கைகளும் இடம்பெறவேண்டும் என்கிற கோரிக்கையினை ஹெக்டர் தனது நீண்ட ஆரம்ப உரையினூடாக முற்றாக நிராகரித்தார். முதலாவதாக, இலங்கைத் தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் கூறினார். தமிழர்களைத் தனித்துவமான தேசிய இனம் என்று அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் தனிநாடொன்றிற்கு உரியவர்கள் என்பதனையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிவிடும் என்று அவர் கூறினார். அரசால் அதிகபட்சமாக செய்யக்கூடியது, இலங்கையில் வாழும் பல்வேறு மக்கள் கூட்டங்களில் தமிழர்கள் தனித்துவமான ஒரு மக்கள் கூட்டம் என்று ஏற்றுக்கொள்வது மட்டும் தான் என்று கூறினார். மேலும், இலங்கையில் வாழும் இனக்குழுமங்களில் ஒன்றான தமிழர்கள் எதிர்நோக்கும் உரிமைப் பிரச்சினைகள் குறித்து தனது குழு பேசுவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், "அரசியற்சட்டத்திற்கு உட்பட்ட வகையில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான ஆணைக்குழுவொன்றினை எம்மால் உருவாக்க இயலும். தேவையென்றால், சிறுபான்மையினருக்குத் தேவையானளவு பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான சபை ஒன்றையும் எம்மால் ஏற்படுத்தித் தர முடியும்" என்றும் கூறினார். இரண்டாவதாக, தமிழரின் தாயகம் என்று ஒரு பிரதேசம் அடையாளப்படுத்தப்படவேண்டும் என்கிற கோரிக்கையினையும் தாம் முற்றாக நிராகரிப்பதாக அவர் கூறினார். தமிழர்களின் தாயகம் என்று ஒரு பகுதி அடையாளப்படுத்தப்பட்டால், இலங்கையில் தமிழர்களுக்கென்று தனியான பிரதேசமொன்றினை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் அரசிற்கு வந்துவிடும் என்றும், இதனை ஒருபோதும் அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறினார். தமிழர்களின் இந்தக் கோரிக்கை நாட்டின் எல்லாவிடங்களும், எல்லாப்பகுதிகளும் நாட்டில் வாழும் அனைத்து இனமக்களுக்கும் பொதுவானவை எனும் கோட்பாட்டிற்கு முற்றிலும் முரணானது என்றும், தாம் விரும்பிய நாட்டின் எப்பகுதியிலும் குடியேற முடியும் என்கிற தனிமனித உரிமைக்கு அது முரணானது என்றும் அவர் வாதிட்டார். மேலும், தமிழர்களுக்கான தாயகம் என்று ஒரு பகுதி அடையாளப்படுத்தப்பட்டு விட்டால், நாட்டில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் குடியேற்றத்திட்டங்கள் இதனால் பாதிப்படைந்துவிடும், நிறுத்தப்பட்டு விடும் என்றும் அவர் கூறினார். வேண்டுமானால், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இனிவரும் காலங்களில் நடக்கப்போகும் குடியேற்றங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை தரமுடியும், ஆனால் ஏனைய இனங்களும் இப்பகுதிகளில் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். மூன்றாவது கோரிக்கையான தமிழர்களின் சுய நிர்ணய உரிமையினை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையினை அவர் அடியோடு நிராகரித்தார். காலணித்துவ ஆட்சியின் கீழ் வாழும் மக்கள் கூட்டத்திற்கு மட்டுமே இந்த சுய நிர்ணய உரிமை எனும் கோட்பாடு பாவிக்கப்படும் என்று அவர் வாதிட்டார். சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடுகளில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு சுய நிர்ணய உரிமையினை அனுபவிக்கும் வாய்ப்புக்கள் கிடையாது என்று அவர் கூறினார். இறுதியாக, தமிழ் மக்களின் பிரஜாவுரிமை குறித்து கோரிக்கை முன்வைக்க தமிழர் தரப்பினருக்கு இருக்கும் சட்டபூர்வத் தன்மை குறித்து அவர் கேள்வியெழுப்பினார். சர்வகட்சி மாநாட்டில் அரசாங்கம் நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமையினைக் கொடுக்க ஆவன செய்யும் என்று கூறியிருக்கிறதே? இந்திய வம்சாவளி மக்களின் உண்மையான பிரதிநிதிகளுடன் இதுகுறித்து அரசு பேசிக்கொள்ளும், நீங்கள் அதுகுறித்துக் கேள்விகேட்கமுடியாது என்று அவர் கூறினார். தனது ஆரம்பப் பேச்சினை பின்வரும் அதிரடி அறிவிப்புடன் ஹெக்டர் ஜெயவர்த்தன நிறைவுச் செய்தார். "திம்புப் பேச்சுக்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒப்பந்தம் பின்வரும் நிலைமை ஏற்பட்டால் மட்டுமே நிறைவேற்றப்படும், 1. எல்லா ஆயுத அமைப்புக்களும் தமது அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் கைவிடவேண்டும் 2. இலங்கையில் இயங்கும் அனைத்து ஆயுத அமைப்புக்களும் தமது ஆயுதங்களையும், தளபாடங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். 3. இலங்கையிலும், அதற்கு வெளியிலும் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து பயிற்சி முகாம்களையும் உடனடியாக மூடிவிட வேண்டும். 4. சாதகமான சூழ்நிலை இருந்த காலத்தில் இன்று அகதிகளாக்கப்பட்டிருப்போர் எந்தெந்த இடங்களில் வாழ்ந்தார்களோ, அந்த இடங்களுக்கு அவர்கள் இடைஞ்சலின்றி திரும்ப ஆவன செய்யப்பட வேண்டும். 5. அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளவாறு, ஒவ்வொரு இன மக்களும் தமது மதத்தைச் சுதந்திரமாக வழிபட அனுமதியளிக்கப்படவேண்டும் என்பதுடன், வன்முறையில் பாதிக்கப்பட்ட மத வணக்கத் தலங்கள் திருத்தியமைக்கப்படும். 6. அரசாங்கம் முன்வைக்கும் முன்நிபந்தனைகளை ஆயுத அமைப்புக்கள் ஏற்றுகொண்டாலன்றி அவர்களின் குற்றச்செயல்களுக்கான பொதுமன்னிப்பு என்பது தரப்பட மாட்டாது. இவற்றின் அடிப்படையில் மட்டுமே எந்த இணக்கப்பாடும் அமையவேண்டும் என்பதுடன், நாட்டில் அமைதியும் ஏற்படுத்தப்பட முடியும்" என்று பேசி முடித்தார். லோரன்ஸ் திலகர் ஹெக்டர் ஜெயவர்த்தன முன்வைத்த நிபந்தனைகளை நேரடித் தொலைபேசியூடாக கோடாம்பக்கத்தில் இரகசிய இடமொன்றில் தங்கியிருந்த பாலசிங்கத்திடம் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினர் லோரன்ஸ் திலகர் அறியத் தந்தார். இதனை சேலம் பயிற்சி முகாமில் இருந்த பிரபாகரனிடமும், ஏனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடமும் பாலசிங்கம் தெரியப்படுத்தினார். இதனையடுத்து பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகுவது என்று போராளிகளின் தலைவர்களால் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இதனைச் செய்வதற்கு சரியான தருணத்தை அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.
  16. இது நேற்று தையிட்டியில் தமிழர்களின் காணியில் சட்டவிரோதமான முறையில் இராணுவமும், பிக்கு ஒருவனும் அமைத்துவரும் விகாரையினை எதிர்த்துப் போராடும் ஒரு சில தமிழ் மக்கள். ஒரு அரசியற் கட்சியையும், சில பத்து மக்களையும் தவிர இது ஒரு பிரச்சினையாக யாழ்ப்பாணத் தமிழர்களுக்குத் தெரியவில்லை. இதுகுறித்துக் கேட்டால், "தீவிர கண்ணாடி போட்டுப் பார்த்தால், இப்போராட்டங்களுக்கு ஆள்த்திரட்டவும் சிரமப்பட வேண்டி வரும்" என்று எச்சரிக்கைகள். இந்த மக்களை நீங்கள் திரட்டத் தேவையில்லை. தாமாக தமது உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் இன்னமும் எம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்களுக்கு இது ஆச்சரியமாகத் தெரியலாம், ஆனால் அதுதான் உண்மை. நாக விகாரையில் வேடிக்கை பார்க்கக் கூடிய கூட்டமெங்கே, இந்த மக்கள் எங்கே?
  17. நாவற்குழியில், திருகோணமலையில், தையிட்டியில் இதே இராணுவம் தான் விகாரையினைக் கட்டியது. நாவற்குழி விகாரைக்கு முதன்முதலான சமய அனுட்டானங்களை ஆரம்பித்து வைத்தவனே சவேந்திர சில்வாதான். இன்று, வடக்குக் கிழக்கில் ஆக்கிரமித்து நிற்கும் எல்லா இராணுவ, கடற்படை, விமானப்படை, பொலீஸ் முகாம்களுக்குள்ளும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அடாத்தாக விகாரைகளைக் கட்டிவருவதும் அதே இராணுவம்தான். மாங்குளத்தில் கட்டப்பட்ட விகாரையினைச் சுற்றிச் சிங்களக் கிராமமும், நாவற்குழியில் சிங்களக் கிராமமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. சாதாரண சிங்கள வியாபாரிகளும், மக்களும் இல்லாததால்த்தான் இராணுவம் பண்டிகை நடத்தியது, மென்பானம் கொடுத்தது என்று எழுதுகிறீர்களே? ஆக்கிரமிப்பை நடத்துவது இராணுவம். அதன்பின்னரே சாதாரண மக்களும், வியாபாரிகளும் கொண்டுவந்து இறக்கப்படுவார்கள். வடக்குக் கிழக்கு பூகோள இணைப்பை உடைத்தெறிய‌ மணலாற்றில் 80 களில் உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களுக்குப் பாதுகாப்பாக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. பின்னர், அந்த இராணுவ முகாம்களைச் சுற்றி மென்மேலும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். முகாம்களுக்கு சிங்கள மக்கள் பாதுகாப்பு, சிங்கள மக்களுக்கு முகாம்கள் பாதுகாப்பு என்று அன்று அரசு திட்டமிட்டுக் குடியேற்றம் செய்தது, இன்றும் அப்படித்தான். உங்களுக்குப் புரியாது. எழுதினால், என்னை மனநலம் குறைவானவன் என்று எழுதுகிறீர்கள். ஏதோ செய்துவிட்டுப் போங்கள்.
  18. இதுதான் அடிப்படை. இது பலருக்குப் புரிவதில்லை. அறைக்குள் இருக்கும் யானையினைப் பார்க்க பலருக்கு முடிவதில்லை. கேட்டால் தீவிரக் கண்ணாடி போட்டுப் பார்க்கிறோம் என்று எங்களைக் கூறுகிறார்கள். சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுப்பெற்று, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிகிடைத்து, தமிழர்கள் கெளரவமாகவும், சுயமரியாதையாகவும், சுதந்திரமாகவும் வாழும் நிலை வரட்டும். பின்னர் இரு சகோதர இனங்களாக, இரு சமத்துவ இனங்களாக அவன் வெசாக்கை எமது தாயகத்திலும், நாம் எமது பொங்கலை அவனது தாயகத்திலும் கொண்டாடலாம்.
  19. கொழும்பில் வேடிக்கையாக வெசாக் பார்க்கப்போவதற்கும், யாழ்ப்பாணத்தில் வெசாக் பார்க்கப்போவதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. வடக்குக் கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் விகாரைகள் என்னைப்பொறுத்தவரை ஆக்கிரமிப்பின் அடையாளங்கள் தான். உடனே இணக்க அரசியல் எழுதுவோர் ஓடிவாருங்கள், "அதெப்படிச் சொல்வீர்கள், கொழும்பில் கோயில் இல்லையா? ஆடித்தேர் இழுக்கவில்லையா?" என்று கேட்டுக்கொண்டே. எல்லாம் இருக்கிறது, ஆனால், தமிழினம் சிங்கள இனத்தை ஆக்கிரமித்து கொழும்பில் நிற்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்திலோ, வடக்குக் கிழக்கில் எந்தவிடத்திலுமோ நடப்பது சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புத்தான். இந்த ஆக்கிரமிப்பினை எம்மால் வேடிக்கை வினோதமாகத்தான் பார்க்க முடிகின்றதென்றால் பிழை ஆக்கிரமிப்பாளனில் இல்லை. சுமந்திரனுக்கோ அங்கஜனுக்கோ யாழ்ப்பாணத்தில் விழுந்த வாக்குகளுக்கும், 2010 இல் சரத் பொன்சேகாவிற்கு விழுந்த வாக்குகளுக்கும் இடையே எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. இவர்களுக்கு ஏன் தாம் வாக்களிக்கவேண்டும் என்கிற கேள்வியோ, வாக்களிப்பதால் உருவாகப்போகும் விளைவுகள் குறித்தோ யாழ்ப்பாணச் சமூகம் அக்கறைப்படுவதாகவும் நான் நினைக்கவில்லை. தம்மை இன்றைவரை ஆக்கிரமித்து நிற்கும் ஒரு சமூகத்தின் எந்த வாக்காள‌ருக்கு நாம் வாக்களிக்கலாம், எவருக்கு வாக்களிக்காது விட்டால் நாம் விரும்பும் ஒரு சிங்கள வேட்பாளருக்கான ஆதரவு குறைந்துவிடும் என்று கவலைப்படும் நிலைக்குத் தமிழ்ச் சமூகம் வந்துவிட்டிருப்பதும் சிங்களவர்களின் பிழையில்லை. தையிட்டியில் (இன்றும் நடக்கிறது) அடாத்தாக தமிழர் நிலங்களில் விகாரை கட்டும்போதும், குருந்தூர் மலையில் சிவலிங்கத்தை உடைத்தெறிந்து அப்பகுதியை பெளத்த பூமியென்று நிறுவும்போதும், நாவற்குழியில் இனக்கொலையாளியொருவனால் விகாரை திறந்துவைக்கப்பட்டபோதும், திருகோணமலையில் தமிழர் தாயகப்பகுதியில் புதிதாக விகாரை கட்டி எழுப்பும்போதும் வெறுமனே ஓரிரு மக்களும், செயற்பாட்டாளர்களும் மட்டுமே அங்கு நின்று ஆர்ப்பரிப்பதும் யாருடைய பிழை? ஏன், அந்தப் பகுதிகளில் வாழும் மக்களில் ஓரிருவரைத் தவிர, மொத்தத் தமிழர்களுக்கும் இது பிரச்சினையாகத் தெரியாது போனதெப்படி? இதை எழுதவேண்டியிருப்பதே யாழ்ப்பாணத்து தமிழர்களின் இன்றைய அரசியல்க் கையறு நிலையினைச் சுட்டிக்காட்டத்தான். தமிழர்களின் இருப்பைத் தக்கவைப்பத‌ற்கான தேவை யாழ்த்தமிழர்களுக்கு இல்லாமற்போனதெப்படி? காணி விடுவிப்புப் போராட்டம், அரசியற்கைதிகளின் விடுதலைப் போராட்டம் என்பவற்றிற்கு வந்து "குவியும்" ஆயிரமாயிரம் தமிழர்கள் இனிமேல் வராது போய்விடுவார்கள் என்கிற நியாயமான கவலை சிலருக்கு !!! நான்கைந்து பாதிக்கப்பட்ட மக்களும், இன்றுவரை தமது காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெற்றோரையும் தவிர எத்தனை "ஆயிரம்" தமிழ் மக்கள் இப்போராட்டங்களில் வந்து குவிகிறார்கள்? இந்தத் தேவையற்ற எச்சரிக்கை ஏன்? நீங்கள் போராடுவதற்கும் எமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அம்மக்களை நிர்க்கதியாக விட்டு விட்டு சமூகத்தின் பெரும்பான்மையான மீதிப்பேர் வேடிக்கை நிகழ்வுகள் உட்பட தமது நாளாந்த வாழ்க்கையினைப் பார்க்கச் செல்லவில்லையா? இல்லாத‌ ஒன்றை இருப்பதாகக் காட்டி எச்சரிக்கை வேறு விடுக்கிறீர்கள்? அரசியல்மயப்படுத்தப்படாத, அல்லது அரசியலில் தேசிய நீக்கம் செய்யப்பட்டுவரும் யாழ்ப்பாணச் சமூகத்திடமிருந்து இதனைத்தவிர வேறு எதனையும் எதிர்பார்க்கமுடியாது. சில தினங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் வந்து இணைந்துகொண்ட தமிழ் மக்களுக்கும் நேற்று நாகவிகாரையைச் சுற்றி ஓடியோடி "வேடிக்கை" பார்த்த தமிழர்களுக்கும் இடையே வித்தியாசம் நிச்சயம் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். "தமிழ்த்தேசியம் என்று ஊரில் வாய்திறந்தால் அடிதான் விழும்" ‍ இந்த நிலை வரக் காரணம் என்ன? ஐம்பதினாயிரம் போராளிகளும், ஒன்றரை இலட்சம் மக்களும் ஏன் மடிந்தார்கள்? இன்று யாழ்ப்பாணத்தான் கூறுவது போல எமக்கேன் தேவையற்ற பிரச்சினை, அது பிரச்சினை உடையவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று அவர்கள் அனைவரும் இருந்திருக்கலாமே? அவர்கள் தம்மை தேசியத்திற்குள் ஈடுபடுத்திக்கொள்வதற்கான தேவை ஒன்று இருந்ததுதானே? அது இன்றும் இருக்கிறதுதானே? பிறகேன் தேசியம் கதைத்தால் அடிவிழும் என்கிற பயம்? அப்படி நிலை ஏற்பட யார் காரணம்? புலிநீக்கம் செய்கிறோம், தேசிய நீக்கம் செய்கிறோம், இணக்க அரசியல் செய்கிறோம், அடையாளம் துறக்கிறோம், சுயவிமர்சனம் செய்கிறோம், தேசிய நீரோட்டத்தில் இணைகிறோம் என்று பேசிப்பேசியே ஒரு சமூகத்தை அரசியல் கோமா நிலைக்குக் கூட்டிச் சென்றது யார்? இதைக்கேட்டால் "தீவிர கண்ணாடி போட்டுப் பார்த்தால் அடிதான் விழும் " என்கிறீர்கள். முதலில், யாழ்ச் சமூகம் உட்பட, மொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் அரசியல் மயப்படுத்தி, ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளை முன்னெடுங்கள். உங்களின் நடுநிலை, இணக்க, தேசிய நீக்க அரசியலால் பிரிந்துபோய், நமக்கேன் தேவையில்லாத வேலை என்று இருக்கும் சமூகத்தை தூக்கியெழுப்புங்கள். ஏனென்றால், சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்மக்கள் எதிர்கொண்ட‌ பிரச்சினைகளைக் காட்டிலும் பலமடங்கு பிரச்சினைகள் அவர்களின் முன்னால் இன்றைக்கு இருக்கின்றன. தனது ஆக்கிரமிப்பினை சிங்களம் கட்டுப்பாடின்றி, தட்டிக் கேட்போர் இன்றி மிகச் சுதந்திரமாக முன்னெடுத்து வருகிறது. கண்ணாடி ஏதுமின்றி குருடர்களாக, அரசியலில் அநாதைகளாக, திக்கற்றவர்களாக, செல்லும் வழிதெரியாது நடுவீதியில் நிற்பவர்களாக தமிழர்களை வெகுவிரைவில் நீங்கள் கொண்டுவந்து விட்டுவிடுவீர்கள். இப்படிப் போனதன் விளைவே முள்ளிவாய்க்காலுக்கும், கார்த்திகை 27 இற்கும் செல்லும் மக்களுக்கும், நாகவிகாரையில் வெசாக் பார்த்து இன்புற்று, தம்மைக் கொன்றொழித்த மிருகங்களுடன் "சகஜமாகக் கூடிக் குலவும்" இன்னொரு மக்கள் கூட்டத்திற்கும் இடையே நிரந்தரமான இடைவெளி ஒன்று உருவாவதற்குக் காரணம் .
  20. யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகை ‍ குவிந்த தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்தில், நக விகாரையைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் இராணுவம் வெசாக் பண்டிகையினை வெகு கோலகலமாகக் கொண்டாடி வருகிறது. முழுக்க முழுக்க சிங்களத்தில் பதாதைகள், சிங்கள பெளத்த பாடல்கள், வீதி ஒழுங்குகளில் இராணுவம், வீதியோரக் கடைகளில் சிங்களவர்கள் என்று முற்றாக சிங்கள பூமியாக மாறியிருந்த தமிழர்களின் கலாசாரத் தலைநகரை முண்டியடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தது தமிழினம். ஐந்து நாட்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் பலியிடப்பட்ட ஒன்றரை இலட்சம் மக்களின் நினைவினை கண்ணீர் மல்க அனுசரித்த தமிழினத்தின் இன்னொரு பகுதி, அவ்வாறு அழித்தவன் நடத்தும், அவனது சொந்த இன, மத நிகழ்வை கண்டுகளிக்க அவதிப்பட்டு ஓடுகிறது. இலங்கையர்களாக இணைவோம், அடையாளம் துறப்போம், தேசியம் பேசோம் என்று கூவுபவர்கள் வரிசையில் வாருங்கள், வந்து வையுங்கள்.
  21. இது நோர்வே அரச பிரமுகர் ஒருவரின் வெளிப்படையான கருத்து. பலஸ்த்தீன, இஸ்ரேல் பிணக்கிற்கு இரு நாடுகள் என்கிற வழியில், பரஸ்பரம் ஒற்றுமையாக வாழ்கின்ற இரு சுதந்திர நாடுகள் எனும் தீர்வை முன்வைப்பதாகவும், சுதந்திரப் பலஸ்த்தீனத்தை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் கூறுகிறார். எமக்கான நீதியினை, ஒரு காலத்தில் எமது பிரச்சினையில் சமாதானத் தரகர்களாக செயற்பட்டவர்கள் என்கிற அடிப்படையில் நாம் கேள்வி கேட்கலாம். பதில் வரப்போவதில்லை, ஆனால் படிப்பவர்களுக்கு இதுகுறித்த தெளிவாவது கிடைக்கும்.
  22. நவீன பெளத்த சிங்கள இனவாதியாக தன்னை உருமாற்றிக்கொண்ட லலித்தும், இலங்கை முன்வைக்கும் தீர்வினை ஏற்றுக்கொள்ளும்படி தமிழ்த் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுத்த இந்தியாவும் ஜயவர்த்தன அரசியல் சூட்சுமம் மிக்க தந்திரசாலி . தமிழர்கள் தனது செயற்பாடுகளில் நம்பிக்கைகொள்ளும் வகையில் அவர்களுக்கு ஒரு முகத்தையும், தெற்கில் இனவாதமேற்றப்பட்ட சிங்களவர்களைத் திருப்திப்படுத்த தனது இன்னொரு முகத்தையும் காட்டி வருபவர். இந்தியாவையும், சர்வதேசத்தையும், உதவி வழங்கும் நாடுகளையும் மகிழ்விக்க தமிழர்களுடன் பேசுவதாகக் காட்டிக்கொள்ளும் அதேவேளை, தனது அமைச்சரவையிலேயே சில அதிதீவிர சிங்கள இன‌வாதிகளைத் தூண்டி, சிங்கள தீவிரவாதக் கருத்துக்களை உமிழப்பண்ணுவதன் மூலம் சிங்களத் தீவிரவாதிகளின் ஆதரவினையும் தன்பக்கம் வைத்துக்கொண்டிருப்பவர். இவை எல்லாவற்றையும் சூட்சுமமாகச் செய்துவிட்டு, தன்னை ஒரு நேர்மையான, நீதியான அரசியல்த் தலைவராகக் காட்டிக்கொள்வதும், தனது அமைச்சரவையிலிருக்கும் சில இனவாதக் கழுகுகளின் கட்டுப்பாட்டில் தான் சூழ்நிலைக் கைதியாக சிறைவைக்கப்பட்டிருப்பதாகக் காட்டுவதும் அவருக்குக் கைவந்த கலை. இதனை மிக இலகுவாக, ஜெயாருடனான தனது முதலாவது சந்திப்பிலேயே இந்தியப் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் அடையாளம் கண்டுகொண்டார். 1984 ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சந்திப்பில், தனது அமைச்சரவையில் இருக்கும் சில இனவாதக் கழுகுகளின் அழுத்தம் இல்லாதுபோகுமிடத்து தமிழர்களின் பிரச்சினையினை தன்னால் இலகுவாகத் தீர்த்துவைக்கமுடியும் என்று ஜெயார் கூறியிருந்தார். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் கல்கி இதழில் இச்சந்திப்புக் குறித்து எழுதும்போது ஜெயாரை சிறந்த நடிகர் என்று அனித்தா குறிப்பிட்டிருந்தார். நான் முன்னர் குறிப்பிட்டதுபோல, பிரபாகரனும் ஜெயார் குறித்து மிகவும் தெளிவான பார்வையினைக் கொண்டிருந்தார். இலங்கை அரசாங்கத்தின் மிகவும் பலம்வாய்ந்த ஒரே நபர் ஜெயார் என்றும், இனவாதக் கழுகுகள் என்று ஜெயார் குறிப்பிடும் தீவிரவாத அமைச்சர்களை ஜெயாரே உருவாக்கினார் என்பதையும் பிரபாகரன் அறிந்தே வைத்திருந்தார். என்னைப்பொறுத்தவரை பிரபாகரனினது ஜெயார் குறித்த அனுமானம் சரியானதுதான். ஜெயவர்த்தன, அரசியல் சதுரங்கத்தில் பல சாதுரியமான திருப்பங்களை எடுத்திருந்தாலும்கூட இறுதியில் அவர் தோற்கவேண்டியதாயிற்று. தான் அரசாண்ட இறையாண்மையுள்ள நாட்டிற்குள் பிரபாகரன் தனக்கான நிழல் அரசொன்றினை ஆள்வதை தான் இறக்குமுன்னரே ஜெயாரால் தரிசிக்க வேண்டியதாயிற்று. 1977 ஆம் ஆண்டில் சிறில் மத்தியூவை சிங்கள இனவாதிகளின் வீரனாக ஜெயார் முன்னிறுத்தினார். தமிழ் மக்களுக்கெதிரான, குறிப்பாக அமிர்தலிங்கத்திற்கும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் எதிரான கடும்போக்கு நிலைப்பாட்டினை எடுக்கும் சிங்கள இனவாதியொருவர் ஜெயாருக்குத் தேவைப்பட்டார். தமிழர்கள் மீதும், அமிர்தலிங்கம் மீது பாராளுமன்றத்தின் சிறில் மத்தியூ முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு அமிர் பதிலளித்தவேளை, சிறில் மத்தியூ நடந்துகொண்டவிதம் குறித்து முன்னைய அத்தியாயங்களில் நான் விளக்கியிருந்தேன். அமிர் ஒருமுறை என்னுடன் பேசும்போது, சிறில் மத்தியூவை தான் அமைச்சரவையில் வைத்திருப்பதன் ஒற்றை நோக்கம் சிங்கள‌ இனவாதிகளைத் தன்பக்கம் வைத்திருப்பதுதான் என்று ஜெயார் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்திருந்தார். ஜெயாருடன் பேசும்போது, "எம்மைத் தொடர்ச்சியாக உங்களின் அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் தாக்கிப் பேசும்போது உங்களின் அரசிற்கு நாம் எப்படி ஆதரவு தருவது?" என்று அமிர் வினவியபோது, "நீங்கள் அவரைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. எனது அரசாங்கம் உங்களுடன் சேர்ந்து செயற்பட்டு வருவதால் சிங்கள தீவிரவாத மக்களிடையே எனது அரசிற்கெதிரான உணர்வு உருவாகிவருகிறது. அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே சிறில் மத்தியூவை அப்படிப் பேசச்சொல்லியிருக்கிறேன்" என்று ஜெயார் பதிலளித்திருக்கிறார். சிறில் மத்தியூவின் சமூக அந்தஸ்த்தும், அவரது குலமும் தனக்கு எப்போதும் ஒரு சவாலாக வரப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்துகொண்டபின்னரே அவரை சிங்கள இனவாதிகளின் வீரனாக உருவகப்படுத்தினார் ஜெயார். மத்தியூவை ஒரு கருவியாக மட்டுமே பாவித்துவந்த ஜெயார், இனிமேல் அவரால் அரசியலில் தனக்கு இலாபம் ஏதும் வரப்போவதில்லை என்கிற நிலை உருவாகியபோது மிக இலகுவாக அவரைத் தூக்கியெறிந்தார். 1985 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் சிறில் மத்தியூ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டபோது எவருமே ஜெயாரைக் கேள்விகேட்கவில்லை. இது, ஜெயாரினால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி எவ்வளவு தூரத்திற்கு அவரில் தங்கியிருந்தது என்பதனையும், தனக்கென்று தனியான அரசியல்ப் பின்புலம் அதற்குக் கிடையாதென்பதையும் தெளிவாகச் சுட்டிக் காட்டிற்று. மத்தியூவின் வெளியேற்றத்திற்குப் பின்னர், அவரது தொழிலைச் செய்ய ஜெயாருக்கு இன்னொருவர் தேவைப்பட்டது. அதற்குப் பொறுத்தமானவராக லலித்தை அவர் தேர்ந்தெடுத்தார். லலித்துடனான எனது அனுபவங்களின்பொழுது, அவர் எவ்வளவு தூரத்திற்கு ஜெயவர்த்தனவில் தங்கியிருந்தார் என்பதையும், ஜெயாரின் ஊதுகுழலாகவே அவர் செயற்பட்டு வந்தார் என்பதையும் மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டேன். இதனை உறுதிப்படுத்த என்னால் பல சந்தர்ப்பங்களை உதாரணமாகக் காட்டவியலும். 1984 ஆம் ஆண்டில் நடைபெற்று வந்த சர்வகட்சி மாநாட்டின் ஒருநாள் தனது உரையினை முடித்துக்கொண்டு என்னுடன் பேசிய லலித், மாநாட்டு உறுப்பினர்கள் ஜெயாரினால் முன்வைக்கப்பட்ட "ஆங்கிலத்தையும் உத்தியோகபூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளுதல்" எனும் ஆலோசனையினை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறினார். ஆகவே, டெயிலி நியூஸிற்காக நான் வழங்கும் செய்தியறிக்கையில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அவர் என்னைப் பணித்தார். ஆனால், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி ஆங்கில மொழி இணைப்பு மொழியாக மட்டுமே பாவிக்கப்பட முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய மாநாட்டு நிகழ்வுகள் முடிவடைந்து நான் பத்திரிகைக் காரியாலயத்தை வந்தடைந்தபோது, எனது ஆசிரியர் மணிக் டி சில்வா, லலித் என்னிடம் மிகவும் முக்கியமான செய்தியொன்றினை வழங்கியிருப்பதாகத் தொலைபேசியில் கூறினார் என்று தெரிவித்தார். நான் மணிக்கிடம் லலித் கூறிய விடயம் பற்றித் தெரிவித்ததோடு, பத்திரிகைக்கும் அதனைச் செய்தியாகத் தயாரித்தேன். மறுநாள் அதுவே நான் எழுதியவகையில் தலைப்புச் செய்தியாக வெளிவந்திருந்தது. அன்று மாலை நான் லலித்தைச் சந்தித்தபோது, தனது செய்தியை நான் பத்திரிக்கையில் எழுதினேனா என்று கேட்கும்படி ஜெயார் தன்னைப் பணித்திருந்ததாகக் கூறினார். அதற்கு தான் இவ்வாறு ஜெயாருக்குப் பதிலளித்ததாக லலித் என்னிடம் தெரிவித்தார், "உங்களுக்கு அது மிகவும் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும், ஆகவேதான் அதனைச் செய்தியாக்கும்படி கொடுத்தேன்". தனது செய்திகுறித்து ஜெயார் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும் லலித் என்னிடம் கூறினார். செளமியமூர்த்தி தொண்டைமான் லலித் இலட்சிய உறுதி கொண்டவர். ஜெயவர்த்தனவிற்குப் பின்னர் தானே நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று அவர் விரும்பினார். அவரது பிரதான எதிரியான காமிணி திசாநாயக்கவும் ஜெயாருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது லலித்திற்குத் தெரியும். ஆகவே, காமிணியை ஓரங்கட்டி, முன்னிற்கு வருவதற்கு லலித்திற்கு இருந்த ஒரே வழி ஜெயார் விரும்பியவாறு சிங்களக் கடும்போக்குவாதியாக தன்னை வரிந்துகொள்வதுதான். ஜெயாரின் தந்திரங்கள் குறித்து தொண்டைமான் பலதடவைகள் என்னிடம் கூறியிருக்கிறார். மத்தியூ கட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டபோது இதேவகையான கருத்தையே தொண்டைமான் தயான் ஜயத்திலக்கவிடமும், எஸ்.பாலகிருஷ்ணனிடம் கூறியிருக்கிறார். அன்றைய செவ்வி லங்கா கார்டியன் பத்திரிக்கையில் 1985 ஆம் ஆண்டு கார்த்திகை 15 ஆம் திகதி மீள்பிரசுரமாகியிருந்தது. கேள்வி : சிறில் மத்தியூவை அமைச்சரவையிலிருந்து நீக்கியதன் பின்னர், இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று எட்டப்படும் சாத்தியம் உருவாகியுள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால், அது இதுவரையில் நடைபெறவில்ல. சிறில் மத்தியூவை நீக்கிவிட்ட பின்னரும், தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கத் தடையாக இன்னும் சில கடும்போக்கு சிங்கள இனவாதிகள் அமைச்சரவையில் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? தொண்டைமான் : முதலாவதாக‌, சிறில் மத்தியூவை அமைச்சரவையிலிருந்து நீக்குவது தொடர்பாக அப்போது எடுக்கப்பட்ட முடிவு சரியானதென்று நான் நினைக்கவில்லை. அவரது பலம் மிக்க தொழிற்சங்கமான ஜாதிக்க சேவக சங்கமயவின் நடவடிக்கைகளால்த் தான் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டர் என்றால், அது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால், இப்போது, எல்லாமே முடிந்துவிட்டபின்னர் அவரைப் பதவிநீக்கம் செய்வதன் மூலம் அடைந்துகொண்டது என்ன? தற்போது ஐக்கிய தேசியக் கட்சியினர் மட்டத்தில் பொதுவான அபிப்பிராயம் ஒன்று உருவாகிவருகிறது. அக்கட்சியின் அங்கத்தவர்கள் தமது சிங்களத் தேசியக் குரல் ஒன்று அடைக்கப்பட்டு விட்டதாக உணர்கிறார்கள், தமது கட்சியின் சிங்கள பெளத்த நிலைப்பாடு அற்றுப்போய்விட்டதாக உணர்கிறார்கள். ஆகவே, தமது கட்சி இன்னமும் சிங்கள பெளத்த தீவிரவாத நிலைப்பாட்டிலேயே இருக்கிறது என்று மக்களுக்குக் காட்டுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கப்போகிறார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில் இன்னும் அதிகமான பாதிப்பினை நாடு எதிர்கொள்ளப்போகிறது. ஒருபக்கம், சிறில் மத்தியூவை நீக்கியதன் மூலம் தமிழ் மக்களைத் தான் திருப்திப்படுத்திவிட்டதாக ஜனாதிபதி நினைக்கலாம். சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் தமிழ்மக்களின் அதிருப்திக்குக் காரணம் சிறில் மத்தியூதான் என்று நினைக்கலாம். ஆனால், என்னைப்பொறுத்தவரையில் சிறில் மத்தியூ அமைச்சரவையில் இருந்தாலென்ன இல்லாதுபோனாலென்ன, தமிழர்கள் அவர்குறித்துக் கவலைப்படப்போவதில்லை. அவர்களுக்குத் தேவையானதெல்லாம் தம்மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிதான். ஆனால், சிறில் மத்தியுவை அமைச்சரவையிலிருந்து நீக்கியதனூடாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள பெளத்த நிலைப்பாடு உருக்குலைந்து போய்விட்டது என்று கவலைப்பட்டோருக்கு லலித் அதுலத் முதலியே புதிய சிங்கள பெளத்த வீரனாக தன்னை முன்னிலைப்படுத்தினார். இந்தியாவால் பரிந்துரை செய்யப்பட்ட "கடப்பாடற்ற" ஆலோசனைகள அனைத்தையுமே முற்றாக நிராகரித்ததன் மூலம் தனது புதிய அவதாரத்தை அவர் செயலில் காட்டினார். லலித் அதுலத் முதலியைக் கடும்போக்காளராகக் காட்டிய அதேநேரம், தன்னை நேர்மையான, நீதியான அரசியல்வாதியாகக் காட்டிக்கொண்டார் ஜெயவர்த்தன. இப்படிச் செய்வதன் மூலம் பண்டாரியை மிக இலகுவாக ஜெயாரினால் ஏமாற்ற முடிந்திருந்தது. கொழும்பிலிருந்து தில்லி திரும்பும் வழியில் பண்டாரி சென்னையில் தரித்துச் சென்றார். அங்கு தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களையும், முதலமைச்சர் ராமச்சந்திரனையும் அவர் ஆவணி 10 ஆம் திகதி சந்தித்தார். தனித்தனியாக இடம்பெற்ற இச்சந்திப்புக்களின்போது பண்டாரியுடன் டிக்ஷிட்டும் உடனிருந்தார். ராமச்சந்திரனுடன் அவருடைய இல்லத்தில் பேசிய பண்டாரி, முதலாம் கட்டப் பேச்சுக்களில் இலங்கையரசால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை மேம்படுத்த ஜெயவர்த்தன உறுதி தந்திருப்பதாக எம்.ஜி.ஆரிடம் தெரிவித்ததுடன், ஜெயாரினால் முன்வைக்கப்படவிருக்கும் புதிய ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளும்படி போராளி அமைப்புக்களுக்கு எம்.ஜி.ஆர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ராஜ் பவன் சென்னை 2021 சென்னையில் ஆளுநரின் வாசஸ்த்தலமான ராஜ் பவனில் தமிழ்ப் போராளிகளை பண்டாரி சந்தித்தார். ஏனைய ஈழத்தேசிய விடுதலை அமைப்பின் தலைவர்களுடன் பிரபாகரனும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். பாலசிங்கமும் பிரபாகரனுடன் சென்றிருந்தார். கொழும்பில் ஜெயவர்த்தனவுடனும் ஏனைய தலைவர்களுடனும் தான் நடத்திய சந்திப்புக்கள் குறித்து போராளிகளின் தலைவர்களுக்கு பண்டாரி அறியத் தந்தார். இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கு வரும்போது, இலங்கையரசின் பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவர் ஹெக்டர் ஜெயவர்த்தன மேம்படுத்தப்பட்ட ஆலோசனைகளுடன் வருவார் என்றும், ஆகவே அதனை உடனேயே நிராகரிக்காது, யதார்த்தத்தினை உள்வாங்கிப் பரிசீலிக்க வேண்டும் என்றும் போராளித் தலைவர்களிடம் அவர் வேண்டுகோளினை முன்வைத்தார். இலங்கையரசாங்கம் முன்வைக்கப்போகும் தீர்வினை தற்போதைக்கு ஏற்றுக்கொண்டு, காலப்போக்கில் அதனை மேம்படுத்துவது குறித்து போராளித்தலைவர்கள் சிந்திக்கவேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கினார். இச்சந்திப்பிற்கு முன்னதாக ஈழத்தேசிய விடுதலை முன்னணியினரின் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைவாக பிரபாகரனே முதலில் பேசினார். வழக்கம் போல அவர் தமிழில் பேச, பாலசிங்கம் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இலங்கையரசு தற்போது தரவிருப்பதாக பண்டாரி கூறும் தீர்வினை ஏற்றுக்கொண்டு, காலப்போக்கில் அதனை மேம்படுத்தும் திட்டத்தினை ஏற்கமுடியாது என்று பிரபாகரன் திட்டவட்டமாகக் கூறினார். சரித்திரத்தில் இவ்வாறான நீண்டகால மேம்படுத்தல்கள் தோல்வியிலேயே முடிவடைந்திருப்பதை அவர் எடுத்துக் காட்டினார். ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட காந்தியவாதியான எஸ்.ஜெ.வி.செல்வநாயகம் அவர்கள் 1956 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டுவரை இவ்வகையான நீண்டகால மேம்படுத்தல் முடிவினை எடுத்து தமிழரின் பிரச்சினையினைத் தீர்க்க முயன்றபோதும்கூட, அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தன என்று பிரபாகரன் வாதிட்டார். செல்வநாயகம் அவர்கள் பண்டாரநாயக்கவுடனும் பின்னர் டட்லியுடனும் இரு ஒப்பந்தங்களைச் செய்தார். ஆனால் அவையிரண்டையுமே அச்சிங்களத் தலைவர்கள் நிறைவேற்றத் தவறிவிட்டனர். தமிழர்களை பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்து, அவர்களின் உணர்வெழுச்சியை மழுங்கடித்து, ஈற்றில் அவர்களை விரக்தியடையச் செய்வதனையே சிங்களத் தலைவர்கள் தமது பாணியாகக் கடைப்பிடித்து வந்தனர். ஆகவே, முன்னைய‌ தமிழ்த் தலைவர்கள் முயன்று தோற்றுப்போன ஒரு வழியில் மீண்டும் ஒரு முறை வீழ்ந்து தோற்றுப்போக ஈழத்தேசிய விடுதலை முன்னணி தயாராக இல்லை என்று பிரபாகரன் தெரிவித்தார். மேலும், 1977 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை (1985) தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரையும் ஜெயவர்த்தன இதே வழியிலேயே ஏமாற்றி வருகிறார் என்றும் பிரபாகரன் சுட்டிக் காட்டினார். தாம் ஜெயவர்த்தனவை நம்பவில்லை என்று பிரபாகரன் மீண்டும் அங்கே குறிப்பிட்டார். மேலும், திம்புவிற்குப் போகும்படி ஈழத்தேசிய அமைப்பினர் மீது இந்தியா கொடுத்த அழுத்தங்கள குறித்த தனது அதிருப்தியையும் அவர் அங்கே வெளிப்படுத்தினார். இந்தியாவை தனது சதிவலைக்குள் வீழ்த்தி தமிழரின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தவே ஜெயார் முயன்று வருகிறார் என்று பண்டாரியை பிரபாகரன் எச்சரித்தார். ரஜீவ் காந்தி மீதும், பண்டாரி மீதும் தாம் வைத்திருக்கும் மதிப்பின் நிமித்தம் இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்காக திம்புவிற்கு தமது முன்னணியினர் செல்வர் என்று கூறிய பிரபாகரன், அப்போதும்கூட தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வாக‌ எதனையும் இலங்கையரசு முன்வைக்காது என்று தான் திடமாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், முதலாம் கட்டப் பேச்சுக்களின் இறுதியில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் வெளியிட்ட நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கிய தீர்வைத்தவிர வேறு எதனையும் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை திட்டவட்டமாக அவர் அறிவித்தார். பிரபாகரனின் பேச்சைக்கேட்டு பண்டாரி அதிருப்தியடைந்தார். கடுமையான நிலைப்பாட்டுடன் பேசாது, யதார்த்தத்திலிலிருந்து சிந்தியுங்கள் என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களைப் பார்த்து அவர் கூறினார். ஆனால், பிரபாகரனோ தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததுடன், எந்த விட்டுக் கொடுப்பிற்கும் தயாராக இருக்கவில்லை. பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் புளொட் அமைப்பினருடனும் தனியான சந்திப்புக்களை பண்டாரி மேற்கொண்டார். அவர்களும் ஜெயவர்த்தனவை தாங்கள் நம்பவில்லையென்றே பண்டாரியிடம் கூறினர். தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை லலித் அதுலத் முதலி முற்றாக நிராகரித்திருப்பதன் மூலம் இரண்டாம் கட்டப் பேச்சுக்களும் தோல்வியிலேயே முடிவடையப் போகின்றது என்பது புலனாகிறது என்று அவர்கள் பண்டாரியிடம் கூறினர். பண்டாரியிடம் பேசிய அமிர்தலிங்கம், "அரசாங்கம் முன்வைக்கவிருக்கும் பரிந்துரையின் அடிப்படையிலேயே எமது பதில் இருக்கும். அவர்கள் ஏற்கனவே முன்வைத்த மாவட்ட அபிவிருத்திச் ச‌பைகளையே புதிய பூச்சுடன் மீளவும் முன்வைப்பார்களாயின் அதனை நிராகரிப்பதைத்தவிர எமக்கு வேறு வழிகள் இல்லை" என்று கூறினார். தமிழ்ப் பிரதிநிதிகளுடனான தனது சந்திப்புக்களின்போது அவர்களின் கருத்தைக் கேட்டு பண்டாரி கடுமையான அதிருப்தி அடைந்திருந்ததாக டிக்ஷிட் தனது புத்தகத்தில் எழுதுகிறார். தனது பதவிக்காலம் 1986 ஆம் ஆண்டு பங்குனியில் முடிவிற்கு வரும் நிலையில், அதற்கு முன்னர் பேச்சுவார்த்தையூடாக உடனடித் தீர்வொன்றினை எட்டுவதே பண்டாரியின் நோக்கமாக இருந்தது. ஆகவே, இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வொன்றினை எட்டுவதற்காக கடுமையான முயற்சிகளை அவர் மேற்கொண்டு வந்திருந்தார். டிக்ஷிட் தொடர்ந்தும் எழுதுகையில், "தமிழ்த் தலைவர்களுடனான தனது பேச்சுக்களின் விளைவாக பண்டாரி இலங்கைத் தமிழர்கள் மீது கடுமையான எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்திருந்தார். இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தமிழர்கள் அநாவசியமாக பிடிவாதம் பிடித்து வருவதாகவும் அவர் நம்பத் தலைப்பட்டார்" என்று எழுதுகிறார். அன்று மாலை, தனியாக இருக்கும்போது, டிக்ஷிட்டிடம் பேசிய பண்டாரி, "இந்தியாவால் வரையப்பட்ட "கடப்பாடற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்குக் கொடுத்தீர்களா ?" என்று வினவினார். "இல்லை, எனக்கு அவ்வாறு யாரும் பணிப்புரை வழங்கவில்லையே" என்று டிக்ஷிட் கூறவும், "நீங்கள் கொழும்பிற்குச் சென்றவுடன் அந்த நகலை செல்வநாயகத்திடம் கொடுங்கள்" என்று பண்டாரி கூறினார். அதிர்ச்சியடைந்த டிக்ஷிட், "செல்வநாயகம் இறந்துவிட்டார், நீங்கள் நீலன் திருச்செல்வத்தைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?" என்று கேட்கவும், எரிச்சலடைந்த பண்டாரி, " செல்வநாயகமோ, திருச்செல்வமோ, யாரிடமாவது கொடுங்கள். தென்னிந்தியர்களின் பெயர்கள் எல்லாம் ஒரேமாதிரியாகவே இருக்கின்றன" என்று சலித்துக்கொண்டே கூறினார். ப‌ண்டாரி பணித்தவாறே, இந்தியா தயாரித்த ஆலோசனைகளின் நகல் ஒன்றினை கொழும்பு திரும்பியதும் நீலனிடம் தந்தார் டிக்ஷிட். சென்னையில் தமிழ்த் தலைவர்களைச் சந்தித்து இலங்கையரசாங்கம் முன்வைக்கவிருக்கும் தீர்வினை ஏற்றுக்கொள்ளும்படி பண்டாரி அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், வவுனியாவிலும், திருகோணமலையிலும் நிலைமைகள் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தன. வவுனியாவில் பொலீஸ் வாகனம் ஒன்றின்மீது போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் ஒரு பொலீஸ் உப பரிசோதகரும், நான்கு சாதாரண பொலீஸாரும் கொல்லப்பட்டனர். இதற்கான பழிவாங்கும் தாக்குதல்களை இராணுவத்தினர் வவுனியாவிலும் திருகோணமலையிலும் நடத்தினர். வவுனியாவில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதல்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் கடைகளையும், வீடுகளையும் தீயிட்டுக் கொளுத்தினர். இராணுவத்தினரின் பழிவாங்கும் தாக்குதல்களில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 21 பேர் காயமடைந்தனர். திருகோணமலையில் அகதிமுகாம் ஒன்றில் தங்கியிருந்த தமிழ் அகதிகள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
  23. அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.