Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. சிங்கள ஜனாதிபதி : ஜே ஆர் ஜெயவர்த்தன‌ ஆட்சிக்காலம் : 1978 ‍- 1988 தமிழர்கள் அளித்த வாக்குகள் மாவட்ட ரீதியாக மட்டக்களப்பு : 40.05 % யாழ்ப்பாணம் : 20.54% திருகோணமலை : 48.64% வன்னி : 46.42 % சராசரி : 38.9125 % ஜெயவர்த்தன நிகழ்த்திய முக்கியமான படுகொலைகளில் சில‌ 1977 தமிழர் மீதான அரச வன்முறை அல்லது கலவரம் : 300+ தமிழர்கள் 1981 இல் நாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தமிழர் மீதான படுகொலைகள் : 25+ தமிழர்கள் 1983 தின்னைவேலிப் படுகொலை : 60+ தமிழர்கள் 1983 வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள் : 53 தமிழ் அரசியல்க் கைதிகள் 1983 கறுப்பு ஜூலை இனக்கொலை : 3000+ தமிழர்கள் கொல்லப்பட்டு 125,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டு, தமிழர்களின் வர்த்தகங்களும், வீடுகளும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன‌ 1984 வவுனியா சாம்பல்த்தோட்டம் படுகொலைகள் : 70+ தமிழர்கள் 1984 சுன்னாகம் சந்தை மற்றும் பொலீஸ் நிலையப் படுகொலைகள் : 100+ தமிழர்கள் 1984 ஆவணி மன்னார் படுகொலைகள் : 140+ தமிழர்கள் 1984 யாழ்ப்பாணம் கோடைகாலப் படுகொலைகள் : 250+ தமிழர்கள் 1984 வடமராட்சி படுகொலைகள் : 35 + தமிழர்கள் 1984 கார்த்திகை உரும்பிராய்ப் படுகொலைகள் : 60+ தமிழர்கள் 1984 கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்து மற்றும் புகையிரதங்கள் மீதான படுகொலைகள் : 100+ தமிழர்கள் 1984 மணலாறு, தென்னைமரவாடி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய்ப் படுகொலைகள் : 500 + தமிழர்கள் 1984 மார்கழிப் படுகொலைகள் , வடக்குக் கிழக்கில் : 1200+ தமிழர்கள் 1984 ஒதியாமலை, செட்டிகுளம், சேமமடு படுகொலைகள் : 340+ தமிழர்கள் 1984 வவுனியா இராணுவ முகாம் படுகொலைகள் : 100 + தமிழர்கள் 1984 அமரவயல், மணலாறு, தென்னைமரவாடி படுகொலைகள் : 180 + தமிழர்கள் 1984 மன்னார் மார்கழி படுகொலைகள் : 150 + தமிழர்கள் 1984 மார்கழி வவுனியா படுகொலைகள் : 100 + தமிழர்கள் 1984 மார்கழி மதவாச்சிப் படுகொலைகள் : 60+ தமிழர்கள் 1984 மார்கழி முல்லைத்தீவு படுகொலைகள் : 210 + தமிழர்கள்
  2. ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது குறித்து வடமாகாணத்தில் இயங்கும் 31 சமூக நல அமைப்புக்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு தமிழ் மற்றும் சிங்கள அரசியட் கட்சிகளுடனும், சமூக அமைப்புக்களுடனும் இவை பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களின் முயற்சிக்கு ஆதரவு வழங்குவோர் மீது சிங்கள ஜனாதிபதியொருவருக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோருபவர்களால் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் வாக்குகளை இந்த முயற்சி வீணாக்கிவிடும் என்றும், சிங்கள மக்களை கோபப்படுத்தி விடும் என்றும் நியாயம் கற்பிக்கப்படுகிறது. தமிழர்களுக்கென்று தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதை நான் ஆதரிக்கிறேன். அவர் ஜனாதிபதியாக வருவதற்கு சாத்தியமில்லாவிட்டலும் கூட, தமிழர்களின் வாக்குகள் அவருக்குக் கிடைக்கவேண்டும், அதன்மூலம் சிங்களவர்களுக்குச் செய்தியொன்று சொல்லப்படவேண்டும் என்பதற்காகவே ஆதரிக்கிறேன். எம்மை அழித்த இரு சிங்களப் பேரினவாதக் கட்சிகளுக்கும் வாக்களித்து வாக்களித்து அழிவுகளை மட்டுமே இதுவரையில் கண்டிருக்கிறோம் என்பதற்காகவே தமிழர் வேட்பாளர் அவசியம் என்று கருதுகிறேன். தமிழ் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு, மீண்டும் ஒரு சிங்கள பேரினவாதியே ஆட்சிக்கு வரப்போகிறான் என்று தெரிந்தும், அவன் எமது வாக்குகளால் வரக்கூடாது என்பதற்காகவே தமிழ் வேட்பாளரை ஆதரிக்கிறேன். இலங்கையில் முதன்முதலாக ஜனாதிபதித் தேர்தல்கள் 1982 இல் நடக்கத் தொடங்கிய காலத்திலிருந்து அத்தேர்தல்களில் வக்களித்த தமிழர்களின் எண்ணிக்கையினையும், அவர்கள் ஜனாதிபதியாக்கிப் பார்த்த இனக்கொலையாளிகளையும், அந்த இனக்கொலையாளிகளின் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட முக்கிய படுகொலைகளையும் இங்கு சாராம்சமாகத் தருகிறேன். தமிழ் வேட்பாளர் ஒருவர் அவசியமா இல்லையா என்னும் கேள்வியை உங்களிடம் விட்டு விடுகிறேன்.
  3. மகிந்த எனும் இனக்கொலையாளிக்குப் பாடம் கற்பிக்க எண்ணி பொன்சேக்கா எனும் இன்னொரு இனக்கொலையாளிக்கு வாக்குச் செலுத்தி, அவன் செய்த அக்கிரமங்களை நாம் நியாயப்படுத்தியதை விடவும் தமிழருக்கென்று பொதுவான வேட்பாளரை நிறுத்தி அவரை ஆதரிப்பது எவ்வளவோ மேல்.
  4. அதிகாரங்களற்ற வெற்று மாவட்ட சபைகளை தீர்வாக முன்வைத்த அரசாங்கமும் அதிருப்தியடைந்த தமிழர் தரப்பும் பேச்சுவார்த்தையின் இரண்டாம் நாளின் முதற்பாதி இரு அடிப்படை விடயங்கள் தொடர்பாக விவாதிப்பதில் செலவிடப்பட்டது. தமிழர் தரப்பு முன்வைத்த கேள்வியான பேச்சுக்களில் அரசு கொண்டிருக்கும் ஆர்வம், அரச தரப்பு முன்வைத்த தமிழர் தரப்புப் பிரதிநிதிகளின் சட்டபூர்வ அங்கீகாரம் தொடர்பான கேள்வி, இருதரப்பும் ஒருவர் மீது மற்றையவர் முன்வைத்த யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ஆகியவை விவாதிக்கப்பட்டன. அன்று பிற்பகலில் அரசியல் தீர்வு தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அரசாங்கத்தின் தீர்வை "புதிய தீர்வு" எனும் பெயரில் ஹெக்டர் ஜெயவர்த்தன முன்வைத்தார். அரசின் தீர்வினை முன்வைத்துப் பேசிய ஹெக்டர், இறுதித் தீர்வு 1978 ஆம் ஆண்டின் ஒற்றையாட்சிக் கோட்பாட்டினையும், சர்வ அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி முறைமையினையும் முற்றாக ஏற்றுக்கொண்டதாக அமைதல் அவசியம் என்று கூறினார். மேலும், தான் முன்வைக்கும் தீர்வு 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டு பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட "அதிகாரப் பகிர்வின் அடிப்படையில்" அமைந்திருக்கும் என்றும் கூறினார்.சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இரு ஆவணங்களை சபையில் சமர்ப்பித்த ஹெக்டர், தமிழ்த் தரப்பினர் அவற்றைக் கவனமாக படித்து, அரசாங்கத்துடன் சேர்ந்து அத்தீர்வினை அமுல்ப்படுத்த உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால், அரசு தரப்பு "புதிய தீர்வு" எனும் பெயரில் முன்வைத்த தீர்வு உண்மையிலேயே 1984 ஆம் ஆண்டு மார்கழி 4 ஆம் திகதி ஜெயவர்த்தன முன்வைத்த தீர்வேயன்றி வேறில்லை என்று அமிர்தலிங்கம் குறிப்பிட்டார். ஜெயாரினால் முன்வைக்கப்பட்ட அத்தீர்வு மாவட்ட / பிராந்திய சபைகளுக்கான அதிகாரங்களை எப்படிப் பரவலாக்குவது என்பது குறித்து அரசியலமைப்பில் செய்யப்படக்கூடிய பத்தாவது திருத்தம் குறித்தே பேசியிருந்தது. ஆகவே, இத்தீர்வினை ஜெயார் முன்வைத்தபோதே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அதனை நிராகரித்திருந்ததுடன் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்க அவை எவ்விதத்திலும் போதுமானவை அல்லவென்றும் விமர்சித்திருந்தது என்றும் அமிர்தலிங்கம் கூறினார். திம்பு பேச்சுவார்த்தை மேசை, தமிழர் தரப்பு இடதுபுறத்தில். வலது புறத்தில் சிங்களத் தரப்பு இலங்கை முன்வைத்த தீர்வு நகல் குறித்து மூன்றாம் நாளான ஆடி 10 ஆம் திகதி ஆராய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அன்றைய நாள் முடிவடையும்போது பேச்சுக்களில் ஈடுபட்ட இரு தரப்பும் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிடுவதென்று முடிவானது. அதன்படி 8 பேர் அடங்கிய கூட்டு பேச்சுவார்த்தைக்குழுவில் ஐந்து அரச தரப்புப் பிரதிநிதிகளும், மூன்று தமிழர் தரப்புப் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்தனர். மேலும், பூட்டான் அரசாங்கத்தினூடாகவே இந்தக் கூட்டறிக்கையினை வெளியிடலாம் என்று இக்கூட்டுக் குழு முடிவெடுத்தது. இப்பேச்சுவார்த்தைகளுக்கு கொழும்பு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் மூன்றாம் நாள் பேச்சுவார்த்தைகளின்போது சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறியது. கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகங்களில் அரச தரப்பினை ஆதரித்தும், நியாயப்படுத்தியுமே செய்திகள் வெளிவந்தமையினால், தமிழர் தரப்பு இதுகுறித்து தனது ஆட்சேபணையினை தெரிவித்தது. குறிப்பாக, தமிழ்ப்பிரதிநிதிகள் தொடர்பாக விளித்தபோது அவர்களைப் பயங்கரவாதிகள் என்றே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக அழைத்து வந்தது. இதனையடுத்து, இதுகுறித்து தாம் நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பு தெரிவித்தது. மூன்றாம் நாளின் பெரும்பாலான பகுதி அரசுதரப்பு முன்வைத்த தீர்வு தமிழர்களின் அபிலாஷைகளைத் தீர்க்கப் போதுமானவை அல்லவென்று தமிழர் தரப்பு அதன் மீது தனது விமர்சனங்களையும், ஆட்சேபணைகளையும் முன்வைப்பதிலேயே கழிந்தது. அரசு முன்வைத்த தீர்வு மாவட்ட சபைகள் மற்றும் பிராந்திய சபைகளையே அதியுச்ச அதிகாரப் பரவலாக்க அலகுகள் என்று குறிப்பிட்டிருந்ததுடன், கிராம மட்டத்திலான கிராமாதோய சபைகள் தொடங்கி ஐந்து அடுக்கு சபைகள் குறித்தும், இரண்டாம் சபை குறித்தும் அது பேசியது. அரசாங்கத்தின் மிகக் கீழ்மட்ட நிர்வாக அலகுகளாக கிராம சபைகளே இருக்கும். நாடு முழுவதுமாக 4500 கிராம சபைகள் உருவாக்கப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் கிராம சபைகளில் உறுப்பினராக இணைந்துகொள்ளலாம். அரசியலிலிருந்து விலகி நிர்வகிக்கப்படும் இச்சபைகள் அந்தந்தக் கிராமங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தும். பிரதேச சபைகள் இரண்டாம் நிலைச் சபைகளாக இருக்கும். உள்ளூர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை இச்சபைகள் மேற்கொள்ளும். தேர்தல் மூலம் தேர்வுசெய்யப்படும் இச்சபைகள் நாடுமுழுவதும் உள்ள 250 பிரதேசச் சபைச் செயலகத் தொகுதிகளிலும் இருக்கும். மாவட்ட சபைகள் அரசாங்கத்தின் மூன்றாம் நிலை நிர்வாக அலகுகளாக இருக்கும். நாட்டிலிருக்கும் 25 மாவட்டங்களுக்கு தலா ஒவ்வொரு மாவட்ட சபை காணப்படும். மாவட்டத்தில் நடத்தப்படும் தேர்தல்கள் மூலம் இச்சபைகளுக்கான நிர்வாகிகள் தெரிவுசெய்யப்படுவார்கள். இச்சபைகளின் தலைவரும், பிரதித் தலைவரும் வாக்களர்களால் நேரடியாகவே தெரிவுசெய்யப்படலாம். தலைவரின் கீழ் அவருக்கு உதவவென அமைச்சர்கள் குழுவொன்று உருவாக்கப்படும். ஆனால், இந்த அமைச்சர்களை ஜனாதிபதியே நியமிப்பார். மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டிருக்கும் இச்சபைகளின் அமைச்சர்களுக்கான அதிகாரம் கொழும்பிலிருக்கும் தேசிய அமைச்சர்களிடமிருந்து வழங்கப்பட்டதாக இருக்கும். அரசாங்கத்தின் நான்காம் மட்ட அதிகாரப் பரவலாக்கல் அலகுகளாக மாகாணசபைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்றிற்கு மேற்பட்ட மாவட்ட சபைகளைக் கொண்டு மாகாண சபை அமைக்கப்படும். ஓரிரு மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் விருப்பு தேர்தல் மூலமாகவோ அல்லது சர்வஜன வாக்கெடுப்பு மூலமாகவோ அறியப்பட்டு மாவட்டசபைகள் இணைக்கப்படலாம். இந்த மாவட்ட சபைகளில் முன்னர் பணியாற்றிய ஊழியர்கள் இணைக்கப்பட்ட மாகாணசபைகளில் பணியாற்றலாம். மாவட்ட சபைகளுக்கு இருக்கும் அதே அதிகாரங்களே மாகாண சபைகளுக்கும் இருக்கும். தேசிய சபைகளே நாட்டின் அதியுயர் அதிகாரப் பரவலாக்கல் சபையாகக் காணப்படும். பாராளுமன்றத்திற்கு அடுத்தநிலையில் இச்சபை காணப்படும் ஆதலால் இது இரண்டாவது சபை என்று அழைக்கப்படும். 75 உறுப்பினர்கள் கொண்ட இந்தச் சபையில் மாவட்ட சபையின் தலைவர்களும் உபதலைவர்களும் 50 இடங்களை நிரப்ப, மீதி 25 இடங்கள் ஜனாதிபதியால் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். 9 மாவகாணங்களைச் சேர்ந்த சேர்ந்த தலா இருவரும், இன்னும் 7 பேரும் ஜனாதிபதியினால் தெரிவுசெய்ப்படுவர். இச்சபைகள் பாராளுமன்றத்தில் ஆலோசனைகளைப் பரிந்துரை செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்படும். புதிதாக சட்டங்களை நிறைவேற்றவோ அல்லது பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படும் சட்டங்களைத் தடுக்கும் அதிகாரமோ இவற்றிற்குக் கிடையாது. மாவட்ட சபைகளுக்கான அதிகாரங்கள் வெகு சொற்பமானவை. பாராளுமன்றத்தில் அமைச்சர்களினால் பகிரப்படும் பலமிழக்கப்பட்ட அதிகாரங்களை இவர்கள் பயன்படுத்தலாமேயன்றி, இவர்களால் பாராளுமன்றத்தை மீறிச் செயற்பட முடியாது. சொந்தமாக சட்டமியற்றும் அதிகாரமற்ற இச்சபைகள் பாராளுமன்றத்திடம் தமது தேவைகளைப் பரிந்துரை செய்யலாம். ஆனால், அவை நிராகரிக்கப்படுவதும், அங்கீகரிக்கப்படுவதும் பாராளுமன்றத்தின் கைகளிலேயே இருக்கும். ஹெக்டர் முன்வைத்த ஆவணங்களைத் தான் மேலோட்டமாகப் பார்த்ததாகக் கூறிய சித்தார்த்தன், மாவட்ட சபைகளுக்கென்று அரசாங்கம் வழங்கவிருந்த அதிகாரங்கள் எந்தவித முக்கியத்துவமும் அற்றவையாக இருந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், அந்த அதிகாரங்களைக் கூட தேவையான போது விலக்கிக்கொள்ளும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கும், ஜனாதிபதிக்கும் கொடுக்கப்பட்டிருந்தது என்றும் கூறுகிறார். "நாம் அவர்கள் முன்வைத்த பட்டியலைப் பார்வையிட்டோம். எமக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. மிகையாகப் புகழப்பட்ட, சோடிக்கப்பட்ட நகர சபைகளையே அரசாங்கம் மாவட்ட சபை அடிப்படையிலான தீர்வு என்று முன்வைத்திருந்தது. நீங்களும் வேண்டுமானால் அதனைப் படித்துப் பார்த்து உங்களின் கருத்தைச் சொல்லுங்கள்" என்று என்னிடம் அந்த நகலைக் கொடுத்தார். ஹெக்டர் முன்வைத்த அரச பரிந்துரைக்கு மிகுந்த அதிருப்தியுடன் பதிலளித்த அமிர்தலிங்கம், "தமிழர்களை இனிமேலும் ஏமாற்ற முயலவேண்டாம்" என்று கூறினார். "மொழிப்பிரச்சினை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை தொடர்பாக மிக விரிவாக சர்வகட்சி மாநாட்டிலேயே நாம் விவாதித்திருக்கிறோம். நாம் இப்போது செய்யவேண்டிய அதிகாரத்தைப் பரவலாக்குவது குறித்து முடிவெடுப்பதுதான். சர்வகட்சி மாநாட்டில் அரசு முன்வைத்த பரிந்துரைகள் தமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்ற சிறிதளவிலும் போதுமானவை அல்லவென்பதை நாம் உறுதியாகக் கூறியிருந்தோம். ஆகவே, உங்கள் தீர்வை நீங்கள் மேம்படுத்டுவது அவசியம். ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் தமிழர்கள் அதனை பரிசீலித்துப் பார்க்கத் தயாராக இருக்கிறார்கள்" என்றும் கூறினார். அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் அமிர்தலிங்கத்தின் பதிலினையடுத்து, "அப்படியானால், உங்களின் தீர்வினை முன்வைய்யுங்கள் பார்க்கலாம்?" என்று ஹெக்டர் அமிர்தலிங்கத்தைப் பார்த்துக் கூறினார். இக்கோரிக்கையினை தமிழ்த் தரப்பு ஒருமித்து நிராகரித்தது. "தமிழரின் கோரிக்கையான தனிநாட்டிற்கு நிகரான தீர்வினை முன்வைப்பது அரசாங்கத்தின் கடமை. தமிழ் மக்கள் 1977 ஆம் ஆண்டு எமக்கு வழங்கிய ஆணையான தனிநாட்டில் நாம் இன்னமும் உறுதியாகவே நிற்கிறோம். ஆனால், தமிழ் மக்கள் கெளரவத்துடனும், சுதந்திரத்துடனும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழக்கூடிய வகையில் தீர்வு ஒன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனைப் பரிசீலிக்கத் தயாராகவே இருக்கிறோம்" என்று அவர்கள் கூறினார்கள். இலங்கையரச பிரதிநிதிகள் முன்வைத்த தீர்விற்கான பரிந்துரைகளையடுத்து விரக்தியடைந்த தமிழ்த் தரப்பு சந்திரசேகரனிடம் தாம் பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளிநடப்புச் செய்யப்போவதாகக் கூறியது. அரசாங்கம் தரமான தீர்வொன்றினை முன்வைக்கும் என்கிற நம்பிக்கையிலேயே திம்புப் பேச்சுவார்த்தைக்கு நாம் வந்தோம். ஆனால், தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வினால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி முற்றாக ஏமாற்றமடைந்திருக்கிறது என்று சந்திரசேகரனைப் பார்த்து அமிர்தலிங்கம் கூறினார். தில்லியுடன் இதுகுறித்துக் கலந்துரையாடிய சந்திரசேகரன், இந்தியாவும் இலங்கை முன்வைத்திருக்கும் தீர்வு குறித்து திருப்தியடையவில்லையென்று கூறியதுடன், பேச்சுக்களிலிருந்து வெளிநடப்புச் செய்யவேண்டாம் என்றும் தமிழ்த் தரப்பைக் கேட்டுக்கொண்டார்.
  5. தமிழ்ப் பிரதிநிதிகள் கூட்டாக முன்வைத்த அரச யுத்தநிறுத்த மீறல்கள் தொடர்பான அறிக்கை பேச்சுவார்த்தையில் பங்கெடுத்த தமிழர் தரப்பினரின் ஆறு பிரதிநிதிகளும் இணைந்து கூட்டாக அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்கள். அது வருமாறு, தமிழ் விடுதலை அமைப்புக்களின் இணைந்த முன்னணியினர் விடுக்கும் அறிக்கை, 09/07/1985 இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்த எமது முறைப்பாடுகள் தமிழரின் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு முயன்றுவரும் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியையும், பேச்சுவார்த்தைக்கான உதவிகளை நல்கிவரும் இந்தியாவின் நற்பண்பினையும் பாராட்டும் அதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கக் கூடிய சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக தமிழர் தாயகத்தில் அமைதியான சூழ்நிலையினை ஏற்படுத்த எமது தரப்பிலிருந்து அனைத்துவிதமான ஆயுத நடவடிக்கைகளையும் நாம் முற்றாக நிறுத்தி வைத்திருக்கிறோம் என்பதையும் நாம் கூறிக்கொள்கிறோம். ஆனால், யுத்தநிறுத்தம் தொடர்பாக தனது கடமைகளைச் செவ்வண செய்வேன் என்று வாக்குறுதியளித்த இலங்கையரசாங்கம் இன்றுவரை அதனைச் செய்யாது, தொடர்ச்சியாக யுத்தநிறுத்தத்தினை மீறிச் செயற்பட்டு வருகிறது என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இலங்கையரசாங்கத்தின் படைகள் தமிழர்களுக்கெதிரான வன்முறைகளிலும், அச்சுருத்தும் செயற்பாடுகளிலும் இன்றுவரை ஈடுபட்டே வருகின்றனர். இலங்கையரச இராணுவத்தினரால் செய்யப்பட்டுவரும் போர்நிறுத்த மீறல்கள் குறித்த சில விடயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். 1. தமிழ் மீனவர்கள் மீதான வன்முறைகள் : இலங்கையரசாங்கம் கடல்வலயத் தடையினை பகுதியளவில் மீளப்பெற்றுக்கொள்வதாக பகிரங்கமாக அறிவித்திருக்கும்போதிலும், அவர்களின் கடற்படையினர் தொடர்ந்தும் எமது மீனவர்கள் மீது அச்சுருத்தல், கைதுசெய்தல், தாக்குதல் நடத்துதல், சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் ஆகிய செயற்பாடுகளில் ஈடுபட்டே வருகின்றனர். வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு, பருத்தித்துறை, தாளையடி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் தொழிலுக்குச் சென்றவேளை அவர்களை முட்கம்பிகளாலும், இன்னும் பிற ஆயுதங்களாலும் கடுமையாகத் தாக்கியும், அவர்களின் படகுகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தும், அவர்களின் வாழ்வாதாரத்தைத் திருடியும் கடற்படையினர் அட்டகாசம் புரிந்து வருகின்றனர். 2. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளும், வன்முறைகளும் : யுத்தநிறுத்தத்தினைத் தான் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பதாக இலங்கையரசாங்கம் அறிவித்த வாரத்த்திற்கு அடுத்த வாரத்தில் மட்டுமே பல இளைஞர்களை இலங்கையரசாங்கம் படுகொலை செய்திருக்கிறது. இவ்வாறு படுகொலைசெய்யப்பட்ட இளைஞர்களில் ஆயுதங்கள் இன்றி நடமாடிய‌ தமிழ் விடுதலை அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர்களும் அடங்கும். இப்படுகொலைகளை எந்தத் தூண்டுதலும் இன்றியே இலங்கையரசாங்கம் செய்துவருகிறது. ஆனி 18 ஆம் திகதியிலிருந்து ஆடி 8 வரையான காலப்பகுதியில் இலங்கையரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் படுகொலைகளின் விபரங்கள் வருமாறு, a) மன்னார் கொக்குடையார் பகுதியில் நான்கு தமிழ் இளைஞர்களைச் சுட்டுப் படுகொலை செய்த இராணுவத்தினர், அவர்களின் உடல்களை எரித்து அடையாளம் காணமுடியாதவாறு செய்திருக்கிறார்கள். b) முன்னாகத்தில் உந்துருளியில் பயணம் செய்த இரு இளைஞர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோக செய்த இராணுவத்தினர், ஒருவரைக் கொன்று, மற்றையவரைக் காயப்படுத்தியிருக்கிறார்கள். காயப்பட்டவர் தப்பிச் சென்றுவிட, கொல்லப்பட்டவரது உடலைஅடையாளம் காணமுடியாத வகையில் இராணுவத்தினர் எரியூட்டியிருக்கிறார்கள். c) மூதூரில் இராணுவத்தால் இழுத்துசெல்லப்பட்ட இரு இளைஞர்கள் கொல்லப்பட்டு, முகாமினுள்ளேயே எரியூட்டப்பட்டிருக்கிறார்கள். d) மண்டூரில் நான்கு இளைஞர்களை இலங்கை இராணுவத்தினர் கைதுசெய்து சென்றிருக்கிறார்கள். e) மட்டக்களப்பு தாந்தாமலைப் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த விவசாயிகள் மீது உப - பொலீஸ் பரிசோதகர் பியசேனவும் அவரது பொலீஸ் அணியினரும் நடத்திய தாக்குதலில் பல விவசாயிகள் படுகாயமடைந்திருப்பதோடு, அவர்கள் பயணம் செய்த உழவு இயந்திரமும் பொலீசாரினால் முற்றாக எரித்து நாசமாக்கப்பட்டிருக்கிறது. f) மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பகுதியில் தமிழர்களுக்குச் சொந்தமான 50 வீடுகள் சிங்களவர்களால் எரித்து அழிக்கப்பட்டிருக்கின்றன. யுத்த நிறுத்தத்தினை இலங்கையரசாங்கம் கடைப்பிடிப்பதாக அறிவித்ததிலிருந்து இவ்வாறு அழிக்கப்பட்டிருக்கும் நான்காவது கிராமம் இதுவென்பது குறிப்பிடத் தக்கது. g) மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பகுதியில் இரு இளைஞர்களைத் துரத்திச் சென்று, அவர்களைக் கைதுசெய்ய முடியாது போன கோபத்தில், அப்பகுதியால்ச் சென்ற பல தமிழர்களை இராணுவத்தினர் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். h) ஆனையிறவு முகாமிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் செல்லும் வழியில் காணப்பட்ட தமிழ் மக்கள் மீது பொலீஸ் விசேட அதிரடிப்படையினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து தமிழ் மக்களை அச்சுருத்தும் விதமாக நடந்திருக்கிறார்கள். i) மட்டக்களப்பு மாவட்டத்தின் கும்புறுமூலைப் பகுதியில் அரச அச்சகத்திற்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று திடீரென்று இராணுவச் சோதனைச் சாவடியாக மாற்றப்பட்டிருப்பதோடு இதனை அமைப்பதற்கு தமிழ் மக்களை 16 பாரவூர்திகளில் இழுத்துவந்த இராணுவத்தினர் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். தமிழ் மக்கள் மீதும், ஆயுதம் தரிக்காத போராளிகள் மீது இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் படுகொலைகளும், தாக்குதல்களும் தற்போதும் நடந்துகொண்டே வருகின்றன. 3. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை : யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் அடக்குமுறைகள் சற்றுத் தளர்த்தப்பட்டுள்ளபோதிலும், வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளில் இராணுவத்தினரின் அடக்குமுறையும், கெடுபிடிகளும், கண்காணிப்பு நடவடிக்கைகள் என்கிற பெயரில் நெருக்குவாரங்களும் தற்போது அதிகரித்தே காணப்படுகின்றன. குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை அச்சுருத்தி, பயங்கரமான சூழ்நிலையில் வைத்திருப்பதற்காக வேண்டுமென்றே குடிமனைகள் ஊடான ரோந்துக்கள், வீதிதடைகள், தேடியழிக்கும் நடவடிக்கைகள், கைதுகள், தாக்குதல்கள் என்பன இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டத்திற்கு தடைசெய்யப்பட்ட பகுதிகளை மீளப்பெற்றுக்கொள்கிறோம் என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் இவை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. 4. பெருந்தோட்டப் பகுதிகளில் இலங்கை அரசாங்கத்தினால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலை: பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் சுதந்திரமான நடமாட்டம் அரசாங்கத்தால் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதோடு, இப்பகுதிகளிலிருந்து வெளியே செல்வோரும், உள்ளே நுழைவோரும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு, அச்சுருத்தப்பட்டு வருகிறார்கள். ஏறக்குறைய ஒரு முற்றுகை நிலையிலேயே பெருந்தோட்டத் தமிழ்ப்பகுதிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இப்பகுதிகளுக்கும் வெளியிடங்களுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதோடு, பல தமிழர்களை காரணமின்றிக் கைதுசெய்து தடுத்து வைத்திருக்கிறது இலங்கையரசாங்கம். "மேற்கூறப்பட்ட இலங்கையரசின் அப்பட்டமான யுத்தநிறுத்த மீறல்களுக்கு மேலதிகமாக, தான் ஏற்றுக்கொண்ட இரு விடயங்களான தமிழ் அரசியல்க் கைதிகளை விடுதலை செய்வது, தமிழ்ப் பிரதேசங்கள் மீதான ஊரடங்கு உத்தரவினை நீக்கிக்கொள்வது ஆகியவற்றையும் செயற்படுத்த இலங்கையரசாங்கம் பிடிவாதமாக மறுத்தே வருகிறது". "இலங்கையரசாங்கத்திற்கும், தமிழ் விடுதலை அமைப்புக்களுக்கும் இடையே செய்யப்பட்டிருக்கும் பரஸ்பர யுத்தநிறுத்தத்திற்கு அமைவாக, இலங்கையரசாங்கம் உடனடியாக யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தனது கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்". "யுத்தநிறுத்தம் கடைப்பிடிக்கப்படவேண்டிய காலப்பகுதியில் மேலதிகமாக ஆட்களையோ ஆயுதங்களையோ தருவித்தல் ஆகாது என்கிற நிபந்தனையினையும் மீறி, இலங்கையரசாங்கம் தொடர்ச்சியாக இராணுவத்தினரையும், ஆயுத தளபாடங்களையும் குவித்துவருகிறது என்பதையும் நாம் அறியத் தருகிறோம். அண்மையில்க் கூட பாக்கிஸ்த்தானிடமிருந்து நான்கு தாக்குதல் உலங்குவானூர்திகளையும், சீனாவிடமிருந்து 18 பீரங்கிப் படகுகளையும் இலங்கையரசாங்கம் தருவித்திருக்கிறது". தமிழ்ப் பிரதிநிதிகளின் கூட்டறிக்கைக்குப் பதிலளித்த இலங்கையரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் ஹெக்டர் ஜயவர்த்தன, ஊரடங்கு உத்தரவு மற்றும் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆராய்ந்து பிற்பகலுக்குள் பதில் ஒன்றினைத் தருவதாகக் கூறினார். மதியவேளை தனது சகோதரரும், ஜனாதிபதியுமான ஜெயாருடன் நேரடித் தொலைபேசியூடாகப் பேசிய ஹெக்டர், அரசாங்கம் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டத்தை அடுத்தநாள் நீக்கிக்கொள்ளவும், அரசியற்கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 1,197 தமிழர்களில் 643 பேரை இருநாட்களின் பின்னர் விடுதலை செய்யவும் ஒத்துக்கொண்டிருப்பதாக பேச்சுவார்த்தை மேசையில் அறிவித்தார்.
  6. பேச்சுக்களில் பங்கெடுத்த தமிழர் தரப்பின் சட்டபூர்வத் தன்மையினைக் கேள்விகேட்ட சிறிலங்கா அரசு தரப்பும், வெளிநடப்புச் செய்த போராளிகளும் 1985 ஆம் ஆண்டு ஆடி 8 ஆம் திகதி பேச்சுக்கள் ஆரம்பமாகின. பத்து உறுப்பினர்கள் அடங்கிய இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவிற்கு ஜெயாரின் சகோதரன் ஹெக்டர் ஜெயவர்த்தன தலைமை தாங்கினார். 13 உறுப்பினர்கள் அடங்கிய தமிழர்களின் பேச்சுவார்த்தைக் குழுவினர் பலத்த பாதுகாப்புடன் திம்புவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பேச்சுவார்த்தைக் குழுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக வெவ்வேறு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டனர். திம்பு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பூட்டானின் தலைநகரான திம்புவிற்கு அந்நாட்களில் உல்லாசப் பயணிகளோ, பத்திரிக்கையாளர்களோ வருவது தடைசெய்யப்பட்டிருந்தது. இரு இந்தியச் செய்தியாளர்களான இந்திய டுடேயின் சென்னைப் பத்திரிக்கையாளரான வெங்கட்ரமணியும் அவரது புகைப்பிடிப்பாளரும் உல்லாசப் பயணிகள் என்கிற போர்வையில் திம்புவில் தங்கியிருந்த‌வேளை, நடுச்சாமத்தில் அவர்களைத் தட்டி எழுப்பிய அதிகாரிகள் மரியாதையுடன் காலைவிடியுமுன் நகரிலிருந்து அனுப்பி வைத்தார்கள். விடுதியில் தங்கவைக்கப்பட்ட தமிழ்ப் பேச்சுவார்த்தைக் குழுவினரை ஏறக்குறைய பணயக் கைதிகள் போலவே இந்தியா நடத்தியது. வெளியாரைச் சந்திப்பது அவர்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்தது.ஆனால், சென்னையின் கோடாம்பக்கத்தில் இருக்கும் ஒரு இரகசிய இடத்திற்கான நேரடித் தொலைபேசி அழைப்புக்கள் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன. சென்னைக்குத் திரும்பியிருந்த தமது தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் பேசும் விடயங்கள் குறித்துப் பிரதிநிதிகள் அவ்வப்போது பேசிக்கொள்ளவே இந்த வசதி செய்துகொடுக்கப்பட்டிருந்தது. சந்திரசேகரனும் ஏனைய ரோ அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளை நெறிப்படுத்தினர். சந்திரசேகரன் போராளிகளுக்கு பேச்சுவார்த்தைகளின்போது உதவிபுரிய ஏனைய அதிகாரிகள் இலங்கையரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு உதவினர். பேச்சுவார்த்தைகளுக்கான தூதுக்குழுவினரை திம்புவிற்கு அனுப்பியபின்னர் போராளித் தலைவர்கள் சென்னைக்குத் திரும்பியிருந்தனர். பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக பாலசிங்கத்தை சென்னையில் இருக்குமாறு கூறிவிட்டு, புலிகளின் சேலம் முகாமிற்குச் சென்றார் பிரபாகரன். பத்மநாபா, சிறீ சபாரட்ணம், பாலக்குமார் ஆகிய ஏனைய தலைவர்கள் சென்னையிலேயே தங்கியிருந்தனர். திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்பதனை பிரபாகரன் உணர்ந்தே இருந்தார். இந்தியப் பத்திரிக்கையாளரான வெங்கட்ரமணியின் கூற்றுப்படி, தமிழர்களின் நலன்களும், இந்தியாவின் நலன்களும் ஒன்றிற்கொன்று எதிரானவை என்பது தெளிவாகும்போது, வடக்குக் கிழக்கிற்குச் சென்று மீண்டும் ஆயுதப் போராட்டத்தினைத் தொடர்வதற்கு மனரீதியாகத் தன்னைத் தயார் செய்ய பிரபாகரன் உறுதிபூண்டிருந்தார். சேலம் முகாமிற்குச் சென்ற பிரபாகரன் தனது அடுத்த இராணுவத் திட்டத்தினைச் செயற்படுத்த போராளிகளைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபடலானார். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் ஏனைய தலைவர்களுடன் தான் கலந்தாலோசித்தது போல, இராணுவ முகாம்களையும், பொலீஸ் நிலையங்களையும் சுற்றி தனது போராளிகளை நிலைவைக்க அவர் முடிவெடுத்தார். கிட்டுவுடன் பேசிய பிரபாகரன், தனது அடுத்த நகர்வு இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குவதுதான் என்று கூறினார். பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து சென்னையிலிருந்த தமது தலைவர்களிடம் பேச்சுவார்த்தைக் குழுவினர் அறியத் தந்ததுடன், அவர்களிடமிருந்து அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டு வந்தனர்.திம்புவிலும் சென்னையிலும் ஓரணியாக செயற்பட்ட போராளிகளின் தலைவர்கள் ஒருமித்து முடிவெடுத்தனர். சென்னையில் பொராளிகளின் ஒருமித்த அணியின் பேச்சாளராக பாலசிங்கமே செயற்பட்டார். திம்புப் பேச்சுவார்த்தை மேசையில் இப்பணியை திலகர் செய்தார். மேலும், திம்புவில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் புளொட் அமைப்புடனும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடனும் சேர்ந்து செயற்பட்டனர். தற்போதைய (2005) புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் திம்புப் பேச்சுவார்த்தை குறித்து என்னுடன் பேசுகையில் தமிழத் தரப்பினர் ஓரணியாகச் சேர்ந்து இயங்கியது இதுவே முதற்தடவை என்றும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட சிங்கள தூதுக்குழுவே இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது என்றும் கூறினார். "நாம் எமக்கிடையே தர்க்கிப்போம் என்றும், ஒருவரையொருவர் இழுத்து வீழ்த்தும் வேலைகளில் ஈடுபடுவோம் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், நாம் எமது ஒவ்வொரு நகர்வையும் மிகக் கவனமாகத் திட்டமிட்டே செய்தோம். ஒவ்வொருவரும் எந்தவிடயம் குறித்துப் பேசுவதென்றும், அவரே அப்பிரச்சினைகுறித்து தனது பேச்சில் பதிலளிப்பார் என்றும் முடிவெடுத்துச் செயற்பட்டோம்" என்றும் சித்தார்த்தன் கூறினார். பேச்சுக்களுக்கான போராளிகளின் பிரதிநிதிகளை வழிநடத்தும் பொறுப்பில் பாலசிங்கம் இருந்தார். தாம் நடத்தும் கலந்துரையாடல்கள் அனைத்தையும் ரோ வினர் செவிமடுத்து வருகின்றனர் என்பதை அவர் அறிந்தே இருந்தார். ஆகவே, போராளிகளின் பிரதிநிதிகளுடன் வேண்டுமென்றே யாழ்ப்பாண பேச்சுவழக்கில் அவர் பேசினார். இக்கலந்துரையாடல்களை இன்னொரு பக்கத்திலிருந்து செவிமடுத்துக்கொண்டிருந்த ரோ வின் தமிழ் அதிகாரிகள் குழம்பிப் போயிருந்தனர். இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவில் ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் சட்டத்தரணிகளான எச் எல் டி சில்வா, எல்.சி.செனிவிரட்ண‌, மாக் பெர்ணான்டோ மற்றும் எச்.எல்.குணசேகர ஆகியோரும் அங்கம் வகித்தனர். ஏனையவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள். தமிழர்களின் பிரதிநிதிகள் குழுவில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சார்பில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோரும், புலிகள் சார்பில் லோரன்ஸ் திலகருடன் சிவகுமாரனும் (அன்டன்), ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் வரதராஜப்பெருமாளுடன் கேதீஸ்வரனும், டெலோ சார்பில் சார்ள்ஸ் அன்டனிதாஸுடன் மோகனும், ஈரோஸ் சார்பில் சங்க ராஜியுடன் இ. இரத்திணசபாபதியும், புளொட் சார்பாக வாசுதேவாவுடன் சித்தார்த்தனும் பங்குகொண்டிருந்தனர். பூட்டான் நாடே பேச்சுவார்த்தைகளுக்கான அனுசரணைகளை வழங்கியிருந்தமையினையடுத்து, அந்நாட்டின் வெளிநாட்டமைச்சர் லியொபொனோ தாவா செரிங் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவைத்தார். மிகுந்த அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தஅரச மாளிகையின் விருந்தினர் மண்டபத்தில் இப்பேச்சுவார்த்தைகள் நடந்தன. அங்கு பேசிய தாவா, ஒரு நாட்டில் வாழும் பல்வேறு இனங்களுக்கிடையிலான பிணக்குகளை பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்று அழுத்தமாகக் கூறியதுடன், இப்பேச்சுவார்தைககள் வெற்றியடைய தனது நாட்டின் வாழ்த்துக்களையும் அவர் பேச்சுவார்த்தைப் பிரதிநிகளுக்குத் தெரிவித்தார். பேச்சுவார்த்தையினை ஒழுங்குசெய்தமைக்காக இந்தியாவுக்கும், நடத்த அணுசரணை வழ‌ங்கிய பூட்டானுக்கும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஹெக்டர் ஜெயவர்த்தன நன்றி தெரிவித்தார். தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பில் நன்றியுரையினை டெலோ உறுப்பினர் சார்ள்ஸ் வழங்கியது அன்று போராளி அமைப்புக்களுக்கிடையே காணப்பட்ட ஒற்றுமையினைக் காட்டியது. சரித்திர முக்கியத்துவாம் வாய்ந்த பேச்சுவார்த்தையின் முதலாவது நாள் நிகழ்வுகள் முடிவிற்கு வந்தபோது, பூட்டான் வெளிநாட்டமைச்சரின் விருந்தோம்பல் குறித்தே பலரும் பேசிக்கொண்டனர். பேச்சுவார்த்தைகளின் இரண்டாம் நாளான ஆடி 9 ஆம் திகதி, இரு குழுக்களும் ஒருவரையொருவர் நேராகப் பார்த்துகொள்ளும் வகையில் நீண்ட மேசையொன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. தமிழர் பிரதிநிதிகள் சார்பில் அமிர்தலிங்கமே பேச்சுக்களை ஆரம்பித்தார். தமிழர் பேச்சுவார்த்தைக் குழுவினருக்கிடையே அன்றுகாலை கலந்துரையாடப்பட்ட விடயங்களுக்கு அமையவும், தாம் ஏற்கனவே தீர்மானித்திருந்த திட்டத்திற்கு அமைவாகவும் மூன்று முக்கிய விடயங்கள் குறித்து தமது கரிசணையினைத் தமிழ்த் தரப்பு எழுப்பியது. முதலாவது, பேச்சுவார்த்தையில் சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருக்கும் உண்மையான நோக்கமும், உறுதிப்பாடும். முடிவு எடுக்கக் கூடிய அதிகாரத்தினைக் கொண்டிருக்காத சில சட்டத்தரணைகளையும், வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பியிருப்பதன் மூலம் தாம் உணர்ந்துகொள்வது என்னவெனில், இப்பேச்சுவார்த்தைகளை தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான கால அவகாசத்திற்காகவே ஜெயவர்த்தன பாவிக்கிறார் என்று தாம் சந்தேகிப்பதாக தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அமிர்தலிங்கம் ஜெயாரின் இத்திட்டம் குறித்து மிகவும் காரசாரமான விமர்சனத்தை முன்வைத்தார். "அவர்களின் திட்டம் எம்மைப்பொறுத்தவரை புதியதல்ல. கடந்த வருடம் முழுவதும் பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்துக் காலம் கடத்திய அரசாங்கம் இவ்வருடமும் அதனையே செய்ய எத்தனிக்கிறது" என்று அவர் கூறினார். தமிழர்களின் பிரதிநிதிகள் முன்வைத்த விமர்சனத்திற்கு ஹெக்டர் ஜயவர்த்தன பதிலளித்தார். இனப்பிரச்சினைக்கு இறுதியானதும், நிரந்தரமானதுமான தீர்வினை முடிவுசெய்யும் சகல அதிகாரமும் கொண்ட அரசாங்கத்தின் பிரதிநிதியாகவே இப்பேச்சுக்களில் தானும் தனது அணியினரும் கலந்துகொள்வதாக அவர் கூறினார். மேலும், பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில், இறுதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதி ஜெயவர்த்தன தானே திம்புவிற்கு நேரடியாக வருவதாக தன்னிடம் உறுதியளித்திருப்பதாகவும் ஹெக்டர் கூறினார். அடுத்ததாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவில் இலங்கைப் புலநாய்வுத்துறையினைச் சேர்ந்தவர்களும் அங்கம் வகித்திருப்பது குறித்த தமது அதிருப்தியினை தமிழர்தரப்பு எழுப்பியது. உடனேயே குறுக்கிட்ட ஹெக்டர், தமிழ்ப் போராளிகள் பேச்சுவார்த்தைக் குழுவில் பிரதிநிதிகளாக அங்கம் வகிப்பதற்கான தகமை குறித்தும், தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக அவர்கள் கோருவது குறித்தும் கேள்வி எழுப்பினார். "நீங்கள் யாரைப் பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள்? நீங்கள் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை?" என்று அவர் கேள்வி எழுப்பினார். போராளி அமைப்புக்கள் தம்மை மட்டுமே இங்கு பிரதிநிதித்துவம் செய்வதாக அவர் கூறினார். வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களையோ அல்லது நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்களையோ போராளிகள் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று அவர் கூறினார். அவர்கள் முஸ்லீம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். ஆனால், இலங்கையரசாங்கம் தமிழர்கள் சார்பாகவுமே பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். ஹெக்டரின் இந்த விசமத்தனமான பேச்சு இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதத்திற்கு வித்திட்டது. இலங்கையரசாங்கம் தமிழர்களையும் சேர்த்தே பிரதிநிதித்துவம் செய்வதானால், அது தமிழர்களுடன் பேசவேண்டிய தேவையென்ன என்று தமிழ்த்தரப்பினர் கேள்வியெழுப்பினர். "தமிழர்களையும் சேர்த்தே நீங்கள் பிரதிநித்துவம் செய்வீர்களாகவிருந்தால், நீங்களுக்கு உங்களுக்குள்ளேயே பேசி, தீர்வொன்றினை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்" என்று தமிழர்களின் பிரதிநிதியொருவர் கிண்டலாகக் கூறினார். இதனையடுத்து, தம்மைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக இலங்கையரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தாம் தொடர்ந்தும் பேச்சுக்களில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழர் தரப்பு கூறியது. ஆகவே, பேச்சுவார்த்தைகளில் சிறிய இடைவேளை ஒன்றினைக் கோரிய தமிழர் தரப்பு, தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இலங்கையரசாங்கம் ஏற்றுகொண்டால் அன்றி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தது. இடைவேளையின்போது தனித்தனியாக தமக்குள் கலந்தாலோசித்த தமிழர் பிரதிநிதிகள் தமக்கான திட்டத்தினை வகுத்துக்கொண்டனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும், போராளிகளுக்கும் இடையே பிளவொன்றினை ஏற்படுத்தவே இலங்கையரசாங்கம் முயல்வதை அவர்கள் தெளிவாக உணர்ந்துகொண்டனர். ஆகவே, இதனை எப்படியாவது முறையடித்து விட அவர்கள் உறுதிபூண்டனர். அதன்படி, தமது எழுத்துமூல அறிவிப்புக்கள் அனைத்தையும் "தமிழ்மக்களின் பிரதிநிதிகள்" என்கிற தலைப்புடனேயே வெளியிடுவது என்று தீர்மானித்தனர். இடைவேளையின் பின்னர், அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அறிக்கையொன்றினை ஹெக்டர் ஜயவர்த்தன வெளியிட்டார். இரு தரப்பினரும் பிரச்சினைக்கான தீர்வொன்றினை உண்மையாக அடைந்துகொள்ளும் நோக்கிலேயே பேச்சுக்களில் ஈடுபட்டிருப்பதாகவும், பேச்சுக்களில் ஈடுபடுவதென்பதே தேவையானளவிற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பேச்சுக்களில் பங்கெடுக்கும் தமிழர் தரப்பினை தாம் ஏற்றுக்கொண்டதனால்த்தான் என்றும் கூறினார். அதன்பின்னர், தமது இரண்டாவது கரிசணையான யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து தமிழர் தரப்பு கேள்வியெழுப்பியது. கொழும்பு அரசாங்கம் யுத்தநிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஏற்றுகொள்ள மறுத்துவருவதாக தமிழர்கள் குற்றஞ்சாட்டினர். இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்த செயற்பாடுகளில் ஒரு பகுதியினை இலங்கையரசாங்கம் கடைப்பிடிக்கத் தவறியிருப்பதாக அவர்கள் கூறினர். குறிப்பாக ஊரடங்குச் சட்டத்தினை நீக்குதல், தமிழர் பகுதிகளில் தேடியழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துதல் ஆகியவற்றை அரசு செய்யத் தவறியிருப்பதாக அவர்கள் கூறினர். இரவுநேர ஊரடங்கு உத்தரவும், கைதுகளும் தற்போதும் இலங்கை இராணுவத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால், தமது போராளிகள், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இராணுவம் , பொலீஸார், சிங்கள மக்கள் ஆகிய அனைவர் மீதான தமது தாக்குதல்களையும் முற்றாக நிறுத்திவைத்திருப்பதைச் சுட்டிக் காட்டினர்.
  7. பேச்சுக்களுக்கெதிராகப் போராடிய யாழ்ப்பாண மக்களும், அவர்களின் உணர்வுகளை புறக்கணித்த இந்தியாவும் போராளிகளின் தலைவர்கள் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லப்போகிறார்கள் என்கிற செய்தி பர‌வியபோது யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, போராளிகளை அழுத்தம் கொடுத்து, திம்புவிற்கு இழுத்துச் சென்றமைக்காக இந்தியாவின் மீது மக்களின் கோபம் திரும்பியிருந்தது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வீதி நாடகங்கள் என்பன இளைஞர்களால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தின் சுவர்களிலும், வீதிகளுக்குக் குறுக்கே தொங்கவிடப்பட்ட பதாதைகளிலும் கூறப்பட்ட செய்தி ஒன்றுதான், "எங்களுக்குத் தமிழீழமே வேண்டும்". இந்த ஒருமித்த மக்களின் மனவெழுச்சி அப்பிரதேசமெங்கிலும் பரவிக் கிடந்தது. ஜெயவர்த்தனவின் இராணுவத்தினர் புரிந்துவரும் படுகொலைகளுக்கெதிரான கண்டனங்கள், இந்தியா தனது நலன்களைக் காத்துக்கொள்ள ஈழத்தமிழர் மீது பலவந்தமாகத் திணித்துவரும் அழுத்தங்கள் என்பனவும் இப்போராட்டங்களில் தமிழ் இளைஞர்களால் வெளிப்படுத்தப்பட்டது. பொதுக்கூட்டங்களிலும், மேடை நாடகங்களிலும் இரு முக்கிய செய்திகளை பேச்சாளர்கள் முன்வைத்தனர். முதலாவது தமிழர்கள் ஜெயவர்த்தனவை ஒருபோதும் நம்பத் தயாரில்லை என்பது. இரண்டாவது, ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்ய முன்வந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினரைத் தாம் முற்றாக நிராகரிக்கிறோம் என்பது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஒழுங்குசெய்வதில் முன்னின்றார்கள். போராளிகளின் தலைவர்கள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளான ஆடி 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. அன்றுமட்டுமே யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டன. தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவ பொம்மை ஒன்றினை வீதிகளில் இழுத்துவந்தனர். ஒப்பாரி வைப்பதுபோல பாசாங்கு செய்த இன்னும் சில இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவப்பொம்மையினைப் பார்த்து, "ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்துகொண்டதன் மூலம் அரசியல்த் தற்கொலையினை நீ செய்திருக்கிறாய், முட்டாளே, அது உனக்குத் தெரியாமல் போனதெப்படி?" என்று கேட்டார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் "மாயமான்" எனும் பெயரில் மேடை நாடகம் ஒன்றினை அரங்கேற்றினார்கள். இராமாயணத்தில் வரும் காட்சியொன்றில், இராமனினதும், இலட்சுமணனினதும் கவனத்தைத் திசைதிருப்பி, சீதையைக் கவர்ந்துசெல்ல இராவணன் மாய மானின் உருவத்தில் வந்ததற்கு ஒப்ப, தமிழர்களை தமக்குக் கீழ் நிரந்தரமாகவே அடிமைப்படுத்திவிட ஜெயார் போடும் மாயமான் வேடமே இந்தப் பேச்சுவார்த்தைகள் என்று அந்தநாடகம் கூறியது. ஜெயார் மறைத்துவைத்திருக்கும் வலையில் தமிழர்களை வீழ்த்துவதற்கு இந்தியாவே அழுத்தம் கொடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு இந்தியாவை நோக்கி முன்வைக்கப்பட்டது. ஜெயார் விரித்து வைத்திருக்கும் வலை நோக்கி இந்தியா முன்னாலே செல்ல, ஈழத்தேசிய முன்னணியின் நான்கு போராளித் தலைவர்களும், வெளியில் இருந்த புளொட் அமைப்பும் இந்தியாவின் சொல்கேட்டு ஜெயாரின் வலையில் தம்மையறியாமலேயே வீழ்வதற்காகப் பிந்தொடர்கின்றன என்று அவர்கள் கூறினார்கள். இந்தியா போராளிகளைப் பார்த்து நடவுங்கள் என்று சொல்ல, நடப்பதும், நில்லுங்கள் என்று சொல்ல நிற்பதும், பாயுங்கள் என்று சொல்லப் பாய்வதும் நடக்கிறது என்று அவர்கள் இந்தியாவை விமர்சித்தார்கள். இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்து போராளிகள் வெளியே வர எத்தனித்த ஒவ்வொரு கணமும் இந்தியா அவர்களை மிரட்டி பலவந்தமாக மீண்டும் தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்தது. இந்தச் சாராம்சத்தினை முன்வைத்து யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய 35 நிமிட நகைச்சுவை கலந்த மேடை நாடகம் யாழ்க்குடாநாட்டில் ஒருவாரத்தில் மட்டுமே 125 தடவைகள் மேடையேற்றப்பட்டது. பேச்சுவார்த்தையின் முதலாவது நாளான 1985, ஆடி 8 ஆம் திகதி முழு யாழ்க்குடாநாடுமே பொது வேலை நிறுத்தத்தினால் முற்றாக ஸ்த்தம்பித்துப் போனது. பலகலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் வகுப்புக்களைப் பகிஸ்க்கரிப்புச் செய்தனர். கடைகள் இழுத்து மூடப்பட்டதோடு, வீதிகளும் வெறிச்சோடிப்போக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப் போனார்கள். வீதிகளெங்கும் பதாதைகள் தொங்கவிடப்பட்டன. "எமக்கு ஈழமே வேண்டும்", " யுத்தநிறுத்தத்தை எதிர்க்கிறோம்", "எமக்குப் பேச்சுவார்த்தை வேண்டாம்", "இந்தியாவே, புலிகளை திம்புவிற்கு ஏன் அழைத்துச் சென்றாய், அவர்களைப் புல்லை உண்ணவைக்கவா?" என்று அவை பேசின. யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களை தமது நிலைப்பாட்டினை இந்தியாவுக்குத் தெளிவாக உணரவைக்கும் சந்தர்ப்பமாகப் பாவிக்க நினைத்தனர் போராளிகள். "பாருங்கள், நீங்கள எங்களை ஜெயவர்த்தனவுடன் பேசவைக்க பலவந்தப்படுத்தி அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், எமது மக்களோ அதற்கு முற்றான எதிர்ப்பினைக் காட்டி வருகிறார்கள்" என்று இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினார்கள். ஆனால், போராளிகளின் கருத்தினைக் கேட்கும் நிலையில் இந்திய அதிகாரிகள் இருக்கவில்லை. அவர்களைப்பொறுத்தவரை, தமிழ் மக்களின் உணர்வுகளைவிட பேச்சுக்களை எப்படியாவது நடத்திவிடவேண்டும் என்பது முக்கியமானதாகத் தெரிந்தது. இந்தியாவை இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் வல்லரசாகக் காட்டுவதற்கு இப்பேச்சுவார்த்தைகளை எப்படியாவது பாவித்துவிட கங்கணம் கட்டியிருந்த இந்திய அதிகாரிகள், தமிழர்களின் உணர்வுகளை முற்றாகப் புறக்கணித்திருந்தனர்.
  8. சிங்கள பெளத்தராக இருக்கவேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்லப்படா விட்டலும், பெளத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இலங்கையின் சனத்தொகையில் வெறும் 15 20 வீதம் மட்டுமே உள்ள தமிழர்களில் ஒருவர் ஜனாதிபதியாக வருவதற்கான‌ சந்தர்ப்பங்கள் இல்லை. ஆனால், தமிழர்களின் வாக்குகளைக் கொண்டு எந்தச் சிங்கள ஜனாதிபதி பதவிக்கு வருவார் என்பதை தீர்மானிக்கலாம், இதைத்தவிர ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளுக்கு இருக்கும் பலம் வேறில்லை. அதுகூட 2019 இல் தேவையற்றது என்பதை நிரூபித்துவிட்டார்கள். எப்போதுமே சிங்களவர் ஒருவரே வருவார். அவர்கூட பெரும்பாலும் பெளத்தராக இருப்பார் அல்லது பெளத்தத்திற்கு மதம் மாற்றப்பட்ட கிறீஸ்த்தவச் சிங்களவராக இருப்பார்.
  9. பேச்சுவார்த்தைக்கான ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் திட்டம் போராளிகளின் தலைவர்களுடன் பேசிய சக்சேனா, இறுதியாக எச்சரிக்கை ஒன்றுடன் தனது பேச்சினை நிறைவு செய்தார். " பேச்சுவார்த்தைக்கு நிபந்தனைகள் எதனையும் விதிக்காது நீங்கள் சமூகமளிக்க வேண்டும். பேச்சுவார்த்தையில் பங்குபற்றத் தவறினால் இந்திய மண்ணிலோ அல்லது இந்தியாவின் கடற்பிராந்தியத்திலோ உங்களை நாம் அனுமதிக்கமாட்டோம்.ஆகவே, நான் கூறிய விடயங்கள் குறித்து நீங்கள் ஒவ்வொருவரும் தீர்க்கமாக ஆராய்ந்து நாளைக்குச் சாதகமான முடிவொன்றினை எங்களுக்கு அறிவிக்க வேண்டும்" என்று கூறினார். சக்சேனாவுடனான சந்திப்பு முடிந்து தமது விடுதி நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கையில் சக்சேனாவின் எச்சரிக்கை தொடர்பாகவும், இந்தியாவுடன் ஒத்துப்போக வேண்டும் என்கிற அவரின் கோரிக்கையினையும் பற்றிப் பேசிக்கொண்டே வந்தார்கள். பாலசிங்கத்தின் கூற்றுப்படி, பிரபாகரன் நேராகச் சிந்தித்தார். அங்கிருந்த மற்றையவர்களுடன் பேசிய பிரபாகரன், "நாங்கள் இந்தியாவை இப்போது ஆத்திரப்படுத்தக் கூடாது. நாம் இந்தியா சொல்வது போலவே செய்யலாம். திம்புப் பேச்சுவார்த்தைகளுக்கு நிபந்தனையின்றிச் செல்வோம். இந்தியாவுக்கும் எமக்கும் இடையே பிளவொன்றினை உருவாக்க ஜெயவர்த்தனவிற்கு நாம் சந்தர்ப்பம் ஒன்றினை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது. ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தனவை முழுவதுமாக நம்புகிறார்கள், நாம் அந்த நம்பிக்கையினை உடைக்கவேண்டும்" என்று கூறினார். ஆனால், பேச்சுவார்த்தைகளுக்குப் போவதன் மூலம், இலங்கைத் தமிழர்களின் நலன்களை எந்தவிதத்திலும் விட்டுக்கொடுப்பதாக அமைந்துவிட‌க் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். "நாங்கள் திம்புவிற்குப் போகலாம், நிபந்தனைகளின்றியேபோகலாம், ஆனால் எமது மக்களின் உரிமைகள் குறித்து விட்டுக்கொடுக்காமல் அங்கு பேசுவோம்" என்று அவர் கூறினார். அன்று நள்ளிரவு கடந்து நடந்த கலந்துரையாடல்களின்போது, போராளித் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கான திட்டம் ஒன்றினை வகுத்துக் கொண்டார்கள். திட்டம் இரு பகுதிகளைக் கொண்டிருந்தது. முதலாவது, ஜெயவர்த்தன மீது ரஜீவ் கொண்டிருக்கும் நம்பிக்கையினைச் சிதைப்பது. தம்மை நாணயம் மிக்கவர்களாகவும், ஜெயவர்த்தனவைத் தந்திரசாளியாகவும் காட்டவேண்டும் என்பதில் அவர்கள் கவனமெடுத்தனர். இதற்காக, யுத்தநிறுத்தத்தினை முழுமையாகக் கடைப்பிடிப்பதென்றும், இராணுவத்தினராலும், பொலீஸாரினாலும் செய்யப்படும் யுத்த நிறுத்த மீறல்களைத் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டுவதென்றும் தீர்மானித்தனர். அதன்படி, ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தாயகத்தில் இருந்த தமது போராளிகளுடன் பேசி, யுத்தநிறுத்தத்தினை முழுமையாகக் கடைப்பிடிக்கும்படி பணித்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களால் கையொப்பமிடப்பட்ட துண்டுப்பிரசுரமொன்று, யுத்தநிறுத்தத்தினை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தினை விளக்கி, வடக்குக் கிழக்கின் அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டது. ரோ அதிகாரிகளுக்கும் இத்துண்டுப்பிரசுரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அவர்களது திட்டத்தின் இரண்டாவது பகுதி, ஜெயவர்த்தனவின் அரசாங்கம் தமிழர்களுக்கு நீதியானதும், சமத்துவமானதுமான தீர்வினை ஒருபோதும் வழாங்கப்போவதில்லை என்பதனைக் காட்டுவது. தமிழரின் பிரச்சினைக்கான அடிப்படைத் தீர்வான, தமிழர்கள் தனியான ஒரு தேசம் என்பதனையோ, அவர்கள் தமக்கென்றும் பூர்வீகத் தாயகம் ஒன்றினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனையோ, அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என்பதனையோ, அவர்களுக்குப் பிரஜாவுரிமை மறுக்கப்படலாகாது என்பதனையோ ஜெயார் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. பிரபாகரனுடன் அன்டன் பாலசிங்கம் 1980 களில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் நிபந்தனைகள் இன்றி பேச்சுக்களில் பங்குபற்றுவதென்று முடிவெடுத்தார்கள். தமது முடிவினை பாலசிங்கம் உடனடியாகவே சந்திரசேகரனுக்கு அறியத் தந்தார். இது இந்திய அதிகாரிகளுக்குத் திருப்தியைக் கொடுத்தது. உங்களின் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று செய்தியாளர்கள் பாலக்குமாரைக் கேட்டபோது, " சிறிலங்கா எமக்குத் தரவிருக்கும் தீர்வு என்னவாக இருக்கும் என்பதைக் கேட்கவே பேச்சுக்களுக்குச் செல்கிறோம்" என்று அவர் பதிலளித்தார். ஜெயாரின் சகோதரர் அடங்கலாக சில சட்டத்தரணிகளையும், சில வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் கொண்ட தூதுக்குழுவினை இலங்கையரசாங்கம் தன் சார்பாகப் பேச்சுக்களுக்குச் செல்வார்கள் என்று அறிவித்தது. இதனை உடனடியாக போராளிகளின் தலைவர்கள் ரோ அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினர். சந்திரசேகரனுக்கு இதுகுறித்து முறைப்பாடொன்றினைத் தெரிவித்த பாலசிங்கம், "ஜெயவர்த்தன தனக்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே பேச்சுவார்த்தைக்கு வருகிறார் என்று உங்களிடம் நாம் சொன்னோமல்லவா? இப்போது அவர் அனுப்பவிருக்கும் தூதுக்குழுவைப் பாருங்கள். அரசியல் ரீதியில் தீர்மானம் எடுக்க முடியாத சில வழக்கறிஞர்களை அவர் அனுப்பவிருக்கிறார். இந்த வழக்கறிஞர்களிடமிருந்து எவ்வகையான முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தமக்குக் கொடுக்கப்பட்ட சில விடயங்களைப் பற்றி மட்டுமே அவர்கள் வாதாடிக்கொண்டு இருக்கப் போகிறார்கள். ஆக, தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் என்று எதுவுமே இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பேச்சுவார்த்தைக்கு ஜெயார் அனுப்பவிருக்கும் தூதுக்குழு தொடர்பான தனது அதிருப்தியை இந்தியா டிக்ஷிட் ஊடாக ஜெயவர்த்தனவுக்கு அறியத் தந்தது. அரசியலைப்புத் தொடர்பாகத் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வாய்ந்த மூத்த அமைச்சர்கள் எவருமே இடம்பெறாத தூதுக்குழு ஒன்றினைப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்புவதன் ஊடாக பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தையே ஜெயார் குறைத்துவிட்டார் என்று டிக்ஷிட் அவரிடம் கூறினார். வழமைபோலவே இந்தியாவின் இந்தக் கரிசணைக்கும் ஜெயவர்த்தனவால் பொய்யான‌ ஒரு காரணத்தைக் கூற முடிந்தது. தனது இளைய சகோதரரும் சட்டத்தரணியுமான ஹெக்டர் உட்பட சில சட்டத்தரணிகளை தூதுக்குழுவில் அனுப்பியதற்கு நான்கு காரணங்களை ஜெயார் முன்வைத்திருந்தார். தனது இளைய சகோதரரே தனது ஆலோசகர் என்பதாலும், அவர் மீது தான் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாலும் அவரையே தூதுக்குழுவின் தலைவராக நியமித்ததாகக் கூறினார். மேலும், சட்டத்துறையில் பிரசித்திபெற்ற ஹெக்டர், இந்திய சட்டமாதிபருடன் இணைந்து, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் குறித்து அவர் பல கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதால், அவரைத் தனது அதிகாரம் மிக்க விசேட தூதுவராக அனுப்பியிருப்பதாகவும் கூறினார். ஜெயார் தமக்களித்த பதிலை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாலசிங்கத்திடம் தெரிவித்தனர். ஜெயவர்த்தனவின் பதிலினையடுத்து, போராளிகளின் தலைவர்கள் தமது தூதுக்குழுவை இரண்டாம் நிலைத் தலைவர்கள் அடங்கிய குழுவாக அனுப்ப முடிவெடுத்தனர். அதன் பின்னர், அவர்கள் தமது நேரத்தை தில்லியின் இடங்களைச் சுற்றிப் பார்க்கவும், திரைப்படங்களைப் பார்த்து ரசிப்பதிலும் செலவிட்டனர். தில்லியின் திரையரங்கு ஒன்றில் கண்பிக்கப்பட்டு வந்த ஆங்கிலத் திரைப்படம் ஒன்றினைப் பார்க்க பிரபாகரன், பாலக்குமார், வரதராஜப் பெருமாள், சாந்தன் ஆகியோர் சென்றனர். திரைப்படத்தின் கதை இரு இளம் காதலர்கள் பற்றியே அமைந்திருந்தமையினால், அதுவரை திருமணம் முடிக்காதிருந்த பாலக்குமார் மிகுந்த தர்ம சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்திய ரோ அதிகாரிகள் போராளித் தலைவர்களை யமுனா நதிக்கரையில் இருந்த ராஜ் காட் எனும் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்குதான் மகாத்மா காந்தியின் சமாதி இருக்கிறது. மகாத்மாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தபோது பத்மநாபாவின் காதுகளில் கிசுகிசுத்த பிரபாகரன், "எங்களை ஏன் இங்கு கூட்டிவந்திருக்கிறார்கள் தெரியுமா? எம்மையும் காந்தியைப் போல் அகிம்சையினைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லாமல்ச் சொல்கிறார்கள்" என்று கூறவும், குறுக்கிட்ட பாலக்குமார், "என்ன இரகசியம் பேசுகிறீர்கள்?" என்று கேட்டார். பிரபாகரன் பதில் ஏதும் கூறாமல் பாலக்குமாரைப் பார்த்து புன்னகைத்தார்.
  10. இப்படிச் செய்தால் என்ன? வடக்கில் இருந்து ஒருவரையும் கிழக்கில் இருந்து ஒருவரையும், மலையகத்திலிருந்து ஒருவரையும் வேட்பாளர்களாக ஒரு பொது முன்னணியில் நிறுத்தி, வேட்பாளர்களுக்கன்றி, பொதுவான முன்னணிக்கு மக்களை வாக்களிக்குமாறு கேட்கலாம். வெற்றிபெறும் பட்சத்தில், ஜனாதிபதிக் காலத்தை மூன்று சம பங்குகளாகப் பிரித்து ஒவ்வொருவரையும் ஆளச் சொல்லலாம். வெற்றிபெற்றால் நல்லது. வெற்றிபெறாதுவிட்டாலும், இதனைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் பொதுவான முன்னணியொன்றினை வைத்தே அரசியல் செய்யலாம். இந்த நடைமுறை சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. ஒரு தேர்தலில் இரு பிரதமர்கள். ஒருவர் முதற்பாதியையும், மற்றையவர் இரண்டாவது பாதியையும் ஆட்சி செய்தனர்.
  11. மனிதவுரிமைச் சட்டத்தரணி பெண்ணுரிமைவாதி மனிதவுரிமைச் செயற்ப்பாட்டாளர் இறுதியுத்தகாலத்தில் மகிந்த அரசு நடத்திய போர்க்குற்றங்களைக் கடுமையாக விமர்சித்தவர் தொழிற்சங்க உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர் அரகலயப் போராட்டத்தில் பங்கெடுத்தவர் இதிலிருந்து நாம் வெளியே வரவேண்டும். பிரதேசவாதம் போதும். வடக்கும் கிழக்கும் என்று தனியே இருந்தால் அழிவோம். தமிழராக இருந்தால் மட்டுமே இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளலாம். ஜனாதிபதி பதவிக்காலத்தின் முதல் பங்கினை கிழக்கைச் சேர்ந்த ஒருவரும், இரண்டாம் பங்கினை வடக்கைச் சேர்ந்த ஒருவரும் வகிக்கலாம் என்று கோட்பாட்டளவில் இருவரை முன்னிறுத்தி இதனைச் செய்துபார்க்கலாம். வெற்றிபெறுகிறோமோ இல்லையோ, குறைந்தது எமக்குள் இருக்கும் வேறுபாட்டினைக் களைந்து முன்னிறுத்திப் பார்க்கலாம்.
  12. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அனுமதியளிக்கப்பட்டு, பின்னர் மறுக்கப்பட்டவர்தானே இவர்? புலிகளைப் பயங்கரவாதிகள் என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் என்று அறிந்தேன். தெற்கோடு இணைந்து தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வது சாத்தியமா? இதை எப்படிச் செய்யலாம் என்று யாராவது இங்கு விளக்கினால் நல்லது.
  13. ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலங்களில் உமா மகேஸ்வரனுடன் கொழும்பிலிருது யாழ்ப்பாணம் சென்று போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். சிறந்த செயற்பாட்டாளர். கண்ணீர் அஞ்சலிகள்.
  14. ரஸ்ஸியாவில் பணம்பார்க்கச் சென்று தற்போது மாட்டுப்பட்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான முன்னாள் சிறிலங்கா இராணுவ வீரர்களைப் பாதுகாப்பாக வீட்டிற்குக் கூட்டிவரவும் இதனைப் பயன்படுத்தியிருக்கலாம். சர்வதேச நாடுகளின் பாதுகாப்புத் துறைசார் தலைவர்களின் மாநாடு நடைபெற்று முடிந்ததன் பின்னர் நடைபெற்றிருக்கும் இருதரப்பு மாநாடு என்றுதான் கூறப்பட்டிருக்கு. இதுவே சர்வதேச மாநாடு அல்ல.
  15. நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள்? புலத்திலா? அப்படியானால், அங்கிருக்கும் மக்களின் மனோநிலையினை இவ்வளவு கீழ்த்தரமாக உங்களால் மதிப்பிட முடிந்திருக்காது. நீங்கள் பழகும் குறுகிய வட்டத்திற்குள், உங்களைப்போன்றே சரணாகதி, இணக்க அரசியல், அடையாளம் துறப்பு எனும் மனோநிலையில் சஞ்சரிக்கின்ற ஒரு சிலரின் மனவோட்டங்களை ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களினதும் மனவோட்டமாக மடைமாற்றப்ப பார்க்கிறீர்கள். உங்களின் மீது வசைமாறி பொழியவேண்டிய தேவை எனக்கு இல்லை. உங்களின் விமர்சனத்தை, என்பக்க நியாயங்களோடு விமர்சிக்கிறேன். அவ்வளவுதான். உங்களைப்போன்ற பலரை நான் பார்த்தாயிற்று. பலருடன் விவாதிப்பதில் பயனில்லை என்று நகர்ந்து சென்றுவிடுவேன். உங்களின் கண்ணியமான எழுதிற்காகத் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணினேன். அவ்வளவுதான். நீங்கள் உங்களின் பார்வையில் சரியென்று நினைப்பதை எழுதுகிறீர்கள். அது மற்றையவர்களுக்கும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. நான் எழுதுவதும் அப்படியே. எனக்குச் சரியென்று பட்டதை எழுதிவருகிறேன். நோக்கமொன்றுதான், எனது இனம் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பிலிருந்து என்றோவொருநாள் விடுபடவேண்டும் என்பது. உங்கள் நோக்கமும் அதுவென்றால், மகிழ்ச்சி.
  16. இதை யாரும் மறுக்கவில்லையே? தேசியத்தை விற்று பணம் பார்க்கும் கூட்டம் எப்போதும் போல இருந்துகொண்டு தான் இருக்கும். பல போலிகளை அவ்வப்போது காலம் எமக்குக் காட்டிக்கொண்டே வருகிறது. தமிழ் மக்களும் இவர்களைத் தாண்டி சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். உண்மையான தேசியவாதிகள் யார், போலிகள் யாரென்பதை அவர்களால் மிக இலகுவாக உணர்ந்துகொள்ளமுடிவது போல, இனத்திற்குள் இருப்பதாகப் பாசாங்கு செய்துகொண்டு, அந்த இனத்தின் இருப்பையே அரித்துக்கொண்டு, அடக்குமுறையாளனுக்கு சாமரம் வீசும் சிலர் குறித்தும் அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள். இதனாலேயே இவர்களைப்போன்றவர்களால் இனத்திற்குள் ஒட்டிவிட முடியாது தனியே பிதற்றவேண்டியிருக்கிறது. ஆக, நான் அனுமானித்ததை உங்களின் இந்தக் கூற்று உறுதிப்படுத்துகிறது என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். நானும் இதைத்தான் சொல்கிறேன். இலங்கையின் ஒற்றையாட்சி யாப்பினை ஏற்றுக்கொண்டு பாராளுமன்றக் கதிரைகளை நிரப்பும் அனைவரும் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்பவர்கள்தான். அதனால்த்தான், பகிஷ்கரிக்கவேண்டும் என்று கேட்கிறேன். உண்மை. இன்றிருக்கும் தமிழரசுக் கட்சியின் நிலையினால் தமிழர்களின் அரசியல் ஆர்வம் குறைந்துவருவதை மறுக்கவில்லை. அதற்காக, தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதையும், அதன் சரித்திரச் செயற்பாடுகளையும், தமிழ் மக்களின் நலனில் அது கொண்டிருந்த அக்கறையினையும் இன்றிருக்கும் கொழும்புசார் தமிழ் அரசியல்வாதிகளுடன் ஒப்பிடமுடியுமா?
  17. நான் மாய உலகில் சஞ்சரிக்கின்றேனா? எப்படி? எமது நலன்களையும், இருப்பையும், தேசத்தையும், மக்களையும் காத்துக்கொள்வதென்பது மாய உலகில் சஞ்சரிப்பதாக உங்களுக்குத் தெரிவது எப்படி? இது, எல்லாச் சாதாரண, தனது இனம் குறித்த அக்கறையும், பிரக்ஞையும் இருக்கின்ற எவருக்கும் வரக்கூடிய ஒரு உணர்வுதானே? இது எப்படி மாய உலக சஞ்சாரமாகிறது உங்களுக்கு? அப்படியானால், நீங்கள் வாழும் நிஜ உலகில் இவைகுறித்துப் பேசவேண்டாம் என்கிறீர்களா? அல்லது இவை எதுவுமே தேவையற்றவை என்கிற முடிவிற்கு வந்துவிட்டீர்களா? நீங்கள் ஒருவிடயம் நோக்கிப் பயணிக்கிறீர்கள். அந்தவிடயம் என்பது உங்களைப்பொறுத்தவரை மிகவும் அவசியமானதாக இருக்கிறது. ஆகவே, அதனை அடைவதற்கு உங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் முயல்கிறீர்கள். இதுவரையான உங்கள் முயற்சிகள் தகுந்த பலனைத் தரவில்லையென்பதற்காக அந்த விடயத்தை மாய உலகம் என்று விட்டுவிடுவீர்களா அல்லது தொடர்ந்து முயல்வீர்களா? உங்களுக்கு அந்தப் பிரச்சினை இருக்காது என்று நம்புகிறேன். ஏனென்றால், அந்த விடயம் அவசியமானதென்று நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆகவேதான் முயற்சிப்பவர்களை நோக்கி வசைபாடுகிறீர்கள். தமிழரசுக் கட்சி செய்ததெல்லாமே உணர்சியூட்டி மக்களைத் தவறாக வழிநடத்தியமைதான் என்று பந்தி பந்தியாக‌ எழுதியது அவர்கள் மீதான வாழ்த்துபா என்கிறீர்களா? தமிழரசுக் கட்சிகுறித்தும், செல்வநாயகம் குறித்தும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். நீங்கள் கூறும் அந்த "உலகம் அறியும்" என்னும் "அந்த உலகத்தில்" எத்தனை பேர் இருக்கிறீர்கள்? தனிச்சிங்களச் சட்டம் பிறந்து, பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்டு, தமிழ் இளைஞர்கள் அவதியுற்றுக்கொண்டிருந்தபோது, அந்த அரசாங்கத்தையே வாழ்த்திப்பாடிய ஒருசிலர் வாழும் உலகமாக அது இருக்க வேண்டும்.
  18. நீங்கள் பேசுவது அரசியல் வரலாறு இல்லை. முற்றான அரசியல் அவதூறு. பல தசாப்த்தங்களாக தமிழரின் நலன்களுக்காக அயராது போராடிய ஒரு அரசியல்த் தலைமையினையும், அரசியல் கட்சியையும் அவதூறு செய்யும் செயல். அதைக்கூட, சிங்களப் பேரினவாதத்தின் கொடுங்கரங்களை ஆதரிப்பதன் மூலம் செய்ய விழைகிறீர்கள். உதாரணத்திற்கு, யாழ் பல்கலைக்கழகத்தை தமிழரின் நலனுக்காகவே சிறிமா கட்டினார் என்பதும், தமிழரின் நலன்களுக்காக சுண்ணக்கற்பாறைகளை அகழ்வதை தமிழர்களின் அரசியல்வாதிகள் அரசியலாக்குகிறார்கள் என்று எழுதினீர்கள். தமிழரின் நலன்குறித்து உண்மையான அக்கறைக் கொண்டிருப்பவராக இருந்திருந்தால், உங்களின் விமர்சனத்தின் அடிப்படை எமது நலன்களை மீளப் பெற்றுக்கொள்வதாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அங்கேதான் உங்களின் அடையாளம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது இவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பதன் மூலம், தமிழர்கள் இனிமேல் எதுவும் செய்யமுடியாது, கல்வியில், தொழில்நுட்பத்தில், வேலைவாய்ப்பில் உங்களை வளர்த்துக்கொள்ள அரசுடன் இணைந்து இலங்கையர்களாக செயற்படுங்கள் என்கிற வாத‌த்தை முன்வைக்கிறீர்கள். எமக்குள் இருப்பது இரு முகாம்கள். நான் ஏலவே கூறியது போல, தமிழர்களின் நலன்களைக் காக்க, அல்லது மிளப்பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் "தமிழ்த்தேசிய இனவாதிகளின்"முகாம். மற்றையது, அதே நலன்களை கைவிட்டு விட்டு சிங்களத்துடன் இணங்கிச்சென்று ஐக்கியமாகிவிடுபவர்களின் முகாம். எனது முகாமை நான் கூறிவிட்டேன், நீங்கள்?
  19. உங்களைப்போன்றவர்களும், ஈழநாடும் முன்வைத்த கருத்துக்களும் விமர்சனங்களும் கேட்கப்பட்டிருந்தால் இப்போதிருக்கும் நிலையினை விடவும் எவ்வாறு இருந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? சிங்களப் பேரினவாதம் மனம் மாறி தமிழர்களுக்கான உரிமைகளையும், அபிலாஷைகளையும் தந்திருக்கும் என்கிறீர்களா? தமிழரசுக் கட்சி செய்த அரசியல் தவறென்றால், சரியான அரசியல் எதுவென்று நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும், அதை இங்கே பகிரலாமே? உரிமைகேட்டதும், மொழிக்கான அந்தஸ்த்துக் கேட்டதும், எமது நிலங்களை ஆக்கிரமிக்காதீர்கள் என்று கோரியதும், எம்மீதான அரச ஆதரவிலான தாக்குதலை நடத்தாதீர்கள் என்று கேட்டதும் தவறான அரசியல் என்றால், நீங்களும், ஈழநாடும் முன்வைத்த அரசியல் என்ன? தமிழர்களின் முன்னால் இரண்டு அரசியல் முறைகள் இருக்கிறது. ஒன்று, இனம் சார்ந்து, இனத்தின் நலன் சார்ந்து, இனத்தின் இருப்புச் சார்ந்து செய்வது. இரண்டாவது, இனத்தின் அடையாளம் தொலைத்து, ஆக்கிரமிப்பை அமைதியாக ஏற்றுக்கொண்டு, சிங்களப் பெருந்தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டு, அடையாளத் துறப்பின் மூலம் சொந்த நலனை மட்டும் காத்துக்கொள்வது. இதில் முதலாவதைத்தான் தமிழரசுக் கட்சியும், அதனால் ஆரம்பிக்கப்பட்டதாக நீங்கள் சாடும் தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கும் மக்களும் செய்ததும், இன்றுவரை செய்துவருவதும். நீங்கள் சார்வது எந்த அரசியல் என்பது ஓரளவிற்கு உங்களின் கருத்துக்களில் இருந்தே தெளிவாகிவருகிறது. அப்படியில்லையென்றால், தமிழருக்கு இதுவரை தெரியாத அந்த மூன்றாவது அரசியல்ப் பாதை குறித்து நீங்களே இங்கு சொல்லிவிடுங்கள்.
  20. நான் எழுதும் மூலை எதுவென்று நீங்கள் தேடவேண்டாம். நானே சொல்லிவிடுகிறேன். இலங்கையில் தமிழர்களுக்கென்று தனியான மொழியும், கலாசாரமும், தேசமும் இருக்கின்றது என்று முற்றிலுமாக நம்பும் மூலையது. சுதந்திரத்திலிருந்து தனிச்சிங்களச் சட்டம், பல்கலைக்கழக அனுமதி, பிரஜாவுரிமை, குடியேற்றங்கள், காலத்திற்குக் காலம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இன வன்முறைகள் என்கிற பெயரிலான‌ இனக்கொலைகள், 1972,1977,1981,1983 - ‍ 2009 என்று இன்றுவரை நிகழ்த்தப்படும், இலங்கையின் சிங்கள பெளத்த இனவாதிகளால் ஒற்றையாட்சியின் கீழ் நடத்தப்படும் இனவழிப்பில் பாதிக்கப்பட்ட பல லட்சக்கணக்கான தமிழர்கள் இருக்கும் மூலையில் நான் இருக்கிறேன். முடிந்தால் நீங்கள் இருக்கும் மூலையைச் சொல்லிவிடுங்கள். அரசியல் விமர்சனங்களைச் சுட்டிக்காட்டும்போது நான் அதனைத் தட்டிக்கழிக்கவோ அல்லது அதனை ஏற்றுக்கொள்ள முடியாமலோ விதண்டாவாதம் செய்யவேண்டிய தேவையென்ன இருக்கிறது? இங்கு எது அரசியல் விமர்சனம்? அறையினுள் இருக்கும் வெள்ளை யானை எது? தமிழரசுக் கட்சியின் தந்திரமான தலைமையா அல்லது சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதமா? தமிழரசுக் கட்சியை அவமதிக்கவேண்டும், அவர்களையே இன்றுள்ள தமிழ்த் தேசியம் எனும் அருவருக்கத்தக்க கொள்கைக்கான பிதாமகர்களாகக் காட்டவேண்டும் என்று பகீரதப் பிரயத்தனத்தில் எழுதிய நீங்கள், உங்கள் எழுத்துக்களின் இடையே இழையோடிப்போயிருக்கும் சிங்கள இடதுசாரிப் பேரினவாதத்தின், சிங்கள இனவாதத்தின் பிதாமகத் தம்பதிகளை உங்களையறியாமலேயே வாழ்த்துவதும், பாராட்டுவதும் உங்களின் முயற்சியில் அப்பட்டமாகத் தெரிகிறது. நீங்கள் எழுதும் எல்லா விமர்சனத்திற்கும் "சிங்களவர் திறமோ?" என்று நான் கேட்கவில்லை. நீங்கள் எழுதிய இந்த விமர்சனத்திற்குள்ளேயே சிங்களவர்களை வாழ்த்துகிறீர்கள், அதனால்த்தான் கேட்கிறேன். அடுத்தது, சிங்களவர் திறமோ என்று நான் கேட்பதன் மூலம், தமிழரசுக் கட்சியைப் பற்றி நீங்கள் எழுதும் அவதூறுகளை நான் ஏற்றுக்கொண்டேன் என்று யார் உங்களுக்குச் சொன்னது? நீங்களோ, மீனிளங்கோவோ அல்லது சண்முகமோ அல்லது ஈழநாட்டின் யாரோ இரு எழுத்தாளரோ எழுதினால் அது உணமையென்று ஆகிவிட வேண்டுமா? தமிழரசுக் கட்சிகுறித்தும், தமிழரின் உரிமைப் போராட்டத்தில் அதன் செயற்பாடுகள் குறித்தும் தமிழினத்திற்குள் ஒரு புரிதல் இருக்கின்றது. அந்தப் புரிதல் சிங்கள அடக்குமுறையின் கீழ் அவர்கள் பட்ட இடையறாத அழிவுகளிலிருந்து தமக்கான அரசியல்த் தலைமையாக அவர்கள் உணர்ந்து ஏற்றுக்கொண்ட தலைமை அது. அந்தத் தலைமையின் செயல் தவறானதென்றால் அன்றே அது தமிழர்களால் தூக்கியெறியப்பட்டிருக்கும். உங்கள் போன்றவர்கள் அன்று நிச்சயமாக இருந்திருப்பார்கள். சிங்கள அரசுகளின் செயற்பாடுகளை நிச்சயம் வர‌வேற்றிருப்பார்கள். ஆனால், மக்களால் ஏறெடுத்தும் பார்க்கப்பட்டிருக்க மாட்டார்கள். ஏதோவொரு கட்டுரையில், ஏதோவிரு இடத்தில் "சிங்கள அரசியல்த் தலைமை தனது சுயநலத்திற்காக தமிழரசுக் கட்சியைப் பாவித்தது" என்று மிகுந்த சிரமப்பட்டுக் காட்டவேண்டிய தேவையென்ன? இதன்மூலம் ஒருவிடயம் புலனாகிறதே கவனித்தீர்களா? அதாவது உங்களது தமிழரசுக் கட்சிக்கெதிரான, தமிழ்த்தேசியத்திற்கெதிரான விமர்சனங்களில் நீங்கள் தேவைகருதி விதைக்கும் ஓரிரு "சிங்களவர் மீதான விமர்சனம்" என்பது உங்களை நடுநிலையாளன் என்று காட்டுவதற்காக மட்டும்தான் என்பது. நீங்கள் அதைக்கூடச் செய்திருக்கத் தேவையில்லை. விமர்சிப்பது தமிழரசுக்கட்சியையும், அது ஆரம்பித்த தமிழ்த் தேசியத்தையும் தானென்னும் போது, சிங்களவரை விமர்சிக்கவேண்டிய தேவை ஏன் உங்களுக்கு? அவர்களை விடுங்கள், நேராகவே எம்மை விமர்சியுங்கள். ஏனென்றால், உங்களின் சிங்கள விமர்சனங்களை நாம் ஏற்றுக்கொள்ளவுமில்லை, அது உங்களின் நோக்கமும் அல்ல என்பதும் எமக்கு நன்கு தெரியும்.
  21. இதுதான் நடந்தது, விரும்பியல்ல. மிகத்தவறான முடிவு. கட்டாயம் செய்யப்படவேண்டிய ஒரு விடயம். ஆனால், மீட்பன் இல்லாத மந்தைகள் போல இருக்கின்றது இன்றைய தமிழினத்தின் நிலைமை.
  22. திம்புப் பேச்சுக்களுக்கு முன்னோடியாக, போராளித் தலைவர்களை தில்லிக்கு அழைத்து அழுத்தம் கொடுத்த இந்தியா 1985 ஆம் ஆண்டு ஆடி 3 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களான பிரபாகரன், சிறீ சபாரட்ணம், பத்மநாபா மற்றும் பாலக்குமார் ஆகியோரும் அவர்களின் உதவியாளர்களும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்றில் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஐந்து நட்சத்திர விடுதியான அஷோக் ஹொட்டேலில் தங்கவைக்கப்பட்டனர். அஷோக் நட்சத்திர விடுதி, தில்லி போராளிகளின் தலைவர்களுட‌ன், ரோ அதிகாரிகளும் அதேவிடத்தில் தங்கியிருந்ததுடன், அவர்களின் நடமாட்டங்களையும் நெருக்கமாக அவதானித்து வரத்தொடங்கினர். ரோ அதிகாரிகள், பாதுகாப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளியுறவுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று பலர் போராளிகளின் தலைவர்களுடன் நீண்ட பேச்சுக்களை நடத்தி வந்தனர். அவர்கள் அனைவரினதும் நோக்கமாக இருந்தது ஒன்றுதான். அதாவது பேச்சுவார்த்தைகளுக்கான நிபந்தனைகளாக அவர்கள் முன்வைத்திருக்கும் அனைத்தையும் மீளப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் அது. நிபந்தனைகளை முன்வைப்பதன் மூலம் ஜெயவர்த்தன இலகுவாக பேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதாகிவிடும் என்பதே அவர்களின் பேச்சாக இருந்தது. இந்திய அதிகாரிகளின் அழுத்தத்திற்குப் பதிலளித்த போராளிகள், ஜெயார் யுத்தநிறுத்தத்திலும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதே தனது இராணுவத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காக‌த்தான் என்று கூறினார்கள். மேலும், நாங்கள் நிபந்தனைகளை முன்வைத்தாலென்ன இல்லாதுபோனால் என்ன, அவர் எப்படியாவது பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டு தனக்கேற்ற‌ தருணத்தில் வெளியேறுவார், தனது இராணுவ பலத்தினால் தமிழ் மக்களின் ஆயுதப் பலத்தினை முற்றாக நசுக்கிவிடமுடியும் என்கிற நிலை வரும்போது அவர் இதனைச் செய்வார் என்றும் கூறினார்கள். மேலும், லலித் அதுலத் முதலி, சிங்களவர்களை இராணுவமயப்படுத்துவதில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் என்றும், இராணுவத்தினருக்கான ஆட்களைச் சேர்ப்பது, உப இராணுவப் பிரிவான ஊர்காவற்படையினை உருவாக்குவது, சிங்களக் குடியேற்றவாசிகளை ஆயுதமயப்படுத்துவது, இராணுவத்திற்கான ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் அவர் தற்போது ஈடுபட்டிருக்கிறார் என்றும் இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினர். போராளிகளின் தலைவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்த இந்திய அதிகாரிகள், இலங்கை அரசின் இராணுவ முயற்சிகள் குறித்து தாமும் அறிந்துவைத்திருப்பதாகக் கூறினர். "எமக்கென்றும் ஒரு திட்டம் இருக்கிறது, அவர் பேச்சுக்களில் இருந்து விலகிச் செல்லட்டும் பார்க்கலாம்" என்றும் அவர்கள் கூறினர். தொடர்ந்து பேசிய இந்திய அதிகாரிகள், இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காத்துக்கொள்ள இந்தியா பின்னிற்கும் எனும் உத்தரவாதத்தையும் அவர்கள் வழங்கினர். "திம்புவிற்குப் போங்கள், நாங்கள் உங்களைப் பார்த்துக்கொள்கிறோம்" என்பதே அவர்களின் அழுத்தமாக இருந்தது. போராளிகளின் தலைவர்களுடன் பேசிய இந்திய அதிகாரிகள் இன்னொரு விடயத்தையும் அழுத்தமாகக் கூறினார்கள். திம்புப் பேச்சுக்களில் பங்கேற்பதன் மூலம் அவர்களுக்கு விடுதலைப் போராளிகள் எனும் அந்தஸ்த்தினை இந்தியாவும், இலங்கையும் கொடுக்கும் என்றும், ஆகவே அச்சந்தர்ப்பம் நழுவிச் செல்வதனை அனுமதிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும், ஜெயாரைப் பேச்சுவார்த்தைக்குப் பணியவைப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரொமேஷ் பண்டாரி அதிக நேரத்தையும், சக்தியையும் செலவழித்திருப்பதாகவும் கூறினர். பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் பேசுவதில்லை எனும் நிலைப்பாட்டில் தனது அரசாங்கம் இருப்பதாக ஜெயவர்த்தன தொடர்ச்சியாகக் கூறிவந்தபோதிலும், பண்டாரி அவருடன் சளைக்காது பேசி பணியவைத்திருப்பதாக அவர்கள் கூறினர். ஹர்ச்சண்ட் சிங் லொங்கொவால் ஜெயவர்த்தனவுடன் பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்களில் ஈடுபட்டிருந்த பண்டாரி, சீக்கியப் பிரிவினைவாத போராளித் தலைவரான ஹர்ச்சண்ட் சிங் லொங்கொவாலுடன் ரஜீவ் காந்தி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதைச் சுட்டிக் காட்டி, ஜெயாரும் போராளிகளுடன் பேசவேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வந்தார். இதற்கு மேலதிகமாக தனது உதவி வெளியுறவுச் செயலரான குர்ஷீட் அலாம் கானை ஜெயாரிடம் அனுப்பிய ரஜீவ், தான் லொங்கொவாலுடன், பேச்சுவார்த்தைகள் ஊடாக பிணக்கினைத் தீர்ப்பதுபோல, தமிழ்ப் போராளிகளுடன் ஜெயவர்த்தனவும் பிரச்சினைக்கான தீர்விற்காகப் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்றும் கோரியிருந்தார். சீக்கியர்களின் பிணக்கினைத் தீர்த்துவைத்தவர் (குறிப்பு :சீக்கியர்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்த்துவைக்கப்படவில்லை என்பது வேறு விடயம்) என்று சர்வதேசத்திலிருந்து பலத்த பாராட்டுக்களை அந்நாட்களில் பெற்றிருந்த ரஜீவ், தனது பெருமைகளுக்கு வலுச்சேர்க்க ஜெயவர்த்தனவையும் தமிழ்ப் போராளிகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவர முயன்றுகொண்டிருந்தார். சீக்கிய பிரிவினைவாதப் போராளிகளின் பிரச்சினையைத் தீர்த்துவைத்தவர் என்கிற பெருமை உள்நாட்டில் ரஜீவிற்குக் கிடைத்திருந்தது. ஆகவே, இலங்கையில் தமிழருக்கான பிரச்சினையினைத் தீர்த்துவைத்தால் இப்பிராந்தியத்தில் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் என்கிற பெருமையும் அவரை வந்துசேரும் என்கிற எதிர்பார்ப்பு அவரிடத்தில் இருந்தது. 1985 ஆம் ஆண்டு ஆவணி 1 ஆம் திகதி லங்கா கார்டியன் பத்திரிக்கையில் எழுதிய மேர்வின் சில்வா, "தனது முதலாவது பிராந்திய பிணக்கினைக் களையும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த ரஜீவ், அதனை எப்பாடுபட்டாவது வெற்றியடைய வைப்பதில் அதீத பிரயத்தனம் காட்டியிருந்தார்" என்று எழுதுகிறார். போராளிகளுடன் பேசிய இந்திய ரோ அதிகாரிகள், பேச்சுவார்த்தைக்களுக்கான நிபந்தனைகளைப் போராளிகள் முவைத்துக்கொண்டிருப்பது இந்தியாவிற்கு அவமானத்தை ஏற்படுத்திவருவதாகத் தெரிவித்தனர். ஜெயவர்த்தனவுடனான பேச்சுக்களில் போராளிகளை எப்படியாவது பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவருவேன் என்று ரொமேஷ் பண்டாரி உறுதியளித்திருந்தார். ஆகவே, அவ்வாறு அவர்களை அழைத்துவரமுடியாத பட்சத்தில், பிராந்திய வல்லரசான இந்தியாவிற்கு அது பெருத்த அவமானமாக மறிவிடும் என்று அவர்கள் கூறினார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, போராளிகளை நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைக்கு அழைத்துவருவதென்பது கெளரவப் பிரச்சினையாக மாறியிருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். "ஆகவே, நீங்கள் கட்டாயம் திம்புவிற்குச் சென்றே ஆகவேண்டும்" என்று விடாப்பிடியாக அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். ஒருபடி மேலே சென்ற சந்திரசேகரன், "நீங்கள் புரியும் விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு விடும்படி நாங்கள் கோரவில்லை. ஆனால், நீங்கள் கட்டாயம் திம்புப் பேச்சுக்களுக்குச் சென்றே ஆகவேண்டும்" என்று போராளிகளைக் கேட்டுக்கொண்டார். தில்லியில் அமைந்திருக்கும் ரோ வின் தலைமைக் காரியாலயத்தில், அதன் அன்றைய தலைவர் சக்சேனாவிற்கும் போராளிகளின் தலைவர்களுக்குமிடையே உச்சச் சந்திப்பொன்று இடம்பெற்றது. கராரான தொனியில், மிகுந்த அதிகாரத்துடன் பேசிய சக்சேனா, "நீங்கள் இந்தியாவுடன் ஒத்துப்போவதைத் தவிர‌ வேறு வழியில்லை என்று கூறினார். இந்திரா காந்தியின் காலத்தில் நாங்கள் உங்களைப் பார்த்துக்கொண்டோம், உங்களுக்கான முகாம்களையும், மறைவிடங்களையும் அமைக்க எமது நாட்டைத் தந்திருந்தோம், ஆனால் எமது புதிய அரசாங்கமோ தென்னாசியப் பிராந்தியத்தை சமாதானப் பூங்காவாக மாற்ற விரும்புகிறது. அதன் அடிப்படையிலேயே இலங்கையுடனான உங்களின் பேச்சுக்களும் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றன" என்று அவர் கூறினார். "உங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு இலங்கையரசாங்கத்தைப் பணியவைப்பதில் மிகக்கடுமையான முயற்சிகளில் பண்டாரி இறங்கியிருக்கிறார். அதனை நீங்கள் ஒரு பெருவெற்றியாகவே பார்க்க வேண்டும். நீங்கள் முன்வைக்கும் நிபந்தனைகளால் திம்புப் பேச்சுவார்த்தைகளுக்கு தனது அணியைனை அனுப்பிவைப்பதிலிருந்து ஜெயார் நழுவிக்கொள்ள சந்தர்ப்பம் ஒன்றினை நீங்கள் வழங்கப் போகிறீர்கள். ஆகவே, இந்தியாவின் முயற்சிகளுக்கு நீங்கள் கட்டாயம் ஒத்துழைப்புத் தந்தே ஆகவேண்டும்" என்று அவர்களைப் பார்த்து சக்சேனா கூறினார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.