Everything posted by பெருமாள்
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
வணக்கம் சுண்டல். உங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.
-
இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை
அந்த மேல் தட்டு கொள்கை வகுப்பாளர்களின் முடிவே நாம் இப்படி நாடிழந்து தெரு தெருவாய் அலைவதுக்கு ஒரு காரணம் .
-
இலங்கையில் அவசர தரையிறக்க தளம் அமைக்க தயாராகும் அமெரிக்கா
இலங்கை புவிசார் அரசியல் போட்டி நாடாக இருக்கும் நிலையில் இலங்கையில் அவசர தரையிறக்க தளம் அமைக்க அமெரிக்கா தயாராகும் என அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். அதாவது மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இது தொடர்பில் இரகசிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாகவும், பின்னர் மைத்திரி,ரணில் ஆட்சிக்காலத்தில் நீடிக்கப்பட்ட நிலையில் கோட்டாபய ராஜபக்ச அதற்கு தடையேற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆசியாவில் தான் ஒரு வளர்ந்து வரும் வல்லரசு நாடு என்ற அடிப்படையில் இந்தியா தன்னுடைய கட்டுப்பாட்டில் இலங்கை இருக்க வேண்டும் என்று நினைக்கின்றது. அதற்கும் மேலாக அமெரிக்காவும் பல முயற்சிகளை செய்து வருகின்றது. இந்த விடயத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான ஒரு முறுகல் திரைமறைவில் மறைமுகமாக இருக்கத்தான் செய்கின்றது. இந்த நிலையில், இலங்கையில் அமெரிக்காவும் இந்தியாவும் போட்டி போட்டால் அது இரு தரப்பு போட்டியல்ல. அது முத்தரப்பு போட்டி. அதில் சீனாவின் கையே ஓங்கியிருக்கும். இலங்கையை பொறுத்தமட்டில் மகா சங்கத்தினர் பலம் அதிகம். அவர்கள் சீனாவுக்கே தங்களது ஆதரவு கொடுப்பர். குறிப்பாக, இலங்கையில் அரகலய போராட்டத்தின் போது மகா சங்கத்தினர் ஓரங்கட்டப்பட்டனர். https://tamilwin.com/article/america-new-project-in-srilanka-1719067659
-
மரணத் தருவாயில் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றனவா?
நாம் வாழ்வது ஒரு Simulation உலகம் என்கிறார்கள் நான் முதலில் நம்பவில்லை ஆனால் நடக்கும் செயல்கள் அதை உறுதி படுத்துவது போல் உள்ளது .
-
மரணத் தருவாயில் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றனவா?
கொஞ்ச நாளா இந்த தமிழ் பிபிசி இருக்கும் இல்லையா எடுக்கும் இல்லையா இப்படித்தான் செய்தி போடுகிறது லேபர் வரட்டும் இருக்குது கைமா .
-
மருந்துகள், எரிபொருள், உரம் கிடைக்காமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறக்கக் கூடாது! - ஜனாதிபதி ரணில்
ஒரு மாதம் வாகன இறக்குமதி தடுப்பை எடுத்து விட்டு பாருங்க ரணில் கட்டியிருக்கும் .............. களவாடபட்டு இருக்கும் .
-
மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது; ஸ்டாலின் சீற்றம்; ஜெய்சங்கருக்கு கடிதம்
இந்த படம் போட்ட தே ????
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
https://www.courrierinternational.com/depeche/dupes-des-sri-lankais-combattent-en-ukraine-et-n-en-reviennent-pas.afp.com.20240611.doc.34vj969.xml. நன்றி இணையவனுக்கு சிங்களம் படும் பாடை விளக்கமாக சொல்லியுள்ளார்கள் .
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
அந்த விபரம் யாழில் பலமுறை பதில் அளிக்கபட்டு விட்டது தேடி படித்து கொள்ளுங்க மீண்டும் மீண்டும் எழுத லண்டன் யுனிவேர்சளில் இருக்கும் ஆள் நான் அல்ல கொஞ்சம் பிழை விட்டாலும் லண்டன் hmrc காரன்கள் கண்ணுக்குள் ரில்லர் விடுவார்கள்.
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
அந்த தளர்வுகள் சமஸ்ட்டியை விட கூடவாக இருக்குமா ? அதனால் 3௦ வருட போராட்டத்துக்கு தீர்வு வரும் என்று நினைகிறீர் களா ? அதனால் என்பது ரணிலால் என்று புரிந்து கொள்ளனும் .
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
அப்படியா ரணில் வந்து இருந்தால் தமிழர்களுக்கு நல்லது அப்ப புலி இல்லாத இந்த கால கட்டத்தில் ரணில் தமிழருக்கு செய்த ஒரு நல்ல வேலை ஒன்றை சொல்லுங்கள் ? கேள்வி உங்களுக்கானது அல்ல உங்களுக்கானது ..........வேறு இடத்தில்
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
அப்போதைய புலிகளின் முடிவில் எதை செய்து இருந்தால் சரியாகி இருக்கும் என்று சொல்ல வருகிறீர்கள் ?
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
கவி ஐய்யா கேட்கிறேன் என்று குறை நினைக்க கூடாது நீங்கள் இன்னும் ஊரிலா அதாவது இலங்கையிலா உள்ளீர்கள் ?
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
உருப்பட வெளிகிட்டாலும் சுத்து மாத்து சுமத்திரன் போன்றவர்கள் விடமாட்டார்கள் அண்ணா .
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
அவரே துரோகி என்று எவன் சொன்னாலும் தனக்கு கவலையில்லை என்பவர் மூன்று சிங்கள வேட்பாளர்களில் ஒருத்தரை கை காட்ட வேண்டியதுதானே ?
-
இலங்கை தமிழர்களுக்காக தனி நாடு அமைக்க வேண்டுமென விரைவில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன்-மதுரை ஆதீனம்!
இன்னமுமா நம்புறாங்கள் ஈழத்தில் சிவன் ஆலயங்கள் இடிக்கப்பட்டு புத்த கோவில் அமைக்கும் போது கூட தடுக்க வக்கற்ற அந்த மோடியா தனிநாடு அமைக்கப்போறார் ஆதீனத்தை மன நல விடுதியில் சேர்ப்பது இருக்கிற தமிழ் மக்களுக்கு நல்லது .
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
பொது தமிழ் வேட்பாளரை வேணாம் என்று சுடுதண்ணியை குடித்தவர் போல் மேடையில் உணர்ச்சி வசப்பட்டு கத்துகிறவர் மூன்று சிங்கள வேட்பாளர்களில் யாரையுமே அவர் சார்பில் தெரிவிக்கவில்லை இதுதான் சுத்து மாத்து வழக்கம்போல் தமிழர்களை குழப்பி அடிப்பதுதான் அவரின் (அவர் என்று மரியாதை கொடுத்து எழுதுவதுக்கு கூட தகுதி அற்றவர் ) ஒரே தொழில் .
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
- தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
சிரிப்பு சிரிப்பாய் வருகிறது ஏற்கனவே அவர் தமிழர்களுக்கு துரோகி தானே போர் குற்றம் தொடர்பில் . தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தினால் தோற்கடிப்பேன்! துரோகி பட்டம் தாருங்கள்! சுமந்திரன் ஆவேசம். தேர்தலிலே வாக்குகளை புறக்கணிப்பதாலும் வேறு ஒருவருக்கு வாக்களிப்பதால் ஏற்படும் விளைவுகளை நாம் சந்தித்திருந்த நிலையில் தமிழர்களுடைய வாக்குகளை நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் தீர்மானம்மிக்க வாக்குகளாக மாற்றியமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார். “மக்கள் மன்றில் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும்” எனும் தலைப்பில் அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக் கள நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு ஆர்வம் மேலும் தெரிவிக்கையில், “2005 இல் இடம்பெற்ற தேர்தலில் வாக்குகளை புறக்கணித்திருந்த நிலையில் அதன் விளைவுகளை சந்தித்திருந்தோம். ஆகையினால் இந்த வாக்கை பிரயோசனமான முறையிலே நாங்கள் ஒரு ஜனநாயக சூழலிலே மற்றவர்கள் மூன்றாகப் பிரிந்து இருக்கிற போது நாங்கள் தீர்மானிக்கிற சக்தியாக எங்களுடைய வாக்கை திரட்ட முடியும் என்றால் அது எங்களுக்கு மிகவும் பலமானதாக இருக்கும். அதை நாங்கள் செய்வது நல்லது என்ற என்னுடைய கருத்தை சொல்லி வைக்கிறேன். இப்படியாக இதுபோன்ற கருத்துக்கள் வெளிப்படுத்தும் கலந்துரையாடல்களை பல இடங்களிலும் நடத்தப்பட வேண்டும். தற்போது வவுனியாவிலும் மன்னாரிலும் கிழக்கு மாகாணத்திலும் இருந்து நடத்த வேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் இப்படியாக பேசுவது நல்லது. இந்த விடயங்களை பகிரங்கமாக மக்களோடு சேர்ந்து பேசுவது நல்லது என்பதுடன் மிகவும் ஆரோக்கியமானது. அதை தவிர்க்கிறவர்கள் தவிர்க்கலாம். ஆனால் மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்று இன்று திரளாக வந்த உங்களுடைய வருகை எங்களுக்கு எடுத்துக்காட்டி இருக்கின்றது. ரஷ்யா பயணமாகும் அலி சப்ரி பொதுத்தேர்தல் இந்நிலையில் 2010ஆம் ஆண்டு தேர்தலில் எங்களுடைய மக்கள் 3 இலட்சம் பேருக்கு அண்மித்ததாக முட்கம்பி வேலிகளுக்குள் இருக்கிற பொழுது கூட வாக்களித்தார்கள். அதன் பின்னர் மூன்று மாதங்களில் பிறகு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எங்களுக்கு கிடைத்த வாக்கைவிட போரில் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிற்கு இரண்டு மடங்கு வாக்குகள் கொடுத்தார்கள். அடுத்த தடவை நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்து மைத்திரிபால சிறிசேனாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று சொன்னபோது எங்களுடைய மக்கள் வாக்களித்தார்கள். இந்த இடத்தில் மைத்திரிக்கு வாக்களித்து அதனால் என்ன நடந்தது என்று சிலர் கேட்கின்றார்கள். ஆனால் அதில் ஆனது என்னவென்று எங்களில் பலருக்கு தெரியும். ஆனால் முடிவு ஒன்றும் பெறவில்லை என்பதை தவிர நடந்த பல விஷயங்கள் பலருக்கு தெரியும். புதிய அரசியலமைப்பு இதில் விசேஷமாக எங்களுடைய நிலங்கள் விடுவிக்கப்பட்டது ஒரு பெரிய விஷயம். அந்த காலகட்டத்தில் எங்கெங்கு எவ்வளவு விடுவிக்கப்பட்டது என்ற புள்ளி விவரங்கள் இருக்கின்றன அதனைச் சொல்லி நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை . குறித்த காலகட்டத்தில் தான் எங்களுடைய பல நிலங்கள் விடுவிக்கப்பட்டது. அது எங்களுடைய இருப்புக்கு அத்தியாவசியமானது. எங்களுடைய சுயநிர்ணய உரிமை என்று நாங்கள் சொல்லுவதற்கு அடிப்படையானது. அப்படி காணி விடுவிப்பு பெரியளவில் நடந்தது. அதேபோன்று ஒரு புதிய அரசியலமைப்புக்கான முயற்சியும் நடந்தது. ஆனால் அது நிறைவு பெறவில்லை. இந்நிலையில், அடுத்த தேர்தலில் மக்கள் தாங்கள் தீர்மானமாக வாக்குகளை அளித்திருந்தார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/votes-tamils-converted-decisive-votes-sumanthran-1717999137- இந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்!
கண்ணீர் அஞ்சலிகள்.- தென்னிந்திய படகு உரிமையாளர்களின் படகுகளை பறிமுதல் செய்யும் கட்டளை இரத்து : யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவு
இனி கதை அவ்வளவுதான் .- டெல்லி தும்மினால் கொழும்புக்கு சளி பிடிக்கும்: சுட்டிக்காட்டப்பட்ட யதார்த்தங்கள்
டெல்லி (Delhi) தும்மினால், கொழும்புக்கு (Colombo) சளி பிடிக்கும் என்ற துணைக் கண்டத்தில் உள்ள இராஜதந்திரிகளுக்குத் தெரிந்த ஒரு பழைய நகைச்சுவையை இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தமது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. இது நகைச்சுவை என்பதை காட்டிலும், இது, தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையே உள்ள வலுவான மற்றும் வரலாற்று சமூக - அரசியல் தொடர்புகளை கோடிட்டு காட்டுகிறது. அத்துடன், அதன் விளைவாக வரும் நீரோட்டங்கள் டெல்லியை விட கொழும்பில் அரசியல் முன்னேற்றங்களை காட்டுவதாக அந்த ஆசிரியர் தலையங்கத்திலை: ராகுலை எதிர்க்கட்சி தலைவராக்க தீர்மானம் பதவியேற்கும் நிகழ்வு இந்த நாட்டில் ஒரு புதிய ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ தேர்ந்தெடுக்கப்பட்டால், அங்குள்ள அதிகாரங்களுக்கு பூஜை செய்ய டெல்லிக்கு அலைவது பெரும்பாலும் கட்டாயமாகிவிட்டது. இந்நிலையில், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடியின் மூன்றாவது முறையாக பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கை ஜனாதிபதியை அழைத்துள்ளமையும், வழமையான ஒன்றாகும் என்று குறித்த ஆங்கில இதழ் கூறுகிறது. இலங்கையின் நெருக்கடி பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் கொழும்பை மீட்டெடுக்க விரைந்த இந்தியா, குறிப்பாக மோடி நிர்வாகம், இறக்குமதியை செலுத்த அவசர நிதியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த உதவிப் பொதியின் மூலம் நாட்டை முழுமையான பொருளாதார அராஜகத்திற்குள் தள்ளாமல் தடுத்தது என்பது நினைவுகூரத்தக்கது. எனினும் கூட, அரசியல் விமர்சகர்கள் இந்த 'நட்பு உதவியை' குறைவான பாராட்டு வார்த்தைகளில் விபரித்துள்ளனர். ஒரே கல்லில் இரண்டு பறவைகளைக் கொன்றதன் மூலம் டெல்லி இலங்கையின் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டதாக அவர்கள் சுட்டிக்காட்டுவதாக ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், முன்னைய ஆட்சிக் காலத்தை காட்டிலும் தற்போதைய ஆட்சியில் பங்காளிகளை சார்ந்திருக்கும் மோடி, உள்நாட்டு விடயங்களில் அதிகம் கவனம் செலுத்தவேண்டியிருக்கும் என்றும் அந்த ஆசிரியர் தலையங்கம் கூறுகிறது. https://tamilwin.com/article/relationship-of-india-and-sri-lanka-described-1717898468?itm_source=parsely-api- பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
லண்டன் மட்டும் என்னவாம் ? Ealing Rd, Wembley சிவப்பு பாக்கு துப்பல்கள் ஒரு சில இடங்களில் கலர்மாறி விட்டு இருக்கும் அவ்வளவு அகோரம் .- அமெரிக்காவின் எல்லைக்குள் செல்லும் ரஸ்ய ஆயுதங்கள்
அட இந்த அருஸ் இன்னும் புரூஸ் விடுகிறதா கொஞ்சம் இஞ்சி கோப்பி விடுங்க நுணா அந்த லூசுக்கு . அது சரி இந்த லூசை யார் போரியல் ஆய்வாளர் என்று சொன்னது ?- எம்மை பிரிக்க முடியாது
கொலம்பான் நீங்களாவது சொல்லுங்க பாஸ் இந்த செய்தியை படித்து விட்டு யாழில் இணைக்கும் அளவுக்கு அருகதை கிடையாது என்று விட்டேன் ஆனால் பொல்லை கொடுத்து அடிவாங்க வென்றே ............................. - தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.