Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. அப்போதைய புலிகளின் முடிவில் எதை செய்து இருந்தால் சரியாகி இருக்கும் என்று சொல்ல வருகிறீர்கள் ?
  2. கவி ஐய்யா கேட்கிறேன் என்று குறை நினைக்க கூடாது நீங்கள் இன்னும் ஊரிலா அதாவது இலங்கையிலா உள்ளீர்கள் ?
  3. உருப்பட வெளிகிட்டாலும் சுத்து மாத்து சுமத்திரன் போன்றவர்கள் விடமாட்டார்கள் அண்ணா .
  4. அவரே துரோகி என்று எவன் சொன்னாலும் தனக்கு கவலையில்லை என்பவர் மூன்று சிங்கள வேட்பாளர்களில் ஒருத்தரை கை காட்ட வேண்டியதுதானே ?
  5. இன்னமுமா நம்புறாங்கள் ஈழத்தில் சிவன் ஆலயங்கள் இடிக்கப்பட்டு புத்த கோவில் அமைக்கும் போது கூட தடுக்க வக்கற்ற அந்த மோடியா தனிநாடு அமைக்கப்போறார் ஆதீனத்தை மன நல விடுதியில் சேர்ப்பது இருக்கிற தமிழ் மக்களுக்கு நல்லது .
  6. பொது தமிழ் வேட்பாளரை வேணாம் என்று சுடுதண்ணியை குடித்தவர் போல் மேடையில் உணர்ச்சி வசப்பட்டு கத்துகிறவர் மூன்று சிங்கள வேட்பாளர்களில் யாரையுமே அவர் சார்பில் தெரிவிக்கவில்லை இதுதான் சுத்து மாத்து வழக்கம்போல் தமிழர்களை குழப்பி அடிப்பதுதான் அவரின் (அவர் என்று மரியாதை கொடுத்து எழுதுவதுக்கு கூட தகுதி அற்றவர் ) ஒரே தொழில் .
  7. சிரிப்பு சிரிப்பாய் வருகிறது ஏற்கனவே அவர் தமிழர்களுக்கு துரோகி தானே போர் குற்றம் தொடர்பில் . தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தினால் தோற்கடிப்பேன்! துரோகி பட்டம் தாருங்கள்! சுமந்திரன் ஆவேசம். தேர்தலிலே வாக்குகளை புறக்கணிப்பதாலும் வேறு ஒருவருக்கு வாக்களிப்பதால் ஏற்படும் விளைவுகளை நாம் சந்தித்திருந்த நிலையில் தமிழர்களுடைய வாக்குகளை நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் தீர்மானம்மிக்க வாக்குகளாக மாற்றியமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார். “மக்கள் மன்றில் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும்” எனும் தலைப்பில் அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக் கள நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு ஆர்வம் மேலும் தெரிவிக்கையில், “2005 இல் இடம்பெற்ற தேர்தலில் வாக்குகளை புறக்கணித்திருந்த நிலையில் அதன் விளைவுகளை சந்தித்திருந்தோம். ஆகையினால் இந்த வாக்கை பிரயோசனமான முறையிலே நாங்கள் ஒரு ஜனநாயக சூழலிலே மற்றவர்கள் மூன்றாகப் பிரிந்து இருக்கிற போது நாங்கள் தீர்மானிக்கிற சக்தியாக எங்களுடைய வாக்கை திரட்ட முடியும் என்றால் அது எங்களுக்கு மிகவும் பலமானதாக இருக்கும். அதை நாங்கள் செய்வது நல்லது என்ற என்னுடைய கருத்தை சொல்லி வைக்கிறேன். இப்படியாக இதுபோன்ற கருத்துக்கள் வெளிப்படுத்தும் கலந்துரையாடல்களை பல இடங்களிலும் நடத்தப்பட வேண்டும். தற்போது வவுனியாவிலும் மன்னாரிலும் கிழக்கு மாகாணத்திலும் இருந்து நடத்த வேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் இப்படியாக பேசுவது நல்லது. இந்த விடயங்களை பகிரங்கமாக மக்களோடு சேர்ந்து பேசுவது நல்லது என்பதுடன் மிகவும் ஆரோக்கியமானது. அதை தவிர்க்கிறவர்கள் தவிர்க்கலாம். ஆனால் மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்று இன்று திரளாக வந்த உங்களுடைய வருகை எங்களுக்கு எடுத்துக்காட்டி இருக்கின்றது. ரஷ்யா பயணமாகும் அலி சப்ரி பொதுத்தேர்தல் இந்நிலையில் 2010ஆம் ஆண்டு தேர்தலில் எங்களுடைய மக்கள் 3 இலட்சம் பேருக்கு அண்மித்ததாக முட்கம்பி வேலிகளுக்குள் இருக்கிற பொழுது கூட வாக்களித்தார்கள். அதன் பின்னர் மூன்று மாதங்களில் பிறகு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எங்களுக்கு கிடைத்த வாக்கைவிட போரில் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிற்கு இரண்டு மடங்கு வாக்குகள் கொடுத்தார்கள். அடுத்த தடவை நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்து மைத்திரிபால சிறிசேனாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று சொன்னபோது எங்களுடைய மக்கள் வாக்களித்தார்கள். இந்த இடத்தில் மைத்திரிக்கு வாக்களித்து அதனால் என்ன நடந்தது என்று சிலர் கேட்கின்றார்கள். ஆனால் அதில் ஆனது என்னவென்று எங்களில் பலருக்கு தெரியும். ஆனால் முடிவு ஒன்றும் பெறவில்லை என்பதை தவிர நடந்த பல விஷயங்கள் பலருக்கு தெரியும். புதிய அரசியலமைப்பு இதில் விசேஷமாக எங்களுடைய நிலங்கள் விடுவிக்கப்பட்டது ஒரு பெரிய விஷயம். அந்த காலகட்டத்தில் எங்கெங்கு எவ்வளவு விடுவிக்கப்பட்டது என்ற புள்ளி விவரங்கள் இருக்கின்றன அதனைச் சொல்லி நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை . குறித்த காலகட்டத்தில் தான் எங்களுடைய பல நிலங்கள் விடுவிக்கப்பட்டது. அது எங்களுடைய இருப்புக்கு அத்தியாவசியமானது. எங்களுடைய சுயநிர்ணய உரிமை என்று நாங்கள் சொல்லுவதற்கு அடிப்படையானது. அப்படி காணி விடுவிப்பு பெரியளவில் நடந்தது. அதேபோன்று ஒரு புதிய அரசியலமைப்புக்கான முயற்சியும் நடந்தது. ஆனால் அது நிறைவு பெறவில்லை. இந்நிலையில், அடுத்த தேர்தலில் மக்கள் தாங்கள் தீர்மானமாக வாக்குகளை அளித்திருந்தார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/votes-tamils-converted-decisive-votes-sumanthran-1717999137
  8. டெல்லி (Delhi) தும்மினால், கொழும்புக்கு (Colombo) சளி பிடிக்கும் என்ற துணைக் கண்டத்தில் உள்ள இராஜதந்திரிகளுக்குத் தெரிந்த ஒரு பழைய நகைச்சுவையை இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தமது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. இது நகைச்சுவை என்பதை காட்டிலும், இது, தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையே உள்ள வலுவான மற்றும் வரலாற்று சமூக - அரசியல் தொடர்புகளை கோடிட்டு காட்டுகிறது. அத்துடன், அதன் விளைவாக வரும் நீரோட்டங்கள் டெல்லியை விட கொழும்பில் அரசியல் முன்னேற்றங்களை காட்டுவதாக அந்த ஆசிரியர் தலையங்கத்திலை: ராகுலை எதிர்க்கட்சி தலைவராக்க தீர்மானம் பதவியேற்கும் நிகழ்வு இந்த நாட்டில் ஒரு புதிய ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ தேர்ந்தெடுக்கப்பட்டால், அங்குள்ள அதிகாரங்களுக்கு பூஜை செய்ய டெல்லிக்கு அலைவது பெரும்பாலும் கட்டாயமாகிவிட்டது. இந்நிலையில், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடியின் மூன்றாவது முறையாக பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கை ஜனாதிபதியை அழைத்துள்ளமையும், வழமையான ஒன்றாகும் என்று குறித்த ஆங்கில இதழ் கூறுகிறது. இலங்கையின் நெருக்கடி பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் கொழும்பை மீட்டெடுக்க விரைந்த இந்தியா, குறிப்பாக மோடி நிர்வாகம், இறக்குமதியை செலுத்த அவசர நிதியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த உதவிப் பொதியின் மூலம் நாட்டை முழுமையான பொருளாதார அராஜகத்திற்குள் தள்ளாமல் தடுத்தது என்பது நினைவுகூரத்தக்கது. எனினும் கூட, அரசியல் விமர்சகர்கள் இந்த 'நட்பு உதவியை' குறைவான பாராட்டு வார்த்தைகளில் விபரித்துள்ளனர். ஒரே கல்லில் இரண்டு பறவைகளைக் கொன்றதன் மூலம் டெல்லி இலங்கையின் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டதாக அவர்கள் சுட்டிக்காட்டுவதாக ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், முன்னைய ஆட்சிக் காலத்தை காட்டிலும் தற்போதைய ஆட்சியில் பங்காளிகளை சார்ந்திருக்கும் மோடி, உள்நாட்டு விடயங்களில் அதிகம் கவனம் செலுத்தவேண்டியிருக்கும் என்றும் அந்த ஆசிரியர் தலையங்கம் கூறுகிறது. https://tamilwin.com/article/relationship-of-india-and-sri-lanka-described-1717898468?itm_source=parsely-api
  9. லண்டன் மட்டும் என்னவாம் ? Ealing Rd, Wembley சிவப்பு பாக்கு துப்பல்கள் ஒரு சில இடங்களில் கலர்மாறி விட்டு இருக்கும் அவ்வளவு அகோரம் .
  10. அட இந்த அருஸ் இன்னும் புரூஸ் விடுகிறதா கொஞ்சம் இஞ்சி கோப்பி விடுங்க நுணா அந்த லூசுக்கு . அது சரி இந்த லூசை யார் போரியல் ஆய்வாளர் என்று சொன்னது ?
  11. கொலம்பான் நீங்களாவது சொல்லுங்க பாஸ் இந்த செய்தியை படித்து விட்டு யாழில் இணைக்கும் அளவுக்கு அருகதை கிடையாது என்று விட்டேன் ஆனால் பொல்லை கொடுத்து அடிவாங்க வென்றே .............................
  12. இரண்டு பேருமே யார் எந்த ஆட்கள் என்பதை மடவலவும் யாழ் முஸ்லீமும் மறைப்பதில் அவர்கள் யார் என்பது புரிகிறது நடத்துங்க பாஸ் .🤪
  13. நன்றி நன்றி பெரியவர் ...................................................... நிறைய எனது பாசையில் எழுத கை குறுகுறுக்குது இன்று வெள்ளி வேறை தங்களுக்கு பிபிசி யை விட உலக அறிவு கூட எனும் முட்டாள் தலைகள் இங்கு நிப்பினம் இந்த லொள்ளு வேணாம் இனிய இரவு உங்களுக்கு .
  14. தமிழர்கள் யாரும் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது... வாட்டாள் நாகராஜ் திமிர் பேச்சு Read more at: https://tamil.oneindia.com/news/bangalore/tamilan-s-can-not-enter-into-karnataka-vattal-nagaraj-has-warned-338779.html
  15. தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் திடீரென்று கலகம் தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் திடீரென்று கலகம் webteam Published on: 18 Jan 2018, 9:41 am தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் திடீர் கலகம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு வீதிகளில் வைக்கப்பட்டிருந்த பொங்கல் வாழ்த்து சம்பந்தமான பதாகைகளை கன்னட மொழி சார்ந்த அமைப்பினர் கிழித்தெறிந்து ஆர்ப்பார்ட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு ட்ரினிட்டி ரோட்டில் வசிக்கும் தமிழர்கள், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி வாழ்த்து பதாகைகள் வைத்திருந்தனர். அதற்கு எதிராக பலர் திடீர் கலகத்தில் ஈடுப்பட்டனர். சாலைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அடித்து கிழித்தெறிந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைபோன்ற சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதமும் நடைபெற்றுள்ளது. தமிழ் பதாகைகளை பார்த்த சில கன்னட அமைப்பினர் அதனை அடித்து நொறுக்கி இருந்தனர். இதை போல சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்கதையாகியுள்ளது. இச்சம்பவத்திற்கு பல்வேறு தமிழ் அமைப்பிகளிடம் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதற்கு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடவில்லை என அப்பகுதி வாசிகள் புகார் கூறுகின்றனர். இந்நிலையில் கன்னட மொழி வெறியர்களின் இந்த வெறிச் செயல் சார்ந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் மிக வேகமாக பரவி வருகின்றன. https://www.puthiyathalaimurai.com/india/there-has-been-a-sudden-rebellion-against-tamils-------in-karnataka- பிழைப்பு தேடி சென்ற தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட கதை - 1970களில் மும்பையில் என்ன நடந்தது? 1970களில் மும்பையில் வேலைக்காகக் குடிபெயர்ந்த தமிழர்களை விரட்டியடிக்க சிவசேனா முன்வைத்த முழக்கங்கள் இவை. இந்த மராட்டிய வாக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்தால் அவை மோசமான அர்த்தத்தைக் கொண்டிருக்கும். பிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வேலைக்காக தமிழ்நாட்டுக்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம், சமீபத்தில் பரப்பப்பட்ட வதந்தியால் பேசுபொருளாகியுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து கடந்த சில காலமாக தமிழகத்தில் பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுகளைப் போலவே, மகாராஷ்டிராவில் 1970களில் தமிழர்களுக்கு எதிராகவு போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்றன. அந்த வன்முறைகளைத் தொடர்ந்து தமிழகத்திற்குத் திரும்பி வந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மகிழ்நன் " இப்போது நடந்துகொண்டிருக்கும் வடமாநில தொழிலாளர்கள் மீதான வெறுப்புப் பேச்சுகள் மற்றும் சர்ச்சைகள் மிகவும் தவறானது," என்று பிபிசியிடம் கூறினார். 'மராட்டி மானோஸ்' பால் தாக்கரே, சிவசேனா கட்சியை உருவாக்கியபோது அவர் முன்வைத்த முதன்மை முழக்கம் 'மராட்டி மானோஸ்' (Marathi Manoos) தான். இதன் பொருள் 'மண்ணின் மைந்தர்கள்'. வேலைவாய்ப்புகளில், தென்னிந்தியர்களைவிட மகாராஷ்டிரா மாநிலத்தின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அரசியல் களத்தில் இறங்கிய பால் தாக்கரே இதற்காகப் பல போராட்டங்களை நடத்தினார். இதையொட்டி சில வன்முறைகளும் நடந்தன. சிவசேனா என்ற அமைப்பின் அடிநாதமாக இந்த 'மராட்டி மானோஸ்' என்ற முழக்கம் இருந்தது. 1966ஆம் ஆண்டு அந்தக் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து, இன்று வரை பல்வேறு கட்டங்களில் இந்த முழக்கம் மும்பையிலும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் ஒலிக்கிறது. மராட்டிய மக்களுக்காக அரசியல் களம் கண்ட பால் தாக்கரேவின் அரசியல் பயணம் அவரது தந்தையின் பயணத்தின் ஒரு நீட்சியாகவே இருந்தது. ‘தாராவி மும்பை தமிழர்களின் கோட்டை’ - நூற்றாண்டு பந்தத்தின் கதை என்ன?29 ஜூலை 2019 ராணுவத்தின் பிடியில் மியான்மர்: பரிதவிக்கும் 10 லட்சம் தமிழர்களின் குமுறல்கள்10 பிப்ரவரி 2021 பாஜகவின் 'இந்துத்துவா' உத்தவ் தாக்கரேவின் இந்துத்துவத்தை ஓரங்கட்டி விட்டதா?30 ஜூன் 2022 சம்யுக்த மகாராஷ்டிரா பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா விடுதலை பெற்ற பிறகு, மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு வந்த காலம். 1950களில் மும்பை(அன்றைய பம்பாய்) தங்களுக்கு வேண்டும் என்று குஜராத்தும் மகாராஷ்டிராவும் போட்டியிட்டன. அப்போது இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டத்தை முன்னெடுத்த 'சம்யுக்த மகாராஷ்டிரா' (ஒருங்கிணைந்த மகாராஷ்டிரா) இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் கேஷவ் தாக்கரேவும் ஒருவர். இவர் பிரபோதன்கர் தாக்கரே என்ற பெயரால் பிரபலமாக அடையாளம் காணப்பட்டார். இவரது மகன்தான் சிவசேனா அமைப்பின் நிறுவனரான பால் தாக்கரே. இது மட்டுமின்றி பிராமணர் அல்லாதோர் சங்கத்தின் நிர்வாகியாக ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் உள்ளிட்டோருடன் பால் தாக்கரேவின் தந்தை பிரபோதன்கர் பணியாற்றியுள்ளார். இந்த அமைப்பு மூடநம்பிக்கை, வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. வரதட்சணை வாங்கும் நபரின் வீட்டுக்கு முன்பாகச் சென்று கழுதையைக் கட்டி வைத்து போராடுவது எனப் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார் பால் தாக்கரேவின் தந்தை. மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது மும்பையில் உள்ள பிராமணர்கள் தாக்கப்பட்டனர். பிரபோதன்கர் தங்கியிருந்த பகுதிக்கு போராட்டகாரார்கள் வந்தபோது அவர்களிடம், "நான் இருக்கும் இடத்தில் எப்படி பிராமணர்கள் இருக்க முடியும்? நான் அவர்களை ஏற்கெனவே விரட்டி அடித்துவிட்டேன்," என்று தெரிவித்தார். ஒரு கூட்டத்தில் இதைக் குறிப்பிட்டுப் பேசிய பால் தாக்கரே, அன்று எனது தந்தை பொய் சொல்லி பிராமணர்களைக் காப்பாற்றினார். என் தந்தை பிராமண ஆதிக்கத்திற்கு எதிராகத்தான் போராடினார். தனிப்பட்ட பிராமணர்களுக்கு அவர் விரோதி அல்ல," என்று குறிப்பிட்டார். இதுபோன்ற அரசியல் பின்னணியில் இருந்து வந்தவர்தான் பால் தாக்கரே. மர்மிக் இதழின் பிறப்பு பட மூலாதாரம்,SHIVSENA.ORG படக்குறிப்பு,1965ஆம் ஆண்டு மர்மிக் இதழில் வெளி வந்த கேலிச் சித்திரம் அடிப்படையில் ஒரு கார்ட்டூனிஸ்ட்டான (கேலிச் சித்திரம் வரையும் ஓவியக் கலைஞர்) பால் தாக்கரே, Free Press Journal என்ற ஆங்கில நாளிதழில் அரசியல் கேலிச் சித்திரம் வரையும் வேலையில் இருக்கிறார். புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்டான ஆர்.கே.லட்சுமணன் உடன் இந்தப் பத்திரிகையில் வேலை பார்த்து வந்தார் தாக்கரே. 1950களின் பிற்பகுதியில், தனது பத்திரிகை ஆசிரியருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனது வேலையை உதறி விடுகிறார் அவர். மும்பையை மகாராஷ்டிராவின் ஓர் அங்கமாக ஆக்காமல், யூனியன் பிரதேசமாக மாற்றவேண்டும் என்ற தனது நாளிதழிலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வேலையைவிட்டு வெளியேறினார். பிறகு சொந்தமாக வார இதழ் ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டு, தனது சகோதரருடன் சேர்ந்து 'மர்மிக்' (marmik) என்ற வார இதழை 1960ஆம் ஆண்டில் தாக்கரே தொடங்கினார். மகாராஷ்டிராவின் பிரச்னைகளை கேலிச் சித்திரமாக வரைந்து அந்த இதழில் வெளியிட்டு வந்தார். தொடக்கத்தில் அந்த இதழுக்குப் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. மர்மிக் இதழின் 'வெளிநபர்கள்' பரப்புரை பட மூலாதாரம்,SHIVSENA.ORG படக்குறிப்பு,தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களை 'வெளிநபர்கள்' என்று விமர்சித்து மர்மிக் இதழில் வந்த கேலிச் சித்திரம் 1961ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு மர்மிக் இதழின் கோணத்தை மாற்றியமைக்க உந்துதலாக இருந்தது. அந்த கணக்கெடுப்பில் மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில், மராட்டியர்கள் 41% பேரும், பிற மாநிலத்தவர்கள் 59% பேரும் இருப்பது தெரிய வந்தது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் சுமார் 8% இருப்பது தெரிய வந்தது. அப்போது தனது வட்டாரத்தில் உள்ள நண்பர்கள் மூலம் கிடைத்த பட்டியலை பால் தாக்கரே தனது மர்மிக் இதழில் வெளியிடுகிறார். அந்தப் பட்டியலில், மும்பை நகரத்தில் புதிதாக வேலைக்கு சேர்பவர்களில் மராட்டியர்கள் எவ்வளவு பேர், பிற மாநிலத்தவர் எவ்வளவு பேர் என்ற விவரம் இருந்தது. மத்திய தர வர்க்கம்(Working Class) அதிகமுள்ள மும்பையின் பல அலுவலகங்கள், ஆலைகளில் 70% பணிகளில் தென்னிந்திய மாநிலங்களாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகாவை சேர்ந்தவர்கள் இருப்பதாக மர்மிக் கட்டுரை எழுதியது. மும்பை மண்ணின் மைந்தர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைகளை 'வெளிநபர்கள்' (outsiders) எடுத்துக் கொள்வதாக பால் தாக்கரே குற்றம் சுமத்தி கேலிச் சித்திரங்களை வரைந்தார். தலைவலியான கம்யூனிஸ்ட் கட்சி பட மூலாதாரம்,GETTY IMAGES 1970களின் பிற்பகுதிகளில் இந்தியா முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. இந்த நிலைமை மும்பையிலும் எதிரொலித்தது. ஆனால் அதேநேரத்தில் கூலி உயர்வு உள்ளிட்ட தொழிலாளர் நலன் சார்ந்து கம்யூனிஸ்ட் கட்சி போராடி வந்தது. மும்பையைச் சுற்றி ஏராளமாக இருந்த ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களை ஒருங்கிணைத்து கம்யூனிஸ்ட் கட்சி பல போராட்டங்களை முன்னெடுத்தது. "தொழிலாளர் நலன் சார்ந்து கம்யூனிஸ்ட் கட்சி இயங்கி வருவது ஆலை முதலாளிகளுக்கு தலைவலியாக இருந்தது. இதை மடைமாற்ற பால் தாக்கரேவை ஆலை முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டனர். மராட்டியர்களுக்கு மும்பையில் வேலை கிடைக்கவில்லை என்ற கோரிக்கையுடன் செயல்பட்டு வந்த பால் தாக்கரே இதை கையில் எடுத்துக் கொண்டு மராட்டி மானோஸ் என்ற முழக்கத்தை முன்வைத்தார்" என்று மும்பையில் வளர்ந்தவரும், பத்திரிகையாளருமான மகிழ்நன் தெரிவித்தார். வேலையில் சேரும் தென்னிந்தியர்களின் பட்டியலை பால் தாக்கரே தனது இதழில் தொடர்ந்து வெளியிட்டு, "உனக்கு வேலை கிடைக்காமல் இருப்பதற்கு மதராஸி தான் காரணம்" என்று மராட்டியர்களை நோக்கி எழுதுகிறார். "லாபத்திற்காக குறைந்த கூலிக்கு வருபவர்களை முதலாளிகள் வேலைக்கு அமர்த்துகின்றனர். அனைவருக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும்," என்று கம்யூனிஸ்ட்கள் எதிர் பிரசாரம் செய்தனர். கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தும் இடங்களுக்கு சென்று தாக்கரேவும் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டங்களில், "மராட்டியர்கள் உணர்வுடன் இருக்க வேண்டும். கம்யூனிஸ்ட்கள் தொழிலாளர்கள் என்று கூறி உங்களை சுரண்டுகின்றனர். நீ மராட்டி என்ற உணர்வே இல்லாமல் போக செய்கின்றனர். ஆலைகளில் முக்கிய பொறுப்புகளில் மராட்டியர்கள் இல்லாதவர்கள் பணியில் இருக்கிறார்கள். கீழ் மட்ட பணிகளில் மராட்டியர்களை பணியமர்த்துகின்றனர்" என்று தாக்கரே பரப்புரைகளை மேற்கொண்டதாக மகிழ்நன் கூறினார். ஆனாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் வீரியத்தை குறைக்க அவருக்கு இது போதுமானதாக இல்லை. பட மூலாதாரம்,COMMUNISTPARTYOFINDIA.COM படக்குறிப்பு,கொலை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண தேசாயின் இறுதி ஊர்வலம் மதராஸிகளை விரட்டுவோம் என்ற முழக்கத்துடன் சிவசேனா இயங்கி வந்தாலும், ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் விஷயத்தில் அவர்களுக்கு கம்யூனிஸ்ட்கள் எதிரிகளாக இருந்தனர். 1967ஆம் ஆண்டு தனது மர்மிக் இதழில் கம்யூனிஸ்ட்களை ஒழிப்பது தான் தனது லட்சியம் என்று வெளிப்படையாக தாக்கரே அறிவித்தார். சிவசேனா ஆதரவாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் அவ்வபோது மோதலில் ஈடுபட்டு, அவர்களின் கட்சி அலுவலகங்களை உடைத்து நொறுக்கினர். இந்த வன்முறையின் நீட்சியாக 1970ஆம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், தொழிற்சங்க தலைவருமான கிருஷ்ணா தேசாய் என்பவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிவசேனாவின் ஆதரவாளர்கள். பால் தாக்கரே தான் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டார் என்று குற்றச்சாட்டை கம்யூனிஸ்ட்கள் முன்வைத்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த பால் தாக்கரே, “தேசாய் எனது போட்டியாளர், எதிரி அல்ல. அவரின் மரணத்தின் மூலம் எங்களுக்கு இடையே இருந்த போட்டி முடிவுக்கு வந்துள்ளது,” என்று தெரிவித்தார். மராட்டியர்களை நோக்கி தீவிர பரப்புரை பட மூலாதாரம்,GETTY IMAGES வேலையில்லாமல் இருக்கும் மராட்டியர்களை ஒன்று திரட்ட பல கட்டுரைகளையும், கேலிச் சித்திரங்களையும் பால் தாக்கரே வரைந்தார். அதில் மிக முக்கியமான ஒன்று, ‘வாச்சா அனி தண்டா பஸா‘. ‘வாச்சா‘ என்றால் வாசி, ‘பஸா‘ என்றால் அமைதியாக அமரு என்று பொருள். "உனது வேலையை மதராஸி பறிக்கிறான். நீ வாசித்து விட்டு அமைதியாக இரு, உனக்கு தான் ரோஷம் இல்லையே என்ற பொருளில் இந்த தலைப்பின் கீழ் கேலிச் சித்திரங்களையும், மும்பையில் உய பதவிகளில் சேரும் பிற மாநிலத்தவர்களின் பட்டியலையும் பால் தாக்கரே தொடர்ச்சியாக வெளியிட்டார்" என்று மகிழ்நன் குறிப்பிட்டார். இதற்கு மும்பையில் வாழ்ந்த மராட்டி மக்கள் மத்தியில் ஆதரவு ஆலை எழுந்தது. அதனால் 'வாச்சா அனி உட்டா' என்ற பரப்புரையை தொடங்கினார். இதன் பொருள் 'வாசித்து, விழித்துக்கொள்' என்பதாகும். அது மட்டுமின்றி, வேலையில்லாமல் தவித்த சில மராட்டியர்களுக்கு ஆலைகளில் பியூன், உதவியாளர் உள்ளிட்ட பணிகளை தனது நட்பு வட்டாரம் மூலம் பெற்றுத் தருகிறார் பால் தாக்கரே. இதன்மூலம் மராட்டி மக்களின் கவனத்தையும், நம்பிக்கையையும் தாக்கரே பெறுகிறார். சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் முடிவு செய்யப்பட்டது எப்படி? - நூற்றாண்டு சர்ச்சையின் வரலாறு19 பிப்ரவரி 2023 மகாராஷ்டிராவில் மோதி, அமித் ஷா சாதிக்க விரும்புவது என்ன?3 ஜூலை 2022 நித்தியானந்தாவின் கைலாசா போல உங்களுக்கும் சொந்த நாடு வேண்டுமா? – இப்படி செய்தால் கிடைக்கும்6 மார்ச் 2023 சிவசேனா உதயம் பட மூலாதாரம்,GETTY IMAGES தனது வார இதழில் வெளியான ஒரு தலைப்பு, மும்பையில் உள்ள மத்திய தர வர்க்க மராட்டியர்களின் பெரும் ஆதரவைப் பெற்றது. 'கல்ச்சா மதராஸி தோடயாச் டிவ்சாத் துபாசி' (Kaalcha Madrashi, thodyach divsat tupashi) என்பது அந்த தலைப்பு. நேற்று வந்த மதராஸி சீக்கிரமாக பணக்காரன் ஆகிறான் என்பது இதன் பொருள். இது போன்ற தென்னிந்தியர்களுக்கு எதிரான கட்டுரைகளால் அவரது இதழுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மர்மிக் இதழின் மூலம் கிடைத்த ஆதரவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த நினைத்தார் பால் தாக்கரே. 1966ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி வெளியான அவரது மர்மிக் இதழில் ஒரு முக்கிய செய்தியை பால் தாக்கரே அறிவித்தார். அதில், "நாங்கள் விரைவில் சிவசேனா தொடங்கி, யண்டு குண்டுவை தாக்குவோம்" என்று குறிப்பிட்டிருந்தார். 'யண்டு குண்டு' என்பது தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் பேசும் தென்னிந்திய மக்களின் மொழியின் ஒலி, யண்டு குண்டு(yandu-gundus) என்பதை ஒத்து ஒலிக்கிறது என்று மராட்டிய மக்கள் குறிப்பிடுவர். மர்மிக் இதழில் அறிவித்தது போலவே, 1966ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி சிவசேனாவை தொடங்கினார் பால் தாக்கரே. வன்முறைக்குள்ளான உடுப்பி உணவகம் சிவசேனா தொடங்கப்பட்ட பிறகு, 1966ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி மும்பையின் தாதர் சிவாஜி பூங்காவில் அந்த அமைப்பின் முதல் பேரணிக்கு தாக்கரே அழைப்பு விடுத்திருந்தார். "சொந்த ஊரில் 'வெளிநபர்களால்' அவமானப்படும் சுயமரியாதைமிக்க ஒவ்வொரு மராட்டியனும் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும்" என்று தாக்கரே தனது பத்திரிகையின் மூலம் அறைகூவல் விடுத்திருந்தார். அந்தப் பேரணிக்கு எதிர்பாராத எண்ணிக்கையில் மும்பையின் நடுத்தர வர்க்கத்தினர் திரண்டு வந்திருந்தனர். "மும்பையின் தண்ணீர், மின்சாரம், நிலத்தை பயன்படுத்தும் ஆலைகளும், அலுவலகங்களும் மதராஸிகளுக்கு வேலையை கொடுக்கிறது. மராட்டிய மண்ணின் மைந்தர்கள் புறக்கணிக்கப்படுகிறார். நமது மண்ணில் நமக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை மதராஸிகள் தட்டி பறிக்கிறார்கள்," என்று அந்த கூட்டத்தில் வீரியமிக்க உரையை பால் தாக்கரே நிகழ்த்தினார். அந்த கூட்டம் முடிந்து திரும்பும் வழியில், மும்பையில் இருந்த உடுப்பி ஹோட்டலை சிவசேனாவின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். அது முதல் அடிக்கடி தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்கள் தாக்கப்படுவது நடந்தது. பல இடங்களில் தென்னிந்தியர்களின் உணவகங்கள், நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. "லுங்கி அணிந்து கருப்பு தோலுடன் இருக்கும் நபர்களை அடித்து விரட்டுங்கள்" என்று பல இடங்களில் சிவசேனாவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 'ஐயர்', 'கணபதி','ஷெட்டி' என்ற பெயர் கொண்ட நபர்கள் தென்னிந்தியர்களாகக் கருதப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். மும்பையின் பல இடங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள், பாதுகாப்பு கருதி ஒரே பகுதிக்கு குடிபெயர்ந்து அருகருகே குழுக்களாக வாழத் தொடங்கினர். மும்பையில் தமிழர்கள் வாழும் தாராவியும், பால் தாக்கரே வசித்த பாந்த்ரா பகுதியும் அருகருகே இருப்பதால் அடிக்கடி இரண்டு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும். தென்னிந்திய மக்கள் மீது தாக்குதல் அதிகமாக நடக்கத் தொடங்கியதையடுத்து தமிழக மக்கள் தரப்பிலும் எதிர்த் தாக்குதலும் அரங்கேறியது. 1970களின் முற்பகுதியில், பிற்பகுதியில் இப்படி சிறியதும் பெரியதுமாக பல வன்முறைகள் நடந்தன. தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்குச் சென்ற வரதா பாய் என்ற வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான், திரவியம் நாடார் ஆகியோர் தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிர்த் தாக்குதலை நடத்தியதாக மகிழ்நன் தெரிவித்தார். "சிவசேனை அமைப்பின் ஆதரவாளர்களுடன் வரதராஜ முதலியாரின் ஆதரவாளர்களுக்கு அடிக்கடி கைகலப்பு ஏற்படும். இது தொடர்பாக மும்பையில் அப்போது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைதுகளும் அரங்கேறின. ஓரிரு முறை இந்த கைகலப்பு இரண்டு தரப்பினரும் ஆயுதங்கள் கொண்டு மோதும் சண்டையாகவும் மாறியதுண்டு." இதில் பலர் கொல்லப்பட்டனர். பிழைப்பு தேடி மும்பைக்கு குடிபெயர்ந்த பல தமிழர்கள் இந்த வன்முறைக்குப் பயந்து சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதுமட்டுமின்றி வரதா பாய், திரவியம் நாடார் ஆகியோர், மும்பையில் தமிழ் மக்களுக்காக தமிழர் பேரவை ஒன்றைத் தொடங்கினர். இந்த அமைப்பு மூலமாக தமிழர்கள் நலன் சார்ந்து பள்ளி, கோயில் திருவிழா, மருத்துவ உதவி எனப் பல உதவிகள் மேற்கொள்ளப்பட்டது. புலம் பெயர் தமிழர்களின் நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES மகாராஷ்டிரா மட்டுமல்லாது, பல இடங்களில் பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்கள் தாக்கப்படுவதும், அவர்களின் தொழில் முடக்கப்படுவதும் வரலாறு நெடுகிலும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. காவிரி நதி நீர் பிரச்னையில் கன்னட சலுவாலியா என்ற அமைப்பினரால் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். கர்நாடகத்திற்குள் நுழையும் தமிழ்நாட்டு வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இதேபோல மியான்மர்(அன்றைய பர்மா), இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பிழைப்புத் தேடித் தமிழர்கள் சென்ற போது ஏற்பட்ட பிரச்னைகளின் காரணமாக அவர்கள் அங்கிருந்து ஒரு நாளில் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/c2v199y3q15o
  16. திருமணநாள் வாழ்த்துகள் பாஞ்ச் ஐயா & அம்மா, வாழ்க வளத்துடன்.
  17. உங்களுக்கு தானே யுனிவேர்சல் கிரடிட் இருக்கு நூறு முறை என்ன ஆயிரம் முறையும் பார்க்கலாம் .
  18. நான் ஆறுதல் ஆக அமைதியாக கோப்பி குடித்தது கொண்டு இருப்பேன் 😀
  19. உண்மை வெளித்து விட்டது நாளை காலையில் பார்த்து கொள்ளுங்க முக கண்ணாடியில் 😄
  20. நீங்க எத்தினை ஐடியில் வந்தாலும் வாங்க ஆனால் உங்க சொந்த ஐடி யில் வந்து எழுதுங்க உங்க சொந்த கருத்தை யாரோ சொல்லிய இரவல் கருத்தை அல்ல மப்பு எனக்கல்ல உங்களுக்கே அதனால்தான் பிடிகொடுத்தது தெரியாமல் இங்கு உளறி கொட்டிக்கொண்டு இருகிறீர்கள் .
  21. அப்ப நீங்கள் வேறு வேறு ip முகவரிகளில் எழுதுவது உண்மையாகுது அதுக்கு நான் காக்கர் ஆக இருக்க தேவையில்லை நானும் **************சம்பள பே சிட் உள்ளது .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.