Everything posted by பெருமாள்
-
லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வியன்னாவில் தரையிறக்கம்!
The Top 25 Safest Airlines For 2024 Air New Zealand Qantas Virgin Australia Etihad Airways Qatar Airways Emirates All Nippon Airways Finnair Cathay Pacific Airways Alaska Airlines SAS Korean Air Singapore Airlines EVA Air British Airways Turkish Airlines TAP Air Portugal Lufthansa/Swiss Group KLM Japan Airlines Hawaiian Airlines American Airlines Air France Air Canada Group United Airlines Jetstar has been named the world's safest low-cost carrier. GETTY The 20 Safest Low-Cost Airlines For 2024 Jetstar easyJet Ryanair Wizz Norwegian Frontier Vueling Vietjet Southwest Volaris flydubai AirAsia Group Cebu Pacific Sun Country Spirit Westjet JetBlue Air Arabia Indigo Eurowings இனியும் ஏர் லங்காவில் பயணித்து உங்கள் இனிய உயிர்களை பாதுகாப்பற்று ஆக்க வேண்டாம். https://www.forbes.com/sites/laurabegleybloom/2024/01/03/ranked-the-25-safest-airlines-in-the-world-according-to-airlineratingscom/?sh=fe651ac4c03c ஸ்டார்ட் மியூசிக் .........😀
-
நாடு முழுவதும் பரவும் வைரஸ் - முகக் கவசம் அணியுமாறு கோரிக்கை
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் சுவாசக் குழாயால் ஏற்படுவதனால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என அவர் கூறினார். சுவாச நோய்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், சில நோயாளிகளுக்கு ஓரிரு மாதங்களுக்கு இருமல் மற்றும் சளி சுவாச நோய்கள் இருப்பதாகவும் வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார். இந்த வைரஸும் இன்புளுவென்சாவின் மாறுபாடு என்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகி இருப்பதன் மூலமும், குழுவாகவும் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதும் நோய் வராமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் இந்த காய்ச்சல் வைரஸ் என்பதால் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிகிச்சையின்றி குணமாகும் என்று நினைக்காமல் சிகிச்சை பெறுமாறும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ ஆலோசனை சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சமூகத்தில் பரவல் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர் வலியுறுத்துகிறார். மேலும், குறிப்பாக மற்ற நோய்களுக்கு, காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் என்பதால், மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/new-influenza-virus-in-sri-lanka-1714703659
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் ரஷ்ய - உக்ரைன்(Russia - Ukraine) போருக்கு சென்ற பல இலங்கைப் படையினர் தற்பொழுது உயிருடன் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட(Gamini Waleboda ) தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ரஷ்ய வாடகை படையில் இணைந்து கொண்ட 40 இலங்கை படையினரின் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய - உக்ரைன் போர் இராணுவம் மற்றும் பொலிஸ் என்பனவற்றிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டவர்கள் இவ்வாறு ரஷ்ய உக்ரைன் போரில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருபது லட்சம் ரூபா மாதச் சம்பளம் வழங்குவதாக கூறி குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு லஞ்சம் வழங்கி இவ்வாறு இலங்கைப் படையினர் ரஷ்யா, உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இராணுவ பின்வரிசை சேவைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட படையினர் முன்னரங்கப் போரில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெக்னர் கூலிப் படைக்கு விற்பனை செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் படை அதிகாரி ஒருவரின் குரல் பதிவு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அங்கிருந்து தப்பியவர்கள் ரஷ்யாவிற்கு செல்ல வேண்டாம் என கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு வேலைக்காக அனுப்பி வைப்பதாக கூறினால் அந்த மோசடியில் சிக்க வேண்டாம் என மக்களிடம் கோருவதாக காமினி வெலேபொட தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/sl-forces-who-joined-ukrain-war-many-died-1714640425?itm_source=parsely-api
-
அரச வங்கிகளில் பில்லியன் கணக்கில் கடன் பெற்றுள்ள அரசியல்வாதிகளின் பெயர்கள் மறைக்கப்பட்டன.
அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ள அரசியல்வாதிகளின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்துகொண்டு அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் வங்கி உள்ளிட்ட அரச வங்கிகளில் பில்லியன் கணக்கில் கடன் பெற்றுள்ள அமைச்சர்களும், வர்த்தகர்களும் பெரும் முதலாளிகள் மற்றும் பெரும் தொழில்முனைவோர் போன்று நடந்து கொள்கின்றனர். இலங்கையில் சமூகப் பாதாள உலகம் தவிர, அரசியல் பாதாள உலகமும் இருப்பதாக கூறியதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நான் விசாரிக்கப்பட்டேன். ஆனால் எனது அரசியல் கணிப்பு படி தேர்தலின் போது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்து தேர்தல் முடிவுகளை மாற்ற மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் உழைத்தனர். மேலும், ஈஸ்டர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத பதினைந்து பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட தகவல்கள் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காததால், அவர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தி, மற்றவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதாலும், வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்தாமையாலும் நாட்டுக்கான அபிவிருத்தி உதவிகள் முற்றாக நிறுத்தப்படும்.மீண்டும் அதே நிலைமையை நாடு எதிர்கொள்ள நேரிடும். இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மேலும் கடன் பெற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார். https://www.madawalaenews.com/2024/05/i_81.html
-
தமிழர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் போராட்டம்! பதற்றம் .
ஸ்டாலின் அந்த செய்தியை தன்னுடைய தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தி கொண்டார் .
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
பொருளாதார மையங்களை தாரைவார்க்கும் எண்ணத்துடன் மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம் ! இந்திய தூதுவரின் வருகைக்கு எதிர்ப்பு. Madawala News 13 hrs ago பொருளாதார மையங்களை தாரைவார்க்கும் எண்ணத்துடன் மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம் ! இந்திய தூதுவரின் வருகைக்கு எதிர்ப்பு ! ....................................... பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை அண்மைய நாடொன்றுக்கு வழங்குவதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் முயற்சிப்பதை தேசப்பற்றுள்ள இலங்கையர்களாக ஒன்றிணைந்து நாம் முறியடிக்க வேண்டும் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் தெரிவித்தார். கல்முனை எம்.பி ஹரீஸ் இல்லாமலேயே மோடியின் இலங்கை தூதுவருடன் ஹக்கீம் நேற்று ஒலுவில் துறைமுகத்திற்கு ஆய்வுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதேவேளை, மோடியின் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலர் உணவுகள் மற்றும் இந்திய தூதுவருடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது. https://www.madawalaenews.com/2024/05/i_97.html
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
இணைய வீசா நடைமுறை விவகாரம் : நியாயப்படுத்தியுள்ள அரசாங்கம் Courtesy: Sivaa Mayuri மூன்றாம் தரப்புக்கு(outsourcing) கையளிக்கப்பட்ட இணைய வீசா விண்ணப்ப செயல்முறை மீதான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கையின் அரசாங்க தகவல் திணைக்களம் பதிலளித்துள்ளது. இது குறித்து முறையான ஆய்வு மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்னர் உலகம் முழுவதும் 146 மையங்களைக் கொண்ட VFS குளோபல் நிறுவனத்திற்கு அந்த செயல்முறை வழங்கப்பட்டது என்று தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆவண செயலாக்கம் மேலும், வீசா ஒப்புதல் எப்போதுமே இலங்கை குடிவரவு நிறுவனத்தால் தக்கவைக்கப்படுகிறது என்று கூறியுள்ள திணைக்களம், VFS குளோபல் நிறுவனம், வேறு நாடுகளில் செயற்படுவதை போன்று ஆவண செயலாக்கத்தில் மாத்திரமே ஈடுபடுகிறது என்றும் தெரிவித்துள்ளது. இலங்கையர்களான நாங்கள், வேறு எந்த நாட்டிற்கும் பயணிக்க வீசாவிற்கு விண்ணப்பிக்கும்போது VFS குளோபலுக்குச் செல்கிறோம். எனவே, உலகெங்கிலும் உள்ள மக்கள் இலங்கைக்கு செல்வதற்கான வீசாவிற்கு விண்ணப்பிக்கும் வசதியையும் குறித்த நிறுவனம் வழங்குகிறது.இது சுற்றுலாவை மேம்படுத்துவதைத் தவிர வேறு எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்றும் திணைக்களம் கூறியுள்ளது. அத்துடன், விண்ணப்பதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொடர்புடைய வீசாக் கட்டணங்கள் அரச திறைசேரிக்கானது என்றும், வீசாவிற்கான ஆவணங்களைச் செயலாக்குவதற்கான, சேவைக் கட்டணங்களை மாத்திரமே நிறுவனம் பெறும் என்றும் அரசாங்கம் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://tamilwin.com/article/internet-visa-procedure-issue-1714672589
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (01) ஏற்பட்ட பதற்ற நிலைமையுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு கொழும்புக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை குறிப்பிட்டுள்ளது. வீசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வீசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நேற்று இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்டு வந்த வீசா வழங்கும் முறை நேற்று முதல் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் விளக்கம் இது தொடர்பில் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவிக்கையில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் நிலைமை குறித்து சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியில், குறித்த நிறுவனம் இந்திய நிறுவனம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நிறுவனம் இந்திய நிறுவனம் என கூறுவது முற்றிலும் பொய்யானது. இந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனங்கள் இந்தியாவை தளமாகக்கொண்டு இயங்கும் நிறுவனங்களோ அல்லது இந்திய நிறுவனங்களோ அல்ல, மாறாக வேறு இடங்களை தலைமையகமாகக் கொண்டவை ஆகும். இவ்வாறான சூழலில் இந்தியாவை தொடர்பு படுத்துவது அடிப்படை ஆதாரமற்றதாகும்.” என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது . https://tamilwin.com/article/katunayake-airport-problem-india-explanation-1714655948 கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை. கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்ட குழப்ப நிலைமை காரணமாக பயணிகள் மத்தியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறை நேற்று முதல் இந்திய தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. எனினும் நேற்றையதினம் கணினிகளை சரியாக செயற்படுத்த முடியாமையினால் விமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நீண்டநேரம் காத்திருந்தமையை அடுத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து பயணிகள் கடும் கோபமாக அதிகாரிகளுடன் வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளனர். https://tamilwin.com/article/tense-situation-in-katunayake-today-visa-issue-1714634812?itm_source=article- அவுஸ்திரேலியாவால் இந்திய உளவாளிகள் 2020 இல் வெளியேற்றப்பட்டனர் - சர்வதேச ஊடகங்களின் தகவலால் அதிர்ச்சி
பல வெளிநாட்டவருக்கு விளங்கவில்லை கூடவே ஒரு 30 ஆயிரம் டொலர் கையில் வைத்து இருந்தால் அதே உளவாளி அவுசுக்கு ஆதரவாய் மாறி இருப்பார்கள் எனும் விபரம் .- இங்கிலாந்து - இலங்கை - இங்கிலாந்து.... ஓடிய பேரூந்து.
இப்ப அப்படியொரு பேருந்து வந்தால் உடனே சிங்கள அரசியல்வாதிகள் அல்ல புலம்பெயர் புலிகள் வருகுது என்று கதையை விட்டு சிங்களத்துக்கு முட்டுக்கொடுக்கும் கூட்டம் புரளியை கிளப்பி அந்த இனிமையான கொலிடேயை அரசியல் ஆக்கி இன்பம் காண்பார்கள் .- கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !
முள்ளை முள்ளால் தான் எடுக்கணும் வேற வழியே கிடையாது .- கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !
முதலில் இதை பற்றிய விவாதங்களை சமூக ஊடகங்களில் விவாதிப்பதை தடை பண்ணனும் குறிப்பிட்ட ஊசியை போட்டு நன்றாக இருப்பவனும் பயத்திலே மேலே போய் சேரப்போகிறார்கள். ஊரில் இருக்கும்வரை முணுக் என்றால் சாதாரண காய்ச்சலுக்கும் போடும் பென்சிலின் ஊசி யில் இருந்து போலியோ ஊசி வரை கண்ட கண்ட ஊசிகளை போட்டது உண்டு அவற்றுக்கும் பத்தில் ஒன்றுக்கு அல்லது ஆயிரத்தில் நாலுக்கு பக்க விளைவுகள் இருந்திருக்கலாம் இருந்தது .சிலருக்கு பென்சிலின் ஒவ்வாமை காரணத்தினால் மேலே போனவர்களும் உண்டு பெரிதாக செய்தி எடுபடாது என்ன அப்போ டிஃடொக் வாட்சப் முகநூல் கிடையாது அபோது வாழ்ந்த மனுஷர்களும் நிம்மதியாய் வாழ்ந்து நிம்மதியாய் போய் சேர்ந்தனர் .- வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
அத்துடன் World’s Best Countries To Visit In Your Lifetime என்று கூகிளில் தேடினால் நிறைய இணையங்கள் தரவரிசை படி லங்கா அநேகமாய் 10க்கு மேலதான் இருப்பது உண்டு இந்த சைட்ட்டில் மாத்திரம் ஐந்தாவதாக வந்துள்ளது அதுதான் இணையத்தின் சுத்து மாத்து . பணம் கொடுத்தால் உங்களின் சமூகவலைத்தளத்தை பல ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்வது போல் தோற்றம் காட்டும் வித்தை எல்லாம் காட்டும் . https://www.usnews.com/news/best-countries/rankings/good-for-tourism இதில் 49 தர வரிசை அறிமுகத்தை பாருங்கள் https://www.usnews.com/news/best-countries/sri-lanka The conflict continued through 2009, with scattered attacks from the Liberation Tigers, or Tamil separatists. More than 70,000 people died, with many more displaced. Human rights grievances over war crimes remain unsettled,- வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
நமக்கு இருக்கினம் அவர்களுக்கு இந்த குளிர் நாட்டில் இருக்க பிடிக்கவில்லை ஒரு விண்டர் தாக்கு பிடிக்க முடியலை அதே கதைதான் கனடாவுக்குள்ளும் இரண்டை பிடித்து விசாவில் அனுப்பி வைத்தேன் ஊருக்கு போகணும் என்று ஒரே பக்கப்பாட்டு . என்ன செய்வது இதுகளை ?- வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
எண்ணுறோ இரண்டாயிரமோ நமக்கு அது பிரச்னையில்லை இனவாத சிங்களத்துக்குமுன்னால் கூனி குறுகி நம்மால் நிக்க முடியாது தமிழரை மட்டம் தட்டும் இனவாதம் இல்லாமல் போனால் சிலவேளை நான் அங்கு போகக்கூடும் .- சர்வதேச தொழிலாளர் தினம் இன்று – நாடு முழுவதும் 40 பேரணிகள்!
இன்றைய நாள் கஷ்டப்பட்டு வேலை செய்பவங்களுக்கானது இவங்கள் ஏன் குத்தி முறிகிறாரர்கள் ?- பிக்கு அபகரித்த 88 ஏக்கர் காணியை மீட்க கோரிக்கை
அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை குச்சவெளி – திரியாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆத்திக்காட்டுவெளி பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளில் பௌத்த பிக்கு ஒருவர் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தமது வாழ்வாதாரத்திற்காக மீட்டுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆத்திக்காடு பகுதியில் உள்ள 88 ஏக்கர் காணி பானாமுரே திலகவங்ச நாயக்க தேரர் என்ற பௌத்த பிக்கு ஒருவரின் பெயரில் தற்காலிக இடாப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 3 வருடங்களாக சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக அரசாங்கத்திடம் இருந்து 20 சிங்கள மக்களின் பெயரில் மானியப் பசளை பெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் பல வருட காலமாக பரம்பரை பரம்பரையாக குறித்த காணிகளில் குச்சவெளி மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், யுத்த நிலைமையின் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும் திரும்பும்போது குறித்த பகுதியில் இருந்த உறுதி மற்றும் பேமிட் காணிகள் அடங்கலாக பெருமளவான விவசாயக் காணிகள் வன வள பாதுகாப்புத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 88 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட காணிகள் அப்பகுதியில் உள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்கரியது என குறிப்பிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு புத்த பிக்கு ஒருவரின் தலைமையின்கீழ் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 2018 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்காக 2020.10.02 வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பூஜா கிராண்ட் மூலம் 20.2343 ஹெக்டேயர் காணி 2020.05.26ஆம் திகதியில் இருந்து 30 வருடகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காணிக்குள் மக்களுடைய உறுதிக் காணிகளும் உள்டங்குவதாக பிரதேச செயலகத்தினால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. https://www.madawalaenews.com/2024/05/88.html- தமிழரசுக் கட்சிக்கு இறுதிக் கிரியை செய்யும் பிரபல சட்டத்தரணி: அடுக்கப்படும் ஆதாரங்கள்
ஒரு நீண்ட நெடிய அரசியல் பாதையிலே வந்த முதிய தலைவர் பல ஆண்டுகளாக தமிழரசுக் கட்சிக்கு பாதாள குழியைத் தோண்டி வைத்தார். இப்போது மற்றுமொரு வழக்கறிஞர் வந்து அந்த குழிக்குள் தமிழரசுக் கட்சியை தள்ளி கிரியை செய்து கொண்டிருக்கின்றார் என்று பிரபல புலம்பெயர் தமிழ் தொழிலதிபரும் லங்காசிறி மற்றும் ஐபிசி ஊடக குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன்(kandiah baskaran) தெரிவித்தார். அவர்கள் யார் என்பது பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஐபிசி தமிழின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சிதறிய கூட்டமைப்பு தொடர்ந்தும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் இன்றைய நிலை உலகத் தமிழர்கள் பார்த்து ஏளனம் செய்யும் அளவிலும் சிரிக்கும் அளவிலும் இருக்கின்றது. மேலும், இங்கு யாருக்கும் தமிழ் மக்களின் மீதோ மண்ணின் மீதோ காதலோ ஆசையோ கிடையாது. பதவியின் மீதும் அந்த பதவியினால் கிடைக்கும் வரப்பிரசாதங்களை, சுகபோகங்களை அனுபவிக்கும் பதவி ஆசையே இங்கு பலருக்கும் இருக்கின்றது. இதனை நான் வெளிப்படையாகவே கூறுவேன். காசை கொடுத்து தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக வேண்டிய தேவை எனக்குக் கிடையாது அதே சமயம் காசை வாங்கிக் கொண்டுதான் என்னை கட்சியின் உறுப்பினராக ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை தமிழரசுக் கட்சிக்கும் கிடையாது. நான் நீண்ட நெடிய நாட்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதீத ஈடுபாட்டை கொண்டவன். அதற்கு காரணம், ஈழத் தமிழருடைய போராட்ட வரலாற்றில் அழிக்கப்பட முடியாத ஒன்றாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது. ஏனென்று சொன்னால் தமிழீழ விடுதலைப் புலிகளால் எல்லா கட்சிகளையும் இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிறகு தமிழருக்கு இருந்த ஒரு சொத்தாக நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பார்க்கின்றேன். ஆனால் அது ஒரு குறுகிய காலத்திலே ஒட்டுமொத்தமாக சிதறடிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். https://tamilwin.com/article/tamil-arasu-katchi-issue-kandaiah-baskaran-message-1714491488- அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் பெண்களுடன் ஆபாச உரையாடல் - இரண்டு வருட சிறைத்தண்டனை
தமிழர் பெயர் போல் இல்லியே கடைசி "ன் "எடுத்து விட்டால் .- இனிமேல் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகர வீதி சமிஞ்சைகளுக்கருகில் காத்திருக்கும் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் பெறுவோருக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதன்படி, யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிவில் உடையில் பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://www.madawalaenews.com/2024/04/i_894.html யாசகர்களால் இலங்கைக்கு வந்த சோதனை! பெரும் வாய்ப்பை இழந்த சோகம் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதில்லை என்ற தீர்மானத்தில், கொழும்பில் போக்குவரத்து விளக்குகளில் உள்ள யாசகர்களின் அச்சுறுத்தலான செயற்பாடு தாக்கம் செலுத்தியதாக இலங்கை ஆட்டோமொபைல் சங்கத்தின் செயலாளர் தேவப்பிரிய ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், 2015 இல் கொழும்பில் SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டுடன் தொடர்புடைய ஆசிய பசுபிக் பிராந்திய II கூட்டத்தை இலங்கை நடத்தியது, இதில் 150 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். சர்வதேச வாகன உச்சி மாநாடு 2025 ஆம் ஆண்டு SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை நடத்துவதற்கான முயற்சியை இலங்கை சமர்ப்பித்த பொதுக் கூட்டம் ருவாண்டாவில் இடம்பெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள், கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள போக்குவரத்து விளக்குகளில் யாசகம் பெறுபவர்கள் கொழும்பில் பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போது விரும்பத்தகாத அனுபவங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்துவதை அவதானித்ததாக அவர் கூறினார். ஏலத்தில் வெற்றி பெற்றால், இந்நிகழ்வுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பிரதிநிதிகள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு, நாட்டிற்கு கணிசமான வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித்தரும். எவ்வாறாயினும், கொழும்பு நகர எல்லைக்குள் போக்குவரத்து விளக்குகளில் யாசகர்களின் அச்சுறுத்தல் காரணமாக SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த முடியாது என ருவாண்டாவில் நடைபெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் பெறப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் மேலும், நகர எல்லைக்குள் யாசகம் பெறுபவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது நமது நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர். எனவே, 2025 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வாகனத் தொழிற்துறை கூட்டத்தை இலங்கை நடத்த விரும்பினால், கொழும்பில் இந்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்கள் எங்களை வலியுறுத்தினர். ஏப்ரல் 2023 இல், திட்டங்கள் வகுக்கப்பட்டன, மேலும் சிக்கலைச் சமாளிக்க ஒரு மூலோபாயக் குழு நிறுவப்பட்டது. இறுதியில், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நடைமுறைபடுத்த தீர்மானிக்கப்பட்டது. மேலும் கொழும்பு நகர எல்லைக்குள் போக்குவரத்து விளக்குகளில் யாசகம் பெறுபவர்களுக்கு எந்த உதவியும் வழங்க வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தியுள்ளார். https://tamilwin.com/article/intl-summit-avoids-sri-lanka-due-to-beggar-1714443745- மனிதர்கள் மட்டுமல்ல.... மிருகமும் சாப்பிட முடியாத அரிசி அரசாங்கத்தால் வழங்கப்பட்டது தொடர்பில் விசாரணை
நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்ட தரக்குறைவான அரிசி தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (26.04.2024) கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஏப்ரல் மாதம் முதல் அரிசி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் தேர்வு நடைமுறையில் கடுமையான சிக்கல்கள் உள்ளன. சில இடங்களில் தரமற்ற அரிசி விநியோகம் நடக்கிறது. அவ்வாறானதொரு சம்பவம் ஹாலிஎல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றும் ராஜித கீர்த்தி தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். விநியோகிக்கப்பட்ட அரிசியின் தரத்தை பராமரிக்க வேண்டும். ஏனெனில் இவை நம் நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டவை” என கூறியுள்ளார்.. தகவல் விபரம்.... நேற்று (25) ஹாலிஎல பிரதேசத்தில் ஜய maga திட்டத்தில் வழங்கிய இலவச அரிசியைப் பெற்றுக்கொண்ட நபர் ஒருவர், கெட்டுப்போன, உண்பதற்குத் தகுதியற்ற அரிசி பொதியை பெற்றுக்கொண்டதாகக் கூறி ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். ஹாலிஎல, மெதபிடகம பிரதேசத்தைச் சேர்ந்த எச்.பண்டார என்பவர், அரசாங்கத்தினால் தமக்கு வழங்கப்பட்ட அரிசி பாவனைக்குத் தகுதியற்றது எனக் கூறி, தனக்குக் கிடைத்த அரிசியில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்று, இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் ஹாலியால பொதுச் சுகாதார பரிசோதகர் திரு.தனுஜய பிரதீப் தெரிவிக்கையில், ஹாலியால மெதபிடகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஹாலியால சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு வந்து 10 கிலோ அரிசி அடங்கிய பையில் அரிசி இருந்ததாக முறைப்பாடு செய்துள்ளார். அரசாங்கம் கெட்டுப்போனது மற்றும் நுகர்வுக்கு தகுதியற்றது என்பது தொடர்பான விசாரணைகள் செய்யப்படுகின்றன. https://www.madawalaenews.com/2024/04/i_782.html- வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி
இலங்கையின் வடக்கு - கிழக்கில் உள்ள காணிகள் தொடர்பில் அதிகரித்துள்ள பதற்றம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வவுனியா வெடுக்குநாறி மலைக் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் கிரேடி (Patrick Grady) கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளிக்கும்போதே, வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன் (Anne-Marie Trevelyan)இதனை தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி ஆதி சிவன் கோயில் வவுனியாவில் உள்ள வெடுக்குநாறி ஆதி சிவன் கோயில் உட்பட இலங்கையில் காணிவிடயங்களில் பதற்றம் அதிகரித்து வருவது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் கரிசனைக் கொண்டுள்ளது. இந்தநிலையில் கைது செய்யப்பட்ட எட்டு இந்து வழிபாட்டாளர்களின் விடுதலையை வரவேற்பதாக கூறிய அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன், இந்த கைது சம்பவம் மதம் மற்றும் நம்பிக்கையின் சுதந்திரத்தில் தாக்கங்களைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தை ஊக்குவிப்பது இங்கிலாந்து அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து மனித உரிமைகளுக்காக இங்கிலாந்து அரசாங்கம் ஊக்குவிப்புக்களை மேற்கொள்வதாகவும் ட்ரெவெலியன் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/tension-over-lands-in-sl-question-in-uk-parliament-1714201879?itm_source=parsely-api - கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
Important Information
By using this site, you agree to our Terms of Use.