Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. ஈழத்தமிழர் விவகாரத்தில் தொடர்ந்தும் வெறுப்பை வெளிப்படுத்தி வரலாற்று துரோகங்களை அரங்கேற்றி வரும் இந்தியா தம்மை நம்பி வந்த ஈழ தமிழர்களை 30 ஆண்டுகளுக்கு மேல் அகதிகளாகவே நடாத்துகின்ற அவலம் நேற்று இந்திய உச்சநீதிமன்றத்தில் ஈழ அகதி ஒருவர் தொடர்பான தீர்ப்பின் மூலம் மீளவும் தன்னை ஒரு ஈழத்தமிழர்களுக்கு எதிரான ஒரு நாடாக அடையாளப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் காந்தி சதுக்கம் ,காந்தி பூங்கா , மகாத்மா காந்திக்கு சிலை என்று இலங்கையர்கள் இந்தியாவின் மீதான ஆதரவை வெளிப்படுத்தினாலும் இந்தியாவோ ஒரு எதிரியை பாவிப்பது போலவே பாவித்து வருகிறது. இந்த நிலையில் ஈழத்தமிழர்களுக்கு இந்தியா இதுவரை என்ன செய்திருக்கிறது என்று கேட்டால் உண்மையில் இதுவரை எதுவுமே செய்யவில்லை என்பதுதான் பதில். இந்தியாவின் ஈழத்தமிழர்கள் தொடர்பான நிலைப்பாடுகளை பற்றியும் தமிழரின் தேசிய வேட்கையை சிதைத்த இந்திய நகர்வுகள் தொடர்பாகவும் ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு. வணக்கம். இன்றைய நாளும் மற்றுமொரு ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வின் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று 2052025 இன்றைய நாளை பொறுத்தவரை நாங்கள் பேச வேண்டிய விடயம் அல்லது பேசுகின்ற மிக முக்கியமான ஒரு விடயமாக மாறியிருப்பது ஒரு அகதியினுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பது மாத்திரமல்லாமல் அதற்கு சொல்லப்பட்டிருக்கக்கூடிய காரணம் என்பது ஈழத்தமிழ் மக்களிடையே அவர்களுடைய மனங்களில் இவ்வளவு காலமும் இந்தியா தன்னுடைய தந்தைய நாடு என்பதும் இந்தியா எங்களுக்கு ஆதரவாக இப்போதாவது ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கையோடும் இருந்த மக்களுக்கு மிகப்பெரிய அதிர்வலைகளையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றைய தினம் இந்தியாவிலிருந்து ஒரு செய்தி வெளிவந்தது. அந்த செய்தியை நான் உங்களோடு இப்போது பகிர்ந்து கொள்கிறேன். 140 கோடி மக்கள் தொகையுடன் ஏற்கனவே போராடி வரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள அகதிகளுக்கு இடமளிக்கக்கூடிய இந்தியா ஒன்றும் தர்மசாலை அதாவது இலவச தங்குமி இடம் அல்ல என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதாகவும் இலங்கை தமிழகதியினுடைய தங்குமிடத்திற்கான அனுமதி கோரிக்கையை நிராகரித்திருப்பதாகவும் அந்த செய்தி வெளிவந்தது. தமிழில் விடுத்தலை புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்ததாக இலங்கை தமிழரான ஒரு மனுதாரர் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தனிநபர் அல்லது அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் யுஏபிஏ என்று சொல்லக்கூடிய சட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்தினால் அந்த நபர் குற்றவாளி என தீர்ப்பாளிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் அவரது சிறைதண்டனையை 10 ஆண்டுகளில்ிருந்து ஏழு ஆண்டுகளாக கடந்த 2022 ஆம் ஆண்டு குறைத்திருந்தது. அதன் அத்தோடு அவரது சிறைதண்டனை முடிந்தவுடன் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டது. மேலும் மூன்று வருடங்களாக அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய அந்த நபர் இலங்கைக்கு திரும்பினால் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் எனவே தன்னை இலங்கைக்கு நாடு கடத்து விளைதை தடுத்து நிறுத்த கூறியும் உச்ச நீதிமன்றத்திலே மனுதாக்கல் செய்திருந்தார். தான் முறையான விசாவின் மூலமாக இந்தியா வந்ததாகவும் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் இப்போது இந்தியாவிலே குடியேறி விட்டனர் எனவும் அந்த மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளான தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கே வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அந்த அமர்வு உலகம் முழுவதிலும் இருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? நாங்கள் 140 கோடியுடன் போராடுகிறோம். இது எல்லா இடங்களிலும் இருந்து வரும் வெளிநாட்டினரை மகிழ்விக்க கூடிய தர்மசாலை அல்ல. இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இலங்கையில் உங்களது உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்கு செல்லுங்கள் என கூறி இந்த மதுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டிருக்கிறது என்பதை சொல்லிக்கொள்ளலாம். அதே நேரம் குறிப்பாக ஒரு விடயத்தையும் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். கடந்த 2024ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றத்திலே ஒரு இலங்கை தமிழர்களுடைய குடியுரிமை மனைவை பரிசலித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அதனை விரைவாக தீர்மானிக்குமாறு நீதிமன்றம் உத்திரவெற்றிருந்த ஒரு வழக்கையும் நான் உங்களுக்கு மேற்கொள் காட்டி விடுகிறேன். ஆக இந்த வழக்கினுடைய தீர்ப்பில் நான் இறுதியாக கூறியது. இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இலங்கையில் உங்களது உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்கு செல்லுங்கள் என கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுருந்தார்கள். ஆக இந்தியா எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஈழத்ததமிழர்களுக்கான தீர்வுக்காகவோ அல்லது ஈழத்ததமிழர்களுடைய பிரச்சனையிலோ தலையிட போவதில்லை. அவர்களுக்காக பரிந்து பேச போவதில்லை என்ற ஒரு விடயத்தை மிக் தெளிவாக இந்திய நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. ஆக இந்த விவகாரத்திலே இன்று ஒரு நாள் இந்தியா எங்களுக்காக ஒரு தீர்வை பெற்று தரும். இந்தியாவால் தான் எங்களுக்கு விடிவு கிடைக்கும் என்று சொல்லி நம்பி இருக்கக்கூடிய ஆயிரம் ஆயிரம் ஈழ தமிழ் உள்ளங்களை இந்தியா இந்த தீர்ப்பின் மூலமாக மாற்றி இருக்கிறது. குறிப்பாக சொல்லக்கூடிய வேண்டுமாக இருந்தால் நான் ஏழவே குறிப்பிட்டிருக்கக்கூடிய ஒரு விடயம்தான். இந்த இந்தியாவினுடைய அமைதிப்படை இலங்கைக்கு வந்தது. அப்போது அந்த அமைதிப்படை இலங்கைக்கு வந்த நாளினை மிக கோலாகலமாக கொண்டாடினார்கள். அவர்களை தலையிலே தூக்கி வைத்து கொண்டாடினார்கள் ஈழத்தின் தமிழ் மக்கள். அதாவது எங்களை காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவம் வந்திருக்கிறது. ஸ்ரீலங்க அரசினுடைய தொடர் நடவடிக்கைகளில் இருந்து ஈழ தமிழ் மக்களாக எங்களை காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவம் வந்திருக்கிறது என்று சொல்லி அவர்கள் சந்தோஷப்பட்டார்கள் ஊர்வலங்க செய்தார்கள் மகிழ்ந்து கொண்டார்கள். ஆனால் அந்த நிலைமை முற்றாக மாறி ஈழ தமிழ் மக்கள் கண்டு அஞ்சி ஒழிக்கின்ற ஒரு ராணுவமாக இந்திய ராணுவம் இருந்தது. இந்திய ராணுவம் படுகொலைகளை செய்தது பாலியல் வல்லுறவுகளை மேற்கொண்டது. இன்னும் இன்னும் சொல்லிக்கொள்ள வேண்டுமாக இருந்தால் மிக காடைனமாக வைத்திய சாலைக்குள் புகுந்து நோயாளர்களை சுட்டு கொண்டது. இப்படியான நடவடிக்கைகளை செய்தது. அந்த நிலைமையிலும் கூட அதன் பின்பதாகவும் கூட இளதமிழ் மக்கள் இன்றுவரை இந்தியா எங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்யும் என்று சொல்லி நம்புகிறார்கள். அன்பான தமிழக உறவுகளே என்னுடைய இந்த பேச்சை கண்டு நீங்கள் கொதைத்து எழலாம். உங்களுடைய ஆக்ரோசமான கருத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆனால் நான் சில விடயங்களை உங்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் எப்போதும் இந்தியாவை விரோதிகளாக பார்த்தது இல்லை. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சண்டை வருகிற போது பெரும்பாலான இழத்து தமிழ் மக்களுடைய மனநிலை இப்போதும் ஆகியிருக்கிறது பாகிஸ்தானுடைய பக்கமாக என்று சொல்லி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் துடுப்பாட்டம் அதாவது கிரிக்கெட் போட்டி ஒன்று இடம்பெற்றால் கூட எங்களுடில் பலரினுடைய ஆதரவு என்பது இந்தியாவினுடைய பக்கமாக இருக்கும். ஏனென்று சொன்னால் இந்தியாவினுடைய எதிரிநாதரி பாகிஸ்தான். ஆகவே எங்களுக்கு பாகிஸ்தான் மீது விருப்பமில்லை. பாகிஸ்தானோடு உடன்பட நாங்கள் தயாரில்லை என்று மனநிலையில் தான் இளத்தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். எங்களுடைய ஒவ்வொரு வீதிகளிலும் ஒவ்வொரு ஊர்களிலும் வடக்குக்கிழக்கில் இருக்கக்கூடிய பெரும்பாலான இடங்களிலே மகாத்மா காந்திக்கு சிலை வைத்திருக்கிறார்கள். எங்கெல்லாம் இருக்கக்கூடிய ஒவ்வொரு இடங்களிலும் ஒரு வீதிக்கு காந்தி வீதி என்று பெயரிட்டிருப்பார்கள். அதேபோல காந்தி சதக்கம் என்று சொல்லி ஒரு சதக்கத்தை ஒதுக்கி இருப்பார்கள். அதை தாண்டி மகாத்மா காந்தி பூங்கா என்று சொல்லி பூங்காவை வைத்திருப்பார்கள். இப்படி நிறையவே இந்தியாவினுடைய விவகாரங்களிலும் இந்தியாவை சார்ந்தவர்களையும் அவர்கள் தூக்கி எறிந்ததாகவோ நிராகரித்ததாகவோ அல்லாமல் பெருமைப்படுத்தக்கூடிய வகையிலே செயல்பட்டிருக்கிறார்கள். எங்களுடைய பலரினுடைய ஒரு தலைமுறைக்கு முற்பட்ட பெயர்களை பார்க்கிற போது இந்திரா சந்திரபோஸ் இப்படியான பெயர்களை எங்களுடைய மக்கள் சூடி இருந்தார்கள். அந்த அளவுக்கு நாங்கள் இந்தியாவோடு மிக நெருக்கமாக எங்களுடைய உணர்வுகளை பேணி இருந்தோம். ஆனால் இந்தியா தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்கிறது? பெரும்பாலான உறவுகள் குறிப்பிடக்கூடிய விடயம் இந்தியா வீடு கட்டி கொடுத்திருக்கிறது. சந்தோஷமாக வைத்திருக்கிறது ஈழத்ததமிழர்களுக்கு நன்றி இல்லை என்பது. இந்தியா வீடு கட்டி கொடுத்திருக்கிறது என்பது ஈழதமிழர்களுடைய தேவை வீடு கட்டி தருவது அல்ல. எங்களால் உழைத்து எங்களுக்கான வீடுகளை கட்ட முடியாமல் இல்லை. ஆக இந்த விவகாரத்திலே வீடு கட்டி கொடுத்தது இந்தியா தமிழர்களுக்கு நன்றி இல்லை என்ற வார்த்தைகளை சொல்லுகின்றவர்கள் நீங்கள் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். குறிப்பாக ஒரு விடயத்தை நான் இங்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஈழ தமிழர்கள் தங்களுடைய கடந்த கால யுத்தத்தின் காரணமாக உலகமங்கிலுமே பரவிச் சென்றார்கள். அப்படி அவர்கள் பதவி சென்ற நாடுகளிலே ஒவ்வொரு நாடுகளிலும் அவர்களுக்கான அங்கீகாரம் என்பது எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்று சொன்னால் அந்த நாடுகளிலே நாடாளுமன்ற உறுப்பினர்களாக அந்த நாடுகளினுடைய அமைச்சர்களாக மாறும் அளவுக்கு இருந்திருக்கிறது. கனடாவிலே இப்போது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். பிரதானியாவுக்கு பார்க்கிற போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். உமாகுமரன் என்று சொல்லக்கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். ஆவஸ்திரேலியாவிலே ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். அவர்கள் எல்லாம் ஆவஸ்திரேலியாவிலேயும் பிரதானியாவிலும் கனடாவிலும் பிறந்து விளந்தவர்கள் அல்ல. இந்த நாட்டில இருந்து அகதியாக சென்றவர்கள் அந்த நாட்டிலே இருந்து அகதியாக சென்றவர்களுடைய பிள்ளைகள் அவர்களுக்கு அந்த நாடுகள் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. பிரதானியாவை பொறுத்தவரை ஒரு ஐந்து ஆண்டுகள் அந்த நாட்டிலே அகதியாக இருந்தால் பெர்மனன்ட் ரெசிடன்ட் என்று சொல்லக்கூடிய பிஆர் வழங்குவார்கள். அதேபோல 10 ஆண்டுகளிலே அந்த நாட்டினுடைய குடியுரிமை வழங்குவார்கள். ஆனால் இந்த இந்தியாவிலே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 84ஆம் ஆண்டுக்கு பின்பதாக நிறைய பேர் எங்களுடைய தமிழ் மக்கள் இந்தியாவிலே தஞ்சம் கூறினார்கள். அவர்கள் 30 35 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அகதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆக யாரோ யாரோ எல்லாம் அநிய நாடுகள் எல்லாம் இந்த தமிழர்களுக்குரிய உரிமையையும் அவர்களுக்கான அகதி அந்தஸ்தை நீக்கி அவர்களை தங்களுடைய குடிமக்களாக அரவணைத்துக் கொள்கிற போது நாங்கள் முழுவதுமாக நம்பி இருந்த இந்தியா எங்களை அகதிகளாக வைத்து பார்க்கிறது 30 ஆண்டுகள் கடந்தும் அகதி முகாம்களிலே அடிப்படை உரிமைகள் இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு நிலைமை இருக்கிறது. நிச்சயமாக ஒரு விடயத்தை நாங்கள் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த இலங்கையில் இந்திய தமிழர்கள் இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு குடியுரிமை இருக்கிறது. ஒரு காலத்திலே அவர்களுடைய குடியுரிமை கேள்விக்கு உட்படுத்தப்பட்டபோது இதே ஈழத்ததமிழர் சமூகம் அவர்களுக்காக பின்னின்றது. தந்தை செல்வநாயகம் அவர்கள் எதிர்த்து நின்றார். அந்த தமிழர்களுக்காக பேசினார். அவர்களும் எங்களுடைய மக்கள் என்று பேசினார். ஆனால் இந்தியா அப்படியாக பேசுவதற்கான வாய்ப்பையே நிராகரித்திருக்கிறது. இப்படி இருக்கக்கூடிய சூழலில் அன்பான தமிழக உங்களிடம் விரயமாக வேண்டுகின்ற விடயம். உங்களைப் போலவே நாங்களும் இருக்கிறோம். உங்களை போல உங்களை மீது நாங்கள் பற்றுத்தி கொண்டிருக்கிறோம். உங்களை நாங்கள் நேசிக்கிறோம். உங்களின் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறோம். நீங்கள் எங்களுடைய உணர்வுகளில் கலந்து எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளாக நாங்கள் உங்களை பார்க்கிறோம். இந்தியா எங்களுடைய தந்தையர் தேசம் என்று சொல்லி நாங்கள் அடிக்கடி சொல்லி கொள்வோம். அப்பா என்று அழைத்து ஒரு பிள்ளையை தள்ளிவிட்டு நீ மாற்றான் பிள்ளை என்று சொல்வதுதான் நியாயமாக இருக்கிறதா இந்தியாவுக்கு என்ற ஒரு கேள்வி இருந்து கொண்டிருக்கிறது. ஈழ தமிழர்கள் இன்று ஒரு நாள் இந்தியா எங்களுடைய விவகாரத்தில் தலையிடும் எங்களுக்காக ஒரு தீர்வை பெற்று தரும் நாங்கள் சுதந்திரமாகவும் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ வழி அமைத்து தரும் என்று சொல்லி எதிர்பார்ப்போடுதான் இருந்தார்கள். ஆனால், இப்போது அந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த தீர்வு மிகப்பரிய அதிர்வலைகளையும், மிகப்பெரிய மாற்றங்களையும் உண்டு பண்ணும் என்பதை மறந்து விடாதீர்கள். ஆக அன்பான சொந்தங்களே எங்களுடைய தமிழ்நாட்டு சொந்தங்கள் எங்களுக்காக பேசுகிறார்கள். அவர்கள் எங்களுடைய வரலாறுகளை கடத்துகிறார்கள். எங்களுடைய கருத்துக்களை எங்களுடைய கதைகளை பேசுகிறார்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நாங்கள் அவர்களை குற்றம் சொல்லவில்லை. ஒரு ஒன்றிய நாடாக ஒருமித்த நாடாக இந்தியாவிடம் இதனை வலியுறுத்துங்கள் அன்பான உறவுகளே ஈழ தமிழர்கள் நம்முடைய சொந்தங்கள் நம்முடைய மக்கள் இந்த நிலைப்பாட்டை அவர்களுக்கு தெளிவுபடுத்துங்கள். அவர்கள் நிச்சயமாக இந்தியா எங்களுக்கு என்ன செய்தது என்ற கேள்வியை நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்கிறோம். குறிப்பாக இந்த இளத்தமிழர்களுடைய போராட்ட வரலாற்றை பொறுத்தவரை அன்றைய காலகட்டத்திலே இந்தியாவில் இருந்து பயிற்சி பெற்று வந்த போராளிகளினுடைய மொத்த எண்ணிக்கை 40,000ஆக இருந்தது. அந்த நேரத்தில் ஸ்ரீலங்காவினுடைய ராணுவ எண்ணிக்கை வெறும் 9,000ஆக இருந்தது. அந்த நேரத்தில் நினைத்திருந்தால் தமிழ் தரப்புகள் எந்த வகையான போராட்டங்களை எந்த வகையான நகர்வுகளை மேற்கொண்டிருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள். ஆனால் இந்தியா ஒற்றுமைக்கு கொஞ்சம் விளைவிக்க முடியாது என்ற அடிப்படையில் அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தது. அதேபோல பிரட் என்று சொல்லக்கூடிய அமைப்புக்கு வந்திருக்கக்கூடிய அந்த காலப்பகுதியிலே ஆயுதம் ஏakே47 என்று சொல்லக்கூடிய ஆயுதங்கள் வந்தது. அதனை பறைத்துக் கொண்டதுமே இந்தியா. இப்படியாக நிறைய சம்பவங்களை செய்தது. ஒற்றுமையாக இருந்து அந்த 40,000 போராளிகளை பிளவுபடுத்தி அவர்களுக்குள் ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டு ஒருவர் ஒருவர் தங்களுடைய இனத்தினுடைய கூடாரை காம்புகளாக அவர்களை மாற்றிய பெருமை இந்தியாவை சார்ந்ததாக இருக்கிறது. ஆகவேதான் இந்த விவகாரத்திலே நாங்கள் தொடர்ச்சியான அதிர்வனைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. வேந்த புண்ணிலே வேல் பாற்றுவது போலவே இந்தியா நடந்து கொண்டே இருக்கிறது. இந்தியா ஈழ தமிழர்களுடைய சுய நிர்ணயத்தை மறக்கிறது. ஈழ தமிழர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கக்கூடிய இனப்படுகொலையை நிராகரிக்கிறது. உலக நாடுகள் எல்லாம் இலங்கையிலே இனப்படுகொலை இடம்பெற்றது என்று சொல்லுகிற போது இந்தியா அது தொடர்பாக வாயை துறக்கவில்லை. யாரோ யாரோ என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் எங்களுக்காக பரிந்து பேசுகிற போது எங்களுடைய உணர்வோடு தொடர்புபட்டு எங்களுடைய உறவுகளாக இருக்கக்கூடிய இந்தியா இந்த விவகாரத்தில் இப்படியான ஒரு நிலைப்பாட்டையில் இருப்பது எந்த வகையில் நியாயம் என்பதுதான் ஒவ்வொரு ஈழ தமிழனின் கேள்வியுமாக இருக்கிறது. குறிப்பாக சொல்லிக்கொள்ள வேண்டுமாக இருந்தால் இந்த விவகாரத்திலே தமிழ்நாட்டு தலைவர்கள் தங்களுடைய எதிர்ப்புகளையும் கருத்துக்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் நாங்கள் எப்போதுமே இந்த தமிழ்நாட்டு தமிழர்களை நாங்கள் குற்றம் சாட்டியதில்லை. அவர்கள் எங்களுக்காகவே தங்களுடைய கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். ஈழத்தமிழர்களுடைய சுயநிர்மை உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் 21க்கும் அதிகமான தமிழ்நாட்டு தலைவர்கள் தங்களினுடைய உயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களை நாங்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டோம். அவர்கள் எங்களுடைய நினைவுகளில் கலந்தவர்கள். ஆனால் இந்தியா என்று ஒருமித்த நாடு என்று வருகிற போது இந்தியா எங்களுக்காக செய்கின்றது விடயங்களை பற்றிதான் நாங்கள் பேசுகின்றோம். எங்களினுடைய உரிமைகளை பறைக்கிறது எங்களுடைய இறப்பை கேள்விக்குள்ளாக்குகிறது. மீண்டும் மீண்டும் இப்படியான சம்பவங்களை இடம் பெறுகிறது. குறிப்பாக இளத்தமிழனே ஒரு சோகத்தின் வடுக்களிலே தாங்கி தங்களுடைய இழப்புகளை பேசி கொண்டிருக்கக்கூடிய காலப்பகுதியில் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜியா கென்றிக்கு சென்று அங்கே இருக்கக்கூடிய மகாநாயக தேர்களை சந்தித்து அவர்களுக்கு தன்னை அவர்களிடம் அரசு தன்னுடைய எதிர்காலத்திற்காக தன்னுடைய நாட்டினுடைய எதிர்காலத்திற்காக அவர்களிடம் ஆசி பெற்று வந்ததாக செய்தி வெளியிடுகிறார்கள். ஆக ஒரு பக்கமாக ஈழத்ததமிழ் மக்கள் தங்களுடைய உறவுகளை தொலைத்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக வீதிகளில் காத்திருக்கிறார்கள். கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி ஒரு பக்கமாக இருக்கிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் தனக்கு ஏதும் சம்பந்தம் இல்லை என்பது போல இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒரு பக்கமாக இருந்தால் கூட போதும். ஆனால் மீண்டும் மீண்டும் ஈழ தமிழர்களுடைய மனதில் வெஞ்சினத்தை பாற்றி வெந்த புண்ணிலே வேலை பாற்றுவது போன்ற நகர்வுகளை எப்படி ஏற்றுக்கொள்வது என்ற ஒரு கேள்வி இருந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக இந்த விவகாரத்திலே திமுகாவினுடைய தலைவர் முக ஸ்டாலின் ஒரு அதிர்விலைகளை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல இன்னும் சொல்லக்கொள்ள வேண்டுமாக இருந்தால் அன்புமணி ராமதாஸ் இதனை கண்டித்திருக்கிறார். இப்படிக்காக சில கருத்துக்கள் இப்போது வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பாஜாகா தலைவர் அண்ணாமலை இந்த தீர்ப்பை வரவேற்றி இருப்பதாக சோதி இருக்கிறார்கள். இந்தியாவினுடைய சட்டங்களை மதிக்க வேண்டும் என்று சொல்லியும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான சட்டங்களை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லியும் அவர் சொல்லியிருக்கிறார். இந்த விவகாரம் எந்த அளவுக்கு பாரதரமான நிலைமை ஏற்படுத்துகிறது என்று பாருங்கள். ஒரு தமிழனாக தமிழனுடைய உணர்வை புரிந்து கொள்ள முடியாத நிலையில் எங்களுடைய தமிழர்கள் இருந்து கொண்டிருக்கிறார்களா என்ற கேள்வியையும் நான் இந்த நேரத்தில் முன்வைத்து விடுகிறேன். அதே நேரம் நான் உங்களோடு இன்னும் சில விடயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கு துருவான செய்தி வெளியிடப்பட்டிருக்கக்கூடிய ஒரு செய்தி தளத்திலே சில தமிழ்நாட்டு உறவுகள் இப்படி கருத்துக்களை இட்டிருந்தார்கள். இதனை வாசிக்கின்ற போது எங்களுடைய மனம் எந்த அளவுக்கு வெந்திருக்கும் என்று சொல்லி நீங்கள் ஊகித்து கொள்ளுங்கள். அதாவது இந்த சில மேற்கொள் காட்டக்கூடிய கருத்துக்களை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அப்போ இதுக்கு அகதிகள் முகாம் கட்டி இலங்கை அகதிகளை தங்க வைத்திருக்கிறீர்கள். அடிச்சு துரத்த வேண்டியதுதானே. ஒருவேளை இங்கே அகதிகள் முகாம் இருப்பது இந்த நீதிபதிகளுக்கு தெரியாதா? அடுத்தது சம்மட்டி வழக்கி பதிவு செய்யும்போது இந்த மாதிரியான தீர்ப்பை உடனே வழங்கி விட வேண்டும். இன்னும் ஒரு கருத்து இந்தியாவில் இலங்கை குடிமகன் தங்க சட்டபூர்வ உரிமை இல்லை. சட்டபூர்வ விதி அதிகாரம் இல்லாத கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞன் வனுவாக தாக்கல் செய்வது சட்ட விரோதம். நீதிபதி கருத்தும் தீர்வும் சரியானது அப்படிங்கற கருத்து. அதேபோல திருட்டு ரயிலே வந்த வினைதான் இலங்கை அகதிகள் அனுபவிக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன். திருட்டு ரயிலேறி வந்த வினைதான் இலங்கை அகதிகள் மீண்டும் அனுபவிக்கிறார்கள். இப்போதாவது நீதிபதிகள் உணர்ந்தார்களே இதை போல தட்டி வைத்து கொள்ள வேண்டும் அவர்களை அப்படியும் கருத்துக்கள். ஆனால் சில கருத்துக்கள் வந்திருக்கிறது. கேள்விகள் கேட்கும் உரிமை இந்த நீதிமன்றத்திற்கு இருக்கும் என்று சொன்னால் இனப்படுகலக்கு இந்திய ராணுவத்தை அனுப்பியது சரியா? ஒதுங்கி இருந்தால் அவர்கள் அங்கேயே இருந்திருப்பார்கள் இந்த விடயத்தை நாங்கள் ஒரு முக்கியமான விடயமாக பார்க்கலாம். கனம் நீதிபதி அவர்களே ஏற்கனவே நமது சத்திரத்தில் பல டோகங்கியாக்கள் இருக்கிறார்கள். அவர்களை என்ன செய்ய போகிறீர்கள் என்று சொல்லி ஒரு கேள்வி இருக்கிறது. சில கருத்துக்களைதான் நான் உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதாவது எங்களுடைய விவகாரத்திலே நீங்கள் தலையிடாமல் இருந்திருந்தால் உங்களுடைய அமைதிப்படை என்ற போர்டையில் அட்டூடிய படை இலங்கைக்கு வந்து வடக்கு கிழக்கிலே எங்களுடைய மக்களை இருப்பை அவர்களின் மீது துப்பாக்கி சூடுகளை அவர்களுடைய இருப்பின் மீதான ஆயுத பிரயோகத்தை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் எங்களுடைய மக்கள் எங்களுடைய நாட்டில் ஏதோ ஒன்று செய்து கொண்டிருந்திருப்பார்கள். எங்களுடைய மக்களுக்கான போராட்டம் அவர்களுக்கானதாக இருந்திருக்கும். நீங்கள் ஆயுதம் கொடுத்து படையினரை அனுப்பி 2009லே முள்ளிவாய்க்காலிலே அந்த பேரவலத்தை நிகழ்த்தாமல் இருந்திருந்தால் எங்களுடைய மக்கள் உங்களிடம் வந்து அகதிகளாக இருந்திருக்க மாட்டார்கள். இந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் தங்களுடைய சுய நிர்ணய ஆட்சியை நிரூபித்திருப்பார்கள். நான் ஒரே ஒரு விடயத்தை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்திவிட்டு வருகிறேன். அதாவது 2009க்கு முற்பட்ட காலப்பகுதியிலே வடக்கிலே குறிப்பாக இந்த புதுக்குடியி இருப்பு வந்திரி பிராந்தியத்திலே ஒரு யாசகம் பெறுகின்ற நபரை கூட நீங்கள் அடையாளம் காட்ட முடியாது. அந்த அளவுக்கு எங்களுடைய நிலமும் எங்களுடைய மக்களும் எங்களை காப்பாற்றிக் கொண்டவர்களும் எங்களுடைய காவலர்களாக இருந்தவர்களும் இருந்திருந்தார்கள். இந்த தேசம் தன்னிறைவான ஒரு தேசமாக எங்களுடைய தேசம் இருந்தது. நாங்கள் யாருக்கு இடமும் சோற்றுக்காக பிச்சை எடுக்கவில்லை. அரிசிதாரங்கள் பரப்பு தாருங்கள் என்று சொல்லி வீதிக்கு செல்லவில்லை. நாங்கள் நிறைவானவர்களாக இருந்தோம். ஆனால் அந்த அத்தனை விடயங்களையும் மாற்றியதில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. நீங்கள் செய்த இந்த வினைகளின் பாரதூரங்களை உணர்ந்து என்றாலும் எங்களுடைய மக்களினுடைய இருப்பின் மீதான கேள்விக்கு உட்படுத்தலை தொடர்ந்து தவிர்த்து விடுங்கள். இது ஒரு அன்பான வினயமான வேண்டுகோள். மீண்டும் மீண்டும் சொல்லிக் கொடுக்கிறேன். எங்களுடைய தமிழ்நாட்டு உறவுகளின் மீது எங்களுக்கு மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. உங்களிடம் அன்பான வேண்டுகோள். எங்களுடைய ஈழத் தமிழ் மக்களினுடைய அந்த இறப்புக்காக உங்களுடைய பிராந்திய ஒன்றிய அரசுகளை வலியுறுத்துங்கள். அன்பான உறவுகளே நாளை மற்றுமொரு இன்றைய அதிர்வினோடாக உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் அதுவரை வணக்கம் https://tamilwin.com/
  2. தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் எதிரொலிகள் சர்வதேசத்திடம் இருந்து இலங்கை அரசுக்கு அழுத்தங்களாக வெளிப்படுத்தப்படுகிறன. இந்நிலையில் இறுதியுத்தத்தில் போர்குற்றவாளிகளாக கருதப்பட்ட பல இலங்கையின் இராணுவ வீரர்களுக்கு எதிராக தடைகளையும் சர்வதேச நாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழும் நாடான பிரித்தானியாவில், போர்க் குற்றவாளிகளை ஆதரித்தார் என்ற அடிப்படையில் இலங்கை பாடகி யோஹானிக்கு எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. யோஹானி தனது தந்தை மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா உட்பட போர்க்குற்றவாளிகளாக தடைவிதிக்கப்பட்டவர்களை பாராட்டியமையே இந்த எதிர்ப்புக்கு காரணமாகியது. மேலும் முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட தரப்புக்கு இவ்வாறு பல தடைகளை சர்வதேசம் விடுத்துள்ளமை தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்திக்கு கிடைத்துள்ள வெற்றியாகவும், தமது வலிகளை மறைக்கவும், மறுக்கவும் முடியாது என்பதை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவதற்கான பாதை என்றும் கூறப்படுகிறது. இதற்கமைய மே 18ஆம் திகதியான நேற்று இலங்கை மற்றும் உலகவாழ் தமிழர்கள் இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவுகூறிய நிலையில், நீங்காத உரிமை போராட்டத்திற்கு சர்வதேசம் வழங்கிய பதில்களை விரிவாக ஆராய்கிறது கீழுள்ள... https://tamilwin.com/
  3. இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது தனது அரசாங்கம் தடைகளை விதித்ததில் மகிழ்ச்சி அடைவதாக பிரித்தானிய (UK) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கடந்த கால அட்டூழியங்களுக்கு ஒப்புதல் மற்றும் பொறுப்புக்கூறல் தேவை என்று ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மேலும், "ஆயுத மோதலில் கொல்லப்பட்ட மற்றும் பரவலான மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்களை நினைவுகூரும், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மற்றும் பிறருடன் நாங்கள் இணைகின்றோம். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையின் 16 ஆண்டுகளைக் குறிக்கும் வேளையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு மண்டலங்கள் என்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவித்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மீது செல் தாக்குதல் நடத்தியது. ஆயுத மோதல் முழுவதும், இலங்கை சட்டவிரோதக் கொலைகள், கட்டாயக் காணாமல் ஆக்கப்படல், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளைச் செய்தது மற்றும் மோதலின் இறுதி மாதங்களில் அதன் இராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. கடுமையான தடை இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நால்வர் மீது எமது அரசாங்கம் இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதித்தது. இந்த நடவடிக்கையில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், "நீதி மற்றும் அமைதியைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த புனிதமான நாள் நினைவூட்டுகிறது" என்று ஸ்டார்மர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை, கடந்த ஆண்டு பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், 2009 ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், “15ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினத்தை” நினைவுகூரும் ஒரு செய்தியை வெளியிட்டார். அதில், "முள்ளிவாய்க்கால் என்பது காணாமல் போனவர்களை நினைவுகூருவதோடு, அட்டூழியங்கள் செய்தவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும் என்பதையும் நினைவூட்டுவதாக இருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இலங்கை தமிழர்கள் மேலும், "நமது நாடு முழுவதும் உள்ள தமிழ் சமூகங்கள் இந்த புனிதமான நாளைப் பற்றிச் சிந்திக்கும்போது, தமிழ் மக்களுக்கு நீடித்த அமைதி, நல்லிணக்கம் மற்றும் நீண்டகால அரசியல் தீர்வை நோக்கிச் செயல்படுவதற்கான நமது உறுதிப்பாட்டை தொழிலாளர் கட்சி மீண்டும் உறுதிப்படுத்துகிறது" எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில், பிரித்தானிய அரசாங்கம் இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதிகளான சவேந்திர சில்வா, ஜகத் ஜெயசூரியா, கடற்படைத்தளபதி வசந்த கரனாகொட மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி கருணா என அழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் என்போருக்கு எதிராக தடைகளை விதித்தது. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த நால்வருக்கும் தடை விதித்தமை தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. . https://tamilwin.com/
  4. கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன்(Patrick Brown) தெரிவித்துள்ளார். எக்ஸ் தள பதிவு ஒன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு ,அந்த குடும்பத்தின் கரங்களில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும், சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞை ஆகும். ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தால் நீதியை குழப்புவதற்கான நடவடிக்கைகள், வழக்கு விசாரணையிலிருந்து மறைந்திருத்தல் போன்றவற்றை கைவிட்டுவிட்டு சர்வதேச விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். ராஜபக்ச குடும்பம் இழைத்துள்ள மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போல்பொட் , ஸ்லோபடான் மிலோசோவிக், ஹென்றிச் ஹிம்லர் மற்றும் புளிசியான் கபுகா ஆகியோர் இழைத்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் போட்டியிடும் அளவிற்கும் மோசமானவை. கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/
  5. வரலாற்றில் முதல் முறையாக தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினருடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவையொட்டி 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மே 14, 2025 அன்று லண்டனில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வு மிட்சம் மற்றும் மோர்டன் தொகுதியைச் (Mitcham and Morden) சேர்ந்த லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழுக்கான அனைத்துக் கட்சி குழுவின் தலைவருமான Dame Siobhain McDonagh தலைமையில் நடந்துள்ளது. நிகழ்வில் Stratford and Bow தொகுதி பிரிட்டனின் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமாரன், ஈஸ்ட் ஹாம் தொகுதியைச் சேர்ந்த Rt Hon Sir Stephen Timms, Ealing North MP James Murray, ஓல்ட் பெக்ஸ்லி மற்றும் சிட்கப் தொகுதி எம்.பி. லூயி பிரென்ச் மற்றும் ருய்ஸ்லிப், நார்த்வுட் மற்றும் பின்னர் தொகுதி எம்.பி. டேவிட் சிம்மன்ட்ஸ், ஹேரோ வெஸ்ட் தொகுதி எம்.பி. காரத் தோமஸ், உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர். தமிழரின் அரசியல் உரிமைகள் மேலும் நிகழ்வில் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்ட இயக்குநர் பிரான்சிஸ் ஹேரிசன் , இலங்கையின் சமாதானம் மற்றும் நீதிக்கான இயக்கத்தின் இயக்குநர் இவோன் ஸ்கோஃபீல்ட், Freedom from Torture அமைப்பின் Head of Accountability Roslyn Renni, Tamils for Labour அமைப்பின் தலைவர் சென் கந்தையா ஆகியோர் சமூகநீதியும், மக்களவுரிமைகளும் தொடர்பான உரைகளை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் International Tamil Youth Organisation (TYO International) ஒருங்கிணைப்பாளராக செயல்படும் மதுஷா குமரேசன், PEARL அமைப்பின் பேரவையின் வழக்குரைஞராக செயல்படும் சிவானி ரவீந்திரன் ,பிரான்சிலிருந்து ரூத் சாருகா தேவகுமார் ஆகிய இளம் தமிழ் செயல்பாட்டாளர்களும் பங்கேற்று உரையாற்றியிருந்தனர். நிகழ்வின் முக்கியக் கருத்தாக, நாடு கடந்ததமிழீழ அரசாங்கத்தின் (TGTE) துணைப் பிரதமர் மகிந்தன் சிவசுப்பிரமணியம் மற்றும் TGTE உறுப்பினர்கள் முள்ளிவாய்க்கல் படுகொலையின் நீதி மற்றும் தமிழரின் அரசியல் உரிமைகள் குறித்து வலியுறுத்தியுள்ளனர். https://tamilwin.com/
  6. அவர் சிங்களவர் தான் பெயர் Abailija Patawadige Pathum Udayanga வயது 31 https://essential-japan.com/news/sri-lankan-man-arrested-over-death-of-female-brazilian-tourist-in-japan/
  7. அது நான் அல்ல chatgpt யின் பதில்கள் தமிழில் கேள்வி கேட்டால் கூட தமிழில் பதில்கள் வருகின்றன. நேற்று Cupboard அடிக்க வந்த கிந்தி மட்டுமே தெரிந்த இருவர் வந்தனர் அவர்களுக்கு ஆங்கிலத்தில் சொல்வது ஒன்றும் புரியவில்லை chatgpt மூலம் நாம் தமிழில் சொல்வதை ஹிந்தியில் மொழி மாற்றி மொபைல் சொல்லியவுடன் புரிந்து கொண்டார்கள் உலகம் எங்கேயோ போய் கொண்டு இருக்கிறது இந்த கேட்டுக்குள் சிங்களம் படி கிந்தி படி என்று ஒரு கூட்டம் அலையுது .
  8. chatgpt பதில்கள் . ✅ 1. அர்மேனிய இனப்படுகொலை (Armenian Genocide) – 1915-1923 பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: பெரும்பாலான நாடுகள் 2000களுக்குப் பிறகு மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஏற்றன. இனப்படுகொலை செய்தது: ஒட்டோமன் எமிரேட் (துருக்கி) மரணங்கள்: 1.2–1.5 மில்லியன் அர்மேனியர்கள் நடப்பு நிலை: துருக்கி இன்னும் இது இனப்படுகொலை என்பதை மறுக்கிறது. ✅ 2. ஹொலோடோமோர் (Holodomor) – 1932-1933 பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: 2006–2020களில் மேற்கு நாடுகள் ஏற்றன. இனப்படுகொலை செய்தது: சோவியத் ஒன்றியம் (உக்ரைனியர்களுக்கு எதிராக) மரணங்கள்: 3–7 மில்லியன் நடப்பு நிலை: ரஷ்யா மறுக்கிறது; உக்ரைன் அதை இனப்படுகொலையாக அறிவித்துள்ளது. ✅ 3. ஹெரெரோ மற்றும் நாமா இனப்படுகொலை (1904–1908, நமீபியா) பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: ஜெர்மனி 2021ல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. இனப்படுகொலை செய்தது: கெய்சர் ஜெர்மன் எமையர் (German Empire) மரணங்கள்: ~80,000 ஹெரெரோ மற்றும் நாமா மக்கள் நடப்பு நிலை: இப்போதும் நஷ்ட ஈடு குறித்து விவாதம் நடக்கிறது. ✅ 4. ரூவாண்டா இனப்படுகொலை (1994) பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: ஒரே ஆண்டிலேயே பலர் ஏற்றனர், ஆனால் மேற்கு நாடுகள் தாமதமாகவே பதிலளித்தன. இனப்படுகொலை செய்தது: ஹூதூ எக்ஸ்ட்ரீமிஸ்ட் அரசு மரணங்கள்: ~800,000 துட்சி மக்கள் நடப்பு நிலை: ஐ.நா. உட்பட உலகம் இனப்படுகொலையாக ஏற்றது. ✅ 5. சுதான் – தர்ஃபூர் இனப்படுகொலை (2003–தொடர்பது) பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: 2000களில், ஐ.நா. மற்றும் பல மனித உரிமை அமைப்புகள் இனப்படுகொலை செய்தது: சுதான் அரசு, ஜஞ்ஜவீட் படைகள் மரணங்கள்: ~300,000+ நடப்பு நிலை: சில நாடுகள் மட்டும் இனப்படுகொலையாக அறிவித்துள்ளன. இந்த பட்டியலில் உள்ள ஒவ்வொரு சம்பவமும் காலத்திற்குப் பின் மட்டுமே பொதுவாக ஏற்கப்பட்டது. இது போல ஏராளமான "ஏற்றுக்கொள்ளப்படாத" அல்லது விவாதிக்கப்படும் சம்பவங்களும் உள்ளன (உதா: தமிழீழ யுத்தம், சீனாவின் ஜின்ஜியாங் நிலைமைகள், ரொஹிங்க்யா மேன்முறைகள்). இங்கு யாரும் துள்ளி குதிக்கவும் இல்லை அழவும் இல்லை தமிழர்களின் ஒவ்வொரு நகர்வுக்கும் அழுது தொலைப்பது சிலரின் வாடிக்கை .
  9. தமிழ் இன அழிப்பை நிறுவுவதற்கு போதுமான ஆதாரம் இல்லை அப்படி ஒன்றே நடந்தது இல்லை என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லி திரியும் சுமத்திரன் அவரின் கனடிய பினாமி சொத்துக்களை முடக்குவதுடன் அவரின் கனடிய ஆதரவாளர்களையும் விமானமேற்றி கொழும்புக்கு அனுப்பி விடவும் என்று மெயிலை தட்டி விடனும் இந்த செய்தியை படிக்கும் அனைவரும் .
  10. இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் (Patrick Brown) தெரிவித்துள்ளார். கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் மீதான தாக்குதல் நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது. இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை. கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செயப்பட்டார்கள். ஆனால், இலங்கை அரசாங்கம் தவறான தகவல்களை பரப்பி வருகின்றது என தெரிவித்த பிரம்டன் முதல்வர், உண்மைக்காகவும் நீதிக்காவும் குரல்கொடுத்த தமிழர்களை இழிவுபடுத்தவும் தாக்கவும் அவர்கள் முயன்றனர். இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழர் படுகொலை நினைவுதூபி என நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Tamilwinதமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்ட...இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் (Pa...
  11. சம்மர் கட் ..😄😄😄 சம்மர் கட் ..😄😄😄
  12. லீவ் கேட்டா பேசாம கொடுக்கனும் அதை விட்டு விட்டு! ஊழியர் - சார் !! தாத்தாவுக்கு ஊரில் உடம்பு சரியில்லை ரெண்டு நாள் லீவ் கொடுங்க! அதிகாரி - லீவ் இருக்கட்டும் நான் கேட்கிற கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு! பாகுபலியை ஏன் கட்டப்பா குத்தினார்! ஊழியர் - சார்! சரியான நேரத்தில்.இந்த கேள்வியை கேட்டு இருக்கீங்க சார்! பாஹுபலி கிட்ட நம்ம கட்டப்பா தாத்தா உடம்பு சரியில்லை என்று ரெண்டு நாள் லீவ் கேட்டு இருக்கார்! கொடுக்களை அதான் போட்டு தள்ளிட்டார்! அதிகாரி - ரெண்டு நாள் என்ன நாலு நாள் லீவ் எடுத்துக்கோ ப்பா!
  13. கர்மா சாத்திரம் போன்றவற்றை நம்புவதில்லை நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது நம்ப தோனுது.
  14. அது வசியின் தமையனின் கொம்பனி . வசிக்கும் குடும்பம் ஒன்று இருந்து டைவேர்ஸ் ஆகி விட்டது .இதற்க்கு மேல் இங்கு வேணாம் .
  15. கல்யாண மண்டப அலப்பறைகள்! திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, ஆனா, மத்த எல்லாரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத்தான் இப்போ பாக்கப் போறோம். ( நம்மளை மாதிரி வேலை வெட்டி இல்லாதவன் போல ) . 1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல பாத்த உடனே பளிச்சின்னு தெரியிறது பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு ஒரு பொண்ணு அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட தங்கச்சி. 2. கல்யாண வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லயும் பொண்ணும் மாப்ளையும் இருப்பாங்க. அவங்களுக்கு அடுத்த படியா, எல்லா ஃப்ரேம்லயும் ரெண்டு மூணு தங்க சங்கிலிகள் தெரியிறமாதிரி நிக்கிற ஒரு பொண்ணு இருக்கும்.அது வேற யாரும் இல்லை. பையனோட அக்கா. 3. ஆளுக்கும் போட்டுருக்க ட்ரஸ்ஸுக்கும் சம்பந்தமே இல்லாம, ஆனா மாப்ளைக்கு ஈக்குவலா ஒருத்தன் கோட் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு டம்மியா, ஸ்டேஜ்ல நின்னுகிட்டு இ. அது வேற யாரும் இல்லை. மாப்ளையோட அக்கா புருஷன். அந்தக் கோட்ட, அவர் கல்யாண ரிஷப்ஷனுக்கு அப்புறம் இப்பதான் போட்டிருப்பாரு. 4. இன்னொருத்தன் மாப்ள மாதிரியே வேஷ்டி சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு, ஸ்டேஜ்ல நிக்காம, டான் மாதிரி அங்க இங்க ஓடுறது, வர்றவங்கள கவனிக்கிறது, ஸ்டேஜ்ல ஏறுறது, இறங்குறதுன்னு ரொம்ப ஆக்டிவா, ரொம்ப சந்தோஷமா திரிஞ்சிட்டு இருப்பான்.அவன்தான் மாப்ளையோட தம்பி.ரூட்டு கிளியரான சந்தோஷத்துல தலைகால் புரியாம சுத்திக்கிட்டு இருப்பான். 5. மாப்ளைக்கு லைட்டா வேர்த்தாலோ, வாழ்த்த வர்றவங்க கூட்டத்துல பொட்டுவைக்கும் போது லைட்டா அங்க இங்க அப்பிட்டாலோ, மின்னல் மாதிரி ஒருத்தன் ஒரு கர்ச்சீப்ப வச்சிக்கிட்டு மாப்ள மூஞ்ச தொடைச்சிட்டே இருப்பான்.அவன் மாப்ளையோட ஸ்கூல் ஃப்ரண்டா இருக்கும். ( அவன் தான் உலகத்தின் பாவப்பட்ட ஜீவன்) 6. கல்யாணம் முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் கழிச்சி, “இய்ய்ய்யாய்…எவண்டா அவன் நா வர்றதுக்கு முன்னால தாலியக் கட்டுனது..” ன்னு மண்டபத்தோட வாசல்ல ஒருத்தன் ஃபுல் போதையில கத்திக்கிட்டு இருப்பார்.அவரை யாருமே மதிக்காம, ஆனா ஒரே ஒரு அம்மா மட்டும் போய் அவரை உள்ள கூப்டாங்கன்னா அவர் தான் மாப்ளையோட தாய் மாமன்.( பல நேரங்களில் அவர் நாய் மாமன் ) பத்து மணி கல்யாணத்துக்கு பதினொன்னே முக்காலுக்கு வருவாரு.ஆனா கல்யாணம் அவர் வந்ததுக்கப்புறம்தான் நடக்கணும்னு வேற எதிர்பாப்பாரு. அப்போ அவரைப் போய் கூப்டுறது யாருன்னு உங்களுக்கே தெரியும். 7. கூட்டத்துல உட்ககார்ந்திருக்க எல்லாரும் “எப்பப்பா… கல்யாணம் முடியும்..எப்பப்பா சோறு போடுவாங்க” ன்னு ஒரே ஆவலோட உட்கார்ந்திருக்கும்போது,ஒரே ஒரு அம்மா மட்டும் வச்ச கண்ணு வாங்காம கல்யாணப் பொண்ணையே மொறைச்சி பாத்துகிட்டு இருக்கும்.அப்டி இருந்தா.அது பொண்ணோட அப்பா வழி அத்தைன்னும்,அவங்க பையனுக்கு இந்தப் பொண்ணை கேட்டு, பொண்ணு வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னும் நீங்களே கண்டுபுடிச்சிடலாம். 8. மே மாசம், பீக் அவர்ல சென்னை சிட்டி பஸ்ல ட்ராவல் பண்ண மாதிரி ஒரு களைப்போட, ஒரு நிமிஷம் கூட உட்காராம, ஸ்டேஜ்ல கல்யாணம் முடிஞ்சிருச்சா இல்லையான்னு கூட கவனிக்காம எல்லாரையும் போய், “வாங்க வாங்க.. சாப்ட்டு போங்க” ன்னு ஒருத்தர் கூப்டுட்டு இருந்தா அவர்தான் பொண்ணோட அப்பா. 9. பொண்ணுக்கு எத்தனை சவரன் நகை போட்டுருக்காங்க, யார் யார் என்ன செய்றாங்கங்குற விஷயத்த, பையனோட அம்மா அப்பாவ விட, இன்னொரு முக்கியமான கேரக்டர் ரொம்ப கூர்மையா,ஒண்ணு பாத்துக்கிட்டு இருக்கும்.அதுவேற யாரும் இல்லை. பையனோட அண்ணி.. எங்க நம்மள விட அதிகமாக நகையப் போட்டுட்டு நம்மள டம்மி ஆக்கிறப்போறாங்களோங்குற பீதியிலயே இருக்கும். 10. அந்த கல்யாணக் கூட்டத்துலயே, ஒரே ஒரு குரூப்பு மட்டும், அந்த கல்யாணத்துக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாத மாதிரி, தனியா ஒரு மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கும்.அதுதான் பொண்ணோட அப்பாவோட சொந்தக்காரங்க. 11.கல்யாணமெல்லாம் முடிஞ்ச உடனே அரக்க பரக்க ஒரு கும்பல், வீங்கிப்போன மூஞ்சோட, ஒழுங்கா சீவாத தலையோட வேக வேகமா வந்து மாப்ளைக்கும் பொண்ணுக்கும் வெறும் கைய மட்டும் குடுப்பாய்ங்க.அவிங்க வேற யாரும் இல்லை.மாப்ளையோட ஆஃபீஸ் மேட்ஸோ, இல்லை காலேஜ் மேட்ஸோ. ரூம்போட்டு விடியகாலம் வரைக்கும் குடிச்சிட்டு இப்பதான் எழுந்து வராங்கன்னு அர்த்தம். 12. அதே கல்யாணத்துல, யாரு கூடவும் பேசாம, ஒரு young, Husband & wife, அவங்க குழந்தைய விளையாட விட்டுட்டு, அதுக்கு ஐஸ்கிரீம் வாங்கி சாப்ட குடுத்துகிட்டு, கையில் ஒரு கேமராவ வச்சிக்கிட்டு சீட்டுல உக்காந்த படியே ஸூம் பண்ணி மாப்ளைய ஃபோட்டோ எடுக்குறதும், அப்பப்போ மாப்ளைய பாத்து கைகாட்டுறதுமா இருப்பாய்ங்க.அவனும் வேற யாரும் இல்லை.மாப்ளையோட காலேஜ் ஃப்ரண்டாத்தான் இருப்பான். அவசரப்பட்டு அவங்க பேட்ச்லயே மொதல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை குட்டின்னு ஆயிட்டதால இப்டி பேச்சிலர் பார்ட்டில கலந்துக்க முடியாம சோகத்துல இருக்கவன். 13. கடைசியா கல்யாணம் முடிஞ்சி, எல்லாரும் ஃபோட்டோ எடுக்க வரும்போது,பொண்ணோட ஃப்ரண்ட்ஸ பாத்து “இவ்வளவு நாளா நீங்கல்லாம் எங்கம்மா இருந்தீங்கன்னு” மைண்டுல நினைக்கிறான்பாருங்க. அவர்தான் நம்ம மாப்ள்ளை. திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, ஆனா, மத்த எல்லாரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத்தான் இப்போ பாக்கப் போறோம். ( நம்மளை மாதிரி வேலை வெட்டி இல்லாதவன் போல ) . 1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல பாத்த உடனே பளிச்சின்னு தெரியிறது பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு ஒரு பொண்ணு அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட தங்கச்சி. 2. கல்யாண வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லயும் பொண்ணும் மாப்ளையும் இருப்பாங்க. அவங்களுக்கு அடுத்த படியா, எல்லா ஃப்ரேம்லயும் ரெண்டு மூணு தங்க சங்கிலிகள் தெரியிறமாதிரி நிக்கிற ஒரு பொண்ணு இருக்கும்.அது வேற யாரும் இல்லை. பையனோட அக்கா. 3. ஆளுக்கும் போட்டுருக்க ட்ரஸ்ஸுக்கும் சம்பந்தமே இல்லாம, ஆனா மாப்ளைக்கு ஈக்குவலா ஒருத்தன் கோட் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு டம்மியா, ஸ்டேஜ்ல நின்னுகிட்டு இ. அது வேற யாரும் இல்லை. மாப்ளையோட அக்கா புருஷன். அந்தக் கோட்ட, அவர் கல்யாண ரிஷப்ஷனுக்கு அப்புறம் இப்பதான் போட்டிருப்பாரு. 4. இன்னொருத்தன் மாப்ள மாதிரியே வேஷ்டி சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு, ஸ்டேஜ்ல நிக்காம, டான் மாதிரி அங்க இங்க ஓடுறது, வர்றவங்கள கவனிக்கிறது, ஸ்டேஜ்ல ஏறுறது, இறங்குறதுன்னு ரொம்ப ஆக்டிவா, ரொம்ப சந்தோஷமா திரிஞ்சிட்டு இருப்பான்.அவன்தான் மாப்ளையோட தம்பி.ரூட்டு கிளியரான சந்தோஷத்துல தலைகால் புரியாம சுத்திக்கிட்டு இருப்பான். 5. மாப்ளைக்கு லைட்டா வேர்த்தாலோ, வாழ்த்த வர்றவங்க கூட்டத்துல பொட்டுவைக்கும் போது லைட்டா அங்க இங்க அப்பிட்டாலோ, மின்னல் மாதிரி ஒருத்தன் ஒரு கர்ச்சீப்ப வச்சிக்கிட்டு மாப்ள மூஞ்ச தொடைச்சிட்டே இருப்பான்.அவன் மாப்ளையோட ஸ்கூல் ஃப்ரண்டா இருக்கும். ( அவன் தான் உலகத்தின் பாவப்பட்ட ஜீவன்) 6. கல்யாணம் முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் கழிச்சி, “இய்ய்ய்யாய்…எவண்டா அவன் நா வர்றதுக்கு முன்னால தாலியக் கட்டுனது..” ன்னு மண்டபத்தோட வாசல்ல ஒருத்தன் ஃபுல் போதையில கத்திக்கிட்டு இருப்பார்.அவரை யாருமே மதிக்காம, ஆனா ஒரே ஒரு அம்மா மட்டும் போய் அவரை உள்ள கூப்டாங்கன்னா அவர் தான் மாப்ளையோட தாய் மாமன்.( பல நேரங்களில் அவர் நாய் மாமன் ) பத்து மணி கல்யாணத்துக்கு பதினொன்னே முக்காலுக்கு வருவாரு.ஆனா கல்யாணம் அவர் வந்ததுக்கப்புறம்தான் நடக்கணும்னு வேற எதிர்பாப்பாரு. அப்போ அவரைப் போய் கூப்டுறது யாருன்னு உங்களுக்கே தெரியும். 7. கூட்டத்துல உட்ககார்ந்திருக்க எல்லாரும் “எப்பப்பா… கல்யாணம் முடியும்..எப்பப்பா சோறு போடுவாங்க” ன்னு ஒரே ஆவலோட உட்கார்ந்திருக்கும்போது,ஒரே ஒரு அம்மா மட்டும் வச்ச கண்ணு வாங்காம கல்யாணப் பொண்ணையே மொறைச்சி பாத்துகிட்டு இருக்கும்.அப்டி இருந்தா.அது பொண்ணோட அப்பா வழி அத்தைன்னும்,அவங்க பையனுக்கு இந்தப் பொண்ணை கேட்டு, பொண்ணு வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னும் நீங்களே கண்டுபுடிச்சிடலாம். 8. மே மாசம், பீக் அவர்ல சென்னை சிட்டி பஸ்ல ட்ராவல் பண்ண மாதிரி ஒரு களைப்போட, ஒரு நிமிஷம் கூட உட்காராம, ஸ்டேஜ்ல கல்யாணம் முடிஞ்சிருச்சா இல்லையான்னு கூட கவனிக்காம எல்லாரையும் போய், “வாங்க வாங்க.. சாப்ட்டு போங்க” ன்னு ஒருத்தர் கூப்டுட்டு இருந்தா அவர்தான் பொண்ணோட அப்பா. 9. பொண்ணுக்கு எத்தனை சவரன் நகை போட்டுருக்காங்க, யார் யார் என்ன செய்றாங்கங்குற விஷயத்த, பையனோட அம்மா அப்பாவ விட, இன்னொரு முக்கியமான கேரக்டர் ரொம்ப கூர்மையா,ஒண்ணு பாத்துக்கிட்டு இருக்கும்.அதுவேற யாரும் இல்லை. பையனோட அண்ணி.. எங்க நம்மள விட அதிகமாக நகையப் போட்டுட்டு நம்மள டம்மி ஆக்கிறப்போறாங்களோங்குற பீதியிலயே இருக்கும். 10. அந்த கல்யாணக் கூட்டத்துலயே, ஒரே ஒரு குரூப்பு மட்டும், அந்த கல்யாணத்துக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாத மாதிரி, தனியா ஒரு மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கும்.அதுதான் பொண்ணோட அப்பாவோட சொந்தக்காரங்க. 11.கல்யாணமெல்லாம் முடிஞ்ச உடனே அரக்க பரக்க ஒரு கும்பல், வீங்கிப்போன மூஞ்சோட, ஒழுங்கா சீவாத தலையோட வேக வேகமா வந்து மாப்ளைக்கும் பொண்ணுக்கும் வெறும் கைய மட்டும் குடுப்பாய்ங்க.அவிங்க வேற யாரும் இல்லை.மாப்ளையோட ஆஃபீஸ் மேட்ஸோ, இல்லை காலேஜ் மேட்ஸோ. ரூம்போட்டு விடியகாலம் வரைக்கும் குடிச்சிட்டு இப்பதான் எழுந்து வராங்கன்னு அர்த்தம். 12. அதே கல்யாணத்துல, யாரு கூடவும் பேசாம, ஒரு young, Husband & wife, அவங்க குழந்தைய விளையாட விட்டுட்டு, அதுக்கு ஐஸ்கிரீம் வாங்கி சாப்ட குடுத்துகிட்டு, கையில் ஒரு கேமராவ வச்சிக்கிட்டு சீட்டுல உக்காந்த படியே ஸூம் பண்ணி மாப்ளைய ஃபோட்டோ எடுக்குறதும், அப்பப்போ மாப்ளைய பாத்து கைகாட்டுறதுமா இருப்பாய்ங்க.அவனும் வேற யாரும் இல்லை.மாப்ளையோட காலேஜ் ஃப்ரண்டாத்தான் இருப்பான். அவசரப்பட்டு அவங்க பேட்ச்லயே மொதல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை குட்டின்னு ஆயிட்டதால இப்டி பேச்சிலர் பார்ட்டில கலந்துக்க முடியாம சோகத்துல இருக்கவன். 13. கடைசியா கல்யாணம் முடிஞ்சி, எல்லாரும் ஃபோட்டோ எடுக்க வரும்போது,பொண்ணோட ஃப்ரண்ட்ஸ பாத்து “இவ்வளவு நாளா நீங்கல்லாம் எங்கம்மா இருந்தீங்கன்னு” மைண்டுல நினைக்கிறான்பாருங்க. அவர்தான் நம்ம மாப்ள்ளை.
  16. காலத்துக்கு ஏற்ப மாறி கொள்ளனும் இங்குள்ள புல்லு வெட்டும் மெசினை அங்கு கொண்டு போய் வாடகைக்கு விடலாம் அதேபோல் சிறு ரக இயந்திரம்களை கொண்டு போய் இறக்கி வாடகைக்கு விட்டு காட்ட பின்னால உங்கடை கொப்பி பண்ணிக்கொண்டு ஒரு நூறு பேர் வருவார்கள் உடனே உங்கடை வாடகை கொம்பனியை நல்ல விலைக்கு வித்து விட்டு அடுத்த சந்தர்ப்பத்தை தேட தொடங்குகள் .
  17. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் மகத்தான வரவேற்பினை வழங்கியிருந்தது. தனக்கான வரவேற்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக இந்திய பிரதமர் தனது சமூக வலைத்தளமான எக்ஸில் குறிப்பிட்டிருந்தார். மகத்தான வரவேற்பு இந்நிலையில் கொழும்பை வந்தடைந்த இந்திய பிரதமருக்கு இலங்கை வாழ் இந்தியர்கள் மகத்தான வரவேற்பினை வழங்கியிருந்தனர். இந்திய மாநிலம் ஒன்றுக்கு பிரதமர் விஜயம் மேற்கொள்ளும் போது, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடுவதை போன்று, பிரதமர் கொழும்பில் தனது செயற்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தார். அந்தக் காட்சிகளை பார்க்கும் போது இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதா என சிந்திக்கும் அளவுக்கு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏற்கனவே இந்தியாவின் முற்றுகைக்குள் சிக்கியுள்ள இலங்கையை மற்றுமொரு இந்தியாவின் மாநிலமாக மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்தியாவின் நாணயத்தையும் இலங்கையில் பயன்படுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில், இந்திய பிரதமரின் வருகையின் போதான வரவேற்பும் அதனை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/
  18. இந்த குழப்பம் இன்னும் புதிய பணக்காரர் களை உருவாக்கி தள்ளபோகுது ஒரு பிரச்சனை வருகிறது என்றால் சந்தர்ப்பங்களையும் காவி கொண்டே வரும் .
  19. இதெல்லாம் போலி செய்தி என்று அமெரிக்காவில் இருந்து குரங்குக்கு வைத்தியம் செய்பவர் வந்து சொல்வார் நம்புங்க மக்களே நம்புங்க .😄
  20. உலகில் தடை செய்யப்பட்ட இந்த கடலடி ரோலிங் மூலம்அவர்களின் வலைகளை கடலில் போடப்படும் வாகனம்களோ அல்லது அவர்களின் படகுகளோ அறுத்து நாசம் பண்ணி விடும் அதனால் மறுபடியும் இலங்கை வடகிழக்கு கடல் பகுதிக்குள் ரோலிங் பண்ணி மீன் பிடிக்க வரமாட்டார்கள் நமது வடகிழக்கு மீனவர் பாரம்பரிய மீன்பிடி முறை அவர்களுக்கு பாதிப்பு பெரிதாக கிடையாது . இப்படி கடலில் போடப்படும் படகுகளால் தமிழ்நாட்டு பத்து ரோலர் களின் உலகில் தடை செய்ய பட்ட கடலடி வலைகள் அறுக்க பட்டால் மறுபடியும் வடகிழக்கு கடல் எல்லைக்குள் வரவே மாட்டார்கள் .
  21. அவர்களுக்கே தெரியும் தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பார்கள் . அதே போலத்தான் சிறிமாவோ பண்டாரநாயக்கா யாழில் 7௦ களில் செய்ய வைத்த மிளகாய் சின்ன வெங்காயம் உற்பத்தி கடைசியில் மிஞ்சியது கான்சர் தான் அதிலும் தப்பினால் நிற மாறும் வேடம் பிரான்சில் இப்படியான நபரை கண்டு கொண்டேன் ஊரில் இருக்கும் மட்டும் தோட்டத்துக்கு மருந்து அடிப்பது அவரின் தொழில் இங்கு பிரான்ஸ் வந்த பின் உடம்பு முழுக்க வெள்ளை என்ன வெள்ளைகாரனே அவர்தான் . அவர் வரணி பகுதியை சேர்ந்தவர் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.