Everything posted by பெருமாள்
-
தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த
மகிந்தவின் பினாமி வரிசையில் இருக்கும் ஒரு கோடாரி காம்பாக இருக்கலாம் உண்மையில் அந்த வீட்டு உரிமையாளரே மகிந்த ஆக இருக்கலாம் . கத்தரி விளைந்தால் சந்தைக்கு வரத்தானே வேணும் இதுவரைக்கும் அந்த பினாமி பற்றி விபரங்கள் வராமலா போயிருக்கும் .
-
அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடிய கமராக்கள்
இந்த தொந்தரவு வேணாம் என்றுதான் அநேகர்லண்டனில் இருந்து சென்னை போய் காலையில் இறங்கி அப்படியே பலாலி 1 மணி நேரத்தில் யாழில் மதியம் சாப்பட்டுக்கு வீட்டில் நிக்கினம் என்ன 2௦ கிலோ நிறைக்கு மேல் கொண்டு போக முடியாது அவசர பிரியர்களுக்கு இந்த ரூட் மிகவும் வசதியானது . அல்லது சென்னையில் இறங்கி ஆசுவாசமாய் சொப்பிங் பண்ணி 9௦கிலோ வுக்கு நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு கப்பல் போய் வருகிறது நாலு மணி நேர பயணமே ஒரு வழி பாதை நேரத்துக்கு ஆகுது . a9 ல் இரவிரவாய் 8௦மைல் வேகத்தில் மாவா போதை பாக்கு போட்டு ஓடும் சாகச வாகன ஓட்டிகளின் தொல்லை வேண்டாம் .
-
ஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதேசம்!
ஆம் அங்குதான் ரியோ விசிறிகள் கொஞ்சம் விளங்க படுத்தினால் நல்லது .
-
ஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதேசம்!
வீட்டை விட்டு வெளிகிட்டால் அசைவ உணவகங்கள் செல்வதில்லை இங்கும் சரி ஊரிலும் அப்படித்தான் உயர் தர சைவ உணவகம் என்று விளம்பரம் போட்டு வைத்து இருப்பார்கள் ஒரு முறை ஒன்றுக்கு எண்டு காட்டி விட்டு உள்ளே சென்று பாருங்கள் உளுந்து வடை கூட சாப்பிட யோசிக்க வைக்கும் அவ்வளவுக்கு பின் பக்க சமையல் அறை அசுத்தமாகி வைத்து இருப்பார்கள் பிறகென்ன ஒரு பிஸ்கட் பையுடன் வாழ்க்கை போகும் . அப்ப அந்த பகுதியில் உள்ள பிரபல குளிர் பான கடையில் ரோல் விற்கிறார்களே அதெல்லாம் மரக்கறி ரோலா? சரியாக கவனிக்கவில்லை இனி செல்லும்போது கவனிக்கணும் .
-
ஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதேசம்!
நெருங்கிய ரெத்த உறவு ஊரில் தான் தனது கட்டை வேகனும் என்று ஊரில் அவரின் விருப்ப படி அமைதியாகி விட்டார் தவிர்க்க முடியாமல் ஊர் செல்ல வேண்டி வந்தது சாரமும் சைக்கிளுமாய் திரிய ஊரில் காண்பவர்களுக்கு குழப்பம் மற்றும் படி தமிழ்வின் எனக்கு பிடிக்காத செய்தி தளம் ஆரம்பத்தில் யாழில் தடை செய்யப்பட்ட செய்தி தளம் . சாரமும் சைக்கிளும் நிறைய அனுபவங்களை பெற்று தந்தது முக்கியமாய் ஒரு கரண்டி சீனி போட்டு பிளேன் டி கேட்டால் கட்டாயம் 7 கரண்டி சீனி யுடன் கறுப்பு தேநீர் வரும் அது பல இடங்களில் எழுதபடாத விதியாக கடை பிடித்தார்கள் . அங்கு செல்லும் கொடுப்பினை இம்முறை கிடைக்க வில்லை .
-
ஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதேசம்!
இலங்கையில் நடத்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் தமிழர் தரப்பு சர்வதேச விசாரணையை நீண்டகாலமாக கோரி வந்தது. இதன்போது, தமிழரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பேச்சாளராக இருந்த சுமந்திரன் ஒரு அப்பட்டமான பொய்யை கூறியதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்ற கருத்தை சுமந்திரன் கூறியதாக சுகாஷ் குறிப்பிட்டுள்ளார். இதுவரை சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்படவே இல்லை என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரும் தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தார். Tamilwinஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதே...இலங்கையில் நடத்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் தமிழர் தரப்பு சர்வதேச விசாரணையை நீண்டகாலமாக கோரி வந்தது. இதன்போது,...
-
தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த
அனுரா புரிந்து கொண்டுதான் இவரை கதநாயகன் ரேஞ்சுக்கு உருவாக்கி விடுகிறார் போல் உள்ளது .
-
அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடிய கமராக்கள்
A9 நிற்பவர்கள் மலை முழுங்கிகள் காசு வாங்கும் பொழுது காமரா வேலை செய்யாது நிப்பாட்டி விடுவார்கள் .
-
2026க்கான முழு பாடசாலை சீருடைத் துணிகளையும் மானியமாக வழங்கும் சீனா!
இங்காலை இலவசமாய் கொடுத்து பெரிய ஆப்ப்பு ஒன்று இறக்க போகினம் போல் உள்ளது .
-
iPhone 17-ன் புதிய அம்சங்கள் என்ன?
நோக்கியா ஸ்ரபெர்ரி வரிசையில் i போன் தற்கொலை செய்ய ஆயத்தமாகின்றது .
-
இரண்டு மாதங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் – சந்திரிகா குமாரதுங்க
லண்டன் மாளிகை வீடு என்னவாகி இருக்கும் ?
-
யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!
உங்க காலத்தில் கட்டுபடியாகி இருக்கிறது இப்ப அதிவிசேடம் குவாட்டர் 9௦௦ ஆயிரமாம் 6௦௦வெகுமதி கட்டுபடியாகதாம் என்று போனுக்குள்ளால் அழுகிறார்கள் . முக்கிய குறிப்பு அந்த குவாட்டரையும் தண்ணி கலக்காமல் வெறுமனே வயித்துக்குள் விடுவதை நேரில் பார்த்து சித்தம் கலங்கியது வேறு கதை . நாயின் காது பக்கமாய் அடையாளம் போட்டு விடுகிறார்கள் என்கிறார்கள் நான் சரியாக கவனிக்கவில்லை .
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
ICUவில் உயிருக்கு போராடிய ரணில்! 2 நாளில் எழுந்து வீடு சென்ற அதிசயம். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாட்களில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியமை தற்போது பேசுபொருளாகியுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, கடந்த 22 ஆம் திகதி இரவு, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து 23ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், இவ்வாறு பல நோய் நிலமைக்கு உள்ளான முன்னாள் ஜனாதிபதி எவ்வாறு விரைவில் வீடு சென்றார். அது மட்டுமன்றி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள எவ்வாறு திட்டமிட்டு இருந்தார் என்கின்ற பல கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. TamilwinTamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Late...Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Busines
-
ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது
அது மட்டும் இல்லை அதுக்கு மூளையே கிடையாது ஒன்றில் தூதுவர்களை தனியாகத்தான் சந்திப்பார் காரணம் பிட்டுகேடுகள் வெளியாலை தெரியகூடாது . இந்த முஞ்சுஉறு லண்டனில் தான் கறுப்பு கண்ணாடி காருக்குள் ஒளித்து திரியுதாம் வெளியில் வந்தால் தமிழ் சனம் கலைத்து கலைத்து கோவணத்தையும் உருவி அடி போடும் .
-
யாழில் மது போதையில் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்த கும்பல் கைது
முதுகெலும்பு இல்லாத கூட்டம் தேவையற்று சமய சண்டைகளை வளர்க்க விரும்புகினம் .
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
ஸ்ரீ அண்ணேய் சிலருக்கு எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் ஏற்று கொள்ள மாட்டினம் இங்கு சிலருக்கு பதிலே போடுவதில்லை புலிகள் தான் இவ்வளவு அழிவுக்கும் காரணம் எனும் மன நோயாளிகளுடன் தர்க்கம் பண்ணி பலனில்லை விட்டு விடுங்க ஓராமாய் நின்று குரைத்து கொள்ளட்டும் .
-
அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.
அது ஒரு சிவபெருமான் கோவில் . அந்தாளும் வந்து சண்டை போட போகுது 😀
-
சுமந்திரன் தவறானவர் என சாணக்கியன் பகீர் தகவல்! மூடிய சமையலறையில் சுமந்திரன் விசேட சந்திப்பு
இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரன் பிரித்தானியாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழரசுக்கட்சியின் பிரித்தானிய ஆதரவு அணி என்று ஒரு அணியினரை சுமந்திரன் முகநூல் பக்கங்களில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இவர்களை சந்தித்து மூடிய சமையலறையில் சுமந்திரன் கலந்துரையாடிள்ளார் என்று பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்தார். அவர்கள் தனிப்பட்ட சந்திப்புகளுக்காக சந்திக்கின்றார்களே தவிர தமிழ் தேசியம் சார்ந்து சந்திக்கவில்லை. சுமந்திரன் தவறானவர் என்று சாணக்கியனே ஒப்புக்கொள்ளும் வகையில் பேசும் காணொளியொன்றினை நான் சமூகவலைத்தளமொன்றில் பார்த்தேன் என குறிப்பிட்டார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். https://tamilwin.com/
-
செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு
அப்ப யாரை நம்புவது ? எனக்கு மூத்தவர் நீங்கள் சொல்லுங்கள் .
-
செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு
கேட்கிறன் என்று குறை நினைக்கவேண்டாம் ஒரு தமிழனாய் அவர் சொன்ன வார்த்தைகளில் என்ன பிழை உள்ளது ? இதே சிங்கள அரசியலவாதிகள் தமிழருக்கு எதிராக இனவாதம் கக்கும் போது உங்கள் a1 கார்டூன்கள் பெரிதாக வரவில்லையே என்ன காரணம் ?
-
எதிராக செயற்பட்ட ஒருவரையும் விட்டு வைக்க மாட்டேன்! செம்மணியில் சுற்றிவளைக்கப்பட்ட இளங்குமரன் எம்.பி பகிரங்க எச்சரிக்கை
கடந்த 23ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளாக நேற்றைய தினம் பெருந்திரளான மக்களின் வருகையுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த, அணையா விளக்கு போராட்டத்தில் பங்கேற்பதற்காக போராட்ட களத்திற்கு சென்ற, அமைச்சர் சந்திரசேகரன், இரா.சாணக்கியன் மற்றும் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் மக்களால் அடித்து துரத்தப்பட்டனர். அத்துடன், செம்மணியில் நேற்று இடம்பெற்ற அணையா விளக்கு போராட்ட இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனையும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து விரட்டியடித்தனர். இது தொடர்பில் இளங்குமரன் எம்.பி இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதுடன் செம்மணியில் குழப்பத்தை ஏற்படுத்திய ஒருவரையும் விட்டு வைக்க மாட்டேன் என பகிரங்க எச்சரிக்கையும் விடுத்துள்ளார். https://tamilwin.com/
-
இசைப்பிரியா குடும்பத்தை ஏன் காட்டிக்கொடுக்க வேண்டும்..! சிங்களவர்களை விட மோசமாக மாறிய தமிழர்கள்
இசைப்பிரியா குடும்பத்தை நான் ஏன் காட்டிக்கொடுக்க வேண்டும். அவர்கள் மாவீரர் குடும்பம். அவர்களை காட்டிக் கொடுத்தால் நான் எவ்வாறு தமிழனாக இருக்க முடியும் என இந்தியா - பெங்களூரை சேர்ந்த திரைப்பட இயக்குநர் கு.கணேசன் தெரிவித்துள்ளார். யாழ் - வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இசைப்பிரியாவின் ஊடக பயணத்தை திரைப்படமாக்கினேன் ஆனால் அதனை வெளிவரவிடாது பலர் தடைகளை ஏற்படுத்தினர். ஆனாலும் அதனையும் தாண்டி ஏழாண்டுகளுக்குப் பின்னர் இசைப்பிரியாவின் வரலாறு வெளிவந்துள்ளது. இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில் சிங்கள மக்களை விட தமிழ் மக்கள் சுயநலம் மிக்கவர்களாக மாறி விட்டனர். குறிப்பாக ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைக்கு ஈழத்தமிழர்களே தான் காரணம், எல்லாவற்றுக்கும் குறைகளைக் கூறிக் கொண்டு அழிவின் நிலைக்கு வந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.... https://tamilwin.com/
-
செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
புலி போட்ட சூட்டில் முன்னாள் தலையாட்டி களுக்கு இப்பவும் வலிக்குது போல் உள்ளது .
-
செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
யாழ் விதிகள் அனுமதிக்காது .
- செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
Important Information
By using this site, you agree to our Terms of Use.