Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. 08.05.2025. அன்று, அருகில் உள்ள ஆலயத் திருவிழாவின் போதான வான வேடிக்கை கொண்டாட்டத்தில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள எமது "பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் " தீப்பற்றி எரிவதற்கு முன்னான படங்கள். யாழ்.தர்மினி 12.05.2025
  2. யாழில் வானவேடிக்கையால் பண்பாட்டு மலர்ச்சிக்கூடம் சிறுவர் அரங்கு தீயில். காணொளி: 👉 https://www.facebook.com/kiru.kirupan/videos/1316207322820085 👈 08.05.2025. அன்று, அருகில் உள்ள ஆலயத் திருவிழாவின் போதான வான வேடிக்கை கொண்டாட்டத்தில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள எமது "பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் " தீப்பற்றி எரிவதற்கு காரணமான வான வேடிக்கை. 2009 இறுதி யுத்தத்தின் போது தமிழ்த் தேசத்தில் இராணுவத்தினால் ஏவப்பட்ட கொத்துக் குண்டுகளுக்கு ஒப்பான அனுபவத்தை தந்தது. ஒன்றின் விலை 25.000 (இருபத்தைந்து ஆயிரம் என தெரிவிக்கப்படுகின்றது. ) யாழ்.தர்மினி 12.05.2025
  3. தகவலுக்கு நன்றி. நான் உண்மைப் படம் என நினைத்திருந்தேன்.
  4. நான் உள்ளுக்கு போய் பார்க்கவில்லை என்பதால், யாரார் உள்ளுக்கு இருக்கினம் என்று எனக்குத் தெரியாது. 😂 மேலதிக தகவல்: ஜே.வி.பி.ஐ ஆரம்பித்த தலைவர் ரோகண விஜேவீரவும் யாழ்ப்பாண சிறையில் தான், இருந்ததாக சொன்னார்கள்.
  5. தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்! சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், தையிட்டியில் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் அந்நிலையில் இன்றைய தினமும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2025/1431673
  6. உறுதியாகவும் தைரியத்துடனும் ஒன்றிணைந்து செயற்படுமாறு வெசாக் தினத்தில் ஜனாதிபதி அழைப்பு! புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் புத்த பெருமான், தர்மங்கள் அனைத்தையும் நிறைவேற்றி, ஞானத்தை வளர்த்து, நான்கு உன்னத உண்மைகளைப் புரிந்துகொண்டு, அனைத்து பாவங்களையும் அழித்து உண்மையான ஞானம் பெற்றது, இந்த புனித வெசாக் தினத்தில் ஆகும். அவர் அனைத்து துன்பங்களையும் தாங்கி, ஆயுள் முழுவதும் தன்னலமற்ற பக்தி செயல்கள் மூலம் புரிந்து கொள்ளப்பட்ட தர்மம், உலகில் வசிக்கும் அனைத்து மக்களின் ஆன்மீக நல்வாழ்விற்கும் ஒரு காரணியாக அமைந்துள்ளது. மதச் சூழலுக்குள் மனிதனின் ஆன்மீக வளர்ச்சியை வளர்ப்பதே புத்த பெருமானின் முக்கிய செய்தியாகும்.மேலும், ஒரு ஆட்சியாளர் நல்ல ஆட்சியை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதையும் பௌத்த தத்துவம் குறிப்பிடுகிறது. “சப்பங் ரத்தங் சுகங் சேதி – ராஜாசே ஹோதி தம்மிகோ” ஒரு நாட்டின் முதல் குடிமகனாகிய ஆட்சியாளர் நேர்மையானவராக இருந்தால், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று புத்த பெருமான் உபதேசித்துள்ளார். புத்தரின் போதனைகளின் பாதையை முன்மாதிரியாகக் கொண்டு,பொதுநலத்தில் சமத்துவம் மற்றும் சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்கி “வளமான நாடு – அழகான வாழ்க்கை” பற்றிய இந்நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக நாம் இன்னும் உறுதியாகவும் தைரியத்துடனும் ஒன்றிணைந்து செயற்படுமாறு இந்த புனிதமான வெசாக் தினத்தில் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார் புத்தரின் போதனைகள் உலக அமைதிக்கான ஆழமான செய்தியை தெரிவிப்பதோடு, அந்தப் போதனைகளை நடைமுறையில் புரிந்துகொண்டு, மெத்தா, கருணா, முதிதா, உபேக்ஷா ஆகிய நான்கு பிரஹ்ம விஹாரணங்களைப் பயன்படுத்தி செயல்படுவதன் மூலம், போரின் தீப்பிழம்புகளிலிருந்து விடுபட்ட அமைதியான உலகத்தை உருவாக்குவதற்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகமாகிவிட்டது என்பதையும் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்றும் அவர் விடுத்துள்ள வாழ்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார் https://athavannews.com/2025/1431654
  7. வெசாக்கை முன்னிட்டு யாழில் 20 கைதிகளுக்கு விடுதலை! வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர் அதன்படி வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 388 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படுகின்றனர். அதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருந்த இருந்து 20 கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1431669 ############### ################# ### கந்தையா அண்ணை ... இப்ப, உங்களுக்கு திருப்தியா. 😂
  8. வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு நாள்! தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகளை இன்று நினைவுகூரப்படுகின்றார். அந்தவகையில் வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கருகிலும் குறித்த நிகழ்வானது இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. இதன்போது இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகரசபை உத்தியோகத்தர்கள், தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார்,சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1431661
  9. கொத்மலை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்! நுவரெலியா கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பஸ்விபத்தில் காயமடைந்தவர்களை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் இதன் போது அங்கு சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலத்தினை விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார் இதேவேளை அமைச்சர் பிமல் ராமநாயக்கவும் சென்றிருந்தார். சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இது போன்ற வாகன விபத்துக்களினால் ஒவ்வொரு வருடமும் உயிர்ழப்புகள் ஏற்படுகின்றமை பாரிய பிரச்சினையாக மாரியுள்ளது என்பது எமக்கு தெரியும் இதனை தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பின் தங்கிய பிரதேசமாக இருந்தாலும் வைத்திய சேவையினை வழங்குகின்றமை தொடர்பில் அவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும் இதேவேளை மீட்பு பிரிவினருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். முடியுமான அளவு மனிதாபிமானத்தோடு செயற்பாட்டு உதவிகளை வழங்கிய நல்லுலங்களுக்கும் நன்றி. நாட்டில் உள்ள நல்ல விபரங்களையும் பாதுகாக்க வேண்டும் எதேனும் பிரச்சினைகள் ஏற்படும் போது அனைத்தையும் விட்டு விட்டு அனைவரும் ஒன்று சேர்கிறார்கள் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிறைவேற்ற கூடிய அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதாக அவர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1431657
  10. ஆம். தலைவர் இறந்து விட்டார் என்று செய்தி வந்த பத்திரிகையை... தலைவரே சிரித்துக் கொண்டு வாசித்த படங்களும் அப்போது வந்திருந்தது. @நன்னிச் சோழன் இடம் சிலவேளை அந்தப் படம் இருக்கலாம்.
  11. இந்தியா… இலங்கையில் அப்பாவி பொது மக்களையும், மாணவர்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு, பயங்கரவாதிகளை அழித்தோம் என்று அறிக்கைகள் விட்டதை நேரில் பார்த்தோமே. இந்தியா கூறும் தகவல்கள் வடித்து எடுத்த பொய் மூட்டைகள்.
  12. 26 பேர் கொல்லப் பட்டதற்கு பதிலடியாக…. போர் நடத்தி, இந்தியா 56 இராணுவ வீரர்களையும் இழந்து, இரண்டு பெண் விமானிகள் சிறை பிடிக்கப் பட்டு, சில ரபேல் விமானங்களையும், பல ட்ரோன்களையும் இழந்து உள்ளது. இந்தியாவிற்கு இது பெரும் அவமானகரமான தோல்வி. பிற் குறிப்பு: இதன் எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம். இந்தியாவின் இழப்பை கணக்கு எடுத்து வைத்தவர்கள் அதன் எண்ணிக்கைகளை பதிவு இடுவது வரவேற்கப் படுகின்றது. 🙂
  13. யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட காரியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை சரிந்து வீழ்ந்தது. ###################### மன்னிக்கவும்: இந்தப் பதிவு இங்கு தவறுதலாக பதியப் பட்டு விட்டது.
  14. ஆபிரஹாம் சுமந்திரனுக்கு.... சேர்ந்து இருக்கின்றவர்களை அரவணைத்து போகத் தெரியாது, கட்சியில் இருப்பவர்களை விளக்கம் கோரி கடிதம் அனுப்புவது, தன்னுடன் நாலு அல்லக்கைகளை வைத்துக் கொண்டு தலைகால் புரியாமல் ஆடுவது, தமிழரசு கட்சி மேல் மூன்று வழக்குகளை போட்டு... நீதிமன்றில் நிறுத்துவது போன்ற கேவலம் கெட்ட வேலைகளை செய்து விட்டு... வெட்கம், ரோசம், மானம் கெட்டு... மற்ற தமிழ்க் கட்சிகளிடம் அதுகும் விநயமாக ஆதரவு கோருகிறாராம். காரியம் ஆகும் மட்டும் காலை பிடித்து கெஞ்சுவது, அது கை கூடியபின்... தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது. இப்படி சுத்துமாத்துகள் செய்த படியால்தானே போன தேர்தலில், மக்கள் வேண்டாம் என்று அடித்து திரத்தியவர்கள். பிறகு என்ன முகத்துடன்... மக்கள் முன்னால் வந்து நிற்கிறார். சுத்துமாத்து சுமந்திரனின் செயல் முழுக்க... பச்சோந்தி தனமானது என்பதை மக்கள் புரிந்து விட்டார்கள். இனி என்ன வேஷம் போட்டாலும் மக்களிடம் எடுபடாது.
  15. உயிரிழந்த கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதிக்கோரி மட்டக்களப்பில் போராட்டம்! என் மௌனம் என் குற்றமல்ல. உன் செயல் தான் குற்றம் – மௌனத்தைக் கலைப்போம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, உயிரிழந்த பாடசாலை மாணவிக்கு நீதிகோரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. இதன்போது உயிரிழந்த உயிரிழந்த மாணவியின் ஆத்மசாந்திவேண்டியும் அவருக்கு நீதிவேண்டியும் கலந்து கொண்டோர் கறுப்புப் பட்டியணிந்து, மெழுகுவர்த்தியேந்தி அஞ்சலி செலுத்தியிருந்தனர். இறுதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்குக் கையளிப்பதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சமூகத்தினர்,பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். அம்ஷிகாவிற்கு ஏற்பட்ட நிலைமை இன்னுமொரு மாணவிக்கு ஏற்படுவதற்கு முன்னர் இவ்வாறான செயற்பாடுகளுக்கான சட்ட நடவடிக்கைகள் கடுமையானதாக ஆக்கப்படவேண்டும் எனவும் இதன்போது போராட்டக்காரர்களால் கோரிக்கைகள் முன்னவைக்கப்பட்டன. https://athavannews.com/2025/1431635
  16. தமிழின அழிப்பு நினைவுத்தூபி கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்டது! தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் இன்றைய தினம்(11) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. தமிழின அழிப்பு நினைவகம் என்ற பெயரில் அமைந்துள்ள இந்த நினைவுத்தூபியை பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் திரைச்சீலை நீக்கி உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் திறந்து வைத்தார். இனப்படுகொலைக்குள்ளானவர்களை நினைவுகூரும் வகையில் அகவிளக்கேற்றலுடன் நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வில் அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பெருமளவானோர் இணைந்து கலந்துகொண்டருந்தனர். இதேவேளை, மே மாதம் 18ஆம் நாளைத் தமிழின அழிப்பை நினைவு கூரும் நாளாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431645

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.