Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது! ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை தற்போது 21 ஆக அதிகரித்துள்ளது. நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று இன்று (11) காலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதேவேளை, குறித்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இதேவேளை, விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்து வர இரண்டு ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், இரத்மலானை விமானப்படை தளத்தில் இந்த இரண்டு ஹெலிகொப்டர்களையும் விமானப்படை தயார் நிலையில் வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நடவடிக்க இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு பெல் 412 ரக ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1431652
  2. கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு. - போக்குவரத்து பிரதி அமைச்சர்.- Muthusamy Navaraja
  3. மேற்படி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட இளைஞன் மருத்துவ உதவி பெறுகிறார். Vaanam.lk
  4. இறம்பொடை விபத்து 11 பேர் பலி, 34 பேர் படுகாயம்! கொத்மலை இறம்பொடை கெரன்டி எல்ல பகுதியில் கதிர்காமம்-குருநாகல்-நுவரெலியா அரச போக்குவரத்து பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பாதையிலிருந்து விலகி பாரிய பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk
  5. 👉 https://www.facebook.com/search/top/?q=china%20Fort&locale=de_DE 👈 இந்தியா அனுப்பின ட்ரோனை அடித்து விழுத்தி, தோளில் சுமந்து செல்லும் பாகிஸ்தானியர்.
  6. ஒப்பரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை! இந்திய விமானப்படை தெரிவிப்பு! இந்தியா – பாகிஸ்தான் போர்நிறுத்தம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒப்பரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று இந்திய விமானப்படை தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது. பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா . ‘ஒப்பரேஷன் சிந்துார்’ என்ற பெயறரில் பதில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களை அழித்தது. இந்நிலையில் போர் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் விமானப் படைக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாக வெற்றிகரமாக செய்துள்ளோம் எனவும் விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் இந்திய இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இதேவேளை, ஒபரேஷன் சிந்தூர் தொடர்பான செயல்பாடுகள் குறித்து சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. Athavan Newsஒப்பரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை! இந்திய விமானப்படை...இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒப்பரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று இந்திய விமானப்படை தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ள...
  7. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னரான சிந்தனைகள் – நிலாந்தன். எதிர்பாக்கப்பட்டதைப் போலவே உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஒப்பீட்டளவில் அதிக ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. அறுதிப் பெரும்பான்மை இல்லாத சபைகளில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கிடையே இணங்கிச் செயற்படத் தயாராக இருந்தால் சபைகளை வெற்றிகரமாக நிர்வகிக்க முடியும். எனவே தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் கட்சிகள் பின்வரும் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்ப கூறுவது போல, உள்ளூராட்சி சபைகள் உள்ளூர் நிலைமைகளுக்கானவை என்ற போதிலும் அவை தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல் வழியில் அடிப்படையானவை. கீழிருந்து மேல் நோக்கித்தான் தேசத்தைக் கட்டியெழுப்பலாம். அந்த அடிப்படையில் தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது உள்ளூராட்சி சபைகளில் இருந்து தொடங்குகின்றது. எனவே முதலாவதாக, தேசத்தைக் கட்டி எழுப்புவது என்ற அடிப்படையில் உள்ளூராட்சி சபைகளை எப்படிக் கட்டியெழுப்புவது என்று முடிவெடுக்க வேண்டும். இப்போதுள்ள நிலைமைகளின்படி தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் பொதுவான ஐக்கியத்திற்கு உடன்படப் போவதில்லை. எனினும் குறைந்தபட்சம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுக்கு வெளியே உள்ளூர் அதிகாரம் செல்வதைத் தடுப்பது என்ற அடிப்படையிலாது அவர்கள் தந்திரோபாயமாக ஒன்றிணைலாம். அதேபோல தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கு நிலையிலிருந்துதான் உள்ளூர் அதிகாரத்தைக் கையாள வேண்டும் என்ற விடயத்திலும் ஒரு புரிந்துணர்வுக்கு வரலாம். அப்படி ஒரு புரிந்துணர்வு ஏற்படுமாக இருந்தால், உள்ளூராட்சி சபைகளை இரண்டு தளங்களில் கட்டி எழுப்ப வேண்டியிருக்கும். முதலாவதாக, உள்ளூர்த் தலைமைகளைக் கட்டி எழுப்புவது.இரண்டாவதாக, உள்ளூர் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவது. உள்ளூர்த் தலைமைகளையும் உள்ளூர் பொருளாதாரத்தையும் அவற்றுக்கேயான தனித்துவங்களோடு கட்டி எழுப்பும் அதே சமயம் அவை தேசத்தைக் கட்டி எழுப்பும் பரந்தகன்ற நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியாக அமைவதை உறுதிப்படுத்த வேண்டும். முதலாவதாக, உள்ளூர்த் தலைமைகளை எப்படிக் கட்டி எழுப்புவது? கிராமங்கள் தான் தேசத்தின் இதயம். அதேசமயம் கிராமங்களில்தான் அதிகம் முரண்பாடுகளும் அசமத்துவங்களும் அதிகம். தமிழ்க் கிராமங்களில் சாதி சமய பால் முரண்பாடுகளும் அசமத்துவங்களும் அதிகம். உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட பலரும் சாதி அடிப்படையில் அல்லது சமய அடிப்படையில் அல்லது உள்ளூர் செல்வாக்கின் அடிப்படையில்தான் தெரிவு செய்யப்பட்டு இருப்பார்கள். அவர்களில் பலர் சாதி உணர்வுகளுக்கும் சமய உணர்வுகளுக்கும் உட்பட்டவர்களாக இருப்பர். பால் சமத்துவம் தொடர்பில் விழிப்பில்லாதவர்களாக இருப்பர். எனவே தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து அவர்களை வார்த்தெடுக்க வேண்டும். சாதிவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. மதவெறியர் தேசிய வாதியாக இருக்க முடியாது.ஆண் மேலாதிக்கவாதி அல்லது பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர், உள்ளூர்த் தலைவராக இருக்க முடியாது. தேசியவாதியாகவும் இருக்க முடியாது. எனவே உள்ளூர்த் தலைவர்களிடம் தேசியப் பண்புகளை எப்படி வளர்த்தெடுப்பது என்று சிந்திக்க வேண்டும். அங்கிருந்து தொடங்கினால்தான் மாவட்ட மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் முடிவில் தாயக மட்டத்திலும் தேசியப் பண்புமிக்க தலைமைகளைக் கட்டி எழுப்பலாம். கீழிருந்து மேல் நோக்கி. இது முதலாவது. இரண்டாவதாக, தேசியப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக உள்ளூர் பொருளாதாரத்தை எப்படிக் கட்டியெழுப்புவது? ஒவ்வொரு உள்ளூராட்சி சபையும் அதன் எல்லைக்குட்பட்டு பொருத்தமான பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். அது தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தின் பிரிக்கப்படுவியலாத பகுதியாகவும் இருக்க வேண்டும். அதாவது தேசத்தைக் கட்டி எழுப்புவதன் ஒரு பகுதியாக கிராமங்களைக் கட்டி எழுப்புவது. மறுவளமாகச் சொன்னால், தேசத்தைக் கட்டி எழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்தை கிராமங்களைக் கட்டி எழுப்புவதில் இருந்தே தொடங்க வேண்டும். இந்த அடிப்படையில் ஒவ்வொரு உள்ளூராட்சி சபையும் அதற்கேயான தனித்துவம் மிக்க பொருளாதாரத் தரிசனத்தைக் கொண்டிருக்க வேண்டும். உள்ளூர் அதிகார சபை என்று அது அழைக்கப்பட்டாலும் அதற்குள்ள அதிகாரங்கள் வரையறைக்குட்பட்டவை. தையிட்டி விகாரை ஆகப்பிந்திய உதாரணம். எனினும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு இருக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச அதிகாரங்களைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளையும் இணைத்துக் கொண்டு எப்படிக் குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைப் பிரதேசத்தின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவது என்று திட்டமிட வேண்டும். பொதுவாகச் சொல்லுவார்கள், உள்ளூராட்சி சபைகள் பிரசவத்தில் இருந்து மரணம் வரையிலும் உள்ளூர் நிலைமைகளின் மீது தலையிடக்கூடிய அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றன என்று. நடைமுறையில் அந்த அதிகாரங்கள் போதாமல் இருக்கலாம். ஆனால் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப உள்ளூர்ப் பொருளாதாரத்தைத் தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகக் கட்டி எழுப்புவதற்கு வேண்டிய தீர்க்கதரிசனம் மிக்க திட்டமிடல்கள் வேண்டும். தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசுத் தலைவர் அனுர கூறியதாகக் கூறப்படும் ஒரு விடயம் அதிகம் சர்ச்சைக்கு உள்ளாகியது. தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும் சபைகளுக்கு நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு நிதிகளை வழங்குவோம் என்ற பொருள்பட அவர் கூறியதாகத் தகவல்கள் தெரிவித்தன. அரசு தரப்பு அதை மறுத்திருந்தது. ஆனால் அரசுத் தலைவர் பேசும் ஒரு கூட்டத்தில் அவருடைய பேச்சின் மொழிபெயர்ப்பை அப்படித்தான் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. அதாவது ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பிரதேச சபைகளுக்குத்தான் அவர்கள் நிதியைத் தடையின்றி வழங்குவார்கள் என்று பொருள் கொள்ளத்தக்க ஒரு பேச்சு. எனவே அரசாங்கம் நிதியை வழங்குமோ இல்லையோ, புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவிகளை உள்ளூர் கள நிலைமைகளுக்கு ஏற்ப எப்படிப் பெற்றுக் கொள்வது? உள்ளூரில் இருக்கக்கூடிய வளங்களை எப்படி உச்சமாகப் பயன்படுத்துவது? புலம் பெயர்ந்த தமிழர்களின் உதவிகளை எப்படிப் பெற்றுக் கொள்வது என்ற விடயத்தில் புதிய தரிசனங்கள், புதிய திட்டமிடல்கள் வேண்டும். பெரும்பாலான தமிழ்க் கிராமங்களில் யாரோ ஒருவர் அல்லது பல புலம்பெயர்ந்த தமிழர்கள் பல்வேறு வழிகளிலும் உதவிகளைச் செய்து வருகிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் இவ்வாறு உதவிகளைச் செய்து வருகின்றார்கள். இந்த உதவிகளை உள்ளூராட்சி சபைகள் பொருத்தமான விதங்களில் ஒருங்கிணைக்கலாம். அடுத்தது முக்கியமாக,எப்படிப்பட்ட திட்டங்களை வகுத்தாலும் அந்தத் திட்டங்கள் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் பசுமைத் திட்டங்கள் ஆக இருக்க வேண்டும். மிகக் குறிப்பாக சமூகப் பங்களிப்புடன் கூடிய பசுமைத் திட்டங்கள் ஆக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு கிராமத்தை ஒரு பசுமை பூங்காவாக மாற்றக்கூடிய பொருளாதாரத் தரிசனங்களைக் கொண்டவர்களின் ஆலோசனைகளைப் பெற்று உள்ளூராட்சி சபைகளுக்கான தனித்துவமிக்க பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். எனது நண்பர் ஒருவர் யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியில் மருத்துவ அதிகாரியாக இருந்தவர். அவர் ஓர் சமூக அரசியல் செயல்பாட்டாளரும் கூட. தன்னுடைய துறைக்கு வெளியே சென்று, ஆயிரக்கணக்கான மரங்களை நடுவித்திருக்கிறார். அதைவிட முக்கியமாக, காரைநகர்ப் பகுதியில் நாலுக்கும் மேற்பட்ட குளங்களை அவர் புணரமைத்தார். குளங்களை நோக்கிச் செல்லும் நீரோடும் வாய்க்கால்களைப் புனரமைத்தார். இரண்டு புதிய குளக்கட்டுகளையும் அவர் கட்டியிருக்கிறார். இத்தனைக்கும் அது அவருடைய மருத்துவ நிர்வாகச் செய்முறைக்கு அப்பாற்பட்ட விடயம். அவர் தன்னார்வமாக அந்தப் பசுமைத் திட்டங்களை முன்னெடுத்தார். அவர் ஒரு முன்னுதாரணம். இந்தியாவில் இதுபோன்று பல முன்னுதாரணம் மிக்க மனிதர்களைக் கிராமங்கள் தோறும் காண முடியும். தமது சொந்தச் செலவில் பாலத்தை கட்டியவர்கள், தமது சொந்த உழைப்பினால் சிறு காடுகளை உருவாக்கியவர்கள், தமது சொந்த உழைப்பினால் குளங்களைத் தூர் வாரியவர்கள், வாய்க்கால்களைப் புதுப்பித்தவர்கள்…. என்று பலரைப் பற்றி சமூகவலைத்தளங்களில் பார்க்கின்றோம். அவ்வாறான தன்னார்வமாக இயங்குகின்ற உன்னதமான சமூகத் தொண்டர்களை உள்ளூராட்சி சபைகள் ஒருங்கிணைக்க வேண்டும். அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் பலத்தையும் போதிய வளங்களையும் கொடுத்து அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.அதாவது யார் முதலில் பசுமைக் கிராமங்களைக் கட்டியெழுப்பப் போகிறார்கள் என்ற போட்டிதான் இருக்க வேண்டும்.மாறாக எந்தக் கட்சியைக் கட்டியெழுப்புவது? எந்தத் தலைவருக்கு விசுவாசிகளை, வாலாட்டிகளைக் கட்டியெழுப்புவது? என்ற போட்டி இருக்கக்கூடாது. https://athavannews.com/2025/1431563
  8. இந்த வருடத்துக்கான... "சமாதான நோபல் பரிசு" டிரம்புக்குத்தான். 😎
  9. நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் விபத்து - 13 பேர் உயிரிழப்பு, 30 பயணிகள் காயம். விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 13ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் விபத்தில் இறந்த எட்டு பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை அதன்படி பேருந்து சாரதி உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1431577
  10. இப்ப, மகிந்த... தனது உயிருக்கு ஆபத்து என்று அறிக்கை விடுவார்.
  11. இந்தியா – பாக்கிஸ்தான் போரை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன! அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு! இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான உடனடியான போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஒரு நாள் இரவு முழுவதும் அமெரிக்க அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன என்பதை அறிவிக்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை, பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதிக்காத வகையில் இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பாடுபடும் எனவும் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்தமைக்கு அமெரிக்க ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Athavan Newsஇந்தியா - பாக்கிஸ்தான் போரை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன! அம...இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான உடனடியான போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஒரு நாள் இரவு முழுவதும் அமெரிக்க அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த...
  12. வெளிநாட்டு ஊழியர்களை தமது நாட்டிற்குள் அனுமதிப்பதை குறைக்க பிரித்தானியா நடவடிக்கை ! அதிக அளவிலான வெளிநாட்டு ஊழியர்களை தமது நாட்டிற்குள் அனுமதிப்பதை குறைத்துக்கொள்ளும் திட்டங்களை பிரித்தானிய அரசாங்கம் இன்று (11) அறிவித்துள்ளது. திறனாளர் விசாக்களை பட்டதாரிகள் செய்யும் வேலைகளுக்கு மட்டும் வழங்கி நிறுவனங்களில் உள்நாட்டு ஊழியர்களுக்குக் கூடுதல் பயிற்சியளிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதேவேளை, பிரித்தானிய அரசாங்கத்தின் புதிய திட்டங்களின் கீழ், திறனாளர் விசாக்கள் பட்டதாரிகளுக்கு மட்டும் வழங்கப்படுவதுடன் குறைவான திறன்கள் தேவைப்படும் தொழில் விசாக்கள் நாட்டின் தொழில்துறைச் செயல்பாட்டுக்கு முக்கியமானதாக விளங்கும் வேலைகளைச் செய்வோருக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் இதனை ஈடு செய்ய நிறுவனங்கள், பிரித்தானிய ஊழியர்களுக்குக் கூடுதல் பயிற்சியளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டங்கள் , நாளை (மே 12) வெளியிடப்படவுள்ள வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் என பிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சி அறிவித்துள்ளது. https://athavannews.com/2025/1431611
  13. இதனை யூ ரியூப்பிலும் போட்டு இருப்பதை பார்க்கத்தான் சகிக்க முடியவில்லை. இந்த யூ ரியூப் கலாச்சாரம் மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்வதை நினைக்க அச்சமாக உள்ளது.
  14. இந்தியா அடியை வாங்கிக் கொண்டு பேசாமல் இருந்தாலும்… இந்த “யூ ரியூப்” காரனும், ரிவி காரனும்… இந்தியாவின் தர்ம சங்கடம் புரியாமல், கொழுத்திப் போட்டுக் கொண்டு இருப்பாங்களே. 🤣
  15. என்ன கொடுமை இது…. ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள், தலைவன் என்கிறார்கள்? எமது மக்கள் எங்கே போகின்றார்கள். 😡
  16. போரை…. நிறுத்தாமல், தொடர்ந்து முன்னெடுத்து செல்லும்…. இந்திய, பாகிஸ்தானிய இராணுவத்தினருக்கு பாராட்டுக்கள். 👏🏻💐👏🏻👍🏽😂
  17. நான் சும்மா… பகிடிக்கு கேட்டேன் ஏராளன். பண்டத்தரிப்பில்…. ஒரு பெண்ணை அவமானப் படுத்தியதற்காக ஒரு யூ ரியூப் காரனை கைது செய்து விளக்கமறியலில் வைத்தவர்கள் அல்லவா. அவரின் நிலைமை இப்போ என்ன? இன்னும்… உள்ளேயா, அல்லது வெளியே வந்து விட்டாரா?
  18. இந்த பொது மன்னிப்பில்… பிள்ளையானின் பெயரும் உள்ளதா. 😂
  19. டீச்சர் அம்மா, மாணவனுக்கு அடிக்கிறதே தப்பு. அதுவும் ஆண் உறுப்பில் அடிக்கிறதை… என்னவென்று சொல்வது.
  20. நான்கு நாட்களிலேயே… போர் செய்து களைத்து விட்டார்கள். நாங்கள் எவ்வித வளமும் இல்லாமல்…. கப்பல் படை, விமானப்படை என்று 30 வருடம் நடத்திய போரை நினைக்க பிரமிப்பாக உள்ளது.
  21. புலவர் இணைத்த காணொளியில் உள்ளதை ஒத்த கருத்தை, இரண்டு நாட்களுக்கு முன்பே பதிந்து இருந்தேன். 😂 ரபேல் விமானத்தை… பிரான்ஸ் இனி எப்படி விற்பது. 🤣
  22. இந்தப் படத்தை... தமிழில் தயாரித்தால், இம்சை அரசன் வடிவேலுவை நடிக்க விட வேண்டும். வசூல் அள்ளி குவிக்கும். 😂
  23. ஸ்ராலினின் அப்பா… 😎 கருணாநிதியே, வெறும் மூன்று மணித்தியால உண்ணாவிரதம் இருந்து இலங்கைப் போரை நிறுத்தியவர் எனும் போது…. ஸ்ராலினின் பேரணிக்கும், அந்தப் பவர் இருக்கும் தானே… 😂 தாய்…. எட்டடி பாய்ந்தால், குட்டி…. 16 அடி பாயுமாம். 🤣 உதய்ணா… வருங்காலத்தில் 32 அடி பாய்வார் எனும் போது, ஒரே பீதியாய் இருக்கு. 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.