Everything posted by தமிழ் சிறி
-
சந்தோஷ் ஜா – தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் இடையில் விசேட சந்திப்பு!
சந்தோஷ் ஜா – தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் இடையில் விசேட சந்திப்பு! இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதேவேளை குறித்த கலந்துரையாடலில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தல் மற்றும் இலங்கையின் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1452834
-
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்!
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்! நாளையதினம் (17) அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை முறையாகத் தீர்க்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பாக அரசாங்கத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதற்குச் சாதகமான பதில் கிடைக்காததால் தமது சங்கம் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1452863
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- நாமல் ராஜபக்ஷ - எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பு!
சுமந்திரனே ... 15,000 ஓட்டு வாங்கி, பாராளுமன்றம் போக முடியாமல் தோற்ற ஆள். அவரிடம் போய், ஆட்சியை கவிழ்க்க வரச் சொல்லி, ஆதரவு கேட்குது நாமல்.... சுமந்திரனுக்கு.... துணிவு இருந்தால், நாமலின் கூட்டத்திற்கு ஒருக்கால் போய் பார்க்கட்டுமன்.- கருத்து படங்கள்
- மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்!
மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்! மருந்துச் சீட்டுகளை எழுதுவது மற்றும் பரிந்துரைப்பது தொடர்பான அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்களை வலியுறுத்தி இலங்கை மருத்துவ சபையானது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சில மருத்துவர்களால் வழங்கப்படும் தெளிவற்ற மருந்துச்சீட்டுகள் குறித்து மருந்தாளுநர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, இத்தகைய தெளிவின்மை காரணமாக சரியான மருந்தைக் கண்டறிவது கடினமாகி, நோயாளியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறும் மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை மருத்துவ சபை மேலும் எச்சரித்துள்ளது. https://athavannews.com/2025/1452807- ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிவிபத்து- 9 பேர் உயிரிழப்பு!
ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிவிபத்து- 9 பேர் உயிரிழப்பு! ஜம்மு-காஷ்மீரில் உள்ள நவ்காம்காவல் நிலையத்தில் வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். காவல் நிலையத்தில் திடீரென வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். குறித்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 30 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையினால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பரிதாபாத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை கையாளும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, விபத்தில் மீட்கப்பட்ட சில ரசாயனங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதவேளை, . ஸ்ரீநகர் துணை ஆளுநர் அக்ஷய் லப்ரூ காயமடைந்தவர்களை வைத்தியசலையில் சென்று பார்வையிட்டுள்ளார். ஏற்கனவே, இந்த வாரத் தொடக்கத்தில் டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், காஷ்மீர் காவல் நிலையத்தில் , வெடி விபத்து இடம்பெற்றமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1452798- பிபிசி பணிப்பாளர் நாயகம், செய்தி பொறுப்பாசிரியர் இருவரும் இராஜினாமா!
பிபிசி மீது வழக்கு தொடர்வதாக டொனால்ட் ட்ரம்ப் உறுதி! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இங்கிலாந்து ஊடகம் பிபிசி-க்கு எதிராக வழக்கு தொடர்வதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பிபிசி ஊடகத்தின் “பனோரமா” நிகழ்ச்சியில் டொனால்ட் ட்ரம்ப்பின் திருத்தப்பட்ட உரையின் காரணமாக அவர் அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர இருப்பதாக உறுதியாக கூறியுள்ளார். இதேவேளை, இந்தச் செயலுக்காக பிபிசி மன்னிப்பு கோரியிருந்தாலும் , அது அவதூறு வழக்குக்கு அடிப்படை இல்லை எனவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். பிபிசி தனது தவறை ஒப்புக்கொண்டாலும் இவ்வாறு அந்த ஊடகம் மேற்கொண்ட திருத்தப்பட்ட பதிப்பிற்காக பிபிசி ஊடகத்தின் மீது 1 பில்லியன் அமெரிக்க டொலர் முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர்வரை அபராதம் விதிக்க வழக்கு தொடரப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் றுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, இந்த விவகாரம் குறித்து பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துரையாடபோவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி கேபிடல் கட்டிடத்தில் கலவரம் ஏற்படுவதற்கு முன்பு டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய உரையை பிபிசி ஊடகம் திருத்தியமைத்து வெளியிட்ட பின்னணியிலேயே இந்த வழக்கு தொடரப்படஉள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1452785- நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு
இந்த நத்தைகளை பதப்படுத்தி... சீனாவுக்கு ஏற்றுமதி செய்தால், உள்ளூர் வேலை வாய்ப்புகளும் பெருகி, அந்நிய செலவாணியையும் டாலரில் சம்பாதிக்கலாம்.- நாடாளுமன்றத்திற்குப் புறம்பான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிரக்கவும் – சபாநயாகர்!
நாடாளுமன்றத்திற்குப் புறம்பான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிரக்கவும் – சபாநயாகர்! சக உறுப்பினர்களை குறிவைத்து தகாத கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்க்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார். இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் உறுப்பினர்களுக்கு அறிவிப்புகளை வழங்கும் போது சபாநாயகர் இந்தக் கருத்தை வெளியிட்டார். அண்மைக் காலமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது இதுபோன்ற நடத்தை அடிக்கடி காணப்படுகின்றன. இது சபைக்கு அவமரியாதையை ஏற்படுத்துக்கின்றது. எனவே, நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது சபைக்கு புறம்பான வார்த்தைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இந்த விடயத்தில் எம்.பி.க்கள் தங்கள் ஆதரவை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். https://athavannews.com/2025/1452769- உக்ரைனிய தலைநகர் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 9 பேர் படுகாயம்!
உக்ரைனிய தலைநகர் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 9 பேர் படுகாயம்! உக்ரைனிய தலைநகர் கீவ் மீதான ரஷ்யாவின் பாரிய தாக்குதல்களில் , குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கீவ் மேயர் வித்தாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த தாக்குதலில் மருத்துவமனை வசதிகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் உட்பட பல மாவட்டங்களில் தீ விபத்துக்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தாக்குதலின் விளைவாக ஏற்பட்ட மின்சாரத் தடைகள் சரிசெய்யப்பட்டாலும், வெப்பமூட்டும் வசதிகளில் தடைகள் இன்னும் நீடிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், மேயர் மருத்துவர்களும் அவசரகால சேவைகளும் எல்லா இடங்களிலும் செயல்படுவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். https://athavannews.com/2025/1452777- கருத்து படங்கள்
- புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்!
புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்! நாட்டின் புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று காலை அவரது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று முதல் தனது பதவியிலிருந்தும் அரச சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ள நிலையில் ரசிக பீரிஸ் புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார். அரச துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றியிருந்த சமன் ஸ்ரீ ரத்நாயக்க பதவி விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். 2019 ஒக்டோபர் 16 ஆம் திகதி அவர் தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க நியமிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் தனது பதவிக் காலத்தில் தேசிய மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதில் அவர் பங்காற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1452733- ஜெர்மனியில் புதிய இராணுவ சேவைத் திட்டம்!
ஜெர்மனியில் புதிய இராணுவ சேவைத் திட்டம்! அரசியல் சக்திகளுக்கு இடையே பல மாதங்களாக நடந்த மோதல்களைத் தொடர்ந்து, படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் புதிய இராணுவ சேவைத் திட்டத்தை ஜெர்மனியின் கூட்டணி அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. புதிய இராணுவ சேவைத் திட்டம், 18 வயது நிரம்பிய அனைத்து ஆண்களும் இராணுவத்தில் இணைவதற்குத் தகுதியானவர்களா என்பது தொடர்பான கேள்வித்தாளை நிரப்பும். ஐரோப்பாவின் வலிமையான வழக்கமான இராணுவத்தை உருவாக்குவதை பெர்லின் நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனமான ரைன்மெட்டலின் (Rheinmetall) தலைவர், ஐந்து ஆண்டுகளில் இலக்கை அடைய முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தத் திட்டத்தில் சட்டமியற்றுபவர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1452747- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கலாம் வாங்க
- களைத்த மனசு களிப்புற ......!
சுவியர், காணொளி.... டக்கென்று முடிந்து விட்டது. 😂 🤣- யாழ். மக்கள் எம்மை அன்புடன் வரவேற்றனர் – தர்ம யாத்திரை வந்த பிக்குகள் தெரிவிப்பு!
அது கிடக்கட்டும்…. யாழ்ப்பாணத்தில் அடுத்த விகாரை கட்ட இடம் பார்த்து விட்டீர்களா? 😂- நல்லூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் பாதீனிச் செடி அகற்றும் செயற்றிட்டம்
பார்த்தீனிய பரவல் என்பது சுமார் 60% மனித நடவடிக்கைகள் மூலமே இடம்பெறுகிறது. குறிப்பாக பார்த்தீனியம் காணப்படும் ஒரு நிலத்தை உழவு செய்த அதே உழவு இயந்திரத்தால் பார்த்தீனியம் அற்ற நிலத்தில் உழவு மேற்கொள்ளும் போது பார்த்தீனியம் இலகுவாக பரவல் அடைகிறது. ஒரு பார்த்தீனியம் செடியானது 10 ஆயிரம் தொடக்கம் 1 லட்சம் விதைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த பாரிய விதை இருப்பானதுதான் பார்த்தீனியம் ஒரு அபாயகரமான ஆக்கிரமிப்பு செடியாக அடையாளம் காணப்பட முதன்மை காரணமாகும். மிக நுண்ணிய மற்றும் எண்ணிக்கை அதிகமான விதைகள் என்பதால் விதைகள் முளைக்காமல் இருக்க விசிறப்படும் களை நாசினிகள் பார்த்தினிய முளைப்பை கட்டுப்படுத்துவதில்லை. பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்த வேண்டுமெனில் அதற்கான சரியான காலகட்டம் அது பூப்பதற்கு முந்தை பருவமே. அந்த பருவத்தில் அவற்றை பிடிங்கி அவ்விடத்தில் வைத்தே அழிப்பதுதான் மிகச்சிறந்த வழியாகும் பூக்காத செடியாயினும் வேருடன் பிடிங்கி வேறிடத்திற்கு கொண்டு செல்வதும் தவறாகும் வேர்களுடன் ஒட்டியிருக்கும் மண்ணில் ஏலவே விழுந்த விதைகள் நூற்றுக்கணக்கில் முளைக்காமல் ஒட்டியிருக்கும் இடமாற்றத்தின் போது அவை மண்ணில் விழுந்து செடியாக மாறும். மிக அதிகளவில் பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் அவற்றை கையாண்டமையினால் வந்து செல்லும் அனைத்து மக்களும் தங்களை அறியாமலே பார்த்தீனிய விதைகளை தங்கள் பாதங்களினாலும் பாதணிகளினாலும் காவிச்சென்று பார்த்தீனியம் அற்ற இடங்களில் அதை பரவலடைய வைக்கப்போகின்றனர். பார்த்தீனியம் அற்ற அதிகளவில் பொதுமக்கள் வந்து செல்லும் இடத்திற்கு பார்த்தீனியம் செடிகளை கொண்டுவந்தமையே முதல் தவறு. -முகநூலில் இருந்து.-- நல்லூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் பாதீனிச் செடி அகற்றும் செயற்றிட்டம்
பார்த்தீனிய ஒழிப்பு என்ற பெயரில் கரைச்சி பிரதேச சபையால் மேற் கொள்ளப்பட்ட தீர்மானம் ஒன்றின் படி வேருடன் பிடுங்கி வந்து பிரதேச சபையில் ஒப்படைக்கப்படும் பார்த்தீனியம் செடிகளுக்கு கிலோ 200/- ரூபா வழங்கப்படும் என்பதற்கு இணங்க... ஒருவர், 47 கிலோ பார்த்தீனிய செடிகளை புடுங்கி வந்து, ஒன்பதாயிரத்து நாநூறு (9400) ரூபாவை பெற்றுக் கொண்டார் என சொல்கிறார்கள். இதில் பிரச்சினை என்னவென்றால்.... பார்த்தீனிய செடியின் விதைகள் உடையில் ஒட்டியும், காற்றில் பரவியும் முளைக்கக் கூடிய தன்மை உடையதாம். மேலே இவர்... தனது மோட்டார் சைக்கிளின் பின்புறம் எவ்வித பாதுகாப்பும் இன்றி கட்டி வந்த பார்த்தீனிய செடியில் இருந்து விழுந்த விதைகள் எல்லா இடமும் பரவி இருக்கும் என்று பலர் அச்சப்படுகின்றார்கள். ஒரு தீர்மானத்தை எடுக்கும் போது... அதனைப் பற்றி தெரிந்தவர்களிடம் அறிந்து, அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து எடுப்பதுதான் சிறந்த செயற்பாடாக இருக்க முடியும்.- கருத்து படங்கள்
- யாழ். காணி விடுவிப்பு; நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடல்!
யாழ். காணி விடுவிப்பு; நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடல்! யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் காணப்படும் முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோர் இந்த கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கினர். தேசிய நல்லிணக்கச் செயல்முறையின் ஒரு பிரதான அங்கமாக காணப்படும் நிலம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் முயற்சிகளை விரைவுபடுத்துவதது தொடர்பில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. எல்லை மீள் நிர்ணயத்தை இறுதி செய்தல், இழப்பீட்டுச் செயல்முறையை விரைவுபடுத்துதல், விடுவிப்பதற்கான நிலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் நிர்வாகத் தடைகளைத் தீர்த்தல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. முக்கியமான பாதுகாப்பு உட்கட்டமைப்பு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு காணி உரிமையாளர்களுக்கு தங்கள் சொத்துக்களை மீண்டும் பயன்படுத்தவதை உறுதி செய்யும் வெளிப்படையான மற்றும் சமமான செயல்முறையின் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் வலியுறுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு செயலாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் துறைகளைச் சேர்ந்த பல சிரேஷ்ட உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். https://athavannews.com/2025/1452652- பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்! பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து மதிப்பாய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்செகுலரத்ன, குழுவின் அறிக்கை, பரிந்துரைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது குறித்து மதிப்பாய்வு செய்வதற்கும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை முன்மொழிவதற்கும் இந்தக் குழு அமைக்கப்பட்டதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு ஏப்ரல் 13 அன்று அறிவித்தது. பரந்த, உள்ளடக்கிய சீர்திருத்த செயல்முறையை உறுதி செய்வதற்காக, சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து உள்ளீடுகளையும், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சமூகங்களிடமிருந்து கருத்துக்களையும் பெறுவதும் இந்தக் குழுவிற்குப் பணிக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் ஏப்ரல் 11 ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையில் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலின் போது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை முன்னுரிமையாகும் என்று அமைச்சர் நாணயக்கார மீண்டும் வலியுறுத்தினார். அறிமுகப்படுத்தப்படும் எந்தவொரு புதிய சட்டமும், சர்வதேச தரங்களுக்கு இணங்க, அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரங்களை நிலைநிறுத்தும் அதே வேளையில், சமகால உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் கடந்த கால அரசாங்கங்கள் உரிய விடாமுயற்சியுடன் செயல்படவில்லை என்றும், நியமிக்கப்பட்ட குழுவிற்கு குறுகிய காலத்திற்குள் சட்டத்தை இரத்து செய்வதற்கான தொடர்புடைய விடயங்களை உறுதியான முறையில் அடையாளம் காண அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1452661- மாலைத்தீவில் தடுக்கப்பட்ட இலங்கை படகு தொடர்பில் வௌியான தகவல்
மாலைத்தீவில் கைதான இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்! போதைப்பொருள் கடத்தலுடன் கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்களையும் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க மாலைத்தீவு பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, அவர்களை நாட்டிற்கு அழைத்து வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர். மாலைத்தீவு கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் Avishka Putha என்ற படகு, அந் நாட்டு தேசிய பாதுகாப்புப் படையின் கடலோர காவல்படை அதிகாரிகளால் நவம்பர் 7 ஆம் திகதி தடுத்து நிறுத்தப்பட்டது. மாலைத்தீவு பொலிஸாரின் கூற்றுப்படி, படகில் 355 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள் இருந்தது. அதில் இருந்த ஐந்து இலங்கை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மாலைத்தீவு அதிகாரிகள் கடந்த 10 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட படகில் சிறப்பு சோதனை நடத்தினர். இந்த ஆய்வில் 24 மீன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 58.6 கிலோ ஹெரோயின் மற்றும் 297.3 கிலோ மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) கண்டுபிடிக்கப்பட்டன. இலங்கை கடற்படை, இலங்கை பொலிஸார், மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் மாலைத்தீவு காவல்துறை இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 39, 42, 28, 34 மற்றும் 63 வயதுடைய இலங்கையர்கள். இந்த பறிமுதல் மாலைத்தீவு பிராந்திய நீரில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கண்டறிதல் என்று மாலைத்தீவு அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கிடையில், சந்தேக நபர்களையும் போதைப்பொருள் கடத்தலையும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மாலைத்தீவு சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் நடைபெற்று வருவதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. மாலைத்தீவு பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த விசாரணைகளைத் தொடங்குவதற்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் குழுவும் ஒரு சிறப்பு கடற்படைப் பிரிவும் ஏற்கனவே மாலைத்தீவுக்குச் சென்றுள்ளன. எனினும், அந்நாட்டு பாதுகாப்புப் படைகள் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளதால், அவர்களை இலங்கைக்கு அழைத்து வர முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாலைத்தீவு சென்ற இலங்கை பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் நாடு திரும்ப உள்ளனர். https://athavannews.com/2025/1452667 - நாமல் ராஜபக்ஷ - எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.