Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் பாரிய காலநிலை மாற்றம் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா! இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்குப் பிராந்தியக் கடற்பரப்பில் வெப்பநிலை மிக அசாதாரணமாகக் குறைந்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மைய நாட்களாக வடகடல் பகுதி வழமையை விட அதிக குளிராகக் காணப்படுகிறது. இந்த மாற்றமானது இலங்கையின் ஒட்டுமொத்த வானிலைப் பாங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. வடக்கிலிருந்து ஆரம்பிக்கும் இந்தக் குளிர்ந்த நீர், கிழக்குக் கரையோரம் வழியாக இலங்கையின் தெற்குப் பகுதிகளுக்கு கடத்தப்படும். இந்த நீரோட்டத்தின் காரணமாக, தெற்குப் பகுதியில் நிலவும் சற்றே அதிகமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை தற்போது குறைக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. ‘டித்வா’ (Ditwah) புயல் மறைந்ததைத் தொடர்ந்து, நிலப்பரப்பில் பதிவாகும் வெப்பநிலையில் பெரும் மாற்றங்கள் தென்படுகின்றன. காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலைப் பாங்குகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது என்பதற்கு இது ஒரு தெளிவான சான்றாகும் என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1460367
  2. ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது! கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துவடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப் பட்டுள்ளதுடன் துப்பாக்கிதாரி மற்றும் புர்கா அணிந்து வந்த நபரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 16 ஆம் திகதி இரவு ஜிந்துப்பிட்டி 125தோட்ட பகுதியிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், முச்சக்கர வண்டியில் வந்த குழுவினர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் புர்கா அணிந்திருந்தமை சிசிடிவி கெமராக்களில் பதிவாகியிருந்தது இந்தத் துப்பாக்கிச் பிரயோகத்தில் படுகாயமடைந்த கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சம்பவத்தில் 4 வயதுடைய சிறுவனும், மற்றும் 3 வயதுடைய சிறுமியும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்ததுடன், அவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக 3 பொலிஸ் குழுக்கள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் ஜிந்துப்பிட்டி பகுதியைச் சேர்ந்த நால்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிதாரி மற்றும் புர்கா அணிந்துவந்த நபர் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் விளைவே தாக்குதலுக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டது திட்டமிடப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பழனி ரொமேஷினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். https://athavannews.com/2026/1460384
  3. 11 பயணிகளுடன் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு! 11 பயணிகளுடன் நேற்றையதினம் மாயமான இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகளை அந்த நாட்டு அதிகாரிகள் இன்று கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, குறித்த விமானத்தின் சிதைவுகள் இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசியில் உள்ள புலுசரவுன் மலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, விமானத்தின் சிதைவுகள் மீட்கப்பட்ட போதிலும், அதில் பயணித்தவர்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில் அவர்களைத் தேடி இந்தோனேசிய அதிகாரிகள் விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ATR 42-500 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்பிடி அமைச்சகத்திற்குச் சொந்தமானது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் மக்காசர் நகருக்கு அருகாமையில் குறித்த விமானம் நேற்று (17) மாயமான போது அதில் 11 பேர் இருந்துள்ளனர். https://athavannews.com/2026/1460373
  4. அட… சுத்துமாத்து சுமந்திரன். 😂 🤣
  5. ஆண்கள்.... நான்கு போத்தல்களும், பெண்கள்... இரண்டு போத்தல்களும் தவறாமல் வாங்குவார்கள். 😂 அதனால்... நமது வியாபாரம் நட்டம் இல்லாமல், ஓஹோ... என்று ஓடுது. 🤣
  6. யாயினி, மெசினின்... டிசைன், ரெக்னிக் எல்லாம் என்னுடையது. 😂 தயாரிப்பு, நிர்வாகம் எல்லாம் வேறு ஒருவருடையது. 🤣 வாடிக்கையாளர்.... வேறை யார்? நீங்கள் தான். 😜
  7. 20 நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய சாதனம் ஒன்றை கண்டுபிடித்த நபர், பொலிசாரால் கைது! இருபது நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய ஒரு சாதனத்தை தயாரித்த ஒருவர் மொனராகலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அரசு ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு விற்பனையும் செய்துவந்துள்ளார். இந்நிலையில் மொனராகலை தலைமையக காவல் நிலைய அதிகாரிகள் குழுவினர் மொனராகலை கால்வாய் அருகே ஒரு சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை சோதனை செய்து ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் இருபது நிமிடங்களில் சட்டவிரோத மதுபானத்தை தயாரிக்கக்கூடிய ஒரு சாதனத்தை உருவாக்கி, உடனடியாக அந்த சாதனத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத மதுபானத்தை தயாரித்து வாங்குபவர்களுக்கு வழங்கியுள்ளார். சந்தேக நபர் இந்த மோசடியில் அரசு ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பிறரை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை பகுதியைச் சேர்ந்த அறுபத்திரண்டு வயதுடையவர். இதேவேளை, சந்தேக நபர் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார், மேலும் சம்பவம் தொடர்பாக மொனராகலை தலைமையக காவல் நிலைய அதிகாரிகளால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. https://athavannews.com/2026/1460303
  8. நான் செய்த பணிக்காக, மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். -தம்பர்.- 😂
  9. கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல். கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுவேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். அந்தவகையில் முல்லைத்தீவு – தேராவில் மாவீரர் துயிலுமில்ல மண்டபத்திலும், மூங்கிலாறு வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்திலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமை அகவணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர்களின் திரு உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்தன. மேலும் தேரவில் மாவீரர் துயிலுமில்லத்தில் கேணல் கிட்டு உள்ளிட்ட மாவீரர்களின் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டிருந்தன. https://athavannews.com/2026/1460205
  10. ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள்-பயணிகள் அவதி. நேற்றைய தினம் ஐனாதிபதியின் யாழ்ப்பாணம் நிகழ்சிக்காக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டமையால் பயணிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். பருத்திதுறையிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து சேவகளும் காலை 10:00 மணியுடன் நிறுத்தப்பட்டிருந்தன. இலங்கை போக்குவரத்து சபையின் பருத்திதுறை சாலை முகாமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதுபோது ஜனாதிபதியின் யாழ்ப்பாண நிகழ்சிக்காக தமது சாலை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக்கவும் இதனால் காலை 10:00 மணியுடன் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டாதாக தெரிவித்தார். இதனால் பயணிகள் தமது பயணங்களை மேற்கொள்ள முடியாது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர். இதேவேளை பருத்தித்துறையிலிருந்து வடமராட்சி கிழக்கு கோவில் வரை பிற்பகல் 6:15 மணிக்கு ஈடுபடும் சேவை சில மாதங்களாக பிற்பகல் 6:45 மணிக்கு பின்னரே இடம்பெறுகிறது. இதனால் வடமராட்சி கிழக்கு மக்கள் பிற்பகல் 12:30 மணிக்கு பின்னர் இரவு 6:45 மணிவரை காத்திருக்கின்றனர். தை பொங்கல் தினமும் பருத்தி துறை சாலை தனது சேவையையும் முழுமையாக நிறுத்திஇருந்தது. குறித்த விடயங்கள் தொடர்பாக ஒருங்கிணைப்பு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் ஒருங்கிணைப்பு கூட்டங்களில் பல தடவைகள் சுட்டிக்காட்டியும் அவரால் எந்தவித நடப்படிக்கையும் எடுக்கப்பப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. https://athavannews.com/2026/1460210
  11. தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் ! தையிட்டி விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை , காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும் என நாக விகாரை மற்றும் நாக தீப விகாரை விகாரதிபதிகள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் நாக தீப மற்றும் நாக விகாரை ஆகியவற்றுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் , விகாரதிபதிகளிடம் ஆசி பெற்று , கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது, தையிட்டி விகாரை , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்திய நிர்மாணிக்கப்பட்டது. அவ்விகாரையை சூழ பெருமளவான தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தபட்டுள்ளன. அவற்றினை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும். என விகாரதிபதிகள் இருவரும் தனித்தனியே ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர். அதேவேளை. யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி காணி விடுவிப்பு , தையிட்டி விகாரை விவகாரம் , பாதை விடுவிப்புக்கள் , தொடர்பில் முக்கிய அறிவிப்புக்களை வெளியிடுவார் என பலத்த எதிர்பார்ப்புக்கள் இருந்த போதிலும் , அவை தொடர்பில் ஜனாதிபதி எவ்வித கருத்துக்களையும் கூறாது சென்றமை காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. https://athavannews.com/2026/1460244
  12. கிரீன்லாந்து விவகாரத்தில் தலையிடும் நாடுகள் மீது புதிய வரி – டொனால்ட் டிரம்ப் எச்சரிகை! டென்மார்க்கினால் நிர்வகிக்கப்படும் சுயாட்சிப் பிராந்தியமான கிரீன்லாந்தை இணைத்துக்கொள்வதற்கான தனது திட்டத்திற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு எதிராக புதிய வரிகள் (Tariffs) விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எந்த நாடுகளுக்குப் புதிய வரிகள் விதிக்கப்படும் என்பது குறித்தோ அல்லது அந்நாடுகளுக்கு எதிராகப் பின்பற்றப்படும் வரி கொள்கை என்ன என்பது குறித்தோ வெளியிடப்படவில்லை. கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கான டிரம்பின் தீர்மானத்திற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அத்தியாவசியமானது என்று டிரம்ப் கூறியதுடன், அது இலகுவானதோ அல்லது கடினமானதோ எப்படியாயினும் அதைக் கைப்பற்றிக்கொள்வதாக டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார். இதேவேளை, “தேசிய பாதுகாப்பிற்கு எமக்கு கிரீன்லாந்து தேவை எனவும் கிரீன்லாந்து விடயத்தில் அவர்கள் இணங்கவில்லை என்றால், என்னால் அந்த நாடுகள் மீது வரிகளை விதிக்க முடியும்,” என்றும் டிரம்ப் நேற்று தெரிவித்தார். கிரீன்லாந்து சனத்தொகை செறிவற்ற ஆனால் வளங்கள் நிறைந்த ஒரு பூமியாகும். வட அமெரிக்காவிற்கும் ஆர்க்டிக்கிற்கும் இடையில் அமைந்துள்ள கிரீன்லாந்து, ஏவுகணைத் தாக்குதல்களின் போது அமெரிக்காவிற்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் கட்டமைப்புகளுக்கும், பிராந்தியத்தில் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் உகந்த இடமாகக் கருதப்படுகின்றது இவ்வாறான காரணங்களால் டிரம்ப் க்ரீன்லாந்தை கைப்பற்ற முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1460233
  13. நோபல் பரிசை… தம் இஷ்டத்துக்கு மாற்றிக் கொண்டதன் மூலம், ட்ரம்பும், அந்த வெனிசூலா பெண்மணியும்…. உலக அரங்கில்… தம்மைத் தாமே தரம் தாழ்த்திக் கொண்டார்கள். மிக அருவருப்பான ஒரு செயலை… அந்த இரண்டு பன்றிகளும் செய்துள்ளது.
  14. பாலியல் குற்றவாளி என சந்தேகித்து தவறான நபரை தாக்கி கொலைசெய்த 16 வயது இளைஞன் கைது! கென்ட் நகரில் உள்ள கடல் பகுதியில் (Alexander Cashford) அலெக்சாண்டர் காஷ்ஃபோர்ட் என்ற 49 வயது நபர், மூன்று பதின்ம வயது இளைஞர்களால் திட்டமிட்டுத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதேவேளை, இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர் ஒரு குழந்தை பாலியல் குற்றவாளி என்று தவறாகக் கருதி, இளைஞர்கள் அவரை ஒரு போலிப் பெயரில் குறுஞ்செய்திகள் மூலம் கடற்கரைக்கு வரவழைத்துள்ளனர். அங்கு அவரைத் துரத்திச் சென்று போத்தல்கள் மற்றும் கற்களால் மிகக் கொடூரமாகத் தாக்கியதில் அவருக்குத் தலையில் பலத்த காயங்களும் நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதேவேளை, இந்தச் சம்பவத்தை ஒரு சிறுமி காணொளியாக பதிவு செய்ததோடு, தாக்குதலில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் தற்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள இந்த வழக்கு, தன்னிச்சையான நீதி என்ற பெயரில் ஒரு குழு முன்னெடுத்த வன்முறையையும் அதன் கோரமான முடிவையும் சுட்டிக்காட்டுகிறது. இச்சம்பவம் ஒரு தவறான புரிதலால் உருவான திட்டமிடப்பட்ட கொலை வழக்காக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1460141
  15. சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம். சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு சட்டவாக்க உறுப்பினர்களின் வாக்கெடுப்பைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமரால் அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவி இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குழுவொன்றின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பொய்யான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பின்னரே அவரது பதவி இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது நாடாளுமன்றஉறுப்பினர் பதவியும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியும் தொடர்ந்து நீடிக்கும். ஆனால், மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களின் போது முதலில் பதிலளிக்கும் உரிமை போன்ற சலுகைகளை அவர் இழப்பார் என்று சிங்கப்பூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று மணிநேர விவாதத்திற்குப் பிறகு, சிங் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கு நாடாளுமன்றம் ஆதரவு அளித்துள்ளது. ஆனால் தொழிலாளர் கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்றும் அந்த ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் சட்டவாக்க உறுப்பினர் ரயீஸா கான், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணொருவரிடம் பொலிஸார் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதை தான் கண்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்ததே இந்த வழக்குக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. பின்னர் அவர் தனது கூற்று உண்மையல்ல என்பதை ஒப்புக்கொண்டார். இது தொடர்பான நாடாளுமன்ற குழுவின் விசாரணையில், சிங் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் இந்த பொய்யான தகவலை அறிந்திருந்த போதிலும், அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு அவருக்கு அறிவுறுத்தியமை தெரியவந்தது. பின்னர் கான் கட்சியிலிருந்தும் நாடாளுமன்றத்திலிருந்தும் இராஜினாமா செய்ததுடன், பொய்யான தகவல்களைக் கூறியமை மற்றும் நாடாளுமன்றபாராளுமன்ற சிறப்புரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் அவருக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கானின் வழக்கை விசாரிக்கும் போது நாடாளுமன்ற குழுவின் முன் ஆஜராகி சத்தியப்பிரமாணம் செய்து பொய் கூறியமை தொடர்பில் சிங்கிற்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்ததுடன், அவருக்கு பல்லாயிரக்கணக்கான டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணைகள் முழுவதும் தான் நிரபராதி என்று கூறிய சிங், உணர்வுபூர்வமான விடயமொன்றைக் கையாள்வதற்கு கானுக்கு அவகாசம் வழங்கவே வேண்டும் என விரும்பியதாகத் தெரிவித்தார். எவ்வாறாயினும், வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட அவர், அத்தீர்ப்பிற்கு எதிராகச் செய்த மேன்முறையீடும் தோல்வியடைந்தது. https://athavannews.com/2026/1460081
  16. ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி! வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும், நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது. செழிப்பு மற்றும் நன்றியுணர்வை அடையாளப்படுத்தும் தைப்பொங்கல் பண்டிகை, சிறந்த விளைச்சலுக்கு நன்றி பாராட்டும் ஒரு நிகழ்வு மாத்திரமன்றி, எதிர்காலத்தில் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான அழைப்பாகவும் அமைகிறது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அண்மையில் நாம் சந்தித்த மிகப் பாரிய இயற்கைப் அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி மற்றும் உறுதியுடனும், இதுவரை இல்லாத அளவிலான பாரிய புனரமைப்பு செயற்பாட்டில் நாம் ஒன்றாக கைகோர்த்துள்ளோம். அந்த வேலைத்திட்டத்துடன் மென்மேலும் வலுவாக கைகோர்க்க முன்வருமாறு சுபீட்சமான எதிர்பார்ப்புடன் இந்தத் தைப்பொங்கல் திருநாளில், நான் அனைவரிடமும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இயற்கையுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட அதிகமாக உணரப்படும் இந்த நேரத்தில், இயற்கையுடன் ஆழமாக இணைக்கப்பட்ட தைப் பொங்கல் பண்டிகை, நமது வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் உயர்வான அர்த்தத்தைச் சேர்க்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். எந்தவொரு இருளுக்கும் பிறகு ஒளி பிறக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். உறுதியுடனும் ஒற்றுமையுடனும் சவால்களை வென்று ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்புவதற்கான பயணத்திற்கு இவ்வருட தைப் பொங்கல் பண்டிகை சிறந்த ஆசிர்வாதமாக அமைய பிரார்த்திக்கிறேன். இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தைப்பொங்கல் தின வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டார். https://athavannews.com/2026/1459972
  17. கிளிநொச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் தைப்பொங்கல் கொண்டாட்டம். கிளிநொச்சி பரந்தன் நகரில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் தைப்பொங்கல் விசேட வழிபாடு இன்று இடம்பெற்றது இன்று காலை 6 மணியளவில் தேவாலயத்தின் பிரதான குரு தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் தொடர்ந்து 7.30 மணிக்கு விசேட வழிபாடும் இடம்பெற்றிருந்தது நிகழ்வில் ஆலயத்தை சேர்ந்த பொதுமக்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு தைப்பொங்கலை கொண்டாடி மகிழ்ந்திருந்தனர் https://athavannews.com/2026/1460010

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.