Everything posted by தமிழ் சிறி
-
பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
பெண் விவகாரம்: ரெலோவின் தலைமைப் பதவியிலிருந்து விலக கால அவகாசம் கோரினார் செல்வம் அடைக்கலநாதன்! ரெலோவின் தலைமைப் பதவியிலிருந்து விலக எதிர்வரும் ஜனவரி மாதம் வரை கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கால அவகாசம் கோரியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (09.11.2025) வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் தலைமைக்குழுக் கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் மீதான பெண் விவகாரம் பற்றிய குற்றச்சாட்டைப் பல தலைமைக்குழு உறுப்பினர்கள் முன்வைத்துக் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் செல்வம் அடைக்கலநாதன் பிழையாக நடந்து கொண்டார் என்ற சாரப்படவே அனைத்து தலைமைக்குழு உறுப்பினர்களும் கருத்துத் தெரிவித்தனர். இந் நிலையில் அவர் உடனடியாகத் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டுமென தலைமைக் குழு உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் கடுமையாக வலியுறுத்தியிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கால அவகாசம் கோரியுள்ளார். Jaffna Vision
-
மாமனிதர் நடராஜா ரவிராஜ் நினைவு தினம்.
சிங்கள பேரிவாத அரசால் சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 19 ஆவது நினைவில்... சிறிலங்கா சிங்கள பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட இளம் அரசியல் தலைவர் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான மாமனிதர் நடராசா ரவிராஜ் மாமனிதர் நடராசா ரவிராஜ் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் போராடிய ரவிராஜ் கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் அவருடை தந்தையாரின் சகோதரர் சட்டத்தரணி கணேசலிங்கத்தின் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் விடுதலை கூட்டணியில் ( உதயசூரியன் ) இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார். 1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் பதவி ஏற்றார். 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளின் கைது விடயத்தில் வழக்குகளை எடுத்து விடுதலை பெற்றுக்கொடுக்க உறுதியுடன் செயற்பட்டார். போராட்டத்தையும், அதற்கான நியாயங்களையும் மக்கள் அனுபவித்துவந்த சொல்லொணாத் துன்பங்களையும் சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் உரிய முறையில் கொண்டு சென்றார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த அவர் உள்நாட்டு, வெளி நாட்டு ஊடகங்களைச் செம்மையான முறையில் பயன்படுத்தினார். தமிழர் போராட்டத்தின் நியாயங்களையும், தமிழர் தாயகத்தின் உண்மை நிலைமைகளையும் உடனுக்குடன் சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறினார். உண்மையை சிங்கள உலகம் அகிலமும் அறிந்து கொள்வது இராணுவத்துக்கும் அரசிற்கும் தலையிடியாய் அமைந்தது. இவரது இந்தப் பணிதான் அவரது உயிரைப் பறிப்பதற்குரிய முதன்மைக் காரணியாக இருந்தது. ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நேரமான காலை 8.30 மணிக்கு முன்னதாக காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை அவர் சிங்கள தொலைக்காட்சி ஒன்றிற்கு நேர்காணல் அளித்தார். அந்த இறுதி நேர்காணலில் தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு பிரச்சனை பற்றியும் தனது ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துரைத்தார். அந்த நேர்காணலை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திரநாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள். Kunalan Karunagaran
-
குட்டிக் கதைகள்.
காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் ரெஸ்ட் ரூம்புக்குள் நுழைந்துவிட்டது. பதட்டத்துடன் இருந்த அந்த புலி டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு பசி எடுத்தது. நான்காவது நாள் பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த ஒருவரை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் காணாமல்போனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது, யாருமே கண்டுகொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி. அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். அவரையும் யாரும் தேடவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!. இதனால் குளிர்விட்டுப் போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது. அடுத்த நாள் வழக்கம்போல் ஒரு நபரை அடித்துக் கொன்றது. அவர் அந்த அலுவலகத்தின் பியூன். அலுவலக ஊழியர்களுக்கு காபி வாங்குவதற்காக பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார். சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லையே என்று மொத்த அலுவலகமும் சல்லடை போட்டு தேடியது. நெடுநேர தேடுதலுக்குப் பின் ரெஸ்ட் ரூம்பில் உயிரிழந்து கிடந்த பியூனையும், அந்த ஆட்கொல்லி புலியையும் கண்டுபிடிக்கிறார்கள். புலி பிடிபடுகிறது. ஆம் _ உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ, வசதி வாய்ப்போ அல்ல. நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது... 💝 அகவி விஜி
-
மாமனிதர் நடராஜா ரவிராஜ் நினைவு தினம்.
ஈழத்தமிழருக்காக தனது இறுதி மூச்சுவரை அல்லும் பகலும் பாடுபட்ட ஒரு இளம் அரசியல்வாதியை இழந்து இன்றோடு 19 ஆண்டுகள் கடந்தது. நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி மாமனிதர் நடராஜா ரவிராஜ். Babu Babugi
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தொலைபேசி பேசுகின்ற இடம்.. அன்றும், இன்றும். 😂
-
ஒன்றரை வருடமாக நீதித்துறையை ஏமாற்றிய போலி சட்டத்தரணி கைது!
ஒன்றரை வருடமாக நீதித்துறையை ஏமாற்றிய போலி சட்டத்தரணி கைது! கணேமுல்ல சஞ்ஜீவ கொலைசம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை போன்று மாறுவேடமணிந்து மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து ஏமாற்றி நுழைந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளதுடன் தடுப்பு காவலில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதாக மேலும் தெரிவித்துள்ளனர். போலியான சட்டத்தரணியான குறித்த நபர் சட்ட ரீதியான உதவிகளை பெற்று தருவதாக கோரி பலபேரிடம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. குறித்த சந்தேக நபர் கடந்த 08ஆம் திகதி ஒந்தாச்சி மடத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்ததுடன் இந்த சம்பவம் சட்டத்தரணிகள், மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பில் பெண் ஒருவர் வீட்டில் தங்க ஆபரணங்கள் திருட்டு போன சம்பவம் தொடர்பாக மீட்கப்பட்ட ஆபரணங்களை நீதிமன்றில் இருந்து மீளப் பெறுவது தொடர்பாக, மட்டக்களப்பு நீதிமன்றில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைக்கு வாதாடுவதற்காக சட்டத்தரணி ஒருவரை தேடிய நிலையில் அவருக்கு அறிமுகமான ஒருவர், இந்த போலியான சட்டதரணியின் தொலைபேசி இலக்கத்தை பெண்ணிற்கு வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து போலியான சட்டத்தரணி இந்த வழக்கிற்காக 2 இலட்சம் ரூபாவினை பெண்ணிடம் கோரியுள்ளார். குறித்த பெண் சம்மதித்து அவருக்கு முற்பணமாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 06ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக குறித்த பெண் மற்றும் போலி சட்டத்தரணி ஆகியோர், நீதிமன்றத்திற்கு சென்றுள்ள நிலையில் ஏற்கனவே வழக்கிற்கு ஆஜராகிய சட்டத்தரணி இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக சந்தேகம் எழுந்ததையடுத்து அவரை அங்கிருந்து பதிவாளர் காரியாலயத்துக்கு அழைத்துச் சென்று இவர் சட்டத்தரணியா? என உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளார். அதனையடுத்து நீதிமன்ற பதிவாளர் போலி சட்டத்தரணியிடம் அடையாள அட்டையை கோரியபோது அவர் தனது வாகனத்தில் இருப்பதாக முதலில் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதிக்கு சென்று தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணி போல நீதிமன்றத்திற்குள் தனது வாகனத்துடன் உள்நுழைந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தி நீதிமன்ற வளாகத்திற்குள் நடமாடி வந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சட்டத்தரணி என அடையாளப்படுத்தும் போலி வருகை அட்டை மற்றும் இறப்பர் முத்திரை, சட்டத்தரணி என வாகனத்துக்கு அடையாளப்படுத்தி ஒட்டப்படும் ஸ்டிக்கர், கறுப்பு கழுத்துப்பட்டி, கோட் சூட், மற்றம் வழக்குகளுக்கு தேவையான 16 ஆவணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கைது செய்துள்ள சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1452408
-
பிபிசி பணிப்பாளர் நாயகம், செய்தி பொறுப்பாசிரியர் இருவரும் இராஜினாமா!
பி,பி.சி. தமிழ் வானொலியும்... முழுக்க முழுக்க இந்திய புலனாய்வுத் துறை "றோ" வின் ஆட்களால் நிரம்பி வழிவதால்... ஒட்டு மொத்தமாக அவர்களை பதவி விலக்கி, புதியவர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர் சம்பந்தமாக... பி.பி.சி தமிழ் வானொலி பொய் செய்திகளை மட்டுமே சொல்லி வந்துள்ளது. இதனால் ஈழத்தமிழர் அதன் மீது உள்ள நம்பிக்கையை இழந்து விட்டனர்.
-
கருத்து படங்கள்
- 2026 வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று!
2026 வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று! 2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று (10) இடம்பெறுகிறது. 2026 வரவு செலவுத் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சனிக்கிழமை ஆரம்பமானது. அதன்படி, விவாதம் 6 நாட்கள் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 14ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாகப் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 17 நாட்களுக்கு இடம்பெற்றதன் பின்னர், வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 05ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர ஏனைய ஒவ்வொரு நாளும் வரவு செலவுத் திட்ட விவாதம் நடத்தப்படவுள்ளதாகப் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1452400- எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கைது!
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கைது! எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த ஒரு படகையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அவர்கள் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பருத்தத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். https://athavannews.com/2025/1452398- மத்திய கிழக்கில் தலைவறைவாகிய 7 இலங்கைப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய இணக்கம் - ஆனந்த விஜேபால
ஸ்ரீலங்காவில் இடம் பெறும்... போதைப் பொருள் கடத்தல், கூலிக்கு கொலை செய்தல் போன்றவற்றின் சூத்திரதாரிகள் மத்திய கிழக்கில் இருப்பதாக பல்வேறு தரவுகள் மூலம் அறிய முடிகின்றது. ஆதலால்... அரசின் கடுமையான நடவடிக்கைகளை அடுத்து... இவர்கள் சரண் அடைய முன் வந்திருப்பது நல்ல ஒரு ஆரம்பம்.- 2025 உயர் தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!
2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்-பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பு! 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது இந்த பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்கு 3,40,525 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளதுடன் இவர்களில் 2,46,521 பாடசாலை பரீட்சார்த்திகளும், 94,004 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர் பரீட்சை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். இதேவேளை, பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக விசேட பேருந்து சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார். அத்துடன், பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் அனர்த்தங்கள் காரணமாக ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளதாக அந்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1452394- தாவூத் இப்ராஹிம் கும்பலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்பு -இந்திய புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை!
தாவூத் இப்ராஹிம் கும்பலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்பு -இந்திய புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை! இந்திய பாதாள உலக குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தாவூத் இப்ராஹிம் குழுவினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கும் இடையிலான கூட்டணி குறித்து இந்திய புலனாய்வு அமைப்பு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. தாவூத் இப்ராஹிம் குழுவினர் போதைப்பொருள் வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்த முயற்சிப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்திய பாதாள உலக குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தாவூத் இப்ராஹிம் விடுதலைப் புலிகளின் வலையமைப்பை புதுப்பித்து போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இந்த குழு தொடர்பில் இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் வட மாநிலங்களில் உள்ள இந்த குழுவினர் தற்போது இலங்கையை குறி வைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனவே இலங்கை ராணுவத்தினால் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு, இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் இந்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தாங்கள் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் மீண்டும் விடுதலைப் புலிகள் தோற்றம் பெறுவதற்கு முயற்சிப்பதாகவும் இந்திய புலனாய்வு அமைப்புக்கள் மேலும் தெரிவித்துள்ளனர் எனவே இது ஒரு அபாயகரமான இணைவாகும் என இந்தியப் பாதுகாப்பு அமைப்புகள் கருதுகின்றன. இந்தநிலையில், இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் பிற உளவுப் பிரிவுகள் இந்தக் கூட்டணியின் நிதி பரிமாற்றங்கள் மற்றும் தகவல் தொடர்புகளைத் தீவிரமாகக் கண்காணிப்பதுடன், தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத்தீவுகளைச் சுற்றி கடலோர கண்காணிப்புகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2025/1452385- கருத்து படங்கள்
- துயிலுமில்லங்களும் என்பிபியும் – நிலாந்தன்.
துயிலுமில்லங்களும் என்பிபியும் – நிலாந்தன். கார்த்திகை மாதம்.மாவீரர் நாளைப் போன தடவை அரசாங்கம் ஒப்பீட்டளவில் அனுமதித்தது. ஆங்காங்கே போலீசார் சில தடைகளை ஏற்படுத்தினாலும் மாவீரர் நாள் அமைதியாக அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த முறை தாயகத்திலும் புலம்பெயர்ந்த பரப்பிலும் ஒப்பீட்டளவில் அதிக தொகை மக்கள் கூடிய நிகழ்வுகளாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று தாயகத்தில், கிளிநொச்சியில். மற்றது,கனடாவில்.தாயகத்துக்கு வெளியே அதிகதொகை மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடாக கனடா காணப்படுகிறது. எனவே அங்கே ஒப்பீட்டளவில் மிகப்பெரிய அளவில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த வாரம் அமைச்சர் சந்திரசேகரன் பேசும்போது அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படும் என்று தெரிவித்தார். மாவீரர் மாதத்தையொட்டி அவர் அவ்வாறு சொன்னாரா? அல்லது விசுவாசமாகவே அரசாங்கம் அப்படி ஒரு நிலைப்பாட்டோடு இருக்கிறதா? ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கப் போவதாக அரசாங்கம் கூறியது. ஆனால் இன்றுவரையிலும் அவ்வாறு நடக்கவில்லை. இப்பொழுது பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக வேறு ஒரு சட்டத்தைக் கொண்டு வரப் போவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு கூட்டத் தொடர் தொடங்க முன்பு அரசாங்கம் அவ்வாறு அறிவித்தது.அப்படித்தான் இப்பொழுது மாவீரர் நாளையொட்டி உணர்ச்சிகரமான அரசியற் சூழலில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள துயிலுமில்லங்களை விடுவிக்கப் போவதாக சந்திரசேகர் கூறுகிறாரா? தேசிய மக்கள் சக்தியின் இதயமாகக் காணப்படும் ஜேவிபி இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஓர் அமைப்பு.இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட, இரண்டு தடவைகள் நசுக்கப்பட்ட ஓர் அமைப்பு. பிரேமதாசவின் காலத்தில் இரண்டாவது தடவை அவர்கள் நசுக்கப்பட்டபோது இறந்த தமது தியாகிகளை நினைவு கூர்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் குறிப்பாக திருமதி சந்திரிகாவின் காலகட்டத்தில் அவர்கள் நினைவு கூர்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். இடைப்பட்ட காலகட்டத்தில் ஜேவிபி தன் தோழர்களை ரகசியமாக நினைவு கூர்ந்தது. அந்நாட்களில் அந்த நிகழ்வுக்கு ஒரு அர்த்தம் இருந்தது; ஆழம் இருந்தது;புனிதம் இருந்தது என்றும் ஆனால் பின்னர் சந்திரிக்கா தடைகளை நீக்கியபின் அது ஒரு சடங்கு போல் ஆகிவிட்டது என்றும் ஒரு மூத்த ஜேவிபி உறுப்பினர் பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு சொன்னார்.தடைகள் இருக்கும் வரையிலும்;ரகசியமாக நினைவு கூரப்படும் வரையிலும் அந்த நாளுக்கு ஒரு ஆன்மா இருந்தது.ஆனால் தடைகள் நீக்கப்பட்டபின் அது ஒரு பெருமெடுப்பிலான சடங்காக மாறி முடிவில் அதன் ஆன்மாவை இழந்து விட்டது என்றும் அவர் சொன்னார். இப்பொழுது ஜேவிபி ஆளுங்கட்சி ஆகிவிட்டது.நினைவு நாட்களுக்குள்ள உணர்வுபூர்வமான முக்கியத்துவத்தை அவர்களுக்கு யாரும் விளங்கப்படுத்தத் தேவையில்லை.இப்பொழுது இருக்கும் அரசுத் தலைவர் தன் சொந்தச் சகோதரனைப் பறிகொடுத்தவர்.தன் உறவினர்களையும் பறிகொடுத்தவர். எனவே அவர்களுக்கு நினைவு நாட்களின் முக்கியத்துவம்,புனிதம் விளங்கும். இந்த அடிப்படையில் பார்த்தால் துயிலும் இல்லங்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்குத்தான் அதிகம். பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் படைத்தரப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் துயிலும் இல்லங்களை விடுவிப்பது என்பதை முக்கியமாக இரண்டு அம்சங்கள் தீர்மானிக்கின்றன. ஒன்று,எதிர்க்கட்சிகள் அதனை இனவாதமாக மாற்றக்கூடாது. இரண்டாவது,படைத்தரப்பு அதற்குச் சம்மதிக்குமா என்பது. எதிர்க்கட்சிகள் பலமான ஒரு கூட்டை உருவாக்கும் முயற்சிகளில் தீவிரமாக முயற்சிக்கும் ஒரு பின்னணியில்,அரசாங்கம் ஏறக்குறைய அதே காலப்பகுதியில் மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்கும் முடிவை உத்தியோகபூர்வமாக எடுக்குமா என்பது சந்தேகம்தான். தென்னிலங்கையில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரளத் தொடங்கிவிட்டன. போதைப் பொருளுக்கு எதிராகவும் பாதாள உலகக் கும்பல்களுக்கு எதிராகவும் அரசாங்கம் விட்டுக்கொடுப்பற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.இதன் விளைவாக எதிர்க்கட்சிகள் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. போதைப் பொருள் கும்பல்களுக்கு எதிராகவும் பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு எதிராகவும் அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள்,ஒருபுறம் அரசாங்கத்திற்கு சிங்கள மக்கள் மத்தியில் அபிமானத்தைக் கூட்டியிருக்கின்றன.இன்னொருபுறம்,எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளியிருக்கின்றன.ஏனென்றால் இந்தக் குற்றக் கும்பல்களோடு எங்கேயோ ஓரிடத்தில் அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருக்கிறது என்பது இப்பொழுது நிரூபிக்கப்பட்டு வருகிறது.அந்த அரசியல்வாதிகள் பெருமளவுக்கு எதிர்க்கட்சிகளைச் செய்தவர்களாகத்தான் காணப்படுகிறார்கள்.அல்லது முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது இப்பொழுது தெரிய வருகிறது. அதேசமயம், அண்மையில் போதைப் பொருளை வைத்திருந்ததற்காகக் குற்றம் சாட்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதில் ஒரு சிறந்த முன்னுதாரணம் உண்டு.நாட்டை இதற்கு முன்பு ஆட்சி செய்த ஏனைய கட்சிகளிடம் அவ்வாறான சிறந்த முன்னுதாரணங்கள் இல்லை என்று மக்களை நம்பச் செய்யும் விதத்தில் தேசிய மக்கள் சக்தியின் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளும் பாதாள உலகம் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுகின்றன.இதனால் எதிர்க்கட்சிகள் பெருமளவுக்கு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அதேசமயம் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ஒன்றிணைய வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.அவ்வாறு ஒன்றிணைந்து எதிர்க்கட்சிகள் விரைவில் அரசாங்கத்திற்கு எதிராகக் கூட்டு நடவடிக்கைகளில் இறங்கலாம் என்று தெரிகிறது. ஆனால் அரசாங்கம் அதைக் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.அதுமட்டுமல்ல,குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை குழப்புவதற்காகவே எதிரணிகள் ஒன்று திரள்கின்றன என்று சிங்கள மக்களை நம்ப வைக்கும் நோக்கத்தோடு அரசாங்கம் சிந்திக்கின்றது;செயல்படுகின்றது. இவ்வாறு தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள் தங்களைப் பலப்படுத்திக் கொள்வதற்காக அரசாங்கத்துக்கு எதிராக கையில் எடுக்கக் கூடிய ஒரே ரெடிமேட் ஆயுதம் இனவாதம்தான். ஐநா கூட்டத்தொடரில் அதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.அரசாங்கம் படைத்தரப்பை பாதுகாக்கும் முடிவுகளை எடுத்ததோடு பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவும் இல்லை. பன்னாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. இப்பொழுது மாவீரர் மாதத்தை முன்னிட்டு படைத் தரப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் துயிலுமில்லங்களை விடுவிக்கப்போவதாக சந்திரசேகரன் கூறியிருப்பதை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க முடியும். ஐநா கூட்டத் தொடரின் பின்னணியில் இனவாதிகளுக்கு வாய்ப்பளிக்காத விதத்தில் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிரான முடிவுகளை எடுத்ததுபோல, துயிலும் இல்லங்களின் விடயத்திலும் எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்புக்களை வழங்காத முடிவுகளையே எடுக்குமா? மேலும் இந்த விடயத்தில் துயிலுமில்லங்களில் காணப்படும் படைத்தளங்களை அகற்றுவது உடனடிக்குச் சாத்தியமானது அல்ல.முதலாவதாக படைத்தரப்பு அதற்கு ஒத்துழைக்க வேண்டும். இரண்டாவதாக சில துயிலும் இல்லங்களில் காணப்படும் படைத்தளங்கள் அப்பகுதியைச் சேர்ந்த படைத்தரப்பின் தலைமை மையங்களாகக் காணப்படுகின்றன.உதாரணம், கோப்பாய் துயிலும் இல்லம். அங்கிருந்து படைத்தரப்பை அகற்றுவது என்றால் குறுகிய காலத்துக்குள் அதைச் செய்யமுடியாது.கோப்பாயில் உள்ள போலீஸ் நிலையத்தை இடம் மாற்றுவதற்கே எவ்வளவு காலம் எடுத்தது? சில நாட்களுக்கு முன் வெளியான அடுத்த நிதி ஆண்டுக்கான நிதி அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கும் சிங்கள பௌத்த அரச பாரம்பரியத்தை மீறாத என்பிபி அரசாங்கம், படையினர் சம்பந்தப்பட்ட விடயங்களில் எப்படிபட்ட முடிவை எடுக்கும்? எனவே துயிலுமில்லங்களில் முகாம்களை அமைத்திருக்கும் படையினரை அங்கிருந்து அகற்றும் முடிவை உடனடியாக அமல்படுத்த அரசாங்கத்தால் முடியுமா? ஜெனிவா கூட்டத் தொடரை முன்னிட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்ததைப் போன்றதா இதுவும்? https://athavannews.com/2025/1452330- சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்களை பறிமுதல் செய்த பொலிசார்!
சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்களை பறிமுதல் செய்த பொலிசார்! பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாக கூறப்படும் பேருந்து, கார், கெப் ரக வாகனம் என்பவற்றை பொலிஸார் இன்று பறிமுதல் செய்துள்ளனர். சம்பத் மனம்பேரியின் மித்தெனிய பகுதியிலுள்ள வீடு சோதனை செய்யப்பட்டபோது குறித்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மித்தெனிய, தலாவ பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்திருந்தமை குறித்த சம்பவத்தில் சம்பத் மனம்பேரி அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்னர், அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு, கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1452327- கருத்து படங்கள்
- அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம் எதிரொலி: 40 விமான நிலையங்களில் சேவை குறைப்பு!
அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம் எதிரொலி: 40 விமான நிலையங்களில் சேவை குறைப்பு! அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதால் நாட்டின் முக்கிய 40 விமான நிலையங்களில், விமானங்கள் சேவையை 10 சதவீதம் குறைப்பதாக அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், முந்தைய ஜனாதிபதி ஜோ பைடன் அரசின் பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் மாற்றி அமைத்து வருகிறார். இதனால், அமெரிக்க பாராளுமன்றத்தில் டிரம்ப் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அரசு துறைகளுக்கான நிதியை விடுவிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிதி முடக்கத்தால், 6.70 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளனர். அதே நேரத்தில், 7.30 லட்சம் பேர் ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர். இதனால், அரசின் முக்கிய துறைகள் அனைத்தும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதில் விமான போக்குவரத்து துறையும் ஒன்று. நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லான்டா என முக்கிய விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களிலும், 50 சதவீத ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையால் விமான தாமதங்கள், ரத்து போன்ற அசௌகரியங்கள் பெருமளவில் ஏற்படுகின்றன. இதனால் பயணியர் பாதிக்கப்படுவதை தடுக்கவும், பாதுகாப்பு நடவடிக்கையாகவும், 40 முக்கிய விமான நிலையங்களில், 10 சதவீதம் விமான சேவைகளை குறைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1452288- அயர்ந்து தூங்கினார் அர்ச்சுனா
சுவிஸில் இருந்து வரும் போது, "டியூட்டி ஃபிறீயில்" வாங்கிக் கொண்டு வந்தது... இன்னும் வேலை செய்யுது போலை கிடக்கு. 😂- தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும். !
காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=1153298623052130 👈 1750 ரூபா சம்பள உயர்வு அறிவிப்பினை வரவேற்று, பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மலையக மக்கள்!- அயர்ந்து தூங்கினார் அர்ச்சுனா
காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=705486168789596 👈 ஜனாதிபதியின் உரையின் போது, சபையில் உறங்கிக் கொண்டிருக்கும் அர்ச்சுனா இராமநாதன்.- இலங்கையில் எல்லாமே இருக்கு - நடிகர் சரத்குமார் பாராட்டு
இலங்கையின் மருமகன் சரத்குமார்... 😂 ஸ்ரீலங்காவை பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. 😜 ஈழத்தின் மருமக்கள்... விஜய், சரத்குமார் என்று பட்டியல் நீள்கிறது. 🤣- முல்லைத்தீவில் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்த கணவன் உயிரிழப்பு
சோகமான செய்தி. 😥 பிள்ளைகள் அருகில் இல்லாமல்... தனிமையில் வாழ்ந்த முதியவர்கள் போலுள்ளது. தனிமையம், முதுமையும் அந்தப் பெரியவரை மன நோயாளி ஆக்கி விட்டது. யாரை நோவது என்று தெரியவில்லை.- தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும். !
தோட்டத் தொழிலாளர்கள் பல ஆண்டு காலமாக தமது சம்பள உயர்வை போராடி கேட்டும்... எத்தனையோ அரசுகளும், ஜனாதிபதிகளும் மாறி மாறி வந்த போதும் கொடுக்கப் படாமல் ஏமாற்றப் பட்டே வந்துள்ளார்கள். இம்முறை...அடுத்த தை மாதம் முதல் வழங்கப்படும் என்று அறுதியிட்டு கூறியுள்ள படியால், ஏமாற்ற மாட்டார்கள் என நினைக்கின்றேன்.- தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும். !
தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும். ! தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும் என ஜனாதிபதஇ அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1,550 ஆக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படும் எனவும் வருகைக்கான கொடுப்பனவு 200 ரூபாய் அரசாங்கத்தால் 2026 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் வருகைக்கான கொடுப்பனவு 200 ரூபாய் அரசாங்கத்தால் 2026 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும். 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தற்போது ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படும் நிலையில் அதில் அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1452236 - 2026 வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.