Everything posted by தமிழ் சிறி
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
கம்மன்(பிள்ளை)யான். 🤣 முன்னைநாள் அரசியல் தலைவர்களுக்கு பிள்ளையான் ஒரு பயங்கரவாதி. அப்படிப்பட்ட பயங்கரவாதியை ஒரு முன்நாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ஏன் சந்திக்க வேணும் ? எதற்காக ? ஒரு குற்றவாளி என நிரூபணமாகாத குற்றவாளி என சந்தேகத்தில் தடுத்து வைத்திருக்கும் ஒரு கைதி தான் பிள்ளையின். இவருக்கு ஏன் இந்த முன்னைநாள் அரசியல் தலைவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.இப்போது புரிகிறதா எமது நாட்டில் ஏன் இந்த நிலைமை என்று. இவர்களுக்கு எல்லாம் மரண தண்டனை கொடுக்க வேண்டும். Rajen N Rajen- இரசித்த.... புகைப்படங்கள்.
றோட்டுக்கு... தார் போட்ட ஆள், எங்கய்யப்பா....- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- வில்லுப்பாட்டு கச்சேரி எப்படி அமைய வேண்டும்.
வில்லுப்பாட்டு கச்சேரி என்பது, கீழ்கண்ட கருத்தில் இருக்க வேண்டும். மக்களுக்கும் புரிய வேண்டும். வில்லுப்பாட்டுக்கான கதைகள் பல்வேறு வகையில் அமைகின்றன. மரபு வழிக்கதைகள் முதல் தற்கால நிகழ்வுகள் வரை எதையும் வில்லுப்பாட்டுக்கான கதையாகக் கொள்ளலாம். ஆனால் கட்டமைப்பு நிலையில் அவை பொதுவான வடிவத்தைக் கொண்டு விளங்குவதைக் காணலாம். வில்லுப்பாட்டில் வரும் கதைகள் பொதுவாகப் பின்வருமாறு அமையும், அவை அ) தொன்மைக் கதைகள் ஆ) நாட்டுப்புறக் கதைகள் இ) தெய்வக் கதைகள் ஈ) சமுதாயக் கதைகள் உ) வரலாற்று வீரர் கதைகள் ஊ) நடப்பியல் நிகழ்வுகள் போன்றனவாகும். இவ்வகையில் அய்யன் கதை, வள்ளியம்மன் கதை, பார்வதியம்மாள் கதை, மார்க்கண்டன் தவசு, அரிச்சந்திரன் கதை, கிருட்டிணசாமி கதை, பெருமாள்சாமி கதை, மாகாளியம்மன் கதை, இராமாயணக் கதைகள், சுடலைமாடன் கதை, நீலி கதை, முத்துப்பட்டன் கதை, சின்ன நாடான் கதை, தோட்டுக்காரி அம்மன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, கான்சாகிபு போர், கட்டபொம்மன் கதை, காந்திமகான் கதை போன்றவை குறிப்பிடத்தக்க வில்லுப்பாட்டுக் கதைகளாகும். எடுத்துக்காட்டாக, மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கிய ‘அரிச்சந்திரன் கதை’யைப் பார்ப்போம். அரிச்சந்திரன் கதை நாம் வழி வழியாக அறிந்து வரும் கதைதான். தனது நாட்டை இழந்தும் மனைவியையும் மகனையும் பிரிந்தும் வாழ்கிறான். அரிச்சந்திரன், தன்னையே விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, சுடுகாடு காக்கும் பணி மேற்கொண்ட போதும் உண்மைக்காக கொண்ட கொள்கை தவறாமல் இருக்கிறான். கடைசியில் தனது வாய்மை மூலம் வெற்றி காண்கிறான். அரிச்சந்திரன் கதையில் வரும் துயரம் மிகுந்த காட்சிகள் வில்லுப்பாட்டிற்கு மிகவும் ஏற்ற சூழலைத் தருவதால் இக்கதை வில்லுப்பாட்டுக்கென விரும்பி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. Muni Samy- தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
தமிழர் படுகொலைகளை விசாரிக்க, வெளிநாட்டு விசாரணை தேவையில்லை, உள்ளூரிலையே விசாரிக்கலாம் என்று ஐ.நா. வில் சொல்லிவிட்டு வந்த சுமந்திரன் எங்கே? இப்படிப் பட்ட லூசு அரசியல்வாதிகளால்... தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியும் கிடைக்காமல் போகின்றது. இவர்களை அரசியலை விட்டே அடித்துத் துரத்த வேண்டும்.- மாநில உரிமைகளைப் பாதுகாக்க உயர்நிலைக் குழு – ஸ்டாலின்
மாநில உரிமைகளைப் பாதுகாக்க உயர்நிலைக் குழு – ஸ்டாலின். மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநில சுயாட்சி தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இ ன்று (15) விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனை வெளியிட்டு அவர் கூறியதாவது: மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை வரும் ஜனவரி 2026-ல் சமர்ப்பிக்கப்படும். இ றுதி அறிக்கை இரண்டு ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்படும். இக்குழு மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். மாநில பட்டியலில் உள்ள கல்வி, மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை மத்திய அரசு மடைமாற்றம் செய்ய முயற்சி செய்து வருகிறது. மருத்துவக் கொள்கையை நீட் தேர்வு நீர்த்துபோகச் செய்துள்ளது. நீட் தேர்வு காரணமாக பல மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்து போயுள்ளது. இதனால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் ஹிந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது. ஜிஎஸ்டியை கொண்டு வந்தபோதே தமிழ்நாடு அதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய அரசின் ஜிஎஸ்டி முறையால் மாநில அரசுகளுக்கு வருவாய் ,ழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறாக மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகின்றன. மாநில உரிமைகளுக்கான முதல் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலிக்கத் தொடங்கும். அந்த வகையில் மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும். அனைத்து மாநிலங்களின் நலன் கருதி இந்த உயர்மட்ட குழு அமைக்கப்படுகிறது. இதில் ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன், திட்டக்குழு முன்னாள் தலைவர் நாகநாதன், ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக இருப்பர். இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை வரும் ஜனவரி 2026-ல் சமர்ப்பிக்கப்படும். இறுதி அறிக்கை ,ரண்டு ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். https://athavannews.com/2025/1428497- ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதை பொருள் குஜராத் கடலில் பறிமுதல்!
ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதை பொருள் குஜராத் கடலில் பறிமுதல்! குஜராத் கடல் பகுதியில் கடத்தல் கும்பலால் வீசப்பட்ட இந்திய ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப் பொருளை கடலோர காவல் படை மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) போலீஸார் கைப்பற்றினர். வெற்றிகரமான இந்த நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய கடலோர காவல் படை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக குஜராத் ஏடிஎஸ் பகிர்ந்து கொண்ட தகவலின் அடிப்படையில் கடலோர காவல் படையின் ஒரு கப்பல் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சர்வதேச கடல் எல்லைப் பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக ஒரு படகை கடலோர காவல் படை வெற்றிகரமாக அடையாளம் கண்டது. இந்நிலையில் படகில் இருந்தவர்கள் தங்களை கப்பல் நெருங்குவதை கண்டு படகில் இருந்த சரக்கை கடலில் வீசிவிட்டு சர்வதேச எல்லையை கடந்து தப்பிவிட்டனர். இதையடுத்து கடலில் வீசப்பட்ட சரக்கை கடலோர காவல் படை வீரர்கள் மீட்டு போர்பந்தர் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பிறகு அதில் 300 கிலோவுக்கு மேல் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. இது மெத்தம்பேட்டமைன் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். பிறகு அந்த போதைப் பொருள் தொடர் விசாரணைக்காக ஏடிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. கடலோர காவல் படையும் குஜராத் ஏடிஎஸ்ஸ{ம் இணைந்து சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்று 13 நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளன. இவ்வாறு இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. அமித் ஷா பாராட்டு: குஜராத்தை ஒட்டிய அரபிக் கடலில் பெருமளவு போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ள இத்தகவலை உள்துறை அமித் ஷாவும் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “போதைப்பொருள் இல்லாத பாரதத்தை கட்டியெழுப்புவதற்கான இடைவிடாத முயற்சியில், சர்வதேச கடல் எல்லைக்கு அருகே ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டை வேரறுப்பதற்கான மோடி அரசின் அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி இதுவாகும். இந்த மகத்தான வெற்றிக்கு குஜராத் ஏடிஎஸ் மற்றும் கடலோர காவல் படைக்கு பாராட்டுகள்” என்று கூறியுள்ளார். https://athavannews.com/2025/1428492- அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு! அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் உடனடியாக தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் ‘அந்நியர் பதிவு சட்டம் 1940’ அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி 14 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருந்தால் அவர்கள் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். மிக நீண்ட காலமாக ‘அந்நியர் பதிவு சட்டம்’ கண்டிப்புடன் அமல்படுத்தப்படவில்லை. தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த சட்டத்தில் கடுமையான விதிகளை சேர்த்து பல்வேறு திருத்தங்களை செய்துள்ளார். புதிய திருத்த சட்டம் கடந்த 11-ம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியுள்ள வெளிநாட்டினர் அனைவரும் உடனடியாக தங்கள் விவரங்களை உள்துறை பாதுகாப்பு (டிஎச்எஸ்) அரசு அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் கைது செய்யப்படுவர். சிறை தண்டனை விதிக்கப்படும். அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அமெரிக்கா வருவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படும்” என்று தெரிவித்தார். இதுகுறித்து அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர் கூறியதாவது: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை நாடு கடத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதேபோல அமெரிக்காவில் கிரீன் கார்ட் பெற்று வாழும் வெளிநாட்டினர் மீதான கெடுபிடிகளும் அதிகரித்து உள்ளன. மிக நீண்ட காலமாக ‘அந்நியர் பதிவு சட்டம்’ கிடப்பில் போடப்பட்டு இருந்தது. தற்போது அந்த சட்டத்தில் கடுமையான விதிகளை சேர்த்து அமல்படுத்தி உள்ளனர். இதன்படி எச்-1பி விசா, மாணவர் விசா வைத்திருப்போர் மற்றும் கிரீன் கார்ட் வைத்திருப்போர் 24 மணி நேரமும் தங்களது ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும். மேலும் அவர்களின் பிள்ளைகள் 14 வயதை எட்டிய உடன் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கு பெற்றோரே பொறுப்பு என்று அரசு தரப்பு தெரிவித்திருக்கிறது. அதாவது 14 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் விவரங்களை பதிவு செய்யவில்லை என்றால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக ரூ.15 லட்சம் அபராதம் செலுத்த நேரிடும். 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடதக்கது. https://athavannews.com/2025/1428488- அமெரிக்காவுக்கு அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதியை நிறுத்தியது சீனா!
அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்த பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்தியது சீனா! அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்த பொருட்கள் ஏற்றுமதியை சீன அரசு நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவில் ராணுவத் தளவாட உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். இதைத் தொடர்ந்து உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகம் விதித்து ஒட்டுமொத்த உலக நாடுகளின் தலைப்புச் செய்தியாக மாறியிருந்தார். சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை ஜனாதிபதி ட்ரம்ப் அமல்படுத்தியிருந்தார். கடந்த 9-ம் தேதி முதல் அந்த வரிவிதிப்பு அமலாக இருந்த நிலையில், வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். எனினும், இந்த வரிவிதிப்புப் பட்டியலில் சீனாவை மட்டும் ஜனாதிபதி ட்ரம்ப் தவிர்த்துள்ளார். மேலும், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பையும் உயர்த்தி வருகிறார். பதிலுக்குச் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிவிதிப்பை உயர்த்தி வருகிறது. தற்போது, சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145 சதவீதமாக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில்தான் அமெரிக்காவுக்கு கனிமங்கள், முக்கிய உலோகங்கள், காந்தம் போன்ற பொருட்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக்கூறுகள் முற்றிலும் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தகப் போரில் சீனா ஏற்றுமதிக்கு புதிய நெறிமுறைகளை வகுத்து வருகிறது. ஏற்கனவே, கார்கள் முதல் ஏவுகணைகள் வரை தயாரிக்க தேவையான காந்தங்கள் மற்றும் மூலக்கூறுகளின் ஏற்றுமதி சீன துறைமுகங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. சீனாவின் புதிய நடைமுறைகள் அமலுக்கு வரும்போது, அமெரிக்காவின் ராணுவ தளவாட உற்பத்தி உட்பட பல நிறுவனங்களின் உற்பத்தி தடைபடும் அபாயம் ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது. பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான உலகின் அரிய மண் தாதுக்களில் சுமார் 90 சதவீதத்தை சீன நாடுதான் உற்பத்தி செய்கிறது. சமாரியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம், யட்ரியம் ஆகியவை உட்பட ஏழு வகை நடுத்தர மற்றும் கனரக அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதியை கட்டுப்படுத்தவும் சீனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் இதுபோன்ற கனரக அரிய மண் தாதுக்கள் அடங்கிய ஒரே ஒரு அரிய சுரங்கம் மட்டுமே உள்ளது. எனவே ,சீனாவின் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்காவின் ராணுவத் தளவாட உற்பத்தியைப் பெருமளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவிலிருந்து வரும் அரிய மண் தாதுக்களை அமெரிக்காவிலுள்ள லாக்ஹீட் மார்ட்டின், டெஸ்லா, ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த வகை சீன அரிய மண் தாதுக்களை தங்கள் விநியோகச் சங்கிலிகளில் ஏராளமான அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதால் அங்கு உற்பத்தி பாதிக்கப்படும் பேரபாயம் நேரிட உள்ளது. சீனாவால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிய பூமி உலோகங்கள் காந்தங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மின்சார கார்கள், ட்ரோன்கள், ரோபோக்கள், ஏவுகணைகள், விண்கலம், பெட்ரோலில் இயங்கும் கார்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பல வகையான மின்சார மோட்டார்களுக்கு இந்த வகையான அரசிய உலோகங்கள் மிகவும் அவசியமாகும். தற்போது திடீரென இந்த வகை உலோகங்கள், அரிய மண் தாதுக்களை ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடு விதித்திருப்பதால் அமெரிக்க அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் வணிக வல்லுநர்கள் தெரிவிக்கின்றன. கார்கள் முதல் ஏவுகணைகள் வரை தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் இந்த ஏற்றுமதி தடையால் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க அரசுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1428484- முழுவதும் பெண்களே நிரம்பிய குழு நாளை விண்வெளிக்கு பயணம் - 6 பேரும் என்ன செய்வார்கள்?
முதன்முறையாக விண்ணைத் தொட்ட சிங்கப்பெண்கள் குழு! அமெரிக்காவில் முதன்முறையாக முழுவதும் பெண்கள் அடங்கிய குழுவினர் விண்வெளிக்கு பயணம் செய்து திரும்பி புதிய சாதனையை படைத்துள்ளனர். உலகம் முழுவதும் விண்வெளி ஆராய்ச்சி உச்சத்தை தொட்டுவிட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் விண்வெளி சுற்றுலாவுக்காக தனியார் விண்வெளி மையங்களும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் அமேசன் நிறுவனர் ஜெஃப் பெசோசின் ப்ளூ ஆரிஜின் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. சமீபத்தில் ப்ளூ ஆரிஜின் முழுவதும் பெண்கள் அடங்கிய ஒரு குழுவை விண்வெளி சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டது. அதன்படி ஜெப் பெசோசின் வருங்கால மனைவி லாரன் சான்செஸ், பாப் பாடகி கேட்டி பெரி, நாசா விஞ்ஞானி ஆயிஷா பாவே உள்ளிட்ட 6 பெண்கள் விண்வெளிக்கு பயணம் செய்தனர். நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில் புறப்பட்ட அவர்கள் விண்வெளிக்குள் சென்று சில மணி நேரங்களை கழித்து பத்திரமாக பூமியை வந்தடைந்துள்ளனர். இந்த பயணம் மூலம் விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக முழுவதும் பெண்கள் மட்டுமே அடங்கிய குழு செய்த முதல் விண்வெளி பயணமாக இந்த பயணம் சாதனை படைத்துள்ளது. https://athavannews.com/2025/1428477- இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
- சிரிக்கலாம் வாங்க
- கருத்து படங்கள்
- ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்!
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்! விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14-04-2025 அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது. இதனை முன்னிட்டு இன்று ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றுவருவதுடன் பெருமளவான மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர். தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளின்போது நாட்டில் துன்பம் நீங்கள் நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டை குறிக்கும் வகையில் கைவிசேடமும் ஆலயத்தினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428434- "விசுவாவசு" தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
"விசுவாவசு" தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2025 சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு இன்று அதிகாலை 03:21 மணிக்கு சுப நேரத்தில் உதயமாகி உள்ளது தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம். தமிழ் புத்தாண்டு, தமிழ் வருடப் பிறப்பு, சித்திரை பிறப்பு, சங்கராந்தி என பல பெயர்களால் இது கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சொல்லப்படுகிறது. சூரிய பகவான், மேஷம் துவங்கி மீனம் வரை 12 ராசிகளிலும் தனது பயணத்தை நிறைவு செய்வதை ஒரு ஆண்டு என்கிறோம். விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14/04/2025 அன்று அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் நுழையும் பொழுது பிறந்துள்ளது. https://athavannews.com/2025/1428423- நம்ம பரிமளம்
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 🙏- நம்ம பரிமளம்
தமிழ் புது வருசம் பிறக்கின்ற நேரம்…. ஆட்களை வம்பிலை மாட்டி விடாதேங்கோ. 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- 44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
👉 https://www.facebook.com/reel/978884160670215 👈 ஈழப்பிரியன், மேலே உள்ள காணொளியையா சொல்கிறீர்கள். Made in California. 😂 🤣- நம்ம பரிமளம்
ஐயையோ... நான் இந்த விளையாட்டுக்கு வரேல்லை. 😂Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரசித்த.... புகைப்படங்கள்.