Everything posted by தமிழ் சிறி
-
தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
தேஷபந்து தென்னகோனிற்கு விளக்கமறியலில் நீடிப்பு! உயர் நீதிமன்றத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று பிற்பகல் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்டிருந்தார். அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தேஷபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்திறகு அழைத்து வரப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Athavan Newsதேஷபந்து தென்னகோனிற்கு விளக்கமறியலில் நீடிப்பு!உயர் நீதிமன்றத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளது. உய...
-
மே மாதம் 06ஆம் திகதி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல். -தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு.-
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சற்று முன்னர் அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்காக இன்று பிற்பகல் 1.30 மணி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தாக தேர்தல்கள் ஆணைக்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1425971
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
யாராய் இருக்கும்....
-
கருத்து படங்கள்
தேசபந்து தென்னக்கோனின் வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனையிட்ட போது 1009 மதுபான போத்தல்கள், ஒரு துப்பாக்கி, இரண்டு ஆப்பிள் ரக தொலைபேசிகளை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
-
தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
தேசபந்து தென்னக்கோனின் வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனையிட்ட போது 1009 மதுபான போத்தல்கள், ஒரு துப்பாக்கி, இரண்டு ஆப்பிள் ரக தொலைபேசிகளை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
-
“கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ பிள்ளையான் வியாழேந்தின் வேட்பு மனுதாக்கல்!
“கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ பிள்ளையான் வியாழேந்தின் வேட்பு மனுதாக்கல்! தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் “கிழக்கு தமிழர் கூட்டமைப்பாக” போட்டியிடவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலுpகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார் அதன்படி வேட்புமனுக்கள் கையளிக்கும் இறுதி நாளான இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் இராஜஙாக் அமைச்சர்களான சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் இதேபோன்று ஆளும் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையிலும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தலைமையிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.நளீம் தலைமையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோன்று ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல்செய்யப்பட்டன. மேலும் ஈபிடிபியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா தலைமையில் வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டதுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் 11உள்ளுராட்சிமன்றங்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425925
-
முப்படையைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோர் கைது!
முப்படையைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோர் கைது! சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறாத மற்றும் கடமைக்கு சமூகமளிக்காத முப்படையைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் துய்யகொண்டாவின் உத்தரவின்படி, சேவையில் இருந்து விலகிச் சென்ற முப்படை அதிகாரிகளை சட்டரீதியாக கைது செய்யும் நடவடிக்கை கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி நேற்று (19) வரை சேவையில் இருந்து தப்பிச் சென்ற முப்படையைச் சேர்ந்த 1,604 படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். முப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 1,444 பேரும், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 160 பேரும் கைது செய்யப்பட்டடுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 1,394 இராணுவத்தினர் அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 138 விமானப்படை வீரர்களும், 72 கடற்படை வீரர்களும் அடங்குவர். https://athavannews.com/2025/1425866
-
இலங்கையில் சிஐஏயின் இரகசிய தளம்-கென்னடி கொலை குறித்த ஆவணங்களில் தகவல்
இலங்கையில் சிஐஏயின் இரகசிய தளம்-கென்னடி கொலை குறித்த ஆவணங்களில் தகவல். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ஜோன்எவ் கென்னடி கொலைகுறித்த ஆவணங்கள் மூலம் இலங்கையில் சிஐஏ தளம் இயங்கியது குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 80 ஆயிரம் பக்க ஆவணங்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்தில் இந்த ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு காணக்கிடைக்கிறது. கோப்புகளில் உள்ளவற்றைக் கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என்று வெள்ளை மாளிகையின் துணை ஊடகச் செயலாளர் ஹாரிசன் ஃபீல்ட்ஸ் கூறினார். ஆவணங்கள் எந்தவித திருத்தங்களும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டிரம்பினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்களில் பனிப்போர் காலத்தில் சிஐஏயின் நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் காணப்படுகின்றன அதில் இலங்கை உட்பட பல நாடுகளில் சிஐஏயின் இரகசிய தளம் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது இது இலங்கை அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை தற்போது பேசும் பொருளாக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும் 1988 ம் ஆண்டு இயங்கிய பட்டலந்தை சித்திரவதை முகாம் தொடர்பிலும் பேசப்படுகின்றதுடன் 1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்தை முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றதுடன் உண்மைகளும் புதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425903
-
வாகன இறக்குமதி விதிமுறைகள் திருத்தம்; புதிய வர்த்தமானி வெளியீடு!
வாகன இறக்குமதி விதிமுறைகள் திருத்தம்; புதிய வர்த்தமானி வெளியீடு! இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வெளியிடுவதற்கு பரிசோதனை உறுதிபடுத்தல் (Bureau Veritas) ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதித்தல் மற்றும் ஆவணங்களின் ஆன்லைன் அங்கீகாரத்தை அனுமதித்தல் உள்ளிட்ட முக்கிய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளைத் திருத்தி சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2025 மார்ச் 19 ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பை, நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். இலங்கை சுங்கத்திலிருந்து வாகனங்களை விடுவிப்பதில் வாகன இறக்குமதியாளர்களால் கூறப்படும் பல தடைகளைச் சுற்றியுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சிறப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கை சுங்கத்தில் சிக்கிய ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிட்டத்தட்ட 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய வர்த்தமானியில் உள்ள திருத்தங்கள், அனைத்து நாடுகளிலிருந்தும் வாகன இறக்குமதிகளுக்கு Bureau Veritas ஆய்வுச் சான்றிதழ்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்படும் என்று குறிப்பிடுகின்றன. புதிய விதிமுறைகளின்படி, மோட்டார் வாகனங்களை விடுவிக்கும் முன், இலங்கை சுங்கத்துறை ஆவணங்களின் நம்பகத்தன்மையை ஆன்லைனில் சரிபார்க்க வேண்டும். உரிமம் பெற்ற வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஆன்லைன் சரிபார்ப்பு மூலம் சான்றளிக்கப்படுவதை இலங்கை சுங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று வர்த்தமானி கூறுகிறது. சமீபத்தில், இறக்குமதி விதிமுறைகள் குறித்த தவறான முடிவின் விளைவாக சுமார் 400 வாகனங்கள் இலங்கை சுங்கத்தில் 20 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் குற்றம் சாட்டினர். உற்பத்தி ஆண்டு அல்லது சரியான உற்பத்தி திகதியை குறிப்பிட வேண்டிய தேவை இணக்கத்தை கடினமாக்கியுள்ளது என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே குறிப்பிட்டிருந்தார். https://athavannews.com/2025/1425912
-
யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை!
கடற்றொழிலுக்கு சென்று காணாமல்போயுள்ள இரு மீனவர்கள் தமிழகத்தில் கண்டுபிடிப்பு! யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற வேளை காணாமல் போன மீனவர்கள் ஐந்து நாட்களின் பின்னர் தமிழக கடலோர பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் தொண்டி மீன்பிடித்துறைமுகத்திற்கு சற்று தொலைவில் படகொன்று தத்தளித்துக்கொண்டிருந்ததை கண்ணுற்ற தமிழக கடலோர பொலிஸ் படையினர் அவர்களை படகுடன் மீட்டு கரை சேர்த்துள்ளனர். பின்னர், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், கடந்த 15 ஆம் திகதி கடற்தொழிலுக்கு சென்ற சமயம் படகு இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்து வந்ததாக கூறியுள்ளனர். இருவரையும் கைது செய்துள்ள தமிழக பொலிஸார், இவர்கள் கடத்தல் நோக்கத்துடன் தமிழக கடற்பரப்பினுள் நுழைந்தார்களா எனும் சந்தேகத்துடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1425933
-
அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மீதும் போர்க் கப்பல் மீதும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!
அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மீதும் போர்க் கப்பல் மீதும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்! செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மீதும் போர்க் கப்பல் மீதும் யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. கடந்த 48 மணி நேரத்தில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலைக் குறிவைத்து ஹூதிக்கள் மூன்றாவது தடவையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். வடக்கு செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஹாரி ட்ரூமன் எனும் விமானம் தாங்கிக் கப்பல் மீதே ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செங்கடல் பகுதியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் தாக்குதல் போர்க் கப்பல் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் இடம்பெறும் போரில், ஹுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர். அந்த வகையிலேயே, இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் உள்ளிட்ட இரண்டு கப்பல்கள் மீது ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காஸாவை இஸ்ரேல் தாக்கும் செயற்பாடு கைவிடப்படும் வரை, செங்கடலில் தங்கள் தாக்குதல் தொடரும் என்று ஹுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், செங்கடலில் ஹூதிக்களின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை, அவர்களுக்கு எதிராக அமெரிக்க தாக்குதல் நீடிக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு மத்தியில் யேமனில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர்களில் ஐந்து பேர் பெண்கள்; என்றும் 2 பேர் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்தத் தாக்குதலில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. அமெரிக்க தாக்குதலின் பரபரப்பு அடங்கும் முன்னரே, செங்கடலில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2025/1425854
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
இவ... சிரியன்காரன், கத்தியால் குத்துறான் என்று.. இலங்கையில் அகதிக்கு விண்ணப்பிக்க வேண்டியதுதான். 🤣
-
தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது!
போட்டியிட... ஆட்கள் இல்லைப் போலுள்ளது. 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
இலங்கையில் இருந்து அகதிகாளாக சென்றவர்களை, மேற்கத்தியம் அகதி தஞ்சம் வழங்கி அதன் பின்னர் குடியுரிமை வழங்கி அவர்களின் திறமையை உள்வாங்கி இவ் அமைச்சு பதவிகளை... சமத்தும் கொண்டு வழங்கும் போது.... இலங்கை குடியுரிமை பெற்ற ஜேர்மனிய பெண் மாத்தளை மாவட்டதில் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதும் உலகமயமாக்களின் மைல்கல். உண்மை உரைகல்- பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
சுப.சோமசுந்தரம் ஐயா அவர்களே.... உங்கள் பதிவு தற்போது, "யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்தப் பட்டுள்ளது. 🙂- பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
பிற் குறிப்பு: Messages ற்குப் போகாமல், நீங்கள் இந்தத் திரியிலேயே இலகுவாக மாற்றும்படி நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்ளலாம்.- பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
நீங்கள் பதிந்த பதிவின் வலது பக்க மேல் மூலையில்... மூன்று புள்ளிகள் (...) அடைப்புக் குறிக்குள் காட்டியவாறு தெரியும். அதனை நீங்கள் கிளிக் பண்ண.... Report என்று ஒரு தெரிவு வரும். அதில் நீங்கள்... உங்களது விருப்பத்தை எழுதி, பதிவு செய்து... கீழே Submit Report என்ற பெட்டியை, கிளிக் பண்ண... அது நேரடியாக நிர்வாகத்தின் கவனத்திற்கு செல்லும். அவர்கள் அதனை பார்த்தவுடனே... மாற்றி விடுவார்கள். மேலதிக உதவி வேண்டுமென்றால் தாராளமாக கேளுங்கள் ஐயா.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
"ஆபத்து, அப்பத்து"... என்று ஒரு பாட்டும் ஓடிக் கொண்டிருக்குது அண்ணே... 😂 தமிழ் சொற்களை... இரவல் வாங்கி பாடுறாங்க. 😂 இதற்கு காப்புரிமை பணம் அறவிடப் படவேண்டும். 🤣- சிரிக்கலாம் வாங்க
- போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
விண்வெளியில் 286 நாட்கள், கிரகத்தைச் சுற்றி 4577 சுற்றுப்பாதைகள். மற்றும் 195.2 மில்லியன் கிலோமீட்டர் தூரத்திற்கு பறந்த நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாக வீடு திரும்பினார். சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் விண்வெளிக்கு எட்டு நாள் பயணத்திற்குச் சென்ற விண்வெளி வீரர், அவர் விண்வெளிக்கு செலுத்திய ஸ்டார்லைனர் விண்கலத்தில் பல தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால், ஒன்பது மாதங்கள் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்த இரண்டு மூத்த நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்பினர். பூமியை அடைய விண்கலம் கிட்டத்தட்ட 17 மணிநேர பயணத்தை மேற்கொண்டு பூமியை வந்தடைந்தது. Sanjith Suryaáa- உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
இணையவன் உண்மையாகவா???? 😮 நாங்கள்... பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகளை... இங்கு இருந்து பார்த்துவிட்டுப் போவோம், என்று "பிளான்" போட்டு வைத்திருக்க, இந்த மனிசி... வயித்திலை புளியை கரைக்குது. 😂- உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
சிலவேளை... உங்களுடைய ஜேர்மன் ரெஸ்ற்ரோரன்ருக்கு சாப்பிட வந்திருப்பாவோ. 😂- பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
சுப.சோமசுந்தரம் ஐயா... உங்கள் கட்டுரையை, "யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பதிந்தால் நன்றாக இருக்குமே. உங்களுக்கு விருப்பம் என்றால்... நிர்வாகத்திடம் சொல்லி அங்கு நகர்த்தி விடுங்கள்.- பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
பம்மாத்து என்ற சொல்லை இலங்கைத் தமிழர்தான் பாவிப்பார்கள் என நினைத்திருந்தேன். தமிழகத் தமிழரும் அந்தக் சொல்லை பாவிப்பதை உங்கள் மூலம்தான் கேள்விப்படுகின்றேன். - உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.