Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இரத்தம் நன்றாக அங்கு ஓடுவதற்கு... என்ன செய்ய வேண்டும். 😂
  2. படத்தில்... நகைச்சுவைக்காக இந்த விடயத்தை எடுத்துள்ளார்கள். நீங்கள் பயப்படாதேங்கோ நிழலி. 😂 நான் சாதாரணமாக படம் பார்ப்பது குறைவு. ஆனால்... இந்தப் படத்தின் விமர்சனத்தை பார்த்தவுடன், கட்டாயம் பார்க்க வேண்டும் போல் உள்ளது. அத்துடன் அது... இலங்கை படம். ஆசையை தூண்டி விட்டுள்ளது. 🙂 அல்வாயன், இன்று படம் பார்த்தால்... கட்டாயம் உங்கள் விமர்சனத்தையும் எழுதுங்கள்.
  3. அல்வாயன் குறிப்பிடுவது பம்பாய் மிட்டாசு அல்லது ஜவ்வு மிட்டாய். அது ஒரு தடியில் சுற்றப்பட்டு ஈரப்பதமாக... கடினமான பாணி போல் இருக்கும். நிலாமதி அக்காவும், ஈழப்பிரியனும் குறிப்பிடுவது... தும்பு மிட்டாஸ். தும்பு போல் இருக்கும் இனிப்பு. இரண்டுக்கும் மூலப் பொருள் ஒன்று என நினைக்கின்றேன். ஆனால்... செய்முறை வித்தியாசமாக இருக்கலாம்.
  4. உப்பு, முட்டை... போன்றவற்றையே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து சாப்பிடும் நாட்டில்... மரக் கரண்டியை இறக்குமதி செய்வது, அவ்வளவு வெட்கக் கேடான விடயம் அல்ல. 😂 🤣
  5. குடிக்கும் நீரையே... காசுக்கு விற்கும் நிலை வந்து விட்டது என்றால்... காப்பரேட் கம்பனிகளின் செல்வாக்கை பாருங்கள். எமது தாத்தாவோ, பாட்டியோ... தண்ணீரை, விலைக்கு விற்பார்கள் என்று நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள். எதிர்காலத்தில்... சுவாசிக்கும் காற்றும் காசுக்கு வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
  6. என்ன விசயம்...? 🤔 இந்தப் பக்கம்.... @ஈழப்பிரியன் , @விசுகு, @நிழலி, @Kandiah57, @குமாரசாமி, @alvayan, @putthan, @நந்தன் ஒருவரையும் காணவில்லை. எல்லோரும் திருந்தி விட்டார்களா. 😂 அல்லது... வயது மூப்பு அடைந்து விட்டார்களா. 🤣
  7. ஆயிரம் புடுங்குப்பாடு இருந்தாலும்.... நாம் பிறந்த நாடு... நமது நாடுதானே. 😂 🤣
  8. விஜய் ... போக வேண்டிய துராம், நிறைய உள்ளது. 😂 எடுத்தவுடன் எல்லோரும்... எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாதுதானே. 🤣
  9. இப்போ கொஞ்சம் தளர்த்தி உள்ளார்களாம். அதுகும்... முன்பு பயிரிட்டவர்களுக்கு மட்டுமே அந்த அனுமதி கொடுத்துள்ளார்கள் என்று முகநூலில் ஒருவர் தெரிவித்து இருந்தார். இது நல்லது என்றே நினைக்கின்றேன். அந்த மண்ணுக்கே உரிய பாரம்பரிய பயிர்களை முற்றாக அழிய விடாமல் பாதுகாக்கப் படுவது நல்லது. குரோஷியா நண்பர் ஒருவர் தமது நாட்டில்... அரசாங்கம், சிகரெட் கொம்பனிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு... உள்ளூரில் புகையிலை பயிரிடுவதை தடை செய்து விட்டார்களாம். இப்போ... தமது நாட்டின் பாரம்பரிய புகையிலை கன்றுகள் முற்றாக அழிந்து விட்டது என்று கவலைப் பட்டார்.
  10. தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்! தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உள்ளனர். காலை 10 மணி அளவில் கூட்டம் நடைபெறும் மையத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய், கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும், மதுபானசாலை முறைகேடு தொடர்பாக தீர்மானம், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை, சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றம்,மீனவர்கள் போராட்டத்திற்கு தீர்வு: அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், இலங்கை தமிழர் பிரச்சினைக்க்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும், கொள்கை தலைவர்கள் வழியில் பயணிக்க வேண்டும், கூட்டணி அமைப்பு, கட்சியை வழிநடத்துவது தொடர்பாக தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் விஜயின் பெற்றோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர். இதையடுத்து பொதுக்குழுவில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றியிருந்தார். டெல்லியில் மோடியும், தமிழகத்தில் அண்ணாமலையும் பல்வேறு அரசியல் விஷயங்களை திசை திருப்புகிறார்கள். பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் போது சாட்டையால் அடித்து கொண்டு திசைதிருப்ப முயற்சிகிறார்கள். அண்ணாமலையை செட் செய்து தி.மு.க. வைத்துள்ளது. புலி அமைதியாக இருக்கும்போது ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது. எங்கள் கட்சியையும், தலைவரையும் தொட்டால் உங்கள் உண்மை முகத்தை வெளிக்காட்டுவோம். இன்றுவரையும் மக்களால், கட்சியால் பாசமுடன் அழைத்த நம்முடைய தளபதியை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும். எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தியது போல், தற்போது த.வெ.க. தலைவர் விஜயை இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க. பற்றிய உண்மை தெரியவந்த காரணத்தினால் தான் அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன். Work From Home அரசியல் இல்லை. உங்களை வீட்டுக்கு அனுப்பப்போகும் அரசியல். உங்களுக்கு எல்லாம் ஓய்வு கொடுக்கவே நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம் என தனது உரையில் கூறினார். https://athavannews.com/2025/1426754
  11. பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு; பிரதான சந்தேக நபர் அடையாளம்! அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அனுராதபுரம் தலைமை நீதிவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட மருத்துவர் சந்தேக நபரை அடையாளம் கண்டார். அனுராதபுரம் தலைமை நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (28) அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. மார்ச் 10 ஆம் திகதி சந்தேக நபரால் கத்தி முனையில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ குடியிருப்பிற்குள் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நபர் பெண் மருத்துவரின் மொபைல் போனுடன் தப்பிச் சென்றுள்ளார். மறுநாள் கல்னேவ பகுதியில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். திருடப்பட்ட மொபைல் போனை பின்தொடர்வதன் மூலம் காவல்துறையினர் அவரைக் கண்டுபிடிக்க முடிந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ ஊழியர்கள் ஒரு அடையாள வேலைநிறுத்தத்தையும் மேற்கண்டிருந்தனர். https://athavannews.com/2025/1426772
  12. இதனை... பாணந்துறையில் தலைமை நீதிவானால் மட்டும் சரி செய்ய முடியாது. மேற்கு நாடுகளில் உள்ளது போல்... மதுபோதையில் வாகனம் ஓடுபவர்களை கடுமையாக தண்டிக்கும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அதனை... லஞ்சம் வாங்காத காவல்துறை இலங்கையில் இருக்க வேண்டும். இல்லையேல் இது தொடர் கதைதான். நமது நாட்டில்... சட்டத்தை ஏய்த்துப் பிழைப்பதை ஒரு கெட்டித்தனமாகவே நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அரச நிர்வாகத்திலும் இதே... பொட்டுக்கேடுதான்.
  13. அப்ப... பிலிப்பைனுக்கு போங்கோ. அதுகும்... தாய்லாந்து மாதிரியான கலாச்சாரம் உள்ள இடம்தான். போன காசுக்கு, கைநிறைய பலன் கிடைக்கும். கை நடுக்கம் வந்தாலும்.... நிலநடுக்கம் வரவே... வராது. 😂
  14. கட்டிடங்கள் அதிர்ந்து வீழ்ந்தன, பல சேதம்! மியன்மாரின் மண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நில அதிர்வு 7.7 ரிச்டர் அளவில் பதிவு, இந்த நில நடுக்கம் இலங்கை நேரப்படி 11.50 மணியளவில் ஏற்பட்டதாக தகவல்! நில அதிர்வின் அலைகளால் தாய்லாந்து பேங்கொக் பகுதியின் கட்டிடங்கள் அதிர்ந்து வீழ்ந்தன.
  15. கருணாவுக்கு பிரித்தானிய பாதுகாப்பு கொடுத்தது என்பது உண்மை இல்லை! 2007, நவம்பர்,02, ல் பிரித்தானியாவிற்கு போலி கடவுச்சீட்டில் சென்றதால் லண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சரியாக எட்டு மாதங்களால் லண்டன் சிறையில் இருந்து வெளியேற்றப்பட்டு 2008,யூலை,02, ல், லண்டனில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். லண்டனில் இருந்து இலங்கை அரசிடம் ஒப்படைக்கவே கட்டுநாயக்கா விமான நிலையம் வரை அவர்கள் வந்து இலங்கை அரசின் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். Monisha Kokul கருணா... பிரித்தானிய சிறையில் இருக்கும் போது.. மற்றைய கைதிகள் சுடு தண்ணீரால் ஊற்றிய கூத்தும் நடந்தது. அதனை கருணா மறந்திருந்தாலும், நாங்கள் மறக்கவில்லை. 😂
  16. மதுபோதையில் வாகனம் ஓட்டிய சாரதி; அனுமதி பத்திரம் வாழ் நாள் முழுவதும் இரத்து! மதுபோதையில் தனியார் பேருந்தை ஓட்டியதற்காக, பேருந்து சாரதியின் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் இரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை வெளியிட்ட பாணந்துறை தலைமை நீதிவான் சம்பிகா ராஜபக்ஷ, குற்றம் சாட்டப்பட்டவருக்கு அபராதமும் விதித்தார். பாணந்துறையிலிருந்து களுத்துறைக்கு ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற குற்றம் சாட்டப்பட்டவர், போக்குவரத்து பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டார். இதன்போது, மதுவின் வாசனை அவர் மீது தொடர்ந்து இருந்ததால், பொலிஸார் அவரை மேலும் விசாரித்தனர், அப்போது அவர் மது போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சாரதி தனது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததான வாதத்தின் அடிப்படையில், பாணந்துறை தலைமை நீதிவான் அவரது உரிமத்தை இடைநிறுத்தி அபராதம் விதித்தார். https://athavannews.com/2025/1426762
  17. மியன்மார், தாய்லாந்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்! மியன்மாரில் வெள்ளிக்கிழாமை (28) 7.7 மற்றும் 6.4 ரிக்டர் அளவிலான இரண்டு தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தினால் மியன்மாரின் மண்டலேயில் உள்ள புகழ்பெற்ற அவா பாலம் இராவடி ஆற்றில் இடிந்து விழுந்ததாகவும், சாகைங் அருகே மையமாக இருந்த பாரிய நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. நிலநடுக்கங்களின் தாக்கம் அந்த அளவுக்கு அதிகமாக இருந்ததால், சுமார் 900 கி.மீ தொலைவில் உள்ள பாங்கொக்கை நிலநடுக்கம் உலுக்கியது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் உயரமான கட்டிடங்களில் இருந்த நீர்த்தொட்டிகளில் இருந்து தண்ணீர் வெளியேறியது. மேலும் நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பல கட்டிடங்கள் அசைந்ததால் அதிலிருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். எனினும், தாய்லாந்து தலைநகரில் சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. https://athavannews.com/2025/1426755
  18. சென்ற பாராளுமன்ற தேர்தலில்... உங்களுக்கு தந்த, பதிலடி மாதிரியா... சுமந்திரன். உள்ளுராட்சி தேர்தலில் உங்கள் எல்லாருக்கும்... நல்ல பதிலடி கிடைக்கும். கவலைப்படாதீங்க.
  19. இலங்கையின் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் – IMF இலங்கையின் பொருளாதார மீட்சி வேகம் பெற்று வருவதாக சர்வதேச நாணய நிதியம் (‍IMF) தெரிவித்துள்ளது. இலங்கையில் சீர்திருத்தங்கள் பலனளிப்பதாகக் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசாக் (Julie Kozack) குறிப்பிட்டார். இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ள அவர், கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, IMF நிர்வாகக் குழு இலங்கைக்கான EFF (விரிவாக்கப்பட்ட நிதி வசதி) ஏற்பாட்டின் கீழ் மூன்றாவது மதிப்பாய்வை அங்கீகரித்தது. மேலும் இது நாட்டிற்கு உடனடியாக $334 மில்லியன் ஆதரவை அணுக அனுமதித்தது. எனவே, அந்த மூன்றாவது மதிப்பாய்வை வாரியம் அங்கீகரித்தவுடன், $334 மில்லியன் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை ஆதரிக்கக் கிடைத்தது. மேலும் இந்த $334 மில்லியனுடன், இது IMF இலிருந்து இலங்கைக்கு மொத்த நிதி உதவியை $1.34 பில்லியனாகக் கொண்டு வருகிறது. இலங்கையில் சீர்திருத்தங்கள் பலனளிக்கின்றன என்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியும். பொருளாதார மீட்சி வேகம் அதிகரித்து வருகிறது, இலங்கையில் பணவீக்கம் குறைவாகவே உள்ளது, நிதிப் பக்கத்தில் வருவாய் வசூல் மேம்பட்டு வருகிறது, சர்வதேச இருப்புக்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. 2024 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை எட்டியது, அது இரண்டு வருட பொருளாதார சுருக்கத்திற்குப் பிறகு. மேலும் 2025 ஆம் ஆண்டிலும் இலங்கையில் மீட்சி தொடரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவை அனைத்தும் இலங்கைக்கும் நாட்டு மக்களுக்கும் மிகவும் சாதகமான முன்னேற்றங்கள். எனினும், இவை அனைத்தும் கூறப்பட்டாலும், பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளது. எனவே பெரிய பொருளாதார நிலைத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மை நீடித்து நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்கு சீர்திருத்த உந்துதல் நிலைத்திருப்பது மிகவும் முக்கியமானது – என்றார். https://athavannews.com/2025/1426750
  20. 37வது பொலிஸ் மா அதிபர் பதவிக்காக ஏழு மூத்த பொலிஸ் மா அதிபர்களின் பெயர்கள் முன்மொழிவு! பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான முன்மொழிவைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்காக ஏழு மூத்த பொலிஸ் மா அதிபர் இடையே பனிப்போர் ஆரம்பமாகியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன அதன்படி தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, லலித் பத்திநாயக்க சஞ்சீவ மெதவத்த, ரன்மல் கொடிகுணு, சஞ்சீவ தர்மரத்ன, கித்சிறி ஜெயலத் மற்றும் எம்.ஜி.ஆர் எஸ். தமிந்த ஆகியோர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. மேலும் அடுத்து நியமிக்கப்படவுள்ளவர் இந்த நாட்டின் 37வது பொலிஸ் மா அதிபர் ஆவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளடன் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதி அவரை பதவியில் இருந்து நீக்குவார். அத்துடன் நியமிக்கப்படும் அடுத்த பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியால் அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைக்கப்படுவார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. https://athavannews.com/2025/1426722

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.