Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. மித்தெனிய துப்பாக்கிச் சூடு; மேலும் ஒருவர் கைது! கடந்த 18 ஆம் திகதி மித்தெனிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதான தெலம்புயாய வெகந்தாவல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். வீரகட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலம்புய பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். இதனடிப்படையில், இக்குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் மித்தெனிய, கடேவத்த சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தந்தை, அவரது ஆறு வயது மகள் மற்றும் ஒன்பது வயது மகன் உட்பட மூவர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டினை அடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் மற்றும் மகள் படுகாயமடைந்த நிலையில் முறையே எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். எவ்வாறெனினும், பாதிக்கப்பட்டவரின் ஆறு வயது மகள் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் மறுநாள் உயிரழந்தார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. https://athavannews.com/2025/1422627
  2. தெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு: சிக்கிக் கொண்ட 8 தொழிலாளர்கள்! தெலுங்கானாவில் கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சனிக்கிழமை (22) இடிந்து விழுந்ததில் குறைந்தது எட்டு தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். தெலுங்கானாவின் ஸ்ரீசைலம் அணைக்கு பின்புறம் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதியில் கசிவை சரிசெய்ய சில தொழிலாளர்கள் உள்ளே சென்றபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. விபத்தினை அடுத்து சுரங்கத்தில் சிக்கி பல தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். எனினும், எட்டு தொழிலாளர்கள் இன்னும் சுரங்கத்தில் சுக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மீட்புப் படை தெரிவித்துள்ளன. சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களில் 4 பேர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இருவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் மற்றும் ஒருவர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்திய இராணுவம் தனது பொறியாளர் பணிக்குழுவையும் (ETF) விரைவாக பணியமர்த்தியுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, இராணுவ பொறியாளர் பணிக்குழுவானது விபத்து நடந்த இடத்தில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Athavan Newsதெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு: சிக்கிக் கொண்ட 8 தொழிலாள...தெலுங்கானாவில் கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சனிக்கிழமை (22) இடிந்து விழுந்ததில் குறைந்தது எட்டு தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். தெலுங்கானாவின் ஸ்ரீசைலம் அணைக்கு பின்பு...
  3. பிரான்ஸ் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு, 3 பொலிஸார் காயம்! பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள மல்ஹவுஸ் (Mulhouse) நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். 37 வயதான அல்ஜீரிய சந்தேக நபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார். அத்துடன், தாக்குதல்தாரி கத்திக் குத்தினை மேற்கொள்ளும் போது, “அல்லாஹு அக்பர்” (பெரியவர்) என்று கூச்சலிட்டதாகவும் நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்துள்ளன. சந்தேக நபர் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்ததால் நாடு கடத்தும் உத்தரவுக்கு உட்பட்டார் என்று அந் நாட்டு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, “இது இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என்பதில் சந்தேகமில்லை” என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார். அதேநேரம், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்த மக்ரோன், “எங்கள் மண்ணில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான பணிகளைத் தொடர வேண்டும் என்ற எனது அரசாங்கத்தின் உறுதியை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் ” – என்றார். கொங்கோ ஜனநாயகக் குடியரசை ஆதரித்து காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. Athavan Newsபிரான்ஸ் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு, 3 பொலிஸார் கா...பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள மல்ஹவுஸ் (Mulhouse) நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்....
  4. போப் பிரான்சிஸின் உடல்நிலை மோசமான நிலையில்! முன்னதாக சனிக்கிழமையன்று “நீண்ட ஆஸ்துமா போன்ற சுவாச நெருக்கடியால்” பாதிக்கப்பட்ட புனித போப் பிரான்சிஸின் உடல்நிலையானது தொடர்ந்தும் “மோசமாக” இருப்பதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. பல நாட்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், கடந்த 14 ஆம் திகதி கத்தோலிக்க பேரவையின் தலைவர் போப் பிரான்ஸிஸ் ரோமின் ஜெமெல்லி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் சனிக்கிழமை (22) மாலை வத்திக்கான் ஒரு அறிக்கையில், 88 வயதான பிரான்சிஸ் காலை வேளையில் “நீண்ட நேர ஆஸ்துமா போன்ற சுவாச நெருக்கடியை” எதிர்கொண்டாகவும், அதற்கு “அதிக ஓட்ட ஆக்ஸிஜனை” நிர்வகிக்க வேண்டியிருந்ததாகவும் கூறியது. மேலும், பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதுடன், அவர் இன்னும் ஆபத்திலிருந்து மீளவில்லை. அதேநேரம், “புனிதத் தந்தை விழிப்புடன் இருக்கிறார், நேற்றைய தினத்தை விட அவர் அதிகமாக அவதிப்பட்டாலும், ஒரு நாற்காலியில் இன்றைய நாளைக் கழித்தார். தற்போது அவரது உடல் நிலை தொடர்பான பாதுகாப்பு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கூடுதல் ஆக்ஸிஜனைத் தவிர, அவருக்கு இரத்த மாற்றமும் மேற்கொள்ளப்பட்டதாக வத்திக்கான் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியது. 2013 ஆம் ஆண்டு முதல் போப்பாக இருக்கும் பிரான்சிஸ், கடந்த இரண்டு ஆண்டுகளில் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இளம் வயதிலேயே நுரையீரல் ஒவ்வாமை ஏற்பட்டு, ஒரு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டதால், அவர் நுரையீரல் தொற்றுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1422610
  5. NPP அரசியல். திகன கலவரம் போன்ற இனக்கலவரத்தை செய்த சிங்கள அமைப்புக்கள் எங்கே போனது....🤔 தடைப்பட்டியலில் தமிழ் முஸ்லிம் அமைப்புக்கள் மட்டுமே கருத்தில் கொள்ள பட்டுள்ளது..... இதை பார்க்கும் சிங்கள இளைஞர்கள் என்ன நினைப்பர்.... அப்போ சிங்கள அமைப்புக்கள் நல்லவர்கள் என்றல்லவா புரிந்துகொள்வர்.... பொதுபல சேனா போன்ற அமைப்புக்களால் கோட்டா காலத்தில் இஸ்லாமிய பெண்கள் பரிதா & அபாயா போட்டு வெளியில் செல்லும் அச்சம் ஏற்பட்டிருந்தது.... இதை எல்லாம் சமத்துவம் பேசும் NPP மறந்துவிட கூடாது.... யாழ்ப்பாணம்.com
  6. காவாலிகளால்... கொலை செய்யப் பட்ட, அந்த ஒய்வு பெற்ற அதிபரின் உழைப்பை நம்பி... வீட்டில் அவர் மனைவி, பிள்ளைகள், வயதான பெற்றோர் என்று எத்தனை உயிர்கள் காத்துக் கொண்டு இருந்திருக்கும். எல்லாவற்றையும் கெடுத்து விட்டது... இந்தக் குடிகாரக் கூட்டம். இந்தச் செய்தியை... வாசித்ததில் இருந்து, மனம் மிகவும் வேதனையாக உள்ளது.
  7. தமிழ் பெயர்களாக உள்ளது. பொலிஸார்... வேறு காரணத்துக்காக கொன்று விட்டு, தம்மை சுட வந்தவர்களை சுட்டுக் கொன்றோம் என்று... கதை விடுகின்றார்களோ தெரியவில்லை. சிங்களம், தமிழனை கொல்ல எதனையும் செய்யும் என்பதற்கு, கடந்த கால அனுபவங்கள் நிறையவே உள்ளது.
  8. மரண ஊர்வலம் ஒன்று போய்க் கொண்டு இருக்கும் போது, வாகனத்தை மெதுவாக ஓட வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவனுக்கு எல்லாம், வாகன அனுமதிப் பத்திரம் எதற்கு. 5 பேரை காயப்படுத்தி, ஒருவனை கொன்று விட்டு... தப்பிச் சென்றவனுக்கு அதி உச்ச தண்டனை கொடுக்க வேண்டும். ஜேர்மனியில்... விபத்து ஏற்படுத்தி விட்டு, தப்பிச் சென்றால்.... கொடுக்கப் படும் தண்டனையும், அபராதமும்... ஆளை, தலை எடுக்க விட முடியாமல் பண்ணி விடும். அதானல்... விபத்து நடந்தால்... காவல்துறை வரும் மட்டும் அந்த இடத்திலேயே அவர் நிற்பார்.
  9. சிவராத்திரி தினம் வெடுக்குநாறிமலையில் மாலை 6 மணி வரை சிறப்பாக இடம்பெறும். நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலய பூசாரியார் மதிமுகராசா மற்றும் முக்கியஸ்தரான பூபாலசிங்கம் ஆகியோர் நெடுங்கேணி பொலிசாரால் அழைக்கப்பட்டு விபரங்கள் பெறப்பட்டுள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருட்திணைக்களத்திற்கு கீழ் உள்ளதாக தெரிவித்து, அந்த திணைக்களம் மற்றும் நெடுங்கேணி பொலிசாரால் பொதுமக்கள் வழிபாடுகளை மேற்கோள்வதற்கு பல்வேறு தடைகள் ஏற்ப்படுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் கடந்தவருடம் சிவாரத்திரி தினமன்று மாலை 6மணிக்கு பின்னர் சிவராத்திரி பூஜைகளை செய்ய முற்பட்ட 8 பேர் நெடுங்கேணி பொலிசாரால் அடாவடியான முறையில் கைதுசெய்யப்பட்டனர். இது தமிழ்மக்கள் மத்தியில் கவலையை ஏற்ப்படுத்தியதுடன், பொலிசாரின் செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் அது தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது. கைது செய்யப்பட்ட 8 பேரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்த நீதிபதி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினையும் தள்ளுபடி செய்தார். இந்நிலையில் இம்முறை சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலயத்தின் பூசாரியார் மற்றும் முக்கியஸ்தர் ஒருவர் நெடுங்கேணி பொலிசாரால் நேற்றுமுன்தினம் அழைக்கப்பட்டு அவர்களிடம் விபரங்கள் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலயத்தின் பூசகர் மதிமுகராசாவிடம் கேட்ட போது இம்முறை சிவராத்திரி விரத பூஜைகளை காலை முதல் மாலை 6 மணிவரை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். 6மணியின் பின்னர் பிறிதொரு பகுதியில் சிவனுக்கான இரவு அனுஸ்டானங்களை செய்வதற்கும் ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிவராத்திரி தினம் வெடுக்குநாறிமலையில் சிறப்பாக இடம்பெறும் என அவர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1422563
  10. மீனகயாவால் பறிபோன யானைகளின் எண்ணிக்கை உயர்வு. மட்டக்களப்பு – கொழும்பு பிரதான ரயில் பாதையில் மீனகயா கடுகதி ரயிலில் மோதி படுகாயமடைந்த மற்றுமொரு காட்டு யானைக் குட்டி உயிரிழந்துள்ளது. அதன்படி, ரயில் விபத்தில் உயிரிழந்த காட்டு யானைகளின் எண்ணிக்கை 7 ஆகும். கடந்த 19 ஆம் திகதி இரவு 11.20 மணியளவில், மீனகயா கடுகதி ரயிலில் மோதிய ஏழு காட்டு யானைகளில் 6 யானைகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடப்பட்டது. https://athavannews.com/2025/1422566
  11. மித்தெனிய முக்கொலை சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மித்தெனிய முக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சந்தேகநபர்களை 72 மணி நேரம் தடுப்பு காவலில் எடுத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம்திகதி நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே என்ற நபரும் அவரது இரண்டு பிள்ளைகளும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1422554
  12. நீங்கள் கூறியபடி... சுமந்திரன் இருக்கும் மட்டும், தமிழரசு கட்சி கூட்டுப்பேச்சுவார்த்தைக்கு வர சந்தர்ப்பம் இல்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்... அழைப்பு விடுக்க வேண்டிய கடமை உள்ளது. அதனால்... அழைப்பு விடுத்தார். இதுவரை.... சுமந்திரன் தமிழரசு கட்சியில் இருந்து கொண்டே, பிரிக்கும் வேலைகளை மட்டுமே செய்து கொண்டு வருபவர். அரச அதிபர்களை, வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் விடயங்களிலும்... தனது தமிழரசு கட்சிஉறுப்பினர்களுக்கே தெரியாமல், பின்கதவால் போய் சந்தித்து விட்டு வருபவர்தான் சுமந்திரன். அவருக்கும்... ஓற்றுமைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.
  13. பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட... @suvy , @ஈழப்பிரியன் , @நிலாமதி அக்கா, @ஏராளன் @குமாரசாமி அண்ணை, @nunavilan , @நிழலி , @ரசோதரன் , @வாத்தியார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். 🙏
  14. துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் செயற்பாடு உடைய கைகுண்டொன்று மீட்பு. கொட்டாஞ்சேனை துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் செயற்பாடு உடைய கைகுண்டொன்று மீட்பு. இது தொடர்பில் கொழும்பு நீதிபதி வருகை தந்து விசாரணை முடியும் வரை குண்டு செயலிழக்கச் செய்யும் விசேட அதிரடிப் படை வாகனம் மற்றும் அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை – பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் , இதன்போது குறித்த இரண்டு சந்தேகநபர்களும் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளார். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனை – கொட்டாஞ்சேனை வீதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் விசாரணைகளின் போது பொலிஸாரின் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1422543
  15. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி வெளியீடு. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தொழிற்படுகின்ற தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குழுக்களிடமிருந்து பெறப்படுகின்ற உதவியுடன் அந்த அமைப்பை மீள் உருவாக்குவதற்கான எத்தனிப்புகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்த குற்றச்சாட்டில் குறித்த அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலக தமிழர் நிவாரண நிதியம் மற்றும் கனேடிய தமிழர் தேசிய அவை உள்ளிட்ட அமைப்புகள் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ் இளைஞர் அமைப்பு, எக்சியூ என்று அறியப்படுகின்ற தலைமையகக் குழு, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு, ஜமாதே மிலாதே இப்ராஹிம் அமைப்பு, விலயாத் அஸ் செயிலானி, டருள் ஆதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சேவ் த பேர்ள்ஸ் என்பனவும் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 222 தனிநபர்களின் பெயர் விபரங்களும் அடங்குகின்றன. Athavan Newsதமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு...தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம...
  16. நாட்டில் இதுவரை 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது – சிறப்பு ஊடக சந்திப்பு நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். நாட்டில் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தையும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிக்கும் ஒரு குழு இருப்பதாகவும், அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்தார். மேலும், நிகழ்வில் பேசிய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, நாட்டில் இதுவரை 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைப் பின்தொடர்பவர்களில் சுமார் 1,400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். புலனாய்வு அமைப்புகள் மூலம் அவர்கள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவர்களின் தலைவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாகவும், இந்தக் குற்றங்களைச் செய்து வருவதாகவும் தெரிவித்தார். அதன்படி, 2024 ஆம் ஆண்டில் 93 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் 75 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் குறிப்பிடப்படாத கூர்மையான ஆயுதங்களால் 18 தாக்குதல்கள் அடங்கும் என்று அவர் கூறினார். 2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 22 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்களால் 5 தாக்குதல்கள் நடந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு நடந்த 17 குற்ற சம்பவங்கள் இப்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தக் குற்றங்களுக்கு பொலிஸ், ஆயுதப்படைகள் அல்லது பாதுகாப்பு சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளித்துள்ளதாகவும், அவர்களைக் கண்டறிந்து கைது செய்ய ஒரு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1422540
  17. மீண்டும் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு! கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை அண்மையிலுள்ளும் இங்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இடம்பெற்றுள்ளது. https://athavannews.com/2025/1422517
  18. நாகப்பட்டிணம் – காங்கேசன் துறை இடையிலான கப்பற்சேவை ஆரம்பம் இந்தியா – இலங்கை இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2003 ஆண்டு அக்டோபர் மாதம் நாகையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கப்பட்டது. இது சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புயல், மழை, கடல் சீற்றம், சீதோஷ்ண நிலை உள்ளிட்ட காரணங்களால் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தற்காலிகமாக கப்பல் சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை கப்பல் போக்குவரத்துக்கு தயாரான நிலையில், இந்தியா, இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் இன்று தொடங்கவுள்ள்தாக கப்பலை இயக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று கப்பலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகள், நாகை பயணியர் முனையத்திற்கு அதிகாலை முதல் வரத்தொடங்கின்ங்கினர். அதனைத் தொடர்ந்து நாகை பயணியர் முனையத்திற்கு வருகை தந்த 83, பயணிகளின் உடமைகள் மற்றும் பயண டிக்கெட்டை, இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் கப்பலில் பயணிகள் ஏற அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நாகை துறைமுகத்தில் இருந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மும்மத பிரார்த்தனையுடன் கப்பல் சேவையானது கொடியசைத்து தொடக்கிவைக்கப்பட்டது. இதில் பயணம் செய்யும், பயணிகள் மகிழ்ச்சியுடன் நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கை காங்கேசன்துறைக்கு பயணத்தை மேற்கொண்டனர். 3, மாதங்களுக்குப் பின் நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை மீண்டும் தொடங்கியதால் இந்திய-இலங்கை இருநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். https://athavannews.com/2025/1422537
  19. மிகவும் துயரமான செய்தி. 😢 புலம் பெயர் தேசத்திலிருந்து செல்லும்... கொழுப்பு மிஞ்சியதுகளால், தனது வருமானத்துக்காக, ஒய்வு பெற்ற பின்பும் உழைத்துக் கொண்டு இருந்த அப்பாவி மனிதனை, பாவிகள் அடித்துக் கொன்று விட்டார்கள். எங்கே போகின்றது நம் இனம்.? அகால மரணத்தை தழுவிய முன்னாள் அதிபருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  20. புத்தகத்தில்... துப்பாக்கியை கொண்டு வந்து, கொலை செய்யலாம் என்று முதன் முதலாக நிரூபித்து காட்டியவர்கள் புத்த பிக்குகள். கொண்டு வந்த புத்தகம்: திரிபிடகம். பிக்குகள்: 1.புத்தர கித்த தேரோ. 2.சோமராம தேரோ. கூட விமல விஜயவர்த்தன தேரோ. Karthigesu Indran

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.