Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு. நாடளாவிய ரீதியாக கடந்த 5 வருடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இவ்வாறான வீதி விபத்துக்களில் 5 தொடக்கம் 29 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாகக் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்த இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட மரணங்களில் 19 வயதுக்குட்பட்ட 2,000 மரணங்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வீதி விபத்துக்களைக் குறைக்கும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட வேண்டுமெனவும் இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கான விசேட ஆணைக்குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரந்த பெரேரா வலியுறுத்தியுள்ளார். https://athavannews.com/2025/1419234
  2. அவரை கேட்காமல், அவரின் பெயரை இங்கு சொல்வது சரியல்ல என்பதால் தவிர்த்துக் கொள்கின்றேன்.
  3. ஈழப்பிரியன்…. இந்தப் படங்களை, வேறு ஒரு யாழ். கள உறவு அனுப்பியிருந்தார். ஆகவே… நன்றி அவருக்குத்தான் சேர வேண்டும். 🙂
  4. உதயன் பத்திரிகை வைத்த தலைப்பும், அனுரவின் இன்றைய நிகழ்ச்சி நிரல்களான…. மாவை வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி, யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டமை, வல்வெட்டித்துறையில் பெருந்திரளான மக்கள் மத்தியில் சந்திப்பும், தமிழ் ஆச்சிமாரை… எம். ஜி. ஆர். பாணியில் கட்டிப் பிடித்த்தையும் பார்த்து, தையிட்டி விகாரையை… அனுர, அத்திவாரத்துடன் கிளப்பப் போறார் என்று நம்பி ஏமாந்து போனன். 😂 உதயனுக்கு…. நெடுகவும், “ஏப்பிரல் பூல்” செய்யுறதே… வேலையாய் போச்சுதுது. 🤣
  5. “தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்” என்று உதயன் தலையங்கத்தில் போட்டுள்ளது. நல்ல செய்தியாக உள்ளதே என்று உள்ளே போய் பார்த்தால்… விகாரையை அகற்றுவதைப் பற்றி ஜனாதிபதியோ அரச அதிகாரிகளோ எதுவும் சொல்லாமல் நட்ட ஈடு கொடுப்பதைப் பற்றி கதைத்துள்ளார்கள். தலையங்கத்தின் படி… விகாரை எப்ப அகற்றப்படும் என்று உதயன் சொன்னால் நல்லது.
  6. சிங்கப்பூர் பென்சனியர்களின் காலம் வேறை. இப்ப மாதம் 500 டொலர் வருகுது என்று தெரிந்தால், வாள்வெட்டு கோஷ்டி... வீட்டு வாசலிலை வந்து நிற்கும்.
  7. சம்பந்தன்.... சுமந்திரனை கட்சியில் சேர்த்த நன்றிக் கடனையும் மறந்து, சம்பந்தனின் பதவிக்கு, ஆப்பு அடித்தவர்தான் சுமந்திரன். அது மட்டும் அல்லாது... சம்பந்தனின் அந்திமக் காலத்தில், அவருக்கு இல்லாத தொல்லைகளை... மறை முகமாக தனது ஆட்கள் மூலம் செய்து சம்பந்தனின் உயிர் போக, ஒரு வகையில் காரணமாக இருந்ததும் சுமந்திரன்தான். சென்ற வருடம் சம்பந்தர், இந்த வருடம் மாவை, வாற வருஷம் சி***ம் என்று ஊரில் சொல்கிறார்கள். சுமந்திரன்...இந்தக் கட்சியில் இருந்து எல்லோரின் உயிரையும் பறித்துக் கொண்டு இருக்கும் எருமை வாகனத்தின் சொந்தக்காரன்.
  8. 50,000 டொலர் சரியான குறைவு. இன்னும் கூட கேட்டு வாங்க வேணும். 😂
  9. மாவை சேனாதிராஜா அவர்களின் அர்ப்பணிப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்-பிரதமர்! மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (TNA) ஒரு முக்கிய ஆளுமையாகவும் திகழ்ந்த கௌரவ சேனாதிராஜா அவர்கள், இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட அதே வேளையில், தனது மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஒரு முன்னணிப் பங்கை வகித்தார். ஜனநாயக நடவடிக்கைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அமைதியான அரசியல் இயக்கத்தின் மீது அவருக்கு இருந்த உறுதியான நம்பிக்கை ஆகியவை நாடாளுமன்றத்தில் அவரது பல தசாப்த கால சேவைக் காலத்தில் சிறப்பாக பிரதிபலித்தது. அவரது மறைவு அவரை அறிந்த மற்றும் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவினால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு அவர் பற்றிய நினைவுகள் ஆசீர்வாதமாக அமைய என பிரார்த்திக்கிறேன் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1419203
  10. பங்களாதேஷ் கடற்படையின் போர் கப்பல், ஸ்ரீலங்காவுக்கு, மீன் பிடிக்க வந்திருக்குமோ.... 😂 🤣
  11. அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் 3,065 இலங்கையர்கள்! புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்படவுள்ள சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது. இந்த வகையில், உலகின் பல நாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 14 இலட்சத்து 45,549 பேரின் பட்டியலை புதிய அமெரிக்க நிர்வாகம் தயாரித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஆதரிக்காத நாடுகளின் பட்டியலும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை இதில் உள்வாங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1419181
  12. சுமந்திரன் மைண்ட் வாய்ஸ்: பலாலியில் உள்ள ஜனாதிபதி மாளிகை முன்பு போய் இப்பவே ஒரு போட்டோ எடுத்து வைக்க வேணும். அதனை முழுமையாக விடுவித்த பின் நம்ம சனத்தின்ரை காதிலை பூ வைத்து அறிக்கை விட பிரயோசனப் படும். ஆனால்... என்ன செய்தாலும், சனம் எனக்கு வோட்டு போட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதை நினைக்கத்தான் விசராய் கிடக்குது.
  13. @Kavi arunasalam, @வாலி, @பாலபத்ர ஓணாண்டி ....... அரியநேந்திரனுக்கு சிங்களப் படை பாதுகாப்பு கொடுத்ததற்கு துள்ளிக் குதித்த... சுமந்திரனுக்கு முட்டுக் கொடுக்கும் சிலரை இந்தப் பக்கம் காணவில்லை. வரிசையாக வந்து, உங்களின் ஆளுக்கு... முட்டுக் கொடுத்து விட்டுப் போகவும். 😎 உங்களுடைய வாய்.... எப்பிடி, வடை சுடுகுது... என்று பார்க்க ஆவலாக உள்ளேன்.
  14. இப்போ... மாவையரின் செத்த வீட்டுப் பக்கம், சுமந்திரனை, தலை வைத்தும் படுக்கக் கூடாது என்று, மாவையர் வீட்டில் இருந்து அறிவிக்கப் பட்டுள்ளது. அதனை திசை திருப்பி... தன்பக்கம் பத்திரிகைகளின் கவனத்தை ஈர்க்க, ஊசிப் போன அறிக்கைகளை வெளியிட்டு, தனது இருப்பை காட்டிக் கொள்கிறார். இவரின் சுத்துமாத்துக்கள் எல்லாம் பல் இளித்து கனகாலம் ஆகிவிட்டது. அது புரியாமல், தானும் ஒரு ஆள் எண்டு... முதுகெலும்பு, மீன் முள்ளு என்று அறிக்கை விடுகிறாராம்.
  15. மைத்திரி, ரணில் ஆகியோர் ஜனாதிபதிகளாக இருக்கும் போது... பின்கதவால் சென்று அவர்களை சந்திக்கும் அளவிற்கு நட்பாக இருந்த, சுத்துமாத்து சுமந்திரனுக்கு.... அப்போது இவற்றை கேட்டு சவால் விட, சுமந்திரனின், முதுகெலும்புதான்.... கூனிக் குறுகி வளைந்து இருந்தது. 😂
  16. மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி! யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க , மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினார் மாவை சேனாதிராசா நேற்று முன்தினம் புதன்கிழமை காலமானார். அதன்படி அவரது புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நேரில் சென்று மாவை சேனாதிராசாவின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதேவேளை மாவை சேனாதிராசாவின் இறுதி கிரியைகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419159
  17. மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி! யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க , மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினார் மாவை சேனாதிராசா நேற்று முன்தினம் புதன்கிழமை காலமானார். அதன்படி அவரது புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நேரில் சென்று மாவை சேனாதிராசாவின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதேவேளை மாவை சேனாதிராசாவின் இறுதி கிரியைகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419159

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.