Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம்; 18 பேர் காயம்! டொராண்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை (17) பிற்பகல் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 18 பேர் காயமடைந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மினியாபோலிஸிலிருந்து வந்த டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் டொராண்டோ நேரப்படி பிற்பகல் 2:30 மணியளவில் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதன் விளைவாக அவசரகால பணியாளர்களின் மீட்பு பணிகளுக்காக பல மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது. விபத்தின் பின்னர் விமான நிறுவனம் தனது இணையதளத்தில் மாலை 5:42 மணிக்கு வெளியிட்ட ஒரு அறிக்கையில் துரதிர்ஷ்வசமான சம்பவத்தினால் 18 பேர் காயமடைந்தனர் என்று குறிப்பிட்டது. எனினும், மாலை 07.00 மணியளவில் பியர்சன் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 என்று கூறினார். விமானத்தில் நான்கு பணியாளர்கள் மற்றும் 76 பயணிகள் இருந்தனர். அவர்களில் 22 கனேடியர்கள், ஏனையவர்கள் பன்னாட்டுப் பயணிகள் என்றும் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா பிளின்ட் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். மேலும், விபத்தில் காயமடைந்த பயணிகள் அனைவரும் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் உறுதிபடுத்தினார். விபத்தின் பின்னர் திங்கட்கிழமை விமான நிலையத்திலிருந்து புறப்படும் பெரும்பாலான விமானங்கள் தாமதமாக அல்லது இரத்து செய்யப்பட்டன. புறப்பாடும் வருகையும் மாலை 5 மணிக்குப் பின்னர் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் விமான நிலையம் தெரிவித்துள்ளது. டெல்டா ஏர் லைன்ஸின் 4819 விமானம், வார இறுதியில் டொராண்டோ பகுதியைத் தாக்கிய குளிர்காலப் புயலைத் தொடர்ந்து வீசும் பனிக்கு மத்தியில் மினியாபோலிஸிலிருந்து வந்தது. இந்த விமானத்தை அதன் துணை நிறுவனமான எண்டெவர் ஏர் இயக்குவதாக டெல்டா தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து உடனடி தகவல் இல்லை. கனடா போக்குவரத்து ஆணையகம், இது குறித்த விசாரணைகளை தற்சமயம் ஆரம்பித்துள்ளது. விசாரணைக்காக இரண்டு ஓடுபாதைகள் மூடப்பட்டிருக்கும் என்றும், விமான நிலையம் வழியாக பயணிக்கும் எவருக்கும் வரும் நாட்களில் தாமதம் ஏற்படும் என்றும் பிளின்ட் மேலும் கூறினார். https://athavannews.com/2025/1421841
  2. வடக்குக்கு வரும் நிதி திரும்பி செல்ல கூடாது-வடக்கு மாகாண ஆளுநர்! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார் என்றும் அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதியினால், நேற்று திங்கட் கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது அதன்படி வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு வகையிலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதிகளவான நிதியும் வடக்கு மாகாண சபைக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி தனது உரையில், வடக்கு அதிகாரிகள் கோரிய நிதியையே வழங்கியுள்ளதாகக் அவர் தெரிவித்தார் எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் முழுமையாகச் செலவு செய்யவேண்டும் என்றும் எவ்வளவு விரைவாக அந்த நிதியை செலவு செய்து முடித்து மேலதிக நிதியை நாம் கோரவேண்டும். இது எமக்கு சவாலானதுதான். நாம் நிதியை திருப்பி அனுப்பாமலே நிதியை திருப்பி அனுப்பியதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், பெருமளவு நிதி எமக்கு கிடைக்கப்பெறும் நிலையில் அதை உரிய முறையில் செலவு செய்யவேண்டும். எமது செயற்பாடுகளை ஊடகங்கள் உட்பட பல தரப்புக்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன. எனவே வெளிப்படைத்தன்மையாக நிதியை விரைவாக செலவு செய்யவேண்டும். அத்துடன் ஜனாதிபதி வீதி அபிவிருத்திக்காக விசேட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கு சமமாகப் பகிரத் தேவையில்லை. தேவைப்பாடுகள் எங்கு அதிகமோ அங்கு அதிகளவு நிதியை ஒதுக்குங்கள். மேலும் இந்தத் திட்டத்துக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு தெரிவுகளை முன்னெடுக்காமல் வன்னிப் பிராந்தியத்தின் ஒவ்வொரு இடத்துக்கும் சென்று நேரடியாகப் பார்த்து தெரிவு செய்யுங்கள். அப்போதுதான் அந்த மக்கள் அனுபவிக்கின்ற வலி உங்களுக்குத் தெரியும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1421909
  3. பாண் விலை 10 ரூபாவினால் குறைப்பு! கோதுமை மா விலை குறைப்புக்கு அமைவாக பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளையும் குறைப்பதற்கு பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை வந்துள்ளது. https://athavannews.com/2025/1421891
  4. பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள சிறப்பு அறிக்கை! இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு அல்லது சேவையை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் பணியில் சேரும் அதிகாரிகள், போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி பொலிஸ் ஊடகப் பிரிவு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன் பொலிஸ் அதிகாரிகள், பணியமர்த்தப்படுவதற்கு அல்லது மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கு முன்பு, போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய பொலிஸ் மருத்துவமனையில் பொருத்தமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அனைத்து மூத்த அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார். மேலும் மருத்துவ அறிக்கையில் ஒரு அதிகாரி போதைப்பொருள் பயன்படுத்தியதாக தெரியவந்தால், அந்த அதிகாரி மீண்டும் பணியில் சேர்க்கப்படமாட்டார் அல்லது பணியில் மீண்டும் சேர அனுமதிக்கப்படமாட்டார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1421871
  5. மிதமான நிலையில் நாட்டின் காற்றின் தரம்! இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் இன்று (18) மிதமானதாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)தெரிவித்துள்ளது. NBRO இன் படி, இரத்தினபுரி மற்றும் எம்பிலிபிட்டியவில் காற்றின் தரம் பகலில் சற்று ஆரோக்கியமற்ற நிலைக்கு மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் அனைத்து நகரங்களிலும் நேற்று (17.02.2025) காற்றின் தரம் மிதமான அளவில் காணப்பட்டது. இன்று காற்றின் தரம் 44 தொடக்கம் 116 க்கு இடையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவிலும், இரத்தினபுரி மற்றும் எம்பிலிப்பிட்டியவில் சற்று ஆரோக்கியமற்ற நிலை இருக்கும் என்பதை குறிக்கின்றது. காற்றின் தரம் குறைவதால், உடல்நல பிரச்சினைகள் உள்ள நபர்கள் குறிப்பாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். https://athavannews.com/2025/1421912
  6. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு! இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய் ஷங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் ஓமான் மஸ்கட் நகரில் இடம்பெறும் 8 ஆவது இந்து சமுத்திரமாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான பயனுள்ள தொடர்புகள் மற்றும் விரிவான ஒத்துழைப்பு மதிப்பாய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றத்திற்கான தனது உறுதிப்பாட்டை இந்திய வெளியுறவு அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் https://athavannews.com/2025/1421903
  7. நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் கையளிக்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர், 100,000 ரூபா ரொக்கம் மற்றும் தலா 10 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுக்கப்பட்டார். இலங்கையில் ரக்பி விளையாட்டின் அபிவிருத்திக்காக இந்தியாவைத் தளமாகக் கொண்ட கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீள் விசாரணையை எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்தது. https://athavannews.com/2025/1421900
  8. அட... பாவிங்களா.... அப்பாவி குரங்குகளை, மாட்டி விடப் பார்த்திங்களேடா...... 😂 அனுமாரின் சாபம்... உங்களை சும்மா விடாது. 🤣
  9. மீண்டும் ஆரம்பம்! மீண்டும் ஒத்திவைப்பு! மீண்டும் ஆரம்பம்! மீண்டும் ஒத்திவைப்பு! மீண்டும் ஆரம்பம்! மீண்டும் ஒத்திவைப்பு! மீண்டும் ஆரம்பம்! மீண்டும் ஒத்திவைப்பு! மீண்டும் ஆரம்பம்! மீண்டும் ஒத்திவைப்பு! மீண்டும் ஆரம்பம்! மீண்டும் ஒத்திவைப்பு! ஒரே தமாசுதான்........... 😂 🤣
  10. இந்திய சந்தையில் நுழையும் டெஸ்லா! பில்லியனர் எலோன் மஸ்க்கின் மின்சார வாகன (EV) நிறுவனமான டெஸ்லா இன்க் இந்திய சந்தையில் நுழையும் திட்டங்களை திங்களன்று (17) சுட்டிக்காட்டியுள்ளது. இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய சந்தை நுழைவுக்கான முக்கிய மைல்கல்லாகும். கடந்த வாரம் வொஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன், அதையடுத்து பில்லியனர் எலோன் மஸ்க்குடனும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சந்திப்பின் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. டெஸ்லா தற்சமயம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் 13 பதவிகளுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர் எதிர்கொள்ளும் பாத்திரங்கள் மற்றும் பின்தள செயல்பாடுகள் இரண்டிலும் கவனம் செலுத்துகிறது. ஆட்சேர்ப்பு இயக்கம் முக்கிய பெருநகரங்களில் கவனம் செலுத்தியுள்ளது. டெல்லி மற்றும் மும்பைக்கு தலா ஐந்து வெற்றிடங்களை வழங்குகிறது. ஆட்சேர்ப்புக்கு அப்பால், முக்கிய நகர்ப்புற மையங்களில் ஷோரூம்கள் உள்ளிட்ட இடங்களை டெஸ்லா தீவிரமாக தேடி வருகிறது. டெஸ்லா முக்கிய இடங்களைப் பாதுகாக்க முக்கிய ரியல் எஸ்டேட் அதிகாரிகளுடனும் கலந்துரையாடி வருவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. https://athavannews.com/2025/1421875
  11. அணு ஆயுத திட்ட பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு! பணியில் இருந்து நீக்கிய நூற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுதத் திட்டப் பணியாளர்களை, மீண்டும் பணியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாகக் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். அந்தவகையில் அரசின் செலவினத்தை குறைக்கும் வகையில் அண்மையில் நூற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்களை திடீரென கடந்த வாரம் பணியில் இருந்து நீக்கி ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். இவ்வாறு பணியிலிருந்து நிறுத்தப்பட்டோரில், 30 சதவீதத்திற்கும் அதிகமானோர், டெக்சாஸ் மாகாணத்தின் அமரில்லோ நகருக்கு அருகில் உள்ள, ‘பான்டெக்ஸ் பிளான்ட்’ என்ற பெடரல் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணியிலிருந்து திடீரென நிறுத்தப்பட்ட பலர், அணு ஆயுதத் திட்டத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் என்பதால் அமெரிக்காவின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்த கேள்வி எழுந்துள்ளதோடு ,எதிர்காலத்தில் அமெரிக்காவின் செயல்திட்டங்கள் குறித்த அச்சமும் எழுந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் கண்மூடித்தனமான செயல்பாட்டால் உள்நாட்டில் பல விதமான குழப்பங்கள் ஏற்படும் என பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தன் முடிவை மாற்றியுள்ள ட் ரம்ப், பணியிலிருந்து நீக்கியவர்களை மீண்டும் பணியமர்த்த உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவம் உலகளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsஅணு ஆயுத திட்ட பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த அமெரிக்க ஜ...பணியில் இருந்து நீக்கிய நூற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுதத் திட்டப் பணியாளர்களை, மீண்டும் பணியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாகக் கடந்த ஜனவரி மாதம...
  12. சேதமடைந்த வட்டுவாகல் பாலத்தை புதிதாக அமைக்க அரசாங்கம் இந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளது, வட்டுவாகல் பாலத்தை மீள அமைக்க வேண்டியது என்பது மிகவும் தேவையான ஒன்று, ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம், எமது வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியை அழிக்கும் அபாயமும் உள்ளது என்ற கவலை தோன்றியுள்ளது . பழைய வட்டுவாகல் பாலம் தமிழ் மக்களின் மீள்தன்மை மற்றும் துயரத்தின் கதையைச் சொல்கிறது ( resilience and misery ) - இது தமிழர் போராட்டத்தின் சின்னம் மற்றும் நாம் தாங்கிய துயரத்தின் சாட்சி . ஜெர்மனியின் பெர்லின் சுவரின் எச்சங்கள் ஜெர்மனியின் கடந்த காலத்தையும் வரலாற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் சக்திவாய்ந்த நினைவூட்டலாகச் செயல்படுவது போல, வட்டுவாகல் பாலம் தமிழர்களின் கூட்டுப் பயணத்திற்கு ஒரு சான்றாக நிற்கிறது. குறைந்தபட்சம் புதிய பாலத்தை அமைக்கும் போது பழைய பாலத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாக பெயர்தெடுத்து பாதுகாக்கலாம். இது தொடர்பில் எமது மக்கள் பிரதிநிதிகள் கவனம் எடுத்து அரசோடு பேச வேண்டும்.முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . போரின் நினைவு எச்சமாகவும் மிச்சமாகவும் ( War memorial )போர் சார்ந்த சுற்றுலாவில் எமது முக்கிய அடையாளமாகிய (War tourism ) இந்த வரலாற்று அடையாளத்தை நாம் பாதுகாக்க வேண்டும். Monisha Kokul சிங்களம் எரித்த நூலகத்தையே... அதன் சுவடு தெரியாமல் புதிதாக மாற்றியவர்கள் நாம். அதன் அருகில்... புதிதாக வேறு ஒரு நூலகத்தை கட்டி, பழையதை நினைவுச் சின்னமாக வைத்திருந்து இருக்கலாம். Baskaran Gopalakrishnan
  13. கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்! இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று அவுஸ்திரேலியாவில் காலமாகியுள்ளார் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பல அடையாளங்களை கொண்டவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ், சிங்கள மாணவர்களுக்கு தென்னிந்திய இசை, கர்நாடக சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளை கற்பித்து, ஆற்றல் மிகுந்த விரிவுரையாளராக வலம் வந்தவர் அத்துடன் அருந்ததி ஸ்ரீரங்கநாதன். அதனால் இவரது பெயரிலேயே பல்கலைக்கழகத்தின் கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்துக்கான கட்டடமொன்று இயங்கி வருகின்றது அன்னாரின் மறைவு இலங்கையின் கலைத்துறையினருக்கு பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளதோடு, பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Athavan Newsகலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்!இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று அவுஸ்திரேலியாவில் காலமாகியுள்ளார் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிர...
  14. புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கம் வழங்கும் விசேட உணவுப் பொதி. எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான மானிய நடவடிக்கையாக, பண்டிகைக் காலத்திற்கான உணவுப் பொதி ஒன்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (17) வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவிக்கையில், புத்தாண்டு காலத்தில் லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் அரிசி, ரின் மீன், பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் கருவாடு உள்ளிட்ட உலர் உணவுப் பொதியை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. இப் பொதியை வழங்குவதற்கான செலவுக்காக வரவு செலவுத் திட்டத்திலிருந்து 1,000 மில்லியன் ரூபாயை ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421801
  15. தீ விபத்தில் தென்மராட்சி உதவி பிரதேச செயலாளர் உயிரிழப்பு! தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி உதவி பிரதேச செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஆறு மாத கர்ப்பிணியான சதீஸ் தமிழினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை படுக்கையறையில் வைக்கப்பட்ட நுளம்புத்திரி தவறுதலாக படுக்கையில் பட்டு தீப்பற்றியமையால், தீக்காயங்களுக்கு உள்ளான இவர், சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை இவரை காப்பாற்ற முற்பட்ட கணவரும் சிறு தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421809
  16. உக்ரேன் போர்; ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்காக சவுதி அரேபியா சென்றடைந்த அமெரிக்க அதிகாரி! உக்ரேனில் மொஸ்கோவின் ஏறக்குறைய மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ரஷ்ய அதிகாரிகளுடன் எதிர்பார்க்கப்படும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ திங்களன்று சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் பேசி, போர் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக பலமுறை சபதம் செய்ததை அடுத்து இந்த பேச்சுவார்த்தைகள் வந்துள்ளன. காசா பகுதியின் எதிர்காலம் குறித்து வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ரியாத், ஜனவரி 20 அன்று பதவியேற்ற ட்ரம்ப் நிர்வாகத்திற்கும், கடந்த வாரம் கைதிகளை மாற்றுவதற்கு மொஸ்கோவிற்கும் இடையிலான ஆரம்ப தொடர்புகளில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் சவுதி அரேபியாவை சென்றடைந்த அமெரிக்க உயர் தூதர் ரூபியோ, ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோருடன் சவுதி அரேபியாவில் ரஷ்ய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். எனினும், அவர்கள் ரஷ்யாவிலிருந்து யாரை சந்திப்பார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் செவ்வாய்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் என ரஷ்ய செய்தித்தாள் கொம்மர்சன்ட், பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கிடையேயான பல வருடங்களில் முதல் உயர்மட்ட நேரில் கலந்துரையாடல்களில் ஒன்றாக இந்த பேச்சுக்கள் இருக்கும். மேலும் இது அமெரிக்க மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பிற்கு முன்னதாக இருக்கும். https://athavannews.com/2025/1421776
  17. மோடி... அமெரிக்காவில், "இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எங்கள் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் என்னவென்றால் 'உலகமே ஒரு குடும்பம்' என்பதுதான். நாங்கள் முழு உலகத்தையும் ஒரே குடும்பமாகக் கருதுகிறோம்." என்று சொல்லியும் கேட்காமல்... இந்தியரை பிடித்து, காலில் விலங்கு போட்டு அனுப்புகிறார்கள் என்றால்... அந்த மனுசனை கால் தூசிக்கும் மதிக்கவில்லை என்றுதானே அர்த்தம். 😃

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.